போட்டிக்கான கதைகள் இங்கு பதிவிடப்படும்

sudharavi

Administrator
Staff member
#1
ஏன் பிரிந்தாய்?
எழில்மதி GS
இருள் சூழ்ந்த விடுதி, மணி சுமார் நள்ளிரவு 01. 30 இருக்கும். 'தட்' என்று தரை அதிர ஒரு சத்தம். தொடர்ச்சியாகத் தேர்வுக்கு படித்துப் படித்து அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர் அனைத்துப் பெண்களும், அதாவது கல்லூரி மாணவிகள். 01.45 மணி போல வரிசையாக எல்லா அறைக் கதவுகளும் படபடவென தட்டப்பட்டன.


ரோகினி தூக்கக் கலக்கத்தில் எழுந்து சென்றாள் "எவடா அவ இந்நேரத்துல உசுர எடுக்கிறா. ஏதோ உயிர் போற மாதிரி தட்டுறா" என புலம்பிக் கொண்டே வெளியே கவின்யா பேயறைந்தது போல் நின்று கொண்டு இருந்தாள்

"இந்நேரத்துல என்..." என்று ரோகினி கேட்டு முடிப்பதற்குள்
"அங்க அங்க வினோ.. வினோ... விழுந்துட்டாடி" என்று பதறியபடி கூறி விட்டு அடுத்த கதவைத் தட்டப் போனாள் கவின்யாதூக்கக் கலக்கத்தில் இருந்த தனது மண்டையில் யாரோ சுத்தியை வைத்து அடித்தது போல் இருந்தது ரோகினிக்கு. பதட்டமாக கவின்யா கை காட்டிய திசையில் ஓடினாள் ரோகினி. அங்கு சென்றுப் பார்த்த ரோகினி, ஆணி அடித்தது போல் அதே இடத்திலே நின்று விட்டாள். அவளுடைய தோழி வினோ அங்கு மல்லாக்கப் படுத்து இருந்தாள்.


அந்த விடுதி நான்கு புறமும் கட்டப்பட்டு நடுவில் வெட்ட வெளியாக இருக்கும். அந்த வெளியில், சிறிய ஷட்டில் கோர்ட்டும் இரு மருங்கிலும் துணி காயப்போடும் இடமும் இருக்கும். 2 மணி நேரத்திற்கு முன், ரோகினி, வினோ, சுந்தரி, சுஜா நால்வரும் அடுத்த நாள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தனர். அப்போது சாதாரணமாக இருந்த வினோ, படித்து முடித்து எப்போதும் போல அலாரம் வைத்து தூங்கப் போன வினோ இங்கு எப்படி வந்து கிடக்கிறாள். அதுவும் அந்த அர்த்த ராத்திரியில்...


விரைந்து வினோவை நெருங்கிய சுஜாவும் சுந்தரியும் அவளைத் தூக்க முயல "அய்யோ... அம்மா..." என அந்த விடுதி முழுவதும் எதிரொலிக்கும்படி அப்படி ஒரு அலறல் வினோவிடம் இருந்து

"என்னாச்சு என்னாச்சு வினோ... நாங்க எதுவும் தொடல சரியா. இங்க இங்க எப்படி வந்த வினோ" சுஜா கேட்டாள்

"விழுந்துட்டேன் டி" என்றாள் வினோதினி முனகியபடி"விழுந்திட்டியா எங்க இருந்துடி" என்றாள் சுந்தரி"ரெண்டு.. ரெண்டாவது மாடில இருந்து" வினோ வாயில் இருந்து வந்து விழுந்தன அந்தத் திகிலான வார்த்தைகள்

வினோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அங்கு இருந்த அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ரோகினிக்கு யாரோ தன் தலையை பனிக்கட்டிப் பாத்திரத்தில் முக்கி எடுத்தது போல் இருந்தது. மூளையும் எதையும் யோசிக்க மறுத்தது. அவள் கண்கள் அறிவுப்பூர்வமாக தேடியது இரத்தத்தைத் தான். இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தவளுக்கு இரத்தம் வந்திருக்க வேண்டுமே! ஒருவேளை தூக்கக் கலக்கத்தில் ஏதோ உலறுகிறாள் எனத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் ரோகினி.


அனைவருக்கும் இந்த விஷயம் பரவ, கல்லூரி முதல்வர் முதல் வார்டன் வரை எல்லாரும் வந்து சேர்ந்தனர். அவள் வலியில் கத்த, வேறு வழியின்றி அவளைத் தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் போட்டனர். எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க கல்லூரி முதல்வர் சமாதானப் படுத்தி பரீட்சை எழுதுவதில் கவனம் செலுத்தக் கூறி அனுப்பி வைத்தார்.ஒருவழியாக தேர்வை எழுதி முடித்தவர்கள் அவளைப் பார்க்கப் போக ஒன்று கூடினர். வினோவின் தோழி பவித்ரா கடைசியாக வந்து சேர்ந்தாள். பவி பாவம் வினோவைப் பார்க்கக் கூட இல்லை; நேற்று இரவு படிக்கும் போது பார்த்ததோடு சரி. அனைவரும் இருந்த அதிர்ச்சியில் பவித்ராவை எழுப்பக் கூட யாரும் ஒரு மனநிலையில் இல்லை. கல்லூரி மாணவிகளோடு, வினோவின் தோழிகளும் மருத்துவமனை சென்று சேர்ந்தனர். அங்கு வினோ இருந்த நிலையைப் பார்த்து யாராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.


வினோவின் தாயும் தந்தையும் இருந்த கலங்கிய நிலைக் கண்டு வினோவின் தோழிகளுக்கு வார்த்தைகள் வரவில்லை. தன் தோழியின் இத்தகைய நிலையின் காரணத்தை அறியத் துடித்தனர். கையோடுக் கொண்டு வந்திருந்த வினோவின் மொபைலை ஆராய்ந்தனர். அந்த மொபைலில் டாக்கிங் டாம் தவிர வேறெந்த கேம் ஆப்பும் இல்லை. அவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.முதலில் ரோகினி ஆரம்பித்தாள் "நேத்திக்கு நாம எல்லாரும் ஒன்னா படிச்சுட்டு இருந்தப்போ கூட அவ நார்மலா தானடி இருந்தா"அடுத்து சுஜா "அவ நார்மலாவே இல்ல. எல்லாரும் படிச்சுட்டு இருந்தோம். சாயங்காலத்துல இருந்து அவப் புலம்பிட்டு இருந்தா, படிக்கப் புடிக்கலைனு"அடுத்து சுந்தரி கூறினாள் "ஆமா அவ அப்செட்டா தான் இருந்தா"கவின்யா குண்டைத் தூக்கிப் போட்டாள் "அவ நிஜமாவே இரண்டாவது மாடில இருந்து விழுந்தானே வச்சுக்கோங்க. அந்த வலியிலயும் அவ பேசிக்கிட்டு இருக்கா, கண்டிப்பா பேய் தான்டி"

