வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

கதையின் டீசரோட வந்துட்டேன்......எருமை! எருமை! இங்கே வந்தாவது ஒழுங்கா இரு! அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ள இரு! என்று அவனை இடித்தார்.
மகனையும் மனைவியையும் பார்த்த சந்துரு " அவனை சொல்லி குத்தமில்ல..நாம கண்காணிக்கனும்" என்றார் எரிச்சலாக.
அவரை முறைத்து "எவ பின்னாடி சுத்துறான்னு நாமலும் பின்னாடியே போக முடியுமாங்க" என்றார் எரிச்சலாக.
"என்ன பண்றது‌ தறுதலையை பெத்துட்டோமே"
"நீங்க நல்லா விசாரிச்சீட்டீங்களா? இந்த அபார்ட்மெண்ட்ல எதுவும் வயசு பொண்ணுங்க இருக்கான்னு".
"அதெல்லாம் விசாரிச்சிட்டேன். யாருமில்ல".
நெஞ்சை பிடித்துக் கொண்டவர் " ஹப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்றார்.
மெல்ல அவர்களை நிமிர்ந்து பார்த்த சூர்யா சிரிப்படன் "காலேஜில் இருப்பாங்களே" என்றவனை பாய்ந்து மண்டையில் கொட்டிய மல்லிகா "அதுக்கு தான் மவனே ஜென்ட்ஸ் காலேஜில் சேர்த்து விட்டிருக்கோம்" என்றார்.
அப்போதும் சிரிப்புடனே "எப்படியும் போகிற வழியில் கண்ணுல படாமலா போயிடுவாங்க" என்றவனை தந்தையும் தாயும் கொலை வெறியுடன் பார்த்தனர்.
சந்துரு "இதுக்கு மேல ஏழறையை இழுத்து விட்ட மவனே ஊட்டுக்குள்ளேயே போட்டு பூட்டிடுவேன்" என்றார் கடுப்பாக.
மல்லிகாவோ தலையில் கை வைத்தபடி அமர்ந்தவர் “இவன் பொறந்தப்ப எப்படி எல்லாம் சந்தோஷப்பட்டோம். ஆனா இந்தப் பர....” என்று மகனை முறைத்தார்.


அன்னையின் அருகே நகர்ந்து அமர்ந்தவன் “மா! உங்களை பெருமைப்பட வைக்கிற மாதிரி நல்லா படிக்கிறேன். அமைதியான பையனா இருக்கேன். அப்புறம் ஏன் என்னை கரிச்சு கொட்டுறீங்க” என்றான் பாவமாக.


ஓங்கி அவன் நடு மண்டையில் கொட்டியவர் “நீ இப்படி பேசுறதை வெளியில இருக்கிறவன் கேட்டா நம்புவான். ஏண்டா இப்படி இருக்க? உன்னால தானே அந்த வீட்டை விட்டு இங்கே வந்திருக்கோம். துப்பட்டா மாதிரி ஒரு துணி தெரிஞ்சா போதும் அது பின்னாடியே போய் எங்க மானத்தை வாங்குறியே” என்றார் அழாத குறையாக.


அன்னை தந்தையை சீரியசாக பார்த்தவன் “உங்க பையன் நல்ல ஆரோக்கியமான பையன்னு சந்தோஷப்படுங்க அப்பா, அம்மா” என்றான்.


இருவரும் அவன் பேச்சில் என்னவென்று புரியாமல் பார்க்க, அவர்களைப் பார்த்து கண் சிமிட்டியவன் “இந்த வயதில் ஹார்மோன் சரியா வொர்க் ஆகணும். இல்லேனா ஏதோ சீக்குன்னு அர்த்தம்” என்றவன் எழுந்து ஓடி விட்டான்.


பெற்றவர்கள் இருவரும் தலை மேல் கை வைத்துபடி அமர்ந்து விட்டனர்.


