வாராயோ வெண்ணிலாவே - கதை திரி

#21
வாராயோ வெண்ணிலாவே...!! 18
அத்தியாயம் 18


தனக்கு வந்த லெட்டர் ஏ ரிஷி விசில் அடித்து கொண்டே படிக்க அது என்ன இருக்கு என அஞ்சலி கேட்க..

ரிஷி, "வெண்ணிலா கிட்ட இருந்து வந்த லெட்டர் தான் இது. அவளும் நம்ம காலேஜ் தானாம் நம்ம காலேஜ் நடக்கிற டான்ஸ் போட்டி அன்னிக்கு அவளே என் முன்னால் வரேன் சொல்லி எழுதி இருக்கிறாள். ஐம் சோ ஹேப்பி.. இங்க பார் கடைசியில் ஐ லவ் யூ எழுதி இருக்கிறாள். என் கனவு இன்னும் ரெண்டு வாரத்தில் நிறைவேற போகுது."

அஞ்சலி, "ஓ ரொம்ப சந்தோசம் ரிஷி. சீக்கிரம் உன் வெண்ணிலவே நீ பார்க்கணும்."

தர்ஷினி, "வெண்ணிலவ.. அது கண்டிப்பா உன் வெண்ணிலா கிட்ட இருந்து வந்த லெட்டர் தான் தெரியுமா?"

ரிஷி, "கண்டிப்பா அவள் தான். இவ்வளவு நாள் அவளை பற்றி எந்த செய்தியும் இல்ல இப்போ வந்து இருக்கிறது அதுவும் அவளே நேரில் வருகிறேன் சொல்கிறாள்."

அஞ்சலி, "ரிஷி ரொம்ப நேரம் ரோப் ல தொங்கி ஆடியதால் வாந்தி வர மாதிரி போய் எடுத்து விட்டு வரேன்."

ரெஸ்ட் ரூம் சென்றவள் கதவை மூடி விட்டு கண்ணாடி முன்னாடி நின்று கண்ணில் நீர் வாற்றும் அளவுக்கு அழுது தீர்த்தாள்.

அஞ்சலி, "இதுவரை நான் ஒரு அனாதை என நினைத்து ஃபீல் பண்ணது இல்லடா. அதே போல எது மேலும் ஆசைப்பட்டதும் இல்ல. நான் இங்கே வந்த பிறகு தான்டா நண்பர்கள் பல பேர் கிடைத்தார்கள். அதில் ராம், அர்ஜுன் கூட பிறந்த சகோதரர்கள் போலவே மாறிவிட்டார்கள். நீயோ என் மனதின் நாயகன் இடத்தில் அமர்ந்து விட்டாய். முதலில் நண்பனாக நீ அறிமுகம் ஆக உன் தாத்தா பாட்டியை பார்த்த பிறகு உன்னையே கல்யாணம் செய்து கொண்டு இந்த குடும்பத்தில் ஒருத்தி ஆகணும் நினைத்தேன். போக போக அந்த எண்ணமே உன் மேல் காதல் வேற காரணம் ஆகிவிட்டது. உன்னை தவிர உன்னை நான் காதலிப்பது எல்லாருக்கும் தெரிந்து இருக்கு. ஏன் உனக்கு தெரியல? சாரி சாரி இது என் தப்பு தான். ஏற்கனவே வெண்ணிலா என்கிற ஒருத்தி உன் வாழ்க்கையில் இருக்கே அதை புரியாது நான் தான் ஆசை வளர்ந்து கொண்டேன். எல்லாம் என் தப்பு எல்லாம் என் தப்பு.."

கன்னத்தில் மாற்றி மாற்றி அடித்து கொண்டவள் ஒரு அளவுக்கு பிறகு எதுவும் நடக்காதா மாதிரி முகமெல்லாம் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.

அவளின் முகத்தை பார்த்தவர்கள் வாந்தியால் தான் அவள் கண்கள் கலங்கி இருக்கு நினைக்க ரிஷி மற்றும் தர்ஷினி மட்டும் அதற்கான உண்மையான காரணத்தை அறிந்து இருந்தார்கள்.

ரிஷி மனதில், ' சாரி எலி.. இன்னும் ரெண்டு வாரம் மட்டும் காத்திரு என் வெண்ணிலா வந்த பிறகு எல்லாம் சொல்றேன். என் காதலையும் சேர்த்து."

தர்ஷினி மட்டும் அஞ்சலியை தனியே அழைத்து சென்று..

தர்ஷினி, "அஞ்சு என்னடி அழுத்திய உண்மையை சொல்லு. எல்லாம் அந்த லெட்டர் தானே காரணம்."

அஞ்சலி, "எல்லாம் என்னோட தப்பு தர்ஷ்.. அவன் மனதில் என்ன இருக்கு என தெரியாமல் காதலித்தது என் தப்பு. அவனுக்கு அந்த வெண்ணிலா மேல் தான் காதல். அவனுக்கு நான் ப்ரெண்ட் தான்.. வெறும் ப்ரெண்ட் தான்."

தர்ஷினி, "ஏய் லூசு அப்படியெல்லாம் இல்லடி.. அவன் உன்னை தான் காதலிக்கிறான். எப்போதும் உன்னை மட்டும் தான் காதலிப்பான். அந்த லெட்டர் கூட உண்மையாக இருக்காது எப்போதோ சுனாமியில் இறந்தவள் இப்போ எப்படி வந்து இருப்பாள்."

அஞ்சலி, "இல்ல இல்ல.. எனக்கு தெரியும் அந்த லெட்டர் அனுப்பியது அந்த வெண்ணிலா தான். ஒருவேளை அது பொய்யாக இருந்தாலும் அதில் இருந்த ஐ லவ் யூ வார்த்தைகளை பார்த்து அவன் ஏன் சந்தோசப்படனும்? அப்போ அவன் அவளை காதலிக்கிறான் என்று தானே அர்த்தம்."

தர்ஷினி, "அப்படி இல்லடி.. ஒரு தடவை நான் சொல்றதை கேளு.."

அஞ்சலி, "நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இந்த போட்டிக்கு பிறகு நானே கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு விலகி போய் விடுவேன்."

சொன்ன அஞ்சலி அந்த அறையை விட்டு போனாள்.

என்ன பண்றது புரியாத தர்ஷினி உடனே தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து..

தர்ஷினி, "வெண்ணிலா என்ற பெயரில் யாரோ ரிஷிக்கு லெட்டர் எழுதி அனுப்பி இருக்காங்க எப்போ என்ன பண்றது?"

கார்த்தி, "செம்ம.. அப்போ என் எதிரியே பழிவாங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கு. நீ கண்டுக்காமல் கொஞ்ச நாள் சும்மா இரு.."

தர்ஷினி, "டேய் அண்ணா, இது பாவம் நம்ம உண்மை சொல்லி விடலாம் டா.."

கார்த்தி, "ரெண்டு வாரம் வெயிட் பண்ணு குட்டி. அப்பறம் சொல்லலாம் உனக்கு தெரிந்த உண்மை அந்த ரிஷி முண்டதுக்கும் தெரிந்தும் அவன் சும்மா இல்ல அதே போல நீயும் சும்மா இரு."

தர்ஷினி, "இல்ல அண்ணா, இங்க அஞ்சு வேற ரொம்ப மனசு உடைந்து போய் இருக்கிறாள். அதன்.."

கார்த்தி, "வேற வழி இல்ல குட்டி. இப்போதைக்கு அவளுக்கு நண்பர்கள் நீங்க ஆறுதலாக இருங்க.. அப்பறம் அவள் கண்ணில் இனி கண்ணீர் வராத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன். சாரி சாரி.. என் எதிரி அவளின் ரிஷியே பார்த்துப்பான்."

தர்ஷினி, "காதல் ரொம்ப பொல்லாதது இல்ல.."

கார்த்தி, "ஆமாம்.. ஆமாம்.. அதனால் தானே உன்கிட்ட மாட்டி என் மச்சான் ராம் முழிக்கிறான்."

தர்ஷினி, "முழிக்கட்டும்.. இந்த தர்ஷினியே சமாளிப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரிய வேண்டாம். இன்னும் என்னை பற்றி தெரிந்துகொண்டு கற்றுக்கொண்டு எனக்கு ஏற்றவானாக அவன் மாற வேண்டாமா? அதற்கு சில காலம் எடுக்க தானே செய்யும்."

கார்த்தி, "பார்த்து ஆயுசு முழுக்க எடுக்க போகுது."

தர்ஷினி, "அப்படி ஒரு நிலை போற மாதிரி தெரிந்தால் அவனுக்கு ஏற்றமாதிரி நான் மாறிப்பேன் சிம்பிள்...😝😝"

தர்ஷினியும் கார்த்தியும் போன்ல பேசிக்கொண்டிருந்ததை தனி அறைக்கு வந்து ராம் கேட்டு விட்டு தலையை சொறிந்தான்.

ராம், "இங்க என்னடா நடக்குது மர்மமா இருக்குது. யார் அந்த வெண்ணிலா? அவளை பற்றிய உண்மை தர்ஷினிக்கு எப்படி தெரியும்? யார் அந்த லெட்டரை உண்மையா அனுப்பினாங்க? இவ்வளவு நானும் காதலிக்கும் விஷயம் அவளின் அண்ணன் கிட்ட எப்ப சொன்னா? கடவுளே இப்போ தான் என் வாழ்க்கையில் உண்மையான காதலை காட்டினாய் என சந்தோசம் கொண்டா இப்படி பல டுவிஸ்ட் வைத்தால் என்ன பண்றது?"

*****************

அடுத்த இரண்டு வாரத்திற்கு காலேஜ் எல்லாம் லீவு போட்டுவிட்டு முழுசா டான்ஸ் பிராக்டிஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு நம்ம ஹீரோஸ் மற்றும் ஹீரோயின்ஸ் வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த இரண்டு வாரமும் ரிஷி வேட்டியை அவர்கள் தங்குவது என முடிவு எடுத்தார்கள்.

ராம் மற்றும் அர்ஜுன் ஏற்கனவே அவங்க வீட்டில் இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று சொன்னதால் எந்த பிரச்சனையும் எழவில்லை ஒரே நாளில் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி கொண்டு ரிஷியின் வீட்டில் வைத்து விட்டார்கள்.

ரிஷியின் அறையில் ராம் மற்றும் அர்ஜுன் தாங்கி கொண்டார்கள்.

அஞ்சலி அவளின் ரகசிய காடியன் கிட்ட போன் செய்து சம்மதம் வாங்க அவரும் சரி என்றார்.

தர்ஷினி வீட்டில் கொஞ்சம் யோசித்தாலும் பின் கார்த்தி பேசி அவளுக்கு பர்மிஷன் வாங்கி கொடுத்து விட்டான்.

பிங்கி வீட்டில் எந்த கேள்வியும் எழவில்லை அவள் தங்குமிடத்தில் அர்ஜுன் கூட தாங்கும் விஷயம் தெரிந்ததால் டபுள் ஓகே என சொல்லிவிட்டார்கள்.

அதன்படி, அஞ்சலி தர்ஷினி பிங்கி சங்கீதா நாள்வரும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட ஒரே அறையில் தங்கிக் கொண்டார்கள்.

என்ன நடந்தாலும் சரி தனக்கு தனி அறை வேண்டும் என்று விக்ரம் சொல்லிவிட்டான். அவனின் முகத்தின் ரகசியம் வெளிப்பட அவன் விரும்பவில்லை இப்போதைக்கு.

அவர்கள் திட்டமிட்டபடி எல்லாம் நன்றாக போனது.

விக்ரமிடம் கற்றுக்கொண்ட சில டான்ஸ் டிப்ஸ் மூலம் எல்லோரும் நன்றாக ஆட கற்றுக் கொண்டார்கள்.

ரிஷி மற்றும் அஞ்சலி ரோப் நடனத்தை எதிர்பார்த்ததை விட நன்றாக செய்தார்கள். சில நாட்களுக்கு வாந்தி மயக்கம் என சில உடல் தொல்லைகள் வந்தாலும் போகப் போக பழகி விட்டார்கள்.

ராம் மற்றும் தர்ஷினி, அந்தக்கால படங்களில் நடிகர் நடிகைகள் ஆடும் ஆட்டத்தை கூர்ந்து கவனித்து அதன் போல முகத்தில் எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் அதற்கு ஏற்றது போல ஆடினார்கள். முதலில் பழைய பாட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக பழமை கலந்த புது பாடல் (ரீமிக்ஸ் பாடல்கள்), பின் மொத்தமாக புதுப்பாடல் என வகை வகையாக பிரித்து விக்ரம் மற்றும் சங்கீதாவின் அறிவுரையுடன் ஆடினார்கள்.

அர்ஜுன் மற்றும் பிங்கி, விக்ரம் நினைத்ததைவிட அர்ஜுன் தன் உடலை நன்றாக தேற்றி பிங்கியே தன் தோளில் உட்கார வைத்து ஒரு நிமிடம் வரை ஆடும் அளவுக்கு தேறி விட்டான். அதற்கு மீக முக்கிய காரணம் பின் கிட்டத்தட்ட பத்து கிலோ வரை உடல் எடையை குறைத்தது தான். இப்போ அர்ஜுனின் எடை 60, பிங்கி எடை 65 சில வேறுபாடு இருந்தாலும் அர்ஜுன் மன உறுதி கொண்டு சமாளித்து விட்டான். இன்னும் அந்த ஒரு நிமிடத்தை எப்படியாவது நான்கு நிமிடம் போல மாற்றும் வேலை மட்டுமே உள்ளது. அங்கே தான் இன்னொரு பிரச்சினை வந்தது சில ஸ்டெப்ஸ் அவனின் இடையை பிடிப்பது போல உள்ளது. அவனுக்கு அங்கே கூச்சம் அதிகம் தொட்டாலே சினுங்கும் அளவுக்கு மோசம். அதனாலேயே தினம் காலை மாலை இரவு என ஒவ்வொரு தடவையும் அரைமணிநேரம் அங்கே கிச்சலக்கா மூட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்தப் பயிற்சி கூட பிங்கி கையாலேயே கொடுக்கப்பட்டது. அப்போதான் அவளின் தொடுதல் பழகும் என.

அதுமட்டுமல்லாமல் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு மணி நேரம் பார்வதி பாட்டியிடம் இருந்து பாட்டு பாட அர்ஜுன் மற்றும் பிங்கி பயிற்சி எடுத்தார்கள். பாட்டுப் போட்டிகளில் கூட அவர்கள் பெயர் கொடுத்தார்கள் அல்லவா அதான் விஷயம்.

நடனம் கைக்கூடிய அளவுக்கு பாட்டு கைகூடவில்லை.

அதற்கு சில காரணங்கள்..

1. குரலின் தன்மை
2. இருவரும் பாடும்போது sync ஆகவில்லை.
3. பாட்டில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஏதோ புத்தகம் படிப்பது போல பாடினான்.

உணர்ச்சியற்ற பாட்டு எவ்வளவு நன்றாக பாடினாலும் பயன்தராது.

அதனை உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் அல்ல.

******************

அன்று அப்படித்தான் அர்ஜுனும் இங்கேயும் பாட்டு கேட்டுக் கொள்ள பார்வதி பாட்டி அழைத்துச் சென்றுவிட சதாசிவம் தாத்தா தலைவலி என சீக்கிரம் தூங்கச் சென்று விட்டார்.

விக்ரமை தவிர மற்றவர்களும் அன்று நடனமாடிய கலைப்பில் சீக்கிரம் தூங்கி விட்டார்கள்.

சங்கீதாவுக்கு பயிற்சி கொடுத்த கலைப்பு தூங்கச் சென்று விட்டாள்.

அப்போ நெடுநேரமாக அர்ஜுன் தங்கி இருந்த அறையிலிருந்து அவனின் போன் நெடுநேரமாக கத்திக்கொண்டிருந்தது.

ரிஷி ராம் இருவருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க அந்தப் பக்கம் சென்ற விக்ரம் உள்ளே சென்று யார் ஃபோன் செய்வது என்று பார்த்து விட்டான்.

அது சத்யாவிடம் இருந்து அர்ஜுனுக்கு வந்த வீடியோ கால்.

ஒரு சின்ன கலாட்டா செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தவன் அந்த போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு தன் மாஸ்க்கை எடுத்து காலை அட்டென்ட் செய்தான்.

அவன் போனை அட்டெண்ட் பண்ணவுடனே அந்த பக்கம் இருந்த சத்யா கத்த ஆரம்பித்தான்.

சத்யா, "நீ எல்லாம் ஒரு மனுசனா? எவ்வளவு நேரமா நீ போன் எடுப்பாய் என்று காத்திருக்கிறது. கூட பிறந்தவன் ஆச்சே என் வயசு தானே உனக்கும் என்னோட பிரச்சனையை சொன்னா ஒரு வழி சொல்வே என ரொம்ப நேரம் உன்கிட்ட பேச முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்."

முடிஞ்சவரை அர்ஜுனை போல தன் குரலை மாற்றி பேச ஆரம்பித்தான் விக்ரம்,

விக்ரம், "சொல்லுடா சத்யா என்ன விஷயம்?'

சத்யா, "சொல்லுடா சத்யாவா? டேய் என்னை எப்போவும் நீ மிஸ்டர் சத்யா என மரியாதை கலந்து தானே பேசுவே?"

கூடப் பிறந்தவன் கிட்டேயே என்னடா ஓவரா மரியாத என அர்ஜுனை நினைத்து கோபம் கொண்டவன் போனில்.

விக்ரம், "சொல்லுங்க மிஸ்டர் சத்யா என்ன விஷயம்?"

சத்யா, "ஹ்ம்ம்.. இப்போ கேட்ட விதம் தான் சூப்பர். அது இல்லடா கூட படிக்கிற ஒரு பையன் போன வாரம் ஒரு வெப்சைட்டின் லிங்க் கொடுத்தான்."

விக்ரம், "அது என்ன வெப்சைட்? லிங்க்?"

சத்யா, "பிட்டு படம் இருக்குற லிங்க் தான். நீ கேட்டாலும் தரமாட்டேன்."

விக்ரம், "சரி தர வேண்டாம். அந்த லிங்க் வைத்து என்ன பண்ண செல்லம்?"

சத்யா, "இதுவரை ஒண்ணும் பண்ணல.. ஜஸ்ட் அந்த சைட் ல இருந்த நூறு வீடியோஸ் ஏ ரெண்டே நாளில் பார்த்து முடித்தேன்."

அதை கேட்ட விக்ரமுக்கு புரை ஏற உடனே பக்கத்தில் இருந்த தண்ணீர் bottle ல இருந்த தண்ணீர் எல்லாம் குடிந்தவன்.

விக்ரம், "இது உனக்கே நியாயமா இருக்கடா? அந்த மாதிரி வீடியோஸ் பார்ப்பதே தப்பு இதில் மொத்தம் நூறு வீடியோஸ் பார்த்ததும் இல்லாமல் வெட்கம் கேட்டு எங்கிட்டயே சொல்ற"

சத்யா, "யாப்பா அம்பி.. ருள்ஸ் திலகம் இப்போ நான் அதை பற்றி பேச வரல. என் இடத்தில் நீ இருந்தால் என்ன பண்ணி இருப்பே அதை சொல்லு?"

விக்ரம், "முதல் வீடியோ வே பார்த்து இருக்க மாட்டேன்."

சத்யா, "ஆய் இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்ல கூடாது. உண்மையை சொல்லு.."

விக்ரம், "சரிடா உண்மையை சொல்றேன். முதல் வீடியோ பார்த்தவுடனே.."

சத்யா, "பார்த்தவுடனே..?"

விக்ரம், "எல்லாம் தெரிந்தே கேட்க வேண்டாம். தன் கையே தனக்கு உதவி தான்😓. அப்போ கூட உன்னை மாதிரி வெறி எடுத்து நூறு வீடியோவை பார்த்து இருக்கே மாட்டேன். அதுவும் ரெண்டே நாளில்..😰"

சத்யா, "ஹ்ம்ம்.. புரியுது தப்பு தான். இப்போ அதன் பிரச்சினை. எனக்கு ரியல் லைஃப் ல ஒரு தடவை ஒரே ஒரு தடவை முயற்சி பண்ணி பார்க்கணும்."

விக்ரம், "அடேய் கருமம் பிடித்தவனே.. ஏன்டா இப்படி?"

சத்யா, "உன்கிட்ட சொல்ல என்ன.. கண்ணை மூடினால் ஒரே கெட்ட கெட்ட கனவா.. இல்ல அது கெட்ட கனவு இல்ல நல்ல கனவு தான். இருந்தாலும் கனவு கனவா போய்டும் பயமா இருக்கு. நிரந்தரம் இல்லாத மனித வாழ்க்கை டா இது.. எப்போ யாருக்கு என்ன நடக்குமோ தெரியாது அதன் ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை அனுபவிக்கனும் முடிவுக்கு வந்துட்டேன்."

விக்ரம், "ஓ சார் அதற்கும் சேர்த்து ஏதாவது ஏற்பாடு செய்து இருப்பீங்க போல அதையும் சேர்த்து சொல்லு.."

அவனின் பேச்சு மாற்றத்தை கவனிக்காத சத்யா தன் திட்டத்தை சொன்னான்.

சத்யா, "இங்கே பார் யாரோ எவரோ தெரியாத இடத்தில் போவதை விட.. Friends with benefits மாதிரி முயற்சி பண்ணலாம் இருக்கேன். இப்போ இந்த காலத்தில் இது சகஜம் தானே?"

விக்ரம், "இல்ல தப்பு, சொன்ன கேளு இதெல்லாம் வயசு கோளாறு நம்ம தான் நம்ம மனசை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாத்துக்கும் ஒரு வயசு இருக்கு அவசரம் வேண்டாம் பிளீஸ்.."

சத்யா, "எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஏற்கனவே ஆள் எல்லாம் ரெடி நாளைக்கே போறேன் முடிக்கிறேன். அந்த பொண்ணே ஓகே சொல்லி விட்டாள் அப்பறம் என்ன?"

விக்ரம், "இங்கே பார் எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் அமெரிக்கா ல இருக்கு.. அந்த குடும்பத்தில் ஆதி என்று ஒருவன் இருக்கிறான். அவனுக்கும் நம்ம வயசு தான். வயசு கோளாறு உன்னை மாதிரி Friends with benefits என்கிற மாதிரி ஏதோ பண்ண போய் அந்த பொண்ணு கர்ப்பம் ஆக இப்போ அவர்களுக்கு முன்று வயசில் ஒரு பெண் குழந்தை இருக்கு. படிக்கிற வயசில் தேவையற்ற பிரச்சினை வேண்டாம்.."

சத்யா, "இந்த கதையை ஏற்கனவே எவனோ விக்ரம் அவனின் அண்ணனின் கதையை சொன்னதாக சொன்னியே.. உண்மையை சொன்னால் அந்த ஆதி தான் என்னோட ரோல் மாடல் இருந்தும் அவன் செய்த தப்பை திருத்தி செய்வேன். பாதுகாப்புடன் தான் எல்லாம் நடக்கும் யூ டோண்ட் வொர்ரி.."

விக்ரம், "இல்லடா புரிந்துகொள் இது தப்பு.. நம்ம கலாச்சாரம் என்ன?"

சத்யா, "காலத்துக்கு ஏற்ற விதத்தில் நம்ம கலாச்சாரம் மாறும் தம்பி. உனக்கு ஆள் இருந்தும் நீ தான் ஒண்ணுமே பண்ணாமல் இருக்கே.. நீ சரியான வேஸ்ட் டா.."

விக்ரம், "யாரை சொல்ற?"

சத்யா, "அதன் நீ காதலிப்பதாக சொன்ன பிங்கி தான்.."

விக்ரம், "சீ.. தப்பா பேசாதே காதல் காமம் வேற வேற அத்தோடு பிங்கி அர்ஜுனின் உயிர்.."

சத்யா, "அர்ஜுனின் உயிர் இல்ல.. வெங்கியின் உயிர் அவள் அப்படி தானே கூப்பிடுவாள். பிங்கி வெங்கி.. ரெண்டும் பேருமே சரியான மாங்கிஸ்.. அப்பறம் என்ன சொன்ன காதல் காமம் வேற வேறயா.. தம்பி தம்பி தப்பா சொல்ற இந்த காலத்தில் ரெண்டுமே ஒண்ணு தான். இன்னும் பழைய காலத்திலேயே இருக்கே.. வெளிநாட்டில் பார் அவன் அவன் எப்படியெல்லாம் இருக்காங்க என.. "

விக்ரம், "எந்த நாடாக இருந்தாலும் அதற்கான லிமிட் இருக்கு. எல்லா நாட்டிலும் காதல் என்பது ஒன்று தான். அதை புரிந்துகொள். உனக்கு நம்பிக்கை இல்ல என்பதால் காதல் பொய் இல்ல."

சத்யா, "ஹ்ம்ம்.. இன்னிக்கு பார்த்து ரொம்ப பேசுற.. ஏதோ வித்தியாசம் தெரியுது. கடந்த ஒரு வாரமாக ஃபோன் பண்ணல அதற்குள் முகம் முழுதும் தாடி மீசை.. கலக்கிற போல.."

விக்ரம், "என்னை விடு.. உன்னை பற்றி யோசி எந்த தப்பான விஷயத்துக்கும் போகாதே சொல்லிட்டேன். காலம் கடந்த பிறகு நீ ரொம்ப ஃபீல் பண்ணுவே சொல்லிட்டேன்."

சத்யா, "தப்பை தப்பா பண்ண தானே பிரச்சினை. நாங்க எல்லாம் சரியா பண்ணுவோம் எப்படி சிகரெட் பிடிப்பது தண்ணியடிப்பது என யாருக்கும் தெரியாமல் செயற்கையான இதுவும் அது மாதிரிதான்."

விக்ரம், "என்ன அந்த பழக்கம் வேற இருக்கா?"

சத்யா, "என்ன புதுசா கேட்கிற எல்லாம் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டு தானே பண்ணேன்."

விக்ரம், "அப்போ நான் என்ன சொன்னேன்?"

சத்யா, "இதே மாதிரி தான் தப்புன்னு சொன்ன ஆனால் இந்த அளவுக்கு ரொம்ப பேசல.."

விக்ரம், "அப்போ தப்புன்னு தெரிந்து தானே பண்ற?"

சத்யா, "அர்ஜுன்.. அர்ஜுன்.. தப்பு என்றால் எல்லாமே தப்பு தான். தலைவலி சொல்லி மாத்திரை எடுத்துக் கொள்வதும் தப்புதான். அதில் கூட சிறிது அளவுக்கு போதை இருக்கு. எத்தனையோ நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் கூட அங்கே அங்கே போதை எல்லாம் கலந்து தான் இருக்கு அது தப்பு இல்லை என்றால் நான் செய்வது கூட தப்பு இல்ல."

விக்ரம், "அதுவும் இதுவும் ஒன்றா?"

சத்யா, "ஆமாம் ஒன்று தான். அது உடல் நலத்துக்கு இது மனநலத்துக்கு.. என்னோட மைண்ட் நல்ல இருந்தால் தானே நான் எதிர்ப்பார்த்த மாதிரி நல்ல டாக்டர் ஆக முடியும்."

விக்ரம், "மனதை கட்டுப்படுத்த எத்தனையோ விஷயம் இருக்கு. யோகா, தியானம், உனக்கு பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவு பண்ணலாம். இப்படி எத்தனை இருக்கு அதை எல்லாம் விட்டு இந்த முறை ஏன்டா தேர்ந்தெடுத்தாய்."

சத்யா, "நான் உன்னை மாதிரி மகான் இல்ல. ஏதோ கூட பிறந்தவன் ஆச்சே என சொன்னேன். எப்பவும் போல அதை எதிர்த்து தான் பேசுற. நல்லவேளை நீயும் நானும் ஒன்ற வளரவில்லை. அப்படி மட்டும் நடந்து இருந்தது உன்னை மாதிரி என்னை சாமியார் போல தான் ஆகி இருப்பே.. ஐயோ என் டார்லிங் ஃபோன் பண்ற.. நான் நாளைக்கு இதே நேரத்தில் என் கச்சேரி எப்படி நடந்ததுன்னு போன் பண்றேன். Byee byee.."

இங்கே அர்ஜுனை போல பேசிய விக்ரம் மனதில் பாரம் கொண்டு போனை வைத்தான்.

ஆதி பட்டு திருந்தியது போல இந்த சத்யா கூட பட்டு தான் திருந்தனும் போல. ஆதியாவது மாயா மீது கொண்டே ஆசையில் காதலில் இப்படியெல்லாம் செய்தான்.

இப்போ சத்யா விஷயம் அப்படி இல்லயே தெரிந்தே திமிரில் செய்ய போறேன் சொல்பவனை என்ன செய்ய முடியும். முகம் மட்டுமே ஒன்று குணமோ எல்லார் விட மோசம்.

இந்தியாவிலேயே பிறந்து இந்தியாவிலேயே வளர்ந்த சத்யாவின் மனப்போக்கு ஒரு பக்கம்..

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த விக்ரமின் மனப்போக்கு ஒரு பக்கம்..

ஆதி போல தவறு சத்யா செய்ய கூடாது என விக்ரம் வேண்ட..

