திக் திக் நிமிடங்கள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஹனிகீதன் அவர்கள் "திக் திக் நிமிடங்கள்" என்கிற தலைப்போடு இணைகிறார்....
 
#3
அழகான அன்பர்களே!
நான் ஹனிகீதன் இந்த தளத்திற்கு புதுசு.தளம் மட்டும் இல்லை நானே இங்க புதுசு தானுங்கோ!!
நான் திரில்லர், காமெடி, காதல் என்ற கலவையில் எழுதும் ஓர் ஜீவன்.
கொஞ்சம் ரசிக்கும் படி தான் எழுதுவேன் அதனால பயப்படாம படிங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே!
கதைகள் ரசிப்பதற்கே!
கதைத்திரி படிப்பதற்கே!
கமெண்ட் திரி கமெண்டுவதற்கே!
அதனால எல்லோரும் வந்து பார்த்து ரசித்து விட்டுப் போகாம மறக்காம லைக்க யாவது தட்டி விடவும்
 
#4
View attachment mbi-slide.jpg

அழகான அன்பர்களே !
திக் திக் நிமிடங்களில் இருந்து ஒரு சின்ன பிட்டு படிச்சுட்டு கமெண்ட் சொல்லவும்

அந்த அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையில் பல வயர்களும் , பல தரப்பட்ட போன்களின் பாகங்களும் , சிப், மற்றும் போன் சம்பந்தப்பட்ட பல பொருட்களும் சிதறி இருக்க அதன் நடுவில் அமர்ந்து ஒருவன் அதை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் இருந்த தீவிரம் அவன் கைகளில் தெரிந்தது . வேகமாக எதையோ செய்தவன் சற்று நேரத்தில் அட்டகாசமாக சிரித்தான்.

“ வெற்றி ! வெற்றி ! நான் வெற்றிகரமாக முடிச்சுட்டேன் “ என்று கூறியவன் தன் கைகளில் இருந்த போனை தன் கண்முன்னே கொண்டு வந்து அதை பழிவெறியோடு பார்த்தபடி

“ உன்னை வைத்து இந்த மானிட இனத்தையே ஒரு வழி ஆக்குகிறேன் பாரு “ என்று கத்தியவன் அதனை எடுத்து தன் உதட்டின் அருகே கொண்டு சென்று முத்தம் ஒன்றை வைத்தான்.
__________________________________________________________________________________
என்ன சித்தா ! பொய் சொல்ல யோசிச்சிட்டு இருக்கியா நீ ?

எனக்கு தெரியும் ! நீ அவங்க கூட dating தான போன? – நவின்

என்னது rating ஆ அப்படினா என்ன ? – ரதன்

அய்யோ சித்தா ! அதுக்கு பேர் dating .அப்படினா பொண்ணு கூட பழகி பார்க்குறது என்று நவின் கூற

ஆமா ! இது எல்லாம் எங்கடா கத்துக்குற ? – ரதன்

டிவில பார்த்தேன் சித்தா ! அக்காவும், அண்ணாவும் இப்படி தான் டிவில சொன்னாங்க – நவின்

சரியா ! போச்சு போ ! நவினு dating அவங்க எப்படி பண்ணாங்கனு சித்தாக்கு கொஞ்சம் சொல்லி கொடுக்கிறாயாடா ! உன் இடியா வச்சு சித்தா சித்திய கரெக்ட் பண்றேன் . – ரதன்

இடியா இல்லா சித்தா அது ஐடியா . உனக்கு இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்தே நான் ஒரு வழியாகிடுவேன் போல என்று நவின் அலுத்துக் கொள்ள

சரியா! தடியா ! பிகு பண்ணாம அந்த dating பத்தி சொல்லுடா என்று ரதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு விளக்கமாறு பறந்து வந்து அவன் முன் விழுந்தது.
_________________________________________________________________________________
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையத்திற்கு அன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் சமீப காலமாக பலர் தற்கொலை செய்து இறந்து போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு வாசகம் மையிட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்தவர்கள் அருகில் செல்போன் இருந்ததாகவும்
அதில் சவாலே சமாளி
இல்லையேல் நீ காளி
என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
 

Attachments

#5
View attachment 546

அழகான அன்பர்களே !
திக் திக் நிமிடங்களில் இருந்து ஒரு சின்ன பிட்டு படிச்சுட்டு கமெண்ட் சொல்லவும்

அந்த அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையில் பல வயர்களும் , பல தரப்பட்ட போன்களின் பாகங்களும் , சிப், மற்றும் போன் சம்பந்தப்பட்ட பல பொருட்களும் சிதறி இருக்க அதன் நடுவில் அமர்ந்து ஒருவன் அதை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் இருந்த தீவிரம் அவன் கைகளில் தெரிந்தது . வேகமாக எதையோ செய்தவன் சற்று நேரத்தில் அட்டகாசமாக சிரித்தான்.

“ வெற்றி ! வெற்றி ! நான் வெற்றிகரமாக முடிச்சுட்டேன் “ என்று கூறியவன் தன் கைகளில் இருந்த போனை தன் கண்முன்னே கொண்டு வந்து அதை பழிவெறியோடு பார்த்தபடி

“ உன்னை வைத்து இந்த மானிட இனத்தையே ஒரு வழி ஆக்குகிறேன் பாரு “ என்று கத்தியவன் அதனை எடுத்து தன் உதட்டின் அருகே கொண்டு சென்று முத்தம் ஒன்றை வைத்தான்.
__________________________________________________________________________________
என்ன சித்தா ! பொய் சொல்ல யோசிச்சிட்டு இருக்கியா நீ ?

எனக்கு தெரியும் ! நீ அவங்க கூட dating தான போன? – நவின்

என்னது rating ஆ அப்படினா என்ன ? – ரதன்

அய்யோ சித்தா ! அதுக்கு பேர் dating .அப்படினா பொண்ணு கூட பழகி பார்க்குறது என்று நவின் கூற

ஆமா ! இது எல்லாம் எங்கடா கத்துக்குற ? – ரதன்

டிவில பார்த்தேன் சித்தா ! அக்காவும், அண்ணாவும் இப்படி தான் டிவில சொன்னாங்க – நவின்

சரியா ! போச்சு போ ! நவினு dating அவங்க எப்படி பண்ணாங்கனு சித்தாக்கு கொஞ்சம் சொல்லி கொடுக்கிறாயாடா ! உன் இடியா வச்சு சித்தா சித்திய கரெக்ட் பண்றேன் . – ரதன்

இடியா இல்லா சித்தா அது ஐடியா . உனக்கு இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்தே நான் ஒரு வழியாகிடுவேன் போல என்று நவின் அலுத்துக் கொள்ள

சரியா! தடியா ! பிகு பண்ணாம அந்த dating பத்தி சொல்லுடா என்று ரதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு விளக்கமாறு பறந்து வந்து அவன் முன் விழுந்தது.
_________________________________________________________________________________
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையத்திற்கு அன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் சமீப காலமாக பலர் தற்கொலை செய்து இறந்து போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு வாசகம் மையிட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்தவர்கள் அருகில் செல்போன் இருந்ததாகவும்
அதில் சவாலே சமாளி
இல்லையேல் நீ காலி
என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
 
#6
அழகான அன்பர்களே ! திக் திக் நிமிடங்கள் முதல் அத்தியாயம் போட்டாச்சு படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க தங்கம்ஸ்

நிமிடம் : 1
அந்த அறையின் சுவர் முழுவதும் பல வித காகிதங்களால் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஒட்டப்பட்ட காகிதம் பலதரப்பட்ட நாளிதழ்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாக இருந்தது.

அதில் சில வரிகள் சிவப்பு மையினால் கோடிடப்பட்டு இருந்தது.

அந்த அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையில் பல வயர்களும் பல தரப்பட்ட போன்களின் பாகங்களும் , சிப், மற்றும் போன் சம்பந்தப்பட்ட பல பொருட்களும் சிதறி இருக்க, அதன் நடுவில் அமர்ந்து ஒருவன் அதை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் இருந்த தீவிரம் அவன் கைகளில் தெரிந்தது, வேகமாக எதையோ செய்தவன் சற்று நேரத்தில் அட்டகாசமாக சிரித்தான்.