சந்துருவோ அழுகுரலில் “இவனை படிக்க வச்சு தான் ஆகணுமா மல்லி? காலம் முழுக்க நானே கஞ்சி ஊத்திடுறேனே. இவனை வெளில விட்டு அடி வாங்குறதுக்கு இது மேல் இல்லையா?” என்றார்.


“நானும் அதை தான் நினைக்கிறேங்க” என்றார் கண்களில் பயத்துடன்.

அடுத்த வாரத்திலிருந்து பதிவுகள் போடப்படும் பிரெண்ட்ஸ்.....
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#13
அத்தியாயம் – 1

புதிதாக குடி வந்திருந்த அபார்ட்மெண்டில் கடவுளின் படத்தின் முன் கண் மூடி நின்றிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சந்திரசேகர் சாமியை வேண்டிக் கொண்டார்.

மல்லிகா மகனுக்காக வேண்டிக் கொண்டு அவனது கையில் ஒரு கயிற்றை கட்டி விட்டு “கடவுளே! இந்தப் பிள்ளைக்கு இப்போவாவது புத்தியைக் கொடு” என்றார்.

சம்மந்தப்பட்டவனோ மிகவும் பவ்யமாக கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணைத் திறந்து தாய், தந்தையைப் பார்த்து மென் சிரிப்புடன் “என்னப்பா வேண்டுதல் எல்லாம் வச்சாச்சா?” என்றான்.

அவனிடம் பதில் பேசாது “ம்ம்ம்..” என்றவர் “மல்லி சாப்பாட்டை எடுத்து வை நேரமாச்சு” என்று விரட்டினார்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட சூர்யா பூஜை அலமாரியைப் பார்க்க அங்கு இருந்தது எல்லாம் ஆண் தெய்வங்கள் மட்டுமே. தந்தைக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையை எண்ணி சிரித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றமர்ந்தான்.

முகத்தை சீரியசாக வைத்துக் கொண்ட சந்துரு மகனைப் பார்த்து “சூர்யா! இனிமேலாவது உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. உன் கிட்ட இருக்கிற ஒரே வீக்னெஸ் இது தான். அதை மாத்திகிட்டா உன்னை மாதிரி ஒரு பையனை உலகத்துலேயே பார்க்க முடியாது” என்றார்.

தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் “நான் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான்.

அவன் அப்படி கேட்டதுமே ஏதோ வில்லங்கமாக தான் கேட்கப் போகிறான் என்று சுதாரித்துக் கொண்டவர் “ம்ம்ம்..” என்றார்.

“உங்க டீன் ஏஜில் நீங்க பொண்ணுங்களை சைட் அடிச்சதே இல்லையாப்பா?” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

மகனின் கேள்வியில் கடுப்பானவர் “அதெல்லாம் ஏகப்பட்டது அடிச்சிருக்கேன்...ஆனா நான் ஒன்னும்...” என்று கூறி விட்டு நிமிர்ந்தவர் அங்கே மனைவி தோசை கரண்டியுடன் முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் பட்டென்று வாயை மூடிக் கொண்டார்.

மல்லிகாவிற்கும் கணவரின் பேச்சு கடுப்பைக் கொடுத்தது. வளர்ந்த பிள்ளையிடம் என்ன பேச்சு இது என்று அவரை முறைத்தார்.

சூர்யாவோ “சொல்லுங்கப்பா” என்றான் அன்னையை பார்த்துக் கொண்டே.
அவனை முறைத்து விட்டு “சீக்கிரம் சாப்பிட்டிட்டு கிளம்புற வழியைப் பாரு” என்று கடுப்படித்தார்.


அதற்கு மேல் பேசினால் தோசை கரண்டியால் சூடு வாங்குவது நிச்சயம் என்று புரிந்து போனவன் அமைதியாக சாப்பிட்டு விட்டு பைக் சாவியை எடுத்துக் கொண்டு கீழே சென்றான். அவனுக்கு முன்னே தனது ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு அங்கே காத்திருந்தார் சந்துரு.

