அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 10

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் நீண்ட நாட்களாக நீங்கள் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணி இருப்பீர்கள்....ஆனால் ஏனோ அதை செய்ய முடியாமல் தள்ளி போய் கொண்டே இருந்திருக்கும்.....நாளை அதை செய்து விட்டு அவரின் உணர்வுகளையும், உங்கள் மனதில் எழும் உணர்சிகளையும் பதிவு செய்யுங்கள்........................
 

Vethagowri

Active member
Staff member
#2
சரியான நேரத்தில் சொல்லப்படாத நன்றியும், சரியான நேரத்தில் மன்னிக்கப்படாத மன்னிப்பும் வீண் என்பது என்னுடைய எண்ணம்..
அழைக்க படாமலும், அழிக்க படாமலும் சில எண்கள் நம்மில் பலர் அலைபேசியில் இருக்கும்.. அப்படி என்னிடம் இரண்டு எண்கள் உண்டு..

நன்றி சொல்லனும் அப்படின்னா, இரண்டு பேருக்கு சொல்லணும் சில வருடங்களுக்கு முன்பு என் முட்டாள் தனத்தால் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் பணக்கஷ்டம் மனக்கஷ்டம், வாழ்க்கையின் போக்கே திசை மாற இருந்தது , அதை சரி செய்து கொடுத்தது இருவர், ஒருவர் எனக்கு மூத்த அண்ணன், ஒருவன் என் உடன்பிறவா இளைய தம்பி.. கடந்த சில வருடங்களாக அவர்களிடம் நானும் பேசுவதை இல்லை அவர்களும் பேசுவதில்லை, நன்றி சொல்லி பேசுவோம் என்று காலையில் போன் செய்தேன்.. ஒருவர் எடுக்கவில்லை, மற்றொருவர் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக நான் செய்யவில்லை, அப்படி சொல்வதற்காகவாவது என்னிடம் பேசுறீ, என்று கூறி தழுதழுத்த குரலில் கூறினார்.. அண்ணா பேசிச்சுடுஅப்படின்னு ஒரு மன பாரம் நீங்கிடுச்சு.. விரைவில் இளையவனும் பேசுவான் என்ற நம்பிக்கையில்...
 
#3
எனக்கு யாருக்கு நன்றி சொல்றது தெரியல.. எதுவும் ஞாபகமும் வரல…. ரொம்ப யோசிச்சு பார்த்து, கடைசியில் நம்ம டாஸ்க்கை முடிக்க தான் நமக்குன்னு ஒரு ஜீவன் இருக்கேன்னு, அவர்கிட்டேயே சொன்னேன்.. நான் வளர்ந்த சூழ்நிலையில ஏன் இன்று வரைக்குமே எனக்கு பிடித்த விஷயங்களில் என் பெற்றோர்களின் குறுக்கீடு இருக்கும்… அவர்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்த நான், எனக்கு பிடித்த மாதிரி என்னை மாற்றிக்கிட்டதுக்கு காரணம் அவர்தான். நிறைய தடவை டைரக்டா சொல்லணும் அல்லது ஃபேஸ்புக்ல போஸ்ட் போடணும் நினைச்சிருக்கேன்.. பட் அந்த நிமிடத்தை கடந்துட்டா மறந்துடுவேன்.. அப்படி ஒரு தேசிய வியாதி..

என்னது தேங்க்ஸா??? ன்னு முழிக்கிறாரு… உன்கிட்ட இப்ப யாராவது கேட்டாங்களா? ன்னு… திட்டிட்டு, இனிமேல் இப்படி சொல்லிப்பாருன்னு மிரட்டிட்டு போறாரு. நாமளே போனா போகுதுன்னு திருந்தினாலும், அவங்க ஏத்துக்க மாட்டேங்கிறாங்களே:ROFLMAO::ROFLMAO:
 
#4
யாருக்கு நன்றி சொல்றதுன்னு யோசிச்சேன்.. சட்டுன்னு ஒரு ஃபேஸ் வந்துச்சு.‌ அமைதியாக உட்கார்ந்து கடந்து வந்த 5 வருஷம் யோசிச்சேன்.. நன்றி சொல்லனும் என்றால் அது கண்டிப்பா என் 80 கிலோ தங்கம் என் ஹஸ்பண்ட்க்கு தான் சொல்லணும்.. ஏன்னு அப்புறம் சொல்றேன்.. இப்ப நாங்க 2 பேர் பேசினது.. போன்லதான்

