அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 18

#21
கடுதாசி எழுதோனும்னு சொன்னதும் ஆருக்கு எழுதலாம்னு கடுமையா யோசிச்சோம்...சரி எல்லோரும் அண்ணனுக்கு, தங்கச்சிக்கு, தோழமைக்கு எழுதுவாங்க...நாம தான் ஸ்பெஷல் டிசைனாச்சே...வெளியே யாருக்கும் வேண்டாம்..உள்ற இருக்க மனசாட்சிக்கு எழுதுவோம்...

அன்பு மனசாட்சிக்கு ஒரு ஹாய்,

உன் கிட்ட பேசனும்னு ரொம்ப நாளா காத்துகிடக்கேன். என்ன செய்ய நேரமே அகப்படல...இந்த இப்ப கிடைச்சிருச்சில்ல...வச்சு செஞ்சிடுறேன்.

ஆமா உனக்கு வேற வேலையே இல்லயா? எப்போ பாரு நானென்ன செய்றேன்னு எம் பினானாடியே சுத்துறியே...என்ற மாமா பாத்தா என்ன நினைப்பாக?

நான் பல்ப் வாங்கினா என்ன கடை வச்சா தான் உனக்கென்ன? அதென்ன காறி துப்புற மாதிரியே ஒரு சத்தம் கொடுக்கிற...இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்...பீ கேர்புல்!

இப்படிக்கு,

உன்னோட நிஜம் & கேர்ள் பிரெண்ட்
Sudhama ❤❤❤❤❤❤
 
#22
22.08.19
சென்னை.

அன்புள்ள கிறுக்கி(தீபிகா)விற்கு.....

உன் அன்பான,பண்பான,பாசமான,செல்லமான f.m ரேடியோ அபி எழுதுவது . எப்படி இருக்க மா ?நா நல்லா இருக்கேன். ஹாமேஷ், மாமா, அத்தை,பாட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க? ...
உன் கிட்ட நிறைய தடவை நிறைய விசயங்கள் பகிர்ந்துக்கணும்னு நினைப்பேன் ஆனா உன்னை பார்த்தாலே சீரியஸ் டயலாக்லாம் பேச வராது எனக்கு சிரிப்புதான் வரும் அதான் இந்த லெட்டர் எழுத்திட்டேன் பேபி...
முதல்ல ரொம்ப ரொம்ப நன்றி டி என்கூடவே 17 வருடங்கள் என்னோட தொல்லைகள் எல்லாமே பொறுத்துகிட்டு வருவதற்கு இன்னும் என் வாழ்க்கை முழுக்க நீ வேணும் ஒரு நல்ல friend அஹ் . உன்னை எப்போ முதல் முதலா பார்த்தேன்னு கேட்ட சத்தியமா தெரியவில்லை ரொம்ப குட்டியா இருந்து இருப்போம் நம்ம மீட் பண்ணும் போது. L.K.G ல இருந்து இப்போ வரை என்கூட என்னோட எல்லா சுக , துக்கதுளையும் எனக்கு பக்கப்பலமா இருக்க தீபி லவ் யூ டி பட்டு. நீ இல்லாம என்னோட childhood days எப்படி இருந்து இருக்கும்னு நினைக்க கூட முடியவில்லை . என் வாழ்க்கைல நா எப்பவுமே மரகமாட்டேன் நாம சின்ன பிள்ளையில பேசிகிட்டது " அபி இனிமே நீ என்னோட அப்பா,அம்மாவ, மாமா&அத்தை னு தான் கூப்பிடனும் நானும் உன் அம்மா அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவேன்" னு சொன்னது... இப்போ வரை அப்படித்தான் கூப்பிடுறோம் நம்ம ரெண்டு பெரும் . உன்ன பார்க்காம என்னோட நாள் full-fill ஆகாது டி . நா ரொம்ப விரும்புறது நீ call பண்ணி சொல்லுவல "அபி வீட்டுக்கு வந்துட்டு போ டி " னு அது அப்பறம் அபி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா அதுவும் சாக்லேட் flavour னு நீ கேக்குறது எல்லாமே பிடிக்கும். உனக்கு தெரியாத எந்த secrets உம் என்கிட்ட இல்லை. எனக்கே தெரியாம என் போன் எடுத்து என் காமெடி போட்டோவை profile மாத்திட்டு எனக்கே call பண்ணி profile ல அழகா இருக்கனு சொல்லுவ பாத்தியா அப்போ எல்லாம் உண்மையா நீ கிறுக்கு தானு conform பண்ணிடுவேன்... தீபி நீனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி .என்கூட இப்படியே இரு எப்பவுமே லவ் யூ சோ மச் டி . உன் செல்ல ரேடியோ நா எப்போ எல்லாம் பேசினாலும் சலிக்கமா காது கொடுத்து கேப்ப நீ . திருட்டுத்தனமா படம் பார்க்க பிளான் பண்ணுறது ..படத்துக்கு போக எங்க வீட்ல permission வாங்க நீ பண்ணுற drama எல்லாமே என்னோட sweet cute memories . லவ் யூ உன்னை பார்க்காம இந்த ரெண்டு நாளா நல்லாவே இல்லை சீக்கிரமா வா டி நா வெயிட் பண்ணுறேன் இங்க ....லவ் யூ பட்டு. உம்மா ....


