அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#21
இன்பா அலோசியஸ் அவர்களின் மின்மினியாய் நான் என்ற நாவலின் நாயகி அர்ச்சனா கிறிஸ்டோபர்.. நாவல் எனது ஆசிரியர் பயிற்சியை நினைவு கூற வைத்தது. கிட்டத்தட்ட என்னைப் போன்ற குணாதிசயங்களை நாயகி கொண்டிருந்ததால் பிடித்துப் போனது. ஆசிரியர் பயிற்சியின் போது கதையில் வரும் கண்டிப்பான பள்ளியினைப் போன்ற பள்ளியிலேயே நானும் பயின்றேன். எல்லாப் போட்டிகளிலும் பங்கு பெற்று எல்லாரின் மதிப்பையும் பெற்றேன். அர்ச்சனா போன்றே படிப்பு முடியும் முன்பாகவே திருமணம். (ஆனால் லவ் மேரேஜ் இல்ல ) ஆனாலும் படிப்பில் நிறுவன அளவில் முதலிடம், மாவட்ட அளவில் இரண்டாம் இடம். என் வாழ்வியலோடு ஒத்துப்போனது மின்மினியாய் நான்..
 
#22
சுதா ரவி அவர்களின் சம்சாரம் என்பது வீணை நாவலில் வரும் சிவா கதாபாத்திரம். கதாநாயகனின் நண்பன் .. அவனுக்கு எல்லாமுமாக இருப்பவன். நல்லா சைட் அடிச்சு, ஜொள்ளு விடும் ஜாலி கேரக்டர். அதன்பின் நிரஞ்சன் கதாபாத்திரம். நாயகியின் அக்கா கணவன் பாத்திரம். சீரியஸான பொறுப்பான பாத்திரம். மனைவியின் தங்கையை தன் குழந்தையாகவே பாவித்து, அவளுக்காக எல்லாமும் செய்யும் நல்லவன். அவள் திரும்பி நல்ல வழிக்கு போய், அவள் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் நல்ல மனிதன்.
 

Vethagowri

Active member
Staff member
#23
தமிழ் மதுரா அவர்களின் சித்திரங்கதா... அருமையான படைப்பு..அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனச கவர்ந் தவங்க.. விஸ்ணு சான்சே இல்ல, அவனோட மேனரிசம், காதல், தவிப்பு, பிரிவு, வலி இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் அப்படியே மனச கவர்வது, விஷ்ணுவ போலவே நாயகி சரயு அவளோட பிரிண்ட்ஸ் அணுகுண்டு@ராம் இன்னும் மனசுல இருந்துகிட்டே இருக்கும்... எத்தனை தடவை படிச்சு இருப்பேன்னு எனக்கே தெரியாது... அப்படி பிடிக்கும் விஷ்ணுவையும் அவன் பங்காரு சரயுவையும்...
 
#24
கலைவாணி சொக்கலிங்கம் அவர்களின் பூவே உனக்காக நாவல்.
சூரியகாந்தி .. நாயகி தான் இவள். ஆம். நாயகன் கதிரவனைக் கண்டு பூக்கும் கிராமத்து சூரிய காந்தி இவள். கிராமத்தில் இரு தெருக்களில் ஏற்படும் பிரிவினை. அதனால் எதிரணியில் சென்ற அவளாசை மாமன் குடும்பம். மாமன் மகனின் மீதான உறுதியான காதல். பேசாமலேயே அவனுக்கு குறிப்புணர்த்திய விதம், அவன் வேறு திருமணம் செய்தான் என்ற செவி வழிச் செய்தியின் காரணமாய் காலை உடைத்துக் கொண்டு,தன் குடும்பத்தை கவனிப்பதற்காய் மீண்டு எழுந்த பீனிக்ஸ் பறவை, அனைவரையும் சரியாக எடை போட்ட விதம், கடைசியில் காதலனைக் கரம் பிடித்த அரும்பு என கிராமத்துக் குயிலாய் உழைப்பிற்கு அஞ்சாதவளாய் , கொண்ட முடிவில் மாற்றம் இல்லாதவளாய் அமைந்த சூரிய காந்தியை நீங்களும் பூவே உனக்காக நாவலில் காணலாம்.
 
