அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

சிறுதானிய அடை

sudharavi

Administrator
Staff member
#1
29746585_602640973417075_736188239_o.jpg


நம்ம பாரம்பரிய சமையல் இன்னைக்கு நாம பார்க்கபோறது சிறுதானிய அடை ..


கேழ்வரகு ,கம்பு ,சோளம் இப்படி எந்த மாவுனாலும் சரி அதில் சுவையா சத்தானத செய்து சுவைக்கலாம் ...


கேழ்வரகு மாவு – 1 கப் பச்சைமிளகாய் – 3 கொத்தமல்லி இலை,கருவேப்பிலை,உப்பு - தேவையான அளவு முளைகட்டிய பயறு – 1கப் (இல்லாவிட்டாலும் பரவாயில்லை ) முருங்கை கீரை ,வெந்தய கீரை போட்ட ருசியே தனி தான் ..இல்லை எந்த கீரைனாலும் எல்லாம் கலந்து கொஞ்சம் கெட்டிய பிசைஞ்சுகோங்க ..


தோசை கல்லில் மெல்லிச தட்டி ..எண்ணைய் விட்டு திருப்பு நல்ல வேகவிட்டு எடுத்து நமக்கு பிடிச்ச சட்னி அல்லது காய்கறி கூட்டு ,சாம்பார் தொட்டு சாப்பிட்டுதான் பாருங்களேன் ... தோசை கல்லில் மெல்லிசா தட்ட தெரியாதுன்னு சொல்லுறவங்க ..வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் வட்டமா தட்டி அதை அப்படியே கல்லில் போட்டு இலையை எடுத்துடலாம் ..செய்றதுக்கு ஈஸியா இருக்கும் ..


இன்றைய பாரம்பரிய சமையல் குறிப்பை பகிர்ந்து கொண்ட வேத கௌரிக்கு நன்றிகள்..........