அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தெரிந்து கொள்வோம்

lakshmi

Active member
Staff member
#21
புதையலை காக்கும் முதலைகள்

மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை போரின் போது இவைைகள் கொள்ளைையடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கிணறுகள், சுரங்கம் போன்ற ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்தனர்.

அத்துடன் இந்த சொத்துகளை ரகசியமாகவும் பாதுகாத்து வந்தனர். கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன. அப்படி குஜராத் மாநிலத்தில் உள்ள புதையல் ஒன்றை முதலைகள் காவல் காப்பதாக நம்பப்படுகிறது. குஜராத், அகமதாபாத், காந்திகிராமம் போன்ற பகுதிகளை போன்று ஜுனாகத் பகுதி வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றது. சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாம். இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியை சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.

இந்நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. இதனை அடைய 9999 படிகளை உடைய மலைப்பாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.

மிகமுக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கி.மு 320 - ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்ட கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகளில் அழகான நுழைவாயில்கள்,தூண்கள், தண்ணீர் கோட்டைகள் மற்றும் சட்டசபை மண்டபம், தியான மண்டபம் போன்றவை உள்ளன.

இவற்றை கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுக குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது. அத்துடன் குகையின் உள்ளே ஒரு மீட்டர் தூரத்தில் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம். யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். இன்று முதலைகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்து விடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.
 

lakshmi

Active member
Staff member
#22
ஈஸ்டர் திருநாள்


இயேசு கிறிிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீீண்டும் உயிரோடு வந்ததை நினனவு கூறும் நாளே ஈஸ்டர் திருநாள்.


இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி. 27-33-இல் ஏசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் வகையில் கிறூஸ்தவர்களால் கொண்டாடப்படுவது உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்கா
 

lakshmi

Active member
Staff member
#23
புவி தினம்

இன்று உலக புவி தினம் புவியின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்தில் கொண்டு1970 ம் ஆண்டு முதல் புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

புவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு இன்றுடன் 48 வருடங்கள் கடந்த பின்பு தான் நாம் பூமித்தாயை பற்றி நினைத்து பார்க்கிறோம். இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால் தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி உள்ளோம். கடந்த வருடங்களில் எஙகு பார்த்தாலும் பூமி வெப்பமயமாதல், இயற்கை பேரிடர்கள் என்று நாம் நிறைய அனுபவித்து விட்டோம். இனி வரும் காலங்களிலாவது மரங்களை வளர்த்து பூமியை பேணுவோம்?
 

lakshmi

Active member
Staff member
#24
உலக புத்தக தினம்


ஏப்ரல் 23 இன்று உலக புத்தக தினம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் நூலகம் சென்று புத்தகத்தை வாசிப்பது ஒரு வகை அலாதியான சுகம்தான்.


1995 - ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் இந்த சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாள் உலக புத்தக தினம் என்று மட்டும் அல்லாது, புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பிறந்த மற்றும் இறந்த மாமனிதர்களுக்கு மரியாதையும் செய்கின்றனர். குறிப்பாக ஷேக்ஸ்பியர் இந்த நாளில் தான் மறைந்தார்.


புத்தகங்கள் சாகவரம் பெற்றவை, மனிதனை புதுப்பிக்க செய்யும் பண்பு நல்ல புத்தகங்களுக்கு உண்டு. சமூகத்தின் எழுச்சிக்கு புத்தகங்களின் பங்கு உண்டு. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே.
 

lakshmi

Active member
Staff member
#25
தீயில் உருக்குலைந்த தேவாலயத்தில் உயிருடன் இருந்த தேனீக்கள்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள நோட்ரே டேம் என்ற இடத்தில் 850 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க தேவாலயத்தில் ஏப்ரல் 15 ம் தேதி மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. மேலும் தேவாலயத்தின் இரண்டு கோபுரங்களில் ஒன்று முற்றிலும் தீக்கிரையானது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.


மிகப்பெரிய தீ விபத்தில் தேவாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க முள் கிரீடம்,கிங் லூயிஸ் IX அணிந்திருந்த துணி, போன்றவைகள் பத்திரமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தேவாலயத்தின் மேற்கூரை மீது வசித்த சுமார் 2,00,000 தேனீக்கள் தீயில் சிக்கி அழிந்திருக்கும என கருதப்பட்டது. ஆனால் அவை பத்திரமாக இருப்பதாக தேனீக்களை பராமரிப்பவர் தெரிவித்துள்ளார். தேனீக்கள் மேற்கூரைக்கு கீழேயுள்ள ஓர் இடத்தில் பதுங்கி உயிர் தப்பித்துள்ளன. இது பிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

lakshmi

Active member
Staff member
#26
தோஷங்கள் விலகும் நடராஜர் உச்சி கால அபிஷேகம்


மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள் தோறும் செய்து வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சி கால அபிஷேகம் என்று சொல்லப்படும். அபிஷேகத்தின் போது பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, எண்ணெய், நெய், புஷ்பம் போன்ற பதினாறு வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும் ஆவணி,புரட்டாசி மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதியில் நடக்கும். இந்த உச்சிக் கால பூஜையை காண தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
 
Last edited:

lakshmi

Active member
Staff member
#27
நைல் நதிக்கரையில் பழமையான கோவில்


நைல் நதிக்கரையை ஒட்டி உள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 42 அடி உயரம் கொண்ட மூன்றாம் அமென் ஹோடெப் மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.


