அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

சித்திரை போட்டி திரை விமர்சனம் !

#21
Badhaai Ho

Staring : Ayushman Khurrana, Sanya Malhotraஇருபத்தைந்து இளம் வயது கதாநாயகன். காதலியும் இருக்கிறாள். இத்தகைய நிலையில் அவனது தாய் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிவிக்கிறார். அவருக்கு அந்த சிசுவை அழிக்கவும் விருப்பமில்லை.

இந்த சூழ்நிலையை எவ்வாறு கதாநாயகன் கையாண்டான்? அவன் காதலின் நிலை என்ன? அந்த குழந்தை பிறந்ததா? என்பதை எங்களது சமூக மனனிலையை வைத்து மிகவும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சிரித்துக் கொண்டே பார்க்க நல்லதொரு திரைப்படம்.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
 
#22
வணக்கம்!வணக்கம்!வணக்கம்!

பாகுபலி - கிட்டத்தட்ட அனைவருமே இப்படத்தை பார்த்து இருப்போம். ரசித்திருப்போம். எனவே இப்படத்தில் நான் ரசித்த சில மொமன்ட். அதுவே இங்கே என் கமென்ட்டாக பதிய போகிறேன்.

ஹீரோ - பிரபாஸ்- பாகுபலி

'பலே பலே பாகுபலி
பயம்மின்றி பாயும் புலி'

அழகும் வீரமும் கம்பீரமும் விவேகமும் கலந்து செய்த கலவை இவன்.

ஹீரோயின் - அனுஷ்கா - தேவசேனா

'அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு'

அழகும் வீரமும் ஒருங்கே பெற்ற இளவரசி இவள்.

கதை சுறுக்கம்: அமேந்திர பாகுபலியான தன் தந்தையை கொன்ற பல்வாள் தேவனை மகேந்திர பாகுபலியான மகன் வென்ற மன்னர் காலத்து கதை.

மகிழ்மதியின் முடி சூடா மன்னன்
தேவசேனாவின் காதல் கண்ணன் -பாகுபலி .
பல்வாள் தேவன் இவன் அண்ணன் செய்யும் சூழ்ச்சியால் உயிர்விடுகிறான். பல்வாள் தேவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் மகாராணி தேவசேனாவை தன் காதலி அவந்திகாவிற்காக தன் தாய் என்று தெரியாமலே சிறை மீட்க வரும் மகன் பாகுபலி அங்கு தன் பூர்வீகத்தை கட்டப்பா மூலம் அறிய நேர்கிறது. அதன்பின் தன் தாயை சிறை மீட்டு பல்வாள் தேவனை வென்று ராஜ்ஜியத்தை கைபற்றி மகிழ்மதியின் மன்னனாகிறான்.

தந்தை அமேந்திர பாகுபலியாகவும் , மகன் மகேந்திர பாகுபலியாகவும் அசத்தும் பிரபாஸ். அழகின் மறு உருவமாய் அனுஷ்கா. இருவரின் காதல் சாம்ராஜ்யம் ஒரு அழகிய காதல் காவியம்.

பல்வாள் தேவனாகா ராணா அதிரடி வில்லனாக மிரட்டுகிறார்.இரண்டு பிரபாஸ்க்கும் சளைக்காமல் ஈடுகொடுத்து அசத்தியுள்ளார்.

தன்னை நம்பி வந்த பெண்ணிற்காக ராஜ்யம் துறந்து ஒரு சிறந்த காதலானாகவும், தன் நாட்டு மக்களை காக்கும் மன்னனாகவும், அதிரடி சண்டையில் அசத்தும் போர் வீரனாகவும்,தன் தாய் ராஜமாதா மேல் அளவற்ற பாசம் கொண்டுள்ள சிறந்த மகனாகவும் என பல்வேறு பரிணாமங்களில் அசத்துகிறார் பிரபாஸ். அவருக்கு ஒரு சபாஷ்.

ராஜமாதா,கட்டப்பா, பிங்கலநாதன் கதாபாத்திரங்கள் படத்தில் சிறப்பு! மிக சிறப்பு!

ராஜமௌலி அமேந்திர பாகுபலி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யவில்லையோ?
ராஜியமும் இல்லை , ராஜமாதாவின் பாசமும் முழுதாக கிட்டவில்லை.
தன் காதல் மனைவியுடன் நிரந்தரமாக வாழவுமில்லை, தன் மகனின் முகத்தை பார்க்கும் அதிர்ஷ்டமுமில்லை.
மொத்தத்தில் அமேந்திர பாகுபலியின் வாழ்க்கை முழுதாக நிறைவுபெறவில்லை.

படத்தின் சிறப்பு அட்டகாசமான அதிரடி போர் சண்டை காட்சிகள், அசத்தும் பிரமாண்ட காட்சிகள், ரசிக்க வைக்கும் ரம்மியமான காதல்!

படத்தில் பிடித்த காட்சி- தேவசேனா பாகுபலி சேர்ந்து விடும் போர் அம்பு! இல்லை இல்லை காதல் அம்பு!அவர்களின் பேரன்பு.

பாகுபலியின் பிரமாண்டமான காட்சியமைப்பு ராஜமௌலியின் மிக சிறந்த படைப்பு.

எந்த ஒரு செயலுக்கும் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்குமோ? அதான் படத்தின் ஆரம்பத்தில் தன் தாய் கஷ்டபட கூடாது என்பதற்காக பிரபாஸ் தூக்கி வந்து வைக்கும் சிவலிங்கம் காலடியில் படத்தின் இறுதியில் ராணாவின் சிலையோட தலை வந்து விழுந்து படம் முற்றுப்பெற்றதோ!

பாகுபலி இது தென்திரையுலகின் வேற லெவல் திரைப்படம் !

ஜெய் மகிழ்மதி!
 

Anuya

Active member
#23
எனது பார்வையில் "மனம்"

18-37-48-downloadfile.jpg
தெலுங்கு பட உலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் "மனம்". ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்த திரைப்படம் ...

Bittu என்ற 6வயது பையனின் பிறந்தநாள் விழாவில் தொடங்குகின்றது "மனம்" படம். பிட்டுவின் பெற்றோர் மோகன்( நாகா சைதன்யா)& கிருஷ்ணவேணி (சமந்தா) தங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாட்டால் பிரிய முடிவு செய்கின்றனர். அச்சமயம் ஒரு கார் விபத்தில் இறந்து விடுகின்றனர். அன்றைய நாள் feb 13.

Bittu வளர்ந்து பெரிய தொழில் அதிபர் நாகேஸ்வர ராவ் ( நாகார்ஜூனா) ஆகிறான். தன் வேலை விசயமாக வெளிவூர் செல்லும் போது எதர்ச்சையாக நாகார்ஜூனா( நாகா சைதன்யா)வை சந்திக்கிறான். தன் தந்தையை போலவே இருக்கும் நாகார்ஜூனாவை பார்த்து ஆச்சர்யம் படுகிறான் பிட்டு. தன் தந்தையை போல ஒருவர் இருந்தால் கண்டிப்பா தன் தாயை போல ஒருவர் இருப்பார் என்று தேடி பிரியா( சமந்தா)வை கண்டு பிடித்து அவர்களை சேர்க்க முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, எதேர்ச்சையாக முதியவரான சைதன்யா (ANR)கு நாகேஸ்வர , மருத்துவமனையில் அஞ்சலி(ஸ்ரேயா)வை சந்திக்கிறார். நாகேஸ்வர & அஞ்சலிஐ சேர்த்து பார்க்கும் சைதன்யா ஆச்சர்யம் படுகிறார். ஏனெனில் அவ்விருவரும் சைதன்யாவின் பெற்றோர்கள் போலவே உள்ளனர். அவர்களை இணைக்கும் முயற்சியில் இறங்குகிறார் சைதன்யா. சைதன்யா சிறுவனாக இருக்கும் போது அவரது பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறகின்றனர். அன்றைய தினம் feb 13.

நாகேஸ்வர & சைதன்யா முயற்சிகள் வெற்றி பெற்றதா? அவர்கள் தங்களின் பெற்றோர்களை இணைத்தனரா? அந்த feb 13 , ஒரே மாதிரி கார் விபத்து கரணம் என்ன? என்பது மீதி கதை.

இயக்குனர் விக்ரம் குமார் கதையை கொண்டு செல்லும் விதம் அருமை. சிறிது தடுமாறி இருந்தாலும் மொத்த கதையும் சொதப்பி இருக்கும். அருமையான திரைக்கதை ... நாகார்ஜூனா, நாகா சைதன்யா, சமந்தா , ஸ்ரேயா அனைவருமே இரண்டு கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கின்றனர்.

