அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 18

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் உங்கள் மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைத்து அது இன்று வரை முடியாமல் போயிருக்கலாம். அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அந்த நெருக்கமான ஒருவர் உங்களின் தாயராக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், நெருங்கிய சிநேகிதியாக இருக்கலாம்...யார் என்பதை நீங்களே முடிவு செய்து அவருக்கு கடிதம் எழுதுங்கள்.

முக்கியமாக கடிதம் எழுதும் முறையில் எழுத வேண்டும்....சாதாரண பதிவாக இருக்கக் கூடாது. தமிழில் எழுத வேண்டும் மக்களே!!!
 
Last edited:

Anuya

Well-known member
#2

முக்கியமாக கடிதம் எழுதும் முறையில் எழுத வேண்டும்....சாதாரண பதிவாக இருக்கக் கூடாது.
Letter maathiri type panni post pannanuma sudha maa...
 
Vethagowri

Well-known member
Staff member
#3
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் உங்கள் மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைத்து அது இன்று வரை முடியாமல் போயிருக்கலாம். அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அந்த நெருக்கமான ஒருவர் உங்களின் தாயராக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், நெருங்கிய சிநேகிதியாக இருக்கலாம்...யார் என்பதை நீங்களே முடிவு செய்து அவருக்கு கடிதம் எழுதுங்கள்.

முக்கியமாக கடிதம் எழுதும் முறையில் எழுத வேண்டும்....சாதாரண பதிவாக இருக்கக் கூடாது. தமிழில் எழுத வேண்டும் மக்களே!!!
மானே தேனே எல்லாம் சேர்த்துக்கலாமா அக்கா...
 
sudharavi

Administrator
Staff member
#4

தாராளமா சேர்த்துக்கலாம் அனு...ஆனா லெட்டர் பார்மட்ல இருக்கணும்....நகைச்சுவையா இருந்தா நல்லா என்ஜாய் பண்ணலாம்...
 
Vethagowri

Well-known member
Staff member
#5
புறா விடு தூது தொடங்கி ஆட்கள் மூலம் செய்தி அனுப்புவது மாற்றாக கடிதம் அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டுருந்தனர்.. அது நாளடைவில் அறிவியல் முன்னேற்றத்தில் டெலிகிராம்,, பேக்ஸ், ஈமெயில் என்று எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து டெலிகிராம் என்ற ஒன்றை இத்தலைமைறையோடு முடிந்துவிட்டது.. கடித போக்குவரத்து என்பதும் வெகுவாக குறைந்து விட்டது.. இதுவும் நாளடைவில் மறைந்து அடுத்த தலைமுறைக்கு தபால் அட்டை என்பதும் கடிதம் எழுதுவது என்பதும் பொருட்காட்சி பொருள் போல மாறிவிடும் என்பது அளப்பரிய உண்மை..
என் பள்ளிப்பருவத்தில் விடுதியில் தங்கி இருக்கும் பொழுது நம் பெற்றோரிடம் இருந்து மாதம் ஒருமுறை வரும் கடிதம் அந்த மாதம் முழுதும் நம்மை காத்து இருந்து வாங்கி படிக்கும்பொழுது என்னிலடங்கா உத்வேகம் மகிழ்ச்சி.. இப்பொழுது உடனுக்குடன் கிடைக்கும் செய்திகளின் சந்தோசத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்பது என்னுடைய எண்ணம்... கடிதம் எழுதுவதை சவாலாக வைத்த குழுவிற்கு எனது அன்பார்ந்த நன்றிகள்... என் மகளிடம் சொல்ல முடியாது போனது என்று ஒன்றும் இல்லை.. இருந்தாலும் அவளுக்கே எழுத போகிறேன்..
 
Vethagowri

Well-known member
Staff member
#6
22.08.2019

அனுப்புனர் :
S.கவிதா,
********,
************(அஞ்சல் ),
*************( தாலுகா ),
*************(மாவட்டம் ),
***********32.

