வாராயோ வெண்ணிலாவே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

விஜயன் அவர்கள் "வாராயோ வெண்ணிலாவே" என்கிற கதையுடன் நம்மோடு இணைகிறார்....அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
 
#3
வாராயோ வெண்ணிலாவே...!!
முன்னுரை..


தன் வெண்ணிலாவை தேடும் ஒரு வெண்ணிலாவனின் கதை இது..

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தன் சிறுவயது தோழியை பிரியும் நம்ம கதாநாயகன் கடைசியில் அவளை கண்டு கொண்டனா என்பதே கதை கரு...

விதி விளையாடும் விளையாட்டு மனிதனால் கண்டு கொள்ள முடியாது.

கதாநாயகன் - ரிஷி
நீ என் பிரச்சனைக்கு வராது வரை உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன் என்னும் சொல்லும் குணமுடையவன் இவன். தனிமை பேர்வழி முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கிய இருக்க வேண்டும் என நினைப்பவன்.

துணை நாயகன் - ராம்
ரொம்ப வாய் கொழுப்பு உடையவன். எந்த நேரத்தில் என்ன பேசுறது என புரியதவன். பார்க்கும் பெண்களிடம் எல்லாம் காதலை சொல்றேன் என சொல்லி பல அடிகள் வாங்குவான். எவ்வளவு அடி விழுந்தாலும் மீசையில் தயிர் படல என மொக்க லாஜிக் சொல்வான்.

வில்லன் - கார்த்தி
நல்லவன் தான் ரொம்ப நல்லவன் ஆனால் அவன் காதல் விஷயத்தில் யாரும் தலையிடாமல் இருக்கும் வரை மட்டுமே. அப்படி இருககும்போது அவன் காதலிக்கும் பெண் இன்னொருவனை காதலித்தால் என்ன செய்வான் இவன்.

வில்லனின் தங்கை - தர்ஷினி
இவள் குணமே புதிர். இவள் செய்யும் செயலே எதிராளியை குழம்பும். காலேஜ் ல பார்த்த நொடி முதல் கதாநாயகனிடம் வம்பு செய்பவள் இவள். ஏன்? இப்படி செய்கிறாள் கேட்டால்.. எனக்கு அவன் பெயர் பிடிக்கல என சொல்லும் விசித்திர ஜந்து.

கதாநாயகி - அஞ்சலி
அனாதை இல்லத்தில் வளரும் சுட்டி பெண். தன் மேல் யாரும் பரிதாபம் காட்ட கூடாது என எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவள். அப்படிப்பட்ட அவளின் கண்ணிருக்கு கதாநாயகன் தான் காரணமாக இருப்பான்.

இந்த ஐந்து கதாபாத்திரங்கள் கொண்டே கதை அதிகம் நகரும்..

இன்னும் சில சின்ன சின்ன கதாபாத்திரங்கள் போகிற வழியில் பார்போம்..

காதல் + நட்பு + நகைச்சுவை, இதன் இந்த கதையின் தொகுப்பு..

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 

Attachments

#4
வாராயோ வெண்ணிலாவே...!!
அத்தியாயம் 1

2013, 30 ஜூன் அன்று கதை ஆரம்பிக்கிறது..


ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ..

ரேடியோ ல சிவன் நாமம் ஓட.. அதனை கேட்டவாறு ரிஷி தியானம் செய்து கொண்டு இருந்தான்.

ரிஷி நம்ம கதையின் கதாநாயகன்.. பெயருக்கு ஏற்றது போல கொஞ்சம் கோபக்காரன். அவனுக்கு ஒரே கொள்கை தான்.. நீ என் பிரச்சனைக்கு வராது வரை உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன். அதை மீறி வந்தால் அதற்கு பின் வரும் பின்விள்ளைவுக்கு நான் பொறுப்பு இல்ல. புத்தகம் அதிகம் படிக்கும் பழக்கம் உடையவன் அதனால் இவனுக்கு தனிமை ரொம்ப பிடிக்கும், அமைதி பேர்வழி. தேவையற்ற பேச்சு வார்த்தைகள் வைத்து கொள்ள மாட்டான்.

2004 இல் வந்த சுனாமியில் தன் அப்பா அம்மாவை பறிகொடுத்த இவனுக்கு இப்போதைய துணை இவனின் தாத்தா சதாசிவம் மற்றும் பாட்டி பார்வதி மட்டுமே.

சதாசிவம் - இவர் ஒரு மாடர்ன் தாத்தா. பேரனுக்கு போட்டியாக tshirt jeans எல்லாம் போட்டு கொள்வர். அப்போ அப்போ இங்கிலீஷ் பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பண்ணும் கலாட்டா சொல்லி மாளாது. பெண்கள் யார் வயசு கேட்டாலும் ஜஸ்ட் 35 என சொல்லும் 70 வயது ஸ்ரீகிருஷ்ணர் இவர். இந்த வயசில் கூட தன் மனைவி கூட காதல் சேட்டை செய்வர்.

பார்வதி - தன் பேரன் மேல் உயிரே வைத்து இருக்கும் பெண்மணி இவர். ரிஷி முகத்தில் சிரிப்பு வர தன் கணவர் சதாசிவம் கூட அப்போ அப்போ அவர் செய்யும் கலாட்டாவில் இணைத்து கொள்வர். இவரிடம் இருந்து தான் புத்தகம் படிக்கும் பழக்கம் ரிஷிக்கு வந்தது. வீட்டுக்குள் புத்தகம் படிக்கவே சிறு நூலகம் அமைத்து உள்ளார். அதில் நுழையும் உரிமை அவருக்கு அடித்து ரிஷிக்கு மட்டுமே உண்டு. கணவனாக இருந்தாலும் இதில் மட்டும் கண்டிப்பு தான்.

அவன் தியானம் பண்ணி முடிக்கும் வரை அவன் முன் காத்திருந்தார் பார்வதி. கண்ணை திறந்த ரிஷி தன் முன் அமர்ந்திருந்த தன் பாட்டியிடம்..

"சொல்லுங்க அம்மா என்ன விஷயம்..?"

அவன் தன் தாத்தா பாட்டி இருவரையும் அப்பா அம்மா என்றுதான் அழைப்பான். என்ன காரணம் என்று கதையின் முடிவில் தான் தெரியும்.

"ரிஷி கண்ணா.. சாப்பாடு ரெடி பா. உன் தியானம் முடிந்து விட்டது என்றால் ஒரு தட்டில் இட்லியை போட்டு கொண்டு வருவேன்.."

"சரிமா எடுத்து வைங்க ஒரு அஞ்சு நிமிஷத்துல உடை மாற்றி வந்துடறேன். அப்புறம் நீங்களும் அப்பாவும் சாப்பிட்டாச்சா?"

"உன் கூடவே அமர்ந்து சாப்பிட தான் வெயிட்டிங்.."

"அப்ப சரி உடனே வரேன்."

உடை மாற்றி விட்டு வந்தவன் தன் கையால் தன் தாத்தா பாட்டிக்கு பரிமாறிவிட்டு அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த சதாசிவம் பேச ஆரம்பித்தார்.

"ரிஷி முதல் நாள் காலேஜ்.. காலர் காலர் பொண்ணுங்களை பார்ப்பே மாறக்காமல் அவங்க வாட்ஸ்அப் நம்பர் வாங்கிட்டு வா சரியா?"

"வாய்ப்பே இல்ல நான் காலேஜ் போறது படிக்க தான் கூத்தாடிக்க இல்ல. என் இன்னொரு கொள்கையே படிப்பு முடியும் வரை no girls disturbance..😒"

"உன்னை யார் டா பார்க்க சொன்ன? நம்பர் கேட்டது உனக்கு இல்ல எனக்கு? எத்தனை நாள் தான் இந்த பார்வதி முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கே. அதன் வேற சின்ன பொண்ணா பார்த்து லவ் பண்ணலாம் இருக்கேன்."

"அப்பா நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்க.. உங்களுக்கு ரொம்ப வயசு ஆச்சு.."

"யாரை பார்த்து வயசு ஆச்சு சொன்ன..? Old is fold தெரியுமா?"

"ஐயோ அப்பா அது old is gold.. ஒரு எழுத்தை மாற்றி சொல்லிட்டீங்க.."

"அட நான் படிச்ச காலத்தில் அப்படி தான் சொல்லி கொடுத்தாங்க.. ஹ்ம்ம் காலம் மாற மாற பழமொழி கூட மாறுது போல.."

அவன் அதற்கு ஒரு சிரிப்பு சிரித்து விட்டு தன் ஃபக் கீ எடுத்து கொண்டு..

"சரி நான் காலேஜ் போய்ட்டு வரேன்.."

அவன் கிளம்பி போன பிறகு தன் கணவனின் தோளில் தட்டிய பார்வதி..

"இந்த வயசில் உங்களுக்கு பொண்ணு அதுவும் வயசு பொண்ணு கேட்குதா?😡"

"அட சும்மா பாரு.. என்னை பற்றி உனக்கு தெரியாதா? நான் ரிஷி மனதில் என்ன இருக்கு தெரிந்துக்கொள்ள தான் அப்படியெல்லாம் பேசினேன். இந்த வயசில் காதல் வருவது சாதாரணமானது. அதுவும் இப்போதெல்லாம் பசங்க பொண்ணுங்க ரொம்பவே உசார் ஸ்கூல் காலேஜ் படிக்கும் போதே காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அதில் எத்தனை காதல் உண்மை என்பதே சந்தேகம் தான். அப்படிப்பட்ட நிலை நம்ம ரிஷிக்கு வர கூடாது. ஒருவேளை அவன் யாரையாவது காதலித்தால் கூட அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் துணையாக இருப்பேன். முடிந்தால் நாடோடி படம் போல நம்ம பையனுக்கு அந்த பொண்ணை தூக்கிட்டு வந்துட மாட்டேன்.."

"காமெடிக்கு ஒரு அளவு இருக்கு இந்த வயசில் ஒரு tvs xl வண்டியை கூட சென்டர் ஸ்டேண்ட் போட வரல இதில் நீங்க அந்த பொண்ணை தூக்கிட்டு வருவிங்களா?"

சொன்ன பார்வதி சாமி அறைக்கு சென்று..

"யாப்பா சிவபெருமானே என் பேரனுக்கு எப்போதும் துணையாக இருந்து அவனுக்கு எந்த கஷ்டமும் வராமல் பார்த்துக்கோ பா.."

அந்த சிவன் அவ்வளவு சீக்கிரம் தன் பக்தர்கள் கேட்ட வரத்தை தந்து விடுவாரா? ஒரு சின்ன திருவிளையாடல் ரிஷி வாழ்க்கையில் ஏற்படுத்தினார்.

அதன் பெயர் வெறும் எலி இல்ல..
ஒன் எலி..
ரெண்டு எலி..
முன்று எலி..
நான்கு எலி..
அஞ்சு எலி ஆகிய அஞ்சலி..😝😝

*******************

கும்பகோணத்தில் இருக்கும் ஒரு அன்னை இல்லத்தில் தான் அஞ்சலி வளர்ந்தாள். சென்னையில் அவள் படிக்க வேண்டும் என்ற ஆசையை அறிந்த ஒரு மர்ம நபர்..

+2 வில் அவள் வாங்கிய மதிப்பெண் வைத்து சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் DG Vaishnav என்ற காலேஜில் B.sc computer science படிக்கும் வாய்ப்பை அவளுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவள் படிப்பு செலவை முகம் தெரியாத அந்த மர்ம நபர் பார்த்துக்கொண்டார்.

காலேஜ் அருகில் இருந்த ஒரு வுமேன்ஸ் ஹாஸ்டலில் தான் இப்போ அஞ்சலி சாமி படத்துக்கு முன் நின்று வேண்டி கொண்டு இருந்தாள்.

"சிவபெருமானே... இன்னிக்கு காலேஜ் முதல் நாள் ராக்கிங் எதிலும் நான் மாட்டாமல் இருக்கணும் பா.. விசாரித்த வரை அங்க ராக்கிங் எதுவும் இல்லனு தான் சொல்றாங்க.. இருந்தாலும் லைட் ஆ பயம் இருக்க தான் செய்கிறது.."

அஞ்சலி பற்றி சொல்லணும் என்றால் புத்திசாலி பெண் அதே நேரத்தில் அதித கற்பனை செய்யும் பெண்ணும் கூட. சில நேரத்தில் தன்னிடம் பேச வரும் நபர் இப்படி தான் பேசுவார்கள் என ஓவர் ஆ கற்பனை பண்ணி மொக்கை கூட வாங்குவாள்.

கதை போக போக இவள் அதனால் செய்யும் சேட்டைகள் எல்லாம் ஒன்று ஒன்றாக பார்போம்..

****************

கார்த்தி... கார்த்திகேயன்..
அப்பா பெயர் சாமிநாதன் மற்றும் அம்மா பெயர் உமா. இருவருக்குமே செல்ல பிள்ளை தான் கார்த்திகேயன்.
இவனின் கொள்கையே நான் எதற்கு அவ்வளவு சீக்கிரம் ஆசைப்பட மாட்டேன் அப்படி ஆசைப்பட்டால் அதனை அடையாமல் விட மாட்டேன் என்பது தான். இவனால் யாருக்கும் எந்த கஷ்டமும் வந்தது இல்ல இந்த கதையின் வில்லன் இவன் தான் ஆனால் ரொம்ப நல்ல வில்லனும் கூட.

தர்ஷினி.
கார்த்தியின் செல்ல தங்கை அதே சமயத்தில் பிடிவாத குணம் உடையவள். இவளின் பேச்சே குண்டாக மண்டாக போல தான் இருக்கும். அவ்வளவு சீக்கிரம் யார் சொல்லையும் கேட்க மாட்டாள் யார் பேசினாலும் எதிர் பேச்சு தான் பேசுவாள். இவளை நம்புவது கடினம் இப்போ நல்லது செய்வாள் எப்போது காலை வாருவள் தெரியவே தெரியாது. இவள் செய்யும் எல்லா செயலுக்கும் ஏதாவது காரணம் வைத்தே இருப்பாள் அந்த காரணத்தை கேட்டால்.. இதுவெல்லாம் ஒரு காரணமா?.. என நம்ம தலையில் நாமே அடித்து கொள்வது போல இருக்கும்.

இப்போ கூட தன் அம்மாவிடம் சண்டை தான் போட்டு கொண்டு இருக்கிறாள்.

"அம்மா நான் இன்னிக்கு தோசை வேண்டும் கேட்டேனா??"

"ஏய் நேற்று தூங்க போறதுக்கு முன்னாடி தானே.. அம்மா நாளைக்கு காலையில் எனக்கு தோசை தான் வேணும்.. சொன்னே? இப்போ என்னடி பேச்சே மாற்றி பேசுற.."

"யார் பேச்சு மாற்றி சொன்னது.. நான் நாளைக்கு சொன்னேன்.. இன்னைக்கு சொல்லல.. அதனால் சொல்றேன் நாளைக்கு காலையில தான் நீ தோசை செய்து தரணும். இப்போ இல்ல.."

"ஐயோ.. கொடுமை பண்ற டி நீ. இப்போ என்னடி வேணும் உனக்கு..?"

"இட்லி.."

அப்போ தன் தங்கை பற்றி நன்கு அறிந்த கார்த்தியே இட்லி செய்யும் கொண்டு வந்தான்.

அப்போதும் சமாதானம் அடையாத தர்ஷினி.. அங்கே செய்யாத சட்னி கேட்டு இன்னொரு அமர்களம் செய்தாள்.

அவள் செய்யும் எல்லா கொடுமைகளையும் அவளின் மொத்த குடும்பமும் ரசித்தவாறே இருந்தது.

அவர்களை பொறுத்தவரை அவள் தங்கள் வாழ்க்கையில் வந்த ஒரு தேவதை. அவள் எது செய்தாலும் மாறு பேச்சு இல்லாமல் பார்ப்பார்களே தவிர அதனை கண்டிக்க மாட்டார்கள். அவளும் ஒரு அளவுக்கு மேல் தொல்லையும் செய்ய மாட்டாள் (இவர்கள் விஷயத்தில் மட்டும். வெளியாள் என்றால் சாகும் வரை கொடுமை தான்)

அதே DG Vaishnav college ல கார்த்திகேயன் b.sc computer science மூன்றாவது வருடமும்.. தர்ஷினி இன்று தான் அங்கே முதல் நாள் முதல் வருட b.sc computer science போகிறாள்.

****************

ராம்.. ஸ்ரீராம்
பெயரில் மட்டுமே இவன் ஸ்ரீராம் மற்றப்படி ஊரில் இருக்கும் எல்லாம் பெண்களையும் site அடிப்பான். இவ்வளவு அடிவாங்கினாலும் மீசையில் தயிர் படல என மொக்க லாஜிக் சொல்வான். இதுவரை எத்தனை பெண்களுக்கு காதலை சொல்லி இருப்பான் என சொன்ன அவனுக்கே தெரியாத போது நமக்கு எங்க தெரிய போகுது. ஐந்து வயசில் சொன்ன ஆரம்பித்த காதல் இன்னும் இவனுக்கு அது கிடைத்த படு இல்ல. இவனும் விட படு இல்ல..

இவனின் மற்றொரு கெட்ட பழக்கம் சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் மொக்க போடுவது.. அதனால் இவன் வாங்காத அடியே கிடையாது.

அப்பா அம்மா இல்ல அவனின் ஒரே கல்யாணமே ஆகாத மாமாவின் பராமரிப்பில் வளரும் சேட்டை நாயகன் இவன். இவன் மாமாவுக்கு யாருமே பொண்ணு கொடுக்காத காரணமே இவன் செய்யும் சேட்டையால் தான்.

அதே DG Vaishnav college ல அங்கே முதல் நாள் முதல் வருட b.sc computer science போகிறான்.

***************

அமைதி விரும்பி ரிஷி - சேட்டைக்காரி கனவு நாயகி அஞ்சலி

சேட்டைக்காரன் ராம் - கொடுமைகாரி தர்ஷினி

அப்பாவி மற்றும் குழந்தை மனசு வில்லன் கார்த்தி

இவர்களுடன் கதை நகர..

தீராத கணக்கு ஒன்று முடிக்க நாயகன் ரிஷி தேட போகும் பெண் வெண்ணிலா??

அந்த கணக்கை வசூலிக்க வருவாளா அந்த வெண்ணிலா?

வாராயோ வெண்ணிலாவே... அந்த கணக்கை வசூலிக்க வாராயோ..!!
 
#5
வாராயோ வெண்ணிலாவே...!!
அத்தியாயம் 2

D.G Vaishnav college வளாகம்..


இந்த காலேஜ் பொறுத்தவரை B.COM டிகிரிக்கு அது எந்த பிரிவாக இருந்தாலும் சீட்டுக்காக சண்டை நடக்கும். +2 மதிப்பெண் இல் இங்கிலீஷ் மற்றும் தமிழ் (அல்லது) ஹிந்தி மதிப்பெண்களை தவிர மற்ற பாடங்களில் 800 க்கு 750 மேல் இருந்தால் தான் சீட் சுலபமாக கிடைக்கும். அப்படி இல்லையென்றால் ரெகமெண்டேஷன் மூலமே வர முடியும்.

இதே சட்டம் மற்ற டிகிரிகளுக்கும் பொருந்தும்.. என்ன மதிப்பெண்கள் முன்னபின்ன என்று ஒரு அளவுகோல் வைத்திருப்பார்கள். அதில் b.sc computer science kku 550/800 இருந்தால் தான் அட்மிஷன் ஃபார்ம் கொடுப்பார்கள். அதன் பிறகு என்ஜினியரிங் கவுன்சலிங் போல இங்கேயும் அந்த அந்த டிகிரி க்கு கவுன்சலிங் நடக்கும்.

நம்ம முக்கிய கதாபாத்திரங்களில் ராம் மட்டும் எப்படியோ தெரிந்தவர்கள் மூலம் ஒரு சீட் வாங்கி விட்டான்.

அஞ்சலி, தர்ஷினி மற்றும் ரிஷி மூன்று பேருக்கும் அந்த பிரச்சனை வரவில்லை.

அஞ்சலி - 770/800, தர்ஷினி - 760/800
ரிஷி - 755/800

மூலம் முதல் கவுன்சிலிங் ல சீட்டு வாங்கி விட்டார்கள். குறைந்தது ரெண்டு கவுன்சிலிங்லாவது இடம் ஒதுக்கீடு வைத்து நடக்கும்.

இந்த காலேஜ்ல சேர்க்க அம்சம் என்னவென்றால் ராக்கிங் தடுக்கவே ஒரு தனி ஆபீஸ் வைத்துள்ளனர். இந்த காரணத்தினாலேயே தங்களின் பசங்களை இந்த காலேஜ் தைரியமாக அனுப்பலாம் ராக்கிங் பிரச்சினை சுத்தமாக இல்லை.

அது ஷிஃப்ட் based காலேஜ்..
மார்னிங் ஷிஃப்ட் - காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
Evening ஷிஃப்ட் - மதியம் 2 மணி முதல் சாயங்காலம் 6.30 மணி வரை

இப்போ இவர்கள் சேர்ந்து இருக்கும் டிகிரி Evening ஷிஃப்ட் ல மட்டுமே உள்ளது.

இப்படிப்பட்ட காலேஜில் தான் அஞ்சலி பயத்தோடு உள்ளே நுழைந்தாள்.

ஃபக் ஸ்டேண்ட் ல வண்டியை நிறுத்தி விட்டு ரிஷி கம்ப்யூட்டர் சயன்ஸ் டிபார்ட்மெண்ட் கிட்ட முழிந்து கொண்டு இருக்கும் அவளை கண்டும் காணாது போனான்.

அவன் கொள்கை தான் நமக்கு தெரியுமே.. நீ என் பிரச்சனைக்கு வராது வரை உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன் என்னும் சொல்லும் இவனுக்கு பிரச்சினை தவிர உதவி கூட கேட்டால் தான் செய்வான்.

நம்ம ராம்.. ஸ்ரீராம் அப்படியா இல்லயே.. அவன் பெண்களின் உதவி நாயகன் அப்படி இருக்கும் சமயத்தில் அவன் கண் முன்னால் பயத்தில் தயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யாமல் இருப்பானா?

"ஹலோ அழகியை ஏதாவது உதவி செய்யணுமா?" - ராம்

"ஆமாம் அழகா.. இங்க ஃபர்ஸ்ட் year b.sc கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் ரூம் எங்க இருக்கு?" - அஞ்சலி

தன்னை அழகன் என ஒரு பொண்ணு சொல்லிவிட்டாள் என்ற சந்தோசத்தில் வானுக்கும் பூமிக்கும் பறந்தான் அதே சந்தோஷத்தில்..

"ஆய் நீயும் ஃபர்ஸ்ட் இயர் ஆ? நானும் அதே அதே.. சேர்ந்த அந்த கிளாஸ் ரூம் நோக்கி போவோம்." - ராம்

"போவோமே.. அப்பறம் அழகா உன் பெயர் என்ன?" - அஞ்சலி

"இந்த அழகனின் பெயர்.. ராம்.. ஸ்ரீராம். என் முன்னால் இருக்கும் அழகியின் பெயர் என்னவோ?" - ராம்

அந்த காலத்து சரோஜாதேவி போல கண்ணைச் சிமிட்டிக் கொண்டே தலை முடியை ஓரமாக கையால் ஒதுக்கி..

"இந்த அழகியின் பெயர்.. வெறும் எலி இல்ல.. ஒன் எலி.. ரெண்டு எலி.. முன்று எலி.. நான்கு எலி.. அஞ்சு எலி ஆகிய அஞ்சலி..😝😝" - அஞ்சலி

"ஹ்ம்ம்.. குயில் குரல் கொண்ட பெண்ணுக்கு எலி கொண்ட பெயரா? சே சே.. இனி மேல் என்னால் அழகி என்றே அழைக்கப்படுவாய்..✋✋" - ராம்

அவன் அசிர்வதிக்க.. அதனை ஏற்றுக்கொண்ட அஞ்சலி..

"நன்றி அழகா.. அழகிய ராமா..🙏🙏" - அஞ்சலி

இருவருக்குமே பார்த்தவுடன் நட்பு பூத்து விட்டது. ஆண் பெண் இருவருக்கும் நடுவில் பூக்கும் நட்பு வார்த்தையால் விவரிக்க முடியாதது. மற்றவர் கண்களுக்கு கேலி பொருளாக தெரியும் அவர்களின் நட்பு அவர்களுக்கு மட்டுமே ஆபத்து நேரத்தில் தோள் கொடுத்து உதவும் உறவு.

நட்பில் எங்கே ஆண் பெண் என்ற வேறுபாடு..

எப்படியோ தங்கள் அறையை தேடி கண்டுபிடித்து உள்ளே சென்றார்கள்...

அங்கு ஏற்கனவே ரிஷி மற்றும் தர்ஷினி வந்து இருந்தார்கள்.

ரிஷி அட்மிஷன் நேரத்திலேயே கிளாஸ் ரூம் எல்லாம் எங்க இருக்கு என பார்த்து விட்டான்.

தர்ஷினியின் அண்ணன் கார்த்தி ஏற்கனவே அதே டிபார்ட்மெண்ட் என்பதால் அவளை இந்த விட்டுவிட்டு போய் விட்டான்.

**************

ஸ்கூலோ காலேஜோ எந்த இடமாக இருந்தாலும் முதல் பெஞ்ச் ல நல்ல படிக்கும் பசங்க மட்டுமே அமர்வார்கள். கடைசி பெஞ்ச் எப்போதும் சுமார் படிப்பு பசங்க மட்டுமே..

தன் நல்ல படிக்கும் பெண் என்ற கர்வதில் பெண்கள் வரிசையில் தர்ஷினி ஏற்கனவே முதல் பெஞ்ச் ல அமர்ந்து இருந்தாள்.

ரிஷி என்னதான் படிப்பாளி என்றாலும் அவனுக்கு முதல் பெஞ்ச் ல ஆர்வம் இருந்தது இல்ல. முதல் இருக்கை என்பது கத்தி மேல் நிற்பதற்கு சமம்... நம்ம என்ன செய்தாலும் எல்லார் கண்களில் சீக்கிரம் படும். அதே போல நம்மை படிப்பாளி என நினைத்து அடிக்கடி கேள்வி கேட்பதற்கு மற்றும் நம்மை தொல்லை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் கடைசி பெஞ்ச் என்பது அடிக்கடி சண்டைகள் நடக்கும் இடமும் கூட. ஆசியர்கள் கண்ணில் இருந்து தப்பிக்க, அவர்கள் அறியாமல் போனை பார்க்க என பல திருட்டு தனம் நடக்கும் பகுதி. இப்படி முதலும் இல்லாமல் கடைசியும் இல்லாமல் நடு பெஞ்ச் ல அமர்ந்து இருந்தான்.

அவனை போலவே இன்னொரு கதாபாத்திரம் அங்கே அமர்ந்து இருந்தது. அவன் பெயர் அர்ஜுன்.. இவன் ரிஷி மற்றும் தர்ஷினியின் கலவை குணம் உடையவன்.

அதிகம் பேச மாட்டான் ஆனால் அப்படியே பேசினாலும் அவன் பேசுவதில் எது உண்மை எது பொய் என அவனுக்கே தெரியாது. +2 வரை ஏதோ சுமாராக படிப்பவன் இப்போ எப்படி படிக்க போறான் என்பது போக போக தான் தெரியும். இப்போ அவன் கிளாஸ் +2 லையே குறைந்த மதிப்பெண் எடுத்தவன் இவன் தான் 881/1200. மற்றவர்கள் அனைவரும் 1000 மேல தான். ராம் கூட 1002. காலேஜ் சிட் கூட ரெகம்மண்டேஷன் மூலம் தான் வாங்கினான். அர்ஜுன் கணித புலி, கம்யூட்டர் எலி. இவனுக்கும் ரிஷி போல ஒரு கொள்கை உண்டு.. நீ என் பிரச்சனைக்கு வந்தாலும் சரி வாரட்டியும் சரி உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன். அமைதியே என் இருப்பிடம் வீண் சண்டையா தலைவலி.. இப்படி சொல்பவனுக்கு பெண்களிடம் பேசுவது என்றாலே உடல் நடுக்கம். ஸ்கூல் வாழ்க்கையில் தான் வெத்து வெட்ட இருந்திட்டோம் இப்போதாவது கெத்த இருக்கணும் என ஆசையில் இருக்கான். இப்போ ரிஷி அமர்ந்த பெஞ்ச் ல அவன் பக்கத்தில் அமர்ந்து இருக்கான்.

அந்த கிளாஸ் ரூம் உள்ளே ராம் கூட வந்த அஞ்சலி அப்போது தான் கவனித்தாள் அவளையும் சேர்த்து கிளாஸ் ல ஐம்பது பேர் அதில் ஆறு மட்டுமே பொண்ணுங்க மிச்ச 44 பேர் பசங்க. முதல் பெஞ்ச் ல தர்ஷினி கூட சேர்ந்து முன்று பெண்கள் அமர்ந்து இருக்கே ரெண்டாவது பெஞ்ச் ல போய் அமர்ந்து கொண்டாள்.

ராம் கூட பசங்க வரிசையில் இரண்டாம் பெஞ்ச் போலாம் பார்த்தால் ஏற்கனவே அங்கே நான்கு பேர் அமர்ந்து இருந்தார்கள். அப்பறம் மூன்றாவது பெஞ்ச் ல ரிஷியின் இடது புறத்தில் அமர்ந்து கொண்டான்.

இப்போ ரிஷியின் வலது புறத்தில் அவனின் பாதி குணம் கொண்ட அர்ஜுன்... இடது புறத்தில் அவனின் நேரெதிர் குணம் கொண்ட ராம்..

இதில் ரிஷியின் வாழ்க்கையில் சில கலாட்டாகள் செய்ய போகும் அஞ்சலி. அவனிடம் எல்லாத்துக்கும் போட்டி போட போகும் தர்ஷினி என கதை நகர போகிறது.

****************

முதல் நாளே கெத்து காட்டுறேன் என்ற பெயரில் வாய் கொடுத்து மாட்டி கொண்டான் அர்ஜுன்.

அவர்களின் கிளாஸ் in-charge துர்காதேவி பசங்க இடத்தில் ஒருவனையும், பெண்கள் இடத்தில் ஒருத்தியையும் representative (class leader) யார் இருக்க போறாங்க என கேட்க.. பசங்க இடத்தில் யாருமே எழுந்து கொள்ளாமல் இருக்கே

ஸ்கூல் வாழ்க்கையில் ஒரு முலையில் யார் கண்ணிலும் படாமல் இருந்து விட்டோமே என்ற எண்ணத்தில் அர்ஜுன் உடனே எழுந்து நின்று.. "மேடம் எனக்கு ஓகே..", என்றான்.

அஞ்சலிக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்ல. ஆனால் தர்ஷினி அப்படி எண்ணாமல் பெண்கள் இடத்தில் அவள் எழுந்து நின்றாள்.

கண்டிப்பா அந்த மேடம்.. கிடைத்தார்கள் ரெண்டு அடிமைகள் என்று தான் நினைத்து இருப்பாங்க. கிளாஸ் representative எல்லாரும் நினைப்பது போல பெரிய பொறுப்பு எல்லாம் இல்ல. தினமும் சீக்கிரம் வந்து ஃபோர்டு ஏ அழிக்கணும்.. chalk எல்லாம் எடுத்து வைக்கணும்.. தினமும் time table period என்னனு பார்த்து ஃபோர்டு ல எழுதி வைக்கணும். இதை போக ஏதாவது நோட்டீஸ் டிபார்ட்மெண்ட் பெயரில் வந்தால் அதனை என்னனு பார்த்து எல்லாருக்கும் சொல்லணும்..

கற்பனை செய்து பார்க்கும் போது சின்ன வேலையாக தெரிவது செய்யும் போதும் தான் அதன் தலைவலி தெரியும்.

இதுவெல்லாம் முன்னாடி தெரிந்ததால் தன் யாருமே முன் வரல போல..

**************

தர்ஷினி பொறுத்தவரை முதல் நாளே கிளாஸ் ல ஃபேமஸ் ஆகணும் அதனால் தான் முன் வந்தாள். கண்டிப்பா நம்ம அர்ஜுன் அசிங்க படாமல் ராம் அல்லது ரிஷி தான் காப்பாற்றுவார்கள் நினைக்கிறேன்.

***************

முதல் இரண்டு மணி நேரம் ஓருவர் ஒருவரின் அறிமுக படலம் நடந்தது.

"என் பெயர் அஞ்சலி. கும்பகோணத்தில் இருக்கும் அன்னை இல்லத்தில் வளர்ந்த பெண் நான். +2 ல 1100/1200 வாங்கினேன். அங்க இருந்து இந்த காலேஜ் க்கு விண்ணப்பித்து சிட் கிடைக்க வந்து சேர்ந்தேன். என் பொழுது பொக்கு படம் வரைவது மற்றும் பாட்டு கேட்பது😝😝"

"என் பெயர் ராம்.. ஸ்ரீராம். வேலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கவர்மென்ட் ஸ்கூல் ல படித்தேன். என் +2 மார்க் 1002/1200. இப்போ எங்க மாமா கூட தங்கி இருக்கேன். என் பொழுது பொக்கு வீடியோ கேம் விளையாடுவது. என்னோட ஃபேவரைட் கேம் god of war..😋😋"

"என் பெயர் அர்ஜுன்.. பல்லாவரத்தில் இருக்கும் sri Sankara Vidhyalaya பள்ளியில் படித்தேன். +2 ல என் மதிப்பெண் 881/1100. என் பொழுது பொக்கு நாவல் படிப்பது எல்லாமே தமிழ் நாவல் தான். ரமணிசந்திரன், ராஜேஷ் குமார் மற்றும் இந்திரசொந்தெராஜன் தான் என் ஃபேவரைட் எழுத்தாளர்கள்.😳😳"

இதனை சொல்லும் போது அவன் திக்கி திக்கி பேசியதை நோட் பண்ணவும்..😔

"என் பெயர் தர்ஷினி. SBOA cbse பள்ளியில் படித்தேன். +2 ல என் மதிப்பெண் 1165/1100. ஸ்கூல் ஃபர்ஸ்ட் இனி கிளாஸ் ஃபர்ஸ்ட் காலேஜ் ஃபர்ஸ்ட் கூட நான் தான். என் பொழுது பொக்கு பியானோ வாசிப்பது மற்றும் crime thriller அதுவும் இங்கிலீஷ் நாவல் தான் படிப்பேன்😏."

"என் பெயர் ரிஷி. என் +2 மார்க் யாருக்கும் தேவையில்லாதது, என் பொழுது போக்கு தெரிந்து நீங்க என்ன பண்ண போறீங்க தெரியல இருந்தாலும் சொல்றேன்.. புக்ஸ் படிப்பேன் அது தமிழ் அல்லது ஆங்கிலம் என்ற வேறுபாடு எல்லாம் இல்ல. படிக்க ஆர்வமாக இருக்க படிப்பேன் இல்ல யார் சொன்னாலும் கேட்டாலும் தொட்டு கூட பார்க்க மாட்டேன். தட்ஸ் மை கேரக்டர்..😔"

இப்படி பலபேர் அவங்களை பற்றி சொன்னார்கள்..

பின் இண்டர்வல் ப்ரேக் ல..
அவர்கள் கூட கிளாஸ் in-charge ஏதோ பேசணும் சொல்லி அர்ஜூனை அழைத்து கொண்டு ஸ்டாப் ரூம் போனாள் தர்ஷினி.

அர்ஜுன் கூட சிறிது நேரம் பேசியதில் ராம் அறிந்தது இது தான்.. அவனுக்கு தர்ஷினி மேல் சின்ன கிரேஸ்.. அது அழகா இருக்கும் பெண்களை பார்த்து வருவது தான். என்ன ராம் கூட வலை போடலாம் என்ற யோசனையில் இருந்தான். இன்னும் நாட்கள் போக போக பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டான்.

"அழகா வாடா நம்ம கேன்டீன் போலாம் பசிக்குது.." - அஞ்சலி

"போலமே.." - ராம்

காலேஜ் ல ராக்கிங் பிராப்ளம் இருக்குமோ என்ற பயத்தில் சரியாகவே சாப்பிடாமல் வந்து விட்டாள். அதே நேரத்தில் தன் தங்கள் நட்பு கொண்டதை கொண்டாட ராம் சமோசா வாங்கி தருகிறேன் சொன்னதை கேட்டு அவனை இழுத்து கொண்டு கேன்டீன் போனாள்.

ரிஷி கிடைத்த அரை மணி நேரத்தை காலேஜ் நூலகத்தில் செலவிட போய் விட்டான். அவனுக்கு அங்க இருக்கும் புக் கலெக்சன் எல்லாம் பார்க்கணும். இன்னும் நேரம் இருந்தால் கேன்டீன் ல போய் ஒரு லெமன் ஜுஸ் மட்டும் குடித்து விடு வருவான்.

இன்னும் ரிஷி மற்றும் ராம் அவர்களின் இணை கூட பேச ஆரம்பிக்க வில்லை. அதற்கு ஒரு நேரம் வரும் அந்த நேரத்தை அமைத்து கொடுக்க போறவன் நம்ம அர்ஜுன் தான்..😣😣

ஒரு அப்பாவியே இவங்க என்ன பண்ண போறாங்க தெரியலையே..??
 
#6
வாராயோ வெண்ணிலாவே...!! 3
அத்தியாயம் 3


ஸ்டாஃப் ரூமில் தர்ஷினியும் அர்ஜுனும் போனார்கள்..

அங்கே ஒரு ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றான் அர்ஜுன்...

"ஐயோ.. இவளா? இவள் இந்த காலேஜ் ல சேர போறது சொல்லாமல் மறைத்து விட்டாளா? அடியே என் குண்டு பூசணிக்காய் உனக்கு இருக்கு டி.." - அர்ஜுன்

அவன் மைண்ட் வாய்ஸ் என சத்தமாக முணுமுணுக்க அதை கேட்ட தர்ஷினி..

"அர்ஜுன் அந்த பொண்ணை உனக்கு முன்னாடியே தெரியுமா?" - தர்ஷினி

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாமல் அவர்களின் ஆசிரியருடன் பேசிக்கொண்டு இருந்த பெண்ணை நோக்கி சென்றான்.

"இதோ இவங்க ரெண்டு பேர்தான் உன் கிளாஸ் லீடர்ஸ் இன்னிக்கு என்ன என்ன நடந்தது என்பது பற்றி இவங்களை எல்லாம் சொல்லுவாங்க.." - துர்காதேவி (கிளாஸ் இன் சார்ஜ்)

"மேடம் இந்த பொண்ணு யாரு?" - தர்ஷினி

"உங்க கிளாஸ் நியூ அட்மிஷன். மார்னிங் தான் இந்த பொண்ணோட அட்மிஷன் கன்பார்ம் ஆச்சு. இவள் பெயர் பிங்கி ஜெயின் (Pinky Jain).. மற்ற விபரங்கள் எல்லாம் நீங்களே பேசி தெரிஞ்சுக்கோங்க..!!" - துர்காதேவி

இருவருமை அவளை தங்களின் கிளாசுக்கு அழைத்துச் சென்றனர்.

முதலில் அந்த pinky பெண்ணை பற்றி சொல்கிறேன்..
இன்னும் முன்று மதத்தில் வயசு 17 பூர்த்தி அடைகிறது. லார்டு விநாயகரின் cousin sister போல உடல் வாகு. வடநாட்டு பெண்ணின் முக சாயல்.. குறைந்தது உடல் எடை 70 ஆவது இருக்கும். தன் தொல் பையில் எப்போதும் ஏதாவது ஒன்று ரெண்டு சிப்ஸ் பாக்கெட் வைத்து இருப்பாள். பசி தாங்க மாட்டாள். இவளுக்கும் அர்ஜுனுக்கும் முன்று மாதம் தான் இடைவேளை.. அவளை விட அர்ஜுன் முன்று மாதம் பெரியவன். தி நகர் இல் அவள் குடி இருக்கிறாள். மற்றவர்களுக்கு அவள் கோபக்காரி அர்ஜூனுக்கு அவள் எப்போதும் பாசக்காரி. அவனிடம் மட்டுமே அவள் எல்லா சேட்டையும் வைத்து கொள்வாள்.

இருவருக்கும் இடையே பல வருட நட்பு இருந்தது. ஆனால் அது இரண்டு வருடத்துக்கு முன் மாற அர்ஜுன் செய்த ஒரு தப்பே காரணம். அந்த தப்பு இருவருக்கும் இடையே இருந்த உறவை பிங்கி விஷயத்தில் மட்டும் மாற்றி விட்டது.

Snacks break என்ற காரணத்தால் அவங்க கிளாஸ் eh வெறிச்சோடிப் போய்க் கிடந்தது இப்போ அந்த அறைக்குள் இந்த அஸ்வினி அர்ஜுன் மற்றும் பிங்கி மட்டும் உள்ளார்கள்.

"ஹ்ம்ம் அர்ஜுன் இப்போ சொல்லு இவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?" - தர்ஷினி

அர்ஜுன் அதற்கு பதில் சொல்வதற்கு முன்னாடி பிங்கியே பதில் சொன்னாள்.

"உன் பெயர் என்ன?" - பிங்கி

"தர்ஷினி... தர்ஷினி சுகுமார்." - தர்ஷினி

"இங்க பார் தர்ஷினி.. இவனும் நானும் சின்ன வயசில் இருந்து க்ளோஸ் ப்ரெண்ட்ஸ். இவனின் சின்ன பொண்ணு தங்கி இருக்கும் பிளாட் ல தான் நானும் குடி இருக்கேன். எப்ப நான் இவனுக்கு ஸ்கூல்ல இருந்து ரெண்டு முன்று நாள் லீவு கிடைச்சாலும் சரி உடனே அவனின் சித்தப்பா வீட்டுக்கு வந்துவிடுவான். அப்படி செட் ஆனது தான் எங்க பிரெண்ட்ஷிப். அந்த பிரெண்ட்ஷிப்க்கு கிட்டதட்ட ஆயுட்காலம் 13 வருடம். இப்போ ஐயா என் மேல் கோபமாக இருக்கார். காரணம் இந்த காலேஜ் ல நான் சேர போவதை இவனிடம் பேசாமல் மறைந்து விட்டேன் என்கிற காண்டு..🤣🤣" - பிங்கி

"போடி.. உன் பேச்சு கா.. கா..👍" - அர்ஜுன்

"ஐயோ வெங்கி.. நீ என் செல்ல குட்டி வெங்கி ல... என் பட்டுக்குட்டி வெங்கி la.. sorry da.." - பிங்கி

"உன் சாரி... பூரி எல்லாம் வேண்டாம்.. போ.." - அர்ஜுன்

"அடேய் இன்னிக்கு சாயங்கலாமே ஒரு பிளேட் பானிபூரி வாங்கி தரேன் டா.." - பிங்கி

"பானிபூரி யா..😍😍😍 அப்போ ஓகே..😋" - அர்ஜுன்

"ஆனா காசு நீ தான் கொடுக்கணும்.." - பிங்கி

"சீ பே..😤" - அர்ஜுன்

அவன் கோபத்தோடு ரெஸ்ட் பக்கம் ஓடி விட்டான்.

அவளால் "வெங்கி.. வெங்கி.." என கத்த தான் முடிந்தது அவன் திரும்பி பார்க்கவே இல்லை.

இவ்வளவு நடந்ததை எல்லாம் மண்டையை பிச்சி கொண்டு பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினி தன் கேள்வியை கேட்டாள்..

"அவன் பெயர் அர்ஜுன் தானே... நீ என்ன வெங்கி என கூப்பிடுற?"

"அவனின் இன்னொரு பெயர் வெங்கட் ராமன். அது அவங்க தாத்தாவின் நினைவால் இவனுக்கு வைத்த பெயர்.. இவனுக்கு பிடித்த பெயர் கூட. என்ன பண்றது ஸ்கூல் ல சேர்க்கும் போதே மாடர்ன் பெயராக இருக்கணும் என அர்ஜுன் என்று கொடுத்து விட்டார்கள். அப்படி இருந்தும் வீட்டில் எல்லாரும் இவனை வெங்கட் என்று தான் கூப்பிடுவாங்க. நான் மட்டும் அதையும் சுருக்கி வெங்கி என்பேன். எனக்கு அடித்து அவன் அம்மாவும் இதே மாதிரி சில சமயம் கூப்பிடுவாங்க.."

"ஹ்ம்ம்.. பிங்கி வெங்கி... செம்ம பெயர்... உங்க ஜோடி பொருத்தம் கூட சூப்பர் தான் போ.."

"அது உனக்கு தெரியுது? ஆனால் அவனுக்கு தெரியலே. பல சமயத்தில் நான் ஒரு பொண்ணு என்பதையே மறந்திடும் அந்த லூசு..😣😣"

தர்ஷினி ஏதோ கிண்டல் பண்ற எண்ணத்தில் ' ஜோடி பொருத்தம் சூப்பர் ' என சொன்னதை பிங்கி சீரியஸ் ஆ எடுத்து கொண்டதை பார்த்து தனக்குள்..