இந்த சொற்களைக் கேட்டவர்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டதுபவி பேசினாள் "உன் பேரு எவ்ளோ பழசா இருக்கோ. அது போல உன் மூளையும் இருக்கு. இந்த காலத்துல இதெல்லாம் நம்புறியா?""உன் பேரு தான்டி பழசு" என்றாள் கவிஇந்த உரையாடலால் பவித்ராவும் கவியும் மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொள்ள, ரோகினி "சும்மா இருங்கடி ரெண்டு பேரும் நான் வினோவோட லேப்டாப்ல ஏதாச்சும் இருக்கானு பாக்குறேன்" எனக் கூறிவிட்டு லேப்டாப்பை தேடிக் கண்டுபிடித்தாள்அங்கிருந்து எழுந்து சென்ற சுஜாவும் சுந்தரியும் சிறிது நேரத்தில் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்

"அடியேய் அங்க அங்க... செருப்பு" என்று சுந்தரி திணறினாள்"அட என்னடி சொல்லித் தொலைங்க. ஏன்டி பிச்சுப் பிச்சுப் பேசித் திகிலப் பரப்புறீங்க" எனப் புலம்பினாள் ரோகினி"மேல... செகண்ட் ஃப்ளோர்ல வினோவோட செருப்புக் கிடக்குடி" என சுந்தரி சொல்லி முடித்தாள்இதைக் கேட்ட பவி, கவின்யா மற்றும் ரோகினியின் இதயங்கள் உறைந்து போயிற்று"என்னடி சொல்றீங்க..." என்றாள் பவி பயத்தில்"நீங்களே வந்து பாருங்க வாங்க" என்றாள் சுஜாபவியை மட்டும் அறையிலே விட்டு விட்டு மீதி நால்வரும் படியேறத் துவங்கினர். ஒவ்வொரு படியாக ஏற ஏற அவர்களது இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறத் தொடங்கியது. சுஜாவும் சுந்தரியும் ரோகினியின் கையைப் பிடித்துக் கொள்ள, கவின்யா மட்டும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாள். இரண்டாவது மாடியை வந்தடைந்தனர் நால்வரும்.


அவர்கள் இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டே வந்த அந்த செருப்புகள் ஜோடியாக அலுங்காமல் வைக்கப் பட்டிருந்தன. கவியும் அது வினோவின் செருப்பு தான் என உறுதி செய்து கொண்டாள். நால்வரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த செருப்புக்கு அருகில் இருந்து எட்டிப் பார்த்தனர்.
நால்வருக்கு மட்டும் அந்த இடம் இருள் கவியத் துவங்கியது. அவர்களுக்குக் கீழ்க்கண்ட காட்சி விரியத் தொடங்கயது.

அதோ அங்கே கீழே விழுந்து கிடப்பது, வினோவே தான். அவள் கால்களில் செருப்பு இல்லை. அவள் வாய் எதையோ முணுமுணுக்கிறது. அது என்ன அவளுக்கு அருகில் ஏதோ கிடக்கிறதே; அது ஒரு புத்தகம். காலையில் வினோ பரீட்சை எழுதவிருந்த பாடத்திற்குரிய புத்தகம். அதை எவ்வாறு நாம் மறந்தோம்?

"வாங்க போலாம்" என எல்லாரும் இருந்த மாயநிலையைக் கலைத்தாள் ரோகினி

கடைசியாக அறைக்குள் நுழைந்த ரோகினி கதவை மூடிவிட்டுத் திரும்ப, பவித்ரா கண்களில் அதிர்ச்சியைக் காட்டி இருந்தாள்"நீ எதுக்குடி இப்புடி பாக்குற" சுந்தரி பதற"பின்னாடி... கதவுல..." என்று திணறினாள் பவித்ராகவின்யா கதவருகே சென்று பார்த்தால், அங்கு கதவின் பின்புறம் ஒரு கையச்சு இருக்க "நான் சொன்னேன்ல பேய் தான்னு" என்றாள்"சும்மா இருடி. வினோ ரூம்லயே நாம இருந்தா இப்படி தான் குழப்பமாவே இருக்கும். வாங்க என் ரூமுக்கு" என்று துரிதப் படுத்தினாள் ரோகினி"இருங்கடி வினோ கீழ விழுந்தப்போ அவ கைல வச்சிருந்தால்ல, அந்த புக்ல எதாச்சும் க்ளூ கிடைக்கும். அது எங்க..." என்று யோசித்தாள் சுந்தரி"புக் கப்போர்ட்ல தான் இருக்கும்டி. இங்க இருக்கு" என தேடி எடுத்தாள் சுஜாஅவள் புத்தகத்தை எடுத்து விட்டு கப்போர்டை சாத்தவும் மேலே இருந்து ஒரு டெடி பியர் சுஜாவின் மேல் விழவும் சரியாக இருந்தது. அதை உணர்ந்து சுஜா கத்துவதற்குள் அதைக் கண்ட பவித்ரா அலற அதைத் தொடர்ந்து அனைவரும் அலறினர்.


"பவி மாடே ஏன் இப்படி பயப்படுத்துற" என்று திட்டினாள் சுஜா"நான்லாம் பேய் படத்தப் பார்த்தாலே கத்துவேன். பேய் படத்துல நடக்குற மாதிரியே நிஜத்துல நடந்தா, கத்தாம" என்றாள் பவி பயத்தில்"சரி வாங்கடி போலாம்" என சுந்தரி அழைக்க, அந்நேரம் சரியாக அவர்களது ஆசிரியர் உள்ளே நுழைந்தார்

"என்ன பண்ணிட்ருக்கீங்க. எதோ கத்துன மாதிரி சத்தம் கேட்டுச்சு" என்று கேட்டார் விமலா மேடம்"வாங்க மேம் உக்காருங்க" என்று நாற்காலியை இழுத்துப் போட்டாள் சுஜா"இங்க மேல இருந்து கீழ..." என்று கவின்யா உலறத் துவங்கினாள்அவளை அமைதிப்படுத்திய ரோகினி "சும்மா பல்லி மேல இருந்து கீழ விழுந்துடுச்சு மேம். அதான் பயந்துட்டோம்" என்றாள்


"அதான் எக்ஸாம் முடிஞ்சுடுச்சே. என்ன புக்கோட நிக்கிற" என்று கேட்டார் விமலாதன் கையில் எங்கு இருந்து புத்தகம் வந்தது என முழித்த சுந்தரி "அது ஒன்னும்ல மேம்..." என்றாள்


அப்புத்தகத்தை வாங்கிய சுஜா "மேம் இந்த புக் தான், வினோ கீழ விழுறப்போ கைல வச்சிருந்தா" என கூறினாள்

அந்தப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்த விமலா "இதுலயும் ஒன்னுமே இல்லையேமா" என கைவிரித்தார்"எங்களுக்கும் இது எப்புடி நடந்துச்சுனே புரில மேம்" என்றாள் கவின்யா"அவளோட லேப்டாப் பாத்தீங்களாமா" என்றார் விமலா"மேம் அவளோட லேப்டாப், மொபைல், கப்போர்ட் எதுலயும் ஒன்னும்ல மேம். அவளோட அன்னைக்கு நைட் சுஜா, சுந்தரி, கவி எல்லாரும் தூங்கிருக்காங்க. பவியும் நானும் நைட் அவ கிட்ட பேசுனப்போ கூட பெருசா அவ சோகமாவும் இல்ல. ரூம் கதவு சாத்தி தான் இருந்துருக்கு. சின்னதா சத்தம் கேட்டா கூட சுஜாவும் கவியும் எழுஞ்சிருந்துருப்பாங்க" என்றாள் ரோகினி"அதுவும் இல்லாம கதவுக்கு முன்னாடி இருந்த சேர் கூட அசையாம அங்கேயே இருந்துச்சு மேம். அவளோட ரெண்டு செருப்பும் அப்புடியே வரிசையா கழட்டி இருக்கு மேம் இரண்டாவது மாடில. இதுக்கே நைட்டி போட்டுட்டு அந்த கட்டைய எப்புடி அவ தாண்டி குதிச்சானு தெரில மேம்" என்றாள் சுந்தரிஇவ்வளவையும் கேட்டு மலைத்துப் போன விமலா "சம்திங் ரியலி ஃபிஷ்ஷி" என்று முடித்துக் கொண்டு கிளம்பினார்"ஏற்கனவே குழம்பிப் போயிருக்கோம். இந்த அம்மா வேற" என்று புலம்பினாள் பவி"சரி விடுடி. அந்த அம்மாவே நம்ம சொன்னக் கதைல குழம்பிப் போயிருக்கும்" என்றாள் சுந்தரி

