வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#82
அத்தியாயம் – 11


சூர்யாவை திரும்பி பார்த்த இந்து அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை குறித்துக் கொண்டு “நீ கிளம்பு சூர்யா” என்றாள்.


தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு ரிஷியை பார்க்க அவனோ மெல்லிய குரலில் “என்னடா இது? இவ எதுக்கு உன்னை எப்படி துரத்துறா?” என்றான்.

“தெரியல...இன்னைக்கு வாங்குற வாங்குல என் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டா” என்று கூறி விட்டு வகுப்பை விட்டு வெளியேறினான்.


அவனுடன் இணைந்து நடக்கும் போது எதுவும் பேசாமல் அமைதியாகவே நடந்தாள். சூர்யாவும் கல்லூரியில் வைத்து எதுவும் பேச வேண்டாம் என்றெண்ணி வாயை இறுக மூடிக் கொண்டான்.


இருவரும் தங்களது பைக்கை எடுத்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியேற, சற்று தூரம் சென்றதும் அவனை பார்த்து “பக்கத்துல உள்ள ஹோட்டலுக்குப் போய் பேசலாம் சூர்யா” என்று கூறி விட்டு தான் முன்னே சென்றாள்.


பல்லைக் கடித்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான். அவன் வருவதற்கு முன் சென்று ஒரு டேபிளில் அமர்ந்தவள் எதிரே இருந்த இருக்கையை காண்பித்தாள்.


கடுமையான முகத்தோடு அவளின் முன்னே அமர்ந்தவன் “நீ எதுக்கு என் பின்னாடி இப்படி சுத்துற?” என்றான் எரிச்சலோடு.


அவளோ இருகைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு முன்னே சரிந்தது அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“உனக்கு ஓவர் தைரியம் தான். என் கசின்னு சொல்லி என்னை கூட்டிட்டு வர அளவுக்கு ஓவர் திமிர். நான் ஏதோ நல்லவனா இருக்கிறதுனால நீ தப்பிச்சிட்டு இருக்க” என்றான் கடுப்புடன்.


அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்ட போது தான் நன்றாக சாய்ந்தமர்ந்தவள் இருவருக்கும் மில்க்க்ஷேக் ஆர்டர் செய்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தாள்.


“நீ ஏதாவது பைத்தியகார ஆஸ்பத்திரிலே இருந்து தப்பிச்சு வந்துட்டியா?” என்றான் எரிச்சலுடன்.


“சூர்யா! நான் தான் நேத்தே உனக்கு சொல்லிட்டேன். நாம லவ்வர்ஸ். உனக்கு தான் லவ்வர்ஸ் எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியல. இப்படி ஹோட்டலுக்கு வந்தா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து மெய் மறந்து உட்கார்ந்திருக்கனும்” என்றாள் புன்சிரிப்புடன்.


“ஏய்! அந்த வார்த்தையை சொல்லாதே! எரிச்சலா இருக்கு. நீ உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்க?”


“உன்னைத் தான் சூர்யா. நல்ல பெர்சனாலிட்டியான உன்னை மிஸ் பண்ண எனக்கு மனசில்லை. அதோட நல்லா படிக்கிற வேற. சோ நான் அதிகம் ஸ்ட்ரைன் பண்ணிக்க வேண்டாம். எப்படியும் கம்பஸ்ல செலக்ட் ஆகிடுவ. கொஞ்ச நாள் திகட்ட திகட்ட காதலிச்சிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவளை கடுமையாக முறைத்தான்.


“இங்கே பாரு! எனக்கு உன் மேல எந்த ஈர்ப்பும் இல்லை. நீ யாரும் எங்கேருந்து வந்த எதுவுமே உன்னைப் பத்தி தெரியாது. அது மட்டுமில்ல எனக்கு இந்த மாதிரி வெட்கமே இல்லாம பேசுற பொண்ணெல்லாம் பிடிக்காது” என்றான் முகத்தை சுளித்து.


அவனை பார்த்து கண்களை சிமிட்டியவள் “பாஸ்! அரேஞ் மேரேஜ்ல எல்லாம் பிடிச்சா பண்ணிகிறாங்க. எனக்கு உங்களை பிடிச்சிருக்குள்ள அது போதும். அப்புறம் என்ன சொன்னீங்க? வெட்கமே இல்லாத பெண்ணா? என்னை வெட்கப்பட வைக்க வேண்டியது நீங்க தான் பாஸ். ஒரு லவ்வரை பார்த்தா சின்னதா ஒரு ஹக், ஒரு குட்டி கிஸ் இதெல்லாம் கொடுத்தா தானா வெட்கம் வந்துடாதா?” என்றவளை கண்டு களைத்து, மலைத்து போனான்.


அவளோ சிறிதும் கவலைப்படாமல் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “கமான் பாஸ்! ப்ரீயா இருங்க. உங்களை மீறி நான் எதுவும் செஞ்சிட மாட்டேன்” என்றவளைக் கண்டு உள்ளக்குள் பதறி தான் போனான். எப்படி பேசினாலும் சிக்ஸர் அடிப்பவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்திருந்தான்.


அப்போது சர்வர் மில்க்சேக்கை கொண்டு வந்து வைக்க, அவனிடம் கை காட்டி “எடுத்துக்கோ சூர்யா...நான் பே பண்ணிடுறேன்” என்றாள் கிண்டலாக.


அவள் மீது எரிச்சல் பொங்கி எழ வேகமாக நாற்காலியை தள்ளி விட்டு எழுந்து கொண்டவன் “நீ இருந்து கொட்டிகிட்டு போ. உனக்கு இது தான் லாஸ்ட் வார்னிங். இதோட என் முன்னாடி வரக் கூடாது” என்றான்.


கையிலிருந்ததை ரசித்து குடித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்து “நீ கிளம்பு செல்லம். எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்” என்றாள்.


அவளின் பேச்சு அவனது பிபியை ஏற்றியது. எங்காவது சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. பைக்கை எடுத்துவனுக்கு எங்கு போவது என்று தெரியாமல் மதிய வெயிலில் பீச்சிற்கு சென்று நின்றான்.


இந்த ரெண்டு நாட்களாக அவனது பார்வை எந்த பெண்ணிடமும் செல்லவில்லை. அவனது நினைவு முழுவதும் அவளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தான் யோசித்தான். ஏன் இந்துவிடம் கூட வம்பு வளர்க்காமல் மிக அமைதியாகவே இருந்தான். ஆனால் உள்ளுக்குள் பீதியாக இருந்தது. இவளால் எதுவும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தான். அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்தவன் தலையை இரு கைகளால் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.


எப்படி யோசித்தாலும் அவளை எப்படி தவிர்ப்பது என்று புரியவில்லை. தனது வகுப்பறைக்கே வரும் தைரியம் இருக்கிறதென்றால் அவள் சாமானிய பெண்ணல்ல என்று எண்ணினான்.


எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை. அவன் அமர்ந்திருந்த கல்லில் லட்டி ஒன்று தட்டப்பட, “டேய்! யார்ரா நீ! இந்த நேரத்துல இங்கே என்ன வேலை உனக்கு?” என்று அதட்டலான குரல் கேட்டது.


அந்த குரலை கேட்டதும் அவசரமாக நிமிர்ந்தவன் “வெற்றி சார்!” என்றான்.


வெற்றியும் சூர்யாவை அங்கு எதிர்பார்க்காததால் “இங்கே என்னடா பண்ணிட்டு இருக்க காலேஜுக்கு போகாம” என்று அதட்டினான்.


“காலேஜுல தான் இருந்தேன். ஒரு பொண்ணு வெளில அழைச்சிட்டு வந்து இப்படி உட்கார வச்சிட்டா” என்றான் எரிச்சலுடன்.


“நீ இன்னும் பொண்ணுங்க பின்னாடி சுத்துறதை விடலையா?”


“நான் எங்கே சுத்துனேன். கிரகம் என்னை விட மாட்டேங்குது”.


“புரியுற மாதிரி சொல்லுடா”.


“ஒரு பொண்ணு எனக்கு லவ் டார்ச்சர் கொடுக்குறா வெற்றி”.


