பிக்பாஸ் விவாதங்கள்

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

இப்போது பரபரப்பாக போய் கொண்டிருக்கிற பிக்பாஸில் நடப்பவற்றை பற்றி விவாதிக்கலாம்.
 
Vethagowri

Well-known member
Staff member
#2
பிக் பாஸ் ஸ்கிரிப்ட் script என்று சொல்கிறார்கள், இப்படி ஸ்க்ரிப்ட்ல இவ்வளவு தத்ரூபமாக நடிக்க முடியுமா, அதுவும் அன்னைக்கு வனிதா ஷாக்க்ஷி செரின் மதுமிதா இவங்களுக்கு இடையே நடந்த சண்டை எப்பா சாமி, கிராமத்துல நடக்குற குழாயடி சண்டை தோற்றுப் போய் விடும்.. அதுக்கு அடுத்த நாள் இந்த சண்டையை பற்றியும் மீரா தூங்கிகொண்டு இருந்தது பற்றியும், சாண்டி செய்த கலாட்டா மிகவும் ரசிக்கும்படி இருந்தது மிஸ் பண்ணாம பாருங்க.. விரைவில் அதோடு விரைவில் விவாதத்தோடு வருகிறேன் நட்புக்களே..
 
kohila

Active member
#3

ஆமா கவி ஸ்கிரிப்டட்னு சொல்ல முடியல… பட் அவங்க அவங்க கேரக்டர்க்கு ஏற்றார் போல் சில டாஸ்க், ப்ராங்க்ன்னு நல்லாவே பத்த வைக்கிறார் பிக்பாஸ்.
 
sudharavi

Administrator
Staff member
#4
ஸ்கிர்ப்ட்டா சத்தியமா இல்ல சாமி...என்னமா பேசுறாங்க...எனக்கு பிக்பாஸ் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்மிடையே சந்திக்கும் கேரக்டர்ஸ் நினைவுக்கு வருது....
 
#5
நான் பிக்பாஸ் பார்க்கவே இல்லை ஆனா Promo, விகடன் சார்பா டைம்பாஸ் ல வருகிற review, சுரேஷ் கண்ணன் ரீவ்யூ, தினசரி Troll video. இதெல்லாம் தினமும் தவறாம பார்ப்பேன். எனக்கு என்ன. ஆச்சர்யம்னா அவ்ளோ எதிர்ப்பு இருந்தும் சாக்ஷி போகாம பாத்திமா பாபு வெளியேறினது தான். அங்க தான் பிக்பாஸ் Fake னு தோணுது. அதுவும் அந்த 10 கோடி ஓட்டு?
 
Vethagowri

Well-known member
Staff member
#6

கண்டிப்பா இந்த 10 கோடி ஓட்டு என்பது பிராடு.... சாக்ஷி தங்க கன்டென்ட் கொடுக்கிறா.. கண்டிப்பா அவ அங்க இருப்பா, போன வாரம் நடந்த சண்டைக்கு மெயின் காரணமே சாக்ஷி தான், அவள் பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரியுதே இன்னைக்கு வரைக்கும்
 
Vethagowri

Well-known member
Staff member
#7
டோரல் வீடியோ எல்லாம் வேற லெவல்... அதைப் பார்த்து சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம்..
 
Vethagowri

Well-known member
Staff member
#8
ஸ்கிர்ப்ட்டா சத்தியமா இல்ல சாமி...என்னமா பேசுறாங்க...எனக்கு பிக்பாஸ் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்மிடையே சந்திக்கும் கேரக்டர்ஸ் நினைவுக்கு வருது....
எந்தெந்த கேரக்டர் யார் என்று சொல்லி சொல்லிட்டீங்கன்னா இங்கே ஒரு பிக் பாஸ் எதிர்பார்க்கலாம் என்று நம்பி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்
 
Vethagowri

Well-known member
Staff member
#9
ஆமா கவி ஸ்கிரிப்டட்னு சொல்ல முடியல… பட் அவங்க அவங்க கேரக்டர்க்கு ஏற்றார் போல் சில டாஸ்க், ப்ராங்க்ன்னு நல்லாவே பத்த வைக்கிறார் பிக்பாஸ்.
ஆமா கோகி, பத்தவச்சிட்டியே பரட்டை அப்படின்னு தான் தோணுது,,
 
kohila

Active member
#13
பெண்கள் சண்டையால் அவங்களை மட்டுமே காட்டி நாம சீன்ல வரோமோ இல்லையோன்னு ஆண்களும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க... எல்லா சிம்ப்டம்ஸும் சேரன் - சரவணன் (நமக்கு ரொமான்ஸ் வராது சண்டை காட்சிகள் தான்னு) நேரடி மோதல் விரைவில் ன்னு சொல்ற மாதிரியே இருக்கு...

