போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#96
எனக்கு பிடித்த ஒரு குழந்தை கதாபாத்திரம் சுஸ்பாப்பா. 'யாயும் ஞாயும் யாராகியாரோ' கதையில் வரும் சுஷ்மிதா. கதையில் வரும் அவளோடா மழலை மொழி ரொம்ப அழகு. எழுத்தாளர் குழந்தை பேசுவது போலவே மழலை மொழியில் அழகாக கொடுத்திருப்பாங்க. 'ம்மாவா அப்பின்னா' என்று கேக்கும் பொழுதும் தன்னை 'சுஸ் பாபா' என்றும் தன் தந்தையை 'சுஸ் பா' என்றும் சொல்லும் போது கொள்ளை அழகு.
தாயை இழந்து தன் தந்தையின் அன்பில் வாழும் குழந்தை சுஷ்மிதா. அவள் தந்தை தான் கதையின் நாயகன். அவர்கள் எதிர்வீட்டில் குடிவரும் நாயகி. மூவரையும் சுற்றி நகரும் கதை. அதில் சுஸ்பாப்பா கதாபாத்திரம் மனதை அள்ளும். அவளின் மழலை மொழிக்காகவே கதையை மீண்டும் மீண்டும் படிக்கலாம்.
 
#97
'இரு திசைப் பறவைகள்'-மேக்னா சுரேஷ் அவர்களின் கதையில் வரும் ஈஸ்வர் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தவன். கணவனை இழந்து தன் இரு பிள்ளைகளுடன் வாழும் பிரித்வீகா. அவள் நண்பனின் மச்சானாக வரும் ஈஸ்வர். முதலில் வில்லன் போலவே வலம் வருபவன். பின்னர் தான் தெரியும் அவன் ரொம்ப நல்லவன் என்று. பிரித்வீகாவை மறுமணம் செய்பவன். முதலில் மிரட்டி தான் அவளை கல்யாணம் செய்வது போல் தெரியும். ஆனால் பிறகு தான் தெரிய வரும் அவள் மேல் அதிக காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்திருப்பான் என்று. ரொம்ப அருமையான கதாபாத்திரம். அவள் இரு பிள்ளைகளையும் அவ்வளவு அன்பாக அக்கறையாக பார்த்துக் கொள்வான். உண்மையில் மறுமணம் செய்யும் பெண்ணிற்கு இப்படி ஒரு கணவன் அமைந்தால் நிச்சயம் அவள் வாழ்க்கை சொர்க்கமே.
 
#98
மேக்னா சுரேஷ் அவர்களின் இன்னொரு கதை 'கலியுக குருஷேத்திரம்'. அதில் வரும் நண்பர்கள் கதாபாத்திரங்கள் அருமையோ அருமை. நண்பர்கள் ஐவரும் நட்புக்கு இலக்கணமாய். சக்ரவர்த்தினி இவள் தான் நாயகி இவள் நண்பர்கள் ஐவர்-கார்த்திக், சந்தோஷ், நந்தகோபால், உலகநாதன், தீபன் . அவள் கஷ்டத்தில் துணையாய், அவளுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாய் நட்பில் சிறந்து விளங்கும் நல்ல நண்பர்கள். 'நண்பன்டா' என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அடடா இப்படி ஒரு நண்பர்கள் பட்டாளம் கிடைத்தால் அருமையாக இருக்குமே என்று ஏங்க வைப்பார்கள். கதையின் நாயகன் நாயகி எல்லாமே ஆண் பெண் நட்பு தான். நட்புக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதை. கதையில் காதலும் உண்டு. ஹீரோ ஹரிஷ். வில்லன் பாதி ஹீரோ பாதி. ஹரிஷ்-வர்த்தினியின் காதல் - மோதல், நண்பர்களின் அன்பு அக்கறை என்று இனிமையாக செல்லும் கதை.
 