Rebirth concept பிடிச்சவங்க பார்க்க வேண்டிய படம் கண்டிப்பா எல்லாரும் enjoy பண்ணுவீங்க .... இந்த படம் தமிழிழையும் dub பண்ணி இருகாங்க...விஜய் hotstar ல இருக்கு பார்த்து enjoy பண்ணுங்க.....
 
#24
'மான்ஸ்டர்'

ஹீரோ : எஸ்.ஜே.சூர்யா
ஹீரோயின் : பிரியா பவானி சங்கர்
இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்

சிறு வயதில் இருந்து எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என்று சொல்லி வளர்க்கப்படும் எஸ். ஜே. சூர்யா ,ஒரு எறும்பை கூட கொல்லாது வாழ்ந்து வருகிறார். அப்படி இருக்கையில் அவர் புதிதாக வாங்கி குடியேறும் வீட்டில் ஒரு எலி தொல்லை கொடுக்கிறது. அந்த எலியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாக ஒரு கட்டத்தில் அந்த எலியை கொல்ல முடிவு செய்கிறார். அவர் அந்த எலியை கொன்றாரா இல்லையா என்பது தான் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை.

எஸ். ஜே.சூர்யாவிற்கு இப்படத்தில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். மிகவும் பொறுமையும், அமைதியும் கொண்ட இளைஞன். இவ்வுலகில் வாழும் எந்த உயிரையுமே கொல்லகூடாது என்னும் கொள்கை கொண்டு வாழ்ந்து வரும் ஜீவகாருண்யம் மிக்கவர். அப்படிப்பட்டவரையே ஒரு எலி படாத பாடு படுத்துக்கிறது . வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் எஸ். ஜே.சூர்யா தன் திருமணம் கைகூடுவதற்காக சொந்த வீடு வாங்கி குடியேறுகிறார். ஆனால் அங்கு ஏற்கனவே ஒரு எலி பட்டா போட்டு வாழ்ந்து வருகிறது. இது தெரியாத நம்ம சூர்யா அங்கு சென்று அந்த எலி கிட்ட மாட்டி கொண்டு முழிக்கிறார். எலி தானேன்னு நாம் சாதாரணமாக நினைச்சிட முடியாது. வாங்கி வச்சுறுக்கிற சாப்பாட்டு பொருள்களை ஒன்னுவிடாம சாப்பிடறதுல ஆரம்பிச்சு, பாத்திரங்களை உருட்டி நைட்ல தூங்க விடாம பண்றது, எலக்ட்ரானிக் பொருட்களின் வயர்களை கடிக்கிறது, கதவை சுரண்டுவதுன்னு எப்பப்பா எலி தொல்லை பெரும் தொல்லை அது அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். இந்த படத்தில அப்படிபட்ட ஒரு எலியோட தொல்லையை தான் கொஞ்சம் மிகுதியாக, கமெடியோட சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அந்த எலி எஸ். ஜே. சூர்யாக்கு மிகுந்த தொல்லை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் மனைவியாக வரப்போகும் பிரியா பவானி சங்கர் ஆசைப்பட்ட அதிக விலை கொடுத்து வாங்கிய சோபாவையும் அந்த எலி கடித்து நாசம் செய்கிறது. எனவே அந்த எலியை கொல்லும் முடிவை எடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் அந்த எலியை கொன்றாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

பிரியா பவானி சங்கர் படம் முழுவதும் அமைதியாக சிரித்த முகமாக மட்டுமே வலம் வருகிறார். அவருக்கு அவ்வளவாக வசனங்கள் இல்லை.

எஸ். ஜே.சூர்யாவின் நடிப்பு அசத்தல். எலியால் அவர் படும் கஷ்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை அருமை. அந்தி மாலை நேரம், டபுக்குனு இரண்டு பாடல்களும் சூப்பர்.

குழந்தைகளுக்கான ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் 'மான்ஸ்டர்' படத்தை தந்துள்ளார் .
 

Anuya

Active member
#25
'இமைக்கா நொடிகள்'சீரியல் கில்லர் கதைக்களம் தமிழ் சினிமாவில் காணப்படுவது அரிதுதான். அந்த வகையில் சீரியல் கில்லர் கதை வரிசையில் வந்திருக்கும் படம் தான் "இமைக்கா நொடிகள்" . படத்தின் பெயரை போலவே நாம் படத்தின் கடைசி வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் படத்தின் இறுதி வரை அத்தனை ட்விஸ்ட அத்தனை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர்.

பெங்களூரு நகரத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த விஐபி(vip) வாரிசுகளின் கொலை வழக்கை விசாரிக்க வரும் பெண் CBI அதிகாரியாக வருகிறார் நயன்தாரா. அவரின் தம்பியாக அதர்வா நடித்திருக்கிறார். அந்த கொலைகளை செய்த ரூத்ரா என்பவரை இதற்கு முன்பு கண்டுபிடித்து தண்டனையில் அவரை கொன்றது நயன் தான். அனால் தான் இறக்கவில்லை நயன் போய் கூறுகிறார் இப்போது இந்த கொலைகளை நான் செய்தது நயனை பழிவாங்கத்தான் என்று audio மூலம் சொல்கிறார் ருத்ரா. அவரை கண்டுபிடிக்க நயன் குழு முழு முயற்சியில் இறங்குகின்றனர். இதற்கிடையில் அதர்வாவின் காதலியான ராஷி கண்ணாவை ரூத்ரா கடத்தி விடுகிறார். மேலும் , அதர்வா தான் அந்த சீரியல் கில்லர் ருத்ரா என்று அனைவரையும் நம்பவைக்கும் அளவிற்கு நாடகமாடுகிறான் ருத்ரா. அதர்வா தன் காதலியை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார், அப்போது தான் அந்த ருத்ராவின் மூலம் உண்மையான ருத்ரா நயன் தான் அவரது பதவிக்காக அவரே கொலைகளை செய்து ருத்ரா என்ற போலியான கதாப்பாத்திரத்தை உருவாக்கினார் என்பது அதர்வாவிற்கு தெரிய வருகிறது.

அதர்வா தன் காதலியை காப்பாதினாரா? நயன் எதற்காக ருத்ராவாக கொலைகளை செய்தார் என்பதன் உண்மை காரணம் என்ன? என்பது மீதி கதை.

நயன்தாராவின் காதல் கணவராக ஒரு பாடலுக்கு மட்டுமே வந்தாலும் விஜய் சேதுபதி மாஸ்... "நீயும் நானும் அன்பே" பாடலை அப்படியே jollyஆக பார்த்துக்கொண்டு இருக்கும் போது vjs இறந்துபோவது unexpected. ராஷி கண்ணா & அதர்வா காதல் காட்சிகள் அருமையாக இருந்தாலும் படத்தின் விருவிருப்பை சற்று குறைகின்றது. ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக அசத்தி இருக்கிறார். இயக்குனர் அஜய் ஞானமுத்து கதையை கொண்டு செல்லும் விதம் அருமை . ஹிப் ஹாப் ஆதியின் இசையில் எல்லா பாடல்களும் மாஸ்.
 

Anuya

Active member
#26
'இஞ்சி இடுப்பழகி'


உடல் பருமன் என்பது அவமான விஷயமில்ல, அதற்காக குறைந்த நாட்களில் எடை குறைக்க தவறான வழியில் உடநலத்தை பாதிப்படைய வைக்க வேண்டாம் என்பது தான் கதை.

சிறு வயது முதலே நல்லா கொழுக் மொழுக் என்று வழந்தவர் sweety( அனுஷ்கா). தான் எப்படி இருக்கிறோமோ அதுவே அழகு என்று நம்புபவர் அதனாலேயே தன் உடல் பருமனை பற்றி கவலைக் கொள்ளாமல் தனக்கு பிடித்த ஜிலேபி உண்பதிலேயே அலாதி இன்பம். Sweety வளர்ந்து திருமண வயதை நெருங்கியதும் அவரை பார்க்க வந்த வரன்கள் அவரது சைஸ்ஐ(size) பார்த்ததுமே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்கள். இந்நிலையில் documentry film director ஆன அபி(ஆர்யா) sweety ஐ பெண் பார்க்க வருகிறார் . இருவருக்குமே கல்யாணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லாததினால் இருவரும் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுகின்றனர் அனால் இவர்களின் நட்பு தொடர்கிறது. இதற்கிடையில் sweety கு அபியிடம் காதல் தோன்றுகிறது. ஆனால் அபி simran என்ற பெண்ணை காதலிப்பது sweetyகு தெரிய வர மணமுடைத்து போகிறார். தான் குண்டாக இருப்பதினால் தானே இப்படி நடக்கிறது தான் உடல் எடை குறைக்க வேண்டும் என்று size zeroவில் சேர்கிறார்.

size zeroவில் உடல் எடை குறைப்பதற்காக கொடுக்க படும் fat burner tabletsகளால் தன் தோழி ஜோதி உடல்நிலை பாதிப்படைந்து தெரிய வர size zeroவிற்கு எதிராக போராடுகிறார் sweety.

