சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு அழகிய சிகப்பு பட்டாடை போன்ற சிவந்த மாலைபோழுதின் இதமான காற்றுடன் அந்தியும் சாய்ந்தது.
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிக்கும் செண்பகப்பூ
என்ற பாடல் s.pபாலசப்ரமணியம் சார் வாய்ஸ்ல நம்ம கல்யாண் ஜுவலர்ஸ் பிரபு பாடிக்கொண்டுந்தார் ஒரு பிரபல டிவி சேனலில் . சோபாவில் அமர்ந்து பாடல் வரிகளில் மூழ்கி கொண்டிருந்த வைபவின் முன்னால் காபியை கொண்டு வந்து வைத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தார் தாரா.
"டேய் சோகமா இருப்பன்னு பார்த்தா பாட்டு ரசிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்க"
"வேற என்னமா செய்ய சொல்ற பாட்டு நல்லா இருக்கு சோ நான் ரிலாக்சா கேட்டுகிட்டு இருக்கேன்.".
"அது இல்ல டா ஷாலுவ பத்தி எதுவும் ஐடியா வைச்சி இருக்கியா??"
"இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் அவள விரும்புறேன்னு சொல்லும் போது அவ கண்ணுல நான் சந்தோஷத்தை பார்த்தேன். ஆனா உடனே அவ சோகமா ஆகிட்டா அவ மனச ஏதோ ஒன்னு உறுத்துது. நிச்சயம் அது அவளோட பாஸ்ட் லைஃப் தான் அதமட்டும் மாத்திட்டாபோதும் அவ தெளிஞ்சிடுவா என்னை ஏத்துக்குவா" என்றான் வைபவ்.
"சொல்லவே பயந்த இப்போ இந்த போடு போடுற ...சரி சரி அடுத்ததா இதுக்கு என்ன பண்ண போற அவள எப்படி மாத்தப்போற" என்றார் ஆர்வமாக
"ஹோ... இதை நான் மட்டும் செய்ய முடியாது அவ மாமியார் உங்களுக்கும் இதுல பங்கு இருக்கு தங்கமே" என்று கொஞ்சினான்... "அவ யோசிக்க டைம் கொடுக்கனும்மா அவள அவ ரியலைஸ் பண்ணிக்கட்டும் . அவ எனக்கு ஏத்தவ இல்லன்னு சொல்லிட்டு போனா ஆனா அவளுக்கு புரியல அவ இல்லாம என் லைஃப்பே இல்லன்னு ஷாலுவே புரிஞ்சிக்கிட்டு வரட்டும்".
"நான் என் லவ்வ சொல்லிட்டேன் இனி அவ அவளோட மனசுல மறைச்சி வைச்சிருக்குற காதல சொல்லனும் என்னை எப்பவோ அவளோட மனசு விரும்ப ஆரப்பிச்சிடுச்சி அவதான் அத உணர மாட்டன்ற அவ அதை உணர்ந்தா போதும் என்னை தேடி வந்திடுவா".
"நீ ரொம்பா கான்பிடன்ட்டா பேசுரதா பாத்தாலே ஷாலு மனசு மாறிடுவான்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி மனசு நிறஞ்சி இருக்குடா" என்றார் தாரா.
"அம்மா இந்த வார வெள்ளிக்கிழமை ல கோவில் போவியா"
"ஆமா அதுக்கு என்னடா"
"வெள்ளிகிழமை அவ கோவிலுக்கு வருவா இல்ல"
"ஒரு வெள்ளிகிழமை கூட தவறுனது இல்லடா கண்டிப்பா வருவா"
"இந்த வாரமும் வந்தா அவகிட்ட எதுவும் கேக்காத நீயும் எதுவும் தெரியாதது போலவே இரு"
"ஏன் வைபவ் நான் எடுத்து சொல்றேன் டா"
"இல்லமா வேனா இந்த விஷயம் உனக்கு தெரியாது அப்படின்னு அவ நினைச்சிட்டு இருக்கிற வரையும் தான் உன்கிட்ட சகஜமா இருப்பா. சோ நீங்க அவகிட்ட இந்த விஷயம் தெரியதது போலவே இருங்க . அப்புறம் அப்போ அப்போ நடுவுல என் கல்யாணத்தை பத்தி ரெண்டு மூனு பிட்டு போட மறக்காதிங்க"
"ம்... சரிடா அவ என் மருமகளா வந்தா போதும் நான் மகளா பாத்துக்குவேன்"
"கீயூட் அம்மா...... ஏதேது உங்கள மாதிரியே இருந்துட்டா இந்த மாமியார் மருமக பிரச்சனை தனி குடித்தனம் இது எல்லாம் இருக்காது போல அப்புறம் 29,30 வயசுல எங்களபோல ஆளுங்களுக்கு வழுக்கையே இருக்காது".
