பகுதி 47

Bhagi

Moderator
Staff member
#1
அடுத்தநாளே..........

குளியலறையில் இருந்து தலை துவட்டியபடியே வெளியே வந்த வைஷ்ணவியின் கண்களில் கௌஷிக்கின் இடையை கட்டிக்கொண்டு அவன் மேல் கால் போட்டு உறங்கிக்கொண்டு இருக்கும் வானதி பட.... சில நிமிட காட்சிகளில் மனதில் பழைய எண்ணங்கள் வர மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டாள். அவன் மேல் முன்பிருந்த கோபத்தை விட்டு அவன் புறம் சாயும் மனதை அச்சாணிக்கொண்டு நிறுத்தியவள். நான் அவன் மேல கோவமாதான் இருக்கனும் என்று வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்த கோவத்துடன் அவனை பார்த்தாள்.

முஞ்சியபாரு மொசுமொசுன்னு எப்பப்பாத்தாலும் வெறுப்பேத்திக்கிட்டு நீ பண்றது பத்ததாதுன்னு பொண்ணையும் சேத்துக்கிட்டல வாங்குவய்யா என்கிட்ட செமத்தியா வாங்கிக்குவ.... இதுக்கெல்லாம் அனுபவிப்ப என்று நினைத்துக்கொண்டே கண்ணாடியின் முன் நின்று இடைவரை நீண்ட கூந்தலில் டிரையரிட்டு ஆறவைத்துக் கொண்டிருந்தாள்.

உன்னோட வேலைய எப்பதான் முடிப்பேன்னு இருக்கு இது நொல்ல அது நொட்டன்னு வேணுமுன்னே ஒரு நாளைக்கு பத்துவாட்டி கால் பண்ற என்று அவனை திட்டுகிறேன் என்ற போர்வையில் நடந்ததை நினைத்துக்கொண்டு இருந்தாள்.

ஸ்ரெஸிங் டேபிளில் கண்ணாடியின் முன் தலைமுடியை ஆற்றிக் கொண்டிருந்தவளின் பிம்பத்தில் கண்விழித்தவன் குட்மார்னிங் பொண்டாட்டி என்று பாதி கண் திறந்தும் திறவாமலும் தலையனையில் முகம் புதைத்து புன்னகையுடன் கூறினான்.

அவன் குரல் கேட்டதும் திரும்பியவள் அவனிடம் காலையிலையே மல்லுக்கு கச்சை கட்டிக்கொண்டு நிற்க்காமல் குட்மார்னிங் என்றதோடு நிறுத்திக்கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீதான
செல்லகுட்டி செல்லகுட்டி நீதான்
எம்மனசு உன் இடத்தில் மாட்டி நிக்குதடி என்று மனைவியை பார்த்து காதலுடன் பாட

அவளிடத்தில் ஒரு எதிர்வினையும் இல்லாமல் போகவே

என்ன மேடம் பொண்ணடாட்டின்னா குதிப்பான்னு எதிர்பார்த்து சீண்டுனா சைலண்ட்டா போறா... இன்னும் ஸ்ருதி கூட்டுவோம் என்று யோசித்தவன் "என்ன செல்லம் புருஷனோட கோட்டாலாம் கொடுக்கமாட்டுற மறந்துடுச்சா.... ஒன்னு செய்வோமா உனக்கு வேனா நான் கொடுத்து அது என்னன்னு காட்டட்டுமா.... என்று எழுந்து அமர

என்ன விளையாடுறிங்களா காலையிலையே மூட் ஆப் ஆககூடாதுன்னு நீங்க பண்ற அலும்பலுக்கும் கத்தலுக்கும் சைலன்ட்டா போனா... ஓவரா போறிங்க அந்த வைஷுலாம் இங்கே இல்ல அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சி அதுக்கு வேற ஆளபாருங்க என்று கடுகுபோல் பொறிய

ஹேய் ஹேய்..... நிறுத்து நிறுத்து எதுக்கு நீ இந்த திட்டுதிட்ற என்றான் கௌஷிக்

பின்ன நீங்க பண்றதுக்கு திட்டாமா கொஞ்சுவாங்களா!?!...

