அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY -20

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் ஒரு பதினைந்து நிமிடங்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டே உங்களது வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

நாம் பார்க்கும் இவ்வுலகம் கடவுள் நமக்களித்த வரம் என்பதை உணர.வைக்கும்...

இருளான உலகம் எப்படி இருந்தது என்பதை பதிவிடுங்கள்.
 

Anuya

Well-known member
#2
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் ஒரு பதினைந்து நிமிடங்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டே உங்களது வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

நாம் பார்க்கும் இவ்வுலகம் கடவுள் நமக்களித்த வரம் என்பதை உணர.வைக்கும்...

இருளான உலகம் எப்படி இருந்தது என்பதை பதிவிடுங்கள்.
Super task sudha maaa.......Sudha maa intha maathiri naa niraiya time try panni paarthu iruken..... Kanna close pannite nadanthu steps irukunu theriyama slip aagi vilunthu Sema thittu vanki iruken???....Soo intha task pannum pothu ellarum carefull ah pannunga Sissy's...:love:
 
#3
Good morning to all.Successfully completed the task.Mrng lab la epavume sanitation panuvom athuku minimum 20 mins agum.Chlorin add panni athai 5 times ultra pure waterla rinse senju piragu ethanol spray panni flaming pananum.Nan indha task ku ethanol spray panra varaikum nu fix pannitu senjen.Ana lab floor mulukka tanniya kotti vituten really grt parka mudiyathavanga evalo velai seiranga hats off to them.Pavam housekeeping pagan clean panrappa sorry matum than enala kekka mudinjathu
 

kohila

Active member
#4
இந்த டாஸ்கை படிக்கும் போது உணர்வு பூர்வமா பதிவிடணும் தான் நினைத்தேன்.. ஆனா ரியாலிட்டி.. என்னை காமெடி பீசா மாத்திடுச்சு… காலையில் எழுந்ததும், நம் வீட்டு ஆளுங்க எழுவதற்குள் டாஸ்கை முடிச்சிடலாம்ன் நினைத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு அலாரமும், இருபது நிமிடங்களுக்கு ஒரு அலாரமும் வைத்தேன்(நம்ம மேல அவ்வளவு நம்பிக்கை)

முதலில் கண்ணை மூடிக்கிட்டே கதவு பக்கத்துல இருக்க வாஷ் பேஷின்கிட்ட வந்துட்டேன். ஆனா எது என்னுடைய ப்ரஷ்ன்னு தெரியாமல் ஒரே கன்ஃபியூசன்ல கண்ணை திறந்துட்டேன். அதுக்குதான் இரண்டாவது அலாரம்ன்னு திரும்பவும் கண்ணை மூடி, ப்ரஷ் பண்ணிட்டேன்.

அடுத்து, பொங்கல் பண்ணலாம்னு, தட்டு தடுமாறி பருப்பை எடுத்துட்டேன். தேவையான பாத்திரங்களை எடுக்கலாம்னு தடவி தேடிக்கிட்டே இருக்கேன். கையில் ஏதோ இரும்பு போல் தட்டுப்பட்டது. என்னன்னு புரியாமல் கண்ணை திறந்துட்டேன். பாத்திரத்துக்கு பதிலாக சிங்க் பைப்பை இழுத்திருக்கேன். அதுக்குள்ள முதல் அலாரம் அடிச்சிருச்சு… எல்லாக் கோட்டையும் அழிச்சுட்டு முதலில் இருந்து, ஆரம்பிக்கலாம்னு புதிதாக அலாரம் வைத்தேன்.

இப்போது எப்படியோ தொட்டுப் பார்த்து பாத்திரங்களை எடுத்துட்டேன். அலாரம் அடிக்கும் வரை கண்ணை திறக்கல. டாஸ்க் முடிந்து கண்களை திறந்துப் பார்த்தால், பருப்பு தீஞ்சு போச்சு, பாத்திரத்தை கழுவி சிங்க்ல தண்ணி ஊத்தாமல் மேலேயே ஊத்திருக்கேன். அது ஒரு பக்கம் வழியுது. இன்னொரு பக்கம் பொங்கலுக்கு தண்ணி ஊத்துறேன்னு கரெக்டா பாத்திரத்தில் ஊத்தாமல் கீழே ஊத்திருக்கேன். அது ஒருபக்கம் வழியுது. உண்மையாவே கடவுள் நமக்கு அருளிய வரத்தை, நல்லபடியா பார்த்துக்கணும்
 
