பகுதி 46

Bhagi

Moderator
Staff member
#1
சிண்டு அது சூப்பரா இருக்குல்ல!!?"... என்று வானதி மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் கூறியவுடன் கடை சிப்பந்தியை விட்டு அதை எடுக்க சொன்னான் கௌஷிக்.

"வேனா, வேனா சிண்டு இந்த கலர் வேண்டாம். வேற பாக்கலாம்". என்று கூற அடுத்து இருக்கும் விளையாட்டு பொருட்களை தந்தையின் கையை பிடித்தபடி ஆர்வமுடன் பார்வையை பதித்து நடையிட்டு கொண்டிருந்தாள். மகளை பார்க்கவே குட்டி இளவரசியை போல் உணர்ந்தான். மனதில் கொள்ளை மகிழ்ச்சி. தூரம் இருந்தவரை மனதில் தேக்கிய அன்பினில் மகளை மொத்தமாய் திளைக்க வைக்க ஆசைக்கொண்டான்.

"அப்போது......" அந்த நேரம் பார்த்து கௌஷிக் கைபேசி ஒளி எழுப்ப அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்தவன் இந்த நேரம் ஏன் கிர்ஷ் கால் பண்றான் என்று எண்ணம் கொண்டு மகளை பொருட்களை பார்க்க சொல்லிவிட்டு கிரிஷிடம் பேசலானன்.

"சொல்லு கிர்ஷ் எப்படி இருக்க?".

"எனக்கென்ன செமையா நாலு பொண்ணு....." என்று ஆரம்பித்தவன் எதிர்முனையில் இருப்பவர் அண்ணன் என்பதை நினைவில் கொண்டு தொண்டையை சரிசெய்வது போல் ம்க்கூம்... "நல்லா இருக்கேன் பையா..". அப்புறம் சொல்லுங்க நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கிங்க ?".

கௌஷிக் யார் அந்த மாயகிருஷ்ணன் நம்ம கிர்ஷ்க்கே அண்ணனாச்சே தம்பியின் வாயடித்தனம் தெரியதாவனா என்ன அவன் தெரியாதது போல் "என்னது ஸ்டேஜா!!!??... புரியலடா!! என்ன ஸ்டேஜ்"? என்று கேட்க

"அட பாவம்.... ஒன்னுமே தெரியாத குட்டி பாப்பா... இந்த பச்சபுள்ள ரியாக்ஷன பாபிக்கிட்ட மட்டும் வைச்சிக்குங்க... என்கிட்ட வேனா.. என்று வாயாடித்தனத்தை காட்ட

"டேய் கடுப்ப ஏத்தாம என்னன்னு புரியராப்போல சொல்லுடா??... நீ எதைபத்தி கேக்குரன்னு தெரியலடா fool?? என்றான் கௌஷிக்.

(நான் fool la நீங்க சீக்கிரமா ஒன்னுசேர்ந்தாதான் என்னோட லவ்வ சொல்லமுடியும் ஆனா இன்னும் என்னதான் செய்றியோ!!?!@... என்று கிரிஷ் உள்ளுக்குள் பேச) "டேய் மங்கி லைன்ல இருக்கியா!!?!.. இல்ல போயட்டியா!?!.. டேய் டேய் எருமை..." என்று கௌஷிக் கத்தியபின் தெளிந்தவன் "அது நீங்க பாபிய சரிபண்ணிட்டாங்களா??". என்றான் குழைந்த குரலில்.

"ஏன்டா அவ கண்ணு காது மூக்கு வாய் எல்லாம் சரியாதானே இருக்கு!!... அவள எதுக்குடா சரி பண்ணணும்?!?"..

"சோ ஸ்வீட்.... ரொம்ப கடிக்காத பையா... முடியல!... அங்க வந்தேன்... பாபிய மும்பைக்கு வரவைக்க நீங்க பண்ணி வைச்ச தகினத்தோம் எல்லாம் அவங்ககிட்ட போட்டு கொடுத்து என் நாரதர் வேலைய காட்டிடுவேன் சொல்லிட்டடேன்.... என்று கிர்ஷ் மிரட்ட

ரொம்ப வெறுபேத்திட்டாமோ!!?!" என்ற எண்ணம் வர "கிர்ஷ் கண்ணா.... உங்களுக்கு என்ன தெரியனும்... அதை தெளிவா சொல்லுங்க கண்ணா..." என்று பல்லை கடித்து வார்த்தைகள் வெளிவந்தது.

