அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

வெங்காய வடகம்/ தாளிப்பு வடகம்

sudharavi

Administrator
Staff member
#1
30264548_1668449709869815_2792311011116318720_o.jpg

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 1 கிலோ
வெள்ளை பூண்டு - 150 கிராம்
கடுகு - 25 கிராம்
ஜீரகம் - 25 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மஞ்சள் தூள் - 25 கிராம்
கருவேப்பிலை - 5 கொத்து
வெள்ளை உளுந்து - 3/4 ஆழாக்கு
கல் உப்பு - 25 கிராம்
விளக்கெண்ணைய்- சிறிதளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை பூண்டையும் தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இரெண்டையும் மிக்ஸ்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வைப்பர் மோடில் வைத்து சிதைத்துக் கொள்ளவும். வெள்ளை உளுந்தை ஊற வைத்து ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். வெயில் வரும் நேரம் கலந்து வைத்திருப்பவற்றை ஒரு பெரிய தாம்பாளத்தில் உதிர்த்து காய வைக்கவும்.. முதல்நாள் காய்ந்ததும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓரளவு காய்ந்ததும் விளக்கெண்ணையை தடவிக் கொண்டு உருட்டி வைக்கவும். விளக்கெண்ணெய் தடவுவதால் ஓராண்டு ஆனாலும் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஆனால் பட்டும் படாமல் மட்டுமே இருக்க வேண்டும். நிறைய தேவையில்லை. குழம்பு வைத்ததும் இந்த வடகத்தை தாளித்துப் போட்டால் மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும்.