அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY - 15

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் உங்களது பள்ளி தோழமைகளில் முற்றிலுமாக தொடர்பில்லாத ஒருவரை கண்டு பிடித்து அவருடன் அலைபேசியில் உரையாட வேண்டும்.

நீண்ட பிரிவிற்கு பிறகு பேசும் அந்த உணர்வினை இங்கு பதிவிட வேண்டும்.
 
Vethagowri

Well-known member
Staff member
#2

" முயற்சிதிருவினையாக்கும்
முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்"

என்ற வள்ளுவனின் வாக்கு போல முயற்சி செய்வோம்.. பள்ளித்தோழி தான் ஆனால் மிக நெருங்கியவள் எங்கள் ஊர் தான். மணம் முடித்து வெளியூர் சென்று விட்டார்.. எங்கள் குடும்பமும் அவரின் குடும்பத்தோடு ஏற்பட்ட சிறு மனக்கசப்பில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.. கிட்டத்தட்ட 8 வருடங்களாக.. 2011 ல் இருந்து.. இன்று அவளின் எண்ணை வாங்கிவிட்டு பேசிவிட்டு வருகிறேன்.. உள்ளூர் பள்ளியில் படித்ததால் ஓரளவு எல்லரும் தொடர்பில் இருக்கிறார்கள்.. இவரிடம் மட்டும் தான் தொடர்பில் இல்லை..
 
#3
Good morning.School senior ana enaku nalla frnd.Enoda veetula solli koopiduren per sollithan koopiduvanga.Rombavum close ana medicine padikka poduvanga love marriage panitanga enaku pidikathathala Pesama irunduten.Iniku mrng social media la tedi number vangi pesiten vani nijamave neethana apadinu avalo excitement.Indha vacation la meet panna plan potom.Enakume avanga excitement parthu konjam feel ayiten.sandosamavum irunduchu
 
Vethagowri

Well-known member
Staff member
#4
சில சவால்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சிலது நமக்கு போட்டியையும் தாண்டி மனநிறைவை கொடுக்கின்றன.. இச்சவாலை கொடுத்த குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

நான் : வணக்கம் நான் கவிதா பேசுறேன்.

தீபா : கவிதா.. நீயா.. ஹேய் விளையாடாதீங்கப்பா.. வேற யாரோ தானே பேசுறீங்க.

நான் : இல்லை தீபா, நான் தான் கொணலையில் இருந்து பேசுறேன்..

தீபா : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. எருமைமாடுங்களா.. விளையாடுறதுக்கு வேற காரணம் கிடைக்கலையா.. என் கிட்ட கவிதா நம்பர் இருக்கு.. போனை வை எருமை...
என்று கட் பண்ணிவிட்டு போய்விட்டார்.. நான் என் நம்பெரில் இருந்து அழைக்காமல், ஜியோ எண்ணில் இருந்து அழைத்தேன்..
மறுபடி என் எண்ணில் இருந்து அழைத்து நான் தான் பேசுகிறேன் என்று சொன்னதும் தீபாவால் நம்பவே முடியவில்லை..

"ஹைய்யோ கவிதா நீயா.. வேற நும்பெர் வரவும் என் மாமா பிள்ளைகள் தான் உன் பேர் சொல்லி விளையாடுறாங்கன்னு நினைச்சேன்.. எப்படி இருக்க கவிதா.. நான் பேசலாம்னு நினைப்பேன்.. உங்க வீட்டுல எதாவது சொல்லுவாங்களோ, அப்படினு தான் பேசலை கவிதா.. கொணலைக்கு வரும் போது எல்லாம் அம்மா கிட்ட சொல்லுவேன்.. உன்னை பத்தி கேட்டுப்பேன் (அவங்க அம்மா எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை ) சண்டை வந்த பிறகும் கூட அவரை எங்கு பார்த்தாலும் விசாரித்து பேசுவேன்.. ஆனால் தீபாவை பற்றி பேசியதே இல்லை..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.. என் எண் எப்படி தெரியும் என்று கேட்டதற்கு தன் மகனுக்கு அடுத்த மாதம் புதுநன்மை விழா வைக்க போவதாகவும் அதற்கு அழைப்பு விடுக்க என்னுடைய எண்ணை என் தாய்மாமா விடம் வாங்கியதாக சொன்னாள்.. இந்த டாஸ்க் காக பேசியதாக சொல்லலை.. அதை சொல்லிடனும்.. இதற்காக மட்டும் பேசவில்லை.. பேசுவதற்கு இது ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும்.. நட்பே துணை..
 
