நினைவு புத்தகம் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

விஜயன் அவர்கள் நினைவு புத்தகம் என்கிற மற்றுமொரு கதையும் கொடுக்கவிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
 
#2
நினைவு புத்தகம்..1

வாழ்க்கை திடீரென்று தனக்கு இத்தனை சூனியங்களை வாரியிறைக்குமென ஐஸ்வர்யாவுக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் எனக்கும் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரே நேரத்தில் மண வாழ்க்கையில் விடுதலை, தன் ஏற்படுத்தி கொடுத்த வாழ்க்கையால் தன் மகளுக்கு வந்த துன்பங்கள் தந்த குற்ற உணர்வில் இறந்த அவள் தந்தை சுந்தரத்தின் மரணம், சரியா அதே நேரத்தில் தன் தந்தை விட்டு சென்ற கடன் என அவள் முழி பிதுங்கும் அளவுக்கு சுற்றி பிரச்சினைகள் தான்.

கடனுக்கு வீட்டை விற்று கடனுக்கு போக வந்த ஒரு கோடி ருபாய் பணத்தை நான்கு பங்காக பிரித்த ஐஷ்வர்யா..

ஒன்றை தன் அம்மா சுந்தரி பேரிலும்,
ஒன்றை தன் அன்பு பெண் ஐந்து வயசு குழந்தை சஞ்சனா பேரிலும்,
தன் ஒரே தங்கை மோகினி பேரிலும்,
மிச்சம் இருக்கும் ஒரு பங்கை தங்கள் வருங்கால தேவைக்கு என பேங்கில் தனி தனியாக போட்டு வைத்தாள்.

இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் கூட அவள் முகத்தில் மட்டும் ஒரு புன்னகை மலர்ந்தே இருந்தது.

இந்த 29 வயது பெண் ஐஸ்வர்யாவின் புன்னகைக்கு பின் இருக்கும் மர்மம் தான் என்னவோ?

*****************

இவள் பெயர் மோகினி. பெயரை போல அழகில் மோகினி தான் என்ன இவள் அழகை விட அறிவே நிரந்தரம் என புரிந்த பெண்.

துப்பறியும் புலி என தன் நண்பர்கள் நண்பிகள் மூலம் செல்லமாக அழைக்கப்பட்டே தன் காணும் எல்லா விஷயத்திலும் துப்பறிக்கிறேன் என இவள் செய்யும் சேட்டை ஒன்றா? ரெண்டா? அதுவோ பல பல..

சேட்டைகள் பல செய்த போதும் தன்னிடம் உதவி கேட்டும் அனைவருக்கும் சரியான விதத்தில் உதவுவாள்.

இப்படியெல்லாம் சொல்வதால் இவள் பெரிய துப்பறியும் புலி என நினைக்க வேண்டாம். இவள் துப்பறியும் விஷயங்களே வேடிக்கையானது.

ஒரு ஆணுக்கு இதுவரை எத்தனை crush இருந்தார்கள், அதில் எத்தனை பேருக்கு அவன் அதனை காதல் என நினைத்து அவர்களிடம் சொல்லி இருக்கான், அதில் எத்தனை கை அடிகள், செருப்பு அடிகள், இன்னும் சில மர்ம இடத்தின் அடிகள் என வாங்கி இருக்கிறான் என்ற database ஏ தன் கைக்குள் வைத்து இருப்பாள்.

இதை தவிர வீட்டில் என்ன மாதிரியான பொய்கள் சொன்னால் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என தன் அம்மா மூலம் வேண்டுமென்றே பரிசோதித்து அதனை தன் நண்பர்களுக்கு சொல்லும் சுட்டி பெண்.

தன் அக்கா ஐஷ்வர்யா மேல் உயிரே வைத்து இருக்கும் அன்பு தங்கச்சி இவள். அவளின் குழந்தை சஞ்சனாவுக்கு சித்தி போல இல்லாமல் கூட சேர்ந்து சேட்டை செய்யும் தோழி போல இருப்பவள். தன் அம்மா சுந்தரி கிட்ட வம்பு பண்ணவே பிறந்தவள் என எண்ணத்தில் இருப்பாள்.

மொத்தத்தில் இவள் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு போல பழகும் 25 வயது சுட்டி அறிவாளி பெண்.

பேங்க் ல கேஷியர் மற்றும் வர இறுதி நாட்களில் யூடியூப் சேனலில் பிராங்க் வீடியோஸ் போட்டு காலத்தை கழிக்கும் இந்த அழகியின் காதல் மனதில் புக போற அந்த காதல் கள்வன் எங்கே உள்ளனோ?

****************

சீதா ஸ்ரீ, ஸ்ரீகிருஷ்ணா..

கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆன ஜோடி..

சீதாவின் வயது - 30, கிருஷ்ணாவின் வயது - 28..

வயதை பார்த்த போதே தெரிந்து இருக்கும் இது வயது வித்தியாசம் உள்ள ஜோடி. ஆனால் காதலில் ஒருவர் மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கும் ஜோடி.

நான்கு வயது ஸ்ரீதர், ஒரு வயது ஸ்ரீநாத் இருவரும் இவர்களின் காதல் பரிசுகள்.

இந்த ஸ்ரீ குடும்பமே கார்ட்டூன் பைத்தியங்கள். முக்கியமாக என் தலைவன் ஷிஞ்சன் பைத்தியங்கள்.

அந்த கார்ட்டூன் பார்க்கும் சமயத்தில் அந்த ஷிஞ்சன் போல ஐந்து வயது குழந்தை போல மாறும் விசித்திரங்கள்.

சமயம் கிடைக்கும் போது எல்லாம் இந்த கார்ட்டூன் கூட்டத்தில் சேரும் கிருஷ்ணாவின் அம்மா நந்தினி, அப்பா நந்தன்.

சீதாவுக்கு மாமியார் மாமனார் என்ற விஷயமே மறக்கும் அளவுக்கு இவர்களின் அன்பு தோழன் தோழிகள் போல இருக்கும்.

அதில் ஒரு உரையாடல்..

"அடியே நந்தினி ரொம்ப போரிங் ஆ இருக்கு வா நம்ம ஏதாவது ஆக்சன் படம் டவுன்லோட் பண்ணி பார்போம்." - சீதா

"இல்ல சீதா ஆக்சன் படம் என்றால் சுத்த அறுவை. நம்ம ஏதாவது science fiction படமா பார்ப்போம். ஏதாவது டைம் டிராவல் மூவி யா பார்த்து டவுன்லோட் பண்ணு.." - நந்தினி

அப்போ அங்கே வந்த நந்தன் தனக்கு தெரிந்த டைம் டிராவல் மூவி எல்லாம் சொன்னார்.

"Predestination, Looper, The Time traveler's wife, Source code, Time cop அப்பறம் back to future 1,2,3. இதில் ஏதாவது டவுன்லோட் பண்ணு சீதா" - நந்தன்

"அட நந்தா செம்ம போ எனக்கே இத்தனை டைம் டிராவல் படம் இருக்கு என்றே தெரியாது. இதுவெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?" - சீதா

"ஹி ஹி... கூகுள் பண்ணி பார்த்தேன்." - நந்தன்

அவர் காதை திருக்கிய சீதா..

"வாலு வாலு... நான் என்னடா இவனுக்கு திடீர் எங்க இருந்து எவ்வளவு அறிவு வந்தது பார்த்தேன். இதுக்கு punishment ah நந்தினியே அழைத்து கொண்டு நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் பார்க் ல முன்று ரவுண்ட் வாக்கிங் போகணும்." - சீதா

"சீதா நாங்கள் பாவம் முட்டு வலி.." - நந்தினி, நந்தன்

"அப்போ ஐந்து ரவுண்ட்... ஒழுங்க தினமும் காலுக்கு எக்ஸர்சைஸ் கொடுத்தால் முட்டு வலி போய் விடும்.." - சீதா

வீட்டுக்குள் நண்பர்கள் மாதிரி பெயரை சொல்லி அவள் அழைத்தாலும் வெளி ஆட்கள் முன்னாடி நல்ல மருமகளா மரியாதை கொடுத்தே பேசுவாள்.

அந்த குடும்பத்துக்குள் தற்போது நல்ல புரிதல் இருக்கு. ஆனால் இதே சீதா இந்த குடும்பத்துக்குள் வந்த அன்று நந்தினியால் செருப்பு அடி வாங்கிய கதை தனி கதை.

வயசு வித்தியாசம் கொண்ட ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சீதா ஸ்ரீ காதலை ஏற்றுக்கொள்ளாத நேரம் அது.

மனநல மருத்துவரா இருக்கும் சீதா ஸ்ரீ.. ஸ்ரீகிருஷ்ணா வாழ்க்கைக்குள் வந்ததே ஒரு அற்புத நிகழ்வு.