Sweety, அபி அவர்களது நண்பர்கள் சேர்ந்து size zeroவிற்கு எதிராகவும், ஜோதி மருத்துவ செலவிற்கு நிதி திரட்டவும், awarenessகாகவும் "stay fit don't quit" என்ற முயற்சியில் இறங்குகின்றனர். இந்நிலையில் sweetயின் மேல் காதல் வயப்படும் அபி அதை sweetyயிடம் சொல்ல தயங்குகிறார்.

அபி ஸ்வீட்டியிடம் தன் காதலை சொன்னாரா?size zeroவிற்கு எதிரான இவர்களது முயற்சி வெற்றி பெற்றதா? என்பது மீதி கதை.

சைஸ் ஸிரோ சத்யாவாக வரும் பிரகாஷ் ராஜ் அருமை. அப்பாவி அம்மாவாக ஊர்வசி வரும் காட்சிகள் செம காமெடி. கீரவாணி பின்னணி இசை அருமை. குண்டாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களின் மன உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ராவ்.
 

kohila

Active member
#27
சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரசாமி இந்திய மொழி படங்களே பார்க்க மாட்டார் போல. நம் படங்களுக்கு என்று வகுத்திருந்த இலக்கணங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். அதே நேரம் நிறைய *** படங்கள் பார்த்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு பல இடங்களில் முகம் சுளிக்கும் காட்சிகள். அபத்தமான வசனங்கள். இந்த படத்தை பார்த்தவர்கள் நெகட்டிவாகவோ, பாஸிட்டாவாகவோ விமர்சனத்தை எழுத ஆரம்பித்தால் நிறுத்தாமல் எழுதிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு விஷயங்கள், அத்தனை புரிதல்கள், அத்தனை கோணங்கள் இருக்கிறது.

அதிமேதாவித்தனம், அதி புத்திசாலித்தனம், அதீதக் கற்பனை மூன்றும் இணைந்தது தான் இப்படம். ஒருவர் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், யாரோ ஒருவருக்கு தீமையாகவோ இல்லை நன்மையாகவோ முடியும் என்ற ஒரு வரியை வைத்து, சாதாரண மனிதர்களின் வாழ்வில் அசாதாரணமான நிகழ்வுகளாக நான்கு கதைகள். அதற்கு உள்ள தொடர்பை விறுவிறுப்பான புத்திசாலித்தனமான திரை யுக்தியால் நமக்கு கடத்தியிருக்கிறார்கள்.

சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள் பல முறை பார்த்துக் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கிறது. ஆனால் சாமான்யர்களுக்கு..?

வாயால் சொல்ல தயங்கும் வார்த்தைகள், உறவுமுறை சீர்கேடு என்று நமக்கு பிடிக்காத விஷயங்களை தாண்டி, நம்மை கட்டிப்போடும் விஷயங்களில் முதலில் கேமராவை சொல்லலாம்.

ஒரு சாதாரணமான காட்சியை இதுவரை யாரும் எடுத்திராத வேறு ஏங்கிளில் இருந்து எடுப்பது. முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல், அவர்களை சுற்றி உள்ளவர்களையும் யதார்த்தமாகக் காட்டியது. கலை இயக்குநர் மெனக்கெட்டாரா? இல்லை ஒளிப்பதிவாளரின் கைவண்ணமா என்று புரியாமல், கண்களை எடுக்க முடியாமல் அழகான பெயிண்டிங்க் போல் வந்திருக்கிறது.

கூடவே யுவனின் பிண்ணணி இசையும், மனதில் நீங்காது இடம்பெற்ற சில பழைய பாடல்களும்.
கண் இமைத்தால் ஒளிப்பதிவை மட்டும் அல்லாது கதையோடு இணைந்த வேறு சில விஷயங்களையும் மிஸ் பண்ணியிருப்போம்.

அதில் ஒன்று.. நான்கு கதைகளில், மூன்று கதைகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது என்பதை சற்று நேரத்திற்கு முன்… அதே நாள் அதே நேரம் என்று நமக்கு சொல்லாமல் சில குறியீடுகள் மூலம் உணர்த்துகிறார்கள். ஒரு கதை முதல்நாள் நடைப்பெற்றது என்பதையும் ஒரே ஒரு வசனத்திலும், திரை மொழிகள் மூலமாகவும் நமக்கு கடத்துகிறார்கள்.
தற்போது வந்த படங்களில் ட்ரன்ட் செட்டிங்க்கு இந்த படத்தை சொல்ல்லாம்.

விஜய் சேதுபதி நடிப்பைப் பற்றி புதுசா சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு கொடுத்த பாத்திரத்தை நல்லப்படியாக ஏற்று நடித்துள்ளார். அவரின் மகனாக வரும் அஸ்வந்த் இந்த வயதிலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் எத்தனை காலங்களுக்கு திருநங்கைகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று காட்ட போகிறார்களோ என்ற ஆதங்கம் அவர் போலீஸ் ஸ்டெஷனில் இருக்கும் போது வராமலில்லை. அதே சமயம் அவரை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினரை காட்டும் போது பாராட்டமலிருக்க முடியவில்லை. அவர்களும் மனிதர்கள் தானே ஏற்றுக் கொண்டால் என்ன தவறு? இந்த செயல் நல்ல முன் உதாரணமாக இருக்கிறது. திருநங்கையை, தன் கவலைகளை ம(றை)றந்து துணையாக ஏற்றுக் கொள்ளும் காயத்ரியோடு முடித்திருந்தார்கள்.

அடுத்து சமந்தாவின் தகாத உறவை அறிந்துக் கொள்ளும் கணவன் ஃபகத் வீட்டில் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு முன் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சியைப் பார்க்கும் போது அந்த கேரக்டரை ஃபகத் தை தவிர வேறு யாராலும் இப்படி நடிக்க முடியுமா என்று வியக்க வைத்து விடுகிறார். சராசரிக்கும் கீழே உள்ள கணவனாக(இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் தான்) சார் சார் என்று கெஞ்சி விட்டு, சார் சார் என்று துள்ளி குதிக்கும் காட்சியிலும், சார் சார் எப்படி நீங்க ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்துறீங்க கேட்க தோன்றும்

‘ஃப்ரிட்ஜில் நான்வெஜ் இல்லையே நாங்க ஆச்சாரம்’ என்று சொல்லும் விருந்தினர்களிடம், ‘நான்வெஜ்லாம் இல்லை ஒரு டெட் பாடி தான் இருக்கு’ என்பதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் மறுத்து தலையசைப்பார் ஃபகத். கருப்பு நகைச்சுவைகள் படம் முழுவதும் நிறைய இடங்களில் இருக்கும்.

பெற்றவர்கள் குழந்தைகளிடம் அதிக கண்டிப்புக் காட்டினால், அவர்கள் செய்த தவறை மறைக்க எந்த எல்லைக்கும் போவார்கள். அப்படிதான் இந்த கதையை பார்த்தேன். டிவி உடைந்ததால் தன் தந்தையின் அடிக்கு பயந்து, கொலை செய்யக் கூட தயாராகும் பள்ளி மாணவன். அவனுக்கு துணையாக இருக்கும் நண்பர்கள். அவர்கள் டிவி வாங்கினார்களா? என்று நகரும் கதையின் கிளைக்கதையில் தான் ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் வருகிறார்கள். சம்மந்தமே இல்லாமல் ஏலியனும்.

ஒரிரண்டு இடங்களில் சமூக கருத்துகளையும் சொல்லியிருப்பார் இயக்குநர். ஆக மொத்தத்தில் சேற்றுக்கு நடுவே செந்தாமரை போல் இதுவரை கண்டிராத திரைமொழி.
 

kohila

Active member
#28
பாண்டவர் பூமிஐந்தாறு வருடங்களுக்கு முன் கேடிவியில் நான்கு மணிக்கு பார்த்தேன். ஏழு மணி வரை அதிலேயே மூழ்கி வீட்டு வேலையெல்லாம் அப்படியே கிடப்பில் போட்டது தனிக்கதை.


எனக்கென்னவோ சேரனின் ஆட்டோகிராஃப் விட பாண்டவர் பூமி மிகவும் பிடிக்கும். யதார்த்தமான கவிதை போன்ற காதல் காட்சிகளுடன் மிக அழகாக நகரும் படம்.


உயர் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சொந்த ஊரில் பழைய வீட்டை இடித்து புது வீட்டை கட்டுக்கின்றனர். அந்த வீட்டை கட்ட வரும் இன்ஜினியருக்கும், வீட்டு பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை அழகான குடும்ப பிண்ணணி கலந்து சொல்லியிருப்பார் இயக்குநர்.

