வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#61
அத்தியாயம் – 8


ஹோட்டலில் எதிர் எதிரே மூவரும் அமர்ந்திருக்க, இந்து கடுமையாக சூர்யாவை முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அத்தனை கோபம் தெரிந்தது.

வெற்றியோ அவர்களை கண்டு கொள்ளாமல் தன் முன்னே இருந்த சமோசாவை ரசித்து ருசித்து சுவைத்துக் கொண்டிருந்தான்.


“நீ சரியான லூசுன்னு ப்ரூவ் பண்ணி இருக்க சூர்யா” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.


“நான் என்ன தப்பு பண்ணினேன். பிடிச்சிருந்தது அதை உங்க அண்ணன் கிட்ட சொல்லப் போனேன்” என்றான் அலுப்பாக.


“வெற்றி அண்ணா வரலேன்னா நீ இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பே. அறிவுன்றதே துளி கூட இல்லையா? நானும் சின்னப் பையன் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தா கேனத்தனமா வேலை பண்ணி வச்சிருக்க” என்றாள் எரிச்சலுடன்.


சூர்யா எதுவும் பேசாமல் வெற்றியைப் பார்க்க, அவனோ சாஸை தொட்டு வாயில் வைத்துக் கொண்டு “ஆனாலும் இவனுக்கு ரொம்ப தைரியம் இந்து. மொசப் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்னு சொல்வாங்க. இவன் உட்கார்ந்திருக்கிற ஸ்டைலை வச்சே கண்டு பிடிச்சிட்டேன். ஆனா அது நீயா இருக்கும்னு நினைக்கல” என்றான் சிரிப்புடன்.


“படத்தை பார்த்து கெட்டு போறாங்க அண்ணா. இவர் லவ் சொன்னதும் நான் அப்படியே பின்னாடியே போயிடனும்” என்றவள் சற்று முன்னே வந்து “அப்படியே போட்டேன்னா” என்றாள் சூர்யாவை முறைத்துக் கொண்டு.


“இப்போ என்ன உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க அதிர்ஷ்டம் இல்லை அவ்வளோ தானே விடுங்க. அதுக்கு ஏன் ரெண்டு பேருமா ஓவரா பேசுறீங்க?” என்றான் கடுப்பாக.


அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனவர்கள் “அடபாவி!” என்றனர் ஒரே குரலில்.


இந்துவோ “எனக்கு ப்ராமிஸ் பண்ணு சூர்யா. இனிமே என்னை தொந்திரவு பண்ண மாட்டேன்னு” என்றாள்.


அவன் வெற்றியைப் பார்க்க “பண்ணு சூர்யா...நான் சொன்ன மாதிரி உனக்கு இன்னும் டைம் இருக்கு” என்றான்.


சற்று நேரம் அமைதியாக இருந்தவன் “கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொந்திரவு பண்ண மாட்டேன் ஆனா உங்க கல்யாணம் வரைக்கும் சைட் அடிப்பேன்” என்றவனை கொலை வெறியுடன் பார்த்தனர் இருவரும்.


வெற்றியோ “டேய்! என்னடா பேசுற” என்றான் அதிர்ச்சியுடன்.


“அழகா இருக்காங்க! அவங்களை பார்க்காதேன்னு சொல்றது எவ்வளவு பாவம் தெரியுமா” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.


தலையில் அடித்துக் கொண்ட வெற்றி “என்ன பீசுடா நீ! நானே ஒரு மாதிரின்னா எனக்கே டப் பைட் கொடுக்குறியே” என்றான்.


“என்னால எந்த பிரச்னையும் வராது வெற்றி” என்றவனை முறைத்த இந்து “நீ என்னை குறுகுறுன்னு கிளாசில் பார்த்தா நான் உன்னை வெளில அனுப்பிடுவேன். கொஞ்சம் புரிஞ்சுக்கோ சூர்யா. உன்னால என் நிம்மதியே போச்சு. உன் பிரச்னையை நினைச்சே எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது” என்றாள் சோர்வாக.


“அப்போ என்னை தினமும் நினைக்கிறீங்க” என்றான் ஆர்வமுடன்.


அதுவரை பொறுமையாக இருந்த வெற்றி அவன் முதுகில் அடி ஒன்றை போட்டு “டேய்! போதும் அடங்கு! அவ கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு. அதோட உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிரவ அதனால மரியாதை முக்கியம்” என்றான்.


மிகவும் அமைதியாக இருகைகளையும் கட்டிக் கொண்டு வெற்றியைப் பார்த்தவன் “ம்ம்..சரி என்னால எந்த பிரச்னையும் வராது” என்றான்.


வெற்றிக்கும், இந்துவிற்கும் அப்பாடா என்றிருந்தது. இந்துவை பார்த்து “நீ கிளம்பு நான் இவன் கிட்ட கொஞ்சம் பேசிட்டு போறேன்” என்றான் வெற்றி.


அவள் கிளம்பியதும் எதிரே இருந்தவனைப் பார்த்த வெற்றி “இதுவரை சிரிச்சு பேசினதை விடு சூர்யா. இப்போ நாம கொஞ்சம் சீரியஸா பேசுவோம். உன் மனசில ஒன்றை முதலில் ஞாபகம் வச்சுக்கோ. ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம அவங்களை ஒரு விஷயத்தில் கட்டாயப்படுத்துறது ரொம்பவே தப்பு. அதிலும் அவங்க வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவங்களுக்கு உண்டு. எதையும் வற்புறுத்தியோ, வலுகட்டாயமாகவோ அடைவது தவறு சூர்யா. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளனும். ஒரு ஆண் என்பவன் உடல் அளவில் பலமானவனா இருப்பதில் பெருமை இல்லை. அவன் அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரிந்தவனா இருக்கணும். அதே சமயம் தன்னை நம்பி வந்தவளை மரியாதையா நடத்தனும். இதெல்லாம் இருக்கிறவன் தான் உண்மையான ஆண். நம்மை விரும்புபவர்களை கஷ்டப்படுத்துறவன் நிச்சயமா நல்லவனா இருக்க முடியாது” என்றான்.


“வெற்றி! நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது. நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்ல. என்னவோ தெரியல இந்துவை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எங்க வீட்டில் உள்ளவங்க கிட்ட விளையாடுறது போல அவங்க கிட்ட விளையாண்டுட்டேன். அதே சமயம் அவங்க என் வாழ்க்கையில் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு பைத்தியகாரத்தனமா ஜீவா சாரை பார்க்க போயிட்டேன். ஆனா அப்போ புரியாதது அவங்க நான் பண்ணின வேலையால் மனசு கஷ்டப்படிருக்கங்கன்னு சொன்ன பிறகு புரிஞ்சுது” என்றான்.


“அவ்வளோ தான்டா வாழ்க்கை. அவளோட மன கஷ்டத்தை புரிஞ்சுகிட்ட இல்லையா...இனி உன்னால அவளை காயப்படுத்த முடியாது. கல்யாணம் வரைக்கும் அவ சந்தோஷமா இருக்கட்டும் சூர்யா. தேவை இல்லாம அவளை சீன்டாதே” என்றான்.


“இல்ல பண்ண மாட்டேன் ஆனா எனக்கு உங்க உதவி தேவைப்படும்”


“எதுக்குடா?”


“மறுபடியும் காதல் கீதல் வந்தா உங்க கிட்ட தான் வருவேன். நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்து வைத்தவன் “நான் போலீஸ் டா...விட்டா என்னை மாமா வேலை பார்க்க வச்சிடுவ போல” என்றான்.


“என்ன இருந்தாலும் நீங்களும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினவர் இல்லையா அதனால தான் உதவி கேட்கிறேன்”.


நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டவன் “முதல்ல படிச்சு முடி சூர்யா. உன்னோட எதிர்காலத்தை நிர்ணயிச்சுக்கோ. அப்புறம் எல்லாமே உன்னைத் தேடி வரும்” என்றான்.


“இந்து மாதிரி பொண்ணு வருமா?” என்றான் கண்களை சிமிட்டி.


நடந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்று “டேய்! நான் பார்த்தாலும் பார்த்தேன் உன்னை போல ஒருத்தனை பார்க்கல. சரி! சரி! உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு செய்றேன்” என்றான் சிரிப்புடன்.


“அது!” என்று விட்டு தனது பைக்கை நோக்கி நடந்தான்.


அதே நேரம் நகரத்தின் மற்றொரு கோடியில் இருந்த வீட்டில் தனதறையில் ஷார்ட்ஸ் என்று சொல்லப்படுகிற அரை கால் டவுசரும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்து கொண்டு கட்டிலில் குப்புற படுத்துக் கொண்டு எதிரே இருந்த புத்தகத்தில் கண்ணைப் பதிந்திருந்தாள் கன்யா.


அவளது பார்வை தீவிரமாக புத்தகத்தின் மீது படிந்திருந்தது. அவள் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் தவறு. அவள் எதிரே இருந்தது சினிமா செய்திகளை தரும் புத்தகம். அவள் பார்த்துக் கொண்டிருந்தது வளர்ந்து வரும் ஒரு நாயகனின் புகைப்படம்.


பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து புத்தகத்தை மேஜையின் உள்ளே மறைத்து வைத்து விட்டு, ராப் ரவுண்ட் ஸ்கர்ட்டை அரை டவுசர் மேல் சுற்றிக் கொண்டு கதவை திறந்தாள்.


உள்ளே பார்வையை வைத்துக் கொண்டே வந்த அவளின் அன்னை “என்ன செஞ்சிட்டு இருக்க கன்யா?” என்றார் மெல்லிய குரலில்.


“படிச்சிட்டு இருக்கேன் மா...அடுத்த வாரம் பர்ஸ்ட் செம் வருதில்லையா அதனால நிறைய படிக்க வேண்டி இருக்கு” என்றாள்.

அவளது கட்டிலில் அமர்ந்தவர் “நல்ல மார்க் வாங்கணும். சும்மா ஏனோ தானோன்னு படிக்காதே. உங்கப்பா நிறைய பணத்தை கட்டி படிக்க வைக்கிறார் ஞாபகம் வச்சுக்கோ” என்றார்.
 

sudharavi

Administrator
Staff member
#62
மிகவும் பவ்யமாக நின்று கொண்டவள் “நிச்சயமா அம்மா...இந்த முறை பாருங்க எப்படி வாங்குறேன்னு” என்றாள்.


அவரோ ‘ஒவ்வொரு தடவையும் அப்படி தான் சொல்ற. ஆனா வாங்குறதென்னவோ அவர் கிட்ட செருப்படி தான். இந்த மனுஷன் கிட்ட சொன்னாலும் கேட்காம இவ படிக்கிற படிப்புக்கு பணத்தை கொட்டி சேர்த்திருக்கார். என்ன ஆக போகுதோ’ என்று புலம்பிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.


அவர் சென்றதும் அவசரமாக கதவை சாத்திவிட்டு ஸ்கர்ட்டை அவிழ்த்து தூக்கி எறிந்தவள் மீண்டும் அந்த புக்கை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.


“ஹப்பா என்னமா இருக்கான்...ஏன்னா லுக்கு ஏன்னா ஸ்டைலு? ஒருத்தன் கூட இவனை மாதிரி நம்ம கண்ணுல பட மாட்டேன்றானே” என்று புலம்பிக் கொண்டாள்.


அந்த நேரம் அவளது அலைப்பேசியில் செய்தி வந்ததற்கான நோடிபிகேஷன் வர, அவசரமாக எடுத்துப் பார்த்தவள் “இவ வேற! அதை படிச்சிட்டியா இதை படிசிட்டியான்னு படுத்துறா” என்று புலம்பிக் கொண்டு தோழிக்கு அழைத்தாள்.


“நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லடி! அதுக்கு முன்னாடி செம பிகரை சைட் அடிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.


அந்தப் பக்கம் இருந்தவள் என்ன கூறினாளோ “சரி! சரி! படிக்கிறேன்’ என்று கூறிவிட்டு போனை அணைத்தாள்.


அடுத்த நிமிடம் அந்த புகைப்படத்தில் இருந்தவனிடம் ‘உன்னை பார்க்க கூட விட மாட்டேன்றாங்கடா...யாராவது கரடி வேலை பார்த்துட்டே இருக்காங்க’ என்று புலம்பிக் கொண்டாள்.


கஷ்டப்பட்டு புத்தகத்தை திறந்து வைத்தவளுக்கு கொட்டாவி வந்தது. அதுவரை அந்த தூக்கம் எங்கிருந்தது என்று தெரியவில்லை. பாட புத்தகத்தை எடுத்து விட்டால் அப்படி ஒரு தூக்கம் வருகிறது. கண்ணை கசக்கி விட்டு கொண்டு ‘இதெல்லாம் படிச்சு எப்போ பாஸ் பண்ணி முடிக்கிறது?’ என்று புலம்பினாள்.


அந்நேரம் அவளது அறைக் கதவு மீண்டும் வேகமாக தட்டப்பட, ஸ்கர்ட்டை சுற்றிக் கொண்டு கதவை திறந்தவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவளது தங்கை நேத்ரா.


“டி குரங்கே! படிச்சிட்டு இருக்கிற என்னை எதுக்கு தொந்திரவு பண்ற?” என்று எரிந்து விழுந்தாள் கன்யா.


அவளோ கிண்டலாக அவளைப் பார்த்து “யாரு நீ படிக்கிற? அதை நான் நம்பனும்? அம்மா வேணா நம்பலாம். உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” என்றவள் அந்த மகசினை எடுக்கப் பாய, இவள் அவள் மீது பாய இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.


கன்யா அந்த புத்தகத்தை எப்படியோ அவளிடம் போராடி எடுத்து விட்டாள். கோபமாக தங்கையை முறைத்தவள் “நீ என் பாட புத்தகத்தை வேணும்னாலும் எடுத்துக்கோ. இதில் கையை வச்ச மவளே பிச்சிடுவேன்” என்று கூறி விட்டு தன் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.


அக்காவை முறைத்த நேத்ரா தன் படுக்கையில் படுத்துக் கொண்டு “அக்கா! எக்ஸாம் வர போகுது. கொஞ்சமாவது படிச்சு மார்க் வாங்கி அப்பா கிட்ட வாங்குற சப்பல் ஷாட்டிலிருந்து தப்பிக்கலாம் இல்ல” என்றாள்.


கையிலிருந்த புத்தகத்தை முகத்தில் போட்டுக் கொண்டு “நானும் முயற்சி பண்றேன் நேத்ஸ்..படிக்க தான் முடியல” என்றாள்.


“அப்பா பாவம் அக்கா...உன்னை எப்படியாவது படிக்க வைக்கனும்னு நிறைய செலவு பண்றார்”.


முகத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துவிட்டு “பாத்திரம் அறிந்து பிச்சையிடுனு ஒரு பழமொழியே இருக்கு நேத்ஸ். அது தெரியாம அப்பா தேவை இல்லாம செலவு பண்ணிட்டிருக்கார்” என்பவளை முறைத்தாள் நேத்ரா.


“உன்னை எல்லாம் நூறு விவேக் வந்தா கூட திருத்த முடியாதுடி” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.