நான்சாதரணமா காபியதானே கேட்டேன் இதுக்கு கொஞ்ச வேண்டாம் அட்லிஸ்ட் திட்டாமலாவது காபிய தரலாமே!! என்று பச்சைபிள்ளைபோல் பார்க்க

காபியா....!?!.. என்று அதிர்வை முகத்தில் பிரதிபலித்தாலும் நாம இதையா தப்பா நினைச்சோம் என்று சப்பென்று ஆக ஆள பாரு கள்ளுளிமங்கன் முகத்தை பாரு ஒன்னும் தெரியாத அப்பிராணியாட்டம் என்று அவனை மனதில் ஏசினாள்.

ம் காபியதான் மேடம் நீங்க என்ன நினைச்சிங்க?... என்று மேலும் குடைந்தவன் வழக்கமாக அவன் சிலுமிஷத்தை ஆரம்பித்தான்.

ஒன்னும்மில்ல என்று இடத்தை விட்டு நழுவ பார்த்தவளை

எங்க போற நில்லு உன்னைதான் டார்லிங் நில்லு.... என்று போக இருந்தவளை நிறுத்தியவன்.

நான் எழும்போதே சுடசுட காபி கொண்டுவந்து கொடுப்ப.... அதுதான் உனக்கு மறந்துபோச்சோன்னு உனக்கும் ஒன்னு கொண்டு வந்து கொடுத்து நியாபகபடுத்தலான்னு பார்த்து சொன்னா திட்டற!?!.. என்று கௌஷிக் கூற அவள் பதில் எதுவும் சொல்லாமல் திருதிருவென முழிப்பதில் கௌஷிற்க்கு சிரிப்பு குமிழிட முகத்தை சிரமபடுத்தி சாதரணமாக வைத்துக்கொண்டு மேலும் அவனே தொடர்ந்தான்.

நா கேட்டது ஜஸ்ட் காபிய ஆனா நீ என்ன நினைச்ச சொல்லு.... அதை சொல்லு... என்று மெத்தையில் இருந்து அவள் அருகில் வந்தான்.

அவன் அருகில் வருவதை கண்டு நான் நான் ஒன்னும் நினைக்கலையே என்று பின்னாடியே நகர்ந்தவள் சுவற்றில் முட்டி நின்றாள்.

இல்ல நீ எதையோ நினைச்சிதான் திட்டின நீ என்ன நினைச்ச என்று அவளின் உள்ளம் அறிய வைஷுவை திருப்பி கையை பிடித்தான் மென்மையாகத்தான் பிடித்தான். அவளின் முகம் பார்ந்தான்.

கௌஷிக்கின் மென்மையான பிடியில் இருந்து கையை உருவிக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவனின் அருகாமையும் அவனின் மென்மையும் கண்களில் காதலும் கொண்டு இங்கும் அங்கும் துள்ளும் அவளின் கெண்டை மீன் விழிகளை தன் விழிகளுடன் நேருக்கு நேராக கலக்கவைத்தவனின் தொடுதலில் அவனிடமிருந்து விலக தோன்றாமல் நின்றிருந்தாள்.

நீ என்ன நினைச்ச குலாபி என்று அவளை அருகில் நிறுத்தி மென்மையான குரலில் அவள் செவிகளின் ஓரம் அவன் மூச்சுக்காற்று சூடாய் பரவ கேட்டவனின் குரல் அவளை காந்தம் போல் அவன் பக்கம் ஈர்க்க

மௌனத்தையே மொழியாய் கொண்டு விழியின் அசைவுகளையே வார்த்தையாக்கி அவளையும் மறந்து தன் கணவனிடம் பார்வைகளால் பேசிக்கெண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அதே நிலையில் இருந்தனரோ மெத்தையில் புரண்டு படுத்த குல்லுவின் சத்தத்தில் இருவரும் நினைவு வர வைஷு அவனோடு ஒன்றி நின்றுக்கொண்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டு சங்கடத்துடன் அவன் முகம் பார்க்க முடியாமல் அலமாரியில் எதையோ தேடுவதை போல அங்கிருந்து அகன்று விட்டாள்.