“ வெற்றி ! வெற்றி ! நான் வெற்றிகரமாக முடிச்சுட்டேன்’’ என்று கூறியவன் தன் கைகளில் இருந்த போனை தன் கண்முன்னே கொண்டு வந்து அதை பழிவெறியோடு பார்த்தபடி

“ உன்னை வைத்து இந்த மானிட இனத்தையே ஒரு வழி ஆக்குகிறேன் “ என்று கூறியவன் அதனை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தம் ஒன்றை வைத்தான்.
________________________________________________________________________________________
எரம்பட்டி கிராமத்தில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு, வேட்டியை தன் காலால் தூக்கிவிட்டு தன் கைகளில் அதன் நுனியை பிடித்து வேட்டியை மடித்து கட்டி, தன் கையில் அணிந்திருந்த காப்பினை கையில் ஏத்தி விட்ட படி, மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே தன் நவீன மாடல் புல்லட்டில் ஏறி அமர்ந்தான் தவரதன்.

அவன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பிக்கும் போதே ஓடி வந்தான் ஒருவன்.

“ அய்யா ! பெரிய அய்யா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்று மூச்சு வாங்கியபடியே அவன் சொல்ல

டேய் ! தள்ளி போ ! நீ விட்ற மூச்சு காத்துல மின்சாரம் எடுக்கலாம் போல முதல உட்கார்ந்து உன்னை (ராஸ்கல்) பண்ணிக்கடா என்று ரதன் கூற

சித்தா ! அது ரிலாக்ஸ் என்று அருகில் ஒரு சிறுவன் சொல்ல
அதை கேட்டு கோபத்தோடு திரும்பினான் ரதன்.

டேய் ! வாடா !என் அண்ணன் பெத்த ரத்தினமே !என்னை பிடிச்சு நடக்க பழகிட்டு என்னையே நிறுத்துவியோ நீ !

ஏதோ இரண்டு, மூனு வார்த்தை இங்கிலிஷ்ல படிச்சுட்டா நீ பெரிய இவனா ஆகிடுவியோ? குறை கண்டுபிடிச்சு சொல்ற என்று கோபத்தோடு அவன் கத்த

சித்தா ! தப்ப யார் சுட்டிக் காட்டினா என்ன ? அதுக்கு பெரிய ஆளா இருக்கனும்மா என்ன? என்று நவின், ரதனின் அண்ணன் மகன் கூற

என்னடா ? ஆழாக்கு ! இப்படி பெரிய மனுசன் மாறி பேசுற ! இப்படிலாம் பேசுறதுக்கு உனக்கு யார்டா சொல்லி கொடுக்குறா ?

உனக்கு இவ்வளவு அறிவு கிடையாதே ! ஏன்னா உன் அப்பன் லட்சணம் அப்படி . அப்புறம் உன் அம்மாக்கும் இந்த அளவு அறிவு கிடையாது . இது எல்லாம் அந்த ஊம கோட்டான் பண்ற வேலையா தான் இருக்கும்? ஊம மாதிரி இருந்துகிட்டு எல்லாரையும் மாட்டி விட அவளுக்குத் தான் நல்லா தெரியும் என்று ரதன் கோபத்தோடு கூற

சித்தா! தேவையில்லாம சித்திய திட்டாதீங்க ! அவங்க ஒன்னும் சொல்லித் தரல அவங்க பாவம் அப்பாவி .

சித்தி உங்கள மாதிரி எல்லாம் கிடையாது அமைதி. காலேஜ் எல்லாம் போய் படிச்சுட்டு இருக்காங்க. நீங்க தான் சரியா படிக்காம 10 வது பெயிலாகி , தாத்தா மில்லுல போய் வேலை பார்க்காம வெட்டியா உட்கார்ந்து இருக்கீங்க – நவின்

அடிங்க ! யார்டா இதை எல்லாம் உனக்குச் சொன்னா ! – ரதன்

அப்பத்தா சொல்லுச்சு சித்தா- நவின்

அப்பத்தா ! என்று பல்லை கடித்தவன்

ஆமா மில்லுல உனக்கு என்னடா வேலை – ரதன்

சித்தி கூட கோவிலுக்கு வந்தேன் சித்தா ! அப்ப நீ வண்டியில ஏறத பார்த்து வந்தேன் .

சித்தா ! சித்தா! நானும் உன் கூட வண்டியில் வரேன் என்று நவின் கூற

அதெல்லாம் முடியாது ! உன் வருங்கால சித்திய தவிர வேறு யாரையும் நான் வண்டியில் ஏத்த மாட்டேன்டா – ரதன்

என்னது யாரையும் ஏத்த மாட்டியா ? அப்ப நேற்று வண்டியில் ஒரு அக்காவ கூட்டிட்டு போனத நான் பார்த்தேன் சித்தா ! யார் அது ? – நவின்

அய்யோ ! பயபுள்ள பார்த்துருச்சா ! வீட்டுல சொன்னா பிரச்சனை ஆகிடுமே இப்ப என்ன பண்றது சமாளிடா ரதன் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க

என்ன சித்தா ! பொய் சொல்ல யோசிக்குறீயா ? எனக்கு தெரியும் நீ அவங்க கூட dating தான போன – நவின்

என்னது rating ஆ அப்படினா என்னடா ? – ரதன்

அய்யோ சித்தா ! அதுக்கு பேர் dating .அப்படினா பொண்ணு கூட பழகி பார்க்குறது என்று நவின் கூற

ஆமா ! இது எல்லாம் எங்கடா கத்துக்குற ? – ரதன்

டிவில பார்த்தேன் சித்தா ! அக்காவும், அண்ணாவும் இப்படி தான் சொன்னாங்க – நவின்

சரியா ! போச்சு போ ! நவினு dating அவங்க எப்படி பண்ணாங்கனு சித்தாக்கு கொஞ்சம் சொல்றீயா ! உன் இடியா வச்சு சித்தா சித்திய கரெக்ட் பண்றேன் . – ரதன்

இடியா இல்லா சித்தா அது ஐடியா . உனக்கு இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்தே நான் ஒரு வழியாகிடுவேன் போல என்று நவின் அலுத்துக் கொள்ள

சரியா! தடியா ! பிகு பண்ணாம அந்த dating பத்தி சொல்லுடா என்று ரதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு விளக்கமாறு பறந்து வந்து அவன் முன் விழுந்தது.
__________________________________________________________________________________

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையத்திற்கு அன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

அதில் சமீப காலமாக பலர் தற்கொலை செய்து இறந்து போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அருகில் செல்போன் இருந்ததாகவும்

அதில் சவாலே சமாளி
இல்லையேல் நீ காலி

என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது
திக் திக் தொடரும் ....
 
#7
நிமிடம் : 2
அங்கே காளி ரூபத்தில் நின்று இருந்தார் சாவித்ரி அம்மா

அட ! எடுப்பட்ட பயலே !
கழுதைக்கும் பரதேசம் குட்டிச்சுவரா நீ இருக்குறது போதாதா ? அந்த சின்னஞ்சிறுக்கு என்னத்தடா சொல்லி கொடுத்துட்டு இருக்க !

உன்னை போல அவனையும் தறுதலையா ஆக்கப் போறியாடா ? என்று சாவித்ரி கத்த

அப்பத்தா ! நான் ஒன்னும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கல ,அவன் தான் எனக்கு பாடம் சொல்லிக்குடுத்துட்டு இருக்கான் .

என் பவுடர் தெரியாம என் கிட்ட கத்திகிட்டு இருக்க நீ ! ஓவரா பேசுனே அவ்வளவுதான் ! என்று அவன் அப்பத்தாவிடம் எகிற

சருகை கண்டு தணல் அஞ்சுமாடா ! போடா! பொசகட்ட பயலே ! என்று சாவித்ரி கூறும்பொழுதே நவின் பேசினான்.

சித்தா ! அது பவுடர் இல்ல பவர் என்று நவின் கூற சிரிப்பு சத்தம் அருகில் கேட்டது . வேகமாக சத்தம் வந்த திசை நோக்கி திரும்பிப் பார்த்தான் ரதன்.

அங்கே பாவாடை சட்டை தாவணியில், நெற்றியில் சிறு பொட்டு வைத்து, திருநீறு கீற்றை சிறு கோடாக இட்டு, தலையில் மல்லிகை பூ வைத்தபடியே வந்து கொண்டிருந்தாள் அம்பரி.

அவள் வருவதை நெற்றி சுருங்கியபடியே இவன் பார்த்துக் கொண்டிருக்க

நவின் அவன் கவனத்தை திருப்பினான்.

சித்தா ! என்று நவின் அழைக்க திரும்பிய ரதன் , நவின் தலையில் லேசாக தட்டினான். அவன் அப்படி செய்யவும் நவின் கத்த

அந்த சிறுச எதுக்குடா அடிக்குற ? என்று அப்பத்தா அதற்கும் கத்தினார்.