கன்யாவோ “விவேக் வயசானவர் டி...விஜய் தேவரகொண்டா வந்தா நானெல்லாம் திருந்திடுவேண்டி” என்றவளைப் பார்த்து தலையணை பறந்தது.

மறுநாள் காலை மெதுவாக எழுந்து அவசரம் அவசரமாக கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்தவளை அவளது படை வரவேற்றது.


கன்யாவின் நெருங்கிய தோழி தீக்ஷா “நேத்து அனுப்பின போர்ஷன் படிச்சு முடிச்சியா?” என்று கேட்டு டென்ஷன் ஏத்தினாள்.


அவளை பார்த்து கண் சிமிட்டிய கன்யா “தீக்ஷு இது நம்ம சைட் டைம். இந்த நேரத்தில் படிப்பை பற்றி பேசக் கூடாது” என்றவள் பஸ்ஸில் போறவர்கள், பைக்கில் போகிறவர்கள் என்று பார்வையிட ஆரம்பித்தாள்.


அந்நேரம் நமது நாயகன் சூர்யா பஸ் ஸ்டாப்பில் நின்றவர்களை பார்வையிட்டுக் கொண்டே கடந்து சென்றான். கன்யாவும் அவனை பார்த்து விட்டிருந்தாள். தன் தோழிகளின் பக்கம் திரும்பியவள் “எனக்கு ஒரு பட்சி செட்டாகும்னு தோணுது”என்றவளை கொலைவெறியுடன் பார்த்து வைத்தார்கள் அவளது தோழிகள்.


தீக்ஷா அவளை முறைத்து “நீ முதல் வருஷம் தான் காலேஜில் படிகிறேன்னு நினைவிருக்கா கன்யா. நீ பண்ற அலம்பலில் நம்ம காலேஜே ஆட்டம் காணுது” என்றாள்.


தனது சட்டையின் கையை இழுத்து விட்டுக் கொண்டவள் “அழகை ரசிக்கணும் யா...நாலு வருஷம் புத்தகத்தை தூக்கிட்டே நேர் கொண்ட பார்வையோட போனா வாழ்க்கை ரசிக்காது. இதெல்லாம் வேணும்” என்று அசால்ட்டாக பேசிவிட்டு பஸ் வரவும் தோழிகளை இழுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாள்.
 
#64
மிகவும் பவ்யமாக நின்று கொண்டவள் “நிச்சயமா அம்மா...இந்த முறை பாருங்க எப்படி வாங்குறேன்னு” என்றாள்.


அவரோ ‘ஒவ்வொரு தடவையும் அப்படி தான் சொல்ற. ஆனா வாங்குறதென்னவோ அவர் கிட்ட செருப்படி தான். இந்த மனுஷன் கிட்ட சொன்னாலும் கேட்காம இவ படிக்கிற படிப்புக்கு பணத்தை கொட்டி சேர்த்திருக்கார். என்ன ஆக போகுதோ’ என்று புலம்பிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.


அவர் சென்றதும் அவசரமாக கதவை சாத்திவிட்டு ஸ்கர்ட்டை அவிழ்த்து தூக்கி எறிந்தவள் மீண்டும் அந்த புக்கை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.


“ஹப்பா என்னமா இருக்கான்...ஏன்னா லுக்கு ஏன்னா ஸ்டைலு? ஒருத்தன் கூட இவனை மாதிரி நம்ம கண்ணுல பட மாட்டேன்றானே” என்று புலம்பிக் கொண்டாள்.


அந்த நேரம் அவளது அலைப்பேசியில் செய்தி வந்ததற்கான நோடிபிகேஷன் வர, அவசரமாக எடுத்துப் பார்த்தவள் “இவ வேற! அதை படிச்சிட்டியா இதை படிசிட்டியான்னு படுத்துறா” என்று புலம்பிக் கொண்டு தோழிக்கு அழைத்தாள்.


“நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லடி! அதுக்கு முன்னாடி செம பிகரை சைட் அடிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.


அந்தப் பக்கம் இருந்தவள் என்ன கூறினாளோ “சரி! சரி! படிக்கிறேன்’ என்று கூறிவிட்டு போனை அணைத்தாள்.


அடுத்த நிமிடம் அந்த புகைப்படத்தில் இருந்தவனிடம் ‘உன்னை பார்க்க கூட விட மாட்டேன்றாங்கடா...யாராவது கரடி வேலை பார்த்துட்டே இருக்காங்க’ என்று புலம்பிக் கொண்டாள்.


கஷ்டப்பட்டு புத்தகத்தை திறந்து வைத்தவளுக்கு கொட்டாவி வந்தது. அதுவரை அந்த தூக்கம் எங்கிருந்தது என்று தெரியவில்லை. பாட புத்தகத்தை எடுத்து விட்டால் அப்படி ஒரு தூக்கம் வருகிறது. கண்ணை கசக்கி விட்டு கொண்டு ‘இதெல்லாம் படிச்சு எப்போ பாஸ் பண்ணி முடிக்கிறது?’ என்று புலம்பினாள்.


அந்நேரம் அவளது அறைக் கதவு மீண்டும் வேகமாக தட்டப்பட, ஸ்கர்ட்டை சுற்றிக் கொண்டு கதவை திறந்தவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவளது தங்கை நேத்ரா.


“டி குரங்கே! படிச்சிட்டு இருக்கிற என்னை எதுக்கு தொந்திரவு பண்ற?” என்று எரிந்து விழுந்தாள் கன்யா.


அவளோ கிண்டலாக அவளைப் பார்த்து “யாரு நீ படிக்கிற? அதை நான் நம்பனும்? அம்மா வேணா நம்பலாம். உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” என்றவள் அந்த மகசினை எடுக்கப் பாய, இவள் அவள் மீது பாய இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.


கன்யா அந்த புத்தகத்தை எப்படியோ அவளிடம் போராடி எடுத்து விட்டாள். கோபமாக தங்கையை முறைத்தவள் “நீ என் பாட புத்தகத்தை வேணும்னாலும் எடுத்துக்கோ. இதில் கையை வச்ச மவளே பிச்சிடுவேன்” என்று கூறி விட்டு தன் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.


அக்காவை முறைத்த நேத்ரா தன் படுக்கையில் படுத்துக் கொண்டு “அக்கா! எக்ஸாம் வர போகுது. கொஞ்சமாவது படிச்சு மார்க் வாங்கி அப்பா கிட்ட வாங்குற சப்பல் ஷாட்டிலிருந்து தப்பிக்கலாம் இல்ல” என்றாள்.


கையிலிருந்த புத்தகத்தை முகத்தில் போட்டுக் கொண்டு “நானும் முயற்சி பண்றேன் நேத்ஸ்..படிக்க தான் முடியல” என்றாள்.


“அப்பா பாவம் அக்கா...உன்னை எப்படியாவது படிக்க வைக்கனும்னு நிறைய செலவு பண்றார்”.


முகத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துவிட்டு “பாத்திரம் அறிந்து பிச்சையிடுனு ஒரு பழமொழியே இருக்கு நேத்ஸ். அது தெரியாம அப்பா தேவை இல்லாம செலவு பண்ணிட்டிருக்கார்” என்பவளை முறைத்தாள் நேத்ரா.


“உன்னை எல்லாம் நூறு விவேக் வந்தா கூட திருத்த முடியாதுடி” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.


கன்யாவோ “விவேக் வயசானவர் டி...விஜய் தேவரகொண்டா வந்தா நானெல்லாம் திருந்திடுவேண்டி” என்றவளைப் பார்த்து தலையணை பறந்தது.

மறுநாள் காலை மெதுவாக எழுந்து அவசரம் அவசரமாக கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்தவளை அவளது படை வரவேற்றது.


