போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

sudharavi

Administrator
Staff member
#41
R.மகேஸ்வரி அவர்களின் உயிரே உயிரே பிரியாதே நாவலின் நாயகி நந்தினி என்னை கவர்ந்த கேரக்டர் . தன் வாழ்வில் சந்தித்த ஆண்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் கசப்பான நினைவுகளையே தந்து விட்டு சென்றிருக்கின்றனர் நந்தினியை பொறுத்தவரையில் . அவள் வேளை செய்யும் ஹாஸ்பிடல் நிர்வாகி கெளதம் அவளுக்கு அண்ணா போன்றவன் . ஆதரவு இல்லாமல் தவிக்கும் போது தன் ஹாஸ்பிடல்லில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவ நர்சிங் பயின்றதால் ஹாஸ்பிடல்லில் nurse ஆகவும் வேளை தருவான் கெளதம் . அவனுடைய நண்பன் நரேந்திரன் அன்னையை பார்த்துக்கும் nurse தான் நந்தினி . நரேன் ஒரு விடோவ்ர் அவனோட காதல் கதையை அவன் அன்னையின் மூலம் அறிந்தவள் அவனுடைய காதலின் மேல் காதல் கொள்கிறாள்.நரேனை அவன் அன்னை மறுமணம் செய்ய சொல்லி வற்புரத்தியும் செய்யமாட்டான்...தங்கள் குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போட்டுமேனு நந்தினி கிட்ட அவன் அன்னை புலம்ப அவன் அன்னைக்காகவும் அவன் மேலுள்ள காதல்காகவும் எல்லாரையும் சமாதானம் செஞ்சு அவனோட குழந்தையை இவ சுமப்பா ஒரு வாடகை தாய் மாதிரி ஆனா அப்படி இல்ல ...நரேன் கூட அவன் வீட்ல இருக்கும் போது வயிருல வளர்ர குழந்தை மாதிரி அவளோட காதலும் வலந்துட்டே போகுது.....நரேன் கிட்ட பேச முடியாம அவ மனசுக்குல்லையே பேசுகிறது கடைசில குழந்தை பிறந்த பிறகு அவனையும் பிரிய முடியாம குழந்தையும் பிரிய முடியாம sucide பண்ணிக்க போவா அப்போ நரேன் காப்பாத்திடுவன் சேர்ந்துடுவங்க.... நந்தினி & நரேன் ரெண்டு பேரோட காதலும் செமையா இருக்கும் ...
இந்தக் கதை நான் படித்ததில்லை அனு...கண்டிப்பா படிக்கனும்...ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்து நடை..
 
rajeswari sivakumar

Moderator
Staff member
#42
நாம ஏகப்பட்ட கதைகள் படிச்சாலும் சில கதைகளும் சில கதாபாத்திரங்களும் தான் மனசுல நிக்கும். அப்படி என்னோட மனசில் நின்ற கதாபாத்திரங்கள்... சாண்டில்யனின் யவன ராணியில் வரும் பூவழகி! அப்பா... என்ன ஒரு கேரக்டர். இளஞ்செழியன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் அவனிடமும் கூட தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவள்.இவளின் பாத்திரத்தை அவ்வளவு அழுத்தமாக கொடுத்திருப்பார் ஆசிரியர்.

அடுத்து மல்லிகாமணிவண்ணனின் 'என்னை தெரிந்தும் நீ!' கதையின் நாயகி 'அன்னலக்ஷ்மி பிரதிக்ஷா. மாமன் மகன் சூர்யகிரிவாசன் மேல் உயிரையே வைத்திருக்கும் பெண். ஆனால் அவனின் காதலையோ அவனுடன் கல்யாணத்தையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கமாட்டாள்.நீ என்னை காதலிக்கவில்லையா... சரிவிடு, உனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா... சரி ஓகே. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனுமா... பண்ணிக்கோ அதனால எனக்கு ஒன்னும் இல்ல.என்னை சுத்தமா மறந்துட்டியா... சரி பரவாயில்ல விடு, ஆனா நான் உன்னையே நினச்சிட்டு உன்னோட நல்லதுக்காகவே எதை வேணும்ன்னாலும் செய்துட்டு இருப்பேன்... ஆனா உன்கிட்ட வந்து என்னை ஏத்துக்கோன்னு சொல்லி கெஞ்சமாட்டேன்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும்னு என்னை நினைக்க வைத்த கேரக்டர்.

