வீழ்வேன் என்று நினைக்காதே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்து அவர்கள் "வீழ்வேன் என்று நினைக்காதே" கதையுடன் நம்மோடு இணைகிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
 
Last edited:
#2
வீழ்வேன் என்று நினைக்காதே - 1

சிறியது எட்டைதோட பெரியதோ பன்னிரெண்டை தொட்டு மணி எட்டென அந்த அழகு வட்ட கடிகாரம் காட்டிக்கொண்டிருந்தது....தனது மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டுருந்தவள் மணியை பார்க்க பின் அவள் கண்கள் வாசலை நோக்கியது கதவு வெற்றுமுகமாய் தன்னை காட்டிக்கொண்டிருந்தது.....
' என்னாச்சு அவ இன்னும் வரல எங்க போயிருப்பா ?... ' யோசித்தவள்....

" அனு அனு...." தன் தோழியை அழைத்தாள்..
" என்னடி என்னாச்சு ஏன் கூப்பிட்ட " சமையற்கட்டிலிருந்து வந்தாள் அனு....
" இல்லடி ஆரா போன் பண்ணாளா? லேட்டா வரேனு சொன்னாளா ? உன்கிட்ட..... "

" இல்லடி எனக்கு போன் பண்ணல...அவ போகும் போது எதையும் சொல்லையே.... " அனு கூற

" இப்படி ஒருநாள் லேட்டா வந்தது இல்லையேடி அவ எங்க போறேன்னு சொல்லிட்டும் போகல என்னாச்சு தெரியல ஆறுமணிக்கு வீட்டுல இருப்பா இப்ப இன்னும் வரல டி என்னான்னு தெரியல ...இப்ப என்ன பண்ண,..," சைலு கேட்டிட

" அவளுக்கு போன் பண்ணுடி எங்க இருக்கான்னு கேளு " என்று அனு கூற..." ம்ம் இரு தன் மொபையில் இருந்து ஆரா என்று சேவ் செய்திருந்த எண்ணிற்கு கால் செல்ல சுவிட்ச் ஆப் என்று அந்தபக்கம் வாய்ஸ் வர கொஞ்சம் அதிர்ந்தாள்...

" என்னடி சுவிட்ச் ஆப் வருது...."

" அப்ப அவ ஆபீஸ் பிரண்ட்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணுடி " என்று அனு கூற

சரியென்று அவள் முதலில் ஆபீஸ்க்கு போன் செய்ய செக்கியூரிட்டியே போனை எடுத்தார்...,

" ஹலோ நான் ஆரா பிரண்டு பேசுறேன் ஆர இருக்காளா ?.... "
" ஆரா மேடம் ஐந்தரை மணிக்கே கிளம்பிடாங்களே மா..இப்ப ஆபீஸ் முட போறோம்... " என்று அவர் கூற " சரி அண்ணா " போனை கட் செய்தாள்....

" என்னடி சொன்னாங்க... " அனு கேட்டிட ஆபீஸ் மூடியாச்சாம் அவ ஐந்தரை மணிக்கே கிளம்பிட்டாளாம்... " சைலு கூற

" இப்ப என்னபண்றது "

" அவ ஆபீஸ் பிரண்டுக்கு போன் பண்ணுவோம்.. " என்று அனு கூறி கொண்டிருக்கும் போதே போன் வந்தது ஆராவின் ஆபீஸ்தோழியிடமிருந்தே..

" நான் ஆரா பிரண்ட் ரம்யா பேசுறேன் ஆரா வந்துடாளா ? ..... " என்றவள் கேட்க." வரலைமா அவ எங்க போனான்னு தெரியுமா உங்களுக்கு..... " சைலு கேட்டாள்.

" எங்க பாஸ் அவள தனியா கூட்டிட்டு போய் ஓரு கஷ்டமருக்கு மாடல் காட்டனுமா இரண்டுமணிநேரத்துக்குள்ள வீட்டுக்குப் போயிறலாம் என்கூட வா கூட்டிட்டு போனாரு...என்கிட்ட அவ சொல்லிட்டு தான் போனா அதான் அவ வந்துடாளான்னு விசாரிக்க போன் பண்ணேம்மா..... " ரம்யா கூற " உங்க பாஸ் நம்பர் அட்ரஸ் கிடைக்குமா ? " என்று சைலு கேட்டிட " இருங்க தரேன் " என்று ரம்யா கூறி பின் அனைத்தையும் கொடுத்தாள்....அவ வந்ததும் நாங்க சொல்லுறோமா " என்றதும் போனை வைத்தாள் ரம்யா.....

