அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

நடுவுல கொஞ்சம் காதல காணும் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஹரிணி மதுரவள்ளி தனது அடுத்த கதையுடன் வந்துவிட்டார். புத்தாண்டில் இருந்து கதைக்கான அத்தியாயங்கள் பதிவிடப்படும். புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....................
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#2
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..
அத்தியாயம் 1
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தாள் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ வாஹு ஊ வாஹு ஊ வாஹு வாஹு
என்ற பாட்டைப் போட்டு விட்டு அதனுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் வீர வெற்றிவேல்... அவன் பாடல் என்கிற பெயரில் கத்திய கத்தலில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த தீந்தமிழ் கடுப்புடன் எழுந்து வெளியே வர அவளைப் பார்த்த வெற்றி,
செங்காந்தல் இதழ் என்பதில் நான்
கண்டேன் நீ என் தமிழ்
மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான்
கேட்டேன் இசைத் தமிழ்
நீ கொஞ்சும் நாடகத் தமிழ்
நீ கொஞ்சும் மன்மதத் தமிழ்
நீ தமிழ் என் தமிழ்
T... A... M... I... L... தமிழ்....
என்று பாடலின் வரிகளை தனக்கு தக்க மாற்றிக் கொண்டு அவனின் தீந்தமிழ் முன் கையை ஆட்டிக் கொண்டே பாட அதில் மேலும் கடுப்பானவள் அருகில் இருந்த புக்கை எடுத்து அவன் கையிலே போட்டாள்..
“நீ எல்லாம் ஒரு குடும்பப் பொண்ணாடி கட்டுனப் புருஷன அடிக்குற? என்ன வளர்த்திருக்கார் உன் அப்பா?” என்று கேட்டு அவளை மேலும் மேலும் கடுப்பேத்த
“உன் அம்மா உன்னை வளர்த்ததை விட என்னை எங்கப்பா நல்லா தான் வளர்த்திருக்கார். ஹான் அப்புறம் என்ன சொன்ன கட்டுனப் புருஷனா? நீயா? நமக்கு நடந்ததுக்குப் பேரு கல்யாணமா? என் விருப்பம் இல்லாம நீயா என் கழுத்துல தாலியைக் கட்டுவ அதை ஏத்துகிட்டு உன்னோட நான் குடும்பம் நடத்தனுமா?” என்று கத்த
‘ஐயோ தெரியாம வாயக் கொடுத்துட்டியேடா வெற்றி... இனி ஒரு வாரம் இதையே சொல்லுவாளே. சமாளி சமாளி’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் அவள் புறம் திரும்ப அவனை முறைத்துக் கொண்டே வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கூறியவள் குளியல் அறைக்குச் சென்றாள்...
‘ச்சீ பொண்ணா இவ? பசங்கள விடக் கெட்ட வார்த்தை சரளமா பேசுறா? மாமாவ பொண்ணப் பெத்துக்க சொன்னா பொறுக்கியப் பெத்து விட்டு அதை என் தலையில வேற கட்டிட்டாரே’ என்று முனங்கிக் கொண்டே நியூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தான்...
தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு குக்கரில் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வைத்தவள் கல்லூரிக்கு தேவையானதை கவனிக்கச் சென்றாள்... சிறிது நேரத்தில் லெமன் சாதமும் உருளைக் கிழங்கு வறுவலும் செய்து அதை பாக்சில் வைத்துவிட்டு குளித்து கல்லூரிக்குத் தயார் ஆனாள்...
சமையல் அறையில் இருந்து வந்த வாசனை வெற்றியின் மூக்கைத் துளைத்தெடுக்க ‘படுபாவி வேணும்னே என்னை உசுப்பேத்த எனக்குப் பிடிச்சத செஞ்சிட்டு என் கண்ணுல கூட காட்டாம அவளே சாப்பிடுவாளே. பேசாம அவ குளிச்சிட்டு வரதுக்குள்ள நமக்கு கொஞ்சம் எடுத்து வெச்சிக்குவோமா?’ என்று யோசித்தவன் அவள் அறையை எட்டிப் பார்த்து தமிழ் குளியல் அறையில் இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அடுக்களைக்குள் சென்றுப் பார்க்க ஒரு பருக்கைக் கூட இல்லாமல் அனைத்தையும் அவள் டப்பாவில் அடைத்து வைத்திருந்தாள்.
‘அடி சோத்து மூட்டை எல்லா சாப்பாட்டையும் எடுத்து வெச்சிக்கிட்டியே கொஞ்சம் எனக்கு வெச்சா என்ன?’ திட்டிக் கொண்டே அதில் இருந்த கொஞ்சம் உணவை அவன் எடுத்து தனது பாக்சில் வைத்து விட்டு திரும்ப, அங்கே கையைக் கட்டிக் அவனை முறைத்த வண்ணம் நின்றுக் கொண்டிருந்தாள் தீந்தமிழ்...
“நீயெல்லாம் டாக்டர்னு வெளியே சொல்லிராதே... திருட்டுப்பயலே. சொந்த வீட்டுலையே திருடுற வெட்கமா இல்ல?”
“நீயா கொடுத்தா நான் ஏன் திருட போறேன்?” என்று அவனும் பதில் கூற
“உனக்கு வேணும்னா நீ தான் செஞ்சிக்கணும்.. நான் எல்லாம் செஞ்சி கொடுக்க முடியாது.. காலைல பாட்டப் போட்டு ஆட்டம் போட முடியுது சமைக்க முடியாதோ? மரியாதையா திருடுன சாப்பாட்ட இருந்த இடத்தில வெச்சுடு.” அவள் கத்தலில்
அவளை மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டே எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்து விட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானான்.
அவன் சென்றதும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழுக்கு கஷ்டமாக இருந்தது..
‘பாவம் நாம ரொம்ப தான் அவன படுத்துறோமோ? பசிக்கு சாப்பாடு கூட போடாம இருக்கிறது எவ்வளவு பெரிய தப்பு.’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள் பின் ‘எல்லாம் இவனால தானே. இவனும் இவன் அண்ணாவும் தானே தளிர் இப்போ கஷ்டப்படக் காரணம். அது மட்டுமா என் அப்பாவோட என்னை பேசவிடாம செஞ்சிட்டான், அனுபவிக்கட்டும்.’ என்றவள் தோசையை ஊற்றி வெற்றிக்கு பிடித்தவகையில் காரச் சட்னி அரைத்து வேண்டும் என்றே ஹாலில் அமர்ந்து அவனைப் பார்க்க வைத்து உண்டு முடித்து தனது பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள்..
‘ராட்சசி ராட்சசி.. மிச்சம் இருக்குற சட்னிய தூக்கி குப்பைல கூட போடுவா எனக்குக் கொடுக்க மாட்டா. எல்லாம் உன் நேரம்டா வெற்றி.. அடுத்த தெருவுல அம்மா இருந்தும் அங்க போய் என்னை சாப்பிட விடாம செஞ்சிட்டாளே.. எல்லாம் உன்னால தான்டி தமிழு......’ என்று அவளை போலவே தன்னுடைய தவறைப் புறம் தள்ளிவிட்டு தமிழின் தவறைச் சொல்லிக் கொண்டே மருத்துவமனைக்குச் சென்றான்...
********************
காலையில் எழுந்ததும் வேகமாக கணவனுக்குப் பிடித்த வகையில் உணவை செய்துவிட்டு காபியைக் கலந்து கொண்டு அறைக்குச் சென்றாள் தீந்தளிர்.. அவளின் கணவன் வருணன் அறையில் இல்லை.. குளியல் அறையில் இருந்து சத்தம் வர கையில் இருந்த கப்பை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவன் கபோர்டில் இருந்து உடையை எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தாள்...
சிறிது நேரத்தில் இடுப்பில் துண்டுடன் வந்த வருணன் மனைவியை கண்டுக் கொள்ளாமல் அவள் எடுத்த உடைகளைத் தவிர்த்து விட்டு வேறு உடையை அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு அங்கே ஒருத்தி இருப்பதையேக் கண்டு கொள்ளாமல் கீழே சென்றான்..
வேகமாக அவன் பின்னால் ஓடி வந்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை.. டைனிங் டேபிளைத் தாண்டி அவன் சென்றுக் கொண்டே இருந்தான்.. இது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் தினமும் கணவனின் நிராகரிப்பு தளிரின் கண்களில் கண்ணீரை உற்பத்திச் செய்தது..
ஆறு மாதம் முன்புவரை இருவரும் ஒருவரின் அன்பில் மற்றவர் இன்பமாகவே வாழ்ந்தனர்..
அந்த நாட்கள் அவள் வாழ்கையில் மறக்கவே முடியாதவை.. அப்பொழுது எல்லாம் அவள் எடுத்துக் கொடுக்கும் உடையை அணிவதும் அவள் கொடுக்கும் உணவை அவளை சீண்டிக் கொண்டே உண்பதுமாய் இருப்பான்.. இப்பொழுது எல்லாம் அவள் செய்யும் உணவை அவன் தொடுவதே இல்லை..
‘நான் அப்படி என்ன செஞ்சேன்.. என்னை எப்படி மொத்தமா வெறுத்துட்டார்’ கண்ணீர் கண்களை மறைக்கப், போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னமா தளிர் காலேஜ்க்கு கிளம்பலையா? இன்னைக்கு கைடைப் பார்க்கனும்னு சொன்னியே?” பின்னால் இருந்து கேட்ட மாமனாரின் அழைப்பில் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பியவள்
“இதோ கிளம்பிட்டேன் மாமா.” என்றாள்
“குட்டி முழிச்சிடாளா?”
“இல்ல மாமா.. தூங்கிட்டு தான் இருக்கா.. எழுந்ததும் பொன்னி அக்காவ இட்லி கொடுக்க சொல்லிருக்கேன்.”
“ம் சரிமா.”
“நான் வரேன் மாமா..” அவரை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டே பதில் அளித்து விட்டு தனது பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
கல்லூரிக்கு சென்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவளின் கைடை(guide) சந்தித்து அவரிடம் அந்த வாரத்திற்கான ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு அவரிடம் வேறு சில தகவல்களை பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது மணி ஒன்றாகி இருந்தது... காலையில் உண்ணாதது அவளிற்கு தலைவலியை கொடுக்க கேன்டீன் சென்று ஜூஸ் ஆர்டர் செய்து குடித்துக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது அவள் கைப்பேசி அடிக்க எடுத்துப் பார்த்தவள் சலிப்புடனே
‘இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ? என் பிரச்சனையே என்னால சமாளிக்க முடியல. இதுல இவன் வேற.’ என்று புலம்பிக் கொண்டே அதை அட்டென்ட் செய்தாள்.. அவள் ஹலோ என்று சொல்லும் முன்பே வெற்றி அந்த புறம்
“தளிர் இன்னைக்கு உன் தங்கச்சி.” என்று ஆரம்பித்து காலையில் தமிழ் வெற்றியை புத்தகத்தை வைத்து அடித்ததில் இருந்து, அவனைப் பார்க்க வைத்து அவள் உண்ட காரச்சட்னி வரை அனைத்தையும் கூறியவன்
“என்னைப் பார்க்க வெச்சு பார்க்க வெச்சு அவ தின்னுறா... இதுக்கு எல்லாம் சேர்த்து பின்னாடி அல்சர் வந்து வயிற்று வலியில கஷ்டப்படுவா பாரு.” என்று வெற்றி கூற
“டேய் உனக்கு பேஷன்ட் வரலைன்னு என் தங்கச்சிக்கு வியாதி வரவெச்சு ட்ரீட்மென்ட்னு சொல்லி சம்பாதிக்க பார்க்குறியா?”