1970-ம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.

அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.ஒன்று வித்யாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வச்சிலை ஒன்றும், 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வச்சிலை ,ஆராய்ச்சி நடக்கும் இடம் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.?
 

lakshmi

Active member
Staff member
#28
உழைப்பாளர் தினம்

மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தினம் தான். இந்த உலகத்தின் அமைதிக்கு அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் 12 முதல் 18 மணி நேரம் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கபட்டனர். இதை எதிர்த்து, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் கூட்டமைப்பு 8 மணி நேரம் வேலை கோரிக்கையை முன் வைத்து போராடியது. 1886-ம் ஆண்டு மே 1ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவித்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக அமைந்தது.


இந்தியாவில் சென்னையில் பொதுவுடமைவாதியும் தலை சிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் 1923_ல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தினவிழாவை கொண்டாடினார்.


சென்னையில் முதன்முதலாக தொழிலாளர் தினவிழா கொண்டாடிய இடத்தில் 1956_ம் ஆண்டு கர்மவீரர் காமராஜர் சென்னையில் உழைப்பாளர் சிலையை நிறுவினார்.
 

lakshmi

Active member
Staff member
#29
இல்லை ...இல்லை... இல்லை

அல்பேனியாவில் மதங்கள் இல்லை (ரொம்ப நல்ல விஷயம்)

அபுதாபியில் காக்கைகள் இல்லை

பிரான்சில் கொசுக்கள் இல்லை

சுவிட்சர்லாந்தில் ராணுவம் இல்லை

லிபியாவில் நதிகள் இல்லை

முதலைக்கு நாக்கு இல்லை

அத்திமரமும் பலாமரமும் பூப்பதில்லை

பாகிஸ்தான் ஜோர்டான் நதியில் மீன்களே இல்லை
 

lakshmi

Active member
Staff member
#30
தெரிந்து கொள்வோம்

ஆக்டோபஸின் ரத்தம் நீலநிறமாக இருக்கும்

கழுகு எதையும் கொல்லாது,இறந்ததை மட்டும் தின்னும்

தவளை தன் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன

நீரில் நின்று கொண்டே தூங்கும் பிராணி கடல்குதிரை

நத்தைக்கு கால் ஒன்று ஆனால் வயிற்றில் பல் உண்டு

எறும்பிற்கு 5 மூக்குகள் உள்ளன

எட்டுகால் பூச்சிக்கு கண்களும் எட்டு

நாய்களுக்கு வியர்ப்பதில்லை
 

lakshmi

Active member
Staff member
#31
மரகத புத்தர்

வடகிழக்கு சீனத்தில் உள்ள லயோனின் மாநிலத் தலைநகரான ஷென் யாங்கில் மரகதக் கற்களால் ஆன புத்தர் சிலை உள்ளது. இதன் எடை 7ஆயிரம் கிலோ, உயரம் 2 மீட்டர்.


உலகிலேயே மிக உயரமான புத்தர் ஆலயம் சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியான்சு மாநிலத்தில் சாங் சேங் என்னுமிடத்தில் உள்ளது. இதில் 13 தளங்கள் உள்ளன.
 

lakshmi

Active member
Staff member
#32
தலைகீழாக பறக்கும் கழுகு

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அபூர்வ கழுகு உள்ளது. மற்ற கழுகுகளைப் போல் இந்த கழுகு வானில் பறப்பதில்லை தலைகீழாகத் தான் பறக்கிறது. அது பறக்கும் போது வானில் இருந்து மல்லாக்காக பூமியில் விழுவது போல் தான் இருக்கும் ஆனால் தொடர்ந்து கவனித்தால் அது தலைகீழாக பறப்பது தெரியும்.
 

lakshmi

Active member
Staff member
#33
இரு மகான்கள்

நமது இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் இந்த புண்ணிய பூமியில் அவதரித்து இருக்கிறார்கள், அவர்களில் இருவர் ஆதிசங்கரர், ராமனுஜர் ,இன்று அவர்கள் இருவரின் அவதாரதினம்.

இருவரும் பல நூற்றாண்டு இடைவெளியில் தோன்றியவர்களாக இருந்தாலும் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சென்னை ஶ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பகவான் பெருமாளின் அவதாரமாக தோன்றியவர் மகான் ஶ்ரீராமானுஜர்.