அன்பு மகள் ஹரிணிக்கு..
உன்அம்மாஎழுதிக்கொள்வது.
நாங்கள் இங்கு நலம்.. நீயும் உன் தோழிகளும் நலமா?.. நலம் நலம் அறிய ஆவல்.. உங்கள் பள்ளியில் இருந்து உன்னுடையமதிப்பெண் பட்டியல் வந்தது.. உன்னுடைய மதிப்பெண்கள் பார்த்து
நைனாவிற்கும் எனக்கும் சந்தோஷமே, விளையாட்டிலும் சற்று கவனம் செலுத்து, அது உன் மனதிற்கும் உடலுக்கும் நல்லது.. நாம் தாம் அதிக மதிப்பெண் பெற்று விட்டோம் என்று அதை தலைக்கு வைத்து தூங்கி விடாதே,...
பொதுவாக உங்கள் தலைமுறைக்கு அட்வைஸ் சொன்னால் பிடிக்காது, நான் சில கருத்துக்களை மட்டுமே சொல்லுகிறேன், இன்று மட்டுமல்ல வாழ்வில் எப்பொழுதுமே, ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள், உன்னால் ஒரு ஜீவன் மனமுடைந்து இறைவனிடம் முறையிட்டு அழும் நிலைக்கு எந்தவித செயலையும் செய்து விடாதே, உடைந்த இதயங்களின் வேண்டுதல் பலம் வாய்ந்தவை, அதை ஜென்ம ஜென்மமாக நம்மை விரட்டி தண்டிக்க கூடியவை, நம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்துகொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே... இப்படியான வரத்தினை பெற்று நிறைந்த உறவுகளையும் நண்பர்களையும் கொண்டு வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே..
இப்படிக்கு
அன்பு தாயார்
S. கவிதா

உறை மேல் முகவரி:
S. ஹரிணி,
கே. எஸ். பள்ளி,
மகளிர் விடுதி,
***********(அஞ்சல் )
சென்னை (மாவட்டம் )
சென்னை -32

எனக்குத் தெரிந்த அளவுக்கு கடிதம் எப்படி எழுத வேண்டுமோ.. அப்படி எழுதி இருக்கிறேன்... அனுப்புனர் உறைமேல் முகவரி ஆகியவை கடித உரையின் வெளிப்பக்கமாக எழுதவேண்டும்..
 
Last edited:

Vethagowri

Well-known member
Staff member
#7
குழுவினரின் பணிவான கவனத்திற்கு கடிதத்தின் வலது ஓரம் தான் அன்றைய நாள் குறிப்பிட வேண்டும்.. இங்கு மாற்றி டைப் செய்தாலும் அவை இட பக்கமே வருகிறது.. மன்னிக்கவும்
 
#10
வணக்கம் அப்பா!

என்னுடைய நலத்தைப் பற்றி நான் கூறியோ, உங்களது நலத்தைப் பற்றி நீங்கள் கூறியோ அறிந்து கொள்ளும் நிலையில் நாம் இல்லை. உங்களது முதல் ஆச்சரியமான என்னுடைய கடிதம் தமிழில் இருப்பதைக்கண்டு அதனை குறித்து நீங்கள் எவ்வாறு யோசிக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ள விழைகிறேன்.

ஆம் அப்பா! நான் தமிழ் நன்றாக பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்டேன். எழுத்துப் பிழைகளுடன் ஓரளவிற்கு எழுதவும் செய்கின்றேன். அதனையும் தாண்டி கதைகள் என்ற பெயரில் எனது கிறுக்கல்களை வடித்து கொண்டு இருக்கின்றேன்.

உங்களைப் பார்த்தும், தாத்தாவை பார்த்தும் ராணுவத்தின் மீது அளப்பறியா ஆசைகொண்ட என்னால் அதில் சேர இயலாமல் பிரசித்தி பெற்ற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தரத்தினை சோதிக்கும் பணியில் நமது தாய் மண்ணை விட்டு ஏதோ ஒரு அன்னிய மண்ணில் அனுதினமும் உங்களது நினைவில் தவித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் கற்றுத் தந்தவற்றில் இன்றுவரை பல பழக்கங்களை நான் சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை.

அனைத்து விஷயங்களிலும் உங்களைப் போன்றே வளர வேண்டும், உங்களைப் போன்று செயல்பட வேண்டும் என்று ஆழ்மனதில் பதிந்து போனதோ என்னவோ உங்கள் இதயமும், எனது இதயமும் ஒரேமாதிரி இயக்கத்தினை பெற்றுள்ளது. உங்களிடம் பல கேள்விகள் கேட்க என் மனம் விழைகின்றது. என்றேனும் ஒரு நாள் உங்களை சந்திக்கையில் மீளாத்துயரில் ஏன் இவ்வளவு சீக்கிரமாக என்னை விட்டுச் சென்றீர்கள் என்ற கேள்வியே எனது முதல் கேள்வியாக இருக்கும்.