பெண் ஒரு ஆணை தன் நண்பன் என்று சொல்லிக் கொள்ள எத்தனை பேச்சுக்கள் என்று மோகமுள் நாவல் வரிகளை படித்துக் கொண்டே கதாநாயகி ஷமீதா கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலையிட்டுக் கொண்டிருக்கும் நாயகன் அருணை நிமிர்ந்து பார்ப்பார். சைட் அடிக்கிறாங்கன்னு ஒரு வரியில் சொல்ல முடியாத ஏதோ ஒன்று இருக்கும் அந்த பார்வையில்.

மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு குடும்பத்தினருக்காக வெளிப்படுத்தாமல் இருக்கும் பல பெண்களை 90ஸ் காலக்கட்டத்தில் நாம் பார்த்திருக்கலாம். அவர்களில் ஒருவர் தான் நாயகி என்னும் போது நம் மனதோடு ஒன்றி விடுகிறாள்.

அருண் நடித்தப் படங்களில் உருப்படியான படமென்று சொல்லலாம். கண்ணியமாக காதலை சொல்வதிலும், தன் மனதிற்கு பிடித்த பெண்ணின் ரசனைக்கு மதிப்புக் கொடுப்பதிலும், திருமண பத்திரிக்கையில் தன் பெயரை பார்த்து வெட்கபட்டு சிரிப்பதிலும் சேரனின் நாயகன் நம்மை இரசிக்க வைப்பார்.

காதல் சொல்லும் போது பெண் மறுத்தால் நாகரீகமாக விலகி விடுவதிலும், குடித்து விட்டு வேலைக்கு வரவே வேண்டாம் என்று கண்டிப்பதிலும், பெண்களின் மனதுக்கு பிடித்த ஆணின் இலக்கணமாக வருகிறார்.

கூட்டுக் குடும்பங்கள் அழிய ஆரம்பித்த காலக்கட்டத்தில் குடும்ப ஒற்றுமையையும் அழகாக காட்சிபடுத்தியிருப்பார். ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’ என்று சிநேகனும், பரத்வாஜீம் அவரவர் பங்கிற்கு பலத்தை சேர்த்திருப்பர்.

காதல் திருமணம் செய்தால் வெட்டுவாங்களா? என்று கொந்தளிக்க முடியாமல் அந்த காட்சியை வடிவமைத்து அவரவர் நியாயங்களை உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்.

அடுத்து நிறைய பிடித்த காட்சிகள் இருந்தாலும் மனதில் என்றும் அழியாத சில. ‘இவ தங்கச்சி மாதிரியே இருக்கா. இவளைப் போய் எப்படிண்ணா’ என்று ரஞ்சித் மறுக்கும் காட்சியில், தாய் மாமன் இப்படிதான் பா இருக்கணும் நமக்கும் தோன்றும்.

பூமி பூஜை செய்யும் போது தன் நெற்றியில் ஒட்டிக் கொண்ட மண்ணை ஷமீதாவின் நெற்றியை பார்த்து விட்டு அருண் துடைக்க, அவரைப் பார்த்து ஷமீதாவும் தன் நெற்றியை சிரித்துக் கொண்டே துடைப்பார். அவ்வளவு எதார்த்தமாக காட்சியைப் பார்த்ததும் கவித கவித சார் என்று தோன்றும்.

கட்டிய வீட்டை ஒருமுறை பார்த்து விட்டு செல்ல நினைக்கும் போது, தான் பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் காதலி சந்தோஷமாக உலாவர போவதை எண்ணி கவலையை மறைத்து நாயகன் புன்னகையுடன் விடைபெறும் போது நம் கண்களும் சேர்ந்து கலங்கும்.

நிச்சயமா இதுதான் சேரனின் பொக்கிஷம்ன்னு சொல்வேன்.
 

kohila

Active member
#29
ஜென்டில் மேன்தனியார் சேனல்கள் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியிருந்த காலக்கட்டத்தில் சன், ராஜ், விஜய் 3 சேனல்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகும். ராஜ் டிவியில் நிறைய விளம்பரங்களுக்கு இடையில் 2 மணிக்கு ஆரம்பித்த படம் 6.30க்கு முடிந்தது. ஏதோ ஒரு கோடை விடுமுறையில் நான்கரை மணி நேரம் ஒரே இடத்தில் அமர வைத்த சாதனை எல்லாம் சங்கரையே சாரும்.

சிறு வயதில் இருந்தே நிறைய சினிமா படங்கள் பார்த்திருந்தாலும் உணர்வு பூர்வமான படங்களை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு அந்த வயதில் எனக்கு மெச்சூரிட்டி இல்லை. கமர்ஷியல் படங்களோ டெம்ப்ளேட் மாறாமல் வரும்.

ஒரு வில்லன்… கதாநாயகியை வம்பிழுப்பான். ஹீரோ காப்பாத்துவார் …காதல் வரும்.. கைகூடும் நேரத்தில் ஹீரோயினி கடத்தப்படுவார். பின் நீளமான சண்டைகாட்சிகள் சுபம். இந்த வழக்கமான கதைகளை தாண்டி, என் வாழ்வில் நான் ரசித்து, ‘பரவாயில்ல சினிமாவும் நல்லாருக்கும் போல’ன்னு பார்த்த முதல் படம் தான் ஜென்டில்மேன்.

சமீபத்தில் சங்கரின் 25 நிகழ்ச்சியை யூ ட்யூபில் பார்த்ததும், ஜென்டில்மேன் 25 ஐ எப்படி கொண்டாடாமல் விட்டனர் என்றுதான் நினைத்தேன்.

கொஞ்சம் கூட அடுத்து வரும் காட்சியை யூகிக்க முடியாமல் அருமையான திரைக்கதையால் கட்டிப் போட்டார் இயக்குநர். தான் உண்டு படிப்பு உண்டு என்று இருந்த நாயகனை நண்பனின் இறப்பும், தாயின் இறப்பும் அடியோடு மாற்றி விடுகிறது. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் ஹீரோ. அவர் குருவின் பாணியில் ராபின்ஹீட் வெர்சன் 2 போலவே தோன்றும் கதை தான். ஆனால் சிறந்த திரைக்கதைக்கு இன்றும் தமிழ்சினிமாவில் ஒரு உதாரணமாக ஜென்டில் மேன் படத்தை சொல்ல முடியும். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம்.

இப்படி ஒரு பரப்பரப்பான் முதல் காட்சி அப்போதைய தமிழ் சினிமாவுக்கு புதிது எனலாம். கவுண்டமணியும் அர்ஜீனும் போலீஸை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் போதே சீட் நுனிக்கு வந்து விடுவோம். நம்மை ஆசுவாசப்படுத்தும், சிரிக்க வைக்கும் காட்சிகளும் தந்து மக்கள் விரும்பும் கமர்ஷியல் விஷயங்களோடு திரைக்கதை பயணிக்கும்.

இன்னொரு முக்கியமான கேரக்டர் சரண்ராஜ். பொதுவாக அன்றைய திரைப்படங்களில் போலீஸ் கதாநாயகன் இல்லன்னா நிச்சயமா வில்லனாதான் வருவார். ஆனால் அந்த வழக்கத்தை உடைத்து கடமை கண்ணியத்துடன், அவனை பிடிக்கலன்னா மொட்டை அடிச்சிக்கிறேன்டா என்று வெறித்தனமாக ஹீரோவை தேடும் போலீஸ்.

அடுத்து சுபஸ்ரீ. படபட பட்டாம்பூச்சியாய் வந்து பெண்கள் சிலரை முகம் சுளிக்க வைத்தாலும், “அப்பா வர சொல்லிட்டாங்க. டெல்லி போறேன்” என்றதும் நமக்கே அந்த வீடு சற்று களையிழந்தார் போல் தோன்றும்.

இவர்களுடன் ஒருதலையாய் அர்ஜீனை விரும்பும் மதுபாலா, சும்மா வந்து நின்னாலே நம்ம மக்கள் சிரிக்கும் அளவுக்கு எல்லோர் மனதிலும் இடம் பிடித்த செந்தில் என நிறைய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கதைக்கு வலு சேர்த்திருப்பார்.

சங்கருக்கும் காதல் காட்சிகளுக்கும் சற்று தூரம் அதிகம் தான். அந்த தூரத்தை ஏஆர் ரகுமான் தன் இசையாலும், வைரமுத்து பாடல் வரிகளாலும் குறைத்திருப்பார்கள்.

சாதாரண வாக்கியங்கள் இவரிடம் சென்றால் இவ்வளவு உயிர்ப்புடன் திரும்பி வருமா? என்று படைப்பாளிகளை வியக்க வைக்கும் பாலகுமாரனின் வசனங்கள் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்தது.