சில வாரங்கள் கழிந்த நிலையில், ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த ரோகினி சொன்னாள் "ஒன்னும் பெருசா இல்ல. சோம்னாம்புலிசமா இருக்கும்டி"


"என்ன சோப்லாங்கியா" என்றாள் சுந்தரி"சோம்னாம்புலிசம்... அப்டினா தூக்கத்துல நடக்குற வியாதி" என்றாள் ரோகினி"தூக்கத்துல நடக்கறவுங்க, இப்டி ரெண்டாவது மாடில இருந்தா குதிப்பாங்க" என்றாள் கவின்யா

"தூக்கத்துல நடக்குற வியாதி வளர்ந்தவங்க கிட்டவும் சில நேரத்துல இருக்கும். இவளுக்கும் அதுபோல தான். ஓவர் ஸ்ட்ரெஸ், கன்டினியூவசா எக்ஸாம்க்கு படிச்சதால சரியா தூங்காம இருந்தது இதெல்லாம் தான் காரணமா இருக்கும்" என்றாள் ரோகினி"படியேறுற வரைக்கும் தூக்கம் கலையாம இருந்துருக்குமா என்ன... அப்டியே இருந்தாலும் அந்த குதிக்கறப்ப தூக்கம் கலைஞ்சிருக்கருக்கணும்ல" என்றாள் பவி"ஆழ்ந்த தூக்கத்துல தான் அவங்க நடக்கவே ஆரம்பிப்பாங்க. சோ அன்காஷியஸ் நிலைமை தான். விழுறப்போ இல்லைனா விழுந்ததுக்கு அப்றம் முழிப்பு வந்திருக்கும்" தெளிவுப்படுத்தினாள் ரோகினி"இத்தன நாள் நாம கடந்து வந்த விஷயம்லாம் பொய்யா" சுந்தரி கேட்டாள்"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி தான் இதுவும்" என்றாள் ரோகினி"இதுல நம்ம தப்பு எதுவும் இல்லல. இப்போ தான் கொஞ்சம் மனசு பரவால்லயா இருக்கு" என்றாள் பவி

"அப்பப்போ போய் அவளப் பாத்துட்டு வரலாம்டி" என்றாள் சுஜாதோழிகளின் தேவையில்லாத மனக் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு கதையை எடுத்து விட்ட ரோகினியும் புன்னகைத்தாள்

~ முற்றும் ~
 

sudharavi

Administrator
Staff member
#2
மது விலக்கு

சாய்லஷ்மி

வாங்க பிள்ளைங்களா இன்னைக்கு, புதிதா காய்கறி தோட்டம்பற்றிப் படிப்போமா?...” என்று அங்கன்வாடி டிச்சர் பாரதிம்மா பாட்டு படிப்பது போலக் குழந்தைகளுக்கு ஏற்பச் சொன்னவுடன், குட்டி குழந்தைகள் தலை அசைத்தனர். ஆயாம்மா பள்ளி கூடக் கதவைத் திறந்து சுத்தம் செய்து முடிக்கவும், முதலில் குழந்தைகளின் வருகைபதிவை கணக்கிட, பேச்சியம்மாள் என்கிற குழந்தை வரவில்லையெனத் தெரியவந்தது.பேச்சியம்மாள் இன்னும் வரல. வீட்டுக்குப் போய் அழைச்சிட்டு வாங்க ஆயாம்மா...என உத்தரவிட்டாள் பாரதிம்மா. சிறிது நேரத்தில், சத்துணவு கூடத்திற்கு திரும்பி வந்த ஆயாம்மாவிடம், என்னவென்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் பாரதிம்மாவிற்கு வருத்ததை அளித்தது.சரி பிள்ளைங்கள பார்த்துகுங்க ஆயாம்மா. சத்துமாவு கொஞ்ச பேருக்குக் கொடுக்கனும் கொடுத்திட்டு வாரேன்... என மாவை தூக்கி கொண்டு, ஊருக்குள் நுழைந்தாள் பாரதிம்மா. ஊரில் உள்ள கற்பினி பெண்களுக்குச் சத்துமாவை கொடுத்துவிட்டு பேச்சியம்மாள் வீட்டிற்குள் நுழைய, சட்டிபொட்டியெல்லாம் நெளிந்து துணிமணிலாம் சிதறி ஒரே அலங்கோலமாய், அவர்களது கவலைக்கிடமான நிலையைக் கண் கூடாகக் காட்டியது.வாங்க டிச்சரம்மா...என்றவர்களது குரல் வழுவிழந்து, கண்களில் கண்ணீர் விழ வாயென்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. ஒருபத்தி அறையில், ஒரு ஒரமாகத் தலையில் கட்டுடன் உறங்கிகொண்டிருந்த பேச்சியம்மாளின் அருகில், கைக்கால்களில் அடிபட்ட கட்டுகளுடன், வேதனை கொள்ளா வலியுடன் பேச்சியம்மாளின் தாய் கருப்பாயி மற்றும் ஆச்சி அலமேலுவும் அமர்ந்திருந்தனர்.ஏ வூட்டுகாரன்தே, முட்டாகுடிகாரன்னா எம்மகவுக்கு வாச்சவன் முழுகுடிகாரனா இருக்கான். குடிபோதையில சின்னபுள்ளன்னு பாக்காம தள்ளி விட்டுட்டான்ம்மா. தலையில் அடி பட்டிருச்சு...என தலையில் அடித்துக் கொண்டு அழுதார் அலமேலு.நேத்து, ஒரு பொட்டு கூடத் தூங்கலம்மா. குடிக்க பணம் கொடுக்கலன்னு ஒரே ரகல. சண்டபோட்டு ரேஷன்கார்ட எடுத்துட்டு போயிருக்கான் அந்தக் குடிகாரே. ஆங்...ம்...ம்.... என விசும்பியவள் வேலவெட்டிக்கு போறதில்ல. நாம போனாலும், அங்க வந்து காசு காசுன்னு நொச்சரிச்சு. வேல செய்ய விடறதில்ல. இதனால வேலையை விட்டு, அனுப்பிடுறாங்க...என அழுதாள் கருப்பாயி.எம்மக கிடச்ச வேலய பாக்குது. அதுலதே ஏதோ வண்டி ஓடுது. பேச்சிக்கு சத்துணவு சாப்பாடுதே... வெற ஒன்னும்.. அந்த, புள்ளைக்கு ஊட்டமில்லம்மாஎன.. தன் ஒத்த மகளை நினைத்து, ஓச்சு போய் உட்கார்ந்திருந்தார் அலமேலு.குடியை விட்டுருயான்னு தல பாடா எடுத்துச் சொல்லியாச்சு. போலீஸ்ல புடுச்சு கொடுத்துட்டேன். எத்தன வீடு, இவனால மாத்திட்டேன். எப்படியோ கண்டு பிடிச்சு வந்திடுறான். இதுக்கு மேல, சாவுறத தவிற வேற வழியில்லம்மா...எனக் கருப்பாயி தேம்பி தேம்பி அழுக ஆறுதலாக அவளின் கைப்பிடித்தாள் பாரதிம்மா.

அவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு, “நான் சொன்னதை செய்து பாரம்மா...என அறிவுரை வழங்கி விட்டு, பாரதிம்மா சென்று விட, சிறிது நேரம் யோசித்து விட்டு அவிழ்ந்திருந்த முடியைக் கொண்டையிட்டு புருஷனை தேடி சென்றாள் கருப்பாயி.வழி நெடுக, கண்கள் கணவனைத் தேடி அலைய டாஸ்மார்க் கடையின் வாசலில் மயங்கிக் கிடந்தான் குமார். அவனைப் பிடித்து இழுத்து நேராக ராயபுரம் அரசு மது மறுவாழ்வு மையமருத்துமனைக்கு அழைத்துச் சென்றாள்."ஏய் என்ன ஏன்டி, இங்கன கூட்டிட்டு வந்த..." எனக் காலை முன்னும் பின்னும் மாறி மாறி வைத்த படி, வேட்டியை பிடித்துக் கொண்டு நின்றவனை அங்கிருந்து இம்மியளவும் நகர முடியாதளவிற்கு, கொத்தாகப் பிடித்துக் கொண்டாள் கருப்பாயி.

"எனக்கு உடம்பு சரியில்லையா அதான், உன்னைய தெனைக்கு கூட்டிட்டு வந்தே வா..." எனத் தரதரவென ஒரு அறைக்குள் அழைத்துச் செல்ல, "முதல் படுக்கையில் படுத்திருந்தவன், "ம்மா என்ன விஷ ஊசி போட்டுக் கொன்னுட சொல்லும்மா மா...என இருமிக் கொண்டே ரத்த வாந்தி எடுத்தான். அங்கே, முகத்தில் மாஸ்க் அணிந்த செவிலிப் பெண் ஒருத்தி அவர்கள் மத்தியில் வந்து நின்றாள்."யோவ் உன்னைய எத்துன தடவையா திட்டுறது. அறிவிருக்கீதா? ஏன்யா எங்கள சாவடிக்குறீங்க. நல்லா இருக்குறப்போ குடிக்க வேண்டியது. முத்தி போய் இங்கன வந்து எறியது எறியதுன்னு கத்த வேண்டியது. சாவு கிராக்கி. வாட் பாய் வாட் பாய்..." எனக் குரல் கொடுக்க அவளின் பார்வையில் கருப்பாயியும், குமாரும் தென்பட்டன."யார் நீங்க என்னா வேணும். இந்த இடத்துக்குலாம் வர கூடாதும்மா வெளிய போங்க..." என வாசலை நோக்கிக் கையைக் காட்டினாள் செவிலிபெண்."அம்மா என்னைய உங்க சகோதரியா நினச்சுங்கோங்கம்மா. இந்தாளு நிதோம் குடிச்சுட்டு வரான். இவனுக்குப் புத்தி புகட்டத்தான். இங்கன கூட்டிட்டு வந்தேன்..." எனக் கருப்பாயி அழுகவும்"ஏம்மா அழாத, அந்த ஆளைப் புடிச்சு அங்கிருக்குற ஜன்னலோடு கட்டி வை. இரண்டு நாளு கழிச்சு வந்து இட்டு போ. நாள பின்ன இந்த ஆளும் இதுகள மாதிரி குடிச்சுட்டு வந்து, என் உயிர வாங்குவதற்கு இங்க நடக்குறத பாத்து திருந்தட்டும்..." என்றவுடன்

