வட்டத்துக்குள் சதுரம்- கதை திரி

saru

Active member
#41
Mamanoda mariyadaya pakuravan malar ah deal ah vitan
Inda madri kozhaikathalika koodathu..
Inda kelavi pethi ku valkayava amachi kodukuduu
Vayasachi puddi ila
Malar ivan unaku vendam
 

sudharavi

Administrator
Staff member
#42
அத்தியாயம் – 14


என்னதான் பாட்டியின் அதிகாரத்தில் வேலைகள் நடந்தாலும், ஒருவரின் முகத்திலும் நல்லது நடப்பதற்கான மகிழ்ச்சி தெரியவில்லை. அதிலும் பவானிக்கும் பாட்டிக்கும் அடிக்கடி மோதல் வந்தது.


விஜயனோ கடனே என்று வேலைகளை செய்தான், சாப்பிட்டான் உறங்கினான். மொத்தத்தில் அங்கம்மாளைத் தவிர இந்த திருமணத்தில் ஒருவருக்கும் சந்தோஷமில்லை.


இவர்கள் இப்படி இருக்க, கார்த்திகாவின் வீடு திருவிழா நடக்கும் ஊர் போன்று கலகலவென்று இருந்தது. சண்முகம் வீட்டை சீரமைத்து வெள்ளையடித்து திருமணத்திற்கு தயார் செய்தார் என்றால், அலமேலுவும் மற்றவர்களும் புடவை, நகைகள் மற்றும் சீர் வரிசைக்கான பொருட்களை பற்றி கணக்கெடுப்பதில் மும்மரமாயினர்.


கார்த்திகா நிச்சயத்திற்கு என்ன மாதிரி புடவை எடுக்கலாம், நகையில் புதிய மாடல் எதுவும் வந்திருக்கிறதா என்று நகை கடை முதலாளியிடம் கேட்டு சொல்லுமாறு தந்தையிடம் கேட்டுக் கொண்டாள்.


மகளின் தலையை வருடிக் கொடுத்து “உனக்கு என்ன மாதிரி வேணுமோ வரைஞ்சு கொடு தாயி. அவனை செஞ்சு தர சொல்றேன்” என்றார் சண்முகம்.

“ம்ம்ம்...ரெண்டு மூணு மாதிரி வரைஞ்சு தரேன் பா. உங்களுக்கு எது தோணுதோ செய்து கொடுங்க” என்றாள் நல்லப் பிள்ளையாக.


மகளின் மீது அதீத பாசம் கொண்ட தந்தையாக “இந்த சொத்து முழுவதுக்கும் நீ தான் உரிமைக்காரி. மூணு என்ன நீ எத்தனை கொடுத்தாலும் இந்த அப்பன் வாங்கித் தர தயாரா இருக்கேன் மா” என்றவர் அவளை பாசத்தோடும், ஆராய்ச்சி கண்ணோடும் பார்த்தார்.


“சரிப்பா நான் போய் அம்மாவுக்கு உதவி பண்றேன்” என்று திரும்பியவளை தடுத்தது சண்முகத்தின் குரல்.


“ஏன் தாயி! உனக்கு நெசமாவே விசயன் மேல அம்புட்டு பாசமா உசுரை கொடுக்கிற அளவுக்கு?” என்றார்.


அவரின் கேள்வியின் அவளது கால்கள் ஒரு நிமிடம் தடுமாற மெல்ல திரும்பியவளுக்கு உள்ளுக்குள் வியர்த்தது.


“ஆமாம் பா” என்றாள்.


அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “ஏன் கேட்கிறேன்னா இது விளையாட்டில்ல தாயி வாழ்க்கை. விசயன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாலும் அவன் மூஞ்சியில செண்டிப்பு இல்ல. விருப்பம் இல்லாம ஒருத்தனை கட்டிக்கிட்டு என் பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் கேட்குறேன் தாயி” என்றார்.


தனது வேஷம் கலைந்து விட்டதோ என்கிற பயத்தில் இருந்தவள் தந்தையின் பேச்சில் சுதாரித்துக் கொண்டு “அப்படி இல்லப்பா! மாமாவுக்கு நான் கிணத்துல குதிச்சதுல கொஞ்சம் கோபம். வேற ஒண்ணுமில்ல” என்றாள்.


அவளது பதில் திருப்தி அளிக்காவிட்டாலும் “நல்லா யோசிச்சுக்கோ கார்த்திம்மா. ஒரு முறை நுழைஞ்சிட்டா மாத்திக்க முடியாது. ஐயோனாலும் வராது அப்பான்னாலும் ஒன்னும் பண்ண முடியாதும்மா சொல்லிட்டேன்” என்றார்.


அதுவரை சற்றே பயத்துடன் பேசிக் கொண்டிருந்தவள் “அப்பா! இந்த வாழ்க்கை என் விருப்பபடி தான் அமையுது. எந்த காலத்திலேயும் நான் குறையா நினைக்க மாட்டேன்” என்று உறுதி கொடுத்தாள்.


மகளின் உறுதியான பேச்சு அவருள் தைரியத்தைக் கொடுக்க “சரி தாயி நான் போய் ஆக வேண்டிய வேலையை பார்க்கிறேன்” என்று வெளியேறினார்.


அதுவரை தந்தையும், மகளும் பேசிக் கொண்டிருந்ததை அறையின் வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அலமேலு மகளிடம் வந்து “என்ன கார்த்தி அப்பாரு இப்படி கேட்கிறாரு?” என்றார்.


“வேற எப்படிம்மா கேப்பாரு? இந்த மாமனை சொல்லணும். நானென்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன். என்னை கல்யாணம் பண்றது வேப்பங்காயா கசக்குது போல. அதே அவ முகத்தைப் பார்த்தவுடனே அப்படியே மத்தாப்பு மாதிரி மலருது” என்றாள் எரிச்சலாக.


“இங்க பாருடி! அவளுக்கு உன் கல்யாணத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி அனுப்ப சொன்னா நீ கேட்க மாட்டேன்ற. ஆம்பள புத்தி மோசமான புத்தி எப்படி வேணா போகும். நீ தான் உஷாரா இருக்கணும்” என்றார்.


“என் கழுத்துல தாலி ஏறட்டும் அப்புறம் இந்த முந்தானையை விட்டு மாமனை கட்டிப் போடுறேன். அந்த வீட்டு அதிகாரம் முழுக்க என் கையில் வரணும். அப்புறம் பாருங்க அந்த மலரோட நிலைமையை” என்றாள் பெருமையாக சிரித்தபடி.


மகளின் முகத்தை வழித்து நெட்டி முறித்து “என் ராசாத்தி! உனக்கு துணையா எங்கம்மா இருப்பாங்க. அண்ணனும், அண்ணியும் பெருசா எதுவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா அந்த சின்ன சிறுக்கி பவானி தான் துள்ளுவா. பார்த்துக்கலாம் விடு!” என்றார்.