பிரமாண்டமான கற்பனையில் கூடவே ஒட்டிக் கொண்டு வரும் யதார்த்தம், நடைமுறையொட்டிய சமூக அவலங்கள் காண்போரை புல்லரிக்க வைத்து அருமையான இயக்கத்தால் கட்டிப்போட்டது. படம் முடிந்ததும் ரோலர் கோஸ்டரில் பயணித்து விட்டு மன நிறைவுடன் சீட் பெல்ட்டை கழட்டிய உணர்வு.
 

kohila

Active member
#30
Rang De Basanti


நியூஸ் பேப்பரில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார் என்பது போன்ற செய்திகளை பெரும்புள்ளிகளை மட்டுமே கருத்தில் கொண்டு படித்து விட்டு சாதாரணமாக கடந்து விடும் நமக்கு, அவர்களின் ஊழலால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளைப் பற்றி இன்னொரு கோணத்தில் இருந்து சினிமாத்தனம் ஹீரோயிசம் இல்லாமல் உண்மை அரசியலை அப்பட்டமாக சொல்லிய படம்.

அமீர்கானிடம் எனக்கு பிடித்த விஷயம். திரையில் தன் சக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் திறமையையும் உலகத்துக்கு காட்டுவார்.

பகத்சிங் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றிய புரட்சியை தன்னுடைய தாத்தாவின் டைரியில் படிக்கும் இங்கிலாந்து பெண் அவர்களை பற்றிய டாக்குமென்டரியை எடுக்க இந்தியாவிற்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் கிடைக்காமல் மன வருத்தத்தில் இருக்கும் போது, அவளின் வருத்தத்தை போக்க தன் யுனிவர்சிட்டி நண்பர்களை அறிமுகப்படுத்துகிறாள் அவளின் தோழி சோஹா.

சித்தார்த், அமீர்கான், ஷர்மன் ஜோஷி, குனால் என்று அனைவரையும் பார்த்ததும் இவர்கள் தான் படத்திற்கு ஏற்றவர்கள் என்று நடிக்க வைக்க முயற்சிக்கிறாள். அவர்களோ எல்லாவற்றையும் விளையாட்டாகவே எண்ணி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்திலே இருக்கிறார்கள். இவர்களுடன் இந்திய விமானப்படையில் பணிபுரியும் சோஹாவின் காதலன் மாதவனும் அவ்வப்போது சேர்ந்து கொள்வார்.

முதலில் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஜாலி க்ரூப்பின் நடிப்பு, ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தீவிரத்தால் சீரியசாக மாறுகிறது.

அந்த படம் முடிந்து, அதன் தாக்கத்தால் உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்தாலும் மறுபுறம் இவர்கள் கொண்டாட்டம் தொடர, மாதவனின் விமான விபத்து செய்தி அவர்களை இறுக்க நிலைக்கு கொண்டு வருகிறது.

தரம் குறைந்த விமானத்தால் தான் விபத்தானதாக ஒரு புலனாய்வு செய்தி வெளியே வர, ஊழல் செய்த மந்திரியோ பைலட்டின் மேல் தவறு என்று மாற்றி விடுகிறார்.

இதுவரை சந்தோச தருணங்களுக்காக கூடிய நண்பர்கள், மாதவன் மேல் உள்ள களங்கத்தை துடைப்பதற்காக, முதலில் போராட்டம் நடத்துகிறார்கள். பின், அந்த டாக்குமென்டரி படத்தில் வருவது போன்றே, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற புரட்சியாளர்களாக மாறுகிறார்கள்.

டிவிட்டரில் பொங்கினாலே தேச விரோதி என்று சித்தரிக்கப்படும் இந்த காலக்கட்டத்தில் மினிஸ்டரை கொன்றால்? அவரை தியாகியாக மாற்ற, இவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கபடுகிறார்கள். தங்களை மக்களுக்கு நிரூபிக்க ஆல் இந்தியா ரேடியோவை கைப்பற்றி மக்களுடன் நேரலையில் உரையாடுகிறார்கள். அங்கேயே அதிரடி தாக்குதல் நடக்கிறது.

துப்பாக்கி சூடு சத்தத்தில் தன் நண்பர்கள் மடிவதை அறிந்துக் கொண்டே நேரலையில் பேசுவார் சித்தார்த். பகத்சிங் கேரக்டருக்கு மிகச் சரியான தேர்வு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் செம ஹிட். ஹிந்தி தெரியாதவர்கள் ப்ளே லிஸ்ட்டில் கூட பார்த்திருக்கிறேன்.

இதுவரை சினிமா காட்டிய மாய பிம்பங்களில் இருந்து மாறுப்பட்டு நிதர்சனத்தை காட்டும் போது மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாலும், மிக சிறந்த படத்தை பார்த்த நிறைவு ஏற்படுவது என்னவோ உண்மை.
 
#31
எல் கே ஜி

நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ்
இயக்கம் - கே.ஆர்..பிரபு
இசை - லியோன் ஜேம்ஸ்

கதை சுறுக்கம் - லால்குடி என்னும் ஊரில் கவுன்சிலர் ஆக இருக்கும் ஆர். ஜே. பாலாஜி எப்படி இந்த மாநிலத்தின் முதல்வர் ஆகிறார் என்பதே கதை .

'லால்குடி கருப்பையா காந்தி' என்னும் நான் என்று ஆர் ஜே பாலாஜி முதல்வர் ஆக பதவி ஏற்பது போல் ஆரம்பம் ஆகிறது படம். அப்பொழுது ஒரு மர்ம நபரால் துப்பாக்கியால் சுடபடுகிறார் பாலாஜி. அதில் இருந்து பின்னோக்கி சென்று ஆரம்பமாகிறது கதை களம் - அரசியல் களம்.

சாதாரண கவுன்சிலர் ஆக இருக்கும் பாலாஜி தன் சிறு சிறு முயற்சியாலும் சில பல சூழ்ச்சியாலும், தந்திரத்தாலும் தன் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நின்று, தனக்கு எதிராக போட்டியிடும் பலம் வாய்ந்த ஜேகே. ரித்தீஷ்யை(ராம்ராஜ் பாண்டே) டம்மியாக்கி எம்.எல்.ஏ ஆக ஜெயித்து விடுகிறார்.பிறகு டைரட் சி.எம் ஆகுகிறார். அந்த பதவியேற்பு விழாவில் தான் அவரை ஒருவன் சுட்டு விடுகிறான். அதற்கு பிறகு சுட்டது யார், எதற்காக சுடுகிறான், அவர் எப்படி பதவியேற்றார் என்பது கிளைமாக்ஸ்.

பாலாஜியின் நடிப்பும் காமெடியும் படத்தின் பிளஸ். ஆர் ஜே பாலாஜி கதாநாயகன் பாலாஜியாக அருமையாக நடித்துள்ளார். பிரியா ஆனந்த் கார்ப்பரேட் நிறுவனம் ஊழியாராகவும், பாலாஜிக்கு அரசியலில் உதவுபவராகவும் வந்து அசத்தியுள்ளார்.


இன்றைய அரசியலின் சில பல சம்பவங்களை மையமாக வைத்து காமெடியாகவும் ரசிக்கும்படியாகவும் படத்தை தந்துள்ளார் டைரக்டர்.


'எல்கேஜி' - பக்கா அரசியல் என்டர்டெயின்மெண்ட்.
 

Anuya

Active member
#32
'இன்று நேற்று நாளை'


தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு டைம் மெஷின் எனும் காலம் கடக்கும் எந்திரத்தை கதைக்களமாக கொண்ட படம் "இன்று நேற்று நாளை".

2065 ஆம் ஆண்டு ஒரு டைம் மெஷினைக் கண்டுப்பிடிக்கும் ஆர்யா, அதனை சோதனை செய்வதற்காக 50 ஆண்டுகள் அந்த மெஷினை முன்னோக்கி அனுப்பி சோதனை செய்கிறார். ஆனால் தவறுதலாக அந்த மெஷின் பழுதடைந்து 2015 ஆம் ஆண்டில் விஷ்ணு, கருணாகரன் கைகளில் கிடைக்கின்றது.

அந்த மெஷினை வைத்து விஷ்ணு தன் காதலில் வெற்றி பெறவும், கருணாகரன் தனக்கு தெரியாத ஜோதிடத்தை தெரிந்த மாதிரி மக்களை நம்ப வைத்து பிழைப்பு நடத்தவும் பயன்படுத்துகின்றனர். விஷ்ணுவும், கரினாகரனும் அந்த மெஷினை பயன்படுத்தி பல வருடங்கள் முன்னும், பின்னும் சென்று செய்யும் அட்டகாசத்தில் தங்களுக்கே தெரியாமல் அவர்கள் செய்த சிறு விஷயம் அவர்களின் நிகழ்காலத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் எவ்வாறு சமாளித்து அப்பிரச்சனையில் இருந்து வெளி வந்தனர் என்பது மீதி கதை.