“வாட்! உனக்கு ஒரு பொண்ணு...” என்றவன் “ஹாஹா” என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.


“சிரிக்காதீங்க! நானே செம எரிச்சலில் இருக்கேன்”.


அவனது தோளில் கை போட்டுக் கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தவன் “டென்ஷன் ஆகாதே! நீ பண்ணினதை உனக்கு எவளோ திருப்பி செய்றா” என்றான் கள்ளச் சிரிப்புடன்.


அவனை திரும்பி முறைத்து “என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா உங்களுக்கு” என்றான் கடுப்புடன்.


“விடுறா விடுறா! எவ்வளவோ பார்த்துட்ட இதெல்லாம் சகிச்சுக்க மாட்டியா?”


“படுத்துறா வெற்றி...நேத்து தான் என்னை முதன் முதலா பார்க்கிறா உடனே என் கிட்ட வந்து லவ்வரா என்னை பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்றா” என்றான் எரிச்சலுடன்.


ஜீப்பில் ஏறி அமர்ந்தவன் “நீ சொல்றதை பார்த்தா எனக்கே அவளை பார்க்கணும் போல இருக்கு சூர்யா” என்றவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு ‘அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே வெற்றி. பிடாரி எங்கேயாவது ஆள் வச்சிருப்பா...வீட்டுல போய் கிழிச்சு தோரணம் கட்டிடுவாளே’ என்றெண்ணிக் கொண்டு கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.


சூர்யாவோ முதல் நாளிலிருந்து அவள் நடந்து கொண்டதை எல்லாம் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே வந்தான். வெற்றியோ இதென்னடா நமக்கு வந்த சோதனை என்று அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது அவனது ஜீப்பிற்கு எதிரே ஒரு பைக் வந்து நின்றது.அதிலிருந்து இறங்கியவள் நேரே அவர்களின் எதிரே வந்து நின்றாள்.


அவளைப் பார்த்ததும் சூர்யா டென்ஷனாகி “ஏய்! இங்கே என்ன பண்ற?” என்றான்.


வெற்றியைப் பார்த்து தலையசைத்து “நீங்க தான் இவனோட அட்வைசரா சார். பார்த்து கொஞ்சம் நல்லவிதமா சொல்லி வைங்க” என்றாள்.


தனது கூர்மையான கண்களால் அவளை ஆராயந்தவனுக்கு அத்தனை ஆச்சர்யம். ஒரு பதினேழு வயது பெண்ணுக்குரிய வளர்ச்சியில் சின்ன பூச்செண்டாக நின்றவளுக்கு இத்தனை தைரியமா என்று அசந்து போய் பார்த்தான்.


அவன் முன்னே கையை ஆட்டி “என்ன சார் நீங்களும் மேடம் கூட ட்ரீம்க்கு போயாச்சா?” என்றாள் கிண்டலாக.


“ நீ காலேஜுக்கு போகாம எங்க சுத்திட்டு இருக்க?”


“எங்கே சார்! உங்க சிஷ்ய பிள்ளைக்கு லவ் சொல்லி இன்னைக்கு கொஞ்ச நேரம் அவனோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சா என்னை பார்த்தாலே தெறிச்சு ஓடுறான்” என்றாள் கிண்டலாக.


அவள் பேசிய பேச்சில் அவனுக்கே மண்டை காய்ந்து போனது.
 

sudharavi

Administrator
Staff member
#83
“ஜீப்பில் ஏறி உட்காரும்மா. உன்கிட்ட பேசணும். உன் பேரென்ன சொன்ன?”


“கன்யா சார். நான் ஜீப்பில் உட்காரனும்னா ஒரு கண்டிஷன். நீ சின்ன பொண்ணு இதெல்லாம் வேண்டாம்னு அட்வைஸ் பண்ற ஐடியா இருந்தா சொல்லிடுங்க நான் இப்படியே கிளம்பிடுறேன்” என்றாள்.


வெற்றிக்கு அவாள் சொன்னதும் விளக்கெண்ணை குடித்தது போலிருந்தது. சூர்யாவோ பார்த்துக்கோங்க என் நிலைமையை என்றான் கண்களால் சைகை செய்தான்.


அவள் சொன்னதற்கு ஒத்துக் கொண்டு ஜீப்பில் ஏற சொன்னவன் மெல்ல பேச்சுக் கொடுத்து அவளது குடும்ப விவரங்களை அறிந்து கொண்டான். அவளது பொழுது போக்கு, படிப்பு என்று அனைத்தையும் தெரிந்து கொண்டான். சற்று நேரம் பேசி இருந்துவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கியவள் “எனக்கு காலேஜ் விடுற நேரம் ஆச்சு சார். இது என் பிரெண்டோட பைக். அவன் கிட்ட கொடுக்கணும் நான் கிளம்புறேன்” என்று பைக் நோக்கி சென்றவள் திரும்பி வந்து “என் பேரன்ட்ஸ் கிட்ட இதை பத்தி பேசணும்னு நினைக்காதீங்க சார். அப்புறம் நான் சத்தியவாணி மேடமை பார்க்க வேண்டி இருக்கும். நீங்க சொன்னதா சில பல விஷயங்களை பேச வேண்டி இருக்கும்” என்று கூறி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.


அவள்ளின் அதிரடியில் ஷாக்கானவன் சூர்யாவின் பக்கம் திரும்பி “எப்படிடா இவளை சமாளிக்கப் போற? ஆழாக்கு சைஸ் இருந்து கிட்டு என்ன்ன போடு போடுறா? உன் நிலைமை கஷ்டம் தாண்டா” என்றான் சிரிப்புடன்.


சூர்யாவோ நக்கலான சிரிப்புடன் “நான் மட்டுமா சிக்கி இருக்கேன் நீங்களும் தான் மாட்டிடீங்க. என்ன கிண்டலா உங்களையும் மிரட்டிட்டு போறா பாருங்க” என்றான்.


“ஆமாம்டா! வாணி கண்ணுல இவ படக்கூடாது. என் குடும்பத்துல கும்மி அடிச்சிடுவா போல இருக்கு. இது உன் பிரச்சனை தானே நீயே ஹான்டில் பண்ணு மேன்”.


“அதெல்லாம் முடியாது. உங்களால தான் நான் இந்துவை விட்டுக் கொடுத்தேன். இப்போ வந்து கழட்டி விட்டா சரியா? இவளை எப்படி விரட்டுரதுன்னு யோசிங்க” என்றான்.


வெற்றியோ “இதென்னடா வம்பா இருக்கு. அவ உன்னை சுத்துறா. நீ தான் அவளை விரட்டனும். இதுல நான் என்கேருந்துடா வந்தேன்?”


“என் இந்துவை என் கிட்ட இருந்து பிரிச்சீங்க இல்ல அதனால இவளையும் என்னை விட்டு விரட்டுங்க”.


அவனை முறைத்து “மரியாதையா இறங்கி ஓடி போயிடு. ரொம்ப பேசுன ஜீவா கிட்ட சொன்னா லாடம் கட்டிடுவான்” என்றான் கடுப்போடு.


ஜீப்பிலிருந்து குதித்தவன் பைக்கை நோக்கி நடந்து கொண்டே “நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்கு இவ என் பின்னாடி வரக் கூடாது” என்று கூறிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தான்.


அப்படியே ஜீப்பில் அமர்ந்திருந்தவன் மனதிற்குள் ‘இது தேவையா உனக்கு வெற்றி. ஜீவாவை பார்க்க போனோமா வந்தோமான்னு இல்லாம வழியில போன சனியனை பிடிச்சு சட்டைக்குள்ள போட்டுகிட்டியே. வாணிக்கு தெரிஞ்சா நம்ம சோலியை முடிச்சிட்டு தான் வேலையைப் பார்ப்பா’ என்றெண்ணிக் கொண்டிருந்தவனின் மொபைல் அழைத்தது.


வாணி தான் அழைத்திருந்தாள்.


‘பேயை நினைச்சேன் உடனே கூப்பிட்டுடுச்சே’ என்றே புலம்பிக் கொண்டு “சொல்லுடா வாணி செல்லம்” என்றான்.