“அவ பொழப்பே என்னை நம்பி தான் இருக்கனும்மா. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.


“சரி சரி போய் உனக்கு வேண்டியது எல்லாம் என்னன்னு யோசிச்சு வை. டவுனுக்குப் போகும் போது வாங்கிட்டு வந்துடலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.தென்னந்தோப்பில் காய் இறக்குவதை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் கல் போல இறுகிக் கிடந்தது. தேங்காய்களை எடுத்து அடுகிக் கொண்டிருந்த சிறு பெண்ணொருத்தி “என்ன சின்னையா? கல்யாணம் முடிவாகி இருக்கு. ஆனா அந்த களையே முகத்துல காணுமே?” என்றாள் குறும்பாக.


அவளை முறைத்தவன் “வேலை பாக்குற நேரத்தில் என்ன பேச்சு வேண்டியிருக்கு?” என்று சிடுசிடுவென்று விழுந்தான்.


அதை கண்டு கொள்ளாமல் அவளோடு இருந்த இன்னொருத்தி “புது பொண்ணா என்ன? அதெல்லாம் பார்த்து பழகுன பொண்ணு தானே. அதான் ஐயா சாதரணமா இருக்காரு” என்று கூறி களுக்கென்று சிரித்தாள்.


அவர்கள் பேசப் பேச பொறுமை இழந்தவனைக் கண்ட கோவிந்தன் வேகமாக வந்து “இந்தா பிள்ளைங்களா! என்ன பேச்சு இங்க? போய் வேலையைப் பாருங்க” என்று அதட்டினார்.


அவர் வந்து சத்தம் போட்டதும் அமைதியாகி தங்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.

விஜயனோ அங்கிருந்து வேகமாக சென்று பம்ப் ரூமில் நுழைந்து கொண்டான். அதைக் கண்ட கோவிந்தன் அவன் பின்னே சென்றார். தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மகனைப் பார்த்ததும் அத்தனை வேதனையாக இருந்தது. ஆனால் அவருக்கு என்ன செய்வதென்று தான் தெரியவில்லை.


குடும்பத்தை தாண்டி அவர் எதையுமே யோசித்ததில்லை. அன்னையும், சகோதரியும் தான் அவருக்கு குடும்பம். மனைவியின் உணர்வுகளுக்கு கூட அத்தனை மரியாதை கொடுத்ததில்லை. மகனின் வேதனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், சகோதரியின் சாபம் குடும்பத்தை சீரழித்து விடும் என்று பயந்தார்.


மெல்ல மகன் அருகில் சென்றவர் அவன் தோளை தொட்டு “விஜயா! இங்கே பாருப்பா!” என்றார்.


அவனோ நிமிர்ந்து பார்க்காமல் “சொல்லுங்கையா! காயை இறக்கிட்டாங்களா?” என்றான்.


அவனது மனதின் வேதனையை புரிந்து கொண்டவர் “ஐயா விஜயா! என்னை கொஞ்சம் பாருப்பா” என்றார்.


அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டவன் “சொல்லுங்கையா” என்றான் அவர் முகம் பார்க்காமலே.


“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. நாம விரும்புகிற வாழ்க்கையை விட, கிடைக்கிற வாழ்க்கையை நம்மளோடதா மாற்றிக் கொள்பவன் வாழ்க்கையில ஜெயிப்பான்” என்றார்.


அவரை திரும்பி பார்த்து “எனக்கு ஜெயிக்க வேண்டாம்ப்பா. என்னோட வாழ்க்கையை என் இஷ்டத்துக்கு ரசிச்சு வாழ்ந்தா போதும்” என்றான்.


“அது பல பேருக்கு வேதனையை கொடுக்கும் பா” என்றார்.


அவரை கூர்ந்து பார்த்தவன் “இப்போ மட்டும் எல்லோரும் சந்தோஷமாவா இருக்காங்க” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.


மகனது பேச்சில் சோர்ந்து போய் அங்கேயே அமர்ந்து விட்டார்.
 

sudharavi

Administrator
Staff member
#43
வீட்டிலோ ஜோசியரிடம் பேசி அடுத்த வாரத்திலேயே நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டு, வீட்டிற்குந்த அனைவரையும் படுத்திக் கொண்டிருந்தார் அங்கம்மாள். மலரோ பிரபாவிற்கு உதவி செய்துவிட்டு அடிக்கடி தோட்ட வீட்டில் முடங்கிக் கொண்டாள்.


இரு வீட்டு சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்து, நிச்சயத்திர்க்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியது. பேத்திக்கான புடவை, நகை என்று ஒவ்வொன்றும் தானே முன் நின்று தெரிந்தெடுத்தார் அங்கம்மாள். பிரபாவோ எதிலும் கலந்து கொள்ளாது சமையலறையோடு நின்று கொண்டார்.


பவானிக்கும் அங்கம்மாளுக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. கார்த்திகாவிற்கு புடவை எடுக்கும் போது அவளையும் பார்க்க சொன்னார்.


“இங்கே பாரு பாட்டி! உன் பேத்திக்கு நீ எதை வேணா பாரு. என்னை கூப்பிடாதே” என்று எரிந்து விழுந்தாள்.


“என்னடி வாய் நீளுது? நீ ஒன்னும் அவளுக்கு பார்க்க வேண்டாம். உனக்கு புது துணி வேண்டாமா?”


“ஒரு மண்ணும் வேணாம்! கிழிஞ்ச துணி இருந்தா குடுங்க சுத்திகிறேன்” என்றாள் கடுப்பாக.


அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அங்கம்மாள் “இங்க பாருடி! என்ன இருந்தாலும் அவ தான் உங்க அண்ணி. அந்த சிறுக்கிக்கு பரிஞ்சு கிட்டு அண்ணிகாரியை பகைச்சுகாதே. நாள பின்ன இந்த வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்க வேண்டாமா?” என்றார்.


பாட்டியை முறைத்தவள் “அவ இருக்கிற வீட்டுப் பக்கம் நான் ஏன் தலை வச்சு படுக்கப் போறேன். எங்க அண்ணனுக்கு பொண்டாட்டியா அவ வந்துட்டான்னா நிச்சயமா எனக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கிறதை மறந்துடுவேன் சொல்லிட்டேன்” என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றாள்.


“அடியே! உனக்கு நடக்கப் போகிற நல்லது கெட்டதுக்கு எல்லாம் அவ தான் வரணும்” என்றார் சத்தமாக.


போனவள் வேகமாக திரும்பி வந்து “அப்படி அவ வந்து தான் எனக்கு நல்லது நடக்கணும்னா அது எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று கத்தினாள்.


அவளது பேச்சைக் கேட்டு அயர்ந்து போய் பார்த்தார். மனதிற்குள் இவளை அடக்கி வைக்கணும் என்று எண்ணிக் கொண்டார்.