அதை பார்த்ததும் உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கியபடி தனது பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். அப்போது அவன் அருகில் வந்தவர் “ப்ளூ டூத் ஆன் பண்ணி வச்சிக்கிட்டு கிளம்பு” என்றார்.

‘போன ஜென்மத்துல பாடி கார்டா இருந்திருப்பார் போல’ என்று தாளித்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியேறினான்.

சுமார் இருபது அடி இடைவெளியில் அவனை முன்னே விட்டு பின்னே தொடர்ந்து கொண்டிருந்தார் சந்துரு. தந்தை தன்னை தொடர்ந்தாலும் சூர்யாவின் பார்வை சுற்றுப் புறத்தில் அலைபாய்ந்து கொண்டு தான் இருந்தது.

கண்ணுக்கு அழகாக தெரிந்த சுடிதார் பெண்களைக் கண்டதும் அவனது வண்டி வேகத்தை குறைக்கும், அப்போது சந்துருவின் குரல் காதில் ஒலிக்க கடுப்பாகி வேகத்தை கூட்டுவான்.

அப்படி பார்த்துக் கொண்டே சென்றதில் ஒரு பேருந்து நிலையத்தில் சேலைக் கட்டிக் கொண்டு நின்ற இளம் பெண்ணொருத்தி அவன் கவனத்தில் பதிய, வண்டி மெல்ல அந்த திசை நோக்கிப் பயணிக்க ப்ளூ டூத் வழியாக நாராசமாக அந்தக் குரல் வந்து விழுந்தது.

“டேய்! வண்டி ஏன் அந்தப் பக்கம் போகுது? ஒழுங்கா உன் காலேஜ் பக்கம் திருப்பு” என்றார் பின்னோடு வந்து கொண்டிருந்தவர்.

அவனோ இருந்த எரிச்சலில் ‘இந்தாளுக்கு பிள்ளையா பொறந்ததுக்கு பதிலா செக்கு மாடா பொறந்திருக்கலாம்’ என்று கடிந்து கொண்டே காலேஜை நோக்கி பயணித்தான்.

இப்படியே இழுபறியாக காலேஜ் வந்து சேர்ந்தவன். கல்லூரிக்குள் நுழைந்ததும் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு தனது வேலைக்கு கிளம்பி சென்றார்.

சூர்யாவின் வருகையைக் கண்ட அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு “என்னடா இன்னைக்கும் பலமான காவலோட தான் வந்தியா” என்று கேட்டு சிரித்தனர்.

வண்டியிலிருந்து இறங்காமலே “அதை ஏண்டா கேட்கிற? படுத்துறாரு டா...ஒரு பிகரை கூட நல்லா பார்க்க முடியல” என்று புலம்பினான்.

சூர்யாவின் நெருங்கிய நண்பன் ரிஷி “அது சரி காலையில உன்னை கொண்டு வந்து விடுறாரு. நடுவில நீ கிளாஸ் கட் பண்ணிட்டு போய் சைட் அடிச்சா என்னடா பண்ணுவார்?” என்றான் சிரிப்புடன்.

“அவரை அவ்வளவு சாதரணமா எடை போட்டுட்டியே...நம்ம காலேஜ் முழுக்க ஆள் வச்சிருக்கார். நம்ம செக்கியுரிட்டில இருந்து எல்லா இடத்திலேயும் ஆள் வச்சிருக்கார். இதுக்காக ஒரு அமவுன்ட்டே ஸ்பென்ட் பண்றார்” என்றார்.

அதைக் கேட்டு வாயைப் பிளந்த நண்பர்கள் “ஆனாலும் அதையும் மீறி நீ பண்ணின வேலை” என்று ஹை-பை கொடுத்துக் கொண்டு சிரித்தனர்.

“பின்னே என்னடா காலேஜா இது! கண்ணுக்கு குளிர்ச்சியா ஒன்னாவது கண்ணுல படுதா? எல்லாம் தடிமாட்டு தாண்டவராயன்களா சுத்துறானுங்க” என்றான் எரிச்சலாக.