'அட இந்த யானைக்கு அவன் மேல் லவ்ஸ் போல... நமக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் சிக்கிச்சு..😬😬. இனி காலேஜ் லைஃப் கலகட்டும்..' - தர்ஷினி மனதுக்குள்

"உன் லவ் ஏ சொல்லிட்டியா?"

"ஏய் உனக்கு எப்படி தெரியும்?"

"அதன் உன் பார்வை ஏ சொல்லுதே.."

"அவ்வளவு பச்சயவா தெரியுது..?😱"

"லைட் ஆ..🤣"

"ஹ்ம்ம்.. இன்னும் சொல்லல.. பயமா இருக்கு."

"என்ன பயம் ஓகே சொல்ல மாட்டான் என்றா?"

"இல்ல ஓகே சொல்லிடுவான் என்று.."

"புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லு.."

அவள் தெளிவா சொல்ல வர அப்போ பார்த்து ரெஸ்ட் ரூம் போனவன் திரும்பி வந்தான்..

"பிங்கி காலேஜூக்கு எப்படி வந்தாய்? பஸ் or ஸ்கூட்டி?"

"ரெண்டும் இல்ல share auto.. அடுத்த வாரத்தில் இருந்து தன் ஸ்கூட்டி ல வருவேன். ஏன் வெங்கி என்ன விஷயம்?"

"சித்தி சித்தப்பாவை பார்க்கலாம் நினைத்தேன். சரி விடு நானும் இன்னிக்கு உன் கூட share auto ல வருகிறேன்."

"ஓகே.."

கருப்பு தின்ன கூலியா என்கிற நிலை அவளுக்கு😝.

அதனையே கண் அடித்து தர்ஷினி கிட்ட சைகையில் சொன்னாள்.

' என்ன கருமம் டா இது. யானைக்கு எலியா ஜோடி..🤢🤢 ' - தர்ஷினி மனதில்


*******************

காலேஜ் நூலகத்துக்கு போன ரிஷி அவன் தேடிய சில புக் கிடைக்காமல் லைபரியன் கிட்ட வேண்டிய புக்ஸ் எல்லாம் எது எது.. என்ற லிஸ்ட் கொடுத்து வேண்டும் என்றான்.

பிறகு கேன்டீன் ல ஒரு லெமன் ஜூஸ் குடித்து விட்டு போலாம் என அங்கே போனால் அவனுக்கு முன்னாடி அங்கே வந்த அஞ்சலி தன் முன்னால் இருந்த ராமுக்கு ஒரு சமோசா கூட கொடுக்காமல் முழுங்கி கொண்டு இருந்தாள்.

"அழகி இது ரொம்ப ஓவர் டி.. எனக்கும் கொஞ்சம் குடு பசிக்குது.." - ராம்

"சோ சோ.. அழகா சரி ரொம்ப ஆசைப்படுற இந்தா இந்த சமோசவின் மசாலா மட்டும் நீ சாப்பிடு. அதன் மேல் சுற்றி இருக்கும் தொல் மட்டும் நான் சாப்பிடுறேன்." - அஞ்சலி

"நீ உண்மையாவே அஞ்சலி பாப்பா தாண்டி. இப்படி குழந்தையா இருக்காதடி அப்பறம் எல்லாரும் உன்னை ஏமாற்றுவார்கள்." - ராம்

"ஃப்ரீ ஆ விடு.. ஃப்ரீ ஆ விடு.. எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நீ ஹெல்ப் பண்ண மாட்டே?" - அஞ்சலி

"என் அழகிக்கு பண்ணாமல் வேற யாருக்கு பண்ண போறேன்.." - ராம்

"தாங்க்ஸ் அழகா... Really I like you.." - அஞ்சலி

"Me too அழகி.." - ராம்

இவர்களின் உரையாடலை மற்றொரு இருக்கையில் உட்கார்ந்து லெமன் ஜுஸ் குடித்து கொண்டே கேட்டு கொண்டு இருந்த ரிஷி..

' என்னடா இது.. காலேஜ் முதல் நாளே அழகன் அழகி என பேசுதுங்க. எல்லாம் காலம் செய்யும் கோலம். பையன் பார்க்கவே பொறுக்கி மாதிரி இருக்கான் இந்த பொண்ணு வேற ரொம்ப வெள்ளந்திய இருக்கு. ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்யும்.? சொந்தம் என வேற யாரும் இல்லனு சொன்னாள் 🤔. சரி நமக்கு என்ன வந்தது? அவள் பிரச்சினை அவளுக்கு. நம்ம வேலை காலேஜ் வந்தோம்.. படிச்சோம்.. டிகிரி வாங்கினோம்... என இருக்கணும். அவங்களால் எனக்கு பிரச்சினை வராத வரை சரி..' - ரிஷி மனதில்

அஞ்சலி பற்றிய விஷயங்களை தூரம் ஒதுக்கிய ரிஷி அமைதியாக அவன் வேலையை பார்க்க..

அதே நேரத்தில் இன்னொரு இருக்கையில் அதே அஞ்சலியை பார்த்த கார்த்தி..

' யார் இந்த நம்ம காலேஜ் கு புது போல... Id card வேற நம்ம டிபார்ட்மெண்ட் id card ah இருக்கு.. நம்ம தங்கையின் கிளாஸ் மேட் போல.. பெயர் ஏதோ போட்டு இருக்கே.. அஞ்சலி B.sc computer science.. batch 2013 - 16. ஹ்ம்ம் ' சந்தோஷ் சுப்ரமணியம் ' படத்தில் வரும் நடிகை ஜெனிலியா மாதிரி இருக்கு இவளின் பெயர் அஞ்சலியா? Not bad.. இனி இவளை பற்றி மற்ற விபரம் எல்லாம் நம்ம செல்ல குட்டி கிட்ட கேட்டுப்போம்..' - கார்த்தி

தன்னை ஒருத்தன் கண்டு காணாமல் இருப்பதையும், இன்னொருத்தன் கண்டு கொண்டே இருப்பதையும் ஏதும் அறியாமல் அஞ்சலி தன் சமோசா மேல கண்ணாக இருந்தாள்.

என்ன பண்றது பசி வந்தால் சோறு தானே முக்கியம்..😝😝

***************

ராம் ஏற்கனவே அவன் மாமாவிடம் துணி வாங்க காசு வாங்கி இருந்தான். அதுவும் காலேஜ் பக்கத்தில் இருக்கும் sky walk mall ல வாங்கும் முடிவில் கொண்டு வந்த பணம்.

அஞ்சலிக்கு கூட அந்த mall ku போகணும் என்ற ஆசை சொல்ல..

இரவு ஒன்பது மணிக்குள் அவள் ஹாஸ்டல் போய் விடலாம் என்கிற எண்ணத்தில் அவன் கூடவே போனாள்.

அதனை ஃபக் எடுக்கும் போது பார்த்த ரிஷிக்கு மனசு கேட்க வில்லை..

"என்ன இந்த பொண்ணு ஒரு பையனை அது பார்த்த ஒரே நாளில் நம்பி கூடவே போகுது.. சே என்ன குணமோ என்னவோ.. கண்டு காணாமல் இருக்கலாம் பார்த்தாலும் முடியல. அந்த ராமும் அவன் முங்கியும்??. நம்ம பக்கத்தில் உட்காந்து இருந்த போதே வர போற படம் நடத்தும் ஆசிரியரையே ஜொள்ளு விட்டு பார்த்தான். இவனை போய் அந்த பொண்ணு நம்புதே? சரி நம்மாலும் பின்னாடியே அவங்க பார்க்காத மாதிரியே போவோம். ஏதாவது அந்த பாயல் வால் அட்டுற மாதிரி தெரிந்தால் தொல் உரிசுட வேண்டியது தான்.." - ரிஷி

அன்று வெள்ளி கிழமை வேற தர்ஷினி எதிர்ப்பார்த்த ஒரு புது படம் ரீலீஸ் வேற அன்று தான் ஆனது.

காலேஜ் டைம் முடிந்த உடனே கார்த்தி அவள் தங்கை தர்ஷினியே அந்த படத்துக்கு அழைத்து கொண்டு போகிறேன் என சத்தியம் செய்து இருந்தான்.

அவனுக்கு என்ன தான் அஞ்சலி பற்றி தர்ஷினி கிட்ட கேட்கணும் என இருந்தாலும் படம் பார்த்து முடிக்கும் வரை காத்திருப்போம் என அமைதி காத்தான்.

**************

அன்று காலேஜ் முடிந்த பிறகு அர்ஜுன் சொன்ன மாதிரியே பிங்கி கூட கிளம்பி விட்டான்.

காலேஜ் முடியும் நேரம் என்பதால் share auto கூட அடித்து பிடித்து தான் வந்தது..

ஒரு ஆள் உட்கார்வதற்கு தான் இடம் இருந்தது.. பிங்கி வேற மனதில்..

"போச்சு.. இன்னிக்கு வெங்கி கூட பேசிக்கிட்டே போலாம் வேற நினைத்தேன்.. கடவுள் சதி பண்ணிட்டார்.😒😒. அடேய் லார்டு கணேசா உனக்கு இருக்கு டா டேய்..😡" - பிங்கி

அவளை தனியே விட மனசு இல்லாதவன்..

"பிங்கி ஒரு பிரச்சனையும் இல்லை.. நீ வேண்டும் என்றால் என் மடியில் உட்கார்ந்து கொள். நான் சீட் ல உட்கார்ந்து கொள்கிறேன். இன்னும் கொஞ்ச தூரத்தில் சில பேர் இறங்கி விட்டால் இடம் கிடைத்து விடும்.." - அர்ஜுன்

அவளுக்கு ஓகே தான் ஆனால் என்ன பண்றது அவள் எடை 70 கிலோ... அவன் எடை 48 கிலோ... தன் அவன் மடியில் உட்கார்ந்தால் அவனின் கால் உடைந்து விடுமே என்ற நல்ல எண்ணத்தில்..😬😬

"இல்லடா அது சரிப்பட்டு வராது.. நீ என் மடியில் உட்கார்... எனக்கு பிரச்சினை இல்ல...😝" - பிங்கி

அவனும் யார் மடியில் யார் உட்கார்ந்தால் என்ன? என்கிற எண்ணத்தில் சரி என்றான். அவனுக்கு சிறு வயதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் விளையாடிய நினைவு..

ஆட்டோ கிளம்பியது... பிங்கி சொன்னது போல அவள் மடியில் தான் அவன் அமர்ந்த படி வந்தான். பத்து நிமிடத்தில் ஒரு ஸ்டாப் ல சில பேர் இறங்கிய பிறகு அவனுக்கு இடம் கிடைத்தது. அதுவரை ஏதோ டெடி பியர் 🐻 தன் மடியில் இருந்தது போல தான் பிங்கி இருந்தாள். டெடி பியரே கட்டிப்பிடிக்கிற அவனை பிடித்து கூட இருப்பாள். ஆனால் அதில் பயந்து அவன் வெளியில் குதித்து விட்டால் என்ன செய்வது என்கிற எண்ணத்தால் விட்டாள்.
 
Last edited:
#7
வாராயோ வெண்ணிலாவே...!! 4
அத்தியாயம் 4

Sky walk mall..
Max shop


"அழகா.. இந்த ஷர்ட் எப்படி இருக்கு? செமையா இல்லை..? நீ என் பேஸ்ட் ப்ரெண்ட் என்றால் இதை தன் எடுக்கணும்.." - அஞ்சலி

"இல்ல அழகி.. இது ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் வேண்டாம்.. நம்ம பட்ஜெட் 1000 ருபீஸ் ல ரெண்டு ஷர்ட் அவ்ளோதான்.. இது ஒண்ணே 1200 கிட்ட வருது.." - ராம்

"சீ பே.😤. அங்கே இருக்கும் லேடீஸ் section ல எனக்கு ஏதாவது டிரஸ் நல்ல இருக்கா பார்க்கிறேன். காலேஜ் ku நல்லதா ரெண்டு செட் தான் இருக்கு.." - அஞ்சலி

"ஓய் காசு கம்மியா இருக்கு என்றால் கேளு நான் தரேன்.." - ராம்

"இட்ஸ் ஓகே.. கடன் அன்பை முறிக்கும்..😝" - அஞ்சலி

அஞ்சலி ஒரு பக்கம் அவளுக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் பார்க்கப் போக அவ்வளவு நேரம் இவர்கள் பேசியதை அவர்கள் கண்ணில் படாமல் கேட்ட ரிஷி ஒண்ணும் தெரியாதது போல ராமை பக்கத்தில் வந்து சில டிரஸ் எல்லாம் பார்த்து கொண்டு இருந்தான்.

"அட ரிஷி.. நீயும் இங்க டிரஸ் எடுக்க வந்தியா?" - ராம்

"இல்ல தலப்பாக்கட்டி பிரியாணி சாப்பிட வந்தேன்.." - ரிஷி

"ரைட் விடு.. வந்தது தான் வந்துட்டே எனக்கு டிரஸ் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு.. நமக்கு இப்படி பெரிய பெரிய கடையில் டிரஸ் எடுத்து பழக்கம் இல்ல அதன்.." - ராம்

' என்ன இவன்.. பார்த்து ஒரு நாள் கூட ஆகல.. ரொம்ப நாள் பழக்கம் மாதிரி பேசுறான்.. இவன் குணமே இதனா? நம்ம தான் ஓவர் ஆ சந்தேகம் பட்டோம் போல..?🤔.. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்த்து முடிவு செய்வோம்..' - ரிஷி மனதில்

"பட்ஜெட்? ஃபேவரைட் காலர்? எல்லாம் சொன்னால் செலக்ட் பண்ண முடியும்.." - ரிஷி

"அட நான் லூசு அதை சொல்லல பார். பட்ஜெட் -1000, ஃபேவரைட் காலர்ஸ் - white, black and blue.. ரொம்ப டார்க் காலர் வேண்டாம் பிளீஸ்.. நம்ம அழகுக்கு சூட் ஆகாது..😎😎" - ராம்

' அந்த பொண்ணுதான் இவனே பேச்சுக்கு அழகன் என சொன்னால் அதையும் நம்பி எப்படி எல்லாம் சீன் போடுறான்.. கரெண்ட் ஷாக் காகா முஞ்சி.. இவனுக்கு போய் நான் டிரஸ் பார்த்து தரணுமா? எல்லாம் என் நேரம்..😡 ' - ரிஷி மனதில்

ரெண்டு நிமிடம் இங்க அங்க பார்த்தவன் முன்று ஷர்ட் எடுத்து காண்பித்தான்..

"இதில் எது பிடிச்சு இருக்கு பார்.. என்னை கேட்டால் மூன்றுமே உன் காலருக்கு சூட் ஆகும்.. முடிவு எடுக்க வேண்டியது நீ தான்.." - ரிஷி

சிறிது நேரம் யோசித்த ராம்..

"ஒரு நிமிடம் மச்சி.. நம்ம அஞ்சலி என் கூட தான் வந்தாள். அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்போம்.." - ராம்

' என்னது மச்சியா? நம்ம அஞ்சலியா? என்னடா நடக்குது இங்க? சிவபெருமானே!! என்னய்யா பண்ற.. தெரியத்தனமா இவன் பின்னாடி வந்துட்டேன்.. அதுக்கு இப்படியா?' - ரிஷி மனதில்

ராம் அஞ்சலியை அழைப்பதற்குள் அவளுக்கு வாங்க வேண்டிய டிரஸ் எல்லாம் வாங்கி விட்டு பில் கூட போட்டு விட்டாள்.

"ஓய் அழகி என்னடி இது.. நீ அங்க போய் அஞ்சு நிமிசம் ஆச்சு.. அதற்குள் வேண்டியது எல்லாம் வாங்கிட்டியா?" - ராம்

"இந்த காலேஜ் ல அட்மிஷன் போட வரும் போதே இங்க ஏற்கனவே ஒரு தடவை வந்து வேண்டிய டிரஸ் எல்லாம் பார்த்து வச்சுட்டேன்.. நாளைக்கு வந்து வாங்கலாம் நினைத்தேன்.. அதற்கு முன்னாடி உன் கூட வர மாதிரி ஆச்சு.." - அஞ்சலி

"ஹ்ம்ம்.. ஓகே.. இந்த முன்று டிரஸ் ல எது நல்ல இருக்கு.. நம்ம ரிஷி தான் தேர்ந்தெடுத்தான்.." - ராம்

அதை எல்லாம் பார்த்தவள்..

"அக்கோ பிகோ அமுத பல்லி கடைக்கு போனால் சா பூ திரி..
அக்கோ பிகோ அமுத பல்லி கடைக்கு போனால் சா பூ திரி.." - அஞ்சலி

ஏதோ ஒரு பாட்டு பாடி கடைசியில் விடுப்பட்ட டிரஸ் ஆ தேர்ந்தெடுத்தாள்.

அதையெல்லாம் பார்த்த ரிஷிக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.

' ரெண்டு லூசுங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்.. போயும் போயும் இந்த ராமை போய் வில்லன் பொறுக்கி அளவுக்கு கற்பனை பண்ண சரியான காமெடி பீஸ்..🤦' - ரிஷி மனதில்

"அழகா இந்த white shirt.. ok இதையே வாங்கு.." - அஞ்சலி

"அழகி சொன்னா ஓகே தான்.. ரிஷி.. மச்சி எனக்கு இதே பிடித்து இருக்கு டா.." - ராம்

"சரி.." - ரிஷி

கடைக்கு வந்ததற்கு ஒரு ஏதாவது எடுப்போம் என ஏற்கனவே அஞ்சலி எடுத்து ராம் வேண்டாம் சொன்னதை எடுத்தான்.

' பார்க்க லூசு மாதிரி இருந்தாலும் இந்த எலி தேர்ந்தெடுத்த ஷர்ட் சூப்பர் ஆ தான் இருக்கு.😏.' - ரிஷி

பின் தன் தாத்தாவுக்கு ஒரு பிளாக் ஷார்ட் அப்பறம் தன் பாட்டிக்கு ஒரு சந்தன காலர் காட்டன் புடவை ஐந்து நிமிடத்துக்குள் எடுத்தான்..

பில் போட்டு அவன் வெளியே வர அவனுக்காக ராம் மற்றும் அஞ்சலி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தார்கள்.

"நீங்க ஏன் இன்னும் நிற்கிறீர்கள்..?" - ரிஷி

"எங்க நண்பன் நீ உனக்காக தான் வெயிட்டிங்..😝" - அஞ்சலி

"ஆமாம் ஆமாம்.." - ராம்

"நான் எப்போ உங்க நண்பன் ஆனேன்..?" - ரிஷி

"அது அப்படி தான்.. எங்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் நட்பு கரம் நீட்டி விடுவோம்.. ஏன் உனக்கு பிடிக்கல?" - அஞ்சலி

ரிஷிக்கு இந்த அனுபவம் புதுசு.. யார் கூடவும் அவன் சேர மாட்டான். அவன் உலகம் தனி உலகம் எப்போதும் அவனும் அவன் புத்தகம் தான் அவனின் நண்பர்கள்.

"One Best Book is equal to Hundred Good Friends, One Good Friend is equal to a Library.", Dr. A.P.J. Abdul Kalam சொன்ன வாய்மொழிக்கு ஏற்றது போல வாழ்பவன்.

இப்போ திடீர் என நட்பு கரம் நீட்டும் அவர்களை அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

ராம் மற்றும் அஞ்சலி, இருவருக்கும் நடுவில் காதலோ? என யோசித்து கொண்டு இருந்தவன் இப்போ இருவருமே விளையாட்டு குழந்தைகள் என்கிற முடிவுக்கு வந்து இருந்தான்.

செந்நிறமாக இருப்பவன் நல்லவன்.. கருப்பா இருப்பவன் பொறுக்கி, அழகு இல்லாதவன் என மற்றவர்கள் போல தானும் நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ரிஷியின் மனதை வாட்டியது.

இந்தியாவில் முக்கால் வாசி பேர் நிறமே கருமை தான். குணம் நிறத்தில் இல்ல அவர்களின் அன்பில் தான் இருக்கிறது என்கிற படத்தை அவன் கற்றுகொண்டான்.

ராம்.. கருமை நிறம் உடையவன் தான்.. முகத்தில் மச்சம் இருந்தாலும் தெரியாத அளவுக்கு கருமை. ஆனால் அவனின் சிரிப்பில் பேச்சில் ஒரு அழகு இருக்கிறது. அஞ்சலி சொல்கிறது போல அவன் அழகன் தான். புன்னகை அழகன்.

அஞ்சலி.. ரிஷியின் தொள் உயரம் கூட இல்ல.. ரிஷி 6'2 அஞ்சலி 5'3.. அவங்க கிளாஸ் ல இருப்பவர்களை விட அவளின் உயரம் குறைவு தான். சத்தியம் பண்ணி சொன்னால் கூட அவள் காலேஜ் படிக்கும் பெண் என்றால் யாருமே நம்ப மாட்டாங்க. பத்தாவது படிக்கும் பெண் என்றால் கொஞ்சம் நம்பலாம்.. அப்போ கூட சந்தேகமாக பார்ப்பவர்கள் இருப்பாங்க.

இவர்களுக்கு முன்னாடி நிற்கும் ரிஷி..
ஹிந்தி ஆக்டர் ஹ்ரிதிக் ரோஷன் போல காலர், உயரம் மற்றும் உடல் அமைப்பு. இந்த காலத்து சினிமா ஹீரோக்கள் போல் பத்து பொருத்தம் பக்காவாக இருக்கும். அப்போ அப்போ நம்ம ரொம்ப அழகு என்கிற திமிர் அவனுக்கு உண்டு. அதற்கு காரணம் கூட உண்டு.. அவன் கூட ஸ்கூலில் படித்த பல பொண்ணுங்க வழிந்து பேசியதில் கூட அப்படி ஒரு எண்ணம் வந்து இருக்கலாம்.

இப்போ ராம் மற்றும் அஞ்சலியை பார்த்த பிறகு அவனுக்கே நம்ம உண்மையில் நல்ல தான் இருக்கோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

அந்த நொடியில் முடிவு பண்ணான்.. நட்பு கரம் நீட்டி விடுவோம் என.. அவனின் அப்பா அம்மாவின் இறப்பு பின் அவன் தாத்தா பாட்டியை தவிர யார் முன்னாடியும் அவன் சிரித்து பேசியது இல்ல.. அந்த சிரிப்பில் கூட ஒரு நடிப்பு இருக்கும்.. ஆனால் இப்போ தன்னையே அறியாமல் சிரித்த முகத்தோடு..

"எனக்கு இது ரொம்ப புதுசு.. உங்க அளவுக்கு என்னால் பேச முடியாது. ஹ்ம்ம்.. ப்ரெண்ட்ஸ்..👍." - ரிஷி

அப்பறம் முன்று பேரும் hifi கொடுத்து கொண்டார்கள்.🙏🙏🙏

"அஞ்சலி.. if you don't mind.. ஆளுக்கு ஒரு கப் காபி குடிப்போமா? ராம் நீ என்ன சொல்ற..?" - ரிஷி

"எனக்கு ஓகே மச்சி.. ஆனால் ஒன்பது மணிக்குள்ள அஞ்சலி அவளின் விடுதி குள்ள போகணுமே.." - ராம்

"அஞ்சலிக்கு ஓகே என்றால்.. நானே என் ஃபக் ல ட்ராப் பண்றேன்.." - ரிஷி

ரிஷி மற்றும் ராம் இருவரும் அவளின் முடிவு என்ன என்கிற மாதிரி பார்க்க.. அவள் இருவரின் தோளை தட்டி விட்டு..

"எனக்கு ஓகே.. ஆனால் டீ தான் வேண்டும். எனக்கு காபி பிடிக்காது.😋." - அஞ்சலி

"அப்போ எனக்கும் டீ.😝." - ராம்

"சரி எனக்கு மட்டும் காபி.." - ரிஷி

ரிஷி அப்படி தான் அவனுக்கு பிடித்த விஷயத்தை விட்டு கொடுக்க மாட்டான் அதே நேரத்தில் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டான்..

அந்த mall ல இருந்த காபி ஷாப் போய் 8.15 வரை பேசி கொண்டே தங்கள் ஆர்டர் பண்ண காபி டீ குடித்தனர்.

ரிஷியல் ரொம்ப நேரம் அவர்களின் உரையாடல்களில் பங்கு பெற்ற முடியவில்லை.

ரிஷிக்கு தெரிந்தது எல்லாம்.. ஸ்கூல், காலேஜ், படிப்பு, நூலகம் அவ்வளவு தான். அதிகம் பேசாதவன். ஆனால் ராம் மற்றும் அஞ்சலி அப்படி இல்ல.. பேசிக்கிட்டே இருந்தார்கள்.. அவங்க பேசுவதை கேட்கும் போது ரிஷி வெளிப்படையாகவே தன் தலையில் தானே அடித்துக்கொண்டான்.

"எங்க ஷின்சன் (Shinchan - ஜப்பானீஸ் கார்ட்டூன்).. தான் கெத்து. ஐந்து வயசில் அவன் பண்ற சேட்டை என்ன? அறிவு என்ன? I love shinchan.. I love him so much.. அவன் மட்டும் நேரில் வந்தால் சின்ன பையன் கூட பார்க்கலாம் கல்யாணம் கூட பண்ணிபேன்..😍😍" - அஞ்சலி

"ஆமாம் அழகி.. எனக்கு கூட அவன் தான் ரோல் மாடல்.. என்ன ஒரு கெத்து? என்ன ஒரு ஸ்டைல்.. சான்ஸ் eh.. வாழ்க்கையில் அவன் மாதிரி ஒரு நாள் ஒரே நாள் வாழ்ந்து பார்த்து பார்க்கணும்.." - ராம்

ரிஷிக்கு ஒண்ணுமே புரியலை..

"எவன்டா அந்த shinchan.. ஐந்து வயசு சொல்றீங்க.. இவள் என்னவென்றால் கல்யாணம் பண்ணிக்க போறேன் சொல்றாள்? ராம் நீ வேற அவனை role model சொல்ற? ஒருவேளை சினிமா ஹீரோ வா?.. சாரி எனக்கு அதிகமா படம் பார்க்கிற பழக்கம் இல்ல.." - ரிஷி

அப்பறம் தான் அவங்க அது ஒரு கார்டூம் கேரக்டர் என சொன்னார்கள்..

ஜப்பானில் `மாங்கா' காமிக்ஸ்கள் மிகவும் பிரபலம். `மாங்கா' என்றால் படங்கள் என அர்த்தம். எனவே, படக்கதைகளுக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் ஜப்பானில் கலாசாரத்தைப் பிரதிபலித்த இந்தப் படக்கதைகள் மெதுவாக கமர்ஷியல் பாதையில் திரும்பின. ஆக்‌ஷன், சாகசம், ரொமான்ஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் `மாங்கா' வெளுத்துவாங்க, அதற்கேற்றார்போல் புதுப்புது கேரக்டர்களும் உருவாகிக்கொண்டே வந்தன. அப்படி 1990-ம் ஆண்டில் யூத் பத்திரிகைகாக உருவாக்கப்பட்ட கேரக்டர்தான் ஷின் - ஷான். முழுப்பெயர் க்ரேயான் ஷின் - ஷான். அந்த இதழில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிந்த யூஷி யோஷிடோ என்பவரின் கைவண்ணத்தில்தான் இந்தச் சுட்டிச் சிறுவன் பிறந்தான்.

ஐந்து வயது கிண்டர்கார்டன் சிறுவனான ஷின் - ஷானுக்கு, ஓரிடத்தில் இருக்கவே முடியாது. ஏதாவது செய்து தன்னை பரபரப்பாகவே வைத்துக்கொள்வான். அவன், அம்மா மிஷே, அப்பா ஹிரோஷி, தங்கை ஹிமாவாரி, நாய் ஷிரோ என அளவான குடும்பம். தன் குடும்பத்தையும், ஏரியாக்காரர்களையும், நண்பர்களையும் தன் சேட்டைகளின் மூலம் எப்படி பாடாய்படுத்துகிறான் அவன் என்பதுதான் இந்த காமிக்ஸின் மையக்கதை.

குழந்தைகள் கொண்டாடிய அளவுக்கு பெற்றோர்களால் ஷின் - ஷானைக் கொண்டாட முடியவில்லை. காரணம், ஷின் - ஷான் கேட்கும் கேள்விகள். அவை எல்லாம் வயதுக்கு மீறிய கேள்விகள் எனக் கொந்தளித்தார்கள் பெற்றோர்கள்.

அந்த கார்ட்டூன் பற்றி தங்கள் அறிந்தவரை ராம் மற்றும் அஞ்சலி சொன்னார்கள். ராம் சில வீடியோஸ் கூட youtube ல இருந்து காண்பித்தான்.

அதை எல்லாம் பார்த்து ரிஷி கூட ஒரு நிமிடத்தில் ஷிஞ்சான் ஃபேன் ஆ மாறிவிட்டான்.

யாரு எங்க தலைவன் ஷிஞ்சனே பிடிக்காதவங்க யாராவது உண்டா?😎

அப்பறம் அஞ்சலிக்கு நேரம் ஆவது புரிந்ததால் அவர்கள் கிளம்ப பார்க்க..

அப்போ தான் விதி விளையாடியது.. காலி டீ காபி கப் ஏ எடுத்து திரும்பிய ரிஷி.. பக்கத்தில் வந்த தர்ஷினியே கவனிக்க வில்லை.

தனக்கும் தன் அண்ணன் கார்த்திக்கும் கையில் காபி எடுத்து கொண்டு வந்தவளை பார்க்காமல் ரிஷி இடிக்க அது தெரியாது அவள் மேலும் அஞ்சலி மேலும் சிந்தியது..

தர்ஷினி மேல் சிந்தியத்துக்கு ராம் துடிக்க.. அஞ்சலி சிந்தியத்துக்கு கார்த்தி மற்றும் ரிஷி துடிக்க..

தி நகரில்.. அதே நேரத்தில் பிங்கி கையால் அர்ஜுன் அடிவாங்கி கொண்டு இருந்தான்.
 
#8
வாராயோ வெண்ணிலாவே...!!
அத்தியாயம் 5


தி நகரில்.. அதே நேரத்தில் பிங்கி கையால் அர்ஜுன் அடிவாங்கி கொண்டு இருந்தான்.

"ஏய்.. இப்போ எதுக்கு டி என்னை அடிக்கிற.. நான் அப்படி அடிக்கிற அளவுக்கு ஒரு தப்பும் பண்ணல.."

"என்ன தப்பா? போன வருஷம் எனக்கு என்ன சத்தியம் பண்ண.. சொல்லு டா.. சொல்லு.."

"சரியா நினைவு இல்லயே.. நீயே சொல்லு.."

"🤦🤦.. இனி எந்த பொண்ணையும் site அடிக்க மாட்டேன்... சொல்லி சத்தியம் கியா? இல்லையா? அதை மீறி நம்ம கிளாஸ் பொண்ணுங்க பற்றி.. என் கிட்ட என்கிட்டயே கமென்ட் பண்ற🤜.. எதுக்கு எதுக்கே உன் வாய்👊👊.. வாயை உடைக்கலாம்.🤜🤜🤛🤛🤛."

அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை அடி, குத்து மற்றும் கொட்டு கொடுத்து கொண்டே இருந்தாள்.

"எது அநியாயம் பிங்கி.. நீயே தான் கேட்ட நம்ம கிளாஸ் பொண்ணுங்களை பற்றி ஏதாவது தெரியுமனு?... இப்போ நீயே பதில் கேட்டு அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.."

"நான் அப்படி கேட்பேன்.. நீ என்ன சொல்லி இருக்கணும்.. இல்ல பிங்கி உனக்கு பண்ணிய சத்தியம் படி எந்த பொண்ணையும் மனதில் பதியும் அளவுக்கு பார்க்கல. Crush அளவுக்கு யாருமே இனி இல்ல.. அப்படி தானே சொல்லி இருக்கணும்.. அதை விடு அந்த ஆறு பொண்ணுங்களின் ஃபோன் நம்பர், வாட்ஸ்அப் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, +2 மார்க் என பெரிய database ஏ எழுதி வச்சு இருக்கே.. ஏன்டா இப்படி சொல்லு.. சொல்லு.. முன்னாடி ஒரே சமயத்தில் ஒரு பொண்ணை தான் பார்ப்பே.. இப்போ கிளாஸ் ல இருக்குற மொத்த பொண்ணுகளையும் பார்க்கிற.. சீ.. சீ.. நீ சரியான காம கொடூரன்..😣😣"

"ஐயோ என்னடி இப்படியெல்லாம் சொல்ற.. நீ நினைக்கிற மாதிரி இல்லடி.. இந்த தகவல் எல்லாம் நம்ம மிஸ் துர்காதேவி தான் வாங்க சொன்னாங்க.. இங்கே பார் பசங்களோட தகவல் கூட வாங்கி இருக்கேன்.. இதையெல்லாம் வைத்து ஒரு வாட்ஸ்அப் group create பண்ண சொன்னாங்க.."

"நீ பொய் சொல்ற.. அப்போ என் என்னோட தகவல் எல்லாம் கேட்கல? எழுதல?.."

"லூசு லூசு.. அதை ஏன் கேட்கணும்.. அதன் எனக்கே தெரியுமே.. நீ காலேஜ் முடிய ரெண்டு மணிநேரத்திற்கு முன்னாடி தானே வந்த!!.. அதன் இன்னும் எழுதல.. வீட்டுக்கு போய் பொறுமையா எழுதிப்பேன். இன்னும் ரெண்டு நாள் லீவ் தானே.. திங்கட்கிழமை காலேஜ் வரும் போது மிஸ் கிட்ட கொடுத்தால் போதும்.."

"நீ உண்மையே தானே சொல்ற?. இன்னிக்கு நான் பார்த்தேன் நீ தர்ஷினி கூட ரொம்ப நேரமா தனியா பேசிக்கிட்டு இருந்தாய்.."

"அதுவா.. இந்த வர கடைசியில் காலேஜ் புக்ஸ் எல்லாம் வாங்கலாம் இருக்கேன். Arts college ல புக்ஸ் எல்லாம் தரமாட்டாங்க ல அதன் வெளியில் வாங்க போறேன்.. ஒருவேளை எல்லாம் புக்சும் ஒரே கடையில் கிடைத்தால் சொல்ல சொன்னா.. நானும் சரி சொன்னேன்."

"ஓ.. அப்படியா சரி சரி.. வேற எதுவும் இல்லை ல? அவள் மேல் ஏதாவது அது எது? அந்த மாதிரி ஃபீலிங் ஏதாவது?"

"சத்தியமா இல்லடி.. நான் சொல்றதை நம்பு. எங்க ரெண்டு பேருக்குமே சேர்த்து தானே மேடம் கிளாஸ் பொறுப்பு எல்லாம் கொடுத்தாங்க அதுக்கு தான் அவள் கிட்ட பேசுறது.. மற்றப்படி எதுவுமே இல்ல.. ஒருவேளை நீ மதியமே வந்து இருந்தால் அவள் இடத்தில் நீ தானே இருந்து இருப்பே..?"

"சாரி.. டா.. நீ கொடுத்த சத்தியத்தை மீறி காதலில் திரும்பி போய்டுவே பயந்துட்டேன்..😣😣"

"சீ சீ.. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. என் கடைசி லவ் அப்படி நினைத்தது ரெண்டு வருசத்துக்கு முன்னாடி முடிந்து போச்சு.. அதற்கே நீ ஒரு மாசம் என்கிட்ட பேசாமல் இருந்தே.. இன்னொரு தடவை ஜென்மத்துக்கும் இந்த காதல் பற்றி யோசிக்கவே மாட்டேன்..🙏🙏"

அவளுக்கு தெரியாதா? அவளின் கடைசி காதலை பற்றி தெரிந்த நொடியில் இருந்து தானே இவளே இவளின் காதலை உணர்ந்தாள்.

"வெங்கி.. ஒருவேளை அந்த பொண்ணு திரும்பி உன் கண் முன்னாடி வந்தால் என்னடா பண்ணுவே?"

"எந்த பொண்ணு?"

"அதன் அந்த அனிதா.. நீ ஏதோ ஒரு தறுதலை.. தைரியமான ஆம்பிளையாக இருந்தால் அந்த அனிதா பொண்ணுகிட்ட போய் ' i love you ' சொல்லுடா பார்க்கலாம்.. அப்படி சொன்னதால் நீயும் அந்த ஒரு நிமிடம் தைரியத்தில் சொல்லி அடுத்த நாளே ஸ்கூல் முழுதும் தெரிந்து அசிங்கப்பட்டேன் சொன்னியே.. அதே பொண்ணு.."

"அவளா.. ஹ்ம்ம்.. ஆமாம் பிங்கி.. இப்போ நினைத்தால் கூட அசிங்கமா இருக்கு.. இப்போ கூட நினைவு இருக்கு அது அழுதுகிட்டே போச்சு.. அப்பறம் என்ன பத்தாவது பப்ளிக் exam முடித்த அடுத்த வருசமா வேற ஸ்கூலுக்கு போச்சு.. ஒரு சாரி கூட நான் சொல்லல.. அது லவ் இல்லடி ஜஸ்ட் crush.. இதுவரை லவ் என்பதே நான் உணர்ந்தது இல்லனு உனக்கே தெரியும்.. அவளை நேரில் பார்த்தால் ஒரு சாரி சொல்லணும் அவ்வளவு தான்.. பார்ப்போம்.. அது இந்த ஜென்மத்தில் நடக்குதா? இல்லையா? தெரியல.."

ஒரு crush என்றால் சொல்லலாம்.. இவனுக்கு தான் இதுவரை ஐந்து வயதில் இருந்து நூறு crush ஆச்சே..🤣🤣

"ஹ்ம்ம்.. சரி சரி.. அடுத்த ரெண்டு நாள் நம்ம காலேஜ் லீவ் தானே.. நம்ம ரெண்டு பேருமே ஒரு படத்துக்கு போய்ட்டு அப்படியே புக்ஸ் வாங்க போலாம் என்ன சொல்ற? உனக்கு ஓகே ஆ?"

"காசு இல்லடி.. வேண்டாம்.."

"நான் தரேன் டா.."

"No means no.."

"யாப்பா சாமி சரிடா.. எங்க வீட்டிலேயே கொஞ்ச நேரம் லேப்டாப் ல ஏதாவது படம் பார்த்துவிட்டு புக்ஸ் வாங்க போலாம்.. அது ஓகே ஆ.."

"டபிள் ஓகே..😋"

எப்போதும் போல அவனுக்கு குட்பை ஹக் (Goodbye hug) கொடுத்து விடு அவனை அனுப்பினாள்..

"வெங்கி.. நீ ஆசைப்பட்ட மாதிரி அந்த அனிதா பொண்ணை நீ திரும்பி பார்க்க கூடாது டா.. அவள் தான் உன்னோட கடைசி crush.. ஒருவேளை அவளை திரும்பி பார்க்க போய் உன்னையே அறியாமல் காதலில் விழுந்து விட்டாய் என்றால் என்னடா பண்ணுவேன்.. என் வெங்கி எனக்கு மட்டும் தான்..😣😣"

பாவம் அவளுக்கு தெரியாது இன்னும் ரெகமெண்டேஷன் மூலம் ஒதுக்கப்பட்ட அட்மிஷன் சீட்டு முடியவில்லை என்பது.. அந்த சீட் மூலம் அந்த அனிதா பெண் இவள் படிக்கிற காலேஜ் ல இவள் கிளாஸ்லயை வந்து சேர போகிறாள் அதில் அர்ஜுன் மற்றும் இவளின் நிம்மதியே போக போவது தெரியாமல் இருக்கிறாள்..

விதி வலியது..🤣🤣
 
#9
வாராயோ வெண்ணிலாவே...!! 6
அத்தியாயம் 6


காலி டீ காபி கப் ஏ எடுத்து திரும்பிய ரிஷி.. பக்கத்தில் வந்த தர்ஷினியே கவனிக்க வில்லை.

தனக்கும் தன் அண்ணன் கார்த்திக்கும் கையில் காபி எடுத்து கொண்டு வந்தவளை பார்க்காமல் ரிஷி இடிக்க அது தெரியாது அவள் மேலும் அஞ்சலி மேலும் சிந்தியது..

தர்ஷினி மேல் சிந்தியத்துக்கு ராம் துடிக்க.. அஞ்சலி சிந்தியத்துக்கு கார்த்தி மற்றும் ரிஷி துடிக்க..

"தர்ஷினி மா.. உனக்கு ஒன்னும் ஆகவில்லையே.. ரிஷி ஏன்டா இப்படி பண்ண பார்த்து திரும்பக்கூடாது.. பார் நம்ம கிளாஸ் பொண்ணு தர்ஷினி அவள் டிரஸ் எல்லாம் கறைப்பட்டு போச்சு.." - ராம்

ரிஷி அதை கவனிக்கும் நிலையில் இல்ல.. அவனின் கவனம் எல்லாம் அவனின் எலி மேல் தான் இருந்தது..

"எலி.. எலி.. உனக்கு ஒன்னும் இல்லையே.. காபி பட்டு கை கால் ஏதாவது வெந்து போச்சா? நம்ம வேண்டுமென்றால் டாக்டர் கிட்ட போவோமா?" - ரிஷி

"அஞ்சு.. பேபி.. சொல்லு மா என் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு.. எல்லாம் எல்லாம் என்னோட தங்கச்சி பண்ண தப்பு.. தர்ஷினி நீ பார்த்து வர மாட்ட பார்... அஞ்சுவுக்கு காபி பட்ட சூட்டில் வலிக்குது போல.." - கார்த்தி

ரிஷி காபி கொட்டியது கூட தர்ஷினிக்கு பெரிசா தெரியல.. தன் அண்ணன் கார்த்தி எவனோ ஒருவன் முன்னாடி தன்னை திட்டியது தாங்க முடியாது கோபத்தில் கத்தினாள்..

"அண்ணா நீ சும்மா இரு.. இது ஒண்ணும் hot coffee illa.. இது cold coffee.. இதுக்கு போய் இவ்வளவு சீன்.. அப்பறம் இங்க உன் தங்கச்சி மேல் கூட காபி கொட்டி இருக்கு.. அதையும் கொஞ்சம் பார்.." - தர்ஷினி

அப்போது தான் அவள் கவனித்தாள் கார்த்தியின் கண்கள் அஞ்சலியை கனிவோடு பார்ப்பதை..

' ஓ.. அண்ணனின் பார்வை அப்படி போகுதா? அப்போ சரி.. என்ன அஞ்சலி குள்ளமாக இருந்தாலும் களையாக தன் இருக்கிறாள்.. ஒரு heels shoe வைத்து height match பண்ணிக்கலாம்..' - தர்ஷினி மனதில்

தன் அண்ணன் பார்க்கும் பெண்ணையே வைத்த கண் விடாமல் பார்த்து கொண்டு இருந்த ரிஷியே பார்த்த தர்ஷினி..

"அடேய் நாயே.. கண்ணு என்ன பின்னாடி யா இருக்கு. திரும்பும் போது பார்த்து திரும்ப மாட்டே.. இடியட் இடியட்.. அப்படியே அறைந்தேன் வை தலை பின்னாடி திரும்பிக்கும்.." - தர்ஷினி

அவள் வாயை மூடி சும்மா இருந்தாலே அவன் சாரி சொல்லி இருப்பான் அதைவிட்டு அவர் பேசிய பேச்சை கேட்டவன் தன் கொள்கையான.. நீ என் பிரச்சனைக்கு வராது வரை உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன். அதை மீறி வந்தால் அதற்கு பின் வரும் பின்விள்ளைவுக்கு நான் பொறுப்பு இல்ல... அதை கையில் எடுத்தவன்..

"சு.. வாய் வாயை மூடு.. என் மேல் தப்பு தான் ஒற்றுக்கொள்கிறேன்.. அதற்கு அசிங்கமா எல்லாம் பேச கூடாது சொல்லிட்டேன்.. இந்த மாதிரி நாய், இடியட்.. அப்பறம் என்ன சொன்ன.. அப்படியே அறைந்தேன் வை தலை பின்னாடி திரும்பிக்கும்.. ஹ்ம்ம் நீ அடிக்கும் வரை நான் சும்மாவா இருப்பேன்? நான் ஒண்ணும் இயேசு நாதர் இல்ல.. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட.. நான் ரிஷி ரெண்டு கன்னமும் அப்பம் போல விங்கிடும் சொல்லிட்டேன்.." - ரிஷி

அப்பறம் கார்த்தி பக்கம் திரும்பிய ரிஷி..

"ஜி.. உங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன உறவு தெரியல.. சாரி.. உங்க முன்னாடி இவளிடம் சத்தம் போட்டு பேசியது தப்பு தான். இப்போ நடந்தது ஒரு விபத்து எங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நான் செய்த தப்பு ரொம்ப சாரி..🙏. அதற்கு இவங்க கெட்ட வார்த்தை பயன்படுத்துவது ரொம்ப தப்பு சொல்லி வையுங்கள்.. எலி, ராம் வாங்க போலாம்.. அஞ்சலிக்கு வேற நேரம் ஆச்சு.. ஜி திரும்பி சொல்றேன் சாரி.. இந்த பொண்ணுக்கு வேற ரொம்ப நேரம் ஆச்சு.. நம்ம பக்கத்து காலேஜ் தான்.. ஏதோ இந்த தர்ஷினியின் கிளாஸ் தான்.. என் மேல் ஏதாவது கோபம் இருந்தால் திங்கட்கிழமை பேசிக்கலாம்.." - ரிஷி

ரிஷி, ராம் மற்றும் அஞ்சலி அங்கே இருந்து கிளம்பி போன பிறகு..

