மறுபடியுமா? - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"மறுபடியுமா?" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் விஜயன் அவர்கள்.....................
 
#2
மறுபடியுமா? 1

ஆசிரமம்..

அர்ஜுன் மற்றும் அவன் நண்பன் சிவா ஹரினந்தன் அடியார் கண் முழிக்கும் வரை காத்து இருந்தனர்.

"சிவா உண்மையில் இந்த அடியார் சக்தி வாயந்தவர் தானே. ஏதாவது போலி சாமியார இருந்துட போறார்." - அர்ஜுன் சந்தேகமா கேட்க

"அடேய் போய் வாயை கழுவு. இவர் எப்படிப்பட்ட மகான் தெரியுமா? என்னோட காதல் ஓகே ஆகவே இவர் கிட்ட நான் வாங்கிய ஆசிர்வாதம் தான் காரணம். அதே மாதிரி உன் காதலும் சக்ஸஸ் ஆகணுமா ல.. இன்னிக்கு வேற பிரியாவை மீட் பண்ண போற. அதுக்கு இவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்ட வச்சுக்கோ உன் லவ்வும் சக்ஸஸ்." - என வாழ்த்தினான்

"அப்போ இவர் ஹரினந்தன் இல்ல காதல் நந்தன் சொல்லு." - அர்ஜுன்

"இவரை அப்படியும் கூப்பிடலாம்" - சிவா

கண் முழித்த ஹரினந்தன் அடியார் அவர் முன்னால் இருந்த இருவரை பார்த்து, "சொல்லுங்க"

"சாமி இவன் என் நண்பன் பெயர் அர்ஜுன். இவன் ரெண்டு மாசமா ஒரு பொண்ணை லவ் பண்றான். அவன் அதிர்ஷ்டம் அவ என் லவ்வர் கௌசல்யாவின் ப்ரெண்ட் ஆ போய்ட்ட. எப்படியோ நாங்க கஷ்டப்பட்டு இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணிட்டோம். நீங்க ஒரு ஆசிர்வாதம் பண்ணிட்டால் யானை பலம் வந்த மாதிரி இருக்கும்." - சிவா

"நீ செய்யும் தவறை மாற்றும் வரம் உனக்கு தருகிறேன். நீ நினைத்த காரியம் நடக்கும் வரை இரவு 9 மணிக்கு திரும்பி கடைசியாக தூங்கிய நேரத்தில் முழிப்பாய். நீ செய்த தவறை மாற்ற இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்." - என ஆசிர்வாதம் பண்ணியவர் திரும்பி தியானம் செய்ய கண்ணை முடினர்.

கணிக்கையாக ஐம்பது ஆயிரம் செலுத்திவிட்டு வெளியில் வந்தார்கள்.

"அது எப்படிடா செய்த தப்பை மாற்ற முடியும். இது நம்புற மாதிரியா இருக்கு. தேவையில்லாமல் கொடுத்த ஐம்பது ஆயிரம் வேஸ்ட்." - அர்ஜுன்

"அவர் சொன்ன மாதிரி நடக்கும் பார் அப்போ தெரியும் அவர் சக்தி." - சிவா

பிறகு அவங்க வண்டியை ஸ்டார்ட் செய்ய முயலும் போது அது பஞ்சர் ஆகி இருந்ததால்..

"உண்மை தான் மச்சி உன் சாமிக்கு சக்தி இருக்கு இங்க பார் வண்டி பஞ்சர். இதுவும் உன் சாமி பண்ண வேலை தான்." - அர்ஜுன்

மெக்கானிக் ஷாப் ல வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு என்றார்கள். அப்போ கீரை வீற்று கொண்டு சென்ற ஒரு பாட்டிமா வெயில் காராணமாக மயங்கி விழுவதை கண்ட அவர்கள் ஓடி சென்று மாட்டியே தாங்கி ஒரு இடத்தில் உட்கார வைத்து இளப்பற வைத்தனர்.

"பாட்டி இப்போ பரவலையா? உங்க வீட்டு வரை துணைக்கு வரட்ட." - அர்ஜுன்

"இல்லப்பா இப்போ நானே போய்க்கிறேன். ரொம்ப நன்றிப்பா யார் பெற்ற புள்ளையோ சரியான நேரத்தில் உதவிக்கு வந்தே." - பாட்டி

சொல்ல சொல்ல கேட்காமல் தன்னிடம் இருந்த ஒரு தாயத்தை அவன் கையில் கட்டிய பாட்டிம்மா..