“ஆமா உன் தொங்கச்சி காசு கொடுத்துட்டாலும்.” அவன் அலுத்துக் கொள்ள
“சும்மா பேச்சுக்கு கூட அவளுக்கு அப்படி ஆகணும் இப்படி ஆகணும்னு சொல்லாதே வெற்றி. அவ பாவம்..” என்று அவள் ஏதோ கூற வர
“அவ பாவம் அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு.. சேட்டை செய்வாளே தவிர ரொம்ப நல்ல பொண்ணு. நீ செஞ்ச தப்புனால தான் அவ உன்ன இப்படி படுத்துறா. கொஞ்ச நாள் பொருத்து போ... ப்லா ப்லா தானே....” என்றான் வெற்றி
“இந்த வாய் தான் உனக்கு எதிரியே.. கொஞ்சம் அடக்கி வாசி.”
“வாசிச்சிடுவோம்...”
“சரி நான் காலேஜ்ல இருக்கேன்.. வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.. மனதில் தன் வாழ்க்கை தான் சரியாக இல்லை தங்கையாவது வெற்றியுடன் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்..
மதிய உணவை வீட்டிற்கு வந்தவுடன் முடித்துக் கொண்டு மகள் ஆருத்யாவுடன் அய்கியமாகினாள்.. மாலை தங்கை கல்லூரியில் இருந்து வரும் நேரத்தில் அவளைக் காண அங்கே செல்ல பூட்டிய வீடே அவளை வரவேற்றது.. தங்கையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டவள்
“ஹலோ தமிழ் எங்க இருக்க?” என்று வினவ,
“வெளியே இருக்கேன் தளிர். சொல்லு” என்றாள் தமிழ்..
“காலேஜ் இன்னும் முடியலையா?”
“இல்ல நான் ப்ராஜெக்ட் விஷயமா வெளிய வந்தேன்.”
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#3
“ஓ நான் உன்னை பார்க்கலாம்னு வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டி இருந்தது அதான் உனக்கு கால் பண்ணேன்.”
“நீ அங்க வந்திருக்கியா? முன்னமே சொல்லிருக்கலாம்ல. நான் வர கொஞ்சம் லேட் ஆகுமே தளிர்.” என்றாள் தயக்கத்துடன்
“சரி வீகென்ட் வந்து பார்க்குறேன். இப்போ அப்பாவ பார்த்துட்டு போறேன்.”
“ம் அவர பார்த்துட்டு வந்து எப்படி இருக்கார்ன்னு சொல்லு.”
“பக்கத்து தெருவுல இருக்கவர பார்க்க உன்னால போக முடியாதா? நான் பார்த்துட்டு வந்து சொல்லனுமா?”
“அவர் தானே என்னை தனியா அனுப்பினார். சோ நான் போக மாட்டேன் பேச மாட்டேன். அவரா வந்து பார்க்கட்டும் பேசட்டும்.” வீம்பாக கூற
“என்னமோ பண்ணு.” என்றுவிட்டு தந்தை தொல்காப்பியரை காணச் சென்றாள்
“வாடா தளிர்.. எப்படி இருக்க? மாப்பிள்ளை, பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க..”
“எல்லாரும் நல்ல இருக்கோம் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை எங்க?”
“நான் நல்லா இருக்கேன்டா தளிர்.. அத்தை கடைக்கு போய்ருக்கா. இரு உனக்கு காபி போட்டுட்டு வரேன்.”
இருவரும் காபியை குடித்துக் கொண்டே பேசினர்.
“ஆருவ கூடிட்டு வந்திருக்கலாம்ல தளிர்.” என்று தொல்காப்பியர் கூற
“இல்லப்பா.. தமிழ பார்க்கலாம்ன்னு வந்தேன். அவ இன்னும் வரலை. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்ன்னு இங்க வந்துட்டேன். இன்னொரு நாள் உங்க பேத்திய தூக்கிட்டு வரேன்.” என்றவள் இருவரின் கப்புகளையும் கழுவிவிட்டு தந்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்
“நீங்க தமிழ் கிட்ட பேசுனீங்களா? நீங்க ரெண்டு பேரும் அவங்களோட போய் இருந்தா தான் என்ன?” என
“நாங்க இருந்தா அவ வெற்றிய கண்டுக்கவே மாட்டா தளிர்.. கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும் அவளும் அவன புரிஞ்சிப்பா.”
“இதையே தான்பா நாலு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கோம்.. பெருசா எந்த மாற்றமும் வந்த மாதிரி தெரியல.. காலேஜூக்கும் போயிட்டு வீட்டையும் அவ பார்த்துக்கணும் இதுக்கு இடைல அவ எப்படி படிப்பா? அதை பார்க்க மாற்றீங்க? அவங்க ரெண்டு பேருக்கும் இது கல்யாணம் பண்ற வயசா? படிக்க வேண்டிய வயசுல தான் படிக்க முடியும். இப்போ அவ கவனம் படிப்புல தான் இருக்கணும்.. final இயர் வேற.” என்று கூற
“புரியுதுமா.. இருந்தாலும் ஒன்றரை வருஷமா ரெண்டு பேரும் தனியா இருந்துட்டாங்க.. கொஞ்ச நாள் போகட்டுமே. அத்தையும் இதை தான் சொல்லுறாள்.”
“சரி அப்பப்ப அவள போய் பார்த்தாதான் என்ன? நீங்க பேசாம அவ உங்களோட பேச மாட்டாளாம்.” தங்கை கூறியதை தளிர் கூறினாள்
“எனக்கு மட்டும் தமிழைப் பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன? பக்கத்துலையே பொண்ண வெச்சிகிட்டு முகத்த கூட பார்க்க முடியலைன்னு வருத்தமா தான் இருக்கு. இப்போ நான் போய் பார்த்தா, அவ எங்களோட வரேன்னு சொன்னா என்னால மறுக்க முடியாதுமா. அதான் போகல.”
“போங்கப்பா நீங்க ஒரு லூசு, அவ ஒரு லூசு. வெற்றி தான் பாவம் அவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறான். தினமும் புலம்புறான்.”
“அவன் தானே அவசரப்பட்டு இப்படி பண்ணான். அனுபவிக்கட்டும்.”
“ம்க்கும் உங்க சின்ன பொண்ணு மாதிரியே பேசுங்க. சரி நான் கிளம்புறேன். ஆரு இந்நேரம் எழுந்திருப்பா.” என்றவள் தந்தையிடம் விடைப் பெற்று வெளியே வர அங்கே அவளின் அத்தை ராதிகா உள்ளே நுழைந்தார்.
“என்னடா தளிர். எப்போ வந்த அதுக்குள்ள கிளம்பிட்ட? உள்ள வா.” என்று கூறினார்.
“நான் அப்பவே வந்துட்டேன் அத்தை. இவ்வளவு நேரமாவா கடைல இருந்தீங்க.”
“வரவழியில காமாட்சிய பார்த்தேன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டேன். அதான் லேட் ஆகிடுச்சு. நீ வா.”
“இல்லத்தை. பாப்பா முழிச்சிருப்பா சனிக்கிழமை வரேன்.”
“சாப்ட்டுட்டு போடி.”
“அப்பா காபி கொடுத்துட்டார் அத்தை. சனிக்கிழமை வரும் போது சாப்டுறேன்.” என்றவள் வேகமாக வீட்டிற்கு சென்றாள். அவள் எதிர்பார்த்ததை போலவே அவளது கணவன் வீட்டில் இவள் மேல் கோபமாக இருந்தான்.
குழந்தை எழுந்து அழுது கொண்டிருக்க அவன் சமாதானம் படித்துக் கொண்டிருந்தான். இவள் உள்ளே நுழைந்ததும்
“நல்லா ஊர் சுத்து. பச்ச பிள்ளைய வீட்டில விட்டுட்டு போயிருக்கோம்னு அறிவு இருக்கா உனக்கு? குழந்தை இங்க அழுதுட்டு இருக்கு நீ ஹாயா உங்க அப்பா வீட்டுக்கு போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்திருக்க இல்ல.” என்று கத்தினான்.
“வருண் சும்மா இரு. அதான் மருமக வந்துட்டால. ஆருவ அவகிட்ட கொடு.” என்று மகனிடம் கூறிய வருணின் தந்தை தளிரிடம் திரும்பி
“நீ குட்டிய பாருமா. இவனுக்கு வேற வேலை இல்ல. சும்மா கத்திட்டே இருப்பான்.” என
“ஆமா நான் கத்தீட்டே இருக்கேன். இப்படி என்ன கத்த வைக்கிறது உங்க மருமக தானே. அதெல்லாம் உங்களுக்கு தெரியாது. என்னை மட்டும் குத்தம் சொல்ல வந்துடுவார்.” என்று மேலும் கத்திவிட்டு அறைக்கு சென்றான்.
அதுவரையிலும் குழந்தை அழுது கொண்டே இருக்க தளிரின் கண்களும் லேசாக கலங்கி இருந்தது.
“தளிர் ஆருவ பாருமா. அவளைச் சமாதனப்படுத்து.” என்ற மாமனாரின் சொல்லுக்கு
“ம்” என்றவள் குழந்தையை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றவள் பசியாற்றிவிட்டு மடியிலே வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை பசி ஆறும் வரை பொறுத்துக் கொண்டிருந்த வருண் வேகமாக அவள் அருகில் வந்து ஆருத்யாவை தூக்கிக் கொண்டான். அவன் வேகமாக இழுத்ததில் ஆருவின் கொலுசு தளிரின் புடவையில் சிக்கிக் கொள்ள அதை தளிர் எடுப்பதற்கு முன் வெடுக்கென்று எடுத்துவிட்டு அவளைக் கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
தந்தையும் மகளும் விளையாடுவதை பார்த்த தீந்தளிருக்கு தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போல் இருந்தது. எங்கே கணவன் அவளை அவன் அருகில் அனுமதித்தால் தானே. அவள் அருகில் வரவேண்டும் என்பதற்காக அவன் சொல்வதை அவளால் செய்யவும் முடியவில்லை.
“அவருக்காக தானே வேலைய விட்டேன். இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது.” என்று மனதினுள் நினைத்தவள் உடையை மாற்றிவிட்டு இரவு உணவை தாயரிக்க சென்றாள்
******************************
லன்டனில்....
“ஜெனிமா சீக்கிரம் வாமா.” என்று கதிர் கத்த
“ஜெனிமா..” மழலை மாறாத குரலில் அவ்வீட்டின் குட்டி தேவதையும் சேர்ந்து கத்தினாள்
“ஜெனி”
“ஐயோ வரேன்... ஏன் இப்படி அப்பாவும் பொண்ணும் என் பேர ஏலம் போடுறீங்க..” என்றவாறே கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஜெனி.