"அண்ணா அவனை ஏன் விட்டே..? ரிஷி.. ரிஷி.. சே எனக்கு இந்த பெயர் பிடிக்கல.. இப்போவே அவனை போய் அடிச்சு உன் கெத்து காட்டு.. நீயும் நானும் யார் என்பது இப்போவே அவனுக்கு தெரியணும்.." - தர்ஷினி

"குட்டி.. இன்னிக்கு வேண்டாம் டா.. திங்கட்கிழமை பார்த்துப்போம்.. எங்க போக போறான்.. இப்போ கூட வேற இன்னொரு பொண்ணு இருக்கு.. அவள் முன்னாடி பிரச்சினை வேண்டாம்.. விடு.." கார்த்தி

"ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. அதன் பார்த்தேனே.. உன் பார்வையை.. என்ன பார்த்தவுடன் காதலா?" - தர்ஷினி

"தெரியலை.. பிளீஸ் குட்டி.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என் மனசு என்ன சொல்லுது பார்போம்.." - கார்த்தி

"சரி சரி.. ஏதுவாக இருந்தாலும் என்கிட்ட தான் முதலில் சொல்லணும்.. சரியா?" - தர்ஷினி

"சரி சரி.." - கார்த்தி

தர்ஷினி மட்டும் தன் மேல் காபி சிந்திய போது தன் அண்ணன் கூட கவனிக்காத சமயத்தில் தனக்காக ராம் துடித்த துடிப்பு அவள் கண்ணில் வந்து வந்து போனது..

' அடேய் கருப்பா.. ஏன்டா அப்படி துடித்தாய்? அதற்கு என்ன அர்த்தம்..? உனக்கு என் மேல் ஏதாவது?..', தர்ஷினி மனதில் நினைத்து தன் கருப்பனை திட்டி கொண்டு இருந்தாள்.

பாவம் அவளுக்கு தெரியாது..? ராம் ஒரு லூசு எல்லார் மேலும் அன்பு பொழியும் குழந்தை என்பது..

என்ன அடிக்கடி எத்தனையோ பெண்களிடம் லவ் சொல்லி மொக்கை வாங்கி இருக்கான் அவ்வளவு தான்.. மற்றபடி பையன் ரொம்ப நல்லவன்..😂😂

*******************

வெளியில் போன பிறகும் கூட ரிஷியின் கோபம் போகல.. அவனின் ஃபக் ல கோவத்தில் ஒரு குத்து குத்தினான்..

' அடியாத்தி.. இதே குத்து அந்த தர்ஷினி மேல் பட்டு இருந்தால் பல்லு கில்லு உடைந்து இருக்குமே.. அவளுக்கு மீக அழகே அந்த பல் வரிசை தானே..' ராம் மனதில்

அஞ்சலி ரிஷியை சமாதானம் செய்து..

"விடு ரிஷி.. அது cold coffee than பிரச்சினை இல்ல.. விடு.. என்ன டிரஸ் தன் கறைப்பட்டு போச்சு.. இட்ஸ் ஓகே இன்னும் ரெண்டு நாள் லீவ் தானே நான் வாஷ் பண்ணிப்பேன்.." - அஞ்சலி

அப்பறம் சமாதானம் ஆகியவன்..

"சரி ராம் நீ கிளம்பு.. நான் நம்ம எலியை அவள் விடுதியில் விட்டு போறேன்.." - ரிஷி

அஞ்சலியை அவள் விடுதி வாசலுக்கு அழைத்து வந்தவன்..

"ஓகே.. எலி bye.. திங்கட்கிழமை பார்ப்போம்.." - ரிஷி

"சரிடா.. அப்பறம் ரெண்டு நாள் லீவ் என்ன பிளான்.." - அஞ்சலி

"ஒண்ணும் பெருசா இல்ல.. சில புக்ஸ் பார்த்து வச்சு இருக்கேன்.. அம்மா கூட சேர்ந்து படிக்க போறேன்.. நீ?" - ரிஷி

"இல்ல பா.. டிரஸ் வாஷ் பண்ணனும், திங்ஸ் எல்லாம் அடுக்கி வைக்கணும் நிறைய வேலை இருக்கு.." - அஞ்சலி

விடுதி கேட் முடும் சத்தம் கேட்க.. வேக வேகமாக ரிஷி ஃபக் ல வாங்கிய தன் வாங்கிய டிரஸ் கவரை எடுத்தவள் விடுதிக்கு ஓடினாள்..

அவள் போகும் வரை பார்த்தவன்.. தன் வீட்டுக்கு போனான்..

வீட்டுக்குள் போனவன் தன் தாத்தா பாட்டி வாசலில் இருந்து அழைத்து கொண்டே..

"அப்பா... அம்மா.. சீக்கிரம் வாங்க உங்களுக்காக நான் ஆசை ஆசையாக டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்.." - ரிஷி

தொப்பை தெரிய t-shirt மற்றும் ப்ளூ ஜீன்ஸ் போட்டு கொண்டு அவன் பக்கம் வந்த அவனின் தாத்தா சதாசிவம்..

"What dude you look so happy? Any other special reason? Any beautiful have you seen? (என்ன மச்சி ரொம்ப சந்தோசமா இருக்கே போல? ஏதாவது வேற காரணம் இருக்கா? ஏதாவது அழகிய பெண்ணை பார்த்தியா?" - சதாசிவம் தாத்தா

"ஐயோ அப்பா.. அப்படி எதுவும் இல்ல.. முதலில் அம்மாவை கூப்பிடுங்க.. உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிய டிரஸ் எல்லாம் காட்டணும்.." - ரிஷி

அங்கே வந்த பார்வதி பாட்டி..

"என்னப்பா அந்த அதிசயமாக துணி வாங்கிட்டு வந்திருக்கே? காலேஜ் முடிஞ்சு நேரடியா வீட்டுக்கு தானே வரேன்னு சொன்ன? எதுக்கு துணிக்கடைக்கு போனே?" - பார்வதி

"அதையெல்லாம் அப்பறம் சொல்றேன்.. நீங்க ரெண்டும் பேரும் டிரஸ் eh பாருங்க நான் போய் உடை மாற்றிவிட்டு வருகிறேன்.." - ரிஷி

அவன் உள்ளே போக பையில் இருந்த டிரஸ் எல்லாம் வெளியே எடுத்து பார்த்த பார்வதி பாட்டி அதிர்ச்சி அடைந்தார்கள்.. காரணம் ரெண்டு முன்று சுடிதார் செட் எல்லாம் இருந்தது..

"ஒருவேளை இந்தி படத்தை வர்ற மாதிரி பசங்க போடும் சர்வணி போல.. என்ன அளவு தான் சின்னதா இருக்கு.. எனக்கு அளவு போதாது பார்வதி..!!" - சதாசிவம்

பார்வதி பாட்டிக்கு குழப்பம் நமக்கும் ரிஷி ஏதோ டிரஸ் வாங்கிட்டு வந்தேன் சொன்னான் அது எங்கே என திரும்பி உள்ளே பார்க்க.. சந்தன காலர் பெண்கள் போடும் உள்ளாடை எடுக்க.. என்னடா இது இதை ஏன் வாங்கிட்டு வந்தான் என பார்வதி பாட்டி யோசிக்க.. அப்போ உடை மாற்றிவிட்டு வந்த ரிஷி பார்த்து..

"ரிஷி கண்ணா.. இந்த சந்தன காலர்.." - பார்வதி

அவங்க முழுசா சொல்லி முடிப்பதற்குள் ரிஷியே..

"ஆமாம் அம்மா அது உங்களுக்கு தான்.. பார்க்க நல்ல இருந்தது. அதை பார்க்கும் போது உங்களுக்கே செய்தது போல இருந்தது.. நாளைக்கு காலை அந்த போட்டு கொண்டு என் முன்னால் நீங்க வாங்க அதை நான் பார்க்கணும்.." - ரிஷி

அவனின் தாத்தா பாட்டிக்கு ஒரே குழப்பம்.. இது என்ன விபரீத ஆசை... இது என்ன வெளிநாட? பிகினி டிரஸ் என பேரன் நினைத்து விட்டேனா? அதுவும் 60 வயசு பெண்மணிக்கு பரிசா தரும் உடையா இது என குழப்பத்தில் அதை எல்லாம் அவன் முன்னாடி போய் காட்டி கேட்க..

அதை போய் பார்த்தவன்..

"ஐயோ இது அந்த எலிக்கு வாங்கிய டிரஸ் ஆச்சே.. இது எப்படி இங்கே..?" - ரிஷி

"எலிக்கு வாங்கியதா? ரிஷி இது போய் எப்படிடா எலிக்கு பத்தும் பெருச்சாளி தெரியும் ஒருவேளை ஏதாவது ராட்சச எலியா இருக்குமோ?" - சதாசிவம்

"ஐயோ அவள் உண்மையில் எலி இல்ல.. அவள் முழு பெயர் அஞ்சலி.. நான் செல்லமா எலி என கூப்பிடுவேன்.." - ரிஷி

"செல்லமா வா? பொறு பொறு.. யார் அந்த பொண்ணு அவளை உனக்கு எத்தனை நாளாக தெரியும்..?" - பார்வதி

"இன்னிக்கு தான் பார்த்தேன்.. என் கிளாஸ் தான் செம்ம வாலு.. குழந்தை மனசு.. குரல் கூட கிச்சு குரல் தான்.. கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.." - ரிஷி

தன் பேரன் கனவு உலகத்தில் இருப்பது தெரிய அதனை பார்த்து சதாசிவம் மற்றும் பார்வதி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு..

"காதல் கிறுக்கு ஆரம்பிச்சு போச்சு..😝😝"

என இருவரும் hifi கொடுத்து கொண்டார்கள்..🤣

அர்ஜுன் மேல் பிங்கி காதலோடு இருக்கே..
ராம் மேல் தர்ஷினி ஈர்ப்பில் இருக்கே..
அஞ்சலி மேல் கார்த்தி மற்றும் ரிஷி காதலா? வேற என்ன என்று புரியாமல் முழிக்க..

இவர்களின் என்னை கண்டு கொள்வார்களா? அர்ஜுன், ராம் மற்றும் அஞ்சலி..

ரிஷி தேடும் வெண்ணிலா பெண் கூட எங்கே இருக்களோ? இல்ல இதுவரை பார்த்த பெண்களில் அவளும் உள்ளலோ?
 
#10
வாராயோ வெண்ணிலாவே...!!
அத்தியாயம் 7


திங்கட்கிழமை மதியம்..

அர்ஜுன்னுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல பிங்கிக்கு பாதுகாப்பு தர பேர்வழி என காலை பத்து மணிக்கே அவள் வீடு வந்து அவள் கூடவே காலேஜூக்கு கிளம்பிவிட்டான்.

அவனின் அக்கறையை பார்த்து ஒரு பக்கம் பிங்கி நெகிழ்ந்தாலும் மறுபக்கம் தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஏன்டா இப்படி பண்ற நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு காலேஜ் கிளம்பி வர தெரியாது? கூடவே வந்துகிட்டு இருக்கே.."

"நீ சொன்னாலும் சொல்லலாட்டியும் உனக்கு குழந்தை மனசு தாண்டி.. ஊர் எல்லாம் கெட்டுப்போய் கிடக்கு நா எப்படி உன் தனியா விடுவேன்.. அதோட நம்ம வேற ஒரே காலேஜ் ஒரே கிளாஸ் உனக்கு ஏதாவது என்றால் உங்க அம்மா அப்பா என்னே தான் கேட்பாங்க..??"

"சரி சரி.. ரொம்ப ஃபீல் பண்ணாதே. இந்த ஸ்கூட்டி கீ நீயே வண்டியே எடு.."

அவளின் பிங்க் காலர் ஸ்கூட்டி pept எடுத்தவன் மிதமான வேகத்தில் ஒட்ட ஆரம்பித்தான்.

நம்ம அர்ஜூனுக்கு ஒரு பிரச்சினை அவன் இடுப்பில் யார் கை வைத்தாலும் அவன் துள்ளி குதிப்பான். அது தெரிந்து கொண்டே அவன் வண்டி ஒட்டும் போது வேண்டுமென்றே அவள் அவனின் இடுப்பில் கை வைத்தாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு கட்டத்தில் அவளிடமே வண்டி கொடுத்து ஒட்ட சொல்லி விட்டான்.

பின் அவனும் அவளின் இடுப்பை பிடித்து கொள்வான் அவள் எதிர்பார்க்க அவனோ வண்டியின் பின்பக்க கம்பியை பிடித்தவாறு அமர்ந்துகொண்டான்.

' சரியான சாமியார்..🤦. இவனுக்கு எப்படி தான் என் காதலை சொல்ல போறேன் தெரியலே.. நான் சொல்லி அவனுக்கு காதல் வருவது கேவலத்திலும் கேவலம். அவனுக்கே காதல் வரணும். ஹ்ம்ம்.. நம்ம புது ப்ரெண்ட் தர்ஷினி கிட்ட ஐடியா கேட்போம். அதன் சரி..😋' - பிங்கி மனதில்

அவள் வண்டி ஒட்ட பின்னாடி உட்கார்ந்தவாரே வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான் நம்ம அர்ஜுன்.

*******************

ரிஷி பதிரெண்டு மணிக்கே காலேஜ் வந்து விட்டான். அவனுக்கு எங்கே போனாலும் லைப்ரரிக்கு போகணும். அவன் படிக்கிறனோ? இல்லையோ? தன்னை சுற்றி ஏதாவது புத்தகம் இருக்க வேண்டும் என நினைப்பவன்.

அஞ்சலி கூட அங்கே வந்து இருந்தாள். காலேஜ் லைப்ரரிலயே இந்த செமஸ்டர்கான புக்ஸ் எடுத்து விட்டாள் தனி புக்ஸ் வாங்கும் பணம் சேமிக்கலாம் என்கிற எண்ணம் தான்.

படிப்பு செலவு போக மாசத்துக்கு ஐந்து ஆயிரம் தான் அவளுக்கு அவளின் கார்டியன் மூலம் வழங்கப்படுவது. அவளுக்கு அவளின் கார்டியன் யார் என்பது கூட தெரியாது..

அந்த லைப்ரரி ல அவளை பார்த்த ரிஷி குரலை குறைத்து..

"ஓய் எலி உனக்கு கூட என்னை மாதிரி புக்ஸ் எல்லாம் பிடிக்குமா?"

"ஹே.. ஹாய்.. என்னடா நீயும் வந்து இருக்கியா.. ஓகே .. ஓகே.. என்ன கேட்ட புக்ஸ் பிடிக்குமா? ஹ்ம்ம்.. பிடிக்கும் பிடிக்கும். நான் இங்க வந்தது நம்ம செமஸ்டர் புக்ஸ் எல்லாம் ஒரு காபி எடுக்க தான். புது புக்ஸ் வாங்க காசு இல்ல. அப்படியே வாங்கினாலும் ஆறு மாசத்தில் இன்னொரு செமஸ்டர் அதற்கான புக்ஸ். என் ஹாஸ்டல் ரூம் ல நான் இருக்கவே இடம் போதவே இல்ல. இதில் புக்ஸ் எல்லாம் வைத்தேன் நான் வாசலில் போய் படுக்க வேண்டியது தான்."

"ஹ்ம்ம்.. அது சரி. நம்ம காலேஜ் லைப்ரரி ருல்ஸ் தெரியும் ல.. ஒருத்தர் அதிகபட்சம் முன்று புக்ஸ் எடுக்கலாம் அதுவும் முதல் 21 நாட்களுக்கு தான். அப்பறம் ரெண்டு தடவை renewal பண்ணலாம். அப்பறம் ஒரு செமஸ்டர் ல ஐந்து பேபர்ஸ்.. ஒவ்வொரு பேப்பர் syllabus பொறுத்து அதனை புக்ஸ் தேவைப்படும். எல்லாமே ஒரே புக் ல இருக்காது. ஸ்கூல் ல மட்டும் தான் நம்ம எல்லாத்தையும் ஒரே இடத்தில் படிப்போம். காலேஜ் ல நாலு ஐந்து புக்ஸ் எல்லாம் refer பண்ணி அதையும் மீறி கிடைக்கல என்றால் நெட் ல பார்த்து படிக்கணும்.."

"உன் வாயில் பச்சை மிளகாய் வைக்க.. நானே இங்க வந்து சேர்ந்ததில் இருந்து எப்படி படிக்க போறேன் என்கிற பயத்தில் இருக்கேன்.. நீ வேற.. போடா.. நான் நாளைக்கே tc வாங்கிட்டு எங்க கும்பகோணம் ஆசிரமத்துக்கு போறேன்.."

"ஏய் லூசு மாதிரி பேசாதே.. சரியா? உன்னை மாதிரி எல்லாரும் இதே பிரச்சினை தான். CBSE la படிச்சுட்டு வந்த சிலருக்கு இது பெரிய மேட்டர் eh இல்ல என்னை மாதிரி. நான் இருக்கேன் உனக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டுமென்றால் கேளு ஹெல்ப் பண்றேன். திரும்பி ஊருக்கு போறேன்.. காலேஜ் விட்டு போறேன் என்றெல்லாம் சொல்லாத!!"

"ஹ்ம்ம்.. சரி."

"சாப்பிட்டியா?"

"இன்னும் இல்ல.. நான் நைட் சாப்பிட்டிக்கிறேன்..?"

"ஏன் அப்படி?"

"சாப்பிட்டு செலவே ஓவர் ஆ போகுது.. அதோடு நான் தங்கி இருக்கிற women's hostel la வார நாட்களில் காலை மற்றும் இரவு மட்டுமே சாப்பாடு. மற்றப்படி வார கடைசியில் முன்று வேளை சாப்பாடு இருக்கும். விடு எனக்கு பிரச்சினை இல்ல.."

"ஆடி விழும்.. மரியாதையாக என் கூட வா.."

அவளுக்கு சாம்பார் சாதம் வாங்கி தந்தவன் தனக்கும் ஒன்று வாங்கி கொண்டான்..

ரிஷி கோபத்தில் இருப்பதை பார்த்து அஞ்சலி பேசாமல் சாப்பிட்டாள்.

சாப்பிட்டவுடன்.. வெளியே வந்தவர்கள்..

"அஞ்சலி அன்னிக்கு உன்னோட டிரஸ் எல்லாம் தெரியாமல் என் கூடவே வந்து விட்டது. அதை என் கார் ல வச்சு இருக்கேன். காலேஜ் முடிந்தவுடன் அன்னிக்கு மாதிரி உன்னோட ஹாஸ்டல் ல வந்து தருகிறேன்."

"ஓகே டா நோ பிராப்ளம்.. உன்னோட டிரஸ் கூட இப்போ என்னோட ஹாஸ்டல் ல தான் இருக்கு."

"ஓகே வா கிளாஸ் போவோம்.."

ரிஷிக்கு ஒன்றுமே புரியவில்லை நம்ம ஏன் இவள் மேல் ரொம்ப உரிமை எடுத்து பேசுறோம்..? அவள் சாப்பிட்டால் என்ன? சாப்பிடாட்டி என்ன? இது நட்பை தாண்டிய ஏதாவது ஒன்றா?, என பல குழப்பங்கள் அவனுக்குள்.

இவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து வருவதை இரு கண்கள் கோபத்தோடு பார்த்து இருந்தது. அந்த கண்களின் சொந்தக்காரி தர்ஷினி தான்.

அன்று இரவே அவளும் அவள் அண்ணன் கார்த்தியும் வீட்டுக்கு போன உடனே அஞ்சலி மேல் கார்த்திக்கு இருந்த எண்ணத்தை அவள் அறிந்து கொண்டாள். அதே நேரத்தில் ரிஷி அன்று அஞ்சலி மேல் காபி கொட்டியதை பார்த்து துடித்த துடிப்பையும் பார்த்தவள் அவன் மேல் கோபத்தை வளர்த்தாள்.

தன் அண்ணனுக்கு பிடித்த பெண்ணோடு ஒருவன் சுற்றுவதை அவளால் பார்க்க முடியவில்லை.

என்னமோ தெரியல அவளுக்கு ராம் மீது மட்டும் சந்தேகம் வரவே இல்ல. அவள் கண்ணுக்கு அவன் ஏதோ சின்ன குழந்தை மாதிரியே ஒரு எண்ணம்.

*****************

ஸ்கூட்டி ஏ ஸ்டூடண்ட் பார்க்கிங் ல விட்டு வந்த பிங்கி அர்ஜுன் ஏதோ ஒரு பொண்ணு கூட பேசிக்கிட்டு இருப்பதை பார்த்தவள்.

"வெங்கி.. உஸ் திஸ் (whose this)?" - பிங்கி

"இவ.. இவள்.. பெயர்.." - அர்ஜுன்

அவன் தயங்குவது பார்த்த அந்த பார்த்தவள்..

"ஹாய்.. மை நேம் இஸ் அனிதா.." - அனிதா

அவ்வளவு தான் அர்ஜுனை எரித்து விடுவது போல பிங்கி பார்த்தாள். ஆனாலும் அந்த அனிதா கிட்ட அதனை காட்டாமல்..

"ஓ.. மை நேம் இஸ் பிங்கி ஜெயின்.." - பிங்கி

"யூவர் நெட்டிவ் ராஜஸ்தான் ரைட்..?" - அனிதா

"எனக்கு தமிழ் நல்ல தெரியும்.. நீ சொன்னது சரி தான்.. 50% ரைட்.. எங்க தாத்தா பாட்டி வரை அங்கே தான். அப்பறம் எங்க அம்மா வைஷ்ணவி தமிழ் தான் கும்பகோண பொண்ணு, அப்பா விஷால் ஜெயின்.. ராஜஸ்தான். இப்போ இங்க சென்னை ல இருக்கோம்.." - பிங்கி

"ஹ்ம்ம்.. நார்த் இந்தியன் மற்றும் சவுத் இந்தியன் கலவை தான் போ.." - அனிதா

"சரி ஓகே.." - பிங்கி

"உனக்கும் அர்ஜுனுக்கும் என்ன சம்மந்தம்?" - அனிதா

பிங்கி பதில் சொல்வதற்குள் அர்ஜுன் பதில் சொன்னான்..

"பிங்கி என்னோட உயிர் தோழி.. சின்ன வயதில் இருந்து அங்க ஒன்னுகுள் ஒண்ணு.." - அர்ஜுன்

"ஹ்ம்ம்.. பிங்கி நான் அவனுக்கு யார் என்று தெரியுமா?" - அனிதா

"இல்ல நீயே சொல்லு?" - பிங்கி

"ஐம் ஹிஸ் லவ்வர்.. ரெண்டு வருஷமா அவனை லவ் பண்றேன். அவனுக்காகவே இந்த காலேஜ் ல வந்து சேர்ந்து இருக்கேன். அர்ஜுன் யூ ஸ்டீல் லவ் மீ ரைட் ? (நீ என்னை இன்னும் காதலிக்கிற சரியா?)" - அனிதா

"என்னது? அனிதா பிளீஸ் அன்னிக்கு நான் தெரியாமல் சொன்னது அதை மனசில் வச்சுக்காதே.." - அர்ஜுன்

"இல்ல எனக்கு தெரியும். அந்த ஸ்கூல் விட்டு நான் போனவுடன் ரெண்டு வருஷமா நீ என்னை தேடிக்கிட்டு இருந்தது தெரியும். இல்லனு மட்டும் சொல்லாதே பிளீஸ்.." - அனிதா

"ஐயோ.. நீ தப்பா புரிந்து இருக்கே.. நான் பண்ணதுக்கு சாரி சொல்ல தான் தேடினேன்.. பிங்கி நீயே சொல்லு டி.. பிங்கி... பிங்கி.." - அர்ஜுன்

அவன் கூப்பிட கூப்பிட அவள் கோபத்தோடு சென்று விட்டாள்.

"அவள் போனால் போகட்டும்.. இங்க பார்? பாருடா.. நான் கொஞ்சம் மோசமான பொண்ணு.. எனக்கு தெரியும் உன்னை தவிர உன் மனதில் வரும் இல்ல.. இனி நான் உன் கிளாஸ் தானே அடிக்கடி மீட் பண்ண தானே போறோம்.. பார்த்துக்கலாம்..😉😉" - அனிதா

சொன்னவள் தன் முடியை ஸ்டைல் ல வாரி கொண்டே போக..

இங்கே அர்ஜுன்.. இங்கே என்னடா நடக்குது?.. என கற்பனையில் தலையில் அடித்து கொண்டான்.

அர்ஜுன் காதலி இனி பிங்கியா? அனிதாவா?

***************

அர்ஜுனை விடு ஓடி வந்தவள்.. பெண்களின் ரெஸ்ட் ரூம் ல இருக்கும் கண்ணாடி முன் கண்ணீர் விடு நின்றாள்.

அப்போ அங்கே வந்த தர்ஷினி அவளின் தோளை தொட்டு..

"பிங்கி.. என்னடி ஆச்சு.. ஏன் அழுகிற?"

"எல்லாம் போச்சு தர்ஷு.. வெங்கியோட பழைய crush நம்ம இடத்துக்கே வந்து அவனை என் முன்னாலேயே அவனை தான் காதலிக்கிறேன் சொல்லிட்டாள். இனி அவன் எனக்கு இல்ல.." - பிங்கி

"கூல்.. கூல்.. உன் கதையே எனக்கு புரியல டி.. யார் அந்த பொண்ணு? எப்படி இங்கே வந்தாள்? அவள் லவ் சொன்னாள் சொல்லட்டும். அதற்கு நீ ஏன் டி பயந்து சாவுற? அவள் என்ன அவ்வளவு பெரிய அழகியா?" - தர்ஷினி

"என்னை விட அழகி தான். என்னை பார் ரொம்ப பெருத்து போய் இருக்கேன். அவள் உயரத்துக்கு ஏற்ற இடை.. நான் ரொம்ப வெள்ளை ஆனால் அவள் ஆளுக்கு ஏற்ற காலர் மற்றும் அதற்கு ஏற்ற உடை. வெங்கி மற்றும் என்னை கிட்ட கிட்ட வைத்து பார்த்தால் அவனை விட நான் கொஞ்சம் உயரம் ஆனால் அவள் அவனுக்கு ஏற்ற உயரத்தில் இருக்கிறாள். மொத்தத்தில் என்னை விட எல்லா விதத்திலும் அவள் தான் அவனுக்கு சரியாக இருக்கிறாள்." - பிங்கி

"ஹ்ம்ம்.. அவள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அதை பற்றி நமக்கு என்ன கவலை? உன் ஆளுக்கு யாரை பிடித்து இருக்கு என்பது தானே கேள்வி?" - தர்ஷினி

"நட்பு அளவுக்கு தான் நான் அவனுக்கு க்ளோஸ்.. மற்றப்படி காதல் மற்றும் ஈர்ப்பு எல்லாம் அவனுக்கு அவள் மேல் தான். இனி தினம் தினம் என் கண் முன்னாலேயே என் வெங்கியை அவள் கொஞ்சுவள். அதற்கு நான் பக்கத்தில் இருந்து குடை பிடிக்கணுமா?" - பிங்கி

"நீ இப்படி பேசிக்கிட்டு இரு.. அங்கே அவள் நினைத்து எல்லாம் சாதிக்க போகிறாள்." - தர்ஷினி

அப்பறம் எப்படியோ சிலபல ஐஸ் எல்லாம் வைத்து அவளை அலைந்து கொண்டு கிளாஸ் கிட்ட போனாள்.

கிளாஸ் வெளியில் ரிஷி மற்றும் அஞ்சலி பேசி கொண்டு இருக்கே.. அதனை பார்த்து முறைத்தவாறு தர்ஷினி கிளாஸ் உள்ளே பிங்கி கூட சென்றாள்.

அங்கே அனிதா கூட hifi கொடுத்தவாறே பேசி கொண்டு இருந்த ராமை பார்த்து தர்ஷினி முறைக்க..

பிங்கி அவளிடம்..

"நான் சொன்னேன் ல அவள் தான் அந்த அனிதா.. என் காதலை என்னிடம் இருந்து பிரிக்க வந்தவள்." - பிங்கி

"கவலை விடு.. இனி அவள் சாவு என் கையில்..😡😡" - தர்ஷினி

அர்ஜுன் பாவமா?
பிங்கி பாவமா?
தர்ஷினி பாவமா?
அனிதா பாவமா?

யார் தான் பாவம்?
 
#11
வாராயோ வெண்ணிலாவே...!! 8
அத்தியாயம் 8


அனிதவோடு சிரித்து பேசிக்கொண்டு இருந்த ராமிடம் போனவள்..

"என்ன நடக்குது டா இங்க?" - தர்ஷினி

"ஒண்ணும் நடக்கல.. இவள் பேர் அனிதா நம்ம கிளாஸ் புது அட்மிஷன். அதன் சும்மா பேசிக்கிட்டு இருக்கேன்." - ராம்

"பேசுற சரி அதுக்கு எல்லா பல்லையும் காட்டியா பேசுவே..?😡 இதில் hifi வேற சீ..🤦" - தர்ஷினி

"ஏ கூல் கூல்.. இப்போ என்ன நடந்து போச்சு. ஒரே கிளாஸ் ஒண்ணா படிக்க போகிறோம் சிரித்து பேசுவதில் என்ன இருக்கு?", ராம் அப்பாவியாக கேட்க அதை பற்றி தர்ஷினி எப்படி பதில் சொல்வாள்.

அவளுக்கே அவளின் மனசு புரிய புதிர் அல்லவா? பெருக்கேற்ற படி அவன் ராமனாக இருக்காமல் கிருஷ்ணா போல எல்லார் பெண்களுடனும் அவன் பேசுவதை பார்த்து இவளுக்கு தான் வயிறு எரியுது.

"உன் கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. அர்ஜுன் எங்க? அவன் கிட்ட தன் நம்ம கிளாஸ் பசங்க பொண்ணுகளின் எல்லா விபரமும் இருக்கு." - தர்ஷினி

"எனக்கு என்ன தெரியும்? அவன் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது இல்ல. உன் கூட தானே அன்னிக்கு ஃபுல்லா சுற்றி கொண்டு இருந்தான்." - ராம்

ராம் சொன்ன பதில் கேட்டு அனிதா..

"ராம்.. யார் இவள்? அர்ஜுன் கூட இவள் ஏன் சுற்றனும்?" - அனிதா

"இவள் பெயர் தர்ஷினி. அர்ஜுன் மற்றும் தர்ஷினி ரெண்டு பேரையும் தான் கிளாஸ் லீடர் சொல்லி நம்ம கிளாஸ் in-charge appoint பண்ணி இருக்காங்க. ரெண்டு நாள் முன்னாடி இவங்க ரெண்டு பேர் கிட்டயும் துர்காதேவி மேடம் ஸ்டூடண்ட் details எல்லாம் கலெக்ட் பண்ண சொல்லி இருந்தாங்க. அதை பற்றி தான் கேட்கிறாள் போல. அதோ அவனே வந்துட்டான்.. அடேய் அர்ஜுன் உன்னை இந்த தர்ஷினி பொண்ணு கேட்டு கிட்டு இருக்கு பார்.." - ராம்

உள்ளே வந்த அர்ஜுன் ராம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் பிங்க ஏ பாவமாக பார்த்த மாதிரியே நிற்க.. ராம் அவனை உழிக்கி கேட்ட கேள்வியை திரும்பி கேட்டான். பின் தர்ஷினி கிட்ட அந்த நோட் கொடுத்தவன்..

"தர்ஷினி எதில் எல்லாரோட bio data வும் இருக்கு. இந்த பென் டிரைவ் ல மைக்ரோசாப்ட் எக்ஸெல் (Microsoft excel) file la type பண்ணி இருக்கேன் இதையும் போய் கொடுப்போம். அனிதா பிளீஸ் உன்னோட bio data கூட இந்த பேப்பர் ல ஃபில் பண்ணி விடு." - அர்ஜுன்

உலகமே அழிந்தாலும் நம்ம கடமை தான் முக்கியம் என்பது போல அவன் அனிதாவின் தகவல் எல்லாம் வாங்கி தர்ஷினி கூட வெளியே போனான்.

அதனை அனிதாவின் கண்கள் கடும் கோபத்தோடு பார்த்தது.

' அடேய் இங்க உனக்காகவே வீட்டில் எல்லாம் சண்டை போட்டு இந்த காலேஜூக்கு வந்தால்.. நீ எவளோ ஒருத்தி கூட போற.. தர்ஷினி உன் சாவு என் கையில் தாண்டி..😤😤' - அனிதா மனதில்

ரொம்ப நேரமாக வாசலே பார்த்து கொண்டு இருந்த அனிதா முன் சொடுக்கு போட்டு அழைத்த ராம்..

"என்ன அனி.. கனவா..? யாரை நினைத்து இப்படி? கண்டிப்பா நான் இல்லனு தெரியும்..😝" - ராம்

"சீ பே.." - அனிதா

அப்பறம் அன்று நாள் முழுதும் தர்ஷினி ராமை முறைக்க, ராம் அனிதாவை site அடிக்க, அனிதா அர்ஜுனை காதல் பார்வை பார்க்க, அர்ஜுன் பிங்கி ஏ பார்த்த மாதிரியே பேச சொல்லி கேட்க, பிங்கி இல்லாத கை நகத்தை கடித்து கொண்டு தீவிர யோசனையில் இருக்கே.. இதுக்கு எதுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி ரிஷி மற்றும் அனிதா அன்று கிளாஸ் ல நடத்திய பாடங்கள் எல்லாம் நோட்ஸ் எழுதி கொண்டு இருந்தார்கள்.

நமக்கு என்ன ஆனாலும் படிப்பு தானே முக்கியம்.

காதல் படிக்கும் நேரத்தை விட்டு செய்து கொள்ளலாம். ஆனால் படிப்பை அப்போ அப்போ அந்த அந்த நேரத்தில் கவனம் சிதறாமல் செய்ய வேண்டுமே..😣😣

****************

அன்று காலேஜ் முடிந்த பிறகு கடைசிவரை அர்ஜுனிடம் பேசாமல் தன் வண்டியை எடுத்து கொண்டு பிங்கி சென்று விட்டாள்.

அவன் ஃபோன் பண்ணி அழைத்து கூட அவள் எடுக்க வில்லை. வேற வழி தெரியாதவன் share auto பிடித்து தி நகர் நோக்கி சென்றான். அவனுக்கு அவள் பாத்திரமாக வீட்டுக்கு போய் சேர்ந்தல என பார்க்கணும்.

ரிஷி கார் கொண்டு வந்த காரணத்தால் ராம் மற்றும் அஞ்சலியை அழைத்து கொண்டு அவளின் ஹாஸ்டல் பக்கம் வண்டியை நிறுத்தினான்.

"இந்த எலி உன்னோட டிரஸ் எல்லாம்.. சீக்கிரம் போய் என்னோட டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வா.." - ரிஷி

"ஓகே ஃபைவ் மினிட்ஸ்.." - அஞ்சலி

அவள் டிரஸ் எடுக்க போன நேரத்தில் இங்கே..

"ராம்.. உனக்கும் தர்ஷினிக்கும் ஏதாவது பிரச்சனையா? மதியம் இருந்து பார்க்கிறேன் அவள் உன்னை கொல்ற அளவுக்கு முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்."

"தெரியல மச்சி.. நானும் அதன் அப்போ அப்போ யோசித்து பார்க்கிறேன். சும்மா ரெண்டு முன்று வார்த்தை அந்த அனிதா பொண்ணு கூட பேசிக்கிட்டு இருந்தேன். அதை பார்த்திலிருந்து தர்ஷினி கோபமா இருக்கு. சைட் அடிக்கிறது கடல போடுறது அவ்வளவு பெரிய தப்பா?"

"அதன் ஏன் கேட்கிறேன்..? நீ யார் கூட பேசினாள் அவளுக்கு என்னடா வந்தது?"

"யோசிப்போம்.. எப்படியோ நம்ம கொள்கை அனிதா இல்லனா தர்ஷினி...😝😝"

"அட சீ.. தூ.. இதை சொல்ல கேவலமா இல்ல.."

"இல்லயே.. காலேஜ் லைஃப் என்ஜாய் பண்ணனும் மச்சி. அப்பறம் இதையெல்லாம் மிஸ் பண்ணிட்டோம் ஃபீல் பண்ணவே கூடாது. கண்ணுக்கு குளிர்ச்சியாக நாலு ஐந்து பொண்ணை பார்த்தோமா.. சைட் அடித்தோமா.. அப்படியே யாருக்குமே பிரச்சினை இல்லாத மாதிரி போய்கிட்டே இருக்கணும்.😂😂"

"ராம் நான் ஒன்று கேட்பேன் தப்பா நினைக்காதே? சரியா?"

"கேளு மச்சி.."

"அஞ்சலியை கூட நீ.. மற்ற பொண்ணுங்க மாதிரி தான்.."

"டேய்.. அவள் எனக்கு சிஸ்டர் மாதிரி டா.. என்னை போல தான் அவள். எங்க அம்மா அம்மா சின்ன வயசிலேயே என்னை விடு போய்ட்டாங்க. அப்பறம் மாமாவின் துணையோடு தான் வளர்ந்தேன்.. அது பெரிய கஷ்டமாக இருந்தது இல்லடா.. ஆனால் என் அழகி.. அஞ்சலி.. பிறந்ததில் இருந்து அப்பா அம்மா என்று யாரையும் பார்க்காமல் ஏதோ ஒரு இல்லத்தில் வளர்ந்த பொண்ணு. அப்போ கூட எல்லார் மாதிரி சிரித்த முகத்தோடு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்கிறாள் பார். அது அது என் அழகி... ஹ்ம்ம் கண்டிப்பா அவளின் மனசு ஏற்றவன் தான் அவளுக்கு ஜோடியா வரணும்.."

' அது நானாக ஏன் இருக்க கூடாது..' என அவன் மனதில் தோன்றியது. அதை ராம் கிட்ட கூட சொன்னான்.

"ராம் ஒருவேளை அவளை எனக்கு பிடித்து இருக்கு.. அவளை காதலிக்கிறேன் சொன்னால் நீ என்னடா சொல்வே?"

"நம்ப மாட்டேன் சொல்வேன்.."

"ஏன்டா?"

"இங்க பார் பார்த்த ஒரே நாளில் காதல் எல்லாம் வராது. என் அனுபவத்தில் சொல்றேன் கேளு.. இதுவரை நான் பார்த்து காதல் நினைத்து கிட்டதட்ட ஐம்பது பொண்ணுங்க கிட்ட லவ் சொல்லி இருப்பேன். அப்பறம் போக போக தான் தெரிந்தது எல்லாம் ஈர்ப்பு தான் என்பது. அது போல தான் உனக்கும்... அஞ்சலி வந்த பரிதாபம் அல்லது அவளின் குழந்தைத்தனத்தை பிடித்து போய் லவ்.. காதல் மாதிரி எல்லாம் யோசிக்கிற போல.. இன்னும் முன்று வருசம் காலேஜ் லைஃப் இருக்குடா.. போக போக பார்த்துக்கலாம்."

ரிஷி எதுவும் பேசாமல் கண்ணை மூடி இருக்கே அதனை கண்ட ராம்..

"ரிஷி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? கோபமா?"

"இல்லடா இல்ல.. நீ சொன்னது எல்லாம் சரி தான். இது ஒரு விதமான ஈர்ப்பு தான் போல.. என்னனு தெரியல அவளை பார்க்கும் போது இறந்து போன எங்க அப்பாவை பார்த்த மாதிரியே இருக்கு."

"அப்பாவா? பசங்க எப்போவும் பொண்ணுங்களை அவங்க அம்மா கூட தானே சம்பந்தப்படுத்தி சொல்வாங்க?"

"ஹ்ம்ம்.. எனக்கு எப்படி இல்லடா.. எனக்கு அம்மாவை விட அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும். அந்த அளவுக்கு அவர் அன்பை பொழிந்தார்.. அதற்கு அம்மாவை பிடிக்காது இல்ல.. ஏதோ ஒரு விதத்தில் எங்க அப்பா அம்மாவை விட எனக்கு க்ளோஸ் அது ஏன் என்பது கூட என் நினைவில் இல்ல.."

அஞ்சலி திரும்பி அங்கே வர அவர்களின் பேச்சு அதோடு அங்கேயே தடைப்பட்டு நின்றது..

"ரிஷி சாரி டா உன்னோட ஷர்ட் நான் பயன்படுத்திற மாதிரி ஆச்சு.. அது புது டிரஸ் தான் இருக்கே என்கிற எண்ணத்தில் போட்டு இருந்த டிரஸ் எல்லாம் நனைத்து வைத்து கவர் பார்க்கும் போது தான் உன்னோடது தான் என்கிட்ட இருந்தது தெரிய வந்தது. அதன் வேற வழி இல்லாமல்.."

"அதுக்கு ஏன் என் டிரஸ் எடுத்தாய்.. எங்க பாட்டியின் புடவை போட்டு இருக்கலாம் ல.."

"ஹி.. ஹி.. எனக்கு புடவை கட்ட தெரியாது..😋"

"சரி சரி விடு.. பிரச்சினை இல்ல.. சரி நாளைக்கு பார்க்கலாம்.."

ராம் மற்றும் ரிஷி கிளம்பி விட்டார்கள்.

போகும் வழியில் ராமை வடபழனியில் ரிஷி விட..

"அப்பறம் மச்சி நினைவு இருக்கட்டும்.. இப்போவே லவ்.. காதல் என முடிவு பண்ணாதே.. குறைந்தது ஒரு வருசம் வெயிட் பண்ணி பார்த்து அப்பறம் என்னனு பார்க்கலாம். இதில் அஞ்சலியின் வாழ்க்கை கூட இருக்கு. வயசு கோளாறு என்பதால் தான் இப்படி ஆச்சு என இருக்கவே கூடாது டா.."

"கண்டிப்பா ராம்.. என்னை நம்பு. உன் தங்கச்சி வாழ்க்கைக்கு என்னால் பிரச்சினையே வராது. ஐ வில் வெயிட்.."

வீட்டுக்கு போகும் வழி முழுதும் ராம் சொன்னதை மனசில் வைத்து பார்த்தவன் கொஞ்ச நாள் அஞ்சலி கூட நெருங்கி பழகுவதை தவிர்க்க நினைத்தான்.

அவனுக்கு புரியல அது அவ்வளவு சுலபம் இல்ல. இனி சிறு நேரத்துக்கு முன் அவள் கொடுத்த உடையே அவனை அவள் பைத்தியம் ஆக போகிறது.

அதை அவன் இனி அணியும் ஒவ்வொரு தடவையும் அவளையே உடை போல அவன் உடலை சுற்றியது போல உணர போகிறான்.

****************

வீட்டுக்கு போய் சேர்ந்தவுடன் தன் பாத்திரமாக வந்து சேர்ந்த விஷயத்தை பிங்கி அர்ஜுனுக்கு மெசேஜ் பண்ணி சொல்லிவிட்டாள்.

அதை தெரியாத அவளின் அம்மா..

"பிரியா.. இது ரொம்ப தப்பு மா.. வெங்கட் அடிக்கடி ஃபோன் பண்ணிக்கிட்டே இருந்தான். என்ன சண்டையாக இருந்தாலும் இப்படி அவனை கஷ்டப்படுத்த கூடாது. பாவம் குழந்தை ஃபோன்லயே அழுதான் தெரியுமா?"

வைஷ்ணவி - கும்பகோணத்துக்கு பிராமணர் பெண். வட இந்தியர் விஷால் ஜெயின் மேல் கொண்டு வீட்டின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தவர். தன் கணவனின் குடும்ப பெருமைக்காக தன் ஒரே பெண்ணுக்கு பிங்கி ஜெயின் என வட இந்திய பெயர் வைத்தவர் அவர் மட்டும் வீட்டுக்குள் அவள் பிரியா என தனக்கு பிடித்த பேரில் தான் அழைப்பார்.

நம்ம அர்ஜுன் பிங்கிக்கு வெங்கி என்றால் அவளின் அம்மாவுக்கு வெங்கட்.

அவனை வெங்கி என கூப்பிடும் உரிமை அவளை தவிர யாருக்கும் இல்ல என சண்டை போடுவாள்.

சரி இவங்க பற்றி என்ன வந்தது.. அவன் ஃபோன் ல அழுதான் என்பது தெரிந்து தன் கோபத்தை விடு.. இல்ல சுத்தமாக மறந்து அவனுக்கு ஃபோன் செய்தாள்.

அதே நேரத்தில் தான் அர்ஜுன் அவள் ஃபிளாட் வாசலுக்கே வந்து விட்டான்.

"பிங்கி நான் கீழே தான் இருக்கேன்.. வா பிளீஸ்.." - அர்ஜுன்

"இதோ ஒரு நிமிசம்.."

கீழே வந்தவளை கட்டிகொண்டவன்..