"பேரன்டி நீ நினைச்ச காரியம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்." - பாட்டி

அர்ஜுனை ஆசிர்வாதம் செய்த அந்த பாட்டி சென்று விட்டார். பின் சிவாவுடன் வீட்டுக்கு சென்றவன் இரவு விருந்துக்காக தயாராக ஆரம்பித்தான்.

அர்ஜுன் ஏதோ ஒரு பிசினஸ் டிஸ்கஷன் ல கலந்து கொள்கிறவன் மாதிரி டிரஸ் அணிந்து கொண்டான். எதற்கும் இருக்கட்டும் என்று சிவா அர்ஜூனுக்கு மற்றொரு நல்ல உடையா எடுத்து கொண்டான்.

"சிவா கொஞ்சம் தலைவலியா இருக்கு அங்க தலைவலி ஏதாவது இருந்தால் கொடு." - அர்ஜுன்

"சாதாரண தலைவலிக்கு எதுக்குடா மாத்திரை" - சிவா

"உனக்கே தெரியும் தலைவலி வந்தாலே என் வாய் என் கட்டுப்பாட்டில் இருக்காது. இதுல பிரியாவை வேற பார்க்க போறேன். நீ பேசாம அந்த மாத்திரையை கொடு வலி தாங்க முடியலை." - அர்ஜுன்

"என்னமோ பண்ணி தொல. இந்த ஒரு தடவை தான் அதுவும் உங்க மீட்டிங் ல எந்த சொதப்பலும் வரவே கூடாது என்று தான் தருகிறேன். அடுத்த தடவை எவ்வளவு வலிச்சாலும் மாத்திரை எடுக்க கூடாது. அப்பறம் இந்த சிக்கரட் இந்த பழக்கத்தையும் விடு. ஒரு நாளைக்கு எத்தனை? - சிவா

"முயற்சி செய்கிறேன் டா" - என சொன்னவன் தான் கையில் இருக்கும் சிக்கரட் ஏ அணைக்காமல் ஜன்னல் வழியா தூக்கி போட்டுவிட்டு தலைவலி மாத்திரை எடுத்துக்கொண்டான்.

அர்ஜுன் சிவாவிடம் சொல்லி டாக்ஸிக்கு புக் பண்ணான்.

அவங்க வெயிட் பண்ணும் நேரத்தில் பக்கத்து விட்டு பத்து வயசு குட்டி பொண்ணு வர்ஷா அர்ஜுன் மற்றும் சிவாவிடம் சாக்லேட் தந்து..

"காலையிலிருந்து உங்களை தேடிக்கிட்டு இருக்கேன். எனக்கு இன்னைக்கு பர்த்டே விஷ் பண்ணுங்க." - வர்ஷா

"ஹேப்பி பர்த்டே வர்ஷா குட்டி. சாரிமா நம்ம வர்ஷா செல்லத்துக்கு பர்த்டே என எங்களுக்கு தெரியாது தெரிந்திருந்தால் கிஃப்ட் ஏதாவது வாங்கி இருப்போம்." - அர்ஜுன்

"பரவல அர்ஜூ இட்ஸ் ஓகே. நம்ம பிரியக்கா உனக்கு ஓகே மட்டும் சொல்ல வை அதுவே எனக்கு பெரிய கிஃப்ட்." - வர்ஷா

"அடேய் அர்ஜுன் சின்ன பொண்ணுகிட்ட எல்லாம் உன் லவ் பற்றி சொல்ல முடிஞ்ச உன்னால பிரியா கிட்ட சொல்ல முடியலை. இதுல இவன் லவ்வுக்கு என் கௌசி செல்லத்தே வேற ஹெல்ப் பண்ண சொல்லி ஒரே டார்ச்சர்." - சிவா

"கௌசல்யா எனக்கு தங்கச்சி மாதிரி டா. அண்ணனின் காதலுக்கு தங்கச்சி உதவி செய்வதில் என்ன தப்பு?. வர்ஷா செல்லம் இன்னிக்கே பிரியாவை பார்க்கிறேன், லவ் சொல்றேன், ஓகே பண்றேன் அந்த சந்தோசத்தில் அடுத்த வாரமே உனக்கு பிடிச்ச அனிமேஷன் மூவிக்கு பிரியவோட போறோம் ." - அர்ஜுன்

