அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 27

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம்,

இன்றைய சவால்...ஒரு மணி நேரத்திற்கு எல்லாவற்றிற்கும் சிரிக்க வேண்டும். எதற்காக சிரிக்கிறோம் என்ற அளவுகோல் கிடையாது....தும்மினாலும் சிரிக்க வேண்டும், பேசினாலும் சிரிக்க வேண்டும்...சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க...
 

Vethagowri

Well-known member
Staff member
#2
வணக்கம்,

இன்றைய சவால்...ஒரு மணி நேரத்திற்கு எல்லாவற்றிற்கும் சிரிக்க வேண்டும். எதற்காக சிரிக்கிறோம் என்ற அளவுகோல் கிடையாது....தும்மினாலும் சிரிக்க வேண்டும், பேசினாலும் சிரிக்க வேண்டும்...சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க...
மொத்தத்துல என்னைய குணசீலம் அனுப்பமா விட மாட்டீங்க..
 

Vethagowri

Well-known member
Staff member
#4
அனைவருக்கும் சிரிப்புடன் கூடிய இனிய காலை வணக்கம்..

சவாலை படித்தவுடன் சிரிப்பு பொங்கி எழுந்தது, ஏற்கனவே உனக்கு முத்தி போச்சா அப்படின்னு ஏதோ ஒரு டாஸ்க்ல என் பொண்ணு கேட்டா, இத செஞ்ச முன்னா கண்டிப்பா கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க, சும்மா பேசிட்டு இருந்தா கண்டிப்பா ஏதோ ஆயிடுச்சு எல்லாம் பயந்துருவாங்க, ஹாட்ஸ்டார் ல கலக்கப்போவது யாரு புரோகிராம் ஒரு எபிசோட் போட்டு உட்கார்ந்து ஆச்சு, சிரிப்பு வராத காமெடி எல்லாம் சிரிக்க, மொக்க காமெடி கூட சிரிக்கவேண்டியாத போயிடுச்சு, "என்னம்மா ஆச்சு இப்படியே சிரிச்சுகிட்டே இருக்க " என்று என் பொண்ணு கேட்டு, முழுசா பைத்தியமா மாறிட்டு இருக்க எங்க அம்மாவை பாருங்க, கூடிய சீக்கிரம் முழு பைத்தியமாகவே ஆயிடுவாங்க ன்னு சொல்லி கமெண்ட் அடிக்க, அதுக்கு நான் சிரிச்சி வைக்க, உன்னை எல்லாம் திருத்தவே முடியாது போம்மா, என்று சொல்லி சென்றுவிட்டாள், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்து மறுபடியும் சிரிப்பதை பார்த்து, கடுப்பாகி என்ன இன்னிக்கு இப்படி ஒரு டாஸ்கா, என்று கேட்டு ஒன்னு பைத்தியமா இருந்தா பரவால்ல சேர்ந்து இருக்க எல்லரும் பைத்தியமா இருந்தா என்ன பண்றது?.. சொல்லிட்டு போயிட்டா, "அப்பாடா நம்மள மட்டும் சொல்லல சேர்ந்த எல்லாத்தையும் சொல்ற அப்படின்னு ஒரு சின்ன சந்தோஷம், மணிய பார்த்துகிட்டே இருந்தேன் எப்படா ஒரு மணிநேரம் முடியும்னு, நல்லபடியா முடிஞ்சது, (7 to8)நல்ல வேலை இந்த டாஸ்கை நாளைக்கு குடுக்கல, ஏன்னா நாளைக்கு ஒன்டே அவுட்டிங் போறதா பிளான், வீட்டில் உள்ளவங்க மட்டும் இல்ல ஊருல உள்ளங்களும் நம்மை பைத்தியம் கன்ஃபார்மா நினைப்பாங்க... தப்பிச்சோம்டா சாமி... இன்னும் மூணு நாள் இப்படியே சேதாரம் கம்மியா கொடுத்து காப்பாத்து ஆண்டவா... 27 ஆம் நாள் நல்லபடியாக முடிந்தது
 
