Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript போர்! | SudhaRaviNovels

போர்!

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
எந்தக் காலத்திலும் போர் என்பது எளிய மக்களால் விரும்பபடாத ஒன்று தான். பழங்காலத்தில் அரசனின் அதிகார வெறிக்கும், நாடு பிடிக்கும் ஆசையினாலும் பல போர்கள் நடந்தன.

அவ்வாறு நடந்த போர்களில் மனிதன் மட்டுமல்லாது விலங்கினங்களும் கொல்லப்பட்டன. அமைதியை விரும்பிய அரசர்கள் கூட தன்னைத் தாக்க வந்தவர்களை எதிர்ப்பதற்காகவே தாக்குதல் நடத்த வேண்டிய சூழலும் இருந்தது.

காலம் காலமாக அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே போர் சூழல் உருவாக்கப்பட்டது. அதில் பல ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் நடந்தது.

இன்று போர் மேகங்கள் நம்மைச் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் அனைத்து காலகட்டங்களிலும் நடந்த போர்களும் அவற்றால் ஏற்ப்பட்ட பாதிப்புகளுமே நினைவுக்கு வருகின்றது.

பழங்காலத்தில் கத்தியை வைத்து சண்டையிட்டு எங்கும் குருதியோட, பருந்துகளும், காகங்களும் பல நாட்களுக்கு இறந்த வீரர்களின் உடலை புசித்து வாழ்ந்தன. போரில் வென்ற அரசனுக்கு கிடைத்தது சாம்ராஜ்யம். ஆனால் இறந்த வீரனின் குடும்பத்திற்கு கிடைத்தது என்ன?

அன்று கூட்டம் கூட்டமாக யானை மீதும், குதிரை மீது சென்று போர் தொடுத்தனர். இன்றைய காலகட்டத்தில் அதி நவீன ஆயுதங்களையும், இருந்த இடத்திலிருந்து மொத்த நாட்டையே அழிக்கும் ஏவுகணைகளும், வைத்து போர் தொடுக்கின்றனர். அன்றும் சரி இன்றும் சரி போர் வீரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதே கிடையாது. அவன் நாட்டிற்காக நேர்ந்து விடப்பட்டவன்.

அன்றைய போரிலும் சரி இன்றைய போரிலும் சரி எதிரி நாட்டு போர் வீரன் சிக்கி விட்டால் தங்களால் இயன்ற கொடுமைகளைச் செய்து அவனது உயிரைப் பறித்து விடுவர்.

ஒவ்வொரு நாளும் பலவித துன்பங்களைத் தாங்கி வெயிலிலும், மழையிலும், பனியிலும் நாம் பாதுகாப்பாக உறங்க அவன் தன் உறக்கத்தை தியாகம் செய்கிறான். அவன் மட்டுமல்லாது அவனது குடும்பத்தினரும் கூட நமக்காக தங்களது வாழ்க்கையைப் பணயம் வைக்கின்றனர். சாதாரண குடும்பத் தலைவிகளைப் போன்று அவர்கள் கணவருடன் வெளியில் சென்று வர ஆசைப்பட முடியாது. பிள்ளைகளோ விடுமுறையில் மட்டுமே தந்தையைப் பார்க்கும் அவலமும் உண்டு.

இதன் நடுவே எதிரி நாட்டு தாக்குதலில் அங்கஹீனம் அடைந்து வீடு திரும்பவர்களுக்கு கிடைப்பது தான் என்ன? நாட்டிற்காக போராடி உடலின் ஒரு பாகத்தை தாரை வார்த்து கொடுத்தவனுக்கு பெரிதாக எதுவும் கிடைத்திடாது. ஆனால் ராணுவ வீரனாக நடிக்கும் நடிகனுக்கு கோவிலும் கட்டி அர்ச்சனையும், அபிஷேங்களும் உண்டு.

விளையாட்டிற்குச் செலவு செய்யும் அரசாங்கம் நாட்டைக் காக்கும் பணியில் இருப்பவருக்கு தேவையானவற்றை செய்வதில்லை. ஒரு வீரனின் வாழ்வென்பது மிக கடினமான ஒன்று. வெளியிலிருந்து பார்ப்பவருக்கு எளிதாக தெரிந்திடும், அவனும், அவனது குடும்பமும் செய்யும் தியாகத்தினால் தான் நாம் இன்று இங்கு அமர்ந்து அனைத்தையும் தைரியமாக நிம்மதியாக விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்...

போர் அழிவை மட்டுமே கொண்டு வரும்!

வீரர் அபிநந்தன் எந்தவித சேதாரமும் இன்றி நாடு திரும்ப வேண்டும் என்று மனமார பிரார்த்தித்துக் கொள்கிறோம்....

பேரழிவைக் கொடுக்கும் போர் எங்களுக்கு வேண்டாம்! அமைதி ஒன்றே வேண்டும்!