அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

நெருப்பில் பூத்த மலர்

#1
"நெருப்பில் பூத்த மலர்"

சுதாமா வதனா, தேன்மொழி, மது என்று மனதை கொள்ளை கொள்ளும் மங்கையர் பெயரால் மனதை மயக்கிவிட்டீர்கள்.
சவப்பாவின் பலியாடு பழி வாங்கும் பதுங்கும் புலியாக பாய்ந்ததில் பதுமையின் பலம் பயங்கரமாக இருந்தது என்றால் மிகையில்லை.

போதை தன்னுள் புகுத்தி கொள்பவனை மட்டுமல்ல தன்னை பரப்பியவனையும் படுகுழியில் புதைத்துவிடும் என்பதை உணர்த்திய அரக்கன் அடிம்போலாவின் சாவில் இன்னும் கொடூரம் தேவை என்றே தோன்றியது அவனது ஈன செயல்களில்.

பசவப்பா பாடையில் செல்லக் கூட தகுதியற்ற தற்குறி. கவ்ரவ் ,பிரகாஷ், லக்ஷ்மியின் மரணம் மனதை பிசைந்த பொழுதே மதுவின் மன இறுக்கம் புத்துணர்ச்சியை புகுத்தியது. கீர்த்தி இன்றைய சித்தம் தெளிந்த நிலையில் சிதிலமடைய செல்லும் இளைய தலைமுறையின் இலக்கண உதாரணம்.

களையெடுக்கப்பட வேண்டிய கயவர்கள் கடமையின் தலைமையில் இருப்பது காலம் காலமாக நமக்களிக்கப்பட்ட சாபமோ?

பணத்திற்காக பாதை மாறி, பகட்டிற்காக போதையில் ஊடுருவி, புதைகுழியில் பிரண்டு விழுந்த பசவப்பாவும், அடிம்போலவும் அதிரடி நாயகியின் முன்னால் அசிங்கத்தில் நெளியும் அற்பபுழுவாகவே எனது கண்ணில் தெரிந்தார்கள்.

ஆஷிஷ் நாயகனாக முயன்று முடியாமல் எனது கண்ணுக்கு ஒரு துணை கதாபாத்திரமாகவே கடந்து விட்டான். நாயகியிடம் பயிற்சிக்கு செல்லுமாறு ஆஷிஷை பணிக்கின்றேன்.

நெருப்பில் மலர் பூக்கவில்லை, மலரே நெருப்பாக மாற்றிவிட்டார்கள் மதம் பிடித்த மனித மிருகங்கள்.
"நெருப்பில் பூத்த மலர்
நிலவாக
நெகிழ்ச்சி
நெஞ்சத்திலே !