இதனை எல்லாம் அறியாது அர்ஜுன் பிங்கியோடு கழுதை குரலில் கீழே பாடிக் கொண்டிருந்தான்.

மாஸ்க் போட்டு கொண்டு தன் அறையை விட்டு விக்ரம் வெளியே வந்தான்.

அர்ஜுன் ஃபோனை திரும்பி அர்ஜுனின் அறையில் வைத்த விக்ரம் பார்வதி பாட்டியின் அறைக்கு வந்தவன் அர்ஜுன் கவனிக்காத சமயத்தில் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே மனதுக்குள்..

விக்ரம் மனதில், ' அட்லீஸ்ட் உன் காதலாவது உண்மையா? பொய்யா? மற்ற விஷயத்தில் நீ வேஸ்ட் தான். இந்த காதல் விஷயத்திலாவது நீ பேஸ்ட் ஆ இருக்கணும். அந்த DNA report நீயும் நானும் சகோதரர்கள் சொல்லுது அப்படியென்றால் ஆதி, சத்யா கூட உனக்கும் எனக்கும் சகோதரர்கள் தான். அது எப்படி? என தெரியல இருந்தாலும் அது உண்மை என்றால் உங்கள் எல்லாருடைய வாழ்க்கையும் நல்ல இருக்கணும் என்பது தான் என் ஆசையும். உண்மையில் அந்த கடவுள் இருக்கும் பட்சத்தில் சத்யாவின் தப்பான எண்ணங்களை அவர்தான் மாற்ற வேண்டும்.'

எப்போதும் போல அன்று இரவு தூங்க செல்வதற்கு முன் தன் அண்ணன் ஆதியிடம் நடந்து எல்லாம் சொன்னவன் ஆதியின் எண்ணத்தை கூட கேட்டுவிட்டு தூங்க சென்றான்.

ஆதி - ஆகாயம் (மழையும் கொடுப்பான் இடியும் கொடுப்பான் கோபம் வந்தால் எரிகற்கள் கூட வீசுவான்)
விக்ரம் - காற்று (குளிர்ச்சி உடையவன் கோபம் வரும் சமயத்தில் புயல் காற்று தான்)
அர்ஜுன் - பூமி (பொறுமையுடையவன் ஆனால் பொறுமை கடந்தால் நிலநடுக்கம் தான்)
சத்யா - நீர் (இடத்துக்குத் தகுந்தவாறு தன் நிறத்தை மாற்ற கூடியவன். சில சமயம் சுனாமி வெள்ளம் கூட வரும்)

நான்கு பூதங்கள் நிலையே இப்படி என்றால்..

ஐந்தாவது பூதம் ஒருத்தன் இருக்கிறான், அவனின் குணம் நெருப்பு. நெருப்பின் தன்மைக்கு ஏற்றவாறு அடிக்கடி கோபத்தில் கொதிப்பன்.

சில மாசத்துக்கு முன் அவன் கேரளா ல இருக்கும் ஒரு மனநல மருத்துவனையில் பேஷன் டிரஸ் போட்டுக்கொண்டு அங்கே சிலரை கொன்று அவர்களின் உடல்களை எரித்து கொண்டு இருந்தான்.

அவன் கூடவே ஒரு பெண் தலையெல்லாம் கலைந்து போய் உடலில் அங்கே அங்கே உடை எல்லாம் கிழிந்த நிலையில் உடல் அங்கங்கள் தெரிய வாய்ல ரத்தம் வழிய நின்று கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பிணத்தின் வெட்டுப்பட்ட சதை துண்டுக்கள். அதில் கடித்த சில அடையாளங்கள்..

அவனின் கையில் கூட சில சதை துண்டுக்கள். அதில் கூட கடிபட்ட சில அடையாளங்கள்..

சில நொடிகளுக்கு பிறகு இருவருமே மாற்றி மாற்றி அந்த சதைகளை கடித்து தின்று கொண்டு இருந்தார்கள்.

அந்த பெண்ணின் பெயர் - ஷிவானி

அவனின் பெயர் - விஷ்ணு தேவ்

அவர்கள் இருந்த அறை மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை அடைந்து வைக்கும் இடம்.

இருவருமே 17 வயதுக்குள் பல கொலைகள் செய்த சைக்கோ பைத்தியங்கள். கொலை செய்தவர்களின் ஏதாவது உடல் பக்கங்களை நெருப்பில் சுட்டு தின்னும் நரமாமிச விரும்பிகள்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#22
வாராயோ வெண்ணிலாவே...!! 19
அத்தியாயம் 19


நேற்று சத்யாவிடம் போனில் பேசியதிலிருந்து ஆழ்ந்த கவலையில் விக்ரம் இருந்தான்.

அதனை பற்றி சங்கீதாவிடம் கூட சொல்லவில்லை. மனதில் ஏதோ ஒரு மூலையில் சத்யாவை பற்றி யாரும் தவறாக நினைக்கக்கூடாது அது தன் உயிருக்கு உயிரான காதலியாக இருந்தாலும் சரி என விக்ரம் நினைத்தான்.

திரும்பி டான்ஸ் பயிற்சி மேற்கொண்டார்கள் எல்லோரும் நன்றாக ஆடிக்கொண்டிருக்க திரும்பி போஸ்ட்மேன் ஒரு லெட்டர் வந்து கொடுத்தான்.

அதை வாங்கிப் படித்த ரிஷி,

ரிஷி, "இது கூட வெண்ணிலாவிடம் இருந்து தான் வந்து இருக்கு. ஆய் அவளின் ஃபோன் நம்பர் கூட இருக்கு. ஒன்லி வாட்ஸ்அப் என போட்டு இருக்கு."

அதற்கு உடனே மெசேஜ் செய்தவன்..

ரிஷி, "ஹாய்.."

மர்ம பெண், "ஹாய் பேபி.."

ரிஷி, "இப்போ தான் லெட்டர் கிடைத்தது நிலா.."

மர்ம பெண், "தெரியும்.."

ரிஷி, "எப்படி?"

மர்ம பெண், "அது அப்படி தான்..."

ரிஷி, "இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"

மர்ம பெண், "உன்னை பார்த்துக்கிட்டு இருக்கேன்"

ரிஷி, "எங்க இருந்து?"

மர்ம பெண், "அதை சொல்ல மாட்டேன்.."

ரிஷி, "இந்த விளையாட்டு எதுக்கு?"

மர்ம பெண், "ஆசைப்பட்ட விஷயம் உடனே கிடைச்சா அதில் திரில் இல்லையே.."

ரிஷி, "எனக்கு ஆர்வம் தாங்கல எப்படா உன்னை பார்போம் இருக்கு."

மர்ம பெண், "பொறு பொறு இன்னும் ஒரு வாரம் தானே?"

ரிஷி, "இல்ல.. உன்னை உடனே பார்க்கணும். அட்லீஸ்ட் நீ இருப்பதை நான் உணர வேண்டும்."

சிறு நேரம் அந்தப்பக்கம் யோசித்த அந்த மர்ம பெண் பதில் அனுப்பினாள்.

மர்ம பெண், "அப்போ உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் அழைத்துக்கொண்டு வடபழனி இருக்கிற forum மாலுக்கு காலை பதினோரு மணிக்கு வா.."

ரிஷி, "அவங்க எதுக்கு?"

மர்ம பெண், "நான் சொல்றதை செய். என்னை பார்க்கணும் என்றால் செய்.."

ரிஷி, "ஓகே.."

மெசேஜ் எல்லாம் செய்துவிட்டு போனை பாக்கெட்டில் வைக்க..

அவள் என்ன மெசேஜ் செய்தாள் என அவனின் நண்பர்கள் அனைவரும் கேட்டனர். அதில் அதி முக்கியமானவர்கள் அஞ்சலி மற்றும் தர்ஷினி என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ரிஷி, "நாளைக்கு நம்மளை எல்லாரையும் ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கா. அங்க போனால் அவளின் அடையாளத்தை வெளிப்படுத்துவேன் என்கிறாள். என்ன உங்களுக்கு ஓகேவா?"

அர்ஜுன் பிங்கி வரல சொல்ல, விக்ரம் கூட அவர்களுக்கு துணையாக இருக்கிற மாதிரி சொன்னான்.

பின் மற்றவர்கள் வரோம் என்றார்கள்.

அஞ்சலிக்கு தெரியவேண்டியது வெண்ணிலா ரிஷிக்கு ஏற்ற ஜோடியா இல்லையா என்பதுதான்.

தர்ஷினிக்கு இப்படியெல்லாம் லெட்டர் போட்டு மெசேஜ் செய்பவள் பொய்யான பெண் என தெரிந்து இருந்தது. அவளின் முகத்திரையை கிழிக்க வே சரி என்றாள்.

எல்லாரும் ஒவ்வொரு விதத்திலும் யோசித்துக்கொண்டே அந்த நடனப் பயிற்சியை முடித்தார்கள்.

நேற்றுப் போல இன்றும் அர்ஜுனும் பிங்கியும் பாட்டு கற்றுக் கொள்ள போக அவனின் போனை எடுத்து விக்ரம் தன் அறையில் போய் அமர்ந்தான்.

சத்யாவுக்கு போன் செய்வதற்குமுன் தன் அறையை தாப்பாள் போட்டு பூட்டி அவன் தன் மாஸ்க் ஏ அவுத்து விட்டு போன் செய்தான்.

அந்த வாட்ஸ்அப் வீடியோ காலை அட்டன்ட் பண்ண சத்யாவின் நிலையை பார்த்தான் விக்ரம்.

சத்யா உதட்டில் யாரோ கடித்த அடையாளம், கழுத்தில் கூட சில அடையாளங்கள்.

அதில் பதறிப்போய் விக்ரம் கேள்வி கேட்டான்.

விக்ரம், "மிஸ்டர் சத்யா உங்களுக்கு என்ன ஆச்சு? நாய் ஏதாவது பாய்ந்து விட்டதா?"

சத்யா, "இல்ல, எல்லாத்துக்கும் காரணம் ஒரு பொண்ணு. அவள் கொடுத்த பரிசு தான் இது. இங்கே மட்டும் இல்ல உடலில் பல இடத்தில் கடிப்பட்ட அடையாளம் இருக்கு. TT injection கூட போட்டு கொண்டேன்."

விக்ரம், "அதன் சொன்னேன். இந்த மாதிரி friends with benefits வேண்டாம் பார் உன் வேலை பிடிக்காது அவள் தப்பிக்க எப்படி கடித்து விட்டாள்."

சத்யா, "இது பிடிக்காமல் செய்தது இல்ல. ரொம்ப பிடித்து செய்தது நம்ம sex வைத்து கொள்ள முயற்சி செய்த போது தான் என் ரொம்ப tempt ஆன அவள் இப்படியெல்லாம் பண்ணிட்டா.."

விக்ரம், "அவ்வளவு வெறியா? அதுவும் உன் மேல்?"

சத்யா, "என்ன வெறி இருந்து என்ன பண்றது? கடைசியில் எதுவும் நடக்கல.."

விக்ரம், "நடக்கல என்றால்? பின்ன எப்படி இந்த காயங்கள்..?"

சத்யா, "கிளைமாக்ஸ் முன்னாடி சில விளையாட்டுக்கள் இருக்கும் ல அதன்.. அங்கேயே எனக்கு ஓவர் கடி ஓடி வந்து விட்டேன்."

விக்ரம், "ஐயோ.. அப்போ இனி வாய்ப்பு இல்ல போல..😂😂"

சத்யா, "ஹ்ம்ம்.. அப்படி சொல்ல முடியாது. காயம் ஆறும் வரை எதுவும் இல்ல. அப்பறம் நடத்துவேன்.."

விக்ரம், "உனக்கு முன்னாடி எவனாவது பூந்து விட்டால் என்ன பண்ணுவ?"

சத்யா, "வாய்ப்பு இல்ல ராஜா.. வாய்ப்பு இல்ல. அவளுக்கு நான் மட்டும் தான்.. எனக்கு மட்டும் தான் அவள் க்ளோஸ். இதுவரை எங்க காலேஜ் ல அவளிடம் பேசிய ஒரே பையன் நான் மட்டும் தான்."

விக்ரம், "ஹ்ம்ம்.. இப்போ நீ தான் கடி வாங்கிய கோலத்தில் இருக்கியே இனி உன்னை எப்படி வந்து பார்ப்பள் பேசுவாள்?"

சத்யா, "😂😂 ஏற்கனவே ஃபோன் அடுத்த வாரம் திரும்பி கச்சேரி வச்சுக்கலாம் சொல்லிட்ட"

விக்ரம், "அதற்கு என்னடா இப்படி 32 பல்லைக் காட்டி ச சிரிக்கிற?"

சத்யா, "எல்லாம் ஒரு குஷி தான்"

விக்ரம், "நீ திருந்த மாட்ட.."

சத்யா, "நான் என்ன தப்பு பண்ணேன் திருந்த? இது இருவரின் விருப்பத்தில் நடக்கும் ஒரு சம்பவம். இந்த மாதிரி சம்பவங்களில் கடி வாங்குவது சாதாரணமான விஷயம்.."

விக்ரம், "கடி வாங்குவது சாதாரண விஷயம் தான். ஆனால் கடிகள்? அது சாதாரண விஷயமில்லை. உன்னை செய்ய அவள் பிளான் பண்ணல உன்னை கடித்து சாப்பிட போட்ட பிளான் மாதிரி இருக்கு."

சத்யா, "அது கூட ரொமான்டிக் தானே?😍😍"

விக்ரம், "வீட்டில் காயத்தை பார்த்து எதுவும் கேட்கல?"

சத்யா, "கேட்டாங்க நான் கீழே விழுந்து அடிப்பட்ட காயம் சொல்லிட்டேன்."

விக்ரம், "நம்பி இருக்க மாட்டங்களே.."

சத்யா, "எப்படி டா சரியா சொல்ற?"

விக்ரம், "உதட்டில் காயம் அதுவும் பார்த்தாலே யாரோ கடித்ததால் வந்த காயம் என்று தெளிவா தெரியுது. அப்ப எப்படி நம்புவாங்க பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேண்டாமா?"

சத்யா, "ஹ்ம்ம்.. நெக்ஸ்ட் டைம் சரியா நம்புற மாதிரி சொல்றேன்.."

விக்ரம், "உன்னை கடித்த அந்த பொண்ணோட பெயர் என்ன?"

சத்யா, "ஷிவானி.."

விக்ரம், "ஷிவானி.. ஹ்ம்ம் நல்ல பெயர் பொண்ணு ரொம்ப அழகா இருப்பா ல?"

சத்யா, "அழகோ அழகு பேரழகு.."

விக்ரம், "அந்த அழகை சொந்தமாக்கி கொள்ள பார்க்கிற?"

சத்யா, "ஏற்கனவே சொந்தம் ஆகிட்டேன். கிளைமாக்ஸ் மட்டும் மிஸ் ஆச்சு.."

விக்ரம், "மீண்டும் ஒருதடவை யோசி.. இது சரியா? தப்பா? இதனால் என்ன பிரச்சினைகள் வரும்? என பல விஷயங்களை மனதில் வைத்து யோசித்து செய்.."

சத்யா, "வேட்டை வந்தால் வேட்டை ஆடியே திறனும்.."

அவர்கள் பேசிக்கிட்டு இருக்கும்போது கீழே பாட்டு பாடி முடிக்கும் சத்தம் கேட்க..

விக்ரம், "சரி சரி நான் நாளைக்கு பேசுறேன்.."

சத்யா, "சரி டா byee.."

அர்ஜுன் மேலே வருவதற்குள் வேகவேகமாக மாஸ்க் போட்டு கொண்டவன் அர்ஜுனின் அறையில் போனை வைத்துவிட்டு வந்துவிட்டான்.

*************

அன்று இரவு மொட்டை மடியில் தர்ஷினி கார்த்திக்கு ஃபோன் செய்து பேசினாள்.

கார்த்தி, "தர்ஷினி குட்டி அந்த லெட்டரை அனுப்பியது அனிதா தான். முன்று நாள் முன்னாடி காலேஜில் சோகமாக அமர்ந்து இருந்த அஞ்சலி மூலம் வெண்ணிலா பற்றிய விஷயங்கள் அறிந்து கொண்டவள் உங்களை எல்லாம் பழிவாங்க இப்படி ஒரு நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறாள்."

தர்ஷினி, "ரிஷி என்ன பண்ணான்.?"

கார்த்தி, "அர்ஜுன்னுக்கு அடுத்து அவள் கண் ரிஷி மேல் தானே இருந்தது. அப்படி எண்ணி எனக்கு முன்னாடி அவன் கிட்ட டான்ஸ் ல ஜோடி சேர பார்த்தாள் முடியல ரிஷி திட்டி அனுப்பி விட்டான். அதற்கு தான் இந்த கேவலமான திட்டம்."

தர்ஷினி, "அப்போ நாளைக்கு ஏன் எங்களையும் சேர்ந்து அந்த மாலுக்கு வர சொன்னாள்?"

கார்த்தி, "உங்கள் எல்லாரையும் பைத்தியம் மாதிரி தேட விட்டு கை கொட்டி சிரிக்க தான்."

தர்ஷினி, "ரொம்ப நல்ல எண்ணம்."

கார்த்தி, "இந்த பிளான் அப்படியே இருக்கட்டும். நானும் அவளுக்கு தெரியாமல் அங்கே வந்து ஒரு கலக்கு கலக்கிறேன்."

தர்ஷினி, "அப்போ அந்த வெண்ணிலா பற்றிய உண்மை?"

கார்த்தி, "அதற்கான நேரம் வரும். ரிஷி கூட எல்லாம் தெரிந்தும் ஓவர் ஆ நடிக்கிறான். அப்போ நமக்கு தெரிந்த உண்மை அவனுக்கும் தெரிந்து இருக்கு ல.."

தர்ஷினி, "தெரியாமல் எப்படி இருக்கும்? அவனுக்கும் வெண்ணிலவுக்கும் நடுவில் இருக்குற உறவு என்னனு தெரியாமல் அனிதா லெட்டர் போட்டால் கண்டுபிடிக்க தானே செய்வான். இன்னும் எங்க யார் மேலும் அவனுக்கு நம்பிக்கை வரல அதன் இன்னும் அவனுக்கு தெரிந்த உண்மை இன்னும் எங்ககிட்ட சொல்லல.."

கார்த்தி, "என் எதிரி மனசில் என்னதான் ஓடுது?"

தர்ஷினி, "சும்மா சும்மா அவனை ஏன் உனக்கு எதிரி சொல்ற?"

கார்த்தி, "அப்படி தான் சொல்வேன். காரணம் உனக்கே தெரியும்."

தர்ஷினி, "அண்ணா.."

கார்த்தி, "பிளீஸ்.. அப்பறம் பேசலாம்."

அவன் போனை வைக்க இவளுக்கும் வேற வழி தெரியாமல் சோகமாக தன் அறைக்கு திரும்பினாள்.

*****************

விஷ்ணு தன் தோழிக்கு ஃபோன் செய்தான்.

விஷ்ணு, "ஷிவானி, என்னடி எல்லாம் எப்படி போச்சு."

ஷிவானி, "செம்ம.."

விஷ்ணு, "என்ன தெரிந்தது?"

ஷிவானி, "உன் அம்மா அனாதை ஆசிரமத்தில் விட்ட இரண்டு குழந்தைகளில் இவனும் ஒருத்தன். இன்னொருவன் சென்னை ல இருக்கான்."

விஷ்ணு, "சூப்பர்.."

ஷிவானி, "சும்மா சொல்ல கூடாது. இந்த சத்யாவின் ரத்தம் நல்ல டேஸ்ட்.."

விஷ்ணு, "என் கூட பிறந்தவன் ல அப்படி தான் இருக்கும்."

ஷிவானி, "ஹ்ம்ம்.. பையன் என்னோடு கலக்க பார்த்தான். அதன் கொஞ்சம் விளையாடி விட்டு கடைசி நேரத்தில் ஓட விட்டேன்."

விஷ்ணு, "நீ நடத்து... அவனுக்கு இது தேவை தான்."

ஷிவானி, "அந்த கேரளா ஹாஸ்பிடல் விஷயம் என்ன ஆச்சு?"

விஷ்ணு, "நம்மை பிடித்து வைத்த விஷயம் கூட அவர்கள் வெளியே சொல்லல. பின் தப்பித்த விஷயம் எப்படி சொல்வாங்க..😂"

ஷிவானி, "நம்ம திருடி வந்த எல்லா இரத்தமும் இருக்கு ல.. பாதி பாதி பிரித்து கொண்டாதில் இப்போ என்கிட்ட பத்து பாக்கெட் தான் மிச்சம் இருக்கு."

விஷ்ணு, "உன்னை மாதிரி நான் இல்லயே.. எனக்கு கோபம் வந்தால் தான் ரத்தம் தேவைப்படும் அப்போ தானே குடிப்பேன்."

ஷிவானி, "என்னனு தெரியல.. இந்த சத்யாவின் ரத்தத்தை குடித்ததில் இருந்து ஏதோ சொல்ல முடியாத எண்ணங்கள்.."

விஷ்ணு, "அது நம்ம இனத்தில் இதுவரை அவன் ரத்தம் குடித்தது இல்ல ல. அதான்..."

ஷிவானி, "அப்படியா சொல்ற..?"

விஷ்ணு, "யெஸ்.. அப்பறம் சென்னை ல இருப்பவன் பெயர் என்ன?"

ஷிவானி, "அர்ஜுன். இவன் சத்யாவை விட மோசம். சைவ பிரியான் இதுவரை அசைவ உணவு கூட உண்டது இல்ல. என்ன ஜென்மம் தெரியல சத்யாவின் மூலம் அறிந்தவரை அர்ஜுன் ஒரு வேஸ்ட், பயந்த சுபாவம் உள்ளவன். பலம் என்று ஒண்ணும் உடலில் இருக்க வாய்ப்பு இல்ல. இதில் ஐயாவுக்கு காதல் என்கிற ஒன்று இருக்கு."

விஷ்ணு, "காதல்.. நல்ல இருக்கே."

ஷிவானி, "இன்னும் அவன் அந்த பொண்ணிக்கிட்ட கூட சொல்லல.."

விஷ்ணு, "இது கேவலம் தான்."

ஷிவானி, "நான் ஒண்ணு கேட்பேன் கோபப்பட கூடாது சரியா?"

விஷ்ணு, "சொல்லு.."

ஷிவானி, "நான் சத்யாவை லவ் பண்ணலாம் இருக்கேன். நீ என்ன சொல்ற?"

விஷ்ணு, "நல்ல முடிவு ஆனால் அவனுக்கு தேவை லவ் இல்ல. அதோடு அவனுக்கு தேவையான ஒண்ணும் உன்னிடம் இப்போதைக்கு அவன் பெற பார்த்தால் சாவு உறுதி.."

ஷிவானி, "ஏன்?"

விஷ்ணு, "உன்னை தொட நினைத்த பலரின் நிலை தான்."

ஷிவானி, "இன்னொரு தடவை உரு மாறுவேன் சொல்றியா?"

விஷ்ணு, "கண்டிப்பா.. அதற்கு வாய்ப்பு இருக்கு. அப்பறம் அவன் ஓடியே போய்டுவன்"

ஷிவானி, "அப்போ என்ன தான் வழி.."

விஷ்ணு, "நீ முழு மனிஷி ஆகணும் இல்ல அவனின் பிறப்பு ரகசியம் அறிந்து நம்மை போல் மாற அவன் தயாராக இருக்கணும்.."

ஷிவானி, "ஓநாய் பெண் எப்படி டா மனிஷி ஆக முடியும்..."

விஷ்ணு, "பாதி ஓநாய் பாதி ரத்த காட்டேரி நான் மனிதன் ஆகல.."

ஷிவானி, "உன் அப்பா ஓநாய் மனிதர் உன் அம்மா ரத்த காட்டேரி அவர்களின் கலவை நீங்க உனக்கு கோபம் வரும் போது மட்டுமே ரத்தம் தேவை. என்ன அதிக சூரிய ஒளி உன்னால் தாங்க முடிவது இல்ல. எனக்கு பவுர்ணமி வந்தாலே உருவம் மாறிவிடும் இல்ல ரொம்ப உணர்ச்சி வசம் அடைந்தால் உருவ மாற்றம். அதில் இருந்து தப்பிக்க தான் இந்த மனித வேட்டைகள் எல்லாம்."

விஷ்ணு, "முதலில் நானும் தான் கஷ்டப்பட்டேன். பின் என்னோட கட்டுப்பாட்டில் என் வெறியை அடக்கல அதற்கு உதவியே நீயே இப்படி பேசலாமா?"

ஷிவானி, "சரி சரி விடு.. என்னை முழுசா மாற்ற சத்யாவால் தான் முடியும். அவன் டாக்டர் க்கு பிடிக்கிறான். கண்டிப்பா நமக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்படி தானே நம்ம கண்டுபிடித்த புக் ல போட்டு இருக்கு."

விஷ்ணு, "அது எல்லாம் பொய்.."

ஷிவானி, "எப்படி சொல்ற?"

விஷ்ணு, "அதில் என்ன போட்டு இருந்தது..

ஐவரில் ஒருவனால்
குணம் ஆவிர்..
ஆனால் ஐவரின்
உருவமோ ஒன்று..


எங்க ஐந்து பேர் இருக்காங்க?.. பிறந்த கொஞ்ச நேரத்தில் ரெண்டு இறந்து விட்டர்கள். மிச்சம் இருக்கும் முவரை காக்க எங்க அம்மா இரவோடு இரவாக சூரிய உதயம் வருவதற்குள் இருவரை ஒரு அனாதை இல்லத்தில் விட்டார்கள். என்னை மட்டும் தூங்கி கொண்டு நம்ம இடத்துக்கு வந்து விட்டார்கள்."

ஷிவானி, "எப்படியோ பிறந்தது ஐந்து பேர் தானே.."

விஷ்ணு, "உயிர் வாழும் கணக்கை தான் பார்க்கணும்.. அப்போ முன்று.. முன்னோர் சொன்னது பொய்.."

அப்போ விஷ்ணுவுக்கு கோபம் வர உடனே போனை வைத்தவன்.. குளிர்சாதனைப் பெட்டியை திறந்து ஒரு பாக்கெட் ரத்தம் குடிக்க ஆரம்பித்தான்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#23
வாராயோ வெண்ணிலாவே ...!! 20
அத்தியாயம் 20


வடபழனி forum மால் ..

அர்ஜுன், பிங்கி , சங்கீதா மற்றும் விக்ரம் தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த மாலுக்கு வந்து இருந்தார்கள் .

ராம், "டேய் ரிஷி, அந்த பொண்ணுக்கு போன் பண்ணி பாருடா. இன்னும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது?. நமக்கு வேற வேலை இல்ல."

ரிஷி, "போன் பண்ணிட்டேன், மெசேஜ் கூட பண்ணிட்டேன். பதில் இல்ல, என்னாச்சு தெரியல டா."

தர்ஷினி, "அதன் அப்பவே சொன்னேன் இது ஏதோ ஏமாற்று வேலையைத்தான் இருக்கும் என. இப்போ பார் நம்மளை வர சொல்லிட்டு அது வரல."

அஞ்சலி, "இல்ல தர்ஷ், அந்த பொண்ணு வேற ஏதாவது பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கணும். இன்னும் வெயிட் பண்ணி தான் பார்போமே."

தர்ஷினி, "எவளோ ஒருத்திக்காக நம்ம ஏன் டி இங்க இருக்கணும்?. டேய் நிலவன் (ரிஷிக்கு அவள் வைத்த செல்ல பெயர். வெண்ணிலவன் என்கிற பெயரின் சுருக்கம்) , கண்டிப்பா சொல்றேன் அது உன் நிலா (வெண்ணிலா) இல்ல. அந்த உண்மை உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். பின் எதுக்கு இந்த நாடகம். இதில் ஏற்கனவே ஒருத்தர் ரொம்பவே மனசு உடைஞ்சு போய்ட்டாங்க அது தெரிந்தும் ஏன்டா?"

ரிஷி, "அப்படியா, தர்ஷினி அது உனக்கு எப்படி தெரியும்?"

தர்ஷினி, "அது.. அது தெரியும். அவ்வளவு தான். இங்க பார் டா, எப்போவோ உன்னை விட்டு போன ஒருத்திகாக நீ கூடவே இருக்கும் ஒருத்தரை கஷ்டப்படுத்தி கொண்டு இருக்க. அப்பறம் நினைச்சாலும் இந்த புது உறவு போய்டும் பார்த்துக்கோ."

ரிஷி, "எந்த உறவாக இருந்தாலும் அதுக்கு நம்பிக்கை வேண்டும் தர்ஷினி. ஏன் மனம் புரியாத உறவு பற்றி இப்போ என்னால யோசிக்க முடியாது. நிலா என் பலவருட தேடல் அதுக்கு ஒரு முடிவு தெரியாது ஓயமாட்டேன்."

தர்ஷினி, "முற்று பெற முடியாத தேடல், பாவம் நீ.."

ரிஷி, "என் தேடல் எப்போவோ முடிந்து விட்டது. அவள் என் அருகே இருந்தும் கூட அதை ஒற்றுக்க அவள் தயாராக இல்ல. அதற்கான விடை தெரியாமல் விட மாட்டேன் மிஸ் தர்ஷினி அவர்களே.."

தர்ஷினி, "ஓ , அப்போ எது உன்னை தடுக்குது??"