முட்டாள் முட்டாள் தத்தி வந்து கைய புடிச்சவுடனையே உருகிடுவியா?!?!... அறிவில்ல ரோஷம் இல்ல அவங்க அம்மா நீ முக்கியமா நான் முக்கியமான்னு கேட்டவுடனே ஒரு யோசனையும் இல்லாம நீதாம்மான்னு சொல்லி பின்னாடியே போனானே கொஞ்சம் கூட உனக்கு நியாபகத்துல இல்லையா?? மண்டு உன்னை எல்லாம் என்ன செய்றது!?!.. என்று தனக்குதானே திட்டிக்கொள்ள

நான் என்ன செய்தேன் தள்ளி தள்ளிதானே போனேன் அவனா வந்து கையபுடிச்சா நான் பொறுப்பாக முடியுமா!?!.. பழைய நியாபகம் எனக்கு மட்டும் தான் வந்துச்சா!?!.. அங்க வரலியா?? என்று மனச்சாட்சியுடன் சண்டையிட்டு தன் தலையை தட்டிக்கொண்டு இருந்தாள்.

உள்ளே சென்றவளை காண வந்தவன் என்ன தனியா நின்னு தலைல அடிச்சிகிர குலாபி என்று கௌஷிக் அவளின் தலையை தட்டும் கையை தடுத்து அவளின் முறைப்பை பார்த்து ஓகே ஓகே கூல் தலைல அடிச்சிக்கிட்ட நல்லா இருக்கா சொல்லு பேபி என்று அவள் தலையை வருட

கைய எடுங்க தொடாதிங்க என்றவள் சொல்ல விருப்பம் இல்லன்னு விட்டுட்டு போக வேண்டியதேதானே அதை ஏன் இவ்வளவு கட்டயபடுத்தி கேக்குறிங்க??? என்று குதிக்க

தொடாதிங்க என்று கோபமாக கூறினாலும் அவன் கையை எடுக்காமல் இருக்க

போதும் இன்னொரு முறை என் அனுமதி இல்லாம தொட்டிங்க அவ்வளவுதான் நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று கையை தட்டிவிட்டு அவனையும் தள்ளிவிட்டு பக்கத்தில் இருந்த பவுடர் டின்னையும் எடுத்து அடித்தாள்.

ஹே... ஹே... என்று அவள் தள்ளிவிட்டதில் நிலையில்லாமல் எதிர்புரமாய் சாயவேண்டியவன் சுவற்றை பிடித்து விழாமல் நின்று அவள் அடித்த பவுடர் டின்னையும் ஸ்டைலாக பிடித்து கையில் வைத்து சுழற்றி கொண்டிருப்பதை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

பத்தியா நீ தள்ளிவிட்டு கீழே விழந்திருப்பேன் இனிமே தள்ளிவிடுறதா இருந்தா சொல்லிட்டு தள்ளிவிடுமா கொஞ்சம் அடிபடமா பார்த்து விழுவேன் என்று அவளிடம் கண்சிமிட்டி கூற

தள்ளிவிடுற சீன் முடிஞ்சிபோச்சி இனிவேனா உருட்டுகட்டை சீன் வைக்கிறேன் என்று சொல்லி அவளும் நக்கலாக பதில் தர

உருட்டுகட்டையா ... என்று அதிர்ந்தவன்போல நடித்தவன் உன்னை என்னன்னுதானே கேட்டேன் நீ சொல்லி இருந்தா நான் ஏன் செல்லம் போர்ஸ் பண்ண போறேன்

உங்ககிட்ட சொல்ல ஒன்னும் இல்லன்னு அர்த்தம் அதான் சொல்லலா என்று கடுப்பாய் கூற

சரி சரி. இனி கேக்கல உனக்கு ஆபீஸ் டைம் ஆச்சின்னு நினைக்கிறறேன் என்று கடிகாரம் பார்க்க

அவளும் விட்டால் போதும் என்று அங்கிருந்து அகன்றாள்.