#5
Awwwww... Innaiku ore ranagalama pochu... Nethu la irunthu leg pain jasthi ah irunthathu... So mrng nama konja neram hot water la leg vaipimnu soodu panni leg vatchutu iruntha... Task ah Clinic poitu panalanu nenaicha.. But case yarathu vanthuta nalla irukathunu antha idea va vitachu... So vitlaiye task start panalanu apove arambichutu tym patha 7.50 am kamichuthu.. 8.05 vara panalanu... Kanna mudite leg la irunthu dub ah eduthutu , apadiye kaiyala tholavi tholavi bed room kula pona na paduthuruntha bed sheet madikave ila.. So aapadiye eduthu inaiku tha na perfect ah madichan.. Epaum yeno thanonu tha madipan.. But inaiku romba care eduthu neet ah madichutu atha bed la vatchutu, apadiye en cup board la kulika dress edukalamnu cup board kita pona, entha dress Ena color nu theriyama epadi edukatum.. Irunthalu try panuvomnu oru top eduthachu, apram leggin edukalanu try panum pothutha top kuda nama ethavena edukalam, leggin top ku match ah edukanume.. Elame oru mari iruku, entha color nu theriyathe.. Athula sari etho onnu edupom.. Task mudinjathu papom Ena color nu bed la eduthu vatchachu.. Bayangara worst ah eduthu vatchathu task mudichu kanna muluchathum therinjathu... Mrng elunthathu hot water kudikura habit iruku so apadiye bedroom la irunthu kitchen poitu, hot water ku oru kutty vesel apadiye tholavi eduthan.. Enga amma pathutu aiyooo ipo yean D kanna muditu irukanu kekka.. Na apaditha moodirupan.. Apadiyetha elam seivanu solla, daily uh iva thollai thanga mudiyalada kadavule nu thitite veliya poitanga.. Na apadiye water iruka side naganthu poitu tap ah thorantha thanni ila.. Sari vessel la iruka thanni eduthukalamnu naganthu poitu atha correct ah eduthu ennoda kutty vessel la oothitu, gas stove pakkam nagantha oru side la amma already etho panitu irunthanga.. Sari inoru side poitu epadiyo kastapatu gas ah lighter vatchu on panitu mela heat varuthanu pathutu kutty vessel vatchutu apadiye veliya vanthutan.. Konjam neram kalichu amma ore kaththu... Adiye adupa patha vatchutu thanniya yean D adupula vaikama keezha vatchutu ponnanu.. Awwwww.... Enake bayangara siripu.. Enga amma oru katathula sirika arambichutu pakkathu veetu akka la kuptu solla arambichutanga... Sari ivolo neram aitenu amma watch la 8.05 ku vanthuta parunu sonna, enga amma tym 7.30 nu soldranga.. Amma nalla paru ma na pakum pothu 7.50 nu soldra, enga amma adiye wall clock repair agi romba naal aguthu na unaku en phone la pathu soldranu sonnaga.. Enaku ore shock uh... Awwww... Watch repair ah nu matum tha solla mudinjuthu... Sari ipo un ph la tym Ena nu keta 7.30 sari inam oru 10 mins kalichu solumanu solitu, kitchen kula amma na panina thappa sari panni adupula vatchuruntha hot water ah off pani, mug ah thedi athula oothi veliya eduthutu vanthu ukanthutu athu hot ah irukum konjam neram kalichu kudikalamnu arivali thanama mudivu panni, sari kudikarathu apram kudikalam, ipo intha water vatchu lit ah face wash panalamnu antha water ah kaiyula oothina sema hot uh... So apadiye atha na pakathyla vatchuty ukanthuta.. Konjam neram kalichu kudika arambicha, oru flow la vai kulla oothama enmelaiye lit ah oothikitan... Aparam antha water kudichutan.. Mrng leg kaga dub la vatchurjntha thanniya velai mudichutu oothalanu enga amma oru thitu.. Sari nu kanna moodite poitu atha kolamthuku pakathula oothitan pola enga amma tension aitu, pakathu veetuku akka kita marupadium polambal.. Avangalum yean papa kanna moodite iruka, kanna open panunu solla, enga amma ku na sollamale athu task nu therinjuduchu pola, so avangale daily iapditha etho panitu irukan.. Ithum task ah irukumnj sonnaga.. Na sari vaasal la irunthu ulla polamnu oru step edutha, leg kita soft ah orasutchu... Udane bayangarama kathitu athuku opposite pakkam nagantha pakathu veetuku akka Ena pudichu kathatha papa vaasal la ninnutunu ulla kutitu vanthu vitanga.. Antha soft ah orasanathu dog uh.. Actually enaku dog uh cat uh bird un insect na Romba bayam.. Intha kalobarathuku aparam tym keta 7.45 nu Amma sonna ga... Epadium 20 mins ku mela en task complete atchu... Ana Enaiya vatchu enga amma nalla fun panunaga... Highlight eh na antha hot water kudikum pothu, amma ta oru doubt la ulla ethum poochu ilaiyenu keta, avanga poochu ila Ana nandu, nathai pooran la irukunu soli Ena kalaikaranga.... Oru 15 mins enala intha lyf eh lead panna mudiyala.. Seriously blind people are great.... Hats off too them..
 