"கருப்பாயி வேணாம் டி. என்னைய இங்க விட்டுட்டு போயிறாத..." என அங்கிருப்பவரின் நிலையைப் பார்த்து, பாதி போதை தெளிந்து நின்றான் குமார்."ஏய் வெளியே வந்தே மவளே ************ உன்ன.. உன்ன..." எனக் கத்திய குமாரை... அங்கு வந்த வாட்பாய் பிடித்துப் பத்து பேரின் மத்தியில் இருந்த ஜன்னல் அருகே குமாரை கட்டி வைத்தான். கருப்பாயி சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன்... "இந்தா உன் பெயரு என்ன?..." என வாட்பாய் கேட்டான்."கு... கு.... குமாரு..." எனத் தந்தியடித்த படி பேசினான் குமார்.முதல் பெட்டில் படுத்திருந்தவன்அய்யோ என்னால முடியல. அய்யோ எனக் கொன்னுருங்க கொன்னுருங்கப்பா பா..." எனப் புலம்பினான். அவரைக் கட்டிலின் காலுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்."முதல வெறும் ஆசைக்காவும், ப்ரண்ட்ஸ்ங்கோ சொன்னாங்கன்னு வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம். நாளாக, இன்னும் அதிகமா குடிச்சா தான் போதை ஏற்படும்ன்னு. குடிக்க ஆரம்பிப்பானுங்க.அதுனால கை நடுங்கும், தூக்கம் வராது, மனச்சோர்ந்து போயிரும். சுயமா சிந்திக்க முடியாது. எதைத் தொட்டாலும் பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியில்லாம போயிரும்.அப்புறம், கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிக... ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண்ணு, ஜீரணசக்தி குறை, புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல்ன்னு வந்திடும். கடைசியா... நீ ஆண்மையை இழந்து தான்யா... செத்து... போவ. அதுவும், உன்ன எரிக்க வேண்டாம். ஏறிஞ்சு தான் செத்து போயிடுவ..." எனக் கடைசியா திட்டுட்டு ரத்த ரத்தமாய் கிடந்த இடத்தைச் சுத்தமாகத் துடைத்து விட்டுச் சென்றான் வாட்பாய்.அவனின் அருகில் "ஏய்யா குடிக்குறத நிறுத்திடுய்யா. நான், இதனால ஐந்து வருஷமா கஷ்டபடுறேன். எனக்கு வயசு என்ன இருக்குன்னு நினைக்குற..." என ஒருவன் தானாகவே முன் வந்து அவனிடம் பேசினான்."ஒரு ஐம்பது வயசிருக்குமா?..." எனக் குத்து மதிப்பாகப் பதில் சொன்னான் குமார்."இல்லயா எனக்கும் உன் வயசுதான். பதினேழு வயசுல விளையாட்டா குடிக்க ஆரம்பிச்சேன். இப்பொது வயசு இருபத்தி ஐந்து. ஆனா, பார்க்க ஐம்பது வயசு ஆன மாதிரியாகிட்டேன். எல்லாம் அந்தக் குடி தான்..." எனக் கண்கலங்கி பேசினான்.அவன் சென்றவுடன் முதல் படுக்கையில் இருந்தவன் கத்திக் கொண்டேயிருக்க யாரும் வரவில்லை குறைந்தது, அரை மணி நேரம் கழித்து, அவனது சத்தம் அடங்கிக் காணபட... "க்கா... க்கா..." எனப் பயத்துடன் குமார் கத்தினான்."என்னையா என்ன வேணும். பசிக்குதா?..." எனச் செவிலிபெண் கேட்கவும்..."இல்ல அந்த ஆளு..." என முதலில் படுத்திருந்தவனை கைக்காட்டினான் குமார். அவனைச் செக்கப் செய்து பார்க்க இறந்து விட்டான் என்று, அவனது பாடியை எடுத்து விட்டு பெட்டை மாற்றிவிட்டு அடுத்தெருத்தனை அந்தப் பெட்டில் படுக்க வைத்தனர்."ஏய் இது தான்யா நிலம. இங்க, பத்து வரும் போகும். எல்லா குடிக்காரனும், இங்க வந்து அழுது, செத்துட்டு தான் போவான்ங்க. உனக்கும், அதே நிலம வராம பார்த்துக்கோ. நாள உன் பொண்டாட்டிய வர சொல்லுறேன்..." எனத் தன்னால் முடிந்த அறிவுரையை வழங்கி விட்டு அகன்றாள் செவிலிபெண். மறுநாள் கருப்பாயி வரவும் அந்த ஜெயிலிலிருந்து விடுதலையாகினான் குமார்.இருவரும் வீதியில் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கே தெருவில் ஒரே கூட்டமாக இருக்கவும் என்னவென்று எட்டி பார்க்க... "ஏன்யா நான் என்னாத்த குற வச்சேன்னு என் மேல, இப்படி பழி போடுற..." என அழுத படி முனியம்மா வீதியில கதறி அழுது கொண்டிருந்தாள்."ஏய் நான் குடிச்சா உனக்கென்னடி. என்னைய குடிக்காதன்னு சொன்னா. நீ என் பொண்டாட்டியே இல்லடி. இந்தப் புள்ளைங்க எனக்குப் பொறக்கலடி..." எனக் குழந்தைகள் ஒரு பக்கம் அழுக... அவர்களின் தாய் முனியம்மா ஒரு பக்கம் அழுக..."என்னையா பார்க்குற நாமலாம் முனியம்மா கல்யாணத்திற்கு போயிட்டு வந்தோம். அந்தப் புள்ள உன் தூரத்து சொந்தமுல்ல. அந்தப் புள்ள நடத்தையிலே, சந்தேக படுறான். நீ என்னன்னு கேட்க மாட்டியா? அதானே உனக்கே யோகிதம் கிடையாது. நாளைக்கு, நீயே என்ன பார்த்து, இந்த மாதிரி கேள்வியைக் கேட்டாலும் கேட்பையா அந்தளவிற்கு குடிக்குறீங்க..." எனக் கருப்பாயி தலையில் அடித்துக் கொண்டாள்.அப்போது, முனியம்மாவை திட்டிய கணவன் குடி போதையில் தரையில் படுத்துப் புலம்பிக்கொண்டிருந்தான். அந்த வழியே சென்ற, ஒரு சொறி நாய் அவனின் மீது மூத்திரம் பெய்தது. அதனைப் பார்த்து உடனே, அந்த நாயைக் கல்ல கொண்டு ஏறிஞ்சு. அழுதுக் கொண்டே தன் கணவனை வீட்டிற்குள் முனியம்மா இழுத்து செல்வதை ஊரே வேடிக்கை பார்த்தது.அவர்களைக் கடந்து நடக்க, தெரு ஒரமாய் இருந்த சாக்கடையிலிருந்து ஏதோ சத்தம் வந்தது. "என்னவென்று முதலில் எட்டி பார்த்தாள்..." கருப்பாயி. அவளைத் தொடர்ந்து, குமாரும் எட்டி பார்க்க."உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...ன்னு நல்லா குடிச்சுட்டு பஞ்சு மெத்தையில் படுத்திருப்பதை போன்ற நினைவில் சாக்கடையில் படுத்துப் பாடிக் கொண்டிருந்தான் ஒருவன்..." அதனைப் பார்த்து, குமாருக்கே அருவருப்பாய் போய்விட்டது.தலை குனிந்த படி நடந்துக் கொண்டிருந்தவன்... கருப்பாயி நின்று விட, அவனும் நின்றான். அவர்கள், இருவரும் நின்ற இடம் டாஸ்மார்க் கடையின் முன்பு. அங்கே தரையில் ஒருத்தன்.. அம்மனத்தோடு "குடிக்க காசு கொடு..." எனப் பிதற்றி கொண்டிருந்தான். அதனைக் கண்ட குமார். வேகமாக, தரையில் கிடந்த பேப்பரை கொண்டு அவனக்கு உடையாகப் போற்றி விட்டான்."இந்தாயா நான் ஏன் இந்த வழியே கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா? இதுல போலத் தான்யா நீயும் ரோட்டுல சாக்கடையில கக்கூஸ்ல விழுந்து கிடக்க கூடாது. நீ, இந்த இரண்டு நாள்ல பார்த்ததெல்லாம் உன் புத்திக்கு உறைக்குதா? இன்னும் உறைக்கலன்னா நீலாம் செத்த பெணத்துக்கு தான்யா சமம். நீ, திருந்தி... என் கூட வரதாக இருந்தா வாயாயா. இந்த மஞ்சகயிரை என் கழுத்துல கட்டு இல்லன்னா நீ செத்துட்டன்னு நினச்சுக்குறேன்..." எனக் கழுத்திலிருந்த மஞ்ச கயிரை கழற்றி, அவன் மூஞ்சில் விட்டெறிந்தாள் கருப்பாயி.ஒருகனம் அவன் இரண்டு நாளில் தான் பார்த்த சம்பவத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கண் மூடியவன் மறுகனமே கண் திறந்து, "ம்மா... ம்மா... என மனச்சிடு மா... என மனச்சிடும்மா... நான் எப்போதோ மனசலவுள செத்துட்டேன் ம்மா. இனி, எனக்கு உயிர் தருவது உன் கையில தான் இருக்கு. போதையில எதுவும் தப்பா தெரில..." என அவளின் காலில் விழுந்து கதறி அழுதான் குமார். அந்த நிமிடம், அங்கன் வாடி டீச்சர் பாரதிம்மா கருப்பாயின் நினைவிற்கு வந்தாள்.டீச்சரம்மா நீங்க சொன்ன படி, செய்த்தால எனக்கு, ஒரு விடிவு காலம் பொறக்கும்ன்னு நினைக்கிறேன்....என நினைத்து,"எந்திங்க மது மறுவாழ்வு மையத்துல ஒரு வாரம் இருந்துட்டு வாங்க..." எனத் தன்மையாகக் கருப்பாயி, எடுத்துரைக்கவும் கண்ணீரை துடைத்துக் கொண்டான் குமார்."கூடியால... நிறைய குடும்பம் வேதனை படுறாங்கையா புருசனை இழந்து பெம்பளங்க, அப்பாவ இழந்து தவிக்கும் குழந்தைகள, மகனை இழந்து தவிக்கும் அம்மான்னு குடிக்க வயசு வித்தியாசமில்லாம... குடிக்குறவங்க பண்ணுற தப்பால பாதிப்பு எல்லோருக்கும் தான்யா. அதுபோல நம்ம குடும்பமும் ஆகிடாமைய்யா. நான்... உன்ன நம்புறேன். நீ நிச்சயம் திருந்திடுவ... வாய்யா..." எனக் குமாரை அழைத்துச் சென்றாள் கருப்பாயி.
 