கன்யாவின் நெருங்கிய தோழி தீக்ஷா “நேத்து அனுப்பின போர்ஷன் படிச்சு முடிச்சியா?” என்று கேட்டு டென்ஷன் ஏத்தினாள்.


அவளை பார்த்து கண் சிமிட்டிய கன்யா “தீக்ஷு இது நம்ம சைட் டைம். இந்த நேரத்தில் படிப்பை பற்றி பேசக் கூடாது” என்றவள் பஸ்ஸில் போறவர்கள், பைக்கில் போகிறவர்கள் என்று பார்வையிட ஆரம்பித்தாள்.


அந்நேரம் நமது நாயகன் சூர்யா பஸ் ஸ்டாப்பில் நின்றவர்களை பார்வையிட்டுக் கொண்டே கடந்து சென்றான். கன்யாவும் அவனை பார்த்து விட்டிருந்தாள். தன் தோழிகளின் பக்கம் திரும்பியவள் “எனக்கு ஒரு பட்சி செட்டாகும்னு தோணுது”என்றவளை கொலைவெறியுடன் பார்த்து வைத்தார்கள் அவளது தோழிகள்.


தீக்ஷா அவளை முறைத்து “நீ முதல் வருஷம் தான் காலேஜில் படிகிறேன்னு நினைவிருக்கா கன்யா. நீ பண்ற அலம்பலில் நம்ம காலேஜே ஆட்டம் காணுது” என்றாள்.


தனது சட்டையின் கையை இழுத்து விட்டுக் கொண்டவள் “அழகை ரசிக்கணும் யா...நாலு வருஷம் புத்தகத்தை தூக்கிட்டே நேர் கொண்ட பார்வையோட போனா வாழ்க்கை ரசிக்காது. இதெல்லாம் வேணும்” என்று அசால்ட்டாக பேசிவிட்டு பஸ் வரவும் தோழிகளை இழுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாள்.
செம 😂😂😂
இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே ஹ ஹா
 

Anuya

Well-known member
#65
Woww... Sema epi sudha maa😍😍 vetri vera level.... Pesiye surya va maathitinga .... Haha.... Kanya ultimate uh.... Surya ku yetha pair thaan😂😂 made for each other pair sudha maa..... Appo indhu heroni illaya parvala .... Ivala log pannikata sudha maa heroni ah🏃🏃😍😍❤️❤️ nice epi❤️
 

bselva

Active member
#66
appa inthe soori payan oru vazhiya Indu ku mattum ila namma vayathilum pala varthan.

Haha Ivana mathiriye avanuku jodi set aguthu pola superu. but namma payapulla padipula pulli la iva enna pannuva
 
#67
சூரியா டார்லிங் நமக்கேத்த பீஸூ இவ தான் டா... இவள கரெக்ட் பண்ணிக்கோ.. வாழ்ககை ஒளி மயமா இருக்கும்... 😂😂😂
 

sridevi

Well-known member
#68
இந்துவை கலங்க டிச்ச சூர்யா ..தொந்தரவு தரலைன்னு சொல்லிட்டான் nice sis. வெற்றி போலீஸ்கார் சூர்யாவுக்கு ஹெல்ப் பண்ண போறாரா for his future love. Kanya suryaku mela irukale nice intro . Superb epi sis
 

sudharavi

Administrator
Staff member
#69
அத்தியாயம் – 9


ஜீப்பிலிருந்து இறங்கியவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது பேபியை அழைத்து வர சொன்னது. மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் ‘போச்சு சும்மாவே ஆடுவா...சலங்கையை வேற கட்டி விட்டுடோம். பிரிச்சு மேஞ்சிடுவா’ என்றெண்ணிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி உள்ளே நுழைந்தான் வெற்றி.


அவனது மகள் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும் “அப்பா” என்றழைத்துக் கொண்டு தாவி ஓடி வர, உள்ளிருந்து வெளியே வந்த வாணியோ “பேபி! அங்கேயே உட்கார்” என்று அதட்டினாள்.


பிள்ளையை தூக்க ஆர்வமாக நகர்ந்தவன் அவளின் மிரட்டலில் ‘ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா...இனி வேப்பிலையை எடுத்தா தான் அடங்குவா’ என்றெண்ணிக் கொண்டு மகளின் அருகே சென்றமர்ந்தான்.


“ஏன் இவ்வளவு லேட்? பேபியை கூட்டிட்டு வர சொன்னதை கூட மறந்து அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என்றாள் நக்கலாக.

மகளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு”செம வேலை வாணி...தலைவலி வேற. ஒரு காப்பி போட்டு கொடேன்” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.


இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் “கொஞ்ச நேரம் முன்னாடி சாப்பிட்ட சமோசா, காப்பி எல்லாம் ஜீரணம் ஆகிடுச்சா” என்றாள் நக்கலாக.


‘ஆஹா! எவனோ நாரதர் வேலை பார்த்திருக்கான் போலேயே...ஏண்டா பார்த்தது தான் பார்த்தீங்க சமோசாவை கூட விட்டு வைக்கலயா?’ என்று கழுவி ஊத்திக் கொண்டு “சோ என்னை வேவு பார்க்கிற?” என்றான் புருவத்தை உயர்த்தி.


“அவ்வளவு எல்லாம் நீ வொர்த் இல்ல”


“ஏய்! என்னடி கையில ஆதாரத்தோட இருக்கேன் பட்டுன்னு வொர்த் இல்லேன்னு சொல்லிட்ட” என்று மகளை காட்டினான் சிரிப்புடன்.


அவனது பேச்சில் கடுப்பானவள் சைகையில் மூடிட்டு இரு என்று காண்பித்து “ஜீவா சிஸ்டருக்கு என்ன பிரச்சனை?” என்றாள்.


அவளை குறுகுறுவென்று பார்த்து “அதை அங்கே நின்னு கிட்டே கேட்டா சொல்ல மாட்டேன். இப்படி வந்து பக்கத்தில் உட்காரு” என்றான் விஷம சிரிப்புடன்.

“எல்லா ஆணியும் இங்கிருந்தே புடுங்கிகிறேன். நீ சொல்லு” என்றாள் கடுப்புடன்.


அவனோ மகளைத் தூக்கிக் கொண்டு எழுந்தவன் “இவ பொறந்த பிறகு நீ என்னை கண்டுகிறதே இல்ல வாணி. இவளுக்கே மூணு வயசாச்சு. இப்படியே போனா இவ லிமிடெட் எடிஷன் ஆகிடுவா” என்றான்.


தனது தலையில் அடித்துக் கொண்டவள் “பிள்ளையை வச்சிட்டு பேசுற பேச்சை பாரு. வெற்றி இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?”


“அது ஒண்ணுமில்ல வாணி. அந்த பொண்ணு கிட்ட படிக்கிற பையன் அவளை லவ் பண்றேன்னு சொல்லி ஜீவா கிட்ட பொண்ணு கேட்க வந்து உட்கார்ந்திருக்கான். எதேச்சையா நான் அங்க போக நானே என்னன்னு விசாரிகிறேன்ன்னு சொல்லி கேட்டா இந்த கதை” என்றான்.


“வாட்? அவ கிட்ட படிக்கிறவன்...இதென்ன இடியாடிக்கா இருக்கு”.


அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு “இதிலென்ன இடியாட்டிக் இருக்கு? இந்துவும் அவனை விரும்பி இருந்தா அவங்களை நானே சேர்த்து வச்சிருப்பேன்” என்றவனை முறைத்தவள் “நீ இதை தான் பண்ணுவேன்னு தெரியும். அது சரி ஜீவா கிட்ட சொன்னியா இல்லையா?”


