போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

#2
ரமணிமா கதைகள் பதின் பருவத்தில் படிக்க ஆரம்பித்த புதிது. வைரமலர் நாவல். படிக்க படிக்க நித்திலா மனது மிகவும் பிடித்த ஒருத்தியாகிட்டா. ஒரு பெண் வைரத்தை போன்ற உறுதியும் மலரை போன்ற மென்மையும் கொண்டு இருக்கணும்னு எனக்கு கற்று கொடுத்த நாவல். பெண் தன்னம்பிக்கையோடு எதையும் தாங்கும் உறுதியோடு நேர்மையா ஒழுக்கமா ஆனா அன்பா இருக்கணும்னு தெரிந்து கொண்டது நித்திலா கிட்ட தான். பிடிக்காத மாமாயாருக்கு துரோகம் செய்த மாமனாரது தவறையும் சரியா சுட்டிக் காட்டுவா. மிகப்பிடித்த நாயகி???
 
sudharavi

Administrator
Staff member
#3

எனக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் நித்திலா ரமணியம்மா கதையில். கவி..
 
Ramya Mani

Well-known member
#4
இன்பா அலோசியஸ் அவர்களின் எல்லாம் உன்னாலே நாவலில் வரும் ஹீரோ தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களிடம் பேசும் போது திணறல், ஜொள்ளு விடும் நண்பனுடன் கூட்டு, தாயையும் தந்தையில் பார்க்கும் மனப்பான்மை நன்று.. தன்னவளிடம் காதல் சொல்லும் அழகு அதை விட அருமை.. அத விட முக்கியமானது.. தலைவருக்கு நல்லா சமைக்கத் தெரியும்..
 
#5
எனது மனதை கவர்ந்த கதாபாத்திரம் மயங்குகிறாள் ஒரு மாது கதையோட ஹீரோ சுதாகரன். ரமணிம்மா கதைகளோட ஆன்டி ஹீரோக்களில் ஒருவன் தான். முதலில் அவனின் நடவடிக்கைகளை பார்த்து திட்ட துவங்கினாலும் அதையும் தாண்டி நம்மை மயக்குவிடுகிறான் சுதா.

அவன் வள்ரந்த விதம், அவன் தினம் தினம் காணும் மலைவாழ் மக்களின் கலாச்சாரம் என அதில் உழன்றதாலோ என்னவோ அவனின் செயல்கள் அவனுக்கு நியாயமாய் போய்விட்டது. அவனின் அந்த கலாச்சரத்தை கடந்து அவளின் மீதான நேசம் வெளிப்படும் இடத்தில், தனது உயரம் மறந்து தனது நிலை மறந்து பெண்ணவளுக்காய் அவன் படும் துயரமும், அவளுக்காக எதையும் தனது கௌரவத்தை விடுத்து செய்ய துணிவதும் அற்புதம்.

ஆண் தவறு செய்யலாம். ஆனால் அவன் அதை உணரும் சந்தர்ப்பம் வாய்த்தால் அதை தவறவிடாது தனது ஈகோ கர்வம் கௌவரம் துறந்து அதை ஒத்துக்கொள்வது சாதாரண விசயமில்லை. அதை மனப்பூர்வமாக செய்யும் கதைபாத்திரம் என்பதால் மிகவும் என்னை கவர்ந்தவன்.. சுதாகரன்