*******************

போரூர் ல புதிதாக விலைக்கு வந்த ஒரு மாளிகை போன்ற ஒரு வீட்டை வாங்க அபிராம் வந்தான்.

அபிராம் தன் வாழ்க்கையில் சந்தித்த சில காதல் சம்பவங்களை கண்டதால் காதல் மற்றும் கல்யாணம் என்ற விஷயங்களை வெறுக்கும் ஒருவன்.

சில வருஷத்துக்கு முன் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு பெரும் துக்கத்தால் சாகனும் என்ற முடிவில் இருந்த இவனை இவன் நண்பர்கள் இருவர் துணை கொண்டு ஒரு அளவுக்கு மாற்றினார்கள்.

தனக்கு பிடித்தவர்கள் கிட்ட மட்டும் தன் உணர்வை வெளிப்படுத்தும் இவன் மற்ற சமயங்களில் எல்லோராலும் இவன் முதுக்கு பின் அழைக்கப்படும் பெயர்கள் "கல் நெஞ்சக்காரன்", "சிடுமுஞ்சி" மற்றும் "ரோபோட்".

இவனின் அம்மா பெயர் விமலா, அப்பா பெயர் விமல். வார இறுதி நாள் அவர்கள் வாழ்த்த வீட்டில் போய் உட்கார்ந்து விடுபவன்.

தனக்கு முன் இருந்த வீட்டை இல்ல இல்ல மாளிகையை கண்டு ஏராளாமாக சிரித்தவன்..

"மிஸ்டர் மூர்த்தி இதை உடனே எவ்வளவு விலையென்றாலும் பேசி முடிங்க..."

"சரி சார் இருந்தாலும் ஒருதடவை உள்ளே போய் பார்த்துவிட்டு.."

"தேவையில்லை உள்ளே இருக்கும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு முலையும் என் விரல் நுனியில் இருக்கு. உள்ளே துருப்பிடித்து போன ஜன்னல் கூட எனக்கு தெரியும்."

அதற்கு மேல் அந்த மூர்த்தி என்பவன் எதுவும் பேச வில்லை. பத்து கோடிக்கு ஐஷ்வர்யா கிட்ட வாங்கிய வீட்டை பதினைந்து கோடிக்கு விற்றான். அவன் மனதிலோ, "பெரிய பிசினஸ் மேன் சொன்னாங்க ஆனா ஒரு வீட்டை விலை பேசி கூட கேட்க தெரியல. இவனெல்லாம் எப்படி பிசினஸ் கிழிக்கிறான்.", என தனக்குள் சொல்லி கொண்டு சிரித்தான்.

அப்போ அபிராம் தனக்கு வந்த ஃபோன் கால்லில்..

"என்னம்மா சாப்பாடு முடிந்ததா? தண்ணீர் நிறைய குடிங்க? அப்பறம் மாத்திரை சரியா சாப்பிடணும் சரியா?"

"சரி பா சரி.. அதன் நீ சொல்லாமலே நான் சரியா செய்கிறேன் ல. நீ போன காரியம் என்ன ஆச்சு?"

"அந்த ஐஸ்வர்யாவும் அவள் குடும்பமும் வாழ்ந்த வீட்டை வாங்கும் வேலை நல்லபடியா போகுது. இன்னும் ஒரே வாரத்தில் நமக்கு அந்த வீடு சொந்தம்."

"நீ பெற்ற பாராட்டை மாற ஆனால் அவமானத்தை மாறக்கூடாது. நீ என்ன செய்யுனுமோ செய் பா இந்த அம்மா துணைக்கு இருக்கேன்."

"நீங்க இருக்கீங்க ஆனா அப்பா..? என் மேல் ரொம்ப கோபமா இருக்காரே"

"அவர் கிடக்கிறார் விடு. போக போக நம்ம வழிக்கு வந்துடுவர். நம்மை விட்டால் அவருக்கு யார் இருக்காங்க பாசம் கோபம் நம்ம கிட்ட தானே காட்டமுடியும்."

"ஆமாம் மா.."

"சரிப்பா உன் அடுத்த பிளான் என்ன?"

"அந்த ஐஸ்வர்யாவின் குழந்தை சஞ்சனானவை நம்ம வழிக்கு கொண்டு வருவது தான்."

"செய் பா செய்.. என் பேத்தியே பார்க்கணும் எனக்கு ஆசையா இருக்கு."

"சீக்கிரம் உரிமையா பார்ப்பிங்க மா.."

போனை வைத்தவன் அந்த மூர்த்தியை பார்த்து அடுத்த பத்திர பதிவுக்கு ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தான்.

அபிராமுடன் பேசி முடித்த அந்த பெண்மணி தன் கணவனை காண தங்கள் வாழும் முதியோர் இல்லத்துக்குள் சென்றார். அவரின் கணவன் கிட்ட நெருங்கிய அந்த பெண்மணி..

"என்னங்க பாவங்க நம்ம பையன் உங்க கூட பேசணும் எவ்வளவு ஆசையா இருக்கான். நீங்க இப்படி பண்றீங்களே..??"

"நான் சொன்ன பேச்சை கேட்காதவன் அவன் கிட்ட எல்லாம் நான் பேசணும் மா?"

"என்னங்க பெருசா கேட்கல அவனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லனா நம்ம என்னங்க பண்ண முடியும்."

"உண்மையில் இஷ்டம் இல்லாதவனை நான் தொல்லை செய்யல டி.. இஷ்டம் இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு பழிவாங்கும் வெறியில் இருக்கிறான் பார் அது.. அது தான் என் கோபமே.."

சிறிது நேரம் யோசித்த அந்த பெண்மணி..

"அவன் அந்த ஐஷ்வர்யா இருந்த வீட்டை வாங்கி விட்டான். அடுத்து அந்த குழந்தை மூலம் அவன் அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறேன் சொன்னான்.."

"இங்க பார் நம்ம ஆசைப்பட்ட மாதிரி இதன் முடிவில் அவன் ஆசைப்பட்ட பொண்ணுக்கூட கல்யாணத்தில் முடிந்தால் சரி. இல்ல அவன் என் மகன் இல்ல நான் அவன் அப்பன் இல்ல. நம்ம திரும்பி அவனிடம் போறது நடக்காதா காரியம்."

கோபத்தில் சொன்னவர் குளிக்க சென்று விட்டார். இங்கே அவரின் மனைவி மகன் மற்றும் கணவன் இடையில் மாட்டி தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.

இருபத்தேட்டு வயது ஆகும் நம்ம அபிக்கு என்னதான் பிரச்சினை..

இவர்களின் கதை தான் என்னவோ?

நினைவு புத்தகம் இன்னும் திருப்பப்படும்...
 

Attachments

#3
நினைவு புத்தகம்... 2

AS3 Transport and Enterprises...

இருபத்தேட்டு வயது காளை சிவராம்.

சாந்தி - சாந்தன் என்ற தம்பதிகளின் ஒரே மகன். பெயரில் சிவனை வைத்து இருந்தாலும் முடிந்தவரை யாருக்கும் கஷ்டம் தராத ராமன் இவன்.

தன் முன்னால் இருந்த ஒரு உழியார் செய்த திருட்டு வேலைகளை எல்லாம் சிசிடிவி கேமரா சாட்சியுடன் சொல்லி விலசி கொண்டு இருந்தான்.

"என்ன மிஸ்டர் இப்போ என்ன சொல்றீங்க? இங்க ஒழுக்கம் எவ்வளவு அழகா வீடியோ ல தெரியுது பாருங்க. உங்களை போல மற்றவர்களும் ஏமாற்ற முயல்வார்கள் என்ற காரணத்தால் தான் இந்த சிசிடிவி ஒன்றை மட்டும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தேன். நீங்க நேரடியா அபிராமிடம் பேசிக்கொள்ளுங்கள். அவன் தான் இதில் முடிவு செய்ய வேண்டும்."

"சிவராம் பிளீஸ் பிளீஸ் வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்க அவர் கிட்ட மட்டும் சொல்ல வேண்டாமே. நாளையில் இருந்து நான் வேலைக்கு கூட வரல. இந்த மாச சம்பள பணம் கூட வேண்டாம். இதுவரை நான் கையாண்ட பணத்தை கூட என் சொத்தை விற்று கூட தந்து விடுக்கிறேன். அவருக்கு மட்டும் நான் செய்தது தெரிந்தால் என்னை உயிரோட புதைத்து விடுவார்."

"என்ன மிஸ்டர் பண்றது எனக்கு தப்பை கண்டுபிடிக்கும் அதிகாரம் மட்டுமே இருக்கு. இல்ல நீங்க ஒன்று பண்ணுங்க போய் ஸ்ரீகிருஷ்ணா வை போய் பாருங்க. அவர் நினைத்தால் உங்களை அபிராம் கிட்ட இருந்து காப்பாற்ற முடியும்."