இப்படிக்கு,
உன் செல்ல ரேடியோ அபி
Abi ennai parthu kirukkinu soleeteengale
 
#25
ஓம் சக்தி துணை
22/8/19
மதிப்பிற்குரிய என் அன்பு நண்பனுக்கு,
உன் அன்பு தோழி சரித்ரா எழுதி கொள்வது... நலம் நலமறிய ஆவல்..... இதுக்கு அப்புறம் என்ன எழுதுறதுனு தெரியல... உன்னை சந்தித்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது... இந்த இரண்டு வருடங்களில் நம் இருவரின் வாழ்க்கையிலும் எண்ணற்ற மாற்றங்கள்... ஆனாலும் என் வாழ்க்கையில் துன்பம், இன்பம் எதுவாயினும் என் மனம் உன்னிடம் சொல்லவே விழைகிறது.... ஒருவேளை ஒத்த மனம் படைத்தவர்கள் ஆக இருப்பதே காரணமாக இருக்கலாம்... இன்னும் ஒரு வருடத்தில் உனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது...மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது... தாரனியை நீ நன்றாக பார்த்து கொள்வாய் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை... உன் திருமணத்திற்கு பிறகும் நம் நட்பு தொடர்வதற்கு தாரனி உறுதுணையாக இருப்பாள்... மிகவும் அருமையான பெண்... எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உன் வருங்கால மனைவியை.... நல்ல மனம் படைத்தவர்களுக்கு கடவுள் நல்லதே செய்வார் என்பது உன் விடயத்தில் சரியாக உள்ளது.... எத்தனையோ துன்பங்களில் நான் துவண்டு விடாமல் இருக்க உன் வார்த்தைகள் உறுதுணையாக இருந்துள்ளது... நான் என்னையே வெறுக்கும் சமயங்களில் கூட, என்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி என்னை நம்ப வைத்து தேற்றி உள்ளாய்.. இன்று கூட என்னால் முடியாது என்று நான் எண்ணியதை , உன்னால் முடியும் என்ற ஊக்கத்தை கொடுத்துள்ளாய் .... நீ என் நண்பனாய் கிடைத்தது என் பாக்கியம்... ..எப்பவும் உனக்கு நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன்...
இங்ஙனம்
உன் அன்பு தோழி
சரித்ரா
 

kohila

Active member
#26
ஹாய் நண்பா, கோகி எழுதுகிறேன்.

இங்கு நானும் குடும்பத்தினரும் நலம். நீயும், உன் மனைவியும் நலமா?

முன்பெல்லாம் எத்தனையோ கஷ்டங்களை நாம் இருவரும் ஒருவொருக்கொருவர் உதவியாக இருந்து கடந்திருக்கிறோம். ஒரு நாளைக்கு பத்து முறைக் கூட பேசியிருக்கிறோம். ஆனால் இப்பொழுது பேச வேண்டும் என்று நினைத்து, இன்று ஹாய் சொன்னால் கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து தான் அடுத்தவரின் பதில் வருகிறது. இத்தனைக்கும் நம் இருவரின் துணைகளுமே நம் நட்பை புரிந்துக் கொண்டே, ஏன் இந்த இடைவெளி? இந்த கடிதத்தை பார்த்த பின்பாவது நம் நட்பு மீண்டும் துளிர் விட்டால் சந்தோஷ படுவேன்.

இப்படிக்கு,

(உன் திருமணத்திற்கு முன் வெளிநாட்டில் இருந்து கிளம்பும் போது, உனக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு லிஸ்ட் போட்டு வாங்கி வந்து, இந்தியா வந்த உடனே உனக்கு திருமணம் முடிவாகி விடவும், உனக்கு அடுத்த டைம் வாங்கிட்டு வரேன்னு சாக்கு சொல்லி, எல்லாத்தையும் தூக்கி உன் பொண்டாட்டி கையில் கொடுத்து விட்டு, எனக்கு பிம்பிளிக்கா பிலாபி சொன்னதை இன்னும் மறவாத :mad::mad:) அன்பு தோழி