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவகிட்ட வம்புபண்றதே தனி சுகம்தான் என்று வாயிவிட்டு கூறியவனும் மகளிடம் சென்றான்.
_________________________________________
 

Bhagi

Moderator
Staff member
#2
கீழே

பூஜா ரெடியா சீக்கிரம் என்ன பண்ற என்று கரண் கத்திக் கொண்டிருந்தான்

ஹரே கீயா ஹுவா ..... ...... வரேன் வரேன் ஏன் ரொம்ப அவசரபடுறிங்க இருங்க வரேன் .... என்று பூஜா குரல் கொடுக்க

ஒருநாள் பூரா கொடுத்தாலும் பத்தாது நீ ரெடியாகி வரதுக்கு போன 2ஹவர்ஸ்ல வீட்டுக்கு வரபோறோம் இதுக்கு இவ்வளவு நேரம் செலவு பண்ணி மேக்கப் பண்ணுவியா என்று அவளுக்கு கேக்காதவண்ணம் கீழே சலிப்புடன் பேசிக்கொண்டிருக்க... அந்த நேரம் அங்கு வந்த கௌஷிக்

பையா கொஞ்சம் வால்யூம் ரைஸ்பண்ணி பேசனும் உனக்குள்ளயே சொல்லிக்கிற மேல இருக்க பாபிக்கு கேக்கவேனாமா என்று கிண்டலாக கூறினான்

ஏன்டா வேலியில் போற ஓணாண எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கவா நீ வேணா வைஷுகிட்ட இதை டிரை பண்ணி பாறேன். என்று அவனுக்கே அம்பை திருப்ப

காலையில் நடந்ததை நினைத்தவன் சரி சரி வேலைய பாரு வேலைபாரு என்று வடிவேலுவின் பாணியில் கூறினான் கௌஷிக்

ஹா... ஹா... அந்த பயம் இருக்கட்டும் என்று கரண் சிரிக்க அறையிலிருந்து வெளிவந்த பூஜா கரண் போலாமா என்றபடி வந்தாள்.

பாபி பையா என்னமோ உங்ககிட்ட சொல்லனுமுன்னு சொன்னாரு..... கரண் என்னமோ சொல்லிட்டு இருந்தியே ஆங்.. ம்... நியாபகம் வந்திடுச்சி ஒரு நாள் பூரா என்று வாய் எடுக்க அவனை பேசவிடாமல் ஒரு நாள் பூரா பூஜாவ பார்த்துகிட்டே இருக்கலாம்னு சொன்னேன் அதான் இப்ப சொல்லி காடிட்டு இருக்கான்.... என்று கூறிவிட்டு மனைவியை பார்த்து சிரித்து வைக்க... ஆமா தானே கௌஷிக் என்று கரண் மாற்றி சொல்லவும் கௌஷிக் கண்களை காட்டி இல்லை இல்லை என்றான்.

கரணை வித்தியசமாக பார்த்தவள் உங்கள பத்தி எனக்கு தெரியும் கொஞ்சம் சும்மா இருக்கிங்களா கௌஷிக் என்னமோ சொல்லவரராரு ஏன் அவர பேசவிடமாட்டுறிங்க நீங்க சொல்லுங்க தேவர்ஜி என்று பூஜா கூற

அண்ணன் வேண்டாம் என கண் ஜாடை காட்டி கெஞ்ச அது ஓன்னுமில்ல பாபி இன்னைக்கு இரண்டுபேருமே சூப்பரா இருக்கிங்க அத சொல்லவந்தேன் ஆனா இந்த போலீஸ் தடுக்குறான்.

அவரு எப்பவுமே அப்படித்தான் எதையும் சொல்லவிடமாட்டாரு எல்லாவற்றிலும் அரகொற கௌஷிக் என்று கணவனை பற்றி கூற

கரனை பார்த்து பார்த்துக்க என்று கண்ணாலையே ஜாடை பேசியவன் ஏதோ நியாபகம் வந்தவன் போல் ஆமா பங்குஷன் போறிங்களா வர ரொம்ப நேரம் ஆகுமா கரண் பையா என்று கரணிடம் கௌஷிக் கேட்டக

ஆமா கௌஷிக் இன்னைக்கு கொலிக் ஒருத்தர் சென்ட் ஆப் பார்ட்டி இவள கூட்டிட்டு போறேன் வர 2 or 3 hours ஆகும்.