"சரி ஓகே.. ஸ்டேய்ட்டாவே வரேன் பாபியா சமாதனப்படுத்திட்டிங்களா?"..

"அந்த வேலையதாண்டா இருக்கேன்.. மலையேறின மயிலாத்தா மலை இறங்குவேனான்னு அடம்பிடிச்சிட்டுகிட்டு இருக்கா... சும்மாவே திட்டுறா தீயா பாக்குராடா... என்று புலம்ப

(பையா அக்கா தங்கச்சி ரெண்டுபேருமே நம்பல வைச்சி செய்யராங்கபோல என்ன செய்ய விதி வலியது யாரையும் விடாது என்று மைண்ட் வாய்ஸ்ல ஓட) "பையா அதுக்கும் ஏதாவது ஐடியா வைச்சிருப்பிங்களே!!!.. பிளனை எகஸி்கியூட் பண்ண வேண்டியதுதானே!?!".. என்று கூறினான்.

"பாக்கலாம்... சரி என்னடா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க!?!'..

"நத்திங் பையா... சும்மாதான் சரி நாளைக்கு பேசுறேன் பை.." என்று போனை அணைத்தான். விளையாட்டு பொருட்களை பார்க்க சொன்ன மகளை திரும்பி பார்க்க அங்கே வானதி இல்லை.

அடுத்த பக்கம் சென்று இருப்பாள் என்று நினைத்தவன் "பேபிமா, பேபிடால்" என்று அழைத்துக்கொண்டே அடுத்த பகுதியில் தேடினான் ஒரு கட்டத்தில் அடி மனதில் பயம் ஏற்பட கடை ஊழியரிம் சென்று தன்னுடைய 5 வயது மகளை பார்த்திர்களா என்று விசாரிக்க அவர்களின் பதில் இல்லை என்பதாய் இருந்தது அடுத்த வந்த யோசனையில் அந்த கடையின் சிசிடிவி கேமிராவை பார்வையிட அதில் கடையை விட்டு வெளியே சென்று இருப்பது தெரிந்தது.

மகள் யாரோ ஒருவரை பின் தொடர்வதை பார்த்த கௌஷிக் அது நேகா போல் தெரிந்தது அவளின் மேல் கோபம் கொண்டான். அங்கயே நின்றிருக்கும் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் குழைந்தையை அழைத்து சென்றது கோபம் வரவழைக்க மகளை கையுடன் அழைத்து வர கடையை விட்டு வெளியே சென்றான்.

நேகா கையில் மொபைல் வைத்திருப்பது தெரிந்திருந்ததுதான் அவனுக்கு ஆனால் அவளின் எண் தெரியாது அவளுடைய எண் தனக்கு எதற்க்ககென்று இருந்தவன் இப்போது அவளுக்கு தொடர்புகொள்ள தந்தையை அழைத்தான் அவருக்கும் தெரியாமல் போகவே மனைவி மாதுரியிடம் கைபேசி எண்ணை வாங்கியவர் மகனுக்கு அனுப்பினார் இருந்தும் அவளின் எண் நாட் ரீச்சபெல் என்று வரவே அவளின் மேல் ஆத்திரம் ஏற்பட்டு அந்த மால் முழுவதும் தேடினான்.

எங்கும் குழந்தை கிடைக்கவில்லை அவளும் தென்படவில்லை திடிரென்று கௌஷிக் கௌஷிக் என்று பின்னால இருந்து குரல் வர அந்த திசையில் பார்த்தவன் 'நீங்க எங்க போனிங்க??'.. உங்கள எங்கெல்லாம் தேடுறது? பர்ச்சேசிங் முடிஞ்சுதா? போலாமா?... என்று பரபரப்புடன் நேகா கேட்க.

"அது இருக்கட்டும்... வானதி எங்க?"

"யாரு ?"

"என் மக வானதி எங்க?"..

'நீங்கதானே அவ கூட இருந்திங்க!!?"

"என் கூடதான் இருந்தா... நான் போன் பேசும்போது நீதானே அவள வெளிய கூட்டிட்டு வந்த??"