சூர்யா மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவன். படிப்பில் கெட்டியாக இருப்பவனுக்கு ஒரே குறை பெண்களைக் கண்டு விட்டால் அவர்களைத் தாண்டி அவனது கண்கள் எங்கேயும் போகாது. இதுவரை அவன் லவ் சொல்லிய பெண்களின் கணக்கு அவனே அறியாதது. அழகை ஆராதிப்பதில் மன்னன். தனக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லுவான் அவள் ஏற்கவில்லை என்றால் அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்ததை பார்க்க சென்று விடுவான். அவனால் எந்த பெண்ணிற்கும் கெடுதல் நேர்ந்ததில்லை.

“டேய்! நேரமாச்சு முதல் நாளே கிளாசுக்கு லேட்டா போக வேண்டாம்’ என்று கூறியவன் வண்டியை பார்க்கிங்கில் விட சென்றான்.
அனைவரும் பேசிக் கொண்டே தங்களது வகுப்பறைக்குள் செல்ல, சூர்யா வழக்கம் போல முதல் வரிசையிலேயே அமர்ந்து கொண்டான். அவனது நண்பர்களோ கடுப்புடன் “டேய்! இந்த வருஷமாவது பின்னாடி உட்காரலாம் வாடா” என்றனர்.
“இல்லடா! நீங்க வேணா பின்னாடி போங்க. எனக்கு முன்னாடி உட்கார்ந்தா தான் கவனிக்க வசதி” என்றான்.


அவர்களோ கடுப்புடன் “இவன் ஒருத்தன் ஓவர் படிப்பாளியா இருந்து நம்மள கடுப்பேத்துறான்” என்று திட்டிக் கொண்டே பின்னே சென்று அமர்ந்து விட்டனர்.

அப்போது அவர்களின் வகுப்பிற்கான லெக்சரர் உள்ளே நுழைய அமைதியாக அனைவரும் எழுந்து நின்றனர். ரிஷியும், கணேஷும் அவரை பார்த்ததும் “நமக்கு ஒரு லேடி லெக்சரருக்கு கூட கூட கொடுத்து வைக்கலடா” என்று புலம்பிக் கொண்டனர்.

வந்தவரோ மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களோடு சற்று நேரம் உரையாடியவர் தான் இன்று மட்டும் அவர்களுக்கு பாடம் எடுப்பதாகவும் மறுநாளில் இருந்து புதிய ஆசிரியர் வரப் போவதையும் அறிவித்தார்.

அவர் சென்றதும் அடுத்தடுத்த வகுப்புகள் முடிவடைய, மெல்ல வெளியேறியவர்கள் கேண்டீன் நோக்கி சென்றனர். அங்கே அமர்ந்து புதிதாக வரவிருப்பவரை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.

சூர்யாவோ “டேய்! ரொம்ப யோசிக்காதீங்கடா...பிரமீடுகுள்ள இருக்க வேண்டியது தான் ஏதாவது வரும்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும் சிரித்தவர்கள் “நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சேடா” என்று புலம்பிக் கொண்டே “படத்துக்கு போகலாமாடா” என்றான் ரிஷி.

அனைவரும் சூர்யாவை பார்க்க கையிலிருந்த காப்பியை ரசித்து குடித்து முடித்தவன் “போனா போச்சு” என்றான் மயக்கும் சிரிப்புடன்.

அதற்குள் ரமேஷோ “எப்படி டா?” என்றான் அதிசயமாக.

“நீங்க எல்லாம் முன் கேட் வழியா போங்க. நான் நம்ம லைப்ரரி பில்டிங் காம்பவுண்ட் தாண்டி குதிச்சு வந்துடுறேன். அங்கே வந்து பிக்கப் பண்ணிகோங்க” என்றான்.

