சித்திரை போட்டி திரை விமர்சனம் !

#61
இறுதி சுற்று

மும்பையில் பாக்ஸராக இருக்கும் மாதவன் குத்துசண்டையில் சாதிக்க நினைத்து இந்திய அளவில் நடந்த பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்கிறார்.ஆனால் தன் கோப குணத்தால் மற்றும் உள்குத்து பாலிடிக்ஸால் அப்போட்டியில் தோல்வியை தழுவிகிறார். அதனால் தன் மனைவியையும் , பாக்சிங் வீரருக்கான தகுதியையும் இழந்து பாக்சிங் கோச்சாக ஆகிறார். ஹரியாணாவில் பணியாற்றும் அவரை தன்னுடனான பழைய பகையால் சென்னைக்கு தூக்கியடிக்கிறார் அவரின் ஹை அபிஷியலான தேவ் எனும் ஷாகிர். அதனால் சென்னை பாக்சிங் பயிற்சி மையத்திற்கு பொறுப்பிற்கு வருகிறார். அங்கு சென்னை மீனவ குப்பத்தை சேர்ந்த ரித்திகா சிங்கை சந்திக்கிறார். அவரிடம் பலவித பாக்சிங் திறமைகள் இருப்பதை அறிந்து அவருக்கு பயிற்சி கொடுத்து இந்திய வீராங்கனையாக இண்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு செல்கிறார். அதற்காக அவர் படும் துயரங்களும், சந்திக்கும் பிரச்சனைகளும் தான் இறுதிச்சுற்று படத்தின் மொத்த கதை.

பக்காவான பாக்சிங் கோச்சாக மேடி , அசத்தல். அவர் டென்சன் ஆகும் சீன்களிலும் பாக்சிங் பயிற்சி கொடுக்கும் சீன்களிலும் செம மாஸ் . மேடி மேடி தான் பா. என்னா அழகு! என்னா பெர்பாமன்ஸ்! அடி தூள்!

சென்னை கடற்கரையோர மீனவ குப்பத்து பெண்ணாக, பாக்சிங் வீராங்கனை மதியாக ரித்திகா சிங் சான்ஸே இல்லே! நிஜமான குத்துசண்டை வீராங்கனை என்பதால் அக்கதாபாத்திரத்தில் பக்காவாக பொறுந்தியிருப்பார். பாக்சிங்கில் மட்டுமல்ல மேடியுடனான காதலிலும் சரி கிக்கோ கிக்கு! அதிரடியாக சரவெடியாய் கலக்கிருப்பார்.

மும்தாஜ் சர்க்கார் , ராதாரவி,ஜாகிர் உசேன், காளி வெங்கட் , நாசர் என்று அனைத்து கதாபாத்திரங்களும் அருமையோ அருமை!

இறுதி சுற்று -செம கலக்கல் !
 

Anuya

Well-known member
#62
அபியும் நானும்

Screenshot_2019-07-31-20-51-19-722_com.google.android.googlequicksearchbox.jpg


அப்பா மகளுக்கு இடையேயான அளவில்லாத பாசமும், அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை சேமித்து வைத்து இருக்கும் ஒரு தந்தையின் அழகிய டைரி தான் அபியும் நானும் திரைப்படம்.....

ஊட்டி அருகே ஒரு எஸ்டேட் அதிபர் ரகு(பிரகாஷ் ராஜ்) தனது மனைவி( ஐஸ்வர்யா) மற்றும் மகள் அபியுடன்(திர்ஷா) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.....அபி பிறந்தது முதலே தந்தையின் அளவில்லாத அன்பிலும் பாசத்திலும் மூழ்கி வழந்தவர்....மகள் பள்ளியில் சேர்வது முதல் கல்யாணம் வரை நடந்த அழகிய நிகழ்வுகள் அவர்களுக்குள் வந்த சின்ன சின்ன கருத்து வேற்பாடுகள் என எல்லாம் தான் தினமும் பார்க்கில் சந்திக்கும் சுதாகரிடம்(ப்ரித்வி ராஜ்) ரகு சொல்லுவது தான் கதை.......

பல இடங்களில் பாசக்கார அப்பாவாகவும் சில இடங்களில் பைத்தியக்கார அப்பாவாகவும் வளம் வருகிறார் பிரகாஷ் ராஜ்.....மகள் கேட்டதிர்காக பிச்சை காரனை வேலை கொடுத்து தங்க வைப்பது......மகள் தனது சட்டையை மனநலம் சேரியில்லாத பெண்ணிற்கு போட்டு விட்டதால் சட்டை இல்லாமல் முதலில் சாலையில் கூச்சப்பட்டு நடந்து பிறகு அதுவே பெருமையாக நடப்பது என அனைத்திலும் cute அப்பாவாக வந்துள்ளார்......முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மகளை கண்டு அழுவது, தனியாக சைக்கிளில் முதல் முறை பள்ளி செல்லும் மகளின் பின்னாடியே செல்வது என அனைத்து காட்சிகளிலும் பிரகாஷ் ராஜ் செம மாஸ்.....வா வா என் தேவதையே பாடல் அருமையோ அருமை மை favorite ..... அப்பா மகளின் அழகான உறவை மிகவும் அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்......

அபியும் நானும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாதா அழகிய திரைப்படம்...... இதுவரை பார்க்காதவர்கள் பார்த்து enjoy பண்ணுங்க??❤️
 
#63
ராட்சசன்

நடிப்பு : விஷ்ணு விஷால், அமலாபால்.

இயக்குனர் : ராம் குமார்

இசை - ஜிப்ரான்

பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையே ராட்சசன் படம்.

