போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

Next my favourite second hero heroine pairs.
சில சமயம் ஹீரோ ஹீரோயின விட செகன்ட் ஹீரோ ஹீரோயினா வர கேரக்டர்ஸ் ரொம்ப பிடிக்கும். அப்படி பிடித்த சில ஜோடிகள்.

சிவா நிலா - உயிர் விடும் வரை உன்னோடுதான்
மித்திரன் தாரணி - செம்பூவே உன் மேகம் நான்
வெங்கி மீரா - சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா
விபீஷ் வினு - எங்கிருந்து வந்தாயடா
சூர்யா ஆதர்ஷா - சில்லென்று ஒரு காதல்
 
மறக்க முடியாத ஒரு கேரக்டர் ஆழி அர்ஜூனாவின் அர்ஜூனா கதாபாத்திரம். அவர் ஒரு டீச்சர் பிளஸ் எழுத்தாளர். சோ கதைக்குள் கதையாக வரும் பகுதியிலாம் நல்லா இருக்கும். சஸ்பென்ஸ் கதை எழுதுற அவர் முதல் முறையாக அவங்க கதையை வைத்து ஒரு லவ் ஸ்டோரி எழுதுவார். சூப்பரா இருக்கும் அது.
கதையில் பிடித்த இன்னொறு விஷயம் போதை மருந்தை எப்படி அந்த ஊருக்குள்ள கொண்டு வந்து எப்படியெல்லாம் அத விநோயகம் பண்றாங்கன்னு அழகா ஒரு புத்தகமா அர்ஜுனா சார் கொண்டு வருவார்.
கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் அர்ஜூனா சார். சோ என்னை அதிகம் கவர்ந்தவர்.
உஷாந்தி சிஸ் ஓட எழுத்து நடைல கதை நடக்குற அந்த பீச் சைட் ஊருக்கே போன உணர்வு கிடைக்கும்.
 
எனக்கு நினைவில் இருக்கும் ரெண்டு பேய் கதாபாத்திரங்கள்.

செண்பகம் ஆவி - உயிரை கொடுக்க வருவாயா
சம்வ்ரிதா ஆவி - சம்வ்ரிதா

தன்னை கொன்றவர்களை ஆவியாக வந்து பழி வாங்கும் ஆத்மா.
 
கதையில் ஹீரோ போலிஸ்ஸா இருந்தாலே கெத்து தான். சோ நான் படித்த கதைகளில் எனக்கு பிடித்த போலிஸ் ஹீரோக்கள்

சித்தார்த் - இதயம் விழித்தேன் - நித்யா
வெற்றிவேல் - வால்டர் வெற்றிவேல் - சுதாரவி
பிரம்மா - காதல் பிரம்மா - இன்பா அலோஷியஸ்
அச்சுதன் தேவா - கனவாய் நனவாய் - 25 எழுத்தாளார்கள்
வெற்றிச்செல்வன் - இரும்பிலே ஒரு இதயம் - வெண்ணிலா சந்திரா
சஞ்சய் - மனதில் பதிந்த ஓவியம் - லஷ்மி சுதா
அஜய் குமார் - என்னை சேர்ந்தாய் பொன்மானே - கேமா
ரிஷிகுமார் - என் இனிய ரா(ர)ட்ச(க)ன் - ஸ்ரீவாணி
 
நான் முதல் முதலாக படித்த நாவல் லஷ்மி சுதாவின் 'வானவில் என் வாசலில்'. அதில் இருந்து தான் நாவல் படிக்கிற பழக்கமே ஆரம்பிச்சது. சோ அதனால் இந்த கதையோட ஹீரோ மானவ் என் பேவரைட். முதல் முதலா படிச்ச கதைனால என்னால் மறக்க முடியாத கதாபாத்திரம்.
 