“எங்கே இருக்க?”


“ரவுண்ட்ஸ் போயிட்டு ஆபிஸ் ரிடர்ன் ஆகிட்டு இருக்கேன் செல்லம்”.


“பொய் சொல்லாதே! உன் ஜீப் ரொம்ப நேரமா பீச் பக்கம் நிற்கிறதா கேள்விபட்டேன். என்ன பண்ணிட்டு இருக்க?”


ஜீப்பிலிருந்து எட்டி சுற்றும் முற்றும் பார்த்தவன் ‘எவன் போட்டு கொடுக்குறானே தெரியலையே. என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் சிக்காமலா போயிடுவான். அன்னைக்கு இருக்கு’ என்று திட்டிக் கொண்டே “ரவுண்ட்ஸ் வந்ததில் ஒரு கேசை பிடிச்சேன். அதுங்க கிட்ட விசாரணை பண்ணி முடிக்க நேரமாகிடுசாடா”.


“நம்பிட்டேன்! உன்னை அடிக்கடி ஒரு பையன் வந்து பார்க்கிறதா கேள்விபட்டேனே”.


“ஏண்டி! நீ போலீஸ் வேலை ஊருக்கு பார்க்குறியா? இல்ல என்னை வேவு பார்க்கிறியா? சும்மா நை-நைன்னுட்டு” என்று கடித்துவிட்டு போனை அணைத்து விட்டான்.


நெஞ்சை தடவிக் கொண்டவன் ‘எப்படியோ சமாளிச்சிட்டோம். வீட்டுக்கு போய் இருக்கு’ என்றெண்ணிக் கொண்டு ஜீப்பை கிளப்பினான்.


சூர்யாவோ கல்லூரிக்கு போக முடியாமல் வீட்டிற்கு சென்றான். அவனது அன்னை கீழே நின்று கீதா மாமியிடம் பேசிக் கொண்டிருந்தார்.


பைக்கை நிறுத்தி விட்டு வந்தவன் கீதா மாமியை கூட கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்றான். அவன் வந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு அவன் பின்னே ஓடிய மல்லிகா “என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்றார்.


“ம்ச்..தலைவலிம்மா அதுதான் வந்துட்டேன்” என்றவன் சோபாவில் படுத்து விட்டான்.


என்றுமே குறும்பும் துருதுருப்புடனும் சுற்றி வருபவன் அப்படி படுத்தும் அன்னையின் மனம் தவித்தது. தலையை தொட்டு பார்த்து அவன் முகத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றவரை கண்டவன் “என்னம்மா?” என்றான் சலிப்பாக.


“என்னாச்சுடா? உன் முகமே சோர்ந்து போய் கிடக்கு?” என்றார்.


“பெருசா ஒண்ணுமில்லம்மா...கிளைமேட் சரியில்லை அதுதான் தலைவலி” என்று கண்களை மூடிக் கொண்டான். தலையில் இருந்த பாரத்தில் தன்னை மீறி உறங்கி விட்டான்.


அயர்ந்து உறங்கியவனுக்கு கனவிலும் அவனது நாயகி பயமுறுத்தினாள்.தன்னை மீறி உறங்கியவனின் காதுகளில் அவள் பேசுவது காதில் விழுந்தது.


“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி. நான் தான் உங்க வருங்கால மருமக” என்றாள்.


சட்டென்று உடலெல்லாம் வியர்க்க வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன் கண்களை சுழற்றி அவளை தேடினான். மனமோ ‘ஐயொ௧ வீட்டுக்கு வந்துட்டாளா’ என்று பதறியது.


மல்லியோ உறங்கிக் கொண்டிருந்தவன் அதிர்ந்து எழுந்ததை கண்டு “என்ன சூர்யா கனவு கண்டு பயந்துட்டியா?” என்றார்.


தன்னை சுதாரித்துக் கொண்டவன் “ஆமாம்மா! பேய் கனவு” என்றான்.
 
#84
Semma Epi. Sudhama... Mathavangalukku BP yethra Suryake BP ya... Kanya semma tuff kudukkara... Thanakunu oru prachanai vandhathan mathavangala kavanikkaratha vittudurom... Melum Valter Vetrivela Valter Vadivela aakkiteengale sudhama...
 

Anuya

Well-known member
#86
haha.... surya enna pa intha kanya unake tough kudupa pola.... haha... ithula paavamya vetri avara vera iluthu vittuta surya...:ROFLMAO::ROFLMAO: kanya vanthathula irunthu en baby surya avanave illa ... indhu va paarkala maami ah kandukala so sad :ROFLMAO::ROFLMAO: sema epi sudha maa:love::love: kanya kalakura surya ninaipu full ah ava thaan... kanavula kuda santhosama iruka vida matenkurale:LOL::LOL:waiting for nxt ud sudha maa:love::love::love:
 

bselva

Active member
#88
ha ha ha😆😆😆 ayyo soori paya unna parkave remba pavama iruku po.sudha mamum kanya vum manasu vacha than unna kapatha mudiyum. veyriellam velaiku aga mattan Avane avanoda home ministry kitte epidi thapikurathunu theriyama mulichittu irukan so inthe rendu theivangal than unnai kapatha mudiyum parthuko 😉😉
 

sudharavi

Administrator
Staff member
#89
அத்தியாயம்- 12


தந்தை வருவதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருந்தான். பாடத்தில் மூழ்கி இருந்தவனை போன் அதிர்ந்து ஆடி எகிறி குதித்து மேஜையில் இருந்து விழுந்தது. திடீரென்று போன் ஏன் இப்படி குதிக்கிறது என்று புரியாமல் எடுத்துப் பார்க்க, அதில் புதிய எண்ணிலிருந்து பல செய்திகள் வந்து விழுந்திருந்தது.


கண்களை சுருக்கிக் கொண்டு அதை பார்த்தவன் மெல்ல ஓபன் செய்தான். முதல் செய்தியை பார்த்ததுமே கையிலருந்த போனை பதறி போய் கீழே விட்டான்.


“ஹாய் டார்லிங்! என் செல்ல புஜ்ஜி! என்னடா பண்ற?” என்றிருந்தது.


இதே மாதிரி கொஞ்சல் மெச்செஜ்ஜாக பல வந்திருந்தது. அதெல்லாவற்றையும் படித்தவனுக்கு தெரிந்து போனது. இது அவளின் வேலை தான் என்று.


பல்லைக் கடித்துக் கொண்டு மொபைலையே சிறிது நேரம் வெறித்தான். ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம்? என்று யோசிக்க வைத்தது?


அவனது யோசனையை கலைத்து உயிரை விட்டு அலறியது மொபைல். அவள் தான் அழைத்திருந்தாள். அந்த எண்ணை பார்த்ததுமே மனதிற்குள் அத்தனை எரிச்சல் எழுந்தது. அதே ஆத்திரத்துடன் போனை எடுத்தவன் “ஏய்! எதுக்குடி என்னை இப்படி படுத்துற?” என்றான் ஆத்திரத்துடன்.


அவளோ அலட்டிக் கொள்ளாமல் “என்ன செல்லோ இத்தனை கோபமா பேசுற...உன் குட்டிமா பேசும்போது அன்பா பாசமா பேசனும்டா” என்றாள் ஹஸ்கி வாய்சில்.


“அடச்சீ! அடங்கு! இன்னொரு தடவை இப்படி பேசிட்டு போன் பண்ணின சும்மா இருக்க மாட்டேன்” என்று கூறி போனை அணைத்து விட்டான்.


அதன்பின்னர் மெச்செஜ்ஜோ போனோ வரவில்லை என்கிற நிம்மதியுடன் படிக்க ஆரம்பித்தான். ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மல்லியை அங்கிருந்த லேன்ட் லைன் அலறி அழைத்தது.


“ச்சே...சீரியல் பார்க்க விடாம யார் அது இந்த நேரத்துக்கு கழுத்தறுக்கிறா?” என்று புலம்பியபடி போனை எடுத்தார்.


“ஹலோ ஆண்ட்டி! எப்படி இருக்கீங்க?”


நெற்றியை சுருக்கியவர் “யாரும்மா நீ?” என்றார்.


