அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 16

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் 80/90 களில் வந்த புத்தகங்களில் நீங்கள் படித்து மனதில் நீங்காத இடத்தை இன்று வரை நிறைத்த வரிகளையும் அவை உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் எழுதவும். கதாசிரியர் பெயர் மற்றும் கதையின் பெயரையும் தெரிவிக்க வேண்டும்.
 
#2
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் 80/90 களில் வந்த புத்தகங்களில் நீங்கள் படித்து மனதில் நீங்காத இடத்தை இன்று வரை நிறைத்த வரிகளையும் அவை உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் எழுதவும். கதாசிரியர் பெயர் மற்றும் கதையின் பெயரையும் தெரிவிக்க வேண்டும்.
Novels thane sis..
 
#4
Good morning.iniku varaikum enoda manasula irukura story 1980 la Ruskin Bond eluthuna The blue Umbrella.Indha story nan 5th padikirapa than padichen.Ithu movie ahvum vanduruku.But book la padichathuthan enaku pidichathu.Oru kutty ponnum shopkeeper um than ithula main role.Andha girl ku kidaicha oru blue Umbrella vai kettu parthu andha ponnu tannoda nilaimayilum tarave matta.But athai oruthan Thiruda muyarchi panni mattikitathum shopkeeper mela palipotu athula irundhu avaruku viyabarame irukathu.Kadaisiyila ivaruku ithu tevainu nan ninaikirapa andha kutty ponnu thane kondu poi andha Umbrella vai avarkita koduthuduva.Omg athu andha age la enala accept pannikave mudiyala but athukaduthu orutharuku kodukurathula irukkura sandosam vera elathulaum ilainu thonuchu.Still I remember the dialogue "The Umbrella isn't everything " ithai andha kutty ponnu Binya avarkita koduthutu solluva.S enoda life la Umbrella ku pathila vera onnu ninaichu athu matum valkkai ilainu nan ninachiruken.
 
Last edited:
#5
Neraiya novels books padichurukan, but to be frank author name kuda therium but entha year publish anathunulam theriyathu... Na 2012 la tha novels padikaa arambichathu... Ramanaichandran amma novels na avolo craze,, but publication date la theriyathu... So school la padicha story tha yosikum pothu nabagam vanthuchu "The Last Leaf" By O'Henry in 1907..9th padikaratche intha story enaku oru lesson english subject la. Sue and jhonsy.. Both are friends .... Jhonsy pneunonia attack agirukum.. But ava recover aganumnu nenaikavemata because avaluku oru Superstitious belief irukum.. Ava window valiya patha oru ivy tree irukum.. Athula iruka last leaf vilum pothu ava iranthuduvanu... Apo rainy nd storm days nala last 5 leaf tha irukum... Ava daily uh atha count panite irupaa..sue ivaloda intha muttal thanatha nenaichu romba kavalaipatu, ground floor la iruka ,old man 60 age ,Behrman(painter) kita itha solli feel panuva..( Behrman ku romba nala avaroda masterpiece paint varaiyanumnu bayangara asaii)... Avarta sue vanthu jhonsy conditions sonnathu romba kavalaiya irukum.. So ivar jhonsy ah poi pakkum pothu thungitu irupa.. And avar keezha vanthuduvar... Next day jhonsy elunthu sue kita curtain open pannu na last leaf pakanum.. Athu vilunthuta, nanu sethuduvan... Enaku romba tired ah iruku nu soluva.. Sue bayanthute open panuva window va.. But antha last leaf apadiye strong ah irukum.. Jhonsy udane inaiku vilunthudum nu parthute irupa Ana. Antha leaf vilathu...avaluku konjam konjama hope kedaikum..Doctor vanthu pathu, kandipa ini ne recover aiduvanu soluvar.. Jhonsy ku oru nambikai irukum..avaloda mudai nambikai ah nenaichu frnd kita sorry ketpa... Doctor pogum pothu, sue kita ground floor la iruka Behrman ku pneumonia attack agiruku but avaruku recover chance ilanu soluvar... Two day aparam avar death agirupar... Sue vanthu jhonsy ta avar pneumonia attack agura munna intha bayangara storm la veliya poirukar.. Antha marathula iruka last leaf avar paint paninathu.. athunalatga athu inam vilama iruku.. Avar death aga munadi avaroda masterpiece paint ah mudichutar nu soluva.... Intha story epaum enaku konjam painful anathu... Suppose avar antha storm la pogama irunthuruntha avaruku pneumonia attack agirukathu but jhonsy kana hope kedaichurukathu.. But avaroda sacrifice nala oru chinna ponnu avoloda lyf ah valamudium.. And avaroda kanavu neraiveriduchu... Suyanalam ilatha anbu romba gifted
 

