அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY -9

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஒன்பதாம் நாளுக்கான சவாலுடன் வந்துவிட்டேன்.......இந்த சவால் ஆரம்பித்ததில் இருந்து பயணிக்கும் நாம் இந்த சவாலை முன்னிட்டு நம்மால் முடிந்த ஒரு நல்ல விஷயமும் செய்யலாமே.....அது தான் நாளைய சவால்....

கொடிது கொடிது வறுமை கொடிது...

ஒருவருக்கு எந்த பொருளைக் கொடுத்தாலும் அது போதவில்லை என்றே தோன்றும் ஆனால் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவளிக்கும் போது அவரது வயிறு நிறைந்தவுடன் தம்மை அறியாமல் அந்த வயிறும் வாழ்த்தும், அவரும் வாழ்த்துவார்.....நாளைய சவால் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்..

ஒரு ஏழைக்கு உணவளியுங்கள்.....அந்த உணவை அவர் உண்டு முடித்து அவர் முகத்தில் வரும் நிம்மதியையும், மகிழ்வையும் கண்டு, உணர்ந்து இங்கே பகிருந்து கொள்ளுங்கள்...உங்களின் மனது எப்படி அந்த நிமிடம் இருந்தது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்...
 
#5
இன்றைய சவாலுக்கு தோதாக நான் பணிபுரியும் பள்ளி அமைந்துள்ள ஊரில் பொங்கல் விழா. நிறைய ஏழைப்பட்டவர்கள் பள்ளியின் முன்னால்.. மதியத்துக்கு மேல் தான் பொங்கல் என்பதால் நிறைய மக்கள் காலை உணவின்றி இருந்தனர்.அவர்களுக்கு சுமார் 10 நபர்களுக்கு பக்கத்து கடையில் இட்லி, சட்னி, சாம்பார் வாங்கித் தந்தேன். நான் தந்ததைப் பார்த்து பக்கத்தில் இருந்தோரும் இன்னும் சிலருக்கு வாங்கித் தந்தனர். அவர்களின் பசி ஆற்றிய உணர்வில் நானும், பசியாறிய உணர்வில் அவர்களின் வாழ்த்தும் நிறைந்து.. இன்றைய காலை இனிதானது.
 
#6
நானும் ஹவுஸ் கீப்பிங்க ல ஆட்களுக்கு தான் தரணும் நினைத்தேன். அவங்க எப்பவும் மதிய சாப்பாடு எடுத்து வந்திடுவாங்க. அதனால் எங்க ப்ளாக் க்ளீன் பண்ற இரண்டு பேருக்கு, ரஸ்க், ப்ரடு வாங்கி வைத்திருந்தேன். இன்னைக்கு அவங்க இரண்டு பேரும் வரவே இல்ல.. கேட்டதற்கு வார விடுமுறைன்னு சொன்னாங்க… புதிதாக இரு பெண்கள் வந்திருந்தார்கள். இருவர் கையிலும் கொடுத்துவிட்டு, கீழே இறங்கினால், வயதான ஆண்கள் இருவர் சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் இவர்களுக்கும் சேர்த்து வாங்காமல் வந்துவிட்டேனேன்ற மனக்குறையோடு, அடுத்தவாரம் கொடுத்திடால்ம்ன்னு நினைத்தப்படி சென்றேன்… திரும்பி வரும் போது, நால்வரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்ததும் அப்படி ஒரு மனநிறைவு வந்தது. நன்றி அக்கா இப்படி ஒரு டாஸ்க் கொடுத்ததற்கு.
 

sudharavi

Administrator
Staff member
#8
நான் புதிதாக இந்த வீட்டிற்கு வந்திருப்பதால் யாரையும் தெரியாது என்றாலும், கீழே சென்று பார்த்த போது ஒரு வயதான பாட்டி கட்டிட வேலை செய்து விட்டு அசதியில் முடியாமல் அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் இருந்தே அவரின் பசியும், களைப்பும் தெரிந்தது. கையில் கொண்டு சென்றிருந்த சூடான இட்லியும், சட்டினியும் அவரிடம் கொடுத்தேன். அந்த கண்களில் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷத்தை கண்ட மகிழ்ச்சி......இதை சாப்பிடுங்கள் பாட்டி டீ போட்டு கொண்டு வரேன் என்றேன்......நிமிர்ந்து பார்த்த அவரின் கண்களில் இருந்தது என்ன? அந்த உணர்வினை நாமும் வாங்கும் ஆடைகளிலோ, பொருட்களினால் கிடைக்கும் சந்தோஷத்தினாலோ அடைய முடியாது.....டீ கொண்டு கொடுத்தும் குடித்து விட்டு நிறைவான பார்வையோடும், தெம்பாக எழுந்து வேலைக்கு சென்றார்......இன்றைய நாள் முழுவதும் மனதில் அத்தனை நிம்மதி இருந்தது........
 
#9
9th day task completed .......

Enga bus stop kita oru vayasana thatha irupanga naa daily paapen avangala but avaruku ethuvum kuduthathu illa ennaku konjam bayam athanala avara kandukatha maathiriye poituven.....oru naal avaru papa nu kuptanga... saptanum ma pasikuthu nu sonnanga ennaku Romba kastama aagituchu appo enkita iruntha kaasu kuduthutu ethavathu vangi saptunga thatha nu sollitu vanthuten......athuku apram avara naa paartha 5 or 10 rupees enkita irukuratha kudupen .....avaru daily lam Iruka maatanga eppavathu thaan irupanga.....Romba Romba vayasana thatha nadaka kuda mudiyathu avangala avala va Kuchi vachi irupanga......inaikum paarthen antha thatha va ethavathu vangi kudukanum nu thonichi sooo pakathula iruntha kadaila poi banana vangi kuduthutu saptunga thatha nu sollitu vanthuten ah avaru kai ah en thalaiku Mela bless pannura maathiri thooki kaatunga sirichite..... enaku eppadi feel nu therila naa vanthudu road turing la thirumbi paartha poo avanga antha banana va saptutu irunthingala ......enaku Romba kastama aagituchu paavam la ipadi niraiya per irupanga evalavu kasta paduvanganu ....ipo varaikum athey thinking la thaan iruken ...... Bt avanga banana vangitu sirikum bothu vanthuchi oru feel athu eppadi sollurathunu therila .....

9th day task completed.....
 
#11
Vetu vasal la ukkandhuten.. oruthar maadu mechitu ponaru... dhinamum pakradhu dhaney . Anna saptingalanu keten.. illama..sari vanga nu kuptu 3 dosa sambar sooda sutu kuduthen.. avaru Inga Vela dhan pakraru.. family yarumilla.. so konjam kashtapadravaru dhan..vela seira vetla edho tharadhu dhan..innaiku na kuptu kudukavum he was very happy.. 😄😄
 

Latest