ரிஷி, "என் நிலவை என் முன்னால் வர விடாமல் தடுக்கும் ஒரு வில்லன். அவனின் மூக்கை உடைந்தால் எல்லாம் சரியா வரும்."

தர்ஷினி, "பதிலுக்கு உன் மூக்கு உடைந்து விட்டால் என்ன பண்ணுவே?"

ரிஷி, "என்ன நடந்தாலும் உண்மை கண்டுபிடிப்பது உறுதி."

இவர்களின் பேச்சு புரியாது அங்கே இரு ஜீவன்கள் முழித்து கொண்டு இருந்தாரக்ள். ஒன்று - ராம் , இன்னொருவர் - அஞ்சலி.

அஞ்சலி, "அழகா, இவங்க எந்த வில்லனை பற்றி பேசுறாங்க? அவர் என்ன பண்ணார்? உண்மையில் லெட்டர் போட்டு மெசேஜ் பண்ணும் பொண்ணு தான் நம்ம தேடும் நிலவா? இல்ல வேற யார்?"

ராம், "அழகி, ஏன் இத்தனை கேள்வி? ஒரு கேள்விக்கே இங்கே பதில் இல்ல இதில் இத்தனை. யப்பா சாமி, இவர்களின் மர்ம பேச்சுக்கு ஒரு எண்டு கார்டு இல்லையா?"

அப்போ தான் அவர்களை நோக்கி வந்த அர்ஜுன், பிங்கி மற்றும் சங்கீதாவை பார்த்தார்கள்.

ராம், "என்னங்க சங்கி மேடம், வர மாட்டேன் சொல்லிட்டு வந்து இருக்கீங்க? வாட் ஹபனேட்?"

சங்கீதா, "ஹ்ம்ம், அடுத்த வாரம் டான்ஸ் போட்டி வச்சுக்கிட்டு நீங்க ஊர் சுற்றி ஸ் கொண்டு இருந்தால் என்ன செய்றது. அதன் விக்கி, டான்ஸ் போட்டிக்கு தேவையான டிரஸ் எல்லாம் இப்போவே வாங்கிட சொன்னான்."

ராம், "ஓ நம்ம முகமூடி எப்படி எல்லாம் யோசிக்கிறான். உங்களை அனுப்பிவிட்டு அவன் எங்க போனான்?"

சங்கீதா, "வருவான் வருவான்."

ராம், "அதன் எப்போன்னு கேட்டேன். இங்கயும் அந்த மாஸ்க் போட்டு வந்தால் திருடன் நினைத்து எவனாவது அடிக்க போறான். அவனுக்கு உடனே போன் வர வேண்டாம் சொல்லு இல்ல அந்த மாஸ்க் இங்க போட வேண்டாம் சொல்லு."

சங்கீதா, "அது அவனுக்கே தெரியும். நீ கவலைப்படாமல் உன் வேலை பார்"

ராம், "நல்லது சொன்னால் யார் கேட்கிறாங்க? அவன் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்."

பின் ஏழு பேருமே ஒரு துணி கடைக்குள் போனார்கள்.

உள்ள வந்த பிறகும் ரிஷி டிரஸ் பார்க்கமால் போனே பார்த்துக்கிட்டு இருக்கே அதில் கோபம் கொண்ட அஞ்சலி அவனின் கையை கிள்ளினாள்.

ரிஷி, "ஆஹ் ஏய் லூசு எலி ஏன் டி கிள்ளினே?"

அஞ்சலி, "இங்கே என்ன நடக்குது? நீ என்ன பண்ற? உனக்கு மெசேஜ் பண்ணனும் விருப்பம்'இருந்தால் அவளே பண்ணுவ அப்படியே நீ பார்க்கலே என்றாலும் உன்னை கண்டிப்பா பார்க்கணும் அவள் விரும்பினால் போன் கூட பண்ணி உன்னை தேடி வருவா. அதுக்குள் நம்ம வேலை நம்ம பார்ப்போம்."

ரிஷி, "சரியான இம்சை டி நீ. இப்போ நான் என்ன பண்ணனும் அதை சொல்லு"

அஞ்சலி, "இப்படி உம்முனு முகத்த வச்சு கேட்டால் சொல்ல மாட்டேன்."

முடிந்த வரை எல்லா பல்லும் கட்டிவிட்டு,

ரிஷி, "இப்போ சொல்லு என்ன செய்யணும்"

அஞ்சலி, "இங்கே வச்சு இருக்குற ஐஞ்சு டிரஸ் ல எது நல்ல இருக்கு சொல்லு."

ரிஷி, "உனக்கு ஐஞ்சும் கேவலமா தான் இருக்கும்."

அஞ்சலி, "உன் நிலா பற்றிய கனவில் இருந்து முதல வெளிய வந்து நல்ல கண்ணை பார். இது பசங்க போடுற டிரஸ். உனக்காக நான் செலக்ட் பண்ணது."

ரிஷி, "எப்போ எல்லாமே சூப்பர்."

அஞ்சலி, "போடா ஒட்டக்சுவிங்கி, ஏதாவது ஒன்னை ஓழுங்க சொல்றியா? எல்லாமே எட்டிக்கி போட்டியா சொல்றது. சங்கி நீயே பார்த்து சொல்லு, இதில் எந்த டிரஸ் நல்ல இருக்கு."

ஏற்கனவே அஞ்சலிக்கு பார்த்த ட்ரெஸ்ஸோடு மேட்ச் ஆன ரெண்டு டிரஸ் ஏ தேர்ந்து எடுத்த சங்கீதா.

சங்கீதா, "இந்த ரெண்டில் எது உனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கோ அதையே எடு. அதற்குள் நம்ம மற்ற பிரண்ட்ஸ் என்ன பண்றங்க பார்க்கிற.."

ராம் மற்றும் தர்ஷினி அருகே அவள் போக அவர்களோ ஏற்கனவே அவர்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.

தர்ஷினி, "இந்த டிரஸ் நல்ல இருக்கும் சொல்றேன் ல"

ராம், "நோ.. இல்ல.. நாகி கேவலமா இருக்கும். ஏன் கையில் இருக்கும் ப்ளூ டிரஸ் தான் சூப்பர்."

தர்ஷினி, "இல்ல, ரெட் கலர் தான் சூப்பர்"

ராம், "நோ வே, ப்ளூ தான்"

அவர்கள் கையில் கருப்பு வெள்ளை ட்ரெஸ்ஸஸ் சிலது கொடுத்த சங்கீதா,

சங்கீதா, "உங்க ஆட்டத்துக்கு இந்த கலர் தான் சரி. அதனால் இதில் ஒன்றை பாருங்க.."

பின், அர்ஜுன் மற்றும் பிங்கி அருகே சென்ற அவள் தலையில் கை வைத்து கொண்டாள். அந்த அளவுக்கு அங்க ஒன்னு நடந்து கொண்டு இருந்தது.

அதே மாலில் கார்த்தி தன் கட்டுப்பாடில் அனிதாவை மற்றோரு துணி கடையில் டிரஸ் எடுக்கும் பெயரில் பிடித்து வைத்து இருந்தான். அதுவும் கடந்த ரெண்டு மணிநேரமாக..

மாலின் வாசலில் அர்ஜுனை போலவே உடை அணிந்து கொண்டு, மூடி வெட்டி தாடி மீசை எடுத்து விட்டு உள்ளே நுழைந்தான் விக்ரம். சங்கீதா அல்லது பிங்கி யார் அவனை அந்த உருவத்தில் பார்த்தாலும் அவனை அர்ஜுன் என்று தான் நினைப்பாங்க அப்படி பக்காவாக இருந்தான் விக்ரம்.

**************************

கார்த்தி ரெண்டு மணிநேரமாக ரெண்டை டிரஸ் ஏ மாற்றி மாற்றி இப்படியும் அப்படியும் பார்க்கும் அழகை கண்டு அனிதா கடும் கோபத்தில் கத்தி கொண்ருந்தாள்.

அனிதா, "அடேய் பொண்ணு நானே வந்த ஐந்தே நிமிசத்தில் டிரஸ் எல்லாம் பார்த்துட்டேன். நீ இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கலாம் இருக்க?"

கார்த்தி, "பொறுத்தார் பூமி ஆழ்வார், இதை நீ கேள்விப்பட்டது இல்ல. பொறுங்கள் அனிதா மேடம் பொறுங்கள், போட்டியில் நம்ம ஜெயிக்க நல்ல ஆட்டம் மட்டும் போதாது. இன்னும் நடுவர்களை கவர நம்ம ஆட்டத்துக்கு தகுந்த உடையும் முக்கியம்."

அனிதா, "இப்போ என்ன சொல்ல வர? சீக்கிரம் இதையெல்லாம் பார்த்து முடிப்பியா மாட்டியா?"

கார்த்தி, "இன்னும் அரைமணிநேரம் தான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும். அப்பறம் நீ லெட்டர் போட்டு ஏமாற்றிய என் எதிரி ரிஷியின் முகம் போகும் போக்கை பார்த்து ரசிக்கலாம்."

அனிதா, "நீ பண்றது எல்லாம் பார்த்தால் எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி இல்ல. உண்மையை சொன்னால் எனக்கு சந்தேகம் தான் நீ டபிள் சைட் கோல் அடிக்கிற மாதிரியை இருக்கு."

கார்த்தி, "நான் ஏன் அப்படி பண்ணணும்? எனக்கு ரிஷியே பார்த்தாலே கோபா கோபமாக இருக்கு சொல்றேன் ல பின்ன அவனுக்கு போய் ஹெல்ப் பண்ணுவேன் எப்படி நினைக்கலாம். நான் ஜெய்கல என்றாலும் பரவல அந்த ரிஷி மட்டும் இதில் ஜெய்க்க கூடவே கூடாது."

அனிதா, "ரிஷி மட்டும் இல்ல. அந்த அர்ஜுன் ராம் கூட தான்."

கார்த்தி, "அந்த அர்ஜுன் பற்றி கவலை இல்ல அவன் ஒரு மொக்க பீஸ். ராம் ஜெய்ப்பதில் உனக்கு என்ன பிரச்சினை?"

அனிதா, "என்னமோ அந்த கேங்கில் யாருமே ஜெய்க்க கூடாது. அது தங்கையும் சேர்த்து தான்."

கார்த்தி, "போட்டியில் உறவு முறை எல்லாம் இல்ல. போட்டி போட்டி தான் அதை தெரிந்து கொள். இப்போ கூட ரிஷியை ஆடவிடமால் என்னால் பண்ண முடியும். ஆனால் எனக்கு வேண்டியது அவனை அந்த ஸ்டேஜ் ல ஜெய்க்கிறது தான். அப்போ தான் இந்த கார்த்தி யார் என அவனுக்கு தெரியும்."

அனிதா, "உன் கோபத்துக்கு காரணம் உன் தங்கச்சியா? இல்ல நீ காதலிக்கும் பெண்ணான அந்த அஞ்சலியா?"

கார்த்தி, "இந்த விரோதம் காதலுக்கு இல்லவே இல்லை. வேற வேற ஒரு விஷயம் இருக்கு அது போட்டி நாள் அன்று பார் தெரியும்."

அனிதா, "என்னமோ போ, ரகசியம் போல சொல்லிட்டு கடைசியில் காமெடி ஆ முடியாமல் இருந்தால் ஓகே."

கார்த்தி, "என்னை கிண்டல் பண்றது விட்டு எனக்கு டிரஸ் செலக்ட் பண்ணுவதில் ஹெல்ப் பண்ணு."

***************************

அர்ஜுன் மற்றும் பிங்கி அருகே சென்ற அவள் தலையில் கை வைத்து கொண்டாள். அந்த அளவுக்கு அங்க ஒன்னு நடந்து கொண்டு இருந்தது.

அது..

அங்கே பிங்கிக்கு டிரஸ் செலக்ட் பண்றேன் சொல்லிட்டு மொத்த துணி கடையும் திருப்பி போட்டது போல ஒரு துணி மலையே அடுக்கி வைத்து இருந்தான்.

பிங்கியோ தனக்காக அவன் டிரஸ் எடுக்கும் அழகை பார்த்து மெய் மறந்து நின்று கொண்டிருந்தாள். சங்கீதா வந்து கை சொடுக்கு போடும் வரை அவளின் மோக நிலை அப்படியே இருந்தது.

சங்கீதா, "என்னடி சைட் ஆ? நீ எப்படி பார்த்தாலும் அவனின் மரை மண்டைக்கு ஒன்னும் புரியாது புரிந்தாலும் அவன் கட்டி கொள்ள மாட்டான்."

பிங்கி, "சூ..சூ.. சத்தமா பேசாதே அவன் காதில் விழ போகுது. அப்பறம் ஏதாவது நினைக்க போறான்."

சங்கீதா, "ஒன்னும் நினைக்க மாட்டான், அப்படியே மனசில் நினைத்தாலும் வெளியே காட்டிக்க அவனுக்கு தைரியம் இல்ல."

பிங்கி, "சங்கி, இதுக்கு மேல் ஒரு வார்த்தை அவனை பற்றி சொன்ன நான் மனுஷிய இருக்கே மாட்டேன். உன் விக்கி பற்றி நான் சொன்னால் நீ சும்மா இருப்பியோ இல்லையோ என் வெங்கி பற்றி ஏதாவது தப்பா இது மேல் சொன்னால் நடப்பதே வேற.."

சங்கீதா, "நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கு? உன் ஆளுக்கு தைரியம் சுத்தமா இல்ல. அவன் மனசில் காதல் இருக்கு அதுவும் மேல அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இவ்வளவு ஏன் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாருமே தெரியும். பின் ஏன் இன்னும் அவனின் காதலை சொல்லல..?"

பிங்கி, "சொல்லுவான் சீக்கிரம் சொல்வான் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவன் மனசில் உறுத்தி கொண்டு இருக்கும் விஷயத்தை தவிர எல்லாமே சொல்வான். ஒரே நொடியில் நம்மையே குழப்பும் அளவுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்வான் அதில் எது உண்மை என நம்மால் கண்டே பிடிக்க முடியாது அப்படி உண்மை கலந்து பொய் சொல்வான். இப்போ கூட நம்ம பேசுவது அவனின் காதில் விழுந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பான். அவனை போய் கேட்டால் டிரஸ் ஏ ஆர்வமாக பார்த்துகொண்டு இருந்தேன் நீங்க சொன்னது ஒண்ணுமே காதில் விழவே இல்லனு பச்சையா பொய் சொல்வான்."

சங்கீதா, "இப்போ நீ சொன்னது கூட கேட்டு இருக்குமே"

பிங்கி, "ஆமாம் கேட்கும் அவனுக்கு பேசுவதை விட கவனிக்க பிடிக்கும். நம்மை சுற்றி பிரச்சினைகள் உண்டாக்கும் தேவையற்ற பேச்சுக்கள் விட அமைதியான நிலை ஊமை நிலை ரொம்பவே சூப்பர் என சொல்கிற நல்லவன். நீயே பார்த்து இருப்பியே விக்கி வந்ததிலிருந்து அவன் கிட்ட எல்லாரும் பேசியதை கணக்கில் எடுத்தால் என் வெங்கி பேசியது தான் ரொம்ப கம்மியா இருக்கும்."

சங்கீதா, "பில்டப் சூப்பர் உன் ஆளை விட்டு கொடுக்க மாட்ட போல? எனக்கு என்ன வந்தது எல்லாம் உன் தலையெழுத்து. கடவுள் உனக்கு நல்வழி காட்டட்டும்."

பிங்கியிடம் பேசிவிட்டு திரும்பி பார்த்த சங்கீதாவின் கண்ணில் துணி கடைக்குள் வரும் விக்ரம் கண்ணில் பட்டுவிட்டான். அர்ஜுனை மட்டும் ஏற்கனவே கவனிக்காமல் இருந்திருந்தால் உள்ளே வந்து கொண்டு இருப்பேன் அர்ஜுன் என்றே சங்கீதா கூட நினைத்து இருப்பாள்.

பின் அவனுக்கு சாகை காண்பித்து விட்டு சங்கீதா ஒரு trial ரூம் உள்ளே செல்ல அவளை தொடர்ந்து அதே ரூம் உள்ளே விக்ரம் சென்றான்.

இதை எதுவும் அறியாத ராம் உள்ளே சென்றது அர்ஜுன் என நினைத்து வெளியே நின்று அவன் ரூமே விட்டு வெளியே வரும் வரை காத்திருந்தான்.

பத்து நிமிடத்துக்கு பிறகு சங்கீதா வெளிய வர ராமை பார்த்து விட்டு,

சங்கீதா, "அவன் ரொம்ப மோசம் பார் உதட்டில் வைத்த லிப் ஸ்டிக் எல்லாம் போச்சு நான் திரும்பி போய் வைக்கணும்."

உடனே அவள் மற்றவர்களை தேடி போக..

ராம், "என்னது அந்த அர்ஜுன் என்ற அப்பாவி போய் இவளின் உதட்டில் இருந்த லிப் ஸ்டிக் அழித்தனா? எப்படி அழித்து இருப்பான்."

அவனை ரொம்ப யோசிக்க விடாமல் அர்ஜுன் உருவத்தில் வெளியே வந்த விக்ரமின் முகம் கன்னம் மற்றும் நெற்றியில் இருந்த உதடு தடமே சொன்னது உள்ளே என்ன நடந்து இருக்கும் என.

அதில் ஷாக் ஆன ராம்,

ராம், "அடேய் அர்ஜுன் இங்கே என்ன நடக்குது?"

விக்ரம், "என் கண்ணுக்கு மனுஷங்க தான் தெரிகிறார்கள். உனக்கு வேற ஏதாவது மிருகம் தெரிந்தால் நீ போய் நல்ல டாக்டர் ஆ போய் பார்.."

ராம், "பேச்சை மாட்டாமல் பதில் சொல்லு சங்கீதாவை எப்போடா கரெக்ட் பண்ண? இது அந்த முகமுடிக்கு தெரிந்தால் நீ நிலைமை என்னனு தெரியுமா?"

விக்ரம், "நீ இப்படி பேசுறது உன் ஆள் தர்ஷினிக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா?"

ராம், "அடேய் என்னடா இப்படி எல்லாம் கவுண்டர் கொடுக்கிற? அந்த முகமூடி மாதிரி நீயும் என்னை ஆஃப் பண்ற இது நியாயமே இல்லடா, இதுக்கு மேல் முடியாது..

விக்ரம், "முடியாது என்றால் போய் டாய்லெட் ல போய் முக்கி போ. அதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்ற?"

ராம், "ரைட் விடு இன்னிக்கு உன் கிட்ட எல்லாம் மொக்கை வாங்கனும் போல இருக்கும். இப்போ நடந்தது நான் யார் கிட்டயும் சொல்லமாட்டேன் அதே போல இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும். இதை அந்த முகமூடிக்கு பயந்து சொல்லல உன்னையே உயிராக லவ் பண்ற பிங்கியே நினைத்து சொல்றேன்."

விக்ரம், "சாரி நான் லவ் பண்றது சங்கீதாவை தான். அவளை தவிர என் மனதில் யாருமே இல்ல."

சொன்னவன் அன்னிக்கு இருந்து நகர்ந்து போக ஐந்து நிமிடம் நடந்து அதிர்ச்சியில் இருந்த ராம் பின் தன் நண்பர்களை தேடி போக அங்கே பிங்கிக்கு நல்லதா டிரஸ் பார்த்து முடித்த அர்ஜுனை கண்டவன் அவனை தனியாக அழைத்து..

ராம், "அர்ஜுன் இங்கே பார் அடுத்தவன் பொருளில் ஆசைப்படுவதே தப்பு இதில் நீ அடுத்தவனின் காதலி மேல் ஆசைப்பட கூடாது. அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் பார்த்துக்கோ."

அர்ஜுன், "லூசா டா நீ, என் மனசில் பிங்கி தான் இருக்கிறாள் இருப்பாள். அவளை தவிர யாரையும் நான் பார்க்கல எதில் எவனோ ஒருத்தன் காதலியை நான் ஏன் பார்க்க போறேன்?"

சொன்னது மட்டும் இல்ல அவனின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டி விட்டு சென்று விட்டான்.

அப்பறம் ராம் தான் அவன் பார்த்த சம்பவங்களை நினைத்து..

ராம், "நான் லூசா இல்ல இவன் லூசா. ஒரு தடவை சங்கீதா தான் உயிர் என சொல்கிறான். இன்னொரு பக்கம் பிங்கி தான் உயிர் என சொல்கிறான். உண்மையில் இவனுக்கு எத்தனை உயிர் டா கடவுளே.. கடவுளே.."

அடுத்த அத்தியாயத்தில் விக்ரமின் அடையாளம் இவர்களுக்கு தெரிய வரும் ஆனால் அதற்குள் அர்ஜுனின் நிலை தான் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகும்.

அதற்கு காரணம் விக்ரமா? இல்ல விஷ்ணுவா? என யாருக்கு தெரியும்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#24
வாராயோ வெண்ணிலாவே ...!! 21
அத்தியாயம் 21


விக்ரமின் ஆட்டம் அதோடு முடியல அர்ஜுன் மற்றும் பிங்கி உடை மாற்ற சென்ற நேரத்தில் ரிஷி மற்றும் அஞ்சலியிடம் கொஞ்ச விளையாட நினைத்தான்.

விக்ரம், "ரிஷி, என்னப்பா உன் உயிர் அதன் அந்த வெண்ணிலா இன்னுமா வரல..?"

தன் பேச வந்தாலே ஒன்று ரெண்டு வார்த்தையில் பதில் சொல்லிட்டு நகரும் அர்ஜுன் ஏன் தானாக வந்து பேசுறான் என புரியாது அவனின் கேள்விக்கு பதில் சொன்னான்.

ரிஷி, "என்ன அர்ஜுன் பண்றது நம்ம ஒருத்தர் மேல் அதிகப்படியான அன்பு வைத்தால் கஷ்டப்பட்டு தானே ஆகனும். என் கஷ்டம் இந்த காத்திருப்பு.."

விக்ரம், "எத்தனை வருஷம்?"

ரிஷி, "இதுவரை ஒன்பது வருஷம். சுனாமி வந்த அன்று தான் அவளை கடைசியாக பார்த்தது."

விக்ரம், "ஹ்ம்ம், அஞ்சலி பொண்ணு உன் ஜோடியின் அன்பு மனசை பார்த்தியா! செம்ம ல."

அஞ்சலி, "எனக்கு பிடிக்கல.."

விக்ரம், "என்ன பிடிக்கல?"

அஞ்சலி, "உண்மையில் அவள் தான் வருகிறாள் என நம்ப முடியல. அதை உண்மை என நம்பும் இவனின் நம்பிக்கை பிடிக்கல."

விக்ரம், "ரிஷி மனசில் காதல் இருக்கு அது தெரியுமா?"

அஞ்சலி, "அந்த காதல் யாருக்கு என்பது தானே கேள்வி?"

விக்ரம், "பதில் அவன் தானே சொல்லணும். ரிஷி கண்ணா சொல்லுப்பா சொல்லு.."

ரிஷி, "எனக்கு ரெண்டு பேர் மேல் காதல் இருக்கு. ஒன்னு என் வெண்ணிலா இன்னொரு என் எலி.. அஞ்சலி. ஆனால் ரெண்டு காதலும் வேற வேற.. ஒன்று எனக்கு மட்டும் சொந்தமான காதல் இன்னொரு காதல் பல பேரில் பங்கு கொண்ட காதல்."

விக்ரம், "ஹ்ம்ம் கேட்க நல்ல இருக்கே. அப்போ அஞ்சலி மேல் இருக்கும் காதல் எந்த வகையான காதல்?"

ரிஷி, "எனக்கு மட்டும் சொந்தமான காதல் என் எலி மேல் நான் கொண்ட காதல். ஆனால் இந்த காதலும் நான் என் நிலா மேல் வைத்த காதலும் எந்த வகையிலும் குறைந்தது இல்ல. அது பற்றி அவளே ஒரு நாள் உங்களிடம் சொல்வான்."

விக்ரம், "தெளிவா குழப்பிற! இருந்தாலும் வசனம் சூப்பர். அஞ்சலி பொண்ணு உன் பதில் என்ன?"

அஞ்சலி, "எனக்கு ஒண்ணுமே புரியல.."

விக்ரம், "ரிஷி என்னப்பா இது இந்த பொண்ணுக்கும் புரிய எங்களுக்கும் புரியல. சும்மா மர்ம பேச்சு இல்லாமல் அவளுக்கு புரிகிற விதத்தில் சொல்லு."

அஞ்சலி முன்னால் நின்றவன் அவளின் தலையை தன் விரலால் நிமிர்த்தி,

ரிஷி, "ஓய் எலி நல்ல என் கண்ணை பார்! அதில் உன் மேல் எனக்கு இருக்கும் காதலை பார்!. படிப்பு முடியும் வரை சொல்ல வேண்டாம் தான் நினைத்தேன். ஹ்ம்ம், எங்கே இந்த நிலாவின் பிரச்சனையில் உடனே சொல்ல வேண்டியதா போச்சு. ஐ லவ் யூ டி மை ஸ்வீட் எலி.. உன்னை பார்த்த நொடி முதல் நான் நானாக இல்ல. உன் கூடவே வாழ்ந்து உன்னையே கல்யாணம் செய்து கொண்டு உன்னை போல் சில லூசு குழந்தைகளை கொடுத்து இம்சை பண்ணணும் ஆசை, விருப்பம். என்னை ஏற்றுக்கொள்ள சம்மதமா?"

அஞ்சலி, "ஓகே சொல்லுவேன். ஆனால் உன் நிலா வந்த பிறகும் இதே வார்த்தை சொல்லு அப்போ ஓகே சொல்றேன்! சம்மதம் சொல்றேன்!!"

ரிஷி, "இப்படி கூட ஓகே சொல்லலாம் போல.. என்ன தர்ஷினி எப்போ நிலா வருவாள்?"

ராம், "அதை ஏன்டா அவள் கிட்ட கேட்கிற?"

ரிஷி, "அவள் கிட்ட கேட்பது பிடிக்கல என்றால் நீ சொல்லு, நிலா எப்போ வருவாள்.?"

ராம், "நான் என்ன ஜோசியக்காரனா? முக ரேகை பார்த்து ஜோசியம் சொல்ல?"

ரிஷி, "தெரியுது ல அப்போ வாயை மூடு. தர்ஷினி நீ சொல்லு"

தர்ஷினி, "ஹ்ம்ம் என்னை வச்சு காமெடி பண்ற மட்டும் தெரியுது. இப்படி ஒரு நிலை வரும் தெரிந்து இருந்தால் வில்லி கேரக்டர் ஏ தொடர்ந்து இருப்பேன். சரி சரி முறைக்கதே! நிலவனாகிய உன்னை தேடி உன் நிலா வருவாள் சீக்கிரம் வருவாள், வந்து உன் காதலியை அஞ்சலியை உன் கூட சேர்த்து வைப்பாள். உனக்கு அவள் மேல் இருக்கும் காதலிக்கும் ஓகே சொல்வாள் வில்லனின் சம்மதத்துடன்."

ரிஷி, "மகிழ்ச்சி..😎😎"

விக்ரம், "யாருக்கு யாரோ சரியா சங்கி..😍😍"

சங்கீதா, "சரியா சொன்ன பேபி..🤩🤩"

இருவரின் காதல் பரிமாற்றம் பார்த்த ராம் திரும்பி விக்ரமை தனியே அழைத்து கொண்டு,

ராம், "இங்க பார் அர்ஜுன், அடுத்தவனின் பொண்டாட்டிக்கு ஆசைப்படுறது போல தான் அடுத்தவன் காதலியை பார்ப்பது. இது சரி இல்ல அவள் அமெரிக்கா ல வளர்ந்த பொண்ணு கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பாள் அதை உண்மை நம்பி உன் பிங்கியின் காதலுக்கு துரோகம் பண்ணதே சொல்லிட்டேன்."

ராம் சங்கீதா பற்றி சொன்னதுக்கு கோபம் வந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல்..

விக்ரம், "எந்த நாட்டு பொண்ணு இல்ல எந்த நாட்டில் வளர்ந்த பொண்ணு என்பது விஷயம் இல்ல! யார் அவளின் மனசில் இருக்கிறார்கள் என்பது தான் விஷயம்!. இங்க பார் உன்னை நண்பன் என்கிற உறவை தாண்டி உன்மேல ஒரு மரியாதை வச்சு இருக்கேன். அதை நீயே கெடுத்து கொள்ளாத சொல்லிட்டேன். கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பது மெய். வெயிட் பண்ணு செல்லம் நடப்பதை பார் போக போக ஷாக் ல மயக்கமே வரும்."

பின் விக்ரம் அங்கு இருந்து செல்ல ராமின் பின்னே இருந்த கதவு கிட்ட இருந்து அர்ஜுன் மற்றும் பிங்கி வெளியே வந்தார்கள்.

அவர்கள் வெளியே வந்த அறை உடை மாற்றும் அறை. ஏற்கனவே என்ன நடக்குது என புரியாது முழித்த ராம் இந்த காட்சியை பார்த்தவன்

ராம், "அடேய் நீ மனிதனா? இல்ல பேய்யா? ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு இடத்தில் இருக்கே?"

