மனம் திருந்தினால் (ள்) - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்து அவர்கள் "மனம் திருந்தினால் (ள்) என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்.
 
#2
மனம் திருந்தினால்(ள்) - 1

கறுவானமாயினும் நட்சத்திர ஜொலிப்போடு தன்னை அலங்கரித்து வட்டநிலவை பொட்டாய் இட்டொரு இரவொன்றை சூடிக்கொண்டது,.... இரவில் வானும் ரசிக்கத்தகவை தான் பெண்ணாய் நீ வருணித்தால்.....

இரவு மணி பத்தாகிட,கண்ணாடி முன்னின்று தன்னை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.....தனது ஸ்ர்ட் சரியாக உள்ளதாக அதில் உள்ள பட்டன்களை போட்டவள் இடையின் கீழ்வரை இழுத்துவிட்டு கொண்டாள் தனது ஸ்ர்டை....கைகளை மடித்துவிட்டவள் தனது முடிகளை அள்ளி முடித்துக்கொண்டவள்...தன்னை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தாள்....மிகவும் கட்சிதமாக இருக்க தனது பேக்கை எடுத்தாள் அதில் சிறு கத்தி,மிளகாய் பொடி ஹிட் ஸ்ப்ரே...இன்னும் பொருட்கள் தனக்கான பாதுகாப்பிற்காக எடுத்துவைத்தாள்....

இதையெல்லாம் பார்த்த அவளின் அன்னை கற்பகம் அவளருகில் வந்தார்...." இதெல்லாம் தேவையாடி உனக்கு ஏன் காலைல தான் வேலைப்பார்க்கிறீயே அது போதாதா...நைட்டும் வேலைக்கு போனுமா அதுவும் டேக்கிஸிக்கு ஓட்ட போனுமா..,உனக்கு ஒன்னுனா யாருடி இருக்கா எங்களுக்கு....இவ்வளவு உழைச்சுதான் வீட்ட காப்பாத்தனுமா.,," என்ற பயம் கலந்த அக்கறையில் கேட்டிட.

" என்ன பண்ண சொல்லுற நாம சொந்த வீட்டுல இருந்தாலும் வாடகை வீடு மாதிரி லோன் கட்டுறோம் அந்த பேங்க்காரனுங்களுக்கு....உன் புருசன் ஆடம்பரத்துக்கொண்டு பொறந்தவனாட்டம் காரு வீடுனு வாங்கினாலும் பாதுக்காக்க தெரிஞ்சா அந்த மனுசனுக்கு குடிச்சுகுடிச்சு பாதி அழிச்சுட்டு போயிட்டாரு....இதோ மீதி இருக்கிற இந்த காரையும் வீட்டையும் காப்பாத்தனும்ல பாப்பாவேற நல்ல படிக்க வைக்கனும் ல...அப்ப நான் உழைச்சுதான் ஆகனுமா..." என்றாள்

" அதுக்குனு நைட்டா டி உழைக்கனும் உனக்கு என்ன ஆகுமோனு ஏதாகுமோனு திக் திக் இருக்குடி நீ பத்திரமா இருக்கீயா இல்லை ஏதும் ஆபத்தா மடியில நெருப்பகட்டிட்டூ இருக்கேன்..."

" இரண்டு கார் இருக்கே அத**** டேக்ஸில விட்டு பணம் சம்பரிக்கலாம் நினைச்சுதான் நானும் விட்டேன்...அதுக்கு இரண்டு பேரையும் சம்பளத்துக்கு போட்டேன் ஆன அவனுங்களும் சரியில்ல குடிச்சுட்டு மட்டையாகி கார் ஓட்டுறதுமில்லை ஆன சம்பளத்த மட்டும் வாங்கிறானுங்க தேவையா இது அதுவேற தண்டத்துக்கு அதான் நானே ஓட்டலாம் மூடிவு பண்ணேன்...."