“ஏலத்துலயா உன்னையா? ஓசில கொடுத்தா கூட ஒரு பய வாங்க மாட்டான்..” என்று கதிர் மனைவியை வார அவனின் முதுகில் செல்லமாக அடித்தவள்
“நேரமாச்சு சர்ச்க்கு போகனும் வாங்க.” என்றாள்
“நீ மேக் அப் செய்ய ரெண்டு மணி நேரம் எடுத்துக்கிட்டு இப்போ நேரமாச்சுன்னு சொல்லுறியா?” என்று கூறி மீண்டும் மனைவியிடத்தில் அடிகளை வாங்கிக் கொண்டு சர்ச்க்கு சென்றவர்கள் இரவு உணவையும் வெளியேவே முடித்துக் கொண்டு வரும் பொழுது அவர்களின் மகள் தூங்கியிருந்தாள்..
மகளிற்கு உடையை மாற்றிவிட்டு தானும் உடையை மாற்றி வந்த ஜெனி கணவனின் வாடிய முகத்தைப் பார்த்து அவன் அருகில் சென்றாள்.
“என்னாச்சு கதிர்?” என
“ஒன்னுமில்லடா.. கொஞ்சம் டயர்ட்.” என்றான் முயன்று வரவழைத்த சிரிப்போடு
“பொய் சொல்லாதே. அத்தைக்கு போன் செஞ்சிருப்ப அவங்க பேசிருக்க மாட்டாங்க.. அதானே.” எனவும் அவன் பதில் கூறாமல் இருந்தான்
“எல்லாம் என்னால தானே. நான் உன்னைப் பார்க்காம இருந்திருந்தா நீ உன் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பல?” என்றவளின் கண்கள் கலங்க
“ஜெனி.” என்றவன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு
“எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும். நான் இப்போ சந்தோசமா இல்லைன்னு யாரு சொன்னா.. நீ என்னோட இருக்குறது தான் எனக்கு சந்தோஷம். நீ இனிமே சும்மா சும்மா உன்னால தான்னு வருத்தப் படக் கூடாது.”
“ம்..”
“வா தூங்கலாம்..” மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன் அவளை அணைத்தவாறு கண்களை மூடினான்.. கணவனின் அன்பில் வழக்கம் போல் நெகிழ்ந்தவள் கணவனின் குடும்பத்துடன் சேரும் நாளிற்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்...
Happy new year fnds.. here is the 1st epi.. please drop your valuable comments fnds.. Thank you sudha aunty..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#4
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..
அத்தியாயம் 2
காலைப் பொழுது அழகாக புலர்ந்தது... அலாரத்தின் சத்தத்தில் தூக்கம் கலைந்த தீந்தளிர் அதை அணைத்துவிட்டு காலைக் கடன்களை முடித்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.. அங்கே அவளின் தந்தை தொல்காப்பியர் காபி கலந்துக் கொண்டு இருந்தார்...
“என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்டீங்களா?”
“ஆமாமா இன்னைக்கு எக்ஸாம் இருக்குல்ல.. அதான் சீக்கிரம் ஸ்கூல் போகணும்..” என்றவர் மகளின் கையில் ஒரு காபி கைப்பை கொடுத்தார்..
“ஐயோ ஆமா.. நேத்தே சொன்னீங்க நான் தான் மறந்துட்டேன்.. சீக்கிரம் சமையல் செஞ்சிடுறேன்ப்பா..”
“இருக்கட்டும்டா நானே செஞ்சிடுறேன். என்னமா டிபன் செய்ய? அத்தை நாளைக்கு வந்துருவா.. இன்னைக்கு ஒரு நாள் அப்பா சமையலை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ....”
“இட்லி மாவு இருக்குப்பா..நான் செஞ்சிக்குறேன்...” காபியை குடித்துக் கொண்டே கூறினாள்.
“சரி மதிய சமையலுக்கு காய் நறுக்கி வெச்சிடுறேன்...”
“தமிழ் நேத்தே மெனு சொல்லிட்டா.... டொமேடோ ரைஸ், உருளைக்கிழங்கு வருவல்ன்னு....”
“இன்னும் மேடம் எழுந்துக்கலையா?” என்றார் சிரிப்புடன்.
“இல்லப்பா நைட் ரொம்ப நேரம் படிச்சிட்டு இருந்தா... அதான் நானும் எழுப்பல....”
“சரிமா உருளைக்கிழங்கு வறுவல் நான் செஞ்சிடுறேன்... அம்முக்கு நான் செஞ்சா தான் பிடிக்கும்....”
“நீங்களே செய்ங்க.. முதல காபிய குடிங்க...” என்று அவர் கையில் குடிக்காமல் வைத்திருந்த கோப்பையை காட்டி தளிர் கூற அவரும் சிரித்துக் கொண்டே குடித்தார்..
இது அவர்கள் வீட்டில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு... தமிழின் தாயார் இறந்த பிறகு தொல்காப்பியரே எல்லா வேலைகளையும் செய்வார்.. தளிரும் பெரியவள் ஆனதும் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்... அக்காவை பின்பற்றி தமிழும் தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்..
தீந்தளிர்... தொல்காப்பியர் சுந்தரியின் மூத்த மகள்... தந்தை தான் அவளது ரோல் மாடல்.. தந்தை தொல்காப்பியர் கணித ஆசிரியர்... அவரை பின் பற்றி இவளும், M.E முடித்துவிட்டு பிரபல கல்லூரி ஒன்றில் லெக்சரர் ஆக பணி புரிகிறாள்.... phd முடிக்க வேண்டும் என்பது இவளது நீண்ட நாள் கனவு.. வேலைப் பார்த்துக் கொண்டே phd யும் படித்துக் கொண்டிருக்கிறாள்...
தீந்தமிழ்... தொல்காப்பியரின் இரண்டாவது மகள்... journalism இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.. தமிழ் பிறந்து இரண்டு வருடத்திலேயே அவர்களின் தாய் சுந்தரி உடல்நலக்குறைவால் இறந்து போனார்... அப்பொழுது தளிர்க்கு வயது ஆறு... அப்பொழுதே அவள் தமிழை தன் மகளாக எண்ண ஆரம்பித்து விட்டாள்.. தொல்காப்பியரும் மற்றொரு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்..
தமிழைத் தொல்காப்பியரின் தங்கை தான் வளர்ப்பதாகக் கேட்ட போது கூட தளிர் தன் தங்கையை அவரிடம் கொடுக்க மறுத்து விட்டாள்... பின் அவரும் தன் கணவரிடம் பேசி அண்ணன் இருக்கும் ஊருக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு, தொல்காப்பியரின் வீட்டின் அருகே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து தளிர் தமிழ் இருவரையும் பார்த்துக் கொண்டார்...
சமையல் வேலையை தந்தை மகள் இருவரும் முடித்து காலை உணவை உண்டப் பின்பும் தமிழ் எழுந்து வரவில்லை..
“சரிமா நான் கிளம்புறேன்.. தமிழ் எழுந்ததும் அவள சாப்பிட வெச்சிடு.. லேட் ஆகிடுச்சுன்னு சாப்டாம ஓடிட போறா.” சின்ன மகளை பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினால் தொல்காப்பியர் இவ்வாறு கூறினார்..
“ம் சரிப்பா..”
தந்தை சென்ற சிறிது நேரத்தில் தனது கல்லூரிக்கு தேவையானவற்றை எடுத்துவைத்துவிட்டு குளித்து முடித்து தங்கையை எழுப்பினாள் தளிர்..
“அம்மு எழுந்திரு.. லேட் ஆகிடுச்சு..”
“ம்..” என்று முனங்கியவள் தூக்கத்தை தொடர
“மணி எட்டாக போகுது.. ஒன்பது மணி காலேஜ்க்கு இன்னும் தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்.. எழுந்திரு..” என்று கத்தவும் வேகமாக எழுந்த தமிழ்
“எட்டு மணி வரைக்கும் என்னை எழுப்பாம என்ன செஞ்சிட்டு இருந்த.. இன்னைக்கு எனக்கு டிபேட் இருக்கு.. உன்னால தான் லேட்” என்று அக்காவை திட்டிக் கொண்டே வேகமாக குளியல் அறைக்குச் சென்றாள்..
“ஆமாடி.. ஐயோ பாவமேன்னு எழுப்புனேன் பாரு என்ன சொல்லணும்.. அலாரம் வெச்சுட்டு தூங்க வேண்டியது தானே..” என்று தளிரும் கத்திக் கொண்டே இருவருக்கும் தேவையானவற்றை எடுத்து வைத்தாள்..
பத்து நிமிடத்தில் குளித்து தலையை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே
“தளிர் காபி தாயேன் ப்ளீஸ்” என்று கத்தினாள் தமிழ்.
“பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு காபி குடி.”
“மதியம் பார்த்துக்கலாம். இப்போ காபி போதும்.” என்று மீண்டும் அவள் கத்த சமையல் அறையில் இருந்து கையில் தட்டுடன் வந்த தளிர் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு ஊட்ட ஆரம்பித்தாள்..
“ஹா வலிக்குதுடி..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே அக்காவை தமிழ் முறைக்க
“உனக்கு பலமுறை சொல்லிட்டேன்.. சும்மா சும்மா ட்ரையர் போடாதே முடி கொட்டும்ன்னு சொன்னா கேக்கவே மாட்டியா?”
“மணி ஆகிடுச்சி.. தலைக் காயலைன்னு ப்ரீ ஹேர்ல போனாத் திட்டுவன்னு தான் டிரையர் போடுறேன்.”
“அதுக்கு சீக்கிரம் எழுந்திருக்கணும்..” என்று திட்டிக் கொண்டே காலை உணவை ஊட்டி முடித்திருந்தாள்.
“அப்பா சாப்டாங்களா தளிர்?”
“அப்பா இந்நேரம் ஸ்கூலுக்கே போகிருப்பார்..”
“என்னது.. என்கிட்டே சொல்லாம கிளம்பிட்டாங்களா?”
“half yearly எக்ஸாம் இன்னைக்கு ஸ்டார்ட் ஆகுதுல.”
“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டே தமிழ் தந்தைக்கு அழைக்க அவரின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது...
“தளிர் அப்பா போன் ஆப் செஞ்சு வெச்சிருக்காங்க..”
“லூசு.. அப்பா தினமும் செய்றது தானே.”
“இன்னைக்கு டிபேட் இருக்கு.. அப்பா ஆல் தி பெஸ்ட் சொல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்கும்..” என்றாள் சோகமாக
“ஆமா நீயா? நானால? பேச போற.. ஓவரா சீன் போடாம கிளம்பு..”
“இன்னைக்கு மட்டும் நான் ஒழுங்கா பேசல அதுக்கு காரணம் நீயும் அப்பாவும் தான்..”
“உன்கிட்ட பேசி ஒருத்தரால ஜெயிக்க முடியுமா?” தளிர் புகழ்வது போல் தங்கையை நக்கல் செய்ய..
“வஞ்சப்புகழ்ச்சி.. வந்து வெச்சுக்குறேன் உன்னை..” என்றவள் தளிரின் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டாள்..
“ஆல் தி பெஸ்ட்.. நல்லா பேசிட்டு வாங்க பேச்சாளரே..” என்று தங்கையை வாழ்த்தி அனுப்பிவிட்டு தனது கல்லூரிக்கு சென்றாள் தீந்தளிர்..
மாலை தொல்காப்பியர் சீக்கிரமே வீடு திரும்பியிருக்க மகள்கள் வருவதற்குள் மாலை டிபனை செய்து கொண்டிருந்தார்.. ஐந்தரை மணிக்கு வந்த தீந்தளிர் தந்தையுடன் அமர்ந்து டீயை குடித்து கொண்டிருந்தாள்..