அர்ஜுன், "பிங்கி நீ போய் பில் போடு நான் இவனுக்கு ஒரு பாடம் நடத்தி விட்டு வரேன்."

பிங்கி போன பிறகு ராமை நெருங்கிய அர்ஜுன் மற்றொரு கொட்டு கொட்டி விட்டு,

அர்ஜுன், "ஏன்டா உனக்கு பிரச்சினை? ரொம்ப நேரமா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்கே. முதலில் சங்கீதா பின்னாடி சுற்றினால்! சொன்ன இப்போ என்னை பேய் என சொல்ற. என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு மரியாதையாக வாயை முடி சும்மா இரு."

ராம், "இல்லனா என்னடா பண்ணுவே?"

அர்ஜுன், "பெருசா ஒன்னும் இல்ல. உன் மாமாவுக்கும் நம்ம கிளாஸ் டீச்சர் துர்கா மிஸ்க்கும் நீ மாமா வேலை பார்க்கிற மேட்டர் எல்லாம் சொல்லி ரெண்டு பக்கமும் பணம் கறக்கும் விஷயத்தை சேர்த்து உன் காதலி தர்ஷினி கிட்ட சொல்வேன். அப்போ உன்னை பற்றி அவள் நினைப்பு எப்படி மாறும் யோசித்து பார்."

ராம், "அடேய் இது ரொம்ப அநியாயம். என் மாமாவும் மிஸும் அவர்களே பார்த்து லவ் பண்ணது. என்னை பற்றி கேட்க வந்த நேரத்தில் மிஸ் ஏ பார்த்து அவர் காதல் சொல்ல, நம்ம மிஸ்க்கும் அவரை போக போக பிடித்து விட்டது. அப்பறம் என் பங்கு இதில் என்னடா இருக்கு.?"

அர்ஜுன், "ஹி..ஹி..ஹி.. அது எனக்கு தெரியும் உனக்கும் தெரியும் மற்ற யாருக்கும் தெரியாதே. அது போதும் உண்மையும் பொய்யும் கலந்து நான் சொல்ற கதையில் உன் லவ் கோவிந்தா! கோவிந்தா..!"

ராம், "அடேய் உன்னை ரொம்ப நல்லவன் நினைத்தேன்."

அர்ஜுன், "நான் நல்லவன் தான் என் பொறுமையை சோதிக்காத வரை.."

ராம், "யாப்பா சாமி நான் என்ன பண்ணனும் அதை சொல்லு"

அர்ஜுன், "பெருசா ஒன்னும் இல்ல. இனி லூசு மாதிரி ஒளாரமல் வாயை கண்ட்ரோல் ல வை அது போதும்."

ராம், "சரி சாமி, கண்ட்ரோல் ல வைக்கிறேன். நீயும் பிங்கியும் ஒரே அறையில் துணி மாற்றிய மர்மம் என்ன?"

அர்ஜுன், "அது உனக்கு தேவையற்ற வேலை."

ராம், "வாயில் ஓ போடாமல் உண்மையை சொல்லு! உள்ளே என்ன நடந்தது?"

அர்ஜுன், "நீ கற்பனை பண்ற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் டிரஸ் மாற்றிய பிறகு தான் அவள் அந்த அறைக்குள் வந்தாள். அப்போ என் டிரஸ் எல்லாம் ஃபிட் ஆ இருக்கா பார்த்து விட்டு வெளிய வந்தாள் நானும் அவளை தொடர்ந்து வெளியே வந்தேன் அப்போ தான் எங்களை பார்த்து நீ தேவையற்ற வசனம் பேசினே."

ராம் மனதில், ' ஒரே நேரத்தில் ரெண்டு இடத்தில் எப்படி இருந்தான். இவன் சொல்றதை பார்த்தால் கடந்த பத்து நிமிசம் இந்த அறையில் தான் இருந்து இருக்கான். அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் பேசியது யார் கூட? ஐயோ கடவுளே!! இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?'

அவர்கள் அங்கு இருந்து போன பிறகு மறைவில் இருந்து வெளிய வந்த விக்ரம், "பரவல, அப்பாவி! பயந்தக்கொளி! நினைத்த அர்ஜுன் கதை கட்டும் பழக்கம் மூலம் பிழைத்து கொள்வான். முடிந்தால் ஏதாவது கதை எழுதி போஸ்ட் பண்ண சொல்லணும். அவனுக்கு உண்மையான திறமை இருந்தால், எழுத்து சரியாக இருந்தால் எழுதும் கதைகள் நல்ல போகும். இந்த காதலை மாயம் போல் பரவி இருக்க இதை வைத்து ' காதல் எனும் மாயவலை ' என்கிற பெயரில் ஒரு கதை எழுத சொல்லணும்."

பில் எல்லாம் போட்டு விட்டு மற்றவர்கள் வெளியே போகும் வரை காத்திருந்தான் விக்ரம்.

********************

ரிஷி மற்றும் அவனின் நண்பர்கள் கூட்டம் வெளியே வர அப்போது தான் பார்த்தார்கள் கார்த்தி மற்றும் அனிதா இருவருமே சிரித்த முகத்தோடு வெளியே வருவது.

ரிஷி, "அங்க பாருங்க என் வில்லன் அர்ஜுனின் எக்ஸ் லவ்வர் கூட வருவதை.."

அர்ஜுன், "டேய்.."

ரிஷி, "ஓகே ஓகே சாரி.. உன்னை காதலிக்கிறேன் சொன்ன பொண்ணு."

ராம், "அர்ஜுன் கூட தானே அவளை காதலிக்கிறேன் என சில வருடத்துக்கு முன்னாடி சொன்னான்."

அர்ஜுன், "அப்படியா ராம், சரிடா சரிடா தர்ஷினி! தர்ஷினி மா!"

தர்ஷினி, "சொல்லு அர்ஜுன்"

அர்ஜுன், "நம்ம ராமின் மாமாவும் நம்ம கிளாஸ் டீச்சர்.."

அவனின் வாயை தன் கையால் முடிய ராம், "அது ஒன்னும் இல்ல தர்ஷ், என்னை பற்றி கேட்க அன்னிக்கு எங்க மாமா நம்ம கிளாஸ் டீச்சர் ஆ பார்க்க வந்தார் ல அது உனக்கு நினைவு இருக்கா? இல்லையா? என்று கேட்கிறான்."

தர்ஷினி, "இல்லயே, அவனின் பாடி லாங்குவேஜ் வேற ஏதோ சொல்லுதே?", என அவனை அடிக்கிற மாதிரி கையை வைத்து கேட்க அதில் பயந்த ராம்.

ராம், "அர்ஜுன், உன் கையை காலாக நினைத்து கேட்கிறேன் பிளீஸ் என்னை காப்பாற்று..🙏🙏"

அவனை பாவமாக பார்த்த அர்ஜுன், "தர்ஷ், விடு நான் சின்னதா காமெடி பண்ண நினைத்தேன். ராம் ரொம்ப நல்ல பையன் தான் ஆனால்.."

தர்ஷினி, "என்ன ஆனால் சொல்லு?"

அர்ஜுன், "கொஞ்சம் வாலு, வாய் கொழுப்பு ரொம்ப மற்றபடி குழந்தை.."

தர்ஷினி, "அதிகம் பேசாத நீ சொல்ற நம்புறேன்.. நம்புறேன்."

அஞ்சலி, "ஓய்.. நீங்க பேசுவதை ஸ்டாப் பண்ணுங்க. தர்ஷு உன் அண்ணன் இங்க தான் வருகிறார்."

அவர்களை நெருங்கிய கார்த்தி ரிஷிக்கு கை கொடுத்து, "ஹலோ என் வில்லனே..🙏🙏"

ரிஷி, "ஹலோ மிஸ்டர் கார்த்தி, கொடிய வில்லனே..🙏🙏"

கார்த்தி, "போட்டிக்கு எல்லாம் டிரஸ் வாங்கியாச்சு போல.."

ரிஷி, "எப்படி தெரியும்?"

கார்த்தி, "உங்க கையில் எல்லாம் துணி பைகள். எல்லாம் டிசைன் டிசைன் ஆ இருக்கு. அடுத்த வாரம் டான்ஸ் போட்டி இருக்கு அப்போ அதுக்கு தானே இந்த டிரஸ் எல்லாம்."

ரிஷி, "ஹ்ம்ம், உன்னை என்னமோ நினைத்தேன் அறிவாளி தான் நீ.."

கார்த்தி, "நன்றி🙏. என்ன பண்றது உனக்கு வில்லனாக இருக்கணும் என்றால் இப்படி தானே இருக்கணும்."

ரிஷி, "சூப்பர். உன் வில்லத்தனத்தை எப்போ காட்ட போற?"

கார்த்தி, "அடுத்த வார டான்ஸ் போட்டி ல.."

ரிஷி, "ஐம் வெயிட்டிங்..😎😎"

அவர்கள் நடுவே வந்த ராம், "ஆமாடா நீ இளைய தளபதி விஜய் படத்தின் வசனம் பேசுற? அடிங்கு ஏதாவது புறியும்ப்படி பேசு.."

கார்த்தி, "ராம்.. என் அருமை மச்சான் என் தங்கை கூட காதல் எப்படி போகுது?"

ராம், "உங்களுக்கு எப்படி தெரியும்?"

கார்த்தி, "எல்லாம் தெரியும். என் தங்கச்சி உன்னை பற்றி எல்லாம் சொல்லி விட்டாள். அவளின் சந்தோசம் தான் எங்க சந்தோசம்.. ஆனால் ராம் படித்து முடித்து வேலை கிடைக்கும் வரை கவனம். நான் அவளுக்கு நல்ல அண்ணன் தான் அதே நேரத்தில் அவளுக்கு யாராவது துரோகம் பண்ண கொலை கூட பண்ண தயங்க மாட்டேன்."

ராம் பயத்தில் பார்க்க அவனின் தோளில் தட்டி கொண்டு கார்த்தி, "பயப்பட வேண்டாம் மச்சா, தப்பு செய்யாத வரை உனக்கு ஆபத்து இல்ல."

ரிஷி கிட்ட நெருங்கிய அனிதா, "என்ன ரிஷி யாருக்கோ வெயிட் பண்ற மாதிரி இருக்கு?"

ரிஷி, "உனக்கு எப்படி தெரியும்?"

அனிதா, "அது வந்து.. அது வந்து.."

ரிஷி, "அது எதுக்கு விடு! எங்களுக்கு வேலை இருக்கு. அரை நாள் டிரஸ் வாங்கவே போச்சு. நாங்க போய் டான்ஸ் பயிற்சி பண்ணும். வாங்க நண்பர்களே போலாம்."

அவங்க அங்கு இருந்து போக சரியா அதே நேரத்தில் விக்ரம் வெளிய வர அவனை பார்த்த அனிதா, "அர்ஜுன்.. ஐயோ எப்படி இப்போ தானே நீ, வெளியே போன! அதற்குள் உள்ள இருந்து.. வெளியே வர?"

அவள் யார் என்பது தெரியாமல் பார்த்த விக்ரம், "ஆமா நீ யார்?"

அனிதா, "டேய், அனிதா டா.."

விக்ரம், "அனிதா.. ஓகே நினைவு வந்து விட்டது. சாரி எனக்கு டைம் இல்ல நான் போகணும். மை லவ் எனக்காக வெயிட்டிங்.. byeee செல்லம். அட கார்த்தி, நீ தர்ஷினியின் அண்ணன் தானே. அவளின் ஃபோனில் ஃபோட்டோவா பார்த்தது. ஜாலியா இருங்க.. சந்தோசமா இருங்க."

அவன் மால் விட்டு போக, இங்கே கார்த்தி மற்றும் அனிதா தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தார்கள்.

கார்த்தி, "அனிதா இவன் அர்ஜுன் தானே இல்ல வேற ஒருத்தனா?"

அனிதா, "பார்க்க அவனை மாதிரி தான் இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிஷி ராம் கூட தானே அவன் இருந்தான். ஆனால் திடீர் இந்த கடைக்குள் இருந்து எப்படி?"

கார்த்தி, "ஒருவேளை அவன் பேயா இருப்பானோ?"

அனிதா, "இல்ல அவன் மாதிரி வேற ஒருத்தனா?"

கார்த்தி, "உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க ஓகே.. ஆனால் அதில் ரெண்டு பேர் ஒரே இடத்தில் ஒரே வயசில் ஒரே உடையில் ஒரே ஹேர் ஸ்டைல் ல.. எப்படி?"

அனிதா, "ஒன்னு பண்ணுவோம். இந்த எப்படி? எப்படி? என கேள்வி விட்டுட்டு நம்ம வேலை பார்போம். அது நம்ம மூளைக்கும் நல்லது மனசுக்கும் நல்லது."

அது கூட சரி தான் என கார்த்தி அவளோடு கிளம்பினான்.

அதே நேரத்தில் ஒரு கார் அர்ஜுனை இடித்து விட்டு போனது, அந்த நேரத்தில் எப்படியோ ரிஷி அவனை நகர்த்த காயம் பெருசாக படாமல் அவன் காலில் அடிப்பட்டு கத்தி கொண்டு இருந்தான்.

காரில் இருந்த சில பேர் நினைத்தது நடக்காத ஏமாற்றத்தில் போய் விட்டார்கள். ரிஷி ராம் இருந்த பதற்றத்தில் கார் நம்பர் கவனிக்கவில்லை.

மால் விட்டு வெளியே வந்த விக்ரம் அதனை பார்த்து அர்ஜுன் கிட்ட ஓடி வந்தான்..

விக்ரம், "அர்ஜுன்! அர்ஜுன்!! என்னடா ஆச்சு.."

சங்கீதாவை தவிர எல்லாரும் அது அர்ஜுனின் சகோதரன் சத்யா என நினைக்க அர்ஜுன் மட்டும், "அடேய் விக்ரம், பேசுறது விட்டு ஹாஸ்பிடல் கூட்டி போ!! வலி உயிர் போகுது.."

விக்ரம், "நான் தான் விக்ரம் எப்படி உனக்கு தெரியும்?"

அர்ஜுன், "டேய் விசாரிக்கும் நேரமா இது? எல்லாம் ஹாஸ்பிடல் போய் பார்த்துக்கோ.. பிளீஸ்.🤯🤯"

அர்ஜுனின் கத்தல் ஒரு புறம், அர்ஜுன் மற்றும் விக்ரமின் உருவ ஒற்றுமை ஒரு புறம், பிங்கியின் அழுகை ஒரு புறம் மற்றும் ராமின் கேள்விக்கு பதில் கேட்க சந்தோசம் ஒரு புறம் என ஹாஸ்பிடல் நோக்கி இரு கார்களில் சென்றார்கள்.

ஒரு காரை ரிஷி ஒட்ட அவன் அருகே அஞ்சலி அமர்ந்து வர, பின் பக்க இருக்கையில் தன் மடியில் அர்ஜுனின் தலையை வைத்து கொண்டு பிங்கி அழ அவன் வலியில் முனங்க..

மற்றொரு காரை விக்ரம் ஒட்ட அவன் அருகே ராம் அவனை உற்று பார்த்தவரே அமர்ந்து வர, பின் இருக்கையில் சங்கீதா மற்றும் தர்ஷினி இருந்தார்கள்.

ஹாஸ்பிடலில் அவனுக்கு சிகிச்சை செய்த டாக்டர், "சின்னதா காலில் எலும்பு முறிவு. இன்னும் ரெண்டு மாசத்துக்குள் எலும்பு எல்லாம் கூடி விடும். மற்றப்படி ஹி இஸ் அல்ரைட். என்ன அடுத்த ரெண்டு மாசத்துக்கு எழுந்து நடக்க கஷ்டமாக இருக்கும்."

சங்கீதா, "ஆனால் டாக்டர், அடுத்த வாரம் ஒரு டான்ஸ் போட்டியில் அவன் பங்கு பெறவேண்டும்."

டாக்டர், "டான்ஸ் தானே நொண்டி நொண்டி ஆட சொல்லுங்க.."

சங்கீதா, "என்ன இப்படி சொல்றீங்க?"

டாக்டர், "பின்ன இப்போதைக்கு ஒரே காலில் நிற்பதற்கே கஷ்டம் சொல்றேன். இதில் டான்ஸ் சொன்ன வேற என்ன சொல்றது? இங்க பார் மா எலும்பு முறிவு சின்னது தான் ஆனால் இப்போதைய நிலையில் அந்த பையனின் வலது கால் ரொம்ப அழுத்தமா கீழே படவே கூடாது. அப்பறம் ரொம்ப வலிக்க ஆரம்பித்து விடும் எலும்பு கூடுவது கூட இன்னும் ரெண்டு மூன்று மாசம் இழுக்கும்."

டாக்டர் சொல்லிவிட்டு போய் விட..

அவர் சொன்னது கேட்டு பிங்கி, "சரி விடுங்க, நடப்பது எல்லாம் நன்மைக்கே டான்ஸ் இல்லனா என்ன அதன் பாட்டி போட்டி இருக்கே அதில் கலந்து கொள்வோம். நீங்க யாருமே வருத்தப்பட வேண்டாம்."

மற்றவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது, பின் விக்ரம் பக்கம் தலையை திரும்பிய எல்லாருமே அவனை கேள்வி நிறைய விழிகளில் பார்த்தார்கள். ரிஷி மட்டும் விக்ரமை பார்த்து..

ரிஷி, "அவனை கொல்ல நடந்த விபத்து இது. யார் பிரச்சினைக்கும் போகாதவன் அவன். வாய் திறந்து அதிகம் பேசாதவன் அவன். அப்போ அவனை போலவே உருவ ஒற்றுமையில் இருக்கும் உனக்கோ இல்லை அவனின் கூட பிறந்த சகோதரன் சத்யா அவனுக்கோ பிளான் பண்ணது தான் இது. இல்ல இல்ல, அந்த சத்யா இப்போ டெல்லியில் இருக்கான் அவனை போடணும் பார்த்தால் இங்க வர வேண்டியது இல்ல. அப்போ நீ தான் காரணம் உன்னை கொல்ல.. போட வந்த ஆட்கள் அவர்கள். ஏன்? அதுக்கும் இத்தனை நாள் நீ முகமூடியில் இருந்ததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?"

விக்ரம், "முதலில் அர்ஜுனை போய் பார்ப்போம். அவன் முன்னாடி எல்லா உண்மையும் சொல்றேன்."

அவர்கள் உள்ளே செல்ல பெட் ல தன் கை நகங்களை எல்லாம் கடித்து முடித்து விட்டு கோபம் அடங்காத அர்ஜுன் தன் கை விரல் நுனிகளில் இருந்த தோலை எல்லாம் கடித்து வந்த ரத்தம் எல்லாம் குடித்து கொண்டு இருந்தான்.

அவன் கண்களோ கோபத்தில் சிவந்து இருந்தது.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#25
வாராயோ வெண்ணிலாவே ...!! 22
அத்தியாயம் 22


அவர்கள் உள்ளே செல்ல பெட் ல தன் கை நகங்களை எல்லாம் கடித்து முடித்து விட்டு கோபம் அடங்காத அர்ஜுன் தன் கை விரல் நுனிகளில் இருந்த தோலை எல்லாம் கடித்து வந்த ரத்தம் எல்லாம் குடித்து கொண்டு இருந்தான்.

அவன் கண்களோ கோபத்தில் சிவந்து இருந்தது.

மற்றவர்கள் அவனின் நிலையை பார்த்து தலையில் அடித்து கொள்ள பிங்கியோ அவன் அருகே சென்று காதை திருக்கி..

பிங்கி, "எத்தனை தடவை சொல்றது நகத்தை கடிக்கதே கடிக்காதே என. இனி அங்க என்ன வாழுது கடிக்கிற? அடேய் விரல் சதையை கூட சாப்பிட்டு கிட்டு இருக்கே.. பசிக்குது என்றால் சொல்லு போற வழியில ஏதாவது வாங்கி தரோம் சாப்பிடு. அதை நகத்தை கடிப்பது, விரல் சதையை சாப்பிடுவது, ரத்தம் குடிப்பது என இருக்கே."

முகத்தை பாவமாக வைத்து கொண்டு அர்ஜுன், "நான் என்ன பண்றது? உனக்கே தெரியும் ல எனக்கு கோபம் அவ்வளவு சீக்கிரம் வாராது அப்படி வந்தால் இப்படி தன் என்ன பண்றது தெரியாமல் நகத்தை கடிப்பேன். நகம் எல்லாம் போச்சு அதன் ரத்தம் வர அளவுக்கு இப்படி.."

பிங்கி, "அப்படி என்ன கோபம்?"

அர்ஜுன், "எல்லாம் இந்த இழவு பிடித்த விக்ரம் தான் காரணம்.."

விக்ரம், "ஏய்! ஏய்!! மரியாதை மரியாதை"

அர்ஜுன், "உனக்கு என்னடா மரியாதை? நீ கெட்ட கெடுக்கு நான் ஏன்டா மரியாதை தரணும்."

விக்ரம், "நான் என்னடா பண்ணேன்?"

அர்ஜுன், "கடந்த ரெண்டு நாளாக நீ பண்ணது எல்லாம் தெரியும், சத்யா சொல்லிட்டான்."

விக்ரம், "எப்படி அவனுக்கு வித்தியாசம் தெரிந்தது."

அர்ஜுன், "முதலில் தெரியல அப்பறம் நானே போன் பண்ண போய் தெரிந்தது. மிஸ்டர் விக்ரம் என்னை பற்றி உனக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கு அது எனக்கு போன் பண்ண பிடிக்காது. அப்படியே பண்ணாலும் ஐந்து நிமிடத்துக்கு மேல் பேச மாட்டேன். நீயோ சத்யா கூட ஒரு மணிநேரம் பேசி இருக்கே அதோடு எனக்கு அவன் கூட பிறந்தவன் தான் ஆனால் எனக்கு அவனின் சில குணங்கள் பிடிக்காது. புகை பிடிப்பது, மது அருந்துவது என சில பழக்கம் காலேஜ் போன முதல் நாளில் இருந்து பழகி கொண்டான். அந்த பழக்கத்தை விடு சொன்னேன் கேட்கல அதனால் நான் அவன் கூடவே பேசுவதை விட்டேன். இப்போ என்னை விருப்பு ஏற்ற அவன் பெண்கள் விஷயத்தை பற்றிய அவன் ஆர்வம் சொல்ல போன் செய்து இருக்கான் சும்மா விளையாட்டு அவன் பேசுவதை நீ சீரியஸ் ஆ எடுத்து அறிவுரை சொல்லி இருக்கே. அதில் காண்டு ஆகி பேசியது நீ என தெரியாது நான் என நினைத்து ஒரு பொண்ணுக்கிட்ட கடி வாங்கிட்டான். ஏன்டா? ஏன்டா இப்படி செய்த நானே பேசி இருந்தால் கூட அந்த தப்பை செய்ய விட்டு இருக்க மாட்டேன்."

விக்ரம், "என்னை பொறுத்தவரை நான் சரியாக தான் பேசினேன் உன்னை விட என் அறிவுரை சரி தான்."

அர்ஜுன், "எவ்வளவு சொன்னோம் என்பது இல்ல விக்ரம். என்ன சொன்னோம் என்பது தான் விஷயம்."

விக்ரம், "சரிடா, நீ சொல்ற விஷயத்துக்கே வரேன். நீ என்ன பேசி இருப்பாய் அதை சொல்லு."

அர்ஜுன், "பெருசா ஒன்னும் இல்ல ஆல் தே பெஸ்ட், வாழ்த்துக்கள் சொல்லி போனை வைத்து இருப்பேன்."

விக்ரம், "அடச்சீ இது எப்படிடா தீர்வு ஆகும்?"

அர்ஜுன், "எல்லாருக்குமே ஒரே விதத்தில் அறிவுரை வேலைக்கு ஆகாது விக்ரம். சில இடத்தில் வார்த்தைகள் பல தேவை, சில இடத்தில் வார்த்தையற்ற மவுனம் அதன் பதில்."

விக்ரம், "அப்போ அவனுக்கு எது சரியான வழி?"

அர்ஜுன், "சத்யா ஒரு குண்டாக மண்டாக பேர்வழி. நீ சொல்றது எதிராக தான் எல்லாம் செய்வான். அவன் நல்லவன் தான், இந்த காலத்துக்கு ஏற்ற விதத்தில் வாழும் ஒருவன் அவன். அவன் பிரச்சினையே எல்லா இடத்திலும் பெஸ்ட் என பெயர் எடுக்கணும் இருந்தும் யாருக்குமே பாதிப்பு இல்லாத விதத்தில் செயல்படுத்த பார்ப்பான். நீ பேசிய ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடும் அளவுக்கு போய்ட்டான்."

விக்ரம், "யாப்பா சாமி சாரி. இப்போ முடிவு தான் என்ன? அவன் மாறினானா? இல்லையா?"

அர்ஜுன், "அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் போவோம்."

******************

அர்ஜுன் மற்றும் பிங்கி, பார்வதி பாட்டி கிட்ட இருந்து பாட்டு கற்று விட்டு மேல வரும் சத்தம் கேட்ட விக்ரம், சத்யாவுடனான பேசி உடனே முடித்து விட்டு எடுத்த போனை எடுத்து இடத்தில் இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டான்.

அர்ஜுன், "சரி பிங்கி, நீ போய் தூங்கு நேரம் ஆச்சு."

பிங்கி, "ஓகே நாளைக்கு நம்ம அந்த மாலுக்கு போறோம் ல?"

அர்ஜுன், "ரொம்ப வெயிலா இருக்குமே"

பிங்கி, "சென்னையில் பிறந்து சென்னை ல வளர்ந்த உனக்கு ஏன் வெயில கண்டால் அலர்ஜி?"

அர்ஜுன், "தெரியல, வெளிச்சம் விட எனக்கு இருட்டு தான் பிடித்து இருக்கு."

பிங்கி, "சூரிய வெளிச்சம் உடலுக்கு நல்லது."

அர்ஜுன், "என் உடல் எரிவது எனக்கு தானே தெரியும். என்னால் குளிரை தாங்க முடியும் ஆனால் சுட்டை இல்ல. சரி ரொம்ப ஓவர் ஆ போகுது நாளைக்கு சீக்கிரம் எழுந்து டான்ஸ் பிராக்டீஸ் செய்வோம் கொஞ்ச நாள் தான் இருக்கு."

பிங்கி, "சரி அதற்கு முன் ஒரு விஷயம், உண்மையில் ரிஷிக்கு லெட்டர் போட்டது அப்பறம் மெசேஜ் செய்வது சுனாமியில் காணாமல் போன அந்த வெண்ணிலா தானா?"

அர்ஜுன், "இருக்கலாம் தெரியல.."

பிங்கி, "இது என்னடா பதில்?"

அர்ஜுன், "அடுத்தவர் பிரச்சனையில் தலையிட எனக்கு விருப்பம் இல்ல. நீயும் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது."

பிங்கி, "ஏய்!! அவன் நம்ம ப்ரெண்ட் டா"

ரிஷி, "நான் இல்லனு சொல்லல, அப்படியே நம்ம அவனின் ப்ரெண்ட் ஆ இருந்தாலும் ஒரு அளவுக்கு அவனின் விஷயத்தில் தலையிட முடியாது."

பிங்கி, "இது தப்பு இல்ல"

அர்ஜுன், "அவன் கதையில் அவன் தானே ஹீரோ. என் கதையில் நான் தான் ஹீரோ என்ன ரெண்டு கதைகள் இங்க அங்க போய்ட்டு போய்ட்டு வருது. லிங்க் எங்கனு தான் தெரியல"

பிங்கி, "சரி குட் நைட்..😴😴😴"

அர்ஜுன், "குட் நைட்..😴😴"

அவளை அனுப்பி விட்டு தன் அறைக்கு வந்தவன் என்றும் இல்லாத அதிசயமாக தன் போனை பார்த்தான். அதில் வாட்ஸ்அப் போனவன் அதில் சத்யாவுடன் ஒரு மணிநேரம் பேசியதற்கான ஹிஸ்டரி இருந்தது. அவசரத்தில் போன விக்ரம் அந்த ஹிஸ்டரி ஏ அழிக்க மறந்து விட்டான்..

அர்ஜுன், "என்னடா இது மிஸ்டு கோல் போல இல்லாமல் பேசியது போல இருக்கு. ஒருவேளை ரிஷி இல்ல ராம் பேசி இருப்பங்களோ? சரி நாமே போன் பண்ணி கேட்போம்."

அவன் பண்ண வாட்ஸ்அப் வீடியோ கோல் எடுத்த சத்யா, "என்னடா இப்படி தானே பேசி முடித்தோம்! திரும்பி என்ன?"

அர்ஜுன், "மிஸ்டர் சத்யா, நான் எப்போ உங்க கிட்ட பேசினேன்."

சத்யா, "எப்போவா பத்து நிமிடத்துக்கு முன்னாடி தான். அட இந்த பத்து நிமிடத்துக்குள் மீசை தாடி எல்லாம் வளர்ந்து விட்டது போல! உண்மையே சொல்லு இது ஒட்டு மீசை தாடி தானே?"

அர்ஜுன், "மிஸ்டர் சத்யா, பொய் சொல்லத்தீங்க!! நான் போன் எடுக்கவே இல்ல. போன மாசம் பேசியது தான் அப்பறம் இப்போ தான் பேசுறேன்."