சினிமா இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அருண் (விஷ்ணு விஷால்), குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக போலீஸ் பணியில் சேர்கிறார். அப்போது ஒரு ராட்சசன், பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார். தனது சினிமா கதைக்காக அருண் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் சைக்கோ கொலைக்காரனை தேட ஆரம்பிக்கிறார். அந்த ராட்சசன் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்? அருண் அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே ராட்சசன் படத்தின் கதை.

பொதுவாக சைக்கோ திரில்லர் படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த ராட்சசனும் அதே டெம்ப்ளேட்டில் தான் நகர்கிறான். ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் வித்தியாசப்படுகிறார் இயக்குனர் ராம்குமார்.

முதல் பாதி முழுவதுமே படம் செம திரில்லிங்காக நகர்கிறது. ராட்சசனின் கொலைகள் நம்மை நடுங்க செய்கிறது. யார் இந்த ராட்சசன் என எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு மிக அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. அதுவும் படத்தின் தீம் மியூசிக் நடுநடுங்க வைக்கும்.

விஷ்ணு விஷால் கன கச்சிதமாக இக்கதாபாத்திரத்திற்கு பொறுந்தியிருக்கிறார். அமலா பாலின் நடிப்பு அழகு.

ராட்சசனாக வரும் வில்லன் கதாபாத்திரம் மிரட்டல். வில்லாதி வில்லன்! என்ன ஒன்று அவர் பிளஷ்பாக்கை கேக்கும் போது கொஞ்சம் பரிதாபம் தான் ஏற்படுகிறது.

ராட்சசன் - த்ரில்லர் விரும்பிகளுக்கு செம தீனி!

படம் பார்க்கும் போதே அல்லு இல்ல! செம திரில்லிங்! இரண்டு நாள் கொஞ்சம் பீதியாகவே சுத்தவிட்டுச்சு. அந்த அளவுக்கு ஒரு காட்டு காட்டிடுச்சு இந்த ராட்சசன் படம்.
 

Anuya

Well-known member
#64
ரெமோ

Screenshot_2019-07-31-21-29-18-822_com.google.android.googlequicksearchbox.jpg

பெரிய நடிகராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட நடுத்தரக் குடும்பத்தை சார்ந்த பையன் சிவகார்த்திகேயன்(sk) . ஆனால் பெண்கள் என்றாலே ஒதுங்கும் skவிற்கு நடிப்பதற்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் k.s. ரவிகுமார் படத்திற்கு நாயகர் தேர்வுக்கு செல்லக்கிறார் sk, அங்கு முதல் காட்சியே ரொமான்ஸ் performance செய்ய சொல்ல சொதப்புகிறார் sk அதனால் நிராகரிக்க படுகிறார். இருந்தாலும் அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை கவனித்த k.s. ரவிகுமார் தனது அடுத்த படத்தின் ஆடிஷனிற்கு பெண் நர்ஸ் வேடமிட்டு வருமாறு கூறுகிறார். ஆடிஷன் சென்று திரும்பிவரும் வழியில் கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார் sk. கண்டதும் காதல் அம்பு பாய்கிறது skவிற்கு. கீர்த்தியை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று கீர்த்தி பின்னே சுற்றுகிறார். ஓர் கட்டத்தில் கீர்தியின் வீட்டிற்கே செல்லும் sk அங்கே கீர்தியின் நிச்சியதார்தம் விழா நடப்பதை கண்டு மனம்முடைகிறார். சரி நடிப்பிலாவது concentrate செய்யலாம் என்று பெண் நர்ஸ் வேடமிட்டு ஆடிஷன் செல்லக்கிறார்....

ஆனால் அங்கு ஆடிஷனில் திரும்பவும் skவை நிராகரித்து விட்டார் கே.ஸ். அதனால் சோகத்தில் நர்ஸ் வேடதில்லையே பஸ்சில் செல்லும் skவை பெண் என்று நினைத்து யோகி பாபு காதல் சில்மிஷம் செய்கிறார் skவிடம். இதனை பார்த்து டென்ஷன் ஆகும் கீர்த்தி skவை பெண் என்று நினைத்து யோகி பாபுவிடம் இருந்து காப்பாத்துகிறார். அவருக்கு தான் வேலை செய்யும் மருத்துவமனையிலையே நர்ஸ் வேலையும் வாங்கி தருகிறார் . இந்த சந்தர்ப்பத்தை விடாது இதை தனது second chance ஆக கருதி கீர்த்தியை எப்படியாவது காதலிக்க வாயில்லா நர்ஸ் ஆக நடிக்கிறார்.... sk கீர்தியின் மனதை மாற்றினாரா? என்பது மித கதை......

பெண் கெட்டப் இல் sk செம லூக்கிங் சோ cute.... skவின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை... யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ் என காமெடி அள்ளுகிறது. நர்ஸ் ஆக வரும் ரெமோ செய்யும் அடகாசங்கள் அமர்க்களம். அனிருத் இசையில் அணைத்து பாடல்களும் மாஸ்...

என்றும் நம் மனதில் நீங்காமல் இருப்பாள் இந்த ரெஜினா மோத்வானி (ரெமோ) ?❤️
 
#65
இருமுகன்

நடிப்பு : விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன்

இயக்கம்: ஆனந்த் சங்கர்

கதை சுறுக்கம் : ஊக்க மருந்தால் உலகத்தை ஆள நினைக்கும் வில்லன் விக்ரமை ஹீரோ விக்ரம் அழிக்கும் கதை.

இந்திய உளவு பிரிவான 'ரா'வில் வேலை பார்த்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே 'ரா 'ஏஜென்சியில் தன்னுடன் வேலை பார்த்த தன் காதலி நயன்தாராவை கண்முன் பறிகொடுத்ததாலும் தன் கோபதாபத்தாலும்' ரா' உளவு வேலையை உதறி விட்டு உலகம் சுற்றுகிறார் விக்ரம்.

