அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

சித்திரை போட்டி திரை விமர்சனம் !

#41
நாடோடிகள்


1561125327870.png


இயக்குநர் சமுத்திரக்கனியின் திறமையை உலகுக்கு காட்டிய படம். முறைப் பெண்ணை கைப்பிடிக்க அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் சசிகுமார். சசிகுமாரின் தங்கையை விரும்பி, சொந்தமாக தொழில் ஆரம்பித்து வாழ்க்கையில் செட்டிலாக தேவையான நடவேடிக்கைளை எடுக்கும் விஜய் வசந்த். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பரணி. இவர்களின் ஆசை கனவு எல்லா பூர்த்தி ஆகும் நிலையில், உதவிகேட்டு வந்த சசிக்குமார் நண்பனுக்கு, காதலில் உதவி செய்ததால், நிறைய இழப்புகளை சந்தித்து மீண்டும் ஆரம்பித்த இடத்தை விட, சற்று முன்னதாக கால சுக்கரம் சுற்றிய இடத்திற்கு வந்து நிற்பார்கள்.

முதல்பாதி வரை நகைச்சுவை உணர்வுடன் கதை சொல்லி இருப்பார். காதலர்கள் நண்பர்கள் உதவியுடன் இணைந்து விட்டால் அதுதான் வெற்றி என்று சுபம் போட்டு முடித்து வந்த தமிழ் சினிமாவில் அதற்கு பின் உள்ள வாழ்க்கையையும் இன்றைய தலைமுறையினரின் காதல் மோகத்தையும் சமூக பொறுப்புணர்வுடன் காட்டினார் சமுத்திரகனி.

பத்து வருடங்களாகியும் காதலுக்கு உதவும் நண்பர்கள் என்றாலே சம்போ சிவ சம்போ ஞாபகத்திற்கு வந்து ட்ரென்ட் செட்டை உருவாக்கி விட்டது.

காது கேளாத வாய் பேச முடியாத பொண்ணா அது என்று வியக்கும் அளவுக்கு அபிநயா நடிப்பில் அழுத்தமான முத்திரையை பதித்து விட்டார். அவருடன் சசிக்குமாரை கண்மூடித்தனமாக காதலித்து அப்பாவின் உயிருக்காக காதலை தூக்கி எறியும் அனன்யா, துறுதுறு நடிப்பில் ரசிக்க வைப்பார்.

செல்லுமிடமெல்லாம் பத்து பேர் கொண்ட குழுவுடன் சென்று நீங்க நல்லவரா கெட்டவரா என்று பலமாக யோசிக்க வைக்கும் நமோ நாராயணன் கேரக்டர் நிச்சயம் நம் மனதில் இடம் பிடிக்கும்.

நம்மை ஒன்றி போக செய்யும் சாதாரணமான காட்சிகளுக்குள், அற்புதமான கதைக்கருவை ஒளித்து வைத்து தரமான திரைப்படம்.
 
#42
Taxiwala
fb55d7bf045391610c1ee18bd95cb2fa.jpg
Staring: Vijay Devarakonda, Priyanka Jawalkar
Initial release: November 17, 2018
Director: Rahul Sankrityan
Music composed by: Jakes Bejoy
Producer: Sreenivas Kumar


தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு பணமீட்ட வரும் ஒரு இளைஞன் தான் விஜய். நண்பனின் உதவியோடு கிடைக்கும் பல வேலைகளைச் செய்து பார்த்தும் திருப்திப்படாதவன் டாக்சி டிரைவராக முடிவெடுத்து கிராமத்துக்குத் திரும்பி அண்ணியின் தாலி, நகைகளை விற்றுப் பணம் புரட்டுகிறார்.

அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு காரை வாங்குகிறார். விஜய் ஓலா டாக்சி ஓடுபவர் முதலாவதாக ஏறும் பெண் மீது காதலும் கொள்கிறார். ஆனால் அதன் பின் அவர் டாக்சியில் சில அமானுஸ்யங்களை உணர்கிறார். ஒரு கட்டத்தில் இவரையும் மீறி அந்த டாக்சி ஒருவரை கொன்றும் விடுகிறது.