. அப்பத்தா ! பொட்ட புள்ள முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறான் . அதனால லேசா தட்டினேன். –ரதன்

டேய் ! உனக்கு தெரியாத விசயத்தை எதுக்கு பேசுவானேன்.அப்புறம் அசிங்கப்படுவானேன்!- அப்பத்தா

சும்மா இரு அப்பத்தா ! நீயும் அவனை மாதிரி அசிங்கப்படுத்துற ! நல்லா இல்ல சொல்லிட்டேன். நீ வேணா பாரு! அப்பத்தா! நான் பின்னாடி நல்லா வருவேன் – தவரதன்

ஓண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுனு சொல்வாங்க நீ முதல ஒரு இடத்துல நில்லுடா! அப்புறம் நல்லா வரத பாக்கலாம் என்று அப்பத்தா கூற

அவர் அப்படி கூறியதும் அம்பரி சிரித்தாள். அவள் சிரித்ததும் அவளை முறைத்த ரதன்

அப்பத்தா! அவள சிரிக்க வேண்டாம்னு சொல்லு ! அப்புறம் கோவத்துல ஏதாவது பண்ணிடப் போறேன் – ரதன்

அவன் அப்படி கூறியதும் வேகமாக தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் அம்பரி.

ஏன்டா ! அவள கத்துற . உன் வவுசு அப்படி . ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி சுத்திட்டு , பேசிட்டு இருப்பியா நீ ?

கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது அது மாதிரி நீ இங்கிலிஷ் பேசுனதும் பெரியவனா ஆகிருவீயோ ?என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்.

அரிசி மில்ல பார்க்கச் சொன்னா எங்கடா கிளம்பிட்ட
“ நாய்க்கு நிக்கவும் நேரமில்லை .... என்று அவர் ஏதோ கூற வர ரதன் இடையிட்டான்.

அப்பத்தா என்னை ரொம்ப மேரேஞ் பண்ற நீ ! அப்பா கூப்பிட்டு இருக்காரு அதான் அவரை பார்க்கப் போறேன் என்று ரதன் கூற

சித்தா ! அது மேரேஞ் இல்ல டேமேஜ் என்று நவின் அவன் சொன்னதை திருத்த முயல

அடிங்க ! என் பக்கத்தில் உட்கார்ந்து வாத்தியார் மாதிரி திருத்திட்டா இருக்க ! போயிரு அந்த பக்கம் என்று நவினை கத்தியவன்

‘பயபுள்ள பிகர் முன்னாடி அசிங்கப்படுத்துது என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் தன் பைக்கில் ஏறி அமரப் போக
சாவித்ரியம்மா அவன் முன்னாடி வந்து நின்றார் .

அய்யா ! ராசா ! . ராக்காயிக்கு உடம்பு சரியில்லாம இருக்காம்! நான் ராக்காயி வீடு வரை போய் , அவள ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன். இவள கொஞ்சம் அவ வீட்டுல இறக்கி விட்டுட்டு போயா.புள்ள தனியா போக பயப்படுது என்று அவர் கூற

அதெல்லாம் முடியாது ! இந்த வண்டியில் என் உடுப்பிய தான் ஏத்துவேன் . இவளை ஏத்த முடியாது . நடந்து போகச் சொல்லு அப்பத்தா .இல்லை உனக்கு துணையா இருக்கச் சொல்லு . நீ மட்டும் எப்படி தனியா வருவ . என்று அவன் கூற

அத்தான்! அது உடுப்பி இல்ல வுட்பி என்று அம்பரி கூற

அவளை முறைத்துப் பார்த்தான் ரதன்.அவன் அப்படி பார்த்ததும் அப்பத்தா முதுகுக்கு பின் ஒளிந்து கொண்டாள் அம்பரி.

இந்தா ! கூட்டிட்டு போ ராசா ! கொஞ்ச தூரம் தான இருக்கு . என்னை பத்தி கவலையில்லையா ராசா ! ராக்காயி வீட்டுல வந்து கூப்பிட்டுக்க உன் அப்பன்கிட்ட சொல்லிட்டேன். அவன் சரினு சொல்லிட்டான் .

இந்த புள்ள தனியா போறேன்னு சொல்லுராயா !காலம் கெட்டு கிடக்கு ராசா ! நீனா பத்திரமா கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடுவ ! ராசா !என் தங்கம்ல! சரி சொல்லு யா என்று அவர் கொஞ்ச ஆரம்பிக்க (இனி வேண்டாம்னு சொல்வானா நம்ம ஹீரோ சார் ) சரி என்றான்.


ஆனால் அம்பரிக்குத் தான் பயம் பிடித்துக் கொண்டது.

வேண்டாம் பாட்டி ! அப்பா போன் பண்ணா வந்துடுவாரு என்று அம்பரி தயங்கியபடியே கூற

அட ராசாத்தி ! உன் அப்பனுக்கு எதுக்கு தேவையில்லாம அலைச்சல். இவன் வெட்டியாத்தான இருக்கான் . அப்புறம் என்ன ! இவன் கூட்டிட்டு போவான் என்று அவர் கூற

அப்பத்தா ! நான் ஒண்ணும் வெட்டியா இல்லை! மில்லை பார்த்துக்குறேன் என்று அவன் கூற

எங்க நீ பார்த்துக்குற ? எல்லாம் என் மகன் தான் பார்த்துக்குறான் ! நீ வெட்டியா உக்காந்து எந்திரிச்சுட்டு வர

“ ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்னு சொல்வாங்க ‘’

ஆனா எங்க ? எல்லாத்தையும் உனக்கு என் மகன் விளக்க வேண்டியிருக்கு என்று அவனை திட்டியவர் ரதன் முறைத்ததை கண்டுகொள்ளாமல் அம்பரியிடம் திரும்பினார் .

நீ பயப்படாம போமா ! அவன நான் பார்த்துக்குறேன் . அவன் ஏதாவது வம்பு பண்ணா சொல்லு , அவனை உண்டு இல்லைனு! பண்ணிடுறேன் என்று அவர் கூற

இவன் முறைத்துக் கொண்டே அவளை பைக்கில் ஏறச் சொன்னான்

தயங்கி தயங்கி அவன் அருகில் பட்டும் படாமல் அவள் தள்ளி அமர ,நவினை வண்டியின் முன் அமர வைத்த ரதன் அவன் அமர்ந்ததும் இவன் சற்று தள்ளி அமர, அவள் மேல் லேசாக உரசிக் கொண்டு அமர்ந்தான்.

அவன் அப்படி அமர்ந்ததும் வேகமாக பின்னால் நகர்ந்தாள் அம்பரி.

அவள் அப்படி செய்ததும் இவன் பொறிய ஆரம்பித்துவிட்டான்.

“ இன்னும் கொஞ்சம் தள்ளி அமர்ந்தா ரோட்ல போய் தான் விழுவடி!”

அடச்சீ ! ஒழுங்கா உட்கார்! இவ பெரிய ரதிதேவி இவள உரச நாங்க தவம் கிடக்குறோம் . இவ மேல உரசியதும் அம்மையார் அப்படியே கரைஞ்சிடுவா ?

ஒழுங்கா உட்காருடி முட்டக்கணி ! என் தோல்பட்டயை பிடிச்சுக்க இல்ல நான் பிரேக் போட்டா கீழ போய் விழுந்துடுவ ,அப்புறம் உன் அக்காவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது என்று ரதன் கத்த

என் அக்காவ எதுவும் சொல்லாதீங்க அத்தான் என்று கொஞ்சிக் கொண்டே சொன்னாள் அம்பரி.

சரிங்க அம்பரி தேவியாரே! என்று அவளை மாதிரியே கொஞ்சிப் பேசிக் காண்பித்தான் தவரதன்

கிண்டல் பண்ணாதீங்க அத்தான் என்று அதற்கும் அம்பரி சிணுங்க

சரிடி !முட்டக்கணி !சிணுங்காதடி என்று அவளிடம் வம்பு செய்தபடியே பைக்கை அவன் ஸ்டார்ட் செய்ய பைக்கின் வேகம் அதிகரித்ததும் அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.