இந்நிலையில் மலேசிய இந்திய
தூதரகத்தை தனி ஆளாக தாக்கி இருபதுக்கும்மேற்பட்டபாதுகாவலர்களை கொடூரமாக கொன்று தானும் சாகிறான் ஒரு சீனக்கிழவன். அவன் யார்? அவனது பின்னணி என்ன? என ஆராயும் இந்திய 'ரா' உளவுப் பிரிவு, அவன் லவ் எனும் தலைவனைக் கொண்ட சிம்பிள் ஆப் லவ் எனும் குழுவைச் சார்ந்தவர்களால் ஏவிவிடப்பட்டவன் எனும் உண்மையை கண்டுபிடிக்கிறது.

சிம்பிள் ஆப் லவ் குழுவின் தலைவன் லவ்வால் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் காதல் மனைவி நயன்தாராவை இழந்திருக்கிறார் ரா உளவு ஏஜன்சி அதிகாரி விக்ரம். எனவே உலகம் சுற்றும் அவரை கண்டுபிடித்து, அவர் வசம் இந்த கேஸை ஒப்படைத்து அவரது மேல் அதிகாரியாக நித்யா மேனனையும் நியமித்து மலேசியா அனுப்புகிறது இந்தியா.

தன் கண் முன் காதலி இழப்பால், தான் சார்ந்த இந்திய "ரா" பிரிவு உளவு பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் விலகிய விக்ரம் மீண்டும் இந்தியாவின் திறமையை, பெருமையை மலேசியாவில் எப்படி? நிலை நாட்டி, இந்திய தூதரக தாக்குதலுக்கும் , தன் காதல் மனைவி சாவுக்கும் காரணமான ' சிம்பிள் ஆப் லவ் 'கும்பல் தலைவன் லவ் ' வையும் அவனது ஊக்க மருந்து பிஸினஸ்ஸையும் வேறருக்கிறார் ...? என்பது தான் இருமுகன் படத்தின் கதை .

விக்ரம் நயன்தாராவின் காதல் காட்சிகள் ரம்மியமாய்!

வில்லன் விக்ரம் 'லவ்' அதிரடியாய், அட்டகாசமாய் வலம் வருகிறார். கூடவே அவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது.

ஸ்பீட் எனும் ஊக்க மருந்தின் வீரியத்தால் மனித உடலில் நிகழும் மாற்றங்களையும் அதனால் நிகழும் அதிரடிகளையும் அழகாய் காட்சிப்படுத்திகிறது இருமுகன் .
 
Last edited:
#66
பிரியமானவளே

விஜய் சிம்ரனின் அசத்தாலான நடிப்பில் வெளிவந்த வெற்றி படம். அக்ரிமன்ட் கான்ச்சப்ட் அடிப்படையாக வைத்து எடுத்த படம். வெளிநாட்டில் படித்ததால் அந்த பழக்க வழக்கத்திற்கு ஏற்ப 'கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஒப்பந்தம்' போட்டு சிம்ரனை கட்டிப்பார் விஜய். சிம்ரனும் தன் குடும்பத்திற்காக இந்த திருமணத்திற்கு ஒத்துப்பார்.ஆனால் போக போக விஜயின் குணத்தால் அவரை விரும்ப ஆரம்பிப்பார். அதற்குள் ஒரு வருடம் முடிந்து விடும் . அதனால் சிம்ரனை விஜய் வீட்டிற்கு அனுப்பி விடுவார். ஆனால் அதுவரை சிம்ரன் மேல் வராத காதல் அவர் சென்றவுடன் வரும். சிம்ரனை தேடி சென்று திரும்ப அழைப்பார். ஆனால் சிம்ரன் வர மறுப்பார். அவரை எவ்வாறு விஜய் சமாதானம் செய்தார்? எவ்வாறு அவர்கள் சேர்ந்தார்கள் என்பது மீதி கதை.

மிக அழகான படம். விஜய் சிம்ரன் ஜோடி எப்பொழுதும் திரையில் கொள்ளை அழகு.

விஜய் வெளிநாட்டில் வளர்ந்த இளைஞராய், சிம்ரன் குடும்ப பாங்கான பெண்ணாய் கலக்கிருப்பார்கள்.

எஸ். பி.பியும் தன் பங்குக்கு ஒரு கலக்கு கலக்கிருப்பார்.

பிரியமானவளே அனேகருக்கு பிரியமான படம்.
 

Anuya

Well-known member
#67
வருத்த படாத வாலிபர் சங்கம்

Screenshot_2019-07-31-22-48-28-848_com.google.android.googlequicksearchbox.jpg

சிலுக்குவார்ப்பட்டி என்னும் ஊரில் வேலை இல்லாமல் வெட்டியாக சுத்திக்கொண்டிருக்கும் வாலிபர் போஸ் பாண்டி ( சிவகார்திகேயாகன்). வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரான போஸ் பாண்டிக்கும் ஊர் தலைவரான சத்யராஜின் மகள் ஸ்ரீ திவ்யாவிற்கும் காதல் மலர்கிறது. ஆனால், காதல் என்றாலே காதை அறுக்கும் ராகமான சத்யராஜிற்கு இவர்களது காதல் விஷயம் தெரியவர உடனே வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் சத்யராஜ். இதனால் சிவாவும் ஸ்ரீ திவ்யாவும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இதனை அறிந்த சத்யராஜ் தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர்களை தேடி செல்கிறார். இவர்கள் எப்படி ஊரில் இருந்து வெளியேரினர்? சிவாவும் ஸ்ரீ திவ்யாவும் இணைத்தனரா ? என்பது மித கதை......