“என்னமா இன்னும் அம்மு வரலை.. நமக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடுவா? என்னாச்சு?”
“இன்னைக்கு அவளுக்கு டிபேட் இருக்குன்னு சொன்னாப்பா. அதுனால லேட் ஆகுமா இருக்கும்.. வந்துடுவா.. அவ தான் ஊரையே வித்துட்டு வந்துடுவாளே..”
“அது என்னமோ உண்மை தான்மா. நீ வர லேட் ஆனா தான் நான் பயப்படனும். உன் தங்கச்சியைப் பார்த்து ஊரே பயப்படும்..” என்று தொல்காப்பியர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோபமாக உள்ளே நுழைந்த தீந்தமிழ் தந்தையை முறைத்துவிட்டு தனது அறைக்குச் சென்று பேக்கை விட்டெறிந்தாள்.. அவள் எரிந்ததில் பையின் உள்ளே இருந்த பாக்ஸ் வெளியே தெறித்தது..
“ஏன் இவ்வளவு கோபம்.. நான் சொன்னது கேட்டுட்டு தான் இப்படி தூக்கிப் போடுறாளா?” தொல்காப்பியர் பெரிய மகளிடம் மெதுவாக கேட்டார்.
“இல்லப்பா.. காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளமா இருக்கும்..” என்றவள் கீழே கிடந்த பாக்சை எடுத்துவிட்டு நிமிற உள்ளிருந்து வேறு எதுவோ கீழே விழும் சப்தம் கேட்டது..
“தளிர் நீ என்னனு போய்ப் பாரு.. ரூம்ல இருக்க ஒவ்வொரு பொருளாத் தூக்கிப் போடுறா..”
“ஏன் என் மேல எதையாவது தூக்கிப் போடவா.. போங்கப்பா..” என்று தளிர் கூற
“என்னைப் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? பைத்தியம் மாதிரியா?” என்று கத்திக் கொண்டே அக்காவை அடிக்க வந்தாள் தீந்தமிழ்..
“ஹே லூசு என்னாச்சு? ஏன் இப்படி கத்துற?” தளிர் தங்கையை அதட்ட
“நான் லூசா?அவனும் என்னை பைத்தியம் சொன்னான்.. வீட்டுக்கு வந்தா நீங்களும் அதையே சொல்லுறீங்க..” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்த
“யாரு என்ன சொன்னா? நீ முதல்ல உட்காரு..” என்று அவளை சோபாவில் அமர வைக்க தொல்காப்பியர் மகளிற்கு தண்ணி எடுத்து வந்து கொடுத்தார்..
“அவன் தான்..”
“அவன் தான் அவன் தான்னா? யாரு? ஒழுங்கா சொல்லு தமிழ்..” தளிர் தங்கையை அதட்ட
“நீ கூட அவனால என்னை திட்டுற..” என்ற தமிழின் கண்களில் கண்ணீர் வந்தது
“அம்மு என்னடா எதுக்கு அழற.. அக்கா எங்க உன்னை திட்டுனா? நீ ஒழுங்கா பதில் சொல்லலைன்னு தானே கேக்குறா..” தொல்காப்பியர் மகளின் தலையை வருடிக் கொண்டே கூற
“போங்க உங்களுக்கு அவ தான் செல்லம்.. நான் இல்ல..” என்று தந்தையின் கையை தட்டிவிட்டவள் தளிரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..
இளைய மகளின் செய்கையில் தந்தைக்கு சிரிப்பே வந்தது.. தளிருக்கு ஆதரவாக இவர் கூறினார் என்று தந்தையை திட்டியவள், தளிரின் தோளிலே சாய்ந்துக் கொண்டு ஆறுதல் தேட மகள்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசம் அவருக்கு சந்தோஷமாக இருந்தது.. அவர் சிரிப்பதை பார்த்த தளிர் உதட்டசைவில் ‘சிரிக்காதிங்க பார்த்தா இன்னும் கத்தப் போறா..’ என்று கூற அதற்குள் அதைப் பார்த்த தமிழ்
“எதுக்கு சிரிக்கிறீங்க... எல்லாம் உங்களால தான். காலைல எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லாம வேலைக்கு போய்ட்டிங்க.. கால் பண்ணாலும் எடுக்கல.. அதுனால தான் இன்னைக்கு அவன் எல்லாம் என்னைப் பேசுற மாதிரி ஆகிடுச்சி.. இதுக்காக உங்கள நான் மன்னிக்கவே மாட்டேன்.”
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#5
“அம்மு.. நான் என்ன பண்ணேன்... நீ காலைல எழுந்துக்காம இருந்துட்டு..” என்று அவர் ஏதோ கூறவர
“அப்போ நான் தூங்கு மூஞ்சியா? அப்படி தானே சொல்லவரீங்க?”
“அடடா கொஞ்சம் சும்மா இருங்க ரெண்டு பேரும்.. நீ போய் ட்ரெஸ் சேன்ஜ் செய்துட்டு வா...” தளிர் தங்கையை உள்ளே அனுப்ப முயல
“முடியாது.. அவன் என்னை எப்படி எல்லாம் பேசுனான் தெரியுமா?”
“சொன்னா தானே தெரியும். முதல்ல அந்த அவன் யாரு.. எப்பவும் திட்டுவியே உன் சீனியர் அவனா?”
“அவன் தான்.. அவனே தான்.. இன்னைக்கும் டிபேட்ல ரொம்ப பேசிட்டான்.. நான் என்ன சொன்னாலும் அப்போஸ் பண்ணணும்னே பேசுனான் தெரியுமா.. அதுல வேலிட் பாய்ண்ட் கூட இல்ல.. இரிடேடிங் இடியட்.. அவன பார்த்தாலே எரிச்சலா வருது.. கல்லக் கொண்டு மண்டைய உடைக்கணும்..”
“சரி விடு.. இந்த இயரோட நீயும் காலேஜ் விட்டு போகிடுவ.. அவனும் போயிருவான்.. கொஞ்ச நாள் தானே அட்ஜஸ்ட் செய்துக்கோடா..” தளிர் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினாள்.
“அதெல்லாம் கூட பரவாயில்லை தளிர்.. நான் பஸ்க்காக நின்னுட்டு இருக்கேன்.. என்னைப் பார்த்துட்டே சொல்றான் சரியான பைத்தியம்னு.. எவ்வளவு திமிர் இருக்கணும் அவனுக்கு.. நான் அங்கேயே அவன அடிச்சிருப்பேன்.. பூரணி இழுத்துட்டு வந்துட்டா..”
“அம்மு.. விட்டா அப்பாவ ப்ரின்சி கிட்ட நிக்க வெச்சிடுவ போல.. உன் கோபத்தை கண்ட்ரோல் பண்ணு.. அவன் உன்னை தான் சொன்னான்னு நீயா நினைச்சுக்காதே.. மே பீ அவன் வேற யாரையாவது சொல்லிட்டு இருக்கப்ப உன்னை திரும்பி பார்த்திருக்கலாம்..”
“அவனுக்கு எதுக்கு சப்போர்ட் பண்ற?”
“ராமா.. ஆரம்பிக்காதே.. போ பிரெஷ் ஆகு..” என்று தங்கையை விரட்டியவள் இரவு உணவை தந்தையுடன் செய்துக் கொண்டிருந்தாள்.. சிறிது நேரத்தில் வந்த தமிழும் அவர்களுக்கு உதவி செய்ய பேச்சும் சிரிப்புமாக பொழுது போக மாலையில் இருந்த கோபம் முற்றிலும் மறைந்திருந்தது தமிழுக்கு..
“ராதுமா எங்க இருக்காங்கப்பா? போன் பண்ணவே இல்ல..” தமிழ் தந்தையிடம் கேட்க
“காலைல பிளைட்ல சென்னை வந்துட்டா.. சென்னைல அவங்க நாத்தனார் இருக்காங்கள.. ரொம்ப நாள் ஆச்சு பார்த்துன்னு, அப்படியே பார்த்துட்டு நைட் பாண்டியன்ல வரா.. நாளைக்கு உனக்கு லீவ் தானே?”
“ம் ஆமாப்பா.. நீங்க ரெண்டு பேரும் இல்லாம போர் அடிக்கும்.” என்றாள் வருத்தமாக.
“அதான் உன் ராதுமா வராங்களே.. அப்புறம் என்ன?” என்று தளிர் கேட்க
“நான் அவங்களோட பேசவே மாட்டேன்.. பையனப் பார்க்கப் போனதும் என்னை மறந்துட்டாங்க.. என்கிட்ட பேசவே இல்லை.. நாளைக்கு முழுக்க அவங்களோட நான் பேச மாட்டேன்..”
“அத்தை வந்து உனக்கு பிடிச்ச சாப்பாட செஞ்சா போதும்.. ராதுமான்னு அவங்கள கட்டிப்ப..” உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ற ரீதியில் தளிர் பேச
“இந்தத் தடவை அவங்க எனக்கு எவ்வளவு ஐஸ் வெச்சாலும் நான் பேசவே மாட்டேன்..”
“நாளைக்கு நாங்க பார்க்க தானே போறோம்..” என்று தொல்காப்பியரும் தளிரும் ஒரு சேரக் கூற
“பாருங்கப் பாருங்க..” என்றவள் உணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றாள்..
மறுநாள் தந்தையும் அக்காவும் பள்ளிக் கல்லூரிக்கு கிளம்பியவர்கள், இவளை எழுப்பி கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்ல
“ராதுமா இன்னும் வரலையா?” என்றாள் தூக்கக் கலக்கத்திலும்.
“ட்ரைன் லேட்.. இப்போ தான் கொடை ரோடு வந்திருக்காங்க.. நம்ம வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆகும்..” தளிர் பதில் கூறினாள்
“சரி..” என்றவள் கண்ணை மூடினாள்.
“அம்மு எழுந்திரு.. டோர் லாக் செஞ்சுக்கோ. ப்ரேக்பாஸ்ட் ஹாட் பாக்ஸ்ல இருக்கு.. மதியத்துக்கு சாதம் வெச்சுக்கோ.. அத்தை இன்னைக்கு தான் வராங்க.. அவங்கள வேலை செய்ய விடாதே.. ரெஸ்ட் எடுக்கட்டும்..”
“ஓகே” என்றவள் அவர்கள் சென்றப்பின் தூக்கம் கலைந்து விட காலைக் கடன்களை முடித்துவிட்டு காபிக் கோப்பையோடு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.. எவ்வளவு நேரம் சென்றதோ காலிங் பெல்லின் ஓசையில் அங்கிருந்து எழுந்த தமிழ்
“ராதுமாவா தான் இருக்கும்.. வந்துட்டாங்க போல..” என்று உற்சாகமாக கதவைத் திறக்க அங்கே அவளைப் போலவே உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தார் ராதிகா.. அவர் உள்ளே வந்ததும் அவரை கட்டிக் கொண்ட தமிழ்
“ராதுமா.. எப்படி இருக்கீங்க?” என
“நான் நல்லா இருக்கேன்டா அம்மு.. நீ எப்படி இருக்க?” என்று கேட்க சட்டேன்று அவரிடம் இருந்து விலகியவள்
“உங்க பையனப் பார்க்கப் போனதும் என்னை மறந்துட்டீங்க தானே. இப்போ எதுக்கு கட்டிப் பிடிச்சு நல்லா இருக்கியான்னு கேக்குறீங்க.. போங்க போய் உங்க அருந்தவப் புதல்வனையே கொஞ்சுங்க..” என்று முறுக்கிக் கொண்டாள்.
