அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

Purani's Kolam Corner

#1
நட்பூக்களுக்கு,

கோலங்கள் நம் வீட்டை மட்டுமல்ல, நம் சுற்றுப்புறத்தையும் அழகு செய்வதோடு, நம் மனதையும் அழகும் தூய்மையும் செய்யும்! நம் கவனத்தை ஒருமுகப்படுத்தும்! நம் ரசனை கூடும்! நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக இன்றும் செயல்பட்டுக் கொண்டிருப்பது நாம் தினமும் நம் இல்லங்களில் இடும் கோலங்கள்தான் என்றால் அது மிகையாகாது!

ஒவ்வொரு பண்டிகைக்கும் எங்கள் வீட்டில் நான் மாக்கோலங்களால் அலங்கரிப்பது வழக்கம்! அந்தக்கோலங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!