சத்யா, இல்லடா அர்ஜுன், நேற்று ஒரு மணிநேரம் இன்னிக்கு ஒரு மணிநேரம் பேசினோம். இங்க பார் என் உதட்டில் கழுத்தில் இருந்த கடி காயம் பற்றி எல்லாம் சொன்னேன் ல.."

அர்ஜுன், "என்னது கடியா, ஏதாவது நாய் கடித்து விட்டதா? இல்லயே அப்படி இருந்தாலும் கை கால் தானே கடிக்கும் உதட்டில் கடி அது என்ன உன் லவ்வர் ஆ? பொண்டாட்டியா?"

பின் தான் ஏதோ ஒரு தப்பு இருக்கு என்பது இருவருமே உணர்ந்து நேற்று இரவு இன்று இரவு பேசியது எல்லாம் சத்யா சொல்ல அதனை கேட்ட அர்ஜுன், "மிஸ்டர் சத்யா, அப்போ இந்த வீட்டில் நம்ம முக சாயலில் ஒருத்தன் இருக்கான் அவன் கண்டிப்பா அந்த விக்ரம் தான். இங்க வந்ததிலிருந்து முகமூடி போட்டு கொண்டு சுற்றி கொண்டு இருக்கான். காரணம் இப்போ தானே புரிகிறது எல்லாம் இங்க எல்லாரையும் ஏமாற்ற தான்."

சத்யா, "அது எப்படி நடக்கும்?"

அர்ஜுன், "நமக்கும் அவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல! என் விஷயத்தில் எப்படி நீயோ அதே போல தன் விக்ரம் விஷயத்தில் அவனின் அண்ணன் ஆதித்யா. மொத்தம் நான்கு பேர் இருக்கோம் ஒரே சாயலில்."

சத்யா, "அப்போ நம்ம பிறப்பில் ஏதோ மர்மம் இருக்கு போல ."

அர்ஜுன், "ஹ்ம்ம், அப்படி தான் தெரிகிறது."

சத்யா, "அது தெரிந்து கொள்ள வேண்டாமா?"

அர்ஜுன், "எனக்கு அறிந்து ஒன்னும் ஆக போவது இல்ல. உங்களுக்கு எப்படி மிஸ்டர்... சத்யா?"

சத்யா, "இங்க இருந்து நான் என்ன கண்டுபிடிப்பது?"

அர்ஜுன், "அப்போ ஃப்ரீ ஆ விடுங்க.."

சத்யா, "சரி அந்த விக்ரம் விஷயத்தை விடு! என் விஷயத்துக்கு வா நான் ஒரு பொண்ணுக்கிட்ட கடிப்பட்டேன் சொன்னேன் ல அதற்கு உன் பதில் என்ன?"

அர்ஜுன், "பதிலுக்கு போய் கடிங்க இல்ல வாயை மூடி படிக்கிற வேலை பாருங்க மிஸ்டர்.. சத்யா."

சத்யா, "நீ எல்லாம் ஒரு அண்ணன் ஆ?"

அர்ஜுன், "நம்மில் யார் முதலில் பிறந்தார்கள் தெரியாதே. அப்போ மிஸ்டர் சத்யா நீங்க கூட அண்ணன் தான்"

சத்யா, "நான் வேற இன்னும் சில அறிவுரை சொல்வாய் நினைத்தேன்"

அர்ஜுன், "என்ன அறிவுரை?"

சத்யா, "இல்ல என்னை கடித்த பொண்ணை லவ் பண்ண சொல்வாய் நினைத்தேன்."

அர்ஜுன், "நான் சொன்னதை நீங்க எப்போ கேட்டு இருக்கீங்க!! மிஸ்டர்.. சத்யா"

சத்யா, "பிளீஸ் டா விளையாடாமல் சொல்லு. நான் இப்போ செய்ய நினைத்தது தப்புன்னு மனசு சொல்லுது. புகை பிடிப்பது, மது அருந்துவது போல இது இல்ல இது வேற மொத்தமா வேற."

அர்ஜுன், "வேற என்றால் என்ன சொல்ல வரீங்க?"

சத்யா, "இப்படி நட்பு என சொல்லி தொட நினைத்தது தப்பு என?"

அர்ஜுன், "ஓ அப்போ காதல் என்ற பேரில் தொடுவது சரியா மிஸ்டர்.. சத்யா?"

சத்யா, "பிளீஸ் டா நான் என்ன செய்யனும் சொல்லு! நீ இனி சொல்வதை எதிர்ப்பு இல்லாமல் கேட்கிறேன்."

அர்ஜுன், "உங்க மனசை கேளுங்க மிஸ்டர்.. சத்யா! மனம் பொய் சொல்லாது. நமக்கு எது நன்மையோ அது சொல்லும்."

சத்யா, "இப்போ என் மனசு அந்த ஷிவானி பெண்ணுக்கு துரோகம் செய்கிற மாதிரி குற்றம் சொல்கிறது."

அர்ஜுன், "ஏன்?"

சத்யா, "அவளின் நட்பை தப்பான வழியில் எடுத்து சென்றேன். அவளின் மனசை மாற்றி ' friends with benefits ' கலாச்சாரத்துக்கு கொண்டு வர பார்த்தேன். அது தப்பு தானே?"

அர்ஜுன், "ஹ்ம்ம், அதற்கு சம்மதம் சொன்னதும் அந்த பெண்ணின் தவறு தானே?"

சத்யா, "இல்ல என்னை போல அவளுக்கும் வயசு கோளாறு. நான் மனசு மாறியது சொன்னால் அவளும் கேட்பாள்."

அர்ஜுன், "கேட்டு என்ன செய்ய போகிறாள் அந்த பெண் உன்னை விட்டு வேற யாருடனும் போக மாட்ட எப்படி சொல்ற?"

சத்யா, "இல்ல மாட்ட, அவளுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும்."

அர்ஜுன், "இந்த உறவின் பெயர் நட்பா? காதலா?"

சத்யா, "காதலா தெரியல ஆனால் அவளை பிடித்து இருக்கு."

அர்ஜுன், "இன்னும் அடிக்கடி கடி வாங்க போறீங்களா மிஸ்டர்.. சத்யா?"

சத்யா, "அதை நினைத்து தான் பயமா இருக்கு. இனி அவளை நெருங்கும் போது உடல் முழுசும் ஒரு கவசம் போட்டுக்கணும் போல.."

அர்ஜுன், "ஆல் தே பெஸ்ட்.. வாழ்த்துக்கள்"

சத்யா, "எதுக்கு?"

அர்ஜுன், "என்னை போல காதலில் விழ"

சத்யா, "பிங்கி கிட்ட எப்போ சொல்ல போற, உன் காதலை?"

அர்ஜுன், "நாளைக்கு தான். அவளின் மனசு புரிந்து இருந்தும் இத்தனை நாள் அவளுக்கு நான் சரியானவன் இல்லனு நினைத்தேன். ஆனால் அவளின் காதல் வலிமை, பார்வையை தாங்க முடியல. அவளை கஷ்டபடுத்த கூடாது நினைத்து அவளின் காதலை ஒதுக்குவது கூட கஷ்டம் தருவது போல தானே.."

சத்யா, "அப்போ அர்ஜுன் வெங்கியா மாறி காதலிக்க போற அப்படி தானே?"

அர்ஜுன், "யெஸ்.."

சத்யா, "சத்யா லவ்ஸ் ஷிவானி , அர்ஜுன் என்கிற வெங்கி லவ்ஸ் பிங்கி என்கிற பிரியா."

********************

உண்மை தெரிந்த பிறகு விக்ரம் தலை சொரிய பிங்கி அர்ஜுன் முன்னால் சென்று..

பிங்கி, "சரி இப்போ சொல்லு.."

அர்ஜுன், "என்ன சொல்லணும்?"

பிங்கி, "ஐ லவ் யூ!! சொல்லு"

அர்ஜுன், "சரி, ஐ.. லவ்.. யூ.."

பிங்கி, "உன் லவ் ல ஃபீல் இல்ல.."

அர்ஜுன், "என்ன பண்றது கால் வலிக்குது அதில் இவ்வளவு தான் ஃபீல் வரும்."

பிங்கி, "இப்படி ஒரு மொக்கை பிராபோசல் யாருமே கேட்டு இருக்க மாட்டாங்க. இப்படி ஒரு விதத்தில் சொல்றதுக்கு நீ சொல்லாமலே இருக்கலாம்."

அர்ஜுன், "யம்மா தாயே படத்தை பார்த்து நீ கெட்டு போய்ட்டே. எனக்கு பேச்சே அப்போ அப்போ சரியா வராது இதில் காதல் பொங்க ஐ லவ் யூ சொல்லணும் சொன்னால் நான் என்ன பண்ணுவேன்."

பிங்கி, "எத்தனை நாளாக லவ் பண்ற?"

அர்ஜுன், "நாள் இல்ல வருஷம். எப்போ நான் அனிதா விஷயத்தில் லவ் சொன்னதை கேட்டு ஒரு மாசம் பேசாமல் இருந்தியோ அப்போ இருந்து லவ் பண்றேன் உன்னை. அதை சொல்வதற்குள் நீ இனி யாரையும் லவ் பண்ண கூடாது சொல்லி சத்தியம் வாங்கிட்டே அப்பறம் தான் புரிந்தது சத்தியம் மற்ற பொண்ணுங்க விஷயத்தில் தான் உன் விஷயத்தில் இல்லனு. அதை உணர்ந்து சொல்ல வருவதற்குள் அனிதாவின் திடீர் வருகை, காலேஜ் போட்டி என பல பிரச்சினைகள்."

பிங்கி, "நான் என்ன நினைத்தேன் என்றால் உன் கண்ணுக்கு நான் பெண்ணாக தெரியவில்லை என"

அர்ஜுன், "உண்மை தான் என் கண்ணுக்கு நீ பெண்ணாக தெரியல.."

பிங்கி, "ஏய்..!!"

அர்ஜுன், "தேவதை டி நீ.. என் இதய தேவைதை. உனக்கு ஒரு உண்மை தெரியுமா!! எனக்கு உன் கண்கள் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும் என் கனவில் அடிக்கடி அதற்கு முத்தம் கொடுத்து இருக்கேன். எந்த பெண்ணிடமும் இல்லாத அழகிய கண்கள் உனக்கு அதில் தான் அடிக்கடி விழுந்து விழுந்து எழுந்து கொள்கிறேன்."

பிங்கி, "வெங்கி.. உண்மையாவே சொல்றியா?"

அர்ஜுன், "என் பிங்கியின் கண்ணை பார்த்து என்னால் பொய் சொல்ல முடியாது. உண்மையாவே உன்னை பிடிக்கும் உன் கண்ணை பிடிக்கும். மொத்தத்தில் உன்னை காதலிக்க பிடிக்கும்."

அவர்களின் காதல் பார்வைக்கு நடுவில் வந்த ராம், "அட உங்க ரொமான்ஸ் அப்பறம் வைத்து கொள்ளுங்க. இங்க இன்னும் சில வயசு பசங்க பொண்ணுங்க இருக்கோம் அதை மனதில் வைத்து எதுவா இருந்தாலும் பேசுங்க."

ரிஷி, "சரியா சொன்ன ராம். அப்பறம் இன்னும் நமக்கு ஒரு விஷயம் தெரிய வரல, யார் அர்ஜுனை கார் மோதி கொல்ல வந்தது? விக்ரம் உள்ளே வந்து உண்மை சொல்றேன் சொன்னாய் நீ!! இப்போ சொல்லு யார் அவர்கள்."

விக்ரம், "ஹ்ம்ம், என் அண்ணனை பழிவாங்க என்னை கொல்ல நடந்த திட்டம். ஆதித்யா பற்றி சொல்லி இருக்கேன் ல வயசு கோளாறு காரணமாக அவனும் மாயாவும் செய்த தப்பை அதன் இப்போ பிரச்சினை. மாயாவின் சொந்தக்காரன் ஒருவன் ஆதியை அவன் கிட்ட வாலே அட்டினான் முடியல பின் என்னிடம் வேலை காட்ட பார்த்தான். இப்போ அர்ஜுன் அளவுக்கு இல்ல என்றாலும் மூன்று வாரத்துக்கு காலில் கட்டு கட்டி கொண்டு நடக்கும் அளவுக்கு சின்ன ஆக்ஸிடென்ட் செய்தான். இப்போ இங்க நான் வந்த தகவல் அறிந்து இன்னொரு முறை கொல்ல பார்த்து இருக்கான் போல."

ரிஷி, "ஓ அதற்கு பயந்து தான் முகமூடி போட்டு கொண்டு எங்க யாரிடமும் உண்மை சொல்லல போல.."

விக்ரம், "பயந்தேன் இல்லனு சொல்லல, என்னால் உங்களுக்கு பிரச்சினை வரும் பயந்தேன். முக்கியமாக என்னை கொல்ல முடியாதவன் என் கீத் மேல் கை வைத்து விடுவான் பயந்தேன். மற்றப்படி அர்ஜுன், சத்யா எப்படி என்னை மாதிரி இருக்காங்க தெரியல. இவனுக்கு தெரியாமல் எடுத்த DNA report கூட இவனும் நானும் சகோதரர்கள் சொல்லுது."

ராம், "அப்போ உங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டு இல்ல நான்கு குழந்தைகள் பிறந்து உள்ளார்கள் போல?"

விக்ரம், "இப்போ அதிலும் பிரச்சினை. எதுக்கும் இருக்கட்டும் நினைத்து ஆதி அவனின் DNA அப்பா அம்மாவின் DNA பார்த்தான், மேட்ச் ஆகல. அப்போ உண்மையில் அவர்கள் எங்களின் அப்பா அம்மா இல்ல."

ராம், "இது என்னடா புது குழப்பம்? மர்மம் மேல் மர்மமாக இருக்கு."

அர்ஜுன், "ஹ்ம்ம், விக்ரம் பிளீஸ் இதோடு உன்னோட துப்பறியும் வேலை விடு. இந்த வாழ்க்கையே எனக்கு போதும் சத்யாவுக்கு கூட இந்த ரகசியங்கள் அறிந்து கொள்ள விருப்பம் இல்ல. பல உறவுகள் இதில் உடைய வாய்ப்பு இருக்கு. என்னை இத்தனை நாள் வளர்த்த அந்த இரு தெய்வத்துக்கு கடைசி வரை பையனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.🙏🙏"

விக்ரம், "எனக்கும் ஆதிக்கும் அதே எண்ணம் தான். மர்மம் மர்மமாகவே இருக்கட்டும். நீயும் நானும் நண்பர்கள் என்கிற விதத்திலேயே தொடர்வோம்."

அதே நேரத்தில் டிவி நியூஸ் ஒன்றில் கிண்டி அருகே சென்ற ஒரு கார் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறிய காட்சி காட்டப்பட்டது. அதை பார்த்த ரிஷி மற்றும் ராம், அது அர்ஜுனை இடிக்க வந்த கார் தான் என்றார்கள்.

சங்கீதா, "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

பிங்கி, "உள்ளே இருந்த எல்லாரும் காலி போல.."

அர்ஜுன், "பாவம் ல.."

ராம், "டேய் உன்னை கொல்ல வந்தவர்கள் மேல் நீ ஏன்டா பாவம் பார்க்கிற?"

அர்ஜுன், "உயிர் எடுக்கும் உரிமை அந்த கடவுளுக்கு மட்டுமே உண்டு. மற்றபடி அந்த கார் ல இருந்தவர்கள் எல்லாரும் பாவம் தானே."

விக்ரம், "நீ ரொம்ப நல்லவன் டா.."

அர்ஜுன், "தெரியல எல்லாரும் அப்படி தான் சொல்றாங்க.."

பின் அர்ஜுனை அழைத்து கொண்டு ரிஷியின் வீட்டுக்கு சென்றார்கள்.

அங்கே போன உடன் அர்ஜுன் அந்த நிலையில் கூட நடனம் ஆடியே ஆகனும் என பிடிவாதம் பிடித்தான்.

பிங்கி ரெண்டு மூன்று அறை விட்டும் கூட குழந்தை மாதிரி அடம் பிடித்தான்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#26
வாராயோ வெண்ணிலாவே ...!! 23
அத்தியாயம் 23


ஒரு காலில் நின்று கொண்டே ஆடுவேன் என அர்ஜுன் சொல்ல அதில் பிங்கி போல மற்றவர்களும் கோபம் கொண்டனர்.

விக்ரம், "டேய் உனக்கு என்ன மைக்கேல் ஜாக்சன் நினைப்பா? உன் கால் இருக்கிற நிலையில் நடப்பதே கஷ்டம் இதில் டான்ஸ் தேவையா?"

அர்ஜுன், "நீ இங்க வந்த முதல் வாரம் காலில் கட்டு கட்டி தானே டான்ஸ் சொல்லி தந்த பின் என்ன நானும் அப்படியே ஆடிகிறேன்."

விக்ரம், "ஏய்! ஏய்!! அது நடிப்பு டா சும்மா காலில் ஒரு கட்டு கட்டி நடித்தேன். அமெரிக்கா ல இருந்து கிளம்பிவதற்கு முன்னாடியே என் கால் சரியாகி விட்டது. வெறும் சுளுக்கு! அதுக்கே முதல் ரெண்டு வாரத்துக்கு கீழே காலே வைக்க முடியல. நீ என்ன ஆடி கிழிக்க போற?"

அர்ஜுன், "எனக்கு உதவி பண்ண முடியுமா? முடியாதா?"

விக்ரம், "முடியாது.."

அர்ஜுன், "சங்கி நீ என்ன சொல்ற..?"

சங்கீதா, "நான் எப்படி"

விக்ரம், "நான் தான் சொல்றேன் ல!! நான் சொன்னது தான் அவளுக்கும். கீத் அவனால் முடியாது அதுவும் பிங்கியை தூக்கி கொண்டு டான்ஸ் ஆட முடியவே முடியாது."

பிடிவாதத்தை கெஞ்சலாக கேட்க ஆரம்பித்தான்.

அர்ஜுன், "பிளீஸ், ஏதாவது பண்ணு நான் இந்த போட்டியில் ஆடியை ஆகணும்."

விக்ரம், "நொண்டி நொண்டி தான் ஆடனும். இந்த மூன்று வாரத்தில் கற்ற எல்லாம் மறந்து இன்னும் ஒரே வாரத்தில் புதுசா ஸ்டெப்ஸ் போடணும். ஆனால் எல்லாமே ஒரே காலில் உன்னால் ஆட முடியாது."

அப்போ ரிஷி பேச ஆரம்பித்தான்..

ரிஷி, "முடியும், கண்டிப்பா அவனால் முடியும்."

விக்ரம், "எப்படி சொல்ற?"

ரிஷி, "அவனுக்கு எல்லாமே இடது பக்க பழக்கம் தான். இந்த மூன்று வாரத்தில் நீ கவனிக்காத ஒரு விஷயத்தை அவன் கிட்ட நான் கவனித்தேன். வலது கால் விட இடது காலில் தான் மொத்த உடல் எடை சுமந்து ஆடினான். டாக்டர்ஸ் சொன்னது கூட இன்னும் மூன்று மாசத்துக்கு வலது கால் அழுத்தமா தரையில் நடக்கணும் சொன்னாங்க. பட் இயற்கையாகவே அவன் நடக்கும் போது வலது காலில் அழுத்தம் கொடுத்து நடப்பது இல்ல. அதற்கு என்ற மாதிரி வலது கால் ஸ்டெப்ஸ் அதிகம் இல்லாத மாதிரி சொல்லி கொடு."

விக்ரம், "இது வேலைக்கு ஆகாது."

சங்கீதா, "ஒரு சின்ன முயற்சி செய்யலாமே.."

பிங்கி, "எஸ், விக்ரம் பண்ணலாம். அவனுக்கு ரொம்ப வலிக்கிற மாதிரி இருந்தால் ஸ்டாப் பண்ணிடுவோம். வெங்கி இதற்கு ஓகே ஆ?"

அர்ஜுன், "ஓகே.. ஓகே.."

பின் சில ஸ்டெப்ஸ் விக்ரம் செய்து காட்ட வலிகள் கொஞ்சம் இருந்தாலும் அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக செய்து காட்டினான். பின் ஒரு முடிவுக்கு வந்த விக்ரம், "அர்ஜுன் முதலில் ஒரு விஷயம் சொல்லு! இந்த நிலையில் நீ எதுக்கு ஆடணும் சொல்ற. இவங்க டான்ஸ் ல மட்டும் தானே பெயர் கொடுத்து இருக்காங்க. ஆனால் நீயும் பிங்கியும் டான்ஸ் மற்றும் பாட்டு என ரெண்டில் பெயர் கொடுத்து இருக்கீங்க. இதை விட்டால் பாட்டில் கவனம் செலுத்தலாம் ல?"

சங்கீதா, "ஆமாம் விக்ரம் சொல்றது சரி தான். கண்டிப்பா இந்த ஒரே வாரத்தில் புது ஸ்டெப்ஸ் ல டான்ஸ் கற்றுக்கொண்டு கண்டிப்பா prize win பண்ண முடியாது."

இருவரும் சொன்னது கேட்ட அர்ஜுன், "இது அந்த போட்டியில் ஜெய்க்க இல்ல என் பயத்தை ஜெய்க்க."

ரிஷி, "புரியல"

அர்ஜுன், "எனக்கு கூட்டத்தை பார்த்தால் பயம். அர்ஜுனின் பயத்தை போக்குவது என் நோக்கம் இல்ல. பிங்கியின் லவ்வர் வெங்கிக்கு பயம் இருக்க கூடாது. எப்போ என் காதலை என் பிங்கி கிட்ட சொன்னேனோ அப்போவே இந்த பயத்தை ஜெய்க்கணும் ஆசைப்படுகிறேன். பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..🙏🙏"

பிங்கி, "வெங்கி வேண்டாமே.."

அர்ஜுன், "பிங்கி, ஐ லவ் யூ.."

பிங்கி, "இப்போ ஏன்டா இதை சொல்ற?"

அர்ஜுன், "ஹ்ம்ம், பதில் சொல்லு நீயும் என்னை லவ் பண்றியா? இல்லையா?"

பிங்கி, "எஸ், ஐ லவ் யூ டூ.."

அர்ஜுன், "அப்போ என் மேல் வைத்த காதலில் சொல் என்னால் முடியுமா? முடியாதா?"

பிங்கி, "என்னடா இப்படி கேட்கிற? அதுவும் இன்னிக்கு ரொம்ப புதுசா நடத்துகிற!!"

அர்ஜுன், "எல்லாம் உன் காதல் படுத்தும் பாடு. சரி சொல்லு என்னால் ஆட முடியுமா? முடியாதா?"

பிங்கி, "முடியும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஆனால் இந்த நிலையில் ஆடினால் வலி ஓவர் ஆ இருக்கும் டா.."

அர்ஜுன், "உன்னை கட்டி கொண்டு ஆட போறேன் அதுவும் ஆயிரம் பேர் முன்னாடி அதில் இந்த வலி தூசு."

பிங்கி, "ரொமான்ஸ் பண்ண வராது சொல்லிட்டு என்னடா இப்படி பேசுற?"

அர்ஜுன், "இது தான் ரொமான்ஸ் ஆ? பாருடா நமக்கு காமெடி தான் வரும் நினைத்தேன்."

விக்ரம், "போதும் போதும் நிறுத்து! ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். எங்களால் முடிந்தவரை ஹெல்ப் பண்றோம் அப்பறம் உன் பாடு பிங்கி பாடு."

சங்கீதா, "விக்கி அவனால் முடியும். அவன் உன் கூட பிறந்தவன் உன் திறமை கொஞ்சமாவது அவனுக்கு இருக்கும்."

விக்ரம், "இதோ பாருடா அர்ஜுன் உன் ஆட்டத்துக்கு என் ஆளே ஃபேன் போல. கவலை விடு கடைசி நேரத்தில் சரியா வரல உன் இடத்தில் நான் வந்து ஆடுகிறேன்! யாராலும் கண்டுபிடிக்க முடியாது."

அர்ஜுன், "சாரி விக்ரம், அது தப்பு. எனக்கு இந்த ஆள்மாறாட்டம் பிடிக்கவே பிடிக்காது. நல்லதோ கெட்டதோ நானே நேருக்கு நேர் சந்திப்பது தான் சரி. அதுதான் நியாயமும் கூட"

விக்ரம், "அர்ஜுன் உன் கிட்ட ஒரு விஷயத்துக்கு சாரி சொல்லனும் டா.."

அர்ஜுன், "எதுக்கு டா?"

விக்ரம், "உன்னை ஒரு டம்மி பீஸ் நினைத்தேன் அதன்.."

அர்ஜுன், "ஓ! இப்போ என்ன நினைக்கிற?"

விக்ரம், "ஏதோ ஒரு அளவுக்கு ஓகே. உனக்கு ஒரு தனித்துவம் இருக்கு! எங்களுக்கும் இருக்கு!!"

காதல் கனவில் எல்லாரும் இருந்தார்கள். ரிஷி அஞ்சலி தவிர, இன்னும் அவர்கள் மனதில் வெண்ணிலா என்ற பெண்ணின் வருகை எப்போ என எதிர்பார்த்து கொண்டு இருந்தது. ஆனால், வெண்ணிலா என்பது ரிஷிக்கு புரிந்த உறவு, அஞ்சலிக்கு புரியாத உறவு.

வெண்ணிலா மேல் ரிஷிக்கு இருக்கும் காதல் என்ன மாதிரியான காதல்!! அது என்ன விதத்தில் அஞ்சலி மேல் இருக்கும் காதலுக்கு குறைந்தது இல்ல என அவனும் சொல்லல அஞ்சலியும் கேட்கல.

*********************

ரிஷி, அஞ்சலி, தர்ஷினி, ராம், விக்ரம், சங்கீதா, அர்ஜுன், பிங்கி, பார்வதி பாட்டி மற்றும் சதாசிவம் தாத்தா எல்லாருமே ஒரே அறையில் கூடி இருந்தார்கள்.

ரிஷி, "அப்பா, இன்னிக்கு என்னையும் சேர்த்து மூன்று காதல் ஜோடிகளின் காதல் கதை ஆரம்பித்தது."

சதாசிவம், "யார் யார்?"

ரிஷி, "நானும் எலியும் ஒரு ஜோடி.."

அர்ஜுன், "நானும் பிங்கியும் ரெண்டாவது ஜோடி.."

ராம், "நானும் தர்ஷ் மூன்றாவது ஜோடி ஆனால் ஏற்கனவே எங்களின் காதலை ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பரிமாறி கொண்டோம்."

ரிஷி, "அதன் தெரியுமே! அன்றே ஒருவர் ஒருவர் கையில் முத்தம் கொடுத்து கொண்டது பார்த்தோமே..😂😂"

விக்ரம், "அது மட்டுமா அவளின் அண்ணன் கூட பர்மிஷன் கொடுத்து விட்டாரே.."

பார்வதி, "இதோ பாருடா, நான் அப்பவே சொன்னேன் ல ரிஷி அஞ்சலி ரெண்டு பேருக்கும் நடுவில் ஏதோ இருக்குனு.."

சதாசிவம், "இதை நீ வேற தனியாக சொல்லணுமா? அதன் காலேஜ் போன முதல் நாளே அவளின் உள்ளாடையை உனக்கு பரிசா தந்தனே அப்பவே தெரியும்."

தர்ஷினி, "என்ன சொல்றீங்க? உண்மையா!!"

ராம், "அட உனக்கு தெரியாது ல, அஞ்சலியை பார்த்த ஒரே வாரத்தில் பையன் டோட்டல் ஃபிளாட். நான் தான் அவனை கொஞ்ச வெயிட் பண்ணு, உன் காதல் அவள் மேல் பரிதாபப்பட்டு வந்த காதலாக இருக்க கூடாது. எப்போ அவன் தான் உன் வாழ்க்கை என தோன்றுதோ அப்போ உன் காதலை சொல்லு என்றேன். அதன்படி இன்று சொல்லிட்டான்."

அஞ்சலி, "இல்ல அழகா, ரிஷி மேல் எனக்கு நம்பிக்கை இல்ல."

ராம், "ஏன் அப்படி சொல்ற?"

அஞ்சலி, "பின்ன இன்னும் அந்த வெண்ணிலா மேல் இருக்கும் காதல் என்ன விதமான காதல் என அவன் சொல்லல.."

ரிஷி, "காதல் என்றால் என்ன எலி?"

அஞ்சலி, "ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல் வருவது காதல்."

ரிஷி, "இல்ல, காதல் ஒரு பொதுவான ஒரு அன்பின் வெளிப்பாடு. காதல் என்பது கடவுள் போல சில உதாரணங்கள்..

I love my country
I love my parents
I love flowers

இது போல தான்..

I love வெண்ணிலா.


ஆனால் உன்னை பார்த்து சொன்ன ' I love you ' வேற! என் வாழ்க்கை துணை நீ தான் என்கிற எண்ணத்தில் சொன்னது. உனக்கு எல்லாமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை மற்றும் வெறி. என்னை நம்பு எலி.. அஞ்சலி. You are my life and love."

பார்வதி, "பேராண்டி இங்க உன் தாத்தா பாட்டி இருக்கோம் பா. பார்த்து பேசு..!!"

ரிஷி, "அம்மா!!"