“அது எதுக்கு? அந்த பையன் கிட்ட அட்வைஸ் பண்ணி இனி இந்துவை தொந்திரவு பண்ண கூடாதுன்னு சொல்லிட்டேன்”.


“யாரு நீ அட்வைஸ் பண்ணின? நீயே சரியான ...” என்றவளை இழுத்து இதழோடு இதழ் சேர்க்க நடுவில் இருந்த குழந்தையோ பட்டென்று அவன் முகத்தில் வைத்து “அப்பா நோ! கடிக்காதே” என்றது.


அவனைப் பிடித்து தள்ளி விட்டு “வெற்றி! நீ ரொம்ப ஓவரா போற...போய் டிரஸ் சேஞ் பண்ணு...எதுக்கும் அந்த பையன் மேல ஒரு கண்ணை வை. ஜீவாவுக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆகிடுவான்”.


“நான் அவனை கண்காணிக்கிறதா? நீ வேறடி அவன் என்னை படுத்தாம விட மாட்டான்” என்று அலுத்துக் கொண்டு சற்றே நகர்ந்தவன் “உங்கம்மாவை மீன் குழம்பு வைக்க சொல்லேன் வாணி...என்ன இருந்தாலும் அந்த முத்தத்திற்கு டேஸ்ட் அதிகம்” என்றுவிட்டு நகர்ந்தான்.


பிள்ளையை தூக்கிக் கொண்டு நகர்ந்தவள் “நீ இன்னைக்கு இவளுக்கு முன்னாடி பண்ணி வச்ச வேலைக்கு ஒரு மாசத்துக்கு ரூமுக்கு வெளில தான் படுக்கணும்” என்று கூறி கதவை அறைந்து சாத்திக் கொண்டாள்.


இதை எதிர்பார்க்காதவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்.


கன்யா அடுத்த ஒரு வாரம் பஸ் ஸ்டாண்டில் அவ சூர்யாவை காண்காணிக்க தொடங்கி இருந்தாள். அவனோ அவளை குறிப்பிட்டு பார்க்காமல் கண்ணுக்கு தெரிந்த பெண்களை எல்லாம் வஞ்சனை இல்லாமல் பார்த்துக் கொண்டு சென்றான். அனைத்தையும் குறித்து கொண்டாள் கன்யா.


மறுவாரம் கல்லூரி காண்ட்டீனில அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பையன்களிடம் சென்றவள் நாற்காலியை திருப்பி போட்டு அமர்ந்து “ஹாய் கைஸ் எனக்கொரு ஹெல்ப் வேணும்?” என்றாள்.


அவளை கிண்டலாக பார்த்தவர்கள் “என்ன ரவுடி? திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்க? உங்க கேங் சினிமாவுக்கு போகனுமா?”


கையை வீசி “அதெல்லாம் சப்பை மேட்டர் டா” என்றவளை முறைத்தவர்கள் ‘நாங்க உன் சீனியர்ஸ் ஞாபகம் இருக்கா” என்றனர்.


“என்னை விட ரெண்டு வயசு பெரியவன் எல்லாம் ஓவர் சீனை போடாதீங்கடா..முதல்ல நான் சொல்றதை கேளுங்க?”


“சரி சொல்லு”


“எனக்கு ஒருத்தனை பத்தி விவரம் வேணும். அதை நீங்க தான் செய்யப் போறீங்க” என்றாள்.


“உன் கிட்ட வம்பு பண்றானா எவனும்? என்றான் சீனியர் கிஷோர்.


சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டவள் “அப்படி எல்லாம் என்னிடம் வாலாட்ட முடியுமா? இது வேற கிஷோர்”.


“வேற என்ன?” என்றான் நெற்றியை சுருக்கி.


“எனக்கு அவனை பிடிச்சிருக்குடா. அது தான் பட்சி எப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு பார்க்கிறேன்” என்றவளை வாயைத் திறந்து கொண்டு பார்த்தனர்.


அவளை அதிசய பிறவி போல ஒரு லுக் விட்டு “நீ எப்பவுமே இப்படித்தானா? எனக்கு தெரிஞ்சு உன்னைப் போல ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை” என்றான் கிஷோர்.


“ஏண்டா! உங்களுக்கு ஒரு பொண்ணை பிடிச்சா வீடு வரை தேடி போறீங்கல்ல. அப்போ எங்களுக்கு பிடிச்சா நாங்க பின்னாடி போனா ஏண்டா இப்படி பாக்குறீங்க? இந்த உலகம் நிறைய மாறனும்”.


இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டவன் “அம்மா தாயே! ஆளை விடு! இப்போ நாங்க என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு” என்றான்.


“இந்த ஆபரேஷனுக்கு நான் வச்சிருக்கிற பெயர் ஆபரேஷன் பட்சி. இப்போ நான் சொல்ற மாதிரி நாளைக்கு காலையில ஒவ்வொருத்தரும் நான் சொல்ற பஸ் ஸ்டாண்டிலிருந்து அவனை பாலோ பண்ணி எந்த காலேஜுன்னு கண்டு பிடிச்சு மொத்த டீடைலும் எனக்கு கொடுக்கணும்” என்றாள்.


கிஷோருடன் அமர்ந்திருந்தவர்கள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவனோ “ஆமாம் நீ காக்க காக்க சூர்யான்னு நினைப்பா? பெரிய பேர் வேற. செய்றது மொள்ளமாரி தனம். இதுக்கு என்னவோ தீவிரவாதியை பிடிக்கிற பில்ட் அப்பு” என்றான் கிண்டலாக.


“என்ன கிஷோர் இப்படி சொல்லிட்ட? என் வாழ்க்கையின் முக்கிய முடிவையே உன் கையில் கொடுத்திருக்கேன்” என்றவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.


அதன் பின் அவர்களுக்கு மறுநாள் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு தனது பட்டாளத்துடன் சேர்ந்து கொண்டாள். தீக்ஷா அவள் பேசியவற்றை கேட்டு டென்ஷனாகி அவளை திட்டிவிட்டு கிளாசுக்கு சென்று விட்டாள். மற்றவர்களுக்கோ அவளைப் பார்த்து மலைப்பாக இருந்தது.


தனக்கு பின்னே பின்னப்படும் வலையை பற்றி தெரியாது சூர்யா உற்சாகமாக வகுப்பறையில் அமர்ந்திருந்தான். இந்துவின் வகுப்பு நடந்து கொண்டிருக்க, அவளின் பின்னே சென்ற மனதை வலுக்கட்டாயமாக திசை திருப்பி அவள் நடத்துவதில் கவனத்தை வைத்தான். இந்துவும் அவனறியாமல் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். மனதுக்குள் பெருத்த நிம்மதி எழுந்தது.


வெற்றிக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.

மாலை வீட்டிற்கு கிளம்பியவன் வழக்கம் போல தனது பார்வையெனும் வலையை வீசியபடி கண்ணில் படும் பசுமைகளை எல்லாம் ரசித்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தான். அவனுக்காக காத்துக் கொண்டிருந்த அன்னையிடம் பேசிவிட்டு உள்ளே சென்றவன் உடை மாற்றிக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தான்.
 

sudharavi

Administrator
Staff member
#70
மல்லியோ மகன் இப்போதெல்லாம் மிக அமைதியாகவும், குறும்பை விட்டுவிட்டதை போல இருப்பதாகவும் எண்ணினார். அதன்பின்னே எதுவும் காரணம் இருக்குமோ என்று அறிந்து கொள்ள முடிவு பண்ணினார்.


“என்னடா! படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்றார்.


“அது பாட்டுக்கு போகுது. நானும் அது கிட்ட போறதில்லை அதுவும் என் கிட்ட வரதில்லை” என்றான் அன்னையை சீண்டும் விதத்தில்.


