அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY -30

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்,

வெற்றிகரமா முப்பது நாட்களை கடந்து விட்டோம். இன்று இறுதியான சவால்.

பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பாடலின் மூலம் பதிலளிக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் இதை செய்ய வேண்டும்.


இந்த முப்பது நாள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழில் எழுத வேண்டும். நோ தங்கலிஷ்...

இத்தனை நாள் குழம்பி தவித்த வீட்டினருக்கு சவால் பற்றி கூறி அவர்களின் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Priyasagi

Active member
#3
சுத்தி இருக்கவங்களோட கேள்விக்கா மேம்... சினிமா பாடல்களா இல்லை நாம பதிலை நமக்கு தெரிந்த ராகத்திலா
 

sudharavi

Administrator
Staff member
#4
சுத்தி இருக்கவங்களோட கேள்விக்கா மேம்... சினிமா பாடல்களா இல்லை நாம பதிலை நமக்கு தெரிந்த ராகத்திலா
சுத்தி இருப்பவர்களோட கேள்விகளுக்கு தான் பிரியா....பாட்டு அது எந்த பாடலாக இருந்தாலும் ஒகே தான் மா..
 

Vethagowri

Well-known member
Staff member
#5
இன்னைக்கு ஒரு நிச்சயதார்தம் எங்கள் உறவு பொண்ணுக்கு இன்றைய டாஸ்க் படிச்சுட்டு அதை இங்கேயே செய்வோம் என்று நான் அவர்கள் கேட்க்கும் எல்லாவற்றிக்கும் பாட்டின் மூலமே பதில் கொடுக்க, செமையா போய்டுச்சு நேரம்.. நான் ஆரம்பித்து வைத்தது இன்னும் ஓடிட்டு இருக்கு.. எல்லாம் இந்த பெரிய எருமை பண்ணின வேலை என்று எல்லரும் என்னை புகழ்ந்துட்டு இருகாங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிட்டு, அந்த டென்ஷன் இருந்தவங்க எங்கள் கூத்தை பார்த்து எல்லரும் சிரிக்க வெகு ஜாலியாக போய்டுச்சு 30நாள் சவால். கொண்டாட்டம்... கொண்டாட்டம்...
மத்த நிகழ்ச்சிகளை பிறகு எழுதுகிறேன்...
 

Vethagowri

Well-known member
Staff member
#6
30 நாள் 30 சவால்கள் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாக மனமகிழ்ச்சி மனநிறைவை சந்தோஷத்தை கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது, தியானம் ஆகட்டும், காலில் விழுவது ஆகட்டும், நன்றி சொல்வது, மௌன விரதம், ஈகை திறன், எதிர்பாராதே செய்வது, என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. வீட்டில் ஏதாவது ஒன்றை புதிதாக செய்தால் கூட என்ன இன்னைக்கு தான் டாஸ்கா? என்று அடுத்தவரைக் கேட்கும் அளவிற்கு இந்த முப்பது நாளும் நடந்தது, எப்போதும் போனும் கையுமாக சுற்றுவேன்,, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம், நான் எனது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னதற்கு யாருமே நம்பவில்லை, சத்தியம் செய்த போது கூட நம்பவில்லை, அங்கு சென்ற பிறகுதான் நம்பினார்கள், அதுவும் எப்படி என் இரண்டுநாள் போன் தொடக்கூடாது என்று டாஸ்கா, அதான் போன் எடுத்து வரவில்லையா என்று கேட்டுக் கிண்டல் அடித்தார்கள் அந்த அளவுக்கு நம்பிக்கை என் மேல...