#99
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்- சக்தி திருமலை. என்னோட பேவரைட் ஆன்டிஹீரோ நானி. அவன் ஒரு டாக்டர். முதலில் ரொம்ப நல்லவனாக தான் இருப்பான். ஆனால் சில கசப்பான சம்பவங்களால் கெட்டவனா மாறிடுவான். அவனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் அத்துபடி. தனக்கென்று ஒரு வித்தியாசமான கொள்கையோடு சுத்திட்டு இருப்பான். அவனை திருத்ததான் அவங்க அப்பா அவனை வெளிநாட்டில் இருந்து அவன் அண்ணன் கல்யாணத்தை சாக்காக வைத்து இந்தியா கூட்டிட்டு வருவார். அவன் அத்தைப் பெண் தான் ஹீரோயின் ஜானகி.நடக்க முடியுமா படுத்த படுக்கையாக இருப்பாள். வீட்டில் எல்லோரும் அவளை ஒதுக்கி வைத்திருப்பார்கள் அவள் அம்மாவை தவிர. அவளை பிடிக்காத அவள் அப்பா அவளை நானிக்கு கல்யாணம் பண்ணிவைக்க நினைப்பார்.ஜானகிக்கு அதில் விருப்பம் இல்லை. .ஏன்னா நானி பத்தி எல்லாமே அவன் வாயால் அவனே சொல்லி அவளுக்கு தெரியும். இதற்கிடையே ஜானு அம்மா அவளை குணப்படுத்த சொல்லி நானிகிட்ட கேப்பாங்க . அவனும் ஒத்துக்கிட்டு அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பான். 'என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்றால் நீ எழுந்து நடந்து தான் ஆகணும்னு' மிரட்டியே ஜானுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை நடக்க வைச்சுடுவான். ஜானுவும் அவளுக்கு பிடித்த துறையில் வெற்றி பெற்று சாதித்துக் காண்பிப்பாள். இதுல நானி கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். வேற லெவல். அவன் கிட்ட ஜானு மாட்டிட்டு முழிக்கிறது இருக்கே அய்யோ அய்யோ. எப்பவுமே ஹீரோ அன்பாலதான் ஹீரோயினை கஷ்டத்தில் இருந்து வெளிக்கொண்டுவரணும்மா என்ன? அடாவடியாலும் ஹிம்சையிலும் மாத்தமுடியுன்னு இந்தகதையில சொல்லியிருப்பாங்க. ஜானு நானி ரெண்டு பேருமே என் பேவரைட்.
 
நான் படித்த கதைகளில் எனக்கு பிடித்த நாயகர்கள் பெயர்களை லிஸ்ட்டாவே போட்டு கொண்டு வந்துட்டேன். எல்லாமே என் பேவரைட் ஹீரோஸ். எல்லார்கிட்டேயும் ஏதோ ஒரு விஷயம் பிடிக்கும். இதுவரை நான் படித்ததே சில கதைகள் தான், சோ அதில் நான் ரசிச்ச, என் நினைவில் இருக்கும் ஹீரோ லிஸ்ட் இது.

விஜய நளந்தன் - இருள் மறைத்த நிழல்
சுதாகர் - மயங்குகிறாள் ஒரு மாது
நானி - கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
மானவ் - வானவில் என் வாசலில்
தமிழ் நிலவன் - செம்பூவே உன் மேகம் நான்
ஆதர்ஷ் - இடம் தருவாயா மனசுக்குள்ளே
ஆதித்தியன் - சில்லென்று ஒரு காதல்
விக்ரம் - இது நீரோடு செல்கின்ற ஓடம்
சித்தார்த் - இதயம் விழித்தேன்
அர்ஜூனா - ஆழி அர்ஜூனா
எட்வர்ட் துரை - இளமனச தூண்டிவிட்டு போறவரே
ஷ்யாம் - வீணையடி நீ எனக்கு
குரு - சமுத்திரா
யு வான் லீ - உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா
ஷிவேந்தர் - என் கருப்பழகி