அத்தான் மெதுவா போங்க என்று அம்பரி பயந்தபடியே கூற

அடியே ! வண்டியில் மெதுவா போறதுக்கு நீ பேசாம நடந்தே போகலாம். பைக்கே வேகமாக போறதுக்குத்தான் . இவ வேற – ரதன்

எனக்கு பயமா இருக்கு அத்தான் – அம்பரி

பயமா இருக்கா ! அப்ப ஒண்ணு செய் ! என்னை கட்டிபிடிச்சு உட்கார்ந்துக்க பயம் போயிடும் – ரதன்

அவன் அப்படி கூறியதும் முட்டக்கண்ணை திறந்து இவள் பேய் முழி முழிக்க

அதை தன் முன்னால் இருந்த கண்ணாடி மூலம் பார்த்த ரதன் சிரித்துக் கொண்டே

“ ஏன்டி எது சொன்னாலும் நம்பிடுவியா ? அப்படி எல்லாம் நீ செய்ய வேண்டாம் . ஒழுங்கா உட்காரு . மெதுவாத்தான் போவேன். நீயே பிடிச்சாலும் எனக்கு வேண்டாம்டி . உன்னை மாதிரி தயிர் சாதம்லாம் எனக்கு வேண்டாம். உன்னை வச்சு ஊறுகாய் கூட போட முடியாதுடி .நீ சரியான கெஸ்ட் பெஃல்லோ.” – ரதன்

சித்தா! அது வேஸ்ட் பெஃல்லோ – நவின்

அவன் அப்படி சொன்னதும் அவன் தலையில் கொட்டிய ரதன்

முன்னாடி பாருடா ஆழாக்கு ! பெரியவங்க பேசும் போது எதுக்கு மூக்க நுழைக்கிற என்று அவன் கூற

அம்பரி வேகமாக “ என்னை வச்சு எப்படி ஊறுகாய் போட முடியும் ? என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டாள்.

ரதன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

ஏன் அத்தான் தலையில் அடிச்சுக்குறீங்க? எனக்கு பதில் சொல்லுங்க ? என்று அம்பரி கூற

வாய மூடிட்டு இப்ப நீ வரியா? இல்ல சேற்றுல தள்ளிவிட்டுட்டு போகவா ? அப்படியே உருண்டுகிட்டே வீட்டிற்க்கு போய் சேருவ என்று அவன் கூற

அம்பரி வாயை வேகமாக மூடிக் கொண்டாள்.
__________________________________________________________________________________
சென்னையில் தன் வீட்டில் 20 வயது மதிப்புடைய ஒருவன் செல்லில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு குறுஞ்செய்தி வர

அது அவன் கவனத்தை ஈர்த்தது. . வேகமாக அவன் அதை திறந்து பார்க்க அதில் ஒரு கோமாளி பொம்மை ஒன்று தன் கையில் இருந்த சக்கரத்தை சுற்றி விட அது வேகமாக சுழன்றது . அதன் சுழற்சியை பார்த்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அதன் போக்கிற்கு அடிமையாகிப் போனான்.

விளையாட்டை வெறி பிடித்தவன் போல் ஆடியவன் சற்று நேரத்தில் தானாக எழுந்து சென்று தன் வீட்டின் மொட்டை மாடியின் மேலே சென்று நின்றான். நின்றவன் அடுத்த நிமிடத்தில் கொஞ்சம் கூட தயங்காமல் கீழே குதித்தான்.

திக் திக் தொடரும்
 
#8
அழகான அன்பர்களே !

திக் திக் நிமிடங்களில் இருந்து ஒரு சின்ன பிட்டு படிச்சுட்டு கமெண்ட் சொல்லவும்


வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தான் அவன். வந்தவன்
தோட்டத்திற்குள் சென்று பூக்களை வருடிவிட்டு கீழே அமர்ந்து மண்ணை கையில் எடுத்துப் பார்த்தபடியே பேசினான்.

“ பூமாதேவியே ! நீயும் எவ்வளவு காலம் தான் எங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாய் ?

ஆனால் எப்படித்தான் உன்னை குடைந்து தண்ணீரை எடுக்கிறார்களோ இந்த மனிதர்கள் ? என்று பேசியவன் அதை தொடர்ந்து குருவிக் கூட்டின் அருகில் சென்றான்.

அதை வருடியபடியே பேசினான்

“ சிட்டுக்குருவியே ! உன்னை அழித்தவர்களை நான் அழிக்க வேண்டாமா ? இதோ உனக்கான அஞ்சலி ! என்று ஒரு காகித துண்டினை அந்த கூட்டின் அருகில் வைத்தான் .அதில் ஒருவன் இறந்து கிடந்த புகைப்படம் இருந்தது . படத்தை வைத்துவிட்டு

உள்ளே சென்றவன் தன் போனை உயிர்பிக்க வந்து நின்றான் கோமாளி மனிதன்.
_______________________________________________________________________________________.
காரில் இருந்து இறங்கிய யுவதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அவன் அப்படி பார்ப்பதை கண்ட அம்பரிக்கு கோபம் வந்து தன் விரல் நகத்தை கடித்து துப்பத் தொடங்கினாள்.

நீ இன்னைக்கு சரியில்லையேடி என்னாச்சு உனக்கு? . ஆமா ! உன் முட்டக்கண் ஏன் இன்னைக்கு இப்டி அலைபாயுது ? என்று ரதன் கேட்க

அப்படியெல்லாம் இல்லை அத்தான் என்று மழுப்பியவள் தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

அத்தான் ! அது வந்து என்று அம்பரி இழுக்க

என் அப்பா வேற அங்க காத்துட்டு இருப்பார் . லேட்டா போறதுக்கு வேற கத்துவார். போய் அவர வேற சமாதனப்படுத்தனும் , லோட் செக் பண்ணனும். சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி அம்பு ! – ரதன்

அவன் அப்படி சொன்னதும் வேகமாக பேசினாள் அம்பரி.

அத்தான் ! நீங்க அன்னைக்கு கேட்டதுக்கு எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடிவிட

ரதன் யோசனையில் நின்றான்
 
#9
நிமிடம் :3

அம்பரியை பைக்கில் ஏற்றிச் சென்றவன் ஒரு பெரிய வீட்டின் முன் வண்டியை நிறுத்த ,வேகமாக அதில் இருந்து இறங்கி வீட்டிற்குள் ஓடினாள் அம்பரி .

அவள் சென்றதும் நவினிடம் திரும்பிய ரதன்

“ ஏண்டா ஆழாக்கு ! இறக்கிவிட்டவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாம ஓடுறாடா உன் சித்தி ? என்னாச்சுடா அவளுக்கு ?"– ரதன்

சித்தா! உன்னை பார்த்து பயந்து ஓடுறா சித்தி – நவின்

ஏன்டா ! நான் என்ன அவ்வளவு கெரர் ஆவா இருக்கேன் – ரதன்

அது டெரர் சித்தா ! – நவின்

அட அதத்தான்டா சொல்லிட்டு இருக்கேன் என்று அவன் இங்கு பேசிக் கொண்டிருக்க

ஒரு பெரியவர் வீட்டிற்குள்ளிருந்து வந்தார் .

நவின் செல்லம்! என்று நவினை கொஞ்சியவர் ரதனிடம் திரும்பினார்.

“ வாடா மாப்பிள்ளை ! என்ன அங்கேயே நின்னுட்ட ,வீட்டிற்குள் வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு போயா !"என்று அம்பரியின் தந்தை வீரபாண்டியன் அவனை வீட்டுக்குள் கூப்பிட

இல்லை மாமா ! இருக்கட்டும்! இன்னொரு நாள் வரேன் .அப்பா மில் வேலையா கூப்பிட்டு இருக்கார் ,போகணும் மாமா என்று அவன் கூற

அட வாப்பா ! ஒரு கப் டீ குடிக்குறதுக்கு என்ன நேரம் ஆகிடப் போகுது என்று அவர் வம்படியாக கூப்பிட, வேறு வழியில்லாமல் வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான் ரதன்.

அதற்குள் நவின் ,
"தாத்தா இறக்கிவிடுங்க பாட்டிகிட்ட போறேன் "என்று அவரிடம் இருந்து இறங்கி உள்ளே ஓடினான்

அவன் உள்ளே சென்றதும் அம்பரியின் தாய் சுப்புலட்சுமி

நவீன் குட்டி! என்று
அவனை கொஞ்சினார்

பாட்டி எனக்கு சாக்லேட் கொடு என்று அவன் கேட்க

இதோ தரேன் செல்லம் என்று அவனை கொஞ்சியவர் ரதனையும் வரவேற்றார்.

"வாப்பா ! தம்பி ! இந்தா பக்கத்தில தான் இருக்குது மில் !ஆனா தம்பிய பார்க்க முடியுறதுலயே" என்று அவர்
கூற

இல்லை அத்தை வேலை கொஞ்சம் அதிகம். என்று ரதன் கூற

இருவரும் பேசியபடியே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் அம்பரி வந்தாள் .

அம்பரியை பார்த்தவர் அவளிடம்

"தம்பிக்கு காபி போட்டுக் கொண்டு வாமா ! "என்று சுப்பு சொல்ல

சரி என்று தலையசைத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றாள் அம்பரி

ரதன் வீரபாண்டியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

‘அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கட்டும் நாம போய் நம்ம ரதனுடைய குடும்பத்து உறுப்பினர்கள் பற்றி பார்த்துட்டு வரலாம் வாங்க

தவரதன் யாருக்கும் அடங்காத காளை, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து ரசிப்பவர், திமிர் , கர்வம் பொருந்திய ஒரு ஆண்மகன்.