"நானா!!!?!.... இப்போதான் ஷாப்பிங் முடிச்சிட்டு உங்கள தேடுறேன்.. என் மொபைல்ல சிக்னல் இல்லை அப்படி இருந்திருந்தா எப்பயோ உங்களுக்கு கால் பண்ணிருப்பேன். உங்கள எங்கெல்லாம் தேடுறேன்னு தெரியுமா!?! என்னபோய் உங்களோட பொண்ணு எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேன்!?!". என்று பாரிதபமாய் பேச

'ஏய்.." என்று கோபமாய் பேச இருந்தவன். "நீ கூட்டிட்டு போறத சிசிடிவி கேமராவுல பாத்தேன்... இல்லன்னு சொல்ற... பீளிஸ் குல்லுமாவுக்கு எதுவும் தெரியாது... அவள எங்கயாவது மிஸ் பண்ணிட்டியா?? அப்படினாலும் அந்த இடத்தை சொல்லு???நான் போய் தேடுறேன்...".

"நான் எப்படி!!?!... சிசிடிவி கேமராவில் வேற யாராவது இருப்பாங்க.. கௌஷிக் நான் நீங்க இருக்கிற இடத்துக்கு வரவே இல்லை... நீங்க நான் வந்து கூட்டிட்டு போனதா சொல்றிங்க!?! எனக்கு ஒன்னும் புரியல!! நா அவள பாக்கவே இல்லை.... வாங்க நாம ரெண்டுபேரும் சேர்ந்து போய் தேடுவோம்..." என்று கூற

" நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.... என் பொண்ண நானே பாத்துக்குறேன்.. அப்படி போய் ஓரமா உட்காரு". என்று கர்ஜித்தவன் பூனை போல வேலைய பாத்துட்டு எப்படி ஒன்னுமே தெரியாது போல இருக்க உனக்கு இருக்குடி என்று உள்ளுக்குள் புகைந்தான் கௌஷிக்.

மேல் தளத்தில் இருந்து அனைத்து இடங்களிலும் மகளை தேடினான் அவன் கண்மணியை கண்ணால் பார்க்கும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு தேடினான் அழைத்து வந்த மகளை தனது அஜாக்கிரதையால் தொலைத்து விட்டோமோ என்று மனம் பதைபதைத்தது வைஷ்ணவி மகளிடம் ஆயிரம் முறை கூறிய அறிவுரைகள் தனக்கு தானோ என்ற எண்ணமே அவனை தவிக்கவைத்தது பார்க்கும் நபர்களிடம் பெண்ணின் அடையளத்தையும் மொபைலில் இருந்த படத்தையும் காட்டி விசாரித்தான் கடைசியில் இறுதி தளத்தில் வந்தவனின் கண்ணில் போவோர் வருவோரை பார்த்து அழுது நிற்க்க்கும் மகள் கண்ணில் பட அப்போதுதான் உயிரே வந்தது. அதிவிரைவாக தன் மகளை நெருங்கியவன் பேபிடால் என்று குழந்தையை திருப்பியதும் தந்தையின் கால்களை இறுக்க பற்றிக்கொண்டு "அப்பா அப்பா" என்று தேம்பி அழுதுகொண்டே இருந்தாள் வானதி.

இந்த ஒரு சொல்லுக்காக ஏங்கி தவித்தவன் தன் மகள் வாய் ஓயாமல் அப்பா அப்பா என்று அழைக்க மனம் பூரித்து போயிருந்தான். அப்பா என்ற அந்த ஒரு வார்த்தைக்காக உலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் எதிர்த்தாலும் தகும் என்று நினைத்தான். தன் கண்களில் தளும்பும் நீரையும் மறந்து மகளின் கண்களில் வழியும் நீரை துடைத்தபடியே "அழாதடா செல்லம்... அப்பா வந்துட்டேன்ல செல்லம்மால... அழாதடா . அம்முக்குட்டி... பயந்துட்டிங்களா??.. ஏன்டா அப்பாவ விட்டு வந்திங்க??? ஏன் செல்லம்??". என்று மகளை தூக்கி கண்ணம் நெற்றி என்று மகள் கிடைத்த ஆனந்தத்தில் முத்தமழை பொழிந்தான் மகளும் அவன் தோல்களில் வாகாக சாய்ந்து கழுத்தினை கட்டிக்கொண்டு "அப்பா அப்பா" என்று தேம்பினாள்.