அடுத்து சுதாரவி அவர்களின் 'நெருப்பில் பூத்த மலர்' நாயகி தேன்மொழியாகிய மதுரயாழினியாகிய வதனா! பொண்ணுன்னா சும்மாவான்னு கேட்டு ஒவ்வொரு பொறுக்கியையும் போட்டு மிதிக்கும் போது ஒரு பெண்ணா சும்மா ஜில்லுன்னு இருந்தது.ஒருவருக்கு பலம் என்பது உடலில் இருந்து வருவதல்ல அது மனதில் இருந்து கிடைப்பது என்பதை உணர்த்தியவள்.

அடுத்து நான் சொல்லவருவது ஸ்ரீ கலாவின் 'மாணிக்க வேண்டுகிறேன்' மித்து என்கிற மித்ராதன். இவன் ஆசை, கனவு, கோபம் எல்லாம் கொண்ட ஒரு சாதாரண மனிதன்.தன்னுடைய ஆசையின் மிகுதியால் முதலில் செய்த தவறை, அது தவறு என புரிந்ததும் தன் மனைவிக்காக தன்னையே திருத்தி மாற்றிக்கொண்டவன். மித்துவிடம் ஒரு ஹீரோக்கான மாஸ் எங்குமே இருக்காது ஒரு சாதாரண மனிதன் அந்தந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கொள்வானோ அப்படித்தான் அவனின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும். இதனால் தானோ என்னவோ இவனின் பாத்திரம் இன்னும் என் மனதில் நீங்க இடத்தில் நிற்கிறது.

அடுத்த ஹீரோ... மல்லிகா மணிவண்ணனின் 'காதல் கொண்டேனே!' அருள்பாண்டியன்... அப்பா சரியான ரௌடி போலீஸ் இவன். அந்த செல்வி பொண்ணை என்னமா மிரட்டுவான். எனக்கு பிடிச்சிருக்கு, உனக்கும் என்னை கண்டிப்பா பிடிக்கனும் சொல்லி அந்த பொண்ணை போட்டு பாடாப்படுத்தி கடைசியில அவன் நினைச்சதை சாதிச்சிடுவான். அசால்ட்டாக ட்ரெயின்ல அவ காலை தூக்கி மடியில வச்சிப்பான் பாருங்க...அங்க தான் செல்வி பொண்ணை அப்படியே கவுத்தான். பண்ற அடாவடியை ரசிக்கும் படி பண்ணவன்.
 
#43
அநுத்தமா அவர்களின் நைந்த உள்ளம் என்று ஒரு கதை எனக்கு அதில் வரும் மைத்திரேயி வாழ்வில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். அவள் மேல் எல்லோரும் வைக்கும் பாசம் அவள் வளர்ப்பு பெற்றோர் மாமா குடும்பம் தமையன் என்று கதை மிகவும் அருமையாக போகும். சுதா நான் படித்த கதைகள் பற்றி சொல்ல ஆரம்பித்தால் உங்கள் சைட் நிறைந்து விடும். முடிந்தால் தினம் ஒரு கதா பாத்திரம் பற்றி சொல்கிறேன். ;)

வாஸந்தி அவர்களின் தீக்குள் விரலை வைத்தால் நாயகி நந்தினி நாயகன் பிரபு. நந்தினியின் உணர்வுகள்,அவள் தன் சுயத்தை இழந்துவிடாமல் இருக்க நடத்தும் போராட்டம்,பிரபுவின் அகங்காரம்,ஆணவம் முடிவில் அவன் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்வது என்று மிக அருமையான கதை
 
Last edited:

dharani

Active member
#44
நாம ஏகப்பட்ட கதைகள் படிச்சாலும் சில கதைகளும் சில கதாபாத்திரங்களும் தான் மனசுல நிக்கும். அப்படி என்னோட மனசில் நின்ற கதாபாத்திரங்கள்... சாண்டில்யனின் யவன ராணியில் வரும் பூவழகி! அப்பா... என்ன ஒரு கேரக்டர். இளஞ்செழியன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் அவனிடமும் கூட தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவள்.இவளின் பாத்திரத்தை அவ்வளவு அழுத்தமாக கொடுத்திருப்பார் ஆசிரியர்.