எல்லாம் சரிதான் ஆனா என்ன பையன் கொஞ்சம் இங்கிலிஷ் பேசுவான் . ஆனா நமளுக்கு தான் அது புரியாது .அதுக்கு ஒரு மொழிப்பெயர்ப்பாளர் நமக்கு தேவைப்படுது.

படிப்பு பத்தாவது பெயில் அப்பாவோட அரிசிமில்ல சேர்ந்து பார்த்துக்குறார் துறை (பார்க்க மட்டும் தான் செய்வார்) வேலையெல்லாம் பக்காவா முடிச்சு வச்சுருப்பார் ராமனாதன் ,இவன் தந்தை . சுத்து வேலை பார்க்குறது ,லோடு சரி பார்க்குறது இந்த மாதிரி வேலைய நம்ம ஹீரோ சார் பார்த்துக்கிறார்.

கஜவல்லி இவன் தாய் அப்பாவோட சேவகி .

அப்புறம் அப்பத்தா சாவித்ரி.

கிழவி கருத்தா பேசும் ! என்ன பழமொழியா பேசி உயிரை வாங்கும் . தாத்தா பாவம் கிழவி நச்சு தாங்காம சின்ன வயசுலயே இறந்து(80) போயிட்டார் .

அப்புறம் ஒரு அண்ணன் ,ஒரு அக்கா .

அண்ணன் ராஜீவ் நல்லா படிச்சு ஒரு அரசுப் பள்ளியில் வாத்தியாரா இருக்காரு .அண்ணி அம்பிகா, அம்பரியின் அக்கா அவரும் படித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார். படிப்பில் இருவரும் கெட்டி .இவர்களுக்கு பிறந்தது நவின் . பெரிய தனியார் ஆங்கிலப் பள்ளியில் மூணாவது படிக்கிறான். படிப்பில் கெட்டி ,பெரியவர்களுக்கு ரொம்ப செல்லம் .

தூரத்து சொந்தமான வீரபாண்டி குடும்பத்தை திருவிழாவில் சந்தித்த ராமனாதன் அம்பிகாவை பார்த்ததும் அவளின் அமைதியில் ஈர்க்கப்பட்டு, தன் மூத்த மகனுக்கு மணமுடிக்க கேட்க வீரபாண்டியும் சம்மதித்துவிட்டார். அடுத்து வந்த முகூர்த்ததில் இருவருக்கும் மணமுடித்து வைத்தனர் .

அம்பிகாவின் பொறுமையும் , கஜவல்லியின் அனுசரணையும் அந்த குடும்பத்தை அமைதியாக கொண்டு செல்கின்றது.

அடுத்து ரதன் அக்கா காவ்யா அமெரிக்காவில் இருக்கிறாள்.

அவள் கணவன் பிரபல கம்பெனியில் வேலை பார்க்கிறார் . வருஷத்திற்கு ஒரு தடவை இந்தியா வருவதோடு சரி. அவளுக்கு ஒரு பெண், யுவனா 10 வயது இருக்கும் .தாத்தா பாட்டியோடு போன் மூலம் பேசிக் கொள்கிறாள்.

அப்புறம் நம் நாயகி அம்பரி . பயந்த சுபாவம் ,அமைதி, அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள் . அதிலும் நம் சண்டியரை கண்டா பயம், மீசை கொஞ்சம் பெரிசா இருந்தா அம்மணி பேச பயப்படுவா . அப்புறம் அவள் தாய் , தந்தை இது தான் இவள் குடும்பம்.

தவரதன் மில் அருகில் உள்ளது இவர்கள் வீடு . அருகில் இருப்பதால் போகும் போதும்,வரும்போதும் பார்த்து பேசி கொள்வார்கள் இவர்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் நம் நாயகனை தவிர .

நம் நாயகனுக்கு ரிச்சா , வொயிட் கலரா ,நுனி நாக்கில் இங்கிலிஷ் பேசுற பொண்ணு வேணும்மாம் . அப்படி இன்னும் பொண்ணு சார் பார்க்கல ,அதுக்கு தான் சார் வெயிட்டிங் .

அவ்ளோ தாங்க இவங்க குடும்ப வரலாறு.

இப்போ இங்க வாங்க

ரதன் வீரபாண்டியோடு பேசிக் கொண்டே வெளியே வர , ஒரு கார் வந்து நின்றது.

அனைவரும் திரும்பிப் பார்க்க அதில் இருந்து இறங்கினாள் ஒரு மாடர்ன் யுவதி.

அவளை பார்த்ததும் ரதன் வாயை பிளந்தான்.

__________________________________________________________________________________

அந்த வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தான் ஒரு இளைஞன்.

வெளியே வந்தவன் வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்திற்குச் சென்றான்.

அங்கு மரம் , செடி ,கொடிகளோடு தோட்டம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க அந்த செடி , கொடிகளை பார்த்தவன் அதன் அருகில் சென்றான்.

அருகில் சென்றவன் அந்த மரம், செடி, கொடிகளை வருடுடியபடியே பேசினான்.

என் செல்லங்களா ! எப்படி இருக்கீங்க ?என்று கூறியபடியே அதை தொட்டு ரசித்தவன்,

உங்களை எப்படித்தான் அழிக்கிறதுக்கு இந்த மனிதர்களுக்கு மனசு வருதோ ? என்று கூறியவன் அருகில் அமர்ந்து அதற்கு தண்ணீர் விட்டபடியே கீழே இருந்த மண்ணை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தான்.

“ ஆகா என்ன உன் வாசனை ! மழை பொழியும் போது வருமே உன் வாசனை அதை நுகர்வதே தனி அழகு” என்று பேசியவன் மேலும் தொடர்ந்தான்.

“ பூமாதேவியே ! நீயும் எவ்வளவு காலம் தான் எங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாய் ? ஆனால் எப்படித்தான் உன்னை குடைந்து தண்ணீரை எடுக்கிறார்களோ இந்த மனிதர்கள் ? "என்று பேசியவன் அதை தொடர்ந்து குருவிக் கூட்டின் அருகில் சென்றான்.

அதை வருடியபடியே பேசினான்

“ சிட்டுக்குருவியே உன்னை அழித்தவர்களை நான் அழிக்க வேண்டாமா ? இதோ உனக்கான அஞ்சலி ‘’என்று ஒரு காகித துண்டினை அங்கு வைத்தான்.

அதில் ஒருவன் இறந்து கிடந்த புகைப்படம் இருந்தது .

புகைபடத்தை வைத்தவன்
உள்ளே சென்று தன் போனை உயிர்பிக்க வந்து நின்றான் கோமாளி மனிதன். . கோமாளி மனிதனை தன் கைகள் கொண்டு வருடினான் அவன்.

திக் திக் தொடரும்
 
#10
நிமிடம்: 4

தலைமை காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்தனர் மாறனும், கதிரவனும்.

உள்ளே சென்றவர்கள் அங்குள்ள தலைமை அதிகாரியிடம் சென்று தகவல்களைக் கேட்டு அறிந்தவர்கள் வெளியில் வந்தனர்.

மாறன் கதிரிடம் திரும்பி

“ ஏன் கதிர் இது தற்கொலை மாதிரி தெரியுதா உனக்கு ?எனக்கு என்னமோ இது கொலை மாதிரி தெரியுது . அதுமட்டுமில்லை எல்லாரும் சாகும் முன் போனை கையில் வச்சிருந்திருக்காங்க .அதனால நமக்கு இப்ப இருக்குற ஒரே க்ளூ போன் தான் , போனை செக் பண்ணி பார்த்தா நமக்கு ஏதும் க்ளு கிடைக்குமா? என்று மாறன் கூற

ஆமா மாறா! நானும் அத பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன் என்று கதிர் கூற

இருவரும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பல கோணங்களில் விவாதித்தபடி ஓர் வீட்டின் முன் சென்று நின்றனர்.

அங்கு வீட்டின் உள்ளே ஒரு பெண்மணி அழுது கொண்டே இருக்க அவரிடம் சென்றனர் இருவரும் .

மாறன் கண்களால் சைகை செய்ய கதிர் பேச ஆரம்பித்தான்.

அம்மா! கொஞ்சம் அழுகையை நிறுத்திட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்றீங்களா ? – கதிர்

அந்த பெண்மணி தன் கண்களை துடைத்தபடியே சம்மதமாக தலையசைத்தார்.