மீ - கால்பண்ணி ஹலோ சொன்னதும்.. நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்குனு பாடினேன்
அவர் - என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு...
மீ- அது அப்படி தான்.. தேங்யூ சோ மச் அம்மு.. எல்லாத்துக்கும்..
அவர் - என்ன நன்றி அது இதுன்னு லூசு மாதிரி பேசுற..
மீ - இன்னைக்கு யாருக்காவது நன்றி சொல்லனும்..‌ எனக்கு உன் நியாபகம்.‌ நம்ம லைஃப் யோசிச்சு பார்த்தேன்.. நீ எனக்கு எவ்ளோ செஞ்சிருக்க.. எவ்ளோ வலி வேதனை..உன் துணை இல்லாமல் நா அத தாண்டி வந்துருக்க முடியாது.. அந்த கோவத்துல உன்ன திட்டினாலும் நீ என்ன ஒரு வார்த்தை சொன்னதில்லை.. (இது சொல்லும்போது கண் கலங்கிடுச்சு எனக்கு)நினைச்சு பார்த்தா என் மனசு நிறைஞ்சு போச்சு‌‌.. தேங்க்ஸ் தேங்க்ஸ்.‌ ஏதோ பெரிய புண்ணியம் பண்ணிருக்கேன் நீ எனக்கு கிடைக்க..நீ எதாச்சும் கேளு. ஏதாவது உனக்கு கொடுத்தே ஆகணும்..
அவர் - உண்மையா சொல்றே??
மீ - அட ஆமாங்க.‌ மூடு மாறதுக்குள்ள சீக்கிரமா கேளு..
அவர் - கேட்டகப்புறம் இல்லனு ஏமாத்த கூடாது..
மீ - நோ நோ கண்டிப்பா மாட்டேன்..
அவர் - ஒரே ஒரு பீர் அடிச்சுக்கவா?? கல்யாணத்துக்கு முன்னாடி அடிச்சது.. ப்ளிஸ் ப்ளிஸ்
மீ - என்னது பீரா.. நோ நோ.. அறிவில்ல.. திமிரா.. அது இதுன்னு திட்டுறேன்.
அவர்- நார்மலாய்ட்டியா.. இப்படியே இரு.‌ சோக கீதம் லாம் வாசிக்காதே.. உனக்கு செட்டே ஆகலனு சொல்லி மீட்டிங் போறேன் பாய்னு கட் பண்ணிட்டாரு
மீ- அடப்பாவி.. ஹா‌ஹா😍😍
 
#6
Day 10
Yaruku thanks soldrathunu konjam confuse aitu.. Becoz apo apo most ah elaruku sorry oh thanks oh soliduvan.. Aapdi yosikum pothutha ennoda college mate en best frnd ku solanumnu thonuchu... En college la enaku gang nu oru frnds circle onnu irukum batch nu oru set of frnds brother nu oru gang ipadi neraiya gang la na oru member ah irupan... Ithula ooruku bus la sernthu poravanganu oru group iruku athula most ah en gang mates eh vanthuduvanga.. Oruthi matum tha Vera gang batch elame... Ana ava epaum enaku romba selfless love koduthuruka... Enaku ava mela athe alavu luv irunthalu na show panathu ila...avaluku epaum athu konjam mana kastam than... Analu Ena epaum care panna marnthathe ila... Ennoda bday ku epaum mid nit wish panuva.. Ana ava bday kuda nabagam vatchukala.. Mathavanga status pathutha ,na avaluku wish panuvan .. Avaloda intha pure luv ku thanks sonnan... Udane ava, na road la nadanthu poitu irukan, ennaiya vekka pada vekkathanu oru santhosham avaluku.. Ava avolo sirichu pesina... Namala care panikuravanagala matum epaum hurt panida kudathunu thonuchu ava ivolo santhosha padum pothu
 