dharani

Active member
#8
எனக்கு ஒரு நாவல் பேர் சொல்லுங்க பா..... ஹீரோ ஒரு மிடில் கிளாஸ் னு நினைக்கிறன்.....அவன் படிக்க foreign போகும் போது அங்க உள்ள ஒரு பெண் கூட பழக்கம் ஆகும்....அந்த பொண்ணு வீட்டு ஆளுங்க ரொம்ப மோசமானவுங்க ஆனா பொண்ணு நல்ல பொண்ணு.... இவன் அந்த பெண் கூட நட்பா தான் பழகுவான் ஆனா அந்த பொண்ணு இவனை விரும்பு அப்புறம் வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படினு அவனும் விரும்புவான் அப்போ அவன் வீட்டுல இருந்து உடனே வர சொல்லி தகவல் வரும் இவளை கூட அழைச்சிட்டு போக முடியாத நிலைமை.... நான் போயிடு உன்னை அழைச்சிக்கிறேன் சொல்லுவான் .... ஆனா இங்க வந்தா அவனுக்கு ஒரு பெரிய இடத்தில பொண்ணு பாத்து வச்சி இருப்பாங்க..... இவனும் பேசி சரி பண்ணி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவான்.... இது தான் லைப் அப்படினு அந்த பொண்ணு கூட வாழ ஆரம்பிச்சுடுவான்..... அப்போ அந்த பொண்ணு கிட்ட இருந்து ஒரு லெட்டர் வரும்.... அதை கோர்ட் பாக்கெட் வச்சி இருப்பான்.... அந்த பொண்ணை தேடி போகிறதா வேண்டாமா அப்படினு யோசிச்சிட்டே இருப்பான்.... அந்த லெட்டர் அவன் மனைவி கிட்ட கிடைக்கும்
அவனுக்கு குழந்தை இல்ல அவன் wife அவனோட லவர் யை தேடி போகணும் சொல்லுவா .... இப்படி வரும் இவன் அதுக்கு ஒதுக்க மாட்டான் அப்புறம் ரெண்டு பெரும் போய் அந்த குழந்தை அழைச்சிட்டு வந்துதுவங்க....ஆனா அந்த லவர் குடும்ப சூழ்நிலையால் ரொம்ப மோசம் தொழில் செய்து ரொம்ப உடல் நலம் கேட்டு பொய் இருப்பாங்க....அப்புறம் அவங்க இறந்து .போய்டுவாங்க... இப்படி தான் வரும் யாரோட நாவல் னு மறந்துட்டேன்.... கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் நான் சொன்னது .... இப்படி தான் போகும் கதை ஒன்லைன் பிடிப் ல படிச்ச கதை இப்போ பேர் தெரியணும் ப்ளீஸ் யாராவது ஹெல்ப் பண்ணுங்க பா .
ippadi thaan antha kadhai pogum may be 80s illa 90s kadhaiya irukalam..... naan romba rasichi padichichen..... aana ippo maranthu pochu....
 

Vethagowri

Well-known member
Staff member
#9
84 இல் பிறந்த எனக்கு பள்ளி இறுதி நாட்களில் 2000 ம் வருடத்தில் தான், ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன், பாலகுமாரன் நாவல்கள் அறிமுகமாகின.(அப்போவே மறைச்சு மறைச்சு படிச்சது )

ரமணிச்சந்திரனின் அடிவாழை நாவல் தான் எனது நாவல் படிக்கும் பயணத்தின் வித்து, இவரின் நாவல்கள் எனது மனதிற்கு இனிய வையாக மன அழுத்தத்தை குறைப்பதாக இருந்தது என்றால் மிகையாகாது..

பாலகுமாரனின் பொய்மான், அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், தாயுமானவன், என் கண்மணித் தாமரை இப்படிப் பல நாவல்கள் எனக்கு பிடித்தாலும், இரும்பு குதிரைகள் மட்டுமே என்றும் மறக்காமல் மனதில் நின்று ஆழமாக பதிந்தது, இக்கதையில் வரும் விஸ்வநாதன், ராவுத்தர், தாமிரா ஆகிய பாத்திரங்களோடு நாமும் பயணிப்பது போலவே இருக்கும்..

