அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-26

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் தோழமைகளே!

இன்றைய சவால்....தொலைக்காட்சி நிகிழ்ச்சியில் மாறுபட்ட இரு நிகழ்ச்சிகளை பற்றி ஒவ்வொரு நிகழ்ச்சியை பற்றியும் ஒரு பத்திக்கு குறையாமல் எழுத வேண்டும். முக்கியமாக நமது தமிழ் சேனல்களை விடுத்து பிபிசி, நேஷனல் ஜிகிராபிக் சேனல் போன்ற சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை பற்றி எழுதுங்கள்.
 

Vethagowri

Well-known member
Staff member
#3
வணக்கம் தோழமைகளே!

இன்றைய சவால்....தொலைக்காட்சி நிகிழ்ச்சியில் மாறுபட்ட இரு நிகழ்ச்சிகளை பற்றி ஒவ்வொரு நிகழ்ச்சியை பற்றியும் ஒரு பத்திக்கு குறையாமல் எழுத வேண்டும். முக்கியமாக நமது தமிழ் சேனல்களை விடுத்து பிபிசி, நேஷனல் ஜிகிராபிக் சேனல் போன்ற சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை பற்றி எழுதுங்கள்.
என்ன அக்கா இப்படி சொல்லிட்டீங்க.. டாஸ்க் படிக்க ஆரம்பித்த உடனே டிவி நிகழ்ச்சி அப்படினு பார்த்த உடனே நான் பிக்பாஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சா கடைசில தமிழ் சேனல் தவிர்த்துன்னு சொல்லிட்டீங்களே... எனக்கு ஒரு டவுட் அக்கா... நீங்க சொல்லுற சேனல்ல தமிழ் ப்ரோக்ராம் வருது அதை பத்தியும் எழுதலாமா...
 

dharani

Active member
#4
வணக்கம் தோழமைகளே!

இன்றைய சவால்....தொலைக்காட்சி நிகிழ்ச்சியில் மாறுபட்ட இரு நிகழ்ச்சிகளை பற்றி ஒவ்வொரு நிகழ்ச்சியை பற்றியும் ஒரு பத்திக்கு குறையாமல் எழுத வேண்டும். முக்கியமாக நமது தமிழ் சேனல்களை விடுத்து பிபிசி, நேஷனல் ஜிகிராபிக் சேனல் போன்ற சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை பற்றி எழுதுங்கள்.
munnadi national geo tv oru program varum ippo varutha illaiyanu theriyala.. crocodile hunt nu athai pathi eluthalama
 

Anuya

Well-known member
#5
என்ன அக்கா இப்படி சொல்லிட்டீங்க.. டாஸ்க் படிக்க ஆரம்பித்த உடனே டிவி நிகழ்ச்சி அப்படினு பார்த்த உடனே நான் பிக்பாஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சா கடைசில தமிழ் சேனல் தவிர்த்துன்னு சொல்லிட்டீங்களே... எனக்கு ஒரு டவுட் அக்கா... நீங்க சொல்லுற சேனல்ல தமிழ் ப்ரோக்ராம் வருது அதை பத்தியும் எழுதலாமா...
Hehe.....sissy appo Hindi and Telugu big boss pathi eluthalama ????
 

Vethagowri

Well-known member
Staff member
#10
சில வருடங்களுக்கு முன் முடிந்து போன நிகழ்ச்சியா இருந்தாலும் ஒகேவா அக்கா
அதையும் எழுதுங்க கோகி.. ஒருவேளை அதை பத்தி தெரியாமல் இருந்த தெரிஞ்சுக்குறோம்
 

kohila

Active member
#13
ஸ்கூல் படிக்கிற காலத்துல ஸ்டார் பள்ஸ் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கேன். இப்போலாம் எல்லா சேனலும் பே சேனலா மாறவும், தமிழ் மியூசிக், மூவிஸ் தவிர வேற எதுவும் பார்ப்பதும் இல்லை நேரமும் கிடைப்பதில்லை. என் பொண்ணோட சேர்ந்து சில எபிசோடுகள் மட்டும் பார்த்தது தான் இந்த நிகழ்ச்சிகள்.Takeshi’s Castle – pogo tv