சரி நான் அப்போ குல்லுவ ஆபீஸ் கூட்டிட்டு போறேன்.

நீ ஏன் ஆபிஸ் கூட்டிட்டு போற கௌஷிக் நான் ஜெஷ்வந்தையும் மீராவையும் அப்பா கிட்ட விட்டுதான் போறேன் நீயும் இங்கயே விட்டுட்டு போ என்று பூஜா கூற

இல்ல பாபி நானே கூட்டிட்டு போய் பாத்துகுறேன் அப்பாவ எதுக்கு கஷ்டபடுத்தனும்.

என்ன கஷ்டம் கௌஷிக் யாருக்கு கஷ்ட்டம்என்று அறையிலிருந்து வந்த விஜயபாஸ்கர் கேட்க

அது வந்து பா கௌஷிக் குழந்தைய ஆபிஸ் கூட்டிட்டு போகபோறானாம் பா என்று கரண் குற்றபத்திரிக்கை வாசிக்க .

ஆபீஸ்ல ஏதாவது விஷேஷமா கௌஷிக் எனக்கு தெரிஞ்சி அப்படி ஒன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் அப்புறம் என்ன காரணத்துக்காக வனிமாவ கூட்டிட்டு போற

அப்பா....

சொல்லு கௌஷிக்...

அப்பா.... கரண் பாபி ரெண்டுபேரும் இல்லை நீங்களும் அம்மாவும் தான் ஏற்கனவே குட்டிஸ் ரெண்டுபேரும் இருக்காங்க அவங்களையும் பாத்துக்கனும் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு அதான் குல்லுவ நான் கூட்டிட்டு போலான்னு

பேத்திய பாத்துக்கரது எனக்கு தொந்தரவா நீ என் பேத்திய விட்டுட்டுபோ நான் அவ கூட விளையாடனும் என்று குஷியாக கூறியவரின் வார்த்தையை தட்டமுடியாமல் கௌஷிக் குல்லுவை விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்துவிட்டு வைஷுவை அலுவலகத்திற்க்கு அழைத்து கொண்டு அவனும் அலுவலகம் சென்றுவிட்டான் . கரண் பூஜாவும் விழாவிற்க்கு சென்றுவிட்டனர்.
___________________________________________
தாத்தாவின் மேற்பார்வையில் குழந்தைகள் மூவரும் தோட்டத்தில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். அந்நேரம் தோட்த்தில் செடிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த தண்ணீர் பைப் குழந்தைகளின் கண்களில் பட முதலில் அதை எடுத்த ஜெஷ்வின் செடிகளுக்கு மேல் அடித்து விளையாடினான் அடுத்து மீரா தண்ணீர் பைப்பை பிடித்து இழுத்து தண்ணீர் தெளிக்க அடுத்து வந்த வானதி இன்னும் ஒருபடி மேலே சென்று தண்ணீர் பைப்பை இழுத்து அருகில் இருந்த தாத்தா ஜெஷ்வின் மீரா என்று அனைவரின் மீதும் தெளித்து குதித்து ஆரவரம் செய்து சிரித்துகொண்டிருந்தாள். அவள் செய்வதை பார்த்த மற்ற இரு குழந் தைகளும் அதே போல் செய்ய குழந்தைகளுடன் குழந்தைகளாய் விஜயபாஸ்கரும் சேர்ந்துகொண்டு ஆட்டம் போட்டுகொண்டிருந்தார்.

கணவரும் குழந்தைகளும் தண்ணீரில் நனைவதை பார்த்த மாதுரி அவர்களை தடுப்பதற்ககாக அங்கு செல்ல மூன்று குழந்தைகளும் தனக்குதான் பைப் வேண்டும் என்று ஒருவர் மாற்றி ஒருவர் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்க கடைசியில் வானதியிடம் மாட்டிய தண்ணீர் பைப்பை ஒருவிரலால் அழுத்தி பிடித்த ஜெஷ்வின் விரலை எடுக்க தண்ணீர் பைப்பை வைத்திருந்த வானதியின் கையிலிருந்து மாதுரியின் மேல் தண்ணீர் பீய்த்து அடித்தது. தடுக்க வந்த மாதுரிரும் தொப்பலாக நனைந்திருக்க பைப்பை வைத்திருந்த வானதிதான் திருதிருவென விழித்துக்கொண்டு மாதுரியை பார்த்து பயந்து தாத்தாவின் இடையை கட்டிக்கொண்டாள்.