பவானியோ கோபமாக தோட்ட வீட்டிற்கு சென்று மலருடன் அமர்ந்து கொண்டாள். தனது துக்கத்தை எல்லாம் மறந்து பவானியைப் பார்த்து “உன் பாட்டி கிட்ட அப்படி பேசாதே பவானி. நீ ஒத்துகிட்டாலும் இல்லேன்னாலும் அவ தான் உன் அண்ணியா வரப் போகிறவ. உன்னோட பேச்சால உன் அண்ணனுக்கும் மனசு கஷ்டப்படும்” என்றாள்.


“எனக்கு அண்ணனை நினச்சா கோவமா வருது மலரு. பாசமெல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக வாழ்க்கையையே தியாகம் பண்ற அளவுக்கு என்ன வேண்டி கிடக்கு?” என்றாள் எரிச்சலாக.


பவானியின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “என்ன பண்ண முடியும்னு சொல்ற? ஊருக்கு தீர்ப்பு சொல்ற குடும்பம். தப்பான உதரணமா இருந்திடக் கூடாது இல்லையா?” என்றாள் சமாதானமாக.


“அதுக்கு! அவளை கட்டிக்கிட்டு நிம்மதியா இருந்திட முடியுமா? அவ உள்ள நுழையிறதுக்கு முன்னமே மூச்சு முட்டுது. எப்படி மலரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அழுகையா வருது! என்னால முடியல” என்று அவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.


தன் கண்களில் சிந்திய கண்ணீருடன் அவளைக் கட்டிக் கொண்டவள் “இந்த ஜென்மத்தில் நான் வாங்கி வந்த வரம் அப்படி. என் மேல ஆசை வச்ச காரணத்துனால தான் அவங்களும் கஷ்டப்படுறாங்க” என்றாள்.


தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள் “இல்ல மலரு! நிச்சய வீட்டில் மாமாவை பார்த்து எப்படியாவது உங்க விஷயத்தை சொல்லிடுறேன். மாமா நிச்சயம் அப்பா மாதிரி சும்மா இருக்க மாட்டாங்க. நல்ல முடிவா எடுப்ப்பாங்க” என்றாள்.


அவளது பேச்சைக் கேட்டு அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு “என்ன சொல்ற பவானி! அப்படி எல்லாம் பண்ணிடாதே. ஊரு முழுக்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேச்சு வந்தாச்சு. இப்போ போய் இதை எல்லாம் பேசாதே. அவ வாழ்க்கை பாதிக்கப்படும்” என்றாள்.


“அப்போ உன் வாழ்க்கை? அண்ணன் வாழ்க்கை? அவளை கட்டிக்கிட்டு ஒரு நாள் கூட அண்ணன் நிம்மதியா வாழாது. தெரிஞ்சே எதுக்கு இதை செய்யணும்?”


“பல பேரின் விருப்பம் அதுவாக இருக்கும் போது அதை நிறைவேற்றி வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு” என்றாள் வெற்றுக் குரலில்.


“ஏண்டி! ஏன்? நீயும் அண்ணனும் உங்களைப் பத்தி யோசிக்காதவங்களா போனீங்க?” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.


சுவற்றில் சாய்ந்தமர்ந்தவள் “எனக்காகப் பேச என்னை பெத்தவங்களோ, உங்க பாட்டி மாதிரி ஒருத்தரோ இல்லாம செஞ்சது கடவுள் தானே. என்னுடைய வாழ்க்கை இப்படி போகணும்னு அவன் தானே முடிவு செஞ்சிருக்கான்” என்றாள் கன்னங்களில் கண்ணீர் உருண்டோட.


அவள் தோளில் சாய்ந்த பவானி “எங்கண்ணுக்கு எல்லோரும் இருந்தும் யாருமே உதவாத நிலை தானே? பெத்த பிள்ளையோட விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாத தாயும், தந்தையும் இருந்தும் இல்லாத மாதிரி தான்” என்று கட்டிக் கொண்டு அழுதாள்.


இவர்களின் அழுகையில் ஒருத்தி தனது எதிர்காலத்தை எண்ணி கனவு கண்டு கொண்டிருந்தாள்.
 
#44
வீட்டிலோ ஜோசியரிடம் பேசி அடுத்த வாரத்திலேயே நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டு, வீட்டிற்குந்த அனைவரையும் படுத்திக் கொண்டிருந்தார் அங்கம்மாள். மலரோ பிரபாவிற்கு உதவி செய்துவிட்டு அடிக்கடி தோட்ட வீட்டில் முடங்கிக் கொண்டாள்.


இரு வீட்டு சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்து, நிச்சயத்திர்க்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியது. பேத்திக்கான புடவை, நகை என்று ஒவ்வொன்றும் தானே முன் நின்று தெரிந்தெடுத்தார் அங்கம்மாள். பிரபாவோ எதிலும் கலந்து கொள்ளாது சமையலறையோடு நின்று கொண்டார்.


பவானிக்கும் அங்கம்மாளுக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. கார்த்திகாவிற்கு புடவை எடுக்கும் போது அவளையும் பார்க்க சொன்னார்.


“இங்கே பாரு பாட்டி! உன் பேத்திக்கு நீ எதை வேணா பாரு. என்னை கூப்பிடாதே” என்று எரிந்து விழுந்தாள்.


“என்னடி வாய் நீளுது? நீ ஒன்னும் அவளுக்கு பார்க்க வேண்டாம். உனக்கு புது துணி வேண்டாமா?”


“ஒரு மண்ணும் வேணாம்! கிழிஞ்ச துணி இருந்தா குடுங்க சுத்திகிறேன்” என்றாள் கடுப்பாக.


அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அங்கம்மாள் “இங்க பாருடி! என்ன இருந்தாலும் அவ தான் உங்க அண்ணி. அந்த சிறுக்கிக்கு பரிஞ்சு கிட்டு அண்ணிகாரியை பகைச்சுகாதே. நாள பின்ன இந்த வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்க வேண்டாமா?” என்றார்.


பாட்டியை முறைத்தவள் “அவ இருக்கிற வீட்டுப் பக்கம் நான் ஏன் தலை வச்சு படுக்கப் போறேன். எங்க அண்ணனுக்கு பொண்டாட்டியா அவ வந்துட்டான்னா நிச்சயமா எனக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கிறதை மறந்துடுவேன் சொல்லிட்டேன்” என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றாள்.


“அடியே! உனக்கு நடக்கப் போகிற நல்லது கெட்டதுக்கு எல்லாம் அவ தான் வரணும்” என்றார் சத்தமாக.


போனவள் வேகமாக திரும்பி வந்து “அப்படி அவ வந்து தான் எனக்கு நல்லது நடக்கணும்னா அது எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று கத்தினாள்.