"பிளீஸ் பிங்கி என் மேல் ஏதாவது கோபம் என்றால் அடி.. உதை.. வாங்கி கொள்கிறேன்.. இப்படி பேசாமல் மட்டும் இருக்காதே டி. செத்துடுவேன்.. யார் டி அவள்? யார்? அவளுக்காக என் கிட்ட கோபம் காட்டுற? உனக்கு தான் சத்தியம் பண்ணி இருக்கேன் ல.. இனி யாரையும் லவ் பண்ண மாட்டேன் சொன்னேன் ல.. அப்படி இருக்கும் போது அவள் இப்போ வந்து லவ் பண்றேன் சொன்னா நான் நாக்கை நிட்டிக்கிட்டு போய்விட மாட்டேன்.."

பிங்கி காதில் எங்கே அவன் சொன்னது கேட்டது அவன் அணைத்த அணைப்பில் தான் அவள் கனவு உலகில் டூயட் பாட போய்ட்டலே..

அது தெரியாமல் அவன் மீண்டும் தொடர்ந்தான்..

"இனி அவள் என் பக்கம் வந்தால் என்னை விடு நகராமல்.. இவன் என் வெங்கி கண்டிப்பா உன் காதலை இவன் ஏற்க மாட்டான் சொல்லு. நம்ம நட்பு உண்மை என்றால் நீ சொல்ற சரியா.. பாய் பாய்.. நாளைக்கே எப்போவும் இங்க வரேன் ஒண்ணவே காலேஜ் போவோம்.." - அர்ஜுன்

இவளோ கனவில் இருந்து கொண்டே கை ஆட்டி விடை கொடுத்தாள்.

பின் திரும்பியவள் கண்ணில் அவளின் அம்மா கை கட்டி கொண்டு பார்த்தார்கள்.

இவளும் கை கட்டிக்கொண்டு பார்த்தாள்.

இருவரும் சிறிது நேரம் அப்படியே பார்த்து விட்டு.. அவளின் அம்மாவே சிரித்து கொண்டே அந்த அமைதியை உடைத்து..

"பிரியா எப்போ அவன் கிட்ட உன் காதலை சொல்ல போகிறாய்..?"

"அவன் சொன்ன அடுத்த நொடி.."

"அவன் இன்னும் உன்னை தோழியாக நட்பாக தான் பார்க்கிறான். பின்ன எப்படி?"

"தெரியல.. ஒரு நாள் அவன் பார்வை மாறும் மா.. அப்போ பார்போம். இன்னும் எங்களுக்கு வயசு இருக்கு நாள் இருக்கு.. அதுவரை எங்க படிப்பில் கவனமாக இருப்போம்."

"அந்த நம்பிக்கையில் தான் உன் காதல் பற்றி தெரிந்தும்.. என் பொண்ணு காதலிப்பது ஒரு நல்ல பையன் என்ற காரணத்தால் ஒண்ணும் சொல்லமா இருக்கேன். ஒருவேளை கடைசி வரை அவனின் பார்வை மாறவில்லை என்கிற போது.."

"புரியுது மா.. நான் எதுவும் தப்பான முடிவுக்கு போக மாட்டேன். அது அவனையும் பாதிக்கும்.."

பின் வைஷ்ணவி தன் பெண்ணின் தோளில் கைபோட்டு வீட்டுக்கு சென்றார்கள்.

காதல் ஒரு கொடிய வலி தானே..??

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹

.
 
#12
வாராயோ வெண்ணிலாவே...!! 9
அத்தியாயம் 9


இரண்டு மாதங்கள் சில பல முறைப்புகள் உடனேயே சென்றது.

அனிதா என்னதான் பேச வந்தாலும் அர்ஜுன் அவளை கண்டு காணாமல் ஒதுங்கி சென்று கொண்டிருந்தான்.

அதையெல்லாம் அவன் கூடவே இருந்து பிங்கி அனிதாவின் முகத்துக்கு நேராகவே சிரித்து விட்டு செல்வாள்.

அப்படி தான் ஒருநாள் பொறுத்து பொறுத்து பார்த்தவள் பிங்கியே தனியாக அழைத்து சண்டை போட ஆரம்பித்துவிட்டாள்.

"என்ன நினைச்சுகிட்டு இருக்க.. அர்ஜுனும் என்னே பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒதுங்கி போவதும் நீ அதை பார்த்து சிரிப்பதும். அப்படி என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உனக்கு என்ன பாத்தா உனக்கு கோமாளி மாதிரியா தெரியுது?"

"முதலில் உன்னை பார்க்கும் போது அப்படி தெரியல ஆனா போக போக கன்ஃபார்மா இவள் ஒரு கோமாளி தான் என்று தெரிஞ்சு போச்சு..🤣🤣"

"அடியே வீங்கி போன பலூன் ரொம்ப பேசினே ஊசி வைத்து குத்தி வெடிக்க வைச்சுடுவேன். நீயே ஒரு நடமாடும் யானைக்குட்டி இது நீ என்ன கோமாளி சொல்லுவியா? முன்னபின்ன கண்ணாடியிலே உன்னை நீயே பார்த்து இருக்கியா? இல்லையா?"

"ஹ்ம்ம்.. பார்த்து இருக்கேன் பார்த்து இருக்கேன். உன்னை விட நான் நல்ல தான் இருக்கேன். என்ன நீ பட்டினி கிடந்து சைஸ் ஜீரோ முயற்சி பண்ற! எனக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட்டு சைஸ் செக்ஸி யா யார் பற்றியும் கவலைப்படாமல் இருக்கேன்.🤣"

"சைஸ் செக்ஸி நீ? அதற்கு அர்த்தம் ஏதாவது தெரியுமா? சாப்பிடுவது தவிர உனக்கு வேற என்ன தெரியும்? பிடிச்சது சாப்பிடுறேன் பிடிச்சது சாப்பிடுறேன் அப்படின்னு சொல்லிட்டு கிடைக்கிற எல்லாத்தையும் வாய்ல போட்டு அரைத்து விட்டு நீ எல்லாம் பேச வந்துட்டே 🤦"

"ஆமாம்.. அப்படி இருந்தும் என் வெங்கி என்னை தவிர யாரையும் முகம் கொடுத்து பேசல. நீ என்னதான் கலர் கலர் டிரஸ் போட்டு வந்தாலும் அவனுக்கு எப்பவும் புடிச்ச பொண்ணு நான் மட்டும்தான். உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டான்."

"என்னடி ரொம்ப பேசுற.. அவனுக்கு நீ ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட் அதற்கு மேல் உன்னை கிட்ட கூட சேர்க்க மாட்டான் அவன் மட்டும் நல்ல கிளாஸ் ல நம்ம காலேஜ் அதுக்கு மேல் எந்த பையனும் உன்னை சைட் அடிக்கிற அளவுக்கு கூட பார்க்க மாட்டாங்க. ஏன்னென்றால் நீ கொஞ்சம் கூட அழகே இல்லாத டம்மி பீஸ்.. இடுப்பு அளவே உனக்கு 40 தாண்டி போகுது இன்னும் போனால் எந்த கடையிலும் உனக்கு ரெடிமேட் டிரஸ் கூட கிடைக்காது."

சொன்னவள் நகர்ந்து போக.. இங்கே பிங்கி தான் அவள் சொன்னது எல்லாம் உண்மையா என்பது போல தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தாள்.

அதுவரை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த தர்ஷினி அவள் அருகே வந்து..

"ஏய் அவள் எல்லாம் ஒரு ஆள் அவள் சொன்னதை போய் பெருசா எடுத்து கிட்டு இருக்கே.. நீ உண்மையில் அழகு தாண்டி நான் மட்டும் பையனாக பிறந்து இருந்தால் உன்னையே லவ் பண்ணி கிஸ் கூட கொடுத்து இருப்பேன்."

"நீ லவ் பண்றது இருக்கட்டும். வெங்கி நட்பை தாண்டி என்னை பார்ப்பானா? அவள் சொன்னது போல நான் ஓவர் பருமனாக இருப்பதால் தான் அவன் என்னை காதலிக்கும் எண்ணத்தில் பார்க்கல போல.."

"அப்படி யார் சொன்னாங்க.. அவனுக்கு காதலில் விருப்பம் இல்ல போல.. அதன்.."

"எது அவனது அவனுக்கு காதலில் விருப்பமில்லையா? ஹலோ மேடம் அவன் இதுவரை காதலித்த பெண்களின் எண்ணிக்கை 25.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.."

"இது என்னமா புது கதையா இருக்கு கொஞ்சம் சொல்லு கேட்போம்.."

"அவன பர்ஸ்ட் லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆனது அஞ்சு வயசுல.."

"என்னது அஞ்சு வயசா? அந்த வயசுல நமக்கு ஜட்டி கூட போட தெரியாது அப்ப எப்படி டி லவ் எல்லாம் பண்ண?"

"இதே கேள்வி தான் நானும் அப்ப கேட்டேன் அதற்கு ஒரே வார்த்தையில் இது வாலிப வயசு காதலிக்கும் வயசு சிரிச்சுகிட்டே சொல்லிட்டு போயிட்டான்."

"சரியாக பிஞ்சிலேயே பழுத்தவனாக இருப்பான் போல. ஹ்ம்ம் இன்னும் மேல சொல்லு அந்த லவ் எப்படி பிரேக்கப் ஆச்சு?"

"அந்த பொண்ணும் இவனும் வேற வேற ஸ்கூலுக்கு போயிட்டாங்க. அத்தோட இவனும் போன இடத்தில் இன்னொரு பொண்ணை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டான்."

"சரியான மானங்கெட்ட காதலா இருக்கும் போல இப்படி எத்தனை?"

"என்கிட்ட சொல்லி 25 சொல்லாமல் எத்தனை தெரியல?"

"சரி வயசு வரியா ஒரு கணக்குச் சொல்லு பார்க்கலாம்.."

"ஐந்து வயதில் - 2, ஏழு வயதில் - 2, அப்பறம் எட்டு to பத்து வயசில் - 5, பதினொரு வயசில் - 3, பதிமூன்று வயசில் - 7, பதினான்கு வயதில் - 3, பதினைந்து வயசில் - 3. கடைசியாக இவள் கிட்ட மட்டுமே லவ் சொல்லி இருக்கான் அதுவும் எவனோ ஒருத்தன் சொல்ல சொன்னதால்.. அப்போ கூட இவள் என்றாவது ஒரு நாள் பார்த்தால் சாரி சொல்லனும் என அவன் தேட போய் இது கேள்விப்பட்டு உண்மையில் லவ் என நினைச்சு கொடுமை பண்ணுது."

தர்ஷினி சிலை போல இருக்கே.. அவளின் கன்னத்தில் லேசாக தட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தவள்.

"எதுக்கு இந்த ஷாக்கு?"

"அதில்லை இதுவரை கிளாஸ்ல உன்னை என்னை தவிர அவன் மத்த பொண்ணுங்க கிட்ட பேசி நான் பார்த்ததே இல்லை சரியான தயிர்சாதம் இருப்பான்னு பார்த்தால்.. நீ வேற எத்தனை பேர் லவ் பண்ணி வச்சிருக்கான் சொல்ற? அதன் ஷாக்.."

"என்ன பண்றது தெரியதனமாக அவனோட அப்பா அம்மா நீ எந்த பொண்ணே லவ் பண்ணணும் நாங்க ஒன்றும் சொல்ல மாட்டோம் சொன்னதால் இப்படி.."

"அவன் எப்போ சொன்னாங்க..?"

"இவனோட ஐந்து வயசில்.."

"நல்ல அப்பா.. நல்ல அம்மா.."

"எனக்கு தெரியும்.. என்னோட வருங்கால மாமனார் மாமியார் ஆச்சே.. இருக்காதா பின்ன😝"

"உன்னோட அப்பா அம்மா எப்படி?"

"அம்மா கிட்ட நான் இவனை பண்ற விஷயத்தை சொல்லிட்டேன். அப்பாவுக்கு தெரியாது தெரிந்தாலும் பிரச்சினை இல்ல. அவருக்கு இவன் மேல் தனி பாசம்.. தொல் மேல் கை போட்டு பேசும் அளவுக்கு பாசம். படிச்சு முடித்து ஒடு வேலைக்கு இவன் போனால் மட்டும் போதும். மற்றப்படி என் பேர் பக்கத்திலும் பணம் காசுக்கு பிரச்சினை இல்ல.."

"ஒரு பிரச்சினை இருக்கு. அவனும் உன்னை காதலிக்கணும். அதற்குள் இந்த அனிதா பொண்ணு பண்ற சேட்டையில் அவள் மேல் இவனுக்கு காதல் வராமல் இருக்கணும்."

"அவன் எனக்கு சத்தியம் பண்ணி இருக்கான். கண்டிப்பா என்னை தாண்டி எந்த பொண்ணையும் அவன் லவ் பண்ணவே மாட்டான். பண்ண விட மாட்டேன்.."

"காதல் யார் தடுத்தாலும் கேட்காமல் வருவது. உனக்கு பண்ண சத்தியம் உனக்கே எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கு."

"என் விஷயம் விடு.. உன் விஷயம் என்ன ஆச்சு? அப்படி இப்படி முயற்சி யோசித்து ராம் பற்றி உன் மனசு என்ன சொல்லுது..?"

"அதான் உனக்கே தெரியுமே அவன் ஒவ்வொரு தடவை ஏதாவது ஒரு பொண்ணு கிட்ட பேசும் போதும் அப்படியே எதையாவது எடுத்து அவன் தலையில் போட்டு கொலை பண்ணலாம் போல இருக்கு. அந்த அளவுக்கு கோவம் கோவமா வருது. பச்சையாவே தெரியுது எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு. அதை வாயைத்திறந்து அந்த கருப்பன் கிட்ட சொல்ல முடியல. பேர்தான் ஸ்ரீராம் மற்றபடி கண்ணாலே மயக்கும் கருமை நிற மாய கண்ணன் அவன்."

"பாருடா நம்ம பிடிவாதக்காரி தர்ஷினியின் காதலை.. எப்போ உன் காதல அவன் கிட்ட சொல்ல போற?"

"நீ முதலில் உன் காதலை உன் ஆளுக்கு கிட்ட சொல்லு அப்பறம் என் விஷயம் பார்க்கலாம்."

"அட போடி நீ வேற முன்னாடி எல்லாம் கொஞ்ச நாள் போனா அவனுக்கு என் மேல் காதல் வரும் நம்பிக்கையாக இருந்தேன். இப்ப இந்த அனிதா பொண்ணு பேசிட்டு போன பிறகு சத்தியமா இந்த குண்டு பூசணிக்கா எல்லாம் அவன் காதலிக்க மாட்டான் என தெரிஞ்சு போச்சு. இதுவரை அவன் காதலித்த எந்த பெண்ணுமே ஏன் அளவு பருமனாக இருந்ததில்லை. அப்படி இருக்கே எப்படி?"

"சும்மா chumm.. காதல் காதல் சொல்லாதே.. அவனுக்கு இருந்தது எல்லாம் காதலே இல்ல வெறும் இனக்கவர்ச்சி இதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு பேசிகிட்டு இருக்க. ஒரு உண்மையான காதல் வெளி தோற்றம் மூலம் வராது. அப்படி வந்தது என்றால் அது காதலே இல்ல.. காமம். உன் ஆளுக்கு காமம் தான் முக்கியம் என்றால் உன்னை சத்தியமாக கண்டுக்கவே மாட்டான்."

"என்னடி இப்படி சொல்ற என் வெங்கி பத்தி எனக்கு தெரியும் அவன் முன்ன மாதிரி இல்ல.."

"முன்ன மாதிரி இல்லையா அப்படி முன்னாடி எப்படி இருந்தான்..?"

"பக்கத்தில் என்ன உட்கார வச்சிக்கிட்டு வர போற பொண்ணுங்க எல்லாம் உடல் அசைவுகளை எல்லாம் வைத்து என்கிட்டேயே கவிதையெல்லாம் சொல்வான். இதுவரை அவன் சொல்ல ஒரு அங்கம் அவர்களின் கண்கள்."

"சத்தியமா சொல்றேன் அவன் உன்னை ஒரு பொண்ணவே பார்க்கல போல.. முதலில் அதை அதை தெரிந்து கொள். பக்கத்தில் அழகிய நீ இருக்கவே இத்தனை காலமாக ஒருவன் வேற பொண்ணுங்களை பற்றி உன் கிட்ட அதுவும் நீயும் ஒரு பொண்ணு என்பதை மறந்து சொல்றான் என்றால் நீ ஒரு பொண்ணு என்பதே அவன் நினைக்கவே இல்லனு அர்த்தம்."

"அப்படியா சொல்றே?"

"அப்படி தான்.."

"இப்போ என்னடி பண்ணலாம்.."

"உனக்கு டான்ஸ், பாட்டு பாடுவது இப்படி ஏதாவது வருமா?"

"ஹ்ம்ம்.. வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் ஒரு குத்தாட்டம் கூட வீட்டில் போடுவேன்.."

"அதை நம்ம காலேஜ் ல அடுத்த மாசம் வர போற இன்டர் காலேஜ் competition la ஆடு.. அதுவும் அர்ஜுன் கூட ஜோடியா"

"சான்ஸ் eh இல்ல.."

"ஏன் மற்றவர்கள் முன் ஆட வெட்கமா?"

"வெட்கம் எனக்கு இல்ல.. வெங்கிக்கு ஐந்து பேர் கூடி இருக்கும் இடத்தில் வாய் திருந்து நாலு வார்த்தை பேசவே தயங்கும் அவன் கண்டிப்பா இந்த டான்ஸ் ஆட வரவே மாட்டான். அதுவும் அவனுக்கு டான்ஸ் மற்றும் பாட்டே பிடிக்காது. அவனுக்கு தெரிந்தது எல்லாம் படிக்கிறது கம்ப்யூட்டர் ஏ தட்டுவது.. அவ்வளவு தான்.."

"ஹ்ம்ம்...அப்படியா சொல்ற.. கொஞ்சம் இந்த ஃபோன் ஏ பார்.. அவனின் வண்டவளம் தெரியும்."

அதில் இருந்த வீடியோ ல.. அர்ஜுன் யாரும் இல்லாத கிளாஸ் ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் அடிக்கொண்டு இருந்தான்.

அந்த பாட்டு..

"கண்ணழகா, காலழகா,
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி..", '3' படத்தில் வந்த ஒரு பாடல்.

அதற்கு பாட்டு பாடிக்கொண்டே நடனம் அடினான் அவன்.

ரெண்டுமே கேவலமாக தான் இருந்தது என்றாலும் அந்த விஷயம் பிங்கிக்கு புதுசு.

அவனுக்கு பாட்டு கேட்பது மற்றும் நடனம் ஆடுவது பிடிக்காது என அவள் நினைத்து கொண்டு இருக்கே இங்கே அதுவெல்லாம் பொய் என சொல்லும் ஆதாரமே இருக்கே..

"தர்ஷு.. உனக்கு எப்படி டி இது கிடைத்தது?"

"அது ரகசியம் சொல்ல மாட்டேன்.. முதலில் உன் லவ் சக்ஸஸ் ஆகட்டும் அப்பறம் பார்ப்போம்."

"சரி பெயர் யார்கிட்ட கொடுக்கணும்."

"அதன் எங்க அண்ணன் ஒருத்தன் இருக்கான் ல அவன் கிட்ட பேசி நானே பெயர் கொடுக்கிறேன். அதற்கு முன் நீ தான் எப்படியாவது அர்ஜுனை இது சம்மதிக்க வைக்கணும். ஆட போவது நீயும் அவனும் தான்.."

"அதற்கு ஒரு பிளான் இருக்கு.."

"என்ன?"

அவள் காதில் ரகசியம் போல சொல்ல. அதனை கேட்டவள்..

"இது workout ஆகும் நினைக்கிற?"

"கண்டிப்பா.. அவனை பற்றி எனக்கு தெரியும். உன்னை மாதிரி அவனுக்கும் கொஞ்சம் பிடிவாத குணம் இருக்கு. செய்வே செய்யாதே என அவனுக்கு பிடிக்காதவங்க யாராவது சொன்னால் அதை தன் செய்வான் அதே மாதிரி உன்னால் முடியாது சொல்லி பார்.. தன்னால் உண்மையாவே முடியாத விஷயத்தை கூட செய்ய பார்ப்பேன். நம்ம செய்ய போவது ரெண்டாவது யுக்தி.. இது அவனை காயப்படுத்தும் தெரியும் இருந்தாலும் வேற வழி இல்ல. இதில் உனக்கு தான் கெட்ட பெயர் வரும்.. சாரி டி.."

"நம்ம ப்ரெண்ட்ஸ் டி.. இந்த சின்ன விஷயத்தை கூட செய்ய மாட்டேனா?"

"தாங்க்ஸ் டி.."

அடுத்த நாள் காலேஜ் வாட்ஸ்அப் குரூப் ல அர்ஜுன் ஆடிய வீடியோ தர்ஷினி போஸ்ட் செய்து எல்லார் கண்களுக்கு பார்வைக்கு போனது.

அதனை பார்த்த பல பேர் அவனை கிண்டல் செய்து மெசேஜ் பண்ணாங்க..

"அடேய் தயிர் சாதம் உனக்கு எதுக்கு டா இந்த வேண்டாத வேலை?"

"ஓய் அம்பி.. உனக்கு மனசுல பி மைக்கேல் ஜாக்சன் நினைப்போ..?"

"காக்கா வலிப்பு வந்த மாதிரி எதுக்கு டா கையை காலை ஆட்டி கிட்டு இருக்கே பன்னாட.."

அதனை எல்லாம் பார்த்த அர்ஜுன் அவமானத்தில் கூனி குறுக..

அந்த வீடியோ போட்ட தர்ஷினி மேல் இருவருக்கு வெறுப்பு வந்தது.

ஒருவர் அனிதா.. கண்டிப்பா அவள் அர்ஜுனை காதலிப்பதால் வந்த வெறுப்பு.

இன்னொருவர் ரிஷி.. இவனின் வெறுப்பு ஓடி சென்று தர்ஷினியின் கன்னத்தில் அடிக்கும் அளவுக்கு போனது.

கிளாஸ் எல்லாரும் பார்க்க அவளை ஓங்கி அறைந்தான்..

"பொண்ணடி நீ.. பேய் பேய்.. கொஞ்சம் கூட அறிவு இல்ல.. அர்ஜுன் உன் ப்ரெண்ட் தானே பின்ன ஏன் உனக்கு இப்படி ஒரு கேவலமான புத்தி. நீ கிளாஸ் ல ஃபேமஸ் ஆகணும் என்றால் இத்தனை நாள் பழகிய ப்ரெண்ட் ஆ கிண்டல் பண்ணிய ஃபேமஸ் ஆவாய். அவன் இடத்தில் நீ இருந்து அவன் இப்படி ஒண்ணு பண்ணி இருந்தால்.. காலேஜ் பிரின்சிபால், hod அளவுக்கு போய் இருப்பாய் ல.."

கன்னத்தில் கை வைத்து தன்னை அடித்த ரிஷியே கொலைவெறி ல பார்த்தவள்.

"இப்போ என்னை அடித்துக்கு நீ ரொம்ப ஃபீல் பண்ணுவே.."

"சரி தான் போடி.. எந்த பிரச்சினைக்கும் நான் போக மாட்டேன் போனால் அந்த பிரச்சினையை தூள் தூளாக உடைக்காமல் விடமாட்டேன். இவ்வளவு நாள் எமன் என்ன பண்ணாலும் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் இனி அப்படி இருக்க மாட்டேன்."

அர்ஜுன் கிட்ட போனவன்..

"அடேய் இப்படி கல்லு மாதிரி இருக்காமல் அடித்து என்ன பண்ணலாம் யோசி.. இது காலேஜ்.. அவன் அவனுக்கு மற்றவர்கள் செய்யும் எல்லாமே ஒரு கேலி கூத்து தான்.."

அர்ஜுன் எதுவும் பேசாமல் அமைதியாக கிளாஸ் ஏ விட்டு வெளியே சென்றான். பிங்கி அனிதா கூட அவனை தேடி வெளியே ஓடினார்கள்.

என்னதான் பிங்கி மற்றும் அனிதா இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கல என்றாலும் அர்ஜுன் முன்னாடி காட்டி கொள்ள வில்லை. அவனை சமாதானம் செய்வதே இப்போதைக்கு முக்கியம் என்கிற மாதிரி இருந்தார்கள்.

ரிஷி ஏ சாந்தப்படுத்த பக்கத்தில் போன அஞ்சலி நான்கு ஐந்து கொட்டு அவனிடம் பரிசாக வாங்கி விட்டு வந்தாள்.

தன் தங்கையை அடுத்த விஷயம் கார்த்திக்கு தெரிந்து ரிஷியோடு சண்டைக்கு வந்தான்.

அஞ்சலி ரிஷிக்கும் கார்த்திக்கும் நடுவில் இருந்து சமாதானம் செய்யும் நேரத்தில் தான் ராம் தர்ஷினியின் வாட்ஸ்அப் நம்பர் ல மெஸேஜ் அனுப்பி..

"தாங்க்ஸ்.. அந்த வீடியோ நான் தான் உனக்கு கொடுத்தேன் என்பது யாருக்கும் சொல்ல இருந்ததற்கு."

"சில ரகசியம் ரகசியமாக இருப்பதே நல்லது."

"இருந்தாலும் எல்லாரும் பார்க்கும் ஒரு இடத்தில் நீ போஸ்ட் பண்ணி இருக்க கூடாது தர்ஷி.."

"Everything fair in love and war..😉"

"அதுக்கும் இப்போ நடந்த விஷயத்துக்கும் என்னமா சம்மந்தம்?"

"உனக்கு சொன்னால் புரியாது மாமொய்..😝"

"புரியவே வேண்டாம் போடி.."

அதற்கு அவள் பதில் ரெண்டு பொம்மைகள் மட்டுமே...😍😍

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#13
வாராயோ வெண்ணிலாவே...!! 10
அத்தியாயம் 10


கண்ணை கசக்கிக்கொண்டே அர்ஜுன் ஆண்கள் கழிவறைக்குள் ஓட அவனை துரத்தி வந்த பிங்கியும் அனிதாவும் அதே கழிவறைக்குள் சென்றார்கள்.

அந்த நேரத்தில் ஏற்கனவே உள்ளே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சில பசங்க இவர்களைப் பார்த்து பயத்தோடு திரும்பி..

"இது ஆண்கள் கழிவறை பெண்கள் கழிவறை செகண்ட் ப்ளோர் ல இருக்கு." - ஒருவன்

"அது எங்களுக்கு தெரியும் நீ முதல்ல ஜிப்பை போட்டு கிட்டு வெளியே போ." - பிங்கி

வெளிய போய்கிட்டே இருந்த பசங்க தங்களுக்கு தெரிந்த சில கெட்ட வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து அவர்களிடம் சில உண்மையான காரணங்கள் சொன்னே அவர்களின் அவர்."

"அனிதா நீ உள்ளே யாரும் வராமல் பார்த்துக்கோ.." - பிங்கி

"இல்ல நானும் இங்கே இருக்கேன்.." - அனிதா

"ஏய்.. ஒரு தடவை சொல்றேன் ல போடி வெளியே.. இது நீ ஸ்கூல் ல பார்த்த அர்ஜுன் இல்ல.. பல வருசம் என் வாழ்க்கையோடு வாழ்க்கையாக கலந்த என் வெங்கி. இவனை பற்றி உன் அப்பா அம்மாவை விட எனக்கு தான் தெரியும்.." - பிங்கி

அவளின் வார்த்தையை விட அவள் கண் பார்வையிலிருந்த சீற்றமே அனிதாவை வெளியே போக வைத்தது.

"வெங்கி இப்ப என்ன நடந்துச்சுன்னு அழுதுகிட்டு இருக்க..?"

"இதுக்கு மேல் என்ன நடக்கணும்? நீ தான் பார்த்தியே மொத்த கிளாஸூம் என்னைப் பார்த்து கைகொட்டி சிரித்தது. இந்த அவமானத்துக்கு பிறகு நான் ஏன் இங்க இருக்கணும்? பேசாமல் இந்த காலேஜில் இருந்நு டீசி வாங்கி விட்டு வேற காலேஜ் ல போய் சேர்க்கிறேன்."

"அப்புறம் அந்த காலேஜில் ஏதாவது பிரச்சினை இல்ல இன்னொரு கிண்டல் பண்ணுவாங்க.. அதை விட்டு இன்னொரு காலேஜ்.. அப்புறம் இன்னொரு காலேஜுனு போய்க்கிட்டே இருப்பியா?"

"பின்ன வேற என்ன பண்ண சொல்ற?"

"உன்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னாடி நீ வாழ்ந்து காட்டணும். உன் டான்ஸர் பார்த்து கேலியாகச் சிரித்தவர்கள் முன்னாடியே நல்ல டான்ஸ் ஆடி கைத்தட்டல் வாங்கணும்? அது உன்னால் முடியுமா? சொல்லுடா முடியுமா?"

"முடியாது கண்டிப்பா முடியாது. எனக்கும் டான்ஸ் குடும்ப தூரம் தெரியாத்தனமா இன்னிக்கு கிளாஸ் யாருமே இல்லாத தைரியத்தில் ஆட்டிட்டேன் அந்த வீடியோ எப்படி தர்ஷினி கிடைச்சதுன்னு தெரியல.. அவளை நல்ல ப்ரெண்ட் ஆ தான் பார்த்தேன்.. அவளே இப்படி.."

"அந்த விஷயத்தை விடு இப்போது முக்கியமில்லை எனக்கு வேண்டியது என் வெங்கியே பார்த்து எவனும் கேலியாக சிரிக்க கூடாது அதற்கு என்ன பண்ணணுமோ பண்ணு.."

"அதன் சொல்றேன் ல.. என்னால் முடியாது. அப்படியே ஆடனும் நினைத்தாலும் எங்க போய் எப்படி போய் ஆடுவது?"

"அடுத்த மாசம் வருகிற இன்டர் காலேஜ் ஃபுங்ஷன் ல ஆடலாமே.."

"நல்ல காமெடி பண்ற தனியா நாலு சுவத்துக்குள்ள எவனும் பார்க்காத போதே ஒரு மண்ணும் வரல.. இதுல மொத்த காலேஜ் பார்க்க ஆடனும் சொல்ற? இது நடக்கிற காரியமா?"

அப்பறம் பதில் பேசதவன்.. கழிவறை விட்டு கிளம்பி போனான் திரும்பி அவனை துரத்திக்கொண்டு பிங்கி ஓட வெளியே இருந்த அனிதாவும் அவர்களோடு ஓடினாள்.

***************

இன்னும் கார்த்தி மற்றும் ரிஷியின் சண்டை நடந்து கொண்டு இருந்தது.

"இதுவரை என் தங்கச்சி தர்ஷினியே எங்களின் அப்பா அம்மா கூட கை நீட்டி அடித்தது இல்லை.. அப்படி இருக்க நீ யாருடா அவளை அடிக்க? அடித்த கையை உடைத்து விடுவேன்.." - கார்த்தி

"வாடா வந்து உடை.. அதுவரை நான் வேடிக்கையா பார்த்து கொண்டு இருப்பேன்? அதற்கு பதில் உன் கையோடு சேர்த்து காலு கழுத்து எல்லாம் ஒடச்சிடுவேன்.." - ரிஷி

"நான் உன் வாயை உடைப்பேன்.." - கார்த்தி

"நான் அதற்கு பதில் என் கண்ணை நோண்டி விடுவேன்.." - ரிஷி

"அவன் குடலை உருவி மாலையாக போட்டு கொள்வேன்.." - கார்த்தி

"நான் உன் கிட்னி எல்லாத்தையும் சட்னி ஆகிடுவேன்.." - ரிஷி

"நானே உன் சங்கை கடித்து எடுத்துடுவேன்.." - கார்த்தி

"நான் உன்னுடைய உடலில் இருக்கும் ரத்தம் மொத்தமும் குடித்துடுவேன்.." - ரிஷி

"உன்னை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து சாப்பிட்டு விடுவேன்.." - கார்த்தி

இப்படி மாற்றி மாற்றி கை சட்டை போடாமல் வாய் சண்டை மட்டும் போட்டுக் கொண்டிருந்தார்கள் ரிஷியும் கார்த்தியும்..

அஞ்சலி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்கள் இருவரின் சண்டையை நிறுத்த பார்த்தாள்.

கிளாஸ்ல இருந்த மற்றவர்கள் அனைவரும், இதுங்க சொல்கிறார்களே தவிர எதுவும் செய்ய மாட்டார்கள் என சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள்.

பொறுத்து பொறுத்து பார்த்த ராம் தர்ஷினியிடம் சென்று..

"இந்த ரிஷி பையனும் கண்ணனும் போன ஜென்மத்துல நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தில பிறந்த இருப்பார்கள் போல.. பல மணி நேரமா ரத்தத்தை குடிப்பேன், துண்டா வெட்டி சாப்பிடுவேன், கிட்னியே சட்னி ஆக்குவேன் என்றேல்லாம் பேசிகிட்டு இருக்காங்க.!! ஹ்ம்ம்.. எனக்கு நம்பிக்கை இல்லை எங்க ஏதோ ஹோட்டல்ல பிரியாணி ஆர்டர் பண்ணு மாதிரி மனுஷா கறி ஆர்டர் பண்ற மாதிரியே இருக்கு.." - ராம்

"அடேய் கருப்பா.. ரொம்ப ஓவர் பேசாதே.. அவன் என் அண்ணன். உன்னோட சீனியர் ஏதுவாக இருந்தாலும் பார்த்து பேசு.." - தர்ஷினி

"ஓய் இப்படி எல்லாம் சொன்னா நான் பயந்துடுவோமா? ஐயாவை யார் என்று நினைச்சே? ஏதாவது பிரச்சனை இன்னும் வந்தால்..." - ராம்

"தூக்கிபோட்டு பந்தாடுவாயா?" - தர்ஷினி

"இல்ல யாராக இருந்தாலும் வெள்ளைக்கொடி நீக்கி காலில் விழுந்து விடுவேன்..😝😝" - ராம்

"போடா உனக்கு வீரம் என்றே ஒன்றே இல்ல.." தர்ஷினி

"வீரத்தை விட விவேகம் ரொம்ப முக்கியம் தர்ஷி.." - ராம்

அதனை கேட்டு அவள் தலையில் அடித்து கொண்டாள்.

************

கிளாசுக்கு திரும்பி வந்த அர்ஜுன் உள்ளே நடக்கும் கூத்தை எல்லாம் பார்த்து சத்தமாக..

"சைலண்ட்.."

அப்போது தான் அவனின் குரலின் சத்தத்தை பல பேர் கேட்டனர். எல்லாரும் அவனை அம்பி, அம்மஞ்சி, ஊமை என கிண்டல் பண்ணி இருக்கே.. இப்போ அவனின் தடினமனா குரலில் எல்லாரும் ஒரே நொடியில் அவனை பேசுவதை கேட்டனர்.

"இங்க பாருங்க.. இது காலேஜ் இங்கே உள்ளே வந்து உங்க நண்பனை தேடுவது மாணவர்களை கிண்டல் பண்ணுவது எல்லாம் உனக்கு இஷ்டம். அதை விட்டுவிட்டு என் விஷயத்தில் தலையிட்டு என்னை கிண்டல் பண்ணுவது மாபெரும் தவறு. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து விடாது. மற்றப்படி தெரியாத்தனமா யாரும் இல்லாத நேரத்துல டான்ஸ் ஆடி ட்ரை பண்ணி பார்த்தது எல்லாம் தப்பு தான். அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.. இதோடு விடு விடுங்கள்..🙏🙏"

"ஏன் பயமா? உன்னால் முடியாது என்பது தானே?" என ஒருவன் கிண்டல் பண்ண

"ப்ரோ நீங்க என்னவென சொல்லுங்க.. நான் அதை கேட்க தயாராக இல்ல. ஏற்கனவே என் வாழ்க்கையில் எவனோ ஒருவன் சிண்டியதல் நான் பட்ட கஷ்டம் பல பல... பிளீஸ் போங்க.." - அனிதாவை பார்த்தவரே அர்ஜுன் சொன்னான்.

ஆனாலும் யாரும் கேட்காமல் அவனை திரும்பி கிண்டல் செய்வதே தங்களின் பிறப்பு உரிமை போல பேச.. பொறுத்து பொறுத்து பார்த்த அர்ஜுன்..

"அப்போ என்னால் டான்ஸ் ஆடவே முடியாது சொல்றீங்களா?" - அர்ஜுன்

எல்லாரும் ஆமாம் சொல்ல..

"அப்போ பார்த்து விடலாம். என்னால் ஒரு விஷயம் முடியுமா? முடியாதா? என்பது நான் தான் முடிவு பண்ணனும். முக்கியமாக என்னால் முடியாது நீங்க சொன்னால் அது கண்டிப்பா என்னால் முடியும் நிரூபணம் செய்ய வேண்டும்." - அர்ஜுன்

அப்பறம் ஒரு முடிவுக்கு வந்தவன்..

"பிங்கி நீ சொன்னது சரி தான் இவர்களுக்கு சொல்வதை விட செய்து காட்டுவது தான் சரி.. இப்போவே அந்த டான்ஸ் competition la எப்படி பெயர் கொடுக்கணும் பார்க்கிறேன்.." - அர்ஜுன்

அதே போல ரிஷி மற்றும் கார்த்தியின் சண்டையை முடிக்க அஞ்சலி ஏ ஒரு யோசனை சொன்னாள்.

காலேஜ் ல வர போகிற பங்ஷன் ல ரிஷி மற்றும் கார்த்தி இருவரும் ஏதாவது ஒரு competition la எதிர் எதிராக நின்று ஜெய்ப்பது என முடிவு ஆனது.

ரிஷிக்கு என்ன பண்றது தெரியல.. படிப்பை விட வேற எதிலும் அவன் கடந்த எட்டு வருடங்களாக கலந்து கொண்டது இல்ல..

ஆனால் அஞ்சலி சொன்னதை கேட்க கார்த்தி அவளை கவர..

"அப்போ ஒன்று பண்ணலாம்.. ரெண்டு பேருமே டான்ஸ் competition la கலந்துப்போம். அதில் யார் ஜெய்க்கிறார்கள் பார்ப்போம்" கார்த்தி

"என்னது டான்ஸ் ஆ?" - ரிஷி

"யெஸ்.. டான்ஸ் தான்..💪" - கார்த்தி

ரிஷி தலையில் கை வைத்து உட்காந்து விட்டான்.

"ரிஷி என்னடா..? ஓகே என சொல்லு பார்த்துக்கலாம்.."

"எலி உனக்கு சொன்னால் புரியாது?

"அஞ்சு அவனுக்கு பயம் எங்க தோற்றுப் போய் விடுவோம் பயம்."

"பிளீஸ் கார்த்தி.. என்னை பற்றி தெரியாமல் பேசாதே. இந்த ரிஷி யாருக்கும் பயப்படுறவன் இல்ல.."

"அப்போ போட்டிக்கு சரி சொல்லு.."

கொஞ்சம் நேரம் யோசித்தவன் சரி என்றான்.

இங்கே தர்ஷினி அதையே சக்காக வைத்து ராமையும் அந்த போட்டியில் சேர சொன்னாள்.

"ஐயோ நமக்கு பேச்சு தான் வரும். டான்ஸ் சுத்தம்.. ஆளை விடு.."

"இப்போ மட்டும் நீ ஓகே சொல்லல.. அந்த வீடியோ நீ தான் எடுத்தாய் எல்லாருக்கும் சொல்லிடுவேன்.."

"வேண்டாம்.. வேண்டாம்.. அந்த ரிஷி என்னை கொலையே பண்ணிடுவான்.. அவனை கூட விடு அந்த அர்ஜுன் கூடவே சுற்றும் ஒரு காட்டு யானை என்னை மிதித்து நசுக்கு நசுக்கு என நசுக்கி விடும்."

"ஏய் பார்த்து பேசு அவள் என் ப்ரெண்ட்.."

"அதே மாதிரி அர்ஜுன் கூட தான் உன் ப்ரெண்ட்.. அவனை நீ அசிங்கப்படுத்தல?"

"அதற்கு ஒரு காரணம் இருக்குடா?"

"இதையே சொல்லு.."

"இப்போ அதுவா முக்கியம்? நான் சொன்னதுக்கு ஓகே சொல்லு.."

"வேற வழி ஓகே சொல்றேன்.."

"ich liebe dich (I love you).."

"அப்படினா?"

"அது.. அது.. நீ ரொம்ப நல்ல பையன்.. என சொன்னேன்.."

"ஓ.. அப்போ அதற்கு தாங்க்ஸ் எப்படி சொல்லணும்?"

"ich auch.. (me too)..😏"

"அப்போ திரும்பி என்னை நல்ல பையனு சொல்லு.."

"ich liebe dich (I love you).."

"ich auch.. (me too)..😏"

"ich liebe dich.. ich liebe dich (I love you).."

"ich auch.. ich auch.. (me too)..😏"

"ஆமாம் நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று எப்படி சொல்லணும்?"

"willst du mich heiraten? (will you Marry me?"

"ஓகே.. willst du mich heiraten?"

"Ja, werde ich (yes, I will)"

"என்ன வேற மாதிரி பதில் சொல்ற?"

"அது பசங்க பொண்ணுங்களுக்கு ஏற்ற மாதிரி ஜெர்மன் மொழியில் மாறும்.."

"ஓ.. அப்படியா? சரி சரி.."

கார்த்தியின் கட்டாயம் பேரில் கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறாள்.

அதில் தான் இந்த சேட்டைகள் எல்லாம்..

*******************

எல்லாரும் நினைத்து போல அந்த டான்ஸ் போட்டி சோலோ இல்ல.. ஜோடிகளுக்கான டான்ஸ்.. கடந்த வருடம் சோலோவிக்கு தனியாக இருந்தது. இந்த வருடம் அதனை மாற்றிவிட்டார்கள்.

பெயர் கொடுக்க வந்த இடத்தில் யாருக்கு யார் ஜோடி சேர்வது என்ற குழப்பம் வந்தது.

தர்ஷினி கார்த்தியிடம் வந்து..

"அண்ணா இதன் சரியான சமயம் நீ எப்படியாவது அஞ்சலி கூட ஜோடி சேர்ந்து விடு.."

"இல்ல தர்ஷினி அது சரிப்பட்டு வராது.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் தான் இருந்தாலும் அவள் உயரத்துக்கும் எனக்கும் செட் ஆகாது."

"இல்ல நீ முயற்சி பண்ண முடியும்."

"கண்டிப்பா முடியாது. இது என்னோட மன பிரச்சினை. கடந்த ரெண்டு வருடமாக நான் தான் இதில் நம்பர் ஒன். என் நேரம் இப்போ போய் ஜோடிக்கு மட்டும் தான் என மாற்றிவிட்டார்கள். இப்போ போய் காதல் ஒன்றை வைத்து அவமானம் பட விரும்பல.."

அதற்கு தர்ஷினி எதுவும் சொல்லல.. என்ன இருந்தாலும் தன் அண்ணனின் மானம் முக்கியம் அல்லவா?

அவள் ஏற்கனவே ராம் கூட சேர்த்து பெயர் கொடுத்து விட்டாள். அவளுக்கு அவள் கவலை..😝

அடுத்து அர்ஜுன், பிங்கி மற்றும் அனிதா விஷயம்..

அனிதா ஒரே அடியாக சொல்லி விட்டாள் அவளுக்கு அவள் நலன் தான் முக்கியம். அதற்காக அவள் ப்ரேக் அப் என சொல்லி விட்டு முதலில் ரிஷி கிட்ட கேட்க அவன் மாட்டேன் சொன்னதால் கார்த்தி கூட ஜோடி சேர்ந்து விட்டாள்.

அர்ஜுனுக்கு அதை பற்றி கவல இல்ல..

"பிங்கி என்ன இருந்தாலும் அவள் ஓவர் சீன் தான். நான் எப்போ அவளை ஜோடி சேர அழைத்தேன். எப்படியோ அவளே இல்லாத காதலுக்கு ப்ரேக் அப் சொல்லிட்டு போய்ட்டாள். சரி விடு வேற யாரையாவது கேட்போம்."

"ஏன் நானாக இருந்தால் ஓகே ஆ?"

"இல்ல வேண்டாம்.. வேற யாரையாவது கேட்போம்.."

அவள் கோபத்தோடு..

"எனக்கு தெரியும்.. நான் ரொம்ப குண்டு உன் கூட ஜோடி சேர்ந்து ஆட சரியா வர மாட்டேன் என்று தானே இப்படி சொல்ற?"

"யார் குண்டு?"

"நான் தான்.."

"யார் அப்படி சொன்னாங்க?"

"எனக்கே தெரியும். தினம் தினம் கண்ணாடி பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்."

"என் கண்ணுக்கு அப்படி தெரியல.. நீ கொஞ்சம் புசின மாதிரி இருக்கே அளவுக்கு தான்.."

"பொய் சொல்லாதே.. அப்போ எதுக்கு நான் உன் கூட ஜோடி சேர்ந்து ஆட வேண்டாம் சொன்னே?"

"அட போ.. நானே சரியா அடிவெனா தெரியாது? இதில் என் கூட சேர்ந்து உன்னையும் ஆட வைத்து உனக்கு ஒரு கேவலம் வரவா?."

"நான் அவமானம் படகூடாது என்றால் நீ நல்ல practice பண்ணு.. நல்ல ஆடு.. நானும் சேர்ந்து ஆடுக்கிறேன்.."