#25
முத்துலட்சுமி ராகவன் அவர்களின் எண்ணியிருந்தது ஈடேற .. 8 பாகங்கள் உடைய நாவல். அனைத்து கதாபாத்திரங்களும் அருமையான படைப்பு.ராஜ வம்சத்தின் ரவிச்சந்திரன் நாயகன். ஹீரோக்களுக்குரிய அத்தனை அம்சமும் அசத்தலாய் நிரம்பியவன். நாயகியிடம் குழைந்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து, உணர்ந்து உருகி என செமயா பீலிங்ஸ் காட்டுவார். முத்துலட்சுமி மேம் கேரளாவை அப்படியே வருணிக்கும் போது நான் அங்கே இருப்பது போன்றே உணர்ந்தேன். நாயகன் படகு வீட்டில் , மலை அருவி மர வீட்டில் என ரொமான்ஸ் செய்யும் இடங்களும் அழகு. ஹீரோ னா ரவி தான் ஹீரோ.. அப்டின்னு நம்மள சொல்ல வச்சுடுவார்.
 
#26
ராஜேஷ்குமார் அவர்களின் கதைனாலே த்ரில் தான். அதிலயும் விவேக் வந்துட்டார்னா கதை செமயா போகும். நான் கூட யோசிப்பேன். ஒரு விஷயத்தை எப்படி இப்படி யோசிச்சு, சைன்டிபிக்கா அணுகமுடியும்னு. ஒவ்வொரு கதையிலும் நிறைய தெரிஞ்சுக்கலாம். எக்ஸ்ட்ராவா ரூபி@ ரூபலா விவேக்.. புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டி னு சொல்ற மாதிரி தான் விவேக் ரூபலாவின் பாத்திர வடிவமைப்பும் இருக்கும். நல்லா யோசிச்சு விவேக்குக்கே ஐடியா குடுக்கறவங்க.. வேலைக்குப் போறப்ப பஸ் ஸ்டாண்டில பாக்கெட் நாவல வாங்கி பயண நேரம் படிச்சாக்க எனக்கு அலுப்புத் தட்டாது. விவேக் விஷ்ணு ரூபலா வந்துட்டா இன்னும் புத்துணர்ச்சி யா இருக்கும்.
முதல்ல அவரோட கதைகள் நிறைய படிப்பேன். இப்ப படிக்கறது இல்ல. க்ரைம் , விவேக் ரூபலா மூனுமே அவரோட ட்ரேட் மார்க்...
 
#27
உமா பாலகுமரனோட மருவ காதல் கொண்டேன். ஹீரோ அருள் மொழிவர்மா. இருதய மருத்துவ நிபுணர். தந்தை செய்த தவறால், ஒரு பெண்ணிற்கு நடந்த கெடுமையை அந்த பெண் கடந்து வந்து அவரின் மகனை தன் மகனாய் பார்க்க துவங்கினாலும், அவரின் வேதனையை உடனிருந்து அனுபவித்ததால் வந்த கோபத்திற்கு வடிகாலாய், சந்தர்ப்ப வசத்தால், அருளின் மனைவியாய் மாறும் ஹீரோயின், அவனின் காதல் வாழ்க்கைக்கு தடையாய் முதலில் நின்று, அது முடியாத போது அவனின் வாரிசை கருவிலேயே கொல்ல துணிந்தது தெரிந்து அவளை விட்டு விலகுபவன், அதே வாரிசுக்காக அவளை ஏற்பது அற்புதம். அருளின் காதல், பாசம், கோபம், ஆற்றாமை, நேர்மை , அவனின் தொழில் மீதான பக்தி என எல்லா பரிமாணமும் அழகோ அழகு.
 

Anuya

Active member
#28
மாலை மயங்குகின்ற நேரம் ரமணிமா நாவல் ... என் அப்பாவோட college books இருக்கிற cupboardல எதேச்சையாக கிடைத்த மாத இதழில் வெளிவந்த தொடர்கதை. அதை படிச்சுட்டு தேடி பிடிச்சு புத்தகம் வாங்கி படித்த நாவல்.