#7
இன்னிக்கு காலைல இருந்து "நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை எனக்கு".. சாங் க நிறைய பேருக்கு டெடிகேட் பண்ணிட்டு இருக்கேன். காலைல டாஸ்க பார்த்ததும் என் டீச்சர் ட்ரெய்னிங் ப்ரின்ஸபல் மேம்‌ தான் ஞாபகத்துக்கு வந்தாங்க. எனக்கு ஆசிரியர் பணியை அர்பணித்து பணியாற்றுவது எப்படி னு கத்துக்கொடுத்தவங்க. எப்படியோ இருந்த என்னைய சமூகத்தின் முக்கிய பணியான ஆசிரியர் ஆக்கியதற்கு அவங்களுக்கு போன் பண்ணி பேசினேன். சத்தியமா அவ்ளோ மகிழ்ச்சி இருவருக்கும்... அப்றம் அம்மாக்கு கூப்டு, உன்னால தான் வாசிக்க கத்துக்கிட்டேன். நான் வாங்ற புத்தகப் பரிசு உனக்கு தான் அப்படி னு சொல்லி டேங்க்ஸ் சொன்னேன்.அதைக் கேட்கும்போது அம்மாவின் முகத்தில் வந்த பெருமிதம்.. சே.. சான்ஸே இல்ல..
அப்ரம் இன்னிக்கு ஸ்மார்ட் க்ளாஸ் எடுக்க 5 வது முறையாக வாய்ப்பு வழங்கிய ஷ்யாமளா மேம்க்கு சொன்னேன்..
சாயங்காலம் வீட்டுக்கு வந்தா சுதா மேம் அனுப்பிய பரிசு புத்தகங்கள் வந்திருந்தன. அவங்களுக்கு நன்றி..
நன்றி நவிலும் படலம் தினமும் எதற்கோ நடந்தாலும் பதிவிடுவது என்பது இதுவே முதல் முறை.. இதை வாசிக்கும் உங்களுக்கும் ரம்யா மணியின் சார்பில் நன்றி..
 

sudharavi

Administrator
Staff member
#8
நன்றி சொல்லனும்னு யோசிக்க ஆரம்பித்ததும் எத்தனை பேரின் முகங்கள் முன்னே வந்து போனது.......யாருக்கு சொல்வது யாரை விடுவதுன்னு தெரியல.......ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொருவர் நமக்கு உதவி செய்திருக்காங்க......அவர்களை பொறுத்தவரை அது சாதாரணம் ஆனா அந்த உதவியோட தன்மையை அறிந்த நமக்கு அது பெரியது...

முதலில் என் பள்ளி கால தோழிக்கு அழைத்து அவள் அப்போது செய்த உதவியை கூறி அதற்கு நன்றி சொன்னதும் லூசாப்பா நீ......இப்போ எதுக்கு இந்த பீல் அப்படின்னா.....இல்லம்மா அப்போ அது சாதாரணம் ஆனா நன்றியை நான் அப்போவே உனக்கு சொல்லி இருக்கணும்...காலம் கடந்தாலும் இந்த நன்றியை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம் என்றேன்.....

அடுத்து என் பக்கத்து வீட்டு ஆன்ட்டி......என்னை விட வயதில் பெரியவங்களா இருந்தாலும் ஒரு தோழி போல பழகினவங்க.....இப்பவும் அவங்க கிட்ட நல்ல ஒரு தொடர்பு இருந்தாலும், ஒரு சிறிய விஷயத்தில் எனக்கும் அவர்களுக்கும் மன தாங்கல் வந்தது. அப்போ அவங்க கிட்ட கோபித்து கொண்டேன். அதை அப்போதே தவறு என்று உணர்ந்தாலும் இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை. அவர்கள் செய்த உதவிக்கு நன்றியும் தெரிவிக்கவில்லை. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவங்க கிட்ட மன்னிப்பு, நன்றியும் தெரிவித்து விட்டேன். அவங்க குரலிலேயே தெரிந்த நெகிழ்ச்சியை உணர முடிந்தது.

இந்த முப்பது நாள் சவாலில் இத்தனை ஆர்வமாக கலந்து கொண்டு பதிவுகளை இடும் நட்புக்கள் அனைவருக்கும் நன்றி...
 