sudharavi

Administrator
Staff member
#3
வேருக்கு நெகிழ்ந்த பாறைகள்

(சிறுகதை) - முகில் தினகரன்அந்த அலுவலகம் காலை நேரப் பரபரப்பில் இருந்தது.இன்னும் சிறிது நேரத்தில வரப் போகும் டீ மற்றும் வடைக்காக இப்போதிருந்தே நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு காத்திருந்தனர் வேலையில்லா அலுவலர்கள் சிலர். ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் மட்டும், “தான் உண்டு தன் வேலையுண்டு!என்கிற பாணியில் ஃபைலுக்குள் மூழ்கிக் கிடந்தனர்.அலுவலகத்தின் தென் மேற்கு மூலையில் அமர்ந்திருந்த கேஷியர் வரதராஜன், வெற்றிலை வாயை மென்று கொண்டே, தான் அமர்ந்திருந்த சேரை உட்கார்ந்தபடியே, அப்படியும் இப்படியுமாக அசைத்து சோதித்துப் பார்த்தார். 'லொடக்லொடக் என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது.அதைப் பார்த்ததும் அவர் விழிகள் சிவப்பாயின. 'அடப்பாவி!...எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு.புது புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே வயர் பின்னறவன்!...இங்க பாத்தா என்னோட சேருக்கே ஒரு பக்கம் புஷ் போடாம இருக்கு!...வரட்டும்பில் சாங்ஷன் ஆனதும்பணம் வாங்க என்கிட்டதானே வரணும்?...கவனிச்சுக்கறேன்!” தனக்குத்தானே பேசிக் கொண்டார்.பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, 'சார்இந்தாங்க சார் பில்லு!” என்று பவ்யமாக சாங்ஷன் ஆன பில்லை நீட்டினான் அவன். கிட்டத்தட்ட அறுபது...அறுபத்திஐந்து வயதிருக்கும் அவனுக்கு. தலையில் எண்ணை காணாத நரை முடியும், ஒல்லியான கைகளும், கால்களும் அவனது வறுமையைக் காட்டின. ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று, அங்கிருக்கும் வயர் சேர்களின் பழைய பிய்ந்து போன வயர்களையும்தேய்ந்து போன அடிப்பகுதி பிளாஸ்டிக் புஷ்களையும் மாற்றிக் கொடுத்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வயிறு வளர்ப்பவன். எப்போதும் அவனுடன் பத்து வயதுச் சிறுவனும் வருவான். அவனுக்கு ஹெல்ப்பர். அந்தச் சிறுவன் அவனுடைய பேரனைப் போல் தோன்றினாலும் மகனாம். ஒரு தடவை கேஷியர் வரதராஜன்தான் எக்குத்தப்பாய்க் கேட்டு ஏகமாய் வழிந்தார்.“சார்...பில்லு!மறுபடியும் ஒரு தடவை அந்த ஆள் கேட்டதும்,தலையை மேலும், கீழும் ஆட்டியபடி, 'என்ன!...எல்லாச் சேர்களுக்கும் புது வயர் மாத்திட்டியா? கேஷியர் அதட்டலாகக் கேட்டார்.'ஆச்சுங்க சார்!....எல்லாச் சேர்களுக்கும் புது வயரும்புது புஷ்களும் மாத்தியாச்சுங்க சார்!குனிந்து நின்று சொன்னான் அவன்.'நெஜம்மாவா?...யாரு செக் பண்ணினாங்க?புருவங்களை உயர்த்திக் கேட்டார்.'ஹி...ஹி...செக் பண்ண வேண்டிய அவசியமே இல்லைங்க சார்நம்ம வேலை எப்பவுமே சரியா...கச்சிதமா இருக்கும்! என்றான் அவன் நம்பிக்கையுடன்.'அப்படியா?...கொஞ்சம் இந்தப் பக்கம்..வா!” கேஷியர் எழுந்து நின்று, தன் சேரை இழுத்து அவனிடம் ஆட்டிக் காட்டி, “இதென்னய்யா இது?கேட்டார்.அவன் குனிந்து பார்த்தான். சேர் ஒருபுறம் புஷ் இல்லாமல் நொண்டியது.அவன் துணுக்குற்றவனாய், சிறுவனைப் பார்த்து, 'ஏண்டாஎல்லாச் சேருக்கும் புஷ் போட்டாச்சுன்னு பொய்யாடா சொன்னே?கோபமாய்க் கேட்டான்.'இல்லைப்பாகொண்டு வந்த பிளாஸ்டிக் புஷ்ஷெல்லாம் தீர்ந்து போச்சு...இந்த ஒரே சேருக்கு மட்டும் ஒரே ஒரு புஷ் போதலைஅதான்!” பையன் நடுங்கியபடி சொன்னான்.'ராஸ்கோலு...என்கிட்ட சொல்ல வேண்டாமா?.....சாரே பார்த்துக் கேட்கற அளவுக்கு ஆயிடுச்சு உன்னால! என்று பையனைக் கடிந்து விட்டு, கேஷியரைப் பார்த்து, 'சார்என் தப்புத்தான் சார்....அதை நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்ஒண்ணும் பிரச்சினையில்லை சார்...ஒரு புஷ்தானே?...நாளைக்கே கொண்டாந்து மாட்டிடறேன்!” கெஞ்சலாய்ச் சொன்னான் அவன்.'என்ன வெளையாடறியா நீ?...எல்லாச் சேர்களுக்கும் வயர் மாத்தியாச்சுபுஷ் போட்டாச்சுன்னு ஹெட்கிளார்க் கிட்ட பொய் சொல்லி பில்லை சாங்ஷன் பண்ணிட்டு வந்திருக்கே.அப்படித்தானே?'வந்துஒரு புஷ்தானே சார்?..”'பேசாதய்யா!...உன்னையெல்லாம் உள்ளார விடறதே தப்பு!...போனாப் போகுதுன்னு வேலையைக் கொடுத்தா ஃபிராடா பண்றே நீ? கத்தினார் கேஷியர் வரதராஜன்.அறுபது வயதுக்கும் மேலான அந்த ஆண், அத்தனை பேர் முன்னிலையிலும் கூனிக் குறுகினான்.'ஏதோ வயசானவராச்சே!ன்னு பார்க்கறேன்!...இல்லேன்னா பில்லைத் தூக்கி மூஞ்சில வீசி 'போடா வெளியன்னு தொரத்தியடிச்சிருப்பேன்!...போபோயி நாளைக்கு இன்னொரு புஷ் கொண்டு வந்து இந்தச் சேருக்குப் போட்டுட்டு அப்புறமா பணத்தை வாங்கிக்க!” கறாராய்ச் சொன்னார் கேஷியர்.அதிர்ந்தான் அவன். கண்கள் லேசாய்க் கலங்கி விட்டன.ஒரு வாரத்திற்கும் மேலாக எங்குமே வேலை கிடைக்காமல் வறட்சியில் கிடந்தவனுக்கு அதிர்ஷ்டவசமாய் இன்றைக்கு இந்த வேலை கிடைத்தது. வேலை முடித்ததும் கிடைக்கும் பணத்தில் இன்றைக்காவது தானும் தன் மகனும் வயிறார சாப்பிடலாம் என்று கனவு கண்டிருந்தான். இப்போது உணவே கனவானது.'