'கள்வனின் காதலி' - சக்தி திருமலை கதைல வரும் ஹீரோயின் பாரதி கதாபாத்திரம் என்னை கவர்ந்த கதை மாந்தர்களில் ஒருவர்.ஹீரோ அர்ஜூன் முதலாளி. அவன் 'பி. எ.' பாரதி. பாரதி ரொம்ப ஜாலி டைப். ஆனால் ஹீரோ அர்ஜுன் அதற்கு நேர்மாறா ரொம்ப டெரர். எல்லோரும் பார்த்து பயப்படற அர்ஜூனை தைரியமா சமாளிக்கும் ஒரே ஆள் பாரதி தான். அர்ஜுனோட பிஸ்னஸ்ல அவனுக்கு ஹெல்ப் பண்ணி அவனை பிஸ்னஸ்லயும், வாழ்க்கையிலும் சேர்த்து ஜெயிக்க வைக்கிறது பாரதி தான். அர்ஜுன் - பாரதி ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடித்த ஜோடி.
 
நிதனிபிரபுவின் நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் கதையின் விக்ரம் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் முதல் மனைவி பிரிந்து சென்றாலும் அவள் நலம் விரும்பும் நல்லவன்.
 
ஹமீதாவின் யாரைகேட்டது இதயம் கதையில் வரும் சுமந்த் கதாபாத்திரம் அருமை. அரசியல்வாதியான தந்தையை எதிர்த்து போராடும் நல்லவன். தனக்கு மறைமுகமாக உதவும் ஸ்ரேயாவை காதலித்து கைபிடிப்பது அருமை
 
ரம்யாராஜனின் உனக்குள் என் உயிரே அர்ஜன் மீரா இருகதாபாத்திரமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரே வைத்திருந்தாலும் குடும்பத்திற்காக பிரிந்து பின் இனைவர்
 
'இளமனச தூண்டி விட்டு போறவரே' வநிஷா சிஸ் கதையின் துரைலிங் & சுப்பு இரண்டு பேரும் என் மனசை டச் பண்ண கேரக்டர்ஸ். வெள்ளந்தியான சுப்புவும் வெள்ளக்கார (பாசக்கார) எட்வர்ட் துரையும் அவங்க அன்பால்,பாசத்தால், காதலால் என் மனதை கொள்ளை அடித்தவர்கள்.
 
ஒரு வரலாறு நாவல் பத்திகூட சொல்லலனா , வரலாறு நம்மைபத்தி என்ன சொல்லும் அதான் நான் படித்த ஒரு வரலாறு நாவல் பத்தி சொல்லலாம் என்று ( நான் படித்ததே அந்த ஒரு வரலாறு நாவல் மட்டும் தான் ) . கல்கி அவர்களின் 'பார்த்திபன் கனவு '.அதில் வரும் நரசிம்ம பல்லவ மன்னர் - எதிரி நாட்டு மன்னனுக்கு தான் கொடுத்த வாக்குக்காக அவர் பையனுக்கு உதவுவது, தன் மகள் மேல் கொண்டுள்ள பாசம்ன்னு என்னை கவர்ந்த கதாபாத்திரம். இதில் வரும் விக்கிரமன் குந்தவை காதலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
 
ஹமீதா சிஸ் 'கலைந்து போன மேகங்கள்' கதையில் வரும் நேஹா கேரக்டர் அருமை. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் அவள் கதாபாத்திரம் சிறப்பு. கிரிக்கெட் வீரர் சந்தீப் மேல் தான் கொண்டுள்ளது ஈர்ப்பு மட்டுமே என்று தெளிந்து, படிப்பில் கவனம் செலுத்தி தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவாள்.
 
காதல் மதம், இனம்,மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டது. இதில் நாடும் விதிவிலக்கல்ல. அப்படி நாடு விட்டு நாடு ஜோடி சேர்ந்த எனக்கு பிடித்த காதல் ஜோடிகள்.