ஹிரோ‌ கிருஷ்ண சந்திரன் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் . பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாய் , தங்கைக்கு நல்ல அண்ணனாக இருக்கும் கிருஷ்ணா தனக்கு brain la problem இருக்குனு தெரிந்த பிறகு தன்னை ஒரு கெட்டவன் மாதிரி மத்தவங்க முன்னால் காட்டிக்கிறது, அப்பா அம்மாவ எதிர்த்து பேசுறது தங்கச்சி மேல அக்கறை இல்லாத மாதிரி காட்டிப்பது என அனைத்து செயல்களும் தன்னை தன் வீட்டினர் வெறுக்க வேண்டும் என்றே செய்வான். அப்போதான் அவனோட இழப்பு அவங்கள பெரிசா பாதிக்காதுனு நினைத்துகொண்டு.....
தன்னுடைய மனைவியை அவ்வளவு விரும்பியும் தன் காதலை மறைத்துக்கொண்டு தனக்கு பிறகான அவளுடைய வாழ்வு பாதித்துவிட கூடாதுன்னு அவளை விட்டு விலகியே இருப்பான். கிருஷ்ணா செய்யும் எல்லா செயல்களும் தன்னை சேர்ந்தவர்களை பாதிக்க கூடாது அவர்களை கஷ்டப் படுத்த கூடாதுனு செய்றது ரொம்பவும் பிடிக்கும் ....
கடைசில கிருஷ்ணா எழுதின கடிதம் படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதேன் .. கிருஷ்ண சந்திரன் பெயர்க்கான விளக்கம் சொல்லுற‌ இடம் மறக்கமுடியாது அதே போல என்னோட கிறு கிறு கிருஷ்யும் மறக்கவே முடியாது ...
 

Anuya

Active member
#29
சீதாலக்ஷ்மி அவர்களின் பூச்சரம் கதையின் ஹீரோ நிஷான் மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம்
சின்ன வயசுல இருந்தே நிஷுவிற்கு ஒரு கேட்ட பழக்கம் உண்டு எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுல எதாவது இவனோட சின்ன மிஸ்டேக் இருந்தாலும் நம்மால் தான் இப்படி ஆயிடுச்சினி அதிக மனஅழுத்தத்துக்கு போயிடுவான். காலேஜ் படிக்கும் சமயம் இவன் ஒரு பொண்ண ஆசிட் அட்டாக்ல இருந்து காப்பாத்துவான் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு கைல ஆசிட் பட்டுடும் ரத்தம் பார்த்துட்டு மயகிடுவான் . பிறகு அதே பொண்ண வெளிநாட்டில் பார்த்து வியந்து அவளையே காதலிச்சு கஷ்டப்பட்டு அவளையும் சம்மதிக்க வைச்சு கல்யாணமும் பண்ணிப்பான் ....அவங்களோட குழந்தை miscarriage ஆகிடும் டாக்டர் சொல்லுவாங்க ஆசிட் அவளுடைய வயிறு பகுதியில பட்டதுனால கர்ப்பப்பையை பாதிச்சி இருக்குனும் இன்னொரு முறை அவ pregnant ஆகி கருச்சிதைவு ஏற்பட்டலோ அவ உயிர்கு ஆபத்துனு சொல்லுவாங்க அதுனால நிஷுவ வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா அவன் சந்தோசமா இருக்கனும்னு ....நிஷு வேல விசயமா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போய் வேசெக்டொமி(vasectomy) பண்ணிட்டு வந்து ....நீ உனக்கிட்ட குறை இருக்குனு சொல்லிட்டு என்ன வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு பீல் பண்ணாத இப்போ என்னாலயம் ஒன்னு பண்ணமுடியாது சொல்லும் போது அச்சோ எனக்கு goose bumps வந்துச்சி ....இப்படி ஒருத்தவங்கலால லவ் பண்ண முடியுமானு தெரியல .....Nishu always my favourite
 
#30
முத்துலட்சுமி ராகவன் அவர்களின் எங்கிருந்தோ ஆசைகள் நாவல்.. நாயகன் நாயகியை விட என்னை ஈர்த்தது கண்ணதாசன் என்னும் நாயகியின் அண்ணன் கதாபாத்திரம். ஒரு அண்ணனாக மதுரை மண்ணின் மைந்தனாக இருப்பார். நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என ஏங்க வைப்பார். தங்கை எவ்வளவு பாராமுகமாக இருந்தாலும் சண்டை இட்டாலும் அவளின் நலம் விரும்பி ட்ரான்ஸ்பர் வாங்கும் அளவிற்கு ரொம்பபபபபபப நல்ல அண்ணன்.
 