உடனே ஸ்ரீகிருஷ்ணாவிடம் போன அந்த நபர் கையில் காலில் விழுந்து மன்னிப்பை வேண்டினான்.

"ஓகே மிஸ்டர் பார்க்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் கையாண்ட பணம் அப்பறம் இந்த நிமிடம் முதல் உங்களுக்கும் இந்த கம்பனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என sign போட்டு விட்டு போங்க. அபிராம் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்.", என உறுதி அளித்த ஸ்ரீகிருஷ்ணா அன்று நாள் முடிவதற்குள் வந்த செய்தி ஒன்று கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.

மாலை ஐந்து மணிக்குள் ஒரு கை துண்டுப்பட்ட நிலையில் சிகிச்சை செய்யப்பட்ட கையுடன் பணம் மொத்தத்தையும் கொடுத்து விட்டு அந்த ஆள் ஊரை விட்டு சென்றான்.

இதையெல்லாம் பார்த்த ஸ்ரீகிருஷ்ணா அபிராம் மற்றும் சிவராம் இருவரையும் அழைத்து கத்த ஆரம்பித்தான்.

"என்னடா பண்ணி வைச்சு இருக்கீங்க..? எல்லாம் என்கிட்ட பேசிட்டு தானே முடிவு பண்ணுவீங்க இப்போ என்னடா?" - ஸ்ரீகிருஷ்ணா

"யாப்பா சாமி எனக்கு எதுவும் தெரியாது இந்த அபியை கேளு.." - சிவராம்

"அடிங்கு அந்த பாயல் கையாண்டல் செய்த விஷயமே இப்போ நீங்க சொல்லி தான் தெரியும். எனக்கு முன்னாடியே தெரிந்து இருந்தால் அவனை உயிரோட விட்டு இருப்பானா? போயும் போயும் கையை எடுக்கும் சின்ன தண்டனை எல்லாம் நான் கொடுக்க மாட்டேன்.." - அபிராம்

"சிவா எனக்கு உன்மேல் தான் சந்தேகம்.. உண்மையை சொல்லு என்ன நடந்தது..?" - ஸ்ரீகிருஷ்ணா

கொஞ்ச நேரம் நமட்டு சிரிப்பு சிரித்த சிவராம்

"அது இல்லடா அவன் வேற நம்ம அபிக்கு தெரிந்தால் உயிர் போய் விடும் என ரொம்ப பயந்தானா? அதன் ஒரு கருணை அடிப்படையில் நமக்கு தெரிந்த சிலபேர் மூலம் அவன் கையை எடுக்க சொன்னேன். பாவம் டா அவன் ரொம்ப பயந்து போய் இருந்தான் தெரியுமா?" - சிவராம்

"இங்க பார் பண்ணது இவன் ஆனால் என்னை போய் ஒண்ணும் தெரியாத சின்ன குழந்தையை போய் என்னவெல்லாம் சொல்லிட்டே..", அபிராம் கோபத்தில் முகத்தை திருப்பி கொள்ள என்ன செய்வது என புரியாத ஸ்ரீகிருஷ்ணா அவன் முன்னால் தோப்புக்கரணம் போட்டான்.

அதில் கூட குற்றம் கண்டுபிடித்த சிவராம்..

"ஏய் இவன் ஒழுங்கவே தோப்புக்கரணம் போடல திரும்பி முதலிருந்து ஆரம்பிக்க சொல்.." - சிவராம்

"அதானே கிருஷ்ணா திரும்பி ஆரம்பி... சிவா அந்த பிஸ்கட் பாக்கெட் இங்க கொடு சாப்பிட்டுக்கிட்டே இவன் செய்யும் வேடிக்கை எல்லாம் பார்ப்போம்.." - அபிராம்

கொஞ்ச நேரம் அவர்கள் சொன்னதை செய்தவன் கடைசியில் தரையில் கால் விரித்து படுத்து விட்டு..

வின்னர் படத்தில் வடிவேலு சொல்ற விதத்தில்..

"யம்மா யம்மா யம்மாயம்மா..", என வலியில் முனங்கினான்.

"என்ன மச்சி கால் ரொம்ப வலியா?", என சிவராம் கேட்க

"வலியா... அடேய் கால் இருக்கா? இல்லையா? தெரியாத அளவுக்கு ஒரு நிலைமையில் இருக்கேன்." - ஸ்ரீகிருஷ்ணா

மற்ற இருவரிடம் இருந்து சிரிப்பு ஓலி மட்டுமே அந்த அறை முழுதும் நிறைந்து இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கூட வலியை மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

***************

AS3 Transport and Enterprises... இதுக்கு ஓனர்ஸ் நான்கு பேர் அபிராம், சீதா ஸ்ரீ, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சிவராம்.

சீதா தன் டாக்டர் வேலை செய்வதால் தன் கம்பெனி பொறுப்பையும் சேர்த்து அவள் கணவன் ஸ்ரீகிருஷ்ணாவிடம் தந்து விட்டாள். அப்படி இருந்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் மற்ற மூவரும் ஒரே அளவிலேயே அந்த கம்பெனி நடத்துக்கிறார்கள்.

இந்த முன்று வேந்தர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வேலை என்பதை பிரித்து கொண்டனர்.

சிவராம் - சிவன் பெயரை வைத்து இருந்தாலும் அந்த கடவுள் ப்ரம்மனை போல படைக்கும் தொழிலே அதாவது தங்கள் பிசினஸுக்கு தேவையான புது புது யோசனை சொல்பவன் இவன்.

ஸ்ரீகிருஷ்ணா - சிவராம் சொன்ன யோசனைகள் செயல்படுத்தி காட்டும் வேலை இவனோடது. மற்றவர்கள் முடியாது சொல்லும் ஒன்றை கூட செய்து காட்டும் வல்லவன் இவன்.

அபிராம் - தங்கள் பிசினஸுக்கு எதிராக இருக்கும் எல்லார் பிரச்சனைக்களையும் அழிக்கும் சிவன் இவன்.

கடந்த ஏழு வருடமாக நல்ல நண்பர்கள் மற்றும் இப்போ பிசினஸ் பார்ட்னர்ஸ் என இவர்கள் உறவு போகிறது.

இதே நேரத்தில் தான் தங்கள் குடி புகுந்த புது வீட்டின் பரண்மேல் ஒரு டைரி எடுத்தாள் மோகினி.

அதன் முதல் பக்கத்தில்..

"அறிவு கெட்ட முண்டமே மற்றவர்கள் டைரி படிப்பது கேடுகெட்ட எச்ச பழக்கம் என தெரியாதா?...

இதுக்கு மேல் நீ படிக்கணும் என்றால் படி அப்பறம் உன் இஷ்டம்..", என்ற முதல் வாக்கியமே அவள் மனதில் ஒரு சிரிப்பு கலந்த எதிர்பார்ப்பு தந்தது.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு முலையில் உட்கார்ந்து அதன் எச்சரிக்கை மீறி அவள் வாழ்க்கையை திரும்பி போட போகிற ஒன்று அவள் கையில் இருப்பது கூட புரியாமல் படிக்க ஆரம்பித்தாள்.

******************

வணக்கம் என் பெயர் ராம்.. முழு பெயர் வேண்டாம் அது இங்கே தேவையில்லாதது. எனக்கு இப்போ இருபது வயது ஆகிறது...

இது என் டைரி.. என் நினைவு புத்தகம்.

இதில் என் முடிந்து போன திரும்பவே கிடைக்காத காதல் பற்றி காதலி பற்றி எழுதியுள்ளேன்.

நான் ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் என்றே புரியல. ஒருவேளை என் மனம் திறந்து பேசு அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற ஒருத்தர் கூட இல்லாத காரணத்தால் எழுதுகிறேன் போல.

பெயர் பொருத்தம், மன பொருத்தம் கொண்ட தாய் தந்தைக்கு மகனாக பிறந்தவன் நான்.

அப்பா அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனக்கும் எங்க அம்மா அப்பாவை பிடிக்கும் எதுவரை என்றால்...

எங்க அம்மா திடீர் திடீர் என முளை கலங்கி போய் என்னை எதுவும் தவறு செய்யாத நேரத்திலும் அடிக்கும் போது வரை.

எங்க அம்மா பைத்தியம் அல்ல ஆனால் 100% தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணும் அல்ல.

யார் தான் முழுவதும் தங்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்துக்கும் சொந்த செயல் காரணமாக இருக்கிறார்கள்.

நாம் எல்லாரும் ஏதாவது ஒன்றில் மனசு பாதிக்க பட்ட மனிதர்கள் தான். எங்க அம்மாவும் அப்படி தான்.

நான் கொஞ்சம் திக்கு வாய் இல்ல அப்படி இருந்தவன்... இதை சொல்ல எனக்கு வெட்கம் இல்ல திக்கு வாய் பழக்கம் உடல் நோய் அல்ல அது ஒரு மன நோய்.