"சரி சரி ஒன்னும் இல்ல அழாதிங்க.... அப்பா வந்துட்டேன்ல அழக்கூடாது.... என் தங்கம்ல... என்று எவ்வளவு சமாதனம் செய்தும் அங்க அவள் வழிதெரியாமல் போன பயத்தில் அழதுகொண்டே இருக்க "நீங்க அம்மா போல தைரியம்னு நெனச்சேன்!" இப்படி அழரிங்க!?!"... என்று அவளை சீண்ட.... "யாரு சொன்னது நானும் தைரியமாதான் இருப்பேன்.... உங்கள தேடனுன்னு உள்ள வந்தேனா!! ஆனா ஷாப் எல்லாம் ஒரே மாதிரியாவும் ரொம்ப கூட்டமாவும் இருந்ததால... என்னால கண்டுபிடிக்கமுடியல ....அம்மா நியாபகம் வந்துடுச்சி... அம்மா கூட எப்போ வந்தாலும் அம்மா கைய விடவே மாட்டாங்க... என்னையே வாச் பண்ணிட்டு இருப்பாங்க... என்று கூற

தன் மீதுதான் தவறு போன் பேசும்போது குழந்தையை கண்முன்னே வைத்துக்கொண்டு பேசி இருக்கவேண்டும். பொறுப்பில்லாதவன், மடையன் என்று தன்னை திட்டிக்கொண்டவன். இவ்வளவு தெளிவா பேசுற பொண்ணு எப்படி என்னை விட்டு போய் இருக்க முடியும் என்ற எண்ணம் வர "சரிடா நீ எப்படி இங்க வந்த?? யார் கூட வந்த?? அந்த நேகாதானே உன்னை இங்க கூட்டிட்டு வந்தா??" என்று தனக்குள் இருக்கும் கேள்வியை கௌஷிக் கேட்க.

"அது ...அது... அப்பா நீங்க போன் பேசிட்டே இருந்திங்களா... ஒரு வண்டிய பாத்துட்டே இருந்தேனா... அப்போ என்னை" என்று கூறிக்கொண்டிருந்த வானதி நேகாவை பார்க்க நேகாவும் வானதியை பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களை பார்த்த கௌஷிக் மகளின் கண்ணம் திருப்பி "அப்பாவ பார்த்து சொல்லுடா" என்று தன் பக்கம் திருப்பிக்கொண்டான். "அப்போ ஒரு ரிமோட் வண்டி என்னை தாண்டி போச்சி... அது பின்னாலையே போனேன் நிமிர்ந்து பார்க்கும் போது வழி தெரியல!!"... என்று கூறவும் மகளை அனைத்துக்கொண்டு "ரொம்ப பயந்துட்டிங்களா செல்லம்மா??? சாரி டா??? அப்பா உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்... இனி உங்கள எங்கயும் தனியா விடமாட்டேன். சாரி செல்லம்... என்று தோளோடு இறுக்கிக்கொண்டான். மகள் கிடைக்கவில்லை என்றால் அவன் நினைத்து பார்க்ககூட மனம் சுக்குநூறாய் சிதறேவதைப் போல் இருந்தது. அழைத்து வந்த மகளை வெறும்கையுடன் வீட்டிற்க்கு அழைத்து போக எண்ணம் இல்லாமல் இரண்டோரு பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தான்.

வந்ததிலிருந்து சற்றும் வானதியை விட்டு பிரியாமல் இருந்தவன் பூஜா உணவு ஊட்ட வரும்போதும் கூட அவளுக்கு தான் தருவதாக வாங்கி அவனே ஊட்டினான் தூங்கும்போதும் தன் மார்மீதே போட்டுக்கொண்டு தூங்க வைத்தான். வானதியும் கௌஷிக்கை விட்டு பிரியாமல் அவனுடனே இருந்தாள். குழந்தைகள் ஜெஷ்வின் மற்றும் மீரா வந்து விளையாட அழைத்தும் போகாமல் தகப்பனிடமே ஒட்டிக்கொண்டு திரிந்தாள் வானதி.

மகன் மற்றும் பேத்தியின் அன்னியோனத்தையும் அவர்களின் அன்பையும் பார்த்த மாதுரி ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அலுவலகத்தில் இருந்து வந்த வைஷ்ணவிக்குதான் இவர்கள் இருவரது நடவடிக்கையும் சற்று வித்தியாசமாக பட்டது என்ன அப்பாவும் பொண்ணும் கோந்து போல ஒட்டிக்கிட்டு இருக்காங்க வேலைய காட்ட. ஆரம்பிச்சிட்டார் போல இதுக்கெல்லாம் பயப்புடுற ஆளா நான்.... என்னைக்கு இருந்தாலும் அவ என் பொண்ணு என்று விஷயம் தெரியாமல் உள்ளுக்குள் பொங்கி கொண்டிருந்தாள். படுக்கும் போதும் தகப்பனுக்கும் தாயுக்கும் நடுவில் படுத்துக்கொண்டு இருவர் மீதும் கைகால்களை படறவிட்டு தூங்கினாள் மகள்.