"கண்டிப்பா ஆடியே ஆகணுமா?"

"ஆடல் மட்டும் இல்ல டா பாட்டு போட்டிக்கும் நீ பெயர் குடுக்கணும்.. அதில் கூட நான் தான் உன் ஜோடி.."

"ஓய் டான்ஸ் மட்டும் தானே சொன்னே?"

"அடிங்கு.. அந்த வீடியோ ல ஆட்டம் மட்டுமா போட்ட.. பாட்டும் கூட தானே பாடினே? அதற்கும் சேர்த்து தான் கிளாஸ் மொத்தம் கேலி பண்ணியது. அதோடு எனக்கும் பாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் ஆசையாக இருக்கு. எப்படியும் அதுக்கும் ஜோடி தேடனும் அதன் உன்னையே சேர்த்து கொண்டேன்.."

"ஆமாம் ஆமாம்.. அப்படியே நான் பாடி கேட்டாலும்.. டான்ஸ் கூட ஏதோ செய்யலாம்.. இந்த பாட்டு என் கழுதை குரலில்.. மொத்தத்தில் என்னை வைத்து காமெடி ஷோ தான் நடக்க போகுது..🤦🤦"

"விடு காமெடி ஷோ மாதிரி போச்சு என்றால் சேர்ந்து சிரிப்போம்.. இல்ல சேர்ந்து அவமானம் படுவோம்.. ஏதுவாக இருந்தாலும் சேர்த்தே அனுபவிப்போம்.."

"கண்டிப்பா எனக்காக இல்லாட்டியும் உனக்காக செய்கிறேன்.."

பின் ரிஷி அஞ்சலி.. இவர்கள் விஷயம் பெருசா ஒண்ணும் இல்ல..

அஞ்சலியை கொஞ்சி கொஞ்சி அவனை சம்மதிக்க வைத்து விட்டாள்.

அஞ்சலி அவளின் எலி குரலில் கேட்கும் போது அவனால் மறுக்க முடிய வில்லை.

அவனுக்கு எப்போவும் அவளின் உயரம் பிரச்சினையாக தெரிந்தது இல்ல..

*************

இனி வர போகிற அத்தியாயங்களில் யார் ஜெய்க்க போறாங்க?

1. கருமை நிறம் கொண்ட ராம் கூட வெண்மை நிறம் கொண்ட தர்ஷினி ஒரு ஜோடி

2. 5.6 உயரம் கொண்ட ரிஷி கூட 4.11 உயரம் கொண்ட அஞ்சலி ஒரு ஜோடி

3. அர்ஜுனை விட ஒன்றரை மடங்கு பருமனான பிங்கி ஒரு ஜோடி

4. எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் கார்த்தி மற்றும் அனிதா ஒரு ஜோடி

எந்த ஜோடி வெல்லும்.. பார்போம்..!!

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#14
வாராயோ வெண்ணிலாவே...!! 11
அத்தியாயம் 11


காலேஜ் கேன்டீன்..

ரிஷியா அர்ஜுன் மற்றும் ராம் சாமதானம் செய்ய, தர்ஷியை அஞ்சலி மற்றும் பிங்கி சாமாதானம் செய்து கொண்டு இருந்தார்கள்.

"அர்ஜுன் என்னை விடு டா இவள் எல்லாம் ஒரு பொண்ணு இவளுக்கு நீ சப்போர்ட் பண்ற? உன்னை கிளாஸ் முழுக்க கேவலப்பட வைத்தது இவள் தானே? நமக்கும் இந்த டான்ஸூக்கும் என்னடா சம்மந்தம்? சே, என் கொள்கையே.. நீ என் பிரச்சனைக்கு வராது வரை உன் பிரச்சினைக்கு நான் வரமாட்டேன். அதை மீறி வந்தால் அதற்கு பின் வரும் பின்விள்ளைவுக்கு நான் பொறுப்பு இல்ல... இப்படி இருக்க போய் நானே வழியில் போற எறும்பை ஜெட்டி குள்ள விட்ட மாதிரி பிரச்சனை மாட்டிக்கிட்டேன்.." - ரிஷி

அதனை கேட்ட ராம்..

"வழியில் போற எறும்பை.. என்னடா பழமொழியை தப்பா சொல்லு வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டேன் தானே சொல்லுவாங்க.." - ராம்

"அது ஒன்னும் இல்ல அழகா இது சிட்டி இல்ல அதான் நம்ம ரிஷி புது பழமொழி சொல்றான்.." - அஞ்சலி

"எலி நீ சித்த நேரம் சும்மா இரு.. நாங்கள் என்ன பண்ணுவது புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கும் நீ வேற.. டேய் அர்ஜுன் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.." - ரிஷி

"இப்போ என்னடா சொல்லணும் சொல்ற? நடந்தது நடந்து போச்சு இதுக்கு யாருமே காரணம் இல்ல.. தர்ஷினி ஏதோ விளையாட்டுக்கு பண்ணலே தவிர அவள் மேல் தப்பு ஒண்ணும் இல்லடா..! இது காலேஜ் நமக்கு இப்போ தான்.. இல்ல உங்களுக்கு இப்போ தான் பதினெட்டு வயசு ஆகுது."

"அப்போ உனக்கு?" - ராம்

"சாரி.. இந்த வருசம் தான் பதினேழு வயது ஆரம்பம். என்னை மாதிரி பிங்கி ஏ கூட சீக்கிரமே ஸ்கூல் ல சேர்த்து விட்டாங்க.." - அர்ஜுன்

"அது ரொம்ப முக்கியம்.. நீ அவளை பற்றி சொல்ல வந்த விஷயத்தை உடனே சொல்லு.." - ரிஷி

"அவள் பற்றி மட்டும் இல்ல.. நம்மளை பற்றியும் தான். இங்க பாருங்க நம்ம வயசு விளையாட்டுத்தனம் நிறைந்த வயசு இன்னும் நமக்கு பக்குவம் வரல. அவள் செய்தது தப்பு என்றால்.. ரிஷி நீ அவளை அடித்தது கூட தப்பு தான். பாதிக்கப்பட்ட நானே அவளைக் குறை சொல்லாத போது உனக்கு எங்களுக்கு கோபம் வந்தது பஸ்ட் ஆஃ ஆல் நீ என் ப்ரெண்ட் என சொல்ற அளவுக்கு கூட இல்ல.. பிங்கி தர்ஷினி தவிர யார் கூடவும் அதிகம் நான் பேசியது கூட இல்ல.. இப்போ பேசுவது கூட நம்ம எல்லாரும் ஒரே பிரச்சினையில் இருக்கோம். இங்க இருக்கும் யாருக்குமே டான்ஸ் ஒழுங்கா வராது. நான் ரொம்ப சுத்தம் ஆடணும் சொல்லி ரெண்டு முன்று அடி வைத்தாலும் கால் பிடித்து கொள்ளும். இடது கால் விட என்னோட வலது கால் ரொம்ப வீக்.."

"என்னடா ஏதாவது நரம்பு பிரச்சனையா?"

"இல்ல கொழுப்பு பிரச்சினை.. அட நீ வேற அவன் ஒரு இடது பக்க பைத்தியம். செய்கிற எல்லா வேலையும் இடது பக்கமே செய்வான். சாப்பிடுவது எழுதுவது தவிர எல்லாம் இவன் இடது பக்கம் தான்.. சில சமயம் இடது கையில் கூட எழுதுவான்." - பிங்கி

"பரவல டி உனக்கு அவனை பற்றி எல்லாம் தெரிந்து இருக்கு.." - தர்ஷினி

"பல வருடகால நட்பு மா சும்மாவா? சரி தானே பிங்கி.." - அஞ்சலி

"எஸ்.." - பிங்கி

"அட இப்போ அதுவா முக்கியம்.. உங்களில் யாருக்காவது டான்ஸ் நல்ல வருமா? Musically, dubsmash டான்ஸ் மாதிரி இருந்தாலும் ஓகே தான்.." - ராம்

"ஏன் ராம் உனக்கு தெரியாதா?" - அர்ஜுன்

"நமக்கு எப்போதும் வாய் பேச்சு தான்.. டான்ஸ் மாதிரி எல்லாம் செய்து பார்த்தது இல்ல.. உனக்கு அஞ்சலி..?" - ராம்

"இல்லத்தில் அப்போ அப்போ குழந்தைகள் கூட ஆடி இருக்கேன்.. மற்றப்படி பல பேர் பார்க்க ஸ்டேஜ் அளவுக்கு வருமா தெரியாது.." - அஞ்சலி

"நான் வெறும் பாத்ரூம் சிங்கர்.. டான்சர்.. அதுவும் எங்க அம்மா சொல்லி கொடுத்த பரத நாட்டியம் தான்.. ஜோடி ஆட்டத்துக்கு இது சரியாக வராது.." - பிங்கி

"என் அண்ணன் கார்த்தி டான்ஸ் ஆடி பார்த்து இருக்கேன் நான் முயற்சி பண்ணி பார்த்தது இல்ல.. என்னோட இன்டரேஸ்ட் எல்லாம் ஓவியம் மற்றும் நாவல் ரீடிங் தான்.." - தர்ஷினி

"என்னை கேட்கவே வேண்டாம் அந்த வீடியோ ல பார்த்து இருப்பிங்க.." - அர்ஜுன்

ரிஷி மட்டும் எதுவும் பேசாமல் இருக்க.. எல்லாரும் அவனை கேட்க..

தன் ஃபோன் ல சின்ன வயசில் அவன் ஸ்கூல் ல கலந்து கொண்ட நடன போட்டிகளில் வாங்கிய சர்டிபிகேட் ஃபோட்டோ காண்பித்து..

"பத்து வயசு முன்னாடி வரை ப்ரேக் டான்ஸ் கற்று கொண்டேன்.. அப்பறம் அப்பா அம்மாவின் இறப்புக்கு பிறகு எதிலும் ஆர்வம் காட்டல.. என்னோட பாட்டி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி அவங்களுக்கு புத்தகம் என்றால் உயிர் அவங்க மூலம் தான் புத்தகம் படிக்கிற பழக்கம் வந்தது. சரி இப்போ எதுக்கு அது? நான் டான்ஸ் ஆடி பல வருடம் ஆச்சு.. கண்டிப்பா நம்ம எல்லாருக்கும் ஒரு டான்ஸ் சொல்லி தருபவர்கள் தேவை.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா? பீஸ் கூட நானே ஏற்பாடு செய்கிறேன்." - ரிஷி

"என்னடா பிச்சை போடுறியா? பணக்காரன் என்கிற திமிரா? ஏன் எங்ககிட்ட பணம் இல்லனு நீயே முடிவு வந்துட்டா அப்படி தானே.." - அர்ஜுன்

"வெங்கி.. பிளீஸ் அவன் அப்படி சொல்ல வரல.." - பிங்கி

"பின்ன அவன் சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம். அவன் என்ன சொல்லி இருக்கணும் நம்ம எல்லாரும் பணத்தை சர் பண்ணி கொடுக்கலாம் சொல்லி இருந்தால் ஓகே.. அப்படி இல்லாமல் அவனே எல்லாருக்கும் பணம் தருகிற மாதிரி தானே சொன்னான்.." - அர்ஜுன்

அவன் கூட சேர்ந்து தர்ஷினி கூட சத்தம் போட.. கை எடுத்து கும்பிட்ட ரிஷி..

"யாப்பா சாமி.. தப்பு தான்.. தப்பு தான்.. நான் அப்படி சொன்னது தப்பு நீங்களே ஒரு முடிவுக்கு வந்து என்ன பண்ணும் சொல்லுங்க.. நம்ம முன்று ஜோடியில் யார் ஜெய்தாலும் ஓகே.. அந்த கார்த்தி மட்டும் ஜெய்க்க கூடாது.." - ரிஷி

"ஏய்.. அவன் என் அண்ணன்.." - தர்ஷினி

"நான் மட்டும் இல்லனா சொன்னேன்? அப்படி ஓவர் பாசம் இருந்தால் இப்பவே போய் விடு.. ராம் உன் கூட வர மாட்டான். ராம் நீ ஒன்னும் ஆடி கிழிக்க வேண்டாம் இங்கேயே இரு.. அர்ஜுன் மாதிரி என்னை மாதிரி உனக்கு ஆடியே ஆகணும் என்று இல்ல.. அதுவும் இவள் கூட.." - ரிஷி

திரும்பி ரிஷி மற்றும் தர்ஷினி இடையே சண்டை வர..

மற்ற நால்வரும் சமாதானம் செய்து திரும்பி தங்கள் பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்தார்கள்..

அப்போது தான் பிங்கிக்கு அவள் ஃபிளாட் ல புதுசா வந்த ஒரு பெண்ணின் நினைவு வந்தது.. அவள் அமெரிக்கா ல நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று நடனம் எல்லாம் ஆடி பிரைஸ் வாங்கி இருப்பது அவள் நினைவுக்கு வந்தது.

"நண்பர்களே நண்பிகளே எனக்கு ஒருத்தரை தெரியும்.. அவள் பெயர் சங்கீதா. அவள் உண்மையாவே சூப்பர் ஆ டான்ஸ் ஆடுவாள்.. லாஸ்ட் வீக் தான் அமெரிக்கா ல இருந்து இங்கே அவளின் தாத்தா பாட்டியை பார்க்க வந்து இருக்கிறாள். ஏற்கனவே யூடியூப் ல அவன் டான்ஸ் வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன். ரியலி சூப்பர்.. இன்னும் ரெண்டு மாசம் இங்கே தான் இருப்பாள் உங்களுக்கு ஓகே என்றால் கேட்டு பார்க்கலாம்." - பிங்கி

"யார் டி அவள்..? எனக்கு தெரியாமல்?" - அர்ஜுன்

"அதன் சொன்னேன் ல புதுசா இங்க வந்து இருக்கிறாள். ரெண்டு நாள் முன்னாடி தான் வந்தால் நம்ம வயசு தான்.. அமெரிக்கா ல இருந்து வந்தவள் ல இன்னும் தூங்கும் நேரம் செட் ஆகல.. நீ என்னை வீட்டில் விட்டு போன பிறகு நைட் டைம் ல அவள் கிட்ட தான் ரெண்டு நாளாக பேசிக்கிட்டு இருந்தேன். நல்ல நேரம் பார்த்து உன்னை அறிமுகம் செய்து வைக்கலாம் இருந்தேன் அதற்குள்.. சரி சரி என்ன சொல்றீங்க எல்லாரும்?" - பிங்கி

மற்றவர்கள் ஓகே சொல்ல.. அஞ்சலி மட்டும்..

"அது இல்ல.. ரெண்டு மாசம் இங்க வந்து இருக்கிறாள் அதுவும் அவளோட தாத்தா பாட்டி கூட நேரம் செலவு செய்ய.. அதில் ஒரு மாசம் நமக்கே போச்சு என்றால்? அதன்.." - அஞ்சலி

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த உறவும் இல்லாமல் அனாதையாக வளர்ந்த ஏக்கம்.. அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தாதவள் முதல் முறையாக வெளிப்படுத்தினாள்.. அதை புரிந்த ரிஷி அவள் கையை அதரவாக பிடித்து..

"இட்ஸ் ஓகே எலி.. நம்ம வேற ஐடியா யோசிப்போம்.." - ரிஷி

மற்றவர்கள் அதனை கண்டுக்க வில்லை என்றாலும் தர்ஷினி மட்டும் ரிஷிக்கும் அஞ்சலிக்கும் நடுவில் இருக்கும் கண் அசைவுகளை எல்லாம் கவனித்தாள்.

இருந்தும் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தாள்.

"ஒரு தடவை கேட்டு பார்ப்போமே.. உண்மையை சொன்னால் அவளே எனக்கு சில டான்ஸ் ஸ்டெப்ஸ் சொல்லி தருகிறேன் சொன்னாள். இங்கே வந்ததிலிருந்து அவளுக்கு நேரமே போது இல்லன்னு பீல் பண்ணிக்கிட்டு இருக்கா முதல் முயற்சி பண்ணிப் பார்ப்போம் இல்லேன்னா வேற ஐடியா பண்ணலாம்.." - பிங்கி

அவர்களும் சரி என்றார்கள்..

பின் எல்லாம் சரியாக வந்தால் எங்க டான்ஸ் பிராக்டிஸ் பண்றது என சந்தேகம் வர ரிஷி அதற்கு பதில் சொன்னான்..

"உங்கள் யாருக்கும் பிரச்சினை இல்லை என்றால் எங்க வீட்டுல பிராக்டிஸ் பண்ணலாம்.." - ரிஷி

அதிசயமாக தர்ஷினி கூட சரி என்றாள்.

தினம் தினம் காலையில் அஞ்சலியின் ஹாஸ்டல் சென்று அவளை என் வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை ரிஷியே ஏற்று கொண்டான். திரும்பி காலேஜ் ஆரம்பிக்கும் நேரத்தில் அவளோடு வருவதாக பிளான்.. ஏன் இப்படி என்பது அவனே வாய் திறந்து சொன்னால் தான் தெரியும்.

தர்ஷினி தன் காரில் வருவதாகவும் கூடவே வரும் வழியில் ராமை பிக் அப் செய்து கொள்வேன் என்றாள்.

அர்ஜுன் மற்றும் பிங்கி வழக்கம் போல ஒன்றாக வருவதாக முடிவு ஆனது.

எல்லாம் அந்த சங்கீதாவின் முடிவில் தான் இருக்கு.

****************

அன்று இரவே சங்கீதாவை பார்த்து பிங்கி பேச வந்தாள்."சங்கி.. ஒரு சின்ன ஹெல்ப்?"

"ஏ.. பிங்கி ஃபர்ஸ்ட் என்ன ஹெல்ப் சொல்லு? அப்பறம் அது சின்னதா? பெருசா? பார்க்கலாம்.."

"அது வந்து.. வந்து.."

"அதன் வந்திட்டியே சொல்லு.."

"எங்க காலேஜ் ல நெக்ஸ்ட் month ஒரு டான்ஸ் போட்டி இருக்கு. அதற்கு நீ.. நீ.."

"என்ன டான்ஸ் ஆட சொல்லி தரணுமா?"

"ஆமாம்.. என்னோட சேர்த்து ஆறு பேருக்கு.."

"ஓய்.. என்னடி காமெடி பண்றியா? நோ வே.. உன் ஒருத்திக்கே நேரம் எடுத்து சொல்லி வருவது கஷ்டம்.. இதில் உன்னை சேர்ந்து ஆறு பேர் என்றால்.. சான்ஸ் ஏ இல்ல.."

"பிளீஸ் பிளீஸ்.. சங்கி உன்னை நம்பி தான் இருக்கோம். எங்க யாருக்குமே டான்ஸ் அவ்வளவா வராது.. இதில் என் வெங்கி.. சுத்தம்.. அவனுக்காக தான் டி கேட்கிறேன்.. பிளீஸ்.. பிளீஸ்.. ஹெல்ப் பண்ணு.."

"ஏய்.. அது எப்படி? உன் ஒருத்திக்கு என்றால் இங்கேயே சொல்லி தரலாம்.. மொத்தம் ஆறு பேர்.. இதில் ஒரே மாசத்தில் நடக்கிற காரியமா?"

"அதெல்லாம் நடக்கும். இடம் கூட நாங்க பார்த்து வைச்சு இருக்கோம்... நல்ல பெரிய இடம் தான்."

"விட மாட்ட போல.. சரி சரி.. உங்க எல்லாரோட ஃபோட்டோ, ஹைட் வெயிட் மற்றும் அவர்களின் ஸ்பெஷல் திறமை அதாவது ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட், ஃபுட்பால், என்ன விளையாட்டாக இருந்தாலும் ஓகே... அதை வைத்து எந்த மாதிரி சொல்லி கொடுக்கலாம் பார்க்கலாம்.."

"இவ்வளவு எதுக்கு?"

"பிங்கி டான்ஸ் எல்லாம் ஒரு விட தியானம் போல.. மனசில் இருக்கும் வலி சந்தோசம் சோகம் எல்லாம் வெளிப்படுத்தும் கலை.. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஜாக்கி சான் படம் பார்த்து இருப்பாய்.. அதில் ஜாக்கி என்ன பண்ணுவார் தன் எதிரிகளை அடிக்க அல்லது அவர்களின் அடிகளில் இருந்து தற்காத்து சொல்ல பல மூவ் வைத்து இருப்பார். என்னை மாதிரி டான்ஸ் ல ஆர்வம் இருப்பவர்கள் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்து இருக்கோம் அது.. ஒவ்வொரு மனிதன் தன் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு வேலையில் அவனுக்கு தேவையான நடனம் இருக்கு. அதை தன் உணர்வால் வெளியே கொண்டு வர வேண்டும்."

"ஹ்ம்ம்.. இதுவெல்லாம் யார் சொன்னாங்க?"

"என் காதலன்.. என் விக்கி.. விக்ரம் அதன் அவன் பெயர்.."

"நீ சொல்றது உன் யூடியூப் வீடியோ ல முகமூடி போட்டு கொண்டு உன் கூடவே ஆடினா ஃபேமஸ் விக்கி தே மாஸ்க்.. சரியா?"

"யெஸ்.."

"அவர் ஏன் முகத்தை காட்டுவது இல்ல..? உன் டான்ஸ் ஷோ ஜட்ஜ் கூட அவரின் முகத்தை பார்த்தது இல்லனு சொல்றாங்க.. அப்படி தான் இன்டர்நெட் ல போட்டு இருக்கு.."

"அவனுக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. அதோடு அவனோட அப்பா அம்மாவுக்கு அவன் டான்ஸ் ஆடுவது பிடிக்கல... அதையும் மீறி தன்னை பற்றி வெளியுலக்கதுக்கு சொல்ல மாட்டேன் என்ற சத்தியம் செய்த காரணத்தால் தான் அவனை விட்டார்கள். மற்றப்படி அவனை பற்றிய உண்மை தகவல் அறிந்த சில பேரில் நானும் ஒருத்தி.. மை டான்ஸ் குரு கூட அவன் தான்.."

"ஹ்ம்ம்.. அவரின் ஃபோட்டோ ஏதாவது இருக்கா?"

"இருக்கு ஆனால் அவனுக்கு சத்தியம் பண்ணி இருக்கேன் அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் காட்ட மாட்டேன் சொல்லி இருக்கேன். அப்படி மட்டும் கட்டினேன் என்றால் ப்ரேக் அப் தான்.."

"சும்மா காட்டு.. நீ சொல்லாமல் அவனுக்கு எப்படி தெரியும்..?"

"அது எல்லாம் தெரியும். எங்க டெலிபதி பவர் அப்படி😝. உண்மையான காதல் இருக்கும் இடத்தில் வார்த்தைக்கு இடம் இல்ல.."

"ஹ்ம்ம்.. பாருடா எப்போ லவ் சொன்னிங்க?"

"அது இருக்கும் ஐந்து வருடம்.."

"என்னது..?"

"ஓய்.. இதுக்கு என்ன ஷாக் ஆகிற? அமெரிக்கா வாழ்க்கையில் இதுவெல்லாம் சோ சிம்பிள்.."

"அது மட்டும் தானா.. இல்ல.."

"யூ மீன் sex..?"

"யெஸ்.."

"இன்னும் நாங்க மேஜர் ஆகல.. சோ ஒன்லி கிஸ் அண்ட் ஹைக் தான்."

"செம்ம ரொமான்ஸ் போல..?"

"இருக்காதா பின்ன..? நான் சும்மா இருந்தாலும் அவன் சும்மா இருக்க மாட்டான்.. பேசி பேசியே கன்னம் சிவக்க வைத்து விடுவான்.."

"ஹ்ம்ம்.. எனக்கு ஒருத்தன் இருக்கேன் பார்.. அவன் கண்ணுக்கு நான் ப்ரெண்ட் ஏ விட வேற எந்த விதத்திலும் தெரியவே இல்ல.. என்னை தவிர எல்லார் பெண்களும் அவன் கண்ணுக்கு அழகு தான்.."

"விடு விடு.. நான் பார்த்துக்கிறேன்.. இந்த ஒரு மாசத்தில் டான்ஸ் கூட சேர்ந்து அவனுக்கு உன் மேல் காதலும் வர வைக்கிறேன்."

"ஹ்ம்ம்.. பார்ப்போம் பார்ப்போம்.."

ஒரு மணிநேரத்தில் எல்லாரின் bio data எல்லாம் கொடுத்தவள் நாளைக்கு பார்க்கலாம் என தூங்க போய் விட்டாள்.

அதன் பிறகு ஒன்று ஒன்றாக அதனை பார்த்தாள். ஒரு முடிவுக்கு வந்தவள்..

தன் காதலன் விக்கிக்கு வாட்ஸ்அப் கால் செய்து..

"விக்கி உனக்கு சில பேரை பற்றி ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்கேன். அதை எல்லாம் பார்.. கண்டிப்பா நீ பார்த்து ஷாக் ஆக போகிறாய்?"

"தூ.. சீன் போடாமல் வாய் மூடு.. இன்னும் ஐந்து நிமிடத்தில் என்ன எதுனு பார்த்து சொல்றேன்.."

அதனை எல்லாம் பார்த்தவன் ஒரு இடத்தில் அதிர்ச்சி ஆகி உடனே அவளுக்கு ஃபோன் செய்து..

"கீதா.. என்னடி இது எப்படி?"

"எனக்கு எப்படி தெரியும்? அதிசயம் ஆனால் உண்மை. அதை பற்றி அப்பறம் பார்க்கலாம் இப்போ இந்த ஜோடிகளின் தகவல் படி என்ன மாதிரி டிரெய்னிங் கொடுத்தால் செட் ஆகும் சொல்லு.."

அவனின் பிளான் எல்லாம் சொல்லி முடித்தான்..

"ஹ்ம்ம்.. நாளைக்கே நாங்க பிராக்டிஸ் பண்ண வீடியோவை ரெக்கார்டு பண்ணி அனுப்புகிறேன் அதை வந்து இன்னும் ஐடியா சொல்லு.."

"டபிள் ஓகே.."

பின் அவர்களின் எப்போதும் போல அவர்களின் காதல் லீலை பேச்சுகள் நடந்தது..

*******************

ரிஷியின் வீடு..

தன் முன்னால் இருந்த கூட்டத்தை பார்த்து கேள்வி குறியோடு சதாசிவம் மற்றும் பார்வதி (ரிஷியின் தாத்தா மற்றும் பாட்டி) இருந்தார்கள்.

ரிஷியே அவர்களை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தான்..

"அப்பா அம்மா.. இவர்கள் தான் என்னோட ப்ரெண்ட்ஸ் அடுத்து நான் அடிக்கடி சொல்ற எலி.. அஞ்சலி, இது ராம்.. ரெண்டு பேருமே அடிக்கடி அழகன் அழகி என மாற்றி மாற்றி கூப்பிட்டே கடுப்பு ஏற்றுவார்கள், அப்பறம் இவங்க ரெண்டு பேருமே அர்ஜுன் மற்றும் பிங்கி.. பிங்கி ஜெயின் இவள் நார்த் இந்தியா அப்பாவுக்கும் சவுத் இந்தியா அம்மாவுக்கு பிறந்த குமரி அதே போல அர்ஜுனின் உயிர் தோழி. இதில் அவளுக்கு மட்டும் அவன் வெங்கி தான் அந்த பெயர் சொல்லி நீ கூப்பிட்டால் நீ சட்னி தான். அப்பறம் இவள் தர்ஷினி நேற்றே சொன்னேன் ல ஒருத்தி நண்பன் கூட பார்க்காமல் அவனை கிண்டல் செய்கிற மாதிரி வீடியோ பண்ணாள் என? அந்த நல்ல பொண்ணு இவள் தான். தன் தான் எல்லாம் என்கிற திமிர் பிடித்தவள்.. என் நேரம் இன்னும் ஒரு மாசத்துக்கு இவள் கூட குப்பை கொட்டனும் இருக்கு. எல்லாம் இந்த ராம் முண்டம் பண்ண வேலை.. அப்பறம் அவங்க.." - ரிஷி

"வெயிட் வெயிட் ரிஷி.. என்னை பற்றி நானே சொல்றேன் ஏனென்றால் என்னைப் பற்றி உனக்கே சரியா தெரியாது..", என தன்னை பற்றி சங்கீதா சொல்ல ஆரம்பித்தாள்.

"ஹாய்.. என்னோட பெயர் சங்கீதா பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்கா தான். இந்தியாவிற்கு நான் வருவது இதன் ஃபர்ஸ்ட் டைம் எங்கப்பா கல்யாணத்திற்கு பிறகு அமெரிக்கா ல செட்டில் ஆனவர் தான். அம்மா அப்பாவுக்கு நெருங்கிய சொந்தம் சொல்ற அளவுக்கு யாருமே இல்ல.. இப்போ நான் இந்தியா வந்தது கூட என்னோட பாய் ஃப்ரெண்டோட தாத்தா பாட்டியை பார்க்க தான். இன்னும் சில மாசத்தில் அவனோட அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வருது அதற்கு கூட இருந்து இவர்களை அழைத்து கொண்டு போகலாம் என்கிற பிளான் ல வந்து இருக்கேன். முதலில் அவன் வர மாதிரி தான் பிளான்.. பட் கிளம்பும் நேரத்தில் சின்ன ஆக்ஸிடென்ட் அதில் கால் ல சின்னதா பிரேச்சர்.. அதனால்தான் பிளான் பண்ண மாதிரி எல்லாம் நடக்க அவனுக்கு பதில் இங்க வந்து இருக்கேன்." - சங்கீதா

"ஓய் சங்கி.. அது உண்மையில் உன்னோட சொந்த தாத்தா பாட்டி என்று தான் நினைத்தேன்." - பிங்கி

"நான் எப்போ அப்படி சொன்னேன்.. அவன் ஆசையாக பேத்தி பேத்தி என சொல்வதை கேட்டு அப்படி நினைத்து இருப்பே.. நானா அப்படி சொல்லல பா.. அவர்கள் விக்கி ஏ கூட நேரில் பார்த்தது இல்ல.. ஃபோட்டோ ல கூட பார்க்க மாட்டோம் நேரத்தில் போய் பார்த்துக்கிறோம் என்று சொல்லிட்டாங்க.. விக்கி கூட அதுவும் சரி தான் சொல்லிட்டான்." - சங்கீதா

அப்போ பார்வதி பாட்டி..

"யம்மா பொண்ணே.. உன் காதல் விஷயம் உங்க அம்மா அப்பாவுக்கு தெரியுமா?"

"ஓ.. தெரியுமே. நாங்க ரெண்டும் பேருமே ஃபர்ஸ்ட் லவ் பண்றோம் சொன்னதே அவர்கள் முன்னாடி தான். இப்போதைக்கு படிப்பு முடியாட்டும் என சொல்லி இருக்காங்க.. மற்றபடி எந்த கட்டுப்பாடும் அதிகமில்லை. நாங்களும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணி கிட்டு இருக்கோம். ஏன் பாட்டி உங்களுக்கு இந்த வயசில் லவ் பண்றது தப்பாக தெரிகிறதா?" - சங்கீதா

"அது இல்லமா? இந்த காலத்தில் எது காதல் எது காமம் என்று தெரியாத அளவுக்கு மாறிப் போச்சு நீ சின்ன பொண்ணு பதினெட்டு வயசு கூட ஆகலைன்னு சொல்ற அதான் ஒரு தடவை தெளிவுப்படுத்தி கொள்ள கேட்டேன். நம்ம செய்யது சரியோ தப்போ வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிஞ்சு செய்தால் ரொம்ப நல்லதுன்னு நினைக்கிறேன் மற்றபடி ஒன்னும் இல்ல.." - பார்வதி

"கண்டிப்பா பாட்டி.. நாங்க எதையும் மறைப்பது இல்ல.. முக்கியமா விக்கி.. சாரி முழு பெயர் விக்ரம்.. அவன் எது செய்தாலும் அவனின் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் மாட்டான் என்னையும் செய்ய விட மாட்டான். நாங்க வளர்ந்தது என்னவோ அமெரிக்கா என்றாலும் இந்தியா கலாச்சாரம் எங்களுக்கு தெரியும், என்னை விட அதை அவன் மதிக்கிறான். இப்போ கூட என்னை தனியாக அனுப்ப அவனுக்கு இஷ்டம் இல்ல. நான் தான் பிடிவாதம் பிடித்து வந்து இருக்கிறேன்.. அதில் ஐயாவுக்கு கொஞ்சம் கோபம் மற்றப்படி ஃபோன் ல பேசும் போது அன்னிக்கு அவன் செய்தது.. நான் செய்தது எல்லாம் மாற்றி மாற்றி சொல்லிவிட்டு தான் தூங்க போவோம்.. இல்ல அந்த நாளே எங்களுக்கு போகாது.." - சங்கீதா

(சாரி நண்பர்களே, சங்கீதா ஓவர் ஆ பேசுகிறாள் தெரியுது. ஆனால் என்ன பண்றது இனி கதை போக போக இந்த தகவல் எல்லாம் கதைக்கு முக்கியமானது. அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொங்க..🙏🙏)

"ஹ்ம்ம்.. மூச்சு விடாமல் மொத்த கதையும் சொல்ற.. அது சரிம்மா உனக்கு எப்படி ரிஷி ஏ தெரியும்? அவனுக்கு இந்த கால பசங்க மாதிரி ஃபேஸ்புக் , டுவிட்டர் மாதிரி பயன்படுத்தும் பழக்கம் கூட இல்லயே?" - பார்வதி

ரிஷியே அதற்கு பதில் சொன்னான்..

"அம்மா.. இவங்க எங்களுக்கு டான்ஸ் சொல்லி தர வந்து இருக்காங்க.. அடுத்த மாசம் நாங்க ஆறு பேருமே ஜோடி ஜோடியாக டான்ஸ் ஆட பேர் கொடுத்து இருக்கோம்.. அதன்.." - ரிஷி

"நீயா? அதுவும் டான்ஸ் ஆ? ரிஷி குட்டி.. காலேஜ் போய் காதல் என வந்து நிற்பே பார்த்தால் டான்ஸ் ஆட போறேன் சொல்லி வந்து இருக்கே.. இந்த முன்று பொண்ணுங்களில் யாருப்பா உனக்கு ஜோடி..?" - சதாசிவம்

"அதோ அந்த எலி தான் பா.." - ரிஷி

"என்னப்பா பொண்ணு பார்க்க அழகா இருக்கிறாள் அவளுக்கு போய் எதுக்கு இந்த பட்ட பெயர்?" - சதாசிவம்

"எல்லாம் அவளின் கிச்சு குரல் தான் காரணம்.. எப்போ பார்த்தாலும் கிச்சு கிச்சு என பேசிக்கிட்டே இருப்பாள். வாலு சரியான வாலு.. மனசில் சின்ன குழந்தை நினைப்பு வேற? யார் என்ன சொன்னாலும் என்ன ஏதுன்னு என்று கேட்காமல் நம்பும் லூசு.." - ரிஷி

"ரிஷி சொல்ற மாதிரி எல்லாம் இல்ல தாத்தா.. அவன் சொல்றதை நம்பாதீங்க.." - அஞ்சலி

"நீ அப்படி தாண்டி.. காலிபிளவர் பக்கோடாவை சிக்கன் பக்கோடா என நம்பி ஓவர் காசு கொடுத்து ஏமாந்த லூசு தானே நீ..?" - ரிஷி

"ஏய்.. இதுக்கு மேல் ஏதாவது பேசினே.." - அஞ்சலி

"என்னடி பண்ணுவே.. பேசுற வாயை கடித்து வச்சுடுவேன்.." - ரிஷி

அப்பறம் ரிஷி எதுவும் பேச வில்லை.. அவள் சொன்னதற்கு அர்த்தம் தெரிந்து சொன்னாலோ தெரியாமல் சொன்னாலோ ரிஷி மனசில் பல கனவினை தெரியத்தானமாக விதைத்து விட்டாள்.

அதனை அவளை போல ராம் மற்றும் அர்ஜுன் புரியாமல் பார்க்க.. மற்றவர்கள் அவள் சொன்னதில் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்..

பார்வதி மற்றும் சதாசிவத்துக்கு மட்டும் தங்களின் பேரனின் செயல்பாட்டில் இருந்த வேற்றுமையை கண்டு கொண்டார்கள்.

பல வருசத்துக்கு பிறகு அவன் முகத்தில் இருந்த புன்னகை மற்றும் இப்போ நண்பர்கள் என பெரிய கூட்டம் எல்லாம் பார்த்து தங்களின் பேரன் பழைய ரிஷி போல மாறும் நாள் வெகு தொலைவில் இல்ல என்பதை புரிந்து கொண்டான்.

இன்னும் மற்றவர்களின் சிரிப்பு அடங்க வில்லை..

அந்த சிரிப்பில் கடுப்பு ஆன அஞ்சலி..

"போதும் சிரித்தது.. அப்பறம் நான் அழுதுடுவேன்..😖" - அஞ்சலி

பார்வதி பாட்டி மட்டும் அவளை தன் தோளில் சாய வைத்து சமாதானம் செய்தார்கள். அதனை ரிஷி பார்த்து மனதிற்குள்..

' பரவல நம்ம எலி எங்க போனாலும் எல்லாரையும் தன் பக்கம் இழுத்து விடுகிறாள். இதில் மயங்கி போய் அவள் கிட்ட காதல் சொல்லலாம் பார்த்தால் இந்த ராம் வேற இது காதல் இல்ல வெறும் ஈர்ப்பு சொல்லி சொல்லியே சாவடிக்கிறான். அடேய் என் நிலைமை உனக்கும் ஒரு நாள் வரும் அப்போ நானும் அதே சொல்றேன் டா..😡😡' - ரிஷி மனதில்

பின் சங்கீதா கூட எல்லாரும் டான்ஸ் பிராக்டீஸ் செய்யும் இடத்துக்கு சென்றார்கள்.

சங்கீதா மற்றும் மற்றவர்கள் நினைத்து விட அந்த இடம் பெரிதாக தான் இருந்தது. ஆயிரம் பேர் நிற்கும் அளவுக்கு இடம்.. சுற்றி கண்ணாடி சுவர்கள். ஒரு பக்கம் உடற்பயிற்சி செய்யும் சாதனங்கள் என சிலது இருந்தது.

அதனை பார்த்த சங்கீதா..

"எல்லாம் உன்னுடையதா?"

"ஹ்ம்ம்.. அப்படியும் சொல்லலாம்.. சிலது அப்பா கூட பயன்படுத்துவர்.."

"உனக்கு தாத்தா பாட்டி மட்டுமே தானே இப்போ இருப்பது போல சொன்ன?"

"அவர்களை நான் அப்பா அம்மா என்று தான் அழைப்பது. காரணம் அப்பறம் நேரம் கிடைத்தால் சொல்கிறேன். இப்போதைக்கு இந்த ரூம் ஓகே ல.. உங்களுக்கு வேற ஏதாவது ஏற்பாடு செய்து தரணுமா?"

"வாங்க போங்க மாதிரி எல்லாம் வேண்டாம்.. உங்க எல்லாருக்கும் சொல்றேன்.. எனக்கும் உங்க வயசு தான் ஆகுது.. பிங்கி என்னை கூப்பிடுவது போல சங்கி என்றே கூப்பிடுங்க.. அதன் எனக்கும் பிடிக்கும். அப்பறம் ரிஷி இன்னும் சிலது வேண்டும் அதை பற்றிய லிஸ்ட் மதியம் நீங்க காலேஜ் போவதற்குள் தருகிறேன். இன்னிக்கு பிராக்டிஸ் சொல்ற அளவுக்கு ஒண்ணும் இல்ல.. நான் எப்படிப்பட்ட டிரெய்னிங் கொடுக்க போறேன் என்பது மட்டும் சொல்றேன்.."

அப்போ அந்த அறைக்கு பார்வதி மற்றும் சதாசிவம் கூட வர.. இவள் மரியாதைக்கு வணக்கம் ஒன்றை வைத்து விட்டு தன் ஃபோனில் ரெக்கார்டு மொட் ல வைத்து எல்லாரையும் அது கவர் பண்றதை உறுதி படுத்திக்கொண்டு தொடர்ந்தாள்.

"முதலில் ரிஷி உன்னை பற்றி பார்ப்போம்.. ஒன்பது வயது வரை நீ ப்ரேக் டான்ஸ் கற்று கொண்டு ஸ்கூல் ல அப்போ அப்போ ஆடி பரிசு என பெருசா வாங்கல என்றாலும் உனக்கு அதில் கொஞ்சம் ஆர்வம் இருந்து இருக்கு. பின் ஏதோ காரணத்தால் அதை தொடராமல் விடு இருக்கே.. சரியா?"

"யெஸ்.. அந்த சமயத்தில் என்னை பெற்றவர்களின் இறப்பு அதற்கு பிறகு அதிகம் எதிலும் நாட்டம் இல்ல.. பாட்டி சொல்லி புத்தகம் வாசிப்பது தொடர்ந்து படிப்பில் மட்டும் கவனமாக இருந்தேன். ரொம்ப வருசத்துக்கு பிறகு டான்ஸ் திரும்பி வருமா என பார்க்கணும்.."

"அது என் பொறுப்பு. யூ டோண்ட் வொர்ரி.. இது உன்னோட டிரெய்னிங் லிஸ்ட்.. இதில் நீ என்ன என்ன மாதிரி எல்லாம் வரும் ஒரு வாரத்தில் பிராக்டீஸ் பண்ணனும் என போட்டு இருக்கேன். இந்த ஒரு வாரத்தில் உன்னோட ஃபோகஸ் எல்லாம் உன்னை சுற்றி இருக்கும் காற்றை உள் வாங்கி அதற்கு தகுந்த போல கை கால் அசைத்து உனக்கான ஒரு டான்ஸ் step நீயே கொண்டு வர.. ஏற்கனவே சின்ன வயசில் டான்ஸ் ஆடிய அனுபவம் உனக்கு இருக்கு அதை திரும்பி மனதில் கொண்டு வந்து உன் கை காலுக்கு உன் மனம் மூலம் கொண்டு வந்து விட்டால் முக்கால் வாசி வேலை முடிந்தது."

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு புரியல என்றாலும் முயற்சி செய்து பார்ப்போம் என தீர்மானத்தில் சரி என்றான்.

அடுத்து அஞ்சலி கிட்ட போன சங்கீதா..

"அஞ்சலி.. அஞ்சு நான் அப்படியே கூப்பிடுறேன் ஓகே.."

"ஓகே.. ராம் ரிஷி தவிர எல்லாரும் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க.."

"ஹ்ம்ம்.. ஓகே.. உன்னோட ஒரு வர டிரெய்னிங் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். காரணம் ரிஷியோட உன்னோட ஹைட் பிராப்ளம்.. டான்ஸ் என வரும் போது ஒரு ஜோடியில் இருவரின் ஹைட் கொஞ்சமாவது ஒரு அளவுக்கு இருக்கணும். உனக்கு புரியும் நினைக்கிறேன்.."

"அப்போ ரிஷி கூட என்னால் ஆட முடியாதா?"

"ஏன் முடியாது? எல்லாம் முடியும். டான்ஸ் ஒரு கலை அந்த கலைக்கு உயரம் கூட தடை இல்ல. அது எப்படி என போக போக உனக்கே தெரியும். உங்கள் ஜோடிக்கு நான் தேர்ந்தெடுத்த நடனம்.. ballet dance.. இதற்கு உயரம் பெரிய தடை இல்ல.. ஆனால் இதற்கு ரொம்ப முக்கியம் உடல் நன்றாக வளைந்து நடனம் ஆடனும்.. அதில் உனக்கும் ரிஷிக்கும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கு. ரெண்டு பேருக்குமே யோகா தெரியும்.. தினமும் யோகா செய்யும் பழக்கம் உனக்கு இருக்கு என பிங்கி கொடுத்த பேப்பர் ல இருந்தது. அதே போல உன் இல்லத்தில் வளரும் குழந்தைகள் கூட விளையாட்டு தனமாக நீ ஆடிய இருப்பதாக அவள் சொன்னாள். நீ செய்ய வேண்டியது எல்லாம் நான் சொல்ற சில யோகாசனத்தை பயிற்சி செய்வது மட்டுமே.. இன்னும் ஒரு வாரத்துக்கு அதன் உன் வேலை.." -

"கை கால் எல்லாம் சுளுக்கமால் இருந்தால் சரி தான்.." - ரிஷி

"அதற்கு ஏற்ற warm up எல்லாம் சொல்லி தருவேன். அதை சரியாக இவள் செய் போதும். அவளை பற்றி நீ கவலைப்படாதே.." - சங்கீதா

"ஓகே." - ரிஷி

"அப்படியே செய்கிறேன் சங்கி.." - அஞ்சலி

அடுத்து அவள் சென்றது தர்ஷினி கிட்ட..

"இதன் உன்னோட லிஸ்ட்.. இன்னும் ஒரு வாரத்துக்கு உன்னோட workout எல்லாமே ஸ்கிப்பிங் தான்."

"சே.. இவ்வளவு தானா? "

"ரொம்ப சந்தோசம் பட வேண்டாம். சும்மா இல்ல கண்ணை கட்டி கொண்டு பண்ணனும்.. அதுவும் வித விதமாக 200 டைம்ஸ் வரிசையாக.. ஒன்று மிஸ் ஆனாலும் முதலில் இருந்து.."