“நான் சூர்யாவோட பிரெண்ட் ஆண்ட்டி. என் பேர் கன்யா. அவன் மொபைலுக்கு கூப்பிட்டேன் பிசியா இருக்கு அது தான் வீட்டு நம்பருக்கு கூப்பிடிட்டுடேன்” என்றாள்.


அவசரமாக கணவர் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து விட்டு போனை கையில் பிடித்துக் கொண்டு “சூர்யா உனக்கு போன்” என்றார் உள்ளுக்குள் பல்லைக் கடித்தபடி.


நோட்டில் தலையை கவிழ்த்துக் கொண்டிருந்தவன் அன்னையின் குரல் கேட்டதும் “அந்த போன்ல யாரு கூப்பிடுறது?” என்று சலித்துக் கொண்டே ஹாலிற்கு வந்தான்.


அவனைப் பார்த்ததும் முறைத்துவிட்டு போனை கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.


‘அம்மா ஏன் இப்படி பார்க்கிறாங்க?’ என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்துவன் “ஹலோ” என்க...அந்தப் பக்கம் “ஹாய் புஜ்ஜு! நீ அந்த போனை எடுக்கலேனா என்ன இந்த போன் தான் இருக்கே...ஆண்ட்டி கிட்ட வேற பேசிட்டேனே” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.


அவளின் குரல் கேட்டதும் அடுத்த நிமிடம் சூர்யாவின் பார்வை அன்னையிடம் தான் சென்றது. அவரோ அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவன் மனமோ பத்த வச்சிட்டியே பரட்டை. இன்னைக்கு என்னை கைமா பண்ணாம விட மாட்டாங்களே என்று கதறியது.


“டேய்! என்னடா! என் குரல் கேட்டே ட்ரீமுக்கு போயிட்டியா?” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.


போனை அடித்து நொறுக்கும் வெறி வந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் அன்னை, தந்தை இருவரும் அங்கிருப்பதை மனதில் கொண்டு “ராட்சசி! செம கடுப்பில் இருக்கேன். வை போனை” என்றான்.


“என்னவோ போ...அவனவன் லவ்வர் போன் பண்ண மாட்டாளா கடலை போட மாட்டமான்னு தவிக்கிறான். நீ என்னடான்னா கோபப்படுற” என்றாள்.


“சனியனே! எதுக்கு போன் பண்ணினேன்னு சொல்லிட்டு வச்சு தொலை” என்று பல்லைக் கடித்தான்.


“அதை சொல்ல மறந்துட்டேன் பாரு சூர்யா பேபி...நாளைலருந்து நீ தான் என்னை காலேஜில் ட்ரோப் பண்ணனும்” என்றாள்.


அவள் சொன்னதில் அதிர்ந்து போனவன் “வாட்!” என்று தன்னை மறந்து கத்தி இருந்தான்.


அவனையே பார்த்துக் கொண்டிருந்த மல்லி, பயந்து போய் கணவரை பார்க்க அவரும் சூர்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.


“என்ன சூர்யா? யார் அது போனில்? ஏன் இந்த போனுக்கு பண்ணி இருக்காங்க?” என்றார்.


“இல்லப்பா ரிஷி தான் பேசுறான். என் போனில் சார்ஜ் இல்லை அது தான்” என்றான் தயக்கத்துடன்.


“சீக்கிரம் பேசி முடிச்சிட்டு படிக்கிற வழியை பாரு” என்று கூறிவிட்டு பேப்பரில் தலையை நுழைத்துக் கொண்டார்.


ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவனைக் கண்டு போனில் இருந்தவள் சிரித்து வைத்தாள்.


“என் மாமனார் டெரர் போல இருக்கே பேபி...நீ இப்படி பயப்படுறியே” என்றவள் “ஓகே..நாளைக்கு காலையில சரியா எட்டு மணிக்கு பஸ் ஸ்டாப் வந்திடு” என்று கூறிவிட்டு போனை அணைத்து விட்டாள்.


அவளது பேபி என்கிற அழைப்பிலும், அன்னை தந்தைக்கு முன் தன்னை மாட்டிவிட முயன்ற எரிச்சலிலும் மண்டை காய்ந்து போய் தன்னறைக்கு சென்றான். கட்டிலில் சென்றமர்ந்தவன் ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருந்தான். இதென்ன இவ இப்படி படுத்தி வைக்கிறாளே இவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மல்லி “யாருடா அவ? வீட்டுக்கே போன் பண்ற அளவுக்கு பழக்கமா?” என்றார் சந்தேகத்துடன்.
 

sudharavi

Administrator
Staff member
#90
மா! ரிஷியோட பிரெண்ட் தங்கச்சி...ஒரு சின்ன ஹெல்ப் கேட்டா அவ்வளோ தான்” என்றான் எரிச்சலாக.


“உரிமையா என்னை விசாரிக்கிறாளே தெரிஞ்ச மாதிரி. அப்போ உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பழக்கம் இருக்கா?”


அன்னையை முறைத்தவன் “மா! நிறுத்துங்க! உங்க கற்பனை குதிரையை தட்டி விடாதீங்க. நான் படிக்கணும் கிளம்புங்க” என்றான்.


“எதுக்கு பார்த்து இருந்துக்கோ சொல்லிட்டேன். அப்பாவுக்கு தெரிஞ்சுது பெல்ட்டை கழட்டி விளாசிடுவார் சொல்லிட்டேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.


அவர் சென்றதும் எழுந்து கிழக்கும் மேற்குமாக நடந்தான். உள்ளுக்குள் எரிச்சல் உடலெங்கும் பற்றி எரிந்தது. இதற்கு தீர்வு தான் என்ன என்று புரியாமல் யோசித்தான்.“


அதே நேரம் தங்கள் வீட்டில் வாணியை தாஜா செய்யும் வேலையில் ஈடுப்பட்டிருந்தான் வெற்றி. அவள் சமையல் செய்து கொண்டிருக்க, அவள் கேட்காமலே காய் வெட்டிக் கொடுத்து, தேவையான பொருட்களை எடுத்து கொடுத்து, பாத்திரம் தேய்த்து என்று அனைத்து வேலைகளையும் செய்தான்.


வாணியோ தனக்குள் சிரித்துக் கொண்டு இலவசமாக கிடைத்த உதவியை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.


இரவு உணவை முடித்துக் கொண்டு பிள்ளையை மடியில் வைத்தபடி வாணியை நெருங்கி அமர்ந்தவன் “வாணி செல்லம்” என்று அவளிடம் இழைந்தான்.


அவளோ டீவியில் கண்களை வைத்தபடி “ம்ம்...என்ன?” என்றாள்.


“நம்ம பேபி நல்லா வளர்ந்திட்டா இல்ல” என்றான் அவளின் தோளில் கை போட்டபடி.


அவனை திரும்பி பார்க்காது “பெத்த பிள்ளையை எப்பவாவது பார்த்தா அப்படித்தான் தோணும்” என்றாள் இடக்காக.


அவளது கன்னத்தில் இடித்து “நக்கலா பேசுற கள்ளி” என்று இடித்தான்.


அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் “இப்போ எதுக்கு அடி போடுற நீ? அதுவும் என் மடில உட்காராத குறையா உட்கார்ந்திருக்க” என்றாள் விஷமத்துடன்.


“பேபிக்கு வயசாகிடுச்சுடா...அவளுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேண்டாமா?” என்றான் அவள் தோளில் முகத்தை பதிந்தபடி.


குழந்தையை அவனிடமிருந்து வாங்கியவள் “அவ தூங்குறது கூட தெரியாம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க...கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல வெற்றி” என்று கடிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தவளின் பின்னே அவளது இடையைப் பற்றிய வண்ணம் சென்றான்.


அப்போது போன் இசைக்க எரிச்சலுடன் ‘எவன்டா அவன் கரடி மாதிரி” என்று கடிந்து கொண்டு போனை எடுத்தான்.


“வெற்றி” என்று சூர்யா அழைத்ததுமே டென்ஷனான வெற்றி “டேய்! இந்த நேரத்தில் என்னடா?” என்றான் எரிச்சலுடன்.


