நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் - ஸ்ரீகலா

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,411
714
113
நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – ஸ்ரீகலா

எந்தவொரு பாவத்திற்கும் தண்டனை நிச்சயம் உண்டு. அறிந்து செய்த பாவம் ஒருபுறம் என்றால் அறியாமல் நடந்த தவறு ஒருவிதம். அறியாமல் நடந்தவற்றிற்கு கிடைப்பது பாவ மன்னிப்பு. அறிந்தே செய்யும் தவறுக்கு கிடைப்பது நரகத்தின் அனுமதி.

சிம்ம விஷ்ணு ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவன். பெண்களை ஏறெடுத்து பார்க்காதவன். அவர்களின் புரவலனாக இருப்பவன். ஊரார்களுக்கு அவர்களின் சின்ன ஐயா தெய்வத்தின் மறுபிறவி.

பெண்களின் பாதுகாவலனாக இருப்பவன் ஒருத்தியிடம் மட்டும் முறை தவறுகிறான். நிஷிலா பதினெட்டு வரை குடும்பத்தினர் அனைவரின் பாசத்தையும், அன்பை மட்டுமே சுமந்து வளர்ந்து வந்தவளின் வாழ்வு ஒரே நாளில் இழி நிலைக்கு தள்ளப்படுகிறது. தனக்கு ஏன் இந்த நிலை என்று கூட அறியாமல் ஒவொரு நாளும் தண்டனையை அனுபவிக்கிறாள்.

பவித்ரன் நிஷிலாவின் மாமன் மகன். பேருக்கு ஏற்றார் போல் பவித்ரமான அன்பை நிஷிலாவின் மீது செலுத்திக் கொண்டிருப்பவன். தனது அன்னை இளவரசியின் மீதும், தந்தை பத்ரியின் மீதும் அளவில்லாத பாசத்தைக் கொண்டிருப்பவன்.

எவருக்கும் தெரியாமல் நிஷிலாவை தன்னிடத்தில் வைத்து அவளிடத்தில் முறை தவறி நடந்து கொள்கிறான் சிம்ம விஷ்ணு . ஒவ்வொரு நாளும் அவளை காயப்படுத்துவதை மட்டுமே வேலையாக செய்கிறான். அதில் அவனது மனதும் சேர்ந்து காயப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவளை துன்புறுத்துகிறான்.

நிஷிலாவின் குடும்பத்தின் மீது பகையின் காரணமாக இதை செய்வதாக ஒரு கட்டத்தில் நிஷிலாவிற்கு தெரிகிறது. தனது வாரிசு அவள் வயிற்றில் வளர ஆரம்பித்ததும் அவள் குடும்பத்திடமே அவளை சேர்த்து அவளிடமிருந்து விலகுகிறான். என்ன காரணத்திற்காக அவளை சிறையெடுத்தான்? எதற்கு தனது வாரிசை அவள் வயிற்றில் உருவாக்கினான் என்று புரியாமல் அந்த குடும்பமே தவிக்கிறது.

அக்குடும்பத்தில் மற்றவர்களின் மீது அவன் காட்டும் விரோதம் பவித்ரனின் தந்தை பத்ரியிடம் மட்டும் மீறப் படுகிறது. அவரை பத்திப்பா என்றழைத்து அவரை தன் மனதிற்கு நெருக்கமானவராக கூறுகிறான். அடுத்து மேலும் வேறொரு மாநிலத்தில் இருந்து மேலும் ஒருவரை தந்தை என்று பாசத்துடன் அரவணைத்து அழைத்து வருகிறான்.

நிஷிலாவின் அத்தை இளவரசியிடமும், அவரது அண்ணன்களிடமும் தனது பகைக்கான காரணத்தை கோட்டிட்டுக் காட்டுகிறான் சிம்ம விஷ்ணு. அவன் சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பத்தில் அவனை அழிக்க நினைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் முயலை போன்று மருண்ட விழிகளுடன் சிம்ம விஷ்ணுவை கண்டாலே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவள், ஒருகட்டத்தில் அவனை எதிர்க்கும் துணிவான நடவடிக்கையை மேற்கொள்கிறாள்.

சிம்ம விஷ்ணு வாழ்க்கையில் நடந்தது என்ன? எதற்காக நிஷிலாவின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறான்? சிம்ம விஷ்ணுவுக்கு பத்திப்பாவுக்கும் சம்மந்தம் என்ன? சுடலை முத்து யார்?

இளவரசி ஏன் சிம்ம விஷ்ணுவை நிஷிலாவின் வாழ்க்கையில் இருந்து விலக்க வேண்டும் என்று நினைக்கிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு பாகங்களாக இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் வழக்கம் போல் ஸ்ரீகலா அவர்கள் தனது விறுவிறுப்பான நடையில் புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி படிக்க வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சிம்ம விஷ்ணு நிஷிலாவிடம் நடந்து கொள்ளும் முறை பார்த்து அவன் மீது பயங்கர கோபம் எழுகிறது. ஆனால் அவன் வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்து கொண்ட போது, அது அப்படியே பரிதாபமாக மாறுகிறது. தன்னை தானே தேடும் அவனது நிலையை என்னவென்று சொல்வது?

மொத்தத்தில் சிம்ம விஷ்ணு அழுத்தமாக நம் மனதில் பதிந்து போகிறான்....வாழ்த்துக்கள் ஸ்ரீ..
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!