மீராவின் கண்ணன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

விண்டோ அவர்கள் "மீராவின் கண்ணன்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.....
 
#2
மீராவின் கண்ணன்
- வின்டோ
View attachment IMG-20200214-WA0002.jpg
-
அத்தியாயம் - 1


“ஹே என் கோலி சோடாவே
என் கறிக் கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ”


அறை முழுவதும் பாடலின் ஒலி தாண்டவம் ஆடியது. “இப்ப வந்தேன்னு வச்சுக்கடி உன்னப் பிச்சு எடுத்துருவன். ஒழுங்கா பாட்ட நிறுத்திட்டு கீழ வாடி” என்று மாதவியின் குரல் - பாடலினூடே கேட்டது. இந்த பேபி வேற என்று நினைத்துக்கொண்டே
கீழே இறங்கி வந்தாள் ( பாட்டை நிறுத்திட்டுத்தான் மக்களே!)நம் கதையின் நாயகி மித்ரா.

பௌர்ணமி நிலவு போன்ற முகம்...தளர்வாக படரவிடப்பட்ட இரண்டடி கூந்தல்... அனைவரையும் வசீகரிக்கும்... புன்னகை எனச் சாதாரண அலங்காரத்துடன் சுடிதாரில் இறங்கிவந்தாள். சென்னை நகரத்தில் புகழ் பெற்ற நகைக்கடையான RAM Jewelers இன் MD Sriram- க்கு PA -வாக பணியாற்றுகிறாள். இந்தக் குறைந்த வயதில் தனது மகளின் திறமையைக் கண்டு பெருமைப்பட்டாலும், அதனை மறைத்துக் கொண்டு கோபமாக,

“ஏண்டி, ஏழு கழுதை வயசாயிடுச்சு , இன்னும் சின்ன புள்ளைங்க மாறி நடந்துக்குற?" என்றார். “வயசுக்கும் பாட்டு டான்சுக்கும் என்னம்மா சம்பந்தம். இங்க பாருங்கப்பா இந்த அம்மாவை காலைலயே திட்றாங்க" என்று தனது தந்தை cum தோழன் ராஜனிடம் அவரது மடியில் படுத்தபடி கோல் முட்டினாள்.


“அது ஒண்ணமில்லமா, நம்மள மாதிரி Youth - க்கு தான் இதெல்லாம் புரியும்” என்றார் ராஜன். ‘அங்க என்ன சத்தம்’ என்ற மாதவியில் குரலில் ராஜன் கைப்புள்ளையா மாறி “ஒண்ணமில்லமா சும்மா
பேசிகிட்டுருந்தோம்" என்றார்.

மித்ரா இதையெல்லாம் சிரிப்புடன் பார்த்திருந்தாள். இது அவர்கள் வீட்டில் தினமும் நடப்பது தான். ராஜன் வைத்திருந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில் , “சென்னையில் தொடர்ந்து ஏழாவது முறையாக பிரம்மாண்ட கடை கொள்ளையடிக்க பட்டுள்ளது. கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மர்மமான கொள்ளையை போலீசார் விசாரித்து வருகின்றன. தொடரும் இந்தக் கொள்ளைகளால் மக்களிடம் பதட்டம் நிலவுகிறது. குற்றவாளியை விரைவில் பிடிப்பதாக DCP மாதவன் பேட்டி” என்று கொட்டை எழுத்தில் இருந்தது.

அந்த பெயரை பார்த்ததும் அவளது மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. அவளது சிந்தனை, அவனை
முதலில் சந்தித்த நாளுக்கு ஷதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது.

*** மூன்று வருடங்களுக்கு முன் ***

மித்ரா கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரியில் பட்டாம்பூச்சியைப் போல் திரிந்தாலும் படிப்பில் கெட்டி. அன்று ஒரு மழைக்கால நாள் வானத்தாய் தனது குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டு இருந்தாள். வழக்கம்போல மித்ரா மழையை ரசித்துக் கொண்டு வந்ததில் முழுவதுமாக நனைந்திருந்தாள். மழை வலுக்க ஆரம்பித்தவுடன் கல்லூரிக்கு ஓடத் தொடங்கினாள். அப்போது திடீரென எதன் மீதோ மோதி கீழே விழுந்தாள். நிமிர்ந்து பார்த்த பொழுது, ஒரு ஆடவன் தனக்கு உதவிக்கரம் நீட்டுவது தெரிந்தது.
மித்ரா, தானே எழுந்தவாறு, கோபத்துடன், “நான்தான் ஓடி வர்றேன்னு தெரியுதுல சார். ஒதுங்கி நிற்க வேண்டியதுதானே? அப்புறமும் சாரி சொல்ற Manners - ஏ கிடையாதா?” என்றாள்.

அவனும் கோபமாக,” ஹலோ மேடம் ! நீங்க ஒழுங்கா வராததுக்கு நான் சாரி கேட்க முடியாது” என்றான். இவர்கள் சண்டையிடும் பொழுது கல்லூரியின் முதல்வர் வந்தார். “Mithra meet Mr Madhavan, Assistant Commissioner of Police, our alumni. Madhavan, this is our college topper, Mithra, a brilliant student. “என்று இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே கை குலுக்கினர். பின், மாதவன் முதல்வருடன் பேசியபடியே செல்ல, மித்ரா வகுப்புக்குச் சென்றாள். அவர்களது முதல் சந்திப்பு மோதலில் தான் ஆரம்பித்தது.(மோதலில் ஆரம்பித்தால் காதலில் தான் முடியும் என்பது உண்மைதானோ).

அதற்குப்பின், மித்ரா அவனைப்பற்றித் தேடியதில் அவனது திறமையைப் பற்றி அறிந்து கொண்டாள். அதுவே அவன் மீது பிடித்ததை ஏற்படுத்தியது. ஆனால் அது காதலா என்று அவளுக்குப் புரியவில்லை அப்படியே இது காதலாக இருந்தாலும் அதை அவளிடம் சொல்லத் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. அவளது ‘எண்ண ரயில்’ நிகழ்காலம் என்னும் ஸ்டேஷனில் நின்றது. பின் பெற்றோர்களிடம் கூறிவிட்டு வேலைக்குக் கிளம்பினாள், அங்கு காத்திருக்கும் அதிர்ச்சியைப் பற்றி அறியாமல்.