பார்வதி, "உன் காதலுக்கு சரி சொன்னோம் அதற்குள் ரொம்ப கனவு உலகத்துக்கு போகாதே!! உங்க படிப்பு முடியும் வரை கவனம். யாருமே யாருமில்லாத பொண்ணை காதல் என்கிற பெயரில் ஏமாற்றுக்கிறான் சொல்ல கூடாது."

அஞ்சலி, "பாட்டி, உங்களுக்கு நான் ஒரு அனாதை என்பதில் பிரச்சினை இல்லயே"

பார்வதி, "இந்த உலகில் யாருமே அனாதை இல்ல. அன்பு இருக்கும் வரை எல்லாருமே உறவினர்கள் தான்."

சதாசிவம், "என் பொண்டாட்டி சரியா சொன்ன. அப்பறம் அஞ்சு மா, வெண்ணிலா பற்றி நீ கவலைப்பட ஒன்னும் இல்ல. நீயும் ராமும் எப்படியோ அதே போல தான் ரிஷியும் வெண்ணிலாவும். இன்னும் ஃப்ளாஷ்பேக் மாதிரி சொல்வேன் ஆனால் அந்த வெண்ணிலா பொண்ணு வந்து சொல்லும் வரை முழு விபரம் சொல்ல கூடாது என்பது ரிஷியின் கட்டளை."

அஞ்சலி, "அப்போ ஓகே.. நானும் ராமும் போல் தான் இவர்கள் உறவு என்றால் எனக்கு பிரச்சினை இல்ல. உண்மையான நட்புக்கு நான் எதிரி இல்ல. Bestie அளவுக்கு நெருக்கம் போல.."

ரிஷி, "bestie என்று சொல்ல முடியாது. இறந்து போன என் அப்பா அம்மாவுக்கு என் அளவுக்கு அவளையும் பிடிக்கும். அவர்கள் நினைவு மற்றும் அவளின் நட்பு தான் என்னை அந்த சுனாமியில் எதிர்நீச்சல் அடித்து நீந்த வைத்தது. அவள் வருவாள் வந்து எல்லாம் சொல்வாள், நான் சொல்வதை விட அவள் மூலம் கேட்பது தான் நல்லவும் இருக்கும்."

அஞ்சலி, "அப்பறம் இன்னொரு விஷயம் நீ ஏன் உன் தாத்தா பாட்டியை அப்பா அம்மா என கூப்பிடுற?"

ரிஷி, "ரொம்ப பெரிய ரகசியம் எல்லாம் இல்ல. என் அப்பா அம்மாவின் இறப்புக்கு பிறகு அவங்க இடத்தில் இருந்து இவர்கள் தான் என்னை பார்த்து கொண்டார்கள். அந்த அன்பில் வெளிப்பாடு தான் இந்த அழைப்பு. என்னை பொறுத்தவரை தப்பு இல்ல!! ஆனால் உங்களுக்கு எப்படி?"

மற்றவர்களும் தப்பு இல்லனு சொல்ல, பின் அஞ்சலி இன்னொரு கேள்வி கேட்டாள்.

அஞ்சலி, "ரிஷி, தப்பா நினைக்காதே உண்மையில் அந்த லெட்டர் போட்டது போன் ல மெசேஜ் அனுப்பும் பெண் வெண்ணிலா என தோன்ற வில்லை."

ரிஷி, "தெரியும் அது யார் அப்படி பண்றாங்க என. அடுத்த வாரம் போட்டி அன்று எல்லா உண்மையும் சொல்றேன்."

அஞ்சலி, "அப்போ உண்மையான வெண்ணிலா அந்த சுனாமியில்.."

ரிஷி, "பிளீஸ் எலி, அவளுக்கு ஒன்றும் இல்ல!! அவள் வருவாள்!! போட்டி அன்று வருவாள்!!. நீங்க பார்ப்பிங்க! அது மட்டும் உறுதி.", என கோபத்தில் கத்தி விட்டு ரூமுக்கு சென்று விட்டான்.

மற்றவர்களும் அதோடு பேசியது போதும் என சென்று விட்டார்கள். அர்ஜுன் மற்றும் பிங்கி கொஞ்ச நேரம் பார்வதி பாட்டிக்கிட்ட பாட்டு கற்று கொண்டு அவர் அவர் அறைக்கு சென்று விட்டார்கள்.

அர்ஜுன் அவனுக்கு அடிப்பட்ட விபரம் சத்யா கிட்ட சொல்லி விட்டு தூங்கி விட்டான்.

அவன் தூங்கிய சிறிது நேரத்தில் அவன் அறைக்குள் ஒரு உருவம் வந்தது. அது அவனின் தலையை தடவி விட்டு, "அர்ஜுன், உன்னை மோதியவர்களை கொன்று விட்டேன். அங்கே இருப்பவர்கள் வண்டி வெடித்து தான் அவர்கள் இறந்தார்கள் என நினைத்து இருப்பாங்க. உண்மை அது இல்ல நான் வெடிக்க வைத்தேன். இங்கே வந்ததும் நல்லதா போச்சு! அப்படி வந்த இடத்தில் தானே இன்னும் என் மற்ற இரு சகோதரர்கள் இரக்கல!! என்கிற உண்மை தெரிந்தது. அது எப்படி நடந்தது! என கண்டுபிடித்து உங்கள் எல்லாரையும் ஒன்று சேர்ப்பேன். நம்ம உலகில் உங்களால் நடக்க வேண்டிய காரியம் ஒன்று இருக்கு. அது நம்ம கதையில் பார்போம். இந்த கதையில் நம்மை பற்றிய விஷயங்கள் தேவையற்ற ஒன்று.", என வந்த வழியில் சென்று விட்டான் அந்த உருவத்தின் சொந்தக்காரன் விஷ்ணு தேவ்.

(நண்பர்களே இனி ரிஷி, அஞ்சலி, ராம், தர்ஷினி பற்றிய விஷயங்களே கதையில் அதிகம் போகும். நம்ம ஐந்து பூதம் பற்றி தனி கதை இந்த கதை முடிவில் சொல்வேன்)

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹


 
#27
வாராயோ வெண்ணிலாவே ...!! 24
அத்தியாயம் 24

காலேஜ் போட்டி நாள்..


ராம், "காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்.."

தர்ஷினி, "இப்போ எதுக்கு இப்படி கேவலமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கே?"

ராம், "என்னது கேவலமா? ஹலோ என் வாய்ஸ் ல பாட்டு கேட்டால் யாருக்குமே தூக்கமே வராது தெரியுமா?"

தர்ஷினி, "ஏன்? பேய் வந்து விட்டது நினைத்து பயத்தில் தூக்கம் வராதா?"

ராம், "இது ரொம்ப ஓவர்! அப்பறம் நான் அழுதுடுவேன்."

தர்ஷினி, "வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!!"

ராம், "நான் அழுதால் உன்னால் தாங்க முடியாதா டி!"

தர்ஷினி, "இல்ல! பார்க்க சகிக்காது, அதன்"

ராம், "மானம் போச்சு! மரியாதை போச்சு!!."

தர்ஷினி, "அதெல்லாம் உனக்கு எப்போ இருந்து இருக்கு! புதுசா போக"

ராம், "இன்னிக்கு என்னடி ஆச்சு உனக்கு? என் மூக்கை அறுக்கவே பிளான் பண்ற"

தர்ஷினி, "ஹி ஹி.. சாரி டா. நம்ம ப்ரெண்ட்ஸ் இன்னும் டிரஸ் மாற்றி வரல அதன் டைம் பாஸ் பண்ண கொஞ்சமாக கொஞ்சமே கொஞ்சமாக விளையாடினேன்."

ராம், "இதுவா கொஞ்சம்?"

தர்ஷினி, "ஆமாம்! எங்க வீட்டில் வந்து கேட்டு பார் ஒரு தோசையில் ஆரம்பித்து சட்னி செய்கிற வரை குண்டாக மண்டாக பேசி எங்க அம்மாவை கொடுமை பண்ணி இருக்கேன். அதில் ஒரு சின்ன பகுதி தான் இது."

ராம், "பாவம் உங்க அம்மா! எப்படி சமாளிக்கிறாங்க உன்னை.."

தர்ஷினி, "அதை நீயே இன்னிக்கு அப்பாவும் அம்மாவும் நம்ம டான்ஸ் ஏ பார்க்க வரும் போது கேளு."

ராம், "ஏன் நான் அடி வாங்கவா? அட போடி இந்த விளையாட்டுக்கு நான் வரல."

தர்ஷினி, "ஏன் பயமா இருக்க?"

ராம், "பின் அன்னிக்கு உன் அண்ணனின் மிரட்டலே தாங்க முடியல இன்னும் ரெண்டு பேர் என்றால்!! யாப்பா சாமி மயக்கமே போட்டு விழுந்துடுவேன்."

தர்ஷினி, "நான் இருக்க பயம்மேன்.."

அப்போ அங்கே வந்த ரிஷி தர்ஷினியின் கடைசி வாக்கியம் கேட்டு, "என்ன தர்ஷ் யாருக்கு என்ன பயம்?"

அதற்கு தர்ஷினி, "எல்லாம் நம்ம ராமுக்கு தான்! எங்க அப்பா அம்மா வரபோவதை சொன்னேன்! அதன் அவங்க ஏதாவது சொல்லிட்டா!! என்ன பண்றது பயமாம்.😂"

ரிஷி, "ஓ அவங்க வராங்களா? ரொம்ப சந்தோசம்!! எனக்கும் சில விஷயம் பேச வேண்டியது இருக்கு. அதுவும் நம்ம வில்லனின் முன்னாடியே..!!"

ராம், "டேய் என் மச்சான் கார்த்தி என்னடா உனக்கு பண்ணான்? எப்போ பார்த்தாலும் கார்த்தியே வில்லன் என்றே சொல்ற. உண்மையில் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன நடக்குது."

ரிஷி, "இன்னிக்கு பார்பே! பார்த்து உண்மை தெரிஞ்சுப்பே"

அங்கே வந்த மற்ற நண்பர்கள் கூட ' எப்போ? எத்தனை மணிக்கு? ' என கேட்டார்கள்.

ரிஷி, "வெண்ணிலா வந்த பிறகு எல்லாருக்குமே தெரியும்.", சொன்ன அவன் அஞ்சலியை அழைத்து கொண்டு நடன மேடைக்கு சென்றான்.

*****************

நடன போட்டி ரிஷி மற்றும் அஞ்சலியின் நடனத்திலேயே ஆரம்பித்தது.

ரோப் ல கட்டி கொண்ட இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தொங்கி கொண்டு ஆட ஆரம்பித்தார்கள்.

(ஒருவரின் கையை மற்றவர்கள் பிடித்து கொண்ட ரிஷியும் அஞ்சலியும்)

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

(இங்கும் அங்கும் அந்திரத்தில் தொங்கி கொண்டும் கயிற்றில் வட்டம் அடித்து கொண்டும்)

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

(திடீர் என ரிஷி இருந்த இடத்தில் விளக்கு அணைய அஞ்சலி மட்டும் ஆடி கொண்டு இருந்தாள். கயிற்றை அவித்து விட்டு அவனை தேடி கொண்டே ஆடினாள்)

never wanna see us fightin’
forget the thunder n lightnin’
I hold you till we see the morning light
never leave your side
never wanna see us fightin’
forget the thunder n lightnin’
I hold you till we see the morning light
never leave your side

(வெளிச்சம் வந்தது அதில் ரிஷி தெரிந்தான். கயிற்றில் கட்டியப்படி அந்தரத்தில் தொங்கியவாறே அவளை பிடித்து கட்டி கொண்டான்! தன் இதயம் நோக்கி கட்டி கொண்டு ஆடினான்)

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

(நடனத்தை மட்டும் அல்லாமல் ஒருவரை மற்றவர் கட்டிக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டே ஆடினார்கள்.)

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன..


பாட்டு முடிந்தது திரை போட்ட பிறகு அவளின் நெற்றில் இதழ் பதித்தவன், "ஐ லவ் யூ எலி! மை எலி குட்டி!!"

அஞ்சலி, "ரொம்ப சின் போடாதே! உன் வெண்ணிலா வந்த பிறகு இதையே திரும்பி சொல்லு அப்போ பார்க்கிறேன் உன் லட்சணத்தை.."

ரிஷி, "எலி குட்டி நோ கோபம்! உன் ரிஷி பாவம் ல!! கருணை பிளீஸ்.."

அஞ்சலி, "நோ கருணை. ஒன்லி ஆக்சன் அதுவும் உன் காதல் பொய் என தெரியும் போது."

ரிஷி, "ஒருவேளை உண்மை என்றால்?"

அஞ்சலி, "என் முதல் முத்தம் பரிசா தருவேன்."

ரிஷி, "அது எங்க என நான் தான் முடிவு பண்ணுவேன்..😘😘"

அஞ்சலி, "கேடி! கேடி!! லொள்ளு பண்ணாம வாயை மூடி கீழே வா. அடுத்த ஜோடி ஆட வேண்டாமா?"

ரிஷி, "ஓகே போலாம்."

***************

இன்னும் ரெண்டு மூன்று ஜோடிக்கு பிறகு கார்த்தி மற்றும் அனிதா ஆடினார்கள்.

(கார்த்தியை சுற்றி சுற்றி வைத்து அவனின் தோளில் வைத்து வைத்து அவள் ஆட)

அனிதா : ஆ ஆஆ என்
ஆசை எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன செய்வாய்
நீயே என் ஆசை எதிராளியே
ஏய் ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

அனிதா : உன் விலையென்ன
விலையென்ன வாங்குவேன்
நீ தலை தாழ்த்தி நின்றால்
நான் வாழ்த்துவேன்

(அவளை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு ஆட ஆரம்பித்தான்)

கார்த்தி : ஹே ராணி
நீயும் சொல்ல கூந்தல்
மீது சூட்டி கொள்ள நான்
ஒன்றும் ரோஜா அல்ல
போ போ போ விலகி மெல்ல

கார்த்தி : வால் வீசி
பூவை கொல்ல நான்
ஒன்றும் கோழை அல்ல
திமிரே வோ வோ வோ
வோ

(மொத்த ஸ்டேஜ் சேர்த்து வட்டம் அடித்தது போல ஆடினாள்)

பெண் : என் ஆசை
எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

கார்த்தி : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

(அவனை பின்னால் கட்டிகொண்டே அவனின் உடலில் பரவுவது போல ஆடினாள்)

அனிதா : ஆயிரத்தில்
ஒருவன் உன்னை
ஆணவத்தின் மடியில்
வைத்து ஆடைகளில்
தீ பரவ செய்வேனே

கார்த்தி : போதும் இந்த
சின்ன கனவு போர்க்களத்தில்
இல்லை உறவு உன்னை இனி
உன்னை இனி வெல்வேனே

அனிதா : சிறையில் வைத்து
உன்னை சிதிலம் ஆக்கி
தினம் எனது கால்
அடியில் கிடைத்தவா

(அவன் தலை முடியை பற்றிக்கொண்டு)

அனிதா : உடைகள் மூடி
வைத்த தடைகள் நீக்கி
விட்டு உனது ஆளுமையை
அடக்கவா

(அவளின் கையை உதறி விட்டு)

கார்த்தி : கை தட்டி
கூப்பிட்டு பார் கார்மேகம்
தூறல் தருமா கண்ணே நீ
ஆணை இட்டால் ஆகாயம்
தரையில் விழுமா

கார்த்தி : காற்றாடி
வெட்டுப்படலாம்
காற்றாலே கட்டுப்படுமா
அடியே நீ போ போ போ

அனிதா : நீ எனக்கு இல்லை
என்றால் நான் உனக்கு
வேண்டாம் என்றால்
யாரிடமும் சேர்ந்து
விட இம்சிப்பேனோ

(திரும்பி ஸ்டேஜ் முழுசும் சுற்றி கொண்டே ஆடினாள்)

அனிதா : தேன் கொடுக்கும்
மலரும் உண்டு ஊன்
கெடுக்கும் மலரும் உண்டு
நீ எவளோ தூயவளோ
சந்திப்பேன்

அனிதா : எனக்கு
வேண்டியதை எனக்குள்
தூண்டியதை நிகழ்த்த
காத்திருக்கும் அடிமை நீ

அனிதா : எனது கைத்தளத்தை
எனது தேன் குடத்தை சுமக்க
வேண்டி நிற்கும் பதுமை நீ

கார்த்தி : ஹே பெண்ணே
உன்னை கண்டு பரிதாபம்
என்றும் உண்டு அழகான
பூவுக்குள்ளே அறிவில்லை
ஐயோ இன்று

கார்த்தி : ஆசைகள் தீரும்
அன்று ஆட்டங்கள் முடியும்
இங்கு சிலையே ஹே ஹே
ஹே ஹே

(அவளை தள்ளி விட்டான்)

அனிதா : ஆ


***************

திரை முடிய பிறகு..

அனிதா, "டேய் தள்ளுற மாதிரி நடிக்க சொன்னால் உண்மையே தள்ளுற?"

கார்த்தி, "ஆமாம், நீ மட்டும் என்ன கட்டி பிடிக்கிற மாதிரி நடிக்க சொன்ன! உண்மையாவே கட்டி பிடித்து ஆடினே!! அதன் அப்படி செய்தேன்."

அனிதா, "அப்படி ஆடினால் தானே நல்ல வரும்."

கார்த்தி, "எது உன் மேல் காதலா? இல்ல காமமா? இங்க பார் நான் அடிக்கடி சொல்லிட்டேன் இந்த போட்டியோடு நம்ம உறவு முடியுது. இட்ஸ் ஃபினிஷ் byee.."

அனிதா, "டேய் இது அநியாயம்.."

கார்த்தி, "இங்க பார் நம்ம ஜோடியா ஆடினோம்! ஆட்டம் முடிந்தது!! இதுக்கு மேல் என்ன அநியாயம் இருக்கு? நம்ம ப்ரெண்ட்ஸ் இல்ல! காதலர்கள் இல்ல! அப்பறம் என்ன உறவு சொல்லு?"

அனிதா, "ஐ லவ் யூ டா.."

கார்த்தி, "இதே வார்த்தையை இதுவரை எத்தனை பேர் கிட்ட சொல்லி இருப்பே?"

அனிதா, "கார்த்தி..!! ஸ்டாப்.. ஸ்டாப்!!! என்னை என்னடா நினைத்தாய்? வேசி என்றா? அடேய் நான் பேராசை காரி தான், பிடிவாதக்காரி தான். அதற்கு யாரை பார்த்தாலும் காதல் என சுற்றுவேன் என்று நீ எப்படி நினைக்கலாம்? அர்ஜுன் பின்னாடி கொஞ்ச நாள் சுற்றினேன் தான்! இல்லனு சொல்லல!! அது ஃபேமஸ் ஆக தான் என உனக்கு தெரியும். இப்போ உன் கிட்ட லவ் சொன்னது அந்த எண்ணத்தில் இல்லடா இல்ல. உண்மையாவே உன்னை பிடித்து இருக்கு! ரொம்பவே பிடித்து இருக்கு!! நீ உடனே எதுவும் சொல்ல வேண்டாம். பொறுமையாக டைம் எடுத்து என்னை பற்றி யோசி. ஒரு மாசத்துக்கு முன்னாடி நீ பார்த்த அனிதாவுக்கு இந்த கடந்த ஒரு மாசமா பார்க்கும் அனிதாவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என யோசி. அதற்கு யார் காரணம் என யோசி. உன் அளவுக்கு இல்ல என்றாலும் எங்க அப்பாவுக்கு சொத்து இருக்கு! அதனால் பணத்துக்கு சொத்துக்கு உன் பின்னாடி சுற்றுகிறேன் நினைக்காதே."

சொன்னவள் அவனின் பதிலை கூட கேட்காமல் சென்று விட்டாள்.

கார்த்தி, "அனி.. மை தேன் குட்டி. சாரி டி! கொஞ்ச நாள் போகட்டும்! என் வில்லன் ரிஷியை ஒரு வழி பண்ணிட்டு உன் கிட்ட வரேன்! அதற்குள் என் தங்கச்சி கூட உன்னை மன்னிக்கணும். நீ ரீஷியே ஏமாற்ற நினைத்த விஷயத்தை ரிஷி மன்னித்தாலும் தர்ஷினி மன்னிக்க மாட்டாள். நீ வெண்ணிலா என்கிற பெயரில் பொய்யா லெட்டர் எழுதி இருக்கலாம். ஆனால் உண்மையான வெண்ணிலாவே தர்ஷினி தான். என் கூட பிறந்த தங்கச்சி தர்ஷினியே சுனாமி வெள்ளத்தில் இழந்த அதே நேரத்தில் தான் வெண்ணிலா கிடைத்தாள். இறந்த என் தங்கையின் இடத்துக்கு அவள் வந்து என் அம்மா அப்பாவின் சந்தோசத்தை திருப்பி கொடுத்தாள். அந்த சந்தோசம் ரிஷியால் போய் விடுமோ பயத்தில் இருக்கேன். ரிஷி தான் என் வில்லன் என் தங்கைக்கு என் மேல் இருக்கும் அன்பை பங்கு போட வந்த வில்லன். அவளின்.. இல்ல அவளே சொல்லட்டும் அவனுக்கு அவள் யார் என்பது.."

ஸ்டேஜ் விட்டு வெளியே போனவன் ரிஷியா சந்தித்து..

கார்த்தி, "நீ பண்ண சத்தியம் நினைவில் இருக்கட்டும். அவள் கடைசி வரை என் தங்கை தான் அதில் மாற்றம் இல்ல."

ரிஷி, "கண்டிப்பா.."

****************

கார்த்தி தன் காதலை புரிந்து கொள்ளவில்லை என்கிற வருத்தம் கோபத்தில் கேன்டீன் பக்கம் போன அனிதா, அங்கே ஒரே கோகே இரு ஸ்டிரா போட்டு குடித்து கொண்டு இருந்த விக்ரம் மற்றும் சங்கீதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

விக்ரமை அர்ஜுன் என நினைத்து ஓடி சென்று அவனின் கன்னத்தில் அறைந்தாள்.

அனிதா, "சே, பிங்கி உன் மேல் வைத்து இருந்த காதலை இப்படி கேவலப்படுத்தி விட்டாயே. நீ இன்னும் மாறல! இன்னும் பார்க்கிற எல்லா பொண்ணுங்களையும் லவ் என்கிற விதத்தில் பார்க்கிற. இது மட்டும் பிங்கிக்கு தெரிந்தால் என்ன நினைப்பாள்."

அங்கே அர்ஜுன் கூட வந்த பிங்கி, "ஒண்ணுமே நினைக்க மாட்டேன்..".

குரலை கேட்டு திரும்பி பார்த்த அனிதா ஒரே உருவத்தில் இருவர் இருப்பதை உணர்ந்து மயக்கம் போட்டு விழுந்தாள்.

அதை பார்த்த அர்ஜுன், "எங்களை ஒரே இடத்தில் பார்க்கும் எல்லாருமே ஏன்டா மயக்கம் போட்டு விழுறாங்க? எங்க முகம் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு?", என சொல்லி தலையில் அடித்து கொண்டான்.

அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய பிறகு..

பிங்கி, "அனிதா டென்ஷன் ஆகாமல் கேளு. இவன் பெயர் விக்ரம், என் வெங்கியின் அதாவது அர்ஜுனின் கூட பிறந்த சகோதரன். இவர்களை போல இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க சத்யா மற்றும் ஆதி. ஒருத்தன் டெல்லி ல இருக்கான் இன்னொருவன் அமெரிக்கா ல இருக்கான்."

அனிதா, "என்னது நான்கு பேரா அதுவும் ஒரே உருவத்தில்..? அட போங்கடா..", என திரும்பி மயக்கம் போட்டு விழுந்தாள்.

இப்போவும் அர்ஜுன், "பிங்கி அவளை அப்படி விடு. நம்ம பேர் தான் அடுத்து வா போலாம்."

விக்ரம் மற்றும் சங்கீதாவின் கட்டுப்பாட்டில் அனிதாவை விட்டுட்டு இவர்கள் இருவருமே நடனம் ஆட போனார்கள்.

இவர்கள் தேர்ந்தெடுத்த பாட்டு என்னவோ?

அடுத்த அத்தியாயத்தில் பார்போம்..

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹

 
#28
வாராயோ வெண்ணிலாவே...!! 25

அர்ஜுன் மற்றும் பிங்கியின் பெயர் அழைக்கப்பட்டது..

கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்து கொண்டு நடன மேடைக்கு போன அர்ஜுனை பார்த்து கீழே இருந்த கூட்டம் விசில் அடித்து அவனை கிண்டல் செய்து சத்தம் போட்டது.

பிங்கி, "வெங்கி, பிளீஸ் டா வேண்டாம். நம்ம கீழே போலாம் இந்த டான்ஸ் வேண்டாம் டா."

அர்ஜுன், "ஐ லவ் யூ.."

பிங்கி, "இதை ஏன்டா இப்ப சொல்ற?"

அர்ஜுன், "யூ லவ் மீ ஆர் நாட்??"

பிங்கி, "எஸ் ஐ லவ்ஸ் யூ.."

அர்ஜுன், "அப்போ வா நம்ம காதலை நடனம் மூலம் எல்லாருக்கும் சொல்வோம்.."

தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக் ஏ தூர போட்டுவிட்டு ஒன்ற காலில் நின்று கொண்டான். அவனின் மற்றொரு காலில் நின்று கொண்ட அவளின் இடுப்பை பிடித்து கொண்டவன் ஆட ஆரம்பித்தான்.

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே

(அவளை தலைமேல் தூக்கி கொண்டு ஒரு காலில் பாலன்ஸ் பண்ணி கொண்டே ஆடினான்)

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிபதிற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அளஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உன்ன வாங்கிட்டேன்

(அவளை கீழே இறக்கி விட்டு சில நீண்ட குட்டி கரணம் போட்டு கொண்டே ஆடினான்)

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு .. ஓஹோஹோ ..

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

(யார் பார்த்தால் என்ன என்பது போல அவளின் கண்ணில் சில முத்தங்கள் கொடுத்தான். நடனத்தில் அது ஒரு பங்கே கிடையாது ஆனாலும் கொடுத்தான்)

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே அன்பே ..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே அன்பே ..

(பாட்டின் முடிவில் திரை முடிவதற்குள் அந்த பாட்டு சத்தத்தின் நடுவில் ஐ லவ் யூ டா கேடி என கத்தினாள்)


திரை முடிய பிறகு..

ஆணி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு மயான அமைதி அந்த அளவிற்கு இவர்களின் நடனத்தில் அனைவருமே முழுகி இருந்தார்கள்.
பின் ஒருவர் ஒருவராக கை தட்ட ஆரம்பித்து அரங்கமே அதிரும் அளவுக்கு எல்லா இடத்திலுமே கைத்தட்டல் சத்தங்கள் கேட்டனர். கீழே அமர்ந்திருந்த நடுவர்கள் கூட கை தட்டினார்கள்.

அதெல்லாம் கவனிக்காமல் இவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிங்கி, "வெங்கி, சில சொதபல் இருந்தாலும் யாருமே கிண்டல் செய்ய முடியாத அளவுக்கு ஆட்டம் முடிந்தது டா. ரியலி ஐ என்ஜாய் எ லாட்.."

அர்ஜுன், "மீ டூ பிங்கி! எல்லாம் உன்னால் தான். நீ என் மேல் வைத்த நம்பிக்கையால் தான் இதெல்லாம் நடந்தது."

பிங்கி, "இந்த பிரச்சினைகளுக்கு காரணமே நான் தான் டா. நான் சொல்லி தான் தர்ஷினி அந்த வீடியோவ வாட்ஸ்அப் குரூப் ல போட்டாள்."

அர்ஜுன், "அன்னிக்கே ராம் எல்லாமே சொல்லிட்டான். அந்த வீடியோ எடுத்தது ராம்! அதை போஸ்ட் பண்ணது தர்ஷினி!! போஸ்ட் பண்ண சொன்னது நீ!!!."

பிங்கி, "கோபம் வரல.."

அர்ஜுன், "இல்ல"

பிங்கி, "ஏன்?"

அர்ஜுன், "என் பிங்கி என்ன ஆனாலும் கனவில் கூட எனக்கு கெடுதல் நினைக்க மாட்ட. அவள் இப்படி ஒரு விஷயம் செய்தாள் என்றால் அப்போ என்னிடம் ஏதோ ஒரு விஷயம் எதிர்பார்க்கிறாள். அது என்ன என யோசித்தேன், அப்பறம் புரிந்தது என் பயம்! மற்றவர்கள் முன்னே நான் ஆசைப்பட்ட விஷயம் செய்ய என்னை தடுக்கும் என் பயம்! அதில் இருந்து என்னை வெளி கொண்டு வர நீ செய்த திருவிளையாடல் இது. அதற்கு நீயே என் துணைக்கு நின்றாய்! இப்போ நீ எதிர்ப்பார்த்த ரெண்டு விஷயத்தில் நடனம் முடிந்தது. இதில் ஜெய்க்க வாய்ப்பு இருக்க தெரியல ஆனால் எல்லார் முன்னாடி என் பயத்தை விட்டு ஆடினேன். அது போதும்.."