"ஓய்.. அதெல்லாம் முடியாது.. கீழே விழுந்தால் வை கால் உடையவா?"

"ஒண்ணும் நடக்காது. உனக்கு முன்னாடி பின்னாடி சில பெட் எல்லாம் போட்டு வைப்பேன். உன்னோட ஃபோகஸ் எல்லாம் ஸ்க்கிப்பிங் ரோப் ரின் நகரும் வேகத்தில் தான் இருக்கணும். ஒரு வாரத்தில் உனக்கே ஏன் இப்படி ஒன்றை கொடுத்தேன் தெரிய வரும்.."

அடுத்து ராம்.. சங்கீதா பேச ஆரம்பித்தற்கு முன்னாடி அவனே ஆரம்பித்து விட்டான்.

"இங்க பார்.. எனக்கு அவங்களை மாதிரி யோகா இல்ல டான்ஸ் ஆடி எல்லாம் பழக்கம் இல்ல.. எனக்கு தெரிந்தது எல்லாம் பேசுறது மட்டும் தான் அதை வைத்து டான்ஸ் எப்படி ஆக முடியும்.."

அவன் வாயில் ஒரு டேப் வைத்து ஒட்டியவள்..

"சுப்.. இந்த ஒரு மாசத்துக்கு இந்த பேச்சு மட்டும் குறை.. அதுவும் என்கிட்ட.. உனக்கு சூப்பர் ஆ ஒண்ணு வைத்து இருக்கேன்.. இந்த பலூன்.."

ரெண்டு முன்று பலூன்களை உதி கட்டி அவன் கையில் கொடுத்தவள்..

"இதை எல்லாம் ஒரே சமயத்தில் தட்டி தட்டி நீ விளையாட வேண்டும். நாளையில் இருந்து உன் பிராக்டீஸ் ஆரம்பம். தினம் தினம் ஒவ்வொரு பலூன்னின் எண்ணிக்கை ஏறும். முன்று, நான்கு, ஐந்து.. என போய் கிட்டே இருக்கும்."

"இதுக்கும் டான்ஸ்க்கும் என்ன சம்மந்தம்?"

"ஒரு வாரத்துக்கு பிறகு நீயே தெரிந்து கொள்வாய்.."

அர்ஜுன் மற்றும் பிங்கி அருகே வந்தவள் முதலில் பிங்கியே பார்த்து..

"முதலில் உன் கிட்ட சாரி சொல்கிறேன். வேற வழி இல்ல.. நீ கொஞ்சம் உடல் எடை குறைந்து தான் ஆகணும்.. அதுவும் ஒரே வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ குறைத்தல் தான் நான் நினைத்த மாதிரி செய்ய முடியும். இது உன்னோட டயர்ட் பிளான், எக்ஸர்சைஸ் பிளான்.. அப்படியே அப்போ அப்போ சில யோகாசனம் எழுதி இருக்கேன். எதை எல்லாம் சரியாக கடைப்பிடித்தால் ஓர் அளவுக்கு நம்ம நினைத்த மாதிரி கொஞ்சம் எடை குறையும்.."

"புரியுது.. கண்டிப்பா என் வெங்கிகாக பண்றேன்.. அவன் பட்ட அவமானம் எல்லாம் போகணும்..😡😡"

"ஹ்ம்ம்.. அது உன் கையில் மட்டும் இல்ல அவனும் மனசு வைக்கணும்.."

பின் அர்ஜுன் கிட்ட வந்தவள் ஒரு நிமிடம் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்..

அதில் கூச்சம் கொண்டவன்..

"யம்மா தாயே என்னை உத்து உத்து பார்க்கணும் அளவுக்கு இங்க ஒண்ணும் இல்ல.. சொல்ல வந்ததை சொல்லுமா?"

"உன்னோட வாட்ஸ்அப் வீடியோ பிங்கி காட்டினாள்."

"ஊரே பார்த்து விட்டது அதில் நீ பார்த்த என்ன? பார்க்காட்டி என்ன?.. அதில் பார்த்தே போதே தெரிந்து இருக்கனுமே இவனுக்கு சுட்டு போட்டாலும் டான்ஸ் வராது என்பது..?"

"இல்ல.. நீ சரியா பிராக்டீஸ் பண்ண கண்டிப்பா வரும். அதற்கு பிரச்சினையாக இருப்பது உன்னோட ஒரு பழக்க வழக்கம் தான்.."

"புரியல.."

"உன்னோட பலம் பலவீனம் எல்லாமே உன்னோட இடது பக்க பழக்கம் தான்.. உன்னோட டான்ஸ் ல அதிகம் ஆதிக்கம் செலுத்துவது எல்லாம் இடது பக்க நடனம் தான். அதில் ஒரு balance இல்ல.. உடலின் மொத்த எடையும் உன் இடது பக்கமே இருக்கு அப்படி தான் நீ நடந்து கொள்கிறாய்.. இப்போ கூட பார் நிற்கும் போது கூட உன் மொத்த உடலும் இடது பக்கம் தான் சாய்ந்த மாதிரி நிற்கிற.. அதில் கொஞ்சம் ஒழுங்கு கொண்டு வரணும்.. மற்றவைகளை விட உன் விஷயத்தில் தான் வேலை அதிகம் அதற்கு ஏற்றது போல உனக்கு அதிக வலிகள் இருக்கும். கண்டிப்பா உனக்கு இந்த டான்ஸ் தேவையா?"

"வேற வழி.. கமிட் ஆய்ட்ட்டேன் இனி ஒண்ணும் செய்ய முடியாது. நான் என்னவெல்லாம் பண்ணனும் சொல்லு.. என்னை நம்பி பிங்கி வேற கூட ஆட சம்மதம் சொல்லி இருக்கிறாள். என்னால் அவளுக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்து கொள்வது என் வேலை."

"இப்போ அதன் பெரிய பிரச்சினை.. அவளை தவிர வேற யாராவது இருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்ல.."

"ஏன் அவளுக்கு என்ன குறைச்சல்?"

"குறைச்சல் இல்ல அதிகம்.. அவள் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகம் இருக்கு. உன்னை விட ஒன்றரை மடக்கு இடை எடை.. எல்லாம் உன்னை விட அதிகம். ரெண்டு பேரையும் ஜோடி என சொல்லி டான்ஸ் ஆட வைப்பது ரொம்ப கஷ்டம்.. சரியாக ஒரே மாசத்தில் இருவரையும் ஒரே இடையில் கொண்டு வரணும் இல்ல கண்டிப்பா காமெடி ஷோ தான்.."

"இது நடக்கிற காரியமா? எங்களின் உடல் அமைப்பே பிறந்ததிலிருந்து அப்படி தான். சில வருடமாக அவளும் உடலை குறைக்க முயற்சித்து பார்த்து விட்டாள். நானும் உடலை ஏற்ற முயற்சித்து விட்டேன். எங்க நேரம் எதுவும் நடக்கல"

"கண்டிப்பா கஷ்டம் தான் வேற வழி இல்ல.. உடல் அமைப்பை நம்மால் மற்ற முடியாது அதுவும் ஒரே மாசத்தில்.. ஆனால் உடல் எடையை மாறும் மாற்றுவோம்.."

"அதில் என்ன பெரிசாக நடக்க போகுது.."

"அதை அப்பறம் சொல்றேன்.. முதலில் நீ இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து முதல் பத்து கிலோ ஏறனும்.. அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சமாவது உன் கை பலத்தை ஏற்றனும்.. எந்த அளவுக்கு என்றால் உன் தோளில் பிங்கி உட்காந்தால் கூட அசராமல் நீ எழுந்து நிற்கும் அளவுக்கு."

"என்னை வைத்து காமெடி கிமேடி எதுவும் பண்ணலயே?"

"சே சே.."

"சத்தியமா..?"

"அட என் விக்கி மேல் சத்தியமாக.."

"சரி வேற வழி.. நான் என்ன என்ன செய்யனும் சொல்லு.."

"இதன் லிஸ்ட்.. பிங்கி சொன்னாள் நீ சுத்த சைவம் என அதற்கு தகுந்த மாதிரி டயர்ட் பிளான் இது. அப்பறம் இது இல்ல எக்ஸர்சைஸ்.."

"என்னது இது.. எல்லாமே pushup என்று போட்டு இருக்கு..?"

"யெஸ்.. அதில் மட்டும் தான் உடல் சமமாக எல்லா பக்கமும் வேலை செய்யும். ஒவ்வொரு pushup um ஒவ்வொரு மாதிரியான ரிசல்ட் தரும். முக்கியமாக உன் தோள் பகுதிக்கு சக்தி தரும். நான் எதிர் பார்க்கும் நடனத்துக்கு இது முக்கிய தேவை. என்னை நம்பு கண்டிப்பா இதுக்கு தேங்க்ஸ் சொல்லுவே.."

பின் அவள் ரெக்கார்டு பண்ணது வரை விக்கி என்கிற விக்ரமுக்கு அனுப்பினாள்.

அதனை பார்த்துவிட்டு இரவு ஃபோன் செய்தவன்..

"கீத்து.. எல்லாம் ஓகே டி.. இப்படியே தொடர்ந்து பண்ணு.. அடுத்த வாரத்தில் நானும் வீடியோ காலில் அவர்களிடம் பேசுகிறேன்.."

"அடேய்.. லூசு.. உன் முகத்தை மட்டும் இவர்கள் பார்த்தால் பெரிய பிரச்சினை வரும்.."

"அது பற்றி கவலைப்படாதே.. நான் எப்போதும் போல மாஸ்க் போட்டுப்பேன்.. உன்னை தவிர யாருக்கும் என் அடையாளம் தெரிய வேண்டாம்.. கடைசி வரைக்கும். அதன் நல்லதும் கூட.."

"அதுவும் சரி தான்.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு பிறகு இவர்கள் யாரோ? நம்ம யாரோ?"

"அது புரிந்தால் சரி.. இந்த ஹெல்ப் கூட நான் உனக்காக தான் செய்கிறேன்."

"தாங்க்ஸ்.."

"உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டி.."

"நானும் தான்.. என்ன பண்றது இன்னும் ரெண்டு மாசம் தான் அதுவரை எல்லாமே ஃபோன் ல தான்.."

"எல்லாமே என்றால்.? எல்லாமேவா?😉😉😏😘"

"சீ.. போடா.. அங்கே ரெண்டுமே பேருமே சேர்ந்து இருந்தவரை நல்ல பையன் மாதிரி இருப்பது. இப்போ ஃபோன் ல.."

"என்னடி பண்றது.. காதல் என்றாலே அப்படி தான்.. பக்கத்தில் இருக்கும் போது இந்த அளவுக்கு ஃபீல் பண்ணல.. இப்போ பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கோம்.. அதில் ரொம்பவே உன்னை மிஸ் பண்றேன்.. தொலைதூர காதல் கூட பயங்கர வலி தான்.."

"இன்னும் 53 நாள் தானே.. அப்பறம் உன்னை விட்டு பிரியவே மாட்டேன்."

"சத்தியமா..?"

"என் உயிராக நினைக்கும் உன் மேல் சத்தியம் டா.."

பின் ஒருவர் மாறி ஒருவர் தங்களின் பிரிவு வலியை பேசி கொண்டார்கள்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#15
வாராயோ வெண்ணிலாவே...!! 12
அத்தியாயம் 12


அடுத்த ஒரு வாரமும் சங்கீதா சொன்னது போலவே அவர்கள் எல்லாரும் பின்பற்றினார்கள்.

காலை சீக்கிரமே ரிஷியின் வீட்டில் கூடுவது, பயிற்சி செய்வது, அடுத்து மதியம் காலேஜ் செல்வது என்றே ஓடியது.

தங்கள் செய்வதில் எங்கே நடனம் வந்தது என புரியவில்லை என்றாலும் பல்லை கடித்து செய்தார்கள்.

**************

அர்ஜுன் மற்றும் பிங்கி நிலை தான் ஐயோ பரிதாபம்.

அதிக சாப்பாடு காரணமாக அடிக்கடி வயிற்று போக்கு என அவதிப்பட்டான். இதுவரை அதிக உடற்பயிற்சி செய்து இல்லை என்ற காரணத்தால் கை கால் வலி உயிர் வரை துன்பம் தந்தது. உடல் கழிவு வெளியேற்றம் கூட வலி நிறைந்து இருந்தது. அப்படி இருந்தும் தன்னால் பிங்கி அவமானப்பட கூடாது என்ற காரணத்தால் அந்த வலியை தங்கி கொண்டான். அதுவே போக போக பழகி விட்டது.

(உடற்பயிற்சி செய்யும் சில நாட்களுக்கு மட்டுமே உடம்பு அடித்துப்போட்டது போல வலி இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நமது உடல் தசைகள் அதற்கு ஏற்றது போல மாறி நம்ம எதிர்ப்பார்த்த பலன் தரும்.)

பிங்கி, அதிக டயர்ட் கண்ட்ரோல் மற்றும் கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி என ரொம்பவே அவதிப்பட்டாள். என்ன ஆனாலும் பாஸ்ட் புட் சாப்பிட கூடாது என சங்கீதா சொல்லி விட்டாள். அதற்கு பதில் ப்ரூட்ஸ் நிறைய சாப்பிட சொன்னாள். அவளும் முடிந்தவரை தன்னால் முயன்ற அளவுக்கு எடையை குறைத்தாள்.

அந்த வார முடிவில் அர்ஜுன் ஏழு கிலோ அதிகரித்தது மட்டும் அல்லாமல் கை கால்களில் எப்படியோ முன்னே விட பலத்தை பெற்றான். அப்படி இருந்தும் அவனால் இடது கை கால் அளவுக்கு வலது கை காலுக்கு பலத்தை பெற முடியவில்லை. பிறந்ததிலிருந்து செய்யும் எல்லா வேலையும் இடது பக்கத்திலேயே செய்து பழக்கம் கொண்டவனால் ஒரே வாரத்தில் இந்த அளவுக்கு மேல் மாற்றம் கொண்டு வர முடியவில்லை.

அவனை போல பிங்கி அவளுக்கு கொடுத்த லிஸ்ட் படி எல்லாம் செய்து சுமார் ஐந்து கிலோ குறைத்தாள். எடை ஏற்றுவது விட குறைப்பது உண்மையில் கஷ்டம் தான். எடை குறைந்த அளவுக்கு அவளால் இடையை குறைக்க முடியவில்லை. ஃபேமிலி ஜீன்ஸ் அவ்வளவு சீக்கிரம் எதுவும் பண்ண முடியல. முன்று மாத நேரம் இருந்தால் ஏதாவது செய்யலாம் ஆனால் இங்கே இருப்பதோ இன்னும் முன்று வாரங்கள் தான் அதில் சீக்கிரம் டான்ஸ் ஸ்டெப்ஸ் வேற பார்க்கணும்.

அதே நேரத்தில் தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல அர்ஜுன் பாட்டு போட்டியில் வேற பெயர் கொடுத்து இருந்த காரணத்தால் ஒரு பக்கம் நடனம் இன்னொரு பக்கம் பாட்டு என கட்டாயம் கற்க வேண்டிய நிலை. கழுதை குரல் வைத்து எப்படி பாட்டு பாடுது என்று அவன் முழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் பார்வதி பாட்டி அவனுக்கு உதவி கரம் நீட்டினார்.

பார்வதி பாட்டிக்கு கொஞ்சம் சங்கீதா ஞானம் இருந்தது. அதோடு சதாசிவம் அடிக்கடி இந்த காலத்து பாடல்களை தன் மனைவியோடு இரவு நேரத்தில் பாடிக்கொண்டு ஆடும் பழக்கம் இருந்ததால் இந்த காலத்து பாடல்களை பாடிக்கட்டவும் அவரால் முடியும்.

*****************

அடுத்து ரிஷி மற்றும் அஞ்சலி..

அஞ்சலியை பொறுத்தவரை சங்கீதா சொன்னதை எந்த கேள்வியும் கேட்காமல் சொன்னதை சரியாக கடைப்பிடித்தாள். அதன் விளைவு சங்கீத நினைத்ததைவிட அஞ்சலி நன்றாகவே பயிற்சி செய்தாள். Ballae நடனத்துக்கு முக்கிய தேவை உடல் வளைந்து நடனம் ஆடுவது. அதற்கு ஏற்றது போல ஒரு அளவுக்கு உடல் நினைத்த அளவுக்கு வளையும் தன்மை பெற்று விட்டாள்.

ரிஷி எல்லாத்துக்கும் சண்டை போட்டு கொண்டு இருந்தான். நான் என்ன லூசா சும்மா சும்மா காற்றில் வயலின் வாசிக்க, மரியாதையாக டான்ஸ் ஸ்டெப்ஸ் சொல்லி கொடு என தினம் தினம் சண்டை தான். அதற்கு சங்கீதா.. இஷ்டம் இருந்தால் நான் சொல்றதை செய் இல்ல வேற யாரையாவது போய் பார்த்து கத்துக்கோ என் டைம் வேஸ்ட் பண்ணாத ப்ளீஸ்.. என சொல்லி விட்டாள்.

அதில் கோபம் கொண்டவன் இரவு முழுதும் அவளின் யூடியூப் டான்ஸ் வீடியோஸ் எல்லாம் பார்த்து மட்டம் தட்ட ஏதாவது கிடைக்குமா? என பார்த்து கொண்டே இருந்தான். ஒண்ணும் கிடைக்காமல் கடைசியில் அவளின் நடனத்துக்கு விசிறி ஆனது தான் மிச்சம்.

' வீடியோ ல என்னமோ டான்ஸ் சூப்பர் ஆ தான் ஆடுக்கிறாள் இருந்தும் இப்போ நாங்க செய்வதுக்கும் இவள் சொல்வதுக்கும் என்ன சம்மந்தம்..?, மனதில் நினைத்தவன் ஒரு வாரத்துக்கு அதன் பதில் தெரியாது குழம்பினான்.

***********

அடுத்து ராம் மற்றும் தர்ஷினி..

தர்ஷினி ஸ்கிப்பிங் செய்வதில் நன்றாக தேறிவிட்டாள். முதலில் என்னடா இது ரொம்ப தொல்லையா போச்சு என நினைத்தாலும் போக போக அது அவளுக்கு ஜாலியவே இருந்தது.

ராம் முன்று பலூன் ல ஆரம்பித்தவன் இப்போ ஒன்பது பலூன்களை தட்டி விளையாடி கொண்டு இருக்கிறான். முதல் ரெண்டு நாட்கள் கஷ்டப்பட்டு மொக்கை வாங்கினாலும் போக போக அதோட நகரும் போக்கு புரிந்து அதற்கு ஏற்றது போக பழக்கி விட்டான். இப்போ ஐயாவுக்கு மனசில் மைக்கேல் ஜாக்சன் என நினைப்பு. அப்படி நினைத்து கொண்டு சில பல மூமென்ட்ஸ் அவனை உருவாக்கி விட்டான். ஆனால் என்ன யாராவது பேனாவை தூக்கி போட்டு பிடிக்க சொன்னாலும் கூட அதை பலூன் என நினைத்து தட்டுகிறான் மற்றபடி எல்லாம் ஓகே.

*****************

நாளை தங்களின் பிளானே சொல்ற நாள்.. இங்கே வாட்ஸ்அப் வீடியோ காலில் விக்ரம் கூட பேசிக்கொண்டு இருந்த சங்கீதா தன் பிரச்சினைகளை சொன்னாள்.

"நம்ம நினைத்த அளவுக்கு எதுவும் சரியா வரல டா..

1. நம்ம எதிர்பார்த்த வெயிட் விட பாதி தான் அர்ஜுன் பிங்கியால் ஏற்றி குறைக்க முடிந்தது. அர்ஜுன் கூட ஓகே பிங்கி விஷயத்தில் நினைத்து சாதிக்க முடியாது போல.

2. ரிஷி அடிக்கடி சொல்வதை கேட்காமல் சண்டை போடுகிறான். அவனுக்கு ஜோடி அஞ்சலி நினைத்த target சரியா பண்ணிட்டா.

3. ராம் அண்ட் தர்ஷினி நம்ம நினைத்தது மாதிரி சரி பண்றாங்க ஆனால் சேர்ந்து பண்ணும் போது எப்படினு பார்க்கணும். இவங்க மட்டும் இப்போதைக்கு ஓகே போல.

இனி நாளைக்கு நீ அவங்க கூட வீடியோ கால் பண்ணும் போது தான் சொல்லணும்."

"பிரச்சினை சொல்லிட்டே ல பார்த்துக்கலாம்.. அப்பறம் அடுத்த வாரமே நானும் அங்கே வருகிறேன். உன்னை பார்க்காமல் இருக்கே முடியல டி.."

"இதோ பார் டா.. காமெடி பண்ணாமல் ரெஸ்ட் எடு.. டாக்டர் இன்னும் உன்னை ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கார்."

"அந்த கருமத்தை நாங்க பார்க்கிறோம். யூ டோண்ட் வொர்ரி.. நான் வரேன் அவ்வளவு தான்.."

"உன்னை யாராவது பார்த்து விட்டால் என்ன பண்றது?"

"மாஸ்க் இருக்கு கடைசிவரை யாருக்கும் என்னோட அடையாளம் தெரியாத மாதிரி பார்த்துப்போம்.."

"நீ வர வேற காரணம் ஏதாவது இருக்கா?"

"ஹ்ம்ம்.. உன்னோட முட்டாள் கத்து குட்டி குழந்தைகளுக்கு கொஞ்சம் பாடம் சொல்லி தரணும்.."

"இது தேவையா?"

"நீ தானே சொன்ன ஜோடிக்கள் இன்னும் தங்களின் காதலை சொல்லிகல என?"

"அதுக்கு? இங்க பார் இது ஒண்ணும் அமெரிக்கா ல இந்தியா.. இன்னும் காதல் என்றால் தப்புன்னு சொல்ற கூட்டம் இன்னும் இருக்கு. போதாத குறைக்கு இவங்க ஆறு பேருக்குமே படிப்பில் தான் கர்வம் அதிகமா இருக்கு. டான்ஸ் என்பது கூட திடீர் ஏதோ சூழ்நிலையில் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் ஒரு மாசத்துக்கு பிறகு அதை கூட விட்டு படிப்பில் இவர்களின் கவனம் போய்டும். இப்போ இந்த காதல் பற்றி எல்லாம் விளக்கம் அவர்களுக்கு தேவையா?"

"கீத்து.. நீ தலைகீழா நின்றாலும் அவங்களை டான்ஸ் ஆட வைக்க முடியாது. டான்ஸ் ல ஸ்டெப்ஸ் மட்டும் முக்கியம் இல்லமா!! ரியாக்சன் கூட முக்கியம். அதற்கு அவங்க இடையே ஒரு கெமிஸ்ட்ரி வரணும்.. அதற்கு காதல் தான் ஒரே வழி.."

"ஏதாவது பிரச்சினை வர போகுது டா.. பிங்கி விஷயம் கூட ஓகே அவளுக்கு அர்ஜுன் மேல் லவ் இருக்கு. மற்ற நால்வர் விஷயம் வேற.."

"லூசு.. லூசு.. டெய்லி டெய்லி வீடியோ அனுப்பினாய் தவிர அதை ஒரு தடவை உட்கார்ந்து பார்த்தியா? இல்லையா? ஏற்கனவே நம்ம குழந்தைகள் எல்லாம் காதல் மயக்கத்தில் தான் இருக்காங்க.. சந்தேகம் இருந்தால் நான் ஏடிட் பண்ண வீடியோஸ் எல்லாம் அனுப்பி இருக்கேன் அதில் பார் காதல் பார்வையை.."

அதில் அவள் பார்க்க..

1. ரிஷி அவனின் எலியை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டு இருந்தான். அதை தெரியாத அஞ்சலி தனக்கு சொல்லப்பட்ட யோகாவை செய்து கொண்டு இருந்தாள்.

2. இப்போ அஞ்சலியின் முறை.. ரிஷி சங்கீதா கூட சண்டை போட்டு கொண்டு இருக்கேன் அழகை கண் இமைக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். பின் இன்னொரு காட்சியில் ரிஷி உயரத்துக்கு அவள் குதித்து விளையாட அவன் அவள் தலையில் கொட்டி சும்மா இருக்க சொல்லி ஆதட்டி கொண்டு இருந்தான். சொல்லாத காதல் சேட்டைகள் அங்கே நடந்து கொண்டு இருந்தது.

3. ராம் தான் கேவலமா தர்ஷினி மற்றும் சங்கீதா இருவரையும் சேர்த்து சைட் அடித்து கொண்டு இருந்தான். அதில் தர்ஷினி மேல் மட்டும் ஹெவி லூக்கு..🤣. இவன் என்ன நினைத்து கொண்டு இருக்கான் கூட தெரியல..

4. தர்ஷினி பற்றி சொல்லவே வேண்டாம்.. அவள் கண் எப்போதும் ராம் மேல் தான் ஆனால் என்ன அப்போ அப்போ ரிஷியே பார்த்து ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள். அது ஏன்? என அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

5. பிங்கி அவளின் வெங்கி படும் கஷ்டத்தை கண்ணீரோடு பார்த்து கொண்டு இருந்தாள். வராத pushup செய்ய அவன் படும் கஷ்டம் என்ன? அப்போ அப்போ அவன் லிஸ்ட் ல இருந்த சாப்பாட்டை சாப்பிட முடியாமல் இருப்பதை பார்த்து.. ஏன்டா அவனை பற்றிய வீடியோவை தர்ஷினி கிட்ட சொல்லி போஸ்ட் பண்ண வைத்தோம் என யோசனையில் இருந்தாள்.

6. அர்ஜுன் பார்வை தான் புரியாத மாதிரி இருந்தது. அடிக்கடி பிங்கியை பார்ப்பதும் பார்த்தவுடன் திரும்பி கொல்வதுமாக இருந்தான். எதையோ மனசில் வைத்து புளுங்கிறான் என்று மட்டும் புரிந்தது.

அதனை எல்லாம் பார்த்த சங்கீதா இந்த அர்ஜுன் மற்றும் பிங்கி விஷயம் தான் பேரும் கஷ்டம் என புரிந்து கொண்டாள். அதையே திரும்பி வீடியோ காலில் வந்த விக்ரம் கிட்ட கூட சொன்னாள்.

"விக்கி.. கண்டிப்பா இந்த அர்ஜுன் பிங்கி மட்டும் டான்ஸ் ஆட வைக்க முடியாது போல.. ஜோடி பொருத்தம் இல்ல.. கெமிஸ்ட்ரி இருக்கு ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் இவர்கள் இல்ல.. அவளும் காதலை சொல்ல மாட்டாள். இவனும் ஒரு தெளிவுக்கு வர மாட்டான்."

"அதுக்கு தான் நானே வரேன் சொன்னேன். அதற்கு முன்னாடி நான் சொல்றதை செய்.."

அவன் சொன்ன பிளான் கேட்டு.. அவள் சீ என சொல்லிவிட்டு போனை வைத்தாள். ஆனாலும் சிறிது நேரத்துக்கு பிறகு ஓகே என மெசேஜ் தட்டி விட்டு தூங்க சென்றாள்.

அமெரிக்கா ல விக்ரம் கூட அவளின் போட்டோவை கட்டிக்கொண்டு தூங்கினான்.

**************

அடுத்த நாள் முதல் ரிஷி மற்றும் ராம் கூட சிரித்து சிரித்து பேச ஆரம்பித்தாள்.

ரிஷி ஒதுங்கி போனாலும் அவள் விடாமல் அவனின் கையை பிடித்து உட்கார வைத்து அவள் தோளை தட்டி பேச, ராம் பக்கத்தில் வந்து..

"சங்கி.. என் தோளை கூட தட்டி பேசு அவனை மாதிரி நான் கூச்சம் எல்லாம் படமாட்டேன். நல்ல கம்பனி கொடுப்பேன்."

அவனின் கன்னத்தை கிள்ளியவள்..

"குறும்பு.." என சொல்லி கல கல என சிரித்தாள்.

அதனை காதில் புகை வர அஞ்சலி மற்றும் தர்ஷினி பார்த்தார்கள்.

அஞ்சலி, "தர்ஷ்.. அவளை என்ன பண்ணலாம்..?"

தர்ஷினி, "பிளான் பண்ணுவோம்.. அதுவும் சீக்கிரமா? இல்ல உனக்கு உன் ரிஷி இல்ல.. எனக்கு என் ராம் இல்ல.."

அப்போ கார்த்தி அஞ்சலியை விட்டு அனிதா கூட ஜோடி சேர்ந்தனோ அப்பவே தர்ஷினி ரிஷி மற்றும் அஞ்சலி விஷயத்தில் தன் அண்ணனுக்காக துணை போகும் எண்ணத்தை விட்டு விட்டாள்.

ஆனால், இப்போ ரிஷி மேல் வேற கோவத்தில் இருக்கிறாள் அது என்னவென்று போக போக தான் தெரியும்.

ரிஷியின் வீட்டுக்கு வந்த முதல் நாளே அஞ்சலி அவனின் தாத்தா பாட்டி மேல் கொண்ட திடீர் நெருக்கம் அப்பறம் ரெண்டு மாதமாக அஞ்சலியை பற்றிய புராணமே ரிஷி மூலம் வீட்டில் எங்கும் ஒலிக்கும் செய்தி கேட்டதில் இருந்து அவளுக்குள் ஒரு குறு குறுப்பு.. எல்லாம் சேர்ந்து ரிஷி மேல் சொல்ல முடியாத ஒரு உணர்வு வந்துவிட்டது.

அந்த உணர்வினை காதல் என்பதே இப்போது சங்கீதா அவனோடு உரசும் போது தான் அவள் உணர்ந்தாள். அதையே தர்ஷினி புரிந்து கொண்டு தான் அஞ்சலிக்கு துணையா பேசினாள்.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பொண்ணுக்கு தானே தெரியும்.😝😝

சங்கீதாவுக்கு பாடம் புகட்ட அவர்கள் பிளான் செய்ய.. அப்போது தான் விக்ரம் இவர்கள் எல்லார் கூடவும் வீடியோ கால் பேச போகும் விஷயம் அறிந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அது...

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#16
வாராயோ வெண்ணிலாவே...!! 13
அத்தியாயம் 13


சங்கீதாவுக்கு பாடம் புகட்ட அவர்கள் பிளான் செய்ய.. அப்போது தான் விக்ரம் இவர்கள் எல்லார் கூடவும் வீடியோ கால் பேச போகும் விஷயம் அறிந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அது..

விக்ரம் பேசும் போது தான் தெரியும்.

இப்போ அங்கே என்னமோ நடக்கிறதே.. என்ன அது?🤔

பிங்கி வயிறு பிடித்து உட்காந்து இருக்கே அர்ஜுன் அவள் அருகே சென்று..

"என்னடி ஆச்சு?? ஏன் வயிற்றை பிடித்து உட்கார்ந்து இருக்கே?? உண்மையில் சாதாரண வயிற்று வலியா? இல்ல பீரியட்ஸ் பிராப்ளம் ஏதாவது.."

உடனே அவனின் வாயை முடியவள்..

"டேய்.. எதை எங்க கேட்கணும் என விவஸ்தை இல்ல.😰.? யார் காதிலாவது விழுந்தால் என்ன நினைப்பாங்க..?"

அவன் தலை சொரிந்து கொண்டு..

"நான் என்ன தப்பா கேட்டேன் ஒரு பொண்ணுக்கு வயிறு என்றால் மொஸ்ட்லி இதன் காரணமாக இருக்கும்.."

"அதுக்கு சத்தமாவா கேட்பே?"

இன்னும் அப்பாவியாக..

"நீ எதுக்கு கோபப்படுற தெரியல.. இதை கேள்வியை பல தடவை கேட்டு இருக்கேன் ல..? அப்போ இல்லாத கோபம் இப்போ எதுக்கு?"

"யாப்பா சாமி.. இந்த கேள்வியை இப்போவே விடு.. எனக்கு பசிக்குது அதன் வயிற்றை பிடித்து உட்காந்து இருக்கேன். சங்கி வேற டயர்ட் பிளான் சொல்லி ஒன்று கொடுத்து டான்ஸ் போட்டி முடியும் வரை அதை தான் பின்படுத்த வேண்டும் சொல்லிட்டா.. உனக்கு அதிகம் சாப்பிட்டு பழக்கம் இல்ல எனக்கு கம்மியா சாப்பிட்டு பழக்கம்.. அதன்.."

"நான் வேண்டும்னா அவளுக்கு தெரியாமல் சாப்பிட்ட ஏதாவது எடுத்துக்கிட்டு வரட்டுமா?"

"இல்ல வேண்டாம்.. இன்னும் மூன்று வாரம் தானே அதுவரை பார்த்துக்கலாம்."

"இல்லடி.. அது.."

அவன் உதட்டில் விரல் ஒன்றை வைத்தவள்..

"பிளீஸ்.. யூ டோண்ட் வொர்ரி.. ஐ வில் மேனேஜ் (You don't worry I will manage).."

"இப்படி கெத்தா சொல்லிட்டே என்று அப்பறம் முடியல என்றால் சொல்லாமல் இருக்காதே.. உனக்கு பிறகு தன் எனக்கு இந்த டான்ஸ் எல்லாம். திரும்பி கிளாஸ் பசங்க முன்னாடி நான் அவமானப்பட்டாலும் பரவல.. எனக்காக நீ கஷ்டப்படாதே.."

"போதும் போதும் போதும் நான் தான் சொல்றேன் ல எனக்கு கஷ்டம் எல்லாம் இல்ல.. யாருக்காக பண்றேன் என் வெங்கிகாக தானே.."

அவன் என்ன நினைத்தானோ அவளை கட்டிக்கொண்டு..

"தாங்க்ஸ் டி.. உன்னை மாதிரி ஒருத்தி ப்ரெண்ட் ஆ கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்கணும். சரி நான் போய் திரும்பி சங்கி சொன்ன எக்ஸர்சைஸ் எல்லாம் பண்றேன். இன்னிக்கு வேற சன்டே ல நாள் முழுக்க பயிற்சி பண்ணனும் சொல்லி இருக்கா. பார்வதி பாட்டி கிட்ட வேற பாட்டு கற்று கொள்ளவேண்டும்."

"ஆமாம் ல அது என்ன அளவுக்கு போகுது.."

"என்ன சொல்றது.. டான்ஸ் ஒரு வலி என்றால் இந்த பாட்டு ஒரு விதமான வலி.. நான் லூசுதனமா கிளாஸ் ல ஆட போய் எத்தனை பேருக்கு கஷ்டம் பார்.."

அவன் தலையில் அடித்து கொண்டே சென்றான்.

இங்கே பிங்கி மனசுக்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்..

' சாரி டா எல்லாம் உனக்காக தான். என்னோட காதலை உணர வைத்து ஒரு காரணம் என்றாலும் உனக்கே தெரியாது உன்னிடம் இருக்கும் திறமையை வெளியே வர வைக்க இதன் ஒரே வழி. படிப்பு படிப்பு என உன் வாழ்க்கை இயந்திரம் போல ஆகாமல் இருக்க இப்படி பண்றேன்..', என அவள் யோசித்து கொண்டு இருக்கே

அவள் அருகே வந்த சதாசிவம் தாத்தா..

"என்னமா.. லவ் ஆ?"

"தாத்தா உங்களுக்கு எப்படி?"

"நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் ல கால் மீ சதா.. நான் மாடர்ன் தாத்தா அதற்கு ஏற்ற மாதிரி கூப்பிடு.."

"ஓகே ஓகே.. சதா உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அதன் கண்ணே சொல்லுதே.."

"அவ்வளவு பச்சயாவா தெரியுது?"

"நல்லவே.."

"உங்களுக்கு தெரிந்து என்ன செய்றது? அவனுக்கு இன்னும் புரியலையே?"

"அப்படியா?"

"ஆமாம்.."

"நீ லவ் சொன்னியா?"

"இல்ல.."

"பின்ன எப்படி தெரியும்?"

"ஹ்ம்ம்.. சொல்ல பயமா இருக்கு?"

"ஏன் பயம்?"

"நான் சொன்ன ஓகே சொல்வான் ஆனால் அதில் காதல் இருக்காது. எனக்காக எல்லாம் செய்கிறவன் காதலிக்கிற மாதிரி நடிக்கவும் செய்வான். எனக்கு உண்மை தான் வேண்டும் நடிப்பு வேண்டாம்."

"சீக்கிரம் நினைத்த காதல் கிடைக்க வாழ்த்துக்கள்.."

ஆனால் மனதில் மட்டும்..

' ஹ்ம்ம்.. அந்த அர்ஜுன் பாயல் எதுக்கு அவனின் காதலை மறைக்கிறான்? அவனுக்கு என்ன பயமோ தெரியல.. சரி நம்ம மாற்ற ஜோடிகள் என்ன பண்றாங்க பார்ப்போம்..' - சதாசிவம் மனதில்

***************

ரிஷி அவனின் ரூமுக்கு ஓடி வந்து விட்டான்.

"இந்த சங்கீதா பொண்ணுக்கு என்னடா ஆச்சு.. ஒரு வேளை நம்ம அழகில் மயங்கிட்டாளோ.. சரி இல்லயே🤔. இந்த விஷயம் அவளின் லவ்வர் க்கு தெரிந்தால் பிரச்சினை வருமே. ஏற்கனவே பல பிரச்சினைகள்.. இதுல இவள் வேறயா?"

அவன் தலையில் கை வைத்து உட்காந்து இருக்கே அவன் தலையை ஒரு கை ஆதரவாக தடவ யார் என பார்த்தவன்.. அதிர்ச்சி ஆனான்..

அது தர்ஷினி..

"தர்ஷினி நீ ஏன் இங்க வந்தா?"

"சும்மா தான்.. நீ ஏன் தலையில் கை வைத்து உட்காந்து இருக்கே? தலைவலியா?"

சங்கீதாவை பற்றி சொல்ல விருப்பம் இல்லாதவன்..

"ஆமாம் தலைவலி தான்..", அவன் சொன்னது உண்மையும் கூட காலையில் இருந்து தலைவலி வருதற்கான அறிகுறி இருந்தது. இப்போ சங்கீதா பண்ண தொல்லையால் வந்தே விட்டது.

அவளின் handbag ல இருந்த ஒரு தலைவலி தைலம் எடுத்து அவனின் நெற்றியில் தடவ ஆரம்பித்தவளை பார்த்தவன்..

"பிளீஸ் வேண்டாம்.."

"சு.. ஒரு நிமிடத்தில் முடிந்து விடும்.."

"எனக்கு உன்னை பிடிக்காது என்பது தெரியும் ல.."

"தெரியும்.."

"அப்பறம் ஏன் இப்படி பண்ற?"

"என்னை பிடிக்காதவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.."

அவளின் பிடிக்கும் வார்த்தையில் பயந்தவன் பயத்தில்..

"இது தப்பு.. நான் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிக்கிறேன்.."

"நானும் ஒரு பையனை காதலிக்கிறேன்.."

"ஐயோ.."

"ஷாக் ஆகாதே.. அது நீ இல்ல.. உன் ப்ரெண்ட் ராம்.."

"அவனா?"

"என்னடா அவனுக்கு என்ன? எனக்கு பிடித்து இருக்கு அதில் உனக்கு என்ன பிரச்சினை.."

"அவனை நினைத்து பாவமா இருக்கு.. போயும் போயும் உன்கிட்ட போய் அவன் மாட்டணுமா?"

"உன்கிட்ட எப்படி அஞ்சலி மாட்டிகிட்டளோ அதே போல தான் இவனும்.."

"ஹ்ம்ம்.. அதுவும் தெரிந்து போச்சா.. அறிவாளி தான் நீ.."

"நன்றி.."

"உனக்கு முதலில் என்னை பிடிக்காதே அது ஏன்?"

"இப்பவும் பிடிக்காது தான்.. உன்னை இல்ல உன் பெயரை.."

"ரிஷி நல்ல பெயர் தானே..?"

"என்னவோ எனக்கு பிடிக்கல.."

"ஹ்ம்ம்.. அப்போ என்னோட இன்னொரு பெயர் வைத்து கூப்பிடு.."

"அது என்ன பெயர் சொல்லவே ill..?"

"வெண்ணிலாவன்.. என்னோட முழு பெயர் ரிஷி வெண்ணிலாவன்.. ஸ்கூல் சேர்த்த போது ஸ்டைல் ஆ இருக்கட்டும் என எங்க அப்பா ரிஷி என கொடுத்து விட்டார்."

"வெண்ணிலாவன்.. ஹ்ம்ம் இந்த பெயர் பிடித்து இருக்கு. இதையே கூப்பிடுறேன் அதில் உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லயை?"

"நான் தானே கூப்பிட சொல்லி கேட்டது.. அதனால் பிரச்சினை இல்ல.."

பின் அவனோட பாட்டி அழைக்கும் சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே போனான்.

ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்தி அவனின் சிறு வயசு புகைப்படத்தை தன் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

இவள் பிளான் என்னவோ?

***************

யார் இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன? என சங்கீதா கூட கடலை போட்டு கொண்டு இருந்தான் ராம்.

தர்ஷினி அந்த இடத்திலிருந்து போன பிறகும் இவனின் தொல்லை தாங்க முடியாமல் சங்கீதா தான் எரிச்சல் அடைந்தாள். ஏதோ பொறாமை உண்டாக்க அவள் சில நாடகம் போட்டால் இப்போ அதுவே அவளுக்கு தொந்தரவா போச்சு..

அஞ்சலி செம்ம கோபத்தில் இருந்தாள்.

"இருடி இரு.. உன் காதலன் மட்டும் ஃபோன் பண்ணாட்டும்.. மொத்தமா போட்டு கொடுத்து உன் கதையை முடிக்கிறேன்." மனதில் நினைத்து வெளியே சங்கீதாவை அடிக்கடி பார்த்து முறைப்பதும் அவள் சொன்ன உடற்பயிற்சி செய்வதுமா இருந்தாள்.

அந்த நேரத்தில் ஒரு unknown நம்பர் ல இருந்து சங்கீதாவுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது.

அதில் பேசியவனின் செய்தி கேட்டு வீட்டு வாசலுக்கு கண்ணீரோடு ஓடினாள்...

அங்கே கார் டாக்ஸி ல இருந்து இறங்கியவாறு மாஸ்க் போட்ட விக்ரம் இருந்தான்.அவன் பேசிய ஃபோன் கூட அந்த டாக்ஸி டிரைவரின் ஃபோன் தான்.

Airport ல இருந்து இங்கே வரும் வரை மாஸ்க் எதுவும் போகாமல் வந்தவன் இப்போ திடீர் என வீட்டு வாசலுக்கு வந்த பிறகு மாஸ்க் போட்ட விக்ரமை பார்த்து முடியை பியத்து கொள்ளும் அளவுக்கு இருந்தார் டாக்ஸி டிரைவர்.

அதை தாண்டி வீட்டுக்குள் இருந்து வந்தவர்களின் ஒருத்தனை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைந்தார்.

அதனை உணர்ந்த விக்ரம் அவரை அனுப்புவது போல குனிந்து..

"அண்ணா.. உங்க ஷாக் புரியுது.. மற்றது எல்லாம் உங்கள் கற்பனையில் விட்டு விடுகிறேன். இந்தாங்க உங்க ஃபோன்.. என்னை விட்டதற்காக பணம்.. டா டா byee byee.😝."

பின் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக் மூலம் நிதானமாக அவனின் கீத்து கிட்ட போனவன். அவளை நெருங்கி கட்டி கொண்டு..

"இந்த அணைப்பை தாண்டி மிஸஸ் பண்ணேன்.. i love you கீத்து குட்டி.."

"Love you too da பொறுக்கி.. அடுத்த வாரம் வரேன் சொல்லிட்டு இப்போவே வந்துட்டா அதுவும் இங்கே..?"

"அதுக்கு பேர் தான் சர்ப்ரைஸ்.."

"மண்ணக்கட்டி.. அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன். ஹாஸ்பிடல் ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னால் இவர் பெரிய hair மாதிரி வந்ததும் இல்லாமல் ஓவர் ஆ பேசுற.."

"உன் பிளான் எனக்கு தெரியாது.. இங்க என்னை வர விடாமல் செய்யவே அம்மாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கே.. நான் யார் உன்னை விட கில்லாடி ஆச்சே.. ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பிட்டேன்.. அமெரிக்கா to சிங்கப்பூர் க்கு 17 மணிநேரம் பயணம் செய்தேன். அப்பறம் அங்கேயே ஒரு நாள் தாங்கி இருந்து நேற்று நைட் அமெரிக்கா ல இருந்து பேசுற மாதிரி சிங்கப்பூர் ஹோட்டல் wifi ல வாட்ஸ்அப் கால் செய்து எப்போவும் போல பேசிவிட்டு காலை ரெண்டு மணிக்கு சிங்கப்பூர் டூ சென்னை flight ல 8 மணிநேரம் பயணத்தில் ஏர்போர்ட் வந்து டாக்ஸி பிடித்து அவரின் ஃபோன் மூலமே உனக்கு கால் பண்ணேன். என்ன பண்றது அமெரிக்கா சிம் இங்கே வேலை செய்யல.."

"இவ்வளவும்..?"

