போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#86
ஹமீதா சிஸ்ஸோட உந்தன் அலாதி அன்பினில் கதையில் வரும் தமிழ்செல்வன் நல்ல மகனாக நல்ல காதலனாக நல்ல சகோதரனாக இருப்பார் டீன்ஏஜ்ஜில் இருக்கும் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக ஹேண்டில் செய்வார் மது தமிழை காதலித்தாலும் தோழியும் விரும்புவதால் சொல்ல தயஙகுவாள் தமிழ் மறுக்கமுடியாத படி காதலை சொல்லும் இடம் அருமை. கப்பலும் கடலும் மனதிலே நங்கூரமா பதிந்து விட்டது
 
#87
பர்வீன் சிஸ்ஸோட காணல் நீராய் என் காதல் கதையின் ஹுரோ சூர்யா ஹுரோயின் சக்திப்ரியா இரு கதாபாத்திரமும் அருமை.சூர்யா நட்புக்கு குடும்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் அன்பானவன்.சக்தி தனக்கு வரும் இடர்களை அழகாக எதிர்த்து உற்சாகமாக வலம் வரும் தைரியமான பெண். இருவரும் ஒருவர் மேல் ஓருவர் வைக்கும் காதல் அலாதியானது
 
#88
மோனிஷா சிஸ்ன்ஸோட உன் பாடல் நீ என் தேடல் கதையின் அன்புசெழியன் கதாபாத்திரம் அருமை. வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் விருப்பத்தோடு ரசித்து செய்யும் ரசிகன். நல்ல மகனாகாவும் நல்ல தந்தையாகவும் நல்ல கணவனாகவும் இருப்பவன். குழந்தையின் மனதில் நல்ல விஷயங்களை விதைப்பவன்
 
#89
எனக்கு பிடித்த ஒரு ஹீரோ கதாபாத்திரம் 'செம்பூவே உன் மேகம் நான்' கதையின் நாயகன் 'தமிழ் நிலவன்'. அவனின் அத்தை பெண் பூவினி தான் நாயகி.

அந்த குடும்பத்தின் இளைய தலைமுறையில் மூத்தவன் தான் நிலவன். அமைதியும் அழுத்தமும் பொறுப்புணர்வும் கொண்டவன்.

சிறு வயதில் இருந்தே பூவினியை ரொம்ப அன்பா அக்கறையா பார்த்துப்பான். பூவினிக்கு ஒவ்வாரு விஷயத்திலும் வழிகாட்டியா இருந்து வழிநடத்துறது, அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா துணை நிற்கிறதுன்னு என்னை கவர்ந்த கதாபாத்திரம்.

ஒவ்வொரு நொடியும் பூவினிக்கு ஒரு நல்ல பாதுகாவலனா இருப்பான் நிலவன் . பூவினி மேல கொண்ட காதலை தன் குடும்பத்துக்காக மறைத்து கஷ்டபடறது, அவளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாம தவிக்கிறதுன்னு கதை நல்லா போகும். அதே போல எனக்கு இந்த கதையில பிடிச்ச இன்னொறு கதாபாத்திரம் 'மித்திரன்'. பூவினியின் அத்தை பையன். பூவினிக்கும் இவனுக்கும் உள்ள நட்பு , பூவினியின் தங்கை தாரணியோட இவன் காதல் எல்லாம் நல்லா இருக்கும்.
 

Ramya Mani

Well-known member
#90
சமீபத்திய வாசிப்பு
ராதா க்ருஷ் அவர்களின் தாய்மடி சேர்ந்த மலர்
ஹீரோ கேசவ் சுப்பிரமணிய முரளி கிருஷ்ணன் .
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஹீரோயினை அதாவது தர்ஷினியை காதலிக்கும் கேரக்டர். பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், பிறகு வேலை என அனைத்திலும். தர்ஷினிக்கு வலது கரமாய் இருந்து கண்ணுக்கு இமை போல் தாங்கும் அன்பு நெஞ்சம். எதார்த்தத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும் முரளி கதாபாத்திரம் தற்போது பிடித்ததாகிப்‌ போனது.