என்னை விட்டு நீங்கி சென்றாலும் உங்களது நினைவு என்னைச் சுற்றியே இருக்கும் என நான் நன்கறிவேன். பார்ப்பவர்களுக்கு புத்தி பிசகியது போன்று தோன்றினாலும் பாசம் பிணைப்பில் கட்டுண்டவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும். இவ்வுலகை நீத்து இன்னொரு உலகில் நீங்கள் இன்புற்றிருப்பீா் என்ற நம்பிக்கையுடனும்,உங்கள் மீது தீரா கோபத்துடனும்

உங்களது செல்ல மகள்
அம்மு

பின்குறிப்பு: தமிழ் படிக்க தெரியாத உங்களுக்கு தமிழில் கடிதம் எழுதி தண்டித்து விட்டேன்.
 
dharani

Active member
#11
22/08/2019​

அன்புள்ள அண்ணனுக்கு ....எப்படி இருக்க.... நான் நலமா இருக்கேன்.... என்ன இது குறுஞ்செய்தி கூட அனுப்பாத ஆள் கடிதம் எழுதி இருக்காளே அப்படினு நினைக்கிறீயா....என்னவோ தெரியல உன்னை ரொம்ப தவிர்க்கிறேன்னு தோணுது...அது உண்மையும் கூட.... எதோ தெரியல இந்த ஒரு வருடமா நமக்குள் எதுவோ சரி இல்ல... நான் யாரையும் குறை சொல்ல விரும்பல... தப்பு என் பக்கமும் இருக்கலாம்..... ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு பிரிவு வரும்னு நான் கனவில் கூட நினைச்சது இல்ல.... அது தான் ரொம்ப சங்கடமா இருக்கு....என்னோவோ உன்கிட்ட பேசும் பொது இப்படி எல்லாம் அதிகமா அழுகை வருது ... அதுனாலே உன் கிட்ட பேசுறதை குறைக்க ஆரம்பிச்சிட்டேன்.... இப்போ கூட அழுகையோட தான் இந்த கடிதம் எழுதுறேன்..... ஏன்னு தெரியல.... அம்மா சொன்ன வார்த்தையை கடைசி வரை காப்பாத்தணும் அப்படினு முயற்சி பண்ணுறேன்.... பண்ணுவேன்.... உன் கிட்ட பேசலானாலும் உன்னை பத்தி நினைக்காத நேரம் இல்ல.... காலம் எல்லாத்தையும் மாற்றும் .... மாறும் அப்படிங்கிற நம்பிக்கையோட இருக்கேன்..... உடம்பை பாத்துக்கோ... அதிகமா வெளிய சாப்பிட வேண்டாம்.... எல்லாம் சரி ஆகும்னு நம்புவோம்....இப்படிக்கு