“போன் பண்ணி படுத்துறா வெற்றி” என்றான் அழு குரலில்.


வெகு நாட்களுக்கு பிறகு வாணியிடம் இருந்து கிடைத்த ஒப்புதலை தவற விடக் கூடாது என்கிற எண்ணத்தில் “நீயும் அவளுக்கு போன் பண்ணி கடலை போடு” என்று கூறி போனை அணைக்க இருந்தவனை நிறுத்தியது சூர்யாவின் குரல் “என்னால முடியல வெற்றி. ஏதாவது பண்ணுங்க” என்றான்.


நறநறவென்று பல்லைக் கடித்து “ஏண்டா இந்த நேரத்தில் போனை பண்ணி கழுத்தறுக்கிற?” என்றான் கோபமாக.


“அவ இப்போ தானே போன் பண்ணினா. நாளைக்கு நான் அவளை பிக் அப் பண்ணிட்டு போய் காலேஜில் விடணுமாம்” என்றான் எரிச்சலுடன்.


வாணிக்கு கேட்காத வண்ணம் குரலை குறைத்துக் கொண்டு “அஞ்சு வயசு பெரியவளையே பிக் அப் பண்ண ரெடியா இருந்த. இப்போ என்னடா பிக் அப் பண்ணி என்ஜாய் பண்ணு. நான் போனை வைக்கிறேன்” என்றான்.


“வெற்றி! போனை வச்சுடாதீங்க. எனக்கு ஒரு முடிவை சொல்லிட்டு போங்க” என்றான்.


அவனது தொணதொணப்பில் ஓங்கி தலையில் அடித்துக் கொண்டவன் “ஏண்டா மனுஷனோட அவஸ்த்தை புரியாம பேசிகிட்டு...நாளைக்கு காலையில உனக்கு இரு முடிவு சொல்றேன் டா” என்றான்.


“இல்ல எனக்கு ஒரு வழியை சொல்லிட்டு தூங்கப் போங்க” என்றான் பிடிவாதமாக.


மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டே ‘இன்னைக்கு சோலியை முடிச்சுபுட்டான். நேரம் காலம் தெரியாம படுத்துறானே’ என்று புலம்பிக் கொண்டு “நாளைக்கு அவளை கூட்டி கொண்டு போய் காலேஜில் விடு. அதுக்கு முன்னே போகும் போதே அவ கிட்ட தெளிவா பேசிடு. உனக்கு விருப்பம் இல்லேன்னு சொல்லிடு” என்றான்.


வெற்றியின் அவசரம் புரியாமல் “இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க?” என்றவனை கொன்று போட்டு விடும் ஆத்திரம் எழ, “டேய்! மணி என்ன ஆகுது பாரு. உனக்கு வேலை இல்லை. பேசாம போய் படு” என்றான் கடுப்பாக.


“இந்த நேரத்துல ஸ்டேஷனுக்கா போக போறீங்க. எனக்கு ஒரு முடிவை சொல்லிட்டு போங்க வெற்றி”.


“அடேய்! நல்லவனே! நீ புரிஞ்சு தான் பேசுறியா? நீ எல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி..போடாங்க” என்று கூறி போனை கட் பண்ணிவிட்டு நிமிர, வாணி அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.


‘போச்சு! அவ பார்வையே சரியில்லையே...எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?’ என்று எண்ணிக் கொண்டு “வாணி செல்லம் வந்துட்டேன்டா” என்று வேகமாக அவள் அருகில் சென்றான்.


அவனது நெஞ்சில் ஒற்றை விரலை வைத்து தள்ளியவள் “பக்கத்து ரூம்ல போய் போன் பேசிட்டு அங்கேயே படு. எனக்கு நேரமாச்சு. காலையில சீக்கிரம் போகணும்” என்று கூறி தங்கள் அறைக்குச் சென்றாள்.


முதலுக்கே ஆபத்து என்று புரிந்தவன் அவசரமாக “வானு! கொஞ்சம் லேட்டாகிடுச்சு அதுக்கு போய் கோவிச்சுக்குவியா?” என்று அவளுடன் இழைய, பட்டென்று அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அறைக்கதவை சாத்திக் கொண்டாள்.


அதில் டென்ஷன் ஆனவன் “டேய்! சூர்யா! என் குடும்பத்துள் கும்மி அடிக்கிற உன்னை என்ன பண்றது? மவனே நாளைக்கு இருக்கு உனக்கு” என்று கடிந்து கொண்டு சோபாவில் சென்று படுத்துக் கொண்டான்.
 

bselva

Active member
#92
ha ha ha pavam vetri kaiku kidachathu vaiku kidaika kuduthu vaikala. 😆😆

I dont like kanya's attitude mam.virupam ilatha ponnayo payanayo thontharavu panna koodathu ithula ipidilam torture pannalama. Surya nalavanrathunala ok vera mathiri ana pasangana evlo abathu.pollachi sambavam than nyabagam varuthu.ponnunga kattupettiya irukanumnu sollala ana ipidi.no way ithu rowdy thanama thonuthu.
 

sudharavi

Administrator
Staff member
#95
அத்தியாயம் – 13


மறுநாள் காலை ஒருவித பதட்டத்துடனே கல்லூரிக்கு கிளம்பினான் சூர்யா. அவள் சொல்வது போல் ஏன் கேட்க வேண்டும், கண்டுகொள்ளாமல் போய் விடலாம் என்றெண்ணிக் கொண்டு பைக்கை எடுத்தான்.


அவளது பேருந்து நிறுத்தத்தை கண்டு கொள்ளாது அதை தாண்டி பயணிக்க ஆரம்பித்தவனை இரு பைக்குகள் பின் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் அவனை வழி மரித்தவர்கள் கன்யாவை ஏற்றிக் கொண்டு போகும் படி மிரட்டினர்.


உள்ளுக்குள் நொந்து போன சூர்யா எதுவும் பேசாமல் பைக்கை திருப்பி அவள் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நிறுத்தினான். அவனைப் பார்த்ததும் கண்களை சிமிட்டி “என்ன பாஸ் என்னை கழட்டிவிட்டு போகலாம்னு பார்த்தியா?” என்றவள் அவன் பின்னே ஏறி அமர்ந்து தோள்களை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


அதில் அவனது உடல் வில்லாக இறுகி போனது.


“உன் காலேஜ் எது?” என்றான்.


அவனது தோளில் முகத்தை அழுத்தமாக பதிந்து கொண்டு தனது கல்லூரியின் பெயரை தெரிவிக்க, அதுவரை இருந்த பொறுமை பறந்தோட “ஏய்! கொஞ்சம் தள்ளி உட்காருரியா?” என்றான் எரிச்சலாக.


மெல்லிய சிரிப்புடன் சற்று பின்னே நகர்ந்து கொண்டு “நோ டென்ஷன் சூர்யா..கூல்..கூல்” என்றாள்.


சற்றே விரைப்புடன் அவள் கல்லூரி இருந்த திசையில் வண்டியை செலுத்தினான். அவனை மேற்கொண்டு டென்ஷன் ஏற்ற வேண்டாம் என்கிற எண்ணத்தில் அவன் பின்னே அமைதியாக அமர்ந்திருந்தாள்.


கல்லூரி வாயிலில் இறக்கி விட்டு திரும்பியவனை சட்டென்று நெருங்கி கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு எதுவுமே தெரியாத மாதிரி விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள்.


இதை சற்றும் எதிர்பார்க்காதவன் பேயடித்த மாதிரி கொஞ்ச நேரம் நின்று விட்டு தன்னை சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


அவன் எப்போது செல்லும் வழியில் இருந்த டிராபிக் கான்ஸ்டபிளோ அவனது வண்டியில் ஒரு பெண் அமர்ந்து சென்றதை சந்திரசேகருக்கு அழைத்து சொல்லி விட்டார்.


“நல்லா பார்த்தீங்களா? பொண்ணு தானா அது?”


“ஆமாம் சார்! பொண்ணு தான்”.


“இவன் தான் வழியிற கேஸ் ஆச்சே யாராவது பொண்ணு லிப்ட் கேட்டிருக்கும் கொடுத்திருப்பான். நாளைக்கும் அப்படி போனா எனக்கு சொல்லுங்க கவனிக்கணும்” என்றார்.