அவன் சொன்னதை கேட்டதும் பதறி போனவர் “ஏண்டா படிப்பில் மட்டும் தான் ஒழுங்கா இருந்த இப்போ அதையும் விட்டுட்டியா?” என்றார் பீதியுடன்.


சிரிப்புடன் திரும்பியவன் “பின்னே என்னம்மா நான் எப்போ கல்யாணம் பண்ணி வைப்பேன்னு கேட்டா நீங்க பதிலே சொல்லல. அப்புறம் எப்படி எனக்கு வாழ்க்கையில் இண்டரெஸ்ட் வரும்” என்றான்.


“டேய்! நீ நல்லா படிச்சு வேலைக்கு போயிட்டா நானே நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைக்கிறேண்டா” என்றார்.


“அது தான் எப்போ...எனக்கு இப்போவே உங்க மருமகளை பார்க்கனும்னு ஆசையா இருக்கே” என்றான் உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை மறைத்தபடி.


மகன் பேச்சில் இதயம் லேசாக வலியெடுக்க “வேணாம்டா அம்மா இதுக்கு மேல தாங்க மாட்டேன் விட்டுடு” என்றார்.


“அப்போ நீங்க காண்பிக்க மாட்டீங்க. நீங்களே பாருங்க உங்க மருமகளை நானே உங்க முன்னாடி நிறுத்துறேன்” என்றவனை முறைத்தவர் “எடு அந்த செருப்பை. அப்படி எவளாவது வந்தா அவளை ஒன்னும் செய்ய மாட்டேன். உன் மண்டையை தான் உடைப்பேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.


அன்னையின் முகத்தில் தெரிந்த கோபத்தையும், பயத்தையும் கண்டு சிரித்துக் கொண்டவனுக்கு தெரியவில்லை. ஒருநாள் அவன் அம்மா சொன்னது போல் மண்டை உடைய போகிறதென்று.


மறுநாள் காலை அவன் காலேஜுக்கு செல்ல கன்யா நின்றிருந்த பேருந்து நிலையத்தின் வழியே சென்றான். அவள் பார்வை முழுவதும் அவன் தான் நிறைந்திருந்தான். பையன் நல்லா தான் இருக்கான். பின்னணியும் சரியா இருந்தா ஓகே தான் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.


அவளின் ஏற்பாட்டின் படி கிஷோரும், அவனது நண்பர்களும் அவனைத் தொடர்ந்து சென்று ஆபரேஷன் பட்சியை பக்காவாக முடித்தார்கள். அவளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு வந்து அவளை சந்தித்தார்கள்.


காண்டினில் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவளின் முன்னே அமர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையானதை போய் வாங்கி வரும்படி கூறினார்கள். தனக்கு வேண்டிய விபரங்கள் அவர்களிடம் இருப்பதால் எதுவும் பேசாமல் அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தாள்.


“ஆபரேஷன் பட்சி பக்காவா முடிச்சாச்சு. உன் ஆளு பேர் சூர்யா. அவனது கல்லூரியின் பெயரைக் கூறி அவன் படிப்பையும் கூறினான். அவன் படிப்பில் சூரப்புலி. ஆனா சரியான ஜொள்ளு பார்டி” என்று சிரித்தான்.


தாவங்கட்டையை தடவியவள் “எல்லாம் சரி ஆனா இந்த படிப்பு தான் இடிக்குது. சரி அட்லீஸ்ட் அவனாவது படிச்சு குடும்பத்தை காப்பாத்தட்டும்” என்று கூறிக் கொண்டாள்.


அவளது பேச்சைக் கேட்டவர்கள் “ஷப்பா! நல்லவேளை இவ கிட்ட நாம யாரும் மாட்டல” என்று யோசித்துக் கொண்டனர்.


“கிஷோர்! எனக்கு மதியத்துக்கு மேல உன் பைக் வேணும். நீ இன்னைக்கு பஸ்ல போயிடு” என்றாள்.


அவன் புரியாத பார்வையை பார்த்து வைக்க, “எதையுமே லேட் பண்ண கூடாது கிஷோர். இன்னைக்கே அவனை பார்க்க போறேன்” என்றவளைப் பார்த்து மிரண்டு விட்டனர்.


அவனோ பயத்துடன் “என்ன பண்ண போறே?”


“அதெல்லாம் பர்சனல். சோ உன் பைக் சாவியை கொடு” என்று கை நீட்டினாள்.


அவள் விட மாட்டாள் என்று புரியவே தன் பைக் சாவியை கொடுத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றார்கள்.


மதியம் வரை வகுப்புகளை பொறுத்துக் கொண்டவள், அவன் கல்லூரி முடியும் நேரம் சரியாக பைக்கில் சென்று வாசலில் நின்றாள். அழுக்கேறிய ஜீன்சும், பெரிய கட்டங்கள் போட்ட பெரிய சட்டையும், கைகளை முட்டி வரை மடித்துவிட்டு பைக்கின் மீது சாய்ந்து கொண்டு வெளியில் வருபவர்க்களுக்காக காத்திருந்தாள்.


வாய் ஒரு பக்கம் பப்பில் கம்மை அரைத்துக் கொண்டே இருந்தது. கல்லூரி முடிந்து மெல்ல வெளியே வர ஆரம்பித்த மாணவர்கள் அவள் நிற்பதை பார்த்து தங்களுக்கு கிசுகிசுத்துக் கொண்டு சற்று தள்ளி நின்று அவளை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் கலிகாலம் டா என்று வயதானவர்கள் போல பேசிக் கொண்டு நகர்ந்தனர். ஒரு கூட்டம் மட்டும் அவளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓரமாக நின்றது.


சூர்யாவை காணாமல் பொறுமை இழந்து கால் மாற்றி நின்றவளுக்கு அந்த மாணவர்கள் தன்னை பார்ப்பதை கண்டு சற்றே எரிச்சல் எழ, மெல்ல அவர்களின் அருகில் சென்றாள்.


அவள் தங்கள் அருகில் வருவதை பார்த்ததும் உஷாரானவர்கள் அட்டென்ஷனில் நின்றனர்.


சற்று தோளை குலுக்கிக் கொண்டு காலரை இழுத்து விட்டவள் “என்ன! சைட்டா? என்றாள்.


அவள் அப்படி கேட்டதும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


முன்னே பின்னே திரும்பி அவர்கள் முன்னே நடந்தவள் “நல்லா இருக்கேன்னா? பார்த்து முடிச்சிட்டீங்களா? அப்போ கிளம்புங்க” என்றாள்.


அவளின் தடாலடி பேச்சை கண்டு பயந்து போய் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர். அந்நேரம் சூர்யா பைக்கில் வெளியே வந்து கொண்டிருந்தான்.


வேக நடையுடன் சென்று அவன் பைக்கை மறைத்தபடி நின்றாள். அவன் பின்னேயே பைக்கில் வந்து கொண்டிருந்த ரிஷியும், மற்றவர்களும் அங்கு என்ன நடக்குது என்று புரியாமல் பார்த்தனர்.


அவன் பைக்கில் முன்னே சாய்ந்து நின்றவள் அவனை நேருக்கு நேர் பார்த்து “நான் நினைச்சதை விட நெருக்கமா பார்க்க நல்லாவே இருக்க சூர்யா” என்றாள்.


சூர்யாவிற்கு எதுவும் புரியவில்லை. யார் இவள் திடீரென்று வண்டியை மறைத்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாளே என்று.


அவளோ எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் அவன் முன்னே கையை நீட்டி “ஹாய் நான் கன்யா” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் தான் படிக்கும் கல்லூரி என்று அனைத்தையும் கூறினாள்.


“இதெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றீங்க?” என்றான் குழப்பமாக.