அவளது பேச்சைக் கேட்டு அயர்ந்து போய் பார்த்தார். மனதிற்குள் இவளை அடக்கி வைக்கணும் என்று எண்ணிக் கொண்டார்.


பவானியோ கோபமாக தோட்ட வீட்டிற்கு சென்று மலருடன் அமர்ந்து கொண்டாள். தனது துக்கத்தை எல்லாம் மறந்து பவானியைப் பார்த்து “உன் பாட்டி கிட்ட அப்படி பேசாதே பவானி. நீ ஒத்துகிட்டாலும் இல்லேன்னாலும் அவ தான் உன் அண்ணியா வரப் போகிறவ. உன்னோட பேச்சால உன் அண்ணனுக்கும் மனசு கஷ்டப்படும்” என்றாள்.


“எனக்கு அண்ணனை நினச்சா கோவமா வருது மலரு. பாசமெல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக வாழ்க்கையையே தியாகம் பண்ற அளவுக்கு என்ன வேண்டி கிடக்கு?” என்றாள் எரிச்சலாக.


பவானியின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “என்ன பண்ண முடியும்னு சொல்ற? ஊருக்கு தீர்ப்பு சொல்ற குடும்பம். தப்பான உதரணமா இருந்திடக் கூடாது இல்லையா?” என்றாள் சமாதானமாக.


“அதுக்கு! அவளை கட்டிக்கிட்டு நிம்மதியா இருந்திட முடியுமா? அவ உள்ள நுழையிறதுக்கு முன்னமே மூச்சு முட்டுது. எப்படி மலரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா அழுகையா வருது! என்னால முடியல” என்று அவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.


தன் கண்களில் சிந்திய கண்ணீருடன் அவளைக் கட்டிக் கொண்டவள் “இந்த ஜென்மத்தில் நான் வாங்கி வந்த வரம் அப்படி. என் மேல ஆசை வச்ச காரணத்துனால தான் அவங்களும் கஷ்டப்படுறாங்க” என்றாள்.


தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள் “இல்ல மலரு! நிச்சய வீட்டில் மாமாவை பார்த்து எப்படியாவது உங்க விஷயத்தை சொல்லிடுறேன். மாமா நிச்சயம் அப்பா மாதிரி சும்மா இருக்க மாட்டாங்க. நல்ல முடிவா எடுப்ப்பாங்க” என்றாள்.


அவளது பேச்சைக் கேட்டு அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு “என்ன சொல்ற பவானி! அப்படி எல்லாம் பண்ணிடாதே. ஊரு முழுக்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேச்சு வந்தாச்சு. இப்போ போய் இதை எல்லாம் பேசாதே. அவ வாழ்க்கை பாதிக்கப்படும்” என்றாள்.


“அப்போ உன் வாழ்க்கை? அண்ணன் வாழ்க்கை? அவளை கட்டிக்கிட்டு ஒரு நாள் கூட அண்ணன் நிம்மதியா வாழாது. தெரிஞ்சே எதுக்கு இதை செய்யணும்?”


“பல பேரின் விருப்பம் அதுவாக இருக்கும் போது அதை நிறைவேற்றி வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு” என்றாள் வெற்றுக் குரலில்.


“ஏண்டி! ஏன்? நீயும் அண்ணனும் உங்களைப் பத்தி யோசிக்காதவங்களா போனீங்க?” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.


சுவற்றில் சாய்ந்தமர்ந்தவள் “எனக்காகப் பேச என்னை பெத்தவங்களோ, உங்க பாட்டி மாதிரி ஒருத்தரோ இல்லாம செஞ்சது கடவுள் தானே. என்னுடைய வாழ்க்கை இப்படி போகணும்னு அவன் தானே முடிவு செஞ்சிருக்கான்” என்றாள் கன்னங்களில் கண்ணீர் உருண்டோட.


அவள் தோளில் சாய்ந்த பவானி “எங்கண்ணுக்கு எல்லோரும் இருந்தும் யாருமே உதவாத நிலை தானே? பெத்த பிள்ளையோட விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாத தாயும், தந்தையும் இருந்தும் இல்லாத மாதிரி தான்” என்று கட்டிக் கொண்டு அழுதாள்.


இவர்களின் அழுகையில் ஒருத்தி தனது எதிர்காலத்தை எண்ணி கனவு கண்டு கொண்டிருந்தாள்.
Ava epa sava pisasunga ithuga ellam nallave itukathu
 

sudharavi

Administrator
Staff member
#47
அத்தியாயம் – 15

சண்முகத்தின் வீடு சொந்தங்களால் நிரம்பி இருந்தது. ஒரே பெண்ணின் நிச்சயத்தை திருமண விழா போன்று ஏற்பாடு செய்திருந்தார். தெருவை அடைத்து பந்தல் போட்டு பெரிய பெரிய ஸ்பீக்கர் கட்டி பாடல் ஒலிக்க, ஊர் மக்கள் முழுவதும் அவரது வீட்டில் தான் இருந்தனர்.


வீட்டின் கொல்லைப்புறத்தில் கீத்து கொட்டகை போட்டு சமையல் ஆட்கள் ஊருக்கே சமைத்துக் கொண்டிருந்த.னர் கலவையான மணம் வீடெங்கும் இருந்தது. மாப்பிள்ளை வீட்டினரின் வரவை எதிர்பார்த்து வாயிலுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் அலமு.


கார்த்திகாவின் அறையில் அவளது தந்தை வழி உறவுப் பெண்கள் அவளை கேலி செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் விஜயன் எதுவும் முரண்டு பிடிக்காமல் வர வேண்டுமே என்கிற கவலை இருந்தது.


எங்கும் சலசலவென்று பேச்சுக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென்று வீடே பரபரப்பானது. யாரோ மாப்பிள்ளை வீட்டாட்கள் வந்தாச்சு என்று குரல் கொடுக்கவும், அவர்களை வரவேற்க தயாராகினர்.


வீட்டு வாயிலில் இரு வெள்ளை கலர் அம்பாசிடர் கார்கள் வந்து நிற்க, அதிலிருந்து கோவிந்தனும், விஜயனும் இறங்கி பின் கதவை திறக்க அங்கம்மாள் கெட்டி சரிகை வைத்தப் பட்டுபுடவை கட்டி காதுகளில் வைரத்தோடு பளபளக்க இறங்கினார். மற்றொரு காரிலிருந்து பிரபாவும், பவானி மற்றும் மலர் இறங்கினார்கள்.


பவானியின் முகம் கடுகடுவென்றிருந்தது. பிரபாவோ யாருடைய திருமணத்திற்கோ வந்திருப்பதை போல மந்தமாக நின்றார். மலருக்கோ எப்படியாவது அங்கிருந்து ஓடி விட்டால் போதும் என்கிற நிலையில் நின்றிருந்தாள்.