சிவாவின் நண்பராக வரும் சூரியின் காதல் கதை வேறு ஒரு தனி ட்ராக். சிவா, சூரி காம்போ அசத்தல் சூப்பர் டூப்பர்.. சிவா பேசும் வசனங்கள் , அவரின் உடல் மொழி அனைத்தும் அருமை. பிந்துமாதவி பின்னால் சுற்றுவது, கவிதை எழுதும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட் காமெடி ....... டி இமானின் இசையில் அணைத்து பாடல்களும் அருமையோ அருமை.......
 
#68
மாவீரன்

தெலுங்கில் ராம்சரண் நடித்து கலக்கட்டிய கல்லாகட்டிய மஹதீரா பிரமாண்ட படத்தின் தமிழாக்கம் தான் மாவீரன்!

400 வருடங்களுக்கு முன்பு ராஜபரம்பரையில் பிறந்து, வளர்ந்து, காதலித்து சேர முடியாமல் போன ஒரு ஜோடி, பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு இந்த நவீன யுகத்தில் இனம் கண்டு, அன்று பிரிந்த இடத்திலேயே சேருவதுதான் மாவீரன் படத்தின் மொத்த கதையும்!

ராஜ பார்த்திபன் - ஹர்ஷா என இரட்டை வேடத்தில் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் ராம் சரண் ஹீரோவாக செம மாஸ் காட்டிருப்பார். இப்படம் அவருக்கு தமிழில் தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக் கொடுத்தது.

மித்ராவிந்தா - இந்து எனும் இரட்டை வேடங்களில் காஜல் அகர்வால் கதாநாயகியாக கலக்கி இருக்கிறார்.

ராம் சரண் - காஜலின் காதல் காட்சிகள் அற்புதமாய்! வண்ண ஓவியமாய்.

ராஜமௌளியின் படைப்பு .எனவே பிரமாண்டமாடத்திற்கு பெயர் போனது. பாகுபலிக்கு முந்தைய பிரமாண்ட ஒத்திகை போல! அழகு!

மொத்தத்தில் மாவீரன்- கொள்ளை கொள்வான் காதல் பட கேட்கரியை விரும்பும் ரசிகர்களை.
 

Anuya

Well-known member
#69
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்


Screenshot_2019-07-31-23-17-26-343_com.google.android.googlequicksearchbox.jpg

படத்தின் பெயரை கேட்கும் பொழுதே எதோ செல்போன் base பண்ண சயின்ஸ் கதை தான்னு தொணுதுல அதே தான் கதை களம்..... இந்த படத்துல மொத்தம் 3 ஹீரோக்கள் ( நகுல், தினேஷ், சதீஷ்).

ஹீரோ நகுல் - கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் செய்யும் projectகள் செய்துக் கொடுத்தும் அதற்கான நோட்ஸ் எழுதி பணம் சம்பாதிக்கிறார். அவரிடம் ப்ராஜெக்ட் வாங்க வரும் மாணவர்கள் தான் ஐஸ்வர்யா & அவர்கள் நண்பர்கள்.... அவர்களுக்கு நகுல் செய்து தரும் ப்ராஜெக்ட் ' இயற்கை பேரிடர் சமயங்களிலும் கிடைக்கும் செல்போன் சிக்னல் கருவி' . இதற்கிடையில் நகுல்கும் ஐஸ்வர்யாவிற்கும் காதல் மலர்கிறது....

பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி விற்பனை பிரதிநிதியாக வரும் தினேஷ் & பிந்து மாதவியின் காதலும், கல்யாணத்திற்கு பெண் தேடி சலித்து போகும் கால்டாக்ஸி டிரைவர் சதீஷின் வாழ்க்கையும் இடையில் அவர்க்கு வரும் காதலையும் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் ....

இயற்கைக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக செல்ஃபோன்கள் அனைத்தும் செயல் இழக்கின்றன. மீண்டும் அந்த செல்போன்கள் வேலை செய்தால் விபத்தில் சிக்கி இருக்கும் ஒரு பெண் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. ஆனால் அதே சமயம் குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல உயிர்கள் பறிபோகும் ஆபத்தும் இருக்கிறது. இந்த இரண்டு விஷயமும் தெரியாமல் இளம் விஞ்ஞானியான நகுல் செல்ஃபோன்களை உயிர்பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெறுகிறான் . அந்த பெண் தப்பித்தாரா? வெடிகுண்டு என்ன ஆனது என்பது மீத கதை.....

தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தவர் தினேஷ் என தவறாக புரிந்துகொண்ட தினேஷ்ற்கு வகுப்பு எடுக்கும் பிந்து மாதவியை சைடடிக்கும் காட்சி, வண்டியில் பாம் வைக்கப்பட்டிருப்பது கடைசி வரை தெரியாமலே காமெடி பண்ணியபடி கால்டாக்ஸி ஓட்டும் சதீஷ்,
தினேஷ் மாதிரியே அவரது ஓட்டை ஸ்கூட்டரை உதைத்து கிளப்பி விடும் உதவியாளர் என்று காமெடிக்கு பஞ்சமில்லை...... படத்தில் வரும் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளனர்.....s.s. தமனின் பின்னணி இசை கூடுதல் பலம்.....நகுல் ஓட்டும் அந்த solar பைக்கை பார்க்கும் போது அதில் ஒரு ride போக ஆசை எழுகிறது??....தமிழுக்கு எண் 1 அழுத்தவும் பெஸ்ட் என்டேர்டைண்ட்மெண்ட் movie பார்த்து எண்ஜோய் பண்ணுங்க
 