பப்பில்கம்மில் முட்டை விட்டவள் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சூர்யா. லவ்வரை பத்தி எதுவும் தெரியாம இருக்க கூடாதில்லை அதுக்கு தான்” என்று கூறியவள் “இன்னைக்கு இது போதும் நேரமாச்சு. நாளைக்கு நாம சந்திக்கலாம்” என்று கூறி பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள்.


சூர்யாவின் நண்பர்களுக்கும் அவளது செயலைக் கண்டு தலையை பியித்து கொள்ளலாம் போல இருந்தது. சூர்யாவுக்கோ ‘யாரடா இவ? வந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு எனக்கு பிடிச்சிருக்கான்னு கூட கேட்காம போறா’ என்று நினைத்து மண்டை காய்ந்தான்.


அவளோ அவனை கடந்து சென்றவள் “லவ் யூ சூர்யா..ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கத்திவிட்டு அங்கிருந்து பறந்து விட்டாள்.
 
Last edited:
#71
அடபக்கி கன்யா என்னா ஒரு தைரியம் பாவம் சூர்யா இவளால மண்டை உடைபடபோறான்😂😂😂
 

bselva

Active member
#72
ha ha ivan appa amma indu en namma vetri vara elarayum manda kaya vachanla ipo ivanoda turn.

ha ha kanya patukka veetuku vara pora ivan manda udaya poguthu.

thanvinai thannai sudum thambi.😆😆
 

sudharavi

Administrator
Staff member
#76
அத்தியாயம் – 10


“வேணாம் பா...என் பிரெண்ட் கொடுத்தான்னு தான் ஓட்டிட்டு வந்தேன்” என்று சொல்லிவிட்டு நாற்காலியை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள்.


கையில் செருப்புடன் அவளை துரத்திக் கொண்டிருந்தார் ராகவன். இருவரும் ஹாலை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர். நேத்ராவும், கிரிஜாவும் அறைக்குள் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.


ஓடி ஓடி களைத்துப் போன ராகவன் “மரியாதையா ஒரு இடத்தில் நில்லு. படிக்க அனுப்பினா அதை தவிர மத்ததெல்லாம் கத்துகிட்டு வந்திட்டு இருக்க? யார் உனக்கு பைக் ஓட்ட கத்து கொடுத்தா” என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவள் அருகில் செல்ல முயன்றார்.


அவளோ தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் அவர் கிட்டே வரவும் ஒரே ஜம்ப்பாக சோபாவை தாண்டி குதித்து மறு பக்கம் சென்று நின்று கொண்டு “கிஷோர் தான்பா சொல்லி கொடுத்தான்” என்றாள்.


ஓடியதில் முதுகு பிடித்துக் கொள்ள மூச்சிரைக்க “மரியாதையா இங்கே வா...இன்னொரு தடவை எவன் கிட்டேயாவது பைக்கை வாங்கிட்டு வந்த முதுகு தோளை உரிச்சிடுவேன்” என்றார் நிற்க முடியாமல் மூச்சு விட்டுக் கொண்டே.


அவரின் நிலையை புரிந்து கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வாங்கப்பா” என்றவளை முறைத்து நின்ற இடத்திலிருந்து செருப்பை அவளை நோக்கி வீசினார்.


அந்த நேரம் நேத்ரா அறைக் கதவை மெதுவாக திறந்து பார்க்க, ராகவன் வீசிய செருப்பு சரியாக அவள் மேல் சென்று விழுந்தது. அதைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.


முகத்தின் மீது விழுந்த செருப்பை கண்டு வலியுடன் கூடிய அழுகையில் “அப்பா! எதுக்குப்பா என்னை அடிச்சீங்க?” என்றாள் ஆத்திரத்தோடு.


அதற்குள் உள்ளே இருந்த கிரிஜாவும் வெளியே வந்து கணவரை முறைத்து “ஏங்க அவளை விட்டுட்டு இவளை ஏங்க அடிச்சீங்க?” என்று சத்தம் போட்டார்.


இவ்வளவுக்கும் காரணமானவளோ அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். கிரிஜா நேத்ராவிடம் கண்ணைக் காட்ட இருவருமாக சேர்ந்து கன்யாவை பிடித்துக் கொள்ள, ராகவன் பட்டென்று எழுந்து வந்து அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.


“படிக்க அனுப்பினா என்ன பண்ணிட்டு இருக்க? இன்னொரு தடவை இப்படி பைக்கை எடுத்திட்டு வந்த வெளுத்திடுவேன்” என்றார்.


அவளோ சிறிதும் அவர் அறைந்ததை பற்றி கவலைப்படாமல் அவர் பேசப்பேச கவுண்ட்டர் கொடுத்து கொண்டிருந்தாள். அம்மாவுக்கு துணி வெளுக்கிற வேலை மிச்சம் போல இருக்கே. நான் முன்னாடியே சொல்லிட்டா நிறைய துணியை எடுத்து வச்சிடுவாங்க. அப்போ அப்பா வந்து வெளுத்திடுவாங்க இல்ல என்றெண்ணி சிரித்துக் கொண்டாள்.


ஒரு மணி நேரமாக அவளுடன் போராடியதில் சோர்ந்து போனவர் சோபாவில் சென்றமர்ந்து கொண்டு “போய் ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு” என்றார்.


இவளோ ‘களைச்சு போயிட்டியா ராகவா?’ என்று கேட்டுக் கொண்டு மிக பவ்யமாக தலையை ஆட்டிவிட்டு அறைக்குள் சென்றாள்.


அவள் சென்றதும் பின்னேயே சென்ற நேத்ரா “நீ வாங்க வேண்டிய அடியை நான் வாங்கி இருக்கேண்டி. இதுக்காக நீ எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்கணும்” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.


அவளோ தங்கையின் தோள்களைப் பற்றிக் கொண்டு “நீ எப்படிடி இவ்வளவு நல்லவளா இருக்க? நீ என் தங்கையான்னே டவுட்டா இருக்கு. ஆஸ்பத்திரியில் மாறி போயிருப்ப்பியோ?” என்றாள் கிண்டலாக.


“போக்கா! நீ எப்படி தான் இப்படி இருக்கியோ?”


“சரி விடு! ஐஸ்க்ரீம் தானே வாங்கி கொடுக்கிறேன். இப்போ என்னை விடு எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று விட்டு நோட்டு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.


சூர்யாவோ வழக்கம் போல இல்லாமல் தவன் செய்பவனைப் போல தனதறையில் அமர்ந்திருந்தான். யாரோ ஒரு பெண் வந்து தன்னிடம் காதலை அதிரடியாக சொல்லிச் சென்றது பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அவள் யார் ஏன் திடீரென்று அப்படி சொன்னால் என்று பலவாறாக யோசித்தும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியாக யாரவது அவளை அப்படி செய்ய வைத்திருப்பார்கள் பெட் கட்டி என்று முடிவிற்கு வந்தான். இப்போதெல்லாம் இளசுகள் இடையே இதெல்லாம் சகஜம் என்பதால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டான்.


அவளை நினைத்துப் பார்த்தவனுக்கு ‘ஆம்பளை மாதிரி இருக்கா..கொஞ்சம் கூட பொண்ணு மாதிரி இல்லையே’ என்றெண்ணிக் கொண்டான்.


அன்று முழுவதும் அவளது சிந்தளையிலேயே கழிந்தது. மல்லி மகனை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு என்கிற கேள்வி அவர் மனதில் எழுந்தாலும், கணவரின் முன்பு அதை கேட்டு புது பிரச்னையை உண்டாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.