ரமேஷின் முதுகில் தட்டிய ரிஷி “அவன் அப்பாவே அவ்வளவு யோசிக்கும் போது அவன் யோசிக்க மாட்டனா” என்றவன் “ஓகே டா..சீக்கிரம் வா நாங்க வெயிட் பண்றோம்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்களின் ப்ளான் படி சுவரேறி குதித்து அவர்களுடன் சினிமாவிற்கு சென்றான். அங்கு சென்று டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்நாக்ஸ் வாங்க நிற்கும் போது அவளைப் பார்த்தான். அவன் மனதில் அடங்கி இருந்த காதல் தீ பற்றி எழ, நண்பர்களை மறந்து மெல்ல அவள் அருகில் சென்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#14
“ஹாய்”


அவளோ திடீரென்று ஒருவன் அருகில் வந்து ஹாய் சொல்லவும் பயந்து போனவள் மிரட்சியுடன் “ஹாய்” என்றாள்.


தலையை கோதியபடி அவளை ரசித்துக் கொண்டே “ரொம்ப அழகா இருக்கே” என்றான்.


அந்தப் பெண்ணோ சங்கடத்துடன் “தேங்க்ஸ்” என்றவளின் பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது.


சூர்யாவின் நண்பர்களோ அவனது செயலைப் பார்த்தவர்கள் “ஆரம்பிச்சிட்டான்டா! யாராவது போய் அவனை இழுத்திட்டு வாங்க” என்று பேசிக் கொண்டனர்.


அவளின் விழிகளில் தேடல் இருப்பதை கண்டு “யாரை தேடுறீங்க? உங்க அம்மாவையா? குட்டி பொண்ணை விட்டுட்டு பொறுப்பில்லாம எங்கே போனாங்க?” என்றான் ஹஸ்கி வாய்சில்.


அவளோ அவன் சொன்னதைக் கேட்டு விழி விரிய பார்த்தாள்.


அப்போது சூர்யாவை இடித்துக் கொண்டு ஒருவன் ஆஜானுபாகுவாக வந்து நின்று “ஹலோ! யார் நீ? இவ கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” என்றான் கடுப்பாக.


அவனது நெருக்கத்திலேயே அவன் யாரென்று புரிபட்டுவிட, மெல்லிய சிரிப்புடன் “ஒ...இவங்க உங்க ஆளா பாஸா...என்ஜாய்” என்று அவன் தோளில் தட்டிவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.


ரிஷி அவனை அடித்து “ஏண்டா! வந்தமா படத்தை பார்த்தமா நாலு பிகரை லுக்கு விட்டமான்னு இல்லாம ஏன் இந்த வேலை” என்றான்.


“கொஞ்ச நேரம்னாலும் அந்த பொண்ணு முகத்தில் வந்து போன உணர்வுகள் அடடா! நீ அழகா இருக்கேன்னு சொல்லிட்டா இந்த பொண்ணுங்களுக்கு வர பீலிங்க்ஸ் இருக்கே...அதை பார்க்கவே ரெண்டு கண்ணு போதாது டா” என்றான்.


ரிஷியோ கடுப்புடன் “அது சரி! அவ லவ்வர் பல்லால தேவன் மாதிரி வந்து நினான்னே. அவன் கிட்ட ரெண்டு அடி வாங்கி பல்லு போயிருந்தா உன் முகத்தை பார்க்க கூட இரண்டு கண் போதாது சூர்யா”.


“விடுடா! விடுடா!” என்றவன் நண்பர்களுடன் சென்று பாடம் பார்க்க்க ஆரம்பித்தான்.


முதல் நாளே கல்லூரியை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் படம் பார்த்து கொண்டாட்டமாக நாளை கழித்து விட்டு கல்லூரியில் இருந்து வீட்டிற்கு கிளம்பினான்.


அவனது வண்டி கல்லூரி கேட்டை தாண்டியதும் செக்கியுரிட்டி இடமிருந்து சந்திருவிற்கு செய்தி பறந்தது. அடுத்து அவன் தாண்டிச் சென்ற சிக்னல்களில் இருந்தெல்லாம் அந்த டிராபிக் போலீசிடம் இருந்தும் செய்தி பறந்தது.


