முரண்படும் நிஜங்கள் - முழு லிங்க்

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

இங்கே முழு லிங்க் கொடுத்திருக்கிறேன்........புதன் காலை வரை மட்டுமே இருக்கும்.....படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Last edited:
#4
Hi sis,Beautiful story. இனி S2 ன்னு சொன்னால் எனக்கு திருவான்மியூர் S2 கூட இந்த S2வும் நியாபகத்துக்கு வருவான்.அந்த அளவுக்கு S2 கதாபாத்திரம் அருமை. அவன் ஹேர்ஸ்டைல் இருக்கே அழகோ அழகு . அந்த மாதிரி லாங் ஹேர் வைத்திருந்தால் பொதுவாக பிடிக்கும். ஆனால் அந்த ஹேர்ஸ்டைலால் ஒருவர் சந்திக்கும் கஷ்டங்கள் என்னென்னன்னு தெரிஞ்சுது .பாவம், அவன் அப்பாவே அவனை ரொம்ப கஷ்டப்படுத்துவாரு. அந்த ஹேர்ஸ்டைல் வைத்திருந்தால் தலை முடியில் சிக்கல் வருதோ இல்லையோ வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்ன்னு தெரிஞ்சுது.

அப்புறம் அவனும் அவன் பேபிஸூம் இருக்காங்களே, வேற லெவல். சன்னிகிட்ட அவன் பேபிஸ் பத்தி எக்ஸ்பிளனேஷன் கொடுப்பானே, "அவங்க எனக்கு பேபிஸ், நான் மானுக்கு பேபின்னு, ஹா ஹா, சூப்பர் லைன் . மானு லவ் பண்ணுவான்னு அவன் பேபிஸ் மேல சத்தியம் பண்றதுலாம் S2 ஆல் மட்டும் தான் முடியும்.

அவன் மானுக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டிட்டு அதை சரி செய்ய அவன் செய்யும் விஷயங்கள், முக்கியமாக அவனுக்கு பிடித்த அவன் மாடலிங் துறையைவிட்டு விலகி அவன் படும் கஷ்டங்கள் என்று கதை நகரும் விதம் அருமை. அவன் காதல் கொள்ளை அழகு.

மானுக்கு சப்போர்ட் செய்யும் அவனின் தாய் கீதா கதாபாத்திரம் சிறப்பு.

மானு அவன் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் அவன் செய்த தவறை மன்னிக்கவும் முடியாமல் இடையில் போராடும் அவள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் சிஸ்.
 

Vethagowri

Well-known member
Staff member
#5
மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி, வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழப் பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்கச் செய்யாது என்பது வரிகள்.. ஆனால் வாழ்வின் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் போது அவற்றின் வலிகளும் கசப்புகளும் பாசத்தினாலும் காதலினாலும் மாறுமா?

பெண்களின் விளைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதே பெண்ணியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும், யாருக்கு யார் இங்கு அடிமை என்பது இல்லை இதை ஒவ்வொரு மாமியாரும், தாயும், அனைத்துப் பெண் பாலினமும் உணர்ந்து செயல்பட வேண்டும், இவை இக்கதையின் மாந்தர்களிடம் நிகழ்ந்ததா? இல்லை மாற்றி நிகழ்ந்ததா ?
தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது உண்மைதானே, தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை திணிக்கும் போது
ஏற்படும் உணர்வு உணர்ந்தால் மட்டுமே முடியும், இவற்றை உணர்த்தினாளா? இல்லை உணர்ந்தானா?
என்பதை தனது இருவேறுபட்ட முடிவுகள் கொண்ட கதையாக தோழி சுதா ரவி அவர்கள் முரண்படும் நிஜங்கள் என்ற தலைப்பில் அருமையாக படைத்துள்ளார்
கதையின் நாயகன் S2 அவனுக்கு ஆர்மி வைத்து அவன் நல்லவனா கெட்டவனா என்று பட்டிமன்றம் நடந்ததெல்லாம் வேறு கதை , எனக்கு இன்னும் ஆண் நல்லவனா? கெட்டவனா? என்ற முடிவுக்கு வரவே முடியவில்லை .. ஏனென்றால் இவை முரண்படும் நிஜங்கள்.. வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே.. உங்களின் வித்தியாசம் பார்வைக்கு பாராட்டுக்கள்...