அதிக பயம் கொண்டவர்கள் அல்லது வார்த்தை கோர்த்து சரியா வேகமா பேச முடியாதவர்களுக்கு வரும் பிரச்சினை இது.

எனக்கு ரெண்டுமே தான். எங்க அம்மாவின் அடிக்கு பயந்து நான் அடிக்கடி போய் உட்காரும் இடம் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில்.

எல்லாருக்கும் சிங்கிள் ஆ அறியப்படும் அந்த விநாயகரே எனக்கு காதல் வர அல்லது என் வாழ்க்கையில் காதல் என்ற பொய்யான ஒரு உணர்வை தர காரணமாக அமைந்த நாள் அன்று.

என் மைதிலியை இல்ல இல்ல.. அப்போ அவள் என் மைதிலி இப்போ அவள் வேற யாரோ ஒருவனின் மனைவி.

இதை சொல்லும் போது... எழுதும் போது உடனே சாகணும் போல இருக்கு. ஆனால் இப்போ சாக மாட்டேன்.. இதை முழுதும் எழுதி முடித்த பிறகு தான் சாக போறேன்.

இந்த டைரி என் மரண வாக்கு மூலமாகவும் இருக்கலாம்....

*********************

அதனை படித்து கொண்டு இருந்த மோகினி கண்ணை பின்னாடி இருந்து முடிய சஞ்சனா..

"சித்தி நான் யார் கண்டுபிடிக்க பார்க்கலாம்." - சஞ்சனா

குழந்தையின் கை மேன்மை அப்பறம் அவள் சித்தி என்ற அழைப்பு இதில் கண்டுகொண்ட அவள் சிறிது நேரம் தெரியாத மாதிரி விளையாடி விட்டு..

"சொல்லு சஞ்சு என்ன அம்மா கூப்பிட்டாளா?"

"ஆமாம் சித்தி என் பொம்மைகள் எல்லாம் எந்த பெட்டியில் இருக்கு என்றே தெரியல. அம்மா வந்து உன்னை தேடி தர சொன்னாங்க.."

அந்த டைரியை எடுத்து மறைத்து வைத்த மோகினி சஞ்சனா கூட சென்றாள்.

நினைவு புத்தகம் இன்னும் திருப்பப்படும்..
 

Attachments

#4
நினைவு புத்தகம்.. 3

ஃபாரின் கிளையண்ட் மீட்டிங் ஒன்று நடப்பதாலும் கிருஷ்ணா கேட்டுக்கொண்டதால் சீதா கம்பெனி பார்ட்னர் என்ற பெயரில் ஒரு ஃபைவ் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டே மீட்டிங் அட்டென்ட் பண்ணாள்.

அபிராம் சீதா தவிர மற்ற இருவரும் (சிவராம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா) தங்கள் பின்பற்றும் யுக்திகள் மற்றும் எடுத்துக்கொண்ட வேலையை ஆளுக்கு ஒருவராய் பிரித்து செய்யும் முறை அனைத்தும் பேசப்பட்டது.

வந்த நான்கு கிளையண்ட் ல ஒருவருக்கு மற்றும் சில சந்தேகம் இருக்க அதற்கு அபிராம் பதில் சொன்னான்.

"மிஸ்டர் அபி நீங்க நாக்கு பேர் இருக்கிங்க ஆனால் மிஸ்ஸஸ் சீதா ஸ்ரீ பங்கு இதில் எங்க வந்தது. அவங்க ஒரு டாக்டர் அதுவும் சைக்காலஜிஸ்ட் நம்ம பிசினஸூக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்." - டேவிட்

"லூக் மிஸ்டர் டேவிட் நாங்க முன்று பேர் செய்யும் வேலையை ஒரு காலத்தில் ஒரே ஆளாக செய்தவர் எங்க சீதா ஸ்ரீ. நாங்களே கேட்டு கொண்ட பேரில் அதே சமயத்தில் அவங்க திறமை படிச்ச டாக்டர் பட்டம் வெறும் பேப்பர் ஃபைல் ல போக கூடாது என்ற காரணத்தால் அவங்க வெளிப்படையா பிசினஸ் ல பங்குபெற ல.. ஆனாலும் எங்க நிறுவனத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்படும் வர இறுதி நாட்களில் அவங்க கண் பார்வைக்கு போகும். அந்த காரணத்தால் தான் முக்கால்வாசி முடிவுகள் எல்லாம் திங்கள் அன்று சொல்லப்படுகிறது. யோசிப்பது சிவராம், செயல்படுத்துவது ஸ்ரீகிருஷ்ணா மற்றும் பிரச்சினை எங்கேயாவது வந்தால் அதை அடியோடு அகற்றுவது என் வேலை. எல்லாத்துக்கும் முடிவு செய்வது எங்க சீதா ஸ்ரீ... அதாவது எங்க முன்று பேருக்கும் பாஸ் சீதாவின் வேலை." - அபிராம்

கிளையண்ட் எல்லாம் வேண்டியதை கேட்ட பிறகு கிளம்பி விட்டார்கள்.

அபிராம் கூட கிளம்பும் சமயத்தில் அவனிடம் நன்றி சொல்ல வந்த சீதாவிடம்..

"இங்க பாருங்க சீதா.. நான் உள்ளே சொன்னது பிசினஸ் உரையாடல் மட்டும் தான். அதற்கும் நம்ம ரெண்டும் நடுவில் இருக்கும் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் நீங்க செய்த கேவலமான செயலை நான் மறக்கல.. தினம் தினம் அதை மறக்க கூடாது சொல்லி தூங்குவதற்கு முன் என் டைரியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்." - அபி

"ஆனால் அபி நான் அன்று செய்தது எல்லாமே.." - சீதா

"தெரியும் என் நண்பன் மேல நீங்க வைத்த காதலுக்காக.. அதானே? லூக் உங்கள் அளவுக்கு எனக்கு அவள் மேல உரிமை இல்ல ஒற்றுக் கொள்கிறேன். ஆனாலும் அவன் என் நண்பன்.. எப்படி என் நண்பன். அவன் கழுத்தில் கத்தி வைத்த மாதிரி பொய் சொல்லி கல்யாணம் பண்ண உங்களை நான் மன்னிக்க மாட்டேன். நம்ம உறவு எல்லாம் இந்த பிசினஸ் பார்ட்னர் என்ற அளவுக்கு தான். அதை தாண்டி நம்ம ரெண்டு பேருக்கும் எந்த உறவும் இல்ல.." - அபி

ஒரு காலத்தில் தன்னை சீதா அக்கா... சீதா அக்கா.. என சுற்றி வந்த அவளின் அன்பு கூட பிறக்காத தம்பியை காதல் ஒன்றை கொடு கொன்ற வலி அவள் மனசு முழுசும் பரவியது.

அவன் வாயால் திரும்பி அந்த "அக்கா" என்ற வார்த்தையே எப்போ கேட்போம் என அவளுக்கு இருந்தது.

ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சிவராம் வருவதற்கு முன் தன் காரை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பி விட்டான்.

"ஓ ஓ.. போச்சு அவன் கிட்ட லிஃப்ட் கேட்கலாம் இருந்தேன். அதற்கு முன்னாடியே போய்ட்டான். இப்போ என்ன பண்றது..?" - சிவராம்

"ஏன்டா உன் காருக்கு என்ன ஆச்சு?" - ஸ்ரீகிருஷ்ணா

"அது பஞ்சர் ஆகி நடுவழியில் நிற்கிறது." - சிவராம்

"சரி சரி வா நாங்களே உன்னை வீட்டுல ட்ராப் பண்றோம்.." - ஸ்ரீகிருஷ்ணா

சிலை போல் அபிராம் போன வழியையே பார்த்து கொண்டு இருந்த சீதாவை ஒரு நிலைக்கு கொண்டு வந்த கிருஷ்ணா..

"ஓய் என்ன மேடம் கண்ணகி போஸ் கொடுத்து நிற்கிறீர்கள். யாராவது எனக்கு தெரியாமல் உன்னை ஃபோட்டோ எடுக்கிறார்களா? அடேய் யாருடா அவன் என் பொண்டாட்டியை எனக்கு தெரியாமல் ஃபோட்டோ எடுப்பது? என்னையும் சேர்த்து எடுங்காடா?.."

அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்த போதும் அவனை கொட்டி விட்டு..

"லூசு லூசு நீயே ஏதாவது கற்பனை பண்ணிப்பியா?"

"அப்போ உங்க சிலை நிலைக்கு காரணம் என்னவோ மாகராணி?"

"அது அபி... அபி கிட்ட பேச போனேன்... அப்போ.."

"அப்பறம் என்ன அதே போல கோபத்தில் சத்தம் போட்டு போய்ட்டான் அதானே. விடு மா அவனை பற்றி தெரியும் ல தனக்கு ரொம்ப பிடித்தவர்கள் கிட்ட தான் கோபம் மற்றும் அன்பு காண்பிப்பான்."