"வர்ஷா குட்டி இவனை நம்பாதே உனக்கு படத்துக்கு போகணும் என்றால் சொல்லு நான் கூட்டிக்கிட்டு போறேன். இவனை நம்பினால் அடுத்த ஜென்மம் வந்தாலும் போக முடியாது." - சிவா

"சிவ் எங்க அர்ஜு வின் கெத்து இன்னும் உனக்கு தெரியலை. நீ பார்த்துக்கிட்டே இரு இன்னிக்கு கண்டிப்பா என் அர்ஜு லவ் ஓகே பண்ணிட்டு தான் வருவான்." - வர்ஷா

"தாங்க்ஸ் வர்ஷா. சின்ன பொண்ணு நீ நம்புற அளவுக்கு என் நண்பன் அதுவும் உயிர் நண்பன் என்னை நம்பலையே" - அர்ஜுன்

"நாங்க டேட்டிங் ஏ ஏற்பாடு பண்றது இது மூணாவது முறை . கடைசி ரெண்டு தடவை வயிறு கலக்குது சொல்லி ஒடியவன் தானே நீ." - சிவா

"இந்த தடவை சக்ஸஸ் பண்றேன் எண்ணி மூன்றே மாசத்தில் அவள் கழுத்தில் தாலி கட்டுறேன். இது உன் நண்பன் தரும் வாக்கு." - அர்ஜுன்

"பேசுறது எல்லாம் நல்ல தான் பேசுற ஆனால் உன்கிட்ட பினிஷிங் சரியில்லையே பா." - சிவா

சரியாக இரவு 6.15 மணிக்கு அவங்க புக் பண்ண டாக்ஸி வந்தது.

"வர்ஷா குட்டி நான் போய் வெற்றியோடு திரும்பி வரேன். தட்டா பாய்" - அர்ஜுன்

தலைவலிக்கு மாத்திரை போட்டத்தால் வந்த தூக்கம் அவனை அரை மணிநேரம் ஆட்கொண்டது.

சரியா 6.45 மணிக்கு சிவா அவனை எழுப்பி..

"மச்சி நம்ம வரவேண்டிய இடம் வந்துச்சு இறங்கு." - சிவா

டாக்ஸுக்கு பணம் தந்தவர்கள் அந்த ரெஸ்டாரன்ட் உள்ளே நுழைந்தார்கள்.

"அர்ஜுன் என்கிட்ட இன்னொரு செட் டிரஸ் இருக்கு. அதை இப்போவே மாற்றிக்கொள்வது நல்லது. சுற்றி பார் எல்லாரும் எவ்வளவு ஸ்டைல் ல டிரஸ் பண்ணி இருக்காங்க. பிளீஸ் டா சொன்ன கேளு.." - சிவா

"இதுவே போதும்" - அர்ஜூன்

"உன் தலைவிதி அதை யாரால் மாற்ற முடியும்." - சிவா

அவர்களுக்கு முன்னே சிவாவின் காதலி கௌசல்யாவும் அவள் தோழியும் அர்ஜுன் காதலிக்கும் பெண்ணான பிரியாவும் வந்திருந்தார்கள்.

கௌசல்யா ஒயிட் டிசைனர் சுடிதாரிலும் மற்றும் பிரியா பிங்க் டிசைனர் புடவையிலும் இருந்தார்கள். அதனை பார்த்த சிவா..

"இதோ பார் இவங்க கூட இடத்துக்கு ஏற்ற மாதிரி வந்திருக்காங்க. ஆனால் நீ?" - சிவா

"விடு சிவா இதற்கு மேல் எதுவும் மாற்ற முடியாது. நம்மளை வேற பார்த்துட்டாங்க அவங்க அருகே போலாம் இல்ல எதையாவது தூக்கி போட்டு மண்டையே உடைக்க போறாங்க." - அர்ஜுன்

அந்த பெண்கள் அருகே சென்றவர்கள்..