#9
நன்றி சொல்லனும்னா எங்க பேமிலி friend ... நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இருந்தே பழக்கம்.... இப்போ என்னோட வேலை பாக்குற அண்ணா வேற.... அவுங்க பேர் மனோகர்.... ஏன் அப்படினா நான் அந்த ஸ்கூல்க்கு வேலைக்கு போய் 8 வருஷம் ஆயிடுச்சு..... எப்போ யாருக்கு எது வேணும்னாலும் மனோகர் கிட்ட கேளுங்க அப்படினு தான் சொல்லுவாங்க .... அவுங்களுக்கு அது சம்பந்த பட்ட வேலையா இல்லனா கூட நம்ம கேட்டா சிரமம் பாக்காம செய்வாங்க.... நான் இன்னிக்கு தேங்க்ஸ் அண்ணா சொல்லுறேன் அவுங்க சிரிச்சிகிட்டேயே என்னோட வேலையை தானே நான் செயுறேன்....அதுக்கு போயிடு நீ தேங்க்ஸ் சொல்லுறேன்னு ..... இப்படியும் சில மனிதர்கள்....
 
#10
10th day task completed.....

நன்றி சொல்லணும்னு சொன்னதும் யாருக்கு சொல்லுறதுனே தெரியல முதல்ல... becoz நா அடிக்கடி சாரி , தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்பேன்....... இன்னைக்கி நா நன்றி சொல்ல தேர்ந்தெடுத்த ஆளு என் தங்கச்சி தான் ....... எப்படி சொல்லுறது அவளை பற்றி ம் ம்..... ரொம்ப caring என் மேல ....நா அக்காவா இல்ல அவளானு எனக்கு பலதடவை doubt வந்து இருக்கு ...... உண்மையா எனக்கு இன்னோரு அம்மா தான் என்னோட தங்கச்சி ...இது வரை அவளுக்கு நா இதுலாம் சொல்லி தேங்க்ஸ் சொன்னது இல்ல இன்னைக்கி தான் சொன்னேன் அவளும் ரொம்ப emotional ஆகிட்டா ....லவ் யூ டி பட்டு...... வீட்ல அம்மா அப்பா இல்ல ஊருக்கு போய்ட்டாங்க ஒரு டைம் நா படிச்சிட்டு இருந்தேன் எக்ஸாம் கு அவளே எழுந்து என்னக்கு காபி போட்டு குடுத்துட்டு டிபன் பண்ணி குடுத்தா அப்பவும் நா சாப்பிடாம படிக்கவும் அவளே எனக்கு ஊட்டி விட்டா..... எனக்கு என்ன வேணும்னு எனக்கே தெரியாது அவ கரெக்ட் அஹ் பண்ணுவா எனக்கு எல்லாமே ...... ஒரு அம்மா மாதிரி பாத்துப்பா என்னை... எப்போ எல்லாம் நா கஷ்ட படுறேனோ அப்போ எல்லாம் அவ சொல்லுற ஒரே dialogue abi உன்னால முடியலனா வேற யாராலும் முடியாது னு...... எனக்கு interview எக்ஸாம் அங்க என் கூட வந்து 3 hours வெளிய வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்தா .....அவ்ளோ பாசம் என் மேல..... இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் அவளை பற்றி...... aanu thank u for being a best sista in the world .....லவ் யூ அல்வய்ஸ் ...... அடிச்சிக்கிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் எனக்கு ஒன்னுனா முன்னாடி வர ஜீவன் ....thank யூ டா பட்டுக்குட்டி......:love:
 
Last edited:
#11
'சவாலே சமாளி '

பத்தாம் நாள்

'நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு' என்று நெருங்கிய தோழிக்கு அழைத்து நன்றி சொல்ல, அவ எதுக்குன்னு கேட்க நான் சும்மாதான். 'இன்னிக்கு நன்றி சொல்லும் நாள் அதான் உனக்கு பண்ணேன் போன் கால்' ன்னு சொல்ல, அவ புரியாமல் கொஞ்சம் நேரம் முழிக்க , சரி இனிக்கு 'தேங்க் யூ டே' ன்னு நினைச்சுட்டா போல. ஓகே என்று சொல்லி கொஞ்ச நேரம் பேசி வச்சாச்சு. எப்பவும் பிரண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்லிக்கொள்ள மாட்டோம். ஆனால் அவள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறதால இந்த டாஸ்க்கை பயன்படுத்தி நன்றி சொல்லும் வாய்ப்பாக அமைத்தாயிற்று. பத்தாம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.