"அப்போ இன்னும் நான் அக்காவா அவன் மனதில் இருக்கேன் ல.."

"கண்டிப்பா... இதற்கு போய் குழந்தை மாதிரி கண் கலக்கிட்டு.. நியூடு சைக்காலஜிஸ்ட் டாக்டர் நீயே எப்படி கலங்கலாமா?"

"நான் டாக்டர் ஆ இருந்தாலும் எனக்கும் மனசு இருக்கு அதில் கொஞ்சம் ஏக்கம் இருக்கு."

"ஹ்ம்ம்.. அப்படியே இந்த மாமன் மேல கொஞ்சம் காதல் இருக்கு.."

"கொஞ்சம் இல்லடா பாக்கி ரொம்பவே இருக்கு. அதனால் தான் ஊரே உலகமே உன்னை கேவலமா பார்த்தாலும் சரி என உன்னை துரத்தி துரத்தி கை பிடித்தேன். அப்போ பிடித்த கையை இதுவரைக்கும் கனவில் கூட விடணும் தோணல... நீ கோகுலத்தின் கிருஷ்ணன் டா😍😍. எனக்கே எனக்கு மட்டும் சொந்தம் ஆனவன்."

"பார்டா வசனம் எல்லாம் சூப்பர் aht இருக்கே எந்த படத்தில் இருந்து சுட்டது. சொன்னால் நானும் அதை பார்த்து நாலு ஐந்து பிட்டு போடுவேன்.."

ரொமான்ஸ் ஓவர் ஆ போகுதே என கடுப்பில் அவர்கள் இடையில் வந்த சிவராம்..

"லவ் பைட்ஸ் நான் இங்க இருக்கட்டுமா? இல்ல அப்படியே பொடி நடையா நடந்து வீட்டுக்கு போகட்டுமா? என் கேட்கிறேன் என்றால் எங்க அம்மா நான் இன்னும் வரல என நடுரோடு கூட பார்க்காமல்... என் பையனை காணும் ஏதோ ஒரு பூச்சாண்டி தூக்கிட்டு போயிட்டான்... என விழுந்து ஒப்பாரி வைப்பார்கள் இதுவெல்லாம் தேவையா..?"

அதன் பிறகு அவர்கள் நேரத்தை விண் செய்யாமல் கிளம்பினார்கள்.

********************

ஐஷ்வர்யா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியில் டீச்சிங் போஸ்ட்க்கு விண்ணப்பித்து இருந்தாள்.

அவள் படித்ததோ B.E computer engineering. அந்த படிப்பை கொண்டு சுலபமாக கம்ப்யூட்டர் சயன்ஸ் டீச்சராக வேலை செய்யலாம். அதன் அடிப்படையில் தான் விண்ணப்பம் செய்தாள்.

நினைத்தது போல அவளுக்கு வேலையும் கிடைத்தது அதே சமயத்தில் தன் ஒரே மகள் சஞ்சனாவை அதே பள்ளியில் UKG சேர்த்தாள்.

ஒரு மாதத்துக்கு ஏதோ போய் கொண்டு இருந்த அவள் வாழ்க்கையில் மாற்றம் என்ற பெயரில் ஒன்று நடந்தது.

ஏழாம் வகுப்புக்கு படம் நடத்தி கொண்டு இருந்த அவளை பிரின்சிபால் அழைக்கிறார் என ஒருவர் சொல்ல என்ன ஏது என்று பார்க்க அவர் அறைக்குச் சென்றாள்.

அங்கே அழுத நிலையில் சஞ்சனாவும் அவள் பக்கத்தில் மண்ணில் புரண்டு சண்டை போட்ட மாதிரி ஸ்ரீதரும் இன்னொரு பையனும் இருந்தார்கள்.

அவள் என்ன எது என கேட்பதற்குள் ஸ்ரீதரின் தாத்தா நந்தன் வந்துவிட்டார்.

அவர் வந்த பிறகு பிரின்சிபால் நடந்ததை சொன்னார்..

நடந்தது இதன்.. டைவர்ஸ் வாங்கி விட்டு ஐஸ்வர்யா தனியாக இருப்பதை பற்றி சஞ்சனாவிடம் கிண்டலாக அந்த சிறுபையன் பேசினான்... எங்க அப்பா எங்க கூட இருக்கார் எங்க உங்க அப்பா ஊரை விட்டு ஓடிட்டாரா?... இந்த அந்தப் பேச்சில் சஞ்சனா அழ ஆரம்பிக்க அவள் வகுப்பு மாணவனாகிய ஸ்ரீதர் அவரை பேசாத பெண்ணுக்காக இந்த சிறுவனிடம் சண்டைக்கு சென்றான். அதில் நடந்த பிரச்சினையால்தான் பிரின்சிபாலின் அறை வரை வருவதாக ஆகிவிட்டது.

பின் சில பல பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த ஐஷ்வர்யா கிட்ட நந்தன்..

"இங்க பார் மா உன்னை மகளா நினைத்து சொல்றேன் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவில் குழந்தை வாழ்க்கை கூட அடங்கி இருக்கு. உனக்கும் உன் புருஷனுக்கு என்ன பிரச்சினை தெரியாது இருந்தாலும் குழந்தைகாவது அவர் கூட சேர பார்." - நந்தன்

எப்போதும் போல சிறு சிரிப்புடன் அவள்..

"இல்ல பா எங்க ரெண்டு பேர் நடுவில் டைவர்ஸ் ஆகிவிட்டது. டைவர்ஸ் ஆன ஒரே வாரத்தில் அவர் வேற பொண்ணை கல்யாணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டார்." - ஐஷ்வர்யா

அதனை கேட்ட நந்தன் சிறிது நேரம் யோசித்து விட்டு..

"உன் வயசு என்னமா?" - நந்தன்

"28 முடித்து 29 தொடக்கம் பா.." - ஐஷ்வர்யா

"ஹ்ம்ம் சின்ன வயசு தான். கல்யாண வாழ்க்கையில் உனக்கு வெறுப்பு ஏதாவது இருக்க மா?" - நந்தன்

அவர் ஏன் கேட்கிறார் என புரிந்த அவள்..

"அப்பா நீங்க என்ன கேட்க வரீங்க புரியுது. கல்யாண வாழ்க்கையில் வெறுப்பு எல்லாம் இல்லப்பா. என் கல்யாண வாழ்க்கை பிரச்சினையில் முடிந்தது என்பதற்காக கல்யாணமே பிரச்சனை என்று சொல்ல முடியாதுல. எங்க வீட்டில் கூட வேற மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என் பொண்ணை தன் பொண்ணாக பார்க்கும் ஒருவர் கிடைத்து விட்டால் இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்ல." - ஐஷ்வர்யா

"நல்லது மா. இந்த முடிவு உனக்கு மட்டும் இல்ல உன் பொண்ணுக்கும் நல்லது தான். நாங்க வருகிறோம் மா கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடு என் மனைவியுடன் கண்டிப்பா கலந்து கொள்கிறேன்." - நந்தன்

ஸ்ரீதரை அழைத்து கொண்டு அவர் கிளம்பி விட்டார். ஆனால் இங்கே மற்றொரு கல்யாணம் என விஷயம் அவள் மனதில் பெரும் உருவம் எடுத்தது.

அந்த உருவத்தில் அபிராம்.. உனக்கா? கல்யாணமா? விட மாட்டேன் டி விட மாட்டேன் உன்னால் இன்னொருவன் வாழ்க்கை அழிய விட மாட்டேன்... என வெறித்தனமாக சிரிப்பது போல பிம்பம் தோன்றியது.

அவளின் குழந்தை சஞ்சனா அழைக்கும் ஒலி கேட்டு நினைவு வந்தவள் தன் ஸ்கூட்டி ஏ எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்.

ஆனால் அவள் மனமோ திரும்பி திரும்பி.. அந்த அபிராம் அடுத்து என்ன பண்ண போறனோ... என்ற பயத்தில் இருந்தாள்.

நினைவு புத்தகம் இன்னும் திருப்பப்படும்..📖📖
 
#5
நினைவு புத்தகம்.. 4

ஸ்ரீகிருஷ்ணா, சீதா ஸ்ரீ மற்றும் சிவராம் போய் கொண்டு இருந்த ஒரு வழியில் இருட்டு ரோட் ல கண்ணு தெரியாத ஒரு பொண்ணிடன் இரண்டு பேர் தப்பா நடக்க முயல்வது போல காட்சியை கண்டனர்.

உடனே காரில் இருந்து இறங்கிய சிவராம் அந்த பொண்ணை காப்பாற்றி அவர்களை ஓட ஓட விரட்டினான்.

அதன் பிறகு நான்கு பேர் கொண்ட கும்பல் கேமரா வைத்து அவனை சுற்றி நின்று கை கொடுத்து..