அடுத்து மல்லிகாமணிவண்ணனின் 'என்னை தெரிந்தும் நீ!' கதையின் நாயகி 'அன்னலக்ஷ்மி பிரதிக்ஷா. மாமன் மகன் சூர்யகிரிவாசன் மேல் உயிரையே வைத்திருக்கும் பெண். ஆனால் அவனின் காதலையோ அவனுடன் கல்யாணத்தையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கமாட்டாள்.நீ என்னை காதலிக்கவில்லையா... சரிவிடு, உனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா... சரி ஓகே. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனுமா... பண்ணிக்கோ அதனால எனக்கு ஒன்னும் இல்ல.என்னை சுத்தமா மறந்துட்டியா... சரி பரவாயில்ல விடு, ஆனா நான் உன்னையே நினச்சிட்டு உன்னோட நல்லதுக்காகவே எதை வேணும்ன்னாலும் செய்துட்டு இருப்பேன்... ஆனா உன்கிட்ட வந்து என்னை ஏத்துக்கோன்னு சொல்லி கெஞ்சமாட்டேன்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும்னு என்னை நினைக்க வைத்த கேரக்டர்.

அடுத்து சுதாரவி அவர்களின் 'நெருப்பில் பூத்த மலர்' நாயகி தேன்மொழியாகிய மதுரயாழினியாகிய வதனா! பொண்ணுன்னா சும்மாவான்னு கேட்டு ஒவ்வொரு பொறுக்கியையும் போட்டு மிதிக்கும் போது ஒரு பெண்ணா சும்மா ஜில்லுன்னு இருந்தது.ஒருவருக்கு பலம் என்பது உடலில் இருந்து வருவதல்ல அது மனதில் இருந்து கிடைப்பது என்பதை உணர்த்தியவள்.

அடுத்து நான் சொல்லவருவது ஸ்ரீ கலாவின் 'மாணிக்க வேண்டுகிறேன்' மித்து என்கிற மித்ராதன். இவன் ஆசை, கனவு, கோபம் எல்லாம் கொண்ட ஒரு சாதாரண மனிதன்.தன்னுடைய ஆசையின் மிகுதியால் முதலில் செய்த தவறை, அது தவறு என புரிந்ததும் தன் மனைவிக்காக தன்னையே திருத்தி மாற்றிக்கொண்டவன். மித்துவிடம் ஒரு ஹீரோக்கான மாஸ் எங்குமே இருக்காது ஒரு சாதாரண மனிதன் அந்தந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கொள்வானோ அப்படித்தான் அவனின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும். இதனால் தானோ என்னவோ இவனின் பாத்திரம் இன்னும் என் மனதில் நீங்க இடத்தில் நிற்கிறது.

அடுத்த ஹீரோ... மல்லிகா மணிவண்ணனின் 'காதல் கொண்டேனே!' அருள்பாண்டியன்... அப்பா சரியான ரௌடி போலீஸ் இவன். அந்த செல்வி பொண்ணை என்னமா மிரட்டுவான். எனக்கு பிடிச்சிருக்கு, உனக்கும் என்னை கண்டிப்பா பிடிக்கனும் சொல்லி அந்த பொண்ணை போட்டு பாடாப்படுத்தி கடைசியில அவன் நினைச்சதை சாதிச்சிடுவான். அசால்ட்டாக ட்ரெயின்ல அவ காலை தூக்கி மடியில வச்சிப்பான் பாருங்க...அங்க தான் செல்வி பொண்ணை அப்படியே கவுத்தான். பண்ற அடாவடியை ரசிக்கும் படி பண்ணவன்.
நீங்க சொன்ன எல்லா கதையும் நானும் படிச்சி இருக்கேன்... யவனராணி கடல் புறா ரெண்டும் .... செம ஸ்டோரி....எனக்கு அதுல வர டைபீர்ஸ் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்....
 
dharani

Active member
#45
வெண்ணிலா சந்திரா நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..... இளஞ்சேரன் அகல்விழி....... அகல்விழி கேரக்டர் அச்சோ அவுளவோ இன்னொசென்ட.யா இருப்பா.... அதுப்பும் அன்யங்கர் பாஷை பேசிக்கிட்டு அவனை பழி வாங்க பண்ணுற பிளான் எல்லாம் சிரிச்சிட்டே தான் படிக்க முடியும்.... அவளோட கோவம் பிடிவாதம் லவ் எல்லாமே செம cute யா இருக்கு.....
 