அவன் சரியாக வீட்டிற்கு சென்று பார்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாக சென்று பெல்லை அடித்து உள்ளே நுழையவும் அவரிடம் இருந்து போன் வந்தது.


“இன்னைக்கு ஏன் அஞ்சு நிமிஷம் லேட்டா வந்த? நடுவில் எங்கேயாவது நின்னியா?” என்றார் கோபத்தோடு.


சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “சிக்னளில் லேட்டாகிடுச்சு” என்றான்.


அதோடு அவர் போனை வைத்துவிட, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு அறைக்குள் சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன் அன்னை கொடுத்த காப்பியை குடித்து விட்டு “மா! நான் கொஞ்ச நேரம் மாடிக்கு போயிட்டு வரேன்” என்றான்.


அவரோ பதட்டமாகி “எதுக்கு இப்போ மாடிக்கு போற? படிக்க எதுவும் இருந்தா உட்கார்ந்து படி” என்றார்.


அன்னையின் தோளில் கை போட்டுக் கொண்டவன் “மா! இங்கே தான் எந்த சின்ன பொண்ணும் இல்லேல்ல. அப்புறம் ஏன் பயப்படுறீங்க?” என்றவன் கதவை திறந்து கொண்டு மாடிக்கு சென்று விட்டான்.


உள்ளுக்குள் பயமிருந்தாலும் அவன் சொன்ன வார்த்தையை நினைவில் வைத்துக் கொண்டு அமைதியானார்.


மேலே சென்றவனோ சிறிது நேரம் அங்குமிங்கும் காற்றாட நடை பழகினான். அப்போது கீழ் வீட்டிலிருக்கும் புதிதாக திருமணமான பெண் துணிகளை எடுக்க வந்திருந்தாள்.


அவளை பார்த்ததும் உற்சாகமானவன் “ஹாய்” என்றான்.


அவளும் இயல்பாக “ஹாய்! நீங்க தான் பி ஒன்ல புதுசா வந்திருக்கிறதா?” என்றாள்.


“ம்ம்..நாங்க தான்...ஐ யம் சூர்யா” என்று கூறி கை நீட்டினான்.


அவளும் விகல்பமாக எண்ணாமல் “ஐ யம் கிருத்திகா...இங்கே ஏ ஒன்ல இருக்கோம்” என்றாள்.


பேசுவதற்கு ஒரு பெண் கிடைத்த திருப்தியில் தன்னை மறந்து அவளிடம் பேசிக் கொண்டிருக்க, அவளும் எடுக்க வந்த துணிகளை மறந்து உற்சாகமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


“நீ ரொம்ப ஜாலியா பேசுற சூர்யா” என்றவளின் பின்னே முறைப்புடன் அவள் கணவன் வந்து நின்றான்.


துணி எடுக்க சென்றவளை காணவில்லை என்றதும் மேலே வந்தவனுக்கு சூர்யாவிடம் அவள் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் கடுப்பானது.


அவனைக் கண்டதும் “என்னங்க! இது சூர்யா...பி ஒன்ல வந்திருக்காங்க. காலேஜ்ல மூன்றாவது வருஷம் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.


அவனோ சூர்யாவை வெட்டவா, குத்தவா என்று பார்த்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக கையை கொடுத்து விட்டு அவளை இழுத்துச் சென்றான்.

 

sudharavi

Administrator
Staff member
#15
வழக்கம் போல தலையைக் கோதிக் கொண்டு “என்னங்கடா உங்களுக்கு எல்லாம் பிரச்சனை? நான் அந்த பொண்ணு கிட்ட சாதரணமா தானே பேசினேன்.

இவன் ஏன் என்னை அந்த முறை முறைச்சுகிட்டே போறான்” என்று எண்ணிக் கொண்டு படியில் இறங்கி வந்தான்.