துரைலிங் - சுப்பு - பிரிட்டிஷ்காரனுக்கும் இந்திய தமிழ் பெண்ணிற்க்கும் இடையேயான காதல்

சிந்தக - மைதிலி - வித் லவ் மைதிலி, உஷாந்தி சிஸ் ஸ்டோரி . ஸ்ரீலங்கன்னுக்கும் தமிழ் பெண்ணிற்க்கும் இடையேயான காதல்.

யு வான் லீ - ஷானவி -உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா , யாழ் சத்யா சிஸ் ஸ்டோரி. கொரியன்காரனுக்கும் ஸ்ரீலங்கன் தமிழ் பெண்ணிற்க்கும் இடையேயான காதல்
 
இருள் மறைத்த நிழல் - தேனு. நிறைய முறை இந்த கதையை படித்திருக்கிறேன். அவ்ளோ பிடிக்கும் இந்த கதை. விஜய நளந்தன் மிதுனா - அருமையான கேரக்டர்ஸ். அழகிய காதல் ஜோடி.
 
கண்மணி இதழ்ல வந்த 'ஓர் இரவில்' - மா.சூர்யாவின் கதை. நான் முதல்ல படித்த காதல் கதை. சோ ரொம்ப ஸ்பெஷல் இந்த கதையும் கதையின் நாயகன் நாயகி சுஜி-தீபுவும். ஹீரோ சுஜய் ஹீரோயின் தீப்தி. சாதாரண காதல் கதை தான். சுஜய் தீப்தியை காதலித்து திருமணம் செய்தாலும் சின்ன மிஸ்அண்டர்ஸ்டேன்ட்ல தீப்தியை தப்பா புரிஞ்சுப்பார். இறுதியில் தீபுவ புரிஞ்சுகிட்டு ஒன்னா சேர்ந்துடுவார்.
 
சில்லென்று ஒரு காதல் - சவீதா சிஸ் ஸ்டோரி. அதில் வரும் ஆதித்தியன் - ஆதிரா மற்றும் சூர்யா- ஆதர்ஷா ஜோடிகள் ரொம்ப பிடிச்சவங்க. இதில் வரும் நான்கு ஜோடியோட காதலுமே நல்லா இருக்கும்.
 
சம்சாரம் என்பது வீனை கதைல வர நிரஞ்சன் கதாபாத்திரம் அற்புதம். தன் மச்சினிச்சியை மகள் போல் நினைப்பது, தன் மனைவியையே அவளுக்கு விட்டு கெடுப்பதுன்னு சூப்பர். ஒரு பிரம்பிப்பான கேரக்டர்.
 
'சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா' வநிஷா சிஸ் கதையின் வெங்கி மீரா கேரக்டர்ஸ் சூப்பர். அதில் வரும் மணி கவிலயா காதல் ஜோடியும் அருமை. ஜீனியஸ் ஆக இருக்கிறதால் வரும் பிரச்சினை, முதிர் கன்னி கான்செப்ட்ன்னு நிறைய விஷயம் கதையில் உண்டு. அழகிய சில்லென்ற இனிமையான தூரல்.
 
டெடிபியர் காதல் - ஃபெமிலா ஜான்சன் கதையில் வரும் மூன்று ஜோடிகளும் cute. ஆஷிக் - எஸ்.எஸ். , கதிர் - பாரு ,கேசவ் - அச்சு.
 
என் இனிய ராட்சசன்(ரட்சகன்) - ஸ்ரீவாணி ஸ்டோரியின் வீரவர்ஷினி என்னும் திருநங்கை கதாபாத்திரம் அருமை. திருநங்கையான அவங்க, வாழ்க்கையில் ஏற்படற பிரச்சினைகளையும் போராட்டங்களையும் சமாளித்து ரிஷிகுமாருடன் ஆன அவங்க காதல் வாழ்க்கையிலும் ஜெயிச்சு, அவங்களுடைய போலிஸ் துறையிலயும் சாதிச்சு முன்னேறும் கதாபாத்திரம்.