அடுத்தநாளே..........

.....................................................................................
 

Bhagi

Moderator
Staff member
#2
"உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க வைபவ்???".தாரா

"என்ன நினைச்சிட்டு இருக்கேன்... கொஞ்சம் எனக்கு புரியராப்போல கேளுங்க???அப்பதான் உங்களுக்கு பதில் சொல்லமுடியும்??". வைபவ்

"புரியாதவங்க கிட்ட சொல்லலாம் டா .... புரியாதமாதிரி நடிக்கிரவங்ககிட்ட?? ம்கூம்..." என்று கோபமாய் பேச

"இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்?? தெளிவா கேளுங்க??" என்றான்

"நீ ஏன்டா அவள அவாய்ட் பண்ற??!?... அவ முகமே ரொம்ப வாடி போச்சி!!..." என்று மகன் வந்ததிலிருந்தே அவளை ஒதுக்குவது தெரிந்து அவளுக்காக பேசினார் தாரா

மும்பையில் இருந்து வந்த வைபவின் பாரமுகம் அவளுக்கு வருத்தத்தை அளிக்க வைபவ் வந்தவுடனே அவள் இருப்பதை தெரிந்து வெளியே செல்வதாக கூறினான். தன்னால்தான் அவன் வெளியே போகிறான் என்று நினைத்த வைஷாலி "அம்மா நான் ஹாஸ்டலுக்கு கிளம்பளாம்னு இருக்கேன்". என்றாள்.

"ஏய் நீ வெஜ் ரைஸ் கேட்ட ல?? உனக்குதானே செய்றேன்... நீ சாப்பிடாமலே கிளம்பற??". என்று கடிந்து கொள்ள

"மா" என்று நிறுத்தியவள் "அம்மா நீங்க எனக்கு பேக் பண்ணி கொடுங்க... நான் ஹாஸ்டலுக்கு எடுத்துட்டுபோய் சாப்பிட்டுக்குறேன்". என்றாள்.
கொஞ்சம் வாட்டமாக.

"என்னமா?? என்னாச்சு?? ஏன் ஒருமாதிரி உன் முகம் வாட்டமா இருக்கு??" என்று தாரா கேட்க

"இல்லை மா.. ஒன்னும் இல்லை.. நான் நல்லாதான் இருக்கேன்...". என்று முகத்தினை சாதாரணமாக வைத்துக்கொண்டாள்.

"முடிஞ்சிடுச்சி... கொஞ்சம் சாப்பிட்டு சாய்ந்தரமா கிளம்பி போ..." என்று தாரா கூறினார்.

"இல்லை மா.... கொஞ்சம் வேலை இருங்கு.. கிளாத் எல்லாம் வாஷ் பண்ணும்.. நான் கிளம்புறேன்மா". என்று கூற

"டேய் வைபவ்.. நீதான் வெளியே போறியே அப்படியே இவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு போடா...என்று கூற

"எனக்கு வேற ரொம்ப இம்பார்டண்ட் ஒர்க் இருக்கு.. என்னால முடியாது.. அவங்களே போய்டுவாங்க..." என்று கூற "ஏன்டா கொஞ்சம் கொண்டு போய் விட்டாதான் என்ன??" என்று மறுபடியும் மகனிடம் கேட்க

அவர்களை ஒர் பார்வை பார்த்தான் உடனே வைஷாலி "இல்லமா பரவாயில்லை.. நானே பஸ்ல போய்க்கிறேன்..." என்று கூறியவள் வாய்வரை வந்த அழகையை முழுங்கி சாதரணகுரலில் கூற மிகவும் பிரயாத்தனப்பட்டாள்.

வைபவின் ஒதுக்கம் அவளால ஜீரணிக்கவே முடியவில்லை அவனின் உள்ளம் தெரிந்த பிறகு அவனை காண்பதற்க்கு ஏங்கினாள் வாய் மட்டும் தான் அவனை வேண்டாம் என்றது ஆனால் மனமோ அவனை தினமும் காணும் விருப்பம் கொண்டது. அவன் குரல் கேட்க ஏங்கியது அன்று வைபவ் தாராவின் பேசியில் அழைத்தபோது அவனிடம் என்ன பேசுவது ஏது பேசுவது என்று தெரியாமல் பேசியை வைத்துவிட இருந்தவள் அவனின் i love you என்ற எதிர்பாரமல் வந்த வார்த்தையில் உள்ளம் கரைந்தாள் மெழுகாய் உருகினாள். அதனாலயே அவனிடம் பேச முடியாமலே போனை வைத்து விட்டாள்.