அவர் அப்படி செய்ததும் கேள்வி கேட்பதற்கு தயாரானான் மாறன்

உங்க பையன் எப்படி இறந்து போனான்? சாகுறதுக்கு முன்னாடி அவன் எப்படி இருந்தான்? என்ன பண்ணிட்டு இருந்தான்? இத பத்தியெல்லாம் கொஞ்சம் எங்களுக்கு சொல்ல முடியுமா ? என்று மாறன் கேட்க .

அவர் அழுதபடியே பேசத் தொடங்கினார்.

தம்பி என் பையன் காலேஜ்ல படிக்கிறான் .எல்லா நேரமும் செல் தான் கதினு கிடப்பான். எப்பப் பாரு அதில் கேம் விளையாட்டிட்டே இருப்பான்.

. இறந்து போன அன்னைக்கும் அப்படி தான் எதையோ அவன் போன்ல தீவிரமா பார்த்துட்டு இருந்தான் . எதுவும் பேசாம ஏதோ மந்திரிச்சுவிட்டவன் போல அத பார்த்துட்டு இருந்தான்..

அப்புறம் கொஞ்ச நேரத்தில் மாடி படியில் ஏறி மேலே போனான். நானும் அவன் எங்கடா போற என்று கூப்பிட காது கூட கேட்காமல் மாடியில் ஏறினான் . அவன் பின்னாடி கூப்பிட்டுட்டே நானும் போனேன். திடீர்னு மேலே ஏறி நின்றான் . அதை பார்த்து பதறிட்டு நான் பக்கத்தில் போறதுக்குள்ள அவன் கீழே குதிச்சுட்டான். தம்பி என்று வருத்ததோடு முடித்தார் அவர்.

அவர் அப்படி சொன்னதும் இருவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கவலைபடாதீங்க மா ! என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.

கதிரவன் பேச ஆரம்பித்தான்.

மாறா ! கொலையாளி எல்லாரையும் தன்வசப்படுத்தி தற்கொலை செய்ய தூண்டியிருக்கான் . ஆனால் எதை வைத்து இதலாம் பண்றான்னு நமக்கு தெரியனும் என்று கதிர் கூற

ஆமா கதிர் ! ஒரு வேள போன் மூலமா இதை செய்றானோ ?என்று மாறன் கூற

இருவரும் அதை பத்தி ஆராய்ச்சி செய்து கொண்டே தன் ஆபிசிற்குச் சென்றனர்.

__________________________________________________________________________________

காரில் இருந்து இறங்கிய யுவதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அவன் அப்படி பார்ப்பதை கண்ட அம்பரிக்கு கோபம் வந்து தன் விரல் நகத்தை கடித்து துப்பத் தொடங்கினாள்.

ரதனிடம் பேசிக் கொண்டே வந்த விரபாண்டியும் , சுப்புலெட்சுமியும் சத்தம் கேட்டு திரும்ப அங்கு மஞ்சு நிற்பதை பார்த்தனர்.

ஹேய் ! மஞ்சு ! எப்படி இருக்கடி ? எப்ப வந்த நீ ? எங்க உங்கம்மா ! என்று மஞ்சு, தன் தங்கை மகளிடம் சுப்புலெட்சுமி கேட்க

ஹாய் ! சித்தி! சித்தப்பா ! எப்படி இருக்கீங்க இரண்டு பேரும். நான் நல்லா இருக்கேன் சித்தி ! ஹாய் அம்பு பார்த்து எவ்ளோ நாளாச்சு வர வர அழகாகிட்டே போறடி ! – மஞ்சு

அம்மாவும் , அப்பாவும் பின்னாடி வருவாங்க சித்தி ! ஹாய் ! சித்தப்பா உங்க கம்பீரம் இன்னும் குறையல சித்தப்பா என்று கூறியபடியே அவர் மீசையை நீவிவிட்டாள் மஞ்சு

என்ன இங்க நின்னே பேசிட்டு பிள்ளைய வீட்டுக்குள்ள கூட்டிட்டு போடி என்று வீரபாண்டி கூற

மஞ்சுவும் சுப்புவுடன் சேர்ந்து உள்ளே சென்றுவிட்டாள். அவள் செல்வதை பார்த்த ரதன் அவள் பின்னால் செல்ல முயல

அவன் முன் வழிமறித்து நின்றாள் அம்பரி.

“ அத்தான் ! இதை மறந்துட்டீங்க ‘’என்று வண்டிச் சாவியை அவள் நீட்ட அதை வேண்டா வெறுப்பாக வாங்கியவன்,

இப்ப இதுவா முக்கியம் ! என்று கூறி எரிச்சலுடன் அதை வாங்கியவன்

ஆமா ! அம்பு ஒரு சூப்பர் பிகர் இப்ப போச்சே ! யாரது ? என்று அவன் ஆவலாக கேட்க,

தன் தாவணி முந்தானையின் ஓரத்தை கோபத்தில் வேகமாக பிடித்து திருகிய படியே

“ அது என் சித்தப்பா பொண்ணு ! மும்பையில் இருக்கிறாள் .லீவ்க்கு வந்து இருக்கா .கொஞ்ச நாள் இங்கதான் தங்கப் போறாள் அத்தான் “என்று அம்பரி சலித்துக் கொண்டே கூற ,

ஓ !வாவ் ! ப்யூட்டி இங்க தான் இருக்கப் போறாளா .ரொம்ப வசதியா போச்சு ! ஆமா ப்யூட்டி பேர் என்ன?

மஞ்சு என்று அம்பரி கூற

பேர்கூட அழகாத்தான் இருக்கு அவளை போல என்று ஜொள்ளுவிட்டபடியே ரதன் கூற

அதற்கு அம்பரி பேசுவதற்குள்

ஹாய் ! அம்பு பேபி ! யார்கூட பேசிட்டு இருக்க நீ ! என்று ரதனை பார்த்துக் கொண்டே மஞ்சு வந்தாள்.

அம்பரி வேண்டா வெறுப்பாக அவனை மஞ்சுவிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள் .

இவர் ராஜீவ் அத்தானோட தம்பி பேர் என்று அவள் கூறுவதற்குள் மஞ்சுவை நோக்கி கை நீட்டி இருந்தான் ரதன்.

ஹாய் ! நான் தவரதன்! என்று தன்னை அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள

வாட் ! த..வ..ரத..ன்னா ? ஓ சாரி ! இவ்வளவு நீளமான பெயரா! என்னால் இப்படிலாம் கூப்பிட முடியாது . நான் வேணா உங்கள தவன்னு கூப்பிடவா ? ஆமா நீங்க ! எனக்கு என்ன முறை வேணும்? என்று அவனிடம் மஞ்சு சந்தேகம் கேட்க ,

என்னை யாரும் தவன்னு கூப்பிட்டதேயில்லை! இப்படி கூப்பிடுறதும் நல்லா தான் இருக்கு. இந்த முட்டக்கண்ணி என்னை அத்தான்னு கூப்பிடுவா. நீயும் அப்படியே கூப்பிடுமா. என்னை நீ எப்படி கூப்பிட்டாலும் அது அழகாத் தான் இருக்கும் என்று ரதன் பதில் சொல்ல ,

மஞ்சு சிரித்தாள் . அவள் சிரித்தபடியே ரதனுடம் பேசுவதை பார்க்க பார்க்க அம்பரிக்கு கோபமாக வந்தது.

மஞ்சுவிடம் பேசிக் கொண்டே திரும்பிப் பார்த்த ரதன் அம்பரி நிற்பதை பார்த்து

என்ன ? என்று புருவம் உயர்த்தி கேட்க

ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு குனிந்து கொண்டாள் அம்பரி.

சற்று நேரம் அவளிடம் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்ற ரதன் தன் பைக்கை நோக்கிச் செல்ல அவன் பின்னால் சென்றாள் அம்பரி.

அத்தான் ! என்று அம்பரி கூப்பிட வியப்பாக திரும்பிப் பார்த்தான் ரதன்.

அவன் அப்படி பார்த்ததும் ஏன் அத்தான் ! அப்படி பார்க்குறீங்க ?