அதே நேரம் சந்துருவும் கீழிருந்து படியில் ஏறி வந்து கொண்டிருக்க, கிருத்திகாவின் கணவன் அவளிடம் “என்ன அந்த பய கிட்ட அப்படி ஒரு பேச்சு. அவன் கிட்ட எல்லாம் பேசாதே இனிமே” என்று கடிந்து கொண்டே சென்றவன் அவரை பார்த்தும் முறைத்தான்.


காலையில் தன்னிடம் சிரித்து பேசி பல உதவிகளை செய்தவன் இப்போது தன்னை பார்த்து முறைத்துக் கொண்டு செல்வது மகனால் தான் என்று உணர்ந்து கொண்டார்.


வீட்டிற்குள் நுழைந்ததுமே “மல்லி! எங்கே உன் சீமந்த புத்திரன்” என்று கத்தினார்.


சமயலறையில் இருந்தவர் அடித்து பிடித்து வந்து “என்னங்க! என்னாச்சு? அவன் அறையில் இருக்கான்” என்றார்.


“கீழ் வீட்டில் இருக்கும் கதிர் வைப் கிட்ட இவன் பேசினானா?” என்றார் கோபமாக.


“இல்லையே...”


“பொய் சொல்லாத! இவன் மாடிக்கு போனானா?” என்றார் கடுப்பாக.


தலையை குனிந்து கொண்டவர் “ஆமாங்க!” என்றார்.


“போச்சு! வந்த முதல் நாளே மானத்தை வாங்கிட்டான். அந்த பொண்ணு கிட்ட போய் கடலை போட்டிருப்பான் போல. அவ புருஷன் என்னை வெட்டவா குத்தவான்னு பார்க்கிறான்” என்று தலையில் அடித்துக் கொண்டார்.


அப்போது வெளியே வந்த சூர்யா “என்னப்பா இது அநியாயமா இருக்கு. நானென்ன அந்த பொண்ணுக்கு லவ் லெட்டரா கொடுத்தேன். ஜஸ்ட் பேசிட்டு இருந்தேன். அது ஒரு தப்பா?” என்றான் கோபமாக.


அவனது பதிலில் டென்ஷன் ஆனவர் “நீ ஏண்டா பொண்ணுங்களை தேடி போய் பேசுற? அவ புருஷன் கிட்ட பேசினா பிரச்சனை இல்ல” என்றார் கோபமாக.


“என் மேல எந்த தப்பும் இல்லப்பா. இந்த வயசுக்கு உரிய விதத்தில் தான் நான் இருக்கேன். சுத்தி இருக்கிற உங்க பார்வை தான் சரியில்ல” என்று அவர் கோபத்தை ஏற்றி விட்டான்.


மல்லியோ மகனுக்கும், கணவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிக் கொண்டிருந்தார்.


“நீ ஏண்டா இப்படி இருக்க? என் பிரெண்ட்ஸ் வீட்டிலேயும் தான் பசங்க இருக்காங்க. உன்னைப் போலவா இருக்காங்க?” என்றார் எரிச்சலாக.


அவனோ தந்தையைப் போலவே “நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க? என் பிரெண்ட்ஸ்கும் தான் அப்பா இருக்காங்க. உங்களைப் போலவா இருக்காங்க” என்றான் அதே மாடுலேஷனில்.


அவன் தன்னை குற்றம் சொல்வதை கண்டு கோபம் அடைந்து பாய்ந்து அவனை அடிக்க சென்றார்.


அவர்களின் குறுக்கே புகுந்த மல்லி “என்னங்க நீங்க! அவன் சொல்ற மாதிரி அந்த பொண்ணு கிட்ட சாதரணாமா பேசி இருக்கலாம் . அதை போய் பெருசா எடுத்துகிட்டு அடிக்க போறீங்களே” என்றார் அழுகையுடன்.


மகனை முறைத்துக் கொண்டே “இவனாடி சாதரணமா பேசி இருப்பான். நாம முன்னாடி இருந்தா வீட்டுல என்ன நடந்துச்சுன்னு மறந்திடுச்சா? அக்கம் பக்கத்திலிருந்த அத்தனை பேரும் வந்து இவனை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணல” என்றார் கோபமாக.