#31
அரு. ராமனாதனின் வீரபாண்டியன் மனைவி. மூன்று பாகங்கள் உடைய வரலாற்று நாவல். இதில் ஜனநாதன் என்னும் கதாபாத்திரத்தினை நானும் எனது தோழியும் வியந்து வியந்து பேசியிருக்கிறோம். அதுவும் முதல் இரண்டு பாகங்கள் மட்டுமே நூலகத்தில் கிடைத்தன. மூன்றாம் பாகத்தினைத் தேடி தேடி ... கடைசியில் இருவரும் படித்து முடித்த போது .. சே.. எவ்ளோ நல்லவன் இவன் என்று நெகிழ்ந்தே போனோம். பல்லவர்களின் கடை வாரிசாக இருந்தவன் ஜனநாதன். அவன் அகல்யா என்ற விதவையை கடைசியில் மணம் புரிந்து கொள்வான். சகுனியின் சூதும் சாணக்கியனின் தந்திரமும் கொண்டவன். இப்படிப்பட்ட ஆளுமைகளால் நாம் ஆளப்பட்டிருக்கிறோம் என்பதே நமக்கு பெருமை ஆகும் ... தற்போது இத்தகைய தர்ம சூத்திரங்களை கடைபிடிக்கவோ தெரிந்திருப்பவரோ எவருமிலர்.
 
#32
என்னோடு நீ இருந்தால்.. ஷர்மி அவர்களின் படைப்பு
நாயகி சந்தியா நமக்குப் பிடித்தமான குறும்புக்கார, குழந்தைத்தனமான , இரக்க சுபாவம் உடைய நாயகி. கதை நெடுகிலும் ஊடலும் சண்டையும்.. கடைசியில் நாயகனிடம் சரணாகதி என நம்மை ரசிக்கத் தூண்டுகிறார். அதிலும் நிரஞ்சன் என்னும் நாயகனின் நண்பனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க‌ மதுவைத் தூண்டும் நிகழ்வுகள் அருமை. இரட்டைச் சகோதரிகளை வம்பிழுப்பதும் அப்பத்தாவை மனதில் திட்டுவதும் என அசத்தியிருப்பார்.
 

Anuya

Active member
#33
தமிழ் மதுரா அவர்களின் சித்ராங்கதா நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை. ஜீ(வி)ஷ்ணு & சரயு( சரவெடி) எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு என்னை இந்த ராம் ( அணுகுண்டு) பையனும் கவர்ந்துட்டான். சின்ன பிள்ளையில இருந்தே நம்ம சரவெடியும் அணுகுண்டும் ஒண்ணுக்குள்ள ஒன்னு எல்லா சேட்டையும் சேர்ந்தே தான் செய்வாங்க... அவ்வளவு ஒற்றுமையை இருந்த நம்ம அணுகுண்டு திடீர்னு தன் அம்மாவுடன் மாயமாகின்றான் எங்க போனாங்கன்னு தெரியல.... அப்புறம் பார்த்த நம்ம அணுகுண்டு வெளிநாட்டில டாக்டர்ர இருக்கான் . சரயு கஷ்டத்துல இருக்கும் போது அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவளையும் குழந்தையையும் பாத்துக்குறது, அவ குழப்பமான சூழலில் இருக்கும் போது அவளை guide பண்ணுறது , ஜீஷ்ணு &சரயு சேர்ந்த பிறகு அவர்களை பார்த்து சந்தோசப்படுவதுனு ஒரு நல்ல நண்பனா சரயுவோட எல்லா சுகத்துக்கத்துளையும் அவ கூடவே இருந்து பாத்துக்குற அணுகுண்டு (Dr.ராம்) என்னை மிகவும் கவர்ந்தவர்.
 