" இல்லடி காலம் கெட்டு கெடக்கு எவன் எப்படி வந்து கார்ல ஏறுவானு தெரியல பக் பக் இருக்குடி,,நீ பையனா இருந்தா பிரச்சனை இல்லை பத்திரமா எப்பையும் வந்திடுவ ஆன நீ பொண்ணா இருக்கிறது தானடி பிரச்சனையே உனக்கு இன்னும் கல்யாணம் கூடா ஆகல அதுக்குள்ள ஒன்னுகடக்க ஒன்னு ஆச்சுனா என்னடி பண்றது..."

" விதினு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்மா......" என்றாள் அமர்த்தலாக...

" என்னடி பேசுர விதினு சொல்லனுமா இங்க பாருடி என் நேரம் அந்த மனுசனோட பணத்த வீட்டப்பார்த்து அவரு எப்படி என்னாஏதுனு விசாரிக்காம எங்க அப்பா கட்டிவச்சுட்டாரு ஆன அவரு குடிக்கார இருந்துட்டு எல்லாத்தையும் அழைச்சுட்டு உங்க இரண்டு பேரையும் கொடுத்துட்டு போயிச்சேர்ந்துட்டாரு....இப்ப நீயும் நைட் வேலைக்கு போற அதுவும் கார் ஓட்டுற..உன்னையும் இழக்க முடியாதுடி பகல் வேலை பார்க்கிறத போதும் நேத்துமா,...இத விட்டுட்டு..அக்கம்பக்கதினரா நீ நைட்வேலைக்கு போறத தப்பா பேசுவாங்கடா...."

" அம்மா நைட் வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் தப்பானவங்க இல்லைமா....ஐடில ஆரம்பிச்சு இட்லிகடை போடுற வரைக்கு பெண்கள் நைட் வேலை பார்க்கத்தான் செய்றாங்க...அதெல்லாம் தப்பான வேலையா?..,இங்க பேசுரவங்க நம்ம அக்கறையில பேசல மா,அதே போல பேசரவங்க நம்ம கஷ்டத்த பங்கு போடுரவங்க இல்லைமா ...நமக்கு மேலும் கஷ்டத்த தரவங்கதான் மா....புரியுதா.." என்றவள்....தன் அன்னையிடம் வந்தவள்..

" எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு தான்மா இந்த முடிவ எடுத்துருக்கேன்.....தைரியமா நம்மல எதிர்நோக்கி வர பிரச்சனை நேரா நின்னுதான் தீர்க்கனும் பயந்துட்டு பதுங்குனோம் பிரச்சனை பூதம் மாதிரி பெரிசா நிக்கும்..உன் கடவுள நல்ல வேண்டிக்கோ....பாப்பா,தூங்கிற பார்த்துக்க.....வீட்ட நல்ல பூட்டிக்கோ பயப்பிடாம தூங்குமா நான் இரண்டு மணிக்கு வந்திடுவேன் " என்றாள் கார் கீயை தன் கையில் சுழற்றியவாரே....
தன் காரை ஏறி அமர்ந்தவள் ******டேக்ஸில் அப்பை லாகின் செய்தாள்...வண்டியையும் எடுத்தாள்.....

" கிளம்ப்பிடியா....,விஜி..." என்று கதவை தட்டிக்கொண்டே கேட்க.." சார் ஒரு பத்துநிமிசம் வெய்ட் பண்ணுங்க வந்திடுறேன்..." என்றவள் தன் கண்ணுக்கு மையிட்டவள் உதட்டில் லேசாய் உதட்டுசாயத்தை பூசியவள்...தலைவாரி மல்லிகை சரத்தை வைத்தவள்,,.தனது சேலை சரிசெய்தாள்....உறங்கிக்கொண்டிருக்கும் தன் மகனை தன் தோளில் போட்டவள் கதவை திறந்து வெளியே வந்தாள்....

" அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர்.கையில் குழந்தை இருப்பதை பார்த்தவர் முகம் சுழித்தார்...." இவனையும் தூக்கிட்டு தான் திரியனுமா....இங்க விட்டு வரகூடாதா...." என்றார் கடுப்பில்...