அவளை தோல்தட்டி சமாதானம் செய்து தான் இருப்பதாக பயப்படாதே என்று சைகையால் தைரியம் கூற அவர்கள் நால்வரையும் முறைத்த மாதூரி ஒழுங்க உள்ள போய் டிரஸ் மாத்தி தலைய துவட்டுங்க போங்க உள்ள என்று ஒரு குரல் கொடுக்கவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று குழந்தைகள் மூவரும் வீட்டிற்க்குள் ஓடினர்.

மாது ரொம்ப தெங்கஸ்

எதுக்கு இந்த தேங்க்ஸ்

குழந்தைய திட்டாமா அவ மனசு நோகடிக்காம இருந்ததுக்கு

என்ன பார்த்தா ஒரு ராட்சசி மாதிரி இருக்கா

இல்ல மாது

நானும் மூனு குழந்தைகள பெத்தவ தான் எனக்கும் குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துகனுமுன்னு தெரியும்

நான்

போதுங்க.... போதும் இதுக்கு மேல ஈரத்துல நிக்காதிங்க போங்க போய் டிரஸ் மாத்துங்க.

உள்ளே ஒடிய குழந்தைகள் உடை மாற்றியபின் சூடாய் பருகுவதற்க்கு மம்தா சூப் கொடுக்க அதை அருந்தி கொண்டிருந்தனர்.

டைனிங் டேபிலில் இருந்து ஆடுவதும் ஒடுவதுமாய் இருந்த குழந்தைகள் ஒரு இடத்தில் உட்கார வைப்பதற்க்குள் மம்தா ஒய்ந்தே போனாள். வானதி குடித்து கொண்டிருந்த சூப் பவுளில் இருந்த ஸ்பூன் கை தவறி கிழே விழ அதை எடுக்க டேபில் கைவைத்து கிழே குனிய அவளின் கைபட்டு சூப் பவுள் கிழே விழந்து நொறுங்கியது எவரேனும் திட்டுவார்களோ என்று பயந்த வானதி அதை கைகளில் எடுக்க அது விரலை பதம் பார்க்க விரலில் இருந்து ரத்தம் வர அதைபார்த்த வானதி ஐயோ அம்மா ரத்தம் ரத்தம் என்று ஒரு கையை ஆட்டியபடி அழ ஒருபக்கம் சமையல் அறையில் இருந்து மம்தா ஒடிவர, உடை மாற்றி வர சென்ற விஜயபாஸ்கரும் வானதியின் சத்தம் கேட்டு அவரும் பதரியடித்து வந்தார். உள் அறையில் கைவேலையாக இருந்த மாதுரியும் குழந்தைகளின் கத்தலை கேட்டு வெளியே வர எவரிடமும் விரலை காட்டாமல் அழதுகொண்டே விரலை பிடித்திருந்த வானதியை பார்க்க அவளின் அருகில் வந்தார் .

மாதுரியை பார்த்ததும் மம்தா அனைத்தையும் கூற குழந்தைகளுக்கு எதுக்கு பவுள்ள கொடுத்த உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல இப்ப பாரு கைய வெட்டிக்கிட்டா இதுக்குதான் படிச்சி படிச்சி சொல்றது கவனமா இரு கவனமா இருன்னு என்று சத்தமிட வலிக்குது என்று கத்திக்கொண்டிருந்த வானதி வாயை மூடிக்கொண்டாள். விஜயபாஸ்கர் உள்ளுக்குள் மனைவிக்கு நன்றி கூறினார். வானதிக்கு விரலில் இருந்த காயம் சிறியதுதான் ஆனால் குழந்தைகளின் சுபாவம் அதை பெரிதாக நினைத்து யாரையும் தொடவிடாமலும் நெருங்கவிடாமலும் அழுதுகொண்டிருப்பர் அதையே வானதியும் செய்ய பேத்தியை சமாதனம் செய்ய வழி தெரியாமல் முழி பிதிங்கி இருந்தவரை மாதுரியின் ஒரு அதட்டல் வாயை மூடவைத்தது.

