பல நாள் கனவே

#1
பல நாள் கனவே குடும்பம் எனும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் ஒரே மாதிரி நீரை அளவாக பொழிவதில்லை என்றும் குரங்குகளின் சேட்டையிலும் குற்றால சாரலை குளுமையாக மாற்றிடுவது நம் கையிலும் தான் என்பதை விளக்கும் வகையில் தாங்கள் கொடுத்த பாடத்திற்கு வாழ்த்துகள் ராஜிமா.

இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்தவர் அருணாம்மா. ஒரு ஆண்மகனை வளர்ப்பதில் அன்னையாக மிகவும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலேயே ஸ்ரீயின் விஷால் விகல்பங்களற்ற விவேகமானவாக உள்ளான்.

விசா, விசு இருவரது உரையாடல்களின் வாயிலாகவே கருத்தொருமித்த தம்பதிகளாக காட்டியிருப்பது மிகவும் அருமை.

ஸ்ரீ நட்பிற்கும் காதலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிப்பதிலும், நட்பின் துரோகத்தை நகமென வெட்டி எறிந்துவிட்டு நடப்பிற்கு திரும்புவதும் மிகவும் யதார்த்தமான காட்சி. விஷாலின் வீழ்ந்திடாத காதலில் கரைந்திடும் பொழுதும் தன் குடும்பத்திற்கு ஷாலினியிடம் இருந்து விடுதலை வாங்கி தர பேசிடும் பொழுதும் மனதை அள்ளுகிறாள் ஸ்ரீ.

விஷால் ஆண்மகன் வெளித்தோற்றம் மட்டுமல்லாது புறத்தை புடம்போட்ட பொன்னாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் .காத்திருந்து காதல் கூறுவதும் ,காதலை கல்யாணமாக்குவதும் கலகலப்பாக செய்து முடித்து, காற்றாக காதலியை காத்திடுவதில் சபாஷ்.

இக்கதையில் நான் பேசவே விரும்பாத வேண்டாத களை ஷாலினி. இவள் எல்லாம் வாழ தகுதியற்றவள். தன்னலம் தேவைதான் அதற்காக இவள் ஆடும் நாடகங்களும், பேச்சுகளும் பாதாளத்திலும் நடைபெறாது .மொத்தத்தில் ஒரு குப்பை .

பல நாள் கனவே
பல குடும்பத்தின்
பாடம் !