"கௌசி 7 மணிக்கு தானே மீட் பண்றதா பிளான். இந்த மாமனை பார்க்க ரொம்ப சீக்கிரமா வந்துட்டே போல? மாமன் மேல அவ்வளவு லவ் ஆ டி செல்லம்." - சிவா

"உன் முஞ்சி. இந்த வடபழனி டிராஃபிக் ஏ நம்பி சீக்கிரம் கிளம்பி வந்தால் இன்னிக்கு பார்த்து ஒரு டிராஃபிக் கூட இல்ல. கடந்த பதினைந்து நிமிடமா காத்து இருக்கோம். எல்லாம் எங்க நேரம்.." - கௌசல்யா

"சரி ரொம்ப சூடா இருக்க உன்னை கூல் பண்ணவே ஏதோ ஒரு ஓரமா ஒரு இடம் இருக்கே அங்கே போய் ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா?. அர்ஜுன் நீயும் பிரியாவும் அதுவரை பேசிக்கிட்டு இருங்க அங்க பொறுமையா எங்க வேலையை முடிச்சுட்டு வரோம்." - சிவா

ஆனால் சிவா கண்ணசைவில்.. "மவனே இன்னிக்கு மட்டும் ஏதாவது சொதப்பினே உன்னை கொன்றே விடுவேன்..".

சிவா கௌசல்யா போன பிறகும் கூட அர்ஜுனால் தன் காதலிக்கும் பெண்ணின் கண்ணை பார்க்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த பிரியா..

"அர்ஜுன் ஏன்டா ரொம்ப நேரமா பக்கத்து டேபிள் பொண்ணை முறைச்சு முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்கே? அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காளா?" - பிரியா

' என் தேவதை நீ என் முன்னால் இருக்கே நான் எதுக்கு வேற பொண்ணே பார்க்கணும்.' - மனதில் நினைத்தவன்

"சே சே இல்ல அந்த பொண்ணு சாப்பிடுற ஐட்டம் என்னனு தான் பார்த்தேன்." - ஏதோ சொல்லி சமாளித்தான்

"அவங்க ஜூஸ் குடிக்கிறது லெமன் ஜுஸ் தான். இப்போ உனக்கு என்ன பிரச்சனை. ஆபீஸ் ல தான் என்கிட்ட எதுவும் பேசாமல் இருக்கே பார்த்தால் இங்கயுமா?.." - பிரியா

"சாரி சாரி பிரியா" சொன்ன என் சொன்னவன் என்ன சமாளிப்பது தெரியாமல், "நம்ம ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிடுவோமா?"

"நீயே எதையாவது சொல்லு " - பிரியா

வெயிட்டர் ஏ அழைத்து, "ஒன் சீஸ் பர்கர், ஒன் கோபி நூடுல்ஸ் அப்பறம் ஒன் சாக்லேட் மில்க்ஷேக் அண்ட் ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்", என அர்ஜுன் ஆர்டர் செய்தான்.

"பரவலையே நான் அடிக்கடி என்ன சாப்பிடுவேன் தெரிந்து வச்சுயிருக்க." - பிரியா

' உன்னை பற்றி தான் எனக்கு எல்லாம் தெரியுமே. ஆனால் இதை சொல்லணும் நினைக்கும் போது தான் வார்த்தையே வரல' - மனதில் சொல்லிக்கொண்டு அவளிடம், "அப்படியா?" என மட்டும் சொல்லி அமைதியா இருந்துட்டான்.

இன்னும் ஏதாவது சொல்லுவான் என்று அவள் காத்து இருக்க அவனோ ஆர்டர் செய்த உணவு வந்த பிறகும் எதுவும் பேசாமல் உணவில் மட்டும் கவனம் செலுத்தினான்.

"அர்ஜுன் ஏதாவது பேசுடா ரொம்ப போர் அடிக்குது" - பிரியா

என்ன பேசுறது தெரியாதவன், "பர்கர் நல்ல இருக்கா? வேற ஏதாவது ஆர்டர் பண்ணனுமா?" - அர்ஜுன்

"சார் உங்க அகராதியில் பேசுறது என்றால் இதனா? இல்ல இன்னும் வேற ஏதாவது இருக்கா?" - பிரியா

' என்னத்த பேசுறது உன்னை பார்த்தாலே பேச்சு வர மாட்டேங்குது', மனதில் சொன்னவன், "நீயே ஏதாவது பேசு."

' சரியான தயிர்சாதமா இருப்பான் போல. இவன் கூட இன்னிக்கு டேட்டிங் ஃபிக்ஸ் பண்ணேன் இருப்பாரு. என் புத்திய நானே அடிச்சுக்கணும்', அவ்வாறு நினைத்தவள், "ஒன்னுமே இல்ல சாமி நீ சாப்பிடு.".