ஸ்டேஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்த வெற்றியின் முகம் கூம்பி போய் இருந்தது. வாணி அதை கண்டும் காணாமலும் சிரித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் ஏதோ கேட்க கேட்க பதில் சொல்லாமல் தலையை சீவியபடி நின்றிருந்தான்.


மெல்ல அவன் பின்னே சென்று அணைத்துக் கொண்டவள் “என் பேபிக்கு என்ன கோபம்?” என்றாள்.


அவனோ “ஏய்! தொடாதே! இதென்ன ஆபிஸ் கிளம்புறப்ப ரொமான்ஸ்...உனக்கு பிடிச்சா இழைவ இல்லேன்னா ரூமை விட்டு வெளியே தள்ளுவ...சரி தான் போடி” என்று தள்ளி விட்டான்.


இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் “ஓவரா போற வெற்றி...எனக்கு தெரியாம நீ என்னவோ பண்ணிட்டு இருக்க. என்னைக்காவது மாட்டாமலா போவ அன்னைக்கு வச்சுகிறேன் கச்சேரிய” என்று கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.


அவள் வெளியேறியதும் மூச்சை இழுத்து வெளியே விட்டவன் “ஒரு செகண்ட்ல சிக்க பார்த்தியேடா வெற்றி. அவளை பத்தி உனக்கு தெரியாதா? உன் வீக்னேசை வச்சு உன் வாயைப் பிடுங்க தான் வேலை பார்த்தா...நல்லவேளை உஷாராகிட்ட’ என்று தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான்.


சூர்யாவிற்கு மாலை தன்னை காபி டேயில் வந்து பார்க்கும் படை குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஸ்டேஷனுக்கு கிளம்பினான்.


அன்று வாணிக்கு ஒரு மர்மமான சம்பவத்தை விசாரிக்கும் படி ஐஜியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதற்காக தான் வெற்றியிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் ஐஜி ஆபிசிற்கு கிளம்பி சென்றாள்.


அனுமதி பெற்று ஐஜி முன் சென்று அமர்ந்தவளை பார்த்தவரின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தது.


சற்று நேரம் அமைதியாக அவரை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.


லேசாக தொண்டையை செருமிக் கொண்டு “வாணி! நான் உங்களை வர சொன்னது ஒரு புது கேசுக்கு தான். ஆனா இது ஆபிசியலா பண்ண போறதில்லை.
ஏன்னா எனக்கு வேண்டியவங்க இந்த கேசினால பாதிக்கப்பட்டிருக்காங்க. எந்த விஷயமும் வெளியில் தெரிவதை நான் விரும்பல” என்றார்.

அவர் முகத்தில் தெரிந்த கவலையிலேயே அதன் தீவிரத்தை புரிந்து கொண்டவள் “சார்! நான் வெற்றி கூட இதைப் பற்றி சொல்லல...சொல்ல மாட்டேன். நீங்க தைரியமா என்னை நம்பி சொல்லுங்க” என்றாள்.


“ம்ம்...சொல்றேன் வாணி. இது பொண்ணுங்க விவகாரம். எனக்கு வேண்டிய பெண்ணும் இதுல மாட்டி இருக்கிறா. இதை பண்றது ஒருத்தனா இல்ல ஒரு க்ரூப்பான்னு தெரியல. பெண்களை தங்கள் வலையில் சிக்க வச்சு அவங்களை படமெடுத்து வச்சு மிரட்டி பணம் பறிக்கிறது. அதே சமயம் தன்னை சேர்ந்தவங்களுக்கு அந்த பொண்ணுங்களை ஷேர் பண்றதுன்னு நடக்குது...இதில் நானே நேரடியா இறங்க முடியாது. இதற்கு பின்னாடி அரசியல் பின்புலம் இருக்கா என்ன என்று தெரியல. எனக்கு உங்க ஹெல்ப் வேணும்” என்றார்.


“ஒ..கேஸ் பைல் கொடுங்க சார்...நான் பார்த்துகிறேன்”.


அவளிடம் ஒரு பைலை நீட்டியவர் “வெற்றியும் நீங்களும் சேர்ந்தே இதை கண்டுபிடிங்க. நம்ம ஆபிஸ் ஆட்களை கூட நல்லா தெரிந்தவர்களை தவிர யாரையும் நம்பிடாதீங்க. எங்கே எந்த ஒற்றன் இருப்பான்னு நம்ப முடியாது” என்றார்.


நாற்காலியிலிருந்து எழுந்தவள் “ஓகே சார்! நான் உங்களுக்கு அப்டேட்ஸ் அப்பப்போ கொடுக்கிறேன்” என்று நகர இருந்தவளை “என்னோட பெர்சனல் நம்பர் இதில் இருக்கு வாணி. இதுல கூப்பிட்டு சொல்லுங்க. இந்த கேஸ் முடிகிற வரை நீங்க இங்கே வராதீங்க. இது வெளில கசிஞ்சா அவனுங்க உஷாராகிடுவானுங்க”.


அவரிடம் வாங்கிய பைலுடன் வெளியேறியவள் தனது அலுவலகத்திற்கு வந்தமர்ந்து அவர் கொடுத்திருந்த பைலை படித்து முடித்தாள். அதிலிருந்த விவரங்கள் அவள் மனதை கனமாக்கியது. என்ன மாதிரியான நிலைமை என்று சொல்ல முடியாத உணர்வில் அமர்ந்திருந்தாள். இதை விடக் கூடாது என்றும் தோன்றியது.

தனக்கு இந்த கேசிற்கு யார் யாரெல்லாம் வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு அந்த பைலை பத்திரமாக மேஜை டிராயரில் வைத்து பூட்டி விட்டு மற்ற விவகாரங்களை பார்க்க தொடங்கினாள்.


மாலை நெருங்கும் நேரம் குழந்தையை க்ரேச்சில் போய் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவள் வெற்றிக்கு அழைத்தாள்.


“வெற்றி! உடனே நீ கிளம்பி வீட்டுக்கு வா...கூடவே அந்தப் பையனையும் அழைச்சிட்டு வா” என்றாள்.


காபி டேயில் சென்று சூர்யாவிர்காக காத்துக் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி. இவ என்ன நம்மள கண்காணிக்க நிஜமாவே ஆள் வச்சிருக்காளா என்று யோசித்துக் கொண்டு சூர்யாவிர்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் அவன் வந்துவிட “எங்க வீட்டுக்கு போயிடலாம் சூர்யா. வாணி உன்னை அழைச்சிட்டு வர சொன்னா” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


வீடு சென்று சேர்ந்ததும் அங்கிருந்தவர்களை கண்டு நெற்றியை சுருக்கி யோசனையுடன் உள்ளே நுழைந்தான் வெற்றி.


அவர்களை கண்டதும் வரவேற்கும் விதமாக புன்னகைத்தவள் “உள்ளே வா சூர்யா” என்றாள்.


வெற்றிக்கும், சூர்யாவிற்கும் அதிர்ச்சி.


“உனக்கு சூர்யாவை தெரியுமா?” என்றான் வெற்றி.


“ம்ம்...தெரியும்” என்றவள் வாயிலை நோக்க அங்கே கன்யா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.


அவளை அங்கு கண்டதும் இருவருக்கும் மேலும் அதிர்ச்சி. அவளோ வாணியை பார்த்து சிரிப்புடன் தலையசைத்து விட்டு வெற்றியைப் பார்த்து “ஹாய் மாம்ஸ்!” என்றவள் சூர்யாவின் பக்கம் திரும்பி “ஹாய் டா” என்றாள்.


வாணியின் மீது கடுப்பான வெற்றி “என்ன நடக்குது இங்கே? கன்யாவை உனக்கு எப்படி தெரியும்?” என்றான் எரிச்சலாக.

வெற்றியை முறைத்து “இங்கே அவங்களை தவிர மற்றவங்களும் இருக்காங்க வெற்றி. கொஞ்சம் பாருங்க” என்றாள்.
 

sudharavi

Administrator
Staff member
#96
அப்போது தான் அவர்களின் பக்கம் கவனத்தை திருப்பியவன் தங்கள் துறையை சேர்ந்த ஆறு நண்பர்கள் அங்கிருப்பதை கண்டான்.