டாஸ்க் வீட்டுக்காரருக்கும், என் பொண்ணுக்கும் அப்பப்போ தெரியும், அவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என்ற டாஸ்க் மட்டும் தான் சொல்லமாட்டேன்.. மற்ற படி அனைத்து சவால்களும் அவர்களும் கேட்டு எப்படி செய்கிறேன் என்று பார்ப்பார்கள், அதும் என் பொண்ணு அம்மா என்ன சீட்டிங்கா, இரு ஆன்ட்டி கிட்ட சொல்றேன் இன்று மிரட்டும் வைபவம் நடந்தது.. மொத்தத்தில் ஆனந்தம் ஆனந்தமே.. சவால்களைச் செய்த எங்களுக்கும், மற்ற அனைவருக்கும் ஆனந்தமே..
 

Vethagowri

Well-known member
Staff member
#7
நான் :என்னங்க இந்த டாஸ்க் எல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க
என்னவர் :என்னடி இப்படி கேக்குற, என்னோட பல நாள் ஆசை மனக்குறை எல்லாம் தீர்த்து வைச்சது இந்த டாஸ்க் தானே ???
நான் : (அடப்பாவி மனுஷா )??அப்படி என்ன உங்க மனக்குறை தீர்ந்தது
என்னவர் :அதுவா நீ மௌன விரதம் இருந்தது, கால்ல விழுந்தது இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்குமா? ???
நான் :???
அதான் எல்லாரும் நினைச்சது நடந்துடுச்சுல்ல அப்புறம் என்ன நடையை கட்டுங்க.. நம்மளை அசிங்க படுத்தி பார்குறதுல என்ன வொரு ஆனந்தம்.. ????
 

Anuya

Well-known member
#8
இன்றைய டாஸ்க் ரொம்ப நல்லா போச்சு ..... நாங்க எப்பவும் free டைம் ல concept வச்சு பாட்டு பாடுவோம் eg. இப்போ கல்யாணம் இது கான்செப்ட் அப்படினா கல்யாண songs பாடனும் ..... அதே மாதிரி இன்னைக்கி நா அவங்க கேக்குற கேள்விக்கு எல்லாம் பாடிக்கிட்டே பதில் சொன்னேன்னா அப்பறம் அதேயே game அஹ் விளையாட அரம்பிச்சிட்டோம் ..... ரொம்ப நல்லா இருந்துச்சு ......


இந்த 30 day challenge இதனுடைய experience பற்றி என்ன சொல்லுறது ..... ரொம்ப ரொம்ப எண்ஜோய் பண்ணி பண்ணேன் ஒவ்வொரு டாஸ்க்கையும் ... நா பண்ணாத நிறைய விஷயம் இது முழியமா பண்ணினேன் ..... முக்கியமா ஸ்கூல் friend கிட்ட அதுவும் ரொம்ப நாள் அஹ் contact இல்லாத friend number கண்டு பிடிச்சி பேசுனது ரொம்ப சந்தோஷமான moments அதுலாம்.... உண்மையா சொல்லணும்னு சொன்ன அவங்க கூட நா பேசி இருப்பேன் எப்போ என்றால் நாங்க எங்கேயாவது எதார்த்தமா மீட் பண்ணும் போது..... ஆனா இந்த டாஸ்க் முழியமா நானே number தேடி நான் call பண்ணி பேசுனது ரொம்ப நல்ல பீல் அவளுக்கும் எனக்கும் .... அப்பறம் walking போனதே இல்லை இதுவரைக்கும் நான் இப்போ கொஞ்சம் கொஞ்சம் போறேன் morning முடியலனா evening walking போறேன் ..... இப்படி நிறைய விஷயம் இருக்கு ... ரொம்ப ரொம்ப ஜாலி அஹ் இருந்துச்சு இந்த 30 days.... அப்பறம் எல்லா sissy போடுற போஸ்ட் படிக்க பிடிக்கும் .... நம்மள மாதிரி எத்தனை பேரு மொக்க வாங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சிகுறதுல அவ்வளவு சந்தோசம் ?? ... அப்பறம் டாஸ்க் முழியமா நடந்த இன்னும் ஒரு நல்ல விஷியம் பிரிஞ்சி இருந்த எங்க gang ஒன்னு கூடிட்டோம் .... all credits goes to abi அவங்கள பொறுத்த வரை ....நா தானே வாங்க ஒண்ணா விளையாடுவோம்னு கூப்பிட்டேன்னே ? ....நிறைய விஷயம் பண்ணனும் னு நினைப்பேன் ஆனா பண்ணது இல்லை இந்த டாஸ்க் முழியமா நா நிறைய விஷியம் எனக்கு பிடிச்ச மாதிரி பண்ணி இருந்து இருக்கேன் ....... அப்பறம் எங்க வீட்ல & friends என்ன பார்க்குற லுக் நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குரியானு இருந்துச்சி டாஸ்க் ஆரம்பிக்கும் போது ஆனா இப்போ conform பண்ணிட்டாங்க நான் லூசு தான்னு ??