சரியாக இரவு எட்டரை மணிக்கு..

ஜோடியாக இரண்டு மூன்று ஐஸ்க்ரீம் சாப்பிட சிவாவும் கௌசல்யாவும் திரும்பி வந்தனர்.

"என்ன பிரியா எல்லாம் ஓகே தானே. உங்க ரெண்டு பேரின் டேட்டிங் எப்படி போச்சு" - சிவா

"சிவா பாய் எனக்கு நிறைய வேலை இருக்கு அப்புறம் பார்ப்போம்" - பிரியா

அவ்வாறு கோவமாக சொன்னவள் தன் தோழி கௌசல்யாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

"அடேய் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை டேட்டிங் வர சம்மதிக்க வைத்தால் எல்லாத்தையும் சொதப்பிட்டே. இனி என்ன ஆனாலும் உன் மூஞ்சியில கூட அவள் முழிக்க மாட்டாள். இந்த மாதிரி இன்னொரு நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கவே கிடைக்காது." - சிவா

காலையில் ஹரினந்தன் அடியார் சொன்னதை நினைத்து பார்த்தவன்.

"யோவ் சாமி என்னமோ சொன்ன நான் செய்த ஒரு தப்பை மாற்ற பத்து முறை வாய்ப்பு கிடைக்கும் என்றாயே!! இன்னும் பத்து நொடியில் 9 மணி ஆகப்போகிறது பார்க்கலாம் நீ சொன்ன மாதிரி இன்னொரு வாய்ப்பு கிடைக்குதான்னு.?" என சொல்லி அவன் வாய் மூடவும் ஒன்பது மணி ஆகவும் சரியா இருந்தது.

தூக்கத்திலிருந்து அர்ஜூனை எழுப்பிய சிவா, "மச்சி நம்ம வரவேண்டிய இடம் வந்துச்சு இறங்கு." - சிவா

வாட்சைப் பார்த்தான் சரியா 6.45 மணி. ஒன்றுமே புரியாதவன் குழப்பத்தோடு நிற்க அந்த நேரத்துக்குள்
டாக்ஸுக்கு பணம் தந்த சிவா அவனை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

அடுத்து அர்ஜுனனின் கனவில் வந்த அதை வசனம் சிவா சொல்ல எதுவும் பேசாமல் சொன்ன மாதிரியே உடை மாற்றிக்கொண்டு வந்தான்.

அவனின் குழப்பத்தை அதிகரிக்கவே கௌசல்யாவும் பிரியாவும் அவர்களுக்கு முன்னே வந்து இருந்தார்கள் அவன் கனவில் கண்ட அதே உடையில்..
 

Attachments

#3
மறுபடியுமா..? 2

அர்ஜுன் அதிர்ச்சியுடன் அந்த இரு பெண்களை பார்த்து கொண்டு இருக்க சிவா அவனை உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்தான்.

"அர்ஜுன் என்னடா ஆச்சு சிலை மாதிரியே நின்றுட்ட ஏதாவது பிரச்சனையா? இல்ல போன தடவை மாதிரி பிரியாவை பார்த்தவுடனே வயிறு கலக்குதா?." - சிவா

"ஒண்ணும் இல்லடா வா போலாம்." - அர்ஜுன்

அந்த பெண்கள் அருகே சென்றவர்கள்..

"கௌசி 7 மணிக்கு தானே மீட் பண்றதா பிளான். இந்த மாமனை பார்க்க ரொம்ப சீக்கிரமா வந்துட்டே போல? மாமன் மேல அவ்வளவு லவ் ஆ டி செல்லம்." - சிவா

"உன் முஞ்சி. இந்த வடபழனி டிராஃபிக் ஏ நம்பி சீக்கிரம் கிளம்பி வந்தால் இன்னிக்கு பார்த்து ஒரு டிராஃபிக் கூட இல்ல. கடந்த பதினைந்து நிமிடமா காத்து இருக்கோம். எல்லாம் எங்க நேரம்.." - கௌசல்யா

"சரி ரொம்ப சூடா இருக்க உன்னை கூல் பண்ணவே ஏதோ ஒரு ஓரமா ஒரு இடம் இருக்கே அங்கே போய் ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா?. அர்ஜுன் நீயும் பிரியாவும் அதுவரை பேசிக்கிட்டு இருங்க அங்க பொறுமையா எங்க வேலையை முடிச்சுட்டு வரோம்." - சிவா

ஆனால் சிவா கண்ணசைவில்.. "மவனே இன்னிக்கு மட்டும் ஏதாவது சொதப்பினே உன்னை கொன்றே விடுவேன்..".