ஆரம்பத்தில் டாக்சி மீது கோபப்பட்டாலும் இதற்கான காரணங்களைக் தேடிக் கண்டறிந்து டாக்சியில் நடந்த அமானுஸ்யங்களுக்குத் துணை போகிறார் விஜய்.

டாக்சியில் இருந்தது யார்? அது டாக்சியில் தங்கியதற்கு காரணம் என்ன? எப்படி இந்த நிலைக்கு ஆளாகியது? விஜய் எவ்வாறு உதவி செய்தார்? என்பவற்றை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார்கள். காமெடியோடு சூப்பர் நச்சுரல் பவரும் கலந்து சஸ்பென்ஸ் படமாகத் தந்துள்ளார்கள்.

விஜய் தேவரகொண்டா ரசிகைகள் தவறாது பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று இது.
 
#43
Gully Boy

Staring : Ranveer Singh, Alia Bhatt
Director : Zoya Akhtar
Music by: Karsh Kale; The Salvage Audio Collective
Written by: Vijay Maurya; (dialogue)
Produced by: Ritesh Sidhwani; Zoya Akhtar; Farhan Akhtar


502e8d5b8a4b766b86ebb4bd1fe21a33.jpg
மும்பையைச் சேர்ந்த ஒரு சேரிப் பையன் தனது கனவான rapping உலகில் நுழைந்து எவ்வாறு சாதித்தான் என்பது தான் கதை. மும்பையின் சேரி வாழ்க்கையை அத்தனை யதார்த்தமாகக் காட்டியுள்ளார்கள்.

வளர்ந்த மகனை வைத்துக் கொண்டு முதல் மனைவி இருக்கத்தக்கதாக இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து அழைத்து வரும் தந்தை. தாயின் மன அழுத்தங்கள். ஒரு கட்டத்தில் பொறுப்பான மகனாய் தாயை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் நாயகன்.

சிறு வயதிலிருந்தே காதலியாக இருக்கும் நாயகி. காதலன் நிலை புரிந்து அவனுக்கு உதவுவது. அதேநேரம் வைத்தியருக்குப் படிக்கும் தனது படிப்பிலும் கவனமாக இருப்பது. காதலன் மீது வைக்கும் அளவுக்கதிகமான பொஸவிவ்னெஸ்ஸால் இன்னொரு பெண்ணை அடி பின்னுவதில் ஆலியா தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கீழ் மட்டத்திலிருந்து சாதிப்பதென்பதில் ஏற்படும் பிரச்சினைகளையும், கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகிக்க வேண்டும் என்பதையும் அழகாகக் கூறியுள்ளார்கள்.

ரன்வீர், ஆலியா, கல்கி என்று எல்லோரும் தத்தமது பாத்திரங்களுக்கு இயல்பாய் உயிர் கொடுத்துள்ளார்கள்.

எல்லாம் நிறைந்த இளைஞர்களுக்கு நல்லதொரு ஊக்கம் தரக் கூடிய ஒரு திரைப்படம்.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
30.06.2019.
 
#44
Queen

Stars: Kangana Ranaut, Lisa Haydon, Rajkummar Rao.
Director: Vikas Bahl
Producers: Anurag Kashyap, Vikramaditya Motwane, Madhu Mantena.
Story by: Vikas Bahl
Music by: Amit Trivedi


430d918fe940f2493ae65e25c29c0d19.jpg
கங்கனா ராணத்தின் பெயர் தான் ராணி. அவரைத் துரத்தித் துரத்திக் காதலித்த விஜய் (ராஜ்குமார்) திருமணத்திற்கு முதல் நாள் வெளிநாட்டில் வசிக்கும் தனக்கு ராணி பொருத்தமானவர் இல்லை என்று கூறித் திருமணத்தை நிறுத்தி விடுவார். இதனால் மனமுடைந்து போகும் ராணி ஒருநாள் முழுவதும் தனது அறையில் அடைந்து கிடந்து எடுக்கும் முடிவு தான் முதலே பதிவு செய்திருந்த ஹனிமூனுக்குத் தான் தனியாகச் செல்வது என்பது. பெற்றோரும் அனுமதிக்கவே ஒரு மாற்றம் வேண்டித் தனியாகப் புறப்பட்டுச் செல்கிறார்.