நம்ம இந்த டாஸ்க் பற்றி என் தங்கச்சி அப்பறம் என் friend தீபி கு மட்டும் தான் தெரியும் ...... இன்னைக்கி தான் வீட்ல அம்மா அப்பா கிட்ட சொன்னேன் ..... என்னது டாஸ்க் பண்ணுரியா னு ஒரே ஷாக் அம்மாக்கு ஏனென்றால் ( blue whale னு ஒரு கேம் வந்துச்சில நடுவுல அப்போ நா அந்த கேம் ல கொடுக்குற டாஸ்க் பற்றி எல்லாம் google பண்ணி வீட்ல சொல்லிட்டே இருப்பேன் அம்மாவுக்கு அப்பவே பயம் இந்த பொண்ணு ஒரு ஆர்வதுல அந்த கேம் விளையடிடுவாளோ னு )அதான் நா டாஸ்க் னு ஷாக் ....அப்பறம் நா இந்த மாதிரி மா னு explain பண்ணினதும் அம்மா சொன்னாங்க " எனக்கு அப்போவே டவுட் இருந்துச்சு நீ கொஞ்ச நாள்ல வித்தியாசமா நடந்துகிட்டே அப்போவே ... அதுவும் மௌனமா இருந்தது எல்லாம் எனக்கு டவுட் வரல walking போன பாத்தியா அப்போ தான் டவுட் வந்துச்சி இவ என்னமோ பண்ணுறானு " ........... அப்பறம் நா பண்ணின டாஸ்க் எல்லாம் சொன்னேன் அந்த மௌன இருக்குற டாஸ்க் அப்போ நா ஆடின டான்ஸ் தவழ்ந்தது எல்லாம் சொல்லி சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்க.....ரொம்ப ஜாலி அஹ் போச்சு இந்த 30 days ....ஒரு ஒரு நாளும் புது புது அனுபவம் .... அந்த பழமொழி, maths problem, தமிழ் word கு meaning இது எல்லாம் ரொம்ப யோசிச்சு பண்ணுனது எல்லாம் செமையா இருந்தது .....

30வது நாள் டாஸ்க் முடித்துவிட்டேன் வெற்றிகரமாக .....
 

Ramya Mani

Well-known member
#9
பாடலின் மூலம் பதிலளிப்பது .. எளிதான சவாலாக இருந்தது. காலையில் என்னவர் ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போது... ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன் என பாடி சவாலை ஆரம்பித்தேன். அவர் அடுத்து கேட்க வேண்டியதை பாட்டாக படிக்க.. (கவனம்-படிக்க பாடல) மீண்டும் அதற்கு எசப்பாட்டு பாடி.... என.. நன்றாக களைகட்டியது..