உன் அன்பு தங்கை

தரணி

K கணேஷ்

கத்தார்
 
Ramya Mani

Well-known member
#12
22/08/2019
மதுரை.
அன்புள்ள மாயாவிற்கு,
ரம்யா எழுதிக் கொள்வது. நான் நல்லாருக்கேன்
. நீயும் நல்லா இருப்பனு நினைக்கிறேன். நினைக்கறதுக்கு என்ன .. நீ நல்லா தான் இருப்ப.. ரொம்ப நாள் ஆச்சு கடிதம் எழுதி... அதான் எழுதி பாக்கலாம்னு உட்கார்ந்து எழுதிட்டேன்.அதுக்கு எனக்கு எதுக்குடி எழுதின னு உன் மைன்ட் வாய்ஸ் கேக்குது.வேற வழி. எனக்கு கிடைச்ச ஒரே நல்ல ப்ரெண்ட் நீ மட்டும் தான.. அப்டின்னு நான் நினைச்சு எழுதுறேன். என்ன எழுதுறதுனு யோசிச்சேன். பேசாம பேருந்து பயணமும் நான் பட்ட பாடும்... இது தான் தலைப்பு னு ஜஸ்ட் நவ் முடிவே பண்ணிட்டேன். ஏன்னா அவ்ளோ பயணம்.. அவ்ளோ கதை... நான் 2மணி நேரம் பயணம் செய்து... பணிபுரியும் இடத்திற்கு போனும். கிட்டத்தட்ட 80+80=160கி.மீ. டெய்லி போயே ஆகனும். இதுல என்ன வசதினா.. டெய்லி போறதுனால டிரைவர் கண்டக்டர் அத்தன பேருக்கும் நம்மளத் தெரியும்.நமக்கும் அவங்கள தெரியும். நிறய தடவ கூட்டமா இருக்கறப்ப லாம் சீட்டு போட்டு வச்சுடுவாங்க.. காலைல நான் போற பஸ் பைபாஸ் ரைடர்.அதனால கூட்டம் இருக்காது. சில சமயம் நான் ஒருத்தி மட்டும் போவேன். ஆனால் சில நேரம் விழா நாட்களில் சீட்டு ஓரத்துல தள்ளிவிடற மாதிரி இருக்கும். சரி கழுத னு இருந்துட முடியுமா.. இப்படித்தான் போன வாரம் பஸ் ஸ்டாண்ட் உள்ள போறதுக்கு முன்னாடியே கிளம்பிருச்சு. சேஸ் பண்ணி ஏறிட்டேன். ஒரு லேடி மூன்று பேர் சீட்ல அதுவும் அதோட லக்கேஜ் ம் வச்சுகிட்டு உட்கார்ந்து இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி உட்கார்ங்கனு சொன்னேன்.( என் கிரகம் மத்த சீட்லாம் ஆண்கள்) இது பிச்சை போடற மாதிரி லைட்டா நகர்ந்துச்சு. என் சைஸ். தான் தெரியுமே.. அது கிட்ட இன்னும் கொஞ்சம் தள்ளி உட்கார்ங்கனு சொன்னேன். அது டெரரா லுக் விட்டுட்டு.. அது ஒரு சீட் தந்துட்டேனே( என்னமோ உன் வீட்டு சோபால இடம் கொடுத்த மாதிரி பேசற).. கரெக்டா இந்த லைன் ல தான இருக்கனும்( இன்ச் டேப்பை வச்சு அளந்தியோ) இன்னொருவர் வந்தா இப்படி தான இருக்கும். ( அவ வந்தா நான் நடுவுல வந்துருவேன். உன்ட்ட ஏன் கேக்க போறேன்) அப்டின்னு ரூல்ஸ் பேசிட்டு நகர்ந்து உட்கார்ந்து ச்சு.. காலங்காத்தால இப்படி னா.. சாயங்காலம் ரொம்ப மோசம். அதே மூனு பேர் சீட். ஒரு லேடி (இங்கயுமா) அவங்களோட இரண்டு பசங்க. (அர டிக்கெட் டுங்க) லாலி பாடி தூங்க வச்சிட்டு வந்தாங்க. கண்டக்டர் வேற சீட் காலி இல்ல .. இங்க உட்கார்ங்கனு போயிட்டார்.. அது என் புள்ளக்கே பத்தாத அளவுக்கு இடம் கொடுத்நுச்சு. சரி .. நமக்கு இன்னிக்கு இதுதான் னு மனச தேத்தி உட்கார்ந்தா.. என் மேலே சாய்ஞ்சு இருக்கற டென்சன ஏத்திடுச்சு. நாசூக்கா சொல்லி பாத்தேன். திருந்தல. சாஞ்சுச்சு... ஊக்க வச்சு என் பிளவுஸ் வக்கிற மாதிரி வச்சேன். அந்த லேடி சாஞ்சுச்சு. ஊக்கு குத்திருச்சு. என்னைய மொறச்சு பாத்துட்டு திரும்பிடுச்சு.. ( எப்படி என் ஐடியா) அப்பரம் திரும்பவே இல்லை.. இது இப்படி னா ஆண் தொல்லை அதுக்கு மேல. ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தா.. சைட்ல கை ய விட்டு தடவுவாங்க. நம்மகிட்ட தான் ஊக்கு ட்ரீட்மெண்ட் இருக்கே.. மூனு நாலு தடவ குத்தி விட்ருக்கேன்.. அரசு பேருந்து னா மழைக்காலத்தில்.. ஒழுகும். அதுக்கும் சளச்சுருவோமா
. ரெயின்கோட் போட்டுட்டு ஜம்முனு உட்கார்ந்து போவோம்ல.. மழை, ஜன்னல் சீட், இளையராஜா இசை.. இப்படி காம்பினேஷன் ல.. நிறைய இனிமையான பயணங்களும் இருக்கு.. பல தோழிகள் கிடைத்தது பேருந்து பயணத்தில் தான். இதெல்லாம் எதுக்குடி எனக்கு எழுதுறனு கேக்காத. எழுதனும் னு தோணிச்சு.எழுதிட்டேன். எனது பயணங்கள் முடிவதில்லை.. ரொம்ப மொக்கை போட்டுட்டேன். இது இப்பதான் தெரியுதா.. எழுதுறக்கு முன்னாடி தெரியலையா ன்னு நீ கேக்றது காதுல விழுது. இதையே நீ வெட்டியா வரி விடாம படிக்கற.. அத விட உனக்கு வேற வேலையில்லைனு தான் எழுதினேன். எல்லாவற்றையும் கேட்டதா சொல்லு. உன்னோட குட்டி வாண்டுக்கு நிப் மாத்தற பென்சில் வாங்கி அனுப்பி இருக்கேன். பதில் போடு. போடாம போ. அடுத்த கடிதம்.. விரைவில் வரும்.
இப்படிக்கு,
அன்புத்தொல்லை தரும் ரம்யாபெறுதல்:
திருமதி. மாயா,
Xxxx xx,
Yyyyyyyyy.
 