வானதியின் கைவிரலை பார்த்த மாதுரி காயம் சிறியதாக இருக்க அவர் அறைக்கு அழைத்து சென்று காயத்திற்க்கு மருத்து வைத்து அதை கட்டிவிடும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவரும் ஒரு வார்த்தை பேசவில்லை வானதியும் பேசவில்லை அவரையே பார்த்துக்கொண்டிருந்த வானதியை என்ன என்று தலையை அசைத்து கேட்க

என்னை உங்களுக்கு பிடிக்காதா என்று கேட்க

அவள் கேள்வியில் ஷாக் அடித்தார்போல் மாதுரி செய்யும் வேலையை நிறுத்த. மனைவியின் பதிலை எதிர்பார்த்து விஜயபாஸ்கரும் இரு குழந்தைகளும் கதவு அருகில் நின்றிருக்க பதில் கூறாமல் அறையை விட்டு வெளியே சென்றார் மாதுரி.

______________________________________________
ஏய் தடிமாடு எங்கடா இருக்க

ஏன்டி செல்லம் என்ன விஷயம் மாமாவ தேடுறிங்க

இந்த கொஞ்சல்ஸ் எல்லாம் வேனா நீ முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுடா பக்கி

ஏன் பூஜ்ஜிமா ரொம்ப நேரமா மாமாவ தேடுறியா வார்த்தை தாருமாற வருது

முதல்ல நீ இருக்க இடத்தை சொல்லுடா பண்ணாட

வர வர கழுதை தேஞ்சி கட்டெரும்பு ஆனப்போல ஆகிடுச்சி நம்ம மரியாதை என்று முனங்கியவன் மரியாதை மரியாதைன்னு ஒன்னு இருக்கே அதுக்கு அர்த்தம் தெரியுமா செல்லம் என்று கேட்டான் கிர்ஷ்

அந்த கண்டாவியெல்லாம் எனக்கு தெரியாது எந்த கடையிலடா விக்கராங்க என்று கிண்டலாக கேட்க

போச்சி சுத்தம்...... என்று தலையில் கைவைத்து மனதில் நினைத்தவன்.... சும்மா செல்லம் அதை பத்தி ஏதாவது தெரியுமான்னு கேட்டேன். நீ தப்பா எடுத்துகாத பட்டுமா என்றான் கிர்ஷ்.
 

Bhagi

Moderator
Staff member
#3
பேச்ச மாத்ததடா பரதேசி எங்கடா இருக்க இன்னும் அந்த குரங்கு கூடதான் இருக்கியா

செல்லம் யாருடா குரங்கு இங்க நிரைய குரங்குங்க இருக்காங்க நீ கேக்குர அந்த குரங்கு யாரு மா

மழுப்பாதடா என்னை ஏமாத்தலாம்னு பாக்குறியா நான் என் அக்கா மாதிரியெல்லாம் உங்கள சும்மா விட்டுட்டு போய்டேவேன்னு நினைச்சியா மவனே சங்க அறுத்துட்டுதான் மறுவேலையே பார்ப்பேன்

ஐய்யோ பூஜ்ஜிமா எதுக்குடா மாமாமேல இவ்வளவு கோவம்

அந்த லிண்டா குரங்கு உன்கூட ஒட்டி ஒட்டி ஆடுனலாமே நான் அஙக இல்லாதது உனக்கு ரொம்ப வசதியா போச்சோ என்று வாய்க்கு வந்தபடி காயு அவளின் ஸ்டைலில் அர்ச்சனைகளை வாரி வழங்கி கொண்டிருந்தாள்.