kohila

Active member
#5
நான் ஃபேஸ் புக் வந்ததே என் பள்ளி தோழிகளை எப்படியாவது மீண்டும் தொடர்பு கொள்ளலாம் என்று தான். அனைவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைக்கும் வாய்ப்பில் இருப்பர்வர்களிடமாவது ரொம்ப நாளாபண்ணணும் நினைத்தது... பட்நேரமின்மை, அவங்களோ ஃப்ரீ டைம் எப்போ? இதெல்லாம் நினைத்து முயற்சிக்காமலே விட்டு விட்டு, இன்று எப்படியோ ஒருத்தியிடம் பேசியாயிற்று... அவளும் நானும் பள்ளி விட்டு வரும் போது பேசிக் கொள்ளாமல் தான் வெளியேறினோம்... அதன் பின் தொடர்பே இல்லை இருவருக்கும்... சமீபமாக என் அலுவலக தோழியின் நட்பில் இருந்தவள் எனக்கு அழைப்பு கொடுத்திருந்தாள்.. அப்பொழுதும் எனக்கு பேச தயக்கம்.. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாளென்று... இன்று என் அலுவலக தோழியிடம் பேசி அவள் நம்பர் வாங்கி பேசவும் அவளுக்கும் ஒரே சந்தோஷம். என்னை போலவே யோசித்து தான் அவளும் பேசாமல் இருந்திருக்கிறான்... அவள் படித்த கல்லூரியில் நானும் சேர்வேன் என்று ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறாள்... ஆனால் இருவரும் சந்திக்காமலே ஒரே கம்பெனியில் , ஒரே காலக்கட்டத்தில் தான் வேலை செய்திருக்கிறோம் என்று இன்றுதான் தெரிந்தது. எவ்வளவு நாட்களை பேசாமல் வீணடித்து விட்டோம் என்றும் சிறு வயது மெச்சூரிட்டி இல்லாத சண்டை எல்லாம் பேசி சிரித்துக் கொண்டோம்..இன்னும் பேசுவோம்
 
#6
Task completed...12 th vara kuda padicha ponnu.. Apram epadiyo contact vitu pochu... Inaiku innoru frnd kita ketu number vangi pesina... Lyf oda race la neraiya matrangal elarkitaium... Actually oru formal pechatha irunthuchu.. School la evolo kindel panni pesirupom.. But iniku athu oru formal pechatha irunthuchu.. But rendu perukume oru happiness irunthathu unmaitha... Romba varusham apram pesaromnu... And inam matha frnds pathi la discuss panikitom.. So malarum nenaiugal.. Mudinja school frnds elaraium again meet panna nalarukum.. Get together pola..inime ava epaum contact la irupa.. Mudinja matha frnds kitaium pesanumnu yosichu vatchurukan..
 
Anuya

Well-known member
#7
15th day task completed...
Na maximum ennoda school friends kuda touch la thaan iruken ....daily phone panni pesikalanalum WhatsApp la pesipom ....weekly once conference call semaya irukum.....inaiki task ku varuvom ...... Actually na ipo recent ah thaan ennudaiya 5th std classmates create pannina group la join panninen athula 5th Vara en kuda padicha frnds irukanga ......school time la en best friend bharathi....after 5th std na vera school poiten apram pesikurathu illa inaiki than call pannen after 10 years wow......Sema feel athu roooommmbba varusam kalichi call panninathu kittathata 2 1/2 hrs pesinom intha 10years la nadanthathu ......innum Oru azhagana sweet moment join aagi iruku ennudaiya memories collections la .........romba romba happy 10yrs kalichi ennudaiya frnd Kita pesinathu..... School nanga panna comedy ellame share panninom ......ennaku Enna cartoon pidikum na Enna lunch virumbi saptuven nu ellame Ava sollum bothu awwwww......avalo azhagana moments athellam....
 
#8
சில சவால்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சிலது நமக்கு போட்டியையும் தாண்டி மனநிறைவை கொடுக்கின்றன.. இச்சவாலை கொடுத்த குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

நான் : வணக்கம் நான் கவிதா பேசுறேன்.

தீபா : கவிதா.. நீயா.. ஹேய் விளையாடாதீங்கப்பா.. வேற யாரோ தானே பேசுறீங்க.

நான் : இல்லை தீபா, நான் தான் கொணலையில் இருந்து பேசுறேன்..

தீபா : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. எருமைமாடுங்களா.. விளையாடுறதுக்கு வேற காரணம் கிடைக்கலையா.. என் கிட்ட கவிதா நம்பர் இருக்கு.. போனை வை எருமை...
என்று கட் பண்ணிவிட்டு போய்விட்டார்.. நான் என் நம்பெரில் இருந்து அழைக்காமல், ஜியோ எண்ணில் இருந்து அழைத்தேன்..
மறுபடி என் எண்ணில் இருந்து அழைத்து நான் தான் பேசுகிறேன் என்று சொன்னதும் தீபாவால் நம்பவே முடியவில்லை..