என்று தலையை குனிந்து கொண்டே அம்பரி சொல்ல

இல்ல !நானே வந்து பேசினா கூட பதில் சொல்ல மாட்ட , அப்படியே பேசினாலும் தரைய ஆராய்ச்சி பண்ணிட்டே பேசுவ , இன்னைக்கு என்ன நீயா வந்து பேசுற ! என்னாச்சு உனக்கு ? என்று ரதன் அவளை குறுகுறுவென பார்த்தவண்ணம் கேட்க

அவன் பார்வை வித்தியாசத்தில் அம்பரிக்கு படபடப்பாக இருந்தது. .ஆயினும் நான் நல்லாத்தான் இருக்கேன் அத்தான் என்று கீழே குனிந்த வண்ணம் பதில் சொன்னாள் அம்பரி

அவள் அப்படி கூறியதும் முதல என்னை நிமிர்ந்து பாருடி என்று அவன் குரலை உயர்த்த நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள் அம்பரி

நீ இன்னைக்கு சரியில்லை . ஆமா ! உன் முட்டக்கண் ஏன் இப்டி அலைபாயுது ? என்று ரதன் கேட்க

அப்படியெல்லாம் இல்லை அத்தான் என்று மழுப்பியவள் தன் தைரியத்தை

வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

அத்தான் ! அது வந்து என்று அம்பரி இழுக்க

சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி ! என் அப்பன் வேற காத்துட்டு இருப்பார் . லேட்டா போறதுக்கு வேற கத்துவார். போய் அவர சமாதனப்படுத்திட்டு லோட் வேற செக் பண்ணனும் – ரதன்

அத்தான் ! நீங்க அன்னைக்கு கேட்டதுக்கு எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடிவிட

ரதன் யோசனையில் நின்றான்.

ஆமா ! இவ என்ன விளையாட்டா நான் கேட்டதை உண்மைனு நம்பி ஓகே சொல்லிட்டு போறா என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க

விளையாட்டா சொன்னியா ? என்றது மனச்சாட்சி

இல்லை என்னை அறியாமல் அவளை பிடிச்சு தான் சொன்னேன். ஆனா அவ என் அப்பாகிட்ட அடி வாங்க வச்சுட்டா .அதனால அவ எனக்கு வேண்டாம் என்று தனக்குள் கூறிக் கொண்டவன் நினைவுகள் அவளை முதன் முதலில் சந்தித்த நாளிற்குச் சென்றது.

._________________________________________________________________________________

_மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க அதன் எதிரில் அமர்ந்து இருந்தான் அவன் . எரிந்து கொண்டிருக்கும் தீயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் , தன் விரலை எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் உள்ளே விட்டு விரலை வலப்பக்கம் , இடப்பக்கம் ஆட்டியபடியே பேசத் தொடங்கினான்.

என்ன மாறன், கதிரவன் என்னை பத்தி துப்பு துலக்க ஆரம்பிச்சுட்டீங்க போல ! என்று பேசியவன் அருகில் இருந்த மேஜையை நோக்கிச் சென்றான். அங்கே நிறைய படங்கள் சிதறி இருக்க அதில் மாறனும் , கதிரவனும் வெவ்வேறு இடத்தில் விசாரணை செய்தபடி இருக்கும் புகைப்படம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவன்

என்னை பிடிக்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க சார் ! நானே வந்து சரண்டர் ஆகுறேன்.

ஆனா! இப்ப இல்லை ! என் வேலை முடிந்ததும் . அதுவரைக்கும் என்னை தேட முயற்சி பண்ணாதீங்க சார் ! முயற்சி பண்ணாலும் உங்க கையில் நான் சிக்க மாட்டேன் என்று கூறியவன்

வெறிபிடித்தவன் போல் சிரித்தான்..

திக் திக் தொடரும்
 
#11
அழகான அன்பர்களே !

திக் திக் நிமிடங்களில் இருந்து ஒரு சின்ன பிட்டு படிச்சுட்டு கமெண்ட் சொல்லவும்


மாறா ! இங்கப் பாரு சவாலே சமாளின்ற வாசகத்திற்குக் கீழ ஒரு கையெழுத்து இருக்கு அத விரிவு படுத்து என்று கதிரவன் கூற

அதை விரிவுபடுத்திய மாறன் கதிரிடம்

கதிர் ! இதில் தமிழ் பித்தன்னு கையெழுத்து போட்டு இருக்கு .அந்த பெயர்ல இருக்கிற ஆள விசாரிச்சா எதாவது க்ளு கிடைக்கும்னு நினைக்கிறேன் – மாறன்

நீ சொல்வதும் சரி தான் மாறா ! என்று கூறியவன் போனில் சில பேரோடு பேசியவன் சற்று நேரம் கழித்து போனை யோசனையோடு வைத்தான். .

என்னாச்சு கதிர் !- மாறா

மாறா ! தமிழ் பித்தன்ற பெயர்ல இருந்த எழுத்தாளர் இறந்து போயி இரண்டு வருஷமாகுதுனு சொல்றாங்க –கதிரவன்

அப்ப இங்க அவர் பெயர்ல இதையெல்லாம் செய்றது யாராக இருக்கும் என்று மாறன் கேட்க குழப்பத்தில் நின்றனர். இருவரும்

_______________________________________________________________________________________________________________________________________

நவின் உள்ளே வந்து டிவியை ஆன் செய்ய செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.

அதில் எச்சரிக்கை ! எச்சரிக்கை ! கேம் விளையாடி பல பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் , அந்த கேம்மில் கோமாளி மனிதன் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

யாரும் அவன் சூழ்ச்சியில் விழாமல் தங்களை பார்த்துக் கொள்ளுமாறு காவல் துறை எச்சரிக்கை செய்கிறது என்று செய்தி சொல்லப் பட அதை கேட்ட ரதன் யோசனையோடு தன் போனை உயிர்பிக்க கேம் விளையாடுமாறு குறுந்தகவல் வந்திருந்தது .

அதை பார்த்தவன் ஒரு முடிவோடு துணிந்து அதனை திறக்க வந்து நின்றான் கோமாளி மனிதன்
 
#12
நிமிடம் : 5

மாறா ! இங்கே பாரு ! சவாலே சமாளின்ற வாசகத்திற்குக் கீழே ஒரு கையெழுத்து இருக்கு அதை விரிவு படுத்து என்று கதிரவன் கூற

அதை விரிவுபடுத்திய மாறன் கதிரிடம்

கதிர் ! இதில் தமிழ் பித்தன்னு போட்டு இருக்கு .அந்த பெயர்ல இருக்கிற ஆள விசாரிச்சா எதாவது க்ளு கிடைக்கும்னு நினைக்கிறேன் – மாறன்

நீ சொல்வதும் சரி தான் மாறா ! என்று கூறியவன் போனில் சில பேரோடு பேசியவன் சற்று நேரம் கழித்து போனை யோசனையோடு வைத்தான். .

என்னாச்சு கதிர் !- மாறா

மாறா ! தமிழ் பித்தன்ற பெயர்ல இருந்த எழுத்தாளர் இறந்து போயி இரண்டு வருஷமாகுதுனு சொல்றாங்க –கதிரவன்

அப்ப இங்க அவர் பெயர்ல இதையெல்லாம் செய்றது யாராக இருக்கும் என்று மாறன் கேட்க குழப்பத்தில் நின்றனர் இருவரும்
__________________________________________________________________________________

ரதன் தன் அண்ணன் ராஜீவ் திருமணத்திற்கு வந்த பெண்களை தன் நண்பர்களுடன் அமர்ந்து சைட் அடித்துக் கொண்டிருக்க அதில் ஒரு பெண்ணை மட்டும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அதை பார்த்த அவன் நண்பன் அவனை உலுக்கினான்.

என்ன நண்பா ! அவளையே பார்த்துட்டு இருக்க அவளைப் பிடிச்சு இருக்கா !

அதெல்லாம் இல்லை ! என் லட்சியம் பற்றித் தான் உனக்கு தெரியுமே ! அதுக்கு இவ ஒத்து வர மாட்டா ! சும்மா பார்த்தேன்டா என்று ரதன் கூற

என்னது சும்மா பார்த்தியா ! அததான் நண்பா நீயும் பல வருஷமா சொல்லிட்டு இருக்க , ஒரு பொண்ணு கூடவும் பேசி ,அவளை கரெக்ட் பண்ண மாதிரி தெரியலடா என்று அவன் நண்பனில் ஒருவன் ரதனை கேலி செய்தான்.

அதை கேட்டு சிரித்த மற்றொரு நண்பன்

ஏன் மச்சான் ? பொண்ணுகிட்ட பேச பயமா? என்று அவன் கேலி செய்ய

நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லைடா – ரதன்

அதை கேட்டு அவர்கள் சிரிக்க

இப்ப பார்க்குறீங்களாடா ! நான் ஒரு பொண்ணுகிட்ட பேசி காட்டுறேன் என்று ரதன் கூற

அப்படியா செய் நண்பா ! பார்க்கலாம்! என்று அவர்களும் சிரித்துக் கொண்டே சொல்ல ,வேகமாக தன் பார்வையை சுழலவிட்டான் ரதன். அப்போது அவன் பார்வையில் வந்து விழுந்தாள் அம்பரி.

அவளை பார்த்த ரதன் அவள் அருகில் செல்ல ,எதிரில் வந்தவனை பார்க்காமல் அவனை கடந்து செல்ல முயன்றவளை ரதன் தடுத்தான்.