" என்னா சொன்னாங்க அவங்க...."
" அவங்க பாஸ் தான் கடைசி ஓரு கஷ்டமருக்கு,மாடல் காட்ட கூடிட்டு போயிருக்காரு...ஆன இரண்டு மணிநேரத்துக்குள்ள வீட்டுக்கு போயிறலாம் சொல்லிருக்காரு ஆன இன்னும் ஏன் வரல.... " என்று சைலு யோசித்தாள். " ட்ராபிக்கா இருக்கும்,டி வந்துருவா நீ ரிலாக்ஸ்
இரு நான்சாப்பாடு செய்றேன் மீண்டும் நுழைந்தாள்...." அனு
" ஏனோ சைலுவுக்கு சரியென்று படவில்லை....தன் போனை எடுத்தவள் மீண்டும் ஆராவிற்கு அழைக்க மீண்டும் சுவிட்ச் ஆப் வந்தது...பின் வருவா என்று எண்ணி அமைதியாக இருந்தவளின் மனம் பதைத்தது இன்னும் அவளின் வருகை இல்லாததால்....இந்த முறை ஆராவின் பாஸ்க்கு அழைத்தாள் சைலு....

" ஹலோ சரண் ஹிர்...."

" சார் நான் சைலஜா ஆரா பிரண்ட் ஆரா இன்னும் வரல சார் அவ எங்க போனானு தெரியுமா ? "

" அவ அப்போவே கிளம்பிடாமா...ஏழரை மணிக்கெல்லாம் அனுப்பிடேன்மா...இந்நேரம் வந்துருக்கனுமே,.அவ இங்க இல்லமா அவளுக்கு போன் பண்ணிங்களா ?... " என்றவர் கேட்க

" பண்ணோம் சார் சுவிட்ச் ஆப் வருது சார்." என்றாள்." போலீஸ் கம்பளைண்ட் வேணா கொடுங்களேன் மா எங்க போயிருப்பானு கண்டுபிடிப்பாங்க... " என்றார்

" சரி சார் டாங்கியு..." என்று போனை வைத்தவள் யோசித்தாள்...." தெரிஞ்சதா அவள பத்தி எதாவது டி... " அனு கேட்டு வர " இல்லமா அவ அப்போவே கிளம்பிட்டாலாம்
அவளோட பாஸ் சொன்னார்.., "

" பேசாம பானு கிட்ட விசயத்தா சொல்லு...அவ சொல்லுறத கேட்போம்,.."

ம்ம்....மீண்டும் போனை எடுத்து பானுவிற்கு கால் செய்தாள்..." ஹாய் சைலு என்ன இந்த நேரத்துலபோன் பண்ணிருக்க,..."

" ஒரு முக்கியமான விசயம் நீ எங்க இருக்க " என்று கேட்டிட " நான் ஸ்டேசன் ல இருக்கேன் சொல்லு என்னவிசயம்..."
" ஆராவ காணோம் இன்னும் வரல " என்று,அனைத்தையும் அவளிடம் கூறினாள்.... " ஒ.கே இரு நான் கான்ஸ்டபில்ல விட்டு பார்க்க சொல்றேன் " என்று கூறி இருவரை வண்டி நம்பரையும் கொடுத்து அனுப்பிவைத்தாள் பானு.....

" நேரமாகி போனது.... இருளும் மறைந்து வெளிச்சம் பரவி காலையும் வந்தது....,இருவரும் தூங்காமல் ஓர் கட்டத்தில் அழுது மடிந்து தூக்கினர்.பின் சைலஜாவிற்கு போன் வந்தது..." ஹலோ" சொல்லு பானு

" நீ நேரா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு வா " என்று கூற " "என்னாச்சு டி அவளுக்கு.... "

" நீ வா சொல்லுறேன் " போனை வைத்தாள்....
இருவரும் ஹாஸ்பிட்டல் சென்றனர்,...பானு சொன்ன இடத்திற்கு வர அங்கே பானு நின்றிருந்தாள்...

" என்னாச்சு டி ஆராவுக்கு " கேட்டாள் சைலு.

" ஆக்சிடென்ட் டி எப்ப நடந்து தெரியல ஆன உயிர் போயிருச்சுடி.....இப்ப போஸ்மாட்டம் பண்ணிட்டு இருக்காங்க " என்று கூற

" ஆரா " என்று அனு சைலஜா கதறி அழுதனர்....பானுவும் சில துளி கண்ணீர் சிந்தினாள்....,

பின் ஆராவின் உடலை வாங்கினர்....
அவளின் அனைத்து சடங்குகளையும் முடித்தனர் அனு,சைலஜாவும்....

அன்றே இரவு எட்டு மணியளவில் பானு ஸ்வேதா இருவரும் சைலஜா வீட்டிற்கு வந்தனர்,....