“அங்கே வயசு பொண்ணுங்க கிட்ட லவ் லெட்டர் கொடுத்ததில் பிரச்சனை ஆகிடுச்சு. இங்கே என்னங்க” என்றார் வருத்தமாக.


மனைவியை முறைத்தவர் “அங்கேயும் இவன் ஆண்டிகள் கிட்ட பேசினது பிரச்சனை ஆகிடுச்சுடி. எல்லா பயலும் என்னை வந்து பார்த்து பேசினாங்க. உங்க பையனை எங்க பொண்டாட்டிகள் கூட பேச விட்டது தப்பா போச்சு. மரியாதையா வீட்டை காலி பண்ணி கிட்டு போயிடுங்கன்னு மிரட்டினானுங்க” என்றார் எரிச்சலுடன்.


அதைக் கேட்ட மல்லி “என்னது! ஆண்ட்டிகள் கிட்ட பேசினானா? அதுல என்னங்க தப்பிருக்கு. சின்ன பொண்ணுங்களுக்கு தான் லவ் லெட்டர் கொடுத்தான்.


அவங்க கிட்ட” என்று பேசியவரை தடுத்து நிறுத்தி “இவன் கிட்ட அவங்க எல்லாம் கஷ்ட்டத்தை பகிர்ந்துக்க, இவன் பேசாம கழட்டி விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி அட்வைஸ் கொடுத்திருக்கான். அதை கேட்டு ஒருத்தி வக்கீல் வரைக்கும் போய் டைவர்ஸ் நோட்டிஸ் கொடுத்திட்டா” என்றார்.

இரு கரம் கொண்டு வாயை மூடிக் கொண்டவர் “அடப்பாவி! ஏண்டா உனக்கு இந்த வேலை” என்றார்.


பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவன் “கஷ்டப்படுறவங்களுக்கு ஐடியா கொடுத்தேன்” என்றான்.
 
#16
Sooper start sudhamma... Enakku yennamo Surya normalnu than thonudhu... Poga poga epdiyo... Therila. Epu. Lastla married women ku idea koduthuthathu semma.. Aunty's yen ivankitta கஷ்டங்களை share pannanum...
 
#17
Surya nu thappa perai vechitimgale dear Krishna nu vechirukimga, avan Enna pannan nalla Dan pesuran adai parkura avamga kannotathula Dan iruku, jolly ya pesardu ellma thappave ninaicha pavam avan enna pannuvan, nee eppavum pola jolly ah iruda, inda age la Dan life enjoy panna mudium nee nadathu rasa arumaiyana arambam dear thanks.
 
#18
அச்சோ சூர்யா டார்லிங் நீ கரெக்ட்டா தான் இருக்க. உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் சரியில்ல.நம்ம நாட்டுக்கு நல்லது பண்ணா இப்படி தான் சொல்வாங்க. நீ ஜமாய் டா. அதிரடியான ஆரம்பம் சுதா அக்கா...
 

Anuya

Well-known member
#19
Woww.... Super sudha maa.... Surya baby ni kalakura da .... Pavam nu antha aunty ku idea kuduthan athu thappa..... Chanthru romba pannuringa pa... En baby eh kan kaanika watch man la irunthu traffic police vara aal set panni irukingala tooo bad ..... Waiting for next epi sudha maa😍😍😍
 

Anuya

Well-known member
#20
அச்சோ சூர்யா டார்லிங் நீ கரெக்ட்டா தான் இருக்க. உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் சரியில்ல.நம்ம நாட்டுக்கு நல்லது பண்ணா இப்படி தான் சொல்வாங்க. நீ ஜமாய் டா. அதிரடியான ஆரம்பம் சுதா அக்கா...
Yes🙌🙌🙌 nallathuke kaalam illa Inga😂😂😂...