30 நாட்கள் 30 சவால்கள்.. பாதி எளிமை.. சில உணர்வுப்பூர்வமானவை. சில மகிழ்ச்சி.. சில நெகிழ்வு என முப்பது நாட்களும் பல்வேறு மனநிலையில் கடந்தது. வீட்டில் உள்ளவர்களிடம் இது போல வலைதளத்தில் போட்டி. 30 நாட்கள் இதெல்லாம் செய்ய வேண்டும் என என்று கூறியவுடன் என்னவர் என்ன சொன்னார் தெரியுமா.. பேசாம 365 நாளும் போட்டி வைக்கச்சொல்லு. எங்கள தொந்தரவு பண்ணாம உனக்கு போட்டிலையே சிந்தனை இருக்கும். நாங்களும் உன்ட்ட இருந்து தப்பிச்சுடுவோம்... எனக்கு என்ன சொல்வதென தெரியாமல்.. திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்து நிற்கும் போது கேட்டாரே ஒரு கேள்வி.. ஏன் ரம்யா இப்படி அசையாமல் சிலை போல பத்து நிமிடம் இருக்கனும் னு இன்னிக்கு சவாலானு.... நான் தோசை கரண்டிய எடுக்க.. அவர் கிளம்பிட்டார்..
சில உறவுகளை மீட்டு.. உணர்வுகளைக் கொணர்ந்து.. உடல்நிலை நிலைத்து நிற்கச் செய்ய... இந்த முப்பது நாட்கள் உதவின. உறவுகள் அனைவருக்கும் பேரன்புகள்..
 

Vethagowri

Well-known member
Staff member
#10
பாடலின் மூலம் பதிலளிப்பது .. எளிதான சவாலாக இருந்தது. காலையில் என்னவர் ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போது... ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன் என பாடி சவாலை ஆரம்பித்தேன். அவர் அடுத்து கேட்க வேண்டியதை பாட்டாக படிக்க.. (கவனம்-படிக்க பாடல) மீண்டும் அதற்கு எசப்பாட்டு பாடி.... என.. நன்றாக களைகட்டியது..

30 நாட்கள் 30 சவால்கள்.. பாதி எளிமை.. சில உணர்வுப்பூர்வமானவை. சில மகிழ்ச்சி.. சில நெகிழ்வு என முப்பது நாட்களும் பல்வேறு மனநிலையில் கடந்தது. வீட்டில் உள்ளவர்களிடம் இது போல வலைதளத்தில் போட்டி. 30 நாட்கள் இதெல்லாம் செய்ய வேண்டும் என என்று கூறியவுடன் என்னவர் என்ன சொன்னார் தெரியுமா.. பேசாம 365 நாளும் போட்டி வைக்கச்சொல்லு. எங்கள தொந்தரவு பண்ணாம உனக்கு போட்டிலையே சிந்தனை இருக்கும். நாங்களும் உன்ட்ட இருந்து தப்பிச்சுடுவோம்... எனக்கு என்ன சொல்வதென தெரியாமல்.. திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்து நிற்கும் போது கேட்டாரே ஒரு கேள்வி.. ஏன் ரம்யா இப்படி அசையாமல் சிலை போல பத்து நிமிடம் இருக்கனும் னு இன்னிக்கு சவாலானு.... நான் தோசை கரண்டிய எடுக்க.. அவர் கிளம்பிட்டார்..
சில உறவுகளை மீட்டு.. உணர்வுகளைக் கொணர்ந்து.. உடல்நிலை நிலைத்து நிற்கச் செய்ய... இந்த முப்பது நாட்கள் உதவின. உறவுகள் அனைவருக்கும் பேரன்புகள்..
அங்கேயுமா ரம்யா.. y blood same blood.. எங்க மாமாவும் அதையே தான் சொன்னாரு..
 
#11
இன்று எங்கள் ஊர் திருவிழா..... என்றும் இல்லாத அளவிற்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு ஒரே குதூகலமாக சென்றது... கோயில் புறப்படுவதற்கு முன்னில் இருந்து இந்த சவாலை செய்ய ஆரம்பித்தேன்... நான் பாட பாட வீட்டில் உள்ளவர்கள் திட்டியது தான் மிச்சம்... ஏன்னா அவ்வளவு மோசமான பாடகர் நான்... நானும் அவர்கள் வசவு செய்வதை பொருட்படுத்தாமல் சவாலை முடித்துவிட்டேன்....