விஷ்ணு & கருணாகரன் தங்கள் நடிப்பும் தனி முத்திரை பதித்துவிட்டனர். ஹிப் - ஹாப் இசையில் " இன்று நேற்று நாளை" பாடல் அருமை.ஆர்யா gest performance வந்து அவருடைய பார்ட் அருமையாக நடித்துள்ளார்.

இன்று நேற்று நாளை - படம் இன்று நேற்று நாளை என்று எப்பொழுது பார்த்தாலும் நல்ல enjoy பண்ணுற படம். பார்காதவங்களும் பார்த்து enjoy பண்ணுங்க
 
#33
படம் : எதிர் நீச்சல்
நடிப்பு : நாகேஷ், ஜெயந்தி, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், மனோரமா, சௌகார் ஜானகி மற்றும் பலர்
இயக்கம் : பாலச்சந்தர்
கதை சுருக்கம் :
எதிர்நீச்சல் படம் ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒட்டுக் குடித்தன குடியிருப்பில் அனாதையான மாது (நாகேஷ்) மாடிப்படிக்கு கீழ் குடியிருந்து கொண்டு அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள் ஏவும் வேலையைச் செய்து, அவர்கள் தரும் உணவால் ஓரளவு தன் பசியாறி வாழ்வதையும் தனது வறுமையிலும் கல்லூரில் படித்து முன்னேறுவதையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.
நாகேஷினை நகைச்சுவை நடிகராக பாவிக்கும் நமக்கு, இப்படத்தை பார்த்தவுடன் தேர்ந்த நடிகராக பாவிக்கத் தோன்றும்.
ஜெயந்தியுடன் மோதல், காதல் என்று வரும் பொழுதும் சரி, மேஜரின் "படவா ராஸ்கல் " என்ற அழைப்பில் மகிழும் பொழுதும் சரி, " நான் மாது வந்திருக்கேன்" என சாப்பாட்டிற்கு கையேந்தும் பொழுதும் நம்மை வியக்க வைக்கிறார் நாகேஷ்.

சேதி கேட்டோ பாடல் , பணம் மனிதர்களின் மனதை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும்.
தாமரைக் கன்னங்கள் - காதலை உணர்த்த, அடுத்தாத்து அம்புஜம் பாடல் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியின் எதிர்பார்ப்புகளை விளக்குவதாகவும் அமைகிறது.

எதார்த்தத்தை மிகவும் எதார்த்தமாக எடுத்துக் கூறிய படம்.
 
#34
படம் : அவ்வை சண்முகி
நடிப்பு : கமல்ஹாசன், மீனா, ஹீரா, ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர்

திரைத்துறையில் நடனக் கலைஞராக இருக்கும் கமல், தொழிலதிபரின் மகள் மீனாவும் காதலித்து திருமணம் புரிந்து, பெண் குழந்தையும் பெற்றெடுத்த பின், நடுத்தர வர்க்க பொருளாதார சூழல் காரணமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விடுகின்றனர்.
இதில் குழந்தை ஏங்க, குழந்தையைப் பார்த்து கொள்ள மாமி வேடத்தில் கமல் செல்ல, கடைசியில் இருவரும் இணைவதே கதை சுருக்கம்.
நகைச்சுவையும், குடும்ப பாசமும் கலந்த கதை. சண்முகியை ஒரு தலையாய் காதலிக்கும் மணிவண்ணன், ஜெமினி கணேசன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் நம்மை ரசிக்க வைக்கும்.

கமல் , எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த குழந்தைக்கு 28 வயது. இளைய குழந்தைக்கு 7 வயது. பெரிய குழந்தை விவாகரத்து வேணும்னு அடம்பிடிச்சதால கொடுத்துட்டேன் என்று வரும் காட்சி , பெண்களை ரசிக்க வைக்கும் ஒன்று.
நடன கலைஞர்களின் வாழ்க்கை எவ்வளவு பொருளாதார சிக்கல்கள் நிறைந்தது என கூறுகிறது.


கமல் , மீனா வரும் காட்சிகள் அருமை. குழந்தையின் செயல்கள் நம்மை மிகவும் ரசிக்க வைக்கிறது.

அவ்வை சண்முகி - அப்பாவின் இன்னொரு வடிவம்..
 

kohila

Active member
#35
ஈரம்
அழகிய கவிதை எழுத ஏற்ற தலைப்பு. படத்திற்கு இப்படி ஒரு தலைப்பையும் ஸ்டிலையும் பார்த்ததும் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அழகிய காதலுடன் சூப்பரான த்ரில்லர்.


பேய் படம்ன்னா அகோரமான முகத்துடன் வந்து மிரட்டும்ன்னு காலம் காலமா பார்த்த நமக்கு நீரை உருவமாக வைத்து அழகான ரசனையுடன் மனதிற்கு இதமான காட்சிகளுடன் ஒரு திகில் படம் தமிழுக்கு புதிதாக இருந்தது.

பெரிதாக மக்களிடம் ரீச் ஆகாத ஒரு இயக்குநரின் முதல் படத்தை, முதல் தடவையாக நிறைய பேரின் ஃபேவரிட் லிஸ்டில் பார்த்து இருக்கிறேன்.


காதலிலும் திருமணத்திலும் கண்ணியத்தை கடைபிடித்த பெண் பரிதாபமாக கொல்லப்படும் போது, ஆவியாகி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கும் நமக்கு பழக்கப்பட்ட கதைதான். ஆனாலும் காட்சியின் நேர்த்தியிலும், கதை சொல்லியாக வித்தியாசப்படுத்தியதிலும் அறிவழகனின் இயக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

முதல் காட்சியிலேயே தண்ணீர் வழிந்து ஓட, ஒரு பெண்ணின் பிணம் குளியறை தொட்டியில். இதில தியேட்டர்ல தண்ணி மழைக்கெல்லாம் ஸ்பெஷல் பிஜிஎம் கொடுத்து நம்மள மிரட்டுவாங்க. அந்த பெண்ணின் முன்னால் காதலனே அதை விசாரிக்க வருகிறார். அவர்களின் ப்ரேக் அப் கூட அவர் போலீஸ் என்ற காரணத்தால் இருக்கும்.

ஒரு பக்கம், பரப்பரப்பான விசாரணை அதே அப்பார்மென்டில் அடுத்தடுத்து இறப்புகள் என்று நகரும். மறுபக்கம், கல்லூரி நாட்களில் ஆதி சிந்து காதல். சிந்துவின் குடும்ப பாசம் என்று நகரும். இரண்டு பக்கத்தையும் எடிட்டர் கிஷோர் அருமையாக இணைத்திருப்பார். ப்ளாஷ்பேக்கில் கல்லூரி கேட் மூடும் போது இங்கே அப்பார்மென்ட் கேட் திறந்து ஆதி உள்ளே நுழைவார். ப்ளாஷ்பேக்கில் ரம்யா வெட்ஸ் வாசு என்று இருவரும் கையில் எழுதி பார்க்கும் போது, இங்கே ரம்யா வெட்ஸ் பாலகிருஷ்ணன் என்று நிகழ்காலத்தில் கல்யாண பத்திரிக்கையை காட்டுவார்கள். இப்படி நிறைய காட்சிகள்.

கொலையாளியை கண்டே பிடிக்க முடியாது என்று சொல்லப்பட்ட கேஸில் கொலையாளியை ப்ரஸ் மக்கள் முன் ஆதி நிறுத்துவார். அங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கும். மழை பெய்யும் போது சிவப்பு நிற குடையுடன் ஒரு சிறுமி செல்வாள். ஆதி அதிர்ச்சியுடன் பார்க்கும் போது படம் நிறைவடையும்.

கதாபாத்திரங்கள் மட்டுமின்றி திரை மொழியில் நம்முடன் நிறைய காட்சிகள் உரையாடும். முக்கியமா சிந்துவின் இடதுகை பழக்கம், ஒரு குறியீடு போல் படம் முழுவதும் வரும். அடுத்து சிவப்பு நிறம். ஆதி, நீரோடு சிவப்பு நிறத்தில் எதையாவது பார்த்தாலே அன்னைக்கு சம்பவம் இருக்குன்னு அவர் உள்ளுணர்வு சொல்லும்.

‘ஃப்ரெண்ட்ஷிப்ன்னு சொல்லி தப்பிச்சிக்க விரும்பல. இந்த ரிலேஷன்ஷிப் கல்யாணத்தில் முடிந்தால் சந்தோஷபடுவேன்’ என்று சிந்து தன் காதலை ஒத்துக்கொள்ளும் இடம் அழகு.