“அடடா..” என்றவர் தமிழை செல்லமாக கையில் அடித்துவிட்டு உள்ளே சென்றார்..
“ராதுமா நான் நிஜமா உங்க மேல கோபமா தான் இருக்கேன்..” அவர் பின்னோடு சென்று கூறினாள்.
“அப்படியா சரி அம்மு.. இருந்துக்கோ..”
“இந்த வீட்ல என்னை யாரும் மதிக்கவே மாற்றீங்க..” என்று கோபித்துக் கொண்டாள்.
இது எப்பொதும் நடக்கும் நிகழ்வு தான்.. ராதிகா தனது மகனைப் பார்க்க ஊருக்குச் சென்றுவிட்டு வரும் போது எல்லாம் தீந்தமிழ் இவ்வாறு தான் கோபமாக இருப்பதாக கூறி காமெடி செய்வாள்.. அதனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குளிக்கச் சென்றார்.
அவர் சென்ற சிறுது நேரத்தில் அவரின் போன் அடிக்க அதில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் எடுக்காமல் இருந்தாள்.. மீண்டும் அழைப்பு வரவே குளியல் அறையில் இருந்து ராதிகா
“அம்மு போன் அடிக்குது பாரு.. எடுத்து பேசு..” என்று கூற அப்பொழுதும் அவள் அதை எடுக்கவில்லை.. மூன்றாவது முறை அடிக்க எரிச்சலாக அதை எடுத்தவள்
“ராதுமா குளிக்குறாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடுங்க..” எதிர்முனையில் இருப்பவரை ஹலோ கூட சொல்லவிடாது இவளே பேசிவிட்டு வைத்துவிட்டாள். குளித்துவிட்டு வந்த ராதிகா
“அம்மு யார்டா பேசுனது?” என்று கேட்க, அவரை முறைத்துவிட்டு போனாள்.
‘யார்னு கேட்டா முறைக்குறா?’ என்றவர் மொபைலில் அழைத்தவர் பெயரைப் பார்க்க ‘இதுங்க தொல்லை தாங்க முடியலை.’ என்று சிரித்தவாரே அங்கிருந்து சென்றார்.
மாலை தொல்காப்பியரும் தீந்தளிரும் வீட்டிற்கு வந்தபின் ஐவரும் அமர்ந்து டெல்லியில் இருந்து ராதிகா வாங்கி வந்திருந்தப் பொருட்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்..
“இந்த குர்தி சூப்பரா இருக்கு.. தேங்க் யூ ராதுமா.. என் டேஸ்ட் உங்களுக்கு தான் கரெக்ட்டா தெரியுது.” தனக்கென்று ராதிகா வாங்கி வந்திருந்த உடையைப் பார்த்து தமிழ் சந்தோஷமாகக் கூறினாள்.
“ட்ரெஸ் செலெக்ஷன் செஞ்சது நான் இல்ல.. உனதருமை எதிரி தான்..” சிரித்துக் கொண்டே ராதிகா கூறினார்..
“என்ன?”
“ஆமா.. வெற்றி தான் இந்த கலர் தமிழ்க்கு நல்லா இருக்கும்ன்னு வாங்கிக் கொடுத்தான்..”
“எனக்கொன்னும் வேண்டாம்..” கையில் இருந்த உடையை ராதிகாவிடம் கொடுத்தவள் அங்கிருந்து எழப் பார்க்க
“தமிழ் இது என்னப் பழக்கம் உனக்காக ஒருத்தன் வாங்கிக் கொடுத்திருக்கான்.. அதை வேண்டாம்ன்னு சொல்லுற?” தளிர் தங்கையை அதட்ட
“அவன் யாரு எனக்கு வாங்கிக் கொடுக்க?” கோபமாக கத்தியவளை
“தமிழ்” என்ற தொல்காப்பியரின் அழைப்பு ஒரு நிமிடம் அமைதிப் படுத்தியது.. மறுநிமிடம்
“நீங்க யார் என்ன சொன்னாலும் நான் இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க மாட்டேன்.. அவனோட பேசவும் மாட்டேன்..” என்றவள் அங்கிருந்து சென்றாள்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#6
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..
அத்தியாயம் 3
இன்று...
தீயே தீயே ராத்தியே
இனிதீயே தீண்ட தீண்ட தீர்ன்தீயே
தீயே தீயே ராத்தியே
இருதீயே தீர தீர சேர்ந்தாயே
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரூம்மில் ஓரபோடு
இனி காமினி காமினி காமினி
என்று வழக்கம் போல் பாட்டைப் போட்டு தமிழை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் வெற்றி. தீயே தீயே என்று அவளைப் பார்த்துக் கொண்டே வேறு அவன் பாட அவள் அவனை முடிந்த மட்டும் தன் கண்கள் என்னும் தீயால் பொசுக்கிக் கொண்டிருந்தாள்..
அதற்கும் அவன் அசராமல் அடுத்த பாட்டைப் போட அடுப்படியில் இருந்த இஞ்சி பூண்டு இடிக்கும் சிறு கல்லை எடுத்துக் கொண்டு அவனை அடிக்கவே வந்துவிட்டாள்.
“ஹே கொலைகாரி என்னடி பண்ற?” அவன் அலறி விலகினான்.
“எதுக்குடா பாட்டை போட்டு என்னை வம்பிழுக்குற?” கோபத்துடன் அவள் கேட்க
“நான் சும்மா போட்டேன். உன்னை எங்க நான் வம்பிழுத்தேன்...” கூலாக பதில் கூறினான்.
“அப்பறம் எதுக்குடா என்னை பார்த்துட்டே தீயே தீயேன்னு பாடுன?”
“நான் எங்க உன்னை பார்த்தேன்... எதார்த்தமா பாடிக்கிட்டே திரும்பும் போது நீ என் கண்ணுல பட்டுருப்ப. அதுக்காக உன்னை பார்த்து பாடுனது ஆகிடுமா?” அவன் விடாது பதில் கூறினான்..
“உனக்கு வேற பாட்டே கிடைக்கலையா? எப்பப்பாரு தமிழ்னு வர மாதிரி பாட்ட போடுறது. இப்போ தீயேன்னு போடுற.. இதெல்லாம் என்னை வெருப்பேத்த தான் நீ செய்யுறேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்குரியா?”
“என்ன நீ என்னவோ புதுசா சொல்லுற?” என்று ஒரு நிமிடம் யோசிப்பதை போல் நடித்தவன் பின் “ஓ.... உன் பேர் தீந்தமிழ் இல்ல.. அதை நான் மறந்துட்டேன் பாரு.. நான் சும்மா எதார்த்தமா போடுறேன். அது உனக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.” என்றான் அசால்ட்டாக
“போடா வெட்டிப்பயலே” என்று திட்டிவிட்டு அறைக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தாள்
‘வெட்டியா? அடியே புருஷனுக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்க மாற்ற. வெற்றி உனக்கு இதெல்லாம் தேவையாடா.’ என்று சலித்துக் கொண்டே அடுத்த பாட்டைப் போட்டான்..
தீப் பிடிக்க தீப் பிடிக்க
முத்தம் கொடுடி என்
திமிர் எல்லாம் அடங்காது
கொஞ்சம் கடிடி..
என்று போடக் கடுப்பனவள் வெளியே வந்து அவனை அருகில் இருந்த தலையணையை வைத்து அடித்தாள்
“லூசு அடிக்கதாதடி.. பைத்தியமே விடுடி.. எருமை” என்று அவன் அவளை வித விதமாக திட்ட அவளின் அடிகள் கூடிக் கொண்டே போனது.
“உன் முகரகட்டைக்கு முத்தம் ஒரு கேடா? நானும் போனா போகுதுன்னு ஒவ்வொரு தடவையும் விடுறேன். நீ ரொம்ப ஓவரா போற.”
“உனக்கென்னடி நான் பாடுவேன் ஆடுவேன் ஏன் ஒரு பொண்ண கூடீட்டு வந்து கிஸ் கூட கொடுப்பேன்”
“அடுத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம நீ என்ன வேணும்னாலும் செய்..” என்றாள் கடுப்புடன்.
“நீ அடுத்தவங்க இல்லை.. என் பொண்டாட்டி.” என்றான் மந்தகாச சிரிப்புடன்
“என்னொரு தடவ பொண்டாட்டி கிண்டாட்டின்னு சொன்ன கெட்ட கோபம் வரும் எனக்கு.”
“கோபத்துல, கெட்ட போபம் நல்ல கோபம்னு ரெண்டு இருக்கா?”
“டேய்...” என்றவள் தலையனை பிய்யும் வரை அவனை அடித்துக் கொண்டே இருந்தாள்.. அதில் இருந்து வந்த பஞ்சு அவள் முகத்தில் பட்டு தும்மல் வரவே அவனை அடிப்பதை நிறுத்தியவள் விடாது தும்மிக் கொண்டே இருந்தாள்...
“ஹாஹா இதான் நல்லவங்கள அடிக்கக் கூடாதுன்னு சொல்லுறது.. கடவுள் இருக்கான் குமாரு.. உடனே உனக்கு தண்டனை கொடுத்துட்டார் பார்த்தியா?”
“ஹட்ச்.. டேய்.. ஹட்ச்.. கொன்னுடுவேன்..” என்று வார்த்தைக்கு வார்த்தை தும்மிக் கொண்டே கூற அவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..
“உன் தும்மல நான் இப்போ நிறுத்துறேன் பார்..” என்றவன் அவள் அருகில் வந்து அவள் முகத்தை ஏந்தினான். தமிழ் அவனை பயத்துடன் பார்க்க
“ஒரே ஒரு உம்மா கொடுத்தா உன் தும்மல் எனக்குள்ள போய்டும்.. உனக்கும் சரி ஆகிடும்.. மே ஐ...” என்றவன் அவள் உதட்டருகில் நெருங்க.. அவன் பார்வையில் சிறிது மயங்கி இருந்தவள் காலிங் பெல் ஒளியில் சுயவுணர்வு வந்து அவனை தள்ளிவிட்டாள்...
“ஹே..” என்று அவள் கையைப் பிடிக்க வந்தவனை முறைத்துவிட்டு வேகமாக சென்று கதவை திறந்தாள்.
“எவ்வளவு நேரம் தமிழ் பெல் அடிக்கிறது? என்ன செஞ்சுட்டு இருந்த?” என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தாள் தீந்தளிர்.
“அது.. வந்து.. நான்..” தமிழ் திணற.. அதற்குள் தன்னை நிலைப்படுத்தி இருந்த வெற்றி தளிர்யை ‘வா’ என்று அழைத்துவிட்டு மனைவி கூற வேண்டிய பதிலை அவனே கூறினான்.
“இல்ல தளிர்.. தமிழ் படிச்சுட்டு இருந்தா. நான் ரெஸ்ட் ரூம்ல இருந்தேன்.. அதான் லேட் ஆகிடுச்சு.”