அனைவரையும் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, பவானியை தன் பக்கம் இழுத்துக் கொண்ட அங்கம்மாள் “அடியே! இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்காதே!” என்றார் மிரட்டலாக.


அவளோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “உன் பேரனுக்கு நிச்சயம் பண்ணத்தானே வந்திருக்க, அந்த வேலையைப் பாரு. என் மூஞ்சியை எதுக்குப் பாக்குற?” என்றாள் கடுப்பாக.


அவளை முறைத்தவர் “உன் வாயை நல்லா வளர்த்து வச்சிருக்கா உங்கம்மா” என்று நொடித்துக் கொண்டார்.


பவானி மாதிரி அல்லாது தன்னுடைய உணர்வுகளை வெளியில் காட்டாது உள்ளுக்குள் இறுக்கமாக இருந்தாலும் அமைதியாகவே இருந்தான் விஜயன்.

பெரிய கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவர்கள் முதலில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் குசலம் விசாரித்துக் கொண்டனர்.


அங்கம்மாள் பிரபாவிடம் தாங்கள் கொண்டு வந்த பழங்கள் மற்றும் பெண்ணிற்கான புடவை நகையை தட்டுகளில் அடுக்கும்படி கூறினார். பவானியோ காதில் வாங்காதது போல் அமர்ந்து கொண்டாள். பிரபாவும், மற்றொரு பெண்ணுமாக அவற்றை அடுக்க, மலரும் அவர்களுக்கு உதவி செய்தாள். அதைப் பார்த்த பவானி அவளை முறைத்து மெல்லிய குரலில் “நீ தியாகின்னு ஒத்துகிறேன் மலரு. ஆனா இதெல்லாம் அதிகம்” என்று கடுகடுத்தாள்.


வெற்றுச் சிரிப்பை பரிசாக தந்து விட்டு அவர்களுக்கு உதவினாள். விஜயனும் கேட்பவர்களுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாலும் மலர் இறுகிய முகத்தோடு அன்னைக்கு உதவிக் கொண்டிருப்பதை கண்டு வேதனையடைந்தான்.


சற்று நேரத்தில் கார்த்திகாவை அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தனர். விஜயனைத் தவிர அனைவரும் அவளைப் பார்த்தனர். அவனோ அவளைத் தவிர அங்கிருக்கும் அனைத்தையும் பார்த்தான். கோவிந்தனுக்கு மகனின் மனது புரிந்தாலும் மற்றவர்கள் எதுவும் சொல்லி விடுவார்களோ என்று பயந்து அவனிடம் “விஜயா! பொண்ணு வந்துடுச்சைய்யா! அந்தப் பக்கம் பார்த்து வைய்யு...இல்லேன்னா தப்பா போயிடும்” என்றார்.


அவரை ஒரு பார்வை பார்த்தவன் “எல்லாமே தப்பா தானே போயிட்டு இருக்கு” என்று கூறி விட்டு அவள் புறம் திரும்பாமலே மற்றவர்களை பார்த்தான்.


கார்த்திகா தலையை குனிந்திருந்தாலும் அவன் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தே இருந்தாள். முதன்முறையாக தான் செய்வது தவறோ என்கிற எண்ணம் எழுந்தது.

கீழ் பார்வையாக அங்கிருந்தவர்களை பார்க்கும் போது மலரின் மீது படிந்து விலகியது. அந்நேரம் விஜயனின் பார்வையும் மலரை ஒரு நிமிடம் தீண்டிச் சென்றது. அதை கவனித்து விட்ட கார்த்திகாவின் மனது மீண்டும் எரிமலையாக கனன்றது. தன்னை நிச்சயம் செய்ய வந்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொண்ட போது வெறியே எழுந்தது. விடக் கூடாது! அவர்கள் இருவரையும் பிரித்தே ஆக வேண்டும் என்று எண்ணம் வலுவானது.

அலமுவும் அண்ணன் மகனை கவனித்துக் கொண்டு தானிருந்தாள். கார்த்திகா வந்தமர்ந்ததில் இருந்து அவளை ஒரு முறை கூட பார்க்கவில்லை என்று கவனித்தவளுக்கு உள்ளுக்குள் பயம் வந்தது. ஒருவேளை மகளின் வாழ்க்கை சரியாக அமையாமல் போய் விட்டால் சண்முகம் தன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார் என்று பயந்தார்.


மெல்ல அன்னையிடம் பேச்சுக் கொடுப்பது போல அருகில் அமர்ந்து “என்னம்மா இந்தப் பையன் இப்படி இருக்கான்? அவளை பார்க்க கூட இல்லை” என்றார்.


மகளின் பயத்தை புரிந்து கொண்ட அங்கம்மாள் “அவனோட பிடிவாதம் எல்லாம் கல்யாணம் வரை தான் அலமு. கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறி போயிடும். நீ ஒன்னும் கவலைப்படாதே” என்றார்.


பெருமூச்சுடன் “சரிம்மா! நீ இருக்கேன்னு நம்பி தான் என் பெண்ணை அங்கே அனுப்புறேன். ஜாக்கிரதையா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்றார்.

அதற்குள் பெரியவர்கள் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்ள அலமுவை அழைக்க, ஓட்ட வைத்துக் கொண்ட புன்னகையுடன் சென்று சண்முகம் பக்கத்தில் நின்று கோவிந்தனிடமும், பிரபாவிடமும் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொண்டனர்.
 

sudharavi

Administrator
Staff member
#48
முஹுர்த்த ஓலை படித்து முடித்து திருமண தேதியும் இருபது நாட்களுக்குள் வைக்கப்பட்டது. அங்கம்மாள் பேத்திக்கு என்று பார்த்து பார்த்து புடவையும் நகையும் தேர்ந்தெடுத்திருந்தார். அவற்றை அணிந்தவள் தேவதை போன்று ஜொலிப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொள்ள, பவானியும், விஜயனும் பிசாசை பார்ப்பது போல பார்த்து வைத்தனர்.


அவன் தன்னை பார்ப்பானா என்று காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது கண்களில் தெரிந்த வெறுப்பைக் கண்டு ஒரு நிமிடம் இதயம் ஆடிப் போனது. உள்ளுக்குள் எதுவோ உடைந்தது போலிருந்தது. அதையும் மீறி தான் நினைத்ததை அடைந்து பழகிய மனதிற்கு அவனை எப்படியாவது தன்னை திரும்பி பார்க்க வேண்டும், மலரை மறந்து தன்னை சுற்ற வேண்டும் என்கிற ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.