‘ஆமா நான் இன்னும் மறக்கல… எத்தனை பேர் எத்தனை ரிப்போர்ட்ஸ் சொல்லட்டும்.. அவ தப்பு பண்ணியிருக்க மாட்டா. I still love her and I still believe her’. . ஆதி நண்பனிடம் கோபமாக சொல்லும் போது, இவர்கள் ஒன்று சேராமல் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்துடன் ரசிக்க தோன்றும்.

தமனின் இசையில் இரண்டு பாடல்களும் அருமை. நந்தா சரண்யா இவர்களும் நன்றாக நடித்திருப்பார்கள்.

முதல் தடவை பார்க்கும் போது திக் திக் ன்னு ஒரு சூப்பரான த்ரில்லர்.

இரண்டாவது, மூன்றாவது(விஜய் டிவி புண்ணியத்தில்)……… பல தடவை பார்க்கும் போது ஃபீல் குட் படம்
 

kohila

Active member
#36
அழகு குட்டி செல்லம்கருணாசின் ஆண் வாரிசு வேண்டும் என்ற பிடிவாதத்தால் நான்காவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் அவரின் மனைவி. செஸ் கோச்சிங்க் க்ளாஸ் நண்பனால் குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஒரு பெண். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியினர். ஈழப் போரில் குழந்தையை இழந்த தம்பதியினர். வீண் பிடிவாதத்தால் விவாரகத்து கேட்கும் தம்பதியினர்.

இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் கனெக்ட் ஆகும் ஐந்து பள்ளி மாணவ மாணவிகள் தான் கதையின் முக்கிய பாத்திரங்கள். பள்ளியில் கிறிஸ்துமஸ் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசை நல்லபடியாக நிறைவேறியதா என்பதை மற்றவர்களின் வாழ்வோடு நகைச்சுவை உணர்வும், குட்டீஸ் குறும்புகளும், சமூக பொறுப்புணர்வும் கலந்து ரசிக்கும்படி வெகு இயல்பாக கொடுத்திருப்பார் இயக்குநர் சார்லஸ்.

பிறக்காத குழந்தை மேல் க்ருஷா வைத்திருக்கும் அன்பே, அவர் எவ்வளவு அன்பானவர் என்று சொல்லும். அந்த அன்பினால் அவர் செல்ல வேண்டிய உயரத்தையும், அடைய வேண்டிய புகழையும் அவரின் நண்பன் பெற்றிருப்பார். யோசிக்காமல் தற்கொலை வரை சென்று விட்டு வந்து, அவரின் அனுபவம் தந்த பாடத்தால் இறுதியில் தெளிவாக யோசித்து செஸ் கேமில் வெற்றி பெறுவார். க்ளைமேக்ஸ் செஸ் விளையாட்டு காட்சிகளை மிக அருமையாக படமாக்கி இருப்பார் இயக்குநர்.

பள்ளி மாணவர்கள் திரையில் வந்தாலே செம கலகலப்பு தான். குழந்தை ஏசுவாக நடிக்க குழந்தைக்காக அவர்கள் படும் அவஸ்தைகள் சிரிப்புக்கு பஞ்சமின்றி நகரும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு குழந்தை, கருணாஸிற்கு எப்படியோ ஆண் வாரிசு என்று அனைவரின் நியாயங்களையும் அவரவர் போக்கில் சொல்லி சுபமான நிறைவை கொடுத்து படத்தை முடித்திருப்பார்.

மாணவர்களில் முருகுவும், சூப்பர் சிங்கர் யாழினியும் அழுத்தமாக மனதில் பதிந்து விடுகிறார்கள்.

ஐந்துக்கும் மேற்பட்ட கதைகளை வைத்து அதற்கேற்ற திரைக்கதையுடன் அடுத்து என்ன என்று யூகிக்க முடியாமல், பிசிறின்றி இணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நல்ல முயற்சி. நிச்சயமா பார்த்து ரசிக்கலாம்.
 

kohila

Active member
#37
வேட்டையாடு விளையாடுஆனந்த விகடன் விமர்சனத்தை மேலோட்டமாக படித்ததும், வெற்றி விழா போல் இருக்கும் என்று நானாகவே நினைத்து, பெரிதாக விருப்பமின்றி இருந்த போது நண்பர்கள் என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள்.

புதுபேட்டை அருகில் ஒரு தியேட்டர். அந்த தியேட்டரில் மேலே இந்த படமும் கீழே ஒரு காதல் படமும் ஓடிக் கொண்டிருந்தது. கீழே வரிசையில் நின்றிருந்தவர்களை ஏக்கமாக பார்த்து, இந்த படத்துக்கு போயிருக்கலாம் என்று கவலையுடன் மாடி படிக்கட்டுகளில் ஏறினேன்.

படம் ஆரம்பிக்கும் போதே எனக்கும் என் தோழிக்கும் இடையில் ஒரு பாப்கார்ன் கப் வர, அதை சாப்பிட்டபடியே கற்க கற்க பாடலையும் முதல் சண்டைக் காட்சியையும் சலிப்புடன் பார்த்து முடிக்கும் போது, பிரகாஷ்ராஜ் மகளை காணவில்லை என்று புலம்ப ஆரம்பித்ததிலிருந்து, திக் திக் என்று காட்சிகள் நகர, இதய துடிப்பும் அதிகமாகியதில், ஏசி குளிரில் நமத்து போன பாப்கார்னை யார் பார்த்தா?

நல்லவேளையாக இடைவேளை என்ற ஒன்று வந்து இதய துடிப்பை சீராக்கியது.

சீட் நுனியில் அமருவதை பற்றி விமர்சனங்களில் படித்திருக்கிறேன். என் வாழ்வில் நானே அப்படி சீட் நுனியில் அமர்ந்து பார்த்த முதல் த்ரில்லர்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சைக்கோ கொலையாளிகள் இருவரை தேடி கண்டுபிடிக்கும் ராகவன் என்ற ஒன்லைனரை வைத்து அருமையான திரைக்கதையால் நகர்த்தியிருப்பார் கௌதம். போலீஸ் கதை இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் உடைத்து புதிய பாணியில் கொடுத்திருப்பார். ஹாரீஸ் ஒருபுறம் பிண்ணணி இசையில் மிரட்டியிருப்பார்.

கூடவே மனதிற்கு இதமான காதல் காட்சிகளும், பாடல்களும்.

டூ மினிட்ஸ்லேயே சொல்லியிருப்பேன். நீ தப்பா நினைக்க கூடாதுன்னு தான் இரண்டு மணிநேரம் வெயிட் பண்ணேன் – செம ப்ரப்போசல் சீன். கமாலினி கண்களாலேயே அழகா பேசுவாங்க.

அடுத்து ஜோ க்கிட்ட கேட்பார். ‘எப்போ போகணும்?’ அடுத்த வாரம்-ஜோ. போகணுமா?-கமல். நல்ல ப்ரப்போசல் சீன் தான். பட் கமலுக்கு மட்டும் எப்படி சட் சட்ன்னு லவ் வருதோன்னு ஆராய்ச்சியில ரசிக்க முடியாமல் திணறும் போதே, அடுத்த காட்சியிலேயே அழகான விளக்கம் கொடுத்திருப்பார்.

கமல் சார்க்கு வேட்டையாடி விளையாட சூப்பரான கதை. அவருக்கு சொல்லணுமா? காதலனா, கணவனா, காவலனா, வில்லனுக்கு வில்லனா.. ஆக மொத்தத்தில் நடிக்காமல் முழுசா ராகவனாகவே மாறியிருப்பார். டேனியல், சலீமும் உண்மையான சைக்கோ மாதிரியே நடித்திருப்பார்கள்.

நாலு மணிநேரம் மண்ணுக்குள்ளே இருந்த பொண்ணு எப்படி உயிரோடு இருக்கு இப்படி லாஜிக்கா யோசிச்சாலும், அடபோங்கய்யா படப்படப்பா அடிச்சிக்கிற ஹார்ட்க்கு ஒரு இதமான முடிவுன்னு வெளியே வந்து, அதுக்கு அப்புறம் கிட்டதட்ட ஒரு மாசம் தனி ரூம்ல படுக்க பயந்ததெல்லாம் ஒரு சிறு கதையா எழுதலாம்.
 

kohila

Active member
#38
அங்காடி தெரு

1560879863176.png

திநகர் ன்னா கும்பலுக்கிடையில் ஒரு பர்ச்சேஸ்ன்னு நினைத்துக் கொண்டிருந்த நமக்கு அதன் பின்னால் இருந்த இன்னொரு முகத்தை யதார்த்தமாக காட்டியது.