"சூப்பர் ப்ரோ இப்படி தான் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் உதவிக்கு போகணும். இது ஜஸ்ட் ஏ பிராங்க் வீடியோ எங்க யூடியூப் சேனலுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்க நாங்க எடுப்பது. உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சலுட் மற்றும் எங்க பரிசாக ஒரு விருது.." - அந்த கூட்டத்தில் ஒருவன்

செம்ம கோபத்தில் சிவராம் இருந்தான்..

அதுவரை இருட்டில் முகம் மறைத்து இருந்த அந்த பெண் வெளிச்சத்தில் தன் முகத்தை காண்பித்தாள்.

குருட்டு பெண்ணாக நடித்து பிராங்க் வீடியோவில் நடித்த பெண் வேறு யாருமல்ல நம்ம மோகினி தான்.

அவளை பார்த்த பிறகு எங்கு இருந்து தான் அவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்ததோ அவளில் கன்னத்தில் பளார் என ஒரு அடி வைத்தான்.

இது அனைத்தும் கிருஷ்ணாவும் சீதாவும் கிட்ட வருவதற்குள் நடந்தது.

அடித்தது மட்டுமல்லாமல் அவர்கள் கையிலிருந்த கேமராவின் டேப்பை பிடுங்கிவிட்டு..

"இதோ இது தான் என் விசிட்டிங் கார்ட். உங்களுக்கு உங்க டேப் திரும்பி வேண்டுமென்றால் நாளைக்கு என் கம்பெனிக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.", என சொல்லிவிட்டு கிருஷ்ணா மற்றும் சீதாவுடன் காரில் கிளம்பி விட்டான்.

இங்கே அடிவாங்கிய மோகினி கடும் கோபத்தில் இருந்தாள். தன் கூட இருந்த மற்றவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்க அசிங்கமாக திட்டி விட்டு..

"சீ நீங்க எல்லாம் ஆம்பளைங்களா? எவனோ ரெண்டுபேர் என் கையை பிடித்து இழுத்து தப்பா நடக்க பார்க்க அதை கூட ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இப்போ வந்தவர் மட்டும் என்னை காப்பாற்ற வில்லை என்றால் என் நிலை என்ன?" - மோகினி

"அது இல்லடி நாங்க பக்கத்தில் வருவதற்குள் என்னமோ என்னமோ நடந்து விட்டது. அப்படி பார்க்காத டி அம்மா சத்தியமா இதன் உண்மை. நீ எங்க ப்ரெண்ட்... கிட்டதட்ட எங்க கூட பிறந்த அக்கா போல. உன்னை கஷ்டத்தில் விட்டுட்டு நாங்க வேடிக்கை பார்ப்போமா?" - அவளின் தோழன் ஒருவன்

கொஞ்ச நேரத்தில் தன் சுயநினைவுக்கு வந்தவள்..

"சாரி கைஸ் (guys).. நான் திடீர் அதிர்ச்சியில் என்ன பேசுகிறேன் என தெரியாமல் பேசி விட்டேன். இப்போ நம்ம கேமரா வை அவர் கிட்ட வாங்கனும். யார் போறீங்க?" - மோகினி

ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி மாற்றி பார்க்க கடைசியில் மோகினியே நாளைக்கு ஒரு நாள் பேங்கிற்கு லீவ் போட்டு போவது என முடிவானது. அவளுக்கும் தன்னை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றிய அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அப்போது தான் அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்தவள் அதில் இருந்த பெயரை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

சிவராம்...

அவள் மனதுக்குள் அப்ப எழுந்த கேள்வி இந்த ராம் தான் அந்த டைரி எழுதிய ராமா?

*******************

போகும் வழி முழுதும் சிவராம் திட்டிக் கொண்டே வந்தான்..

"மோகினி... மோகினி... ஏன் டி இப்படி? நான் மட்டும் அங்க வரல என்றால் என்ன நடந்து இருக்கும். பெயருக்கு என்ற மாதிரி சரியான பிசாசு பிசாசு... மோகினி பிசாசு." - சிவராம்

கிருஷ்ணாவுக்கும் சீதாவுக்கும் ஒன்றும் புரியல...

"அடேய் யாரை மோகினி பிசாசு சொல்ற..?" - கிருஷ்ணா

"வேற யார் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காப்பாற்றின பொண்ணை தான் சொல்றான். சரியா சிவா.." - சீதா

"ஆனால் அவள் பெயர் சொன்ன மாதிரி மட்டும் இல்ல வாய் திறந்து பேசியது போல கூட எனக்கு நினைவில் இல்லயே.." - கிருஷ்ணா

என்ன சமாளிப்பது புரியாமல் கொஞ்ச நேரம் யோசித்த பிறகு..

"இரவு நேரத்துல ஒரு அழகான பொண்ணு நடுரோட்டில் இருந்தால் மோகினி பிசாசு தான் சொல்லுவாங்க. அதான் அப்படி சொன்னேன் மற்றபடி இந்த பொண்ணோட உண்மையான பேரு எனக்கு எப்படி தெரியும்..??", இதற்கு மேல் ஏதாவது பேசினால் தன் வாயாலேயே உண்மை எல்லாம் உளறி விடுவோம் என்ற பயத்தில் கண்ணைமூடி கார் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

சீதாவுக்கு மட்டும்... இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பது போல தோன்ற சிவாவுக்கு தெரியாமல் அவன் பாக்கெட் ல இருந்த போனை எடுத்தவள் அதன் கடவு சொல்லை போட்டவள் அவனின் hidden folder போட்டோஸ் எல்லாம் ஒன்று ஒன்றாக பார்த்தாள். அதில் இருந்த இரு பெண்களின் போட்டோவில் இப்போ அவன் கிட்ட அடிவாங்கிய பெண்ணும் இருக்கே கேள்விக்கான மர்மத்தை உணர்ந்து கொண்டாள்.

' அடேய் சிவா இவ்வளவு நாளாக பழசை மறந்து நீ சந்தோசமாக இருக்காய் நினைத்தால் இன்னும் அவளையே நினைத்து கொண்டா இருக்கே. இப்படிடா என் ரெண்டு தம்பிகளும் ஒரே குடும்பத்தில் போய் தலையை விடுறிங்க?. யாப்பா சாமி இதுக்கு நான் ஏதாவது ஒரு வழி பண்ணியே திறனும் இல்ல என் தலையே வெடித்து விடும்.' - சீதா மனதில்

அவனை வீட்டில் விட்டுட்டு தங்கள் வீட்டுக்குள் போனால் அங்கே இவர்களுக்கு முன்னாடி அபிராம் ஒரு கையால் மடியில் படுத்து இருந்த ஒரு வயது குழந்தை ஸ்ரீநாத்தை தூங்க வைத்து கொண்டு மற்றொரு கையால் அழுது ஓய்ந்த ஸ்ரீதரே தோளில் சாய வைத்து சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

"விடு ஸ்ரீதர் அதன் அந்த குட்டி பொண்ணுக்கு நீ சப்போட்டா இருந்தாய் ல பின்ன என்ன?"

"இல்ல மாமா அவள் ரொம்ப பாவம் தெரியுமா? எப்படியெல்லாம் அழுதால் தெரியுமா? அதற்கு நீ ஏதாவது வழி பண்ணியே திறனும் மாமா.."

"சரி டா பெரிய மனிதா என்ன செய்யணும் சொல்லு.."

"நீயே அந்த பொண்ணோட அம்மாவை கல்யாணம் செய்து கொள்."

அதனை கேட்டு கிருஷ்ணா மற்றும் சீதா அதிர்ச்சி அடைய...

பெரியவர்கள் நந்தினி மற்றும் நந்தன் அந்த குழந்தை சொன்னதற்கு சரி என்றனர்.

"அட கடவுளே உங்களுக்கு என்ன தான் ஆச்சு? குழந்தை அது தான் தெரியாமல் கேட்கிறது பார்த்தால் அப்பா அம்மா நீங்களுமா? என் நிலைமை தெரிந்தும் இப்படி நீங்க கேட்பிங்க நினைக்கல.." - அபிராம்

"அபி கண்ணா அந்த பொண்ணு கூட நானே பேசினேன் ரொம்ப நல்லா பொண்ணு அது. நிதர்சனம் புரிந்த பொண்ணும் கூட.. அவள் உன் வாழ்க்கைக்குள் வந்தால் எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க" - நந்தன்

"ஐயோ உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? இந்த ஜென்மத்தில் எனக்கு கல்யாணம் குழந்தை என எதுவும் வேண்டாம். கடைசி வரை நான் தனி மரமாகவே இருந்து போய் சேர்க்கிறேன்." - அபிராம்

"அபி...", என‌ சீதா அவன் சொன்ன வார்த்தை கேட்டு கோபமா கத்த பிறகு தான் தன் சொன்ன வார்த்தை மற்றவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை புரிந்தவன்..