அதில் முக்கியமானது
" குதிரைகள் பசுக்களை போல
வாய் விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம் "....
என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பெற்றுவை... இவ்வரிகளை மனதில் உருப்போட்டு எனக்கு நானே தோள்களைத் தட்டிக் கொடுப்பது போன்று உற்சாகம் கொடுக்கும் வரிகள்....
 

kohila

Active member
#10
2000ஸ்ல தான் கதை படிக்க ஆரம்பித்தேன். வி.உஷா, வித்யா சுப்ரமணியம், மணிமாலா இவர்கள் எழுத்துக்கள் பிடிக்கும். எந்த கதையும் சரியா ஞாபகத்திற்கு வரல..

பட் இன்று வரை மறக்க முடியாத கதை இது தான். பாதி பக்கங்கள் கிழிந்த நிலையில் இருந்த புக் ஒன்றை ஒட்ட வைத்து படித்தேன். அப்படீன்னா அது 90ஸ்ல வந்த கதையாக தான் இருக்கும். செம விறுவிறுப்பான கதை.. அந்த கதை பெயரும், எழுத்தாளரும் ஞாபகத்திற்கு வரவில்லை. மணிமாலா கதையாக இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்..

நாயகி பெற்றோர் இல்லாதவர், ட்ரஸ்ட் மூலமா படிப்பாங்க. ஹீரோயினும், ஹீரோ ஃப்ரெண்ட்டும் ஒரே கல்லூரியில் படிப்பாங்க.. அப்போ இருந்தே அவரு, ஹீரோயினை லவ் பண்ணுவார். காலேஜ் முடிந்து இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பாங்க.. ஹீரோ அவங்க இரண்டு பேருக்கும் பாஸ்.. ஹீரோவின் நண்பன் நேரடியா லவ் சொல்ல தைரியம் இல்லாமல் அவளுக்கு அஸைன் பண்ற வேலை மூலமா சொல்ல முயற்சிப்பார். ஆனா ஹீரோயின் அந்த ப்ரோபோசல் ஹீரோவோடது நினைச்சுப்பாங்க. அவருடைய நல்ல குணம் பார்த்து லவ் பண்ணவும் ஆரம்பிச்சிடுவாங்க.

ஹீரோ, நண்பன் மேல் உயிரையே வைத்திருப்பாங்க. நண்பன் ஹீரோயினை லவ் பண்ணுவாங்க. ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுவாங்க. இப்படியே போய் கொண்டிருக்கும் கதையில், ஒருநாள் மீட்டிங்காக மும்பை போகும் ஹீரோ, ஃப்ளைட் ஆக்ஸிடென்ட்ல இறக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வரும். ஹீரோயின் பதறி போய் மும்பை போவாங்க. இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவான் என்று சொல்லும் டாக்டர்களிடம் மன்றாடி அவருடைய கருவை எடுத்து தனக்கு வைக்க சொல்வாங்க. பின் குழந்தையை பெற்று மும்பையிலேயே வளர்த்துட்டு இருப்பாங்க.. ஆனா ஹீரோ உயிரோட இருப்பார். இறந்தது அவர் நண்பன். ஆரம்பத்தில் நண்பனின் இறப்பால் ஹீரோயினை பற்றி அறியாமல் இருந்தவர், பின் காணாமல் போய்விட்டாள் என்ற ஆசிரமத்தினர் கொடுத்த அழுத்தத்தினால், அலுவலக ஊழியர் என்ற முறையில் தேடிக் கண்டுக் கொள்ளும் போது, அவளின் காதலும், தன்னுடையது என நினைத்து அவள் வளர்க்கும் குழந்தையை பற்றியும் அறிந்து, அவளை மணப்பார்.