Last edited:

Anuya

Well-known member
#6
இன்றைய டாஸ்க் நல்ல படியாக முடித்துவிட்டேன்.....
காலைல வெளிய கிளம்பும் போது கண்ணை மூடிட்டு கிழ இறங்கி வண்டில ஏறி போக வேண்டிய place வர வரைக்கும் கண்ணை open பன்னவே இல்ல.... அடுத்தது கண்ணை close பண்ணிட்டே மாடில துணி காய வச்சேன் ....first ஒரு துணி போட்டுட்டு அதுல clip வச்சிட்டு அந்த கிளிப் தவடிட்டு next துணி போட்டேன் அப்புறம் அப்படியே கண்ணை முடிட்டே வீட்டுக்கு வந்து உக்காந்துட்டேன் ....... பார்வை தெரியாதவர்கள் உண்மையிலேயே அத ஒரு பெரிய குறையா கருதுவது கிடையாது .....நமக்கு எல்லாமே நல்லா இருந்தும் இன்னும் இது இப்படி இருந்து இருக்கலாம் அது அப்படி இருந்து இருக்கலாம் னு வறுத்த படுறோம் ஆனா அவங்க இருக்குறது வச்சி ஹாப்பி அஹ் இருகாங்க ..... பார்வை இல்லையே தவிர அவங்க அத பத்தி வறுத்த படுவதே இல்லை ...... உண்மையா அவங்கள பார்த்து நா ஆச்சரியம் படுறேன் எவ்வளவு talent அவங்களாம் ..... நா leave time ல blind students கு scribe அஹ் exam எழுத போவேன் அங்க அந்த பசங்களாம் answer சொல்லுறத பார்க்கும் போது அப்பாடா எவ்வளவு செமையா சொல்லுறாங்க .....நம்ம question வாசிச்சி காமிச்சதும் அவங்க சொல்லுற answer எழுதணும்.....ஒவ்வொரு qusகும் introduction ல இருந்து conclusion வரை எல்லா questionகும் அவ்வளவு அழகா ans சொன்னாங்க......உண்மையா செம ....most talented peoples அவங்களாம்.....

20th day task completed.....
 

Vethagowri

Well-known member
Staff member
#7
ஷ்ப்படா ஆண்டவா... எப்படியோ இருபது நாலு ஓட்டியாச்சு.. பல பல்புகளை வாங்கினாலும்,.. சேதாரம் மிகக் கம்மியா தான் ஆச்சு. இப்படியே மிச்ச சொச்ச நாளையும் ஓட்டிடு ஆண்டவா . நேற்று இரவு டாஸ்க்கை படித்தவுடன் சிறுமூளை பெருமூளை கசக்கி பிளான் எ, பிளான் பி, பிளான் சி என்று முடிவு செய்து கொண்டிருக்கும்பொழுது...
என்னோட க்ரைம் பார்ட்னர் தோஸ்த் ஒருவர் " ஆப்பு வந்திருச்சா அடுத்த டாஸ்க்..? முடியுமா என்று கேட்டார்?...
அதெல்லாம் எப்படி பண்ணலாம் யோசனை பண்ணி வச்சாச்சு என்று சொல்லவும், அதானே கேடி ஆச்சு என்று புகழ்ந்தார்.. அதான் நாம கிரைம் பட்னர் எப்படி இருப்பேன் என்று பேசியாச்சு...