போகோ டிவியில் வெள்ளி சனி இரவுகளில் ஒளிப்பரப்பாகும். வெற்றி பெறுவது மட்டுமின்றி ஒரு சில லெவலை தாண்டுவதே அவ்வளவு கடினம். இதனுடைய வின்னருக்கு 1 மில்லியன் யென்(ஜப்பானியர்கள் நடத்தும் நிகழ்ச்சி) பரிசாக கிடைக்கும். எத்தனையோ லட்சம் பேர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை எட்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைப் பார்த்து விட்டு நம்மூர் சேனலில் நிறைய முயற்சி செய்து விட்டார்கள். ஆனால் சுவாரசியம் இல்லாமல் போனத்ற்கு முக்கிய காரணம் எடிட்டிங்க், அவ்வளவு பக்காவா எடிட் பண்ணிருப்பாங்க. அடுத்தது எல்லா லெவலிலும் நாக் அவுட். இரண்டு காரணங்கள் தான் நினைக்கிறேன். அந்த ஒரு மணி நேரம் கண்ணை திரையை விட்டு அகற்ற இயலாது. நம் சிறுவயதில் விளையாட்டாக சால்வ் செய்த puzzle, அதனுள் தவறான கதவை திறந்தால் நாக் அவுட் செய்யும் பூதம், கையில் மாட்டினால் தூக்கி போடும் ராவணன். இடையூறு செய்யும் வோடஃபோன் விளம்பரத்தில் வரும் ஜீஜீ, என்று ஒவ்வொரு லெவலும் நம்மை திரையோடு ஒன்ற செய்யும். உடல் பலத்தோடு, சற்று சமயோசிதமாக யோசித்து, அதிர்ஷ்டமும் கைக்கொடுத்தால் இந்த போட்டியில் வெல்லலாம்.Science of stupid - National geographic channel


சயின்ஸ் முக்கியமா பிஸிக்ஸ்ன்னா பிடிக்கும் சொல்பவர்கள், பிஸிக்ஸ் படிக்க பிடிக்காத மாணவர்கள் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி இது. முன்பு நம் தமிழ் சேனல்களில் வரும், இணையத்தில் உலாவும் ஃபன் வீடியோ க்ளிப்பிங்க்ஸ் நிகழ்ச்சி மாதிரியே தான் இருக்கும். அதை அறிவியல் துறையுடன் இணைத்து ஹோஸ்ட் பண்றவர் காமெடியா தொகுத்து வழங்குவார். நம்ம தியரியா படித்த ஒவ்வொரு law & definition க்கும், தகுந்த வீடியோவை போட்டு, விளக்கம் தருவார். சாதாரணமான நாம் செய்யும் வீட்டு வேலைகளில் இருந்து விளையாட்டு துறை வரை, சயின்ஸை சரியாக புரிந்து முறைப்பட்டி செய்தவர்கள் வெற்றி பெறுவதையும், புரிந்துக் கொள்ளாதவர்கள் தோல்வியுறுவதையும் சொல்லி விளக்கம் தருவார். இயற்கை பேரிடர்கள் போது தற்காத்துக் கொள்ள உதவும் அறிவியலையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
 
#17
நான் டீவி அதிகமாக பார்க்கமட்டேன்.. அதுக்காக நல்ல பிள்ளைனு நினைக்காதிங்க... எனக்கு நாவல் படிக்க தான் ரொம்ப பிடிக்கும்.... Serial kuda பார்ப்பன் ஆனால் நிகழ்ச்சி எதுவும் அவ்வாளவா பார்க்க மாட்டேன்... அதுவும் english channel la chance eh இல்ல....
Enaku epaum animal especially reptilesன ரொம்ப பயம்... Film la பார்த்த கூட கண்ண close pannipan.. But intha task kaga na inaiku animal planet la parthan...

WILDEST SURVIVAL :

Animal Planet la daily morning 6 to 7 telecast aguthu... Intha program parthathum enaku thonina onnu "SURVIVAL OF THE FITTEST" ...... எறும்பு ல இருந்து டைனோசர் வரை காமிக்கராங்க. ஒவ்வொரு விலங்குகள் வாழ்றதுக்கு இன்னொரு விலங்கு தேவைபடுது. ஒரு விலங்கு பத்தி சொல்லி அதோட வாழ்வாதாரம் எப்படி இருக்கும் ,அதோட விஷத் தன்மை , அதோட உணவு பழக்கம், எப்படி அதுக்கு தேவையான உணவுகளை வேட்டை ஆடுறது, அப்படின்னு எல்லாமே வரும்... அதுவும் அந்த விலங்குகளை close up ல காட்டு வாங்க.... எப்பா...... Just போன் ல சின்ன screen la பாக்கவே எனக்கு பயம் ஆகிட்டு.... அதுவும் அந்த show full ah வர background music chanceless... அப்படியே ஒரே திக் திக் மொமன்ட் தான்... என்ன பொருத்த வரை விலங்குகள் னா சிங்கம்,புலி ,ஆடு ,மாடு குதிரை, நாய்... இதுக்கே எனக்கு ரொம்ப பயம்... Show kaga photography video எடுக்கிறவங்களாம் ரொம்ப great... Seriously this show is good for those who are interested in wild life animals... அப்புறம் நெரையா தெரிஞ்சுகனும் விலங்குகள் பத்தினு நினைக்கிரவர்களுக்கு இது ரொம்ப useful... கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு place nu world full ah காட்டுவார்கள்...BAKERY BOSS:

TLC HD WORLD channel la telecast aguthu... Actually ithu oru reality show like bigg boss ... But purpose romba different.... பாரம்பரியமாக நடத்திட்டு வர சில பின்தங்கிய கேக் shop ஐ இப்போ இருக்க trend ku மாத்துறதுக்கு help பன்றது தான் இந்த show ஓட concept... 44 mins ஓவ்வொரு episode uh... நம்ம பிக் பாஸ் எப்படி கமல் host செய்வார்.. அதே மாதிரி இந்த நிகழ்ச்சிய host செய்பவர் Boss Buddy valastro.. இவர் அந்த சம்மந்தப்பட்ட பேக்கிரிக்கு போய்ட்டு அவங்ககிட்ட அறிமுகமாகி, அந்த பேக்கிரி ல இருக்கவங்களோட மனநிலை அப்புறம் அவங்க கேக் செய்யும் முறை எல்லாவற்றையும் பார்த்து அவங்களோட மனநிலை மற்றும் அந்த shop யின் நிலவரம் (லைக் interior decoration)வரை எல்லாத்தையும் மாத்தி, reopening panni atha antha shop owners ku surprise ah kamipanga... So antha moment avangaloda emotions la capture panni telecast panrathutha intha showoda concept.... And antha reopening ku people ah invite panni celebrate panuvanga... Intha show la enaku purinjathu namma seiyara work ah loving ah and romba innovative ah pannanum... Season ku yetha mari trending mathite irunthatha people ah attract panni. Business nalla pogum... So enaku intha show pidichuruku... Intha show oda moral nu ethum ila.. Just reality show avolo kastapattu yeno thananonu bakery run panavanga , atha loving oda pannum pothu epadi irukum avolotha...
 

Vethagowri

Well-known member
Staff member
#20
சயின்ஸ் ஆப் ஸ்டுப்பிட்:

நேஷனல் ஜியாராஃபிக் சேனலில் வரும் இந்நிகழ்ச்சி விளையாட்டுத்தனமாக அல்லது அசட்டுத் துணிச்சலுடன் செய்யும் சேட்டைகளுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் முட்டாள் தனத்தை உடைய செய்து உண்மையை உரக்கச் சொல்கிறார்.. தொகுப்பாளர் மணிஷ் பால் வைரல் வீடியோக்கள் மூலமாகவும், தனது ரன்னிங் கமென்ட்ரிகளாலும் இந்நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார், தொகுக்கப்பட்ட அனிமேஷன் மற்றும் ஸ்லோ மோஷன் ஒளிப்பதிவில் வருகிறது, பல முறை பார்த்தாலும் அலுப்பு தட்டவில்லை, அறிவியலை சுவாரசியமான நகைச்சுவையான மற்றும் புரிந்து கொள்ள எளிதான முறையில் மக்களைக் கவர்வது இதன் உத்தி..
நிகழ்ச்சியின் ஒவ்வொரு பருவமும், அதிக உற்சாகத்துடனும் சூழலுடன் நம்மை வெகுவாக கவர்கின்றன, குழந்தைகளுடனும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகள் அருகி வரும் இக்காலத்தில் பொழுதுபோக்குயும் அறிவியல் பாடத்தை நம்மை புரியும்படி செய்கின்றது நிகழ்ச்சி..

OMG யே மேரா இந்தியா :
ஓ எம் ஜி யே மேரா இந்தியா ஷோ நெடு நாட்களாக ஓடிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது, இந்தியாவில் வெற்றிகரமான உண்மை தொடராகவும் உள்ளது
, இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் சொல்லப்படாத கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, நான் பார்த்து எவ்வளவு நாட்களாகி இருந்தாலும் அதில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கிய மாணவர்களின் திறமையை உலகுக்கு காட்டியது, அதிகாரப் பூர்வ கொடிகள் தயாரிப்பாளர்கள் பற்றியும், பாம்பை கண்டால் படையே நடுங்கும் அந்த வகையான பாம்பை சிறு குழந்தையை போல் கையாளும் கோப்ராஸ் மன்னர்கள் பற்றிய எபிசோட்கள் வாயைப் பிளந்து பார்த்தது என்பது மறுக்கமுடியாத மறக்கமுடியாதஉண்மை, நகைச்சுவை நடிகரும், நடிகருமான கிருஷ்ணா அபிஷேக் இதன் தொகுப்பாளர்... ரொம்ப பிடித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. History tv 18 tv யில் வரும்..