#13
'சவாலே சமாளி'

18 ஆம் நாள்

'ஒரு கடிதம் எழுதினேன்'

156647401829771416.jpeg
22/08/2019
சென்னை
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்,

அன்புள்ள அம்மா
ஆசையாக பேசும் அம்மா
இம்சை தரும் என்னை
ஈ என்று இழித்து கொண்டு பொறுத்து கொள்ளும் அன்னை
உணவும் அளித்து
ஊக்கமும் கொடுத்து
என்னை வளர்த்தாய் நீயே
ஏட்டு கல்வியும் அளித்து
ஐஸ்கிரீமையும் எனக்கு வேண்டும் போது கொடுத்த உன்னை
ஒருநாளும் மறவேன் என் அன்னை
ஓவராக நானும் பண்ணும் போது
ஔவை போல நீயும் அறிவுரையை வழங்கி என்னை வழிநடத்தும் தாயே வாழ்க! வாழ்க!
ஃ என்ற ஆய்த எழுத்தை போன்று என் வாழ்வின் முதன்மையான தாயே!
உன் அன்பிற்க்கும், பாசத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி!

தங்கத்தை பெத்த தங்கதாரகையே! இந்த முத்தை பெற்ற மனித குல மாணிக்கமே! உனக்காக இந்த கடிதமும்,ஆத்திச்சூடி அமைப்பில் இருக்கும் கவிதையையும்(?) நானே எழுதி டெடிகேட் பண்றேன்.

பக்கத்து ரூம்ல நான் நலமா இருக்கேன்.அடுத்த ரூம்ல நீ நலமா இருக்கியா?

அன்பா, பாசமா, அக்கறையா என்னையும் தம்பி, தங்கச்சியையும் பார்த்துகிற. என் பிரண்ட்ஸயும் அதே அன்போட அக்கறையோட கவனிக்குற. யூ ஆர் சோ ஸ்வீட் மா. நான் ரொம்ப கொடுத்து வச்சவள்.

எங்களுக்கு சமமா ஜாலியா பேசி அரட்டை அடிச்சுட்டு, சிரிச்சுட்டு, நான் எதாச்சும் கோச்சிக்கிட்டா திட்டாமா(?) சமாதானப்படுத்தி, எனக்கு நல்லது,கெட்டது செல்லி என்னை வழிநடத்துற தாயே.லவ் யூ சோ மச்.

அப்புறம் என்னையலாம் வச்சு மெயின்ட்டேன் பண்ற பாரு, யூ ஆர் சோ கிரேட் மா.

உனக்கு நான் 'சிறந்த தாய்' விருதை வழங்க சொல்லி ஜனாதிபதி கிட்ட பரிந்துரை செய்கிறேன். உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன் தெரியல. ஆனால் ஒன்னு மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புறேன், கண்டிப்பா பியூச்சர்ல எதாச்சும் சாதிச்சு ஜனாதிபதி கிட்ட அவார்ட் வாங்கி
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்" மொமன்ட்ட உனக்கு வழங்குவேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள்,
ரா.திவ்ய பாரதி.​
 
sudharavi

Administrator
Staff member
#14
கடுதாசி எழுதோனும்னு சொன்னதும் ஆருக்கு எழுதலாம்னு கடுமையா யோசிச்சோம்...சரி எல்லோரும் அண்ணனுக்கு, தங்கச்சிக்கு, தோழமைக்கு எழுதுவாங்க...நாம தான் ஸ்பெஷல் டிசைனாச்சே...வெளியே யாருக்கும் வேண்டாம்..உள்ற இருக்க மனசாட்சிக்கு எழுதுவோம்...

அன்பு மனசாட்சிக்கு ஒரு ஹாய்,

உன் கிட்ட பேசனும்னு ரொம்ப நாளா காத்துகிடக்கேன். என்ன செய்ய நேரமே அகப்படல...இந்த இப்ப கிடைச்சிருச்சில்ல...வச்சு செஞ்சிடுறேன்.

ஆமா உனக்கு வேற வேலையே இல்லயா? எப்போ பாரு நானென்ன செய்றேன்னு எம் பினானாடியே சுத்துறியே...என்ற மாமா பாத்தா என்ன நினைப்பாக?

நான் பல்ப் வாங்கினா என்ன கடை வச்சா தான் உனக்கென்ன? அதென்ன காறி துப்புற மாதிரியே ஒரு சத்தம் கொடுக்கிற...இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்...பீ கேர்புல்!

இப்படிக்கு,

உன்னோட நிஜம் & கேர்ள் பிரெண்ட்
 
Vethagowri

Well-known member
Staff member
#15
'சவாலே சமாளி'

18 ஆம் நாள்

'ஒரு கடிதம் எழுதினேன்'

View attachment 514

Divya chancee illai super.. athu epudima unai niye pukalnthu kura.. haa... haa.. kalakal
 
Vethagowri

Well-known member
Staff member
#16

As usual sinnakalaivani sudha come back..
 