“ஹே கைஸ் என்ன இது ப்ளசன்ட் சர்ப்ரைஸ்?”


சூர்யாவையும், கன்யாவையும் அமர சொன்னவள் “ப்ளசன்ட் சர்ப்ரைஸ் இல்ல வெற்றி. இது நம்ம வேலைக்கான மீட்டிங் தான்” என்றாள் அவர்களின் முன்னே அமர்ந்து.


“வாட்! அப்போ எதுக்கு சூர்யாவையும், கன்யாவையும் வர சொன்ன?”


“சொல்றேன்...கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவள் சூர்யாவின் பக்கம் திரும்பி “என்ன சூர்யா இப்போவெல்லாம் உன் கண்ணு எந்த பொண்ணு மேலையும் விழறது இல்லேன்னு கேள்விபட்டேன்” என்றாள் கிண்டலாக.


அவனோ அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்துடன் “மேம்..அது வந்து..” என்றான்.


கன்யாவோ கள்ள சிரிப்புடன் “அக்கா! நான் பண்ணின அலப்பறையில் அவனே பயந்து போயிருக்கான்” என்றாள் சிரிப்புடன்.


அவளிடம் போதும் என்று கை காட்டிய வாணி சிரிப்புடன் “வெற்றி, சூர்யா நல்லா கேட்டுக்கோங்க. ஜீவாவோட ஸ்டேஷனுக்கு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்த பிறகு ஜீவாவுக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகம் வந்தது. அதனால அதை என்கிட்டே சொன்னப்போ என்னன்னு விசாரிக்க ஆரம்பிச்சேன். இந்து மேட்டர் தெரிந்ததும். சூர்யாவை கொஞ்சம் மிரட்டி பார்க்கலாம்னு தோணிச்சு. அதுக்கு தான் கன்யாவை உள்ளே இழுத்து விட்டேன்” என்றாள்.


அவள் சொன்னதில் கோபமடைந்த வெற்றி “நீ என்ன பண்ணி வச்சிருக்க வாணி. அந்த பொண்ணு இவனை டார்ச்சர் பண்ணினதை விடு. அவளோட லைப் பத்தி யோசிக்காம இதென்ன ஒரு வேலை?” என்றான் எரிச்சலாக.


“ஹலோ மாம்ஸ்! ரொம்ப யோசிக்காதீங்க...என்னை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. அதோட நான் வாணி அக்காவோட கண்காணிப்பில் தான் இருந்தேன்” என்றாள்.


அவர்களின் நடுவே புகுந்த வாணி “கொஞ்சம் நிறுத்துங்க வெற்றி...இப்போ நாம கொஞ்சம் சீரியஸா பேச வேண்டி இருக்கு. இவங்களை எல்லாம் உட்கார வச்சிட்டு மற்ற விஷயங்களை பேசாதீங்க” என்றவள் அங்கிருந்தவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.


“இவர் பார்த்திபன் என்னோட பேட்ச்மேட். இவர் இஷான் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் அண்ட் இவர் கார்த்திக் உனக்கு தெரியும். நாம ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். இதுல நமக்கு நம்ம துறை இல்லாம ஹெல்ப் பண்ண போறவங்க சூர்யாவும், கன்யாவும்” என்றாள்.


“நானா மேடம்” என்றான் அதிர்ச்சியாக.


“எஸ் சூர்யா...நீயும், கன்யாவும் தான் தூண்டில் மீன்கள். பயப்படாதீங்க உங்களுக்கு எதுவும் ஆகாம பாதுகாக்க வேண்டியது எங்க கடமை” என்றாள்.


அதுவரை இருந்த இலகு தன்மை மறைய “என்ன விஷயம் வாணி?” என்றான் வெற்றி.


அங்கிருந்த அனைவரிடமும் ஐஜி தன்னிடம் கூறியதை சொல்லி, அதன் பின்னே இருக்கும் தீவிரத்தை உணர்த்தினாள். அவள் சொன்னதை கேட்ட வெற்றிக்கு அத்தனை அதிர்ச்சி. பெண்களை இப்படி கேவலமாக நடத்தும் அவர்களை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்கிற வேகம் எழுந்தது.


அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “நான் இந்த ஆபரேஷனுக்கு நமக்கு நம்பிக்கையானவங்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். நாம இப்போ இறங்க போறது ஆபிசியலா இல்ல. சோ இதில் நிறைய பாதிப்புகள் வரலாம். ஆனா எந்தக் காரணம் கொண்டு விஷயம் வெளில போகக் கூடாது” என்றாள்.


சூர்யாவும், கன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “நாங்க ரெடி. எங்களால இந்த விஷயம் வெளில போகாது” என்றனர்.


வெற்றியும், மற்றவர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஒரு முடிவிற்கு வர, சத்யா அனைவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


வெற்றி அவளைப் பார்த்து “வாணி நீ நாளைக்கே குழந்தையை ஊருக்கு அனுப்பிடு. இது முடியும் வரை அவள் இங்கே இருக்க வேண்டாம். இதுல எந்த பனங்காட்டு நரி இருக்குன்னு தெரியாது. நாம விசாரிக்கிரோம்னு கொஞ்சம் கசிஞ்சாலும் அவனுங்க அவ மேல தான் கண்ணு வைப்பானுங்க” என்றான்.


சற்று நேரம் அனைத்தையும் யோசித்துக் கொண்டவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப சூர்யாவின் பின்னே சென்ற கன்யா “மச்சி! என்னை வீட்டில் டிராப் பண்ணிடு” என்றாள்.


அவனோ கடுப்புடன் “அது தான் உன் ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சில்ல. இன்னும் ஏன் என் உயிரை வாங்குற?” என்றான்.


அவன் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு நெருங்கி நின்று “இனிமே தாண்டா நாம ஒண்ணா டிராவல் பண்ணவே போறோம். சும்மா பயப்படாதே. நான் ஒன்னும் உன்னை கடிச்சு தின்னுடா மாட்டேன்” என்றாள் கிண்டலான சிரிப்புடன்,


அந்நேரம் அங்கே வந்த வாணி “ஹே வாலு! இன்னும் கிளம்பலையா? இன்னும் ஏன் அவனை மிரட்டிட்டு இருக்க?” என்றாள் சிரிப்புடன்.


வெற்றியும் அங்கு வந்துவிட “அக்கா! உங்களுக்கு மாம்ஸ் கிடைச்ச மாதிரி எனக்கொரு அடிமை கிடைச்சிருக்கு அதை விடக் கூடாதில்லையா?” என்றாள்.


வெற்றியோ அவளை முறைத்து “எங்கேருந்து இவளை பிடிச்ச வாணி. இப்படியொரு பீசை பார்த்ததே இல்லை” என்றான்.


வெற்றியைப் பார்த்து சிரித்துவிட்டு “இவங்கப்பாவை எனக்கு தெரியும். ஒரு தடவை அவரோட இவளை பார்த்திருக்கேன். அப்போ இவளைப் பத்தி அவர் நிறைய புலம்பினார். அதனால தான் இவளோட கேரக்டர் எனக்கு தெரிஞ்சுது. ஜீவா சூர்யா மேட்டர் சொன்னதும் நான் இவ கிட்ட பேசி முடிச்சிட்டேன்” என்றாள் சிரிப்புடன்.


சூர்யாவோ “ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் மேம்...இப்படியே கொஞ்ச நாள் போயிருந்தா நான் பைத்தியமாவே ஆகி இருப்பேன்” என்றான்.


அவன் தோளில் தொத்திக் கொண்ட கன்யா “உனக்கு ஆப்ஷனே இல்லடா. எனக்கு உண்மையாவே உன்னை பிடிச்சு போச்சு” என்று விட்டாள்.