#46

அச்சோ மறக்கவே முடியாத கதை.... அவனுக்கு மீனும் செஞ்சு வச்சிட்டு அத பார்த்திட்டே இருக்க வைக்கறது கொடுமை... அசைவம் விரும்பி சாப்பிடறவன அத சாப்பிட விடாம செய்யறது.. ஹா...ஹா...

ஊரே பயப்படுற சேரனுக்கு இந்த புள்ள செய்யறது எல்லாமே ... அட... அட... சின்ன புள்ள தனமா.. இருந்தாலும் ரொம்ப க்யூட் அண்ட் லவ்லியா இருக்கும்...
 
Ramya Mani

Well-known member
#47
நேற்று இன்பா அலோசியஸ் அவர்களின் இதயக்கதவு நாவல படிச்சேன். அதில் வர விவி கேரக்டர் செம. பல்சர் பைக் ஓட்டும் பத்திரிகைக்காரி. கிசுகிசு எழுதுவதில் ராணி. கராத்தே முதல் களரி வரை கற்றுக் கொண்ட தைரியசாலி. முன்னணி ஹீரோவையே தலையால தண்ணி குடிக்க வைச்சவ. செம போல்டான கேரக்டர். நம்மையும் விவி மாதிரி தைரியமா, தெளிவா முடிவெடுத்து, துணிச்சலா செயல்படத் தூண்டும் வகையில் இன்பா மேம் கேரக்டர செதுக்கியிருக்காங்க.. சூப்பர் வுமன் விவி வாழ்க.
 
#48
தோழமைகளே முதன்முறையாக எனக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். பொன்னியின்செல்வன் கதையில் வானதி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். பயந்த சுபாவமும் அமைதியுமாக இருக்கும் வானதி தனது காதலனுக்கு ஆபத்து என்றவுடன் தைரியமாக பிரம்மராயரிடம் பேசுவது பிடிக்கும்
 
#49
Subasrikrisnaveni sisters அவங்களோட சுட்டும் விழிசுடர் சூர்யா சுப்ரஜா இருவர் கதாபாத்திரங்கள் அருமை ஜாலியான காலேஜ் கதை சூர்யா மேடி யாக மனதில் இருக்கிறான்
 
#50
சிவகாமியின்சபதம் கதையில் வரும் பரஞ்சோதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.போரினால் மக்கள் படும் இன்னல்களை கண்டு மனம் மாறுவதும் நண்பனிடம் போர் வேண்டாம் சமாதானமாகசெல்லலாம் என {கூறுவதும் மறுத்து மன்னர் கூறியதும் எடுத்த பொறுப்பை முடித்து பதவி விலகுவது அருமை.
 
#51
சுதாமா கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதை மின்மினி பறவைகள். அதில் வரும் விக்ரம் வித்தியாசமான ஹீரோ.தனது உடல்பருமன் பிரச்சனையால் தனது வீட்டிலே தனிமைபடுத்தபட்டாலும் தனது மனைவி வெண்ணிலாவின் சிறு ஊக்கத்தால் தனது தனிமை கூட்டிலிருந்து வாழ்க்கையை அழகாக எதிர்கொள்வார்
 
#52
அன்பே நீ இன்றி பிரவீணா சிஸ் கதையில் வரும் தீக்ஷாவின் இந்தர் கதாபாத்திரம் அருமை. கெத்தான விஜய் தீக்ஷாவின் காதலுக்காக இந்தராக மாறுவது அருமை
 
#53
ஹமீதா சிஸ் நிழல் போலவே நின்றாய் பிரமோத் உதயா கதாபாத்திரம் அருமை.பிரமோத் முதல் கதையில் வில்லன் போல் காண்பித்து இதில் ஹுரோ . உதயா வீட்டினரால் ஒதுக்கப்பட்ட பணக்கார ஏழை. இருவரும் காதல் கொள்வது அருமை
 