"உனக்காக.. உன்னை பார்ப்பதக்காக தாண்டி.."

அவர்களின் மோக நிலையை கலைக்கவே இடையில் வந்த ராம்..

"சங்கி.. இவன் தான் நீ சொன்ன உன் முகமூடி காதலன் விக்கி என்கிற விக்ரம் ஆ?" - ராம்

"யெஸ்.." - சங்கி

"அமெரிக்கா ல முகமூடி ஓகே.. இங்கே என்னமா? அதை எடுக்க சொல்லு நாங்களும் உனக்கு ஏற்ற ஜோடியா என பார்க்கணும் ல..?" - ராம்

"பார்த்து என்ன பண்ண போற? இட்ஸ் மை பிரைவசி ஓகே.. நீ கொஞ்சம் ஷட் அப் பண்ணலாம்.." - விக்ரம்

மொத்தத்தில் ஒருவன் தன்னை பச்சையா மூடிக்கிட்டு போ என இங்கிலீஷ் ல சொன்னதை கேட்டு ஷாக் ஆக.. அதையே பக்கத்தில் இருந்து பார்த்த மற்றவர்களும் ஷாக் ஆனர்கள்.

சதாசிவம் தாத்தா மட்டும் மனசில்.. சபாஷ் பையன் வேற மாதிரி போல.. இனி கதை எப்படி போகுது பார்ப்போம். இனி தான் எவன் உண்மையான கதையின் ஹீரோ என தெரியும் போல.. என நினைத்தார்

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#17
வாராயோ வெண்ணிலாவே...!! 14
அத்தியாயம் 14


நிலைமையை சமாளிக்க அர்ஜுன் முன்னாடி வந்து..

"ப்ரோ.. ப்ரோ.. கூல் கூல்.. அவன் ஜஸ்ட் ப்ரெண்ட்லியா கேட்டான். அதற்கு ஏன்? கோபம்.. ராம் இப்பவே சாரி சொல்லு.." - அர்ஜுன்

"ஏய் நான் என்னடா தப்பு பண்ணேன்? முகமூடி போட்டு வந்தவன் அவன். அதற்கு அவனை கேள்வி கேட்ட என்னை போய்..". - ராம்

ராமின் தோளில் கை வைத்த ரிஷி அவன் காதில்..

"இப்போதைக்கு சொல்லு.. போக போக நம்ம வேலையை காட்டுவோம்." - ரிஷி

பின் விக்ரம் கிட்ட போனவன்..

"சாரி மிஸ்டர் விக்ரம்... உங்க முகம் உங்கள் விருப்பம் காட்டினா காட்டுங்க இல்லாட்டி போங்க.. சரி தானே அர்ஜுன், ரிஷி"

அவர்கள் இருவரும் தூ.. என தூப்ப.. ராம் முகத்தை துடைத்து விட்டு.. இட்ஸ் ஓகே என்றான்.

ஹீரோயின்ஸ் எல்லாம் புது ஹீரோவின் முகத்தை பார்க்க முடியாத காண்டுல இருந்தார்கள் பிங்கி தவிர.. அவளுக்கு எப்போதும் அர்ஜுன் தான் கெத்து (எல்லாரும் அவன் காமெடி பீஸ்.. இவளுக்கு மட்டும் ஃபேவரைட் பீஸ்)

உள்ளே வந்த அவனை பார்த்த பார்வதி..

"யாருப்பா இந்த பையன் முகமூடி கொள்ளை காரன் மாதிரி இருக்கான்." பார்வதி

"நல்ல சொல்லுங்க பாட்டி நான் கேட்டால் இங்கிலீஷ் ல அசிங்கமா கேட்கிறான்." - ராம்

"ராம் நீ சும்மா.. பாட்டி நான் சொன்ன விக்கி.. விக்ரம் இவன் தான். என்னை பார்க்கவும் அப்படியே இவனுக்கு தெரிந்த சில டான்ஸ் ஸ்டெப்ஸ் சொல்லி தரவும் வந்து இருக்கான்." - சங்கீதா

"அப்படியா.. அதுக்கு ஏன் முகமூடி?" - பார்வதி

"அது அது.." - சங்கீதா

விக்ரமே முன்னால் வந்து..

"பாட்டி என் அடையாளம் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நல்லது. பிளீஸ் இதுக்கு மேல் கேள்வி கேட்க வேண்டாம். திரும்பி நாங்க அமெரிக்கா போவதற்கு முன்னாடி காரணத்தோடு என் முகத்தை எல்லாருக்கும் காண்பிப்பேன்." - விக்ரம்

மாஸ்க் பின் தெரிந்த கண்ணை பார்த்த பார்வதி பாட்டி அதற்கு மேல் அந்த முகமூடி பற்றி கேட்காமல்..

"சாப்பாடு ரெடி.. வாங்க எல்லாரும் சாப்பிடலாம். முகமூடி தம்பி.. சாரி விக்ரம் நீயும் வாப்பா" - பார்வதி

"இல்ல நான் வரும் போதே சாப்பிட்டு விட்டேன். ஆனாலும் குடிக்க ஏதாவது ஜுஸ் இருந்தால் குடுங்க.. அது போதும் எனக்கு?" - விக்ரம்

"ஏன் சாப்பிட போனால் மாஸ்க் எடுக்கணும் பயமா?" - ராம்

' செல்ல குட்டி நீ ரொம்ப பேசுற.. உனக்கு லைஃப் ல மறக்க முடியாத அளவுக்கு ஒண்ணு பண்ணியே திறனும்.' - விக்ரம் மனதில் நினைத்தாலும் வெளியே, "இது ஸ்பெஷல் ல செய்யப்பட்ட மாஸ்க். வாய் பகுதி மட்டும் ஓபன் பண்ணி சுலபமா சாப்பிடுவேன். உனக்கு கவலை வேண்டா..", என ராமிடம் சொன்னான்.

மற்றவர்கள் சாப்பிட விக்ரம் மட்டும் பார்வதி பாட்டி தந்த ஆப்பிள் ஜுஸ் குடித்தான்.

பின் அவனும் சங்கீதாவும் டான்ஸ் பிராக்டீஸ் செய்யும் இடத்துக்கு போவதற்கு முன்னாடி மற்றவர்கள் சென்றார்கள்.

அங்கே..

ராம், "அர்ஜுன் இந்த முகமூடி பேர்வழியை பற்றி என்ன நினைக்கிறாய்?"

அர்ஜுன், "நான் என்ன நினைக்க? எல்லாமே சங்கீதாவுக்கு தான் தெரியும். யூடியூப் ல டான்ஸ் வீடியோஸ் பார்த்தவரை நல்ல டான்ஸர். அவ்வளவு தான் தெரியும்..🤔"

ராம், "ஆமாம்.. ஆமாம்.. பெரிய டான்ஸர் 🤣. இந்த கட்டு கட்டிய காலே வைத்து நமக்கு என்ன சொல்லி தர போகிறான்?"

ரிஷி, "ராம் பார்த்து பேசு. என்ன இருந்தாலும் நமக்கு இப்போ அவனும் சங்கீதாவும் தான் நம்பிக்கை. நீ பேசுறது அவங்க காதில் விழுந்தால் என்ன ஆவது?"

ராம், "ஏன்? கேட்டால் என்ன? அவங்க இல்ல என்றால் டான்ஸ் சொல்லி தர ஆளா இல்ல. இந்த ஒரு வாரத்தில் சங்கி எனக்கு செம்ம க்ளோஸ் ஆகிட்டாள் அந்த முகமூடி வேண்டுமென்றால் போகட்டும் சங்கி இங்க இருந்து நமக்கு சொல்லி தருவாள்."

தர்ஷினி, "செல்ல குட்டி.. நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட போல. சங்கீதா அவன் முகுமுடி.. விக்ரமின் காதலி ஒரு கட்டத்துக்கு மேல் அவன் தான் முக்கியம் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏறிட்டு போய்ட்டே இருப்பாள்."

பிங்கி, "ஆமாம் தர்ஷி சொல்றது உண்மை தான். சங்கி இங்க இந்தியா வந்த நோக்கமே விக்கியின் தாத்தா பாட்டியை அடுத்த மாசம் கூடவே கூட்டி போக தானே..? அதுவும் விக்கி மேல் இருந்த காதலால் வீட்டில் சண்டை போட்டு கொண்டு பதினெட்டு வயசு கூட பூர்த்தி அடையாமல் முன்ன பின்ன வராத இந்த நாட்டுக்கு. எல்லாம் அவன் மேல் இருந்த காதலால்.. இந்த உலகத்தில் அவனுக்கு பிறகு தான் எதுவுமே அவளுக்கு."

அர்ஜுன், "செம்ம லவ் ல.. அதை மற்றவர்கள் முன் சொல்ல கூட அவள் தயங்க வில்லை. யார் என்ன நினைத்தாலும் அவன் தான் அவன் மட்டும் தான் என என்ன ஒரு உறுதி. ஐம் இம்ப்ரஸ்.. இந்த மாதிரி பொண்ணு தான் எல்லார் பசங்களும் காதலிக்க விரும்புவது.", என சொன்னவன் யாரும் அறியாமல் பிங்கியே கண்ணில் நிரப்பி கொண்டான்.

அஞ்சலி, "ரிஷி, இந்த மாதிரி ஒரு பொண்ணு உன் வாழ்க்கையில் வந்தால் என்னடா பண்ணுவே..?"

ரிஷி, "😂😂 உடனே தாலி கட்டி ஃபர்ஸ்ட் நைட் முடித்து விடுவேன்.."

அஞ்சலி, "என்ன ஒரு புத்திசாலித்தனமான எண்ணம்🤦. ஒருவேளை அந்த பொண்ணு சம்மதிக்கல என்றால்?"

ரிஷி, "கட்டி போட்டு.."

அஞ்சலி, "ஐயோ.. கட்டிபோட்டு..?😰"

ரிஷி, "என் காதலை பல விதத்தில் சொல்வேன் சொன்னேன். நீ என்ன நினைத்தாய்?"

அஞ்சலி, "😋 கசமுசா பண்ணுவே நினைத்தேன்."

ரிஷி, "அது நெக்ஸ்ட் ஸ்டேஜ்.. பேச்சுக்கு சம்மதம் சொல்லாத போது கிடைத்தவரை லாபம் என பாய வேண்டியது தான்.."

அஞ்சலி அவனை அடியோ அடி என அடித்து..

அஞ்சலி, "பொறுக்கி.. பொறுக்கி.. என்னவெல்லாம் பேசுற? போடா.. அப்படி மட்டும் செய்ய பார் அறுத்து விடுறேன்.."

ரிஷி, "எதை?"

அஞ்சலி, "எதை அறுத்தல் உன் கொட்டம் அடங்குமோ அதை.."

ரிஷி, "யம்மா தாயே விடு.. அப்பறம் என்னோடு சேர்த்து உன் வாழ்க்கை தான் விண்ணாகும்."

அஞ்சலி, "😍😍 ஏன்?"

ரிஷி, "ஆமாம் அப்பறம் போலீஸ் உன்னை பிடித்து தானே ஜெயிலில் போடுவாங்க அதன்..😝😝"

பின் ரிஷியே ஓட ஓட அஞ்சலி அடித்தாள்.

அதை பார்த்து ராம் சிரிக்க,

தர்ஷினி கோபத்தில், "அவங்க சண்டை பார்த்து உனக்கு என்னடா சிரிப்பு?"

ராம், "காதலர்கள் சண்டை பார்த்து சிரிப்பு வர தானே செய்யும்."

தர்ஷினி, "அவங்க காதலர்கள் என யார் சொன்னது?"

ராம், "யார் சொல்லணும்? அவங்க என்னோட ப்ரெண்ட்ஸ்.. அவங்க மனசு எனக்கு தெரியாது? அதோடு ரிஷியே‌ என்னிடம் ஏற்கனவே சொல்லிட்டான். அஞ்சலி போக்கை கூட ஒரு வாரமா பார்த்து கிட்டு தானே இருக்கேன்."

தர்ஷினி, "அப்போ யார் காதலித்தாலும் உனக்கு தெரியும் அப்படி தானே?"

ராம், "எஸ்.. அதில் சந்தேகம் என்ன?"

தர்ஷினி, "அப்போ நான் காதலிப்பது யார் என தெரியுமா?😏"

ராம், "தெரியும்.."

தர்ஷினி, "அது நினைவேறுமா?"

ராம், "கொஞ்சம் டவுட் தான். நீ பணக்கார வீடு பொண்ணு அவனோ அப்பா அம்மா கூட இல்லாமல் மாமாவின் பராமரிப்பில் வளர்பவன். சொத்து என ஒண்ணும் இல்ல.. அவனை காதல் விஷயத்தில் நம்ப முடியாது விளையாட்டு தனம் ரொம்ப இருக்கு. அப்பறம் உன் இஷ்டம்.. பிறகு நீ ஃபீல் பண்ணி ஒண்ணும் பண்ண முடியாது.."

தர்ஷினி, "பரவல.. அவன் படித்து முடித்து நல்ல நிலை வரும் வரை வெயிட் பண்ணுவேன். இந்த தர்ஷினிக்கு தாங்கும் இடம் மாளிகையாக இருந்தாலும் குடிசையாக இருந்தாலும் ஒன்று தான் எல்லாம் கூட இருப்பவர்களை பொறுத்து.."

ராம், "ஹ்ம்ம்.. ஜோடி பொருத்தம் இல்ல அவன் நல்ல கருப்பு நீ சினிமா நடிகை சிவப்பு.."

தர்ஷினி, "நான் மாளவிகா மாதிரி.. கருப்பு தான் எனக்கு பிடித்த காலர்..😍"

ராம், "ஏதுவாக இருந்தாலும் கனவு காணாமல் படித்து முடிக்கும் வரை வெயிட் பண்ணு.. காலம் என்னவேனா செய்யும்! எவர் மனசையும் மாற்றும்.."

தர்ஷினி, "என் மனசு மாறது"

ராம், "அப்போ வெயிட் பண்ணு படிப்பு முடியும் வரை அப்பறம் பார்க்கலாம்.."

தர்ஷினி, "ich liebe dich.."

ராம், "ich auch.. (me too)..😏"

தர்ஷினி, "இப்போ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற? நான் அன்னிக்கு சொன்னது பொய் இதுக்கு வேற அர்த்தம் இருக்கு.."

ராம், "ஜெர்மன் உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தெரியும். நீ சொன்னதுக்கு அர்த்தம் எனக்கு தெரியும். எங்க மாமா நான்கு வருசத்துக்கு முன்னாடி ஜெர்மன் ல வேலை செய்தார் அப்போவே கொஞ்சம் கொஞ்சம் ஜெர்மன் மொழி சொல்லி கொடுத்தார். அப்பறம் நானே ஆர்வம் கொண்டு முடிந்தவரை ஜெர்மன் மொழி லேர்ன் பண்ணேன். காலேஜ் சில நாளில் அர்ஜுன் ரெடி பண்ண ஸ்டூடண்ட் லிஸ்ட் உனக்கு தெரிந்த மொழிகளில் உனக்கு ஜெர்மன் தெரியும் போட்டு இருந்தே அதன் எனக்கும் தெரியும் என்ற விஷயத்தை மறைந்து விட்டேன். அதுவும் நல்லது அதனால் தானே இதனை நாளாக ஜெர்மன் மொழியில் என் கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாய்😉"

தர்ஷினி, "அடேய் தெரிந்தும் ஏன் முன்னாடியே சொல்லல?"

ராம், "ஒரு பொண்ணை சைட் அடிப்பது ஒரு கிக் என்றால்.. நம்ம சைட் அடிக்கிற பொண்ணே பதிலுக்கு நம்மை சைட் அடிப்பதை தாண்டி லவ் புரோபோசல் பண்றது கேட்பது தனி கிக்..😝😝"

தர்ஷினி, "போடா என்னை நல்ல ஏமாற்றிட்டே.."

ராம், "Everything fair in love and war.."

சொன்னவன் அவளின் உலங்கையில் முத்தம் ஒன்றை வைத்தான்.

ராம், "இப்போதைக்கு உன் கருப்பானல் காதலை கை முத்தத்தில் மட்டுமே சொல்ல முடியும். இன்னும் சில வருசம் போகட்டும் அப்பறம் தகுந்த வயசில் தகுந்த நேரத்தில் விதிப்படி உன் கழுத்தில் தாலி கட்டிய பிறகு மற்றது எல்லாம்..😉"

தர்ஷினி, "காதலை இப்படி கூட சொல்லலாமா?"

ராம், "தெரியல என்னால் இப்படி தான் சொல்ல முடிந்தது. உனக்கு பிடித்து இருக்கா?"

தர்ஷினி, "பிடித்து இருக்கு.. பிடித்து இருக்கு..😘😘"

ரிஷி மற்றும் அஞ்சலியின் விளையாட்டு, ராம் மற்றும் தர்ஷினியின் காதல் பரிமாற்றம் எல்லாம் பார்த்த பிங்கி ஏக்கமா அர்ஜுனை பார்த்தாள். அவனோ யூடியூப் ல படிப்ஸ் போல படிப்புக்கு சமந்தப்பட்ட வீடியோஸ் பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் கடுப்பில் முகம் திருப்ப, அர்ஜூனோ‌ அந்த கண்ணாடி சுற்றிய அறையில் இருந்த கண்ணாடி ஒர கண்ணால் பார்த்து,

அர்ஜுன் மனதில், "சாரி பிங்கி.. உன் எதிர்பார்ப்பு புரியுது. ஆனால் உனக்கு நான் செட் ஆக மாட்டேன். எப்போ அனிதா கிட்ட ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பொய்யா காதலை சொன்னேன் என என் மேல் கோபப்பட்டு ஒரு மாசம் பேசாமல் இருந்தயோ அப்போவே உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். நான் கெடு கெட்டவன் பிங்கி.. எந்த பொண்ணை பார்த்தாலும் காதல் என நினைத்து சுற்றியவன். அப்படி இருக்கே உன் மேல் கொண்ட காதல் கூட உண்மையா தெரியல.. அவர்கள் பாஸிங் கிளவுட் (passing cloud).. ஆனால் நீ அப்படி இல்லடி.. உன்னை காதல் என்ற பெயரில் அவங்க கூட சேர்க்க விருப்பம் இல்ல.. அதே போல உன்னை விட்டு பிரியவும் விருப்பம் இல்ல.. அர்ஜுன் காதலித்தது பலபேராக இருக்கலாம்.. உன் வெங்கி காதலித்தது உன்னை தான் உன்னை மட்டும் தான்."

இவர்கள் எல்லாரும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஏற்கனவே ஃபோன் ல லைவ் வீடியோ ரெக்கார்டு போட்டு விட்டு தான் சங்கீதா அந்த அறைவிட்டு வெளியே போனால் அதனை எல்லாம் மற்றொரு அறையில் உட்கார்ந்து விக்ரம் கூட சங்கீதா பார்த்து கொண்டு இருந்தாள்.

சங்கீதா, "விக்கி, என்னடா இது இந்த அர்ஜுன் பிங்கி காதல் விஷயம் மட்டும் பிரச்சினை போல..?"

விக்ரம், "புரியாத காதல் என்றால் பிரச்சினை இல்ல.. இது புரிந்தும் குழப்பி கொள்ளும் காதல். இருவருமே அவர்களின் எல்லை கோட்டை தாண்டி வந்தால் மட்டுமே ஏதாவது நடக்கும்."

சங்கீதா, "அதுக்கு என்ன பண்றது?"

விக்ரம், "டான்ஸ் என்கிற பெயரில் மாமா மாமி வேலை பார்க்க வேண்டியது தான்.."

சங்கீதா, "கொஞ்சம் கேவலமான வேலை தான் போல.."

விக்ரம், "வேற வழி இந்த ரெண்டு முண்டங்களுக்கு வாய் வார்த்தையால் சொன்னால் புரியும் நினைக்கிற?"

சங்கீதா, "கொஞ்சம் சந்தேகம் தான்.."

விக்ரம், "வா.. கொஞ்சம் உள்ளே போய் ஒரு கலக்கு கலக்குவோம்..😂😂"

அப்போ அந்த வழிய சென்று கொண்டு இருந்த சதாசிவம் தாத்தா பாட்டு பாடி கொண்டு சென்றார்.

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே.."

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#18
வாராயோ வெண்ணிலாவே...!! 15
அத்தியாயம் 15


அந்த அறையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருக்கே..

வாக்கிங் ஸ்டிக் உதவியோடு உள்ளே விக்ரம் வர அவனோடு சங்கீதாவும் வந்தாள்..

விக்ரம், "குழந்தைகளே.. செல்ல குட்டிக்களே.. எல்லாரும் அவங்க அவங்க ஜோடியோடு நில்லுங்க பார்க்கலாம். நல்ல நல்ல கருத்து சொல்லணும்.."

எல்லாரும் வந்த பிறகு..

"யாருக்கோ இந்த நொண்டி எப்படி டான்ஸ் சொல்லி தருவான் என சந்தேகம் இருக்கு சரியா செல்லங்களா? அந்த செல்ல குட்டியே மட்டும் என் முன்னாடி வரணும் அதுவும் இப்போதே.."

ராம் திமிரா நிற்க.. பொறுத்து பார்த்த விக்ரம் தன் ஃபோனில் ரெக்கார்டு பண்ண அவனின் பேச்சை மட்டும் போட்டு காண்பித்தான்.

அதை பார்த்து திமிர் குறையாமல் ராம் பேசினான்..

ராம், "ஆமாம், நான் தான் சொன்னேன். இப்போவும் சொல்றேன் நீ இந்த கட்டு போட்ட காலே வைத்து என்னத்த சொல்லி தர போற?"

விக்ரம், "அப்போ இந்த காலே வைத்து ஒண்ணுமே சொல்லி தர முடியாது சொல்ற?"

ராம், "கண்டிப்பா.."

விக்ரம், "ஹ்ம்ம்.. கீத்து எல்லா செல்ல குட்டிக்கும் ஒரு லைவ் ஆட்டம் காட்டும் நேரம்.. உனக்கு ஓகே ஆ..?"

சங்கீதா, "ஐம் அல்வேஸ் ரெடி.. என்ன பாட்டு..?"

விக்ரம், "கேள்வி கேட்ட செல்லமே பாட்டை தேர்ந்து எடுக்காட்டும்.."

ராம், "போடா போடி படத்திலிருந்து ..I am a Kuthu Dancer.. பாட்டுக்கு முடிந்தால் டான்ஸ் ஆடுங்க பார்க்கலாம்.."

ரிஷி, "டேய் என்னடா இவ்வளவு கஷ்டமான பாட்டை சொல்ற..? ஸ்டெப்ஸ் எல்லாம் ரொம்ப பயங்கரம் டா.. காலே வளைத்து வளைத்து ஆடமும்.."

அர்ஜுன், "காலேயே எடுக்க விடாமல் விட மாட்டே போல.. ஸ்டெப்ஸ் கொஞ்சமா இருக்குற பாட்டை சொல்லுடா.."

விசில் ஒன்றை அடித்து எல்லார் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவன்..

விக்ரம், "செல்லம்ஸ்.. இக்கட சுடன்டி (இங்கே பாருங்க).. சல்லேன்ஜ் என்றால் அதை ஒரு கை பார்த்தே திரணும்.. கீத் உனக்கு ஓகே ஆ?"

சங்கீதா, "டபிள் ஓகே டா.. இன்னும் கஷ்டமான ஸ்டெப்ஸ் இருக்குற பாட்டு சொல்லி இருக்கலாம்..."

ஒரு தடவை அந்த பாட்டின் வீடியோவை போன்ல பார்த்த இருவரும் ஒரு தடவை ஹெட்செட் ல பாட்டை போட்டு கேட்டு..

விக்ரம் & சங்கீதா, "ஸ்டார்ட் தே மியூசிக் செல்லம்ஸ்.."

"ஒன்னு, ரெண்டு, மூனு, நாழு
சொன்னால் தானா ஆடும் என் காலு
ஐஞ்சு, ஆறு, ஏழு, எட்டு
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு

போடிய டைட் ஆக்கிக்கோ
சோல்டர்ர லூஸ் ஆக்கிகோ
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ
இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ
அவ்லோ தாண்டா குத்து டான்சு போ

யே டப்பாங்குத்து ஆடவா
ஆடவா டப்பங்த்து
யே என் ஆசை மைதிலியே
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
பேத்தான் பேத்தான் பேத்தான்
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
போட்டு தாக்கு டன்டனக்கா
வாடி போன்டாட்டி கலாசலா
யே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா

ஐ ஆம் அ குத்து டான்சர்
ஹெ ஐ ஆம் அ குத்து டான்சர்
ஐ ஆம் அ குத்து டான்சர்
ஹெ ஐ ஆம் அ குத்து டான்சர்...
ஐ ஆம் அ குத்து டான்சர்
ஐ ஆம் அ குத்து குத்து குத்து டான்சர்

குத்து குத்து குத்து டான்சர்.."

இடது காலில் கட்டு போட்டு கொண்டே அந்த கால் தரையில் படாமல் விக்ரம் ஆட்டம் போட்டான்.

சங்கீதாவும் அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் இல்ல என்பது போல அவள் செம்ம குத்து குத்தினாள்.

குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டது என்னமோ விக்ரம் சங்கீதா தான். ஆனால் எல்லா குத்தும் ராம் முகத்தில் விழுந்தது போல ஒரு ஷாக்.

அவன் மட்டும் இல்ல மற்றவர்கள் முகம் கூட ஷாக் அடித்தது போல தான் இருந்தது.

எல்லார் கவனத்தையும் கலைக்கும் படி இருவரின் கை தட்டல் சத்தம் கேட்டது.

திரும்பி பார்த்தால் பார்வதி மற்றும் சதாசிவம் தான் கை தட்டியது.

சதாசிவம், "செம்ம பேராண்டி, இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததே இல்ல. அதுவும் ஒரு கால்ல பலன்ஸ் பண்ணி டான்ஸ் ஆடுவது! சூப்பர் ஓ சூப்பர்!!👌👌👌"

பார்வதி, "பையனை விடுங்க.. அந்த பொண்ணின் ஆட்டத்தை பார்த்தால் எனக்கு சேர்ந்து ஆடனும் போல இருக்கு. ஆனால் என்ன பண்றது மூட்டு வலி..😟"

அவர்களை நெருங்கிய விக்ரம் பார்வதி பாட்டி மற்றும் சதாசிவம் தாத்தாவின் தோளில் கை போட்டு..

விக்ரம், "அதனால் என்ன நாங்க குத்து ஆட்டம் போட்டால் நின்று கொண்டே கையால் ஆட்டம் போடுங்க.. டான்ஸ் ஆட எதுவும் தடை இல்ல.. முடியாது என்கிற எண்ணம் மட்டுமே தடை.. என்ன ராம் செல்லம் என்ன நான் சொல்றது?😂😂"

ராம், "யாப்பா சாமி, நீ தெய்வ பிறவி பா.. உன்னை மாதிரி என்னால் ஆடவே முடியாது. ஆளை விடு இனி இந்த பக்கமே என் தலைவைத்து படுக்க மாட்டேன்..🙏🙏"

விக்ரம், "மற்ற செல்லங்கள் எதுவும் சொல்லல..?"

அர்ஜுன், "என்ன சொல்றது? எனக்கு இந்த டான்ஸ் பற்றி எதுவும் தெரியாது விக்கி, நாவல்கள் அதிகம் படிப்பேன் ஒரு நாள் முழுக்க ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பாடு தூக்கம் கூட மறந்து படிப்பேன். அதை தவிர எனக்கு ஒன்னும் தெரியாது. இப்போ நான் பார்த்தவரை நல்ல ஆடினே. ஒருவேளை நீ சொல்றதை கேட்டு ஆடினால் ஏதோ கொஞ்சம் நானும் ஆடுவேன் போல.."

ரிஷி, "சின்ன வயசில் ப்ரேக் டான்ஸ் ஆடி இருக்கேன். அதை விட உன் ப்ரேக் டான்ஸ் சூப்பர் விக்கி. உன்கிட்ட கற்று கொண்டால் மறந்த அந்த டான்ஸ் வந்தாலும் வரும்."

அஞ்சலி, "உன் டான்ஸ் நல்ல தான் இருந்தது. ஆனால் நான் சங்கி ஃபேன் தான். எனக்கு உன் டான்ஸ் விட சங்கியின் டான்ஸ் தான் பிடித்து இருந்தது."

தர்ஷினி, "ராம் நல்ல மொக்கை வாங்கினான். யூடியூப் ல பார்த்தது விட நேரில் நல்ல ஆடின.. சூப்பர்.."

பிங்கி, "என்னத்த சொல்றது? நல்ல கிழி கிழி என கிழித்துட்டே.. வெங்கி கண்டிப்பா உன் ஹெல்ப் இருந்தால் ஜெய்ப்பன் என்பதில் நோ டவுட்.."

எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தவன்..

விக்ரம், "உன் பாராட்டு மீக்க நன்றி.. ஓகே அடுத்து உங்கள் எல்லாரின் தனிப்பட்ட மதிப்பிடலுக்கு போகலாம். முதலில் ரிஷி மற்றும் அஞ்சலி.."

அவர்கள் இருவருமே முன்னாடி வந்து நின்ற பிறகு..

விக்ரம், "உங்களுக்கு ஒரு கதை சொல்லணும்.. ரிஷி முக்கியமாக உனக்கு தான் இந்த கதை. கதை கேட்டு அதன் கருத்தை சொல்லி சரியா?"

விக்ரமின் ஆட்டத்தை பார்த்தவன் கண்டிப்பாக தனக்கு நல்ல ஆட சொல்லி தருவான் என்கிற எண்ணத்தில் சரி என்றான்.

**************

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

*******************

விக்ரம், "கதை கேட்ட ல இப்போ சொல்லும் உனக்கு புரிந்த கருத்தை..?"

ரிஷி, " எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள். அந்த வீரனுக்கு திறமை இருந்தது ஆனால் அதில் ஒரு உறுதி இல்ல. யாருக்கு ஆதரவு தருவது என்கிற உறுதியான சிந்தனை இல்லாமல் இருந்ததால் திறமை இருந்தும் ஒண்ணுக்கு உதவாமல் போச்சு.."

விக்ரம், "ஓ. அப்படியா சரி சரி.. அஞ்சலி நீ நல்ல பயிற்சி பண்ணனு கீத் சொன்னாள். ரொம்ப நல்லது நாளையில் இருந்து உண்மையான ஆட்டம் பார்க்க போறோம். ரிஷி நீயும் தயாராக இரு.."

ரிஷி, "என்ன அவ்வளவு தானா? வேற எதுவும் சொல்லல.."

விக்ரம், "என்ன சொல்லணும்..?"

ரிஷி, "இல்ல பெரிசா கதை எல்லாம் சொன்ன.. அதை வைத்து ஏதாவது கருத்து சொல்வே நினைச்சேன்.."

விக்ரம், "நான் என்ன சொல்றது. காலையில் ஆன்லைன் ல இந்த ஸ்டோரி படிச்சேன். என்னடா கருத்து சொல்ல வாறாங்க புரியல.. அதன் உன் கிட்ட கேட்டேன். நீ நிறைய புத்தகம் படிப்பே கீத் சொன்னாள் அதான்.."

ரிஷி, "அப்போ நான் பண்ண பயிற்சி பற்றி..?"

விக்ரம், "நீ பண்ண.. எப்போ? நான் பார்த்தவரை சண்டை தானே போட்ட செல்லம்."

ரிஷி, "புரியல.. இப்போ என்ன சொல்ல வர.."

விக்ரம், "நான் எதுவும் சொல்லல.. டான்ஸ் ல ஸ்டெப்ஸ் மட்டுமே வேண்டும் நீ கேட்கிற அதற்கு நான் சரி சொன்னேன். அஞ்சலி என் கீத் சொன்னதை கேள்வி கேட்காமல் ஃபாலோ பண்ண அதற்கு பாராட்டினேன். முடிந்தது.. நீ போலாம் நாளைக்கு நீ கேட்ட ஸ்டெப்ஸ் சொல்லி தரப்படும்."

ரிஷி விக்ரம் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினான்.

விக்ரம், "அடுத்து ராம் தர்ஷினி இங்கே வாங்க.."

அவர்கள் இருவருமே முன்னாடி வந்து நின்ற பிறகு..

விக்ரம், "உங்களுக்கு இன்னொரு கதை சொல்ல போறேன்.. ராம் செல்லம் முக்கியமாக உனக்கு தான் டி இந்த கதை. கதை கேட்டு அதன் கருத்தை சொல்லி சரியா?"

ஏற்கனவே இவனை நல்ல வெறுப்பு ஏற்றி இருக்கோம் என்கிற பயத்தில்..

ராம், "யாப்பா சாமி, உன்னை பற்றி ஏதாவது தப்பா பேசி இருந்தாலும் மன்னித்து விடு.. ரிஷி மாதிரி புத்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் எனக்கு இல்லவே இல்ல. கதை கேட்டு கருத்து சொல்ற அளவுக்கு நம்ம வொர்த் இல்லப்பா.. ஏதோ வாயை வைத்து காமெடி பண்ணிக்கிட்டு பிழைப்பு ஓடுது.. அதை அப்படியே விட்டேன்.."

விக்ரம், "முதலில் கதை கேளு செல்லம் அப்பறம் பார்த்துக்கலாம்.."

***************

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

http://tamil-kutti-kathaikal.blogspot.com/2007/01/blog-post_26.html?m=1

*****************

விக்ரம், "ராம் செல்லம் இப்போ சொல்லு டி தங்கம்.. குழந்தைக்கு என்ன புரிந்தது?"

ராம், "ஏதோ பெரியவர் வித்தியாசமான உதவி பண்ணி இருக்கார். அவ்வளவு தான் புரிந்தது."

விக்ரம், "தர்ஷினி நீ என்ன நினைக்கிறாய்?"

தர்ஷினி, "உதவிகள் பல விதம்.. தான் கையே தனக்கு உதவி மாதிரி தான் எல்லாமே. யாருமே நம்ம கை பிடித்து உதவ மாட்டாங்க. அந்த அந்த சூழ்நிலை பொறுத்து உதவிகள் மாறும். அப்படி தான் இந்த கதையில் நடந்தது."

விக்ரம், "அதே தான். அந்த கதையில் வரும் பெரியவர் போல தான் எங்க உதவியும்.. டான்ஸ் என்னனு நாங்க சொல்லுவோம் ஆனால் எப்படி ஆடானும் என்பதை நீங்க தான் மனதில் இருந்து வெளியே கொண்டு வரணும்.."

ராம், "கருத்து சொல்ல மாட்டேன் சொன்னே?"

விக்ரம், "எப்போ நான் அப்படி சொன்னேன்?"

ரிஷி, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிஷி கிட்ட ஒரு கதை சொல்லி அவனோட கருத்து மட்டும் கேட்டுவிட்டு தலையை மட்டும் தானே ஆட்டினே.."

விக்ரம், "அந்த கதையின் கருத்து புரியல.. அதன் அவன் கிட்ட கேட்டேன். உங்களுக்கு சொன்ன கதையின் கருத்து தெரியும். அது உங்க எல்லாருக்கும் ஏற்ற கதை அதன் உங்கள் விஷயத்தில் எங்களின் பங்கை சொன்னேன் அவ்வளவு தான்..😂"

லூசு மாதிரி பேசுறனே என்கிற கடுப்பை விட்டுட்டு...

ராம், "எங்களின் பயிற்சி அப்படி என்ன உன் அபிமானம் என்ன?"

விக்ரம், "நல்ல இருந்தது. அதிலும் சும்மா பலூன் மட்டும் தட்டி விளையாடாமல் அதில் கூட உனக்கு ஏற்ற ஸ்டெப்ஸ் கண்டுபிடித்தது தான் சூப்பர். ரியலி நல்ல இருந்தது உன்னோட ஸ்டெப்ஸ்.. நானும் முயற்சி பண்ணி பார்க்க போறேன்."

ராம், "நன்றி.. உன்னை என்னமோ நினைத்தேன்.."

விக்ரம், "என்னனு லூசு.. திமிர் பிடித்தவன் என்றா?"

ராம், "உண்மையை சொல்லணும் என்றால் ஆமாம்.. அது கூட உன்னோட கருத்து கதை முடிந்து போச்சு."

விக்ரம், "செல்ல குட்டி அது என்னோட கதை இல்லப்பா.. எனக்கு மரம் எல்லாம் ஏற தெரியாது. உயரம் கண்டாலே பயம்.. கதையை நெட் ல இருந்து சுட்டது. லிங்க் கூட தருகிறேன் போய் படி.."

பின் தர்ஷினி பக்கம் திரும்பியவன்..

விக்ரம், "முதல் ரெண்டு நாள் கண்ணை கட்டி ஸ்கிப்பிங் பண்ண போதே ரொம்ப தடுமாறினே.. அப்பறம் போக போக நல்ல வந்தது போல.. குட் குட்.. டான்ஸ் ல பொறுத்தவரை டைமிங் ரொம்ப முக்கியம் பாட்டுக்கும் நம்ம ஆட்டதுக்கும் ஒரு sync ஆகணும்.. அதுக்கு தான் இந்த பயிற்சி.."

பின் அர்ஜுன் மற்றும் தர்ஷினியே அருகே அழைத்தவன்..

விக்ரம், "உங்களுக்கு சின்ன கதை சொல்ல போறேன்.. பெரிய கருத்து எல்லாம் இல்ல.."

**************

ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.

கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க

"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.

கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,

மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..

************

விக்ரம், "அர்ஜுன், ஒரு விஷயம் புரிந்து கொள்.. நம்ம வழியில் எத்தனையோ அழகிகள் வருவாங்க.. அவர்கள் அழகை சைட் அடிப்பது தப்பு இல்ல.. ஆனால் நம்ம மனசுக்கு பிடித்த ஒருவர் நம்ம வாழ்க்கையில் வந்த பிறகும் செய்த தப்பை நீ திரும்பி பண்ணாத போது எதுக்கு குற்ற உணர்ச்சி.. சொல்லு.. மனதுக்கு பிடித்தவர்கள் நட்பு, காதல் என்கிற விதத்திலும் வரலாம். அதை புரிந்துக்கோ பூஸ்ட் குடிச்சுக்கோ.."

அர்ஜுன், "சாரி.. நான் எப்போதும் ஹார்லிக்ஸ் தான் குடிப்பேன்.."

விக்ரம், "பிங்கி கண்ணு.. ஒரு நண்பனா சொல்றேன்.. கடைசிவரை நீ பாவம் மா.."

பிங்கி, "அது தெரிந்த விஷயம் தான் விக்கி.."

விக்ரம், "ஓகே.. விஷயத்துக்கு வரேன். பிங்கி கண்டிப்பா நீ இன்னும் வெயிட் குறைச்சு தான் ஆகணும். அர்ஜுன் நீ உன் கை பலத்தை அதிகப்படுத்தனும்.. உங்களுக்கு நான் தேர்ந்தெடுத்த ஆட்டத்துக்கு அது ரொம்ப முக்கியம்.."

அர்ஜுன், "அது என்ன ஆட்டம்..? ரொம்ப கஷ்டமா?"

விக்ரம், "எனக்கு ஜாலி, ரிஷிக்கு ராமுக்கு கூட இது ஜாலி.. ஆனால் உனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்.. ரொம்பவே வலிக்கும். கை கால் உடல் உடைந்து போகவும் வாய்ப்பு இருக்கு."

பிங்கி, "ஐயோ அப்படி என்ன ஆட்டம்..?"

விக்ரம், "பெயரை விடு.. அந்த ஆட்டத்தில் துணை ஜோடியை கையில் தலையில் வைத்து ஆடணும். முக்கியமாக உன்னோட காலே தரையில் படாமல் பார்த்துக்கணும். ஏதாவது தப்பா ஆச்சு.. அவன் சட்னி தான்.."

அவன் சொன்ன ஆட்டத்தை கேட்டு தலையில் கை வைத்து கொண்டார்கள்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#19
வாராயோ வெண்ணிலாவே...!! 16
அத்தியாயம் 16


ராம் மட்டும் தன் சந்தேகத்தைக் கேட்டான்..

ராம், "மிஸ்டர் முகமூடி நீங்க சொல்றத பார்த்தால் உப்பு மூட்டை ஏத்திக்கிட்டு டான்ஸ் ஆடணும் சொல்ல மாதிரி இருக்கு."

விக்ரம், "மாதிரி எல்லாம் இல்ல செல்லம் உப்புமூட்டை தான் விதவிதமா உப்பு மூட்டை தூக்கி ஆடணும் கையிலே கொஞ்ச நேரம் தலையில கொஞ்ச நேரம் என டான்ஸ் ஆடணும். மற்ற ஜோடியை தவிர இவர்களுக்கு ஏன் இதை தேர்ந்தெடுத்து ஏனென்றால் இவர்களுக்கு நடுவில் இருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரோ சூப்பர். இவங்க ரெண்டு பேருமே பல வருஷமா ப்ரெண்ட்ஸ். ஜோடி நடனம் என்று வந்துச்சுன்னா நம்ம ஜோடி கூட ப்ரெண்ட்லி கனெக்சன் பக்காவா இருக்கணும் அப்போ தான் பார்க்க செம்மையா இருக்கும்."

ராம், "யாப்பா விக்கி உனக்கு கருணை கொஞ்சம் கூட இல்ல. அர்ஜுனன் சைஸ் என்ன? அவளோட சைஸ் என்ன? இதெல்லாம் நடக்கிற காரியமா?"

விக்ரம், "ராம் செல்லம் அது அவங்க பாடு உனக்கு என்ன? நீ ஜாலியா உன் ஜோடி கூட டான்ஸ் ஆடுவது மட்டும் பாரு அவன் விஷயத்தை நான் பார்த்திருக்கிறேன்."

ராம், "இருந்தாலும் எப்படி..?"

தர்ஷினி, "அட கருப்பா நீ கொஞ்ச நேரம் வாய மூடி சும்மா இரு என்ன பண்ணுனா அவங்க பாத்துப்பாங்க நீ எதுவும் பேச வேண்டாம். விக்கி எங்களின் டான்ஸ் எந்த மாதிரி சொல்லல.."

விக்ரம், "உங்களோடது சார்லிசாப்ளின் காலத்தின் நடனம். இந்த கால பாட்டுக்கு அந்தக்கால ஸ்டெப்ஸ் போட்டா எப்படி இருப்பான்னு ஆடி காட்ட போறீங்க. இப்பவே சொல்லிட்டேன் ஃபேஸ் ல ஒரு பக்கம் வெள்ளை கலர் சாயம் மறுபக்கம் கருப்பு காலர் சாயம் போட்டு ஆட போறீங்க.. இட்ஸ் ஓகே ல..?"

தர்ஷினி, "நல்ல வருமா?"

சங்கீதா, "தர்ஷ்.. நீ சந்தேகப்படாத.. ஒன் வீக்கா உங்களின் பயிற்சி வீடியோஸ் எல்லாம் அவனும் நானும் பார்த்தோம். கண்டிப்பா இது வேலைக்கு ஆகும். மோர் ஓவர்.. ராம் சாரி இதை நான் சொல்லியே திறனும். உன்னோட காலர் பிரச்சினையை மறைக்க இதன் நல்ல முடிவு. உன்னை குறை சொல்லல உங்க ஜோடி வெவ்வேறு நிறம் இருக்குற ஜோடி.. டான்ஸ் நல்ல வரும் அதில் சந்தேகம் இல்ல.. ஆனால் உங்களின் நிறத்தை பார்த்து எவனும் எதுவும் சொல்ல கூடாது. அதற்கு தான் இது."

விக்ரம், "கீத்.. நீ சொன்ற அளவுக்கு எல்லாம் இல்ல.. இவர்களுக்குள் ஒரு திறமை இருக்கு. ரொம்ப சுலபமா இவர்களுக்கு அந்த காலத்து நடனம் வரும். கற்பனை பண்ணி பார்.. இந்த காலத்து பாட்டு அந்த காலத்து நடன அசைவுகள். செம்மயா இருக்கும்."

கற்பனை பண்ணி பார்த்த எல்லாரும் நல்ல தான் இருக்கும் சொல்ல.. அடுத்து ரிஷி மற்றும் அஞ்சலியின் நடனம் பற்றி வந்தது.

விக்ரம், "ரிஷி அண்ட் அஞ்சலி.. சங்கீதா ஏற்கனவே உங்களுக்கு ballae டான்ஸ் என சொல்லி இருப்பாள். ஆனால் அதில் சின்ன திருத்தம் ballae டான்ஸ் விட்டு ரோப் டான்ஸ் வச்சுக்கலாம். அஞ்சலி நீ ரோப் ல தொங்கிய மாதிரியே டான்ஸ் ஆட போறே.. ரிஷி அதற்கு ஏற்ற மாதிரி ஸ்டெப்ஸ் போடா போறான்."

பிங்கி மட்டும் முன்னாடி வந்து..

பிங்கி, "விக்கி, இந்த உப்பு மூட்டை டான்ஸ் எல்லாம் வேண்டாமே.. கண்டிப்பா எங்களால் முடியாது. நான் எவ்வளவோ ட்ரை பண்ணியும் என்னால் எடையை ரொம்ப குறைக்க முடியவில்லை. இன்னும் மூணு வாரத்தில் ரொம்பெல்லாம் எடை குறையாது கடைசியில் வெங்கி தான் கஷ்டப்படுவான்."