#5
வணக்கம்,

இன்றைய சவால்...ஒரு மணி நேரத்திற்கு எல்லாவற்றிற்கும் சிரிக்க வேண்டும். எதற்காக சிரிக்கிறோம் என்ற அளவுகோல் கிடையாது....தும்மினாலும் சிரிக்க வேண்டும், பேசினாலும் சிரிக்க வேண்டும்...சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க...
ஹா ஹா ஹா:LOL: சிரிப்பா சிறப்பா செஞ்சுடுலாம்:ROFLMAO::D
 
#6
Successfully completed the task.Office kulla vandathula irundhu sirichute irunden.Elorum ithu deepikathana apadinu oru periya sandegathuku alagitanga.Athukaduthu lab kulla entry kodukurapave mask matinathala rombavum damage agama task ah mudichachu
 
#7
Kalaila task partha tym la irunthu start panitan.. Sirika.. 7.25 to 8.25 vara panna....actually epaum mrng tym na konjam serious mode la tha suthitu irupan.. Antha tym la yar enkita pesinalu bayangarama kathivituduvan.. So inaiku intha task vatchu sirichute irunthan... Kalaila amma tha 1 st sikkinaga.. Avanga pesa pesa na sirika arambichathum avngalum sirichanga.. Ana ithaiye continue pananathum oru kattathuku mela tension agi nalla dose koduthanga.. Irunthalu na apaum sirichukite iruka , en pakkam thirumba kuda ila avanga athukapram... Apram en thangachi college la irunthu call panina ammaku.. Amma speaker la potu pesa , na pakkathula irunthukitu sirichute iruntha , so ava next gandu aitaa.. Ipo iva ethukuma paithiyam mari sirikara avala kammunu iruka soluma enaku tension aguthunu enga amma ta pHone laiye sandai.. Enga amma ena moraika na sirichute oditan... En akka ponnu vayasu 1 and half, en pattu matum na sirika sirika avalum senthu sirichute iruntha task mudiyara varai.. Enga amma ,athuku antha paithiyam kuda intha kutty paithiyam uh senthukuchunu kalaichutu ponaga.. Enga appa tha konjam tension agitar.. Namaku Ena thittu vangarathu puthusa, na sirichukite avara nama ponnu sirikuthenu santhosha padama kovapadringa apo ungaluku enmela pasame ilanu solitu anga irunthu oditan.. Next en patti, na sirikaratha pathu yean pappa sirikaranu kekka, athukum naan sirika, udane avangalum sirika arambichutanga.... Apram En akka thungi elunthu vantha avataium sirichute iruka, ava ena nu kekka , na athukum sirika, enga amma tha ethuna task ah irukum, nalaiku paru road la dress ah kilichutu thiriyara task ah varumnu kalaikaranga.. Udane en akka oh apadiya apo kovapadamatiya apadinu solitu ,bayangarama thitta arambichuta erumai korangu maadunu,, adika vera start panita,, na chuma irupena ava adikum pothu. So na sirikathane sonnaga, adika kudathunu solalaiye so sirichukute avala kaiyula vatchuruntha kathi ah vatchu adika poga, amma ava kovapatuta nu kathite pora.. Na sirichute ipaum sirichute tha unai adikaranu solitu avala adichan.. Vegetables la sirichute cut panna... Thanks to dis task... Daily ennoda mrng konjam tension ah tha pogum.. But inaiku apadiye ore athiri puthiriya pochu....
 

Anuya

Well-known member
#8
Task completed successfully .....

Naa en friends kuda iruntha sirichite irupen athu ethukune theriyathu ...ethavathu oru comedy panniten irupom soo sirichite irupom .....engalukku ullaye nanga task vachipom kuripa enaku ..naa avangala paarthu oru 5 min sirikama irukanum nu bt inaiki Vara naa atha complete pannathu illa avanga face paathale sirichituven.... Athuvum illama inaiki comali movie um ponom ah 1 hour enna 2.30 hours sirichite irunthen ??athuvum intha friends kuda ..kekavavenum sema jolly ...aana sila mokka scenes kuda naa vilunthu vilunthu sirichathula ivalunga kudatha reactions thaan konjam shame aagituchu???....
27th day task completed successfully ......
 