பிங்கி, "என்னை விட என் மனசை எப்படிடா புரிந்து வைத்து இருக்க"

அர்ஜுன், "சிவனின் பாதி சக்தி என சொல்வாங்க. அது எந்த அளவுக்கு உண்மை தெரியல. ஆனால் என் பாதி டி நீ! உன் கண் அசைவின் பொருள் கூட எனக்கு தெரியும். காரணம் உன்னை காதலிக்கிறேன் இந்த உலகில் எல்லார் விட உன்னை தான் அதிகம் விரும்பிகிறேன்."

பிங்கி, "எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க.."

அர்ஜுன், "ஏய் கேடி, முதலில் உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி காதலை அவங்க கிட்ட தான் சொன்னேன்."

பிங்கி, "என்னது?"

அர்ஜுன், "ஓய் டென்ஷன் ஆகாதே. உன்னை காதலிப்பதை அவங்க கிட்ட சொன்னேன். அவங்க ஓகே சொல்லிட்டாங்க. ஆனால் படிப்பு முக்கியம் மற்றபடி இன்னும் ஏழு வருசத்துக்கு கவனம் கட்டுப்பாடு முக்கியம் சொல்லிட்டாங்க."

பிங்கி, "இந்த எச்சரிக்கை உனக்கா? எனக்கா?"

அர்ஜுன், "ரெண்டு பேருக்குமே தான்.."

பிங்கி, "நம்ம மேல் ரொம்ப நம்பிக்கை போல.."

பின் இன்னொரு ஜோடிகள் பற்றிய அறிவிப்பு வர உடனே அவர்கள் கீழே இறங்கினார்கள்.

******************

இன்னும் ஒன்று அந்த ஜோடிகளுக்கு பிறகு ராம் மற்றும் தர்ஷினி மேடைக்கடு நடனம் ஆட ஆரம்பித்தார்கள்.

அந்தக் கால கருப்பு வெள்ளை உடையில் நடமாட ஆரம்பித்தார்கள். ராம் வெள்ளை கலர் கோட் சூட் அணிந்து கொண்டும் தர்ஷினி வெள்ளை கலர் டிசைன் சாரி அணைத்துக்கொண்டு ஆடினாள்.

(உங்கள் கற்பனையில் இந்த பாட்டை சிவாஜி கணேசன் போல ராம் மற்றும் சரோஜா தேவி போல தர்ஷினி கீழே கொடுக்கப்பட்ட பாட்டுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்)

ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

Monday நீ முண்டம் tuesday நீ தண்டம்
Wednesday தேடி வந்த கண்டம்
Thursday நீ மொக்க friday நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் snake நான் தான்
Akthar நீ தான் sachin'னு நான் தான்
ஆண்டனி நீ தான் badsha நான் தான்

பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்

ஏய் எங்கடி ஏய் எங்கடி...

ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி....
ஏய் எங்கடி அய்யய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி....

உன்னை பார்த்தாலே bp ஏறும்
என் happy life sad'ஆ மாறும்
நீ ஒசாமானா நான் ஒபாமாடி
அட உன் death'து என் கைலடி
உன் face'அ நான் பார்த்தா போதும்
என் bad time'மு start ஆகும்
முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா

வா மா வா வாய கொஞ்சம் மூடு
Free advise வீட்ட விட்டு ஓடு

வாடா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

Monday நீ முண்டம் tuesday நீ தண்டம்
Wednesday தேடி வந்த கண்டம்
Thursday நீ மொக்க friday நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் snake நான் தான்
Akthar நீ தான் sachin'னு நான் தான்
ஆண்டனி நீ தான் basha நான் தான்

பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்..பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்

ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி..


அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கைத்தட்டல் சத்தங்கள் கேட்டனர். அங்கே கூடியிருந்த அனைவருக்குமே அவர்கள் நடனம் பிடித்து இருந்தது.

மற்ற ஜோடிகள் போல இவர்கள் எதுவுமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை ஏனென்றால் இன்னும் சிறிது நேரத்தில் அர்ஜுன் மற்றும் பிங்கியின் பாட்டுப்போட்டி ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது.

மூன்று சுற்றுகளாக நடக்கப்போகுது போட்டியில் அவர்கள் எந்த எந்த பாட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என அங்கே போய் தான் தெரியும்.

**************

மூன்று கட்டங்களாக நடக்கக்கூடிய பாட்டு போட்டி அது.

1. முதல் சுற்றில் இருபது ஜோடிகள்
2. இரண்டாம் சுற்றில் பத்து ஜோடிகள்
3. கடைசி சுற்றில் ஐந்து ஜோடிகள்


கடைசியில் மூன்று ஜோடிகளை தேர்ந்தெடுத்து முதல் இரண்டாம் மூன்றாம் பரிசினை தருவார்கள்.

இதுவரை அர்ஜுன் மற்றும் பிங்கி பாட்டு பயிற்சி செய்த விதத்தினை யாருமே காணவில்லை. போட்டி அன்று நேரிலேயே பார்த்து விடுவோம் என முடிவில் இருந்தார்கள்.

******************

முதல் சுற்று..


பதினைந்தாம் ஜோடியாக அர்ஜுன் மற்றும் பிங்கியே அழைத்தார்கள்.

இந்த சுற்றுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாட்டு 3 (த்ரீ) படத்தில் வந்த "கண்ணழகா காலழகா" பாட்டு

பிங்கி : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

அர்ஜுன் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பிங்கி : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

அர்ஜுன் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பிங்கி : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை

அர்ஜுன் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பிங்கி : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

அர்ஜுன் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

அர்ஜுன் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி


இன்னும் சில பேரின் பாட்டு முடிந்த பிறகு.. அரை மணிநேரத்தில் ரிசல்ட் வந்தது.

அடுத்த சுற்றில் அர்ஜுன் மற்றும் பிங்கியின் பெயர் இருந்தது.

******************

ரெண்டாம் சுற்று..

ஏழாவது ஜோடியாக அர்ஜுன் மற்றும் பிங்கி அழைக்கப்பட்டார்கள்.

இந்த சுற்றுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாட்டு 3 (த்ரீ) படத்தில் வந்த "நீ பாா்த்த விழிகள்" பாட்டு

அர்ஜுன் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பிங்கி : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

அர்ஜுன் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

அர்ஜுன் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

அர்ஜுன் : நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்

பிங்கி : அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்

அர்ஜுன் : இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே


அர்ஜுன் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

பிங்கி : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

அர்ஜுன் : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ…..


இன்னும் சில பேரின் பாட்டு முடிந்த பிறகு.. பத்து நிமிடத்தில் ரிசல்ட் வந்தது.

அடுத்த சுற்றில் அர்ஜுன் மற்றும் பிங்கியின் பெயர் இருந்தது.

******************

மூன்றாவது சுற்று..

மூன்றாவது ஜோடியாக அவர்களை அழைத்தார்கள்..

இந்த சுற்றுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாட்டு நண்பன் படத்தில் வந்த "அஸ்கு பஸ்கு" பாட்டு

மூன்றாவது சுற்றில் மட்டும் குழு என சிலர் அவர்களோடு பாடலாம். அதற்கு உதவ சங்கீதா, அஞ்சலி மற்றும் தர்ஷினி வந்தார்கள்.

பிங்கி : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு அஸ்கு
அஸ்கு அஸ்கு லஸ்கா
அஸ்கு அஸ்கு அஸ்கு

அர்ஜுன் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே லவ்
இஷ்டம் பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல் உந்தன்
மேலே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு

அர்ஜுன் : அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று
செய்தேன் உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்

(மியூசிக்..)

அர்ஜுன் : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

(மியூசிக்..)

அர்ஜுன் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே லவ்
இஷ்டம் பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல் உந்தன்
மேலே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு

(மியூசிக்..)

பிங்கி : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு

அர்ஜுன் : ப்ளுடோவில்
உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி
சூடேற்றுவேன்

(மியூசிக்..)

அர்ஜுன் : முக்கோணங்கள்
படிப்பேன் உன் மூக்கின்
மேலே விட்டம் மட்டம்
படிப்பேன் உன் நெஞ்சின்
மேலே மெல்லிடையோடு
வளைகோடு நான் ஆகிறேன்
ஓஹோ

பிங்கி : ஹ்ம்ம் ப்ளாடோவின்
மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான்
கூடமா

(மியூசிக்..)

பிங்கி : பாழும் நோயில்
விழுந்தாய் உன் கண்ணில்
கண்டேன் நாளும் உண்ணும்
மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மணி
வைக்க காதல் காதல் என்றே
கேட்க

(மியூசிக்..)

பிங்கி : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

அர்ஜுன் : லவ் இஷ்டம்
பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல்
உந்தன் மேலே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு அஸ்கு
அஸ்கு அஸ்கு லஸ்கா
அஸ்கு அஸ்கு அஸ்கு

பிங்கி : தேஜாவூ கனவில்
தீ மூட்டினாய் ராஜா என்
மனதை ஏன் வாட்டினாய்
பெண் : கப்பம் கேட்டு
மிரட்டி நீ வெப்பம்
கொண்டாய் ரத்தம்
மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வென் நிலாவாக
இதமாக குளிரூட்டவா

அர்ஜுன் : கண்ணாடி நிலவாய்
கண் கூசினாய் வெண்வண்ண
நிழலாய் மண் வீசினாய்

(மியூசிக்..)

அர்ஜுன் : புல்லில் பூத்த
பனி நீ ஒரு கள்ளம்
இல்லை வைரஸ்
இல்லா கணினி உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி
முல்லை போலே
பிள்ளை மெல்லும்
சொல்லை போலே

(மியூசிக்..)

அர்ஜுன் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ அஸ்கு
லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே

பிங்கி : அஹாவ
போலிங்கோ சிந்தா
சிந்தா இஷ்க் இஷ்க்
மைலே

அர்ஜுன் : லவ் இஷ்டம்
பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல்
உந்தன் மேலே

பிங்கி : ஓஹோ அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்

அர்ஜுன் : மொத்தமாய்
கோர்த்துதான் காதல்
சென்டொன்று செய்தேன்

அர்ஜுன் & பிங்கி : உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்

அர்ஜுன் : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

பிங்கி : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு


இன்னும் ரெண்டு ஜோடிகளின் பாட்டு முடிந்த பிறகு.. ரிசல்ட் மேடையில் அறிவுப்போம் என சொன்னார்கள்.

****************

பாட்டு போட்டி முடிந்த பிறகு வெளிய வந்த அர்ஜுனை கட்டிக்கொண்ட ரிஷி, "அடேய் செம்ம டா, நாங்க எதிர்பார்க்கவே இல்ல. ஒரு சுற்றே தாண்டுவதே கஷ்டம் நினைத்தேன்!. நீங்க கடைசி சுற்று வரை வருவீங்க என நானே நினைத்து பார்க்கல. சூப்பர் டா! சூப்பர் ஓ சூப்பர்!! ஒரே மாதத்தில் கழுதை குரலை குயில் குரலாக எப்படி டா மாற்றியது?"

அர்ஜுன், "எல்லாம் உங்க பாட்டியின் அருள். எங்களை சொந்த பேரன் பேத்தியாக நினைத்து இரவு பதினொரு மணிவரை அவர்களின் உடல் நலத்தையும் மீறி எங்களுக்காக நேரம் செலவு பண்ணார்கள்."

பிங்கி, "எஸ் ரிஷி, இனி உனக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் அவர்கள் சொந்த தாத்தா பாட்டி தான்."

அப்போ முன்னாடி வந்த ராம், அஞ்சலி, விக்ரம் மற்றும் சங்கீதா கூட, "அவர்கள் எங்களுக்கும் தாத்தா பாட்டி தான்", என்றார்கள்.

பின் தர்ஷினி பக்கம் திரும்பிய ராம், "தர்ஷினி நீ ஒன்னும் சொல்லல.."

அப்போ அங்கே வந்த கார்த்தி, "அவங்க ஏற்கனவே அவளின் தாத்தா பாட்டி தான்."

எல்லாரும் புரியாமல் பார்க்க, அங்கே வந்த இரு பெரியவர்கள் கார்த்தியின் அப்பா சாமிநாதன் அம்மா உமா, "ஆமாம், எங்க பையன் சொல்றது தான் உண்மை. அவர்கள் ஏற்கனவே தர்ஷினிக்கு தாத்தா பாட்டி தான்."

ரிஷி, "இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்ன நல்ல இருக்கும்"

உமா, "ஹ்ம்ம், மொத்த உண்மையும் சொல்லணுமா?"

ரிஷி, "கண்டிப்பா மா, அதில் தான் என் காதல் வாழ்க்கையே அடங்கி இருக்கு."

உமா, "உண்மை சொன்னாலும் தர்ஷினி தான் எங்க பொண்ணு. அவளை விட்டு கொடுக்க மாட்டோம்."

அவரின் கையை பிடித்து கொண்டவன், "அம்மா, இங்க பாருங்க அவள் மட்டும் இங்க பொண்ணு இல்ல என்னையும் நீங்க பையனாக நினைத்து கொள்ளலாம். பிளீஸ் சொல்லுங்க பிளீஸ்.."

உமா, "இங்க இருக்கிற எல்லாரிடமும் ஒரு உண்மை சொல்றேன். தர்ஷினி வேற யாரும் இல்ல ரிஷி இத்தனை வருடமாக தேடி கொண்டு இருந்த வெண்ணிலா. நான் பெற்ற பொண்ணை சுனாமியில் இழக்க அதே சுனாமி மூலம் கிடைத்த பொக்கிஷம் இவள்."

சாமிநாதன், "அது மட்டும் இல்ல, தர்ஷினி ரிஷிக்கு தோழி மட்டும் சட்டப்படி சகோதரி முறையும் கூட. அவனின் அப்பா அம்மா அதே சுனாமி அன்று தான் இவளை சட்டப்படி தத்து எடுத்தார்கள். அதே நாளில் தான் தங்களின் தத்து பெண்ணை கடக்கரைக்கு அழைத்து சென்ற போது சுனாமி அலையில் இறந்தார்கள். அதில் தப்பிய இவள் எங்கள் கையில் வந்தாள்."

ஃப்ளாஷ்பேக் அடுத்த அத்தியாயத்தில் சொல்வேன்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#29
வாராயோ வெண்ணிலாவே...!! 26

2004 ஜூன் மாசம்..


சென்னை மெரினா கடற்கரையில் ரிஷி வெண்ணில்லவன் அவனின் அவனின் அப்பா வாசுதேவன் அம்மா வாசுகி கூட வந்து இருந்தான்.

இந்த ஃப்ளாஷ்பேக் முடியும் வரை அவனை வெண்ணில்லவன் என்றே அழைப்போம்.

வெண்ணில்லவன், "அப்பா, வாங்கப்பா கடலில் போய் கால் நனைப்போம்."

வாசுகி, "ஏன்டா வீட்டிலே தான் அப்பா! அப்பா!! என அவரையே சுற்றி கொண்டு இருக்கே பார்த்தால் இங்கயுமா? அம்மா நான் ஒருத்தி இங்கே இருக்கேன் நானும் வருவேன்.."

வெண்ணில்லவன், "அம்மா உனக்கு தன் கடல் தண்ணீர் என்றால் பயம் ஆச்சே.."

வாசுதேவன், "ஆமாம் வாசு, உனக்கு பயம் ஆச்சே"

வாசுகி, "பயம் தான் ஆனால் நீங்க என் கையை பிடிச்சுக்க மாட்டிங்க?"

வாசுதேவன், "பிடிச்சுக்கலமே, வாழ்க்கை மொத்தம் பிடிச்சுக்க தானே கல்யாணம் பண்ணேன். நம்ம கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமாக இங்க பார் ஒரு சிங்க குட்டி இருக்கான்."

வெண்ணில்லவன், "அப்பா நான் சிங்கம் இல்ல, உங்க பையன் மனித குட்டி."

வாசுதேவன், "சரிடா மனித குட்டி. வா கடலில் விளையாடுவோம். வாசு நீயும் வா.."

ரெண்டு நிமிடத்துக்கு மேல் வாசுகி அம்மாவால் கடலில் நிற்க முடியல. அவங்க ஒரு மணல் மேட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

வெண்ணில்லவன் மற்றும் வாசுதேவன் இருவருமே குதூகலமாக காதல் நீரில் விளையாடி கொண்டு இருந்தார்கள்.

அப்போ அங்கே ஒரு ஒன்பது வயது பொண்ணு பூ விற்று கொண்டு வந்தாள்.

அந்த பெண், "அம்மா, இந்த ரெண்டு முல மல்லி பூ மட்டும் வாங்கிக்கோங்க மா! பிளீஸ்"

தன்னை ஒரு பொண்ணு அழைப்பதை கவனித்த வாசுகி, "பூ எவ்வளவு?"

அந்த பெண், "இருபது ரூபாய்"

பணம் கொடுத்து விட்டு பூ வாங்கி கொண்ட வாசுகி, "ஓய் குட்டி உன் பெயர் என்ன?"

அந்த பெண், "வெண்ணிலா..."

வாசுகி, "என் பையனின் பெயர் கூட வெண்ணில்லவன்."

வெண்ணிலா, "அப்படியா மா, ரொம்ப சந்தோசம். எங்க வீட்டில் என்னை தேடி கொண்டு இருப்பாங்க. நான் போய்ட்டு வருகிறேன் மா."

அந்த பொண்ணு போன சிறிது நேரத்துக்கு பிறகு வெண்ணில்லவன் மற்றும் வாசுதேவன் வந்த பிறகு வீட்டுக்கு கிளம்பினார்கள்.

அங்கு இருந்து ஐந்து கிலோ மீட்டரில் தான் அவர்களின் வீடு காரில் போய் கொண்டு இருக்கும் போது தன் பார்த்த அந்த குட்டி பொண்ணை பற்றி வாசுகி சொல்ல..

வாசுதேவன், "ஹ்ம்ம், என் இதய ராணி என்ன சொல்ல வரீங்க?"

வாசுகி, "நமக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் இந்த பொண்ணு மாதிரி தாங்க இருக்கும்."

வாசுதேவன், "ஹ்ம்ம் அப்படியா இப்போ கூட கெட்டு போகல நம்ம நிலவன் வேற ஒரு தங்கச்சி இல்ல தம்பி பாப்பா கேட்கிறான்."

வாசுகி, "போதும் எப்போ பார்த்தாலும் ஒரே இடத்தில் வரீங்க. புள்ளை கூட இருப்பது கூட தெரியாமல் என்னது இது?"

வெண்ணில்லவன், "நான் எதுவும் கேட்கல..😛😛"

வாசுதேவன், "அதன் நம்ம பையனே சொல்லிவிட்டேனே என்ன வாசுகி ஓகே ஆ..?"

வாசுகி, "சே, அப்பனும் பையனும் சேர்ந்து என்னை கலாய்ப்பது போதும். வீட்டுக்கு சீக்கிரம் போங்க மாமாவும் அத்தையும் வெயிட் பண்ணுவாங்க."

********************

சதாசிவம், "பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்என்று சொல்வேன்
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்
அவள் வேறு யாரு கண்ணாடி பாரு....

போய் பாரு (பார்வதி ஷார்ட் ஆ) டார்லிங்.. போய் கண்ணாடியை பாரு..🤩🤩😍
"

பார்வதி, "ஐயோ எதுக்கு இப்படி பாட்டு பாடி உயிரை எடுக்கிறீர்கள்."

சதாசிவம், "சும்மா, உன்னை இம்ப்ரஸ் பண்ண தான்."

பார்வதி, "வயசான கிழவனுக்கு இந்த வயசில் ரொமான்ஸ் கேட்குதா?"

சதாசிவம், "என்ன பண்றது பாரு, இந்த ஆறுபது வயசில் கூட நீ அழகா இருக்கே."

பார்வதி, "அப்படியா?"

சதாசிவம், "ஆமாம்.! ஆமாம்!!"

பார்வதி, "அப்போ நேற்று ஏன் பக்கத்து விட்டு பொண்ணை வெறிக்க வெறிக்க பார்த்திங்க?"

சதாசிவம், "எந்த பொண்ணு?😱"

பார்வதி, "ஓவர் ஆ நடிக்க வேண்டாம். நம்ம பேரன் எல்லாம் சொல்லிட்டான். இருபது வயசில் காலேஜ் போன பொண்ணு அது. அதுக்கிட்ட போய் உன் பெயர் என்ன? வயசு என்ன? லவ்வர் இருக்கானா? எப்போ கல்யாணம் பண்ணிக்க போற எல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணி இருக்கீங்க.."

சதாசிவம், "ஐயோ பொய்! பொய்!! நான் இல்ல வெண்ணில்லவன் தான் எல்லாம் கேட்டான். நான் சும்மா துணைக்கு போய் நின்றேன். கடைசியில் பழி என் மேல் போட்டுட்டான்."

பார்வதி, "பொய் சொல்லாதீங்க!! உங்களை பற்றி எனக்கு தெரியாது. என்னோட பெரியப்பா பொண்ணை பொண்ணு பார்க்க வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டவர் ஆச்சே! உங்களை நம்ப முடியுமா?"

சதாசிவம், "அடிப்பாவி!! நான் தான் வெட்கம் கெட்டு கேட்டேன் என்றால் நீயோ உடனே சம்மதம் சொல்லல? உங்க அப்பனிடம் சண்டை போட்டு என்னை கட்டிகளே.."

பார்வதி, "என்ன பண்றது அப்போ ஜெமினி கணேசன் மாதிரி ஸ்டைலா இருக்கீங்க இப்போ.."

சதாசிவம், "இப்போ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி அழகா இருக்கேன் ல..😎😎"

பார்வதி, "எனக்கு ஜெமினி கணேசன் ஸ்டைல் தான் வேண்டும்.."

சதாசிவம், "சாரி இனி அது முடியாது. காலம் மாறிவிட்டது அதே போல நீயும் மாறவேண்டும் பாரு😆😍."

அப்போ வீட்டுக்குள் வந்தார்கள் வாசுதேவன், வாசுகி மற்றும் வெண்ணில்லவன்..

தன் தாத்தாவை நெருங்கிய வெண்ணில்லவன், "ஓய் தாத்தா, யார் யாரை போல மாளணும்?"

சதாசிவம், "எல்லாம் உங்க பாட்டி தான். அவளுக்கு நான் ஜெமினி கணேசன் போல முடி வைத்து கொள்ளணும் சொல்கிறாள். அது முடியாத காரியம் ல"

வெண்ணில்லவன், "ஏன் தாத்தா முடியாது?"

சதாசிவம், "அது இப்போ அவர் ரொம்ப வயசு ஆகி வெள்ளை முடி வைத்து இருக்கார். ஆனால் நான் அப்படியா இந்த ஆறுபதினைந்து வயதில் கூட மூடி எல்லாம் கருப்பா வைச்சுகல..?"

பார்வதி, "வாரத்துக்கு ஒரு நாள் பைண்ட் அடித்தால் அப்படி தான் இருக்கும்."

சொன்ன பார்வதி பாட்டி தன் பேரனுக்கு பால் கலக்க போனார்கள்.

வாசுதேவன், "ஏன் பா இப்படி பண்றீங்க? கொஞ்சம் வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துகாலம் ல.."

சதாசிவம், "மகனே, என் வயசு நான் பழக்கும் மக்களை பொறுத்தது. அப்படி பார்த்தால் என் பேரின் கூட தானே அதிக நேரம் இருக்கிறேன் அப்போ என் வயசு ஒன்பது வயசு."

வெண்ணில்லவன், "டேய் தாத்தா, இப்படி சொல்லி சொல்லி உன்னால் எனக்கு ஒரு girlfriend கூட இல்ல."

சதாசிவம், "நான் வேண்டுமென்றால் ஹெல்ப் பண்ணட்டுமா?"

வெண்ணில்லவன், "எதுக்கு எனக்கு பசங்க ப்ரெண்ட்ஸ் கூட இல்லாமல் பண்ணவா?"

சதாசிவம், "அதன் இருக்கேன் ல நல்ல நண்பனாக நான் இருப்பேன்."

வெண்ணில்லவன், "அட போயா, நான் டான்ஸ் கிளாஸ் போகனும்! நேரம் ஆச்சு.."

அவன் கிளம்பி போன பிறகு,

வாசுதேவன், "என்னப்பா அவன் உங்களை மதிக்கவே இல்ல போல"

வாசுகி, "சாரி மாமா, எல்லாம் இவரின் செல்லம் தான். ஓவர் செல்லம் கொடுத்து அவனை பெரியவர்களுக்கு மரியாதை தராத அளவுக்கு வளர்த்துட்டர்."

சதாசிவம், "இங்க அந்த சீன் இல்ல. அவன் என் செல்ல பேரன் வீட்டுக்குள் நாங்க இப்படி தான் பெஸிப்போம்! ஆனால் வெளி ஆட்கள் முன்னாடி தரவேண்டிய மரியாதை சரியா தருவான்."

உடை மாற்றி கொண்டு வந்தவன், "ஓய் தாத்தா வா வந்து வண்டியை எடு! என்னோட கிளாஸுக்கு நேரம் ஆச்சு."

சதாசிவம், "வரேன் டா நடன புயல்.."

சதாசிவம் மற்றும் வெண்ணில்லவன் போன பிறகு சமையல் அறையில் தன் மனைவியை பார்க்க போனார் வாசுதேவன். அங்க கூட அவரின் மனைவி தன் அம்மாவிடம் அன்று பார்த்த பொண்ணு பற்றி பேசிக்கொண்டு இருப்பது பார்த்து,

வாசுதேவன், "இங்கயுமா? வாசு டார்லிங் உனக்கு என்னதான் டி வேணும்?"

வாசு, "தெரியல.."

பார்வதி, "ஏதோ ஒரு பொண்ணை பார்த்தேன் சொல்ற சரி அடுத்த தடவை நானும் உங்க கூட வந்து அந்த பொண்ணை பார்க்கிறேன். அப்படி என்ன அந்த பொண்ணு என் பேனை விட சூப்பர் பார்க்கணும்."

தலையில் அடித்து கொண்டு வாசுதேவன் சென்றார்.

****************

வெண்ணிலாவின் குடிசை வீடு..

வெண்ணிலா, "அம்மா, இன்னிக்கு 300 ரூபாய்க்கு பூ விற்றேன். இதாங்க பணம்..💸💸"

அவளின் அம்மா, "சாரி டா குட்டி. அம்மாவுக்கு இன்னிக்கு உடம்பு முடியல அதன் எனக்கு பதிலாக படிக்கிற பொண்ணு உன்னை அனுப்பி வைத்தேன்."

வெண்ணிலா, "விடு மா, அப்பா இறந்த பிறகு எனக்கு நீ துணை உனக்கு நான் துணை. உனக்கு உடம்பு சரியாக இருந்தால் என்னை ஏன் பூ விற்க அனுப்ப போற?"

தன் பொண்ணை கட்டிக்கொண்ட அந்த பெண்மணி, "என் ஆசை என்ன தெரியுமா, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீ பட கூடாது மா. இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பயந்து பயந்து செலவு பண்ற கஷ்டம் உன் விஷயத்தில் மாறனும். நிறைவேறுமா? இல்லையா? என தெரியாத பேராசை கனவு ல.."

வெண்ணிலா, "விடு மா, இடத்துக்கு தகுந்த மாதிரி தானே வாழ்வு அமையும். எனக்கு பெரிய ஆசை எல்லாம் இல்ல, இந்த உப்பு காற்று உள்ள கடல் ஓர வாழ்வே எனக்கு பிடித்து இருக்கு. நம்மளோடது மீனவ குடும்பம் மா! இந்த கடல் தான் நம்ம வாழ்வு மற்றும் பொக்கிஷம்."

அடுத்த நாள் ஸ்கூலுக்கு படிக்க வேண்டியது எல்லாம் படிக்க ஆரம்பித்தாள்.

*****************

கார்த்தியின் வீடு..

தன் தங்கச்சியின் அழுகையை எப்படி நிறுத்துவது என புரியாது கார்த்தி முழித்து கொண்டு இருந்தான்.

தர்ஷினி, "டேய் அண்ணா, எனக்கு அந்த கம்ப்யூட்டர் கொடு நான் விளையாடனும், கொடு கொடு கொடுடா.."

கார்த்தி, "உனக்கு இதெல்லாம் யுஸ் பண்ண தெரியாது குட்டி. பிளீஸ் குட்டி, ரெண்டு மாசமா அப்பா கிட்ட பிடிவாதம் பிடித்து வாங்கினேன். ரிபைர் ஆச்சு அவர் திட்டுவார்"

தர்ஷினி, "இல்ல! இல்ல!! எனக்கு வேண்டும் கொடு டா அண்ணா! கொடு!!"

கார்த்தி, "இல்ல மாட்டேன். நீ என்ன அழுதாலும் கொடுக்க மாட்டேன்.."

தர்ஷினி, "நா இப்பவே அம்மா கிட்ட போய் சொல்றேன். சொல்லி உனக்கு அடி வாங்கி தரேன்"

கார்த்தி, "நீ என்ன பண்ணாலும் தர மாட்டேன்.."

என்ன போய் சொன்னாலோ அரை மணிநேரத்தில் அவனின் கம்ப்யூட்டர் அவளின் கைக்கு போனது. கார்த்திக்கு இனி கம்ப்யூட்டர் ஏ கிடையாது என சொல்லப்பட்டது.

இப்போ அழும் முறை அவனுடையது அதை பார்த்து அவனின் கூட பிறந்த தங்கை தர்ஷினி கை தட்டி சிரித்தாள்.