நான் இந்த போட்டியில் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது போல் ஒரு தோற்றம்... இந்த சவாலின் முப்பது நாட்களும் நான் இழந்த அந்த சுவாரஸ்யம் மிக அதிகமாகவே கிட்டியது...இது முடியும் போது உங்களிடம் ஒரு கோரிக்கை கூட வைக்க வேண்டும், என்று எண்ணி இருந்தேன்... அடிக்கடி இந்த மாதிரி அதிக சவால்களை நடத்த வேண்டும் என்பது தான்.... தினசரி வாழ்க்கையில், நாம் எங்கோ எப்பவோ தொலைத்த ஒன்று, இந்த சவால்களின் மூலம் மீண்டும் செயல் படுத்தும் போது மனதுக்கு அத்தனை நிறைவு... வார்த்தையில் வடிக்க முடியாத உணர்வுகள்... புதியதாக சிலது கற்று, சிலதை நினைவுபடுத்தி, சிலதை ரசித்து இப்படி பல்வேறு உணர்வுகளின் தாக்கம் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம்... நன்றிகள் பல சுதா அக்கா... இப்படி ஒரு சவாலை மேற்க் கொண்டதற்கு....அம்மா மற்றும் என் தோழி ஒருத்திக்கு மட்டுமே இந்த சவால்களை பற்றி தெரியும்... தோழி இதில் சம்மந்தப்படாததால் அவளிடம் தினமும் இன்று இதை செய்தேன் என்று கூறி சந்தோஷமிட்டுக் கொள்வேன்.. அம்மாவிடம் ஒரு நாள் சவாலை பற்றிக் கூறினேன்... அதிலிருந்து நான் என்ன செய்தாலும் அவர்கள் அதை சவாலாகத்தான் நினைப்பது..... நான் மிகவும் தீவிரமாக பேசும் சில சந்தர்ப்பங்களில் கூட இதுவும் சவாலா என்று கேட்டு என்னை தினரடிப்பார்.... ஆக மொத்தத்தில் மீண்டும் மீண்டும் செய்ய நினைக்கும் சவால்
 
#12
'சவாலே சமாளி'

'சரோஜா சாமனிக்காளோ'

30 ஆம் நாள்

காலை 9 -10 மணி

'பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா' டாஸ்க்

'அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே'
அம்மவை அழைக்க இந்த பாடல் பாடுனேன்.

என் தங்கச்சியை பார்த்து 'என் தங்கை என் தங்கை வெள்ள மனம் கொண்ட தங்கை' ன்னு பாடிட்டே கூப்பிட

'ஏய் ஏய் என்ன ஆச்சு உனக்கு
புதுசா இந்த பாடல் அழைப்பு எதுக்கு'ன்னு ஒரு லுக்.

என்ன பாட்டு பாடி கூப்பிடுற?

அதுக்கும் 'ஏதோ ஒன்று என்னை தாக்க ன்னு பாட
அவங்க யாரோ போல என்னை பார்க்க'

என்ன ஆச்சு ஏன் பாட்டு பாடிட்டே இருக்க?

அதுக்கு 'சும்மா சும்மா' சாங் நான் பாட

'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே'ன்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க.

இப்படியே பாட்டு பாடி அவங்க ரெண்டு பேரையும் வெறுப்பேற்ற

'அடிடா அவளைன்னு' அவங்க அடிக்க வர

"ஆடபோனேன்(பாடபோனேன்) மங்காத்தா
துரத்தின்னு வருது எங்காத்தான்னு' பாடிட்டே ஓடி ஒளிஞ்சாச்சு.

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட கூப்பிட்டாங்க.

'வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்' என்று பாட

'நான் அடிச்சா தாங்கமாட்டன்னு' ஒரு லுக்

இதுக்கு மேல 'வாய மூடி சும்மா இருடி
தட்ட பார்த்து சாப்பிடுடின்னு' எனக்குள்ள நானே பாடிட்டு அமைதியாகியாச்சு.

30 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.

எப்படியோ 30 நாள் சவாலையும் 'செமயா சூப்பரா நச்சுன்னு நறுக்குன்னு கெத்தா ஆஹா ஓஹோன்னு? முடிச்சாச்சு.