"சாரி", என எல்லாரிடமும் சொல்லி விட்டு சீதா கிட்ட மட்டும் முகத்தை திரும்பி கொண்டு சென்று விட்டான்.

அந்த நொடி சீதா ஒரு முடிவுக்கு வந்தாள் எண்ணி ஒரே மாதத்தில் என் இரு தம்பிகளின் வாழ்க்கையில் திரும்பி காதல் என்ற ஒரு ஒளி கொண்டு வர வேண்டும் என..

அவள் நினைத்து நடக்குமா?
காதலை வெறுக்கும் அபிராம் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன?
மோகினி பற்றி சிவராமுக்கு எப்படி தெரியும்?

********************

ஒரு பக்க கன்னம் விங்கிய நிலையில் வீட்டுக்குள் வந்த மோகினியை பார்த்த அவள் அம்மா சுந்தரி பதறி விட்டார்.

"அட என் செல்லமே.. எப்படி மா இப்படி ஆச்சு. ஏதாவது பூச்சி கடிச்சு விட்டதா?" - சுந்தரி

"அடியே சுந்தரி இதை பார்த்தால் பூச்சி கடி மாதிரியா தெரியுது. ஒருத்தன் பளார் என அறைந்து விட்டான்." - மோகினி

அப்போ அங்கே வந்த ஐஷ்வர்யா..

"யாரோ ஒருத்தன் உன்னை அடிக்கும் அளவுக்கு நீ என்ன பண்ண?" - ஐஷ்வர்யா

"ஆ ஆ நீ அல்லவா ஒரு நல்ல அக்கா.. அட தங்கச்சி ஒரு பக்கம் கன்னம் விங்கி போய் வந்து இருக்காளே வலிக்கு ஏதாவது மருந்து போடுவோம் என கொஞ்சமாவது இருக்கா? சைக்கோ சைக்கோ.." - மோகினி

மோகினி பேசியதற்கு பதில் பேசாமல் ஒரே இடத்தில் ஐஷ்வர்யா அவளை முறைத்த விதத்திலேயே நிற்க..

' ஐயோ நான் போயும் போயும் இவள் கிட்டயா மாட்டனும். இவள் சரியா பஜாரி ஆச்சே.. கோபம் வந்தால் பச்ச பச்சயா கேட்பலே..', என யோசித்தவள் பென்சில் திருடிய குழந்தை போல நிற்க ஒரு முடிவுக்கு வந்த அவள் அக்கா..

"இப்போ மட்டும் நீ சொல்லல உன் யூடியூப் கூட்டாளிங்க கிட்ட போன் பண்ணி கேட்டு விடுவேன்.." - ஐஷ்வர்யா

பின் வேறு வழி தெரியாத மோகினி உண்மையெல்லாம் சொன்னாள். அதனை கேட்ட ஐஷ்வர்யா ஒண்ணும் பேசாமல் ஃபர்ஸ்ட் அய்டு கிட் எடுத்துக்கிட்டு வந்தாள்.

' அப்பாடா நல்லவேளை இவள் திட்டில் இருந்து தப்பித்தேன். ஆனால் என்ன ஒரு வாரத்துக்கு அம்மா செய்யும் சிக்கனை தான் கடிக்க முடியாது. பரவல அட்ஜஸ்ட் செய்வோம்..', என அவள் யோசித்து முடிப்பதற்குள் ஐஸ்வர்யாவின் கை மோகினியின் மற்றோரு கன்னத்தில் இடியாய் விழுந்தது.

"என்னடி நினைச்சு கிட்டு இருக்கே சின்ன பொண்ணு போனால் போகட்டும் விட்டாள் ரொம்ப திமிர் எடுத்து போய் ஆடுற. இனிமேல் யூடியூப் கிடியூப் என போனாய் தெரிந்தது காலை உடைத்து ஒரமாக போட்டு விடுவேன்.." - ஐஷ்வர்யா

பின் எதுவும் நடக்காத மாதிரி மோகினியின் இரு கன்னதுக்கு முதல் உதவி செய்தாள்.

' யப்பா சாமி இவளை மற்றொரு கன்னத்தில் அடித்து பஞ்சராகியதும் அல்லாமல் அதுக்கு ஒத்தடம் வேற தருக்கிறாள். இவள் இந்த அளவுக்கு அடிக்கும் அளவுக்கு போனது இல்லயே இப்போ என்ன திடீர் என்று..', என யோசித்த மோகினி வாயை திறக்காமல் நன்றாக முடி கொண்டாள்.

நினைவு புத்தகம் இன்னும் திருப்பப்படும்..📖📖
 
#6
நினைவு புத்தகம்.. 5

எல்லாரும் தங்கள் அறைக்கு சென்ற பிறகு..

தன் ஃபோனில் மெசேஜ் செய்தவள்..

"நீ சொன்ன மாதிரியே அவளை அடித்து விட்டேன் தயவுசெய்து என் வாழ்க்கைக்குள் திரும்பி வராதே ராம்.."

"இங்க பார் என்றுமே உன் வாழ்க்கைக்குள் நான் வந்தது இல்ல. நீ தான் அடிக்கடி என் வாழ்க்கைக்குள் கிராஸ் பண்ற. காதலித்து ஏமாற்றியது நீ, உன் அப்பனை பார்க்க வர சொல்லிட்டு எங்கயோ போனது நீ, அன்று உன் அப்பனால் நான் பட்ட அவமானம் இன்னும் என் நெஞ்சில் இருக்கு. அந்த அவமானத்தின் வலி இன்னும் மாறவில்லை. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போகிறாய் கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இந்த தடவையாவது என் சஞ்சு குட்டிக்கு ஒரு நல்ல அப்பனை பார்.." - ராம்

பிறகு அவனிடம் இருந்து அளவுக்கு வேற எந்த மெசேஜூம் வரல..

"சாரி ராம் அன்று நான் வேண்டும் என்றே பண்ணல என் சூழ்நிலை அப்படி. நான் மட்டும் எங்க சொல் கேட்டு அன்று போகாமல் இருந்து இருந்தால் இவ்வளவு நடந்து இருக்காது. அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்ன ஒரே காரணத்தால் நான் நம்ம காதலை புதைத்து விட்டேன். அந்த நிகழ்வே நீ என்னை வாழ்க்கை மொத்தமும் வெறுக்கும் அளவுக்கு போகும் நினைக்கல டா." - ஐஷ்வர்யா

என்றும் போல அன்றும் நீண்ட நேரம் அவள் அழுத பிறகு வந்த சோர்வினால் தான் தூங்க ஆரம்பித்தாள்.

அவள் கனவில் அவளும் அவளின் ராமும் காதலித்த தினங்களே ஒன்று ஒன்றாக வந்தது.

அந்த நினைவில் எப்போதும் போல சிறு சிரிப்பு அவள் உதட்டில் குடிகொண்டது.

***********************

கன்னம் ஒரு இரு பக்கம் விங்கி இருந்தாலும் ராம் என்ற பெயர் அவள் தலையை குடைந்தது. அதற்கு பதில் கண்டுபிடிக்கவே மறுபடியும் அந்த டைரியே எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

அதில்...

மைதிலியை அன்று நான் சந்தித்தது இப்போ நினைத்தாலும் கனவு போல இருக்கு. அப்போ அது நல்ல கனவு இப்போ இந்த நொடி அது கெட்ட கனவு.

அம்மா காரணம் இல்லாமல் அடித்த அடியில் விநாயகர் கோவிலில் உட்காந்து அழுது கொண்டு இருந்தேன்.

அப்போ ஒரு பொண்ணு என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் தான் மைதிலி எனக்கும் அவளுக்கும் ஒரே வயது... பத்து வயது.

"ஓய் எதுக்கு பொண்ணு மாதிரி அழுதுக்கிட்டு இருக்கே.."

எனக்கு வாய் திறந்து பேசு வரல காற்று தான் வந்தது. அதனை பார்த்து சிரித்த அவள்..

"இனி காற்று அடிக்க நான் சைக்கிள் கடைக்கு போக மாட்டேன். ஒரு டுபின் முனை எடுத்து உன் வாய்க்கும் இன்னொரு முனை எடுத்து என் சைக்கிள் tyre kum வைத்தால் போதும் உடனே காற்று ஏறி விடும். அப்படி ஒரு காற்று உன் வாயில் வருது. ஆமாம் உன் பெயர் என்ன?"

முயன்று எப்படியோ என் பெயர் ராம் என்றேன்..

அதற்கு அவளிடம் இருந்து சிரிப்பே பதிலாக வந்தது. அவள் சிரிப்பு அன்று நினைத்த போது ஒரு தேவதையின் சிரிப்பு என நினைத்தேன். இன்று அது ஒரு அரக்கியின் சிரிப்பு என்பதை புரிந்து கொண்டேன்.