Anuya

Well-known member
#54
இன்பா அலோசியஸ் அவர்களின் காதல் பிரம்மா ஹீரோ பிரம்மா உண்மையிலேயே என்னை ரொம்ப பிரமிக்க வைத்தவன் . Accidentல பழைய நினைவுகளை மறந்தாலும் கூட தன்னோட கேத்த விடாம இருப்பான் .. தனக்கு முன்னாடி இருப்பது யாரு, தெரிஞ்சவங்களா, எதிரியானு கூட தெரிலயனாலும் பழைய நினைவுகள் இல்லனாலும் எல்லாரையும் பார்த்தே அவங்கள எடை போடுறது....ஒரு பயங்கரமான terror nd gethana போலீஸ். அப்படி இருந்தாலும் கூட காயூ கூட அவனோட லவ் அவ்ளோ அழகா இருக்கும் ....:love:
 
Anuya

Well-known member
#55
என்.சீதாலட்சுமி அவர்களின் காதல் கற்க நாயகன் ரபிந்தரநாத்(ரபின்) ஆரம்பத்துல விளையாட்டு பிள்ளையாய் காமெடி போலீஸ்ச காட்டினாலும் ரோஜா(heroni) வீட்ல அவ வேற ஜாதி பையன காதலிச்சானு அவங்க வீட்ல அடிச்சே கொன்னுடுவாங்களோன்னு அவளை காப்பத்தி அவன் அம்மாவ வச்சு பேசி அவளையே கல்யாணமும் பண்ணிப்பான் ... ரோஜா லவ் பண்ண பையன் ஒரு திருடன் மாதிரி...அவ அவனை லவ் பண்ணல அது வேறும் attraction தான் தான்னு அவளுக்கு புரிய வைச்சு ரபின் லவ் பண்ண வைக்க அவன் எடுக்குற லபின் அவதாரம் செமையா இருக்கும் .( லவ்+ரபின்=லபின்) பெயர் கரணம் ...ரோஜா வீட்ல அடிச்சத்துல அவ ஒரு பக்க காது கேக்காம போயிடும் அதுக்கு treatment பண்ணுவாங்க ....லபின் லவ்வ develop பண்ண லவ் படமா பாக்குறது அதுல ஒரு சைடு headset ரபின் இன்னொன்னு ரோஜா கேக்குறதே எல்லாமே செமாயா இருக்கும் ....லபின் அவதாரம் எடுத்த பிறகு அவன் பண்ற அலப்பறை தா காமெடி ரொம்பவே நல்லா இருக்கும் போலீஸ் ரபின் விட லபின் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ....
 
#56
யாழ்வெண்பாவின் ஊடலுவகை யின் நாயகி ரிதன்யா யுகேந்திரனுடன் திருமண ஏற்பாடு ஆரம்பித்து மாப்பிளை வீட்டில் நிறுத்திவிடுவார்கள். அதை தட்டி கேட்க புறப்படும் உண்மை விளிம்பி ரிதன்யா சூப்பர். சொல்லும் பொய்யை உண்மையாக்குவது செம்ம
 
#57
அகிலாகண்ணன் அவர்களின் கட்டங்கள் கதையில் வரும் நித்யா அருமையான கதாபாத்திரம். ஹீரோவுக்கு பிடிக்காத திருமணம். மிடில் கிளாஸ் வீட்டில் உற்சாகமாக சுற்றி வரும் நித்யா திருமணத்திற்கு பிறகு மது தரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்வது அருமை பணக்கார வீட்டை அழகான குடும்பமாக மாற்றுவது சூப்பர்
 
#58
ரமணிமா கதை எல்லாமே ரொம்ப பிடிக்கும் அதில் லாவன்யா கதையில் லாவன்யா கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை எதிர்த்து உற்சாகமாக வலம் வரும் லாவன்யா சூப்பர்
 
#59
ஹாய் பிரெண்ட்ஸ்,

இது போட்டிக்கான திரி...இங்கு உங்களை Then Tamil madhuras's chithrankatha - sarayu, jishnu. Saruyuvin kurubu, Anbu and romance. Very Nice Story. கதாபாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.