கடையில் இன்று ஆர்டர் சாப்பாடு என்ற காரணத்தால் விரைவில் எழுந்ததால், பிளான் ஏ செயல்படுத்தலாம் என்று பார்த்தாள், உடனே செயல்படுத்த முடியவில்லை, பிறகு செய்து பல்பு வாங்கியது
வேறு கதை... பிளான் பி செய்வோம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன்.. கண்ணை மூடிக்கொண்டு துணி காய போடுவோம் என்று ஆரம்பித்தால் ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே கடந்து இருக்கும். அம்மியில் கால் இடித்து கொண்டேன்.. ஆத்தாடி என்று கண்ணை திறந்தாயிற்று...

என்னடா இது கவிதாவுக்கு வந்த சோதனை என்று நினைத்து மீண்டும் மனம் தளராமல் பிளான் சி செயல்படுத்துவோம் என்று செயலில் குதித்தேன்... ஆர்டர் சாப்பாட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு 50 கிலோ உருளை கிழங்கு உரித்து கொடுக்க வேண்டும், போனில் அலாரம் வைத்து கிழங்கை உரிக்க ஆரம்பித்தேன்.. கண்ணை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் கழித்து என்னவர் என் அருகில் வந்து, என்னடி தூங்கிட்டே உரிச்சிட்டு இருக்கே.. என்று கேட்க.. இன்னைக்கு டாஸ்க் கண்ணைமூடி கிட்டு 15நிமிஷம் வேலை பார்க்கணும் என்று சொல்லவும்.. சரி ஒழுங்கா வேலைய செய் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.. போன மனுஷர் சும்மா போகாமல் "ஹேய் எல்லரும் ஜோரா கைய தட்டுங்க... வானத்துல பிலைட் பறக்குது, கடல்ல கப்பல் போகுது.. ரோட்ல கார் போகுது.. இப்போ என் பொண்டாட்டி கண்ணு மூடிட்டு உருளை கிழங்கு உறிக்குது "ன்னு சத்தமா சொல்ல.. கடை பசங்க எல்லாம் சிரிச்ச சத்தம் கேட்டும் ????கண்ணை திறக்கலை.. நான் உரித்து பக்கத்தில் உள்ள பாத்திரத்தில் போட்டுக்கிட்டே இருந்தேன்.. மொபைல் அலாரம் அடித்து கண்ணை திறந்து பார்த்தா.. உறிச்ச கிழங்கு எல்லாம் நல்லா தோல் உரிக்காமல் என்னை பார்த்து சிரிப்பது போல இருந்தது????.. ஒட்டிக்கு ரெட்டு வேலை என்று நினைத்து மறுபடி நன்றாக செய்து வைத்தேன்.. இப்படியாக டாஸ்க் பல கிண்டல்களுக்கு மத்தியில் செய்து முடித்து விட்டாலும் அந்த பிளான் எ அப்படியே இருக்கே என்று மனம் முரட்டு பிடிவாதம் பிடிக்க அதையும் செயலில் செய்தால்... ????????
 

Vethagowri

Well-known member
Staff member
#8
ரொம்ப ஈசியான வேலை உட்கார்ந்து கொண்டே கிழங்கு உரிப்பது அதுவே என்னால் செய்ய முடியவில்லை.. நிஜமாலுமே கண் பார்வை இல்லாதவர்கள் எல்லாம் தெய்வத்துக்கு சமம்..
சப்பை மேட்டர் இதுலாம் என்று உதார் விட்ட எனக்கு உணர்த்தி விட்டது.. வாயில் வடை சுடுவது ஈசி.. அதை செயலில் செய்வது கஷ்டம் என்று நல்லா புரிஞ்சது.. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற சொல் எவ்வளவு உண்மை..
இப்படியே பீலிங் கா பேசி வாங்கின பல்ப்பை சொல்லாம போறியா ன்னு கேட்டாலும் சொல்லமாட்டேன்.. ஒரு நாள் பொறுமையா இதே பக்கம் சொல்லுறேன்..
 