அவனை வெட்டும் பார்வை ஒன்று பார்த்தவள் தளிரின் கைகளில் இருந்த ஆருத்யாவை
“ஆரு குட்டிச் சித்திகிட்ட வாங்க. இந்த ட்ரெஸ்ல குட்டி அழகா இருக்கீங்களே.” என்று தூக்கிக் கொண்டாள்
“வருண் அண்ணா எப்படி இருக்காங்க, அவங்கள கூடிட்டே வர மாட்டுற?” என்று வெற்றி குறைப்பட தமிழ் அவனை வெட்டவ குத்தவா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
வெற்றி அவ்வாறு கேட்டதும் தங்கள் வீட்டில் காலையில் நடந்த நிகழ்வு தளிரின் நினைவிற்கு வந்தது.
“குட்டிமா ஏன்டா அழறீங்க.. குளிச்சாச்சு.. அவ்வளவு தான்.. அழாதிங்க..” ஆருத்யாவை குளிக்க வைத்துவிட்டு துவட்டிக் கொண்டிருந்தவாரே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் தீந்தளிர்.
குழந்தையின் அழுகையில் பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்த வருண் மனைவியை முடிந்த மட்டும் முறைத்தவன், அவளிடம் இருந்து மகளை வேகமாக வாங்கினான்.. பிடிங்கினான் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
“வருண் பார்த்து..” அவன் வாங்கிய வேகத்தில் குழந்தையின் அழுகை மேலும் கூடியது.
“அறிவிருக்கா உனக்கு. காலைலேயே இப்படி குழந்தை தலைக்கு தண்ணிய ஊத்திவிட்டுருக்க. மதியம் போல குளிக்க வெச்சா என்ன? எப்படி அழறா பாரு.” என்று வருண் கத்த
‘மதியம் தண்ணி ஊத்துனா மட்டும் அழ மாட்டாளா?’ என்று மனதில் நினைத்த தளிர் கணவனிடம்
“எல்லா குழந்தையுமே தலைக்கு ஊத்தும் போது அழ தான் செய்யும்.” என்று கூறினாள்.
“ஓ அப்படி எத்தனப் பேர நீங்க வளர்த்துருகீங்க?” அவன் இடக்காக கேள்வி கேட்க
“வருண் ப்ளீஸ் ஆரு அலற.. நம்ம சண்டைய அப்பறம் வெச்சுப்போம். சாம்புராணி போடணும். ஜலதோஷம் பிடிச்சுட போகுது.” எனவும் ஆருவை தளிரிடம் கொடுத்துவிட்டு அருகில் நின்றுக் கொண்டு அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். நடு நடுவே தளிரை திட்டவும் அவன் மறக்கவில்லை.
ஒருவழியாக சாம்பிராணி போட்டு வேறு உடை மாற்றி கணவனிடம் குழந்தையை கொடுத்தவள் அவனை தயக்கமாக ஏரிட்டாள். அவள் பார்வை உணர்ந்தவன் ‘என்ன’ என்பது போல் அவளை நிமிர்ந்து பார்க்க
“அப்பா உங்களையும் ஆருவையும் பார்க்கணும்னு சொன்னாங்க. இன்னைக்கு உங்களுக்கு காலேஜ் லீவ் தானே போவோமா?” என்றாள் மெதுவாக
“ஓ இதுக்கு தான் நீ வேக வேகமா எல்லாம் செஞ்சுட்டு இருந்தியா?” என கத்தியவன்
“நான் வரல” என்றான்
“என் மேல இருக்கக் கோபத்த அப்பா மேல ஏன் காட்டுறீங்க?”
“உன் மேல இருக்க கோபத்த மாமா கிட்டக் காட்டிட கூடாதுன்னு தான் நான் வராம இருக்கேன்.” என்றவன் ஆருத்யாவுடன் கீழே சென்றான்.
அந்த நேரத்திலும் தன் தந்தையை ‘உன் அப்பா’ என்று அழைக்காமல் ‘மாமா’ என்று அவன் அழைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.
ஒரு காலத்தில் தான் கேட்டவுடன் எல்லாம் செய்த கணவனா இவன் என்று தீந்தளிர் ஆச்சர்யப்படும் அளவுக்கு நடந்து கொண்டிருந்தான் வருண். தந்தை வேறு மருமகனை பார்க்கவே முடிவதில்லை என்று வருத்தப்படுகிறார். அவர் வரும்பொழுதும் வருணும் வீட்டில் இருப்பதில்லை..
இவனும் அங்கே செல்வதில்லை.. குழந்தையை மட்டுமாவது தன்னுடன் அனுப்ப மாட்டானா என்று வருந்தியவள் கீழே சென்று மீண்டும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“வருண் ப்ளீஸ் அப்பா பாப்பாவ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. சீக்கிரம் நான் போயிட்டு வந்துடுறேன்..” என அவன் பதில் சொல்லவே இல்லை. மருமகள் மகனிடம் கெஞ்சுவதை பார்த்துக் கொண்டிருந்த வருணின் தந்தை
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#7
“வருண் என்ன தளிர் பேசிக்கிட்டே இருக்கா? பதிலே சொல்லாம இருக்க? ஆரு அந்த வீட்டு பேத்தியும் கூட தான். அவங்க பார்க்கணும்னு நினைக்குறதுல தப்பு என்ன இருக்கு?”
“எங்க இருந்தாலும் உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்ண கரெக்டா வந்துடுங்க.” தந்தையிடம் கத்தியவன் ஆருவை தளிரிடம் கொடுத்துவிட்டு
“குழந்தை பத்திரம்” என்றான்.
‘என் பொண்ண எனக்குப் பாத்துக்கத் தெரியாதா?’ என்று வாய் வரை வந்த வார்த்தை முயன்று அடக்கியவள் ‘ம்’ என்று மட்டும் கூறினாள்.
தீந்தமிழின் உலுக்கலில் தன்நிலை அடைந்தவள் வெற்றியிடம்
“அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறிவிட்டு தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தாள். வெற்றி அவர்களுக்கு தனிமைக் கொடுக்க எண்ணி வெளியே சென்றுவிட சகோதரிகள் இருவரின் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.
“வெற்றியப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா தமிழ்? ஏன் இப்படி அவன கஷ்டப்படுத்துற?” தளிர் கேட்க
“அவன் பாவமா? அப்போ நான்? அவனால தான் யூ.ஜில எனக்கு கோல்ட் மெடல் மிஸ் ஆச்சு. அப்பா, ராதுமா ரெண்டு பேரும் என்னோட பேசமா இருக்காங்க. நீயும் மாமாவும் இப்போ சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இப்படி நம்ம வீட்ல நடக்குற பிரச்சனை எல்லாத்துக்கும் அவன் தான் காரணம். அவனுக்கு நீ பாவம் பாக்குற?” தமிழ் கோபமாக கூறினாள்
“பைத்தியம் மாதிரி பேசாதே. நானும் வருணும் சண்ட போட்டதுக்கு வெற்றி எப்படி காரணம் ஆவான். எங்களுக்குள்ள நடந்த சண்டைய உன்கிட்ட நான் சொல்லிட்டேன். அப்படி இருந்தும் எல்லாத்துக்கும் வெற்றி தான் காரணம்னு நீ சொல்றது பைத்தியக்காரத்தனமா இருக்கு.”
“ஆமா நான் பைத்தியம் தான். இதோ இப்போ உன்னை கூட எனக்கு எதிரா திருப்பிட்டான் பாரேன். சரியான சடிஸ்ட் அவன்.”
“தமிழ்.” என்று தளிர் ஏதோ கூறவற
“ப்ளீஸ் தளிர் அவனப் பத்தி பேசாதே. என் செல்லத்தோட டைம் ஸ்பென்ட் செஞ்சே ரொம்ப நாள் ஆச்சு. நீ போய் சமையல கவனி. நானும் என் பொண்ணும் விளையாடப் போறோம்.” என்றவள் ஆருத்யாவுடன் ஐக்கியமானாள்..
அக்காவும் தங்கையும் வளவளத்துக் கொண்டே சமையலை முடித்திருந்தனர். இவர்கள் சமையலை முடிக்கும் தருவாயில் வெற்றி வந்துவிட மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர்.
“தளிர் சமையல் சுப்பர். டெய்லி வந்து எனக்கு செஞ்சு கொடுத்துட்டு போயேன்.” வெற்றி உணவை வாயில் வைத்துக் கொண்டே கூற, தளிர் பதில் சொல்லுமுன் தமிழ்
“என் அக்காவ பார்த்தா உனக்கு சமயக்காரி மாதிரி இருக்கா? வாய்கிழிய பேச தெரியுது சாப்பாட்டு செஞ்சு சாப்பிட தெரியாதோ?” என்றாள்
“தமிழ் என்ன இது. அமைதியா இரு. அவன் என்னோட தானே பேசீட்டு இருக்கான்.” தளிர் தங்கையை கடிந்தாள்.
“என்னமோ பண்ணு” என்று அவள் அமைதியாகி விட வெற்றியை தளிர் பாவமாகப் பார்க்க அவனோ அதை கண்டுக் கொள்ளாமல் உண்பதிலே கவனமாக இருந்தான்.
“டேய் சுரணை கெட்டவனே அவ இவ்வளவு திட்டுறா நீ சாப்பாடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு எழுந்து போயிருப்பேன்னு பார்த்தா வெட்கமே இல்லாம சாப்டுட்டு இருக்க” வெற்றியிடம் மெதுவாக தளிர் கேட்க
“எனக்கே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் நல்ல சாப்பாடு கிடைக்குது. ரோஷப்பட்டு இதை இழக்க நான் தயார இல்லை.”
வெற்றி சாதாரமாக கூற அதைக் கேட்ட தளிருக்கு தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. தங்கையின் மேல் கோபமும் வந்தது. அவன் உண்ணும் வேகமே பல நாட்களாக சரியாக அவன் உண்பதில்லை என்பதை தளிருக்கு உணர்த்தியது. வெற்றி உண்டு முடித்து ஆருவோடு இருக்க தளிர் மறுபடியும் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்
“ப்ராஜெக்ட் வேலைல எப்படி போகுது தமிழ்?”
“ம் நல்லா போகுது.”
“தமிழ் நான் சொல்லுறத கேளு. நீ வெற்றியோட பேசக் கூட வேண்டாம். ஆனா இப்படி அவன பட்டினிப் போடாதே. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்னு’ பாரதியார் சொல்லிருக்கார்.. ஆனா நீ என்ன செய்ற? அத்தையும் அவன அங்க வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ அவன் என்ன தான் செய்வான். உன் கோபத்த எதுல வேணும்னாலும் காட்டு சாப்பாட்டு விஷயத்துல காட்டாதே.” என்றவள் பாத்திரங்களை எடுத்து வைத்தாள்.
சிறிது நேரத்தில் தீந்தளிர் தந்தையைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்... தளிர்க் கூறியதையே நினைத்துக் கொண்டிருந்த தமிழுக்கும் அவள் கூறியதின் நியாயம் புரிந்தது.
‘பாவம் வெற்றி. சின்ன வயசுல இருந்தே அவன் பசி தாங்க மாட்டான். நான் அவன ரொம்பப் படுத்துறேன். இனி இப்படி இருக்கக் கூடாது.’ என்று முடிவெடுத்தாள்.. இரவு வரைக் கூட அந்த முடிவு நிலைக்கப் போவதில்லை என்பதை அவள் அறியவில்லை.