மறுநாள் காலையும் மிக அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமின்றி மகன் கிளம்புவதை கண்டு மனதிற்குள் ‘ஆத்தா மகமாயி! என் புள்ளைக்கு இப்போ தான் புத்தி வந்திருக்கு. இதை அப்படியே கண்டினியு பண்ண வை தாயி’ என்று வேண்டிக் கொண்டார்.


அவனும் பைக்கை எடுத்துக் கொண்டு தனது வழக்கமான பாதையில் பயணித்து கல்லூரி வாயிலுக்கு வரும் நேரம், அவனை வழி மறித்தது அவளது பைக்.


சட்டென்று ப்ரேக் போட்டவன் தன் முன்னே பைக்கில் நின்றவளை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தான்.


அவளோ பைக்கை நிறுத்தி விட்டு அவன் அருகே சென்று கண்களை சிமிட்டி “என்ன சூர்யா? நேத்து கனவில் நான் வந்தேனா?” என்றாள்.


அவன் பதில் சொல்லாமல் நிற்கவும், அவன் முகத்தின் முன்னே கையை ஆட்டி “ஹலோ பாஸ்! என்ன கனவா?” என்றாள் சிரிப்புடன்.


அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கியவன் “யார் நீ? எதுக்கு நேத்திலருந்து என்னை துரத்துற?” என்றான் சற்றே எரிச்சலான குரலில்.


கண்களை சிமிட்டி அவனை அதிசயமாக பார்த்து “என்ன சூர்யா இப்படி கேட்டுட்ட? உன் லவ்வரை பார்த்து என்ன கேள்வி இது ?”என்றாள் கிண்டலாக.


கடுகடுப்புடன் அவளை முறைத்தவன் “லூசு மாதிரி பேசாம யார் நீன்னு சொல்லு? எதுக்காக என் கிட்ட இப்படி பேசிட்டு இருக்க?”


இடுப்பில் கை வைத்து அவனை சுவாரசியமாக பார்த்து அவனை ஒரு சுற்று சுற்றி வந்தவள் “நல்ல ஹெவி பில்ட்டா தான் இருக்கே சூர்யா...நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ தான் என்னுடைய லவ்வர்னு பிக்ஸ் பண்ணிட்டேன்” என்றாள் அவன் கைகளைப் பற்றி இழுத்து.


பாடி ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்கு என்பது போல சூர்யா உள்ளுக்குள் நடுங்கி போனான். இதென்னடா நமக்கு வந்த சோதனை என்று அவளை திருதிருப்புடன் பார்த்தான்.


தனது பாக்கேட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் நீட்டியவள் “இதெல்லாம் நம்ம ரோட்டின் சூர்யா...நீ இதை தினமும் பாலோ பண்ணனும்” என்றாள்.


அதை வாங்காமல் அவளை முறைத்து “நீ என்ன லூசா? உன்னை யாருன்னே தெரியாது. நீ என்னை விரும்பினா போதுமா? எனக்கு உன்னை பிடிக்க வேண்டாமா? இதெல்லாம் நல்லா இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#77
தலையை சாய்த்து அவனைப் பார்த்து கேலியாக சிரித்தவள் “ஏண்டா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? நீங்க பொண்ணுங்களை அவங்க விருப்பம் இல்லாம விரும்புறேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணுவீங்க. ஆனா நாங்க பண்ணினா அது லூசுதனமா? முடியாது சூர்யா! நீ தான் என் லவ்வர். ரொம்ப பேசின உன் காலேஜுக்கு வந்து உன் கிளாசிலேயே உட்கார்ந்திடுவேன்” என்றாள் அழுத்தமாக.


அவனோ கடுப்பாக “உன்னால முடிஞ்சதை பார்த்துக்கடி” என்று கூறிவிட்டு பைக்கை கிளப்பிக் கொண்டு கல்லூரிக்குள் சென்று விட்டான்.


காலரை தூக்கி விட்டுக் கொண்டவள் “என்னைப் பத்தி தெரியாம ஓடிட்டியே சூர்யா” என்று சொல்லிக் கொண்டவள் தனது பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் செய்து அவனது கல்லூரி வளகாதிற்குள் செல்ல முயன்றாள்.


அவளை தடுத்து நிறுத்திய காவலாளி “அம்மாடி இது ஆம்பளைங்க படிக்கிற காலேஜ் மா” என்றார்.


அவரை அருகே அழைத்து “தாத்தா! இங்கே உங்க சேர்மன் இருக்காரில்ல அவரோட சொந்தக்கார பொண்ணு நான். அவர் தான் இன்னைக்கு வர சொன்னார் ஒரு விஷயமா பார்க்கனும்னு சொல்லி” என்றாள்.


அவளை ஏற இறங்க பார்த்த தாத்தா “அம்மாடி! எனக்கு உன் வயசில் மூணு பங்கு. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன். உன்னை உள்ளே விட முடியாது” என்றார்.


அவரை பார்த்து சமாளிப்பாக சிரித்தவள் தனது பேன்ட் பாக்கேட்டிலிருந்து நூறு ரூபாய் தாளை யாரும் அறியாமல் அவரிடம் நீட்ட, முதலில் தயங்கியவர் பின்னர் அவளிடம் “போயிட்டு சீக்கிரம் வந்துடு தாயி” என்றார்.


அவர் கன்னத்தில் தட்டி “அது! என் செல்லம் இந்த வயசிலேயும் செமையா இருக்கீங்க” என்று ஐஸ் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.


ஒரு பார்கிங்கில் சென்று பைக்கை நிறுத்திவிட்டு மெல்ல நடந்தவளை அங்கிருந்த மாணவர்கள் குறுகுறுவென பார்த்தனர். அனைவருக்கும் அவள் யாரென தெரிந்து கொள்ளும் ஆர்வம். அவளோ எவரையும் கண்டு கொள்ளாது ஒரு மாணவனை நிறுத்தி சூர்யாவின் வகுப்பை கேட்டறிந்து கொண்டு அங்கு சென்றாள்.


அது இந்துவின் நேரம். அவள் அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்துவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தாள். சூர்யாவின் மனது பாடத்தில் இல்லாமல் கன்யாவை நினைத்து குழப்பத்தில் இருந்தது. வந்ததில் இருந்தே அவனை கவனித்து விட்ட இந்துவிற்கு அவனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டு யோசனையாக இருந்தது. இவன் ஏன் இன்று இவ்வளவு சோர்வாக இருக்கிறான் என்றெண்ணிக் கொண்டு வகுப்பில் கவனத்தை வைத்தாள்.


அந்நேரம் சூர்யாவின் வகுப்பறை வாயிலில் வந்து நின்ற கன்யா “எஸ்கியுஸ் மீ மேம்” என்றாள்.


கஷ்டப்பட்டு பாடத்தில் கவனத்தை திருப்பி இருந்த சூர்யா வெளியில் வந்த சப்தத்தில் நிமிர்ந்து பார்க்க, அங்கே அவளைக் கண்டதும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது. ரிஷியும் அவசரமாக சூர்யாவை திரும்பி பார்த்து “என்னடா இவ இங்கே வந்திருக்கா?” என்றான்.


மற்ற மாணவர்களோ அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


இந்து அவளை புரியாத பாவனையுடன் பார்த்து “எஸ்” என்றாள்.


“நான் சூர்யாவோட கசின். அவங்க வீட்டில் ஒரு இஷ்யு...சூர்யாவை அனுப்ப முடியுமா?” என்றாள்.


சூர்யாவிற்கு இதயம் வாய் வழியாக வெளியே குதித்து வந்து விடும் போல இருந்தது.
 

bselva

Active member
#79
ha ha ayyo pavam dei suri paya nee ipidi thana Indu va kalanga vacha. unga appa ammava daily bayathulaye sutha vita la athan unna kanya vachu seyra. enjoy da mapla 😁😁