அதேபோல முப்பது நாள் சவாலையும் செமயா சூப்பரா கெத்தா முடிச்ச என் நட்புக்களே உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

சூப்பரா ஜாலியா 30 நாள் டாஸ்க்கையும் முடிச்சுட்டோம் பிரண்ட்ஸ்.

'ஸீவிட் எடு கொண்டாடு'

download.jpeg
 

Ramya Mani

Well-known member
#13
அங்கேயுமா ரம்யா.. y blood same blood.. எங்க மாமாவும் அதையே தான் சொன்னாரு..
ஆமா... சவாலையே சமாளிச்சுட்டோம். நம் ஆளையா சமாளிக்க முடியாது..சமாளிப்போம்
 

Ramya Mani

Well-known member
#14
'சவாலே சமாளி'

'சரோஜா சாமனிக்காளோ'

30 ஆம் நாள்

காலை 9 -10 மணி

'பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா' டாஸ்க்

'அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே'
அம்மவை அழைக்க இந்த பாடல் பாடுனேன்.

என் தங்கச்சியை பார்த்து 'என் தங்கை என் தங்கை வெள்ள மனம் கொண்ட தங்கை' ன்னு பாடிட்டே கூப்பிட

'ஏய் ஏய் என்ன ஆச்சு உனக்கு
புதுசா இந்த பாடல் அழைப்பு எதுக்கு'ன்னு ஒரு லுக்.

என்ன பாட்டு பாடி கூப்பிடுற?

அதுக்கும் 'ஏதோ ஒன்று என்னை தாக்க ன்னு பாட
அவங்க யாரோ போல என்னை பார்க்க'

என்ன ஆச்சு ஏன் பாட்டு பாடிட்டே இருக்க?

அதுக்கு 'சும்மா சும்மா' சாங் நான் பாட

'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே'ன்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க.

இப்படியே பாட்டு பாடி அவங்க ரெண்டு பேரையும் வெறுப்பேற்ற

'அடிடா அவளைன்னு' அவங்க அடிக்க வர

"ஆடபோனேன்(பாடபோனேன்) மங்காத்தா
துரத்தின்னு வருது எங்காத்தான்னு' பாடிட்டே ஓடி ஒளிஞ்சாச்சு.

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட கூப்பிட்டாங்க.

'வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்' என்று பாட

'நான் அடிச்சா தாங்கமாட்டன்னு' ஒரு லுக்

இதுக்கு மேல 'வாய மூடி சும்மா இருடி
தட்ட பார்த்து சாப்பிடுடின்னு' எனக்குள்ள நானே பாடிட்டு அமைதியாகியாச்சு.

30 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.

எப்படியோ 30 நாள் சவாலையும் 'செமயா சூப்பரா நச்சுன்னு நறுக்குன்னு கெத்தா ஆஹா ஓஹோன்னு? முடிச்சாச்சு.

அதேபோல முப்பது நாள் சவாலையும் செமயா சூப்பரா கெத்தா முடிச்ச என் நட்புக்களே உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

சூப்பரா ஜாலியா 30 நாள் டாஸ்க்கையும் முடிச்சுட்டோம் பிரண்ட்ஸ்.

'ஸீவிட் எடு கொண்டாடு'

View attachment 531
ஹி ஹி.. நானும் நீங்க பாடுன!!! பாட்டுல நாலு எங்க வீட்ல பாடி!!!! னேன்..வாய மூடி சும்மா இருடா, வந்தேன் வந்தேன்,ஏய் என்ன ஆச்சு உனக்கு... அவரு லூசுப்பெண்ணே னு போயிருந்தா கூட பரவாயில்லை.. குண்டு குண்டு குண்டு பொண்ணே.. கூப்பிடுது உன் ஸ்கூலு பொண்ணுனுட்டாரு
 

kohila

Active member
#15
எங்கள் வீட்டில் வழக்கமா நடப்பது தான். கிடைத்த வார்த்தைகளை வைத்து பதிலை பாட்டாவே பாடுவோம். என் பொண்ணு தான் நிறைய பாடல்கள் தெரியாததால் கொஞ்சம் ஸ்டாப் பண்ணும்மா. இதெல்லாம் நிஜமாவே பாட்டா? நீயா பாடுறியான்னு திட்ட ஆரம்பிச்சுடுவா. இன்னைக்கும் அவ கத்தலுக்கு இடையில் நடந்துடுச்சு..

