புகலிடம்

#1
பிறப்பில்
பின்னி பிணைந்த
புலன்களின்
ஒத்துழைப்பில்
புகழின்
உச்சியை
தொட்ட
திறமைகளின்
தங்கப்பதக்கங்கள் தகரப்பெட்டியிலும்
சகலத்திலும்
சாதித்த
சான்றிதழ்கள்
சாக்குப் பையிலும்
மங்கையின்
மனத்திரையில்
மின்னி
மறைகின்றன
புகலிடமான
புக்ககத்தில் !