#17
Divya chancee illai super.. athu epudima unai niye pukalnthu kura.. haa... haa.. kalakal
Thank u sis.athu summa comedykaga than ennai nane pugalthukitan sis. Eppo paru amma kitta ipdi than solitu irupen, ulagathalaye nee oru sirantha ponna pethu vachuruka ma, athukaga nee romba perumai padanum:D nu summa jollykaga soluven Athan athe letter layum potuten;)
 
Anuya

Well-known member
#18
22.08.19
சென்னை.

அன்புள்ள கிறுக்கி(தீபிகா)விற்கு.....

உன் அன்பான,பண்பான,பாசமான,செல்லமான f.m ரேடியோ அபி எழுதுவது . எப்படி இருக்க மா ?நா நல்லா இருக்கேன். ஹாமேஷ், மாமா, அத்தை,பாட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க? ...
உன் கிட்ட நிறைய தடவை நிறைய விசயங்கள் பகிர்ந்துக்கணும்னு நினைப்பேன் ஆனா உன்னை பார்த்தாலே சீரியஸ் டயலாக்லாம் பேச வராது எனக்கு சிரிப்புதான் வரும் அதான் இந்த லெட்டர் எழுத்திட்டேன் பேபி...
முதல்ல ரொம்ப ரொம்ப நன்றி டி என்கூடவே 17 வருடங்கள் என்னோட தொல்லைகள் எல்லாமே பொறுத்துகிட்டு வருவதற்கு இன்னும் என் வாழ்க்கை முழுக்க நீ வேணும் ஒரு நல்ல friend அஹ் . உன்னை எப்போ முதல் முதலா பார்த்தேன்னு கேட்ட சத்தியமா தெரியவில்லை ரொம்ப குட்டியா இருந்து இருப்போம் நம்ம மீட் பண்ணும் போது. L.K.G ல இருந்து இப்போ வரை என்கூட என்னோட எல்லா சுக , துக்கதுளையும் எனக்கு பக்கப்பலமா இருக்க தீபி லவ் யூ டி பட்டு. நீ இல்லாம என்னோட childhood days எப்படி இருந்து இருக்கும்னு நினைக்க கூட முடியவில்லை . என் வாழ்க்கைல நா எப்பவுமே மரகமாட்டேன் நாம சின்ன பிள்ளையில பேசிகிட்டது " அபி இனிமே நீ என்னோட அப்பா,அம்மாவ, மாமா&அத்தை னு தான் கூப்பிடனும் நானும் உன் அம்மா அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவேன்" னு சொன்னது... இப்போ வரை அப்படித்தான் கூப்பிடுறோம் நம்ம ரெண்டு பெரும் . உன்ன பார்க்காம என்னோட நாள் full-fill ஆகாது டி . நா ரொம்ப விரும்புறது நீ call பண்ணி சொல்லுவல "அபி வீட்டுக்கு வந்துட்டு போ டி " னு அது அப்பறம் அபி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா அதுவும் சாக்லேட் flavour னு நீ கேக்குறது எல்லாமே பிடிக்கும். உனக்கு தெரியாத எந்த secrets உம் என்கிட்ட இல்லை. எனக்கே தெரியாம என் போன் எடுத்து என் காமெடி போட்டோவை profile மாத்திட்டு எனக்கே call பண்ணி profile ல அழகா இருக்கனு சொல்லுவ பாத்தியா அப்போ எல்லாம் உண்மையா நீ கிறுக்கு தானு conform பண்ணிடுவேன்... தீபி நீனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி .என்கூட இப்படியே இரு எப்பவுமே லவ் யூ சோ மச் டி . உன் செல்ல ரேடியோ நா எப்போ எல்லாம் பேசினாலும் சலிக்கமா காது கொடுத்து கேப்ப நீ . திருட்டுத்தனமா படம் பார்க்க பிளான் பண்ணுறது ..படத்துக்கு போக எங்க வீட்ல permission வாங்க நீ பண்ணுற drama எல்லாமே என்னோட sweet cute memories . லவ் யூ உன்னை பார்க்காம இந்த ரெண்டு நாளா நல்லாவே இல்லை சீக்கிரமா வா டி நா வெயிட் பண்ணுறேன் இங்க ....லவ் யூ பட்டு. உம்மா ....