********************
“வருண் என்ன ஆளே ஒரு மாதிரி இருக்க?” ஜெனி கேட்க
“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன். வீடியோ கால்ல பேசுறோம் அதான் உனக்கு அப்படி தெரியுது.” என்றான் வருண்
“ப்ச் பொய் சொல்லாதே. ஒழுங்கா சொல்லு”
“என்னைக் கேள்விக் கேக்குறத நிறுத்து. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”
“ம் நல்லா இருக்கோம்”
“அவன் எங்க?”
“பேசமாட்டானம் உன்னோட.”
“என்னவாம் அவனுக்கு?”
“நீ அவன் மாமா பொண்ணக் கஷடப்படுத்துரியம்”
“ஆமா ஆமா படுத்துறாங்க. அந்த நாய்க்கு என்னை விட அவ முக்கியமாகிட்டாளா?” வருண் கோபமாக கேட்க,
“டேய் என்ன என் முன்னாடியே என் புருஷன நாய்னு சொல்லுற. கொன்னுடுவேன்.”
“எனக்கு முதல ப்ரேண்ட், அப்பறம் தான் உனக்கு புருஷன். அதை நியாபகம் வெச்சுக்கோங்க மேடம். அவன கூப்பிடு.”
“நான் அப்பவே கூப்டுட்டேன். நீ பேசுன்னு சொல்லிட்டார்.”
“ஓ.. இனி எப்பவும் அவன் என்னோட பேச வேண்டாம்ன்னு சொல்லிடு.. பாய்”
“ஹே ஹே வருண்” என்று மறுமுனையில் கத்திக் கொண்டிருப்பதை கேட்காமல் அழைப்பை துண்டித்தான் வருண்.
“என்ன வெச்சுட்டானா?” கதிர் அவளிடம் கேட்க
“ஏன் நீ அவனோட பேசுனா தான் என்ன?”
“நமக்கு நெருக்கமானவங்களோட நிராகரிப்பு எவ்வளவு வழிக்கும்னு அவனுக்கும் தெரியட்டும். தளிருக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்னு அவனுக்கு புரியும்.”
“தளிரோட அவன் சீக்கிரம் பேசிடுவான். நீ பீல் பண்ணாதே.”
“ம்” என்றவன் அமைதியாக இருக்க கணவனின் அமைதி அவளுக்கும் வருத்தத்தை கொடுத்தது.. வழமை போல் கணவன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#10
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..
அத்தியாயம் 4 (அன்று)
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீடே நல்ல உறக்கத்தில் இருந்தது.. ஒன்பது மணிவாக்கில் தான் ஒவ்வொருவராக எழுந்தனர்.. காலை உணவு முடிந்த பின் தொல்காப்பியர் அருகில் இருந்த லைப்ரரிக்கு செல்வதாகக் கூறிச் சென்றார். தமிழ் அவள் பிரியத்திற்குரிய ராதுமாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.. நேற்று தானே அவர் ஊரில் இருந்து வந்திருந்தார்.. அவர் ஊருக்கு சென்ற பதினைந்து நாளில் நடந்த நிகழ்வுகளை அவரோடு பேசிக் கொண்டிருந்தாள்.. அவரும் அவளிற்கு தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டே அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்..
“தலைல எண்ணெய் வைக்காம முடி எல்லாம் போச்சு.. ஏன் அம்மு இப்படி பண்ற?”
“ஆய்ல் வெச்சுட்டு காலேஜ் போனா மூஞ்சில எண்ணெய் வடியும் ராதுமா..”
“தளிர் வேலைக்கே அப்படி தான் போறா.. உனக்கென்ன?”
“அவ போவா.. அவளுக்கு அழக மெய்ன்டெயின் பண்ண தெரியலை ராதுமா..”
“ஆமா ஆமா.. சரி வீட்டுக்கு வந்ததும் வைக்க வேண்டியது தானே.. கட்டையா இருந்த முடி எலிவால் மாதிரி ஆகிடுச்சி.. இனி வாரத்துக்கு ரெண்டு தடவை தான் நீ தலைக்கு தண்ணி ஊத்தணும். டெய்லி தண்ணி ஊத்துன அடி விழும்” என்று கண்டித்தார்..
“நீங்க என்ன சொன்னாலும் அவ கேட்க மாட்டா அத்தை.. வீனா உங்களுக்கு தான் தொண்டத் தண்ணி வேஸ்ட் ஆகும்..” தீந்தளிர் சோபாவில் புத்தகம் படித்துக் கொண்டே அத்தையிடம் கூற
“நான் ராதுமா சொன்னா கேட்பேன்..” என்றாள் பெருமையாக
“கிழிப்ப.” என்று ராதிகாவும் தளிரும் ஒரு சேரக் கூறினர்..
“ப்ச் தலைக்கு மசாஜ் செய்யும் போது பீஸ்புல்லா செய்யனும்.. இப்படி திட்டிக்கிட்டே செய்றதுக்கு மசாஜ் செய்யாமையே இருக்கலாம்..” என்றவள் திரும்பி இருவரையும் முறைத்தாள்.
“நீ ஆடாம ஒரு இடத்துல உட்கார் முதல்ல..” என்று அதட்டியவர் ஆயில் மசாஜ் செய்துவிட்டு தலையை ஜடை போட்டு விட்டார்..
“நாளைக்கு தண்ணி ஊத்திக்கோ.. சீயக்காய் போடு.. ஷாம்பூ போடாதே..”
“ம் ராதுமா..” என்றவள் அவர் மடியிலேயே படுத்தாள்
“எழுந்திரி அம்மு.. போய் குளி.. தூங்காதே..” என்று தளிர் அதட்ட
“உன் லெக்சரர் வேலைய சும்மா என்கிட்ட காட்டாதே..” என்றவள் ராதிகாவிடம்
“ராதுமா உங்க சமையல நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.. அப்பாக்கும் தளிருக்கும் உங்க அளவுக்கு செய்யத் தெரியலை.”
“இனிமே டெய்லி நான் செஞ்சு தரேன்டா. மதியத்துக்கு என்ன வேணும்ன்னு சொல்லு?”
“பெப்பர் சிக்கென்”
“சரிடா..” என்றார்..
“இப்படி நல்லா செல்லம் கொடுங்க அத்தை.. அவ உருபடுவா..” என்று நொடித்தவாறே தீந்தளிர் அறைக்குச் சென்றாள்..
மதியம் தமிழ் கேட்ட உணவை சமைத்துக் கொடுத்தார் ராதிகா.. உண்டுவிட்டு சிறிது நேரம் அனைவரும் தூங்கினர்.. மாலை தொல்காப்பியரும் ராதிகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
“நேத்து என்கூட வேலை பார்க்குற டீச்சர் ஒரு வரன் இருக்கு உங்க பொண்ணுக்கு பார்க்குறீங்களான்னு கேட்டார்.. நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..” என்றவர் சற்றுத் தயங்கி “பெரியவனுக்கு தளிர பார்க்கலாம்ன்னு நான் நினைச்சேன்.. உனக்கு விருப்பமா ராது?”
“எனக்கும் அதே ஆசை தான் ண்ணா.. வெற்றிக்கும் தமிழுக்கும் எப்பவும் முட்டிக்கும்.. அதுனால அதுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. தளிருக்கும் பெரியவனுக்கும் ஒத்துப் போகும் நல்லா..”
“பெரியவன்கிட்டயும் தளிர்ட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.”
“அதுவும் சரி தான் அண்ணா..” பெரியவர்கள் இருவரும் இப்படி முடிவெடுத்துவிட்டு மறுநாள் தங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தனர்..
அன்று காலையில் முதல் வகுப்பை முடித்து அடுத்த வகுப்பு தனக்கு ப்ரீ என்பதால் தனது கேபினில் அமர்ந்து தனது phd படிப்பிற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீந்தளிர்..
“தளிர் மேம்.. தேர்ட் ஹவர் உங்களுக்கு செகண்ட் இயர் ‘B sec”க்கு தானே. நான் இன்னும் சிலபஸ் முடிக்கலை.. உங்க பீரியட்ல கொஞ்சம் எடுத்துக்கட்டா” தளிருடன் பணிபுரியும் சக லக்சரர் கேட்க அவளால் மறுக்க முடியவில்லை.
“ம் ஓகே.. எடுத்துக்கோங்க..”
“எனக்கு அடுத்த ஹவர் பைனல் இயர்க்கு கிளாஸ் இருக்கு.. கொஞ்சம் அதை பார்த்துக்குரீங்களா?”
“சரி மேம்..”
“அசைன்மெண்ட் கொடுத்தேன்... அதை செய்யாதவங்கள செய்ய சொல்லுங்க.. நாளைக்கு செக் பண்ணுவேன்னு சொல்லிடுங்க..”
அவரிடம் சரி என்றவள் தனது வேலைகளை கவனிக்கச் சென்றாள்..
பைனல் இயர் கிளாசிற்கு வந்தவள் அவர்களிடம் அந்த மேம் கூறியதை சொல்லிவிட்டு மாணவர்களை மேற்ப்பார்வை பார்க்கும் வன்னம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
அவளின் புத்தகத்தில் ஒரு கண்ணும் மாணவர்களின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் தனது கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கிவிட, அப்பொழுது யாரு உள்ளே நுழைந்து எதுவோ பேசிக் கொண்டிருக்க அந்த சத்தத்தில் நிமிர்ந்தவள் அங்கே யாரோ ஒரு நெடியவன் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்களிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தான்..
ஒரு ஆசிரியர் இருக்கும் அறைக்கு அனுமதி இல்லாமல் நுழைந்தது மட்டும் இல்லாமல் பெண்களிடம் வேறு அவன் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க அதில் கடுப்பான தீந்தளிர்
“excuse me sir.. என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் குரலில் சற்று கோபத்துடன்.. அப்பொழுது தான் அங்கே ஆசிரியர் இருப்பதை கவனித்தவன்
“சாரி.. நீங்க இருக்கிறது எனக்குத் தெரியலை.. நான் ஸ்டாப்ஸ் யாரும் இல்லைன்னு நினைச்சுட்டேன்..” என்றான்.. பேசிக் கொண்டே இருவரும் மாணவர்களை விட்டு சற்றுத் தள்ளி வந்திருந்தனர்..
“அப்படியே நீங்க நினைச்சாலும், பாய்ஸ் கிட்ட எதாச்சும் கேட்க வேண்டியது தானே சார்.. பொண்ணுங்க கிட்ட எதுக்கு பேசுறீங்க?”
“மேடம்.. கிளாஸ்குள்ள என்ட்டர் ஆனதும் கேள்ஸ் தான் ப்ர்ஸ்ட் இருக்காங்க.. அதுனால தான் அவங்ககிட்ட பேசுனேன்..” இப்பொழுது அவனின் பேச்சிலும் சற்றுக் கோபம் இருந்தது.. ஏதோ பெண்களிடம் பேசுவதற்காக அலைபவனைப் போல் அவள் தன்னை நினைக்கிறாள் என்றதும், அவனிற்கும் கோபம் வந்தது..
அவனிற்கு பதிலளிக்கும் முன்பு, ஆசிரியர் ஒருவர் அங்கே வந்தார்.. வந்தவர்
“ஹே வருண்.. நீ எங்க இங்க?” என்று அவனின் கையைப் பிடித்துக் கொண்டார்..
“சார்..” என்றவனும் அவரின் கையைப் பிடித்துக் கொண்டவன்.