Anuya

Active member
#34
R.மகேஸ்வரி அவர்களின் உயிரே உயிரே பிரியாதே நாவலின் நாயகி நந்தினி என்னை கவர்ந்த கேரக்டர் . தன் வாழ்வில் சந்தித்த ஆண்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் கசப்பான நினைவுகளையே தந்து விட்டு சென்றிருக்கின்றனர் நந்தினியை பொறுத்தவரையில் . அவள் வேளை செய்யும் ஹாஸ்பிடல் நிர்வாகி கெளதம் அவளுக்கு அண்ணா போன்றவன் . ஆதரவு இல்லாமல் தவிக்கும் போது தன் ஹாஸ்பிடல்லில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவ நர்சிங் பயின்றதால் ஹாஸ்பிடல்லில் nurse ஆகவும் வேளை தருவான் கெளதம் . அவனுடைய நண்பன் நரேந்திரன் அன்னையை பார்த்துக்கும் nurse தான் நந்தினி . நரேன் ஒரு விடோவ்ர் அவனோட காதல் கதையை அவன் அன்னையின் மூலம் அறிந்தவள் அவனுடைய காதலின் மேல் காதல் கொள்கிறாள்.நரேனை அவன் அன்னை மறுமணம் செய்ய சொல்லி வற்புரத்தியும் செய்யமாட்டான்...தங்கள் குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போட்டுமேனு நந்தினி கிட்ட அவன் அன்னை புலம்ப அவன் அன்னைக்காகவும் அவன் மேலுள்ள காதல்காகவும் எல்லாரையும் சமாதானம் செஞ்சு அவனோட குழந்தையை இவ சுமப்பா ஒரு வாடகை தாய் மாதிரி ஆனா அப்படி இல்ல ...நரேன் கூட அவன் வீட்ல இருக்கும் போது வயிருல வளர்ர குழந்தை மாதிரி அவளோட காதலும் வலந்துட்டே போகுது.....நரேன் கிட்ட பேச முடியாம அவ மனசுக்குல்லையே பேசுகிறது கடைசில குழந்தை பிறந்த பிறகு அவனையும் பிரிய முடியாம குழந்தையும் பிரிய முடியாம sucide பண்ணிக்க போவா அப்போ நரேன் காப்பாத்திடுவன் சேர்ந்துடுவங்க.... நந்தினி & நரேன் ரெண்டு பேரோட காதலும் செமையா இருக்கும் ...
 
#35
சீதாலக்ஷ்மி அவர்களின் பூச்சரம் கதையின் ஹீரோ நிஷான் மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம்
சின்ன வயசுல இருந்தே நிஷுவிற்கு ஒரு கேட்ட பழக்கம் உண்டு எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுல எதாவது இவனோட சின்ன மிஸ்டேக் இருந்தாலும் நம்மால் தான் இப்படி ஆயிடுச்சினி அதிக மனஅழுத்தத்துக்கு போயிடுவான். காலேஜ் படிக்கும் சமயம் இவன் ஒரு பொண்ண ஆசிட் அட்டாக்ல இருந்து காப்பாத்துவான் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு கைல ஆசிட் பட்டுடும் ரத்தம் பார்த்துட்டு மயகிடுவான் . பிறகு அதே பொண்ண வெளிநாட்டில் பார்த்து வியந்து அவளையே காதலிச்சு கஷ்டப்பட்டு அவளையும் சம்மதிக்க வைச்சு கல்யாணமும் பண்ணிப்பான் ....அவங்களோட குழந்தை miscarriage ஆகிடும் டாக்டர் சொல்லுவாங்க ஆசிட் அவளுடைய வயிறு பகுதியில பட்டதுனால கர்ப்பப்பையை பாதிச்சி இருக்குனும் இன்னொரு முறை அவ pregnant ஆகி கருச்சிதைவு ஏற்பட்டலோ அவ உயிர்கு ஆபத்துனு சொல்லுவாங்க அதுனால நிஷுவ வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா அவன் சந்தோசமா இருக்கனும்னு ....நிஷு வேல விசயமா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போய் வேசெக்டொமி(vasectomy) பண்ணிட்டு வந்து ....நீ உனக்கிட்ட குறை இருக்குனு சொல்லிட்டு என்ன வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு பீல் பண்ணாத இப்போ என்னாலயம் ஒன்னு பண்ணமுடியாது சொல்லும் போது அச்சோ எனக்கு goose bumps வந்துச்சி ....இப்படி ஒருத்தவங்கலால லவ் பண்ண முடியுமானு தெரியல .....Nishu always my favourite
மை பேவரேட் டூ.... நோ இன்கம்மிங்.. ன்னு ஏதோ சொல்வான் அதுக்கு.. செம செம.. அவனோட சேட்டை .. குழந்தை தனம் எல்லாத்தையும் தாண்டி அவனோட காதல் ரொம்ப அழகு...
 

dharani

Active member
#36
கீதாஞ்சலியோட சூர்யோதயம்..... நான் ரொம்ப அழுது அழுது படிச்ச கதை.... சூர்யா என்னோட ரொம்ப ரொம்ப most fav..... வெற்றி மாதிரி ஒரு ஆளை நான் நிஜத்தில் பாத்து இருக்கேன்.... அதுனாலேயே அந்த ஸ்டோரி எனக்கு அவுளவோ பிடிக்கும்..... அவளோட தன்னம்பிக்கை, ஒரு ஒரு முறையும் வெற்றி மேல் வைக்கிற நம்பிக்கை, அப்பா வை கஷ்ட படுத்த கூடாதுனு மெனக்கெடுறது, எல்லாமே அவ்வுளவு natural யா இருக்கும்..
 