என் வீட்டில் நம்ம டாஸ்க பண்ணதை சொன்னால் எல்லாத்தையும் கேட்டுட்டு, அந்த ஃபோன் டச் பண்ணாமல் இருந்த டாஸ்க் ரொம்ப நல்லாருக்கே. டெய்லி வைக்க முடியுமான்னு கேளுன்றார். அந்த அளவுக்கு ஃபோனும் கையுமா அலைஞ்சிருக்கேன் போல.

நீங்க ஒரு நாளைக்கு 20 நிமிஷம் ன்னு சொன்னீங்க. நானெல்லாம் அடுத்த நாள் என்ன டாஸ்க்கா இருக்கும்? இன்னைக்கு டாஸ்க் எப்படி பண்றதுன்னு சில நாட்கள் நாள் முழுக்க திங்க் பண்ணியிருக்கேன். நாளைக்கு சவால் இருக்காதான்னு ஒரே கவலையா இருக்கு. அந்த அளவுக்கு அடிக்ட் ஆகிட்டேன். அப்புறம் இங்கே ரெகுலரா டாஸ்க் பண்ற நம் தோழிகள், எல்லோருடைய அனுபவமும், அவர்கள் சொல்லிய விதமும் மிகவும் அருமை. நிச்சயமா எல்லோரையும் மிஸ் பண்ணுவேன்.
 
#16
30 நாள் சவால்களும் ரொம்ப அருமையாக சென்றது. ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க் இருக்கும் என்று ஆர்வமாக காத்திருந்து அதை செய்து முடித்து பதிவாக போடும் போது சூப்பரா இருக்கும் . சில டாஸ்க்கை பற்றின பதிவுகள் எனக்கு அழகிய டைரி போல (நான் செஞ்ச டாஸ்க், அதற்கு மற்றவர்களின் ரியாக்ஷன்ஸ்யை அப்படியே பதிவாக எழுதி)அழகான இனிய நினைவுகளாக இருந்துருக்கு. விடுகதைகள், தமிழ் வார்த்தைகள், கணித கேள்விகள் ,சிரிக்கும் டாஸ்க், பாடிட்டே பதில் சொல்லுறது, யோகா,கடிதம் எழுதும் டாஸ்க் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச டாஸ்க்குகள். எல்லா சவாலையும் ஜாலியா ரசிச்சு செஞ்சேன். அனைத்தும் அழகான தருணங்கள்,விதவிதமான அனுபவங்கள்.

இன்று வரை சவால் பற்றி வீட்டில் முழுதாக சொல்லவில்லை என்றாலும் அப்பப்போ எதாச்சும் டாஸ்க்கை மட்டும் இன்று செய்ய வேண்டும் என்று சொல்லுவேன். அதை செஞ்சிட்டு அதற்கு அவங்க ரியாக்ஷன்ஸ் அப்படியே எழுதி பதிவாக போட்டிருந்தேன். இன்று தான் சவால் பற்றி முழுதாக தெரிந்து கொண்டார்கள். அம்மாக்கு நான் போட்ட எல்லா போஸ்ட்டயும் எடுத்து காமிச்சேன்.படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்லி வாழ்த்துக்கள் சொன்னாங்க.
 

sudharavi

Administrator
Staff member
#17
வெற்றிகரமா முப்பது நாட்கள் சவால்களை முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்......விரைவில் பரிசு பெறுபவர் யார் என்கிற அறிவிப்போடு வருகிறேன்...