இப்போது இதுபோலவோ, இன்னும் சிறப்பானதகாவோ கதைகள் வந்திருந்தாலும், முதன்முதலில் இப்படி எழுதியது இந்த கதையின் ஆசிரியர் தான். அதனால் எனக்கு பிடிக்கும். டயலாக்ஸ் ஞாபகம் வரல. வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம்ன்னா, ஒரு பக்க கதைகளை மட்டுமே படித்துக் கொண்டிருந்த நான், இந்த கதைக்கு பின் தான் முழு நீள நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
 
#11
எனக்கு ஒரு நாவல் பேர் சொல்லுங்க பா..... ஹீரோ ஒரு மிடில் கிளாஸ் னு நினைக்கிறன்.....அவன் படிக்க foreign போகும் போது அங்க உள்ள ஒரு பெண் கூட பழக்கம் ஆகும்....அந்த பொண்ணு வீட்டு ஆளுங்க ரொம்ப மோசமானவுங்க ஆனா பொண்ணு நல்ல பொண்ணு.... இவன் அந்த பெண் கூட நட்பா தான் பழகுவான் ஆனா அந்த பொண்ணு இவனை விரும்பு அப்புறம் வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படினு அவனும் விரும்புவான் அப்போ அவன் வீட்டுல இருந்து உடனே வர சொல்லி தகவல் வரும் இவளை கூட அழைச்சிட்டு போக முடியாத நிலைமை.... நான் போயிடு உன்னை அழைச்சிக்கிறேன் சொல்லுவான் .... ஆனா இங்க வந்தா அவனுக்கு ஒரு பெரிய இடத்தில பொண்ணு பாத்து வச்சி இருப்பாங்க..... இவனும் பேசி சரி பண்ணி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவான்.... இது தான் லைப் அப்படினு அந்த பொண்ணு கூட வாழ ஆரம்பிச்சுடுவான்..... அப்போ அந்த பொண்ணு கிட்ட இருந்து ஒரு லெட்டர் வரும்.... அதை கோர்ட் பாக்கெட் வச்சி இருப்பான்.... அந்த பொண்ணை தேடி போகிறதா வேண்டாமா அப்படினு யோசிச்சிட்டே இருப்பான்.... அந்த லெட்டர் அவன் மனைவி கிட்ட கிடைக்கும்
அவனுக்கு குழந்தை இல்ல அவன் wife அவனோட லவர் யை தேடி போகணும் சொல்லுவா .... இப்படி வரும் இவன் அதுக்கு ஒதுக்க மாட்டான் அப்புறம் ரெண்டு பெரும் போய் அந்த குழந்தை அழைச்சிட்டு வந்துதுவங்க....ஆனா அந்த லவர் குடும்ப சூழ்நிலையால் ரொம்ப மோசம் தொழில் செய்து ரொம்ப உடல் நலம் கேட்டு பொய் இருப்பாங்க....அப்புறம் அவங்க இறந்து .போய்டுவாங்க... இப்படி தான் வரும் யாரோட நாவல் னு மறந்துட்டேன்.... கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் நான் சொன்னது .... இப்படி தான் போகும் கதை ஒன்லைன் பிடிப் ல படிச்ச கதை இப்போ பேர் தெரியணும் ப்ளீஸ் யாராவது ஹெல்ப் பண்ணுங்க பா .
ippadi thaan antha kadhai pogum may be 80s illa 90s kadhaiya irukalam..... naan romba rasichi padichichen..... aana ippo maranthu pochu....
Therila sis..
 

Ramya Mani

Well-known member
#12
என்னை மிகவும் பாதித்த நாவல் சிவசங்கரி அவர்களின் நண்டு.
நண்டு மணலை குடைவது போல் நம் உடலைக் குடையும் கேன்சர் நோய் பற்றியும் அதற்கான கீமோதெரபி பற்றியும் அருமையாக எழுதியிருப்பார்..
நாயகி சீதா நாயகன் ராமை காதல் திருமணம் செய்கிறார். ராம் வடநாட்டவர். அவர் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு. இருப்பினும் நன்றாக வாழ்ந்து வநத போது ராமின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு ஏற்றுக்கொள்ளாமல் மழையில் நனைந்து சென்னை திரும்பி சில காலத்தில் ராம் இறப்பு. பின் தைரியமாக வேலைக்குச் செல்லும் சீதா. தோழியின் நிச்சயத்தின்போது வலது மார்பில் கட்டி. கவனியாமல் விட்டுவிட.. வலி அதிகமாய்.. மருத்துவமனை செல்கின்றனர்.அங்கு மார்பக புற்றுநோய் கண்டறியப் பட.. அதை எதிர்த்து போராடி தன் குடும்பத்தை ஆளாக்கி பின்னர்.. நோயின் தீவிரத்தில் ..... முற்று பெறும்.. எங்கம்மா சொன்னது.. சீதானு பேர் வச்சாலே படக்கூடாத கஷ்டமலாம் படுவாங்கனு. உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. இருப்பினும் எனக்கு தெரிந்த 5/6 சீதாக்கள் கஷ்டப்பட்டதை பார்த்திருக்கிறேன்..
 