அதைக் கேட்டு சூர்யா திருதிருவென்று விழிக்க, வெற்றியும், வாணியும் சிரிப்பை அடக்கியபடி நின்றனர்.
 

bselva

Active member
#98
appa ipo than mam nimathiya iruku.enada inthe ponnu ipidi panrale nu irunthuchu. ipo kumutha happy annachi 😁😁😁

enada sudha mam light a ve story kondu poranga le nu yosanaya irunthuchu intha kondu vanthuteengala original matter a.ilina summa vetriya story la kondu varuveengala enna 👍👍
 

sudharavi

Administrator
Staff member
அத்தியாயம் – 14

அன்று பேசிவிட்டு சென்ற பிறகு அடுத்தடுத்த வேலைகள் ஜரூராக நடந்தது. கனாவின் பெற்றோர்களை பார்த்து அவளை இதில் ஈடுபட வைப்பதற்கு அனுமதி வாங்க சத்யா சென்று பேசினாள். முதலில் கடுமையாக மறுத்த ராகவன், கன்யாவின் பிடிவாதத்தில் வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டார்.
சத்யாவும் அவருக்கும் அவளுடைய பாதுகாப்பிற்கான நம்பிக்கையை அளித்த பிறகே ஒத்துக் கொண்டார்.


சூர்யாவின் வீட்டிலோ சத்யா மூலியமாக இது தெரியும் முன்பு கன்யா பிரச்சனை பூகம்பமாக வெடித்தது.


அடுத்தடுத்த நாட்கள் அவள் அவனுடன் பயணித்ததை ட்ராபிக் போலீஸ் போட்டு கொடுக்க, பொறுமை எல்லாம் பறந்து போக அவன் வீடு வந்ததும் ஆட்டமாக ஆடி தள்ளி விட்டார் சந்துரு.


“உன்னை நம்பி தானே டா தனியா அனுப்பினேன். அது யாருடா பொண்ணு தினமும் உன் பின்னாடி உட்கார்ந்து வரா?”


தந்தையை முறைத்தவன் “நீங்க பண்றது உங்களுக்கு நல்லா இருக்கா? என்னை வேவு பார்க்க எல்லா இடத்திலேயும் ஆள் வச்சிருக்கீங்க. எனக்கு உங்க கிட்ட பிடிக்காததே இது தான்” என்றான் எரிச்சலாக.


அவரோ சிறிதும் கண்டு கொள்ளாமல் “அவ யாரு? துறை லவ் பண்றீங்களோ?” என்றார் மிரட்டலாக.


தன்னை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கும் மனிதர் மேல் அத்தனை கோபம் எழ “ஆமாம் அவ தான் உங்க மருமக. இப்போ என்னன்றீங்க?” என்றான்.மல்லி வாயில் கை வைத்தபடி மகனை பார்க்க, சந்துருவோ அதிர்ந்து போய் அவனை அடிக்க கையை ஓங்கி இருந்தார். அவரது கையைப் பற்றி நிறுத்தியவன் “முதல்ல உங்க பிள்ளை மேல நம்பிக்கை வைங்கப்பா. நீங்க பண்றது எல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல” என்றான் கடுப்பாக.அவரோ அவனது வேதனையை புரிந்து கொள்ளாமல் “ஒரு வாரம் தானே டா உன்னை நம்பி தனியா விட்டேன். அதுக்குள்ள ஒரு பெண்ணை லவ் பண்றேன்னு சொல்ற உன்னை எதுக்கு நம்பனும்?” என்றார்.


“இதுக்கு மேல எதுவும் பேசாதீங்கப்பா. நீங்க எப்போதுமே என்னை புரிஞ்சுக்க போறதில்லை” என்றவன் வேகமாக சென்று கதவடைத்துக் கொண்டான்.

அவனது மரியாதை இல்லாத செயலைக் கண்டு எரிச்சலடைந்தவர் மல்லியிடம் பாய்ந்தார்.

“என்ன பிள்ளைடி வளர்த்து வச்சிருக்க? எப்படி பேசிட்டு போறான் பாரு?”


மகன் சொன்னதிலேயே அதிர்ச்சியில் இருந்தவர் கணவரின் பேச்சு மேலும் கோபத்தை வரவழைக்க “பண்றதை எல்லாம் நீங்க பண்ணிட்டு அவனை பேசாதீங்க. எப்பபோ பாரு அவனை சந்தேகப்படுறது. அவன் இப்படி ஆகுறதுக்கு நீங்க தான் முதல் காரணம்” என்றார் கோபமாக.


சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தூற்றிக் கொண்டிருந்தனர். அறையில் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.

அந்நேரம் வாயில் மணியடிக்க, இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு அமைதியாக, மல்லி சென்று கதவை திறந்தார். அங்கே வெற்றி நின்றிருந்தான்.


“சூர்யா..” என்று இழுக்கவும் மல்லிக்கு அவனைப் பார்த்து உள்ளுக்குள் பயம் வந்து விட்டது. அந்தப் பெண்ணின் அண்ணனாக இருப்பானோ என்று.

சந்துருவிற்கும் வெற்றியை பார்த்ததும் அந்த சந்தேகம் எழுந்தது.


“ஆமாம்...நீங்க?” என்று அவனைப் பார்த்து இழுத்தார்.


வெற்றியோ ‘என்னடா நம்மள பார்த்து இந்த முழி முழிக்குதுங்க பெருசுங்க ரெண்டும்’ என்று எண்ணிக் கொண்டே “உள்ளே வந்து பேசலாமா? சூர்யாவை பற்றி கொஞ்சம் பேசணும்” என்றான்.


மல்லி உறுதியே செய்து கொண்டார் இது நிச்சயம் அந்த பொண்ணு பிரச்சனை தான் என்று. அவசரமாக நகர்ந்து வழி விட்டவர். வாயில் கதவை சாத்திவிட்டு பயத்துடன் உள்ளே சென்று நின்றார். அவர்கள் சொல்லும் முன்பே சோபாவில் சென்றமர்ந்தவன் “உங்க பையனை பத்தி பேசணும் சார். வாங்க உட்காருங்க. நீங்களும் உட்காருங்கம்மா” என்றான்.


உள்ளே இருந்த சூர்யாவோ வெற்றியின் குரலை கேட்டும் வெளியில் வரவில்லை. அவன் பேசி முடித்ததும் வரலாம் என்று அமைதியாக அமர்ந்திருந்தான்.


வெற்றி ஆரம்பிக்கும் முன்பே “எனக்கு உங்க கோபம் புரியுதுப்பா. இந்த காலத்து பசங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. அதுக்குள்ள என்ன அவசரம் என்றே புரியல. காலேஜ் கூட முடிக்கல” என்று பாய்ந்து அவனை சமாதானப்படுத்த முயன்றார் சந்துரு.


தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வெற்றி அவரை பார்த்து விழிக்க, மல்லியும் தன் பங்கிற்கு “நாங்க அவன் கிட்ட சொல்லி வைக்கிறோம் பா...நீங்களும் உங்க பொண்ணையும் மடக்கி போடுங்க” என்றார்.


வெற்றியோ ‘என்னங்கடா நடக்குது இங்கே? நான் பேச வந்தது என்ன? இங்கே நடக்கிறது என்ன?’ என்று புரியாமல் தலை சுத்தி போய் அமர்ந்திருந்தான்.


சந்துரு மீண்டும் வெற்றியிடம் “அவசரப்பட்டு எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுத்திட வேண்டாம் பா...எங்க பையனை நாங்க அடக்கி வச்சிடுறோம்” என்றார்.

மல்லியும் “ஆமாம் பா..அவன் சின்ன பையன். ஏதோ புரியாம செஞ்சிட்டான்” என்றார்.


வெற்றி பொறுக்க முடியாமல் எழுந்து கொண்டு “சூர்யா! கொஞ்சம் வெளியே வரியா?” என்று சத்தமாக கூப்பிட்டான்.


சந்துருவோ அவன் சூர்யாவை அடிக்க கூப்பிடுவதாக எண்ணி பாய்ந்து வெற்றியின் இடையை கட்டிக் கொண்டு “வேண்டாம் பா...நாங்க சொல்லி அவனை மாத்திடுறோம்” என்று இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.


மல்லியோ நடப்பவற்றை பார்த்து பயந்து போய் இரு கைகளையும் கூப்பி கண்ணீருடன் “என் பையனை விட்டுடுப்பா” என்றார்.