கேரள மாநிலம் காலடி என்னும் சிறிய கிராமத்தில் வைகாசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆதிசங்கரர்.

கடவுளின் முன் அனைவரும் சமம் என்னும் சமத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியவர் ஶ்ரீராமானுஜர்.

இருவரும் முதலில் பயின்றது அத்வைதமே,ராமானுஜர் அத்வைதத்தில் இருந்த சாராம்சத்தை ஆராய்ந்து மக்களுக்கு எளிதாகச் சொல்ல விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார்.

விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் இரண்டுக்கும் பாஷ்யம் எழுதியது ஆதிசங்கரரே.
 

lakshmi

Active member
Staff member
#34
மோகினி ஏகாதசி

இன்று அதாவது மே 15 வைகாசி மாதம் வளர்பிறையில் சுக்ல பட்ச தினத்தில் வரும் ஏகாதசியை மோகினி ஏகாதசி என்று சொல்கிறார்கள்.

இந்து இதிகாசங்களின் படி விஷ்ணு மோகினியாக வடிவம் எடுத்த நாளை மோகினி ஏகாதசி என்று கூறுகிறார்கள்.

இந்த நாளில் விரதமிருந்து துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, நாளை துவாதசி திதியன்று விரதம் முடிக்க வேண்டும்.
 

lakshmi

Active member
Staff member
#35
புத்தர்

நேபாள நாட்டில் லும்பினியில் மாயாதேவி ஆலயம் உள்ளது. இந்த இடத்தில் தான் புத்தபிரான் அவதரித்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். புத்தர் அவதரித்தது கி.மு. 563 ஆம் ஆண்டு. புத்தர் தன் தர்ம நெறிகளை முதன் முதலில் உபதேசித்த இடம் மான்வனம் என்ற இடம் ஆகும்.
 

sudharavi

Administrator
Staff member
#36
லஷ்மி நிறைய புதிய விஷயங்களை பகிர்ந்திருக்கீங்க...மிகவும் நன்றிமா..தொடர்ந்து பகிருங்கள் ...
 

lakshmi

Active member
Staff member
#37
லஷ்மி நிறைய புதிய விஷயங்களை பகிர்ந்திருக்கீங்க...மிகவும் நன்றிமா..தொடர்ந்து பகிருங்கள் ...
Thank you sis???
 

lakshmi

Active member
Staff member
#38
காஞ்சி மகா பெரியவா அவதார தினம்

மகா பெரியவா என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படுபவர் காஞ்சி ஶ்ரீகாமகோடி பீடத்தின் 68 -வது பீடாதிபதியான ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்த தினம் இன்று.

தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி அனுக்ஷ நட்சத்திரத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த மகா பெரியவா என்று அழைக்கப்படும் மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும்.

நாடும் உலகமும் போற்றும் மாபெரும் துறவி,எளிய தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.ஆதி சங்கரரால் தோற்றிவிக்கப் பட்ட பரம்பரையில் இருந்து வந்த ஞானகுரு.


நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து பக்தர்களுக்கு நன்னெறி புகட்டி அவர்களை நல்வழி படுத்திய மகான் அவர். மகா பெரியவா அவதரித்த தினமான இன்று அவரை வழிபட்டு பெரியவா ஆசியை வேண்டுவோமாக.
 

lakshmi

Active member
Staff member
#39
பூலோக கற்பக விருட்சம்


பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள். இதன் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன் தருவதினால் பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது.

வீடு கட்ட மரமும், உண்பதற்கு காய் கனிகளும், முன் காலத்தில் செய்திகளை ஆவணப்படுத்த அதன் ஓலைகளும், விசிறி, நார்ப் பொருட்கள், மருத்துவ குணம் கொண்ட பதநீர் என்று பனை மரத்தின் அத்தனை பாகங்களும் நமக்கு பயன் படுகிறது. இவை சிறந்த உயிர் வேலியும் கூட அதனால் இதை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள்.
 

lakshmi

Active member
Staff member
#40
அக்னிஜாதர்

முருகனை சாதாரணமாக ஒரு தலையுடனோ அல்லது ஆறுமுகத்துடனோ தரிசித்திருப்போம். ஆனால் இரண்டுதலை,மூன்றுதலை,நான்குதலை,ஐந்துதலை,பத்துதலை,பதினோருத் தலைகளையுடைய முருகனின் திருவடிகளும் உண்டு.


இவற்றுள் இருமுகங்களுடன் காட்சித் தரும் முருகனை அக்னிஜாதர் என்பார்கள். ஈரோட்டிலிருந்து 32கி.மீ தொலைவில் உள்ள சென்னிமலையில் அக்னிஜாதரை தரிசிக்கலாம்.