" சார் குழந்தை..தனியா எப்படி விட்டுவர நடுவுல எழுந்துடானா,அழுவான் சார் யாருமில்லைனா,பயப்பிடுவான் சார்...அதான் நானே தூக்கிட்டு போறேன் சார்...." என்றாள் தயங்கி கூற..

" இவனால கஷ்டமருக்கு எதுக்கும் பாதிப்பு வரமா பார்த்துக்கோ இல்லைனா உன்னையும்உன் மகனை தோலை உறிச்சுருவேன்...." என்றவர் எச்சரிக்கை நகர அவரைபின் தொடர்ந்தவாரே தன் வாழ்க்கையை இப்படி ஆனதை கவலைகளோடு கண்ணீர் சுரந்து கொண்டது கனத்த இதயத்தோடே வந்தவள்


" விஜி, கஷ்டமர் இந்த ஏரியாதான்...பார்த்து நடந்துக்க....இப்ப உனக்காக டேக்ஸி வரும் அதுல போ திரும்பி அதுலையே வந்திடு..சரியா..." என்றுவிட்டு செல்ல அந்த கொட்ட கொட்ட இரவிலும் தன் மகனை சுமந்தவள் கலங்கி கொண்டிருந்த கண்ணை துடைத்தவாரே நின்றாள்,,.

அவள் டாக்ஸியும் வர ஏறி அமர்ந்தாள் முன்சீட்டில்...தனது அருகிலிருக்கும் டைவரை ஆராய முகத்தில் கைகுட்டையை கட்டி கேப் போட்டுகொண்டு கண்மட்டும் தெரியுமாறு இருக்க " விசத்திரமாக பார்த்தாள் விஜி...

" நேத்ரா தான், தான் ஒரு பெண் என்று தெரிய கூடாத நிலையில் முகத்தை கைகுட்டையாலும் கேப் தலையில் போட்டுக்கொள்வாள்....தனது பாதுகாப்பிற்காக....

இரவில் தொடங்கிய இவர்களது பயணம் எவ்வாறு இருக்குமோ...

மனம்திருந்தினால்(ள்)

வாசக மக்களே கதையை படித்து உங்கள் பெரும் ஆதரவை தர வேண்டும்.இந்த தளத்திற்கு புதியது ஆதரவு தாருங்கள் மக்களே.
 

Attachments

#3
மனம்திருந்தினால்(ள்)-2


நேந்தராவின் டாக்சியில் ஏறி அமர்ந்தாள் விஜி,..நேத்ராவே தன்னை பெண்ணென்று மறைக்க கைக்குட்டையால் தன்முகத்தை மறைத்து,தொப்பியை தலையில் அணிந்திருந்தாள்....வண்டி எடுத்தாள்..அப்பயணம் அமைதியே தர,.....நேத்திராவிற்கு இந்த அமைதி ஏறிச்சலை தர பாடலை ஒலிக்கச் செய்தாள் அதில்,,.


" நீ உன் ஆசை மட்டுமா உன் வேடம் மட்டுமா...." ஐரா பாடல் ஒலித்தது....


நேத்திராவிற்கு இசையென்றால் அதிக இஷ்டம் அதுவும் இரவின் பயணத்தின் போது கேட்பதென்றால் யாருக்கு தான் பிடிக்காது...அவள் என்றும் மெல்லிய இசை கேட்பதை விட நம்பிக்கை தூண்டும் இசையே அதிகம் கேட்க விரும்புவாள் அதுவும் இரவில் தனக்கொரு தைரியம் பிறக்க இவ்வாறு பாடலை தான் கேட்பாள்.....


பாடல் ஒலிக்க....." பிளிஸ் அதை ஆப் செய்றீங்களா தம்பி தூங்கிறான்..." என்றாள் விஜி.தனது கையை உயர்த்திக்காட்டியவள்,அதை ஆப் செய்தாள்..மீண்டும் அப்பயணம் அமைதி கொள்ள,இருவரது பார்வை சாலை வெறித்தது
இருவரது எண்ணம் வேறாக இருக்க வேறாக இருந்தது,...


'இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாரும் தவறானவர்களா.....பகலில் மட்டும் பெண்ணிற்கு பாதுகாப்பு கிடைத்திடுமா?....இரவில் இல்லாமல் போவதற்கு.....தனியே செல்ல கூடாது இரவில் செல்ல கூடாது...துணையின்றி வாழும் பெண்ணிற்கு யாரை துணையென்று அழைப்பாள்....அவளுக்காக யார் சம்பாரித்து வந்து கொடுப்பார்கள்,....தன் வாழ்க்கை வாழ நாம் தான் ஓடவேண்டும் அது இரவாக இருந்தா என்ன பகலாக இருந்தா என்ன.....தேவையென்றால் ஓடத்தான் வேண்டும் இரவும் பகலும் பாராமல்....இதையறிந்தும் அறியாத சில கூட்டம் இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் தவறானவர்களாக பேசிக்கிறார்கள்.....பேசும் வாய் அதிகம் பேசதான் செய்யும் கேட்கும் நாம்தான் காதுகளை மூடிக்கொள்ளவேண்டும்...." என்று தன் அன்னை கூறியதற்கு தனக்குதானே விளக்கம் அளித்துக்கொண்டிருந்தாள்....


' இவ்வளவு அலங்காரம் என்னவனுக்காகவா இல்லை எவனுக்காக தான்....வயிற்றுக்கு பசியாற்ற படையலென ஆகி நிற்கிறேன்.....விதி என்று பெயரிடவா...உதட்டுகள் இருந்து உரிமைகளை பேச முடிவதில்லை போலும்...

பெற்றெடுத்தவர்களின் கையாளாகத்தனமா கட்டிணவனின் பணத்தாசையா என்நிலைமைக்கு காரணம்...குடும்பம் குழந்தை என்ற எனதாசை என்னோடு சேர்ந்து பிறரின் இச்சைக்கு இறையாகியது,...உடம்பை வைத்து உயிர்பிழைக்கும் நிலையில் நான்...' என்று வந்த கண்ணீரை துடைத்தாள்...


அவள் இறங்கவேண்டிய இடம் வர இறாங்கினாள்.." வெய்ட்டிங்ல தானே இருக்கீங்க..." என்று இறங்கினாள் விஜி...
வெறும் " ம் " என்று பதிலளித்தாள் நேத்ரா.


உள்ளே சென்ற விஜி அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்...கதவி திறந்தார் ஒரு நாற்பது வயதவர்..." விஜியா?,."


" ம்"....என்றவளை உள்ளே அழைத்தார்,...உள்ளே வந்தவள் சுற்றி சுழல விட்டாள் கண்ணை,...அவர் ஓர் அறையை காட்டினார்,,.தூங்கும் தன் மகனை சோபாவில் படுக்க வைத்தாள்...


" இது உன் குழந்தையா?...."
" ஆமா சார் பார்த்துக்க ஆள் இல்லை அதான் மன்னிச்சிருங்க சார் தூங்கிட்டான் டிஸ்ர்ப் பண்ணமாட்டான் " என்றாள்.