Ramya Mani

Well-known member
#9
இன்னிக்கு டாஸ்க்... கண்ண மூடிட்டு , காய் வெட்டனும், வெங்காயம் அரியனும். அரிவாள் மனை (காய் வெட்டறதுக்கு) எடுத்து வச்சிட்டு, வெங்காயம் எல்லாம் இடது பக்கத்துல தட்டுல வச்சேன். அரிஞ்ச வெங்காயம் போட வலது பக்கத்தில் காலித் தட்டு. எப்படியோ அளவு வைத்து.. பொடியாக நறுக்கி தட்டு ல போட்டுட்டேன். தக்காளி யும் முருங்கை காயும் வெட்டிடேன். சௌசௌ தான் சொதப்பிடுச்சு.
சமயத்தில் கண்ண மூடிட்டு.. நாம கஷ்டப்படுறோம். எப்பவுமே கண் தெரியாம இருக்கிறவங்க கூட கொஞ்சம் சமாளிச்சுடுவாங்க. இடையில் ஏதேனும் விபத்தில் பார்வை இழந்தவர் களின் பாடு தான் ரொம்ப திண்டாட்டம். இத்தன நாள் பார்த்ததை ... இனி பாக்க முடியாது னு அவங்க எப்படி ஃபீல் ஆவாங்கல்ல.. சோ சேட்...
லாஸ்ட் ஆ ஒரு விழிப்புணர்வு வாசகம் ஞாபகம் வந்துச்சு. இறந்த பின்னும் சைட் அடிக்க வேண்டுமா.. கண் தானம் செய்வீர்
 
#10
'சவாலே சமாளி'

20 ஆம் நாள்

இன்று டாஸ்க் படி கண்ணை மூடி வேலை செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தால், கண்ணை மூடி பெரிய வேலை செய்யுறதுலாம் கொஞ்சம் ரிஸ்க், அதுலயும் எனக்கு பேசிக்கலி பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக், சோ முதல் 5 நிமிஷம் பாட்டு கேட்போம் அப்புறம் துணி மடிப்போம்ன்னு முடிவு பண்ணேன். 5 நிமிஷம் ஆனதும் சொல்லுன்னு சொல்லி என் தங்கச்சி கிட்ட சொன்னேன். (இங்கதான் ஆப்பை நானே தேடிகிட்டேன்.)பாட்டு கேட்டுட்டே எழுந்து நடந்தா இதான் சான்ஸ்ன்னு என் தங்கச்சி என் தலைல கொட்டி, அடிச்சு, கிள்ளி,டவல முகத்தில தூக்கிபோட்டுன்னு என்னை ஒருவழியாக்கிட்டா. எவ்வளவு கத்தினாலும் அவ கேட்கலை. (ஆனால் அடித்து முடித்ததும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டா, பிறகு நான் எங்க கண்ண திறந்ததுக்கு அப்புறம் அவளை அடிக்க). அடுத்து இந்த ரூம்க்கும் அந்த ரூம்க்கும் நடந்து,பிறகு துணி மடித்து என்று ஒருவழியாக 20 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று. எப்படியோ ஓரளவுக்கு சரியாக தான் துணியெல்லாம் மடித்து வைத்திருக்கிறேன் என்று கண்ணை திறந்து பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் ஐந்து நிமிடம் கூட கண்ணை மூடி எதுவுமே செய்யமுடியாதுன்னு தான் முதல்ல தோன்றின விஷயம் .ஒரு பதினைந்து நிமிடங்கள் கூட இந்த இருட்டுல நம்மால் தாக்குபிடிக்க முடியல. அப்படி இருக்கும் போது பார்வையற்றவர்கள் 24 மணிநேரமும் அந்த இருட்டுலயே இருந்து, எல்லா வேலைகளையும் யார் உதவியும் இல்லாமல் செய்ய பழகி செய்து வாழ்ந்துட்டு இருக்கிறாங்க. சீரியஸ்லி அவங்கெல்லாம் கிரேட். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் சவாலாக எதிர்க்கொண்டு வாழும் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
 
#11
Omg just Kanna muditu Enna la walk panna kooda mudiala.. enga edhavadhu work panradhu.. wall pudichitey nadandhen.. adhulayum kizha vizhundhu.. unmaiyavey kan illadhadhu romba peria kashtam dhan... enaku peria kurai specs podrey nu.. mothama theriyadhappa dhan eppo Oru kannu therincha kooda podhumgra feel ku vandhuten... Mudiala sppaaaa