Anuya

Well-known member
#70
மான் கராத்தே


Screenshot_2019-07-31-23-41-38-178_com.google.android.googlequicksearchbox.jpg


காட்டிற்கு சுற்றுலா செல்லும் ஐடி கம்பெனி உளியர்களான சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கே ஒரு சித்தரை சந்திக்கின்றனர். அவரிடம் இருக்கும் சக்தியை சோதிப்பதற்காக 4 மாதங்கள் கழித்து வரும் ஆயுத பூஜை அன்று வெளிவரும் நியூஸ் பேப்பரை கேட்கின்றனர்....அவரும் அந்த பேப்பரை தந்து விட்டு சென்று விடுகிறார்... அப்படி அந்த paperரில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அவர்களது கம்பெனி 4 மாதங்கள் பிறகு திறப்பதாக போட்டு இருக்கிறது ...... அதே போல மறுநாள் அவர்களது கம்பெனி மூட படுகிறது......அந்த பேப்பரில் இருக்கும் நியூஸ் அனைத்தும் உண்மை என்பதால் அதனால் எதாவது லாபம் வருமா என்று பார்க்கையில் குத்து சண்டை போட்டியில் ஜெயிக்கும் ராயபுரத்தை சேர்ந்த பீட்டர் பரிசு தொகை 2 கோடியை இவர்களுக்கு வழங்குது போல போட்டு இருப்பதை பார்த்து விட்டு அந்த பீட்டர்ரை தேடி சென்று பாக்ஸிங் ஸ்போர்ட்ஸ் என்று கூட தெரியத்தவனுக்கு பாக்ஸிங் கோச்சிங் கொடுக்கின்றனர்...... இதற்கிடையில் ஹன்சிகாவிற்கும் சிவா விற்கும் காதல் மலர்கிறது . ஸ்போர்ட்ஸ்ஸில் அதிக interest ஆக இருக்கும் ஹன்சிகாவை இம்ப்ரெஸ் பண்ணனும் என்றால் பாக்ஸிங் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று தூண்டில் போடுகின்றனர் சதீஷ் நண்பர்கள்.....

இந்த நேரத்தில் உண்மையிலேய் பீட்டர் என்ற பெயரில் வேறு ஒரு குத்துச்சண்டை வீரன் இருப்பது தெரிய வருகிறது. அவனை இந்த ராயபுரம் பீட்டர் ஜெய்தானா என்பது தான் கதை.....

நடுவராக வரும் சூரி, ஐடி காரராக வரும் சதீஷ், நிஜ குத்துச் சண்டை வீரராக வரும் வம்சி கிருஷ்ணா என அனைவருமே தங்கள் கேரக்டர்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

வழக்கம் போல அனிருத் இசை அற்புதம் குறிப்பாக அந்த சித்தர் வரும் காட்சிகளில் வரும் பின்னணி இசை goose bumbs வருகிறது......யோகி பாபு வரும் கட்சியில் சிவா சொல்லும் ' அவன் பொய் சொல்லறான் ரேப்ரி பொய் சொல்லறான் அது மிகவும் ஆபத்தான மிருகம்' டயலாக் என்னுடைய fav....அனிருத்தின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு ப்ளஸ்....
 
#71
பிரியமான தோழி

மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, வினித் நடிப்பில் வெளிவந்த அழகான திரைப்படம்.

ஆண் பெண் நட்பிற்கு இலக்கணமாய்! மிக அழகாக உருவான படம்.

மேடி ஸ்ரீதேவி இருவரின் நட்பும் பிரமிப்பாய்! மேடி ஜோதிகா இருவரின் காதலும் ரம்மியமாய்!

மேடி, ஜோதிகா, ஸ்ரீதேவி மூன்று பேரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.

மேடி தன் வாழ்நாள் லட்சியத்தையே தன் நட்புக்காக விட்டு கொடுக்கும் இடம் மிக பிரமிப்பாய்.

பாடல்கள் அனைத்தும் இனிமையாய்!

மேடியின் பிரியமான தோழியாய் ஸ்ரீதேவி , இருவரின் நட்பும் நம் மனதை கொள்ளை கொள்ளும் விதமாய்.
 
#72
செக்க சிவந்த வானம்

நடிப்பு - அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி, டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்கம் - மணிரத்னம்

இசை - ஏஆர் ரகுமான்

கேங்ஸ்டர் அப்பா பிரகாஷ்ராஜ், அவருக்கு அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகியோர் மூன்று மகன்கள். அரவிந்த்சாமி அப்பாவுக்கு வலதுகரமாக கூடவே இருக்கிறார். அருண்விஜய், துபாயில் ஷேக்குகளுடன் பிசினஸ் செய்கிறார். சிம்பு செர்பியாவில் துப்பாக்கி, ஆயுதக் கடத்தல் செய்கிறார். அப்பா பிரகாஷ்ராஜை யாரோ குண்டு வைத்து கொல்ல முயற்சிக்கிறார்கள். பின்னர் பிரகாஷ்ராஜ் மாரடைப்பில் இறக்க, அப்பா இடத்தை மூத்த மகன் அரவிந்த்சாமி பிடிக்கிறார். இதனால், ஆத்திரமடையும் தம்பிகள் அருண்விஜய், சிம்பு, அரவிந்த்சாமியை ஆட்டம் காண வைக்க முயற்சிக்கிறார்கள். அப்பா இடத்தை அரவிந்த்சாமி தக்க வைத்துக் கொண்டாரா இல்லையா என்பது மீதி கதை.

படத்தின் பிளஸ்ஸே விஜய் சேதுபதி கேரக்டர் தான். மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். தன் நடிப்பால் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி ஆகிய நால்வரில் படத்தின் ஹீரோ யார் என்பதற்கு கிளைமாக்சில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

மிக சிறந்த நடிகர்கள் இப்படத்தில் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை இயக்குனர்.

கிளைமாக்ஸ் அருமை. எதிர்பாராத ட்விஸ்ட்.
 