இந்த மாதிரி அவனின் பல பொருட்களை தன் கட்டுக்கு கொண்டு வந்தாள். தினம் தினம் அவளுக்கு வீட்டில் செல்லம் வளர வளர இவனின் முக்கியத்துவம் குறைக்கிற மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பித்தான்.

ஒரு நாள் நீண்ட வெறுப்பு ஏற்பட அதே வெறுப்பின் உச்சத்தில், "கடவுளே இப்படிப்பட்ட ஒரு தங்கச்சியை எனக்கு தேவையில்ல. இவளை கொடுத்த மாதிரியே கூட்டிக்கிட்டு போ!!", என அழுகையோடு வேண்டினான்.

*****************

அடுத்த இரண்டு மாசமும் வாசுகி மற்றும் பார்வதி வெண்ணில்லவனை அழைத்து கொண்டு கடற்கரையில் வெண்ணிலாவை தேடும் வேலையில் இறங்கினார்கள்.

வெண்ணில்லவன், "அம்மா, அந்த பொண்ணு எப்படி இருப்பாள் கூட தெரியாமல் இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி தேடிக்கிட்டே இருப்பீங்க..? பாட்டி பிளீஸ் இத்தோடு இந்த தேடுதலை விட சொல்லுங்க.."

பார்வதி, "நிலவா கண்ணா விடு பா! உங்க அம்மாவுக்கு அந்த பொண்ணை பார்க்காமல் தூக்கமே வராது. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போமே.."

வெண்ணில்லவன், "நீயுமா பாட்டி, வர வர என்னை யாருமே கண்டுக்கவே இல்ல! அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்ச நாளாக அப்பா வேலையில் பிஸி ஆ இருக்கார். நான் பாவம் ல! எனக்கும் வலிக்கும் ல!"

தன் மகனை சில நாட்களாக கவனிக்காமல் இருந்ததை உணர்ந்த வாசுகி அவனின் தலையை தடவி விட்டு, "நிலவா, அம்மாவை மன்னித்து விடு பா! என்னனு தெரியல அந்த பொண்ணை பார்த்ததிலிருந்து எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லயே என்கிற ஏக்கம். எல்லாரும் சொல்வார்கள் பசங்க அம்மா கூட க்ளோஸ் ஆ இருப்பாங்க பொண்ணுங்க அப்பா கூட க்ளோஸ் ஆ இருப்பாங்க என. ஆனால் அது பொய், உண்மையில் நீ உன் அப்பா கூட தானே க்ளோஸ் ஆ இருக்க. உன் அப்பாவுக்கு பிறகு தானே நான் உனக்கு?"

வெண்ணில்லவன், "அம்மா அப்படி இல்லமா! நான் பிறந்த முதல் ஐந்து ஆறு வருடம் நீ M.com, B.ed, PhD என்று பல டிகிரி போய்ட்டே. அப்போ அப்பா தானே கூட இருந்து பார்த்து கொண்டார். உன் மேல் பாசம் இல்லனு இல்ல ஆனால் ரொம்ப வருஷம் அப்பா கூட இருந்ததால் என்னால் ரொம்ப சீக்கிரம் உன் கூட ஒட்ட முடியல. நீயும் பார் எனக்கு பிடித்த எந்த விளையாட்டையும் என் கூட விளையாட மாட்டுற!! பின்ன எப்படி என்னோட நெருக்கத்தை காட்டுவேன் சொல்லு?"

தன் தவறை உணர்ந்த வாசுகி, "சாரி குட்டி.."

வெண்ணில்லவன், "ஆமாம் ஆமாம் இப்படி செல்ல பெயர் வைத்து மட்டும் கூப்பிடு ஆனால் விளையாட மட்டும் வராதே."

வாசுகி, "இனி தினம் தினம் என் பையன் கூட விளையாடுவேன்."

பார்வதி, "குழந்தைகளே இந்த வயசான கிழவிக்கு கூட விளையாட்டில் அனுமதி உண்டா?"

வாசுகி, "கண்டிப்பா அத்தே நீங்கள் இல்லாமலா? உங்கள் பேரன் கூட என்னை விட நீங்க தானே அதிகம் இருந்து இருக்கீங்க. உண்மையில் என்னை விட உங்க கிட்ட தானே அவன் தாய் பாசம் அறிந்து கொண்டான்."

வெண்ணில்லவன், "ஆமாம் மா, ஆனால் அதற்கு பாட்டியை அம்மா என்று எல்லாம் அழைக்க முடியாது."

வாசுகி, "கூப்பிட்டாலும் யார் கேட்க போறாங்க சொல்லு. உண்மையான பாசம் காட்டும் எல்லாருமே அம்மா அப்பாவை போன்ற உறவு தான்."

வெண்ணில்லவன், "எனக்கு புரியல வாங்க வீட்டுக்கு போலாம்.."

தன் மகனின் அன்பை உணர்ந்து கொண்டாலும் இத்தனை நாள் தேடிய அந்த வெண்ணிலா பெண்ணை அந்த கண்கள் தேடி கொண்டே இருந்தது கடற்கரை விட்டு செல்லும் வரை..

அவர்கள் வீட்டுக்கு போய் சேர்ந்த போது அங்கே வீட்டு வேலைக்கு வந்த சில ஆட்களின் வெண்ணிலாவின் அம்மா வள்ளியும் இருந்தார். அவர் அருகே அவரின் கையை பிடித்து கொண்டு வெண்ணிலாவும் இருந்தாள்.

அன்று தான் நம்ம ரிஷி என்கிற வெண்ணில்லவன் தன் தோழி வெண்ணிளவை முதல் முதலில் பார்த்தான்.

இருவருமே பார்த்த அந்த நொடியில் ஒரு சிநேக பார்வை பரிமாறி கொண்டார்கள்.

அவள் அருகே சென்றவன் தன் கையை கொடுத்து, "ஹாய், என் பெயர் வெண்ணில்லவன்... ரிஷி வெண்ணில்லவன். உன் பெயர் என்ன?"

வெண்ணிலா, "ஹாய், என் பெயர் நிலா.. வெண்ணிலா"

அங்கே ஒரு புது உறவு ஆரம்பம் ஆனது.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#30
வாராயோ வெண்ணிலாவே...!! 27

அங்கே வெண்ணிலவை பார்த்த வாசுகி அம்மா சந்தோசம் கொண்டார்.

அவள் அருகே சென்று, "ஓய், வெண்ணிலா குட்டி நீ எங்கம்மா இங்க?"

அவர் யார் என புரியாது முழித்த வெண்ணிலவிடம் "ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உன்னை கடற்கரையில் பார்த்தேன். நீ பூ விற்று கொண்டு சென்றாய்! அன்னிக்கு கூட மிச்ச பூவை நான் தான்மா வாங்கினேன். அன்று இருந்து அடிக்கடி அங்கே செல்லும் போது எல்லாம் உன்னை தேடி இருக்கேன்..", என வாசுகி நினைவுப்படுத்த

இன்னும் நினைவு வராத அவளோ, "சாரி ஆன்டி, நினைவு வரல. அம்மாவுக்கு உடம்பு முடியாத நேரத்தில் எல்லாம் பூ விற்க போவேன்! ஆனால் யாரையும் நினைவு வைத்து கொள்ளும் அளவுக்கு தோன்ற ல! சாரி."

சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அதனை மறைத்து விட்டு, "சரி குட்டி, பரவல!", தன் குரலை சரி பண்ணி கொண்டு தொடர்ந்தார், "இவங்க தன் உங்க அம்மாவா?"

வெண்ணிலா, "ஆமாம், ஆன்டி. என் ஸ்வீட் செல்ல அம்மா.."

வாசுகி, "அப்பா?"

வெண்ணிலா, "அப்பா சாமிகிட்ட."

வாசுகி, "ஓ சாரி மா.."

வெண்ணிலா, "இட்ஸ் ஓகே.."

பின் வள்ளிக்கிட்ட பேச ஆரம்பித்தார்.

வாசுகி, "உங்க பெயர்?"

வள்ளி, "வள்ளி.."

வாசுகி, "உங்க புருஷன் எப்படி இருந்தார்?"

வள்ளி, "எங்க குடும்பமே மீனவர் குடும்பம் மா. இதோ இவள் பிறந்த ஒரு வருசத்துக்கு பிறகு என் புருசன் கடலுக்கு போனவர் அங்க கடலில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற தண்ணீர் ல குதித்தார். குழந்தையை காப்பாற்றியவர் அவரின் உயிரை விட்டார்."

வாசுகி, "ஐயோ பாவம் வள்ளி நீ! சரி அப்பறம் எப்படி வாழ்க்கை போச்சு?"

வள்ளி, "பூ, சுண்டல் மற்றும் கூடை பின்னுவது என கிடைக்கும் வேலை எல்லாம் பண்ணேன். ஏதோ இத்தனை வருஷம் வாழ்க்கை போச்சு. இப்போ நாங்க குடிசை போட்டு குடி இருந்த ஏரியாவே ஒரு பெரிய பணக்காரர் விலை கொடுத்து வாங்கிட்டார். அப்போ தான் உங்க வீட்டுக்கு தோட்ட வேலை செய்ய ஆள் வேண்டும் என்கிற விளப்பாரம் பார்த்தேன்."

வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பயத்தில் வள்ளி சொல்ல அதற்கு வாசுகி, "ஹ்ம்ம், உனக்கு வேலை தர ஒரு நிபர்தனை. என்னை வாசுகி என்று தான் கூப்பிடனும்! அம்மா! மேடம்! என்கிற மரியாதை எல்லாம் வேண்டாம் சரியா?"

வள்ளி, "அது வந்து மா, நீங்க என் முதலாளி உங்களை போய் எப்படி?"

வாசுகி, "மரியாதை மனசில் இருக்கணும். எங்க வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு என்னோட அத்தையும் மாமாவும் தான் முதலாளி நான் இல்ல. அதனால் நீ தைரியமாக பெயர் சொல்லி கூப்பிடலாம்."

வள்ளி, "அது, அது வந்து.."

வாசுகி, "நோ இழுவை, நான் சொன்னது சொன்னது தான்! மாட்டேன் சொன்ன உனக்கு வேலை இல்ல"

வள்ளி யோசிக்க உடனே அங்க வந்த வெண்ணிலா, "எனக்கு ஓகே வாசுகி! எப்போ எங்க அம்மா வேலைக்கு வரணும் வாசுகி! இன்னிக்கே ஓகே என்றாலும் ஓகே வாசுகி."

தன்னை பெயர் சொல்லி கூப்பிட்ட அந்த சின்ன பொண்ணை அதிர்ச்சியாக வாசுகி பார்க்க பார்வதி பாட்டி தான் அந்த நிலையை சமாளித்தார்.

பார்வதி, "உன்னை விட பெரியவங்க அவன் அவங்களை எப்படி நீ பெயர் சொல்லி கூப்பிடலாம்?"

வெண்ணிலா, "அது இல்ல பாட்டி, அவங்க தானே சொன்னாங்க பெயர் சொல்லி கூப்பிட்டால் தான் வேலை என்று அதன் எங்க அம்மாவுக்கு முன்னாடி நான் கூப்பிட்டேன். எனக்கும் அவங்க மேல் மனசில் மரியாதை இருக்கு ஆனால் இந்த வேலை எங்க அம்மாவுக்கு வேண்டும். இதை விட்டால் தாங்க கூட எங்களுக்கு இடம் இல்ல.."

அப்பறம் என்ன அவளின் குறும்பு பேச்சுக்கு மற்றும் தன் மகனோடு சீக்கிரம் அவள் நட்பு கொண்ட வேகத்தினை பார்த்து வள்ளிக்கு வேலை கொடுத்தார்கள்.

தினம் தினம் வெண்ணிலாவின் சிரிப்பு சத்தம் அந்த வீட்டில் நிறைந்து இருந்தது கூடவே வெண்ணிலவனின் (ரிஷி) சிரிப்பும் கூட இருந்தது. தன் தினமும் கற்று கொள்ளும் ப்ரேக் டான்ஸ் கூட அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி கொடுத்தான்.

ஏற்கனவே அவனும் அவனின் தாத்தாவின் சேட்டைகளை அந்த வீடு தாங்காது இதில் இந்த புது பெண்ணின் சேட்டையும் சேர வீடே ஒரு வழி ஆகிவிட்டது.

என்ன நடந்தாலும் வாசுகியோடு அவன் நெருங்கி பழக வில்லை. நாட்கள் செல்ல செல்ல வாசுதேவன் கூட அவன் பேசும் நேரம் கூட குறைந்து விட்டது.

அக்டோபர் 2004,

ஒரு நாள் வாசுதேவன் அந்த பொண்ணை அருகே அழைத்து, "வெண்ணிலா, பிளீஸ் கொஞ்சம் நேரம் அவனை என் கூட பேச சொல்லுமா! நீ வருவதுக்கு முன்னாடி எல்லாத்துக்கும் என்னை தான் அழைப்பான். இப்போ ரெண்டு மாசமா என் கூட பேசும் நேரம் ரொம்ப குறைத்து விட்டான். நான் பாவம் ல.."

அதற்கு அவள் பதில் சொல்வதற்கு முன்னாடி அங்கே வந்த வாசுகி பதில் சொன்னார்.

வாசுகி, "என்ன மிஸ்டர் வாசுதேவன் போச்சா!! இப்போ உங்க முறை போல.."

வாசுதேவன், "என்ன பார்த்தால் உனக்கு சிரிப்பா இருக்கா வாசு?"

வாசுகி, "இருக்காதா பின்ன? எத்தனை தடவை என்னையும் என் பிள்ளையும் வைத்து விளையாடி இருப்பீங்க. தப்பு தான் நீங்க ஒரே ஆள பிசினஸ் பார்ப்பதை தாங்க முடியாத நான்! உங்களுக்கு உதவ சில படிப்பு படிக்க வெளிநாடுக்கு என் பிள்ளையை விட்டு போனேன் அந்த நேரத்தில் வெண்ணிலவன் கூட நீங்க க்ளோஸ் ஆய்ட்டிங்க நான் யாரோ போல ஆய்ட்டேன்."

வாசுதேவன், "அதுக்கு இந்த பொண்ணை வைத்து என்கிட்ட இருந்து அவனை பிரிக்க பார்க்கிற?"

வாசுகி, "அடச்சீ, உங்க புத்தி ஏன் இப்படி போகுது? குழந்தைகள் எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அப்போ உங்களுக்காக நான் அவனை விட்டு தூரம் போனேன். இப்போ நீங்க பிசினஸ் ல கவனம் செலுத்தும் நேரத்தில புது ப்ரெண்ட் கிடைத்து இருப்பதால் உங்க கூட பேச முடியல. அதற்காக இப்படியா வில்லன் மாதிரி! ஒரு சின்ன பொண்ணு கிட்ட மிரட்டல் விடுவீங்க?"

வாசுதேவன், "ஆமாம்! ஆமாம்!! பெரிய மிரட்டல் அட போடி நீ வேற காலில் விழாத குறையாக கெஞ்சி கொண்டு இருந்தேன்."

வெண்ணிலா, "ஆமாம் வாசுகி..!!😂😂"

வாசுகி, "உங்க அம்மாவை தான் பெயர் சொல்லி கூப்பிட சொன்னேன். உன்னை சொல்லல! உன் கூட சேர்ந்து வெண்ணிலவன் கூட என்னை பெயர் சொல்லி கூப்பிடுறான்."

வாசுதேவன், "என்ன பண்றது வாசு, அவன் பெயர் சொல்லும் பிள்ளை, இந்த பொண்ணு மாதிரியே."

வாசுகி, "இருங்க இருங்க உங்களையும் பெயர் சொல்லி கூப்பிட சொல்றேன்."

வாசுதேவன், "நீ சொல்லவே வேண்டாம். ஏற்கனவே சில நாட்களாக அப்படி தான் கூப்பிக்கிட்டு இருக்கான்."

வாசுகி, "இது எப்ப?"

வெண்ணிலா, "நான் தான் சொன்னேன். பாவம் வாசுதேவன் ஆங்கிள் நீங்க பெற்ற இன்பத்தை அவரும் பெற வேண்டும் என்று தான் இப்படி பண்ணேன்.."

வாசுகி, "உன்னை பார்த்த முதல் நாள் நல்ல பொண்ணு தான் நினைத்தேன். ஆனால் நீ சரியான வாலு பொண்ணா இருக்கே!!"

வெண்ணிலா, "என்ன பண்றது எல்லாம் சதாசிவம் தாத்தாவின் பயிற்சி..🤣"

வாசுதேவன், "அவர் வேற வயசுக்கு தகுந்த மாதிரி இல்லாமல் ஓவர் ஆ பண்றார்."

வாசுகி, "விடுங்க உங்களை மாதிரி பிசினஸ் பிசினஸ் என இல்லாமல் அவராவது ஜாலியா இருக்கட்டுமே. உங்க வயசில் அவர் எப்படி எல்லாம் இருந்தார்! உங்களை விட பிஸினஸ்சே கதியா கிடக்கல.."

வாசுதேவன், "அது கூட சரி தான். சரி வெண்ணிலா நீ போய் படிக்கிற வேலை பார் நாள் முழுசும் விளையாட்டு என இருந்து விட்டீர்கள்."

அவள் போன பிறகு வாசுகி, "நல்ல பொண்ணுங்க, அடுத்த வருஷம் நம்ம வெண்ணிலவன் படிக்கிற ஸ்கூலயே இவளையும் சேர்க்கணும். பெரிய படிப்பு எல்லாம் படிக்க வைக்கணும். இவளின் அம்மாவுக்கும் அதே ஆசை தான்."

வாசுதேவன், "படிக்க வைக்கலாம் வாசு! கண்டிப்பா படிக்க வைக்கலாம். இன்னும் வேற என்ன ஆசை என் இதய ராணிக்கு இருக்கும் சொல்லுங்க?"

வாசுகி, "இவளை மட்டும் இல்லைங்க என்னை போல் ஆதரவு இல்லாமல் அனாதை இல்லத்தில் வளரும் சில குழந்தைகளின் படிப்பு செலவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒரு குடும்பத்தை தருவது எப்படி முக்கியமோ அதே போல அவங்க சொந்த காலில் அவர்களே நிற்க படிப்பும் முக்கியம்."

வாசுதேவன், "அப்பா கிட்ட சொல்லி அதற்கான ஏற்பாடு செய்கிறேன்."

வாசுகி, "சீக்கிரம் செய்யுங்க.."

******************

2004 டிசம்பர் முதல் வாரம்,

கடந்த ரெண்டு மாசங்களாக வாசுகி, வெண்ணிலவன், வெண்ணிலா என மூவருமே அடிக்கடி கடற்கரை சென்று வந்தார்கள்.

வெண்ணிலவுக்கு என்ன பெரிய பெரிய வீட்டில் இருந்தாலும் அந்த கடற்கரை காற்று அவளை மயக்கியது. பிறந்ததிலிருந்து தினம் தினம் கடற்கரை அலைகளை காணாமல் அவன் தூங்க போனது இல்ல. காலை கண் விழிப்பதிலிருந்து இரவு தூங்க செல்வதற்கு முன் வரை அவளுக்கு எல்லாமே கடல் தான் கடற்கரை தான்.

அந்த காரணமாகவே வாரத்துக்கு ரெண்டு தடவை பிடிவாதம் பிடித்தவது இங்கு வந்து விடுவாள். முதலில் அவளின் தோழன் வெண்ணிலவனுக்கு வர விருப்பம் இல்ல என்றாலும் அவளின் கடற்கரை நினைவுகளை எல்லாம் கேட்டு அவனும் விருப்பத்தோடு போக ஆரம்பித்தான்.

என்னதான் வாசுகி அவர்களை அழைத்து சென்றாலும் கடலில் நிற்க விட வில்லை. அவருக்கு கடல் தண்ணீர் என்றால் பயம்! அதே போல சிறு குழந்தைகளின் பாதுகாப்பு தன் பொறுப்பு என்ற காரணம் வேற!

வெண்ணிலாவுக்கு அதில் பிரச்சினை இல்ல அவள் கேட்டது எல்லாம் கடற்கரை காற்று மட்டுமே.

வெண்ணிலவன் தன் தண்ணீர் ல கால் வைக்க பிடிவாதம் பிடிப்பான். அவனின் பிடிவாதத்திற்கு கடைசியில் தலையாட்டுவது தான் வாசுகியின் நிலையாக இருக்கும். அப்போ கூட ரொம்ப உள்ளே போகாமல் ஒரு ஓரத்தில் அவர்கள் நிற்பார்கள். ஒண்ணுமே இல்லாமல் போக இது ஓகே என அவன் சம்மதம் சொல்வான்.

***************

கார்த்திக்கு அவனின் தங்கையோ பிடிக்கும் ஆனால் அதை விட அவனின் அப்பா அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

வீட்டில் முத்த குழந்தையாக இருப்பதே ஒரு விதத்தில் பிரச்சினை தான். அதுவும் நமக்கு போட்டியாக பிறந்தவர்கள் நம்மை விட ஒன்று ரெண்டு வயசு வித்தியாசத்தில் பிறந்து இருந்தால் அது இன்னும் மோசம்.

நல்லவேளை அவனுக்கு தம்பி பிறக்கல! அப்படி மட்டும் ஒரு தம்பி இருந்திருந்தால் அவனின் டிரசெஸ் கூட அந்த தம்பிக்கு போய் இருக்கும்.

இப்போ மட்டும் என்ன அவனின் டிரஸ் தவிர அவனின் மற்ற எல்லா பொருட்களுக்கும் அவனின் தங்கை தர்ஷினி உரிமை கொண்டாடுவள்.

அதற்கு மாட்டேன் இவன் சொன்னாலும் கடைசியில் அடி இவனுக்கு பொருள் அவனின் தங்கைக்கு.

இதனாலேயே அவன் தினம் தினம், "எனக்கு இந்த தங்கை வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!!", என கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்.

அவனின் வேண்டுதலை நிறைவேற்ற மட்டும் இல்ல! அவனை போல தெரிந்தும் தெரியாமலும் பல பல விதத்தில் பல பேர் வேண்டிய ஒரு வேண்டுதல் நிறைவேற்ற கடவுள் ஒரு திட்டம் போட்டார். அது எத்தனை பேரின் வாழ்கையை மாற்றியது தெரியுமா?

******************

மழையில் நனைந்து உள்ளே வந்த சதாசிவம் வெண்ணிலா மற்றும் வெண்ணிலவன் மூவரையுமே பார்வதி பாட்டி அதட்டினார்.

பார்வதி, "என்னங்க அவங்கதான் குழந்தைங்க இந்த வயசுல மழை நினைச்சுகிட்டு வந்திருக்காங்க! ஆனால் இந்த வயசான காலத்தில் நீங்களும் கூட இப்படி ஆட்டம் போட்டு வந்துருக்கீங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு."

சதாசிவம், "நீ நனைச்சு பார் பாரு! செமயா இருக்கும் அதுக்கு தனி பீல்.."

கெத்தாக பதில் சொன்ன மூவருக்குமே திடீரென சளி இரும்பல் பிடித்தது. அதனை கண்ட பார்வதி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, வாசுகி இரு குழந்தைகளுக்கும் சேர்த்து தன் மாமனாருக்கும் கஷாயம் போட்டுக் கொண்டு வந்தார்.

அதைப்பார்த்து மூவருமே ஓட! பார்வதி, வாசுகி மற்றும் வாசுதேவன் மூவருமே இவர்களை இழுத்துப் பிடித்து வாயில் கசாயத்தை ஊற்றினார்கள்.

மழையில் நனைந்த தண்டனையாக நினைத்து அதனை குடித்து முடித்தவர்கள் இவர்களை முறைத்துக் கொண்டே, "இதெல்லாம் அநியாயம் உங்க பேச்சு கா..👍👍"

பார்வதி, "இதுக்கே இப்படி என்றால் இன்னும் ரெண்டு நாளுக்கு மூன்று வேலையும் உங்களுக்கு கஷாயம் கஞ்சிதான். மூன்று பேருக்குமே சரியான சளி புடிச்சிருக்கு இது சரியாகும் வரை நோ ஸ்பெஷல் சாப்பாடு."

அப்போது மொட்டை மாடியில் துணி எடுக்க சென்ற வள்ளி வழுக்கி விழும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு எல்லோரும் மேலே போய் பார்க்க அங்க ஒரு துணில் அவரின் தலை இடித்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

வாசுதேவனும் வாசுகியும் அவரை வேகமாக தூக்கிச் சென்று காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றார்கள். அவர்களின் கார் பின்னாடியே இன்னொரு காரில் சதாசிவம் பார்வதி மற்றும் இரு குழந்தைகளுடன் கிளம்பி வந்தார்கள்.

முன்னாடி காரில் சென்று கொண்டிருந்த வாசுகி மடியில் ரத்தம் சொட்ட சொட்ட படுத்திருந்த வள்ளி ஒரு சத்தியம் வாங்கினாள்.

வள்ளி, "வாசுகி! வாசுகி..!! எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க நான் உயிர் பிலைதாலும் பிறக்கவில்லை என்றாலும் என் பொண்ணு உங்க பொறுப்பு. அவளை எப்படியாவது நல்ல படிக்க வைத்து நல்ல இடத்தில் கட்டி கொடுங்க! என்னை உங்களின் கூட பிறக்காத சகோதரியாக நினைப்பது உண்மையென்றால் இது செய்யுங்கள்.."

வாசுகி, "ஏய்!! லூசு! லூசு! இப்படி எல்லாம் பேசாதடி! உனக்கு ஒன்னும் ஆகாது, அதான் ஹாஸ்பிடல் போறோம் ல!! டாக்டரே பார்த்து அவர் தரும் சிகிச்சையில் சரியாயிடுவா. வெண்ணிலா உன் பொண்ணு மட்டும் இல்ல என் பொண்ணும் கூட! அவள் படிப்பு என்ன, கல்யாணம் எல்லாம் எல்லாத்துக்கும் நான் பொறுப்பு. அவள் சந்தோசமா வாழ்வதை நீ கண் குளுற பார்க்க வேண்டாமா?"

வள்ளி, "எனக்கு நம்பிக்கை இல்ல வாசுகி கா! இங்க பாருங்க எவ்வளவு ரத்தம் போகிறது! இப்போ கூட என் பெண்ணின் நிலை பற்றிய கவலை தான் என் மனசில் ஒரு மூலையில் ஒடிக்கிட்டே இருக்கு. அது உங்க வார்த்தை கேட்ட பிறகு.. நீங்க எல்லாரும் இருக்கீங்க என்கிற நம்பிக்கை இருக்கு. அதனால் நான் போ.."

தன் நினைத்தது எல்லாம் சொல்லி முடிந்த நிம்மதியில் உயிர் விட்டார் அந்த அன்பு தாய்.

தன் மடியில் உயிர் விட்ட அந்த பெண்ணின் உடலை கட்டி அழுதார் வாசுகி.

வாசுகி, "ஏய்! என்னடி உனக்கு அவசரம்? இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்து இருக்க கூடாது. ஏற்கனவே அப்பாவை இழந்த பொண்ணுடி அவள் இப்போ அம்மாவும் இல்ல என்றால் அந்த பிஞ்சு மனசு எப்படி தாங்கும்?. ஐயோ நான் எப்படி இந்த விஷயத்தை சொல்வேன்.", என தலையில் அடித்து வாசுகி அழுதார்.

காரை ஓட்டி கொண்டு இருந்த வாசுதேவன் இன்னும் வேகமாக ஹாஸ்பிடல் நோக்கி சென்றார்.

ஹாஸ்பிடலில் கூட அவர் இறந்ததை உறுதி செய்வதற்கும், வெண்ணிலா அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.

வள்ளியின் நிலை பார்த்து எல்லாரும் அழ வெண்ணிலா மட்டும் அவர் அருகே சென்று, "அம்மா, அடிக்கடி அப்பாவின் நினைவில் அழுவியே! இப்போ அவரை பார்க்க சாமிகிட்ட போய்ட்டிய? அப்போ நான் இனி என்ன பண்ணுவேன். எனக்கு யார் இருக்க! சொல்லு மா சொல்லு!"

கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையை அதிரும் அளவுக்கு அவளின் அழுகை சத்தம் இருந்தது.

அவளோடு சேர்த்து வாசுகி கூட அவளை கட்டி அழுதார்.

தன் தோழியின் அழுகையை பார்த்து வெண்ணிலவன் தன் அப்பாவின் இடுப்பை கட்டிக்கொண்டு, "அப்பா, என் நிலா அழுவதை பாருங்க பா! அவளுக்கு யாருமே இல்லனு அவள் சொல்ற பா! நீ போய் சொல்லுங்க பா நான் இருக்கேன் சொல்லுங்க! நம்ம குடும்பம் இருக்கு சொல்லுங்க! வள்ளி அம்மா போன என்ன என் அம்மா வாசுகி இருக்காங்க சொல்லுங்க பா! பிளீஸ் பா அவள் அழுகையை நிறுத்த சொல்லுங்க! பிளீஸ்!"

இறந்தவர்களின் உயிர் எப்படி திரும்பி வரும்? ஆனால் அவரின் ஆசைகள் இனி எப்படி நிறைவேறும் பார்ப்போம்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