சார்பாதிக் காசாவது குடுத்தீங்கன்னாபுண்ணியமாயிருக்கும் சார்!” என்று கேட்க நினைத்தவன், கேஷியரின் அமிலப் பார்வையைக் கண்டதும் அப்படியே விழுங்கிக் கொண்டான்.பெரியவரின் ஏழ்மைக் கோலத்தையும், சிறுவனின் பரிதாபத் தோற்றத்தையும், கண்டு இரக்கம் கொண்ட, ஆபீசிலிருந்த மற்றவர்கள் அந்த வயர் பின்னுகிறவனுக்கு சாதகமாய்ப் பேசத் துவங்கினர்.'கேஷியர் சார்அவன்கிட்ட ஏன் சார் தகராறு பண்ணிட்டிருக்கீங்க?..பணத்தைக் குடுத்தனுப்புங்க சார் பாவம் கூலிக்காரங்க! டெஸ்பாட்ச் மோகன் சொல்ல.திரும்பி அவரை முறைப்பாய்ப் பார்த்து விட்டு, 'குடுக்கறதைப் பத்தி ஒண்ணுமில்லை மோகன்இவனுகளையெல்லாம் நம்ப முடியாதுஇந்த ஒரு புஷ்ஷூக்காக இவன் நாளைக்கு வரப் போறானா?....நான் சொல்றேன் எழுதி வெச்சுக்க...இவன் கண்டிப்பா வரமாட்டான்!...நாளைக்கு வேற எங்காவது வேலை கெடைக்கும்நேரா அங்க போய்டுவான்இதை அப்படியே மறந்திடுவான்!” கேஷியர் பிடிவாதமாகவே இருந்தார்.'வாஸ்தவம்தான் சார்....ஆனா...ஒரு புஷ்ஷுக்காக மொத்தத் தொகையையும் பிடிச்சு வைக்கணுமா?..வேணும்னா.அந்த ஒரு புஷ்ஷோட அமௌண்ட்டை கழிச்சிட்டு மீதியக் குடுத்தனுப்பலாமில்ல? பெரியவருக்கு ஆதரவாக அந்த டெஸ்பாட்ச் மோகனும் விடாமல் பேசினார்.வாய் திறந்து பதிலேதும் சொல்லாமல், தலையை மட்டும் இட, வலமாய் ஆட்டிக் கொண்டு, அப்படியே கல்லுளி மங்கனாட்டாம் அமர்ந்திருந்தார் கேஷியர் வரதராஜன்.பெரியவரும் அங்கிருந்து நகராமல் அப்படியே நின்றிருந்தார். உள்ளே எரியும் வயிற்றுப் பசியும், உடலை வாட்டும் முதுமைத் தளர்ச்சியும் அவரை நிற்க வைத்திருந்தன.சற்றுத் தள்ளி, சிறிய ஸ்டூலில் அமர்ந்து, எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ப்யூன் முருகன் அங்கிருந்தே சொன்னான், “கேஷியர் சார்...இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் நீங்க பேமெண்டை இழுத்தடிச்சீங்கன்னா...அடுத்த தடவை கூப்பிட்டாக் கூட வரமாட்டாங்க!...அப்புறம் எல்லோரும் பிய்ந்து போன வயர் சேரில்தான் உட்கார்ந்திருக்கணும்!...ஏதோ இந்தாளுதான் அவனே மூணு மாசத்துக்கு ஒரு தரம்...நாலு மாசத்துக்கு ஒரு தரம் நாம கூப்பிடாமலே வந்து செஞ்சிட்டிருக்கான்!...அதையும் கெடுத்துடாதீங்க!சரியான அஸ்திரத்தை சாமார்த்தியமாய் முருகன் எய்ததில் லேசாய் இறங்கி வந்த கேஷியர்,'.கே!...ஏதோ இவங்கெல்லாம் சொல்லறதுனால இந்த ஒரு தடவை தர்றேன்அதுவும் மொத்த அமௌண்ட்டையுமே தர்றேன்!...இனிமே இந்த மாதிரி அரையுங் குறையுமாய்ச் செஞ்சிட்டு வந்து நிக்காதே!...என்ன?கடுமையான குரலில் கேஷியர் சொல்ல,சரியென்று தலையாட்டினான் அந்த வயதான மனிதன். உணவுக் கனவு உண்மைக் கனவாகும் நம்பிக்கையில் அவன் முகம் லேசாய்ப் பிரகாசத்திற்குப் போனது.
சும்மா தலையை ஆட்டிக்கிட்டு அங்கியே நின்னுட்டிருந்தா நானா எந்திரிச்சு வந்து பணம் தருவேன்?வாய்யா.வந்து இந்த வவுச்சர்ல கையெழுத்துப் போட்டுட்டு பணத்தை வாங்கிக்கய்யா!கேஷியர் அதட்ட,வேகமாய் வந்து, வயோதிகம் காரணமாய் நடுங்கும் கையால் வவுச்சரில் கையெழுத்துப் போட்டான் அவன்.“அதான் பணம் கைக்கு வந்திடுச்சேன்னு நாளைக்கு வராம இருந்திடாதே!...கண்டிப்பா வந்துட்டுப் போகணும்!...என்ன வந்திடுவியா?அவன் மீது நம்பிக்கை இல்லாமலே பேசினார் கேஷியர்.'சேச்சே...நான் அப்படிப்பட்ட ஆளில்லை சார்!...கண்டிப்பா வந்து உங்க சேருக்கு ஒரு புஷ் போட்டுட்டுத்தான் வேற வேலைக்கே போவேன்! சந்தோஷமாய் பணத்தை வாங்கிக் கொண்டு முகமலர்ச்சியுடன் சென்றான் அவன். பெரிய ஆட்டின் பின் செல்லும் குட்டி ஆட்டைப் போல் சிறுவனும் கூடவே ஓடினான்.மறுநாள் மாலை ஐந்து மணியிருக்கும், கேஷியர் வரதராஜன் தன் தாண்டவத்தை ஆரம்பித்தார்.'நான் சொல்லச் சொல்லக் கேட்காம.எல்லோருமே அந்த சேர் பின்னுறவனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினீங்களே.பாத்தீங்களா?....அவன் வரவேயில்லை!...எனக்குத் தெரியும் இவனுகளைப் பத்தி. வேற எங்கியாவது வேலை கெடைச்சிருக்கும்அங்க ஓடியிருப்பான்!...ஹூம்...பத்துப் பதினஞ்சு சேர் பின்னுற வேலை முக்கியமா?...இல்லை இங்க வந்து ஒத்தை புஷ் போடுற வேலை முக்கியமா அவனுக்கு? கேஷியர் வரதராஜன் எல்லோரையும் பார்த்துப் பேசினார்.பதில் பேச முடியாமல் அவர்கள் அனைவரும் வேலையில் மும்முரமாய் மூழ்கியிருப்பதைப் போல் பாவ்லா காட்டினர். ஆனால், எல்லோருமே மனதிற்குள், 'அடப்பாவிஏழையாச்சேன்னு உனக்கு பரிஞ்சு பேசினது எவ்வளவு பெரிய தப்பாப் போச்சு!...இப்ப எங்க எல்லோரையுமே தலை குனிய வெச்சிட்டியே!” என்று அந்த வயர் பின்னுபனைத் திட்டித் தீர்த்தனர்.மறுநாளும் அவன் வரவில்லை.அதற்கு மறு நாளும் அவன் வரவில்லை.