அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

வடுமாங்காய் செய்முறை

sudharavi

Administrator
Staff member
#1
ஏப்ரல் மாதம் வந்தாலே மாவடுவை எண்ணி நாவில் ஜலம் ஊறத் தொடங்கும். மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி......வடுமாங்காய் போடுவதற்கான வழிமுறைகள்...

தேவையான பொருட்கள்!

மாவடு கொப்போடு உள்ளது - 1 கிலோ

கடுகு - 5 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

கல்லு உப்பு - 200கிராம்

மிளகாய் வற்றல் - 15

விளகெண்ணைய் - 3 ஸ்பூன்

செய்முறை!

மாவடுவை நன்றாக ஐந்தாறு முறை கழுவி ஒரு துணியில் உலர்த்த வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு ஒரு அடுக்கில் போட்டு விளக்கெண்ணையை கொஞ்சமாக விட்டு நன்றாக எல்லா வடுக்களிலும் பரவுமாறு கலக்க வேண்டும். பின்னர் கல்லு உப்பை போட்டு கிளறி வைக்க வேண்டும். ஒரு இரண்டு நாட்களுக்கு அந்த உப்பில் ஊறி லேசாக நீர் விடும். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை மாவடுவை எடுத்து குலுக்கி வைக்க வைவேண்டும். அப்போது தான் ஒரே சீராக இருக்கும். மூன்றாவது நாள் மேலே கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸ்யில் அரைத்து மாவடுவில் கலக்க வேண்டும். ஒரு நாள் அந்தப் பொருட்களோடு ஊரும் வரை வெளியில் வைத்துவிட்டு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்ஹ்டு விடலாம். அவ்வப்போது எடுத்து மேலிருந்து கீழ் வரை கிளறி விட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.