dharani

Active member
#37
தமிழ் மதுரா அவர்களின் சித்ராங்கதா நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை. ஜீ(வி)ஷ்ணு & சரயு( சரவெடி) எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு என்னை இந்த ராம் ( அணுகுண்டு) பையனும் கவர்ந்துட்டான். சின்ன பிள்ளையில இருந்தே நம்ம சரவெடியும் அணுகுண்டும் ஒண்ணுக்குள்ள ஒன்னு எல்லா சேட்டையும் சேர்ந்தே தான் செய்வாங்க... அவ்வளவு ஒற்றுமையை இருந்த நம்ம அணுகுண்டு திடீர்னு தன் அம்மாவுடன் மாயமாகின்றான் எங்க போனாங்கன்னு தெரியல.... அப்புறம் பார்த்த நம்ம அணுகுண்டு வெளிநாட்டில டாக்டர்ர இருக்கான் . சரயு கஷ்டத்துல இருக்கும் போது அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவளையும் குழந்தையையும் பாத்துக்குறது, அவ குழப்பமான சூழலில் இருக்கும் போது அவளை guide பண்ணுறது , ஜீஷ்ணு &சரயு சேர்ந்த பிறகு அவர்களை பார்த்து சந்தோசப்படுவதுனு ஒரு நல்ல நண்பனா சரயுவோட எல்லா சுகத்துக்கத்துளையும் அவu கூடவே இருந்து பாத்துக்குற அணுகுண்டு (Dr.ராம்) என்னை மிகவும் கவர்ந்தவர்.
Last varai anu kundu thaan raam appadinu guess panna mudiyamale suspense yaa pogum....Raam vodaWife neelavum sema character..... Athe pola manoharama very very bold and lovable teacher
 
#38
நான் பிந்து வினோத் கதைகள் படிச்சதில்லை மல்லி கண்டிப்பா படிக்கணும்...................
அவர்களுடைய மலையோரம் வீசும் காற்று கூட என் மனம் கவர்ந்த கதை நேரம் கிடைத்தால் படியுங்கள் சுதா
 
#39
கீதாஞ்சலியோட சூர்யோதயம்..... நான் ரொம்ப அழுது அழுது படிச்ச கதை.... சூர்யா என்னோட ரொம்ப ரொம்ப most fav..... வெற்றி மாதிரி ஒரு ஆளை நான் நிஜத்தில் பாத்து இருக்கேன்.... அதுனாலேயே அந்த ஸ்டோரி எனக்கு அவுளவோ பிடிக்கும்..... அவளோட தன்னம்பிக்கை, ஒரு ஒரு முறையும் வெற்றி மேல் வைக்கிற நம்பிக்கை, அப்பா வை கஷ்ட படுத்த கூடாதுனு மெனக்கெடுறது, எல்லாமே அவ்வுளவு natural யா இருக்கும்..
எனக்கு தெரியுமே வெற்றி கேரக்டர்... 🙈🙈🙈 ரொம்ப மனசுல தாக்கத்த கொடுக்கற கதையில ஒன்னு...
 
#40
இந்த நொடி போதுமே தற்போது படித்த கதை தான் இருந்தும் நாள்முழுவதும் என்னை படிக்க தூண்டிய கதை இது.... கதையின் ஆசிரியர் தேன்நிலா....
இதில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் விஷ்ணு என்ன தான் மூன்று ஹீரோ இருந்தாலும்... விஷ்ணு ரொம்ப நல்லவன்.... எதிர்பாராத நேரத்தில் கல்யாணத்திற்கு ஒரு நாள் முன்பு தன் காதலி கடத்தப்பட்டு முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு அவளே அவனை காணது முகம் திருப்பினாலும் கூட நான் காதலித்தவள் நீயடி என்று கூறி ஜானுஶ்ரீ யை கரம் பிடித்தான் விஷ்ணு.... மற்ற நாயகர்களான ஆதிரன் , அஜய் தங்கள் நாயகிகளை இந்நிலைக்கு ஆளாக்கிய வில்லன்களுக்கு கொடுக்கும் தண்டனை வேற லெவல்.... நிலா, மீரா, ஜானுஶ்ரீ மூவரின் நட்பு என் தோழிகளோடு நான் கொண்டிருக்கும் நட்பினை எடுத்துக்கூறியது....