ஒரு வார்த்தை கூட தப்பாமல் போன தடவை நடந்தது போல நடக்க அர்ஜூக்கோ, 'இங்க என்னடா தான் நடக்குது? ஏதோ ஒன்னு ரெண்டு விஷயம் ஒரே மாதிரி இருந்தால் பரவல. ஆனால் நடக்கும் எல்லா விஷயமும் ஆச்சு பிசரமல் அப்படியேவா? முடியலடா சாமி..'.

"என்ன அர்ஜுன் சார் என்ன யோசனை?" - பிரியா கொஞ்சம் நக்கலா கேட்க

' என்னத்த சொல்றது? எதை சொல்றது? இவளுக்கு சொன்னாலும் புரியுமா?', என யோசித்தான் உடனே அவர்களின் பக்கத்து டேபிள் பொண்ணு குடிக்கும் ஜுஸ் பற்றி இந்த தடவை சரியா தப்பவே கேட்டான்.

"பிரியா அந்த பக்கத்து டேபிள் பொண்ணு குடிக்கிற லெமன் ஜுஸ் சால்ட் ஆ? ஸ்வீட் ஆ?", இப்படி ரொம்ப புத்திசாலித்தனமாக அர்ஜுன் கேட்க

"அர்ஜுன் நம்ம இங்க என்ன விஷயத்துக்கு வந்து இருக்கோம் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? நம்மளை பற்றி பேசுவாய் பார்த்தால் பக்கத்து டேபிள் பொண்ணு என்ன குடிக்குது என்கிற வெட்டி ஆராய்ச்சி எதுக்கு?." - அர்ஜுன் தன் முன்னால் வேற பொண்ணை கவனித்து பேசியதை கேட்டு கோவத்தில் பிரியா கத்தினாள்.

' போச்சு திரும்பி சொதப்பிட்டேன். அடேய் அர்ஜுன் ஏன்டா இப்படி? வேலையில் எவ்வளவுக்கு எவ்வளவு கெத்த இருக்குமோ அவ்வளவுக்கு அவ்வளவு இவள் முன்னாடி கோமாளியா இருக்கோமே. யோவ் கடவுளே இதுக்கு மேல் நான் என்னடா பண்றது.', என்று ஏதோ ஏதோ யோசித்தான் அதே பழைய ஆர்டர் பண்ற முடிவுக்கே வந்தான்.

"சாரி பிரியா காண்டு அகதே நம்ம ஏதாவது ஆர்டர் பண்ணிக்கிட்டே பேசுவோமா?"

கொஞ்ச நேரம் யோசித்தவள், "சரி அர்ஜுன் நீயே எதையாவது சொல்லு. பார்க்கலாம் என் டேஸ்ட் உனக்கு தெரியுதா என்று? " - பிரியா

வெயிட்டர் ஏ அழைத்து, "ஒன் சீஸ் பர்கர், ஒன் கோபி நூடுல்ஸ் அப்பறம் ஒன் சாக்லேட் மில்க்ஷேக் அண்ட் ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்", என அர்ஜுன் ஆர்டர் செய்தான்.

"பரவலையே நான் என்ன சாப்பிடுவேன் தெரிந்து வச்சுயிருக்க நாட் பேட். எப்படி தெரியும்?" - பிரியா

இந்த தடவை அவன் தயங்காமல், "அதுவா தினமும் நம்ம ஆபீஸ் கேன்டீன் ல சீஸ் பர்கர் மற்றும் சாக்லேட் மில்க்ஷேக் கேட்டு நீ பண்ற அலப்பறை நம்ம ஆபீஸ்சே அறிந்தது ஆச்சே. இருந்தாலும் ஒரே வகையான ஐட்டம் சாப்பிட்டு உனக்கு போர் அடிக்கல?", கிண்டலில் ஆரம்பித்து அக்கறையில் முடித்தான்.

அது புரியதவள் அந்த கிண்டலை மட்டும் வைத்து கொண்டு, "ஒ நீ மட்டும் என்னவாம் எப்போ பார்த்தாலும் கோபி ரைஸ், கோபி நூடுல்ஸ் இல்ல கோபி வகையான உணவே சாப்பிடுற அது மாதிரி தான் இதுவும்.", நீ குறை சொன்னால் நானும் உன்னை குறை சொல்வேன் என்கிற மாதிரி அவளும் பேசினாள்.