ஹாய் ! ப்யூட்டி ! என்று அவன் அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த அம்பரி மீசையை முறுக்கியபடியே நின்ற ரதனை பார்த்ததும் திகைத்தாள். அவன் தன்னிடம் பேச முற்படவும் விலகி செல்ல அவள் முயல ,ரதன் அவளை இடைமறித்தான் .

உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் . நீங்க இந்த உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட இவள் விழித்துக் கொண்டு நின்றாள்.

சென்றவன் நண்பர்களிடம்

எப்படி நான் பொண்ணுகிட்ட பேச மாட்டேன்னு சொன்னீங்க? . இப்ப பேசிட்டேன் பார்த்தீங்களாடா? – ரதன்

டேய் ! இரண்டு வார்த்தை பேசினதுக்கே சார் ரொம்ப பண்றார்டா என்று ஒருவன் கூற

உடனே மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.


டேய் ! என்னடா ரொம்ப பண்றீங்க ? அந்த பொண்ணை கரெக்ட் பண்ணி காமிக்கவாடா என்று ரதன் சவால் விட

அவர்களும் அதற்கு தலையாட்டினர். அதன் விளைவாய் .ரதன்

அந்த திருமணம் மண்டபம் முழுவதும் அவள் பின்னால் சுற்றி திரிந்தும், , சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளிடம் பேசியும் அவளை

தன் பால் ஈர்க்க முயன்றான்.

அவன் பின்னால் வருவதை பார்த்த அம்பரி அவனிடம்

இங்க பாருங்க ! இப்படிலாம் என் பின்னால் சுற்றினா நான் பெரியவங்ககிட்ட சொல்லிடுவேன்! என்று அவள் மிரட்ட

ஏய் ! என்ன சொல்லிடுவியா நீ! அப்படியே சொன்னாலும் என்கிட்ட இருந்து தப்பிச்சுடுவியா நீ ! எப்படியும் உன் அக்காவ பார்க்க நீ என் வீட்டுக்கு வந்து தான் ஆகனும்! அத ஞாபகம் வச்சுக்க என்று ரதன் இங்கு இவளை மிரட்டுக் கொண்டிருக்க

அவன் மிரட்டுவதையும் அதற்கு அம்பரி அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும்

தூரத்தில் இருந்து ராமனாதன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் அவன் கண்ணில் படாமல் அவள் ஒதுங்க முற்பட அதை கவனித்த ரதன்

அவள் ஏதோ பொருளை எடுக்க ரூமிற்குள் செல்ல அதை பார்த்த ரதன் அவள் பின்னால் சென்றான் . பொருளை எடுத்துவிட்டு திரும்பிய அம்பரி ரதனை பார்த்ததும் கத்த முயல வேகமாக அவள் வாயை தன் கை கொண்டு மூடினான்

கத்தாதடி ! யாராவது வந்துடப் போறாங்க ! அப்புறம் இப்படி தனியா ரூம்ல நம்ம இரண்டு பேரும் சேர்ந்து இருக்குறத பார்த்தாங்கனா அவ்வளவு தான் – ரதன்

ஏன் என்ன பண்ணுவாங்க என்று அம்பரி பயத்தோடு கேட்க,

உனக்கும் எனக்கும் திருமணம் செஞ்சு வைப்பாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா நான் ஒகே சொல்லிடுவேன் . உனக்கு எப்படி ? என்னை கட்டிக்கிறியா? என்று அவன் விளையாட்டாக கேட்க , அதை கேட்ட அம்பரிக்கு பயத்தில் வேர்த்துக் கொட்டியது.

அவள் பயத்தை ரசித்தவன் மேலும் முன்னேறிஅவள் அருகில் வர , அம்பரி பயத்தில் கண்ணீர் வழிய வேகமாக அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடினாள் .

அவள் ஓடியதைப் பார்த்தவன் ஏய் நில்லுடி ! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று அவன் கத்த

அதை கவனிக்காமல் ஓடியவள் ராமனாதன் மேல் இடித்து கொண்டு நின்றாள். அவர் ஏதோ அவளிடம் கேட்பதும் , இவள் சொல்வதுமாக இருக்க

இதை தூரத்தில் இருந்து பார்த்த ரதன்

அய்யோ! போச்சு ! என்னை போட்டுக் கொடுக்குறா போலயே! நீ செத்தடா ரதன் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க ,உள்ளே நுழைந்தார் அவர்.

அவன் அருகில் வந்தவர் அவன் சூதாரிப்பதற்குள் அவனை அறைந்திருந்தார்.

அறைந்தவர் அவனிடம் “ தனியா இருக்குற ஒரு பொண்ணுகிட்ட என்னடா பேச்சு வேண்டிகிடக்கு ? அவ பின்னாடியே சுற்றிட்டு இருக்க . உன்னை திரும்ப அவ பின்னாடி பார்த்தேன் அவ்வளவு தான் . . எனக்குனு இருக்குற மரியாதையா கெடுத்துடாதடா! ‘’ என்று கூறிவிட்டு அவர் செல்ல

ரதன் கோபத்தில் நின்றான். அவன் அம்பரி தன்னை பற்றி தன் தந்தையிடம் சொல்லி அடிக்க வைத்ததாக நினைத்தவன். அன்றிலிருந்து அவளை தவிர்த்தான்.

ஆனால் அதற்கு நேர்மாறாக அம்பரி அவன் தன் பின்னால் சுற்றி, செய்த செயல்களை எல்லாம் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

அன்று அவன் மணம் புரிய கேட்டதும் வேகமாக ஓடி வந்தவள் ராமனாதனை இடித்துக் கொண்டு நிற்க

அவர் என்னாச்சு ? ஏன்மா இப்படி ஓடி வர ? யாராவது எதாவது சொன்னாங்களா ?என்று அவர் கேட்டதற்கு எதையோ சொல்லி மழுப்பியவள் ரதனை பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை .

ராமனாதன் இவர்களை முதல் நாளில் இருந்து கவனித்ததை அறியாத ரதன் , அவர் அடித்தது அவளால் தான் என்று அவள் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான் .

அவள் மேல் கோபத்தில் இருந்தவன் மஞ்சு வந்ததும் அம்பரியின் பார்வை மஞ்சுவின் மீது பொறாமையில் படிவதை பார்த்து, அவளிடம் வேண்டுமென்றே பேசி அவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தான்.

அதை பொறுக்க முடியாத அம்பரி அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிச் சென்றாள் .

கோபத்தில் இருக்கும் ரதன் கோபம் தணிந்து அம்பரியை ஏற்பானா? இல்லை தன் கனவுப் பெண்ணான மஞ்சுவின் பின் செல்வானா ?

விடை விரைவில்

திக் திக் தொடரும்
 
#13
அழகான அன்பர்களே !
திக் திக் நிமிடங்களில் இருந்து ஒரு சின்ன பிட்டு படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்கோ

என்ன மானிடா ! பார்த்துட்டியா ! விளையாட நீ ரெடியா ? இல்லையா ? விளையாட நீ ரெடினா அந்த ஓகே பட்டன அழுத்து என்று அவன் கூற

ரதன் சற்றும் யோசிக்காமல் ஓகே பட்டனை அழுத்தினான்.அவன் அப்படி செய்ததும் அட்டகாசமாக சிரித்த கோமாளி

செய் அல்லது செத்துமடி ! மானிடா ! அடுத்த கட்டத்திற்கு வந்தால் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு கோமாளி மனிதன் மறைந்தான்.
__________________________________________________________________________________________________________________________________________
ரதன் ஒரு ரூமின் முன் நிற்க கதவு திறந்தது. அங்கு சென்றவன் அதிர்ச்சியடைந்தான். அங்கு சுவர் எல்லாம் ரத்தக் கறைகளாக இருக்க நிமிர்ந்து பார்த்த ரதன் மேலும் திடுக்கிட்டான். அங்கு ஒருவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான்.
______________________________________________________________________________________________________________________________________

ரதனை நோக்கி வலப்பக்கத்தில் இருந்து இரும்பு குண்டு வர , சற்று அவன் குனிந்தான். அவன் குனிந்ததும் அது அடுத்து சில கைகளின் மேல் விழுந்து ரத்தம் தெறித்தது. இப்படி இரும்பு குண்டையும், கைகளையும் பார்த்து ஓடிக் கொண்டிருந்த ரதன் அப்போது தான் கவனித்தான் நிமிடம் 10 ஆக இருந்தது.

இதில் இருந்து தப்பும் மார்க்கமின்றி தேடியவன் பார்வையில் பட்டது மேலிருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த கதவு ,அதன் அருகில் செல்ல முயன்றவன் அதிர்ந்தான்.
__________________________________________________________________________________