தர்ஷன் இன்றைய ப்ரமோல கலக்குறாரு.. தூர தர்ஷன்னு கமல் கோடிட்டது நல்லாவே வேலை செய்யுது. பயப்புள்ள வனியக்காவையே எதிர்க்குது.
 
kohila

Active member
#15
இந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார்.
அப்படியா? சூப்பர்... பிக்பாஸே பயந்துட்டார் அவங்களைப் பார்த்து....நெகடிவ் விமர்சனம் இருந்தாலும் மூன்று வாரமா நிறைய கன்டென்ட் கொடுத்தாங்க.
 
Vethagowri

Well-known member
Staff member
#16
யப்பா இந்த மீரா இப்படி இருக்கு... தெய்வமே உன்னால நான் பிக் பாஸ் பாக்குறதையே விட்டுடுவேன் போல.. ஒன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து கிட்டே திரியுது, ஒன்னு கோள் முட்டி கிட்டே இருக்கு, இன்னொன்னு என்ன பன்னுறதுன்னே தெரியாம சுத்துத்து, ஆண்டவா இந்த லூசுகளுக்கு வனிதா வே பரவால்லன்னு ரெண்டே நாள் சொல்ல வைச்சுடியே...
 
kohila

Active member
#17

வில்லியாகவும் ஒரு தகுதி வேணும். இரிட்டேட் பண்ணுது மீரா.. இரண்டு நாளா இரண்டே நிமிஷம் தான் பார்த்தேன். மீரா வெளியே போனதும் தான் பார்க்கணும்.

இந்த கூத்தை பார்த்து நம்ம ஆண்டவர் கூட இப்படி புலம்ப ஆரம்பித்திருப்பார்.

அடேய்!!!! வனிதா இருக்கிறப்ப எப்படிப்பட்ட பஞ்சாயத்துக்கு எல்லாம் நாட்டாமை பண்ணின ஆளு நான்... என்னை போய் உங்க கின்டர்கார்டன் பஞ்சாயத்தை நடத்த சொல்லிட்டாங்களே!!!!
 
kohila

Active member
#18
எனக்கு நேத்து எபிசோட்ல ரொம்ப பிடிச்ச்சது சித்தப்பூ தான். இட்டுக்கட்டி கதை சொன்னதும், அடுத்து சேரனை பிடிக்காது என்றாலும் சப்போர்ட் செய்ததும் சூப்பர். எந்த ஊருலடா மைனர மதித்து திருவிழாக்கு தலைமை கூப்பிடுவாங்க. புதுசா இல்ல இருக்கு.

ஆக்சுவலி பிக்பாஸ் டாஸ்கின் நோக்கமே மைனரும், நீதி நேர்மை நியாயம் சொல்லும் நாட்டாமையும் அடிச்சக்கணும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இது எங்கேயோ திசை மாறி போய் மீராவில் முடிந்து விட்டது.

மீரா, அவரை எந்த இடத்திலாவது அவமான படுத்தணும் என்று காத்துக் கொண்டிருந்ததற்கு வகையாய் வந்து மாட்டிக் கொண்டது விஷயம். கவின் கூட சொல்வான். கிடைச்ச நல்ல பாயிண்ட விட்டுட்டு ஏதேதோ பேசுற மீரான்னு(டேய் ஏதோ அப்பப்ப டைமிங்க் காமெடி பண்றன்னு உன்னை உள்ள வச்சது தப்பா போச்சோ).

சேரனுக்கு சென்ற தடவை போல் ஜெயிலுக்கு செல்லும் நிலை(அதுக்கூட சக போட்டியாளர்கள் நாள் முழுவதும் வெயிலில் அமரக்கூடாது என்று இரக்கப்பட்ட மனிததன்மையால் தான்) உருவாகக் கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் அதற்காக நீதி தவறா நாட்டாமையா மகள் ஸ்தானத்தில் இருந்தவளை தண்டிக்கணும் என்ற எண்ணத்தில் மீராவின் உள்நோக்கம் தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டார்.

பாவம் எப்பேர்ப்பட்ட மனுஷன் அவரு. அவர் படங்களில் வரும் பெண்களை கூட ஆபாசமாக காட்டியதில்லை. கவர்ச்சிக்கு பெயர் போன மாளவிகா சங்கவி போன்றவர்களும், அவர் படங்களில் பாரம்பரிய உடைகளுடன் வருவர்.