Anuya

Well-known member
#73
மீசைய முறுக்கு

Screenshot_2019-08-01-00-06-16-151_com.google.android.googlequicksearchbox.jpg


கோவை சேர்ந்த ஜீவா & ஆதி இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள்....இருவரும் ஒன்றாகவே பொறியியல் பயில்கின்றனர் அங்கு கல்லூரியில் தனது பள்ளிகால தோழியான நிலாவை கண்டு காதலிக்கிறார்.... இதற்கிடையில் கல்லூரி cultural ப்ரோக்ராம் எல்லாம் கலந்து தனது ராப் song பாடும் திறமையினால் கல்லூரியில் பிரபலம் ஆகுகிறார் மேலும் ஒரு யூ tubeலில் ஹிப் ஹாப் தமிழா என்ற சேனல் ஒன்றை தொடங்குகிறார்.....இதற்கிடையில் நிலா ஆதியின் காதல் நிலா வீட்டிற்கு தேர்ந்து ஆதியை மிரட்டி விட்டு செல்கின்றனர்.....
பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார் ஆதி . இதற்கிடையில் நிலாவின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்கின்றனர்... ஆதி தனது கனவை வென்றாரா? ஆதி நிலா காதல் சேர்ந்ததா ? என்பது மித கதை.....

ஹிப் ஹாப் ஆதியின் இசை மாஸ் .....ஹீரோவாக அகிட்டீங்கிளும் கலக்கி இருக்கிறார்.....ஆதியின் நண்பனாக வரும் விக்கி கேரக்டர் அருமை .....காலேஜ் டான் மாதிரி வளம் வரும் காட்சிகளில் கெத்து ஆக இருக்கிறார் ஆதி..... ஆதி performance மாஸ் வாடி புள்ள வாடி பாடல் அருமை....... தொத்தாலும் ஜெய்ஜாலும் மீசையை முறுக்கு.....??
 

Anuya

Well-known member
#74
சீமராஜா


Screenshot_2019-08-01-00-22-58-386_com.google.android.googlequicksearchbox.jpg


சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா நெப்போலியனின் ஒரே ஆண் வாரிசு சீமராஜா, கணக்குப்பிள்ளை சுரியுடன் சேர்ந்து ஊதாரியாக ஊர் சுற்றி திரிகிறார். புளியம்பட்டி வில்லன் குடும்பமான காத்தாடி கண்ணன் - சிம்ரன் தம்பதிக்கும் சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்துக்கும் இடையே பல ஆண்டு காலப்பகை. இதனால் ஊருக்கு பொதுவான சந்தை யாராலும் பயன்படுத்த முடியாமல் பூட்டிக்கிடக்கிறது. உள்ளூர் பள்ளியில் பி.டி. ஆசிரியையாக பணிபுரியும் புளியம்பட்டி சேர்ந்த சமந்தா மீது சீமராஜாவுக்கு காதல் மலர்கிறது. அவரது காதலை பெற ஊர் சந்தையை திறந்து வம்பில் சிக்குகிறார் சீமராஜா. வில்லன் கும்பலிடம் இருந்து சந்தையை சீமராஜா மீட்டாரா? சமந்தா & சீமராஜா இணைந்தனரா? என்பது தான் கதை....

வழக்கம் போல சிவா acting மாஸ் ....சமந்தா ரொம்பவும் cute ஆக வளம் வருகிறார்..... ராஜாவாக வரும் காட்சிகளும் அருமை மாஸ் ...... சூரி சிவா காம்போ அசத்தல் காமெடி ...... வளரி explanation அருமை ..... டி இமானின் இசையில் அனைத்து பாடல்களும் செம....:love:
 
#75
நண்பன்

த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!

பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நடிப்பில் பொளந்துகட்டியிருக்கிறார்கள். நண்பர்களின் அரட்டை கச்சேரிகள் கல்லூரிக்கே அழைத்து செல்கிறது.

இலியானா இனிமையான கதாபாத்திரம். சத்யராஜ் கதாபாத்திரம் சிறப்பு. எஸ். ஜே.சூர்யா, அனுயா கதாபாத்திரங்களும் அருமை.

பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

நண்பன் இனிய நட்பு ட்ரீட்
 

Anuya

Well-known member
#76
நவீன சரஸ்வதி சபதம்


Screenshot_2019-08-01-00-56-43-865_com.google.android.googlequicksearchbox.jpg


கதை சிவலோகத்தில் தொடங்குகிறது...சிவனாக வரும் சுப்பு பஞ்சு, நாரதர் மனோபாலாவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். அதாவது, ஒரு நாலு பேரை தேர்வு செய்து கொண்டு வர சொல்லி அனுப்புகிறார். படத்தில் மொத்தம் 4 ஹீரோக்கள் ...

தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய சித்த வைத்திய சாலை நடத்தும் தன் தந்தையின் தொழிலையே தானும் செய்து வருகிறார் ஜெய். ஆனாலும், டாக்டர் என்று பெருமைப்பட்டு கொள்கிறார். இவர் சூப்பர் சிங்கர் போன்ற போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர் நிவேதா தாமஸ்ஐ காதலிக்குறார். முதலில் மறுக்கும் நிவேதா தாமஸ் பின்பு காதலிக்க முடிவெடுக்கிறார். இவர்களின் காதல் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.
ரவுடி சொர்ணாக்காவிற்கு கணவராக வேலை செய்யும் விடிவி கணேஷ் வெளியில் சீறிப் பாய்ந்தாலும் வீட்டுக்குள் பெட்டி பாம்பாய் இருக்கிறார். இவருடைய ஒரே மகிழ்ச்சி நண்பர்களோடு சேர்ந்து தண்ணியடிப்பதுதான்.
எப்படியாவது நடிக்கானகிவிட வேண்டும் என்ற கஷ்டப்பட்டு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு வாங்குகிறார் ராஜ் குமார். இன்னும் பத்துநாட்களில் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகனாக சத்யன். தன்னுடைய மகனான சத்யனையும் எம்.பி.வாக ஆக்கிவிட வேண்டும் என்ற முடிவில் வரும் தேர்தலில் தனக்கு பதிலாக சத்யனை களமிறக்குகிறார். இன்னும் 15 நாட்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும்.