“hod வர சொல்லிருந்தாங்க சார்.. அதான் வந்தேன்..” என
“எப்படி இருக்க மேன்? எந்த காலேஜ்ல இப்போ வொர்க் பண்ற நீ?”
“பைன் சார்..” என்றவன் அவனின் கல்லூரியின் பெயரைக் கூறினான்..
இவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தளிரிடம்
“நம்ம காலேஜோட ஓல்ட் ஸ்டூடென்ட்.. வருணன்.. ug இங்க தான் படிச்சான்.. கோல்ட் மெடலிஸ்ட்..” என்று அவனை அறிமுகம் செய்தார் அந்த ஆசிரியர்..
“ஓ..” என்றவள், வருணின் புறம் திரும்பி லேசாக சிரித்தாள்..
அறிமுகம் செய்யும் பொழுது மரியாதைக்காக சிரிப்பது போல் தான் சிரித்தாள்..
“hod யைப் பார்த்துட்டியா வருண்?” அவரும் வருணிடம் பேச, தளிருக்கு இப்பொழுது இங்கே நிற்பதா, போவதா என்று குழப்பமாக இருந்தது..
“யஸ் சார்.. பைனல் இயர் ஸ்டுடெண்ட்சை அசெம்பில் பண்ண சொல்லிருக்கேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொன்னாங்க.. அதான் அப்படியே நம்ம டிபார்ட்மெண்ட்ட சுத்திப் பார்ப்போம்ன்னு வந்தேன்..” என்றவன் நிறுத்தி, தளிரைப் பார்த்துவிட்டு
“இந்த கிளாஸ க்ராஸ் பண்ணும் போது, ஸ்டாப் இல்லாத மாதிரி இருந்தது.. சரி இங்க தான் எல்லாரையும் அசெம்பிள் செஞ்சிருக்காங்க போலன்னு நினைச்சு உள்ள வந்துட்டேன்.. மேம் பின்னாடி நின்னுட்டு இருந்திருக்காங்க, நான் அதை கவனிக்கலை..” என்றான்..
“ஓல்ட் ஸ்டூடென்ட்சை வர சொல்லிருக்கேன் பைனல் இயர் பசங்களோட பேசன்னு hod சொன்னார்.. நீ வருவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை.. பைனல் இயர் ஒரு செக்சன் மட்டும், லேப்ல இருக்காங்க.. தேர்ட்டி மினிட்ஸ் ஆகும் அவங்க வர.. அதான் இன்னும் அசெம்பிள் பண்ணாம இருக்காங்க..” என்றார் அந்த ஆசிரியர்..
“ஓ.. ஓகே சார்.. நான் அப்போ, அப்படியே சுத்திகிட்டு இருக்கேன்..” என்றவன், தளிரின் புறம் திரும்பி ஒரு தலை அசைப்பைக் கொடுத்துவிட்டு, அந்த ஆசிரியருடன் சென்றான்..
*****************
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#11
வீட்டிற்கு வந்தும் அவனின் முகம் தளிரின் மனக்கண்னில் வந்துக் கொண்டே இருந்தது.. அதுவும் அவன் போகும் முன்பு தலை அசைத்துச் சென்றதில் அவனின் கண்கள் உரிமையாக அவளிடம் எதுவோ சொல்லியது.. அதைப் பற்றியே அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
“தளிர்.. தூக்கமா வருது.. நாளைக்கு இன்டெர்னல் வேற..” தமிழ் அவளிடம் புலம்பியதை அவள் காதில் வாங்கவே இல்லை.. தான் இங்கே கத்திக் கொண்டிருக்க, இவள் என்ன கனவுக் கண்டுக் கொண்டிருக்கிறாள் என்றக் கடுப்பில் தளிரின் கையைக் கிள்ளிவிட்டாள் தமிழ்..
“ஸ்” என்று அலறியவள், தங்கையைத் திரும்பி முறைத்தாள்..
“எருமை எதுக்கு கிள்ளின.. வலிக்குது..” கையைத் தேய்த்து விட்டுக் கொண்டே அவள் கூற,
“நானும் உன்னோட பேசிகிட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம கனவு கண்டுகிட்டு இருக்க.. அதான் கிள்ளுனேன்..”
“அதுக்காக இப்படியா? வலிக்குது..”
“வலிக்கட்டும் வலிக்கட்டும்.. அத்தானுக்கும் உனக்கும் பேசுவோமான்னு, அப்பா கேட்டதுல இருந்து நீ கனவு கண்டுக்கிட்டு தான் இருக்க.” என்றதும், தளிர் அதிர்ந்தாள்..
“என்ன பேசப் போறாங்க?” என்றாள் ஒன்றும் அறியாதவளாக..
இப்பொழுது அதிர்வது தமிழின் முறை ஆகிற்று..
“சாப்பிடும் போது தானே தளிர், அப்பா கேட்டாங்க.. ராதுமாக்கும் அப்பாக்கும் நீயும் அத்தானும் கல்யாணம் செய்யனும்னு ஆசை.. உன் முடிவென்னன்னு.. அப்போ அமைதியா இருந்தியே..” என்றாள்
“என்ன சொல்ற? அப்பா சாப்பிடும் போது என்னோட பேசுனாங்களா?” என்று மேலும் அதிர்ச்சியுற,
“அக்கா.. உனக்கென்னாச்சு.. அப்பாவும் பேசுனாங்க.. ராதுமாவும் பேசுனாங்க. நீ அமைதியா இருந்த.. அதை அவங்க சம்மதம்ன்னு எடுத்துகிட்டாங்க.. இப்போ நீ இப்படி கேட்குற?”
“நிஜமா அவங்க பேசுனதை நான் கவனிக்கவே இல்ல அம்மு.. காலேஜ்ல நடந்த ஒரு இன்சிடென்ட நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ நீ சொல்லி தான் என்னோட அப்பாவும் அத்தையும் பேசிருக்காங்கன்னு எனக்குத் தெரியுது..” என்றதும், சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்..
“சரி இப்போ சொல்லு.. உனக்கு இந்த மேரேஜ்ல சம்மதமா?” தமிழ் கேட்க, தளிருக்கு வார்த்தையே வரவில்லை.
“இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் தளிர்? நீ அப்பவும் இப்படி இருந்ததுனால தான் சம்மதம்ன்னு நாங்க நினைச்சோம்.. பிடிச்சிருக்கா பிடிக்கலையா? வாயைத் திறந்து சொல்லு?”
“நான் அவங்கள அப்படி நினைச்சுப் பார்த்ததே இல்லை.. மோர்ஓவர் நான் மேரேஜ் பத்தியும் நினைச்சுப் பார்க்கலை..” என்றாள் மெதுவாக..
“ப்ச்.. என்ன பேசுற?” என்றாள் புரியாமல்
“இப்போதைக்கு மேரேஜ் பத்தி பேசாதிங்க..”
“பின்ன எப்போ பேசுவாங்க? அல்ரெடி உனக்கு இருபத்திநாலு வயசாகிடுச்சு..” தமிழ் முறைத்துக் கொண்டே கூற, தளிருக்கு லேசாக உதட்டில் சிரிப்பு வந்தது..
“இப்போ எதுக்கு சிரிக்கிற?” முறைத்துக் கொண்டே கேட்டாள் தமிழ்..
“இந்த படத்துல, கதைல எல்லாம் அம்மா கேரெக்டர் இப்படி தானே பேசுவாங்க.. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது.. அதான் சிரிச்சேன்..”
“நம்ம அம்மா இருந்திருந்தா இந்நேரம் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளை இருந்திருக்கும்..”
“ம் அப்புறம்?” தளிர் சிரிக்க
“சிரிக்காத அக்கா. அத்தானை நீ கல்யாணம் செஞ்சுகிட்டா, லைப் லாங் நம்ம ஒன்னாவே இருக்கலாம்.. நான் ரொம்ப ஆசையா இருந்தேன்.. சரி உனக்கு அதுல இஷ்டம் இல்லைன்னா, வேற மாப்பிள்ளை அப்பாவைப் பார்க்கச் சொல்லுவோம்..”
“அம்மு.. நான் முதல்ல phd முடிக்கணும்.. அதுக்கு அப்பறம் இதைப் பத்தி பேசுவோம்..”
“நீ phd முடிக்க இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்.. அதுவரைக்கும் நான் வெயிட் எல்லாம் பண்ண முடியாது. இப்பவே எனக்கு இருபது வயசாகிடுச்சு..”
“அடிப்பாவி.. உனக்கு அதுக்குள்ள கல்யாண ஆசை வந்துடுச்சா?”
“ஆமா..” என்றவள் “எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடி..” என்று பாடினாள்.
“பேசாம அப்பாகிட்ட சொல்லி உனக்கும் அத்தானுக்கும் மேரேஜ் செஞ்சிட சொல்லுவோமா?” என்றதும் தமிழ் வேகமாக
“எனக்கு ஓகே பா..” என்றாள்
“இரு அப்பாட்ட சொல்லுறேன்..” என்றவள் “அப்பா” என்று வாயைத் திறக்கும்முன் அக்காவின் வாயை மூடினாள் தீந்தமிழ்..
“அக்கா.. முதல்ல நீ அப்பா பேசும் போது உன் கவனத்தை எங்க வெச்சிட்டு இருந்தன்னு சொல்லு..”
“அதான் சொன்னேன்ல அம்மு.. காலேஜ்ல நடந்த ஒரு இன்சிடென்ட்ட நினைச்சிட்டு இருந்தேன்னு..” என்றாள் மெதுவாக..
“அது தான் என்னன்னு கேக்குறேன்..” என்றதும் அனைத்தையும் கூறினாள் தளிர்..
“இதுல என்ன இருக்கு.. இதையே ஏன் நீ நினைச்சிட்டு இருந்த?” புரியாமல் கேட்டாள் தமிழ்..
“அது எனக்கும் தெரியலை.. என்னமோ அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லுச்சு.. என்னன்னு தான் புரியலை.. அண்ட் நான் அவரைத் தப்பா வேற நினைச்சி கோபமா பேசிட்டேன். அதுவும் ஒரு மாதிரி உருத்திடுச்சு.. லெக்சரரை ஏதோ ரோட் சைட் ரோமியோ மாதிரி ட்ரீட் பண்ணிட்டேன்..” என்றாள் வருத்தத்துடன்..
“எனக்கு நீ பண்ணது தப்புன்னு தோணவே இல்லை.. உள்ளே நுழைஞ்சதும் பொண்ணுங்களோட பேசிருக்கார்.. உனக்கு அது தப்பா பட்டுருக்கு அவர்கிட்ட அதைக் கேட்டிருக்க.. நீ கோபமா கூட அவரைத் திட்டலையே.. நீ ஏன் இதுக்கு பீல் பண்றன்னு எனக்குப் புரியலை..”
தமிழிற்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை.. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி மாதத்திற்கு ஒருவருடன் சண்டைப் போடுபவளுக்கு தளிரின் கோபம், கோபமாகவே தெரியவில்லை..
மாணவர்களிடம் கூட கோபம் காட்டாத தளிருக்கு, முதல் பார்வையிலேயே அவனிடம் கோபத்தைக் காட்டிவிட்டது வருத்தமாக இருந்தது..
‘சாரி கூட சொல்லாம விட்டுட்டோமே..’ என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.. இதை விட அதிகமாக பின்னாளில் அவனிடம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போவதை அறியாமல்.