பாரீஸுக்குச் செல்லும் அவருக்குப் புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய மொழி தரும் அனுபங்களே கதையை நகர்த்திச் செல்கிறது. நாட்டுக்குத் திரும்ப நினைக்கும் ராணிக்கு பாரிஸில் சந்திக்கும் இந்திய கலப்புப் பெண்ணின் நட்பு துணிவைத் தர தொடர்ந்து ஐரோப்பாவில் தங்குகிறார்.

மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்த போட்டோவை மாறி விஜய்க்கு அனுப்பி விட அதைப் பார்த்த விஜய் மறுபடியும் இவரைத் தேடி வருகிறார். மூன்று ஆண்களுடன் ராணி தங்கியிருப்பதைப் பார்க்கும் விஜய் தனது பழைய குணத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார். இந்தியாவில் வைத்துப் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

இந்தியாவுக்குத் திரும்பியதும் ராணி மனம் மாறி விஜயைக் கைப் பிடித்தாரா? ஐரோப்பா பயணம் இவருக்குக் கற்றுத் தந்த அனுபவத்தை இவர் எப்படி பயன்படுத்தினார்? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். கங்கணா ராவத்தின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
30.06.2019
 
#45
Sanam Teri Kasam

Starring: Harshvardhan Rane, Mawra Hocane
Directer: Radhika Rao, Vinay Sapru
Producer: Deepak Mukut
Written by: Radhika Rao, Vinay Sapru
Music: Himesh Reshammiya


a8238176255f068e9033d28d1a06fc0e.jpg
சரஸ்வதி அவரது old fashioned தோற்றத்தால் வரும் வரன்களால் நிராகரிக்கப் படுகிறார். இவரது தங்கை ஒருவரைக் காதலிக்கிறார். ஒரு மாதத்திற்குள் திருமணம் செய்ய வேண்டிய நிலை. தந்தையோ சரஸ்வதிக்குத் திருமணமாகாது தங்கைக்குச் செய்ய முடியாது என்கிறார். தங்கையோ வீட்டை விட்டு வெளியேறத் தயாராகிறார்.

தான் ஒரு மாதத்திற்குள் மாப்பிள்ளை ஒருவரைப் பிடித்து விடுவதாகக் கூறித் தங்கையை வீட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கிறார் சரஸ்வதி. அதே அப்பார்மெண்டில் வசிப்பவர் இந்தர். இவரில் அங்கு வசிப்பவர்களுக்கு நல்ல மரியாதை இல்லை. இவரது காதலி ஒரு ஸ்டைலிஸ்ட். அவரிடம் சரஸ்வதி தன்னை அழகுபடுத்துவதற்கு அப்போயின்மெட் வாங்கித் தருமாறு கேட்கச் சென்ற இடத்தில் அந்த ஸ்டைலிஸ்டால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பியர போத்தலால் தாக்க அந்த அடியை இந்தர் வாங்கிக் கொள்கிறான்.

அவனுக்கு முதலுதவி செய்யும் சரஸ்வதி அவளது வீட்டினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இங்கேயே தங்கி விட ஒரே கட்டிலில் இருக்கும் இருவரையும் சரஸ்வதியின் தந்தை பார்த்துப் பிழையாக விளங்கிக் கொள்கிறார். தங்கையின் நலன் கருதி சரஸ்வதியும் அதை அப்படியே விட்டு விடுகிறார்.

அதன் பிறகு இந்தர், சரஸ்வதியுடனான உறவு, சரஸ்வதி குடும்பத்துடன் இணைந்தாரா? இந்தர் தன் பழக்க வழக்கங்களை மாற்றி திருந்தி நல்வழிப்பட்டானா? என்பதைச் சொல்லிச் செல்கிறது திரைக் கதை.

ரொமான்ஸோடு சேர்த்துக் கண்ணீரையும் பரிசளிக்கும் படம். அழுகை வரும் தான் என்றாலும் ரொமான்ஸ் படப் பிரியர்கள் தவறாது பார்க்கலாம்.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
30.06.2019.