Anuya

Well-known member
#13
நா நாவல் படிக்க ஆரம்பித்து 3 வருடங்கள் தான் ஆகுது .....சோ 90's ல வந்த நாவல்கள் அவ்வளவாக தெரியவில்லை .....
ரமணி மா அவர்களின் 'மாலை மயங்குகின்ற நேரம் ' இந்த புக் எதேர்ச்சையாக என் அப்பாவுடைய காலேஜ் புக்ஸ் இருந்த self ல பார்த்த மாத இதழில் தொடர் கதையாக வெளிவந்த கதை..... அதை படிச்சிட்டு year அந்த மாத இதலோட name எல்லாம் நோட் பண்ணி அந்த நாவல்ல தேடி தேடி படிச்சேன்..... 1996லில் கல்கி ல வெளிவந்த தொடர் கதை மாலை மயங்குகின்ற நேரம் ..... என் மனதில் நீங்காத இடம்பிடித்த வரிகள் என்றால் அது ஹீரோ கிருஷ்ணா சந்திரன் எழுத்துர லெட்டர் தான் .....லெட்டர் ஆரம்பிக்கும் போது " நீ உதயத்தின் ரேகை நானோ அஸ்தமத்து சந்திரன் ...." ல இருந்து முடியுற வரை எல்லாமே பிடிக்கும் குறிப்பா அந்த பெயர்காண காரணம் சொல்லுற இடம் .......
இந்த கதை என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்னவென்றால் இந்த கதை படித்த பிறகு தான் நா புக் படிக்க ஆரம்பித்தேன் குறிப்பாக இந்த கடிதம் ....இது படித்த பிறகு தான் தேடி இந்த கதை படிச்சேன் அப்புறம் அப்படியே நாவல் படிக்க ஆரம்பிச்சிட்டேன்.......:giggle:

16th day task completed....
 
#14
'சவாலே சமாளி'

16 ஆம் நாள்

நான் நாவல் படிக்க ஆரம்பிச்சது 2013 காலேஜ் பர்ஸ்ட் இயர்ல தான். அதுக்கு முன்னாடி இரண்டு கதை ஸ்கூல் படிக்கும் போது படிச்சிருக்கேன் . அதில்ல ஒன்று கண்மணி மாத இதழ்ல வந்த லவ் ஸ்டோரி. இன்னொன்று தினத்தந்தில வந்த தொடர்கதை சுபா அவர்கள் எழுதியது. ஒரு முன்ஜென்ம கதை ( அனேகன் பட கதை தான் அது, சுபா தான் அந்த படத்தோட கதையாசிரியர், இந்த கதை தான் கொஞ்சம் மாற்றியமைத்து படமாக எடுத்தாங்க). அப்பவே அந்த கதை எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது. படம் வந்ததும் திருப்பி அந்த கதையை படிக்க நெட்ல தேடி பார்த்தேன், அப்பதான் இந்த டீடைல்ஸ் கிடைச்சது,பட் கதை கிடைக்கவில்லை. பேரும் ஞாபகம் இல்லை. அப்புறம் நாவல் படிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்டார்டிங்கல படித்த ரமணிச்சந்திரன் நாவல் 'மயங்குகிறாள் ஒரு மாது' கதைல வர டைலாக் இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த பழமொழி முதல் தடவை கேட்டதால, அப்புறம் கதைல முக்கியமான திருப்புமுனயாய் வர வரினால, அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. "நக்குகிற நாய்க்குச் செக்கு என்று தெரியுமா? சிவலிங்கம் என்று தெரியுமா? ". இப்போ கூட இந்த வரி எங்க பார்த்தாலும் அந்த கதைதான் நினைவுக்கு வரும். அதே மாதிரி 'நாய்க்கு பல் நாற்பத்யிரண்டு , கழுதைக்கு முப்பத்தாறு' அந்த வரியும் இந்த கதைல ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் நிறைய கதைகள் படித்திருந்தாலும், இந்த கதை 80/90 இல் வந்ததால் இந்த டாஸ்க்குகாக போடறேன்.ஒருவாறு 16 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.