அவள் ஹாஸ்டல் சென்றதும் தான் தாரா விசாரணையை ஆரம்பித்தார்.

"அம்மா பீளிஸ்.... ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கேன்.. எதுவும் கேக்காதிங்க..." என்றவன் நிகிலை பார்க்க சென்றுவருவதாக கூறி சென்றான் வைபவ்.

என்ன இந்த பையன் இப்படி சொல்லிட்டு போறான் என்று அவன் சென்ற வாசலையே பார்த்திருந்தார் தாரா

வைபவ் ஏன் முறுக்கிட்டு இருக்கான் ????!!

காபி ஷாப்பில் நிகிலனின் எதிரில் அமர்ந்திருந்த வைபவ் கோபத்தில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான்.

"ஏன்டா இப்படி கோபப்படுர?!?"... இது உன் குணமில்லையே!?!... அதுவும் வைஷாலி மேல ஏண்டா இவ்வளவு கோவம்!?!"....

"என்ன மச்சி... சொல்ல சொல்ற!?!"...

"எதுக்கு இப்படி கோவமா இருக்க???" அதை சொல்லு மாப்ள??"..

"என்னை பார்த்தா பொம்பள பொறுக்கி மாதிரி இருக்காடா?!?"...

அதிர்வாய் வைபவை பார்த்த நிகில் "யார்டா சொன்னது?!?".....

"பின்ன என்னடா??.... அவளுக்கு சென்னைல வேலை வேண்டாமா..... சிங்கப்பூர் போற ஆஃபர் வந்துருக்கு அங்கயே செட்டிலும் ஆக போறதா இருக்காடா.... அவ பின்னாடியே சுத்துர பொம்பள பொறுக்கின்னு நினைச்சி என்கிட்ட இருந்து தப்பிக்கதானே இந்த முடிவுக்கு வந்தா!?!"....

"உனக்கு எப்படிடா தெரியும் மாப்ள???... அவ சிங்கபூர் போறான்னு??"...

"தெரியும்...தெரியவந்துச்சி..." என்றான் சுரத்தே இல்லாமல்

"சரி அதுக்கு ஏன் கவலைபடுற?!? வைஷாலிக்கிட்ட நேரா கேக்கலாமேடா!!! ஏன் இந்த முடிவுன்னு???".

"என்னடா கேக்க சொல்ற???.... மச்சி நான் அவள எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா... முடியலடா மனசு வலிக்குது... என்னை பார்க்க புடிக்காம... நான் அவ மேல காட்டுர அன்பு புடிக்கமதானே என்னை விட்டு போறா?.... இன்னும் என்ன எதிர்பாக்குறா டா??? நான் அவகிட்ட கெஞ்சனுமா????கல்யாணம் பண்ணிக்க சொல்லி.... அதுதான்டா செய்யல.... டிசண்ட்டா தானேடா மெய்டெண் பண்ணேன் என் அப்ரோச்ச!?! அது தப்பாடா???"...

"டேய் மாப்ள உன் பிலிங்க்ஸ் புரியுதுடா...
நான் வேனா பேசட்டுமா??"..

"இனி பேச என்ன இருக்கு?!?.... நான் லவ் சொன்ன ஒரே வாரத்துல இந்த முடிவு எடுத்துருக்கானா அவ மனசுல என்னை எந்த அளவுக்கு தூரத்துல வைச்சிருக்கங்கன்னு பாருடா?"...

"மச்சி....ரொம்ப கான்பிடன்டா இருந்தியேடா?".

"ஆமாடா...இங்க என் கண்முன்னாடி நடக்குறத வைச்சி சொல்லிட்டேன்டா..... அவ மனசுல நான் இல்லடா.... என்று உடைந்தவன் மேலும் வார்த்தை வராமல் தவித்தான்....... வைபவ்

இருவரது தவிப்பும் விலகும் நாள் வருமோ அல்லது இதை அனைத்தும் அறியாமலே இரு உள்ளங்கள் எதிரெதிர் திசையில் பயணிக்குமோ.... என்று இன்னும் சில வாரங்களில் கேள்விக்கான விடைகளுடன் மீண்டும் சந்திப்போம்.....