இருவரும் அமைதியாக இருக்க
" போஸ்மாட்டத்துல.....
வெறும் ஆக்சிடென்ட் மட்டும் இல்ல டி....." ஸ்வேதா கூற

" பின்ன வேற என்ன சொல்லுடி.... " என்று சைலஜா கேட்டிட

" ரேப் டி " என்று பானுவின் கண்கள் கோபம் கலந்த வலிகள் நிறைந்து கூறினாள்...,,

" வாட் !....." இருவரும் அதிர்ந்தனர்..
 

Attachments

#5
வீழ்வேன் என்று நினைக்காதே -2

ஆரா இறந்துவிட்டாள் என்பதை கேட்டதே அதிர்ச்சியாக இருந்த நிலையில் அவள் ஆக்ஸ்டென்டால் மட்டும் இறக்க வில்லை அவளை யாரோ கற்பழித்திருக்கிறார்கள் என்று ஸ்வேதா போஸ்மாட்டம் ரிப்போர்டை காட்டி சொல்ல....அனு , சைலஜா அதிர்ந்தனர்.....

" பானு நாங்க கம்பெளைண்ட் பண்ணா யாருன்னு கண்டுபிடிச்சு சரியான தண்டனை வாங்கி தருவீயா டி என்று " அனு கூற சைலஜா சிரித்தாள்...

" கம்பளைண்ட் கொடுத்து தண்டனை கிடைத்தா திருந்தீர்வாங்களா இல்ல சரியான தண்டனை தான் கிடைக்குமா சொல்லுடி... " சைலு கேட்க..

" சைலு கேட்கிறது உண்மை இங்க எத்தனைபெண்கள் கற்பழிக்க படுறாங்க ஆன,அந்த குற்றவாளி ஜெயிலுக்கு போயிட்டு ஜாமின்ல வெளிய வராங்களே தவிர. ஆரா மாதிரி உள்ள பெண்களும் ஏன் இப்ப பிஞ்சு குழந்தைகளும் நியாயம் கிடைக்கிறதே இல்லை.. ஜெயில் தண்டனை எல்லாம் வேஸ்ட் தகுந்த தண்டனை கிடைக்கனும் அவங்களுக்கு..... " பானு கூற

" அப்ப நம்மால் என்ன பண்ணமுடியும் " அனு கேட்டிட
" இப்படி கேட்டு கேட்டுதான் ஒன்னுபண்ண முடியாம வெறும் நீயூஸ் பாஸ் பண்ணிட்டு அடுத்து வர பிரச்சினை பார்க்குறோம்....இதுனால அந்த நாய்ங்க சந்தோசமா இருக்கான்னுங்க அந்தபெண்ணுக்கு நியாயம் கிடைக்கிறதில்லை உயிர் போனது தான் மிச்சம்.." சைலஜா கூற


" உயிரபாதுகாக்கிற நாங்களே இந்த மாதிரி கேஸ் வர பொண்ணுங்களோ குழந்தைகளோட அந்த உறுப்பு உடல் எவ்வளவு பாதிக்க பட்டிருக்கும் அத பார்க்கும் போது எவ்வளவு மனசு கல்லாக்கிட்டு போஸ்மாட்டம் பன்றோம் அப்ப இதே மாதிரி அந்த நாய்களையும் பண்ணணும் கூறு போடனும் தோணும்....ஆன இயலாமை இப்படி பேசி தீத்துகிறோம்,.... " ஸ்வேதா கூற

" இனி இயலாமைக்கு பேச்சு இல்ல செயல் தான் இறங்கனும்...." சைலஜா கூற....

" பானு இந்த கேஸ் ஆக்சிடென்ட் சொல்லி எதையாவது பண்ணி இந்த கேஸ் கிளோஸ் பண்ணிரு..."

" கேஸ் கிளோஸ் பண்ணிட்டா எப்படி நாம கண்டுபிடிக்கிறது .... " அனுகூற

கேஸ் கிளோஸ் பண்ணிட்டா அவன் தைரியமா வெளிய சுத்துவான்,...கிளோஸ் பண்ணாம துருவ ஆரம்பிச்சோம்ன்னா அவன் காசு கொடுத்துட்டு ஜெயிலுக்கு போகாம ஜாமின் வாங்கிட்டு சந்தோசமா சுத்துவான்.....இரண்டுல எது நடந்தாலுமே அவனுக்கு தான் லாபம்...ஆன ஆராவ இழந்த நமக்கு வலிமட்டும் தான் எந்த தப்பும் பண்ணாத ஆரா சாகனும் தப்பு பண்ணவங்க சுதந்திரமா சந்தோசமா சுத்தனுமா...நேவர் நான் விடமாட்டேன் " கண்களில் வழி நிறைந்த கோபத்தோடே கூறினாள்.