எந்த காலத்திலும் விருப்பமில்லாத ஒன்றை விரும்ப வைக்க எந்தக் கயிறாலும் முடியாது என்பதை அவள் உணரவில்லை. தனது ஒவ்வொரு அடியும் அவன் மனதில் பாரத்தையும் வெறுப்பையும் ஏற்றி வைக்கிறது என்பதை அவள் உணரவில்லை. தாயும், தந்தையும், பாட்டியும் தான் நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க தயாராக இருக்கும் போது, அந்த வானத்தையே வளைத்துப் பார்த்துவிட முடிவு செய்தது பிடிவாதம் கொண்ட மனது.


அவளின் ஆசைப்படி எந்தவித தடங்கலுமின்றி நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை வீட்டு சொந்தங்களை பந்தி விசாரணை செய்ய சண்முகம் சென்றிருக்க, அங்கம்மாள் பேத்தியின் அறையில் இருந்தார்.


அவளது தலையை வருடிக் கொடுத்தவர் “நாம நினைத்தபடி நல்லபடியா முடிஞ்சுதா கார்த்தி” என்றார்.


அவரை பார்க்காமல் வெற்றிடத்தைப் பார்த்தவள் “ம்ம்...ஆனா அத்தான் என்னை பார்க்கவே இல்ல பாட்டி. அவங்க பார்வையில் வெறுப்பு தான் தெரியுது” என்றாள்.


“கல்யாணம் வரை தான் முறுக்கிக்கிட்டு திரிவானுங்க ராசாத்தி. ஆம்பள மனசுக்கு கோபத்தை இழுத்துப் பிடிக்கத் தெரியாது” என்றார்.


“ம்ம்...பாட்டி ஒன்னு நினைவு வச்சுக்கோங்க. கல்யாணத்துக்கு பவானியும், மலரும் கண்டிப்பா வரணும். அவ வரலேன்னு இந்த பவானி கழுதையும் வர மாட்டேன்பா. ரெண்டு பேரையும் இழுத்திட்டு வர வேண்டியது உங்க பொறுப்பு” என்றாள்.


மலரை திட்டுவதை ரசித்த அங்கம்மாள் பவானியை கழுதை என்றதும் “கார்த்தி! அவளும் என்னோட பேத்தி தான். இன்னொரு தடவை பவானியை குறைவா பேசினா சும்மா இருக்க மாட்டேன்” என்றார் கோபமாக.


பாட்டியின் கோபம் கண்டு பயந்து போனவள் “எனக்கும் அவ மேல ஆசை இருக்கு பாட்டி. ஆனா அவ என் கூட இல்லாம அந்த மலரு கூடவே இருக்கா. அது தான் எனக்குப் பிடிக்கல” என்றாள்.


“நீ நம்ம வீட்டுக்கு வா. எல்லாம் சரியாகும்” என்று கூறி எழுந்து கொண்டார்.


மலரும், பவானியும் அந்த வீட்டில் ஒட்டாமல் அறை ஒன்றில் தனித்து அமர்ந்திருந்தனர். யாரிடமும் பேச மனமில்லை. விஜனுக்கோ கார்த்தியின் வீட்டு சொந்தங்கள் பேசிச் செல்ல, குருதியில் சூழ்ந்திருந்த இதயத்தை மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.


அலமுவுக்கு தாயிடம் பேசி சில விஷயங்களை உறுதிபடுத்திக் கொள்ள எண்ணினாலும், வந்திருந்தவர்களை கவனிப்பதிலேயே நேரம் போனது. பிரபாவோ மகனுக்கு நடந்த நிச்சயதார்த்தம் என்றில்லாமல் அடுத்தவர் வீட்டு விசேஷம் போல நடந்து கொண்டார். அதை கவனித்து விட்டு கேட்ட உறவினர்களிடம் சமாளித்து விட்டு அண்ணனைத் தேடித் பிடித்து தனியே பேச அழைத்து வந்தார்.


“என்ன அலமு? நாம என்ன பேசணும்?” என்றார் குழப்பத்துடன்.


“நம்ம உறவு காலம் முழுக்க தழைக்கனும்னு தானே இந்த திருமணத்தை உறுதிபடுத்தினோம். ஆனா உங்க பொண்டாட்டிக்கு இதுல விருப்பம் இல்லாத மாதிரி இருக்காங்களே. எங்க வீட்டு சொந்தங்கள் எல்லாம் என்னை கேள்வி கேட்கிறாங்க” என்றார் கண்ணை கசக்கியபடி.


அவரின் கண்ணீரைக் கண்டு பதறி போனவர் “என்னம்மா இப்படி சொல்லிட்ட? எங்க வீட்டு மகாலட்சுமி கார்த்திகா. அவளை என் பையனுக்கு நிச்சயம் பண்ணினதுல பிடித்தம் இல்லாம இருக்குமா? ஒரே வீட்டில் ரெண்டு வயசு பொண்ணுங்க இருக்கிற இடத்தில் ஒருத்தருக்கு நல்லது நடக்கும் போது அவளை வளர்த்தவளுக்கு மனசு கஷ்டமா இருக்காதா? தன் பிள்ளைக்கு நல்லது நடந்தாலும் அவளுக்கு நடக்கலையேன்னு தானே தோணும்” என்று மனைவிக்காக பேசினார்.


சற்று யோசித்தவர் “நீங்க சொல்றது சரி தான். எனக்கு இப்போ புரியுது” என்றவர் “இதுக்கு நான் ஒரு வழி பண்றேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.


அலமு சொன்னதை சாதரணமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து சண்முகம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.


சாப்பாடு முடிந்து அனைவரும் அமர்ந்து தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் நேரம் அங்கு வந்த அலமு சண்முகத்திடம் ஏதோ சொல்ல, அவர் மனைவியை முறைத்து வேண்டாமென மறுத்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த கோவிந்தன் “என்ன விஷயம் மாப்பிள்ளை?”


“அது ஒண்ணுமில்ல மச்சான்” என்று கூறி வேறு கதையை பேச முயற்சித்தார்.


அப்போது அலமு அங்கம்மாளைப் பார்த்து “அம்மா! நம்ம மலருக்கு ஒரு வரன் இருக்கு. நமக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம். அவங்களும் இங்கே தான் இருக்காங்க. விருப்பபட்டா பார்க்கலாம்” என்றார்.


அதைக் கேட்டதும் பிரபாவிற்கு முகம் வெளிறி போனது. அங்கம்மாளோ சபாஷ் என்பது போல மகளைப் பார்த்து விட்டு “அவங்க யாரு என்னன்னு சொன்னா நம்ம பொண்ணுக்கு தோதா இருக்குமான்னு பார்ப்போம். என்ன கோவிந்தா சரி தானே?” என்று மகனை இழுத்து விட்டார்.

இதை எதிர்பார்க்காத கோவிந்தன் “ஹான்...சரி பார்க்கலாமே” என்றார்
 

sudharavi

Administrator
Staff member
#49
அது தான் சாக்கென்று உடனே அந்த மாப்பிள்ளையைப் பற்றிய தகவலை சொல்ல ஆரம்பித்தார்.