"அம்மா தாயே ஏதோ உன் நல்லதுக்கு சொன்னேன். நான் கூட இந்த கோபி பழக்கத்தை மற்ற தான் பார்க்கிறேன்."

"சரி எனக்கு ஒரு யோசனை அர்ஜுன் நம்ம இப்படி பண்ணலாம்"

"எப்படி?"

"இப்போ ஆர்டர் பண்ணதை மாற்றி எடுத்துப்போம். பர்கர் உனக்கு கோபி எனக்கு. சாக்லேட் மில்க்ஷேக் உனக்கு ஸ்ட்ராபெரி மில்க்ஷேக் எனக்கு. ஓகே ஆ", என அர்ஜூனை சகஜ நிலைக்கு கொண்டு வர பிரியா முயன்றாள்.

அதனை புரிந்தவனோ உடனை சரி என்றான்.

அவங்க ஆர்டர் பண்ணது வந்தவுடன் பிளான் பண்ண மாதிரியே சாப்பிட ஆரம்பித்தனர். இந்த தடவை சும்மா இருக்காமல் அவளை கொஞ்சம் தன்னை பற்றி கொஞ்சம் என பேசிக்கொண்டு இருந்தார்கள்.

என்ன பேசினாலும் ஒரு அளவுக்கு மேல் காதல் கல்யாணம் என்ற விஷயத்தை அர்ஜுன் பேச தயங்குவதை கண்டு பிரியா..

"அர்ஜுன் எதுவா இருந்தாலும் தயங்காமல் பேசுடா. நம்ம டேட்டிங் தன் வந்திருக்கோம் அப்பறம் எதுக்கு இந்த தயக்கம். எல்லாம் ஓகே என்றால் நம்ம பரெண்ட்ஸ் கூட நமக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆ இருக்காங்க. இப்படி ஒவ்வொரு வார்த்தை பேசவே தயங்கிட்டு இருந்தே சத்தியமா சேட் ஏ ஆகாது."

"தயக்கம் எதுவும் இல்ல பிரியா. பயம் தான் எங்க ஏதாவது எடகுடமா பேசிடுவேனோ இல்ல ரொம்ப க்ளோஸ் ஆ போய் உன்னை எரிச்சல் படுத்துற மாதிரி ஆய்டுமோ. இப்படி பல குழப்பங்கள்"

"இப்படி நீ யோசித்து யோசித்து பேசுறது தான் எரிச்சலா இருக்கு."

திரும்பி பழைய மாதிரி அமைதியா அர்ஜுன் சாப்பிட்டில் மட்டும் கவனமா இருந்தான். மறுபடியும் இன்னொரு வாய்ப்பு இருக்கும் அதில் பார்த்துக்கலாம் என்ற நம்பிக்கையில்.

'ஐயோ இந்த தயிர்சாதம் எப்போ காதலை சொல்றது நம்ம எப்போ இவனை கல்யாணம் பண்ணிக்கிறது. பார்க்க ஹீரோ மாதிரி இருந்து என்ன பிரோஜனம் மனசு விட்டு பேச தைரியம் இல்லயே..', பிரியா மனதில் இப்படி ஓட..

அர்ஜுன் மனதிலோ, ' நம்மளை பேசவைக்க நம்ம ஆள் ரொம்பவே முயற்சி பண்ற ஆனால் என்ன அவள் கண்ணை பார்த்தால் என்ன பேச வந்தாலும் மறந்து போகுது. அடேய் காதல் நந்தா இது தெரிந்து தான் பத்து வாய்ப்பு தந்தியா? ரெண்டு வாய்ப்பு ஏற்கனவே போச்சு. இன்னும் எட்டு இருக்கு. சரி சமாளிப்போம்'.