ஐந்து நிமிஷம் நமக்கு பிடித்த டிரஸை சிரித்த முகத்தோடு வாடிக்கையாளர்களுக்கு காட்டலன்னா நம்ம மக்களுக்கு அவ்ளோ கோபம் வரும். ஆனால் நாள் முழுவதும் நின்றுக் கொண்டே நம்மை போல் நூறு வாடிக்கையாளர்களை சமாளிக்கும் அவர்களை பற்றி, இப்படி ஒரு படம் வரலன்னா நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம்.

கடையில் வேலைப் பார்ப்பவர்கள், கடைக்கு வெளியே திநகரில் வாழ்க்கையை தேடி நிறைய துணை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவர்களின் கோணத்தில் இருந்து உண்மையான வலியை சேர்த்து சொல்லிய போது, படம் பார்க்கும் நாமும் திநகருக்குள் இருந்த ஃபீல்.

குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு வரும் பதின்பருவ பெண்களும் ஆண்களும். வேலை கடினமானதாக இருந்தாலும், அதை நண்பர்களின் துணையோடு இலகுவாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் போது, கடையில் வேலைப்பார்த்த ஒரு பெண் காதலின் விளைவால் தற்கொலை செய்ததில், கடையின் பெயர் கெட்டு சில நாட்கள் வியாபாரமும் நடக்காமல் போய் விடுகிறது.

நிர்வாகத்தினர் கடையை சீர் செய்ததுடன், தொழிலாளர்களின் காதலுக்கு தடை விதித்து, மீண்டும் கடையை திறக்கின்றனர். இந்த வேலையின் சம்பளம் கிடைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாயகன் நாயகியின் காதல் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையே நிறைவேறும் போது சாலை விபத்தில் சிக்கி கால்களை இழந்த நாயகி மீண்டு வந்து தன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்தாள்? என்பதை மிகைப்படுத்தாமல் யதார்த்தமாக சொல்லியிருப்பார் வசந்த பாலன்.

கொஞ்சம் கனமான கதைக்கருவை காதல், ரொமான்ஸ், காமெடி, நிஜங்கள் கலந்து போரடிக்காமல் கொடுத்திருப்பார்.

வசந்த பாலனின் பெயரை இன்றும் சொல்லும் படம். ஜெயமோகனின் வசனம். விஜய் ஆண்டனி ஜீவி பிரகாஷ் இசை. நா முத்துக்குமாரின் வரிகளில் பாடல்கள் இனிமை. கண்ணில் தெரியும் வானம் பாடலில் அவர்களின் வலிகளை அருமையாக சொல்லியிருப்பார். தவிர்க்காமல் பார்க்க வேண்டிய படம்.
 

kohila

Active member
#39
எங்கேயும் எப்போதும்


1560880083247.png


திருச்சி சென்னை சாலையில் இருபேருந்துகள் மோதி அளவுக்கதிகமான உயிர்சேதங்கள் ஏற்பட, அதில் பயணித்தவர்கள் யார் என்ற எதிர்பார்ப்போடு நம்மையும் அந்த பேருந்தில் பயணிக்க வைத்திருப்பார் இயக்குநர் சரவணன்.

திருச்சி என்றதும் ஊர் பாசத்தில் மனதுக்கு நெருக்கமாகி விட்டது. தைரியமான நாயகி அஞ்சலி, பயந்த சுபாவமுள்ள ஜெய். அவர் வாழ்க்கையில் அதிரடியாக புகுந்து ப்ராக்டிக்கலாக காதலை அணுகுவார். அவரின் அதிரடியை பார்த்து பயந்த படியே அவரை காதலிக்கும் ஜெய். இவர்களின் காதலை ஒருபுறம் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

இன்னொரு புறம் அனன்யா சர்வானந்த் இருவரின் ஒருநாள் சந்திப்பு. ஒரு ஃபோன்காலை அட்டென்ட் பண்ணியதில் அனன்யா கூடவே சேர்ந்து சலிப்புடன் சுத்த ஆரம்பித்து, பின் அதுவும் பிடித்து விடும் சர்வானந்திற்கு. பெயர் கூட தெரிந்துக் கொள்ளாமல் பிரிந்து விட்டு, காதல் என்றதும் இருவருக்குமே மற்றவர்கள் ஞாபகம் வர, பின் ஒரே நேரத்தில் மற்றவர்களை தேடி அலைவதை சுவாரசியமாக சொல்லியிருப்பார் இயக்குநர். இவர்கள் நால்வரும் பயணிக்கும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி விட காதலர்கள் இணைந்தார்களா? இல்லையா என்பதே க்ளைமேக்ஸ்.

ஆறு மாதமா தூரத்தில் இருந்து சைட் அடிக்கும் பெண், ஜெய் முன்னால் வந்து நிற்கும் போது அடையாளம் தெரியாமல் நான் வேற பொண்ணை லவ் பண்றேங்க சொல்லும் இடம் செம. இப்படி நிறைய இடங்களில் அப்பாவித்தனமாக மனம் முழுக்க காதலை வைத்திருக்கும் ஹீரோ ஜெய்.

அதற்கு அப்படியே எதிர்மாறாக ஒரு ஹீரோ சர்வானந்த், சிகரெட் பிடித்து பெண்களை சைட் அடித்துக் கொண்டே, ‘மூணாவது தப்புன்னா? கொள்ளையடிக்கிறதா?’ அசால்ட்டக கேட்டு... ‘இல்லை’ என்று அனன்யா தலையசைத்து சொல்ல முடியாமல் தவிக்கும் போது, ஏன் அதெல்லாம் உங்க ஊர்ல தப்பு இல்லையா? என்று கேட்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது.

நியூஸ்பேப்பரில் பஸ் லாரி மோதல் என்ற செய்திக்கு பின்னே இரு காதல் கதைகள், நிறைய சிறு சிறு கதைகள். கூடவே பேருந்தில் ஒலிப்பரப்பாகும் இளையராஜா பாடல்கள். முதல் படத்திலேயே அருமையாக ஸ்கோர் செய்திருப்பார் சரவணன். அவருக்கு பக்கபலமாக எடிட்டர் கிஷோர் காட்சிகளை அருமையாக கோர்த்திருப்பார். சத்யாவின் இசையில் பாடல்களும் இனிமையாக இருக்கும். மொத்தத்தில் யதார்த்தம்+சுவாரஸ்யம்
 

kohila

Active member
#40
கனா கண்டேன்அப்துல்கலாம் வரிகள் போல் கனவு கண்டு சாதிக்க துடிக்கும் இளைஞனின் போராட்டத்தை அருமையாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

1560880430181.png

சிறுவயது தோழியான கோபிகாவின் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீகாந்த், சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்தை நிறுத்தி தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்து விடுவார். இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறும் கதையும் விவேக்கின் காமெடியும் ஒருபுறம் இருக்க,

பி.எச்.டி படிக்கும் ஸ்ரீகாந்த் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்காக அரசாங்கத்தின் உதவியை நாடுவார். கார்ப்பரேட்க்களுக்கு கொடி பிடிக்கும் அரசாங்கம் இவருடைய ப்ராஜெக்டை கண்டுக் கொள்ளாமல் விட, நாமே சொந்தமாக இந்த தொழிலில் இறங்கி மக்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் தரலாம் என்று முடிவு செய்வார்கள்

பணத்தேவைக்காக வங்கிகளில் நிராரகரிக்கப்படும் போது கோபிகாவின் கல்லூரி தோழனான கந்து வட்டியில் நியாய தர்மம் இன்றி செயல்படும் ப்ரித்வியை உண்மை முகம் தெரியாமல் அணுகுவார்கள்.

ஃபேகடரியை கைப்பற்றும் எண்ணத்துடன் அவரும் பண உதவி செய்வார். ப்ரித்வியின் சூழ்ச்சியிலிருந்து வெற்றிப்பெற்று ஃபேக்டரியை நிறுவினார்களா? என்பதை பரப்பரப்பாக நகர்த்தியிருப்பார் இயக்குநர்.

ப்ரித்வியை முதன் முதலாக வில்லனாக பார்த்தது இந்த படத்தில் தான். அருமையாக நடித்து இருப்பார். ஸ்ரீகாந்த் கோபத்தில் அவரின் அலுவலகத்தை அடித்து நொறுக்க, அமைதியாக புன்னகையுடனே அமர்ந்து இருந்து விட்டு, பின் கேமராவை காட்டி, அதற்கும் சேர்த்து ஸ்ரீகாந்திடமே வசூலிப்பது செம காட்சி.

கே வி ஆனந்த் படங்கள் சமகாலத்தை ஒட்டி ஸ்டைலிஷா இருக்கும். அயன், கோ இரண்டும் மிகவும் பிடித்த படங்களாக இருந்தாலும், இந்த படத்தை கட்டாயம் ஒருமுறை பார்த்து பாராட்டலாம்.