“மாப்பிள்ளை வேற யாருமில்லம்மா இவருக்கு ஒன்னு விட்ட அக்கா பொண்ணோட நாத்தனாருக்கு மச்சான். நம்ம ஊரில தான் பெட்டிக் கடை வச்சிருக்கார். அம்மாவும், அவரும் தான். அதிக வசதி இல்லேன்னாலும் நல்ல குடும்பம்” என்றார்.


மகளின் சாமர்த்தியத்தை மனதிற்குள் பாராட்டிக் கொண்ட அங்கம்மாள் “யாரு ராதாமணி மகன் மணிகண்டனா?” என்றார்.


“ஆமாம்மா! அவரே தான்” என்றார்.


உடனே மகனிடம் “ராதாமணியை எனக்கு நல்லாத் தெரியும். நல்ல பொண்ணு அவ. அவ பிள்ளையைப் பத்தியும் கேள்வி பட்டிருக்கேன்” என்றார்.கோவிந்தனுக்கு அங்கு நடப்பவற்றை கண்டு குழப்பமாக இருந்தது. அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை.


அப்போது யாரோ ஒரு பெண்மணி புடவையை முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டு வந்து நின்றார். அவரின் பின்னே வெயிலில் வேலை செய்து கருத்த தேகத்துடன் சுமாரான உயரமும், களையான முகத்தோடும் ஒருவனும் வந்து நின்றனர்.


அவர்களைப் பார்த்ததும் அங்கம்மாள் “வா ராதா! எப்படி இருக்க? இது தான் உன் பையனா?” என்றார்.
\


இந்தப் பேச்சுகள் நடப்பதை அறிந்த பவானி மலரை அழைத்துக் கொண்டு அங்கு ஓடி வந்து தூண் மறைவில் நின்றிருந்தாள். மலருக்கோ உள்ளம் தடதடத்துக் கொண்டிருந்தது. என்ன நடக்கப் போகிறது என்கிற பீதியில் மயங்கி விழுந்து விடுவோமோ என்று தூணை இறுக்கிப் பிடித்திருந்தாள்.


சாதாரண வாயில் புடவை கட்டிக் கொண்டிருந்தாலும் ராதாமணியின் முகத்தில் ஒருவித அமைதியும், அழகும் இருந்தது.


“நல்லா இருக்கேன்ம்மா” என்றவர் மகனை முன்னே அழைத்து “ இவன் தான் என் பிள்ளை மணி” என்றார்.


அவரைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு மற்றவர்களை பார்த்து புன்சிரிப்போடு நின்று கொண்டான்.


அங்கம்மாள் தனது மகன், மருமகள், மலர் என்று எவரின் சம்மதத்தையும் கேட்காது “என்ன ராதா எங்க வீட்டு பொண்ணு மலரை உன் பையனுக்கு கொடுக்கலாமா? நல்லா பார்த்துப்பியா?” என்றார் எடுத்ததுமே.


அவரின் கேள்வியில் ஒரு நிமிடம் அதிர்ந்தவர் மகனை திரும்பி பார்க்க, அவனோ சங்கடத்துடன் அன்னையின் காதில் ஏதோ கூறினான்.
\


அதை கவனித்த அங்கம்மாள் “என்ன சொல்றான் உம்மவன்?” என்றார்.


இவற்றை கவனித்துக் கொண்டிருந்த விஜயனுக்கு கண்கள் சிவந்து போனது. பாட்டியின் எண்ணமும், அத்தையின் எண்ணமும் புரிந்த போது மனம் எரிமலையாக பொங்கியது. வேகமாக அங்கிருந்து எழுந்து வெளியேறினான். தூணின் ஓரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் அவனது முதுகையே வெறித்தது.


“பெரிய வீட்டு பெண்ணை வச்சு வாழுகிற அளவுக்கு அவனுக்கு வசதி பத்தாதுன்னு சொல்றாங்க” என்றார் ராதா.


நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் அவசரமாக இடைபுகுந்து “மணி சொல்றதும் சரி தான். அவசரப்பட வேண்டாம். ஆற அமர பேசிக்கலாம்” என்றார்.


கோவிந்தனும் “ஆமாம்மா! முதல்ல விஜயன் கல்யாணம் முடியட்டும். இப்போ எதுக்கு அவசரமா இதை பேசணும்” என்றார்.


மகனை முறைத்தவர் “ஒரு கல்யாணத்தில் தான் இன்னொரு கல்யாணம் நிச்சயம் ஆகும் கோவிந்தா. நல்ல பையன் கிடைக்கும் போது அந்த வாய்ப்பை விடக் கூடாது. மலருக்கு வசதியை விட நல்ல பையனா கிடைக்கனும்னு தான் பயந்துகிட்டு இருந்தோம். உன்னைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமா போயிடுச்சுப்பா” என்றார் மணியிடம்.


அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. திடீரென்று தன் திருமணத்திற்கு என்ன அவசரம் என்று புரியாமல் அன்னையைப் பார்த்தான். சண்முகத்திற்காக தான் நிச்சயத்திற்கு வந்திருந்தான். வந்த இடத்தில் தன் திர்ருமணம் பேச்சு எழும் என்று அறியவில்லை. அலமு சரியாக காயை நகர்த்தி காரியத்தை சாதிக்க நினைத்தார்.


அடுத்தவரை யோசிக்க விடாமல் “பிரபா! ஒரு காரியம் பண்ணு. நீ போய் மலருக்கு அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வா. அவங்க பெண்ணை பார்திடட்டும்” என்றார்.


பவானி பாட்டியின் ஆட்டத்தைக் கண்டு பல்லைக் கடித்தவள் “என்ன நினைச்சுகிட்டு இருக்கு இந்த பாட்டி. இரு நான் போய் பேசிட்டு வரேன்” என்று சென்றவளை தடுத்தாள் மலர் கண்ணீருடன்.


“என்னை ஏண்டி தடுக்கிற? அலங்காரம் பண்ணிக்கிட்டு போய் அவன் முன்னாடி நிற்க போறியா?’ என்றாள் எரிச்சலாக.


“என்ன பண்ண சொல்ற பவானி? எனக்கு யாரு இருக்கா உதவி பண்ண?”


அவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே வந்த பிரபா “மலரு!” என்று கண்ணீருடன் கட்டிக் கொண்டார்.


மூவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கதறி தீர்த்தனர். முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட பிரபா “மலரு! இதை உன் கிட்ட சொல்ல எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எனக்கு இதைத் தவிர வேற வழியில்லை. நீ இந்த பையனை கட்டிக்க ஒத்துக்கோ. காசு பணம் இல்லேன்னாலும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். என் பிள்ளைக்கு கட்டி வைக்க முடியாத வக்கத்தவளா நின்னு இதை சொல்றேன்” என்று அழுதார்.
 

sudharavi

Administrator
Staff member
#50
அவரின் பேச்சில் மேலும் அழுகை வர “அத்தை!” என்று கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள். அதற்குள் அங்கம்மாள் பெண்ணை அழைத்து வர இவ்வளவு நேரமா என்று சத்தமிட, அவசரமாக அவளது கண்ணீரை துடைத்து, முகம் கழுவி பட்டுப்புடவையை உடுத்தி தலையை வாரிவிட்டு அழைத்து வந்து அனைவரின் முன்பு நிறுத்தினார்.


மணிக்கு ஏனோ இந்த அவசர ஏற்பாடு பிடிக்கவில்லை. அதிலும் அங்கம்மாளின் அதிகார தோரனையை அறவே வெறுத்தான். எதற்கு இந்த அவசர பெண் பார்க்கும் படலம் என்று கடுப்பாக நின்றான். தனக்கு விருப்பமில்லை என்று சண்முகத்திடம் தெரிவித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்த்தபடி நின்றான்.


தங்கள் முன் வந்து நின்ற மலரை பார்த்ததுமே ராதாவிற்கு உள்ளுக்குள் இருந்த பயம் நீங்கியது. பெரிய இடத்துப் பெண்ணை கட்டி வைத்து தங்களுக்கு ஒத்துப் போகாமல் இருந்தால் மகன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தார்.


ஆனால் மலரைப் பார்த்ததுமே அவருக்குப் பிடித்துப் போனது. எங்கோ பார்த்துக் கொண்டிருந்த மணியின் கைகளைப் பற்றி “பொண்ணு வந்தாச்சு. பாரு மணி” என்றார்.


வேண்டா வெறுப்பாக பார்க்க எண்ணி திரும்பியவன் மலரைக் கண்டதும் மனதிற்குள் இதமான ஒரு உணர்வை உணர்ந்தான்.


அவர்கள் யோசிப்பதற்கு இடம் கொடுக்காமல் “என்ன ராதா? உன் பையன் கிட்ட கேட்டு சொல்லு? பெண்ணை பிடிச்சிருக்கா?” என்றார்.


மகனை திரும்பி பார்த்து “மணி” என்றதுமே அவன் “எனக்குப் பிடிச்சிருக்குமா” என்று விட்டான்.


அந்த பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வை தந்தது. அங்கம்மாளுக்கும், அலமுவுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது என்றால், கோவிந்தனுக்கும், பவானிக்கும் ‘ஐயோ’ என்றானது. மலருக்கோ உடலிலிருந்து உயிர் பிரிந்த உணர்வைக் கொடுத்தது. கார்த்திகாவிற்கு அவன் வேண்டாமென மறுத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் சம்மதம் சொன்னதும் மலரின் மீது அத்தனை வெறி வந்தது. பார்த்ததுமே பிடிக்கும் அளவிற்கு அவளிடம் என்ன இருக்கிறது? விஜயனும் அவளை விரும்பினான் புதிதாக வந்திருப்பவனும் உடனே சம்மதம் சொல்கிறான் என்று அவளையே வெறித்தாள்.


மணி சம்மதம் சொன்னதும் அதை பயன்படுத்திக் கொண்ட அங்கம்மாள் “ராதா! இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு. பேசாம நாம உறுதிபடுத்திகிட்டா என்ன?” என்றார்.


அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மகனைப் பார்த்தார் ராதா.


“பாட்டிம்மா! பெண்ணை பார்க்க சொன்னீங்க சரி. ஆனா உறுதிப்படுத்த எங்க தரப்பில் நாங்க பெண்ணுக்கு ஏதாவது செய்யணும். அதுக்கு அவகாசம் வேணும். அதானால இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான்.


தங்களது எண்ணத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று யோசித்தவர் “வெளில நம்ம வண்டி இருக்கு மாப்பிள்ளை. உடனே கடைக்குப் போய் ஒரு புடவை எடுத்திட்டு வாங்க. உங்கம்மா கிட்ட இருக்கிற நகையில் ஒன்றை எடுத்து அவளுக்குப் போட்டுக்கலாம். என்ன ராதா நகை எதுவும் இருக்கா?” என்றார்.


ராதாவுக்கும், மணிக்கும் அவரின் வேகம் மூச்சு முட்டுவது போல் இருந்தது. எதற்கு இந்த அவசரம் என்று தோன்றியது? அதனால் எதுவும் பதிலளிக்காமல் இருந்தனர். அவர்களின் சங்கடத்தை உணர்ந்த சண்முகம் “மணி! மலரு தங்கம்மான பிள்ளை. நல்லதை தள்ளிப் போட வேண்டாம் என்று தான் அத்தை சொல்றாங்க” என்றார்.


சற்று யோசித்தவன் அன்னையிடம் கலந்து பேசிவிட்டு அவசரமாக வெளியேறினான். மலருக்கு நரகத்தில் இருப்பது போலிருந்தது.சுமார் ஒரு மணி நேரம் அனைவரையும் காக்க வைத்தவன் கை நிறைய பைகளுடன் வந்து சேர்ந்தான். அவளது நிறத்திற்கு ஏற்றார் போல் அழகான புடவையும், மெல்லிய சங்கிலி ஒன்றையும் வாங்கி வந்திருந்தான்.


நடப்பவற்றை அறிந்த விஜயன் கால் வலிக்க வலிக்க நடந்து ஊரின் எல்லையை அடைந்திருந்தான். அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்து சில இளசுகள் கள்ளை அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகே சென்றமர்ந்து தனக்கு வேண்டுமென்றான். அவர்கள் கொடுக்க அதை வாங்கி அருந்தியவன் வெற்றிடத்தை வெறித்தபடி அப்படியே அமர்ந்திருந்தான்.


கார்த்திகாவின் வீட்டில் எதிர்பாராமல் மற்றோரு நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடந்து முடிந்திருந்தது.
 
#53
Pch inthe veena pona vijayan epidi ponalum kavala ila.ana malaruku nalla life amayanum. Inthe villa kootam munadi ava nalla padiya suthanthirama irukanum.nalathu than inthe oomayana kalyanam panni avanga athai mathiriye anthe kilavikitte adimaya irukuratha vida inthe mani ya kalyanam panni avangama kooda sernthu Vela parthalum suthanthirama iruka.
 
#54
பாவம் மலரு. விஜயன்லாம் வேஸ்ட். மலரு ஒரு லூசு. கோவிந்தன் கோழை. பிரபாம்மா யோசிக்கிறது கரெக்ட் நல்ல குடும்பம் சந்தோஷமா வச்சுப்பாங்க. ஆனா மலரு செய்றது தப்பில்லையா. மணிக்கிட்ட அவ காதல சொல்லல. இவளால அவன் கூட வாழ்ந்துட முடியுமா