"ஹைய்யோ கவிதா நீயா.. வேற நும்பெர் வரவும் என் மாமா பிள்ளைகள் தான் உன் பேர் சொல்லி விளையாடுறாங்கன்னு நினைச்சேன்.. எப்படி இருக்க கவிதா.. நான் பேசலாம்னு நினைப்பேன்.. உங்க வீட்டுல எதாவது சொல்லுவாங்களோ, அப்படினு தான் பேசலை கவிதா.. கொணலைக்கு வரும் போது எல்லாம் அம்மா கிட்ட சொல்லுவேன்.. உன்னை பத்தி கேட்டுப்பேன் (அவங்க அம்மா எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை ) சண்டை வந்த பிறகும் கூட அவரை எங்கு பார்த்தாலும் விசாரித்து பேசுவேன்.. ஆனால் தீபாவை பற்றி பேசியதே இல்லை..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.. என் எண் எப்படி தெரியும் என்று கேட்டதற்கு தன் மகனுக்கு அடுத்த மாதம் புதுநன்மை விழா வைக்க போவதாகவும் அதற்கு அழைப்பு விடுக்க என்னுடைய எண்ணை என் தாய்மாமா விடம் வாங்கியதாக சொன்னாள்.. இந்த டாஸ்க் காக பேசியதாக சொல்லலை.. அதை சொல்லிடனும்.. இதற்காக மட்டும் பேசவில்லை.. பேசுவதற்கு இது ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும்.. நட்பே துணை..
Wow semma.. nanu first communion ku??
 
#9
8th la enkooda padicha friend niyabagam vandha..adhu coeducation...so en kooda friend list la irundha paiyanoda friend list la check panni adhula avaloda thambiya (orey school)pudichu avankita thirumba introduce aagi Ava number vangi.. first WhatsApp la introduce aagi apram call panni pesinen.. semma happy 2 perumey
 
Ramya Mani

Well-known member
#10
இன்னிக்கு டாஸ்க் சூப்பரா முடிஞ்சது. என் நண்பரிடம் கேட்டு எனது வகுப்பு தோழியினை தொடர்பு கொண்டு அளவளாவி ... சூப்பர் மார்னிங்... 9-12 ம் வகுப்பு வரை ஒரே வகுப்பிலும் காலேஜில் அவள் பி.எஸ்.சி. நான் டீச்சர் ட்ரெயின்ங்.. அதன் பின்னர் தொடர்பு விட்டு விட்டது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பின்னர் அவளின் தொடர்பு எண் சில பல முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்தது.
அன்னலட்சுமி இருக்காங்களா?
நான் தான் பேசறேன். நீங்கள்?
நான் ராம் பேசறேன் அன்னம்..
ராம்..நீயா... எப்படி இருக்க... என்று ஆரம்பித்து ஆர்ப்பரித்து அழுது ஆச்சரியமாகி... வாட்ஸ்அப் சேட் வரை வந்து விட்டது... அவளுக்கு மூன்று குழந்தைகள்.இரண்டு பெண்.. இரு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை.. அவனின் புகைப்படங்கள் பரிமாறி.. பெயருக்கு ஸ்பெல்லிங் சொல்லு ராம் என்று கேட்டு... இனிய காலையாக அமைந்தது. Screenshot_2019-08-19-20-37-24-889_com.whatsapp-600x1200.png
 
#11
'சவாலே சமாளி'

15 ஆம் நாள்

இன்று கிட்டதட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்து என் பள்ளி தோழியை தொடர்பு கொண்டு பேசினேன். ரொம்ப சந்தோஷமான மொமன்ட். ரொம்ப வருடம் கழித்து பேசுறுதுனால ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம், அப்புறம் நல்லா பேச ஆரம்பிச்சாச்சு. இனி கான்டாக்ட்ல இருக்கனும் சொல்லி வெகு நிறைவோடு பேசி முடித்தாயிற்று. 15 ஆம் நாள் டாஸ்க்கையும் நிறைவாக முடித்தாயிற்று.
 
dharani

Active member
#12
nethu task ennal ippo thaan mudikka mudinjthu.... phone no vangave night aagiduchu.... morning pesa mudiyala..... mathiyam thaan pesinen....school mate 6 to 10 onna padichiom....appuram avara vera area mari poitanga....athoda contact illa..... ippo tedi pidichi pesiyachu...... palaiya kadhai ellam pesi romba nalla irunthuchu...... thanks a lot sutha ma.... task completed aanathu late ya irunthalum am happy