#9
27ஆம் நாள்

'சவாலே சமாளி'

காலை 10-11 மணி

இன்று ஒருமணி நேரம் எந்த வேலை செய்தாலும் சிரிச்சுட்டே செஞ்சிட்டும், யார் பேசினாலும் சிரிச்சுட்டே பதில் சொல்லிட்டும் இருந்தேன். என் தங்கச்சி என்ன இன்று சிரிக்குற டாஸ்க்கான்னு கரெக்டா கண்டுபிடிச்சு கேட்டு கிண்டல் பண்ணிட்டு இருந்தா . அடுத்து அம்மா 'என்ன அவ தனியா சிரிச்சுட்டு இருக்கான்னு கேட்க' , என் தங்கச்சி, டாஸ்க்குன்னு சொல்ல, அம்மா 'ஓ ! அப்படியா சிரி சிரி நல்லா சிரின்னு சொல்லிட்டு சென்றாங்க. அடுத்து தம்பி வர, அவன் எது பேசினாலும் சிரிச்சுட்டே பதில் சொல்ல, எதுக்கு சிரிக்குறன்னு கேட்டுட்டே இருந்தான். பதில் சொல்லாமல் அதுக்கும் சிரிச்சுட்டு இருக்க, டென்ஷனாயிட்டு கிளம்பிட்டான் . இப்படியே சிரிச்சு சிரிச்சு அவங்களை நான் வெறுப்பேற்றினா பதிலுக்கு அவங்க என்னை கிண்டல் செய்து வெறுப்பேற்றினார்கள் . அதையெல்லாம் 'அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா 'ன்னு கண்டுக்காம அப்படியே சிரிச்சுட்டே வேலைகளை செஞ்சுட்டு,அப்புறம் யூ டியூப்ல கொஞ்சம் நேரம் ராமர் ஜோக்ஸ் பார்த்து சிரிச்சுட்டு, ஆளவந்தான் படம் பாட்டு ' சிரி சிரி ' சாங் ரெண்டு தடவை பார்த்து சிரிச்சு ஒருவழியா ஒரு மணிநேரம் முடிச்சாச்சு.

'சிரி சிரி சிரி சிரி சிரி 'ன்னு சிரித்து சிரித்து 27 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.
 
#10
Normala vey enaku konjam ethu pallu dhan...( Self damage) mudiala.. Orey Oru photo la kooda en pallu theriyama irukadhu.. sariyana ilicha vaayi nanu.. chinna joke ku kooda romba siripen.. idhula ipdi Oru task.. tv pathutu sirichitey irundhen.. nallarundhuchu...

Normal ah vey na konjam over ah siripen.. adhunala en husband ku idhu avelobtension kudukala..??
 

Ramya Mani

Well-known member
#11
இன்னிக்கு ஒரு வேலையாக சென்னைக்கு கிளம்பியாச்சு. வைகை எக்ஸ்பிரஸ் ல ஏறி உட்கார்ந்து டாஸ்க் க் பாத்தா..சிரிக்கற டாஸ்க். எங்க கோச்ல நிறைய பசங்க இருந்தாங்க. அதனால அவங்களோட சேர்ந்து இந்த டாஸ்க்க கம்ளீட் பண்ணியாச்சு. யாரு என்ன கேட்டாலும்ஈஈஈஈஈஈஈனு இளிச்சு காமிச்சு வெறுப்பேத்தியாச்சு
 

kohila

Active member
#12
நேற்று தாடை வலியால் பகலில் டாஸ்க் செய்ய என்னால் செய்ய முடியவில்லை. ஆனால் இரவு பத்து மணியிலிருந்து 11 மணி வரை என் மகளே என்னை சிரிக்க வைத்தாள்.