தொடர்ந்து பத்து நாட்கள் அவன் வராததால், 'சரிஇனி இவனை நம்பிக்கிட்டிருந்தால் இந்த ஆடற சேர்ல உட்கார்ந்தபடியே நான் ரிட்டையர்டு ஆய்டுவேன்பேசாம ஆபீஸ் பையன்கிட்டச் சொல்லி நானே ஒரு புஷ் வாங்கிப் போட்டுக்க வேண்டியதுதான்!” என முடிவு செய்தார் கேஷியர் வரதராஜன்.அன்று காலை பத்தரை மணிவாக்கில் அந்தச் சிறுவன் மட்டும் வந்து நின்றான்.அவனைப் பார்த்ததும் ஆவேசமாகிப் போன கேஷியர், 'வாய்யாபெரிய மனுசாஇப்பத்தான் வழி தெரிஞ்சுதா?...எங்க உங்கப்பன்?...கேட்டவாறே பையனின் முதுகிற்குப் பின்னால் தேடினார்.அங்கே அந்தப் பெரியவர் இல்லாதிருக்க,“ஓஹோ...அவன் வரப் பயந்திட்டு உன்னைய அனுப்பிட்டானாக்கும் ஃபிராடு...ஃபிராடு?... என்று திட்டியபடியே எழுந்து நின்று தன் சேரை அச்சிறுவனிடம் தள்ளினார்.தான் கையோடு கொண்டு வந்திருந்த புஷ்ஷை கேஷியரின் சேருக்கு நேர்த்தியாக மாட்டி, சிறிதும் ஆடாதபடி செய்து விட்டு, அதை கேஷியரிடம் காட்டி ஒப்புதல் வாங்கிக் கொண்டு, கிளம்பினான் சிறுவன்.அவன் டெஸ்பாட்ச் மோகனின் டேபிளைக் கடந்து செல்லும் போது, அவனை அருகில் அழைத்த மோகன், 'ஏம்பா?....மறுநாளே வர்றேன்னு சொல்லிட்டுத் தானே போனீங்க?...இப்ப என்னடான்னா பத்து நாளு கழிச்சு நீ மட்டும் வந்திட்டுப் போறே!... அன்னிக்கு உங்கப்பனுக்கு வக்காலத்து வாங்கப் போயி நான் மாட்டிக்கிட்டேன் இந்தக் கேஷியர்கிட்ட!...நான் மட்டுமல்ல இங்கிருக்கறவங்க எல்லாருமே உங்கப்பனால தலை குனிய வேண்டியாயிடுச்சு! என்றான்.பயல் பதிலேதும் பேசாது மௌனமாய் நிற்க,ஏண்டா சார் கேட்கறார் அல்ல?..வாயைத் திறந்து பதில் சொன்னா கொறைஞ்சு போயிடுவியா நீ?அங்கிருந்தே கத்தினார் கேஷியர்.அந்தக் கத்தலில் அரண்டு போன சிறுவன், 'சார்அதுவந்து.நாங்க அன்னிக்கு இங்கிருந்து போன...அதே அன்னிக்கு ராத்திரி எங்கப்பாவுக்கு திடீர்னு மாரடைப்பு வந்திடுச்சுஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்குள்ளார வழியிலேயே செத்துப் போயிட்டாரு!” என்ற சிறுவனின் கண்களில் நீர். கைகளில் இனம் புரியாதவொரு நடுக்கம்.அதிர்;ந்து போயினர் கேஷியர் வரதராஜனும், டெஸ்பாட்ச் மோகனும்.குனிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள், திடுக்கிட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தனர்.சிறுவனே தொடர்ந்தான்.'சார்...எங்கப்பா செத்துப் போனதும், அவரோட எல்லாக் கடன்களையும் அடைக்க வேண்டியது அவரோட மகனான என்னோட கடமைன்னு எனக்குத் தெரியும் சார்!...அன்னிக்கு நீங்க அவரைத் திட்டியதுஅவர் மறு நாள் வர்றேன்னு உறுதியாச் சொல்லிட்டுப் போனது எல்லாத்தையும் நான் பார்த்திட்டுத் தானே சார் இருந்தேன்!...அதனால..சத்தியமா நான் அடுத்த நாளே இங்க வரணும்னு கிளம்பினேன்ஆனா எங்க சொந்தக்காரங்கதான்அட அறிவு கெட்டவனே...பெத்த அப்பன் சவத்தைப் போட்டு வெச்சுக்கிட்டு வேலைக்குப் போறேன்!கறியே..உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு!...எங்க வெளிய போறதுன்னாலும்...உங்கப்பனோட பத்தாம் நாள் சடங்கை முடிச்சிட்டுத்தான் போகணும்னு சொல்லி என்னை நிறுத்தி வெச்சுட்டாங்க!...அதனாலதான் சார் என்னால அடுத்த நாளும் வர முடியலை...அதுக்கு அடுத்த பத்து நாளும் வர முடியலை!..இன்னிக்குத்தான் பத்தாம் நாள்.அந்தச் சடங்கு வேலைகளை முடிச்சதும் கைல புஷ்ஷை எடுத்துக் கிட்டு நேரா இங்கதான் சார் வர்றேன்!...மன்னிச்சுக்கங்க சார்! என்று பரிதாபமாய்ச் சொல்லி விட்டு, தளர்ந்த நடையுடன் வெளியேறினான் அவன்.தம்பி...உன் பேர் என்ன சொன்னே?தணிந்த குரலில் கேட்டார் டெஸ்பாட்ச் மோகன்.வாசல் வரை சென்று விட்டவன், நின்று, திரும்பி, “காந்தி சார்...அவன் சென்ற பின் வெகு நேரம் அந்த ஆபீஸ் அமைதியாகவே இருந்தது. எல்லோருமே அந்தக் கணம் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு, ஞாபக அடுக்கிலிருந்து அந்தப் பெரியவரின் முகத்தை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி, மருகினர்.பத்து நாட்களுக்கு முன்பு அந்தப் பெரியவரை அதிக பட்சமாய் சங்கடப்படுத்தியதை எண்ணி உள்ளுக்குள் வருந்தினார் கேஷியர். நீண்ட நேரம், இறுகிப் போன முகத்துடனேயே அமர்ந்திருந்தவர் தன் சேரை தன்னிச்சையாக அசைத்துப் பார்த்தார். அது கொஞ்சமும் ஆடவில்லை. ஆனால் அவர் மனசு மட்டும் அமைதி இழந்து ஆடிக் கொண்டிருந்தது. வயதான அந்தப் பெரியவரின் முகம் திரும்பத் திரும்ப அவர் நினைவுகளில் வந்து சுழன்று கொண்டேயிருந்தது.ச்சே!...அந்தப் பெரியவர் நிச்சயமா தன்னோட இறுதி விநாடியில் என்னையும்...நான் பேசிய பேச்சுக்களையும்தான் நினைச்சிட்டிருந்திருப்பார்!....அதை எண்ணும் போதே அவருக்கும் இதயத்தை யாரோ வலி தரப் பிசைவது போலிருந்தது. “ம்ஹூம்....இனிமே எச்ந்தச் சூழ்நிலையிலும்....எந்த மனுஷனையும் மனசை நோகடிக்கற மாதிரி பேசக் கூடாது!...புதிதாய் ஞானம் வரப் பெற்றார் கேஷியர் வரதராஜன்.(முற்றும்)