விக்ரம், "அப்படியா அர்ஜுன் செல்லம் கஷ்டப்படுவியா ராசா? சே சே நீ ரொம்ப பாவம் இந்த குண்டு பூசணிக்காய் வெச்சு நான் என்னத்த உனக்கு சொல்லி தருவது. பேசாம நல்ல பொண்ணா பாரு இவள் கூட ஆடினா ஸ்டேஜ் உடைந்து விழுந்தாலும் விழுந்து விடும்."

அதனைக் கேட்ட அர்ஜுன் கோபத்தில் என்றுமில்லாத அளவுக்கு கத்தினான்.

அர்ஜுன், "டேய்.. மரியாதையா அவகிட்ட சாரி கேளு.."

விக்ரம், "அட பாருடா இந்த செல்லத்துக்கு கோபம் எல்லாம் வருது. நான் எதுக்குடா சாரி கேக்கணும் அவளை பார் பூசணிக்காய் சைஸ் ல தானே இருக்கா அப்போ சரியா தானே சொன்னேன்."

அர்ஜுன், "இல்ல அவ அப்படி எல்லாம் இல்ல.."

விக்ரம், "பின்ன எப்படி இருக்காளா நீயே சொல்லு..?"

அர்ஜுன், "கொஞ்சம் உடலை சதை அதிகமாக இருக்கு அதற்கு அவ பூசணிக்காய் விடுவாளா. Chubby girl அவள்..

சிரிக்கும் கன்னம் குழி அழகி..
இஞ்சி இடுப்பழகி..
முத்து சிரிப்பழகி..
மாய விழி அழகி..

மொத்தத்தில் ஹன்சிகா மோத்வானி போல.. போல இல்ல அந்த நடிகையை விட என் பிங்கி அழகியோ அழகி..

இதுக்கு மேல் அவளை குண்டுனு சொன்னே.. சொன்ன வாயை உடைத்து விடுவேன் பார்த்துக்கோ.."

அவன் சொன்னதுக்கு கை தட்டிய விக்ரம்..

விக்ரம், "நல்லவே உன் ஜோடியை வர்ணித்து சொல்ற.. இருந்தாலும் செல்ல குட்டி.. உன்னை விட அவள் வெயிட் அதிகம் ல பின்ன எப்படி செல்லம் டான்ஸ் ஆட போற.. உனக்கு வேண்டுமென்றால் வேற விதமான டான்ஸ் சொல்லட்டா..?"

அர்ஜுன், "இல்ல.. உன்னோட உப்புமுட்டை டான்ஸ் ஏ ஓகே.. என்னால் ஆட முடியும். அவளுக்காக இன்னும் கடுமையா பயிற்சி எடுத்து அவளை தோளில் உட்காரவைத்து ஆடல.. நான் அவளோட வெங்கி இல்ல.. அவள் மேல் நான் வைத்த அன்பு உண்மை இல்ல.."

விக்ரம், "உன்னால முடியாது செல்லம். ரொம்பவே கஷ்டம்.."

அர்ஜுன், "என்னால் முடியுமா? முடியாதா? என்பதை நான் தான் முடிவு பண்ணனும். முடியும் சொல்ற விஷயத்தை செய்வது விட முடியாது சொல்ற விஷயம் செய்வதில் தான் கிக் ஏ.. முடித்து காட்டுறேன்.."

விக்ரம், "நல்ல முடிவு.. அப்பறம் என்ன கவலை பிங்கி.. உன்னோட ஜோடியை சொல்லிட்டான். இனி உங்க பாடு என்னோட வேலை ஸ்டெப்ஸ் சொல்லி தருவது அதை பின்பற்றி ஆட வேண்டியது உங்க பொறுப்பு."

மொத்தத்தில் வந்த முதல் நாளே எல்லோரின் கண்ணிலும் விளக்கெண்ணை விட்டு ஆட்டியது போல ஒரு வழி பண்ணிவிட்டான்.

அன்றைய நாள் பயிற்சி முடியும் சமயத்தில் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது.

அந்த காலே ஸ்பீக்கர் போட்டு எல்லோரும் பார்க்கும் படி வைத்தவன் அதில் இருந்த 3 வயது பெண் குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.

விக்ரம், "அப்பு குட்டி.. என்னமா எப்படி இருக்கே..?"

அப்பு, "போ விக்கி பா.. உன் மேல செம்ம கோபத்தில் இருக்கேன். நீ போனதில் இருந்து ஒரு ஃபோன் கால் பண்ணியா? அம்மா கூட ஃபோன் பண்ணல.."

விக்ரம், "இல்ல அப்பு குட்டி, உன் விக்கி அப்பா மறக்கல.. இங்க மார்னிங் என்றால் அங்கே நைட் ல.. என்னோட குட்டி பொண்ணு நீங்க தூங்கிட்டு இருப்பிங்களே அதன் நானும் அம்மாவும் ஃபோன் பண்ணல.."

அப்பு, "அப்போ அம்மாவை பேச சொல்லு.. இப்பவே..😡😡"

சங்கீதா பேச ஆரம்பித்தாள்..

சங்கீதா, "மை பேபி.. என்னடா அம்மாவை மிஸ் பண்ணிய?"

அவளின் முகத்தை ஃபோன் வழியில் பார்த்த குழந்தை அழுது கொண்டே ஃபோன் ஸ்கிரீனே தொட்டு பேசியது..

அப்பு, "அம்.. அம்மா.. நீ எப்போ வருவ.. ஐ மிஸ் யூ.. கம் சூன்.. ஆ.. அஹ.."

குழந்தையின் அழுகையை பார்த்து பொறுக்க முடியாத சங்கீதா அவளும் கண்ணீர் விட்டு..

சங்கீதா, "அம்மா.. சீக்கிரம் வரேன் டா.. இன்னும் த்ரீ வீக்ஸ் தான்.. அப்பறம் உங்க தாத்தா பாட்டி கூடவே ஃப்ளைட் ஏறி அப்பாவும் நானும் பறந்து வந்துடுவோம் சரியா?"

அப்பு, "இன்னும் சீக்கிரமா வர முடியாதா?"

சங்கீதா, "இல்ல குட்டி.. அம்மாவும் அப்பாவும் இங்கே ஒரு வேலையா மாட்டி இருக்கோம். அது முடிந்த அடுத்த நாளே ஃப்ளைட் பிடித்து விடுவோம். அதுவரை என் அப்பு குட்டி அவங்க மம்மி டாடி கூடவே விளையாடி கொண்டு இருப்பிங்களாம் சரியா?"

அப்பு, "சரி.. ஆனா.. இனி என்னை விட்டு தூரமா போக கூடாது.. அப்படி போன என்னையும் கூட்டிக்கிட்டு போகணும்.. ஓகே.."

சங்கீதா, "ஓகே இது அம்மாவின் பிங்கி பிராமிஸ்..🤞🤞"

அப்போ வீடியோ பின்னாடி தெரிந்த ஒருவனின் முகத்தை பார்த்து குழந்தை..

அப்பு, "ஆய்.. அப்பா உன்னை மாதிரியே டாடி மாதிரியே இன்னொரு மேன்.. இன்னொரு மேன்.. அய் ஜாலி ஜாலி.."

குழந்தை என்ன சொல்கிறது என்பது புரிந்த விக்ரம் மற்றும் சங்கீதா.. சில நொடிக்கள் பேசி சமாளித்து விட்டு போனை வைத்தார்கள்.

ஆனால் இவர்களின் பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு கூட்டத்துக்கே பதில் சொல்லவேண்டிய கட்டத்தில் அவர்கள் இருந்தார்கள்..

பிங்கி, "சங்கி என்னடி இது ஒரு முன்று வயசு குழந்தை உங்களை அப்பா அம்மா சொல்லுது.. லவ் பண்றீங்க தெரியும் ஆனால் இந்த வயசில் குழந்தையே இருக்கு என சொல்லலியே மா?😰😰"

ராம், "செல்லக்குட்டி.. செல்லக்குட்டி என எல்லாரையும் கூப்பிட்டியே விக்கி.. கடைசியில் மூன்று வயசுல ஒரு குட்டி இருக்குன்னு சொல்லாம விட்டியே.. இது நியாயமா? தர்மமா?.."

தர்ஷினி, "உலகம் எங்க தான் போகுது..? இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல சொல்றீங்க.. அதுக்குள்ள ஒரு குழந்தை அதுவும் முன்று வயசில்.."

அஞ்சலி, "சொல்ல வார்த்தை இல்ல கடவுளே.. கடவுளே..🙏🙏"

ரிஷி, "மாடர்ன் வேர்ல்டு.. மாடர்ன் வேர்ல்டு.. என்ன பண்றது நமக்கு கடைசிவரை கை தான்.."

அர்ஜுன், "மிஸ்டர் விக்ரம்.. உங்களின் திருவிளையாடல் இன்னும் ஏதாவது மிச்சம் இருக்க அதையும் சொன்னால் கேட்டு விடுவோம்.."

பார்வதி, "இந்த ஒரு குழந்தை மட்டுமா இல்ல இன்னும் சில குழந்தைகள் இருக்கா?"

சதாசிவம், "விக்கி தம்பி உனக்கு எங்கையோ மச்சம் இருக்குப்பா.. என்ன மாதிரி வேலை செய்து இருக்கே? 😂😂🙏"

அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதிலே விக்ரம் தந்தான்.

விக்ரம், "அது என்னோட அண்ணனின் குழந்தை.. பெயர் அபூர்வ.. நாங்க செல்லமா அப்பு என கூப்பிடுவோம்.. அவள் பிறந்ததில் இருந்து எங்க கையில் தான் அதிகம் வளர்ந்தாள். அதனால் எங்களை அப்பா அம்மா என்று தான் கூப்பிடுவாள். அவளை பெற்ற இருவரை டாடி மம்மி. கீத் நானும் லவ்வர்ஸ் தான் ஆனால் இதுவரை எங்கள் இருவருக்கும் ஒரு எல்லை இருக்கு. அந்த எல்லை விட்டு குறிப்பிட்ட வயசு வந்து கல்யாணம் ஆகும் வரை ரெண்டு பேருமே கடைப்பிடிப்போம். இன்னும் ஏதாவது டவுட்?"

ராம், "உங்க அண்ணனின் வயசு என்ன?"

விக்ரம், "அவனும் நானும் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்கள். அப்போ என்னோட வயசு தான் அவனுக்கும். 17 வயசு.."

தர்ஷினி, "அப்போ உன்னோட அண்ணியின் வயசு?"

விக்ரம், "எங்களுக்கு 17.. மாயாவுக்கு 18 வயசு. மாயா அவளை நான் எப்போதும் அண்ணி என கூப்பிட்டது இல்ல அது அவளுக்கும் பிடிக்காது. இப்போ விஷயத்துக்கு வருகிறேன். மாயாவுக்கு 15 வயசில் குழந்தை பிறந்தது. யெஸ், ரொம்ப சும்மா வயசு தான்.. வயசு கோளாறு என் அண்ணன் ஆதி.. ஆதித்யா தப்பு பண்ணிட்டான். அதில் மாயாவின் பங்கும் இருந்தது. கரு கலைக்க யாருக்குமே விருப்பம் இல்லை மாயாவையும் சேர்த்து. குழந்தை பிறந்தது.. அந்த குழந்தை கிட்ட தான் இவ்வளவு நேரம் போனில் பேசினோம் அதை நீங்கள் பார்த்தீர்கள்.. அப்பறம் சொல்ல மறந்துட்டேன் மாயா ஒரு முழு அமெரிக்கா வாழ் பெண்.. எங்க அண்ணன் மேல் இருக்கும் காதலில் ரெண்டு வருஷமா தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு தான் விஷயம்.."

அர்ஜுன், "அப்போ கல்யாணம்..?"

விக்ரம், "அதன் சொன்னேன் ல.. அண்ணாவுக்கு இப்போ தான் 17 ஆகுது. இன்னும் ஒரு வருடம் வெயிட் பண்ணணும். அப்பறம் தன் கல்யாணம் எல்லாம்.. கூடவே எங்க கல்யாணத்தை வைக்கிற பிளான் ல இருக்காங்க நாங்க தான் இன்னும் ஆறு வருசம் போகட்டும் சொல்லிட்டோம்."

அதற்கு மேல் அவன் எதுக்கும் பதில் தர மாட்டேன் என சொல்லி விட்டான்.

அன்று இரவு எல்லாரும் உணவினை அங்கேயே முடித்து விட்டு கிளம்ப..

விக்ரம் மட்டும் ரிஷியின் வீட்டில் தாங்குவது என முடிவு ஆனது. அவன் வந்த விஷயம் தாத்தா பாட்டிக்கு தெரிய கூடாது என சொல்லி விட்டான். அதன் காரணம் ஏற்கனவே சங்கீதாவுக்கு தெரியும் என்பதால் அமைதியா இருக்கே மற்றவர்கள் தான் முடியைப் பிய்த்துக் கொண்டார்கள்.

போவதற்கு முன் சங்கீதா அவனின் முகமூடி பாத்திரம் என சொல்லி விட்டு போனாள்.

அதற்கு ஏற்றது போல விக்ரம் பல ஏற்பாடு செய்து விட்டு தான் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் ரிஷி, பார்வதி பாட்டி மற்றும் சதாசிவம் தாத்தா கிட்ட சொல்லிவிட்டு போனான்.

ரிஷிக்கு விகரமே தான் முகத்தை காட்டும் வரை தானே எந்த முயற்சியும் செய்ய போவது இல்ல என சொல்லி விட்டான்.

அறைக்குள் சென்று கதவை தாற்பால் போட விக்ரம்..

தன் முகமூடியை கிழட்டி வைத்தான்..

அங்கே கண்ணாடியில் தெரிந்த முகம்.. அர்ஜுனின் முகம் போலவே இருந்தது.

விக்ரம் தாடி மட்டும் எடுத்து விட்டு நின்றால் யார் விக்ரம்? யார் அர்ஜுன்? என கண்டே பிடிக்க முடியாது.

அதோ இன்னொரு வீடியோ கால் வருது..

அட கடவுளே.. அதில் கூட அதே முகம்.. ஆதித்யா விக்ரமின் கூட பிறந்த அண்ணன்.

விக்ரம், "வணக்கம் ப்ரோ.. என்ன நான் இல்லாமல் செம்ம ஜாலி போல.. பார்த்து நான் திரும்பி வருவதற்குள் இன்னொரு குழந்தைக்கு ரெடி ஆக போற.."

ஆதி, "அட போடா.. அப்போ என்னமோ வயசு கோளாறு தப்பு நடந்து விட்டது. அதன் பிறகு கிஸ் தவிர எதுக்கும் பக்கத்தில் விடவே மாட்டேன் சொல்லிட்டா.. நான் வேற ருசி கண்ட பூனை செம்ம கண்டா இருக்கு."

விக்ரம், "கட்டுப்படுத்த வேண்டும் ப்ரோ.. நான் சரியா இல்ல.. அமெரிக்கா ல வாழ்ந்தாலும் நம்ம இந்தியர்கள் தான். தடையை மீறு போது ஒண்ணுமே தெரியாது. ஏதோ சாதித்த சந்தோசம் இருக்கும் ஆனால் அதன் பின்விளைவு வரும் போது தானே செய்த தப்பு தெரியுது."

ஆதி, "என்னை விட ரெண்டு நிமிடம் சின்ன பையன் உன் பேச்சு கேட்க வேண்டியதா இருக்கு?"

விக்ரம், "என்ன பண்றது ப்ரோ.. நீ செய்த தப்பு அப்படி?"

ஆதி, "என்னை மட்டும் சொல்ற? ஏன் மாயா பண்ணல..? நீ என நினைத்து என்னை.."

விக்ரம், "மனசை தொட்டு சொல்லு.. அப்போ அது தெரிந்து தானே நீ படுத்த.. அவளுக்கு என் மேல் இருந்த ஈர்ப்பை நம்ம முகத்தின் ஒற்றுமை வைத்து காரியம் சாதித்து விட்டாய். அமெரிக்கா பெண்ணாக இருந்தாலும் மாயாவின் கொள்கையே ஒருவனுக்கு ஒருத்தி தான். அந்த காரணத்தால் தான் இன்னும் நீ உயிரோட இருக்கே. நல்ல வேளை நீ வேற எந்த பொண்ணையும் திரும்பி பார்க்காமல் மாயா.. மாயா என அவள் பெயரையே சொல்லிக்கிட்டு இருந்தாய்.. அதன் ஒரு கட்டத்தில் உன் மேல் அவளுக்கு காதல் வந்தது.. அதற்குள் உங்களுக்கு குழந்தை பிறந்து.. அதற்கு முன்று வயசே ஆச்சு."

ஆதி, "நீ சொல்லி தெரியணும் ஒண்ணும் இல்ல.. அப்போ என்னவோ ஒரு தடவை வயசு கோளாறு தப்பு பண்ணிட்டேன். எப்போ அப்புவை அவள் ஈற்று எடுக்க உயிர் வலி அனுபவித்தலோ அதை பார்த்த பிறகு நான் ஒரு ஆண் என சொல்லவே கேவலமா இருந்தது. அப்போ தான் அவள் மேல் எனக்கு இருந்த காதலை உணர்ந்தேன். அப்பறம் அவளின் விருப்பம் இல்லாமல் என் சுண்டு விரல் நகம் கூட அவள் மேல் படல.. இந்த முத்தம் கூட அப்புவின் கட்டாயம் பேரில் தான்டா நடக்குது. நான் வெயிட் பண்ணுவேன் இன்னும் எங்களுக்கு வயசு இருக்கு.. நேரம் இருக்கு."

விக்ரம், "எல்லாம் நல்லதா நடந்தால் சந்தோசம் தான்.."

ஆதி, "அப்பறம் அந்த அர்ஜுன் பற்றி என்ன தெரிந்தது.? நான் இங்கே நல்ல செக் பண்ணிட்டேன். அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்ம மட்டும் தான் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்.."

விக்ரம், "நானும் சங்கீதா கிட்ட அப்போ அப்போ பேசி அவனை மாதிரி தெளிவுபடுத்தி கொண்டேன். முகத்தை தவிர எந்த ஒற்றுமையும் இல்ல. நம்ம குணம் கொஞ்சம் கூட அவன் கிட்ட இல்ல.. படிப்பு தவிர அதுவும் ரெண்டுக்கட்டன் தான். ஆ.. காதல் இதில் வேண்டுமென்றால் நமக்கும் அவனும் ஒற்றுமை இருக்கு. முன்று பேருமே நம்மளோட சின்ன வயசு ப்ரெண்ட் ஆ லவ் பண்றோம்.. அப்பறம் முன்று பேருக்குமே 18 வயது ஆரம்பிக்கல.. நம்மளின் பிறந்த நாள் அவனின் பிறந்த நாளுக்கு ஒரு வார இடைவேளை இருக்கு. அதுவே போதும்.. அதுக்கு மேல் டவுட் என்றால் ஒரு DNA test எடுத்து பார்போம் அதுவும் அவனுக்கே தெரியாமல்.."

ஆதி, "அதுவும் சரி தான். பாருடா சீக்கிரம் பார்த்து சொல்லு.."

விக்ரம், "ஹ்ம்ம்..பார்ப்போம் பார்ப்போம்.. அப்பறம் ப்ரோ.. நம்மளோட கதை தான் அதிகம் போகுது போல.. இது காதல் கதை.. நம்ம இதில் ஹீரோ இல்ல.. அந்த முன்று ஜோடிகள் தான் ஹீரோ ஹீரோயின்ஸ்.. இவர்களின் கதை முடிந்த பிறகு நம்ம கதையை பார்ப்போம். அதுவரை நம்ம அப்பா அம்மாவுக்கு கூட தெரிய கூடாது. நீயும் சொல்லாதே.."

ஆதி, "இன்னும் அவங்க மாயா விஷயத்தில் என் மேல் கோபமாக தான் இருக்காங்க.. என்னால் உன்மேல வேற சந்தேகம் இருக்கு அவர்களுக்கு அதற்கு ஏற்ற மாதிரி நீயும் அவளை தொடர்ந்து சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா போய்ட்ட.."

விக்ரம், "நான் இந்தியா வந்ததில் அவளும் ஒரு காரணமே தவிர.. அவளே மொத்த காரணம் இல்ல. அம்மா அப்பாவை நான் வந்து பார்த்துக்கிறேன் யூ டோண்ட் வொர்ரி.."

ஆதி போனை வைத்த பிறகு,

தன் ஃபோனில் ஒருவனின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்த விக்ரம்,

விக்ரம், "செல்லகுட்டி இந்த அர்ஜுன் பாயலுக்கு பிறகு உன்னை தான் தேடி வர போறேன். உன் கதை என்னவோ? சத்யா.. சத்யா தங்கவேல்.. டெல்லி University.. MBBS first year.. age 17. பிறந்த நாள்.. ஓ மை காட்.. அர்ஜுனின் அதே பிறந்த நாள். என்னையும் என் அண்ணனை சேர்ந்து ரெண்டு.. அர்ஜுனை சேர்த்தால் முன்று.. இப்போ இந்த சத்யா சேர்த்தால் நான்கு.. ஒரே முகம் அதுவும் நான்கு பேருக்கு. வயசு கூட ஒரே வயசு. ஏற்கனவே அர்ஜுன் விஷயத்தில் சங்கீதா செம்ம குழப்பத்தில் இருக்கிறாள். இதில் இந்த நாலாவது சத்யா வேற... இந்த சத்யாவின் விஷயத்தை கண்டும் காணாமல் விடுவோம். இதை தெரிந்து ஒண்ணும் ஆக போவது இல்ல.."

தன் பொய்யான கால் கட்டோடு தூங்க சென்றான்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹
 
#20
வாராயோ வெண்ணிலாவே...!! 17
அத்தியாயம் 17


காலேஜ்,

அனிதா கார்த்தி கிட்ட சண்டை போட்டு கொண்டு இருந்தாள்.

அனிதா, "கார்த்தி, தர்ஷினி உன்னோட தங்கச்சி தானே. அப்போ அவள் கிட்டயே கேளு அவங்க எந்த மாதிரி டான்ஸ் பிராக்டீஸ் பண்றாங்க என?"

கார்த்தி, "மாட்டேன்.."

அனிதா, "சாரி, திரும்பி சொல்லு கேட்கல"

கார்த்தி, "கேட்க மாட்டேன் சொன்னேன்.."

அனிதா, "ஏன்?"

கார்த்தி, "ஏன் கேட்கணும்?"

அனிதா, "அது தெரிந்தால் அதற்கு ஏற்ற விதத்தில் நம்மாலும் பிளான் பண்ணலாம் ல.."

கார்த்தி, "இங்க பார், தர்ஷ் பொறுத்தவரை என் விஷயத்தில் தலையிட மாட்டாள். அதே போல நானும் அவள் விஷயத்தில் மாட்டேன். இன்னும் ரெண்டு வாரத்தில் போட்டி முடிந்த பிறகு உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவளுக்கும் எனக்கும்? அதனால் கேட்க மாட்டேன்."

அனிதா, "சே, நீ சரியான வேஸ்ட். உனக்கு உன் தங்கச்சியை அடக்க தெரியல. அதன் எவனோ ஒருத்தன் கூட அவள் டான்ஸ் ஆட போவதை பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்கே.."

கார்த்தி, "அப்போ நீ? முதலில் அந்த அர்ஜுன் பின்னாடியே சுற்றினே, அப்பறம் அவனை கிளாஸ் ஏ கிண்டல் பண்ண பின் வாங்கினே. அதுவும் அவனுக்கு தேவையான நேரத்தில், அப்பறம் ரிஷி கூட ஜோடி சேர பார்த்த அவன் வேண்டாம் சொல்ல என்னை தேடி வந்த.. டான்ஸ் ஆட. அப்போ உன்னை என்ன சொல்ல?"

அனிதா, "கார்த்தி, திஸ் இசு தே லிமிட். என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?"

கார்த்தி, "நல்ல தெரியும். உனக்கு எங்கே போனாலும் ஃபேமஸ் ஆ இருக்கணும். அப்படி தான் உன்னோட ஸ்கூல் வாழ்க்கையில் அர்ஜுன் தனிமையில் சொன்ன காதலை நீயே ஸ்கூல் முழுசும் பரப்பி அவனை அவமானம் செய்தாய். அதையே இங்க காரணமாக வைத்து அவன் கூட காதல் என்ற பெயரில் சுற்றினால் எல்லார் முன்னாடி இன்னும் ஃபேமஸ் ஆகலாம் பார்த்த, ஒரு நாள் அர்ஜுன் தெரியாமல் ஆடி பாட்டு பாடியே வீடியோ வாட்ஸ்அப் ல பரவி அவன் அவமானம் பட அதையே சக்க வைத்து அவனை விட்டு வந்த, அதே நேரத்தில் என் தங்கையை அடித்து ரிஷி ஃபேமஸ் ஆக அவன் கூட சேர பார்த்து பல்ப் வாங்கி, அவனுக்கே நான் எதிரி என்ற விதத்தில் இருப்பதால் என் கூட ஜோடி சேர்ந்து ஆட வந்த.. அப்படி ஆடுவது மூலம் இன்னும் ஃபேமஸ் ஆகலாம் என்கிற எண்ணம்."

தன்னை பற்றி சரியாக சொன்னதை கேட்டவள்..

அனிதா, "கார்த்தி முதலில் அந்த எண்ணத்தில் தான் பழகினேன். அப்பறம் உன்னை பிடித்து போச்சு.. என்னை நம்பு பிளீஸ்.."

கார்த்தி, "சாரி, இந்த போட்டி முடிந்த பிறகு உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல. அவ்வளவு தான், அதற்கு உன்னை பிடிக்கல என இல்ல என் மனசில் வேற பொண்ணு இருக்கிறாள்."

அனிதா, "எனக்கு தெரியும் அந்த குட்டை அஞ்சலி தானே."

கார்த்தி, "கொஞ்சம் உயரம் கம்மி அதற்கு நீ என்னவென சொல்வியா?"

அனிதா, "நான் சொன்னது பொய் இல்ல. இன்னொரு விஷயம் தெரியுமா.. அவன் அந்த ரிஷியே தான் காதலிக்கிறாள்."

கார்த்தி, "தெரியும் அதற்கு என்ன?"

அனிதா, "உனக்கு வெட்கமா இல்ல. எவனோ ஒருத்தனை‌ காதலிப்பவள காதலிப்பது."

கார்த்தி, "இது ஒரு தலை காதல்.. யாருக்குமே பாதிப்பு இல்லாத காதல். உனக்கு சொன்னால் புரியாது புரியவும் வேண்டாம்."

கார்த்தி செய்த தவறு அனிதாவை பற்றி குறைவாக நினைத்தது. அவளின் பழிவாங்கும் எண்ணம் எந்த அளவுக்கு என போக போக தான் தெரியும்.

**************

விக்ரம் வந்த ஒரு வாரத்தில் அர்ஜுன் நன்றாகவே உடலை தேற்றி விட்டான். எல்லாம் விக்ரம் முடியாது சொன்ன ஒரே காரணத்தால் தான் வெறிகொண்டு பிடிக்காத முட்டை கூட அதிகம் எடுத்து கொண்டான். பிங்கியால் தான் நினைத்த அளவுக்கு உடல் எடையை குறைக்க முடியல.

ராம் அடிக்கடி ஏதாவது வாய் கொழுப்பில் பேசி விக்ரமிடம் மொக்கை வாங்கிட்டே இருந்தான். தர்ஷினி மற்றும் சங்கீதா நெருங்கிய தோழி ஆகி விட்டார்கள்.

ரிஷி அஞ்சலி காதலே சொல்லாமல் காதல் செய்து கொண்டு இருந்தார்கள். முதலில் சங்கீதா கூட சண்டை போட்டு கொண்டு இருந்தவன் பின் விக்ரம் வந்த பிறகு அவனின் தொடர் கதை கேட்டோ இல்ல அதை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வந்தோ எல்லாத்துக்கும் சரி என்றான்.

ரிஷி மற்றும் தர்ஷினி திடீர் நண்பர்கள் ஆனது பார்த்து எல்லாரும் தலை சொரிந்து கொண்டனர்.

அதற்கு மேல் தர்ஷினி அடிக்கடி ரிஷியே செல்லமாக ' வெண்ணிலவன்... வெண்ணிலவன்..' வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுவது என எல்லாம் பார்த்து ராம் கூட பதில் தெரியாமல் முழித்தான்.

அன்று ஒரு நாள் ரிஷி குளித்து கொண்டு இருக்கே அவனின் அறைக்குள் வந்த அஞ்சலி அவனின் புத்தக அலமாரியில் பாதி எழுதிய டைரி ஒன்றை படித்து கண்ணீர் விட்டாள்.

அதில் ஒரு இடத்தில்..

"என் வெண்ணிலாவே தேடும் வெண்ணிலவன் நான்...", என எழுதி இருக்கே அது அவனின் காதலி என்கிற முடிவுக்கே வந்து விட்டான்.

அதே நேரத்தில் தான் ரிஷி உடை மாற்றி விட்டு வெளியே வந்தான். தன் அறையில் இருந்த அஞ்சலியை பார்த்தவன்.

"எலி.. எலி குட்டி என்னடி பண்ற இங்கே.. சாரி காலையில் இருந்து ஓயாமல் ஆடிக்கிட்டே இருந்ததால் ஒரே வேர்வை அதன் குளிக்க வந்தேன். நீயும் பக்கத்து அறையில் போய் குளிக்கணும் என்றால் குளி."

"ரிஷி, யார் அந்த வெண்ணிலா..?"

"உனக்கு எப்படி?"

"நான் கேட்ட கேள்விக்கு பதில்.."

"வெண்ணிலா என்னோட உயிர்! நான் இன்று உங்க எல்லார் முன்னாடி உயிரோட இருக்கவே அவள் தான் காரணம்."

அவன் உயிர் என சொன்ன போதே அஞ்சலியின் இதயம் உடைந்து போச்சு...

"அவள் இப்போ எங்கே இருக்கிறாள்?"

"தெரியல.. சுனாமி வெள்ளத்தில் அடித்து கொண்டு போனவள் அப்பறம் அவளை நான் பார்க்கல. அதே வெள்ளத்தில் தான் என்னோட அப்பா அம்மாவை இழந்தேன் அவர்களின் உடல் கிடைத்தது. ஆனால் என்னோட வெண்ணிலாவின் உடல் கிடைக்கல. என் மனசு அவள் இன்னும் உயிரோட இருக்கிறாள் சொல்லுது. எங்கேனு தெரியல. என்னிகாவது அவளை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு."

"வெண்ணில்லா.. உன்னோட க்ளோஸ் ப்ரெண்ட் ஆ.."

"இல்ல.. அதுக்கும் மேல.."

அது என்ன உறவு என அவன் சொல்லல.. அவளும் அதுக்கு மேல் கேட்கல..

அது "காதல்" என அஞ்சலி முடிவு பண்ணி விட்டாள்.

இவர்கள் இருவரின் தவறே தங்கள் மனதில் இருந்த காதலை சொல்லி கொள்ளாமல் இருந்தது தான்.

அதை இருவரும் சொல்வதற்குள் வெண்ணிலாவின் வருகை ஒரு கலக்கு கலக்கும்.

*****************

விக்ரம் விடை தெரியாத ஒரு கேள்விக்கு கிடைத்த பதிலை பார்த்து குழப்பத்தில் இருந்தான்.

அவன் கையில் இருந்த ஒரு DNA report சொன்னது அவனும் அர்ஜுனும் சகோதரர்கள் என ஆனால் எப்படி என்று புரியாமல் முழித்தான்.

அதே குழப்பம் தான் சங்கீதாவுக்கு..

சங்கீதா, "விக்கி, என்னடா இது இந்த ரிப்போர்ட் இப்படி சொல்லுது? ஆதியும் நீயும் ட்வின்ஸ் இது ஊரறிந்த விஷயம். இந்த அர்ஜுன் எப்படி?"

விக்ரம், "அதான் கீத் புரியல.. அர்ஜுனை பற்றி நமக்கு கிடைத்த தகவல் படி நாங்கள் பிறந்த ஒரு வாரம் கழிச்சு தான் அவன் பிறந்த மாதிரி அவனுடைய பிறப்பு சான்றிதழ் சொல்லுது. ஏன்டா இங்கே வந்தோம் இருக்கு... என்னோட தாத்தா பாட்டியை பார்க்க வந்ஊ நீ தெரியாத்தனமா இங்கே பிங்கி கூட இவனை பார்த்து என்கிட்ட சொல்லாம இருந்தால் நானும் இங்கு வந்திருக்க மாட்டேன் இவ்வளவு குழப்பமும் நடந்திருக்காது."

சங்கீதா, "பிறப்பு சான்றிதழ் பொய் சொல்லாதே."

விக்ரம், "ஏன் பொய் சொல்லாது கொஞ்சம் பணம் விட்டு எறிந்தால் எத்தனை சான்றிதல் வேண்டுமென்றாலும் ரெடி பண்ணலாம். எனக்கு சந்தேகம் அது இல்லடி.. இது எப்படி சாத்தியம்? அர்ஜுனை பார் என்னை பார் நான் மாஸ் அவன் வேஸ்ட். வெயிட் ஏற்றி என்ன பிரயோஜனம் கொஞ்ச நேரம் ஆடினாலும் கால் வலிக்குதுன்னு உட்கார்ந்து விடுகிறான். இவனெல்லாம் ஆடி என்ன பண்ணப் போறானோ தெரியலை. உன்னால முடியாதுடான்னு சொன்னா மட்டும் மூக்கு மேல கோபம் வரும்."

சங்கீதா, "நீ டென்ஷன் ஆனா கோபப்படுவியே அந்த மாதிரி.."

விக்ரம், "வேண்டாம் டி.. என்னை அசிங்கமா பேச வைக்காத. அவனும் நானும் ஒன்னா என்னை கூட விடு என் அண்ணன் ஆதியோட கம்பேர் பண்ணி பாரு ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒன்றாவது செட் ஆகுதா.? ஆதி ஓவியம் வரைந்தால் பிக்காசோ அளவுக்கு சூப்பரா இருக்கும். இவனை வரைய சொல்லி பார் குதிரை ஏ கழுதை மாதிரி வரைந்தால் கூட ஓகே.. ஆனால் இவன் நாய் மாதிரி வரைவான். ஆதிக்கு சயன்ஸ் என்றால் உயிர் அவனின் லட்சியமே ஒரு சயின்டிஸ்ட் ஆவதுதான். ஆனால் இந்த அர்ஜுன் +2 அறிவியல் படத்தில் 200 ku 100 தான் எடுத்தான் கேட்டால் அவனுக்கு படிப்பு மட்டும் தான் வரும் சொல்றான். எந்த திறமையும் இல்லாத வேஸ்ட் வேஸ்ட் அவன்."

சங்கீதா, "எனக்கு புரியல எதுக்கு எப்போ பார்த்தாலும் உங்களையும் அவனையும் கம்பேர் பண்ற? உன் அண்ணனுக்கு உனக்குமே முகம் தவிர ஆயிரம் விஷயம் வேற மாதிரி இருக்கும் போது அர்ஜுன்னுக்கும் உங்களுக்கும் இருக்காதா?. ஆதி எப்போ பார்த்தாலும் பாக்ஸிங், ஓவியம் இல்ல படிப்பு என இருப்பான். நீ டான்ஸ், ஃபுட்பால் இல்ல இணையதளத்தில் கதை படிப்பது என இருப்பாய். அதே போல தான் அர்ஜுன். உங்களின் விருப்பம் உங்களுக்கு தெரியும் அவனுக்கு தெரியாது. எதையும் புதுசா முயற்சி செய்ய அவனுக்கு பயம். அவனுக்கு படிப்பில் சயின்ஸ் வராமல் இருக்கலாம் ஆனால் கணக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங் எல்லாம் நல்லா வரும். அவன் எடுத்த டிகிரிக்கு கணக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங் மட்டும் நல்ல தெரிந்தால் போதும். மற்றப்படி மற்ற சப்ஜெக்ட் எதுக்கு?"

விக்ரம், "என்ன கீத்.. என்னை விட்டு அவனுக்கு சப்போட் பண்ற? இது நியாயம் இல்ல."

சங்கீதா, "கோபப்படாமல் புரிந்து கொள். அவனுக்கு நான் சப்போட் எல்லாம் பண்ணலை உன்னையும் அவனையும் கம்பேர் பண்ணாதே என்று தான் சொல்றேன். இந்த கதைக்கு நீ ஹீரோ இல்ல.. இல்ல.. அதற்கே இந்த கதையில் முன்று பேர் சண்டை போட்டு கொண்டு இருக்காங்க.."

விக்ரம், "சரி சரி.. விடு. அப்பறம் நம்மளோட குழப்பம் இன்னும் முடியல ஒரு வாரத்துக்கு முன்னாடி சும்மா பேஸ்புக் பார்த்துகிட்டு இருந்த போது டெல்லியில ஒருவனின் போட்டோ ஒன்றை பார்த்தேன் அவனும் பார்க்க எங்களை மாதிரி தான் இருக்கான். அவன் பேர் சத்யா.. அர்ஜுன் மற்றும் சத்யாவுக்கும் ஒரே நாள் தான் பிறந்த நாள் அப்படி தான் ஃபேஸ்புக் ல போது இருக்கு. அப்பறம் இன்னொரு விஷயம் இருக்கு ரெண்டு பேருமே mutual friends.. அதான் ஒண்ணுமே புரியல. இதை பற்றி அர்ஜுன் கிட்ட கேட்கணும்."

சங்கீதா, "டேய் இது காதல் கதை டா நீ புதுசா ஒரு குழப்பம் உண்டாகி மர்ம கதையா மாற்றவேண்டாம்."

விக்ரம், "நானா மறுக்கிறேன். அதுவே தானா மறுக்கிறது."

சங்கீதா, "சரி சரி நானே அர்ஜூனிடம் கேட்கிறேன்."

அதே போல அன்றே அர்ஜூனின் பயிற்சி முடிந்த பிறகு சத்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தை காட்டி கேட்க..

அர்ஜுன், "இவனும் நானும் twins. இவன் பெயர் சத்யா"

விக்ரம், "என்ன செல்லம் சொல்ற? நீ சொல்றது உண்மையா எப்படி?"

அர்ஜுன், "ஊட்டி ல இருக்கும் ஒரு இல்லத்தில் தான் எங்களை தத்து எடுத்தார்கள். பிறந்த அடுத்த ரெண்டாம் நாளே எங்களை அந்த இல்லத்தில் போட்டு விட்டு போய்ட்டாங்க.. அப்பறம் ஒரு வாரத்தில் எங்களை இரு குடும்பங்கள் தத்து எடுத்தது. இப்போ எனக்கு அப்பா அம்மாவா இருப்பவர்கள் என்னையும், அப்பாவின் ப்ரெண்ட் குடும்பம் சத்யாவையும் தனி தனியாக தத்து எடுத்து கொண்டார்கள். எங்களை தத்து எடுத்து கொண்ட நாளே எங்களின் பிறந்த நாளாக சான்றிதழ் கூட வாங்கிவிட்டார்கள். இந்த உண்மையே நான் பத்தாவது படிக்கும் போதுதான் தெரியும்."

சங்கீதா, "எப்படி?"

அர்ஜுன், "எல்லாம் பிங்கி செய்த சதி. சும்மா இருந்த என்னை ஃபேஸ்புக்ல தள்ளி விட்டாள். அதில் தான் இவனை பார்த்தேன் பின் மாற்றி மாற்றி பேசியதில் உண்மை தெரிந்தது. இட்ஸ் ஓகே.. நடப்பதெல்லாம் நன்மைக்கே. அப்பாவும் அம்மாவும் தான் ரொம்ப பயந்தங்க பின் பிங்கியும் நானும் பேசி புரிய வைத்தோம். என்ன ஆனாலும் அவங்க தான் என்னோட அப்பாவும் அம்மாவும் சொல்லி சத்தியம் பண்ணினேன் இன்னும் சத்யாவும் நானும் நேரில் கூட சந்தித்து பேசவில்லை. சந்திக்க வேண்டாம் என இருவருமே முடிவு பண்ணிட்டோம் எதுக்கு தேவையற்ற மனக் கஷ்டங்கள் எல்லாம். எனக்கு இப்ப வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே போதும் புதுசா எந்த மாற்றமும் எனக்கு தேவையில்லை அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி தேவை இல்லை."

சங்கீதா, "ஓய் பிங்கி.. இந்த விஷயம் எல்லாம் நீ ஏன் டி சொல்லல..?"

பிங்கி, "நான் எதுக்கு சொல்லணும். அப்படி சொல்லி இருந்தால் நீங்க என் வெங்கியே அனாதை என்ற கண்ணோட்டத்தில்தான் பார்ப்பீங்க. அப்படி யாருமே அவனை நினைக்க கூடாது. இந்த உலகத்தில் அவனுக்கு யார் இருந்தாலும் இல்லாட்டியும் அவனுக்காக நான் எப்பவுமே இருப்பேன். வளர்த்தவர்கள் என்றாலும் அவனுக்கு அவங்க தான் அப்பா அம்மா தான் அது எப்போதும் மாறாது. அதோடு நீங்க அவனை பற்றி கேட்டது என்ன அவனின் தனிப்பட்ட திறமைகள், அது மட்டும் தானே கேட்டீங்க அதனால் அது மட்டும் கொடுத்தேன்."

சங்கீதா, "நீ சத்யாவிடம் பேசி இருக்கியா?"

பிங்கி, "இல்ல.. பேசணும் தோணல. ஒருவேளை அப்படி பேசினா அது வெங்கி மனச கஷ்டப்படுத்தும் படி இருக்கும் என பேசல."

சங்கீதா, "ஓகே.. ஓகே.. சாரி. அர்ஜுன் எங்களை மன்னித்து விடு. ஏதோ திடீரென்று பேஸ்புக்ல உன்னை மாதிரி ஒருத்தனை பார்த்தோம் அதான் என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டோம்."

அர்ஜுன், "இட்ஸ் ஓகே.. நான் தப்பா நினைக்கல.."

விக்ரம், "உனக்கு சத்யா பற்றி என்ன தெரியும் அவனின் பழக்கவழக்கம், பொழுதுபோக்குகள் திறமைகள் என.."

அர்ஜுன், "பெருசா ஒன்னும் தெரியாது. அவனுக்கு பெரிய ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் ஆகணும்னு ஆசை, பொழுதுபோக்குக்கு அடிக்கடி செஸ் விளையாடுவான், சின்ன சின்னதா டான்ஸ் ஆடிக்கிட்டு பாட்டெல்லாம் பாடுவான் அப்பதான் சில வீடியோ எனக்கு அனுப்பி வைத்தான் அதை பார்த்து நானும் யாரும் இல்லாத நேரத்தில் கிளாஸ்ல நானும் ஆடி பாடி பார்த்தேன் மாட்டிகிட்டேன்."

சொன்னவன் தன் போனை சக்தி அனுப்பிய 10 வீடியோக்களைக் காண்பித்தான். அதில் விக்ரம் அளவுக்கு இல்லையென்றாலும் அர்ஜுனை விட நல்லதா ஆடி இருந்தான்.

மீண்டும் விக்ரம் மற்றும் சங்கீதாவுக்கு குழப்பம்.

பிறப்பு சான்றிதழில் இருக்கும் தேதி பொய். விக்ரம் ஆதித்யா பிறந்த அதே தேதியில்தான் அர்ஜுனும் சத்யாவும் பிறந்து உள்ளார்கள்.

ஆனால் இரட்டையர்கள் என விக்ரம் மற்றும் ஆதித்யாவின் அம்மா கர்ப்பிணியாக இருக்கும்போது முடிவான விஷயம் எப்படி மாறமுடியும். எந்த விதத்தில் மற்ற இருவரும் இவர்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்க முடியும் என நிறைய கேள்விகள்.

அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும்வரை அர்ஜுன் சத்யா போல விக்ரம் மற்றும் ஆதித்யாவும் இருக்கும் உண்மையை யாரிடமும் சொல்ல வேண்டாம் என முடிவுக்கு வந்தார்கள்.

ஆதித்யா விடமே இன்னும் நான்காவதாக சத்யா என்பவன் இருப்பதை சொல்லவில்லை.

ஒரே உருவத்தில் 4 பேர் இருக்கும் பிரச்சனை ஒரு பக்கம் செல்ல மற்றொரு பக்கத்தில் ரிஷி அஞ்சலி வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் வந்தது.

அடுத்த ரெண்டாவது நாள் போஸ்ட் மேனிடம் இருந்து ஒரு லெட்டர் ரிஷிக்கு வந்திருந்தது அவனின் வெண்ணிலாவிடமிருந்து.

அதை வாங்கி ரிஷி பிரித்து படிக்க தர்ஷினி மற்றும் அஞ்சலி இருவருமே இரு வேறு மனநிலையில் அவனின் முகத்தை உற்றுப் பார்த்தார்கள்.

அதை அனுப்பிய ஒரு உருவம் கையில் ஒரு பைனாகுலர் வைத்துப் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்
🏹🏹விஜயன்🏹🏹