(அர்ஜுன் பிரியா ரெண்டு பேருமே ஒரே ஆபீஸ் ல வேலை பார்க்கிறங்க. சிவா மற்றும் கௌசல்யாவும் கூட அதே ஆபீஸ் தான். சிவா அர்ஜுனின் ப்ரெண்ட் அப்பறம் பிரியா கௌசல்யாவின் ப்ரெண்ட். அர்ஜுன் மனதிலும் சரி பிரியா மனதிலும் சரி ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் இருக்கு. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் அர்ஜுன் மனதில் ஒளிந்து இருக்கும் பயம் மற்றும் தயக்கமே. இருவருக்குமே பழைய காதல் அனுபவம் என்று சிலது உண்டு. பிரியாவுக்கு தன் காதல் தோல்வியை பற்றி சொல்ல தயக்கமோ அதே சமயத்தில் அர்ஜுனின் காதல் தோல்விகளை கேட்கவோ கோபம் எரிச்சல் இல்ல. ரெண்டு மாசமா இந்த ரெண்டு பேரின் ப்ரெண்ட்ஸும் நம்ம அர்ஜுன் பிரியா இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்து வைக்க முயல்கிறார்கள். அவர்களின் முயற்சிகளின் பலனால் நம்ம ஹீரோ ஹீரோயின்ஸ் பெற்றோர்கள் வரை சென்று முதலிலேயே சம்மதம் வாங்கியது வரை நடந்தது.

அதையெல்லாம் தாண்டி இப்போ பிரச்சனையா இருப்பது அர்ஜுனின் தயக்கமே. எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வர பிரியா தயாராக இருக்கிறாள் ஆனால் அர்ஜுன்?. அர்ஜுன் பிரியாவிடம் மனம் விட்டு பேசுவரை அவனின் காலப்பயணத்தின் சுழற்சி ஒரு முடிவுக்கு வராது.)

சரியாக இரவு எட்டரை மணிக்கு..

ஜோடியாக இரண்டு மூன்று ஐஸ்க்ரீம் சாப்பிட சிவாவும் கௌசல்யாவும் திரும்பி வந்தனர்.

"என்ன பிரியா எல்லாம் ஓகே தானே. உங்க ரெண்டு பேரின் டேட்டிங் எப்படி போச்சு" - சிவா

"நல்ல போச்சு. அதிசயமா ஐயா பத்து வார்த்தை பேசி இருக்கார். அவன் அவன் தான் காதலிக்கும் பொண்ணு கிட்ட காதலை சொல்லி புரியவைக்க கஷ்டப்படுவங்க. ஆனால் இங்க இவன் காதலிக்கிறான் என்று நானே கண்டுபிடித்து நானே இவங்க அப்பா அம்மா என் அப்பா அம்மா கிட்ட பேசி எல்லாம் ஓகே வாங்கி இவன் வாய் மூலமே காதலை சொல்ல வைக்க கஷ்டப்படுறேன். எல்லாம் என் தலை எழுத்து யாப்பா சாமி இதுக்கு மேல என்னால் முடியாது. இனி இவன் ஆச்சு இவன் பயம் தயக்கம் ஆச்சு. கடந்த ரெண்டு மாசமா இவன் காதலை இன்னிக்கு சொல்வான் நாளைக்கு சொல்வான் என்று நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது.", என பிரியா பாதி கோபத்திலும் பாதி ஏமாற்றத்திலும் சொல்லிட்டு கௌசல்யா கூட கிளம்பிட்டாள்.

போன தடவை மாதிரி இந்த தடவையும் சிவா..

"அடேய் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை டேட்டிங் வர சம்மதிக்க வைத்தால் எல்லாத்தையும் சொதப்பிட்டே. இனி என்ன ஆனாலும் உன் மூஞ்சியில கூட அவள் முழிக்க மாட்டாள். இந்த மாதிரி இன்னொரு நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கவே கிடைக்காது." - சிவா

அர்ஜுன் சிரித்து கொண்டே..

"இன்னொரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைக்கவே கிடைக்காதா? மச்சி இன்னும் எனக்கு எட்டு வாய்ப்பு இருக்கு. இன்னும் பத்து நொடியில் திரும்பி மறுபடியும் டாக்ஸி ல சந்திப்போம்."

"என்னடா சொல்ற மறுபடியுமா?"

"ஆமாம் மறுபடியும்"

அர்ஜுனின் மூன்றாவது வாய்ப்பு மறுபடியும் 6.45 மணி ஆரம்பித்தது.

தூக்கத்திலிருந்து அர்ஜூனை எழுப்பிய சிவா, "மச்சி நம்ம வரவேண்டிய இடம் வந்துச்சு இறங்கு." - சிவா

இந்த தடவை அர்ஜுன் சொதப்பல் என்னவா இருக்குமோ யாருக்கு தெரியும்...