இவர்கள் 4 பெரும் நண்பர்கள் .ஜெய்யின் திருமணத்திற்காக bachelor பார்ட்டி கொண்டாட பாங்காக் செல்கின்றனர்.அங்கு இவர்கள் குடித்துவிட்டு செய்யும் லூட்டியில் இவர்களை சிவன் ஆளில்லாத தனித்தீவில் கொண்டு விட்டுவிடுகிறார். அங்கு எந்தவித உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக தவிக்கும் இவர்கள் அங்கிருந்து தப்பிக்க 2 நாட்களில் ஒரு வாய்ப்பு வழங்குகிறார். அந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு 6 மாதம் கழித்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி தப்பித்தாரா என்பது மீத கதை......

கம்ப்யூட்டரில் பூலோக நிகழ்வுகள் பார்க்கும் சிவன்,ஐ போனில் கேம்ஸ் விளையாடும் பிள்ளையார் & முருகன் , இங்கிலிஷ்லில் பேசும் பார்வதி என நவினமாகவே சிவலோகத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர்.....பாவ புண்ணிய கணக்கு பாகுறது, அந்த தீவில் மாட்டிக்கொண்டதும் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாமே ஹயிலைட் காமெடி .....
 
#77
டிக் டிக் டிக்

நடிப்பு - ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன்

இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்

இசை - டி. இமான்

விண்வெளியிலிருந்து ஒரு எரிகல் சென்னையை வந்து தாக்குகிறது. அதன் பின் மிகப் பெரும் எரிகல் ஒன்று இந்தியாவைத் தாக்கும் என்றும், அதனால் சுமார் 4 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்றும் இந்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடிக்கிறார்கள். அந்த எரிகல்லை விண்வெளியிலிலேயே அணு ஏவுகணையைக் கொண்டு அழித்தால், அது பூமியைத் தாக்காது என்பது தெரிய வருகிறது. ஆனால், அந்த அணு ஏவுகணை அந்நிய நாட்டிடம் இருக்கிறது. அதுவும் விண்வெளியில் உள்ள அவர்களது ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. அதை மிகப் பெரும் திருடனால் தான் கொண்டு வர முடியும் என முடிவெடுக்கிறார்கள். அப்படி தேடிக் கண்டுபிடிக்கப்படும் ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோர் ராணுவத்தைச் சேர்ந்த வின்சென்ட் அசோகன், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் தலைமையில் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அந்நிய நாட்டு மையத்திலிருந்து அதைத் திருடி, அந்த எரிகல்லை அழித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்பதற்கு ஏற்ப முழுநீள விண்வெளி படத்தை தந்த இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனின் முயற்சி பாராட்டுக்குரியது.

ராக்கெட், விண்வெளி மையம், விண்வெளி சாகசக் காட்சிகள் ஆகியவற்றை உருவாக்கிய கிராபிக்ஸ் டீமின் கடுமையான உழைப்பே படத்தின் பிளஸ்.

பாசக்கார தந்தை, திருடன், மேஜிக் மேன், விண்வெளி வீரன் என அனைத்தையும் அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.

நிவேதா பெத்துராஜ் மற்றும் வின்சென்ட் அசோகன் இருவரும் விண்வெளி வீரர்களாக கதைக்கேற்ப வலம் வருகிறார்கள்.ரமேஷ் திலக், அர்ஜூனன், ஜெயபிரகாஷ் தங்கள் பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் மகன் ஆரவுக்கு இது அறிமுகப்படம். ஒரிஜினல் அப்பா மகன் கெமிஸ்ட்ரி இப்படத்தில் நன்றாக வர்கவுட் ஆகியிருக்கிறது.

நல்ல கதைகளம் ஆனால் காட்சியமைப்பில் தான் சிறு சறுக்கல். மெத்த படித்த விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு தந்திரக்கார திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள்?இங்கு தான் கதை லைட்டாக சறுக்கிடுச்சு. மற்றபடி முதல் விண்வெளி கதை என்ற வகையில் நல்ல முயற்சி.
 
#78
தீரன் அதிகாரம் ஒன்று

நடிப்பு : கார்த்தி, ரகுல் ப்ரீத்
இயக்கம் : வினோத்
இசை : ஜிப்ரான்

தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. பெரும்பாலான கதைகள் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் தான் நிறைந்திருக்கும். ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, குடும்பத்தினரைக் கொன்றவன் இப்படிப்பட்டவர்களைப் பழி வாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, இந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தக் காவல்துறையே கண்டுபிடிக்கத் திணறிய ஒரு கொள்ளைக் கூட்டத்தைத் தேடிச் செல்லும் ஒரு காவல் அதிகாரியின் பயணமும், துரத்தலும்,வியூகங்களும், பர்சனல் வாழ்க்கையும் தான் 'தீரன் அதிகாரம் ஒன்று.'

வழக்கமான ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களில் காண்பிக்கப்படுகிற முறையிலிருந்து சற்று விலகி, நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 1995 முதல் 2005 வரை பெங்களூரு - கும்மிடிப்பூண்டி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோர வீடுகளில் கொள்ளை, கொலைகளை அரங்கேற்றிய ராஜஸ்தான் மாநில ஹவாரிய (பவாரியர் என்ற பெயர் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டுள்ளது) கும்பலைத் தமிழகக் காவல்துறை சுற்றி வளைத்து சட்டத்தின்முன் நிறுத்திய உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகியிருக்கிறது படம்.