" அவனுங்க இந்த பூமில வாழத்தகுதியே இல்லாதவனுங்க அவங்க இந்த பூமிலே இருக்க கூடாது " பானு கூற

" அப்ப என்ன பண்போறோம் பானு " "ஸ்வேதா கேட்டிட.

" இந்த ஆரா நிலமைக்கு யாரு காரணமோ அவங்க கண்டிப்பிடிச்சு உயிரோடவே வாழவிடகூடாது அவங்களை சித்தரவதை செய்து கொல்லனும்.நான் கொல்லுவேன் " என்று சபதமாய் ஆரா படத்திற்கு முன் நின்று கூறினாள்.

மூவரும் அதிர்ந்தனர்....
" என்னடி இப்படி கொலை பண்ண போறேன் சொல்லுற உன்னால தனியா பண்ண முடியுமா? " அனு கேட்க
" ஏன் முடியாது முடியும் அவனுங்கள கொன்னுட்டு ஜெயிலுக்கு போககூட தயார்.... " சைலஜா கூறினாள்.

" ஆரா எனக்கும் தோழிதான் சைலு. நானும் உனக்கு துணையா இருக்கேன்...." பானு கூற, இல்ல நாங்களும் துணையாக இருப்போம் அனு,ஸ்வேதா கூறினர்... ஆரா படத்திற்கு முன் நின்றவர்கள் " சத்தியமா உன் ஆன்மா சாந்தியடைய நாங்க நால்வரும் சேர்ந்து " உன்னை இந்த நிலமைக்கு கொண்டுவந்தவங்கள உயிரோட விட்டு வைக்க மாட்டோம்...இது சத்தியம் என்றனர் " .ஆரா படத்தில் வைத்த பூ அவர்களின் கையில் விழுந்து தானும் பங்கேற்ப்பதாக உறுதிகொடுத்தாள் ஆரா....

சைலஜா , அனு ,ஆரா, பானு ,ஸ்வேதா ஐவரும் பஞ்சபாண்டவர்கள் போலத்தான் இவர்களின் நட்பு பள்ளி காலங்களில் இருந்தே தொடர்ந்து கொண்டிருந்தது....பள்ளி படிக்கும் போதே NCC படையில் இருந்தனர்..

பெண்கள் கற்கும் இசை பாட்டு நாட்டியம் அதில் கவனம் செலுத்தாமல் ஆண்கள் கற்கும் சண்டை பயிற்சியை மட்டுமே கற்று தேர்ச்சி பெற்றவர்கள்,...பள்ளி முடிந்த இவர்கள் கல்லூரி படிப்பை தொடர யூனிவர்ஸ்ட்டியில் சேர்ந்தனர்...அதில் தனக்கு பிடித்த பாடதை தேர்வு செய்துபடித்தனர்.....சைலஜா ஆர்கிடெக் படித்தாள்,....அனு கணித பாடதை எடுத்து ஆசிரியரானாள்...ஆரா fashion desining படித்தாள்.....பானுவோ பி.ஏ இங்கிலிஷ் படித்து போலீஸ் தேர்வு சேர்ந்து இன்ஷ்பெக்டராக இருக்கிறாள்...ஸ்வேதா M.B.B.S படித்து டாக்டராக இருக்கிறாள் அரசு மருத்துவமணையில்.....

அனு,சைலஜா, ஆரா மூவரும் தாய்தந்தை இல்லை டரஸ்ட் மூலமாக படித்து வேலை செய்துக்கொண்டே சொந்தமாக ஓரு பிளாட் வாங்கி மூவரும் தங்கியிருந்தனர்.பானுவின் தந்தை டி.ஐ.ஜி...ஸ்வேதாவின் தந்தையும் டாக்டர் தான்....ஐவரும் நெருங்கிய தோழி யார் யாருக்காவும் விட்டுக்கொக்காதவர்கள்.......

மறுநாள் காலை....

அனு பால் பாக்கெட்டையும் நீயூஸ் பேப்பரையும் எடுத்து உள்ளேவந்தாள்....

பால் வாங்கி டேபிளில் வைத்தவள்..,பேப்பரை பிரித்துபார்க்க அதில் குடிபோதையால் ஆக்சிடென்டில்
இறந்த இளம்வயது பெண் என்று ஹேட்லைன்னில் போட்டு ஆராவின் புகைப்படம் போட்டிருந்தனர்.....அதை கண்ட அனு
" சைலு " என்று கத்தினாள்.

" என்னாடி காலைல இந்த கத்துகத்துற " என்று கேட்டுக்கொண்ட வந்தவளிடம் சைலு பேப்பரை காட்ட அதை வாசித்தவளுக்கு கோபம் கொண்டுத்து கிளித்து தூக்கி எறிந்தாள் அந்த பேப்பரை....