Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript வீணையடி நீ எனக்கு - சஷி முரளி | SudhaRaviNovels

வீணையடி நீ எனக்கு - சஷி முரளி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
வீணையடி நீ எனக்கு – சஷி முரளி

பயம் என்ற ஒன்றை அறியாதவன். தனக்கான நியாயங்களை, தர்மங்களை தானே வகுத்துக் கொண்டவன். நான் இப்படிப்பட்டவன் தான் என்று துணிந்து நிற்பவன். தனது செயல்கள் தவறாக இருந்தாலும் அதையும் வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன். அதற்காக என் வழியை மாற்றிக் கொள்ள முடியாது. இது ஷ்யாமின் வழி என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பவன். அவனது செயல்பாடுகள் அவனை ராட்சசனாக காட்டுகிறது. வட்டித் தொழிலில் மிகவும் கறாராக செய்து கொண்டிருக்கிறான்.

வாங்கிய கடனை சரியாக சொன்ன தேதியில் அடைத்து விட்டால் அமைதியாக செல்லுவான். அதே ஒருநாள் தாண்டினாலும் ஈவு, இரக்கம் என்பதை மறந்து தன்னை ஒரு மிருகம் என்பதை நிரூபிப்பான். கதையின் ஆரம்பத்தில் இவனது செயல்கள் நம்மை வெறுக்க வைக்கிறது.

மிக அன்பானதொரு பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவள் மகாவேங்கடலக்ஷ்மி. அன்னையின் அன்பிலும், கண்டிப்பிலும் வளர்ந்தவள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஷ்யாமிடம் மோதல் ஏற்பட்டு அவனுடைய வஞ்சத்திற்கு ஆளாகிறாள்.

மகாவின் அண்ணன் கார்த்திக் தங்கள் பட நிறுவனத்திற்கு வாங்கிய கடனை திருப்ப முடியாமல் போக, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஷ்யாமால் மகா கடத்தப்படுகிறாள்.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் நமது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. தன்னைப் பழித்தவளை பழி வாங்கும் எண்ணத்துடன் கஸ்டடி எடுத்தவன் அவளது தைரியத்தைக் கண்டு மலைக்கிறான். எந்த ஒரு இடத்திலும் மகா உறுதியை இழக்காமல், அண்ணனிற்கும் தைரியத்தைக் கொடுத்து அவளது செயலால் நம் மனதில் அழுத்தமாக பதிந்து போகிறாள்.

இதன் நடுவே இருவருக்கும் இடையே மலரும் அந்த தோழமை கவிதையாக கடந்து செல்லுகிறது. அதுநாள் வரை எதையோ தேடி பல்வேறு இடங்களில் அலைந்தவனின் மனது எதிர்பாராமல் ஓரிடத்தில் கடிவாளமிட்டு நிலைத்து நிற்கிறது.

தன்னை, தனது கடந்த காலத்தை ஒப்புக் கொடுத்தவனை அவள் ஏற்றுக் கொள்வாளா?

ஒரு பெண்ணை கடத்தியதால் அவளது குடும்பத்தில் ஏற்ப்படும் வலியை உணராதவன் அப்பெண்ணின் மீது காதல் கொண்டால் அவளால் அதை ஏற்க முடியுமா?

சிறையெடுத்தவனை சிறைப்பிடித்த மகா அவனை ஏற்றுக் கொள்வாளா?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் இரெண்டாம் பாகத்தில்....

சஷி! அவர்களிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை கொடுத்த விதம் அருமை. அவரவர் தரப்பில் இருந்து எண்ணங்களை சொல்லி இருக்கீங்க...அதிலும் அவனது ஹிப்போக்ரெட் என்கிற அழைப்பு...தவறெல்லாம் தன் மீது வைத்துக் கொண்டு இவன் காதலை உணர்ந்ததும் அவளும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து அது முடியாத தவிப்பில் அவனது உணர்வுகளை சொன்ன விதம் அழகு...

ஒரு சின்ன சாப்ட் கார்னர் அவன் மேல் வந்துவிட்டது தான் உண்மை. அதே சமயம் அவளது நிலைப்பாடு தான் இயற்கை. தன் மீதான நம்பிக்கையை அவளுக்கு கொடுத்து தனது காதலில் எப்படி வெற்றியடையப் போகிறான் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்....முதல் பாகத்தை அருமையாக முடித்ததற்கு வாழ்த்துக்கள் சஷி!

இக்கதை சஷி முரளி அவர்களின் தளத்தில் உள்ளது....
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Arumaiyana vimarsanam.startingil terror aga irunthavan last lover boy ahittan.eppadi mahavai kathalikka vaipana nu padikka next partkku eager aga wait panren
Thanks Chitra....aamam neenga sonna maadhiri Sashi eppadi kondu poka poraangannu aarvama irukku...........
 
  • Like
Reactions: Chitra ganesan

rajeswari sivakumar

Administrator
Staff member
Mar 26, 2018
219
25
43
athu enna kka anti hero kku 2 paras la pugazhinthu thalli irukkeenga. aana maga ku ore oru para. ithellam nallave illa. thappai oththukitta mattum thandanaila irunthu es aagamudiyuma?
 
  • Like
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
athu enna kka anti hero kku 2 paras la pugazhinthu thalli irukkeenga. aana maga ku ore oru para. ithellam nallave illa. thappai oththukitta mattum thandanaila irunthu es aagamudiyuma?
ஹாஹா என்னதான் அவன் வில்லன் மாதிரி இருந்தாலும் ஹீரோ தான் ஸ்பெஷல் அதனால அவனுக்கு தான் அதிக இடம் கொடுப்போம்..தேங்க்ஸ் ராஜி..
 
  • Like
Reactions: rajeswari sivakumar