இப்படிக்கு,
உன் செல்ல ரேடியோ அபி
 
#19
22/08/2019
மதுரை.
அன்புள்ள மாயாவிற்கு,
ரம்யா எழுதிக் கொள்வது. நான் நல்லாருக்கேன்
. நீயும் நல்லா இருப்பனு நினைக்கிறேன். நினைக்கறதுக்கு என்ன .. நீ நல்லா தான் இருப்ப.. ரொம்ப நாள் ஆச்சு கடிதம் எழுதி... அதான் எழுதி பாக்கலாம்னு உட்கார்ந்து எழுதிட்டேன்.அதுக்கு எனக்கு எதுக்குடி எழுதின னு உன் மைன்ட் வாய்ஸ் கேக்குது.வேற வழி. எனக்கு கிடைச்ச ஒரே நல்ல ப்ரெண்ட் நீ மட்டும் தான.. அப்டின்னு நான் நினைச்சு எழுதுறேன். என்ன எழுதுறதுனு யோசிச்சேன். பேசாம பேருந்து பயணமும் நான் பட்ட பாடும்... இது தான் தலைப்பு னு ஜஸ்ட் நவ் முடிவே பண்ணிட்டேன். ஏன்னா அவ்ளோ பயணம்.. அவ்ளோ கதை... நான் 2மணி நேரம் பயணம் செய்து... பணிபுரியும் இடத்திற்கு போனும். கிட்டத்தட்ட 80+80=160கி.மீ. டெய்லி போயே ஆகனும். இதுல என்ன வசதினா.. டெய்லி போறதுனால டிரைவர் கண்டக்டர் அத்தன பேருக்கும் நம்மளத் தெரியும்.நமக்கும் அவங்கள தெரியும். நிறய தடவ கூட்டமா இருக்கறப்ப லாம் சீட்டு போட்டு வச்சுடுவாங்க.. காலைல நான் போற பஸ் பைபாஸ் ரைடர்.அதனால கூட்டம் இருக்காது. சில சமயம் நான் ஒருத்தி மட்டும் போவேன். ஆனால் சில நேரம் விழா நாட்களில் சீட்டு ஓரத்துல தள்ளிவிடற மாதிரி இருக்கும். சரி கழுத னு இருந்துட முடியுமா.. இப்படித்தான் போன வாரம் பஸ் ஸ்டாண்ட் உள்ள போறதுக்கு முன்னாடியே கிளம்பிருச்சு. சேஸ் பண்ணி ஏறிட்டேன். ஒரு லேடி மூன்று பேர் சீட்ல அதுவும் அதோட லக்கேஜ் ம் வச்சுகிட்டு உட்கார்ந்து இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி உட்கார்ங்கனு சொன்னேன்.( என் கிரகம் மத்த சீட்லாம் ஆண்கள்) இது பிச்சை போடற மாதிரி லைட்டா நகர்ந்துச்சு. என் சைஸ். தான் தெரியுமே.. அது கிட்ட இன்னும் கொஞ்சம் தள்ளி உட்கார்ங்கனு சொன்னேன். அது டெரரா லுக் விட்டுட்டு.. அது ஒரு சீட் தந்துட்டேனே( என்னமோ உன் வீட்டு சோபால இடம் கொடுத்த மாதிரி பேசற).. கரெக்டா இந்த லைன் ல தான இருக்கனும்( இன்ச் டேப்பை வச்சு அளந்தியோ) இன்னொருவர் வந்தா இப்படி தான இருக்கும். ( அவ வந்தா நான் நடுவுல வந்துருவேன். உன்ட்ட ஏன் கேக்க போறேன்) அப்டின்னு ரூல்ஸ் பேசிட்டு நகர்ந்து உட்கார்ந்து ச்சு.. காலங்காத்தால இப்படி னா.. சாயங்காலம் ரொம்ப மோசம். அதே மூனு பேர் சீட். ஒரு லேடி (இங்கயுமா) அவங்களோட இரண்டு பசங்க. (அர டிக்கெட் டுங்க) லாலி பாடி தூங்க வச்சிட்டு வந்தாங்க. கண்டக்டர் வேற சீட் காலி இல்ல .. இங்க உட்கார்ங்கனு போயிட்டார்.. அது என் புள்ளக்கே பத்தாத அளவுக்கு இடம் கொடுத்நுச்சு. சரி .. நமக்கு இன்னிக்கு இதுதான் னு மனச தேத்தி உட்கார்ந்தா.. என் மேலே சாய்ஞ்சு இருக்கற டென்சன ஏத்திடுச்சு. நாசூக்கா சொல்லி பாத்தேன். திருந்தல. சாஞ்சுச்சு... ஊக்க வச்சு என் பிளவுஸ் வக்கிற மாதிரி வச்சேன். அந்த லேடி சாஞ்சுச்சு. ஊக்கு குத்திருச்சு. என்னைய மொறச்சு பாத்துட்டு திரும்பிடுச்சு.. ( எப்படி என் ஐடியா) அப்பரம் திரும்பவே இல்லை.. இது இப்படி னா ஆண் தொல்லை அதுக்கு மேல. ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தா.. சைட்ல கை ய விட்டு தடவுவாங்க. நம்மகிட்ட தான் ஊக்கு ட்ரீட்மெண்ட் இருக்கே.. மூனு நாலு தடவ குத்தி விட்ருக்கேன்.. அரசு பேருந்து னா மழைக்காலத்தில்.. ஒழுகும். அதுக்கும் சளச்சுருவோமா
. ரெயின்கோட் போட்டுட்டு ஜம்முனு உட்கார்ந்து போவோம்ல.. மழை, ஜன்னல் சீட், இளையராஜா இசை.. இப்படி காம்பினேஷன் ல.. நிறைய இனிமையான பயணங்களும் இருக்கு.. பல தோழிகள் கிடைத்தது பேருந்து பயணத்தில் தான். இதெல்லாம் எதுக்குடி எனக்கு எழுதுறனு கேக்காத. எழுதனும் னு தோணிச்சு.எழுதிட்டேன். எனது பயணங்கள் முடிவதில்லை.. ரொம்ப மொக்கை போட்டுட்டேன். இது இப்பதான் தெரியுதா.. எழுதுறக்கு முன்னாடி தெரியலையா ன்னு நீ கேக்றது காதுல விழுது. இதையே நீ வெட்டியா வரி விடாம படிக்கற.. அத விட உனக்கு வேற வேலையில்லைனு தான் எழுதினேன். எல்லாவற்றையும் கேட்டதா சொல்லு. உன்னோட குட்டி வாண்டுக்கு நிப் மாத்தற பென்சில் வாங்கி அனுப்பி இருக்கேன். பதில் போடு. போடாம போ. அடுத்த கடிதம்.. விரைவில் வரும்.
இப்படிக்கு,
அன்புத்தொல்லை தரும் ரம்யாபெறுதல்:
திருமதி. மாயா,
Xxxx xx,
Yyyyyyyyy.
Neenga maduraiya super ponga
 
