போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#91
சமீபத்தில் படித்த போற்றி பாரடி நம் காதலை ஹுரோ அதீப்ராகவ் கதாபாத்திரம் அருமை. தனக்கு தீங்கு இழைக்க வரும் சங்கவியை அவளின் தவறை உணர்த்தி நல்வாழ்க்கை அமைத்து கொடுத்து பிறகு காதல் கொள்வார். அவளின் தவறு வெளி உலகுக்கு தெரிய வராமல் தடுக்க தன் காதலியின் கவுரம் காக்கா தன் மேல் பழி ஏற்றுகொள்ளும் அரூமையான காதலன் சூப்பர்
 
#92
ஹமீதா சிஸ்ஸின் கலைந்து போன மேகங்கள் கதையில் வரும் நேஹா நரேன் சந்தீப் கதாபாத்திரங்கள் மிகவும் பிடிக்கும். நேஹா கிரிக்கெட் வீரர் சந்தீப்பின் தீவிர {விசிறி இருவரும் சந்தித்து நட்பாக இருப்பார் நட்பு அடுத்த நிலை தாண்டாமல் சுதாரித்து தன் காதல் கணவனுக்குதான் என்று இருக்கும் அருமையான கதாபாத்திரம் நரேன் காதல் மன்னன். நேஹாவின் குற்ற உணர்ச்சியை நீக்கி காதலிக்க வைக்கும் மாய கண்ணன் . சந்தீப் நேஹாவை தன் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து இருப்பார்
 

dharani

Active member
#93
ரம்யா ராஜன் அனிதாவின் அப்பா.....எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான ஸ்டோரி.....எப்ப தோணினாலும் எடுத்து படிக்கற கதை அப்படினா அதுல இதுவும் ஒன்னு..... ஹரிஹரன் மீனா ரெண்டு பெரும் அவுங்க லைப்யை எப்படி அழகாக மாத்திக்கிறாங்க அனிதாவுக்காக அப்படிகிறதை சொல்லி இருப்பாங்க..... குழந்தை செல்வம் சிலருக்கு வரம் சிலருக்கு அதோட அருமை தெரியாது ..... அந்த செல்வதை எப்படி பாதுகாக்கிறது அப்படினு ஹரி வாழ்ந்து காட்டி இருப்பார்.... சூப்பர் ஸ்டோரி.... ரம்யா ராஜனுக்கு இந்த ஸ்டோரி ஒரு மாஸ்டர் பீஸ் .....
 

dharani

Active member
#94
நிதனி பிரபுவின் நிலவே நீ என் சொந்தமடி ..... நிதா அக்கா கதை அப்படினா எனக்கு பைத்தியம்.... அவுளவு பிடிக்கும்.... அவுங்க தமிழ் தான் எனக்கு ரொம்பரொம்ப பிடிச்ச விஷயம்....அப்புறம் கதை சொல்லாம உணர்வை உணர வைப்பாங்க .....

செந்தூரன் கவி நிலா ..... படிப்பு மட்டும் தான் வாழ்கை உயர்த்து அபப்டினு இல்ல உழைப்பும் உயர்த்தும் ..... காதல் வளர்ச்சிக்கு இருக்கணுமே தவிர வீழ்ச்சிக்கு இல்லனு சொல்லி இருப்பாங்க.....தேத்தண்ணீ வித் செந்தூரன்..... இந்த ஒரு வரிக்கு அடிமை ..... அதை செந்தூரன் சொல்லும் போது எல்லாம் அப்படி ஒரு இதமா இருக்கும்....
 
#95
எனக்கு பிடித்த ஒரு ஹீரோயின் கதாபாத்திரம் சூர்யோதயா. சூர்யோதயா- ரொம்ப சுட்டி, துறுதுறு ஜாலியான பெண். அன்பான பெற்றவர்கள், பாசமான அண்ணன் என்று அழகிய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வரும் அவள் வாழ்க்கையில், அவள் பள்ளி பருவத்தில் எதிர்பாராது ஏற்படும் விபத்தால் அவள் வாழ்க்கையே மாறிவிடுகிறது. அதில் இருந்து அவள் படும் வேதனைகள் துயரங்கள் பல. அதன் பிறகு அவள் வாழ்க்கையில் 'வெற்றி' அவள் கணவனின் வருகை. அவன் வந்த பிறகு அவள் வாழ்க்கையில் இனி வெற்றியே என்று நினைத்தால், அதற்கு நேர்மாறாக இன்னும் அவள் நிலை மோசமாக . வெற்றி - பொறுப்பிள்ளாத , கோபாகார கணவன். அதிக அன்பு இருந்தும் அவன் குணத்தால் அவளை இன்னும் இன்னும் துயரத்தில் ஆழ்த்தி, அவளுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்துகிறான். இறுதியில் அவன் இறப்பிற்குப் பிறகே அவள் நிலை மாறுகிறது. தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஒளி பெற்று சூர்யோதயமாக மேலெழும்பிகிறாள். அதுவே 'சூர்யோதயம்' என்னும் அழகிய கதை. ரொம்ப யதர்தமான கதை. சூர்யோதயா நம் எதிர் வீடு, பக்கத்து வீடு பெண்னை போன்று தோன்றும் கதாபாத்திரம். என்னை அதிகம் கவர்ந்தது அவள் தன்னம்பிக்கையும் தைரியமும்.