" பரவாயில்லை மா உள்ள போர்வை இருக்கு போர்த்திவிடு...." என்று உள்ளே சென்றார்..அவளும் அவ்வாறு செய்துவிட்டு மகனின் தலையை வருடிவிட்டு நெற்றியில் முத்தமிட்டவள்....அறையினுள் நுழைந்தாள்...ஒரு மணிநேரம் கழித்து கதவை திறந்து வெளியே வந்தார்....தனது ஆடை சரிசெய்தவள் வெளியே வந்து குழந்தை தூக்கினாள்,....சொல்லிய பணத்தை விட அதிகமாகவே கொடுத்தார்...நன்றி கூறிவிட்டு வெளியே வந்தாள்..நேத்ரா சீட்டில் சாய்ந்தவள் ஹேட்செட்டை ஒருகாதில்,மாட்டியவாரே பாட்டு கேட்டாள்...விஜி வந்து கதவை தட்ட லாக்கை திறந்தாள் மீண்டும் ஏறி அமர காரை எடுத்தாள்.....ஏறிய இடத்திலே இறக்கிவிட்டவள்.....சென்றுவிடவிஜி வீடுவந்தவள் அவர் கொடுத்த பாதி பணத்தை கொடுத்து மீதியை வைக்க நினைத்தவளிடம் முழுபணத்தை பறித்தான்...." பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் ஐயா.."" இவன் ஸ்கூல் போகனும் யாரு அழுதா நாளைக்கு இதே போல வரட்டும் தரேன் என்று பணத்தை எண்ணியவாரே சென்றிட...தன் மகனை கட்டில் படுக்க வைத்தவள் அப்படி அமர்ந்து அழுதாள்......நேத்ரா,ஒரு பள்ளி ஆசிரியை....ஒரு பெரும்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள் மெட்டிரிக்குலேசன் பள்ளி என்பதால் சம்பளம் குறைவுதான்...குடித்து குடித்து உடலை அழித்து இறந்து போன கணவர் வாங்கிய கடன்களையும் வீட்டின் மேல் வாங்கிய லோன்னையும் அடைக்கவே நேத்ரா பகலில் பள்ளியும் இரவில் காரையும் ஓட்டி சம்பாதிக்கிறாள் போதாத குறைக்கு டியூசனும் வேறு தன் தங்கை மித்ராவுடன் எடுக்கிறாள்...மித்ராவின் படிப்பிற்கு வேற பணம் தேவை என்பதால்.....தன் உடல்நலத்தையும் நினைக்காது வேலை என்று சுற்றித்திரியும் இருபத்தைந்து வயது நிரம்பிய பெண்..மிகவும் துணிச்சல் நிறைந்த பெண் எதையும் எதிர்கொள்ள துணிந்து நிற்கும் பெண் நேத்ரா...விஜி, தனது பெற்றோர்களால் படிக்கவைத்தனர் பி,எஸ்.சி வரை பின் முடியாமல் போக திருமணம் செய்துவைத்தனர் சரியாக விசாரிக்காமல் திருமணம் முடித்துவைக்க பணத்தாசையால் அப்பெண்ணையே பேரம் பேசி விற்றான் தான் வாங்கிய கடனுக்காக...இவளை விட்டு ஓடிவிட்டான்,.பெற்றோர்களும் இறந்திட நாதியற்று இருந்தாள் தனது மகனோடு..

கடன்காரன்


இவளை அழைத்து தன்வீட்டிற்கு வேலைகாரியாக அழைத்துவர பகலில் தன் மனைவிக்கு வேலைகாரியாகவும் இரவில்இந்த வேலைக்காவும் அவளை அழைத்துவந்தான் அவளால்,காசை பார்க்க ஏண்ணி கடன் என்ற பெயரை சொல்லி அவ்வாறு அவளை வற்புறுத்த முதலில் மறுத்தாள் பின் சாக கூட துணிந்தவள் தன் மகனை எண்ணி கவலையுற்றாள்...வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள இவளை வைத்து பணத்தை சம்பாரித்தான்...இவளோ தன்மகனை படிக்கவைக்கமாறு உதவிகோர மனைவியும் இவளுக்காக பரிந்துபேச ஒத்துக்கொண்டார்...அவ்வீட்டில் இருக்கும் மிச்சம் மீதியே இருவரது வயிற்றை நிறைக்கும்.....எதிர்த்து பேசி வெளிய வர திறனற்றவள்.,.வாய் பேசும் ஊமை....தன் பிள்ளைக்காய் அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் பேதை.....

இருள் சூழ்ந்த வி


ஜிக்கும் நேத்ராவிற்கும் விடியல் கிடைக்குமா
இருவரின் வாழ்க்கை பயணம் மாறுமா?...மனம்திருந்தினால்(ள்)....