காயூ மற்றும் கிர்ஷ் படிக்கும் யுனிவர்சிட்டியில் கடைசி வருஷ மாணவர்கள் இரு குழக்களாக பிரிந்து அங்கேகங்கே இருக்கும் சிறு கிராமங்களில் தங்கி மருத்துவ கேம்ப் நடத்த வேண்டும் இதற்க்கும் சேர்த்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதால்.இவர்கள் இருவரும் அருகில் இருக்கும் கிரமங்களுக்கு செல்ல முடிவாயிற்று அவர்கள் பிரிக்கும் குழுக்களுடன்தான் பணிபுரிய வேண்டும். ஆனால் கிர்ஷும் காயூவும் தனிதனியாக பிரிக்க அவள் ஒரு பகுதிக்கும் இவன் ஒரு பகுதிக்கும் செல்ல வேண்டிய சூழல் உருவாயிற்று. அந்த இரவு நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைதான் இப்போது கேட்டுக்கொண்டு இருக்கிறாள் காயத்திரி.

உனக்கு யாருடா சொன்னா

அது உனக்கு தேவ இல்லாதது

நீ ஆடுனியா இல்லையா

இல்ல செல்லம் என்று கூறியவனின் கைபிடித்து கமான் மேன் என்று லிண்டா ஆடுவதற்க்கு அழைத்து செல்ல

டேய் பொய்யா சொல்ற இப்போ அந்த குரங்குதானே வந்து உன்னை கூப்பிட்டா

இல்ல டா

நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேனே ஒரு கைல கிட்டாரு ஒரு கைல துனிய சுத்திகிட்டு என்று அவள் கூறும் போதே அவனை பார்த்துக் கொண்டவன் இங்க எங்கயாச்சும் நிக்கரால லைவ்வா பாக்குறாப் போலவே சொல்றாலே என்று சுற்றும்முற்றும் பார்க்க

என்னடா தேடுற

எங்கடி இருக்க நேர்ல பார்த்தாபோலவே பேசுறேயேடிஎன்று கேட்க

காயுவின் தோழி அவனை நோக்கி வந்து கையில் இருந்த விடியோகாலில் பேசு என கூறி சென்றாள்.

அதை வாங்கியவன் ஹீ.. ஹீ... செல்லம் என்னடா சாப்பிட்டியா மா என்று நலம் விசாரிக்க

டேய் டேய் பேச்ச மாத்தாத நான் சொல்லி இருக்கேன் ல உன்னோட ரோமியோ வேலையெல்லாம் மூட்டைகட்டி வைன்னு உன்னோட ஒருஜினல் கிருஷ்ணா அவதாரத்த காட்டுரியாடா

இது எல்லாம் தப்புமா மாமா மேல நம்பிக்கை வை செல்லாம் நான் ஏகபத்தினி விரதன் டி என்று கூற

என் பிரண்ட்கிட்ட பெட்கட்டினேன் டா நீ யார்கிட்டயும் கிளோஸா ஆடமாட்டன்னு அவ நீ ஆடுவன்னு சொன்னா அதுக்கு லைவ்வாவே எனக்கு காமிச்சிட்டாட பக்கி என்று அவனை வசைபாட

விடியோகாலை கொண்டுவந்து கொடுத்த பெண் பார்த்துக்கொண்டிருக்க அவளை எரிப்பதுபொல் பார்தத கிர்ஷ் இந்த ஒரு தடவ மாமாவ மன்னிச்சிடு செல்லாம் இனி யார் ஆட கூப்பிட்டாலும் புஜ்ஜிமா கூடமட்டுமதான் ஆடுவேன்னு சொல்றேன் செல்லம் என்றான் கிர்ஷ்

உன்னை நம்பலாமாடா

சத்தியமா டி என்னை நம்பு மா என்று இறங்கியவன் காட் என்று கூறி இல்ல இல்ல மை டார்லிங் பிராமிஸ்.... பீளிஸ் செல்லம் பூஜ்ஜிகுட்டி என்று ஐஸ் வைத்து லேட் ஆகிடுச்சி போய் படு செல்லம் என்று அவளுக்கு பறக்கும் முத்தம் வைத்து செல்லை அனைத்தவன் அப்பாடா என்று ஓய்ந்து அப்படியே அமர்ந்தான்.