அப்படிப்பட்டவர் மேல் பாலியல் குற்றம் சுமத்தினால் அவர் மனது எப்படி வலித்திருக்கும்? இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா? குறைந்த ஓட்டு வாங்கியுள்ள சேரனுக்கா (இது இப்போழுதெல்லாம் பிக்பாஸ் செய்யும் குசும்பு. அதிக ஓட்டு வாங்கியவர்களை கடைசியாக அறிவித்தும், குறைவான ஓட்டு வாங்கியவர்களை முதலில் அறிவித்தும் போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி.….) என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளுக்குள்ளே தடுமாறும் போது சித்தப்பூ சேரனுக்காக பரிந்துக் கொண்டு வந்ததும், அப்படியே பேச்சை மாற்றி விட்டாள். முகினும் நேற்று டேபிளை தட்டிய போது விசிலடிக்க தோணுச்சு. ஆனா அபிராமி உள்ளே போ சொன்னதும் எரிச்சலாச்சு… (மீரா சாக்சிக்கு அப்புறம் உனக்கு தான்மா அடுத்த பாயாசம்)

உங்கள் கருத்துகளை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நீங்க என்ன நினைக்கிறீங்க?
 
#19

பிக்பாஸ் 3 ல நான் பார்த்த முதல் எபிசோட் சனிக்கிழமை தான் . கமல் பட்டையை கிளப்பிட்டாரு. ஆனாலும் வீடியோக்கு பிறகும் உண்மை வெளிவரும்னு மீரா சொன்னதை கேட்டப்போ பக்குனு இருந்துச்சு இப்படி ஒருத்தியானு. கமல் மது பிரச்சனையை கிண்டல் பண்ணாம கையாண்டு இருக்கணும்னு தோணுச்சு
 
kohila

Active member
#20

//வீடியோக்கு பிறகும் உண்மை வெளிவரும்னு மீரா சொன்னதை கேட்டப்போ பக்குனு இருந்துச்சு இப்படி ஒருத்தியானு/// ஹாஹா ஆமாங்க.

நேற்று மீராவின் பிரியாவிடை குறும்படம் பார்த்தபோது, இந்த பொண்ணோட குணம் மட்டும் நல்லா இருந்திருந்தால் சூப்பரா இருக்கும் தோணுச்சு. மாடல் உலகில் தமிழை தெளிவாக உச்சரிக்கும் பெண்.

மது விஷயத்தை பற்றி பிக் பாஸ் பதிவுகள் எழுதி வருபவர்கள் கூட அதிருப்தி வெளியிட்டு இருந்ததை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. நீங்க பார்க்கும் முதல் எபிசோட். அதனால் பிக்பாஸ் 3 ல் தொடர்ச்சியாக வரும் சூட்சுமங்கள் புரிந்திருக்காது.

எனக்கு இவர் அப்படி பேசியது நல்லதுனு தோணுது. நிறைய பேரின் உண்மை முகம் வெளிவரும். மோகன் வைத்யா மீரா இருவருமே இதுபோன்ற புகழ்ச்சியால் தான் ஓவரா ஆடினாங்க. சேஃபா விளையாடி வரும் சாண்டியும் வெளிப்படுத்துவார்.

மது தன் பிரச்சனையை தானே பார்த்துக்கிட்டாங்க. அதனால் அவர் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக சொல்லிவிட்டார். இருந்தாலும் கிண்டலை தவிர்த்திருக்கலாம்(நானும் அவர் பேசும் போது மது மாதிரியே இது காமெடி சீன் இல்லையேன்னு எக்ஸ்ப்ரஷனோட தான் இருந்தேன். நமக்கு மதுவின் உணர்வுகளை நன்றாக உணர முடிந்தது). மக்கள் மனதில் மது இருப்பது தெரிந்து தான் நீங்க ஒரு இறுதி போட்டியாளர்ன்னு மறைமுகமா சொன்னார். அவரின் பொடி தடவிய பேச்சை புரிந்துக் கொள்ளும் அறிவாளிகள் அங்கே இல்லை. லாஸ்லியா கூட டேக்டிக்ஸ்ன்னு மக்களின் கைத்தட்டலை தவறாக புரிந்துக் கொண்டு சறுக்குகிறார். இன்னும் யாரெல்லாம் மாற போறாங்கன்னு பார்க்கலாம்.