மிகவும் நேர்மையான டிஎஸ்பி-யாக இருப்பவர் கார்த்தி. அவருடைய நேர்மையால் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களுக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி சரக டிஎஸ்பி-யாக நியமிக்கப்படுகிறார். அப்போது நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாக இருக்கும் வீட்டில் நடந்த கொலை, கொள்ளைகளைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

அந்த விசாரணைக்கான தேடுதல் வேட்டைக்குச் சென்றிருக்கும் போது அவர் கீழ் இருக்கும் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட் குடும்பத்தார், அந்த கொள்ளையர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். கார்த்தியின் மனைவி ரகுல் ப்ரீத்தும் பலமாகத் தாக்கப்படுகிறார். அடுத்து எம்எல்ஏ-வை அந்தக் கொள்ளை கும்பல் கொலை செய்த பிறகுதான் அரசு தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்த செலவழிக்க ஆரம்பிக்கிறார்கள். வட இந்தியாவில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க தனி போலீஸ் படையுடன் கார்த்தி புறப்படுகிறார்கள். அவர்களை கார்த்தி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

போலீஸ் கெட்டப்புக்கு ஏற்ற மிடுக்கு மற்றும் துணிவுடன் கார்த்தி கதாபாத்திரம். செம மாஸ். அவர் காதல் மனைவியாக வரும் ரகுல் ப்ரீத் க்யூட்.

படத்தில் வில்லனாக அபிமன்யு சிங், வட இந்திய கொள்ளை கூட்டத் தலைவனாக கதி கலங்க வைத்திருப்பார்.

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்தின் வேகத்தை பரபரப்புடன் நகர்த்த உதவியிருக்கிறது.

மொத்தத்தில் அதிகாரம் ஒன்று - பக்கா கமர்ஷியல் ஹிட் படம்.
 
Last edited:
#79
ரோமியோ ஜூலியட்

நடிப்பு : ஜெயம் ரவி, ஹன்சிகா

இயக்கம்: லக்ஷ்மன்

இசை : டி. இமான்

ஏர்ஹவுஸ்டர்ஸ் ஆக வேலை செய்யும் ஹன்சிகாவிற்கு அப்பா அம்மா இல்லை. மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் அவருக்கு பணக்கார வாழ்க்கை மேல் ஒரு மோகம். எனவே ஒரு பணக்கார பையனை காதலித்து திருமணம் செய்து வாழ்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று ஆசை. இதற்கிடையில் ஜிம் டிரெயினராக இருக்கும் ஜெயம் ரவியை சந்திக்கிறார். அவரை பணக்காரர் என்று நினைத்துக் கொண்டு காதல் வயப்படுகின்றார். ஜெயம் ரவியும் அவரை கண்டு காதல் கொள்கிறார். ஆனால் ஜெயம் ரவி பணக்காரர் இல்லை என்று தெரிந்ததும் தன் காதலை உதறிவிட்டு செல்கிறார் ஹன்சிகா.அதன் பின் வேறு ஒரு பணக்காருடன் நிச்சயம் வரை சென்றுவிட்டார்.அதற்கு ஜெயம் ரவி என்ன செய்தார்? அவர் தங்கள் காதலை மீட்டரா? ஹன்சிகா தன் நிலையில் இருந்து இறங்கிி வந்தாராா? இருவரும் சேர்ந்தார்களா என்பது மீதி கதை.

'டண்டனக்கா டண்டணக்கா' ன்னு அதிரடியாக ஆரம்பம் ஆகும் ஜெயம் ரவியின் இன்ட்ரோ. பிறகு 'தூவானமாய்' ரவி ஹன்சிகாவின் காதல். அதற்கு பின் இருவரின் பிரிவு. அடுத்து ஹன்சிகா ' இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி' ன்னு அவர் ஆசைப்பட்ட பணக்கார லைப்யில் உள்ள கஷ்டங்களை புரிந்து ,'கண்கள் திறக்கும் இந்த நொடி' காதல் வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல மனம் தான் முக்கியம் என்ற உண்மையை தெரிந்து கொண்டு ஜெயம் ரவியிடம் சரணடைகிறார்.

அழகிய ரோமியோ ஜூலியட் ஆக ஜெயம் ரவி ஹன்சிகா செம க்யூட். அவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி பக்கா. அசத்தலான படம். ஜெயம் ரவியின் அட்டகாசங்களும் அவரிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கும் ஹன்சிகாவும் அழகோ அழகு .
 

Vethagowri

Well-known member
Staff member
#80
அப்பா ஒவ்வொரு விமர்சனம்.. அடி தூள் பட்டையைக்கிளப்பும் ரகம்.. தீபியின் தாரே ஜாமீன் பர் மிகவும் அருமையான விமர்சனம், இப்படத்தின் காட்சிகள் கண் முன்னே விரிவது போல் கூறியிருக்கிறார்..

அனுயா இவர்களின் 24, காக்கா முட்டை ஆகியவை ஆஹா,, '' டைம் மெஷின் படமா என்று பார்க்காமல் இருந்த 24 படத்தை இவரின் விமர்சனம் பார்க்க தூண்டியுள்ளது, குக்கூ விமர்சனம் இனிய குயிலின் இன்னிசையோடு இணைந்த பார்வை...
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி போல திவ்யா இராமலிங்கம் அவர்களின் ஒவ்வொரு படத்தின் விமர்சனங்களும் அருமையோ அருமை.. நாம் ஏற்கனவே பார்த்து ரசித்த பல படங்களின் கண்ணோட்டம் இவரின் பார்வையில் பார்க்கும் போது ரசிக்கும் படி உள்ளது.. வாழ்த்துக்கள் தோழிகளே உங்கள் எழுத்து நடை, விமர்சனம் ரசிக்கும் படியும் பாராட்டும் படியும் உள்ளது