"ஏன்டா வழுக்க வராது"
"பின்ன மாமியாரும் மருமகளும் போடுற சண்டையில நடுவுல மாட்டி முடியபிச்சிக்கிட்டு முக்கால் வாசிபேர் இப்படிதானே இருக்காங்க".
"ஹா...ஹா... நாங்களும் ஒருகாலத்துல மருமகளாக இருந்து வந்தவங்கதானே நாங்க எதையெல்லாம் அனுபவபட்டோமோ அதையெல்லாம் சொல்றோம் ஒரு சிலர் பாசமா சொல்றாங்க ஒருசிலர் கண்டிப்பா சொல்றாங்க அதுதான் பினச்சனையே இப்போ வர்ர மருமகளெல்லாம் மாமியார் ஆனா புரியும்"..
"சரி ஒகே விடுமா..... நீங்க அட்டாச்மெண்ட்டா இருந்தாதான் எனக்கு சந்தோஷம். ரொம்ப நொந்துட்டா நம்ம தான் அவளுக்குன்னு எல்லாமும்ன்னு புரியவைக்கனும்".
மகனின் தோல்களை ஆதரவாய் பற்றினார் தாரா. "நான் நாளைக்கு மும்பை போறேன் ஷாலுக்கு தெரிய வேண்டாம்.... பஸ்ட் என்னை கேக்கமாட்டா அப்படி கேட்டா பிரண்ட் கூட ஊருக்கு போய் இருக்கான்னு சொல்லு மா".
" நல்லதே நடக்கும் டா போய்ட்டு வா..... அப்படியே என் மருமக உன்னை பற்றிகேட்டா சொல்லி வைக்கிறேன்"..
.....................................................................................
அறைக்குள் நுழைந்த வைஷாலி தோழியிடம் எதையும் கூறாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். தண்ணிர் குழாயை திறந்துவிட்டு அழுது கொண்டே "அம்மா எனக்கு என்னையே புடிக்கலம்மா ஏன்மா நா இன்னும் உயிரோட இருக்கேன். இன்னைக்கு வைபவ் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அவர பிடிச்சுது அவரோட நட்பு ,அவரோட குணம்,அவரோட குடும்பம் எல்லாம் பிடிச்சிருந்ததும் ஒரு பெண்ணா என்னால சந்தோஷம் கூட பட முடியல நீ போனபோதே என்னையும் உன்கூடவே கூடிட்டு போயிருக்கலாமே... நான் வளந்து என்னத்த சாதிச்சேன்.... அந்த கேடுகேட்டவனால அசிங்கதானே பட்டேன்... அப்பாவும் என்னாலதானே இறந்துபோனார்.. இல்லை, இல்லை நானே அவர கொண்ணுட்டேன்.... என்னையும் நீங்க போன இடத்துக்கே கூட்டிட்டு போய்டுங்கமா பீளிஸ், பீளிஸ் என்னால இருக்கவே முடியலமா" என்று கதறினாள்.
"வைஷாலி வைஷாலி கதவ திறடி என்னடி சத்தம் கதவ திற வைஷாலி" என்று தோழி கதவை தட்டினாள். கதவை திறக்காமல் மீண்டும் அழுதபடியே இருக்க "ஏய் வைஷாலி எனக்கு பயமா இருக்குடி கதவ திறடி" என்று தோழியின் கத்தலில் அமைதியானவள் முகத்தில் தண்ணீரை அடித்து பின் சாதாரணமாக வெளியே வந்தாள்.