#20
'சவாலே சமாளி'

18 ஆம் நாள்

'ஒரு கடிதம் எழுதினேன்'

View attachment 514
22/08/2019
சென்னை
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்,

அன்புள்ள அம்மா
ஆசையாக பேசும் அம்மா
இம்சை தரும் என்னை
ஈ என்று இழித்து கொண்டு பொறுத்து கொள்ளும் அன்னை
உணவும் அளித்து
ஊக்கமும் கொடுத்து
என்னை வளர்த்தாய் நீயே
ஏட்டு கல்வியும் அளித்து
ஐஸ்கிரீமையும் எனக்கு வேண்டும் போது கொடுத்த உன்னை
ஒருநாளும் மறவேன் என் அன்னை
ஓவராக நானும் பண்ணும் போது
ஔவை போல நீயும் அறிவுரையை வழங்கி என்னை வழிநடத்தும் தாயே வாழ்க! வாழ்க!
ஃ என்ற ஆய்த எழுத்தை போன்று என் வாழ்வின் முதன்மையான தாயே!
உன் அன்பிற்க்கும், பாசத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி!

தங்கத்தை பெத்த தங்கதாரகையே! இந்த முத்தை பெற்ற மனித குல மாணிக்கமே! உனக்காக இந்த கடிதமும்,ஆத்திச்சூடி அமைப்பில் இருக்கும் கவிதையையும்(?) நானே எழுதி டெடிகேட் பண்றேன்.

பக்கத்து ரூம்ல நான் நலமா இருக்கேன்.அடுத்த ரூம்ல நீ நலமா இருக்கியா?

அன்பா, பாசமா, அக்கறையா என்னையும் தம்பி, தங்கச்சியையும் பார்த்துகிற. என் பிரண்ட்ஸயும் அதே அன்போட அக்கறையோட கவனிக்குற. யூ ஆர் சோ ஸ்வீட் மா. நான் ரொம்ப கொடுத்து வச்சவள்.

எங்களுக்கு சமமா ஜாலியா பேசி அரட்டை அடிச்சுட்டு, சிரிச்சுட்டு, நான் எதாச்சும் கோச்சிக்கிட்டா திட்டாமா(?) சமாதானப்படுத்தி, எனக்கு நல்லது,கெட்டது செல்லி என்னை வழிநடத்துற தாயே.லவ் யூ சோ மச்.

அப்புறம் என்னையலாம் வச்சு மெயின்ட்டேன் பண்ற பாரு, யூ ஆர் சோ கிரேட் மா.

உனக்கு நான் 'சிறந்த தாய்' விருதை வழங்க சொல்லி ஜனாதிபதி கிட்ட பரிந்துரை செய்கிறேன். உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன் தெரியல. ஆனால் ஒன்னு மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புறேன், கண்டிப்பா பியூச்சர்ல எதாச்சும் சாதிச்சு ஜனாதிபதி கிட்ட அவார்ட் வாங்கி
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்" மொமன்ட்ட உனக்கு வழங்குவேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள்,
ரா.திவ்ய பாரதி.​
Dhivya ungammavoda reaction teriyanumeer