அவளின் அம்மா வந்து அவளை அழைக்க அவள் விடை பெற்று போகும் நேரத்தில்..

"உன் பெயர்... என்.. என்ன?", என திக்கி திணறி கேட்டு விட்டேன்

அவளும் தன் பெயரை "மைதிலி" என சொல்லி விட்டு, "நாளைக்கு இதே விநாயகர் கோவிலில் பார்க்கலாம்", என சிட்டாகப் பறந்து சென்று விட்டாள்.

அப்போ சம்பந்தமே இல்லாமல் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் இருந்து ஒரு பாட்டு என் மனதில் ஓடியது..

"என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே"

ஏன் அப்படி அன்று அந்த பாட்டை யோசித்தேன் என இன்று வரை எனக்கு புரியாத புதிர்.

காதல் என்றால் என்னவென்று தெரியாத அந்த சிறு வயதில் அவள் மேல் கொண்ட நட்பை காதல் என்று நினைத்து கொண்டேன். அது நான் செய்த முதல் பெரும் தப்பு..

அதையே அவளும் உண்மை என என் காலேஜ் முதல் வருடத்தில் ஒற்றுக்கொண்டது இருப்பதிலேயே மிக பெரிய தப்பு.

அம்மாவால் உடலில் காரணம் இல்லாமல் அடி வாங்கிய சமயத்தில் ஆறுதலுக்காக ஏங்கிய அந்த நேரத்தில் நட்பு காரம் நிட்டிய பெண்ணை காதல் பார்வை பார்த்த நான் சாக வேண்டியவனே.

உடலில் பட்ட காயத்தை மருந்து கொண்டு அற்றிய என்னால் மனதில் பட்ட காயத்தை எந்த மருத்து கொண்டு அற்றுவது என புரியவில்லை.

அந்த நேரத்தில் தான் என் குற்ற உணர்வே போகவே என் காதலை ஏற்றுக் கொண்டாள் மைதிலி.

நட்பு காதலாக உருமாறியது...

எங்கள் நட்பே யாரும் அறியாத ஒன்று இதில் எங்கள் காதல் சிதம்பர ரகசியம் போலவே இருந்தது.

நட்பை மறைத்தாள், காதலை மறைத்தாள் மொத்தத்தில் அவளுக்கு நான் யார் என்ற ஒன்றையே மொத்த உலகத்துக்கும் மறைத்தாள்.

நட்பை காதலாக மாறியது தவறு என நினைக்கும் நேரத்தில் அவனை கண்டே தவறு என்பதை புரிய வைத்தாள்.

அது புரிந்த சமயத்தில் என் கண் முன்னால் இன்னொருவன் அவள் கழுத்தில் தாலி கட்ட அவளோ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சிரித்த முகத்தோடு தாலியை வாங்கி கொண்டாள்.

அவள் என்னை விட்டு போனது கூட எனக்கு வருத்தம் இல்ல. என்னை தனியே சந்தித்து சொன்னால் பாருங்க ஒன்று..

ஐயோ அப்போவே இறந்து பூமிக்குள் போய் விட மாட்டோமா இருந்தது...

அவள் சொன்னது...!!

**************

படித்து கொண்டு அவள் அறைக்குள் யாரோ வரும் ஓசை கேட்க அந்த டைரியே மறுபடியும் ஒளி வைத்தவள்..

திரும்பி பார்த்தாள் அவளின் அம்மா சுந்தரி..

"என்னமா இந்த நேரத்தில் போய் தூங்க வேண்டியது. மாத்திரை வேற போட்டு இருக்கீங்க போங்க மா எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்.."

"இல்ல டா தங்கம் இந்த அம்மா மேல கோபமா இருக்கியா என தெரிஞ்சுக்கலாம் என்று தான்.."

"கோபமா? எனக்கு உங்க மேலையா? ஐயோ அம்மா இப்போ போயா காமெடி பண்ணிவிங்க. ஹ ஹ எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்திடும் போல இருக்கு. நான் எதுக்கு மா உங்க மேல கோபப்படானும்.."

"இல்ல டா அக்கா அடிக்கும் போது அம்மா சும்மா நின்று வேடிக்கை தானே பார்த்தேன் அதன் என் மேல கோபமா.."

"இருங்க இருங்க... என்னமா எங்க அக்கா மா அவ யாரோ மாதிரி சொல்றீங்க..? அப்பா அம்மாவுக்கு பிறகு கூட பிறந்த பிறப்பு தானே இன்னொரு அப்பா அம்மா. அப்படி பார்த்தால் உங்களை மாதிரி அவளும் எனக்கு இன்னொரு அம்மா தானே. நான் செய்த தப்புக்கு எவனோ ரோடில் போகிறவன் என்னை அடித்ததையே துடைத்து விட்டு வந்தவள் நானா எங்க அக்கா அடித்ததற்கு கோபமா இருக்க போறேன். நீங்க குறுக்கே வந்து இருந்தால் தான் கோபப்பட்டு இருப்பேன்."

கண்ணீர் கண்களோடு அவளின் கன்னத்தை தொட்டு பார்த்த சுந்தரி..

"ராஜா விட்டு கன்று குட்டி மாதிரி திரிந்த உனக்கா இந்த நிலைமை. ஏன் மா நாங்க சொல்ற மாதிரி அந்த யூடியூப் வேலையெல்லாம் வேண்டாமா?"

"அட என்னமா உனக்கே தெரியும் ல அந்த பேங்க் வேலையை விட இந்த யூடியூப் சேனல் வேலை தான் நான் என்ஜாய் பண்ணி செய்வது. அதை போய் விட சொல்றீங்க.."

"இல்லடா கண்ணா முன்னாடி எல்லாம் இந்த மாதிரி எவனோ உன்னை கை நீட்டி அடிக்கும் அளவுக்கு எதுவும் நடக்கலையே.."

"ஐயோ அம்மா இது எங்க தப்பு தான். இத்தனை நாள் காமெடி வீடியோஸ் செய்த நாங்க ஒரு தடவை பொதுநலம் கருதி இரவு பெண்கள் அதுவும் கண் பார்வையற்ற பெண் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து போனால் அவங்க சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன? என அறிய நாங்கள் செய்ய சிறு முயற்சி பேரும் பிரச்சினையில் முடிய இருந்தது. நல்லவேளை ஒருவர் வந்து என்னை காப்பாற்றினார் இல்ல எங்க ஆட்கள் வருவதற்குள் தொட கூடாத இடத்தில் என்னை தொட்டு அசிங்கப்படுத்தி இருப்பாங்க. இனிமேல் சத்தியமா இப்படிப்பட்ட ஒரு விஷப்பாரிச்சை உங்கள் அனுமதி இல்லாமல் செய்யவே மாட்டோம். இது உங்கள் மேல் சத்தியம்.."

"இப்போ கூட பார் செய்யவே மாட்டேன் சொல்லல என் அனுமதி இல்லாமல் செய்ய மாட்டேன் என்று தான் சொல்ற.."

அதற்கு லூசு மாதிரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு தூங்க சென்றாள்.

சுந்தரி அம்மா கூட தூங்க சென்றார்கள்.

அதே நேரத்தில் நம்ம இரு கதாநாயகர்கள் இருவேறு மனகஷ்டத்தால் தவித்தார்கள்.

அபிராம் தன் அப்பா அம்மாவின் உடையை தன் மேல் பொத்தி கொண்டு... அப்பா அம்மா திரும்பி வாங்க பிளீஸ் எனக்கு இந்த வீட்டில் தனியா இருக்கே பயமா இருக்கு. வீட்டுக்கு வெளியே நாய்கள் எல்லாம் போடுற சத்தம் எனக்கு ரொம்ப பயத்தை தருது. நிலா ஒளியில் மரத்தின் நிரல் கூட பேய் மாதிரி தெரியுது. பிளீஸ் பிளீஸ் திரும்பி வாங்க... என கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தான்.

சிவராம் தன் ஃபோனில் இருந்த மோகினியின் போட்டோவை பார்த்து... சாரி டா குட்டி இந்த அத்தானை மன்னித்து விடு. என் செல்லம் அந்த இருட்டு இடத்தில் பெரிய பிரச்சினையில் இருந்தது என தெரிந்த போதே என் உயிர் பாதி போச்சு. அதை நீயே வேண்டும் என்றே விலை கொடுத்து வாங்கினாய் தெரிய வந்த போது வந்த கோபத்தில் என்னை மீறி அடித்து விட்டேன். என் குழந்தை மா நீ உன்னை அடித்தது நினைத்து நினைத்தே இதயம் வெடித்து விடும் போல இருக்கு. கண்டிப்பா என் மேல் செம்ம கோபத்தில் இருப்பாய் தெரியும்... என கண்ணீர் கண்களால் அவள் போட்டோவை பார்த்து கொண்டு இருந்தான்.

நினைவு புத்தகம் இன்னும் திருப்பப்படும்..📖📖