"ஏய் என்னடி ஆச்சு ஏதோ போல இருக்க என்னடி நடந்தது வைபவ பாத்துட்டு வறேன்னு போனவ இப்படி பேயறைஞ்சா போல வந்து நிக்கிற சொல்லு டி என்ன நடந்தது... ஏதாவது அதிர்ச்சியான விஷயமா இல்ல ஆக்ஸிடன்டா என்னடி சொல்லுடி சொல்லு" என்று உலுக்க
மறுபடியும் அழ ஆரம்பிக்க அவளை அமைதி படுத்திய தோழி "இங்க வா வைஷாலி வா இப்படி உட்காரு இந்தா தண்ணீ குடி அழாத சொன்னா கேளு அழாத" என்று தேற்ற சற்று அமைதியானாள் வைஷாலி
"வைபவ் என்ன சொன்னார் கல்யாணம் பத்தி பேசபோறதா சொன்னியே என்னாச்சி அவர் என்ன சொன்னார் நீ ஏன் இப்படி இருக்க என்று கேட்க" அவளை சிறிதுநேர மௌனத்திற்க்கு பின் "அவரு அவரு என்னை என்னை" என்று இழுக்க "என்னடி உன்னை" என்று தோழி கேள்வி எழுப்பினாள்
"He loves to me , he propose to me" என்று கண்களை பொத்திக்கொண்டு அழ ஆரம்பிக்க
"ஏய் ஏய் முதல்ல இந்த அழைய நிறுத்து நல்லதுதானே சொல்லி இருக்கார் அதுக்கு போய் ஏன் இப்படி அழுகுற சரி உனக்கு பிடிக்கலனா பிடிக்கலன்னு சொல்லிடு just say to him அவரு ஒன்னும் வர்புறுத்துற குணம் இல்லையே ".
அவள் கூறிய எதற்க்கும் பதில் கூறாமல் கேவியபடியே படுக்கையில் படுத்தாள் எவ்வளவு முயன்றும் கண்களில் இம்மியளவும் தூக்கம் என்பதே பிறக்கவில்லை மதிய உணவினையும் இரவு உணவினையும் துறந்தவள் விடியகாலை 4 மணி அளவில் அவளின் அனற்றும் சத்தம் கேட்டு எழுந்த தோழி வைஷாலியை தொட்டு பார்க்க உடல் நெருப்பாய் கொதிக்க அவளை எழுப்பி மாத்திரை ஒன்றை கொடுத்தவள் அவளுக்கு ஈர துணியை கொண்டு துடைக்க காய்ச்சல் அடங்கிய பாடில்லை. அவளின் அனத்தலும் அடங்கவில்லை காலை 7 மணி அளவில் வைஷாலியை மருத்துவரிடம் காட்ட தோழி அழைத்துசெல்ல ஹாஸ்டல் ரிஷப்ஷனில் வைஷாலியை பார்க்க யாரோ வந்திருப்பதாக கூறினார் வார்டன்.
வரவேற்பர்க்கு வந்து பார்த்தவள் நிற்க்கமுடியாமல் மயச்கியபடி கிழே சரிந்தாள். "வைஷாலிமா என்னச்சு என்னம்மா இது என்று பக்கத்தில் இருந்த தோழியிடம் தாரா விசாரிக்க "நேற்று ஆப்டர்நூண்ல இருந்து எவ்வளவு சொல்லியும் சாப்பிடல விடியற்காலைல இருந்து ஃபீவர் வேற இன்னும் குறையல இப்போதான் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகபோறேன் ஆண்டி" என்று கூற.
"நான் கார்ல தான் வந்திருக்கேன் என் கூட வாங்க ஹாஸ்பிடல் போகலாம்" என்ற தாரா ஹாஸ்டல் வார்டனிடம் "மேம் வைஷாலி உடம்பு சரியாகரவரைக்கும் நானே எங்க வீட்ல வைச்சு பாத்துக்கிறேன். இதுக்கு ஏதாவது லெட்டர் குடுக்குனுமுன்னா சொல்லுங்க தந்திடுறேன்".
"நீங்க கார்டியன்னு சைன் பண்ணி இருக்கிங்க இருந்தாலும் ஒரே ஒரு லெட்டர் மட்டும் கொடுத்துடுங்க" என்று வார்டன் கூற அவரிடம் கடிதம் எமுதி கொடுத்து வைஷாலியின் தோழியிடம் "உனக்கு ஆபிஸ் இருக்குல்லமா லேட் ஆகிடபோகுது நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பாத்துக்குறேன் மா என்று கூற இல்ல ஆண்டி என்று கூறினாலும் அவளுக்கும் அலுவலகத்திற்க்கு நேரமாவதால் தடுமாறியபடி தோழி கூற பரவயில்லமா நான் உன் பிரண்ட நல்ல பாத்துக்குறேன் போதுமா நீ வோரி பண்ணிக்கமா கிளம்புமா" என்று கூறியவர் அவளை கை தாங்களாக காரில் அமரவைத்து மருத்தவரிடம் அழைத்து சென்றார்.
______________________________________________